[MinTamil] நப்பு - பொருள் என்ன ?

264 views
Skip to first unread message

வி. சு.

unread,
Apr 28, 2010, 1:37:07 AM4/28/10
to மின்தமிழ்

நப்பாசை

நப்பு - பொருள் என்ன ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Madhurabharathi

unread,
Apr 28, 2010, 3:25:36 AM4/28/10
to mint...@googlegroups.com
 
2010/4/28 வி. சு. <vijayakuma...@gmail.com>

நப்பாசை

நப்பு - பொருள் என்ன ?

லெக்ஸிகன் இவ்வாறு சொல்கிறது:
 
நப்பாசை nappācai

, n. < நம்பு- + ஆசை. 1. Insatiable sense of taste; நாவின்தீராவாசை. 2. Vain hope or desire; வீணான ஆசை.

இதில் நம்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை.

சிறுவயதில் நைப்பாசை என்று படித்தோ கேட்டோ இருப்பதாக ஓ எண்ணம்.

அது சரியென்றால் ஒரு ‘நைக்கிற’, ‘நையச்செய்கிற’ ஆசை என்று பொருள்கொள்ளலாம்.

வலையில் நைப்பாசை என்று தேடினால் இன்னமும் பலர் அப்படிப் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

பிறர் கருத்துச் சொல்லுங்கள்.

அன்புடன்
மதுரபாரதி

Innamburan Innamburan

unread,
Apr 28, 2010, 7:11:04 AM4/28/10
to mint...@googlegroups.com
எனக்கென்ன? பார்த்துக்கொண்டே இருங்கள்! 'நப்ப மேட்டர்' நு அறிமுகம் ஆகப்போகிறது!
இன்னம்பூரான்

2010/4/28 Madhurabharathi <madhura...@gmail.com>

devoo

unread,
Apr 28, 2010, 10:27:24 AM4/28/10
to மின்தமிழ்
Apr 28, 6:11 am, Innamburan Innamburan <

> எனக்கென்ன? பார்த்துக்கொண்டே இருங்கள்! 'நப்ப மேட்டர்' நு அறிமுகம்
> ஆகப்போகிறது!

Sorry, the blog you were looking for does not exist.
However, the name nappamatter is available to register!

யாரும் இதுவர ஆரமிக்கல
ஐயா சொல்ற மாரி நாம கூட ஆரம்பிக்கலாம்,

தேவ்

ananda rasa thiruma

unread,
Apr 28, 2010, 8:22:55 PM4/28/10
to mint...@googlegroups.com
நயப்பு என்பது இடைக்குறையாகப் பேச்சுவழக்கில் நப்பு என ஆகியிருக்கலாம். நயத்தல் என்றால் விரும்புதல் என்பது பொருள். சொல் நயம், பொருள் நயம் என்னும் வழக்காறுகள் உள்ளன. ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்‘ என்பார் வள்ளுவர்.
அன்புடன்
ஆராதி

2010/4/28 devoo <rde...@gmail.com>

Dr M.D.Jayabalan

unread,
Apr 28, 2010, 10:15:32 PM4/28/10
to மின்தமிழ்
’நப்பாசை’ என்பது ஒரு செயல் நிறைவேறும் என்ற ’நம்பி’க்கையில் --
அதற்குரிய ஆதாரங்கள், சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையிலும் --
எதிர்பார்த்திருப்பது என்பதாம்.. இதில் ‘ம்’ (’நம்பு’வில் உள்ளது) காலப்
போக்கில் ‘ப்’ ஆகத் திரிபு அடைந்திருக்கலாம். எடுத்துகாட்டாக, ‘அம்பு’
என்றால் ‘நீர்’; (’விழி அம்பு.’ - கண்ணீரைக் குறிக்கும்)அது திரிந்து
‘அப்பு’ என ஆவதுபோல். அப்பு என்பதும் நீரைத்தான் குறிக்கும்.
’அம்மா’வும் ‘அப்பாவும்’ கூட இது போன்றத் திரிபுவாக இருக்கவேண்டும்.

