தமிழின் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவர்

471 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
Sep 17, 2015, 11:36:32 PM9/17/15
to வல்லமை, மின்தமிழ்

நம் அன்னை பூமியாம் பாரதம் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களைத் தன்னகத்தே கொண்டது. வேற்றுமைகளுக்கிடையே காணக்கிடைக்கின்ற இந்த ஒற்றுமைப் பண்பே அதன் சிறப்பாகும் என்பது அறிஞர்கள் துணிபு.

மகாகவி பாரதியும், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என இந்தியத்தாயின் இயல்பை விதந்தோதியிருக்கின்றார். எனினும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் செல்வாக்கும் மக்களிடத்து நிலவுகின்றதா என்று சிந்தித்துப் பார்த்தால் ’இல்லை’ என்ற விடையை எளிதில் சொல்லிவிடலாம்.

தேவ பாஷையான வடமொழியே (சமஸ்கிருதம்) உயர்ந்தது; அதிலிருந்துதான் தமிழ் உள்ளிட்ட பிற திராவிட மொழிகளனைத்தும் தோற்றம் பெற்றன என்ற எண்ணம் முற்காலத்தில் நம் மக்கள் மனத்தில் ஆழ வேரூன்றியிருந்தது. அந்தோ! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலையே நீடித்தது.

தாய்மொழியின் தகுதியறியாத தம் புதல்வர்களின் அவலநிலைகண்டு கவலையோடு கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்த தமிழன்னையின் துயர்துடைத்து, அவளின் தன்னேரிலாச் சிறப்பை, பிற மொழிகளின் தயவின்றித் தனித்தியங்கும் தகைமையைத் தரணிக்கு உணர்த்தினார் ஓர் மொழியியல் அறிஞர்!

அச்சான்றோர் வேறுயாருமல்லர்! 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, 1838-ஆம் ஆண்டு (தம்முடைய 24-ஆம் அகவையில்) கிறித்தவச் சங்கத்தொண்டராய் (An Evangelist Missionary) சென்னை மாநகருக்கு வந்து, 53 ஆண்டுகள் தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ள ’இடையன்குடி’ எனும் சிற்றூரிலேயே தங்கிச் சமயத்தொண்டோடு அருந்தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் பெருமகனாரே அவர்.

பெற்ற மகவைப்போல் தம்மைப் போற்றிப்பேணிய நெல்லைச்சீமையின் வரலாற்றை (A Political and General History of the District of Tinnevelly) வரன்முறையாக முதன்முதலில் எழுதிய பெருமைக்குரியவர் அவரே. பாண்டிய நாட்டின் பழம்பெருமையினைப் பரக்கப் பேசுகின்றது அந்நூல்.

அந்நூலிலிருந்து சில பகுதிகள் நம் கவனத்திற்கு…

பாண்டிய நாட்டின் முக்கியத்தொழிலாய் முற்காலத்தில் திகழ்ந்தது முத்துக் குளித்தலே (முத்துச் சலாபம்) ஆகும். நெல்லையைச் செல்லமாய் ஊட்டி வளர்த்த தாயான தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தருகேதான் பாண்டியரின் புகழ்பெற்ற கொற்கைத் துறைமுகம் அன்று அமைந்திருந்தது. உலகறிந்த பெருந்துறைமுகமான கொற்கையிலே நன்முத்துக்கள் மிகுதியாய் விளைந்தன. அழகாய் உருண்டு திரண்டிருந்த அம்முத்துக்களின் அழகில் உள்ளூர் அரிவையர் தொடங்கி உரோமாபுரி அரசிகள்வரை மனம் மயங்கினர். புலவர்பெருமக்களும் ‘பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து’ என்று அதன் சிறப்பைப் போற்றினர். இத்துணைப் புகழ்வாய்ந்த கொற்கைத் துறைமுகம் பின்னாளில் தூர்ந்துபோனபின் ’காயல்’ எனும் கடற்கரையூர் சிறந்த துறைமுக நகரமாயிற்று. அத்துறைமுகத்திற்கு அரேபிய, சீனக் கப்பல்கள் வந்துசென்றிருக்கின்றன என்று குறிப்பிடும் கால்டுவெல், அத்துறைமுகத்தில் பரதவர் முத்துக்குளிப்பதையும் விவரமாகத் தன் நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என அறிகின்றோம்.

அதுபோல், காவிரியாறு கடலோடு கைகுலுக்கும் இடத்தில் அமைந்திருந்த செழிப்பான துறைமுக நகரம் காவிரிப்பூம்பட்டினம். அத்துறைமுகத்தின் வழியாக அன்று வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாயிற்று. அரிசி என்று நாம் தமிழில் வழங்குவதையே கிரேக்க மொழியில் ‘அருஸா’ எனச் சிதைத்து வழங்குகின்றனர். இதன் அடியாகத் தோன்றியதே ஆங்கிலச் சொல்லான ’ரைஸ்’ என்பதையெல்லாம் முதலில் நமக்கு ஆய்ந்துசொன்னவர் கால்டுவெல் ஆவார்.

மயிற்தோகையும் அன்று தமிழகத்திலிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயிற்று; கூடவே ’தோகை’ என்ற சொல்லும்! ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் காணப்படும் ’துகி’ என்ற சொல் நம் தமிழ்ச்சொல்லான ’தோகை’யின் திரிபே என்று விளக்கியுள்ளார் கால்டுவெல். அவ்வாறே பிறமொழிகளில் சிதைந்து வழங்கும் பல தமிழ்ச்சொற்களை நம்மவர்க்கு அடையாளம் காட்டினார் அவர்.

கால்டுவெல் பன்மொழிகள் கற்ற பேரறிஞர். மேனாட்டுச் செம்மொழிகளான கிரீக், இலத்தீன், ஹீப்ரு ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்றிருந்த அவர், இந்தியா வந்ததும் ஆரியத்தையும், தென்மொழியான தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார். ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகள் குறித்து எழுதியிருக்கும் ஆராய்ச்சி நூல்களைக் கற்கவேண்டும் எனும் வேட்கை உந்தித்தள்ள, ஜெர்மானிய மொழியையும் அவர் கற்றுத்தேர்ந்தார்.

மொழிநூல் ஆராய்ச்சி என்பது இயல்பிலேயே அவருக்கு விருப்பமான ஒன்று. ஆதலால் தென்னிந்திய மொழிகள் குறித்து ஆராயத் தலைப்பட்டார். அவ்வாராய்ச்சியின் விளைவே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒப்பிலக்கண நூலான ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் அரிய புதையல்!

ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதைத் தம் ஒப்பிலக்கணத்தில் தெள்ளத்தெளிவாய் விளக்கியுள்ள கால்டுவெல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; ’இவையனைத்தினும் மூத்தமொழி தமிழே’ என்பதையெல்லாம் தக்க சான்றுகளுடன் இந்நூலில் நிறுவியுள்ளார். தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லாக ’திராவிட மொழி’ என்ற பதத்தை அவர் உருவாக்கினார். அன்றுமுதல் ’திராவிடம்’ என்ற சொல் (It is a Sanskrit word for ‘southern’) மொழிநூல் உலகில் நிலைபேறடைந்துவிட்டது. (இன்று அந்தச்சொல் படும்பாட்டை நல்லவேளை கால்டுவெல் பார்க்காது போய்விட்டார்!)

தமிழின் தற்சார்புத் தன்மையை விளக்க விரும்பிய கால்டுவெல், சங்க காலத்தில் தமிழ்நூல்களில் ஆரியச் சொற்களின் கலப்பு அருகியிருப்பதையும் பிற்காலத்தில் அச்சொற்களின் கலப்பு மிகுந்திருப்பதையும் சுட்டிக்காட்டி, ”எல்லாக் கருத்துக்களையும் வெளியிட ஏற்ற சொற்கள் தமிழிலேயே நிறைந்திருந்தும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஆரியச் சொற்களையே நம் தமிழ்மக்கள் தேடிப் பயன்படுத்தியதால்தான் காலப்போக்கில் பல தமிழ்ச்சொற்கள் இறந்தொழிந்தன” என்று குறிப்பிடுகின்றார்.

இவைபோல் இன்னும்பல ஆழமான கருத்துக்களைத் தம் ஒப்பிலக்கண நூலில் ஆய்ந்து வெளியிட்டிருக்கும் கால்டுவெல், திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய தீரர்; திராவிட மொழிகளின் தொன்மையை, அவற்றின் மாண்புகளை மேனாட்டார்க்கும் செப்பமாய் எடுத்துக்காட்டிய செம்மல்
எனில் சற்றும் மிகையில்லை.

அடிப்படை வசதிகள்கூட அற்ற, அனல்பறக்கும் வறள்நிலமான ‘இடையன்குடி’ எனும் கிராமத்தில் ஓர் கூரைவீட்டில் வாழ்ந்தவண்ணம் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்து, அரிய உண்மைகளை கால்டுவெல் வெளியிட்டிருப்பது வியக்கற்பாலது. அத்தோடு அங்கிருந்த விளிம்புநிலை மக்களுக்கு எழுத்தறிவித்த இறைவனாகவும் அவர் திகழ்ந்திருக்கின்றார். மேனாட்டாரான அவர், மாமிசம் புசிக்காது காய்கனிகளையே உணவாக உண்டு எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார்.

தமிழகத்திலிருந்தபோது,மொழியாராய்ச்சியோடு அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்ட கால்டுவெல், கொற்கைக்கு அருகில் புதையண்ட கட்டடங்களின் அடிப்பகுதி, பாண்டிய நாட்டு மீன்சின்னம் பொறித்த நாணயங்கள், உலோகக் கலயங்கள் போன்ற பல தொல்பொருள்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

அயலகத்தில் பிறந்தாலும் தம் ஆர்வத்தின் காரணமாக அரிதின் முயன்று தமிழ் பயின்று, ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே; அஃது ஆரியத்தைச் சார்ந்ததன்று’ என்பதைத் தம் மொழிநூல் ஆராய்ச்சிகளின் வாயிலாய் அறிந்து அதனை வையத்து மாந்தர்க்கும் ஐயமற விளக்கிய கால்டுவெல்லின் அருந்தொண்டு தமிழ்கூறு நல்லுலகில் குன்றிலிட்ட விளக்காய் என்றும் சுடர்விட்டு ஒளிரும்.

***

கட்டுரைக்குத் துணைநின்றவை:

https://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

http://nakkeran.com/Drcaldwel.htm

http://www.missionariesbiography.com/May/07.robert_caldwell.html


இக்கட்டுரையை இன்று வெளியிட்ட வல்லமை இதழுக்கு நன்றி: http://www.vallamai.com/?p=62061

அன்புடன்,
மேகலா


Nagarajan Vadivel

unread,
Sep 18, 2015, 1:00:36 AM9/18/15
to மின்தமிழ்
தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகுக்கும் நல்லதும் செய்தவர்ர் கெட்டதும் செய்தவர் கால்டுவெல் ஐயர்
அவருடைய சைவ வேளாளர்களுடன் இருந்த தொடர்பு மற்ற ஆங்கிலேயர்கள் கருத்தான தமிழ் மொழி சமஸ்கிரிதத்தின் ஒரு பிரிவு என்ற நம்பிக்கையை மாற்றியது.  தமிழர்களுக்கென தனி மரபு இருப்பதை உணர்ந்தவர் தேவையில்லாமல் மற்ற தென்னாட்டுமொழிகளைக் கூடச் சேர்த்து திராவிட மொழிகள் என்றழைத்து இல்லாத திராவிடத்தை இருப்பதாகப் புனைவு செய்தார்

திராவிட இயக்கத்தினர் இலக்கிய சமய நம்பிக்கை மிக்க கால்டுவெல் ஐயரை நம்பாமல் அரசியல் அடிப்படையில் இயங்கிய அயோத்திதாசரை நம்பியிருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்

திராவிடன் என்ற வடசொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அதைத் தமிழுக்குக் கொடுத்த கால்டுவெல் ஐயர் போற்றுதலுக்குரியவர்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 18, 2015, 2:13:51 AM9/18/15
to மின்தமிழ்


On Thursday, September 17, 2015 at 10:00:36 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகுக்கும் நல்லதும் செய்தவர்ர் கெட்டதும் செய்தவர் கால்டுவெல் ஐயர்
அவருடைய சைவ வேளாளர்களுடன் இருந்த தொடர்பு மற்ற ஆங்கிலேயர்கள் கருத்தான தமிழ் மொழி சமஸ்கிரிதத்தின் ஒரு பிரிவு என்ற நம்பிக்கையை மாற்றியது.  தமிழர்களுக்கென தனி மரபு இருப்பதை உணர்ந்தவர் 
தேவையில்லாமல் மற்ற தென்னாட்டுமொழிகளைக் கூடச் சேர்த்து திராவிட மொழிகள் என்றழைத்து இல்லாத திராவிடத்தை இருப்பதாகப் புனைவு செய்தார்

உங்களின் இக்கருத்தை மொழியியல் துறையினர் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை பேராசிரியரே. 

எனக்குத் தெரிந்து கால்டுவெல்  தொடர்புகளின் அடிப்படையில் மொழிகளை தொகுக்கவும், 
அவற்றின் தொடர்புகளையும் விளக்கவும்  முயற்சி செய்தார். 
அவர் செய்தது தீமை என்பதை மொழியியல் வல்லுநர்கள் ஒருமித்த கருத்தாக கூறினால் மட்டுமே நான் ஒப்புக் கொள்வேன்.  

அவர் ஆய்வின் அடிப்படையில் அவர் தொகுத்தது, தொடர்புகளை புரிந்து கொண்டது, அதற்கு பெயர் சூட்டியது தவறு என்று நீங்கள் சொன்னால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

தென்னிந்திய மொழிகளுக்குள் தொடர்பு இல்லையா?   அவர் கூறியது தவறா?  அவர் தொடர்புள்ள மொழிகளுக்கு அவர் புரிந்து கொண்ட வரையில் பெயர் சூட்டியது தவறா?

மொழி ஆய்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை,  ஆனாலும் நான் படித்தவரை புரிந்து கொண்டதில் கால்டுவெல் தீமை செய்ததாகத் தெரியவில்லை.


 

திராவிட இயக்கத்தினர் இலக்கிய சமய நம்பிக்கை மிக்க கால்டுவெல் ஐயரை நம்பாமல் அரசியல் அடிப்படையில் இயங்கிய அயோத்திதாசரை நம்பியிருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்


 இப்பொழுதுதான் அண்ணா கண்ணன் கருத்து ஒன்றைப் படித்துவிட்டு வந்தேன்...

"சொன்னவர் யார் என்பதை விட, சொன்னது சரியா எனப் பார்ப்பதே முக்கியம்; 
அதே போல் செய்தவர் யார் என்பதை விட, செய்தது சரியானதா எனப் பார்ப்பதே சீரியது"

என்று கூறியிருந்தார்.  வரிக்கு வரி உண்மை.

கருத்துகளுக்குதான் முக்கியத்துவம், சொன்னவர் பற்றி ஆய்வு செய்வதும், இவர் நம் ஆள் என்றோ, நமக்குப் பிடித்ததை சொல்கிறார் / செய்கிறார் என்று போவதும் ஆட்டு மந்தைகள் கூட்டத்தை நினைவு படுத்தும். 


...... தேமொழி
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2015, 2:30:07 AM9/18/15
to மின்தமிழ்
​கால்டுவெல் சைவத்தின்பால் அதிகம் ஈர்ப்புக் கொண்டவர் திருநெல்வேலி சைவப்பிள்ளைமர்களின் வாழ்வியல் மரபை அதிகம் தெரிந்தவர்.  வைணவம்பற்றி அதிகம் தெரியவில்லை.  சங்க இலக்கியமும் தெரியவில்லை
அவர் தென்னாட்டின் வாழ்வியல் மரபு வடபுல மரபிலிருந்து தனித்திருப்பதை அறிந்து வெளியில் சொன்னது அவரு தனிப்பெரும் புகழுக்கு அடிப்படை.  

தமிழ் மூத்த மொழி எனவே தென்னாட்டின் மற்ற மூன்று மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியதாக அவர் கருதினார் எழுதினார்.  பெரியாரும் அதை நம்பி திரவிடநாடு என்ற கருத்தை முன்வைத்தார்

நான் எனக்குத் தெரிந்ததைத்தானே சொல்ல முடியும்.  இது என் சொந்தக்கருத்தல்ல.  நான் மொழியியல் அறிஞன் என்ற உரிமம் பெறாததால் நீங்கள் மொழியியல் அறிஞர்களிடம் பேசுங்கள்
அ.த​

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2015, 9:38:07 AM9/18/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, மு இளங்கோவன்
சிறப்பான கட்டுரை. இந்திய மொழிகளில் திராவிட மொழிகளின் பிறப்பு ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருதம் அல்ல என்று முதன் முதலில் நிறுவியவர் எல்லிஸ் ஆவார். உணவுவிஷத்தால் சிறுவயதில் மாண்டார் எல்லிஸ்.  எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
அதன்பிறகு திராவிட மொழிக்குடும்பம் தனித்தது என நிறுவி, திராவிட மொழிகளுக்கான ஒப்பிலக்கணம் 1856-ல் எழுதினார் பிஷப் கால்ட்வெல்.

திராவிட மொழிகள் இந்தியாவின் பல்வேறு அமிசங்களில் அடிமானமாக அமைந்துள்ளதை ஆராய
கால்ட்வெல் திராவிட மொழிகளுக்கு எழுதிய ஒப்பிலக்கணம் அடிப்படை நூலாகும்.

இன்று இந்தியாவின் இரண்டு செம்மொழிகளில் ஒன்று தமிழ் எனக் கொண்டாடாத அறிஞர்
இந்தியாவிலே ஒருவரும் இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் வரலாற்றை
ஆராய ஓர் துணை கால்ட்வெல் போன்றோர் தந்த ஆய்வுகள்.

இந்திய அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை. அப்போது எழுதிய பதிவு:




மேலும் ஆராய,
Y. V. Kumaradoss,
Robert Caldwell, a scholar-missionary in colonial South India 
Delhi : ISPCK, 2007

ரா. பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்,
1936: ஹிலால் பிரஸ், நெல்லை
1964: பழனியப்பா பிரதர்ஸ்

Minatcicuntaram, Ka., 
Contribution of European scholars to Tamil 
University of Madras, 1974 (Tamil translation: 2003).

எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-89/varalaru.asp

கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன் 
http://www.keetru.com/maatruveli/nov08/tho_paramasivan.php

கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு - அ. மங்கை
http://www.keetru.com/maatruveli/nov08/a_mangai.php

கால்டுவெல் என்னும் சிக்கல் - எம். வேதசகாய குமார்
http://www.keetru.com/maatruveli/nov08/vedhasakayakumar.php

கால்டுவெல்லின் திராவிடம்: ஒரு வாசிப்பு -வ. கீதா
http://www.keetru.com/maatruveli/nov08/Va_Geetha.php

M.S.S. Pandian, Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, Delhi, 2007.

http://muelangovan.blogspot.com/2007/04/1814-1891.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 20, 2015, 12:43:51 AM9/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, muela...@gmail.com

கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன் 
http://www.keetru.com/maatruveli/nov08/tho_paramasivan.php

நவம்பர் 2008
கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன் 
நேர்காணல்: முனைவர் ஆ.தனஞ்செயன்


ஏறக்குறைய ஐம்பத்து மூன்று ஆண்டுகள் திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்து ஒப்பீட்டுமொழியியல், சமூகவியல் மற்றும் சமயம் என பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர் கால்டுவெல். ஆய்வாளர் என்ற முறையில் கால்டுவெல் என்ற மனிதர் உங்களை எந்த அளவிற்குக் கவர்ந்துள்ளார்?

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கால்டுவெல் தமிழ்நாட்டுக்கு; தமிழ்நாட்டின் தென்கோடிப் பகுதியான இடையன்குடிக்குவருகிறார். தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூருக் கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள கடற்கரைப்பகுதி மிகமிக வெப்பமான பகுதி. இந்த இடத்தை அவர் தேர்வு செய்ததற்கானக் காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் இன்றுகூட அந்த ஊரிலே நாம் ஒருநாள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெயிலும் செம்மணல் தேரியினுடைய சூடும் தாங்கமுடியாது. அந்த ஊரிலே இந்த ஐரோப்பியர் 53 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வியப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. நான் அந்த ஊருக்குக் கால்டுவெல் நினைவுக் கருத்தரங்கிற்காக மூன்றுமுறை சென்றுள்ளேன். ஆண்டுதோறும் ஜூலையில் நடத்துகிறார்கள்.

கால்டுவெல் என்ற மிஷனரியை விட கால்டுவெல் என்ற மொழியியலறிஞரை விட கால்டுவெல் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடைய சமூகச்சீர்திருத்தவாதியைத் (Deticated Social Reformist)தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால்டுவெல் வருகிறபோது, ஏன் இப்ப ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட அந்தப்பக்கம் பேருந்துவசதி கிடையாது. தேரிமணல், சாலைகளை காற்றிலே மூடிவிடும் என்பதனாலே பனைஓலைகளைப் போட்டு அதன்மீது ஜீப் ஓட்டுவார்கள். இதுதான் போக்குவரத்து வசதி. அப்படியென்றால் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே அந்தநிலம் எவ்வாறு இருந்திருக்கும். கால்டுவெல் குதிரைவண்டியிலும் குதிரையிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இடையன்குடி என்ற பெயரோடு வழங்கிய சின்னக் கிராமத்தினுடைய செம்மணல் தேரிக்காட்டின் தென்பகுதியை விலைக்கு வாங்கி அதிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, பக்கத்திலே தனக்கு ஒரு வீட்டைக்கட்டி தேவாலயத்தினுடைய வலதுபுறத்திலே தான் மதம்மாற்றிய அந்த எளிய நாடார் கிறிஸ்தவ மக்களுக்காகத் தெருக்களை, வீடுகளை அமைக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக இன்றளவும் அவை இருக்கின்றன.

கால்டுவெல் காலத்திய இடையன்குடி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. இன்றைக்கும் அந்த தேவாலயத்திற்கு நேர் எதிரே இருபதுமீட்டர் தாண்டிச் சென்றால் அந்தப் பழைய இடையன்குடி கிராமம் உள்ளது. அதே பழைய ஓலைக்குடிசைகள். பனைமடலால் ஆன வேலிகள். அழுக்கு, வறுமை, வெள்ளாடு இவைகளோடு அப்படியே இருக்கிறது. கால்டுவெல் வருகிறபோதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கால்டுவெல் நாடார் மக்களிடம் வருகிறபோது பதனியை இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்து கொண்டிருந் தார்கள். அன்றைக்குத் தென்மாவட்டங்களிலேயே இடையன் குடிக்கு ஒரு ஆறு கிலோமீட்டருக்கு முன்னாலேயே உள்ள திசையன்விளை பெரிய கருப்பட்டிச்சந்தை. அதை நம்பித்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரம் இருந்தது.

இன்றைக்கு அந்த மக்கள் கல்வி, சமூகவிடுதலை, பாதுகாப்பான வீடு இவற்றோடு நான்காவது தலைமுறையைக் கழித்துக்கொண்டு கால்டுவெல்லைத் தங்களுடைய குலதெய்வமாக, சாஸ்தா என்று நாம் சொல்வதைப் போல கருதுகிறார்கள். ஏனென்றால் அவர்தந்த வாழ்க்கைதான் இதெல்லாம். ஒரு சுவையான செய்தி. திசையன்விளையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் பாளையங்கோட்டையிலே இருக்கிறார், Bellpins முதலாளி செல்லத்துரை நாடார். அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். சீர்திருத்த திருச்சபைக் காரர்கள் எல்லாம் ஒரு புதிய இடத்தை வாங்கி அதில் ஊரை நிர்மாணிப்பார்கள். அப்படி நிர்மாணிக்கிறபோது அதற்கு சமாதானபுரம், சுவிசேஷபுரம், கடாட்ஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் என்ற மதம் சார்ந்த ஒரு பெயரை இடுவார்கள். வேதாகமம் சார்ந்த பெயர்கள் அவை. ஆனால் கால்டுவெல் இடையன்குடி பெயரை ஏன் மாற்றவில்லை என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன் நான்.

அவர் சொன்னார். நான் கால்டுவெல் பிறந்த ஊருக்குப் போனேன். அவர் பிறந்த ஊரின் பெயர் Shepherdyard. அதாவது தமிழிலே சொல்வதானால் இடையன்குடி. இது தன்னுடைய ஊர்ப்பெயரை நினைவுபடுத்துகிற ஊர் என்பதாலே இந்த ஊர்ப் பெயரை மட்டும் கால்டுவெல் மாற்றவில்லை என்றார். எனக்கு ரொம்ப வியப்பாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர் தன்னுடைய ஊர்ப்பெயரைக்கொண்ட ஒரு ஊரை இங்கு தேர்ந்துகொண்டதாலோ என்னவோ அங்கு 53 ஆண்டுகள், இடையிலே ஒரேயருமுறை மட்டும் இங்கிலாந்து சென்று வந்திருக்கிறார். தன்னுடைய மகளைக் கூட பக்கத்தில் நாகர் கோவிலிலே இருந்த இன்னொரு மிஷனரிக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது அங்கு கால்டுவெல் தனக்காகக் கட்டிய வீடு இருக்கிறது. வீட்டிலே வேறெந்த நினைவுச் சின்னமும் இல்லை. கால்டுவெல் பயன்படுத்திய அந்த கோர்ட்ஸ்டாண்டு மட்டும் தான் உள்ளது. தேவாலயத்திலிருந்து அந்த வீட்டிற்கு நடந்து செல்ல நூறு அடிதான். இந்த நூறு அடியையும் அந்த மணலிலே வெயிலிலே நம்மால் நடந்து செல்ல இயலாது. அதற்குப் பின்னாலே கால்டுவெல் மேனிலைப்பள்ளி உள்ளது. கால்டுவெல் மனைவி அந்த ஊர்ப்பெண்களுக்காக உருவாக்கிய ஒரு தையல்பள்ளியின் இடிந்த கட்டிடம் இருக்கிறது. இவ்வளவுதான் அங்கு இருக்கிற மிச்சம்.

இந்த தேவாலயம் அவ்வளவு நேர்த்தியாக எண்ணி எண்ணி கட்டப்பட்டது. அந்த கோபுரமணியினுடைய ஓசை தனியாக இருக்கும். அது கால்டுவெல்லுடைய தம்பி ஐரோப்பாவிலிருந்து வாங்கி அனுப்பியது என்று சொல்கிறார்கள். இந்த கோபுர மணிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கூட கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றன. கால்டுவெல்லுடைய விருப்பப்படி, கொடைக்கானலிலே கால்டுவெல் இறந்தாலும் மூன்று நாட்களாக அந்த உடலைப் பாதுகாத்து மலையிலிருந்து டோலி கட்டிக் கீழே கொண்டுவந்து _அன்றைக்கு அதானே சாத்தியம்_ அங்கிருந்து ரயிலிலே மதுரை கொண்டுவந்து, அப்படியே திருநெல்வேலி கொண்டுவந்து, அங்கிருந்து பீட்டன் அல்லது சாரட் என்று சொல்லக்கூடிய குதிரை வண்டியிலே பாளையங் கோட்டை தேவாலயத்தில் வைத்து பூசைசெய்து, இடையன் குடிக்குக் கொண்டுச்சென்று அந்த தேவாலயத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர் மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். ரொம்ப பெரிய வியப்பு இதுதான்.

சமூகவிடுதலை, பொருளாதார விடுதலை, சமூக மரியாதை அவர் பெற்றுத் தந்தது. இவைகளை அவர் மதம் மாற்றிய எந்தக் குடும்பமும் இதுவரை இழக்கவில்லை. மாறாகப் பெருக்கிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்னொரு செய்தி எனக்கே கொஞ்சம் வியப்புதான். நாடார்கள் என்று அன்றைக்குச் சொல்லப்பட்ட பதநீரும், கள்ளும் இறக்கும் தொழில்செய்யும் சாதிக்காரர்களை அவர் மதமாற்றம் செய்தார். அடுத்த சாதிக் காரர்களை மதம்மாற்றம் செய்யும் முயற்சியிலே கால்டுவெல் ஈடுபட்டதாகக் கூடத் தெரியவில்லை. சவேரியாரைப் போல ஒரு சாதியை மட்டும் மதம்மாற்றம் செய்வது எந்த சாதிப்பிரச்சனைக் கும் வழிவகுக்காது. இன்னொரு சாதியைச் சேர்த்தால் சாதிமோதலுக்கு வழிவகுக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதனாலேதான் இடையன்குடியிலே தேவாலயத்திற்கு அறுபது மீட்டர் தூரத்திலே வாழக்கூடிய இடையர்கள் இன்றும் கிறிஸ்தவர்களாக ஆகாமல் அப்படியே இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கால்டுவெல்லைப் பற்றி நிறைய கதைகள் அந்த ஊரிலே சொல்லப்படுகிறது. அதிலே முக்கியமான கதை. கால்டுவெல் ரொம்ப கோபக்காரராம். தெருக்களில் வீட்டினு டைய ஒரு அறையை அரையடி முன்னால் தள்ளி கட்டினால் அங்கிருந்து கூப்பிட்டுச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டு வாராம். அதைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் இன்றைக் கும் சொல்கிறார்கள். ஏனென்றால் அவரை தங்களுடைய முப்பாட்டன் அல்லது குலதெய்வம் என்று அவர்கள் கருதுவ தாலே. அந்த ஊரின் முகமே தனி அழகாக இருக்கிறது; சின்ன ஊராக இருந்தாலும்.

கால்டுவெல் காலத்திலே பயணம் மட்டுமில்லை, மின்சாரம் இல்லை, பேருந்து இல்லை, சாலை வசதி இல்லை. தனக்கு வேண்டிய கோதுமையை வாங்க வேண்டியிருந்தால் கூட கால்டுவெல் தூத்துக்குடிக்கோ, பாளையங்கோட்டைக்கோ தான் வந்திருக்கவேண்டும். இப்படிச் சிரமமிகுந்த காலத்திலே 53 ஆண்டுகள் ஒரேயருமுறை இங்கிலாந்து சென்று வந்ததைத் தவிர அந்த ஊரிலே அந்த மனிதர் வாழ்ந்தார் என்பது, மகத்தான தியாகம். ஒரு குளிர்நாட்டில் இருந்துவந்து இந்த தகிக்கிற வெப்பத்திலே 53 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மகளையும் இங்கேயே திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் தான் சொல்கிறேன். ஒருமொழியியல் அறிஞர் என்பதைவிட அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட மக்கள் அன்றைக்குச் சமூக மரியாதையே இல்லாத ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

ஆனால், அவர்கண்டு கொண்ட விஷயம், இந்த மக்கள் மிகுந்த நன்றியறிவுடையவர்கள் என்பதைக் கண்டுகொண்டார். இதனால் அவர்களுக்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்திருக்கிறார். மருத்துவவசதி எப்படிச் செய்தார் என்பது பற்றிய எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. அதுவரை அவர்கள் பனைஓலைக் குடிசைகளில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கு மூன்றாவது, நாலாவது தலைமுறைப் பட்டதாரிகளை இடையன்குடியிலே பார்க்கலாம். இதுதான் நான் அந்த ஊருக்குச் சென்றுவந்த அளவிலே கால்டுவெல்லைப் பற்றித் தெரிந்த செய்திகள்.

‘திராவிடமொழி ஒப்பிலக்கணம்’ என்ற கால்டுவெல் படைப்பைதான் பெரும்பாலும் எல்லாரும் தெரிஞ்சிருக்கிறோம். ஆனால் அவருடைய மற்ற படைப்புகள் - அதனுடைய முக்கியத்துவம் - இதப்பற்றிச் சொல்லுங்க.

குறிப்பா Sannars of Tamilnadu ன்னு அவர் எழுதின புஸ்தகம் இருக்கு. முதல்ல Ethinographic studyன்னு நாம இன்றைக்குச் சொல்றோமே ... முதல்ல விஞ்ஞானப்பூர்வமாகச் செய்யப்பட்ட Ethinographic studyஅதுதான். அதுலதான் அந்த lore எல்லாம் அவர் கணக்குல எடுத்துப் பேசுவாரு. அதுல ஒரு கதை. நாடார்கள் ஈழத்துல இருந்து பனங்கொட்டையோட வந்தாங்க அப்படின்றது. நான் அதை ஒரு வரலாற்று உண்மையாகக் கருதுறேன். ஏனென்றால் ஈழம் என்ற சொல்லுக்குத் தமிழில் பனை என்ற பொருள் உண்டு. பனைமீது விதிக்கப்பட்ட வரிக்கு ஈழம்பூச்சி என்றே பெயர். ஈழவர் என்று கேரளாவிலே சொல்லப்படுகின்ற சாதியார் ஈழத்திலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். அதுபோல நெல்லைமாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள். அவர்களும் அங்கிருந்துதான் வந்திருக்கணும். Sanars of Tamilnadu ஒரு அருமையான Ethinographic study. இன்னுஞ் சொல்லப்போனா கனகசபைப்பிள்ளை, சீனிவாச ஐயங்கார் இவர்களுக்கெல்லாம் அது முன்னோடி நூலாக இருந்தது என்று நான் கருதுகிறேன்.

Ethinographic aspect- லே அவரோட படைப்ப நாம வச்சு பார்க்கற ஒரு தேவையும் அதனுடைய முக்கியத்துவமும் உங்களுடைய வார்த்தைகளில் இருந்து புரியுது. அதுபோலவே வரலாற்று ரீதியாக இந்தியர்களை அணுகும்போது இந்தியர்களுக்கு வரலாற்று பார்வை இல்லை என்பதாக கால்டுவெல் கருதுகிறார். அதுபோல ஒரு மன்னனைப் பற்றியோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றியோ உள்ளதை உள்ளவாறே எழுதுவதில் இந்தியர் களுக்கு மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது. கவிஞர்களின் கட்டற்ற கற்பனைக்கு இடங்கொடுக்கும் போதுதான் எந்த ஒரு படைப்பும் ஆர்வம் ஊட்டுவதாக அமைகிறதென்று அவர்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. புராதனமான இந்திய வரலாறு என்று நாம் சொல்வோமானால், கல்வெட்டு களிலும் நாணயங்களிலும் காணக்கிடைக்கும் பழமரபுக்கதைகள், புராணங்கள் இப்படி எந்தப்பெயரில் இருந்தாலும் அவை தூக்கியெறியப் படவேண்டும். அதனால் சிறப்பு எதுவும் இல்லை. மாறாக சாதகமானதுதான் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

History of Tinnevelly - லே ஒருஇடத்துல வந்து அவர் எழுதறாரு. இந்த மக்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாதுன்னு. Historicsense கிடையாதுன்னு. அது ஒரு அபத்தமான ஸ்டேட்மெண்ட். ஏன்னா கால்டுவெல் காலத்துல கல்வெட்டியல் துறை தொடங்கப்படல. இந்தியாவுல இருக்கிற கல்வெட்டுல 75 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ்நாட்டுல. அதுல 75 விழுக்காடு தமிழ்க் கல்வெட்டுகள். அதுல கிட்டத்தட்ட ஒரு முப்பதனா யிரம் கல்வெட்டுகள் அச்சிடப்பட்டிருக்கு. இதைத் தெரிந்திருந் தால் கால்டுவெல் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். அவர் காலத்துல அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சுந்தரம்பிள்ளை போன்ற கல்வெட்டு வாசிக்கிற வாய்ப்பு அவர்க்குக் கிடைக்கவில்லை. அவர் வாழ்ந்த நிலப்பகுதியும் அப்படிப்பட்ட பகுதி. ரெண்டாவது அந்த நிலப்பகுதி பார்ப்பனியத் தாக்கம் இருந்த பகுதி அல்ல. இந்த நிலப்பகுதியில் வாழ்பவர்கள் பார்ப்பனிய மேலாண்மைக்கு அடிமைப்பட்ட வர்கள் இல்லை. அவர்களெல்லாம் வெள்ளாள மேலாண்மைக்கு அடிமைப்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள்.

History of Tinnevelly புத்தகத்துல ஒரு இடத்துல வரலாறு பற்றி அவர் சொன்ன கருத்தை நீங்க சொன்னீங்க. அவர் சொல்றாரு இந்திய வரலாறு அப்படின்னு ஒண்ணு சொல்லப்போனா அந்த வரலாறுங்கிற அர்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு கருத்துவந்து நம்முடைய நாணயங்கள்லேயும் கல்வெட்டுக்கள்லேயும் தான் இருக்கு. அதற்குப்பிறகு வேறு எதுலயுமே இல்ல அப்படின்னு ஒரு கருத்து சொல்றாரு. அதேபோல மகாவம்சத்துல தான் அந்த வரலாறோட தன்மை இருக்கு. இலங்கைல இருந்து எழுதப்பட்ட மகாவம்சம் அது.

கால்டுவெல் காலத்துல எழுத்துமரபுக்கான மரியாதை இருந்தது. இன்றைக்கு இல்ல. இன்றைக்கு நாம வாய்மொழி மரபுக்கான மரியாதை தருகிறோம். கால்டுவெல் காலத்துல அப்படி ஒரு அறிவுலகம் தோன்றல. அவர் அதையெல்லாம் கதை என்ற நினைப்புலதான் பதிவு செய்ராறே தவிர அது lore என்ற நினைப்புல பதிவு செய்யல. 

அதுபோல இன்னொரு கருத்து அவர் வந்து வரலாறு அப்படின்னா வாய்மொழி மரபுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரா, அப்படிங் கிற சந்தேகம் எழுகிறது. எழுத்துமொழிக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருகிறார்.

இல்ல, வழக்கு மொழியிலிருந்துதான் வேர்ச்சொற்களை யெல்லாம் திராவிடமொழிகளோட ஒப்பிட்டுநிலைக்கு முக்கியமாகப் பயன்படுத்தறார். 

ஆனா வரலாறு அப்படின்னு பார்க்கும்போது அவர்வந்து எழுத்து மொழில அமைந்த வரலாற்றைத்தான் பார்க்கிறார். 

ஆமா, அவர் காலத்து அறிவுலகம் அப்படித்தான் இருந்தது. 

இப்ப அதேமாதிரி எதார்த்தத்தை எதார்த்தமாகவே பதிவுபண்றது அப்படிங்கிறது இந்தியர்க்கு கைவராத கலைன்னு... அப்படிங்கிற மாதிரி சொல்றார். ஏன் அப்படின்னா, ஏதாவது எழுதப்பட்டதுன்னா அதுவந்து புலவர்கள் அல்லது கவிஞர்கள் வந்து ரொம்ப உணர்ச்சி மேலீட்டோட ... கற்பனை நயம்கலந்து எழுதுவதைத்தான் அவர்களுடைய எழுத்துக்கள்ல பார்க்க முடியுது. வரலாறு இல்ல. ஒரு மன்னனைப்பற்றி நாம குறிப்பிடும் போதுகூட மன்னனைப்பற்றி எழுதும்போதுகூட மிகையாவே எழுதறாங்க.

கால்டுவெல்லோட குற்றச்சாட்டு உண்மைதான். காரணம் அவர் காலத்துத் தமிழ் உரைநடை வளர்ச்சி பெறல. எல்லா மொழியும் கவிதையாகவே இருந்தது. கணக்கு உட்பட. எனவே இந்த மிகைவேடப்புனைதல் என்பது கவிதைக்குரிய அடிப்படைப் பண்பு. அறிவுக்கான ஊடகம் என்பது கவிதையாக இருந்தபோது இந்த மிகைவேடப்புனைதல் என்பது தவிர்க்கமுடியாத அம்சம்.

அந்த மிகையை வந்து அவர் ஏத்துக்கவே இல்ல. ஒரு இடத்துல அவர் என்ன சொல்றார். Poetical aspect -லே எழுதப்பட்ட பனுவல்கள் popular legends இதெல்லாம் டிஸ்கார்டு பண்ணனும். அதனால பெரிய இழப்பு எதுவுமே இல்ல அப்படிங்கிறார். 

அவர் காலத்து அறிவுலகச் சூழல் அப்படி. பின்னால வரவர நமக்கு வந்து மாறிடுச்சு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2015, 5:41:19 PM9/20/15
to vallamai, மின்தமிழ், மு இளங்கோவன்
> நம் தமிழ்ச்சொல்லான ’தோகை’யின் திரிபே என்று விளக்கியுள்ளார் கால்டுவெல்.

பீலி, தூவி என்பதுதான் மயில் இறகுக்கு பெயர். தோகை என்றால் வால்.  மயிலுக்கு சினைஆகுபெயர்.

20 செப்டம்பர், 2015 ’அன்று’ 12:43 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 20, 2015, 7:44:35 PM9/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, September 20, 2015 at 2:41:19 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
> நம் தமிழ்ச்சொல்லான ’தோகை’யின் திரிபே என்று விளக்கியுள்ளார் கால்டுவெல்.

பீலி, தூவி என்பதுதான் மயில் இறகுக்கு பெயர். தோகை என்றால் வால்.  மயிலுக்கு சினைஆகுபெயர்.


விலங்குகளுக்கு வால் உண்டு: மாடு, ஆடு, நாய், எலி - tail of mammals.

பறவைகளுக்கு தோகை: மயில், சேவல், ...

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 11, 2016, 9:52:40 PM11/11/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Thursday, September 17, 2015 at 8:36:28 PM UTC-7, Megala Ramamourty wrote:

நம் அன்னை பூமியாம் பாரதம் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களைத் தன்னகத்தே கொண்டது. வேற்றுமைகளுக்கிடையே காணக்கிடைக்கின்ற இந்த ஒற்றுமைப் பண்பே அதன் சிறப்பாகும் என்பது அறிஞர்கள் துணிபு.

மகாகவி பாரதியும், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என இந்தியத்தாயின் இயல்பை விதந்தோதியிருக்கின்றார். எனினும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் செல்வாக்கும் மக்களிடத்து நிலவுகின்றதா என்று சிந்தித்துப் பார்த்தால் ’இல்லை’ என்ற விடையை எளிதில் சொல்லிவிடலாம்.

தேவ பாஷையான வடமொழியே (சமஸ்கிருதம்) உயர்ந்தது; அதிலிருந்துதான் தமிழ் உள்ளிட்ட பிற திராவிட மொழிகளனைத்தும் தோற்றம் பெற்றன என்ற எண்ணம் முற்காலத்தில் நம் மக்கள் மனத்தில் ஆழ வேரூன்றியிருந்தது. அந்தோ! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலையே நீடித்தது.


இக்கட்டுரையை இன்று வெளியிட்ட வல்லமை இதழுக்கு நன்றி: http://www.vallamai.com/?p=62061

அன்புடன்,
மேகலா


-------------

பேரா. ஆ. இரா. வேங்கடாசலபதி முன்பு காலச்சுவட்டில் எழுதிய கட்டுரை. கால்ட்வெல்லுக்குப் பாதையமைத்தவர் எல்லிஸ். கலெக்டர் எல்லிஸ்.
அவரது பணியை அதிகம் குறிப்பிடவில்லை கால்ட்வெல் பாதிரியார்.  

நா. கணேசன்

எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-89/varalaru.asp


வரலாறு

எல்லீசன் என்றொரு அறிஞன்

ஆ.இரா. வேங்கடாசலபதி

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis, 1777-1819) என்ற அறிஞரின் பெயர் தமிழுலகம் பரவலாக அறிந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி என்ற அளவிலேயே அவர் பெயர் நிலைபெற்றுள்ளது. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு எழுதிய விளக்கவுரையினையும் தமிழுலகம் அறியும். சென்னை அரசாங்கத்தில் வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல உயர் பதவிகளை வகித்ததால் எல்லிஸ் துரை என்றும் இவர் அறியப்படுவார். தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்க சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லிஸ் என்ற செய்தியை ஐராவதம் மகாதேவன் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய சிலர் 'மிராசு உரிமை' பற்றி எல்லிஸ் எழுதிய அரிய ஆய்வுரையினையும் மாடுகளைத் தாக்கும் அம்மை நோயைத் தடுப்பது பற்றிப் புராண வடிவில் எழுதிய படைப்பையும் அறிந்திருப்பர். செய்யுள் இயற்றும் அளவுக்கு இவருக்குத் தமிழில் பயிற்சி உண்டு. நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம் பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி. சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

சென்னை நகரில் நிலவிய குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்கப் பல கிணறுகளை வெட்டுவித்த எல்லிஸ் அவற்றில் பாடல் வடிவில் கல்வெட்டுகளைப் பதித்திருக்கிறார். இவற்றில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. இதன் கைப்பிடிச் சுவரில் எல்லிஸ் 1818ஆம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டைப் பதித்தார் என்றும் அது இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் குறிப்பிடும் ஐராவதம் மகா தேவன், அதில்

. . . சயங்கொண்ட தொண்டிய சாணூறு நாடெனும்
ஆழியி லிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகட லளவு
நெடுநிலந் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ் சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
'இருபுலனும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னு ளாய்ந்து . . .

ஒரு குறளைப் பொருத்தமான மேற்கோளாகக் கையாண்டிருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

l

அயோத்திதாசப் பண்டிதரின் எழுத்துகள் அனைத்தும் அண்மையில் வெளிவந்துள்ள நிலையில் எல்லிஸ் பற்றிய தமிழுலகின் மதிப்பீடு குறித்து மேலும் சில பரிமாணங்கள் வெளிப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு 'எலீஸ்' துரையே ஊற்றுக்கண் என்று முதன்முதலில் குறிப்பிடுபவர் அயோத்திதாசரே ஆவார். 'உலகோபகாரிகளாகும் சமண முனிவர்களின் புண்ணியவசத்தால் ஆங்கிலேயர் இவ்விடம் வந்து தோன்றி கனந்தங்கிய எலீசென்னும் துரைமகனால் தமிழ்ச் சங்கமொன்று ஏற்படுத்தி சிதலுண்டு கெட சமீபித்திருந்த ஓலைச்சுவடிகள் யாவையுங் தங்களிடங் கிடைத்தவரையில் அச்சிட்டு வெளிக் கொண்டு'வந்தார் என்றும் அவரைப் போற்றுகிறார் ('அயோத்திதாசர் சிந்தனைகள்', II, ப. 548).

இது மட்டுமல்லாமல் இப்பணியில் எல்லிஸுக்கு அயோத்திதாசரின் பாட்டனார் நேரிடையாகவும் உதவியிருக்கிறார் என்பது முக்கியமான செய்தியாகும். ஜார்ஜ் ஆரிங்டன் என்ற வெள்ளை அதிகாரியிடம் பரிசாரகராகப் (பட்லர்) பணியாற்றிய 'எனது பாட்டனார் ... கந்தப்பனென்பவர் ஓலைப்பிரதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி நாநூறையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கங் கூட்டிவைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளிவந்திருக்கிறது' என்றும் குறிப்பிடுகின்றார். இதன் தொடர்பில் எல்லிஸ் நிறுவிய புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் தமிழ்த் தலைமையாசிரியராகப் பணியாற்றிய முத்துசாமிப் பிள்ளையினையும் பண்டிதர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இவ்வாறு வெளியான குறள் பதிப்பின் பாடங்கள் அயோத்திதாசருக்கு உவப்பளிக்கவில்லை.

கனந்தங்கிய எலீஸ் துரையவர்கள் சங்கத்திலேயே முதலாவது அச்சிட்ட குறளில் 'அருங்கேடனென்பதறிக' வென்பது பிழைப்பட்டுள்ளது கொண்டே உரையெழுதியோர் காலத்தும் பிழைபட்டும் பொருள்கெட்டும் வழங்கிவருகின்றது. அதன் திருத்த மொழியை 'அருங்கலைச் செப்பா'லறிந்துக்கொள்ளலாம். வீடு பேறு 'அருங்கோடர் சங்கமணுகி யறவுரை கேட்டிருமாந்திருப்பதே வீடு'.

எல்லிஸிடம் கொடுத்த குறள், நாலடியார் ஏட்டுப் பிரதிகள் அச்சில் வந்தபொழுது 'ஓலைப்பிரதிக்கு மாறுதலாக சாற்றுக்கவிகளில் சிலது அதிகரித்தும் அறத்துப்பாலிலுள்ள சில செய்யுட்களைப் பொருட்பாலிற் சேர்த்தும், இச்செய்யுளில் ஆரியாரென்று வந்த மொழியைப் பூரியாரென்றும் மற்றும் செய்யுட்களை மாற்றியுள்ளதை கந்தப்பனவர்கள் ... எழுதி கேட்டபொழுது மறுமொழி கிடைக்காமல் போய்விட்டது என்பது விவேகிகளறிந்த விடயங்களேயாம்' என்றும் பண்டிதர் குறிப்பிடுகின்றார். பண்டிதர் குறிப்பிடும் செய்திகள் விரிவான ஆய்வை வேண்டி நிற்கின்றன.

எல்லிஸின் பணியைத் தமிழுக்கு வளம் சேர்ப்பதாக மட்டுமன்றி பறையர் வரலாற்றை மறுவாசிப்பு செய்வதாகவும் அயோத்திதாசர் முன்வைக்கிறார்.

திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதியோர் என்றும் கூறிவந்த பெயர்கள் மகமதியர்கள் ஆளுகைவரையில் கேழ்வியில்லாமல் இருந்தது. கருணையும் விவேகமும் மிகுந்த பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றியபோது இவர்களைத் தாழ்த்தி வரும் விஷயங்கள் சிலது விசாரணைக்கு வந்ததுடன் எலீஸ் துரை அவர்களால் கணித சாஸ்திரிகளாகும் உள்ளவர்கள் நூற்களையும் வித்துவ சாஸ்திரிகளாகும் பாணர்கள் நூற்களையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்துவிட்டார்.

l

இத்தகைய பெருமை உடைய எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812இல் நிறுவினார். 'சென்னைக் கல்விச் சங்கம்' என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது. 1856இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816இல் 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற புலமைக் கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ். பரவலாக அறியப்படாத இவ்வுண்மையை, நெடுங்கால விரிந்த ஆராய்ச்சியின் வழியாக, ஏராளமான புதிய செய்திகளோடு எடுத்துரைக்கும் நூல் இது. காலனிய ஆவணங்களில் புதைந்து கிடக்கும் செய்திகளைத் திரட்டியுள்ளதோடு, ஏறத்தாழ இருநூறாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப்படிகளை இலண்டனிலும் எடின்பரோவிலும் புதையலெனக் கண்டெடுத்துப் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் இந்நூலை எழுதியுள்ளார். முற்றிலும் காணாமல் போய்விட்டதாகக் கருதப்பட்ட எல்லிஸ் எழுதிய தமிழ் யாப்பியல் பற்றிய ஆய்வுரைகளை இவர் கண்டெடுத்துள்ளது முக்கியமானதாகும். எல்லிஸின் அடித்தடங்களை இனங்கண்டு அவற்றை அடியொற்றி டிரவுட்மன் நிகழ்த்திய தேடல் ஒரு துப்பறியும் கதையைப் போல் சுவையும் விறுவிறுப்பும் கொண்டது.

நாற்பது வயது நிறையும் முன்னர் நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதி பூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடுமென மறைந்த தீயூழை என்னென்பது! 'திராவிட உறவுமுறை' என்ற புகழ்வாய்ந்த நூலை எழுதிய டிரவுட்மன் திராவிடச் சான்று பற்றி எழுதி எல்லிஸிற்குப் புத்துயிரளித்திருக்கிறார் என்று சொல்வது மிகையாகாது.

l

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த டிரவுட்மனுக்கு இந்தியாவைப் பற்றிய அறிமுகமும் ஆர்வமும் காந்தியின் மூலமாக ஏற்பட்டது. பெலாய்ட் கல்லூரியில் மானிடவியலைப் பயின்றபொழுது வெளியான ஏ.எல். பாஷம் எழுதிய The Wonder that was India என்ற புகழ்பெற்ற நூலின் அமெரிக்கப் பதிப்பைப் படித்து இந்தியா பற்றிய ஆர்வம் அதிகமானது. (இந்நூலின் தமிழாக்கமான 'வியத்தகு இந்தியா' இலங்கை அரசால் வெளியிடப்பட்டது.) இளங்கலையின் மூன்றாமாண்டை அப்பொழுது புதிதாக எம்.என். ஸ்ரீநிவாஸ் உருவாக்கியிருந்த தில்லிப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறையில் கழித்தார். இளங்கலைப் பட்டம் பெற்றபின் இலண்டன் பல்கலைக்கழகக் கீழைத்தேய, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் (School of Oriental and African Studies - SOAS) ஏ.எல். பாஷம் மேற்பார்வையில் அர்த்தசாஸ்திரம் பற்றிய ஆய்வை மேற்கொண்டு 1962இல் முனைவர் பட்டம் பெற்றார். இக்காலப்பகுதியில் ரொமிலா தாப்பர் போன்ற இந்திய அறிஞர்களோடு நட்பு கொண்டார். பட்டம் பெற்ற பின்பு சில ஆண்டுகள் அதே நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அங்கே பணியாற்றிவந்த ஜான் மார் வழியாகத் தமிழை அறிமுகப்படுத்திக்கொண்டார். 1968 முதல் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் டிரவுட்மன் அங்கு வரலாறு மற்றும் மானிடவியல் பேராசிரியராக விளங்குகிறார். Comparative Studies in Society and History என்ற மதிப்பார்ந்த ஆய்விதழுக்கும் ஆசிரியராகத் திகழ்கிறார்.

சமஸ்கிருதமும் பிரெஞ்சும் பழுதறக் கற்ற டிரவுட்மனுக்குத் தமிழ், பாலி, இலத்தீன், ஜெர்மன் மொழிகளில் பயிற்சி உண்டு. மானிடவியல், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளில் நுட்பமான புலமைமிக்க டிரவுட்மனின் நாற்பதாண்டு இடையறாத ஆய்வின் மூலமாக இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத நூல்கள் வெளிவந்துள்ளன.

டிரவுட்மனின் முதல் நூல் அர்த்தசாஸ்திரம் பற்றியது. அர்த்தசாஸ்திரம் கௌடில்யர் என்ற தனியொருவரின் படைப்பு அன்று; சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான பனுவல் என்பதை மொழியியல், புள்ளியியல் பகுப்பாய்வின் மூலமாக டிரவுட்மன் நிறுவியுள்ளார்.

1981இல் டிரவுட்மன் வெளியிட்ட 'திராவிட உறவுமுறை' (Dravidian Kinship) என்ற நூல் புலமை யுலகில் அவருக்கு ஒரு தனியிடத்தைத் தந்தது. இந்நூலில் அவர் திராவிட உறவுமுறை என்பது ஒரு வரலாற்றுக் கட்டமைவு என்பதை நிறுவும்முகமாக வரலாற்று மொழியியல் அணுகுமுறையைக் கைக்கொண்டு வரலாற்று முறையில் மீட்டுருவாக்கம் செய்து காட்டியுள்ளார். திராவிட உறவுமுறையின் சிறப்பியல்பான முறை மணத்தை (cross-cousin marriage) விரிவாக ஆராயும் டிரவுட்மன், முடியாட்சியைப் பேணிக் காப்பதில் அது ஆற்றிய பங்கைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். உலக உறவுமுறைகளில் திராவிட உறவு முறை ஒரு தொல்வடிவம் என்பதையும் நிறுவுகிறார். பண்டைக் கால ஆவணங்களையும் சமகால இனவரைவியல் தரவுகளையும் பயன்படுத்தி அவர் செய்துள்ள ஆய்வு மானிடவியல் உறவுமுறை ஆய்வுகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியவியல் / திராவிடவியல் ஆய்வுகளுக்கும் முக்கியப் பங்களிப்பாகும்.

திராவிட உறவுமுறை பற்றிய ஆய்வின்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க மானிடவியலாளரான லூயிஸ் ஹென்ரி மார்கனின் உறவுமுறை பற்றிய ஆய்வின்மீது டிரவுட்மனின் கவனம் குவிந்தது. எங்கெல்சின் புகழ்பெற்ற 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' மார்கனின் 'பண்டைச் சமூகம்' என்ற நூலின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது என்பதை அறிவோம். மார்கன் பற்றியதொரு புலமை வாழ்க்கை வரலாறாகவே டிரவுட்மனின் Lewis Henry Morgan and the Invention of Kinship என்ற நூல் அமைந்துள்ளது. மொழியியலின் சொற்களஞ்சியம் சார்ந்த புரிதலையும் மானுடவியலின் பொருண்மை சார்ந்த புரிதலையும் வேறுபடுத்திக் காண்பதன் மூலம் திராவிட உறவுமுறையின் பெரும் இடப்பரவலை உறவுமுறைச் சொற்களின் வேறுபாட்டால் காணத் தவறுவதை மார்கனின் ஆய்வுகளைக் கொண்டே டிரவுட்மன் இனங்காண்கிறார் என்பதை இங்குச் சுட்டலாம். (மார்கன் பற்றிய ஆய்வார்வத்தின் இன்னொரு முகமாக, மார்கனின் நூலகத்திற்குச் சிறந்ததொரு அடைவையும் டிரவுட்மன் வெளியிட்டிருக்கிறார்.)

டிரவுட்மனின் அடுத்த இரண்டு ஆய்வு நூல்களும் திராவிடம், ஆரியம் என்ற இரு திணைகளை மையமாகக் கொண்டவை. இவற்றின் ஊற்றுக்கண்ணைப் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனையில் இனங்காணும் டிரவுட்மன், அக்காலப்பகுதியில் மொழியும் தேசமும் இணையானவையாகப் புரிந்துகொள்ளப்பட்டதை விளக்குகிறார். விவிலியக் கருத்தியல் பின்புலத்தில் மொழி, தேசம் ஆகியவற்றின் வரலாறுகள் குடிமரபின உறவுகளால் வரையறுக்கப்பட்டதையும், ஒன்றின் (தேசம்) வரலாற்றில் புலப்படாத பகுதிகளை மற்றொன்றின் (மொழி) வரலாற்றைக் கொண்டு நிரப்ப முற்பட்டதையும் காட்டுகிறார். இந்தப் புதிய புலமைக் கருவியின் மூலமாக 'மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கம் உருப் பெற்று, உலக மொழிகள் பல குடும்பங்களாக உறவு கொண்டுள்ளமை இனங்காணப்பட்டது. இந்தோ - ஐரோப்பியம், மலேய - பாலினேசியம், திராவிடம் ஆகிய மொழிக் குடும்பங்கள் இந்தப் புலமைப் பின்புலத்தில்தாம் வரையறுக்கப்பட்டன என்பதோடு இவ்வரையறை உருவான இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இவை ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக உள்ளது அதன் புலமை உண்மையைக் காட்டுகிறது என டிரவுட்மன் நிறுவுகிறார்.

இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதை Aryans and British India என்ற நூலில் டிரவுட்மன் விரிவாக ஆராய்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் கல்கத்தாவில் நிறுவப்பட்ட ஆசியக் கழகம் (Asiatic Society) வழியாகக் கீழைத்தேயவியல் அறிஞர்கள் (Orientalists) இதில் முக்கியப் பங்காற்றினர். கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குடும்ப உறவுடையன என்பதை ஒப்பீட்டு மொழியியல்வழி வில்லியம் ஜோன்ஸ் நிறுவினார். (மொழிக்கும் தேசத்திற்குமான உறவு வரையறுக்கப்பட்ட விதத்தில் 'ஆரிய இன மேன்மை' என்ற நச்சுப் போக்கும் துளிர்த்துக் கிளைத்தது. இது வேறு கதை. இதன் பின்புலத்தையும் இது தொடர்பான விவாதங்களையும் டிரவுட்மன் The Aryan Debate என்ற நூலில் பதிப்பித்துள்ளார்.) இந்தியாவைப் பற்றிய புதிய அறிவு உருவாவதற்கும் கட்டமைப்பதற்கும் இது அடிப்படையாக விளங்கியது. இந்தியாவைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் மையமானது என்ற கருத்தும் உருவானது. இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்தே கிளைத்தவை என்றும் கல்கத்தா கீழைத்தேயவியலார் கருதிக்கொண்டனர்.

அடிப்படையிலேயே பிழையான இக்கருத்தாக்கத்தைச் சென்னையை மையமாகக் கொண்டிருந்த எல்லிஸ் தலைமையிலான அறிஞர்கள் புலமை ரீதியாக மறுத்தனர். இளநிலை ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் நிர்வாகப் பணிகளை நிறைவேற்றுவதற்கு - தம் ஆளுகைக்குட்பட்ட மக்களை நிர்வகிப்பதற்கு - சுதேச மொழிப் பயிற்சி இன்றியமையாதது என்பதை உணர்ந்த காலனிய பிரிட்டிஷ் அரசு அப்பயிற்சியை வழங்க முன்வந்தது. கல்கத்தா புனித வில்லியம் கோட்டைக் கல்லூரியை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்டதே புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாரசீகம், அரபு, இந்துஸ்தானி, மராட்டி ஆகிய மொழிகள் இங்குப் பயிற்றுவிக்கப்பட்டன. இதற்கென 'வாத்தியார்கள்' அல்லது 'முன்ஷிக்கள்' அமர்த்தப்பட்டனர். முத்துசாமிப் பிள்ளை, 'சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமை நடாத்தும்' தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழறிஞர்கள் இங்குப் பணியாற்றினர். கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றறிந்திருந்தனர். தம் பணியின் பகுதியாக - மொழி பயிற்றுவிப்பதற்கென - புதிய இலக்கண நூல் களையும் அகராதிகளையும் உரைநடை நூல்களையும் இவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது. தாண்டவராய முதலியார் 'இலக்கண வினா விடை' எழுதினார்; பஞ்ச தந்திரக் கதைகளை மொழிபெயர்த்தார். வீரமாமுனிவரின் செந்தமிழ் - கொடுந்தமிழ் இலக்கணங்களும் சதுரகராதியும் முதன்முறையாக அச்சேறின. ராட்லர் அகராதியும் உருவானது. இதனையொத்த பணிகள் பிற மொழிகளுக்கும் நடைபெற்றன. முக்கியமாகத் தெலுங்கு மொழியில் இலக்கணங்களும் அகராதிகளும் எழுதப்பட்டன. தமிழ் / இந்திய மற்றும் ஐரோப்பிய மொழி ஆய்வு மரபுகளின் சந்திப்பைக் கவனப்படுத்தும் டிரவுட்மன், எட்வர்டு சைதின் 'கீழைத்தேயவிய'த்தைச் செழுமைப்படுத்துகிறார்.

விரைவும் பரபரப்புமான இந்தக் களத்தில்தான் எல்லிஸின் 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கம் நிறுவப்பட்டது. 1814இலேயே தெலுங்கைத் தமிழின் 'சகோதரி மொழி' (sister language) என்று எல்லிஸ் குறிப்பிட்டிருக்கிறார் (Madras Public Consultations, 8 July 1814, p. 3697). 1816இல் காம்பெலின் தெலுங்கு இலக்கண நூலுக்கு முகப்பாக எழுதிய விரிவான ஆய்வுரையில் தெலுங்குக்கும் சமஸ்கிருதத்திற்கும் குடி உறவில்லை என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலானவை திராவிட மொழிக் குடும்பம் என்றும், சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ் நிறுவிக்காட்டினார். இதைத்தான் டிரவுட்மன் 'திராவிடச் சான்று' என்று குறிப்பிடுகின்றார்.

எல்லிஸ் முன்மொழிந்த 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற இந்தக் கருத்தாக்கமே கால்டுவெல்லின் நூலில் முழு மலர்ச்சியும் புலமை விரிவும் கொள்கின்றது. எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பைக் கால்டுவெல் குறைத்துக் காட்டுகிறார் என்பது முழு நிலவின் களங்கம் போன்றது.

எல்லிஸின் அகால திடீர் மறைவும் அவருடைய கையெழுத்துப்படிகளும் நூல்களும் சிதைந்தும் அழிந்தும் சிதறியும் போனதும் அவருடைய பங்களிப்பை அறிவதற்குத் தடையாகிவிட்டன. எல்லிஸ் இறந்த பின் பல மாதங்களுக்கு அவருடைய அரிய நூல் தொகுப்புகள் 'அடுப்பெரிக்கவும் கோழி வறுக்கவும்' பயன்படுத்தப்பட்டதை நினைத்தால் இன்றும் நெஞ்சு பதைக்கிறது.

திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கம் புலமையுலக நிலைபேற்றோடு அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் அறிவுலக வேர்கள் இதில் ஊன்றியுள்ளன. 'ஆரியம் போல் உலக வழக் கழிந்து ஒழியா'த் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை, 'கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக் கத்தின் அழகியல்/அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்.

திராவிடம் இன்று புலமை உலகில் நிலைபேறடைந்துவிட்டது. ஆயினும் திராவிட இயக்க அரசியலைக் கண்டு முகஞ்சுளிப்பவர்களுக்கு இன்றும் திராவிட ஒவ்வாமை உள்ளது. திராவிட மொழியியல் பள்ளி அரசுடைமையாவதற்குப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனமாகப் பெயர் மாற்றம் பெறவேண்டியிருந்தது. 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்குப் பின்னர் 'அனைத்திந்திய' என்ற முன்னொட்டு அமைந்தது. திராவிடப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் உருவாக்கம் இப்பின்னணியில் நல்ல அறிகுறியாகும்.

மொழியியல் சார்ந்து திராவிடம் என்ற கருத்தாக்கம் உலக அளவில் நிறுவப்பட்டுவிட்டாலும் சமூக அறிவியல் துறைகளில் இந்நிலை ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்ப் புலமை உலகில் க. கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்.

'திராவிட மொழிகள்' என்ற கருத்தாக்கத்தின் வரலாறு மறுக்க முடியாத, இதுவரை யாரும் பார்த்தறியாத ஆவணங்களின் அடிப்படையில் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. புலமை உலகம் போற்றும் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் அமைதியாகவும் நிதானமாகவும் புலமை நெறிகளிலிருந்து சிறிதும் வழுவாமலும், கோட்பாட்டுத் தெளிவு, விரிந்து பரந்த தரவுகள், மயக்கம் தராத மொழி, பிறழாத வாதமுறை ஆகிய தன்மைகளுடனும் இந்நூலை வரைந்துள்ளார்.

l

காலச்சுவடு பதிப்பகம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வெளியீடாக வெளிவர உள்ள 'திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்' நூலின் முன்னுரையிலிருந்து.

நூலாசிரியர்: தாமஸ் டிரவுட்மன் 
தமிழாக்கம்: இராம. சுந்தரம்.

உள்ளடக்கம்

Reply all
Reply to author
Forward
0 new messages