சங்ககாலப் பாடல்களில் மணலுடன் ஒப்பிட்டு நீண்டநாள் வாழவேண்டும் என்னும் வாழ்த்து மற்றும் நிறைய எனப் பொருள்படும் வகையில் சில பாடல்களில் காணப்படுகின்றது. அப்பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
புறநானூறு - 9
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே
இங்கே பஃறுளி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே முந்நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கலாம்.
பதிற்றுப் பத்து- ஐந்தாம் பத்து
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!
காஞ்சி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே தீம் நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
சிலப்பதிகாரம் - நடுகல் காதை
நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!
அகநானூறு 93
தண் ஆன்பொருநை மணலினும் பலவே
புறநானூறு 387
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
ஆன்பொருநை ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது
புறநானூறு 55
செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!
இங்கே கடற்கரை மணல் குறிப்பிடப்படுகின்றது.
புறநானூறு 43
சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
காவிரி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது.
புறநானூறு 136
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.
துறையூர் ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. (காவிரியுடன் கலக்கும் சிற்றாறுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.)
இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்கள் முழுமையாக்க் கீழே தரப்பட்டுள்ளது.
புறநானூறு - 9 - பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப்பெருவழுதியை
நெட்டிமையார்
பாடியது
ஆவு
மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும்
பிணியுடை யீரும் பேணித்
தென்புல
வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற்
புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு
கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு
நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று
மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ
வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப்
பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர்
விழவி னெடியோன்
நன்னீர்ப்
பஃறுளி மணலினும் பலவே
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
இத்தொடரும்
சிலப்பதிகாரம் - வஞ்சின மாலையில் வரும்
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க
எனும் தொடரும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
பதிற்றுப்
பத்து- ஐந்தாம் பத்து - கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர்
பாடியது
பைம்
பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒள்
நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல்
அரும் பல் புகழ் நிலைஇ,
நீர்
புக்கு,
கடலொடு
உழந்த பனித் துறைப் பரதவ!
'ஆண்டு
நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர்
கொள்ளாப்
பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா
வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல்
இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய
சாயல், வணங்கா ஆண்மை,
முனை
சுடு கனை எரி எரித்தலின்,
பெரிதும்
இதழ்
கவின் அழிந்த மாலையொடு,
சாந்து
புலர்
பல்
பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ
நின்
மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி
புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில்
வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை,
மேவரு
சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம்
புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம்
பெருந் துறை மணலினும் பலவே!
சிலப்பதிகாரம்
- நடுகல் காதை
செங்குட்டுவனை
மாடலன் வாழ்த்தியது
புரையோர்-தம்மொடு
பொருந்த உணர்ந்த
அரைசர்
ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண்
ஆள் வேந்தே! நின் வாழ்நாட்கள்
தண்
ஆன்பொருநை மணலினும் சிறக்க!
அகநானூறு
93 - வினை முற்றி மீளலுறும்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார்
நக்கீரனார்
கேள்
கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள்
அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு
எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங்
கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்
கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல்
அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல்
அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண்
பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா
வேம்பின், வழுதி கூடல்
நாள்
அங்காடி நாறும் நறு நுதல்
நீள்
இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை
குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை
முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த
பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
நலம்
கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
முயங்குகம்
சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம்
திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி
மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள்
கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
கடும்
பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
திரு
மா வியல் நகர்க் கருவூர் முன்துறை
தெண்
நீர் உயர் கரைக் குவைஇய
தண்
ஆன்பொருநை மணலினும் பலவே.
(இங்கே கோதை எனும் அரசன் குறிப்பிடப்படுகின்றான். கருவூர் குறிப்பிடப்படுகின்றது .
இங்கே பொருநை ஆறு ஓடுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கணக்காயனார்
மகனார் நக்கீரனார் பாடிய மற்றைய அரசர்களை வைத்து கோதை பற்றிப்
பார்க்கவேண்டும்)
புறநானூறு 55 - பாண்டியன் இலவந்திகைப்
பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
ஓங்கு
மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு
கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு
விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை
மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை
நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து
மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ்
சினத்த கொல் களிறும்;
கதழ்
பரிய கலி மாவும்,
நெடுங்
கொடிய நிமிர் தேரும்,
நெஞ்சு
உடைய புகல் மறவரும், என
நான்குடன்
மாண்டதுஆயினும், மாண்ட
அற
நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்'
எனக்
கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று
அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள்
அன்ன தண் பெருஞ் சாயலும்,
வானத்து
அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை
ஆகி, இல்லோர் கையற,
நீ
நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண்
தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு
வேள் நிலைஇய காமர் வியன் துறை,
கடு
வளி தொகுப்ப ஈண்டிய
வடு
ஆழ் எக்கர் மணலினும் பலவே!
(ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
இங்கே பாற்கடல் கடந்த செயலையும்
சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவை
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
....................................
வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே
சிலப்பதிகாரம் கூறுவதையும் ஒப்பிடலாம்.
சிலப்பதிகாரம் குன்றக் குரவை
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே)
புறநானூறு 387 - சேரமான் சிக்கற்பள்ளித்
துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
வள்
உகிர வயல் ஆமை
வெள்
அகடு கண்டன்ன,
வீங்கு
விசிப் புதுப் போர்வைத்
தெண்
கண் மாக் கிணை இயக்கி,
'என்றும்
மாறு
கொண்டோர் மதில் இடறி,
நீறு
ஆடிய நறுங் கவுள,
பூம்
பொறிப் பணை எருத்தின,
வேறு
வேறு பரந்து இயங்கி,
வேந்துடை
மிளை அயல் பரக்கும்
ஏந்து
கோட்டு இரும் பிணர்த் தடக் கை,
திருந்து
தொழில் பல பகடு
பகைப்
புல மன்னர் பணிதிறை தந்து,
நின்
நகைப்
புலவாணர் நல்குரவு அகற்றி,
மிகப்
பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,
யான்
இசைப்பின், நனி நன்று எனா,
பல பிற
வாழ்த்த இருந்தோர் என்கோ?.........
மருவ
இன் நகர் அகன்.................................
திருந்து
கழல் சேவடி குறுகல் வேண்டி,
வென்று
இரங்கும் விறல் முரசினோன்,
என்
சிறுமையின், இழித்து நோக்கான்,
தன்
பெருமையின் தகவு நோக்கி,
குன்று
உறழ்ந்த களிறு என்கோ?
கொய்
உளைய மா என்கோ?
மன்று
நிறையும் நிரை என்கோ?
மனைக்
களமரொடு களம் என்கோ?
ஆங்கு
அவை, கனவு என மருள, வல்லே,
நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
ஊழி
வாழி, பூழியர் பெரு மகன்!
பிணர்
மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக்
கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத்
தெவ்வர் உயர்குடை பணித்து,
இவண்
விடுவர்
மாதோ நெடிதே நி
புல்
இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென்
பொருநை மணலினும், ஆங்கண்
பல்
ஊர் சுற்றிய கழனி
எல்லாம்
விளையும் நெல்லினும் பலவே.
(இங்கே செல்வக் கடுங்கோ வாழியாதன் குறிப்பிடப்படுகின்றான். புல் இலை வஞ்சி எனக் குறிப்பிடப்படுவதால் வஞ்சி மரமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்… வஞ்சி ஊர் எனக் கொள்ளலாமா தெரியவில்லை. இங்கே பொருநை ஆறு ஓடுவதாக்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பூவா வஞ்சி - ஊர்
புல்லிலை வஞ்சி – மரம்??
பூத்த வஞ்சி - பூ
)
புறநானூறு 43 - சோழன் நலங்கிள்ளி தம்பி
மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை,
என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
நிலமிசை
வாழ்நர் அலமரல் தீர,
தெறு
கதிர்க் கனலி வெம்மை தாங்கி,
கால்
உணவு ஆக, சுடரொடு கொட்கும்
அவிர்சடை
முனிவரும் மருள, கொடுந்சிறைக்
கூர்
உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து,
ஒரீஇ,
தன்
அகம் புக்க குறு நடைப் புறவின்
தபுதி
அஞ்சிச் சீரை புக்க
வரையா
ஈகை உரவோன் மருக!
நேரார்க்
கடந்த முரண் மிகு திருவின்
தேர்
வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர
மறவர் பெரும! கடு மான்
கை வண்
தோன்றல்! ஐயம் உடையேன்:
'ஆர்
புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார்
நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ
நினக்கு?' என வெறுப்பக் கூறி,
நின்
யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ
பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப்
பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக்
குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்'
என,
காண்தகு
மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே
பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்
மிக்கு
வரும் இன் நீர்க் காவிரி
எக்கர்
இட்ட மணலினும் பலவே!
புறநானூறு 136 அவனைத் (ஆய்
அண்டிரன்)
துறையூர் ஓடைகிழார் பாடியது.
யாழ்ப்
பத்தர்ப் புறம் கடுப்ப
இழை
வலந்த பல் துன்னத்து
இடைப்
புரை பற்றி, பிணி விடாஅ
ஈர்க்
குழாத்தோடு இறை கூர்ந்த
பேஎன்
பகை என ஒன்று என்கோ?
உண்ணாமையின்
ஊன் வாடி,
தெண்
நீரின் கண் மல்கி,
கசிவுற்ற
என் பல் கிளையொடு
பசி
அலைக்கும் பகை ஒன்று என்கோ?
அன்ன
தன்மையும் அறிந்து ஈயார்,
'நின்னது
தா' என, நிலை தளர,
மரம்
பிறங்கிய நளிச் சிலம்பில்,
குரங்கு
அன்ன புன் குறுங் கூளியர்
பரந்து
அலைக்கும் பகை ஒன்று என்கோ?
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'
எனக்
கருதி, பெயர் ஏத்தி,
வாய்
ஆர நின் இசை நம்பி,
சுடர்
சுட்ட சுரத்து ஏறி,
இவண்
வந்த பெரு நசையேம்;
'எமக்கு
ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு
ஈவோர் தமக்கு ஈப' என,
அனைத்து
உரைத்தனன் யான் ஆக,
நினக்கு
ஒத்தது நீ நாடி,
நல்கினை
விடுமதி, பரிசில்! அல்கலும்,
தண்
புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண்
பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.
(குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் - இங்கே குரங்கு போன்ற கூளியர் என்று
கூறப்படுபவர்களுக்கும் புறநானூறு 378 கூறும் குரங்கு மற்றும் இராமாயணத்தில் வரும்
வானரர்களுக்கும் தொடர்புண்டா எனப் பார்க்கவேண்டும்.
கடுந் தெறல்
இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,)
நன்றி,
முகுந்தன்
சங்ககாலம் - மணலினும் பலவே
சங்ககாலப் பாடல்களில் மணலுடன் ஒப்பிட்டு நீண்டநாள் வாழவேண்டும் என்னும் வாழ்த்து மற்றும் நிறைய எனப் பொருள்படும் வகையில் சில பாடல்களில் காணப்படுகின்றது. அப்பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் :எனக் கேட்டிருந்தேன்..
सतसहसानि , सतसहसेहि - ஸதஸஹஸேஹி - நூறாயிரம்
(http://www.jatland.com/home/Hathigumpha_inscription)
ஸஹ - சக - ஆயிரம் - சகர்கள் எனக் கூறப்படுபவர்களாக இருக்கலாமா?
ஸஹஸ்ரம். இது சாசிரம்/சாயிரம் என்றாகி தமிழில் ஆயிரம் என வந்த வடசொல் ஆகும்.ஸபை > அவை போல, ஸஹஸ்ர- > ஸாயிரம் > ஆயிரம்.ஸஹஸ்ரம் என்னும் எண்ணுப்பெயருக்கும் சகர்கள் (உ-ம்: சாக்கிய நாயனார். போதிதருமரும் சாக்கியர் தான்.சீன ஆவணங்கள் Aryan demon with blue eyes என போதிதருமரை வர்ணிக்கின்றன.) என்னும் இனத்தாருக்கும் தொடர்பில்லை.சகர்கள் < ஶக- சாக்கிய நாயனார் < ஶாக்ய நாயனார்.ஸஹஸ்ரம் வேறு, ஶக-, ஶாக்ய வேறு.ஶகர்கள் (சகர்கள்): பற்றி அறிமுகம்: https://en.wikipedia.org/wiki/Saka
சகர் (சாகர்) வேறு சாக்கியர் வேறு..புத்தர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். நான் கூறவருவது இராம.கி ஐயா குறிப்பிட்ட இந்தோ-சித்திய சகர் எனும் நாடோடி இனத்தவரை.
https://en.wikipedia.org/wiki/Saka
https://en.wikipedia.org/wiki/Shakya
I've given the entry on 'Saka tribes in my earlier mail.
ஶக- என்னும் குலத்தைத் சார்ந்ததால் ஶாக்யமுனி எனப்படுகிறார் புத்தர். அதனைத்தான் குறிப்பிட்டேன்: சளுக்கர் என்னும் குலம் சம்ஸ்கிருதத்தில் சாளுக்ய என்றாகும். அதுபோல், ஶக என்னும் குலப்பெயர் ஶாக்ய- என்றாகிறது.
நா. கணேசன்
அன்பின் கணேசன் ஐயா,உங்கள் கருத்துப்படி சகர், சாக்யர் இருவரும் ஒன்று எனக் கூறுகின்றீர்களா?
மற்றும்படி வேர்ச்சொல் அறிவு எனக்கு இல்லை. ஆயிரம் - சாயிரம் - சகஸ்ரம் எங்கிருந்து எங்கே சென்றது என எனக்குத் தெரியாது..
ஶாக்ய, ஶக- இவ்வார்த்தைகளுக்கும் நீங்கள் சொல்லிய ஸஹஸ்ர (> சாயிரம் > ஆயிரம்) எண்ணுப்பெயருக்கும் தொடர்பில்லை.
ஶாக்ய, ஶக- இவ்வார்த்தைகளுக்கும் நீங்கள் சொல்லிய ஸஹஸ்ர (> சாயிரம் > ஆயிரம்) எண்ணுப்பெயருக்கும் தொடர்பில்லை.இதில் வரும் ஸஹ (பாகதம்) என்பது ஆயிரம் என்று வருமாயின் சகர் - ஆயிரவர் என வரலாம் தானே?. ஏன் தொடர்பில்லை எனக் கூறுகின்றீர்கள்?
நீங்களும் தமிழ் இலக்கியம், அதன் இலங்கை வரலாற்றுத் தொடர்புகள், ஒப்பீட்டு பனுவலியல், மொழியியல், இலக்கிய நுட்பங்கள் தரும் செய்திகள், ....
என *ஆங்கிலத்தில்* செந்தமிழ் (Classical Tamil) குழுவில் எழுதலாமே. https://listes.services.cnrs.fr/wws/info/ctamil வரவேற்பர். யானும் பின்னூட்டங்கள் தர முயல்வேன்.
Note this is not saha, but more letter is needed for 1000 which is there.
நாகரத்தில் எழுதியிருப்பதில் இருந்து சக என்றால் 1000 என்று எடுக்கலாமா????
நன்றி