இக்கருத்து புதியதொரு விவாதத்தைத் தொடங்கி (தொடக்கி? தொடங்கு= தொடக்கு
சமம் என்பது என் கருத்து) வைக்கும் என நம்புகிறேன். இது என் நப்பாசை
அன்று.

எம்.டி.ஜெயபாலன்
On Apr 28, 12:25 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/4/28 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

>
>
>
> > நப்பாசை
>
> > நப்பு - பொருள் என்ன ?
>
> லெக்ஸிகன் இவ்வாறு சொல்கிறது:
>
> நப்பாசை nappācai
>

> , *n*. < நம்பு- + ஆசை. 1. Insatiable sense of taste; நாவின்தீராவாசை. 2. Vain

> hope or desire; வீணான ஆசை.
>
> இதில் நம்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை.
>
> சிறுவயதில் நைப்பாசை என்று படித்தோ கேட்டோ இருப்பதாக ஓ எண்ணம்.
>
> அது சரியென்றால் ஒரு ‘நைக்கிற’, ‘நையச்செய்கிற’ ஆசை என்று பொருள்கொள்ளலாம்.
>
> வலையில் நைப்பாசை என்று தேடினால் இன்னமும் பலர் அப்படிப் பயன்படுத்தி வருவது
> தெரிகிறது.
>
> பிறர் கருத்துச் சொல்லுங்கள்.
> அன்புடன்
> மதுரபாரதி
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Apr 28, 2010, 11:00:44 PM4/28/10
to mint...@googlegroups.com

2010/4/29 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>

இக்கருத்து புதியதொரு விவாதத்தைத் தொடங்கி (தொடக்கி?  தொடங்கு= தொடக்கு
சமம் என்பது என் கருத்து)  

தொடங்கி வைக்கும், தொடக்கி வைக்கும் இரண்டுமே சரி.  ஒன்ற செய்வினை, இன்னொன்று செயப்பாட்டு வினை.  (அதென்ன செய்வினை, ஏவல் பில்லி சூனியம் என்றொருவர் நகப்புகுவார், நகா நிற்பார் என்பதனால், புரியற மாதிரி சொல்றேன் ஒன்று Active voice இன்னொன்று Passive voice.  

இரண்டுமே சரிதான்.  துவங்கி என்பதுதான்........சரி வேணாம் ...விட்டுட்டேன்.  மலேசியாலேந்து பாம் வந்து விழும்.  எனக்கு வேணாம் இந்த ஆட்டம்.  :D
--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Apr 28, 2010, 11:21:21 PM4/28/10
to மின்தமிழ்

On Apr 28, 2:25 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/4/28 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

>
>
>
> > நப்பாசை
>
> > நப்பு - பொருள் என்ன ?
>
> லெக்ஸிகன் இவ்வாறு சொல்கிறது:
>
> நப்பாசை nappācai
>

> , *n*. < நம்பு- + ஆசை. 1. Insatiable sense of taste; நாவின்தீராவாசை. 2. Vain

> hope or desire; வீணான ஆசை.
>
> இதில் நம்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை.
>

நம்பு- 1. To long for, desire intensely; விரும்புதல். நின்னிசை நம்பி
(புறநா. 136).

நம்பு + ஆசை = நப்பாசை = விருப்பம் மிகுந்த ஆசை.
கம்பு + கிழங்கு = (அத்துச் சாரியை பெற்று) கப்பக் கிழங்கு ஆதல்போல்.

சிலப்பதிகாரம், இருப்புச்சட்டி, ... ஒப்பிடுக.

கணேசன்

> சிறுவயதில் நைப்பாசை என்று படித்தோ கேட்டோ இருப்பதாக ஓ எண்ணம்.
>
> அது சரியென்றால் ஒரு ‘நைக்கிற’, ‘நையச்செய்கிற’ ஆசை என்று பொருள்கொள்ளலாம்.
>
> வலையில் நைப்பாசை என்று தேடினால் இன்னமும் பலர் அப்படிப் பயன்படுத்தி வருவது
> தெரிகிறது.
>
> பிறர் கருத்துச் சொல்லுங்கள்.
> அன்புடன்
> மதுரபாரதி
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Apr 29, 2010, 9:05:36 AM4/29/10
to mint...@googlegroups.com

முப்பத்து மூவர் அமரர்க்கும் முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்

என்னும் பாசுரத்தில்

நப்பின்னை நங்காய்! திருவே துயிலெழாய்

ன்னு ஒரு வரி வருது

ஆமாம் நப்பின்னை என்றால் என்ன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

29-4-10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Ramesh

unread,
Apr 29, 2010, 12:55:19 PM4/29/10
to mint...@googlegroups.com
நப்பி என்றால் கஞ்சன்/கருமி என்று ஒரு சொல்வழக்கு உண்டு. 

2010/4/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Innamburan Innamburan

unread,
Apr 29, 2010, 1:45:15 PM4/29/10
to mint...@googlegroups.com
நப்பின்னை நோக்கவும்: Last,but, one.
innamburan

2010/4/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Apr 29, 2010, 1:49:41 PM4/29/10
to mint...@googlegroups.com
தேனீ அவர்களே, உங்களுக்காக:
 
ஓகை.

2010/4/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

முப்பத்து மூவர் அமரர்க்கும் முன் சென்று

fonio sivakumar

unread,
Apr 29, 2010, 1:53:01 PM4/29/10
to mint...@googlegroups.com
endrum anbudan fonio
 
natppu : thats not  wife / mother / father / sis / bro doughter/ son /  ...................................... this all to gether  thats natppu. ( but  if its g. friend  she canot be wife / if boy friend he canot be a husbend)  if u dont understand pls aske me in additional mail

endrum anbudan
foonio

2010/4/28 வி. சு. <vijayakuma...@gmail.com>

வி. சு.

unread,
Apr 29, 2010, 10:39:17 PM4/29/10
to மின்தமிழ்
On Apr 29, 6:05 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> முப்பத்து மூவர் அமரர்க்கும் முன் சென்று
> கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
>
> என்னும் பாசுரத்தில்
>
> நப்பின்னை நங்காய்! திருவே துயிலெழாய்
>
> ன்னு ஒரு வரி வருது
>
> ஆமாம் நப்பின்னை என்றால் என்ன?
...

பின்னே ( கடைசியில் ) பிறந்தவள் பின்னை.

இளையராஜா என்ற பெயர் போல இது பொருள் தருகிறது என்று நினைக்கிறேன்.

நப்ப்பின்னை - 'ந' முன்னொட்டு வந்து நல்ல எனும் பொருள் தருகிறது என
நினைக்கிறேன்.

நப்பாசை என்பதையும்,

ந + ஆசை - நவாசை - நவ்வாசை - நப்பாசை எனக் கொள்ளலாம்.

எனக்கு நவாஸ் செரீப் என்ற பெயர் நினைவிற்கு வருகிறது. :)

Madhurabharathi

unread,
Apr 29, 2010, 10:53:08 PM4/29/10
to mint...@googlegroups.com

2010/4/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஆமாம் நப்பின்னை என்றால் என்ன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

2004ல் நப்பின்னை குறித்து நான் மதுரமொழியில் எழுதியது:
 
விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே

(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.

(இன்னிலை: பாடல் 22)

srirangammohanarangan v

unread,
Apr 29, 2010, 11:21:28 PM4/29/10
to mint...@googlegroups.com
மதுரபாரதியார்,  நல்ல கட்டுரையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

devoo

unread,
Apr 29, 2010, 11:51:52 PM4/29/10
to மின்தமிழ்
மதுரபாரதி சார்,

*வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்*

முன்னை – ஸ்ரீதேவி

பின்னை – நீளாதேவி

பிஞ்ஞை என்பதை பின்னையின் மறுவடிவமாகக் கொள்ளலாm.
பிஞ்ஞை – பின்னையோடு குரவை கோத்ததாகக் கொள்வதில் பிழை இல்லை
அல்லவா ?

தேவ்

On Apr 29, 9:53 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/4/29 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

>
> >  ஆமாம் நப்பின்னை என்றால் என்ன?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> 2004ல் நப்பின்னை குறித்து நான்

> மதுரமொழி<http://mail.google.com/mail/://mozhi.blogspot.com>யில்
> எழுதியது <http://mozhi.blogspot.com/2004/06/blog-post_10.html>:
>
> *யாரந்த நப்பின்னை? <http://mozhi.blogspot.com/2004/06/blog-post_10.html>*

>
> விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம்
> கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே
> இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.
>

> திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை
> அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள்
> நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும்
> சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த
> கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன்
> மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு
> அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன்
> துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும்
> (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே
> அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.
>
> அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித்
> அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும்
> நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர்.
> இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?
>
> சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான்.
> அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக்
> கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு
> தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட
> வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று.
> பாடல் இதோ:
>

> *பூணித் தொழுவினிற் புக்குப்

> புழுதியளைந்த பொன்மேனி
> காணப் பெரிதும் உகப்பன்
> ஆகிலும் கண்டார் பழிப்பர்
> நாண் இத்தனையும் இலாதாய்!
> நப்பின்னை காணிற் சிரிக்கும்
> மாணிக்கமே என் மணியே!

> மஞ்சனம் ஆடநீ வாராய்!*
>
> (*நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160*)

>
> [பூணி - பசு]
>
> மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று
> சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில்.
> மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.
>
> சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது.
> காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல்
> வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய
> நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை
> உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து
> வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய
> ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க
> அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து
> விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு
> தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.
>
> "இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு
> இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக்
> கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.
>

> *மகளை நோக்கி "மனம் மயங்காதே!

> மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
> கண்ணகியும் தான் காண
> ஆயர் பாடியில் எருமன்றத்து
> மாயவனுடன் தம்முன் ஆடிய
> வாலசரிதை நாடகங்களில்
> வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
> குரவை ஆடுதும் யாம்" என்றாள்

> கறவை கன்று துயர் நீங்குக எனவே*
>
> (*சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை*)

>
> [தம்முன் - தன் முன்னவனான பலராமன்]
>
> எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக்
> குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று
> கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.
>

> மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் ...
>
> read more »

வி. சு.

unread,
Apr 30, 2010, 12:52:40 AM4/30/10
to மின்தமிழ்
On Apr 30, 8:51 am, devoo <rde...@gmail.com> wrote:
> மதுரபாரதி சார்,
>
> *வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
> குரவை ஆடுதும் யாம்*
>
> முன்னை – ஸ்ரீதேவி
> பின்னை – நீளாதேவி
> பிஞ்ஞை என்பதை பின்னையின் மறுவடிவமாகக் கொள்ளலாm.
> பிஞ்ஞை – பின்னையோடு குரவை கோத்ததாகக் கொள்வதில் பிழை இல்லை
> அல்லவா ?

பிஞ்ஞை - பிஞ்சி - முற்றாத ( இளைய ) காய்.

'சித்தி' தெலுங்கில் 'பின்னி', அம்மாவுக்குப் பின் பிறந்ததால்.

Madhurabharathi

unread,
Apr 30, 2010, 4:19:10 AM4/30/10
to mint...@googlegroups.com

2010/4/30 devoo rde...@gmail.com

முன்னை – ஸ்ரீதேவி
பின்னை – நீளாதேவி
பிஞ்ஞை என்பதை பின்னையின் மறுவடிவமாகக் கொள்ளலாம்.
 
