நம் அன்பிற்குரிய அண்ணா கண்ணன் (சிஃபி.காம்) அவர்கள் வருகின்ற
திருவள்ளுவர் ஆண்டு 2039, கார்த்திகை 30 (கி.பி.15,12,2008) அன்று ஓர்
புதிய வீடு கட்டி அதனுள் வாழத் தலைப்படுகிறார்.
நம் அன்பும் வாழ்த்தும் தொடர்ந்து உண்டு.
பழம் தமிழகத்தில் இச்சம்பிரதாயமுண்டா? உண்டெனில் எப்படி வாழ்த்துவார்கள்?
கண்ணன்
|
அன்புடன்
தமிழ்த்தேனீ
வள்ளுவர் வீட்டின் பெருமை என்பது மங்கலமே என்கிறார் !
மங்கலம் என்பது எல்லாவகையிலும் குறைவின்றி இருத்தல் ,
மேலும் அதில் நல்ல பிள்ளைகள் கிடைப்பது , அந்த மனையில் உபரி வரவு என்கிறார் .
"மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு. (60)"
இத்தகைய மனைமாட்சி அமைய சில காரணிகளை நமது பண்டைய தமிழர் ,கண்டு அதற்க்கு "மனை நூல்" எனப்பெயரிட்டு ஒரு பண்டைய நூல் எழுதப்பட்டுள்ளது .
அதுவே இன்றைய வாஸ்து சாஸ்திரத் திற்கு முனோடி.
பொதுவாக தமிழர் இதை மனை முகூர்த்தம் என்பர் , பலர் கிரகப் பிரவேசம்
என்பேர் .
இதில் கிரகப்பிரவேசம் என்பது மிக பொருள் வாய்ந்தது .
நாம் சாதரணமாக நமது ஜாதகத்தை கணித்து ,பிறகு பிறக்கும் போதுஇருந்த கிரகங்களின் நிலைகளை ,இந்த்தந்த டிகிரியில் போடும் போது.30 டிகிரிக்கு ஒரு கட்டமாக 12 கட்டங்களை உபயோகித்து ( 12x30 = 360 முழு சுற்று )
அதில் கிரகங்களை இடுகிறோம் .
இதை கூறும் போது ஒன்றாம் வீடு ,இரண்டாம் வீடு என அந்த கட்டத்தை கூறுவோம்
அதே சமயம் புதியதாக கட்டிய ஒரு வீட்டை கிரகம் என்கிறோம் .
அதில் குடி போக ஆரமிப்பதை கிரகப் பிரவேசம் என்கிறோம் .
அதாவது நமது ஒவ்வொரு
புதிய வீடும் ஒரு புதிய கிரகமாகிறது .
ஜாதகத்தில் கிரகம் இருக்கும் இடம் வீடு ஆகிறது .
அதன் சம்பந்தத்தை , எப்படி இன்னைகிறார்கள் பாருங்கள் !
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது என்ற
சொல்லுக்கு அர்த்தம் கொடுப்பது போல் , நமது கிரகப்
பிரவேசம் ஆரம்பமாகிறது .
அந்த கிரகத்தில் நாம் வாழும் மனைமாட்சிக்கு , மனிதன் அனுபவ ரீதியில்
வாழ்த்து ,வாழ்த்து பதிவு செய்த தொடர் ஞானம் , ஒரு கலையாக இன்று
விளங்குகிறது .
அல்லல் பட்டு பின் வரும் ஞானத்தால் என்னபயன் , காலம் போன பின்
கிடைக்கும் அறிவு , முடியில்லாத போது கிடைக்கும் சீப்புக்கு
ஒக்கும் என ஒரு அறிந்ஞர் கூறி உள்ளார் .
எனவே வீடு மனைமாட்சி உடன் விள்ங்க, அந்த புதிய நாம் வாழப்போகும்
வீடு ஒரு சுப கிரகமாக விள்ங்க, சற்று, சாஸ்திரப்படியும் அமைவது நலம் பயக்கும்
.
On Dec 12, 10:13 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> > பழம் தமிழகத்தில் இச்சம்பிரதாயமுண்டா? உண்டெனில் எப்படி வாழ்த்துவார்கள்?
>
"மனைமங்கலம்" என்ற பதச்சேர்க்கையாக பயன்படுத்தலாம் என
> நினைக்கிறேன்.
>
>>
> மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
> நன்கலம் நன்மக்கள் பேறு. (60)
>
> --
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
புதிய இல்லத்தில் வாழக்கை இனிமையாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன்.இதேபோல சீக்கிரம் திருமண செய்தியையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..:-)