செங்கோலை அடிக்கடி பார்த்து, அது புகட்டும் பாடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம் — அண்ணா

98 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 27, 2023, 6:15:20 PM5/27/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/Dravidarkazhagam/posts/pfbid0xGUWRbNxf1REMin7bCMmnpTmvwbRRoNM1ooizVpVqfYmB4TEyPET1ruqLBNN4MUvl


senkol.jpg
1947லேயே - அறிஞர் அண்ணாவின் அரிய எழுத்தோவியம் செங்கோல் - ஒரு வேண்டுகோள்!
புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார்.
அது 5 அடி உயரமாம்! அசல் தங்கத்தால் செய்யப் பட்டதாம்! அழகாகவும், இருக்கிறதாம்! செங்கோல் அளித்தது. ஏன்? பரிசா? காணிக்கையா? பாகமா? லைசென்சு கட்டணமா? எதும் விளங்கவில்லை.
எதிர்பாராதது! அம்மட்டோ! அவசியமற்றது! அவ சியமற்ற தாக மட்டும் இருந்தால் கூடப் பரவாயில் லையே. அதனுள் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளைச் சிந்தித்தால் ஆபத்தன்றோ மெள்ள மெள்ளத் தெரிகிறது.
பண்டிதர். அந்த செங்கோலைக் கண்டு, என்ன எண் ணினாரோ, நாமறியோம் ஆதீனகர்த்தா, கோலுடன் வேறென்ன ஓலை தந்தனுப்பினாரோ,நாமறியோம்.
நாம், கூற ஒன்றிருக்கிறது பண்டித நேருவுக்கு, அந்தச் செங்கோலைப் பெற்றுக்கொண்ட உமக்குச் சில சொற்கள்.
பாரிலே உள்ள பல நாட்டு வரலாறுகளை நீர் அறிவீர். முடிஅரசன் அவனைச் சுற்றி குடிமக்களை உழைக்க வைத்து, அதன் பலனை உண்டு கொழுக்கும் சீமான்கள் பரிவாரம் இந்தத் தங்கக் கோட்டையி னுள்ளே, தாராளமாக உலவும் அனுமதியும் வசதியும் பெற்ற மதத்தை முதலாகக் கொண்டோர் உள்ளனர் என்பதை அறிவீர். மக்களாட்சி மலருவதற்கு இத்தகை யவர்கள் நீக்கப்பட வேண்டும் என்னும் வரலாற்று உண்மையையும் அறிவீர்கள். அறிந்ததை. ஆட்சி முறையிலே புகவைக்க முயலுவீரோ, என்கிற அச்சம் கொண்ட ஆதீன கர்த்தாக்கள், செம்பொன்னால் செய்யப்பட்டது மட்டுமல்ல; நவரத்னங்கள் இழைத்த செங்கோலையும் தர முன்வருவர் - தற்காப்புக்காக! பதிகம் பாடிப் பரமன் அருளைத் தேடி, அற்புத சக்தியால் செய்யப்பட்டதல்ல! அரனடியார் ஒருவர் செய்ததாகக் கூறப்படும் நரிபரியான கதை போல, இரும்புத்துண்டை ஒரு துளி விபூதி தூவி, ஓம் செம்பொன் ஆக்கிச் செய்யப்பட்டதல்ல! பிறர் உழைப்பு? இவருடையது தானாம். இதுதான் அந்தச் செங்கோல்! பெயர், பொருந்துமா?
அந்தச் செங்கோல் - அய்ந்தடி உயரம்.
அழகிய வேலைப்பாடமைந்தது.
பசும்பொன்னால் செய்யப்பட்டது.
அளித்தவரோ, சாமான்யரல்ல - ராஜகுடும்பமோ? அல்ல, அதற்கும் மேலே! பூர்விக பரம்பரையோ? பூர்விக பரம்பரையா, நேற்று முளைத்ததா, என்பதல்ல முக்கியம். பரம்பரை கேவலம், பூலோகவாசிகளின் வழிவழி அல்ல- திருக்கைலாயபரம்பரை!
அண்ணேன்! எது, நமது ஆதீனத்துக்குத் திடீ ரென்று-
தேசபக்தி பொங்கி வழிகிறதே என்று கேட்கிறாயா, தம்பி!
இல்லே அண்ணேன், பொங்குவதும் வழிகிறதுந்தான் இங்கு பழங்கதையாச்சே ஆதீனத்தின் திருப்பார்வை, இப்படி. அரசியல் மீது பாயக் காரணம் என்ன, என்று கேட்டேன்.
காரணம் கிடக்கட்டும் தம்பி! எனக்கு அந்தக் காரணத்தைக் கண்டு பிடிக்கவேண்டுமென்பதிலே கூட அவ்வளவு பிரியம் இல்லை- ஆனால், விளைவு என்ன ஆகும் என்பதை எண்ணும் போது தான்.
ஏன்? என்ன ஆகும் விளைவு?
செங்கோல், செம்பொன்னால்தான் செய்கிறோம். வேலைப்பாடு முதல் தரமாகத்தான் இருக்கப்போகிறது. இரவுபகலாக உட்கார்ந்து வேலை செய்கிறோமே!
ஆமாம்! அதனாலே அழகும் அந்தஸ்தும். ஏற்படும். செங்கோலுக்கு, ஆனால் இதை அனுப்பி வைப்பதன் மூலம், ஆதீனம், தன்பார்வையை அந்தப் பக்கம் செலுத்துவது தெரிகிறதல்லவா? ஆதீனத்தின் பார்வை பட்ட காரணத்தாலே, ஏற்பட்ட பலவிதமான விளைவு களைப் பற்றி யோசிக்கும் போது...
அடாடா! நீங்க அதை எல்லாமா எண்ணிக் கொண்டு, ஆயாசமடைவது? இது வேறுபார்வை அது வேறு பார்வை அல்லவா?
இருக்கலாம் தம்பி, இருக்கலாம் ஆனால், இரண்டு ரகப் பார்வைக்குமுள்ள ஒரே காரணம், ஆசைதானே!
ஆமாம்!
ஆதீனத்தின் ஆசை, புதிய அரசாங்கத்தின மீது பாய்வதா? நல்லதா? - அதுதான் என்கேள்வி - எனக் குள்ள பயமும் அதுதான். அருமையான செங்கோல் - நல்ல வேலைப்பாடு- ஆனா இதைக் கையிலே வைத்துக்கொண்டு, ஆட்சி நடத்தினால்..
தம்பி! இதிலே உள்ள தங்கம் - தரித்திரத்தைக் கூடப் பொருட்படுத்தாதவன், பகல் பட்டினி, ராப் பட்டினி கிடந்தவன், மற்றவன் பொருளை மோசம் செய்தவன். மார் உடையப் பாடுபட்டவன், கூலியைக் குறைச்சவன், உழவனுடைய வயிற்றிலே அடிச்சவன், கொள்ளை இலாபக்காரன், கொடுத்த கடனுக்கு நாமத்தைக் குழைச்சிப் போட்டவன், இப்படிப்பட்டவன் களெல்லாம் கூட, செய்ததை மறைக்க, பாவத்தைக் குறைக்க பகவா னையே ஏமாற்ற, கொடுத்த காணிக்கை, இருக்குதே. அதுதானே! அதுவுந்தானே இருக்கும் புத்தம் புதிசா ஆரம்பிக்கிற ஆட்சிக்கு, இப்படி, புத்தியைச் சுரண்டிப் பிறகு, வாழ்வையே சுரண்டி விடுகிற வழக்கத்தை முதலாக வைத்து வியாபாரம். செய்கிறவர்களிடமிருந்து செங்கோல் கிடைத்தால்.ஆட்சி, சரியாவா இருக்கும்?
நீங்க ஒரு வேடிக்கை அண்ணேன்!
வேடிக்கை அதிகமில்லேடா தம்பி! வேதனை இருக்கு அதிகமாக செங்கோல் செய்தவர்கள் இது போலப் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால், இது போன்று எண்ணாம லிருந்திருக்க முடியாது!
அய்யர்:ஆஹா! பொது சிலாக்யம்! சிரேஷ்டமான காரியம்.
சகலரும் பாராட்டுவா!
அதிபர்: செங்கோலின் உயரம்.
அய்யர்: அய்ந்து அடியாம்! செம்பொன்னாம். சொன்னா!
தங்களுடைய கீர்த்தியோ, அய்ந்து யோசனை உயரம் உயரும்.
அதிபர்: பேப்பர்காராளெல்லாம் கூட
அய்யர்: அவாளைத் தள்ளுங்கோ படம் போடுவா பாராட்டி எழுதுவா - பெரிய பெரிய மனுஷா - அயல் தேசத்திலே இருந்தெல்லாம் வந்திருப்பா அமெரிக்கா, அய்ரோப்பா, முதலிய பல இடங்களிலிருந்து - அவாளெல்லாம் செங்கோலைக் கண்டாளான்னா, ஆஹா! பிரம்மிச்சிப் போவா.
அதிபர்: ரொம்ப அழகான முறையிலே தான். பக்தர்கள் தயாரிக்கிறா.
அய்யர்: வேலைப்பாடு கூடக் கிடக்கட்டும். அதுவும் நன்னாத்தான் இருக்கும். ஆனா அதைக் கூடக் கவனிக்கமாட்டா- இந்த முகூர்த்த வேளையிலே, இப்படிப்பட்ட சிலாக்யமான செங்கோலைத் தர வேணும்னு, இந்தியா பூராவிலேயும் உள்ள படேபடே, ராஜாக்கள்,பரோடா, ஜெயப்பூர், உதயப்பூர், மைசூர், எந்த ராஜாங்கத்துக்கும், உதிக்கல்லே! ஆதீனத்துக்கு, அந்த அன்பும், அக்கறையும், அபிமானமும் ஏற்பட்டது பாருங்கள் என்று, ஒவ்வொருவரும் பேசிப் பேசிப் புகழமாட்டாளா? செங்கோலைப் பற்றி ஒரு நிமிஷம் பேசுவா, இரண்டு நிமிஷம் பேசுவா, ஆனா, தங்களைப் பற்றியோ, நாளெல்லாம் பேசுவாளோன்னோ?
அதிபர்: ஆமாம் எப்படி நமது யோசனை?
அய்யர்: வேறு யாருக்கு வரும்! ராஜா கையிலே இருப்பது செங்கோல் - முதல் ராஜாங்கத்துக்குச் செங்கோல் கொடுத்தது யார்? ஆதீனம்! அதாவது, ஆதீனம் பார்த்து ஆசீர்வதித்து, அனுமதி தந்து, புது ராஜ்யம் ஆரம்பமாகலாம்னு முத்திரை தருவது போல, செங்கோலும் கொடுத்த பிறகுதான், புதுராஜாங்கமே ஆரம்பமாச்சுதுன்னு, சகலரும் பேசுவா - இப்ப மட்டுமல்ல - எதிர்காலத்திலும்,
இப்படிப்பட்ட, பேச்சு நடந்திருக்கக் கூடும்!
செம்பொன் தன்னால் ஆக்கித்
திருவருளை இழைத்திழைத்து
வம்பொன்றும் வராமல்
வாழ்க இந்த அரசு என்று
எம்மானைப் பெம்மானை,
ஏறுடைய எம் சிவனை
வேண்டியே, அருள்பெற்று
வேண்டியமட்டும் சேர்த்துச்
செங்கோல் தனைச் சமைத்தார்.
எங்கோவாம், ஆதீனத்தார்.
என்று புலவர் பாடி இருப்பார், இந்தச் சம்பவத்தைச் சிறப்பிக்க ஓர் பாடல் சைவ மெய்யன்பருக்குத் திருப்தி இருந்திராது. சீற்றம் பிறந்திருக்கும் காரணத்தோடு.
சைவர்: பாசுரம் பாடுகிறீர் - பாசுரம்! ஓலைச்சுவடியும், கையுமாக ஓராண்டா, ஈராண்டா, பத்தாண்டுகளாக உள்ளீர். பழுத்த பூசணியென வயிறு பருத்ததன்றி, புலமை காணோமே?
பு: கவிதையிலே, குறை உளதோ?
சை: அதில் மட்டுமிருப்பின் பொறுத்திடலாமே! யூகம் இல்லையே! பாசுரம் எதுக்குப் பாடுகிறீர்?
பு: ஆதீனச் சிறப்பை விளக்க
சை: ஆதீனச் சிறப்பா? இருக்கும் சிறப்புடன் இன்று புதிதாக ஆதீனம் தனிச்சிறப்புப் பெற, செங்கோல் சமைத்து அனுப்பும் சம்பவமன்றோ முக்கியம்? அதற்கன்றே பாடல்?
பு: ஆமாம்!
சை: அங்ஙனம் என்று, உமது பாடலில் எங்ஙனம் விளக்கியுள்ளீர்? செங்கோலின் பருமன், உயரம், எடை, அழகு, இவைபற்றிய குறிப்பெங்கே? முக்கியம் அஃ தன்றோ? சம்பவத்தின் சிலாக்கியம் அப்போதன்றோ விளங்கும். செப்பனிடும், முதலில் செய்யுளை! பிறகு உம் புத்தியை!
அடி அய்ந்து உயரம் ஆகும்.
ஆனதோ அழகான செம்பொன்
வடிவழகு கொண்டதாம் வேலை
ஞாலம் புகழ்ந்திடுமாம்
எஞ்ஞான்றும் இந்நாளை!
பாதகமில்லை! போம்! என்று கூறி, சைவ, மெய் யன்பர். புலவரை அனுப்பிவிட்டு, பாடலை, பக்தர்க ளுக்குச் சமர்ப்பித்து இருக்கக்கூடும். புகழைப் பதிவு செய்து கொள்ளும் முறை அது.
செங்கோலைச் சமர்ப்பிக்க வந்த கூட்டத்தில், சிவந்த மேனியும், கலைக்கண்களும் படைத்தவர் ஒருவர், கட்செவியும் மயங்கும் வகையில் நாதஸ்வரம் வாசித்திட்டது அறிவீர்.அவரைக் கண்டபலர்.என்ன பேசிக்கொண்டிருப்பர்?
யார் இவர்?
நாதஸ்வர வித்வான்!
ஓஹோ! இவர் வந்துள்ள காரணம்?
செங்கோலைத் தருவதற்கு ஆதீனம் இவரை அனுப்பி யிருக்கிறார். செங்கோல் தரும் ஆதீனம் எப்படி இருப்பார்?
சிவப்பழமாக!
என்ன வேலை செய்கிறார்?
ஆதீனத்தை நடத்துகிறார்!
எங்ஙனம்?
உரத்த குரலில் கூறட்டுமா, மெல்லிய குரலிலா?
ஏன்?
ஏனெனில், இருவிதமான குரலில் கூற, இருவகை உண்டு!
என்று பேசிவிட்டுச் சிரித்திருப்பார்கள்.
பார்த்தால், அழகாகத் தெரியும்.
அந்தச் செங்கோலை, மற்றோர் முறை பாரும். சற்றுக் கூர்மையுடன்!
ரிஷபம் மட்டுமல்ல, தெரியக்கூடியது,
மாடென உழைக்கும் ஏழைகள் பலரும் தெரிவர்.
இழைப்பு வேலைமட்டுமல்ல தெரியக்கூடியது உழைப்பை உறிஞ்சுவதால், மேனியில், உளுத்தவர் களுக்கு ஏறியுள்ள மினு மினுப்பும் தெரியும்.
ஆயிரம் வேலி நிலம் தெரியும், அதை உழுது பயிரிட்டு அழுது வாழும் பாட்டாளியின் உருவம் தெரியும். அவன் வதையும் குடிசை தெரியும். அங்கு செங்கோல் செலுத்தும் வறுமை தெரியும்! மிட்டா மிராசு தெரியும், அவர்களின் மோட்டார் பங்களா தெரியும். தங்கத் தட்டும் தெரியும் அதிலே வெண்ணிறத் தூசும் தெரியும்! சுழலும் கண்கள் தெரியும். சோர்ந்த உடலும் தெரியும். வியர்வை தெரியும். பொழிந்த இரத்தம் தெரியும். மத்தடி பட்ட தயிர் போன்ற சித்தம் கொண் டவரின் உருவம் தெரியும்!
மடம் தெரியும் - அங்கு உலாவும், சிவஜடம் தெரியும். உடலில் அணி தெரியும் - உள்ளே பிணி உள்ளது குறிப்பாகத் தெரியும்!
தோட்டம் தெரியும், நீராடத் தனக்குதவும் குளமும் தெரியும் அக்குளம் பேசுமேல் பலப்பல குட்டிக்கதைகள் தெரியும்.
சைவம் தெரியும். பலர் அதன் அருள் பெற்று, உயர்ந்த 'வகையும்' தெரியும்.
மின்னிடும் மோதிரமும் செவியில் குலுங்கிடும் குண்டலமும் தங்கப் பாதக் குறடும், தாங்கிடும் பக்தர்களும், எனும் இவ்விதக் காட்சிகள், இன்னும் பலப்பல, மின்னி மின்னித் தெரியும்- செங்கோலை மீண்டும் மீண்டும் பார்த்தால்!
ஆதீனம் வந்து போனவரின் அடையாளப் பேச்சுப் பேசுவோர், 'ஆஹா! அருமை! அருமை! ஆனாலும் சிரமம் அதிகம் ஆதீனம் ஆனந்தம் அடைந்தது, நம் பாக்கியம்' என்று அகம்மகிழாவிட்டாலும் முக மகிழ்ந்து போகும் அடியார்களைக் காணலாம்! மற்றும் பலப்பல தெரியும். ஆனால், மாற்றுக் குறையாத பசும்பொன்னால் செய்தது, உயரம் அய்ந்தடி உன்னதம் வேலைப்பாடு என்பவனற்றைச் சற்று. மறந்து பார்க்கவேண்டும், செங்கோலை. அப்போதுதான் தெரியும் சிற்றரசன், சீமான், என்போரேனும் மக்களின் சீற்றம் கிளம்பிப் பாயுமோ தம்மேலே என்று ஆயாசமடைவர், ஆனால் இந்த ஆதீனங்களோ, அச்சம் மிகுந்த மக்கள் தமது அடி தொழ, சர்க்கார் பாதுகாப்புத் தர, பணம் படைத் தோர் படை பல தர கொலுவீற்றிருக்கிறார்கள் பயமற்று-கவலையற்று என்பது. செங்கோல் - ஒரு வேண்டுகோள்; காணிக்கை அல்ல! அன்பின் அறிகுறியல்ல! நாட்டுப் பற்றை விளக்கும் சின்னமல்ல! வேண்டுகோள்!
ஆளவந்தாரோ, மக்களைத்தாளில் விழச்செய்து, ஈடில்லாத புகழும் பொருளும் பெற்றுள்ள இந்த ஆதீ னங்களைக் கலைத்து விடவேண்டுமென்று, ஏதேதோ கற்றோமென்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் பேசிடும் காலம் இது, எமது ஆட்சிமுடியுங்காலம் என்று பேசுகின்றனர். நாங்கள், பரம சாதுக்கள்! உம்மிடம் அபாரமான ஆசை கொண்டவர்கள். சந்தேகமிருப்பின், செங்கோலை மற்றோர் முறைபாரும், அய்ந்தடி உயரம், அருமையான வேலைப்பாடு - எமது ஆதீனம், புதுமுறை வேண்டுபவரின் புன்மொழிக்கு ஆளாகாமல் இருக்கச் செய்யும். எமக்கு இறவாவரம் தாரும். எம்மானே, நேருபெம்மானே! இறவாவரம் தாரும் - இன்னுமோர் இருபதாண்டுகளுக்கேனும், இறவா வரம் தாரும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்-சைவ மெய்யன்பர். இந்தக்கோல் கொடுத்ததன் மூலம், தமக்கும், புதிய சர்க்காருக்கும், சினேகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், மேலும் பாமரரை மயக்கவிரும்புகிறார். நேரு சர்க்காரின் நேயரான ஆதீனம் ஏற்கெனவே சிவநேசத்தையும் பெற்றிருக் கிறது, எனவே, அதன் ஆதிக்கம் குறையாது, குன்றாது, என்று பாமரர் நம்ப இடமேற்படுகிறது இதனால்,
இவ்வளவும் தங்கம்! முற்றும் துறந்த முனிவர்களின் வழி வழிவந்தோரான, ஆதீனகர்த்தாவின் சுவாதீனத்தி லுள்ள ஏராளமான செல்வத்திலே இது ஒரு சிறு, மிக மிகச் சிறுதுண்டு!
ஆதீனத்திலே, நவரத்னங்கள் உள்ளன. பேழை களிலே!
நவரத்னங்களிலும் மேலான, செந்நெல்மணி விளை யும், வளமான வயல்கள் உள்ளன ஆதீன ஆட்சியிலே,
மனித குல மாணிக்கங்களான பாட்டாளி மக்கள், அங்கு வதைகின்றனர்.
எத்தர்கள், இந்த ஆதீனகர்த்தாக்களை, சித்தர் என்று கூற, ஏமாளிகள் மயங்கிக் குவிக்கும் ஏராளமான பணத்திலே, சிதறியதிலே சிறிது, செங்கோலாகி உம் மிடம் வந்திருக்கிறது.
தோடாக, பாடகமாக, தொங்கட்டமாக, உருவெடுத்த பொருள் இதனினும் அதிகம்!
இறவாவரம் தரச்சொல்லி, விடுத்துள்ள இந்தச் செங் கோல், எத்தகைய செம்பொன்னால் ஆக்கப்பட்டிருக் கிறதோ, அத்தகைய பொன், குன்றுபோலுள்ள காட்சி யைக் காணலாம். இத்தகைய ஆதீனங்கள். மதஸ்தாப னங்கள் ஆகிய இடங்களிலே உள்ள பொருளைப் பறிமுதல் செய்தால் அந்தப் பொருளை, நாட்டு மக்கள் வாழ்வை வளமாக்கும், செங்கோல் இன்றுள்ளது போல ஆதீனம் தரும் அலங்காரக் கோலாக மட்டுமின்றி, மக்களின் வாழ்வை உயர்த்திடும், மாண்பு பெறும், அந்தச் செங்கோலை அடிக்கடி பார்த்து, அது புகட்டும் பாடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.
- ‘திராவிட நாடு', 24.8.1947

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலும் சில படங்கள்:

senkol2.jpg
senkol3.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Arun Chandrasekaran

unread,
May 27, 2023, 10:38:44 PM5/27/23
to mint...@googlegroups.com
ஏன் இப்படி சைவத்தின் மீது வன்மம் கக்கும் ஒரு உரை? MinTamil எந்த வகையான குழுமம்?!

செங்கோல் நம் மன்னின் பெருமை! 

மக்கள் விழித்துள்ளனர். இனியும் திராவிடம் என்ற பெயரில் மக்களைக் குழப்பி ஏமாற்றி பிழைக்கும் திருடர் கழகம் அழிந்தொழியும் நாள் வெகு தொலைவில் இல்லை!


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/822ecd12-9d9e-4c49-849a-ae84166888fan%40googlegroups.com.

தேமொழி

unread,
May 28, 2023, 3:03:57 PM5/28/23
to மின்தமிழ்
/// MinTamil எந்த வகையான குழுமம்?!///

நீங்கள் குழுவில் இணைந்து 2 மாதங்களே ஆகியுள்ளன என்று பார்த்தேன் . 
அதனால் உங்களுக்கு மின்தமிழ் குழுமம் குறித்தும் தமிழ் மரபு அறக்கட்டளை குறித்தும் அறிமுகம் தேவை என்று புரிந்து கொண்டேன்.  

கீழுள்ள குறிப்பு குழுமப் பக்கத்தின் முகப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது :
தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு (THFi) அமைப்பின் நோக்கு, போக்கு, செயல் மற்றும் கொள்கை என்பது தமிழ் மற்றும் தமிழரின் மொழி, வரலாறு,  பண்பாடு, நாகரிகம், மானுடவியல்  மற்றும்  சமூகவியல் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.  த.ம.அ. நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் அரசு சாராத அமைப்பாகவும் இயங்கி வருகிறது.  தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழக வரலாறு, தமிழக தொல்லியல் தரவுகள்,  தமிழர் நாகரிகம் குறித்த தமிழ்க் கருவூலங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் " கடிகை " தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழின் தொன்மை, மரபு, பண்பாடு, கலைச்செல்வங்கள், கல்வெட்டுகள்  குறித்த பயிலரங்கங்கள், மரபுச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. தமிழார்வம் கொண்ட  உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தியா, மலேசியா, இலங்கை, ஐரோப்பா நாடுகளில் கிளைகள் கொண்டு இயங்குவதுடன், இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக, "மின்தமிழ் கூகுள் குழுமம்"" உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இயங்கி வருகிறது. தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!
மின்னஞ்சல் முகவரி: myth...@gmail.com, இணையதளம்: https://www.tamilheritage.org/, கூகுள் மின்தமிழ் குழுமம்: https://groups.google.com/g/mintamil, பேஸ்புக்: https://www.facebook.com/groups/THFMinTamil


இதைத் தவிர்த்து தமிழ் மரபு அறக்கட்டளை குறித்த காணொளி 
தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப் பயணத்தின் 20 ஆண்டுகள்
https://youtu.be/EntckP4ffyk

நன்றி 

தேமொழி

unread,
May 28, 2023, 7:46:22 PM5/28/23
to மின்தமிழ்
அண்ணாதுரை கட்டுரையின் மையக் கருத்து தாமஸ் ஜெஃபர்சன் சொன்ன கருத்திலும் எதிரொலித்தது 

i.e., separation of church and state
jefferson.jpg
இது போன்ற கருத்துகளை  முன்வைப்போருக்கு இடையில் உள்ள ஒற்றுமை என்னவெனில்...
இவர்கள் பரந்துபட்ட நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டவர்களாகவும்,
நாட்டின் நலனுக்கு மக்களின்  நலனுக்கு எது சரியான கொள்கை என்று 
சீர்தூக்கி அலசும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பது 


தாமஸ் ஜெஃபர்சன்
அமெரிக்க முன்னாள் அதிபரும், ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவருமான தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson)
# சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு ஆசிரியரிடம் வரலாறு, அறிவியல், தொன்மையான மொழிகள் கற்றார். 16 வயதில் கல்லூரியில் சேர்ந்து, கணிதம், மாறாநிலைவாதம், தத்துவம் பயின்றார். பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் நிபுணத்துவம் பெற்றார். 
# ஏராளமான நூல்களைப் படித்தார். தான் படித்த மற்றும் தந்தை கொடுத்த நூல்களைப் பாதுகாத்து 1770-ல் நூலகம் அமைத்தார். அந்த புத்தகங்கள் ஒரு தீ விபத்தில் நாசமாகின. மனம்தளராத ஜெஃபர்சன் மீண்டும் 1,250 நூல்களைத் திரட்டி நூலகம் அமைத்தார். 40 ஆண்டுகளில் நூல்களின் எண்ணிக்கை 6,500 ஆக அதிகரித்தது. ‘‘புத்தகங்கள் என் சுவாசம். அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

"தாமஸ் ஜெஃபர்சன் 10"  -- https://www.hindutamil.in/news/blogs/78880-10.html << இப்பக்கத்தில் இருந்து சில குறிப்புகள் 


Message has been deleted

தேமொழி

unread,
Jun 9, 2023, 1:59:19 AM6/9/23
to மின்தமிழ்
சரியான ஒப்பீடு செய்யும் நோக்கில்;  ஏதேனும் சமயத் தலைவர்கள்  ஆட்சியாளர்களுக்குச் செங்கோல் அளித்த படங்கள் உள்ளனவா இசையினியன்?

On Thursday, June 8, 2023 at 10:56:27 PM UTC-7 இசையினியன் wrote:
- அண்ணாவின் "செங்கோல் - ஒரு வேண்டுகோள்" பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
- அண்ணாவை பின்பற்றும் திராவிட ஆட்சியாளர்களின் செங்கோல் புகைப்படம். 
- அப்படியே இந்து ஆட்சியாளர்களின் செங்கோல் புகைப்படம்.

மோடி - செங்கோல் 

sengol-adheenam-modi-pti.jpg

ஜெயலலிதா- செங்கோல் 

348465603_1383987629117908_6390658959343421904_n[1].jpg

கருணாநிதி - செங்கோல்

349673719_799065991774226_4200069561333075507_n[1].jpg


Message has been deleted

தேமொழி

unread,
Jun 9, 2023, 4:27:09 AM6/9/23
to மின்தமிழ்
முதலில் இந்திய அரசியலமைப்புச் சட்டம்  முகப்புரையில் இருந்து தொடங்குங்கள் 
அதன் அடிப்படையில்தான் இந்த செங்கோல் சடங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது 

இதைத் தவிர்த்து . . . 
கடவுள் உண்டா இல்லையா?
உண்டு என்பவர்கள், இல்லை என்பவர்கள் இவர்களில் யார் யார் ஏமாற்றுக் காரர்கள் என்பதல்ல கேள்வி 
On Friday, June 9, 2023 at 12:49:39 AM UTC-7 இசையினியன் wrote:
  1. துலாபாரம், பல்லக்கு, வாள் எனப்பல உண்டு.
  1. "ஏதேனும் சமயத் தலைவர்கள்  ஆட்சியாளர்களுக்குச் செங்கோல் அளித்த படங்கள்" 
  1. -எந்த ஆட்சியாளர்கள், இந்தியாவை  ஆள்பவர்களா ? உலகை ஆள்பவர்களா? தேடினால் கிடைக்கும்.
கடவுள் அரசியல் தந்திரம் :
  1. கடவுள் இல்லை என்பவனும் மக்களை ஏமாற்றுபவர்கள்.
    1. இவர்களின் அரசியல் தந்திரம் கோயில், மசூதி, தேவாலயம் போகாதவர்களை ஏமாற்றுவது. தன்னை பகுத்தறிவாளர்கள் எனக்கூறிக் கொள்வர்.
  2. கடவுள் இருக்கு என்பவனும்  மக்களை ஏமாற்றுபவர்கள்.
    1. இவர்களின் அரசியல் தந்திரம் கோயில், மசூதி, தேவாலயம் போகின்றவர்களை ஏமாற்றுவது. தன்னை பக்தியாளர்கள் எனக் கூறிக் கொள்வார்கள்.
  3. மேற்கண்ட இருவருமே பின்வரும் ஒன்றில் பதில் அவர்களிடம் இல்லை
    1. கடவுள் இருக்கு என்பவன் கடவுளை நேரில் கண்டது இல்லை.  
    2. கடவுள் இல்லை என்பவன் கடவுள் தன்மையை  உணர்ந்தது இல்லை.
Message has been deleted

தேமொழி

unread,
Jun 9, 2023, 3:29:08 PM6/9/23
to மின்தமிழ்
CONSTITUTION
Preamble
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST *SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

*sec·u·lar
adjective
1. denoting attitudes, activities, or other things that have no religious or spiritual basis.

நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் அவர்களது அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்திருப்பது தேவை. 
அது அவர்களுக்கான பொது அறிவின் கீழ் வரும். 


On Friday, June 9, 2023 at 12:16:01 PM UTC-7 இசையினியன் wrote:
/// சமயத் தலைவர்கள்  ஆட்சியாளர்களுக்குச் செங்கோல் அளித்த படங்கள்

பற்றி கேட்டீர்கள் ஆகவே பதிவு கடவுளை நோக்கி பயணித்து விட்டது. சமயத் தலைவர்கள் என்றாலே கடவுளின் தேவை எழுகிறது அல்லவா... கடவுள் வைத்து சமயவாதி மதத்தை பரப்புகின்றனர். கடவுளை வைத்து அரசியல்வாதி ஆட்சி நடத்துகின்றனர். 

/// முதலில் இந்திய அரசியலமைப்புச் சட்டம்  முகப்புரையில் இருந்து தொடங்குங்கள்
    1.  அரசியலமைப்புச் சட்டம்
    1. மருத்துவ மனைகள்
    2. நீதிமன்றங்கள், 
    3. காவல்துறை, 
    4. வழக்கறிஞர், 
    5. நீதிபதிகள்
    6. சிறைத்துறை
    7. தமிழ்நாடு சட்டமன்றம், 
    8. இந்திய பாராளுமன்றம், 
    9. மக்கள் பிரதிநிதிகள், 
    10. பெண்கள், 
    11. ஆண்கள், 
    12. இல்லறம், 
    13. துறவறம், 
    14. சமுதாயம் 
    15. தேர்தல்கள்
    16. அறம்
    17. நீதி
    18. கொடுங்கோன்மை
    19. செங்கோண்மை
     இவற்றைப் பற்றி எல்லாம் அடுத்த தொடர் பதிவில் (அதிகாரம் 92:1) ஆதாரங்களுடன் கூற இருக்கிறேன். இவற்றின் உண்மை முகம் பற்றி அப்போது தெரிந்து கொள்வோம். 

    Reply all
    Reply to author
    Forward
    Message has been deleted
    0 new messages