சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் இந்நேரத்தில், ஐரோப்பாவின் பிரான்சு நாட்டின் தமிழ் நூலகத்திற்கும், படிப்பு வட்டத்திற்கும் தமிழ் நூல்களை நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம்.
புதிய நூல்களையோ, நல்ல நிலையிலிருக்கும் நீங்கள் படித்த நூல்களையோ அல்லது மின்னியப்படுத்த வேண்டியிருக்கும், மறுபதிப்பு செய்ய இயலாத மிகப்பழமையான நூல்களையோ எங்களுக்கு நன்கொடையாக அளிக்கலாம்.
அவை பிரான்சு தமிழ் நூலகத்திற்கும், நூலக வாசகர் வட்டத்திற்கும், தமிழ் நூல்களை ஆவணப்படுத்துவதற்கும், மின்னியப்படுத்துவதற்கும், ஏனைய தமிழ் ஆய்வு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
மறுபதிப்பு செய்யாத, செய்ய இயலாத நூல்கள், எழுத்தாளர்கள், படைப்புகளின் கையெழுத்து பிரதிகள், பழமையான அச்சுப்பிரதிகள் ஆகியவற்றை மின்னியப்படுத்தியும், மின்னூலாக மீள்பதிப்பு செய்தும் தருகிறோம்.
தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுமையிலிருந்தும் நல்ல நல்ல தமிழ் நூல்களை இத்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி அயலக தமிழ் மண்ணில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
உங்களுக்கு அருகிலிருக்கும் நூல் பெறும் மையங்களை கீழ்காணும் தொடர்பு எண்களில் கேட்டு பெறலாம்.