இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை

135 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 3, 2015, 7:30:10 PM3/3/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, freetamilebooks

உலகெங்கும் வாழும் தமிழர்கள், அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல,
மிகவும் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள் முழு வீச்சில்
செயல்பட்டு, தமிழ் கற்பித்தல், இசை, பாடல், நாட்டியம் கற்பித்தல்,
நண்பர்களாக, குடும்பங்களாக அடிக்கடி சந்தித்து பேசுதல்,
பாடல், ஆடல், பேச்சுப் போட்டிகள் நடத்துதல்,
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளை இணைந்து கொண்டாடுதல்
என பல்வேறு வகைகளில், தமிழை வாழ வைக்கின்றனர்.

அவ்வப்போது, தமிழ் பிரபலங்களையும் அழைத்து வந்து
இசை, திரையிசை, பட்டிமன்றம், சிறப்புரை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

தமது குழந்தைகளை தமிழ் கற்க ஊக்கப்படுத்தவும்,,
அவர்களின்  திறமையை வெளிக்காட்டவும் , இசை, பாடல், நாட்டியம், நாடகம்
போன்றவற்றில் பயிற்சி தந்து, இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

திரைப் பாடல்களூம், இசையும் இணையத்தில் நிறைய கிடைப்பதால்
அவையே முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

ஒரு குழுவாக, பல சிறுவர்களும் இணைந்து, நடிக்கக்கூடிய நாடகங்களுக்கு
பெரும் வரவேற்பு கிடைக்கின்றன.

தமிழ் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாரத்திற்கு ஓரிரு நாட்களும், ஓரிரு மணி நேரங்களே கிடைக்கும் இந்த குழந்தைகளை, மேடையேறி சிறு வசனங்களை சொல்லச் செய்வதே பெரும் பணியாக இருக்கும்.

இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, சிறுவர் நாடகங்கள் இணையத்தில் கிடைப்பதில்லை.

http://www.noolaham.net/project/02/120/120.htm
http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html

இவை இரண்டு மட்டுமே இணையத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் மட்டுமே அச்சு நூல்கள் சில கிடைக்கின்றன.
அவை வெளிநாட்டு தமிழர்களை சென்றடைவது கடினமே.

இதனால், வெளிநாட்டு தமிழ் ஆசிரியர்களோ, பெற்றோரோ தான்
நாடகங்களுக்கு மூலக்கரு, வசனங்கள் எழுத வேண்டியுள்ளது.

இது பலருக்கு எளிதான வேலை அல்ல.

இது போன்ற நாடகங்கள் இணையத்தில் உரை வடிவில் கிடைத்தால்,
அவர்கள் எளிதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலும்.

சிறுவர்களுக்கு எழுதும் எழுத்தாளர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில்
சிறுவர் நாடங்கங்களையும் எழுத வேண்டுகிறேன்.

புதிதாக எழுத வேண்டியது கூட இல்லை.
ஏற்கெனவே குழந்தைகளுக்காக நிறைய நீதிக் கதைகள்,நகைச்சுவைக் கதைகள்,
தெனாலிராமன், அக்பர், பீர்பல், முல்லா, விக்கிரமாதித்யன், பரமார்த்த குரு போன்ற
கதைகள் உள்ளன.

http://chirukathaikal.blogspot.co.uk
http://www.tamilsirukathaigal.com/search/label/Moral%20Story

இங்கு பல சிறுவர் கதைகள் கிடைக்கின்றன.
அவற்றை எளிய சிறு, குறு நாடக வடிவில் எழுதி இணையத்தில் வெளியிட்டாலே போதும்.

அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தேவைக்கேற்றபடி, சிறு மாற்றங்கள் செய்து
தம் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வர்.

இதை தமிழ் எழுத்தாளர்களும், வலைப் பதிவர்களும், நட்பு ஊடக எழுத்தாளர்களும்
தனியே எழுதி வலைப் பதிவுகளில் வெளியிடலாம்.
அல்லது ஒரு குழுவாக ஒரு இடத்தில் சந்தித்து, எழுத்துத் திருவிழா நடத்தி,
எழுதி வெளியிடலாம்.

இவ்வாறு எழுதும் அன்பர்கள் தயவுசெய்து வலைப்பதிவில் வெளியிடுங்கள்.
முகநூல், டுவிட்லாங்கரில் எழுதும் எழுத்துக்கள் இணைய தேடுதலில் கிடைப்பதில்லை.

தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி!

--
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

Suba.T.

unread,
Mar 4, 2015, 1:11:26 AM3/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு ஸ்ரீனி

முனைவர் முரசு நெடுமாறன் போன்றவர்கள் குழந்தை இலக்கியம் படைக்கின்றனர் என்ற தகவலை ஒரு பதிவில் சில  வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தேன். அவர் னாடகங்கள் உருவாக்கியிருக்கின்றாரா என தெரிந்து அதனையும் இணைக்கலாம்.

தகவலுக்காக..
இங்கு ஜெர்மனியில் உள்ள என் தோழி இந்து அண்மையில் தமிழில் வில்லுப்பாட்டு தயாரித்து குழந்தைகளைக் கொண்டு அரங்கேற்றினார்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Malarvizhi Mangay

unread,
Mar 5, 2015, 6:24:24 AM3/5/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel

தோழி சுபா அவர்களே,நான் சீவகசிந்தாமணி,வளையாபதி,
மற்றும்உதயணகுமாரகாவியம்
நாககுமாரகாவியம்,யசோதரகாவியம்,சூளாமணி,நீலகேசி ஆகிய காப்பியங்களை நாடகவடிவமாக மாற்றியுள்ளேன்.அகில இந்திய வானொலி,மதுரைநிலையம் அதனை  முப்பது வாரங்கள்  வானொலிநாடகமாக ஆக்கம்  செய்து ஒலி பரப்பியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அவற்றை நூல்களாக வெளியிட்டு உள்ளன.

Chokkan Subramanian

unread,
Mar 5, 2015, 7:10:22 AM3/5/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பார்ந்த ஸ்ரீனிவாசன் அவர்களே,

நான் இங்கு சிட்னியில் தமிழ் பள்ளிக்கூட மாணவர்களை வைத்து சில நாடகங்களையும், கலந்துரையாடல்களையும் இயக்கியிருக்கிறேன். 

அவைகள்:

மேலும் இரு நாடகங்களை (கோட்புலி நாயனார் மற்றும் மொழியின் அருமை)இன்னும் என்னுடைய வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவில்லை. அதனால் அவைகளை அட்டாச்மென்ட்டாக இதில் சேர்த்திருக்கிறேன். 

இவைகளையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு தமிழை பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சியே. 

நீங்கள் சொல்வது போல், தமிழை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல நம்மால் ஆன முயற்சியை செய்வோமே. 

என்றும் அன்புடன்,
சுப. சம்பந்தம்
கோட்புலி நாயனார்.pdf
மொழியின் அருமை-2011.pdf

தேமொழி

unread,
Mar 5, 2015, 12:46:44 PM3/5/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
உங்கள் வலைப்பூ பதிவுகளைப்  பார்த்தேன், நாடகங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. சுப. சம்பந்தம்.

சட்னி வாழ் முகில் மொழியின் அருமை புரிந்துகொண்டதை முழுமையாகப் படித்தேன் :))

அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் மனதில் ஓடும் எண்ணங்களையே நாடகமாக நன்கு வடித்துள்ளீர்கள்.

சொ.வினைதீர்த்தான் ஐயா அவர்கள் 
தமிழால் இணைவோம் – சுட்ட பண்ணியரமும், பிஞ்ச பீசாவும்
என்ற ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி நாடகம். ஒன்றினை முன்னர் பகிர்ந்திருந்தார்.
(ஆக்கம்: இராசேசுவரி முத்துராமன், ஹூஸ்டன்)

சற்றொப்ப இந்தக் கருத்தையே  அடிப்படியாகக் கொண்டதுதான் அந்த நாடகமும்.  அதையும் அடுத்து தனிப்பதிவாக இந்த இழையில் பகிர்ந்து வைக்கிறேன்.

நாடகம் தேடுவோருக்குப் பயன்படலாம்.

நன்றி.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

தேமொழி

unread,
Mar 5, 2015, 12:51:19 PM3/5/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=45891

சுட்ட பண்ணியரமும், பிஞ்ச PIZZA வும்
தமிழால் இணைவோம் – உறவை வளர்ப்போம்!

ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி நாடகம்.

(ஆக்கம்: இராசேசுவரி முத்துராமன், ஹூஸ்டன்)

sd default

முகவுரை:

வணக்கம். Pearland தமிழ் பள்ளி மாணவர்களின் சார்பாக இந்த குறு நாடகத்தை உங்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் பெரிய நடிகர்கள் இல்லை. எங்களை இயக்கியவர்கள் பெரிய இயக்குனர்கள் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து இருக்கிறோம். இது சிரிக்க வைக்கும் முயற்சி. யாரையும் எதையும் குறிப்பிடவில்லை. தயவு செய்து அமைதியாக கண்டுகளியுங்கள். இங்க இருக்கிறவர்கள் இந்தியா போகும் போது சில வீடுகளில் என்ன நடக்கிறது என்பதே கதை.

காட்சி 1. நம் U.S.A. மாநகரில் உள்ள ஒரு குடும்பத்தில் நடக்கும் காட்சி. என்ன நடக்குதுன்னு வாங்க பார்க்கலாம்.

காணொளி சுட்டி: http://youtu.be/BgPVQyCcX5k

காட்சி: 1 (U.S.A)

அம்மா: ஏங்க இந்தியாவுக்கு போறதுக்கு டிக்கெட் வாங்கி முழுசா ரெண்டு நாளாச்சு. கொஞ்சமாவது கவலை இருக்கா. உட்கார்ந்து N B A பார்க்கிறீங்க.
அப்பா: என்னமோ சொல்லரா கண்டுக்க கூடாது. என்னன்னு கேட்டோமனா problem தான் (mind voice). சந்திரா Your voice is so sweet. I love you.
அம்மா: திட்டினா வெக்கமே இல்லாம குரல் sweet -ன்னு சொல்லுங்க .
அம்மா: நம்ம குட்டிஸ் என்ன பண்ணுதுகள் சித்ரா, லஷ்மண்.
பிள்ளை 1: I did not kottu-fy anything in bathroom. you did it.
பிள்ளை 2: Not me. you did it.
பிள்ளை 1: No I didn’t. you did it.
பிள்ளை 2: You did it.
அம்மா: ஐயோ! கடவுளே சக்தி கொடு……. டிவி பார்த்துக்கிட்டு. சை.
அப்பா: ரைட், கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.
பிள்ளைகள்: அப்பா, அப்பா ராக்கெட் லீடிங்-ஆ.
அம்மா: பிள்ளைகளா, அப்பா சொன்னங்களா நாம இந்தியா போகப் போறோம்.
பிள்ளை 1: ஹே … ஜாலி.
பிள்ளை 2: Oh my god. Last week periappa சொன்னாங்க there are lot of black outs in India.
அப்பா: கவலைப்படாதே! அங்கே இப்ப இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் எல்லாம் வைச்சிருக்காங்கலாம்.
அம்மா: கிட்ஸ் அங்க போகும் போது 2 பேரும் வாலை சுருட்டி வைச்சுக்கணும். அப்போதான் எல்லோரும் என்னை சமத்தா வளர்த்து இருக்கான்னு சொல்லுவாங்க.
அப்பா: எங்க அண்ணன் ரொம்ப orthodox. so நீங்க இந்தியாவுல தமிழ்ல தான் பேசணும். ஒழுங்கா டிரஸ் பண்ணிக்கணும்.
பிள்ளைகள்: சரி அப்பா. மாமாவும் வர்றாங்களா?
மாமா: நான் இல்லாமலா? நானும் தான் வரேன்.
அம்மா: அப்படியே மாமாவுடைய கல்யாணம் வந்தா நல்லா இருக்கும்.
அம்மா: தம்பி. இந்தியாவுக்கு போறதுக்கு purchase பண்ணனும். எங்க sales இருக்குன்னு பார்த்துகிட்டே இரு.
மாமா: சரி அக்கா. இப்ப கூட macy’s ல buy one வாங்குனா get one free. போய்கிட்டு இருக்கு.
மாமா: Khols ல கூட sale இருக்கு .

காட்சி 2 (இந்தியா)

அப்பா: என் தம்பி அடுத்த வாரம் வர்றான்.
அம்மா: உங்க தம்பி பொண்டாட்டி வேற இப்ப வேலைக்கு போறாளாம். ஒரே ஆட்டமா இருக்க போகுது. அவங்களுக்கு நாம குறைச்சல் இல்லைன்னு காட்டணும் .
அப்பா: என்ன பண்ணப் போற?
அம்மா: வந்து சொல்றேன் (வெளியே செல்லுதல்)
பிள்ளை 1: அப்பா அப்பா! அம்மா எங்க?
அப்பா: தெரியலை. இப்ப வந்துருவா (அம்மா உள்ளே வருதல்)
பிள்ளை 2: அப்பா, நம்ம சித்தப்பா வீடு வரங்களா அப்பா.
அம்மா: உங்களை எல்லாம் இங்கிலீஷ் மீடியத்திலே படிக்கச் வைத்தோம்ன்னு தான் பேரு. ஒரு வார்த்தை ஆச்சும் enlish-ல பேசுதுங்களா ? உங்க சித்தப்பா வீடு வந்து போறவரைக்கும் இங்கிலீஷ்-ல தான் பேசணும். இந்த டிரஸ்களை தான் போட்டுக்கணும்.
அப்பா: என்ன இது அங்க அங்க Pants கிழிஞ்சு போயிருக்கு. பார்க்காம வாங்கிகிட்டு வந்துட்டியா?
அத்தை: ஐயோ மாமா. இதுதான் fashion. இல்லயா அக்கா.
பிள்ளை 1: அம்மா அப்ப எனக்கு அதே மாதிரி பண்ட்ஸ் வாங்கிகிட்டு வந்து இருக்கிங்களா? ஜாலி தான்.
பிள்ளை 2: அம்மா இந்த ஸ்கர்ட் ரொம்ப குட்டியா இருக்கு.
அம்மா: அவங்க இருக்க 2 வாரமும் அப்படிதான். அப்புறம் எல்லாம் அமெரிக்க சாப்பாடுதான். நோ இட்லி, நோ சாம்பார்.
அத்தை: பார்த்தீங்களா மாமா எங்க அக்கா இங்கிலீஷ் எல்லாம் பேசுறாங்க.

காட்சி 3 (இந்தியா)

பங்கு பெறுவோர்:
அம்மா 1, அப்பா 1—-U.S.A
பிள்ளை 1, பிள்ளை 2——-U.S.A
&
அம்மா 2, அப்பா 2—– இந்தியா
பிள்ளை 3, பிள்ளை 4——–இந்தியா
&
அத்தை , மாமா

அம்மா 2, அப்பா 2: வாங்க, வாங்க, Journey எல்லாம் எப்படி இருந்துச்சு.
அம்மா 1, அப்பா 1 : ஆமா, நல்லா இருந்துச்சு.
அம்மா 1: எப்படி இருக்கீங்க?
அமமா 2: we are fine எங்களுக்கென்ன நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?
அம்மா 1: நல்லா இருக்கோம் அக்கா.
பிள்ளைகள் 1&2: பெரியம்மா, பெரியப்பா எப்படி இருக்கீங்க?
அப்பா 2: நல்லா இருக்கோம். நல்லா வளர்ந்துட்டிங்க.
பிள்ளைகள்3&4: ஹாய் அங்கிள்,ஹாய் ஆன்ட் ஹொவ் ஆர் யு?
அம்மா 1: நல்லா இருக்கோம். இவங்களும் வளர்ந்துட்டாங்க.
பிள்ளை1: டிரஸ் நல்லா இருக்கு. பட் கொஞ்சம் குட்டியா இருக்கு.
அப்பா 2: பிள்ளைகளா கொஞ்சம் என் கூட பேசிகிட்டு இருங்க. உங்களுக்கு தமிழ் தெரியுமா?
பிள்ளைகள் 1&2: நல்லா தெரியுமே. எங்க தமிழ் school ல திருக்குறள் போட்டி எல்லாம் வைத்தார்கள்.
அப்பா 2: சொல்லுங்க பார்க்கலாம்.
பிள்ளை 1: திருக்குறள் சொல்லுதல்.
பிள்ளை 2: திருக்குறள் சொல்லுதல்.
பிள்ளை 1: பிள்ளை 3ஐ பார்த்து, நீயும் சொல்லு.
பிள்ளை 3&4: நாங்க பாட்டு பாடரோம். (Twinkle, ஆத்திசூடி சினி சாங்)
பிள்ளை 1: ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?
பிள்ளை 4: அப்படின்னா என்ன? we don’t have that?
பிள்ளை 2: என்னது rest room இல்லையா? mommy I need to go to potty.
அம்மா 2: பாட்டி எல்லாம் இங்க இல்லை.
அம்மா 1: நோ,நோ,அவ bathroom ஐ தான் கேக்குறா. அங்க எல்லாம் opposite தான்.
அம்மா 2: என்ன எல்லோரும் மூக்கால சாப்பிடுவாங்களா?
அம்மா 1: இல்லை அக்கா. example க்கு lift – elevator, km – miles, kg – lb. switch on -switch off .
அத்தை : இங்க day அங்க night.
அம்மா 2: சரி, சரி, எங்களுக்கும் அதெல்லாம் தெரியும்.
அம்மா 2: வாங்க சாப்பிடலாம்.
பிள்ளைகள் 1&2: என்னது காலையிலே pizza வா.
அம்மா 1: ஸ்….. சாப்பிடுங்க.
பிள்ளை 1: எங்க அம்மா சொன்னாங்க நீங்க பணியாரம் நல்லா பண்ணுவீங்க அப்படின்னு.
அம்மா 2: ஓ! உங்களுக்கு பணியாரம் ரொம்ப பிடிக்குமா? நான் நல்லா செய்து தரேன் செல்லங்களா.
பிள்ளைகள் 1&2: அம்மா இங்க வாங்களேன். எவ்வளவு trophy வாங்கி இருக்காங்க பாருங்கள்.
அப்பா 1: தமிழ், science, ஸ்போர்ட்ஸ் ன்னு எவ்வளவு trophy கலா? good job.
அப்பா 2: உன் பிள்ளைகளும் நல்லா தமிழ் பேசுறாங்க.
பிள்ளைகள் 2: அங்க நாங்க pearland தமிழ் பள்ளிக்கு போறோம். அப்புறம் வீட்லயும் அம்மா அப்பா தமிழ் ல தான் பேசுவாங்க. அதனாலதான்.
அம்மா 2: ரொம்ப நல்லது.

காட்சி 4 (விமான நிலையம் )

பிள்ளைகள் 1&2: எல்லோருக்கும் போயிட்டு வர்றோம்.
அம்மா,அப்பா 1: போயிட்டு வர்றோம்.
அம்மா,அப்பா 2: போயிட்டு போன் பண்ணுங்க.

அவர்கள் சென்றவுடன்.
அம்மா 2: என்னங்க நான் நினைச்ச மாதிரி இல்லை உங்க தம்பி குடும்பம். அவங்க வந்தது நல்லா இருந்தது.
அப்பா 2: ஆமா, அவங்க அயல் நாட்டிற்கு சென்றாலும் எதையும் மறக்கலை, பிள்ளைகளையும் நல்லா வளர்த்து இருக்காங்க.
பிள்ளைகள் 3&4: நாமளும் ஒரு தடவை அங்க போயிட்டு வருவோம்.
எல்லோரும் சேர்ந்து: தமிழால் இணைவோம். உறவை வளர்ப்போம்!

Suba.T.

unread,
Mar 5, 2015, 3:05:04 PM3/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-05 12:24 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

தோழி சுபா அவர்களே,நான் சீவகசிந்தாமணி,வளையாபதி,
மற்றும்உதயணகுமாரகாவியம்
நாககுமாரகாவியம்,யசோதரகாவியம்,சூளாமணி,நீலகேசி ஆகிய காப்பியங்களை நாடகவடிவமாக மாற்றியுள்ளேன்.அகில இந்திய வானொலி,மதுரைநிலையம் அதனை  முப்பது வாரங்கள்  வானொலிநாடகமாக ஆக்கம்  செய்து ஒலி பரப்பியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அவற்றை நூல்களாக வெளியிட்டு உள்ளன.

​நல்ல விஷ்யம் இது.
ஸ்ரீனிக்குச் சொன்னால் மின்னூலாக ஆக்கி அதனை வெளியிடவும் உதவுவார்.

சுபா
 
Shrinivasan T

unread,
Mar 5, 2015, 6:38:38 PM3/5/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
5 மார்ச், 2015 ’அன்று’ 4:54 பிற்பகல்-ல், Malarvizhi Mangay
<malarm...@gmail.com> எழுதியது:
> தோழி சுபா அவர்களே,நான் சீவகசிந்தாமணி,வளையாபதி,
> மற்றும்உதயணகுமாரகாவியம்
> நாககுமாரகாவியம்,யசோதரகாவியம்,சூளாமணி,நீலகேசி ஆகிய காப்பியங்களை நாடகவடிவமாக
> மாற்றியுள்ளேன்.அகில இந்திய வானொலி,மதுரைநிலையம் அதனை முப்பது வாரங்கள்
> வானொலிநாடகமாக ஆக்கம் செய்து ஒலி பரப்பியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அவற்றை
> நூல்களாக வெளியிட்டு உள்ளன.

மிக்க மகழ்ச்சி.

அவற்றை இலவச மின்னூல்களாக வெளியிட விரும்பினால்,
http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/
இங்கு கேட்டுள்ள விவரங்களைத் தருக.

நன்றி

Shrinivasan T

unread,
Mar 5, 2015, 6:40:20 PM3/5/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
> நான் இங்கு சிட்னியில் தமிழ் பள்ளிக்கூட மாணவர்களை வைத்து சில நாடகங்களையும்,
> கலந்துரையாடல்களையும் இயக்கியிருக்கிறேன்.

அருமையான படைப்புகள் ஐயா.

மிக்க நன்றி.

> மேலும் இரு நாடகங்களை (கோட்புலி நாயனார் மற்றும் மொழியின் அருமை)இன்னும்
> என்னுடைய வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவில்லை. அதனால் அவைகளை அட்டாச்மென்ட்டாக
> இதில் சேர்த்திருக்கிறேன்.

அவற்றையும் வலைப் பதிவில் சேருங்கள்.
விரைவில் தொகுப்பாக வெளியிடலாம்.

மிக்க நன்றி

Shrinivasan T

unread,
Mar 5, 2015, 6:41:54 PM3/5/15
to mint...@googlegroups.com
> சொ.வினைதீர்த்தான் ஐயா அவர்கள்
> தமிழால் இணைவோம் – சுட்ட பண்ணியரமும், பிஞ்ச பீசாவும்
> என்ற ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி நாடகம். ஒன்றினை முன்னர் பகிர்ந்திருந்தார்.
> (ஆக்கம்: இராசேசுவரி முத்துராமன், ஹூஸ்டன்)
> http://www.vallamai.com/?p=45891

அருமை. பகிர்வுக்கு நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages