“பெருமாள் முருகனை ஆதரித்து” கவிஞர்கள் ,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும் கண்டனக் கூட்டம் – ஜனவரி 25, மாலை4, வடபழனி,சென்னை

80 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jan 19, 2015, 4:53:50 AM1/19/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com

மண் பாண்டங்களோடு சேர்ந்து பதற்றமடைந்திருக்கிறது கொலை! ...கலை தன் நிறங்களைப் பகிர்ந்து கொள்கிறது."

"பெருமாள் முருகனை ஆதரித்து"
கவிஞர்கள் ,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
கண்டனக் கூட்டம்

இடம் . தமிழர்திடல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை-83
நேரம்- 25-01-2015 மாலை நான்கு மணிமுதல்.

( பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் : சகல சாதி,மத , மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகளை எதிர்த்தும் கண்டித்தும் 2015 ஜனவரி - 25 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் குடியரசு தினத்திற்கு முந்தைய தினத்தில் கவிஞர்கள் , கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
மாபெரும் கண்டனக்கூட்டம் நடைபெற உள்ளது .

தனிப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டின் எல்லாதரப்பு கவிஞர்களும் , கலைஞர்களும் ,எழுத்தாளர்களும் ,ஓவியர்களும் இந்நிகழ்வில் பங்குபெறுகிறார்கள் .ஒன்று திரள்கிறார்கள் . படைப்பாளிகள் இணைந்து எதிர் குரல் கொடுப்போம் வாருங்கள் .

இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பும் படைப்பாளிகள் தொடர்புக்கு - லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர் - சிலேட் சிற்றிதழ் ) தொலைபேசி-9362682373 அசதா-தொலைபேசி- 9952167291 கௌதம சென்னா- தொலைபேசி-9841208499 )

நிகழ்வுகள்

மணல் அகல் இயற்றுதல் ;
அகல் ஒன்று- கவிஞர். சுகிர்தராணி ,அகல் இரண்டு-ஓவியர். கிருஷ்ண ப்ரியா,அகல் மூன்று-ஓவியர். ரோகிணி மணி

டிஸ் ருடு ( ஆஸ்திரேலிய பழங்குடி இசை )-
கவிஞர். குமார் அம்பாயிரம்

நாடகக் கலைஞர்கள் வசியச்சடங்கு ;
மு.நடேஷ்,ச.முருகபூபதி ,கருணா பிரசாத்

தலைமை ; ஓவியர் .சந்ரு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;
கவிஞர். லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர்- சிலேட் சிற்றிதழ் )
கண்டனம் எதற்காக ? அறிக்கை :எழுத்தாளர் .அசதா

வரவேற்புரை-கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

படைப்பாளிகள் வாலை வாக்கு :

சிற்பி .தட்சிணாமூர்த்தி,எழுத்தாளர்.சா.கந்தசாமி ,
எழுத்தாளர் .எஸ் . ராமகிருஷ்ணன் ,எழுத்தாளர்.ஜெயமோகன் , கவிஞர்.ஞானக்கூத்தன்,
எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன்,...

கவிஞர்கள் அனல் வாக்கு :

கண்டராதித்தன்,ஷங்கர் ராமசுப்ரமணியன்,ஸ்ரீநேசன்,என் .டி .ராஜ்குமார் , குட்டிரேவதி ,நக்கீரன்,இசை,வெய்யில்,நரன்,லிபி ஆரண்யா ,செல்மா பிரியதர்சன் , கரிகாலன் ,பா.தேவேந்திரபூபதி , கவிதா முரளிதரன்,கவின் மலர் ,மனுஷி பாரதி ,தமிழ்நதி ,யாழன் ஆதி,ஜி.எஸ்.தயாளன் , பாலைநிலவன் ...

ந . பெரியசாமி,மனோ.மோகன்,பிர்தவ்ஸ் ராஜகுமாரன் , கலாப்ரியா , தேன்மொழி ,கே.என்.செந்தில்,ஜி. குப்புசாமி , அய்யப்ப மாதவன் , தூரன் குணா .ஜீவ . கரிகாலன்,இளங்கோ கிருஷ்ணன் , அபிலாஷ் சந்திரன் , நறுமுகை தேவி , ஸ்வாதி ச.முகில்,கதிர் பாரதி , சரோ லாமா,லீனா மணிமேகலை,வேல் கண்ணன்,ஸ்ரீ சங்கர் , ...

தக்கை வே.பாபு,பா.ராஜா ,சாஹிப் கிரான், அகச்சேரன், சாம்ராஜ் , ராக்காயி துணங்கை, ஜி.முருகன்,சபரிநாதன்,கே.ஸ்டாலின் , அகச்சேரன் ஜி.முருகன்,சபரிநாதன்,T . பரமேஸ்வரி...
ராணிதிலக்,ரோஸ் ஆன்றா...

காலபைரவன்,இமையம், ஆழி.செந்தில்நாதன்,மூ.அப்பணசாமி,ஜீவ சுந்தரி , ராமானுஜம் ,தளம் பாரதி ,பயணி,விஸ்வநாதன் கணேசன் ,ஜார்ஜ் . சாமுவேல் ,கார்த்திகைப் பாண்டியன் ,உமா மோகன் ,,ஏ.கே.டி . சாந்தமூர்த்தி ,கா.இராமசாமி ,பொன்ராஜ்,வே.ஜீவ கிரிதரன் ,அரியநாச்சி பால சுப்பிரமணியன் பொன்ராஜ் , க. இராமசாமி,இயற்கை சிவம், , ச.விஜய லட்சுமி ,அஜயன் பாலா ,ஸ்டாலின் ராஜாங்கம் ,A .A .H .K . கோரி ...

D.I.அரவிந்தன் ,தளவாய் சுந்தரம்,ஜோஸ் அன்ராயன் ,சந்திரா, மு.ஹரிகிருஷ்ணன்(ஆசிரியர் -மணல் வீடு) ,பொன்.வாசுதேவன்,வெளி.ரெங்கராஜன்.

ஓவியர்கள் :
விஸ்வம்,அபராஜிதன்,வெங்கட்,நரேந்திரன் , நட்ராஜ்,பெனிட்டா பெர்சியாள் , ப.மணிவண்ணன்,அதிவீரபாண்டியன்,திருநாவுகரசு,எழிரசன் ,ஸ்ரீதர் , தனசேகர்,புகழேந்தி

நாடகக் கலைஞர்கள் :
பாண்டிச்சேரி இன்டியநோசிரம்: குமரன் வளவன் மற்றும் ...
மணல் மகுடி நாடகக் குழு : ச.முருகபூபதி மற்றும்...
பாண்டிச்சேரி நாடகக் கலைஞர் கோபி மற்றும் ஸ்டெல்லா ...

நிகழ்வாக்கக் குறிப்புகள்:
எழுத்தாளர் .கோணங்கி ( ஆசிரியர்-கல்குதிரை-சிற்றிதழ் )

நன்றியுரை :
எழுத்தாளர்.கௌதம சென்னா

நிகழ்வு ஏற்பாடு : சிற்றிதழ் இயக்கம்

https://www.google.com/calendar/event?eid=ODgxdWszaDhtcGU5MXNzc3J2YjZsYmdmbnMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

செல்வன்

unread,
Jan 19, 2015, 7:28:04 PM1/19/15
to vallamai, mint...@googlegroups.com, panb...@googlegroups.com
இம்மாதிரி பொதுக்கூட்டங்களைச்சென்னையில் நடத்துவதைவிடத்திருசெங்கோட்டில் நடத்திப்பொதுமக்களுக்கு நூலைப்பற்றிய ஐயங்களைப்போக்கும் முயற்சியிலிவர்களீடுபடலாம்

தேமொழி

unread,
Jan 19, 2015, 8:55:31 PM1/19/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தலைநகர்தான் சரியான இடம்.

ஏன் கண்டனக்காரர்களை நீங்களும் ஏதாவது சமரசப்பேச்சு என்று நைச்சியமாக பேசி அழைத்து, காவல்துறை, அரசு துறை எல்லாம் தலையிட்டு, அதிகார வர்க்கத்தை வைத்து, மனஉளைச்சலைக் கொடுத்து, மூடிய கதவிற்குப் பின்புறம் கையைப் பிடித்து முறுக்காத குறையாக கையெழுத்து வாங்க மறைமுகத் திட்டம் வைத்திருக்கிறீர்களா செல்வன். 

மக்கள் கண்டனத்தை எங்கிருந்தும் சொல்லலாம்.

முடிந்தால் தமிழக மக்கள் அனைவரும் காவல்துறையின் முன்அனுமதி பெற்று ...அதே குறிப்பிட்ட ஞாயிறன்று  தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  கலெக்டர் அலுவலகம் முன்னர் அமைதியான முறையில்   கண்டன போராட்டம்  நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.  

சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கருத்து சுதந்திரம் பற்றிய கவனஈர்ப்பு கொண்டுவரவேண்டும்.

நான் முன்னர் கதையைப்படிகாமல் கருத்து சொல்வது சரியா என்ற குழப்பத்தில் மறுகிக் கொண்டிருந்தேன். 

கருத்து சுதந்திரம் பற்றி நான் பெரிதும் மதிப்புடன் நோக்கும் நீதியரசர் சந்துரு அவர்களின் கருத்தை படித்த பிறகு என் சந்தேகம் தீர்ந்தது.

அவர் சொன்னால் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்.


[...]

At a panel discussion on ‘Free Speech in Peril’, retired judge of the Madras High Court, K. Chandru, said it was no longer just the question of whether people had a constitutionally guaranteed right to expression, which had been articulated extensively by the courts through a plethora of judgments. Rather, the real danger now seemed to be private “fascist” groups which wanted to decide on what should and should not be read by people.

Justice Chandru said the case of Mr. Murugan had some curious aspects. His book Maadhoru Bhaaganwas first released in 2010, but violent reaction to the book began after an English translation was released four years later.

“The whole protest seems to be one orchestrated by a group in New Delhi which specialises in reading Indian authors and begins such campaigns,” he said.

Contrary to popular perception that caste was an issue only in the Southern and Northern parts of the State, Mr. Murugan’s books, such as Saathiyum Naanum, portrayed the deeply entrenched caste prejudices in the Western region of Tamil Nadu. “The 75-year-long self-respect movement in Tamil Nadu has miserably failed to uproot caste,” he opined.

Calling the “peace agreement” the Namakkal administration had facilitated as lacking in legality, he said the Constitution did not provide for agreements that violated the fundamental rights of citizens. He also suggested that a forum be formed to help people whose rights were violated by fundamentalist groups.

[...]

---------------------------------
கருத்துரிமையை காப்பாற்ற தீரத்துடன் போராடவேண்டும்: ‘இந்து’ இலக்கிய விழாவில் என்.ராம் வலியுறுத்தல் - 

[...] 

நீதியரசர் சந்துரு:

பெருமாள்முருகனுக்கு எதிராக கொரில்லா முறையில், ஆனால் முறையாக திட்டமிடப்பட்டு போராட்டம் நடந்தது. சாதி, மதம், பெண் என பலவிதங்களில் பிரச்சினைகளைத் திரித்து போராட்டம் நடத்தினர். கொங்கு வேளாளர் அமைப்பும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமைப்பு, தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக் கான கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ‘வேற்று சாதியினரை மணம்புரியமாட்டேன்’ என்று உறுதிமொழி வாங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வடக்கு, தெற்குப் பகுதிகள் மட்டுமின்றி மேற்குப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை வேரூன்றியிருக்கிறது.

டெல்லியில் உள்ள ஒரு அமைப்பு எல்லா நூல்களையும் படித்து, தங்களுக்கு பிடிக்காத கருத்து இருந்தால், நூல் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. வழக்கு தொடுக்கிறது. பெருமாள்முருகன் விஷயத்திலும் அவர்களது பின்னணி இருக்கிறது. சமூகத்தின் காவலர்களாக கருதிக்கொள்ளும் ஒரு குழு, என்ன புத்தகம் வெளியாகலாம், என்ன வாசகங்கள் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்கிறது. இத்தகைய போக்கை எதிர்த்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

[...] 

 

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 19, 2015, 9:17:45 PM1/19/15
to vallamai, mintamil

2015-01-19 19:55 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெருமாள்முருகனுக்கு எதிராக கொரில்லா முறையில், ஆனால் முறையாக திட்டமிடப்பட்டு போராட்டம் நடந்தது. சாதி, மதம், பெண் என பலவிதங்களில் பிரச்சினைகளைத் திரித்து போராட்டம் நடத்தினர். கொங்கு வேளாளர் அமைப்பும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமைப்பு, தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக் கான கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ‘வேற்று சாதியினரை மணம்புரியமாட்டேன்’ என்று உறுதிமொழி வாங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வடக்கு, தெற்குப் பகுதிகள் மட்டுமின்றி மேற்குப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை வேரூன்றியிருக்கிறது.


பெருமாள்முருகன் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் பிறந்து வளர்ந்த ஊர் திருச்செங்கோடு, இந்நூலின் முதல்பதிப்பு டிசம்பர்-2010 ல் வந்தது. அப்போது திருச்செங்கோடு பகுதி மக்கள் யாருக்கும் இப்படியொரு நூல் வந்ததே தெரியாது.

டிசம்பர்-2014ல் திருச்செங்கோட்டை பூர்வீகமாகக் கொண்டவர் வெளிநாட்டில் இந்நாவலின் மூன்றாம் பதிப்பான(நவம்பர்-2012) தற்போதுள்ள புத்தகத்தை படித்துவிட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனது உறவினரை படிக்க சொல்லுகிறார். அவரும் படித்தபிறகு கொதித்துப்போய் இதை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம்-நாகர்கோவிலுக்கு தொடர்புகொண்டு மேலும் இரு புத்தகங்களை வரவைத்து ஆன்மிக சங்கங்களுக்கு கொடுத்து படிக்க சொல்லுகிறார், அவர்களும் படித்துவிட்டு தங்கள் ஊருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதிய பெருமாள்முருகன் மீதும், அதை தெரிந்தே வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்த்தநாரீஸ்வரர் கிரிவல நலச்சங்கம் மற்றும்அனைத்து ஆன்மிக சங்கங்களும் இணைந்து முடிவு செய்தனர்.

26-12-2014 அன்று திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார்கொடுப்பதற்காக காலையில் கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுசேர்ந்தனர். அங்கிருந்து வெளியே வரும்போதே திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் வந்து கூட்டமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.

அங்கேயே நான்கு புகார் மனுக்களையும் வாங்கிக்கொண்டனர். பிறகு ரசீது வாங்குவதற்காக நாங்கள் காவல்நிலையத்திற்குள்ளே சென்றிந்தோம். அப்போது, காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த சிலர், கடவுளையும் பெண்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மோசமாக எழுதியதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு நாவலை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இங்கு நடைபெற்ற அறப்போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட ஆன்மிக அமைப்புகள் இணைந்து பங்கேற்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து சமுதாய, ஆன்மிக அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் அதிமுக, திமுக, பிஜேபி , காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, கம்யுனிஸ்டு, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, சிறுவணிகர்கள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், பாட்டாளிகள், ஊர்பொதுமக்கள் என அனைவரும் தாமாகவே முன்வந்து கலந்து கொண்டனர்.

தங்களது ஊரைப்பற்றி, கடவுளைப்பற்றி, தேர்த்திருவிழாவைப்பற்றி, பெண்களைப்பற்றி, சாதியைப்பற்றி படுகேவலமாக, ஆதாரமின்றி எழுதிய பெருமாள்முருகனையும், அவரது நாவலையும் கண்டித்து நடைபெற்ற அகிம்சை போராட்டத்தில் மக்கள் பெரும்திரளாக பங்கேற்றனர். பொதுமக்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன்.

உடனே The Hindu ஆங்கில நாளிதழில் வேண்டுமென்று திட்டமிட்டு சங்பரிவார் அமைப்புகள் இப்போராட்டத்தை நடத்துவதாக பச்சைப் பொய் வதந்தியை எழுதியது (27-12-2014 coimbatore edition). உடனே திருமாவளவன், Evks இளங்கோவன், சசிதரூர், ஜெயமோகன், முற்போக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் இந்நாவலை முழுமையாகப் படிக்காமலும் திருச்செங்கோடு பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியாமலும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குதிக்க ஆரம்பித்தது விட்டனர்.

பெருமாள்முருகன் தனது நாவல் கருத்துகள் (1940-திருச்செங்கோட்டில் நடந்ததாக) களஆய்வு மூலமாக தெரிந்துகொண்டதாக படுமோசமான வார்த்தைகளைக் கொண்டு புரட்டை எழுதியுள்ளார். எதிர்ப்பு வந்த முதலில் வாய்மொழி ஆதாரம் உள்ளதாக கூறியவர் எதிர்ப்பு அதிகமான போது அது கற்பனை, புனைவு என அந்தர்பல்டி அடித்தார். தனது மார்க்கஸிய, தமுஎச, மகஇக, திக நண்பர்களை ஊர்ஊராக சென்று தூண்டிவிட்டு போராட்டம், பேட்டி என வரவைத்தனர்.

பதிலடியாக திருச்செங்கோடு இளைஞர்கள் "திருச்செங்கோடு மானம் காப்போம்" என்ற வாசகத்தை உருவாக்கி முகநூல் பக்கம், நோட்டீஸ், போஸ்டர், விளம்பர பிளக்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தி பொதுமக்களிடையே எழுச்சியை உருவாக்கினர்.

பொதுமக்கள் புகார் கொடுத்து 15 நாட்களாகியும் காவல்துறை FIR பதிவு செய்யவில்லை.

எனவே பெருமாள்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 09-01-2015 அன்று 100% முழுகடையடைப்பு நடத்தப்பட்டது. அனைத்து விசைத்தறிகூடங்கள், சைசிங் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து வேலைநிறுத்தம் செய்தனர் . அனைத்து தியேட்டர்களின் காட்சிகள் ரத்து செய்தனர், வக்கில்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். திருச்செங்கோடு வரலாற்றிலேயே இப்படி ஒரு பந்த் நடந்ததில்லை என அனைவரும் வியக்கும் வகையில் நடந்தது.

இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தது. 12-01-2015-அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரால் (DRO) நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பெருமாள் முருகன் திருச்செங்கோடு சம்பந்தமாக எழுதியவை எல்லாம் கற்பனையானவை. இவை திருச்செங்கோடு மக்களை புண்படுத்தியிருப்பதால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். அடுத்த பதிப்பில் திருச்செங்கோடு சம்பந்தமான எந்த தகவலும் வராமல் பதிப்பிக்கிறேன் இனிமேல் இதுசம்பந்தமாக எங்கும் பேட்டி கொடுக்கமாட்டேன் என்று ஒத்துக்கொண்டார். இது DRO முன்னிலையில் ஆவணமாக்கப்பட்டு, அனைத்து பத்திரிகைகளிலும் டிவிகளிலும் செய்தியாக வெளியிடப்பட்டது.




--

செல்வன்

unread,
Jan 19, 2015, 9:19:26 PM1/19/15
to vallamai, mintamil
The abovesaid mail was Posted in FB by


https://www.facebook.com/anand.ganeshv?fref=ts

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 19, 2015, 11:13:32 PM1/19/15
to mintamil, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com
வணக்கம்.
“பெருமாள் முருகனை ஆதரித்து” கூட்டம் நடத்துவதற்குப் பெருமாள்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளாரா?
அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

துரை.ந.உ

unread,
Jan 19, 2015, 11:18:10 PM1/19/15
to வல்லமை, mintamil, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com
:)
தலைவரே :)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

தேமொழி

unread,
Jan 19, 2015, 11:26:11 PM1/19/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அவரது நிலையை முன்னிறுத்தி மற்றபிற எழுத்தாளர்கள் தங்கள் கருத்துரிமையை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை.

நல்ல முயற்சியே.  அவர் ஓர் அடையாளச் சின்னம்.



..... தேமொழி



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 20, 2015, 1:04:53 AM1/20/15
to mintamil, vallamai
வணக்கம்.

2015-01-20 9:56 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

அவரது நிலையை முன்னிறுத்தி மற்றபிற எழுத்தாளர்கள் தங்கள் கருத்துரிமையை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை.
ஒருவருடைய அனுமதியில்லாமல் அவரது பெயரை முன்னிறுத்திடலாமா?
சட்டப்படி இது சரியா?

செல்வன்

unread,
Jan 20, 2015, 1:05:52 AM1/20/15
to vallamai, mintamil
சமீபத்தில் முகஸ்டாலின் கூட ராஜினாமா செய்ததாக மாலையில் சொல்லி காலையில் அதை வாபஸ் வாங்கினார்.

தேமொழி

unread,
Jan 20, 2015, 1:11:12 AM1/20/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, kalair...@gmail.com
பொதுநல வழக்கே கூட தொடரலாமே!!!!

Public-Interest Litigation is litigation for the protection of the public interest. In Indian lawArticle 32 of the Indian constitution contains a tool which directly joins the public with judiciary. A PIL may be introduced in a court of law by the court itself (suo motu), rather than the aggrieved party or another third party. For the exercise of the court's jurisdiction, it is not necessary for the victim of the violation of his or her rights to personally approach the court. In a PIL, the right to file suit is given to a member of the public by the courts through judicial activism. The member of the public may be a non-governmental organization (NGO), an institution or an individual. The Supreme Court of India, rejecting the criticism of judicial activism, has stated that the judiciary has stepped in to give direction because due to executive inaction, the laws enacted by Parliament and the state legislatures for the poor since independence have not been properly implemented.

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2015, 6:02:12 AM1/20/15
to vallamai, மின்தமிழ், Kalairajan Krishnan
தேமொழியாருக்கு:

 மாதொருபாகன் வாசிக்க  https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf

வினா: பொன்னா தான் கருவுற என்ன என்ன சடங்குகளை மேற்கொண்டாள்?

1. பாவாத்தா கோவிலில் கோழி அறுத்து பூசை செய்தாள்
2.  பூப்பின் மூன்றாள் நாள் கிழக்கு பார்த்தபடி நின்று வெற்று வயிற்றில் அரைத்துக்கொடுத்த பல்வேறு இலைதழைகளை குடித்தாள்
3. வறடிகல் எனும் இடுக்கண் மிக்க மலை இடுக்கில் உள்ள கல்லை ஒரு முறௌ சுற்றி வந்தாள். (அதற்கு மேல் காளி வேண்டாம் என தடுத்ததால்)



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 20, 2015, 11:47:54 AM1/20/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி வந்தே... இதோ படித்துவிடுகிறேன்...ஆவலை அடக்கமுடியவில்லை..


..... தேமொழி

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 20, 2015, 11:48:55 AM1/20/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வந்தே...    = வேந்தே   

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2015, 8:48:34 PM1/20/15
to vallamai, மின்தமிழ்
இந்த போராட்டத்தில் கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை. திரைப்படங்களும் இலக்கியங்கள்தானே

20 ஜனவரி, 2015 ’அன்று’ 11:48 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 22, 2015, 6:22:08 AM1/22/15
to vallamai, மின்தமிழ், Kalairajan Krishnan


20 ஜனவரி, 2015 ’அன்று’ 6:02 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

தேமொழியாருக்கு:

 மாதொருபாகன் வாசிக்க  https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf

வினா: பொன்னா தான் கருவுற என்ன என்ன சடங்குகளை மேற்கொண்டாள்?

1. பாவாத்தா கோவிலில் கோழி அறுத்து பூசை செய்தாள்
2.  பூப்பின் மூன்றாள் நாள் கிழக்கு பார்த்தபடி நின்று வெற்று வயிற்றில் அரைத்துக்கொடுத்த பல்வேறு இலைதழைகளை குடித்தாள்
3. வறடிகல் எனும் இடுக்கண் மிக்க மலை இடுக்கில் உள்ள கல்லை ஒரு முறௌ சுற்றி வந்தாள். (அதற்கு மேல் காளி வேண்டாம் என தடுத்ததால்)


4. இரண்டு ஆண்டுகள் பிள்ளை இல்ல என்று அறிந்ததும் காளி லாயக்கிலாத ஆள் என்று முடிவு கட்டி கொஞ்சம் முறசி செய்து அழைத்தால் அவள் வந்து விடுவாள் என கருப்பண்ணன் உட்பட ஊரில் உள்ள சிலர் அவளுக்கு வலை விரித்தனர்
 
5. காளியின் அக்கா மகள் திரட்டிக்கு போன் அபொன்னா திரட்டி சுற்றும் போது மாமன் பெண்டாட்டி கையை பிடித்து இழுத்து பின்னால் விட்டாள். பிள்ளைபெறாதவள் சோறு சுற்றின்லால் பொண்ணுக்கு பிள்ளை இல்லாமல் போய்விடுமாம்.


Reply all
Reply to author
Forward
0 new messages