பிஞ்ஞை என்பது பின்னை என்பதின் மரூஉதான். சரி, முன்னையை ஏன் முஞ்ஞை என்பதில்லை :-)
 
லெக்ஸிகன்:
 
1. பிஞ்ஞை piññai : (page 2650)

[சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக் கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச. 1, 7).

பிஞ்ஞை piññai

, n. < பின்னை. A consort of Kṛṣṇa. See நப்பின்னை. மாமணிவண்ணனும்... பிஞ்ஞையும் (மணி. 19, 65).

அன்புடன்
மதுரபாரதி

--

Dr M.D.Jayabalan

unread,
May 1, 2010, 11:04:30 PM5/1/10
to மின்தமிழ்
இன்று சித்திரைத் திருவிழா தொடங்கியது. [செய் வினை]

இத்துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் பட்டது. [செயப்பாட்டு வினை]

இவ்விழாவின் தொடக்கம் [ noun]அனைவரையும் ஈர்த்தது.

இவ்விடத்தில் ‘தொடங்கம்’ என்று பயன்படுத்த முடியாது.

இன்றைய நிகழ்ச்சிகளை அவர் தொடங்கி / தொடக்கி வைத்துப் பேசினார்.

இவை கருத்து-மறுபரிசீலனைக்காகத்தான்.

இவ்விவாதத்தின் தொடக்கத்தில், ‘நம்பு -- நப்பு; அம்பு -- அப்பு என்ற
திருபு பற்றி மேலும் ஒரு எடுத்துக்காட்டு: ‘அம்புலிங்கம் --
அப்புலிங்கம்.’

திரு என்.கணேசன் அவர்களின் 29 ஆம் தேதியிட்ட விளக்கம் மிகவும்
பொருத்தமானது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டு: கரும்பு + சாறு = கருப்பஞ்சாறு.

அன்புடன்

எம்.டி.ஜெயபாலன்

On Apr 29, 8:00 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/4/29 Dr M.D.Jayabalan <jayabalanmdjchey...@gmail.com>

>
>
>
> > இக்கருத்து புதியதொரு விவாதத்தைத் தொடங்கி (தொடக்கி?  தொடங்கு= தொடக்கு
> > சமம் என்பது என் கருத்து)
>
> தொடங்கி வைக்கும், தொடக்கி வைக்கும் இரண்டுமே சரி.  ஒன்ற செய்வினை, இன்னொன்று
> செயப்பாட்டு வினை.  (அதென்ன செய்வினை, ஏவல் பில்லி சூனியம் என்றொருவர்
> நகப்புகுவார், நகா நிற்பார் என்பதனால், புரியற மாதிரி சொல்றேன் ஒன்று Active
> voice இன்னொன்று Passive voice.
>
> இரண்டுமே சரிதான்.  துவங்கி என்பதுதான்........சரி வேணாம் ...விட்டுட்டேன்.
>  மலேசியாலேந்து பாம் வந்து விழும்.  எனக்கு வேணாம் இந்த ஆட்டம்.  :D
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

LNS

unread,
Aug 30, 2010, 11:04:41 PM8/30/10
to Madhurabharathi, minT...@googlegroups.com
நப்பின்னையை குறித்து வைணவ ஆசாரியாரான ஸ்ரீ் (டாக்டர்) கெ கெ எ
வெங்கடாசாரியார் கட்டுரை ஒன்று 1998-ல் எழுதினார். அதில் அவர் நப்பின்னை
என்பவள் கணணனின் மாமன் மகளான நக்நஜீதி என்று நிரூபிக்கிறார். கட்டுரை
விபரம் கீழ்வருமாறு :

KKA Venkatachari, Nappinnai:Consort of Krishna : A Study of Tamil
Tradition, Journal of the Ananatacharya Indological Institute, Vol I,
1998, p. 147.

LNS

On Apr 29, 10:53 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/4/29 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>

> >  ஆமாம் நப்பின்னை என்றால் என்ன?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> 2004ல் நப்பின்னை குறித்து நான்

> மதுரமொழி<http://mail.google.com/mail/://mozhi.blogspot.com>யில்
> எழுதியது <http://mozhi.blogspot.com/2004/06/blog-post_10.html>:
>
> *யாரந்த நப்பின்னை? <http://mozhi.blogspot.com/2004/06/blog-post_10.html>*

>
> விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம்
> கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே
> இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.
>

> திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை
> அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள்
> நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும்
> சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த
> கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன்
> மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு
> அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன்
> துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும்
> (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே
> அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.
>
> அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித்
> அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும்
> நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர்.
> இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?
>
> சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான்.
> அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக்
> கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு
> தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட
> வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று.
> பாடல் இதோ:
>

> *பூணித் தொழுவினிற் புக்குப்

> புழுதியளைந்த பொன்மேனி
> காணப் பெரிதும் உகப்பன்
> ஆகிலும் கண்டார் பழிப்பர்
> நாண் இத்தனையும் இலாதாய்!
> நப்பின்னை காணிற் சிரிக்கும்
> மாணிக்கமே என் மணியே!

> மஞ்சனம் ஆடநீ வாராய்!*
>
> (*நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160*)

>
> [பூணி - பசு]
>
> மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று
> சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில்.
> மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.
>
> சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது.
> காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல்
> வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய
> நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை
> உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து
> வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய
> ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க
> அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து
> விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு
> தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.
>
> "இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு
> இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக்
> கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.
>

> *மகளை நோக்கி "மனம் மயங்காதே!

> மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
> கண்ணகியும் தான் காண
> ஆயர் பாடியில் எருமன்றத்து
> மாயவனுடன் தம்முன் ஆடிய
> வாலசரிதை நாடகங்களில்
> வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
> குரவை ஆடுதும் யாம்" என்றாள்

> கறவை கன்று துயர் நீங்குக எனவே*
>
> (*சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை*)

>
> [தம்முன் - தன் முன்னவனான பலராமன்]
>
> எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக்
> குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று
> கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.
>

> மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் ...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 30, 2010, 11:08:08 PM8/30/10
to மின்தமிழ்

On Aug 30, 10:04 pm, LNS <lns25...@gmail.com> wrote:
> நப்பின்னையை குறித்து வைணவ ஆசாரியாரான ஸ்ரீ் (டாக்டர்) கெ கெ எ
> வெங்கடாசாரியார் கட்டுரை ஒன்று 1998-ல் எழுதினார். அதில் அவர் நப்பின்னை
> என்பவள் கணணனின் மாமன் மகளான நக்நஜீதி என்று நிரூபிக்கிறார். கட்டுரை
> விபரம்  கீழ்வருமாறு :
>
> KKA Venkatachari, Nappinnai:Consort of Krishna : A Study of Tamil
> Tradition, Journal of the Ananatacharya Indological Institute, Vol I,
> 1998, p. 147.
>
> LNS
>

இன்னும் இருக்கிறாரா?

மு. ராகவையங்கார் சொல்லியிருக்கிறார்.

நா. கணேசன்

> > குரவை ஆடுதும் யாம்"- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 30, 2010, 11:15:20 PM8/30/10
to மின்தமிழ்
ந² na
, part. A particle (a) denoting excellence, as நப்பின்னை, நக்கீரன்,
நக்கடகம்; சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன். 420, மயிலை.): (b)
expressing abundance, excess; மிகுதிப்பொரு ளுணர்த்தும் இடைச்சொல்.
நக்கரைந்துபோம் இத்தனை (திவ். திருநெடுந். 7, வ்யா. 59).

(இந்த) ந + பின்னை = நப்பின்னை

> > > மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages