இணைய நண்பர் ஒருவர் காசி - இராமேஸ்வரம் ஸ்தலங்களை படித்து விட்டு..., தனிமடலில் பஞ்சபூத ஸ்தலங்கள் பற்றிய விபரத்தினை என்னிடம் கேட்டு இருந்தார்.
தனி மடலில் கேட்டிருந்த இணைய நண்பருக்கும் , மற்ற இணைய அன்பர்களுக்கும்,
நண்பர்களுக்கும் பயனுள்ள செய்தி இது அமைந்திருந்தால் தமியேனுக்கும் மகிழ்ச்சியே,
*****************************************************************************************************************
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான்
ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய
பொறுப்பாகும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது.
இந்த பிரபஞ்சம் இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச
பூதங்களால் ஆனதே.
ஐம்புலன்களாகிய நமது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் உணர
முடிவதை அல்லது ஸ்தூலப் பொருள் ( Material) என்றும், ஆறாவது புலனாகிய
மனம் மட்டும் உணர முடிவதை நுட்ப வஸ்து அல்லது சூட்சுமப் பொருள் ( Abstract)
என்றும் அழைக்கிறார்கள். இந்த உடலும் உலகிலுள்ள அத்துணை பொருட்களின்
கூட்டுகளால் ஆனவை.
நமது உடலும்..., நீர் 1. (Water) 2. நிலம் ( Earth ) நெருப்பு 3.(Fire ) , 4.காற்று (Air ),
5. ஆகாயம் (Space ) mஐந்து பொருட்களால் (Five Elements) அமைந்த ஸ்தூலப் பொருள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சைவ வழிபாட்டில் இந்த ஐந்து பூதங்களையும்
முன்னிறுத்தி, ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான
வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவஸ்தலங்களும் பஞ்ச பூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்படைய வேண்டும்
என்பதற்காக ஐந்து பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்காக முக ஐந்து
விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகின்றன.
1. நிலம் = காஞ்சிபுரம்.
2, நீர் = திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
3. காற்று = காளஹஸ்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில்
4. ஆகாயம் = சிதம்பரம்
5. நெருப்பு = திருவண்ணமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.