ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் `அகம் புறம்` என்ற தலைப்பில் 6 மாத கண்காட்சி

137 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 29, 2022, 1:01:36 PM9/29/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3448402115403161&set=a.1388119661431427


agam puram.jpg

வருகின்ற வெள்ளிக்கிழமை 7.10.2022 ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் `அகம் புறம்` என்ற தலைப்பில் 6 மாத கண்காட்சி தொடங்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

இதனை ஒட்டி ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பங்கு கொள்ளும் வகையில் அக்டோபர் 6ஆம் தேதி தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடாகி வருகின்றது.

-அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்டுட்கார்ட் ஃபோயர்பாக் பகுதியில் இந்த ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-7ஆம் தேதி நிகழ்ச்சி தொடக்க விழா மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
-8ஆம் தேதி காலை 10 மணிக்கு கண்காட்சி பார்வையாளர்களுக்குத் திறக்கப்படுகின்றது.


ஐரோப்பாவில் முதல் முறையாகத் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் நடைபெற உள்ள மாபெரும் 6 மாத கால கண்காட்சி இது. இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பா வாழ் தமிழர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
https://www.lindenmuseum.de/presse/von-liebe-und-krieg

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

#அகம்புறம்
#lindenmuseum
#TamilHeritageFoundation
#sangamliterature
#loveandwar
#vonliebeundkrieg

தேமொழி

unread,
Sep 29, 2022, 3:36:41 PM9/29/22
to மின்தமிழ்
agampuram invitation.jpg
6 அக்டோபர் 2022 (வியாழன்) மாலை 6-9 நடைபெற உள்ள நிகழ்ச்சி
(நிகழ்ச்சிக்கான விரிவான அறிவிப்பு விரைவில் ...)

தேமொழி

unread,
Sep 30, 2022, 5:20:42 PM9/30/22
to மின்தமிழ்
THF-meeting-at-Germani-6-10-2022.gif
6 அக்டோபர் 2022 (வியாழன்) மாலை 6-9 நடைபெற உள்ள நிகழ்ச்சி

தேமொழி

unread,
Oct 3, 2022, 5:34:59 PM10/3/22
to மின்தமிழ்

source - https://www.facebook.com/photo/?fbid=3452992474944125&set=a.1388119661431427


agam puram.jpg

ஐரோப்பாவில் முதல் முறையாக...
தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி - ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில்.

7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்க வருகின்றனர்:

* மாண்புமிகு பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி
செயலர், பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், அமைச்சர் தொழில்துறை மற்றும் பண்பாட்டுத் துறை, பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், ஜெர்மனி.

* திரு. எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி
ஜெர்மனிக்கான இந்தியத் தூதர்

* மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மற்றும்
ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள்.
-----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Oct 4, 2022, 3:06:20 AM10/4/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3453256264917746&set=a.1631001437143247

6 .10 .2022 வியாழக்கிழமை
ஜெர்மனியில் தமிழ்ப் பேருரை.
------------


ஐரோப்பாவில் முதல் முறையாக...
தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி - ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில்.

7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழாவிற்கு முதல் நாளான 6.1.222 வியாழக்கிழமை மாலை 6 லிருந்து 9 மணி வரை தமிழ் மக்கள் ஒன்று கூடும் வகையிலும் அமைச்சர் அவர்களது ஒரு சிறப்பு சொற்பொழிவு மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்களுடன் தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் திரு சந்திரமோகன் இஆப அவர்களும் கலந்து கொள்ள வருகின்றார்கள்.

*சிறப்புரை:*

மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.

*வாழ்த்துரை;*
தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் செயலர் திரு சந்திரமோகன் இஆப

நாள்: 6.1.222 வியாழக்கிழமை
நேரம்: மாலை 6 லிருந்து 9 மணி வரை


அனைவரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:

Freies Musikzentrum
Stuttgarter Str. 15, 70469 Stuttgart, Germany

தேமொழி

unread,
Oct 4, 2022, 5:27:11 PM10/4/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0uKRrtRho8gRhRXaE2VvCWAoFEo5TQyJxeXAqfAJivU1r6YmvtT7jCwBuGfbt4hgPl

Subashini Thf

Adichanallur.jpg
ஆதிச்சநல்லூரில் 1876ல் நிகழ்த்தப்பட்ட முதல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் ஜெர்மனிக்கு டாக்டர் யாகோர் என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் கொண்டு செல்லப்பட்டது என்ற செய்தியைப் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அதற்குப் பிறகு அங்கு கொண்டு செல்லப்பட்ட அரும்பொருட்கள் என்ன ஆயின... எங்கே இருக்கின்றன.. என்ற செய்தி யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
இந்த அரும்பொருட்கள் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கின்றது என்ற செய்தி மட்டுமே அவ்வப்போது நமக்குக் கிட்டிய வண்ணம் இருந்தது. ஆயினும் பெர்லினில் இருக்கின்ற 99 அருங்காட்சியகங்களில் எந்த அருங்காட்சியகத்தில் இந்த அரும்பொருட்கள் உள்ளன என்பதைத் தேடுவது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது.
எனது 10 ஆண்டுகால தேடலில் 2019 ஆம் ஆண்டில் இறுதியில் தான் பெர்லினில் அது இருக்கின்ற அருங்காட்சியகத்தின் பெயர் தெரியவந்தது. இதற்கு மிக உறுதுணையாக இருந்தவர் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தின் ஆசியவியல் பிரிவின் பொறுப்பாளராக உள்ள டாக்டர் நோவாக் அவர்கள். அவரது உதவியால் பெர்லின் நகரில் எங்கு அது இருக்கின்றது என்பது தெரியவந்தது.
ஏறக்குறைய 150 ஆண்டுகளாகப் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன இந்த ஆதிச்சநல்லூர் முதல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும் பொருட்கள்.
இந்த ஆதிச்சநல்லூர் அரும் பொருட்களில் ஒரு சில மண்பாண்டங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கின்ற 'அகம் புறம்' கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது, பொதுமக்கள் பார்வைக்காக.
2019 ஆம் ஆண்டு நான் ஆதிச்சநல்லூர் சென்ற போது அந்த அகழாய்வுக் களத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரோடு நடந்து சென்று மண்பாண்ட ஓடுகளைக் கையில் எடுத்து வைத்துப் பார்த்த நிகழ்வு இன்றும் பசுமையாக உள்ளது.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகு கடல் கடந்து வந்த ஆதிச்சநல்லூர் அரும் பொருட்கள் உலக மக்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வருகின்றது.
அக்டோபர் 7ம் தேதி ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் தொடங்கும் அகம்புறம் கண்காட்சியில் இந்த மண்பாண்டங்களை நேரில் காணலாம்.
இந்த அரும்பொருளைக்கான அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தேமொழி

unread,
Oct 4, 2022, 5:32:14 PM10/4/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0s8kCqLDEDxxH1Kn2tkWu17GYjWQgNvDMVADg9dMyeLosH37L47Gzc5iMvJcnrbB5l


akam puram.jpg
கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக செய்கின்ற முயற்சிகள் பல.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக.....
ஜெர்மனியில் நாம் 2019ஆம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிலைகள் நிறுவிய ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும், அதே வேளை பல பரிமாணங்களில் தமிழையும் தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையிலும் `அகம் புறம்` என்ற கருப்பொருளில் 6 மாத கால கண்காட்சியைத் தொடங்குகின்றோம்.

அதன் தொடக்க விழா 7.10.2022 - வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நிகழ உள்ளது.
இதற்கு முதல்நாள் 6.10.2022 - வியாழக்கிழமை தமிழ் மக்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து 8.10.2022 - சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜெர்மனி வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடவும், லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை விரிவாக்கவும் வருகை தருகின்றனர்:
-மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.
-திரு சந்திரமோகன் இஆப
செயலர் , தமிழக அரசின் சுற்றுலா, அருங்காட்சியகங்கள், பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை

********
நாள்: 6.1.2022 வியாழக்கிழமை
நேரம்: மாலை 6 லிருந்து 9 மணி வரை
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Freies Musikzentrum
Stuttgarter Str. 15, 70469 Stuttgart, Germany

நாள்: 7.1.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5 லிருந்து 8 மணி வரை
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart , Germany

நாள்: 8.1.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 லிருந்து
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart , Germany
******

இந்த நிகழ்ச்சிகளுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மற்றும்
ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள்

தேமொழி

unread,
Oct 5, 2022, 5:28:34 AM10/5/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02kU98EfYtN4WUvkeJjWcqBkcHtzro4cNrzXdpEziEXTdvZy2Ld7P96gVY8uANZ3asl


arikamedu.jpg
'அகம்-புறம்' அரிக்கமேடு..!
தொல்லியல் கள ஆய்வுகள் நடந்த இடங்களில் அரிக்கமேடு என்ற பெயரும் நமக்கு நன்று பரிச்சயமான ஒரு பெயர்தான், இல்லையா?
தொல்லியல் அறிஞர் வீலர் அவர்கள் கடந்த நூற்றாண்டில் அங்கு செய்த அகழ்வாராய்ச்சி... அவருக்குப்பின் அவருக்கு முன் என நடந்த மேலும் சில ஆராய்ச்சிகள் அனைத்துமே இந்த அரிக்கமேடு கரையோரப் பகுதிகளில் இருந்து தமிழ் வணிகர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன.
ஜெர்மனியில் வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கின்ற 'அகம் புறம்' ஆறு மாத கால கண்காட்சியில் அரிக்கமேடு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களில் இரண்டு - பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளவை - இந்த இரண்டு அரும்பொருட்களும் ஜெர்மனிக்கு அகம் புறம் கண்காட்சியில் இடம்பெறுவதற்காகத் தற்காலிக ஒப்பந்தத்தில் இங்கு வருகின்றன.
இந்த அகம் புறம் ஆறு மாத கால கண்காட்சி இதுவரை தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பார்த்திராத, வெளி நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சில முக்கிய ஆவணங்களையும் வரலாற்று சின்னங்களையும் காட்சிப்படுத்தும் வகையில் அமையவிருக்கின்றது என்பது இதன் தனி சிறப்பு.
பிறகு என்ன..? விமான டிக்கெட் போட்டுக்கொண்டு இந்த ஆறு மாத கால கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகருக்கு வருவதற்கு உங்களை நீங்கள் இப்போது ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
உலகளாவிய தமிழ் மக்கள் இங்கு ஸ்டுட்கார்ட்நகர் வரும்போது உங்களை இருகரம் கொண்டு அன்போடு வரவேற்க தமிழ் மரபு அறக்கட்டளை பண்பாட்டு அமைப்பினரான நாங்களும் மற்றும் இங்கு இருக்கின்ற தமிழ் சங்கங்களும் காத்திருக்கின்றார்கள்.

`அகம் புறம்` என்ற கருப்பொருளில் 6 மாத கால கண்காட்சி:
1. 6.10.2022 - வியாழக்கிழமை தமிழ் மக்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்ச்சி
நாள்: 6.10.2022 வியாழக்கிழமை
நேரம்: மாலை 6 லிருந்து 9 மணி வரை
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Freies Musikzentrum
Stuttgarter Str. 15, 70469 Stuttgart, Germany

2. தொடக்க விழா 7.10.2022 - வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு
நாள்: 7.10.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5 லிருந்து 8 மணி வரை
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart , Germany

3. 8.10.2022 - சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்படுகின்றது.
நாள்: 8.1.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 லிருந்து
நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart , Germany
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜெர்மனி வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடவும், லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை விரிவாக்கவும் வருகை தருகின்றனர்:
-மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.
-திரு சந்திரமோகன் இஆப
செயலர் , தமிழக அரசின் சுற்றுலா, அருங்காட்சியகங்கள், பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
******
இந்த நிகழ்ச்சிகளுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உங்கள் அனைவரையும் நாங்கள் அன்போடு வரவேற்கின்றோம்.

தேமொழி

unread,
Oct 5, 2022, 9:44:03 PM10/5/22
to மின்தமிழ்
சோர்ஸ் - https://www.facebook.com/photo/?fbid=10210107600363362&set=a.10201825242629595


akam puram event5.jpg
Of love and war
Tamil story(s) from India and the world
Large special exhibition of the state of Baden-Württemberg
October 8, 2022 to May 7, 2023

From October 8, 2022 to May 7, 2023, the Linden Museum in Stuttgart is showing the exhibition “Of Love and War: Tamil History(s) from India and the World”. The large special exhibition of the state of Baden-Württemberg shows the history and present of Tamil culture.

Location:
Linden-Museum Stuttgart
Hegelplatz 1, 70174 Stuttgart
https://www.lindenmuseum.de/presse/von-liebe-und-krieg
*******************************************************

ஐரோப்பாவில் முதல் முறையாக...
தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி - ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில்.

7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்க வருகின்றனர்:

* மாண்புமிகு பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி
செயலர், பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், அமைச்சர் தொழில்துறை மற்றும் பண்பாட்டுத் துறை, பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், ஜெர்மனி.

* திரு. எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி
ஜெர்மனிக்கான இந்தியத் தூதர்

* மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு

தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.


முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart

தேமொழி

unread,
Oct 6, 2022, 4:25:04 AM10/6/22
to மின்தமிழ்
ஜெர்மனி விமான நிலையத்தில் . . . 
மாண்புமிகு அமைச்சர் அவர்களை வரவேற்கும் 
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஜெர்மனி குழுவினர்  

Welcome 2.jpg
Welcome 1.jpg
Welcome a.jpg
Welcome b.jpg
______________________________________________________________________________________

தேமொழி

unread,
Oct 6, 2022, 12:16:14 PM10/6/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0P37XVbLSmi7uu61AitDYoEZE9VhvcimQ5ZpTorWYaqMKnaXYP1aySSKHjNokATN6l


ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் நாளை தொடங்க இருக்கின்ற அகம் புறம் 6 மாத கால கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் பண்பாடு அருங்காட்சியகம் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு கௌதம சன்னா அவர்கள் ஆகியோரை இன்று காலை ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் ஜெர்மனி தமிழ் சங்க நண்பர்கள் வரவேற்ற போது..

Welcome.jpg
-------------------------------------------

தேமொழி

unread,
Oct 6, 2022, 12:20:21 PM10/6/22
to மின்தமிழ்


museum.jpg

ஜெர்மனி கெல்டன் அருங்காட்சியகம்.
இங்கு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செல்டிக் மன்னன் ஒருவரது எலும்புக்கூடு, அத்தோடு புதைக்கப்பட்ட அவனது தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட தேர் படுக்கை மற்றும் பல்வேறு பொருட்கள்... இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களையும் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களும் தமிழக அரசின் செயலர் சந்திரமோகன் அவர்களும் பார்வையிட்டனர்.
---------------------------------------

தேமொழி

unread,
Oct 6, 2022, 3:06:24 PM10/6/22
to மின்தமிழ்
நேரலையில் :  https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1309764679830757

வரவேற்பு நிகழ்ச்சி :
6.10.2022 (வியாழன்)
-----------
மாலை நிகழ்ச்சி 

1. தமிழ்த்தாய் வாழ்த்து
2. வரவேற்புரை: திரு.குமரன் சுப்ரமணியன்,
     துணைச் செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பியக் கிளை.
3. தலைமையுரை: முனைவர். க.சுபாஷிணி,
    தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
4. வாழ்த்துரை: திரு.சந்திரமோகன் இஆப.
5. சிறப்புரை: மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
6. தமிழ்ச்சங்கங்கள் / அமைப்புகளின் பிரதிநிதிகள்  கருத்துப் பகிர்வு
7. கேள்வி பதில் நேரம்

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 6, 2022, 10:20:14 PM10/6/22
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/96eac24e-4b22-48a1-832b-4bc642c1c86en%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 7, 2022, 1:52:43 AM10/7/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0PtFukny2Y4xVjLbRTfBKyTMQa7n4VZYBoNsptTJT81cCeqsqtW9ok3QyA6WHpFe3l


at university.jpg

ஜெர்மனி டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மானிடவியல் துறையில் ஒரு சந்திப்பு.
ஜெர்மனியின் மிகப் பழமை வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் சிறப்பு வாய்ந்தது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் தொடர்ச்சியாக அகழாய்வுகளைச் செய்து வருகின்றது இந்த டூபிங்கன் பல்கலைக்கழகம்.
அமைச்சர் மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்களும் தமிழக அரசின் பண்பாடு அருங்காட்சிகள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் நாங்களும் வந்தபோது துறையினர் வாசலுக்கு வந்து வரவேற்று எங்களை அழைத்து சென்றனர்.
அத்தகைய நோக்கத்தின் தொடக்கமாக நேற்று இந்தப் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தில் சில பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன.
அதனை ஒருங்கிணைத்த பெருமை நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் குறிப்பாக மானுடவியல் ஆசியவியல் துறைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆய்வுகளைத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தகைய நோக்கத்தின் தொடக்கமாக நேற்று இந்தப் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தில் சில பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன.
அதனை ஒருங்கிணைத்த பெருமை நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முனைவர் க சுபாஷிணி
தலைவர் தமிழ் மரப அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

தேமொழி

unread,
Oct 7, 2022, 5:17:50 PM10/7/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02LwnDASZmkwRnP4MzQakstFMKxq48sssxqEf7KDBW8JvVjtgbnyPsw5zKprMho1DFl


ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் சென்னை அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த முயற்சிக்கு அடிப்படையை உருவாக்கிய தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.
முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை.







தேமொழி

unread,
Oct 7, 2022, 6:02:17 PM10/7/22
to மின்தமிழ்
source - https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-thangam-thennarasu-to-inaugurate-tamil-exhibition-in-germany/articlecontent-pf777927-479319.html

"அகம் புறம்.." ஜெர்மனியில் நடைபெறும் தமிழ் கண்காட்சி! தொடங்கி வைக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

By Vigneshkumar

அக்டோபர்  6, 2022

சென்னை: தமிழையும் தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழர்களின் வரலாறு மற்றும் தமிழ்ப்பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அப்படித்தான் இப்போது தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் அகம் புறம் என்ற கருப்பொருளில் கண்காட்சி நடைபெற உள்ளது.

கண்காட்சி
கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் பல பரிமாணங்களில் தமிழையும் தமிழ் மரபையும் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறுகிறது.

அகம் புறம்
ஐரோப்பா வாழ் மக்களுக்குச் சங்க கால வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் வகையில் அகம் புறம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கண்காட்சி மொத்தம் 6 மாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நாளை (அக். 7) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பண்பாடு துறைச் செயலர் சந்திரமோகன் ஆகியோர் ஜெர்மனி வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடவும் உள்ளனர். மேலும், லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆறு மாதங்கள்
அதற்கு மறுநாள் (அக். 8) சனிக்கிழமை காலை 10 மணிக்குப் பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்பட உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இது அகம் புறம் என்ற கருப்பொருளில் சங்ககால வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் வகையிலான விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 7, 2022, 6:15:31 PM10/7/22
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய முனைவர் சுபாஷினி அவர்களுக்கு,

உங்கள் முயற்சி வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

எமது வாழ்த்து.

அன்புடன்
Dr. Mrs. S. Sridas



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 7, 2022, 6:31:04 PM10/7/22
to மின்தமிழ்


அழைப்பிதழ் – Aḻaippitaḻ – Einladung


Anlässlich der Eröffnung unserer Sonderausstellung "Von Liebe und Krieg: Tamilische Geschichte(n) aus Indien und der Welt" laden wir am Samstag, den 8.10., besonders Menschen mit tamilischen Wurzeln und ihre Freund*innen ein, die Kurator*innen zu treffen und mit ihnen gemeinsam die Ausstellung zu entdecken. Nach Grußworten und einer inhaltlichen Einführung werden Führungen in tamilischer, englischer und deutscher Sprache angeboten.

அகம்-புறம்: இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்து தொகுக்கப்பட்ட தமிழ் வரலாறும் கதைகளும்” என்ற எங்களின் கண்காட்சியின் தொடக்க விழாவில், இங்கு வாழும் தமிழ் மக்கள், ஜெர்மானியர்கள், தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டவர்கள் என அனைவரும் இக்கண்காட்சியை வடிவமைத்தோரைச் சந்தித்து, இக்கண்காட்சியை அவர்களோடு இணைந்து நேரில் கண்டறிய அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சியின் முறையான தொடக்க நிகழ்வு மற்றும் கண்காட்சி பற்றிய பொதுவான அறிமுகத்திற்குப் பிறகு, தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் கண்காட்சி வழிகாட்டுதல் வழங்கப்படும்.

10 Uhr
Begrüßung und Einführung in die Ausstellung (tamilisch/deutsch)

11.30 – 13 Uhr
Kuratorenführung (tamilisch/englisch)
mit Dr. Georg Noack und Dr. M.D. Muthukumaraswamy

14 – 15.30 Uhr
Kuratorenführung (tamilisch/deutsch)
mit Dr. Georg Noack und einer Vertreterin der tamilischen Community

Eintritt: € 14,–/12,–/Familien: € 28,


தேமொழி

unread,
Oct 7, 2022, 8:29:02 PM10/7/22
to மின்தமிழ்
speech.jpg

சிறப்புரை: மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு


வாழ்த்துரை: திரு.சந்திரமோகன் இஆப.

dance show.jpg
-------------------

தேமொழி

unread,
Oct 8, 2022, 2:27:15 AM10/8/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0ixzdQLNQ9r5GZrXg3Gpxorhyq9zKBPeqcP5uhPmPBHPo5KzVLg5qBG4G7uybKMbdl
akam puram.jpg

ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம் தமிழுக்கு உலக அரங்கில் சிறப்பு சேர்க்கும் 'அகம் புறம்' கண்காட்சியை நேற்று தொடக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்த தமிழக அரசின் தொழில்துறை தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு அவர்கள் அருங்காட்சியகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கும் மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் தமிழ்நாட்டின் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

Rathinam Chandramohan

unread,
Oct 8, 2022, 12:01:41 PM10/8/22
to mint...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி. நிழற்படங்கள் அருமை  


Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 8, 2022, 1:07:44 PM10/8/22
to மின்தமிழ்
source -  source - https://www.facebook.com/subashini.thf/posts/


Inaugural Addresses.jpg

லிண்டன் அருங்காட்சியகம் நடத்தும்
அகம் புறம் கண்காட்சி தொடக்க விழாவில்
டாக்டர் நோவாக்:
https://www.facebook.com/subashini.thf/videos/3232398477020552/

டாக்டர் முத்துக்குமாரசாமி:
https://www.facebook.com/subashini.thf/videos/657475995853361/

டாக்டர் சுபாஷிணி:
https://www.facebook.com/subashini.thf/videos/2076155072582819/


தேமொழி

unread,
Oct 8, 2022, 1:14:30 PM10/8/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0PzNg4cWcCmyfbSn7oogDf9kmDszHGSjN86xsRqThntMZq6E8ivv4hqKuTXyfV7iMl


ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் சென்னை அருங்காட்சியகம் இரண்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு கூட்டம் நேற்று மாலை ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் இரண்டு அருங்காட்சியகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எவ்வகையில் அமையலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
அதன் அடிப்படையில் இரண்டு அருங்காட்சியங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மாலை 4:30 மணி வாக்கில் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெர்மனி லண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர் டி காஸ்ட்ரோ அவர்களும் தமிழ்நாடு அரசின் சுற்றுலா பண்பாடு அருங்காட்சியங்கள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் கையெழுத்திட்டனர். தமிழக அரசின் தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி அவர்களது ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு கூட்ட நிகழ்வு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் திரு கௌதம சன்னா அவர்களும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வரலாறு மற்றும் ஆய்வுகள் தொடர்பான முயற்சிகளை ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கும் எண்ணத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும்.
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

akam puram.jpg
----------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Oct 8, 2022, 1:24:50 PM10/8/22
to மின்தமிழ்
source- https://www.facebook.com/photo/?fbid=3457788787797827&set=a.1631001437143247

Subashini Thf

suba with adichanallur artifacts.jpg
1876 ஆம் ஆண்டு டாக்டர் யாகூர் ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட 
அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கும் 
மேற்பட்ட அரும் பொருட்கள்...
150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

அகம் புறம்
லிண்டன் அருங்காட்சியகம், ஜெர்மனி

#adhichanallur
#agampuram
#TamilHeritageFoundation
#lindenmuseum

தேமொழி

unread,
Oct 8, 2022, 11:33:26 PM10/8/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0tFHqFHTY62tzyGGhDSy4tpQGSLcJVVbz6QYpC1bfinZ4spchqqWSv6DDrBQ6ME67l


agampuram.jpg

நாகப்பட்டினம் பௌத்த சிற்பங்கள்

சென்னை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய ஆய்வாளர் டி.என் ராமச்சந்திரன் அவர்கள் தனது Nagappatinam Bronzes என்ற நூலில் நாகப்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது அங்கு 350 க்கும் குறையாத புத்தரின் சிற்பங்கள் கல், செப்பு மற்றும் வெவ்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் கிடைத்ததைப் பற்றி தனது நூலில் குறிப்பிடுகின்றார். இச்செய்தியை நான் எனது 'ராஜராஜனின் கொடை ஆனைமங்கலம் செப்பேடுகள்' என்ற நூலில் விரிவாக விளக்கி எழுதியிருக்கின்றேன்.
கடந்த நூற்றாண்டின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் பல எங்கு உள்ளன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன என்ற செய்தியை டிஎன் ராமச்சந்திரன் அவர்கள் அப்போது அந்த நூலில் குறிப்பிடுகின்றார் ஆனால் அவை அத்தனையும் இன்றுவரை சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அவை எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்ற கேள்வியும் எழுகிறது.
ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அகம் புறம் கண்காட்சியில் ஜெர்மனி பெர்லின் அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு புத்தர் சிலையும் சுவிசர்லாந்து சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு புத்தர் சிலைகளும் கண்காட்சியில் இடம்பெறும் வகையில் இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன.
அவற்றை தான் இங்கே புகைப்படத்தில் காண்கின்றோம். இவை மூன்றுமே நாகப்பட்டினத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் என்ற குறிப்பைத் தாங்கியுள்ளன.
இப்படி அயல்நாடுகளில் பல்வேறு அருங்காட்சியகங்களில் நாகப்பட்டினத்தில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் இன்று காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை அனைத்தையுமே மீண்டும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவது அத்தனை சாத்தியபூர்வமான ஒரு காரியம் அல்ல. ஆயினும் தமிழ்நாட்டில் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகின்ற நாகப்பட்டினம் புத்தர் சிலைகளைத் தனி கண்காட்சியில் வைக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதையாவது நாம் முயற்சி செய்யலாம் அல்லவா?
நாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் எத்தனை பௌத்த சிலைகள் உள்ளன என்று விசாரித்த போது ஒரே ஒரு சிற்பம் மட்டும் திருவாரூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆக கிடைக்கின்ற குறிப்புகளின்படி அவை பெரும்பாலும் சென்னை அருங்காட்சியகத்துக்கே சென்றன என்பது தெளிவாகின்றது.
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பெட்டிகளிலேயே இத்தகைய பல நாகப்பட்டினம் பௌத்த சிலைகள் பூட்டப்பட்டுக் கிடப்பதால் யாருக்கு என்ன பயன்? இச்சிலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் அல்லவா?
மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுக்க பாதுகாப்பு அறைகளில் பூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள வரலாற்று சான்றாதாரங்கள் வெளியே வர வேண்டும்.
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்குத் தனி கண்காட்சி ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்!
முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Oct 9, 2022, 2:15:55 AM10/9/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02QmazWXiExWY6xVmPiUirj9bB1BEPouk8YMbBNesENxo7WgVCfY1BWaznbjbofL35l

CM1.jpg
CM2.jpg
CM3.jpg
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களது வாழ்த்து செய்தி
----
'அகம்-புறம்' ஜெர்மனியில் நேற்று தொடங்கப்பட்ட ஆறு மாத கால கண்காட்சிக்கு வாழ்த்துக்களைக் கூறி இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஜெர்மனி லின்டன் அருங்காட்சியகத்திற்கும், இக்கண்காட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு. க ஸ்டாலின் அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தி இது.
இதன் ஆங்கில வடிவம் 7.10.2022 அன்று தமிழக அரசின் அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களால் நிகழ்ச்சி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது.
இதன் தமிழ் வடிவம் 8.10.2022 பொதுமக்களுக்கான தொடக்க விழாவில் தமிழ் மொழியில், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் க.சுபாஷிணி அவர்களால் வாசிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் ஜெர்மனியில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியைப் பாராட்டி ஊக்குவித்து வாழ்த்து செய்தி அனுப்பிய தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி பல!
முனைவர் க. சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

தேமொழி

unread,
Oct 9, 2022, 8:13:10 PM10/9/22
to மின்தமிழ்
ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி

source - https://tamil.oneindia.com/news/international/tamilnadu-minister-thangam-thennarasu-inaugurates-tamil-exhibition-in-germany-479744.html

மா.ச. மதிவாணன், ஞாயிறு,அக்டோபர் 9, 2022

ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து!

ஸ்டுட்கார்ட் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அகம் புறம் என்ற தலைப்பில் 6 மாதம் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள் முன்முயற்சியில் அகம் புறம் என்ற 6 மாத கால கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தார். இந்த வாழ்த்துச் செய்தியை தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் வாசித்தார்.

ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் சென்னை அருங்காட்சியகம் இரண்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு கூட்டம் ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு அருங்காட்சியகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எவ்வகையில் அமையலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன் அடிப்படையில் இரண்டு அருங்காட்சியங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெர்மனி லண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர் டி காஸ்ட்ரோ, தமிழ்நாடு அரசின் சுற்றுலா பண்பாடு அருங்காட்சியங்கள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் கையெழுத்திட்டனர்.

தமிழக அரசின் தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு கூட்ட நிகழ்வு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் கௌதம சன்னா, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வரலாறு மற்றும் ஆய்வுகள் தொடர்பான முயற்சிகளை ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கும் எண்ணத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநில அமைச்சர் பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி, ஜெர்மனிக்கான இந்திய தூதர் எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

6 மாத காலம் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஐரோப்பிய தமிழறிஞர்களின் தமிழ் கொடைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

------

தேமொழி

unread,
Oct 12, 2022, 1:29:30 AM10/12/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid029Cy3NRPMLhZoE9UEyHK9XhsgtgdohNAwbxoDth7Ey1n7cuyZMYhxFyc6HJ7wfWJKl


ஜெர்மனி ஸ்டுட்கார்டு நகரில் தமிழ் மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி 6.10.2022
-----
agampuram.jpg
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜெர்மனி ஸ்டுட்கார்டு நகரில் அமைந்திருக்கும் லின்டன் அருங்காட்சியகத்தில் அகம்புறம் கண்காட்சியைத் தொடக்கி வைப்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அமைச்சர் மற்றும் செயலர் ஆகியோர் உள்ளூரில் வசிக்கும் தமிழ் மக்களைச் சந்திக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஒருநாள் முன்னதாக ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்ச்சிக்கு ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் வந்து கலந்து கொண்டது சிறப்பு.
அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் தமிழ் சங்கங்கள் தொடர்பான கோரிக்கைகள், தங்களது தனிப்பட்ட வகையிலான கருத்துக்கள் பகிர்வு என்பதை நிகழ்த்த அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது.
தமிழகம் இலங்கை போன்ற தங்கள் தாய் நாட்டில் இருந்து நீண்ட காலமாகப் பிரிந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள் தங்கள் இளம் தலைமுறையினருக்கு எவ்வகையில் தமிழக அரசின் கல்வி மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு செயல்பாடுகள் அமைய முடியும் என்பதை கலந்துரையாடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றி, தமிழத்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் குழந்தைகளின் கண்களைக் கவரும் தமிழிசைப் பாடலுக்கான ஒரு நடனமும் நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் உதவிய பல்வேறு தமிழ் சங்கங்களைச் சார்ந்த தோழர்களை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் குமரன், அருளினி, ஸ்ரீ கந்தா, பாலலெனின், கார்த்திக், ரம்யா, திவ்யா, கார்த்தீஸ்வரன், சத்தியமூர்த்தி.. ஜெர்மன் தமிழ் சங்கத்து நண்பர்கள் பேராசிரியர் வேலவன், அப்துல் ஜபார், பாலகுமாரன், ஸ்டுட்கார்ட் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த மெய்யரசு, சந்தோஷ் மற்றும் தோழர்கள் மற்றும் பாட் கான்ஸ்டாட் தமிழ் கோயில் நிர்வாகிகள்‌ மற்றும் பல்வேறு வகையில் உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ஜெர்மனியில் நிறைய தமிழ் அமைப்புகள் சிறப்பாக இயங்கிக் கொண்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த வகையில் அவ்வப்போது மட்டுமே சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை அவ்வப்போது அந்த வகையில் ஜெர்மனியில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்புகள் ஒருங்கிணைந்த வகையில் தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள பாலமாக அமைகிறது.
முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி

தேமொழி

unread,
Oct 13, 2022, 2:02:27 AM10/13/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/thangam.thenarasu/posts/pfbid0gGwCYu3xi5ZuLn8hzxfum5vBrNvY3f3EWoF3vxS9D6FbD5vKbnMM43y3KgDbK8wsl


ஜெர்மனியின் ஸ்டூட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்திற்கும், தமிழ் நாடு அரசிற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம், அவ்வருங்காட்சியகத்தில் நடைபெறும் ‘அகம் புறம்’ எனும் சிறப்பான கண்காட்சியினை ஒட்டி மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனிக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையேயான பண்பாட்டு உறவில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
october 7-19.jpg
october 7-20.jpg
---------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages