இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

726 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 3:42:37 AM8/31/08
to minT...@googlegroups.com
இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 - 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு - வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த - நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் - என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின - விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் - காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின - காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் - விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின - இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் - கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின - கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் - இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
இராமன்
உடன் புணர் - உடன் வாழும்
சீதையை
வலித்தகை - வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் - இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை - கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி - நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை - கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு - அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை - (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே - இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. 'இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது' என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே 'தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்' சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

Hari Krishnan

unread,
Aug 31, 2008, 5:45:56 AM8/31/08
to minT...@googlegroups.com


2008/8/31 Kumaran Malli <kumara...@gmail.com>

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று
 
நீங்கள்தானே என்னுடைய ராமாயணக் கட்டுரைகளைப் பற்றி எழுதியவர்?  ராமாயணத்தின் காலத்தைக் குறித்து விவாதிக்கும் சமயத்தில் இந்தப் புறநானூற்றுப் பாடலை எடுத்து எழுதியிருக்கிறேன். 
 
சங்கப் பாடலில் இவ்வாறு பத்துக்கு மேற்பட்ட இடங்களில், எல்லா இடங்களிலும் உவமையாக மட்டுமேயே ராமாயண நிகழ்வுகள் பேசப்பட்டுள்ளன.  ராவணன் அரக்கன் என்று இந்தப் பாடல் மட்டுமன்றி, கலித்தொகையும் பேசுகிறது:
 
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;
 
கலித்தொகை, பாடல் 38, குறிஞ்சிக் கலி, இயற்றிவர் கபிலர்.
 
இமய மலையை வில்லாக(வும் வாசுகியை நாணாகவும், திருமாலை பாணமாகவும்) வளைத்த சடாமுடி தாங்கியவனும், உமையும் அமர்ந்திருந்த உயர்ந்த மலையை, ஐயிரண்டு (பத்து) தலைகளை உடையவனும் அரக்கர்களின் அரசனுமான (ராவணன்) கடகங்கள் செறிந்த தன்னுடைய கைகளை அம்மலைக்கு அடியில் புகுத்தி, அதனைப் பெயர்க்க முயன்றதைப் போல,
 
இதோ இந்த யானை, பூத்திருக்கும் வேங்கை மரத்தின் பருத்த அடிப்பகுதியைத் தன் தந்தங்களால் குத்திப் பெயர்க்க முயல்கிறது. 
 
இந்தப் பாடலில் வெறும் அரக்கன் என்று சொல்லமட்டும் அல்லாமல், பத்துத் தலை அரக்கன் என்ற குறிப்பையும் சொல்லியிருக்கிறார். 
 
இப்படி, சங்க இலக்கியத்தில் ராமாயணக் குறிப்புகள் மட்டுமல்லாமல் (பரிபாடலில் அகலிகையின் கதை, அகநானூற்றில் ராமனைப் பற்றிய சுவையான செய்தி, குரங்குகளைப் ப்றறிய செய்தி, சிலம்பில் 'தம்பியொடும் கான்போந்து, சோவரணும் போர்மடிய, தொல்லிலங்கைக் கட்டழி்த்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே, திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே' என்று ராமன் திருமாலின் அவதாரமே என்று அடிக்கோடிட்டு உறுதி செய்யும் ஆய்ச்சியர் குரவை, மணிமேகலையில், 'சேதுவைக் கட்டுவதற்காக குரங்குகள் பெயர்த்து வந்து எறிந்த மலைகள் எப்படிக் கடலுக்குள் போய் மூழ்கினவோ, அப்படி மலைமலையாகப் பெய்யப்படும் சோறு என் வயிற்றுக்குள் சென்று மறைகின்றது' என்று பேசும் காயசண்டிகையைக் காட்டும் உலக அறவி புக்க காதை என்று சொல்லிக் கொண்டே போகலாம்) எல்லாமும் தவிர, தமிழில் தனியாக ஆசிரியப்பாவில் ஒரு ராமாயணமே சங்க காலத்தில் இருந்திருக்கிறது.  தொல்காப்பியத்துக்கு நச்சினார்க்கினியர் செய்த உரையில் அந்த ராமாயணத்திலிருந்து சில பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
 
சங்ககாலம் என்பது 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்றால்,
 
வடக்கே சுமார் 1500 கிலோமீட்டர்களுக்கும் மேற்பட்ட தொலைவில் இயற்றப்பட்ட காதை, நடைப் பயணமாக ஊரெங்கும் சுற்றித் திரிந்த பாணர்களால் சுமந்து வரப்பட்டு, நாடெங்கும் பேசப்பட்டு, மக்களுடைய மனத்திலும், இந்த மண்ணிலும் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக மாற, வேர்பிடித்து நிற்க, உவமைகளாகச் சொன்னால் மக்களால் எளிதில் புரிந்துகொள்ளத் தக்கதாக இருக்கும் அளவில் பேசப்பட, சங்ககாலத்துக்கும் சுமார் (குறைந்தது) 1000 ஆண்டுகளாவது முற்படத் தொடங்கிப் பரவ ஆரம்பித்திருந்தாலன்றோ சாத்தியம்.
 
இன்டர்நெட், தொலைத் தொடர்பு, போக்கு வரத்து வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு காதை மண்ணில் வேர்பிடிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்.  யோசித்தால் புரியும். 
 
வனத்தில் இருந்த நரம் வானரம் என்று டிஃபைன் செய்தால், அதற்கு வால் இருந்திருக்கிறதே, அதை என்ன செய்யலாம்.  அந்த வாலைப் பற்றிய குறிப்புகளையும் ராமாயணம் தருகிறதே அதை என்ன செய்யலாம்?
 
இதிகாசங்களும் நம் சொத்தில் ஒரு பகுதிதான்.  இதை மறக்காமல் இருப்பது நம் பண்பாட்டுக்கு நல்லது. 



--
அன்புடன்,
ஹரிகி.

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 10:46:16 AM8/31/08
to minT...@googlegroups.com

ஹரியண்ணா.

ஆமாம். தங்கள் இராமாயணக்கட்டுரைகளைப் பற்றி அண்மையில் சொன்னவன் நான் தான். அக்கட்டுரைகளை முன்பு படிக்கும் போது இலக்கியச் சுவைக்காக மட்டுமே படித்தேன். அண்மைக்காலத்தில் தான் 'இலக்கியத்தில் இறை' என்று ஒரு தொடர் எழுதுவதற்காக ஆய்வு நோக்கில் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். இப்போது மீண்டும் உங்கள் கட்டுரைகளைப் படித்தால் என் தொடருக்கு உதவும் பல செய்திகள்/தரவுகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவற்றை எங்கே படிக்கலாம் என்று கூறுங்கள்.

'ஐயிரு தலையின் அரக்கர் கோமான்' என்று இராவணனைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடலினை இந்தக் கட்டுரையை என் வலைப்பதிவில் இட்ட போது ஒரு அன்பர் பின்னூட்டமாக இட்டார். அப்போது அறிந்து கொண்டேன்.

பரிபாடலில் அகலிகைக் கதை வருவதை எடுத்துக் காட்டி சென்ற வாரம் தான் ஒரு கட்டுரையை என் வலைப்பதிவில் இட்டேன். நீங்கள் தந்துள்ள மற்ற குறிப்புகளையும் அறிவேன்; ஆனால் நீங்கள் சொன்ன முறையில் தொடர்புறுத்திப் பார்த்ததில்லை. 'இராமன் என்று தானே சங்க பாடல் குறிக்கிறது? திருமால் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லையே?!' என்றொரு கேள்வி அண்மையில் இங்கே மின் தமிழிலேயே வைக்கப்பட்டது. அந்த அன்பர் சிலம்பின் ஆய்ச்சியர் குரவையிலிருந்து தாங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் தரவைப் படிப்பார் என்று நம்புகிறேன்.

தங்களின் வழிகாட்டுதல்களுக்கு மிக்க நன்றி.

அன்பன்,
குமரன்.

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2008, 12:31:16 PM8/31/08
to minT...@googlegroups.com


2008/8/31 Kumaran Malli kumara...@gmail.com

 

கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
 

இராமன்
 
 
 
கடும்தேறல் வேறு 
கடுந்தெறல் வேறு. = மிக்க சினம் கொண்டவன்
 
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Hari Krishnan

unread,
Aug 31, 2008, 12:43:42 PM8/31/08
to minT...@googlegroups.com


2008/8/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



2008/8/31 Kumaran Malli kumara...@gmail.com
 

கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
 

இராமன்
 
 
 
கடும்தேறல் வேறு 
கடுந்தெறல் வேறு. = மிக்க சினம் கொண்டவன்
 
மிகச் சரி.  இந்தப் பிழையை நானும் கவனிக்கவில்லை.   கடுந்தெறல் என்பதற்குக் கடுஞ்சினத்துடன் 'போரில் ஈடுபடுபவனான' என்று இந்த இடத்தில் பொருளை வருவித்துக்கொள்ள வேண்டும்.
 
அனுமன்:வார்ப்பும் வனப்பும் என்றொரு நூலை நான் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  ராமாயணப் பாத்திரப் படைப்புகளை (character study) ஆயும் வரிசையில் முதல் நூல்.  அதன் தொடக்க அத்தியாயத்தில் இந்தப் பாடலை, இதன் சூழலுடன் விளக்கி எழுதியிருக்கிறேன்.  அந்தப் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்:
 
புறநானூற்றின் 378ஆவது பாடலில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.  சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடுகிறார்.  மன்னனைக் காண ஒரு பாணன்-பாணி கூட்டம் வந்திருக்கிறது.  பாட்டுப் பாடுபவர்கள்.  மன்னன் மகிழ்ந்து போய் அவர்களுக்கு நிறைய பொன்னும் ஆபரணங்களும் தருகிறான்.  பாணர்கள் பாவம்.  அவர்கள் இதற்கு முன்னால் அணிகலன்களைப் பார்த்தில்லை.  அளவைப் பார்த்துப் பார்த்து அணிகலன்களைப் பூட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.  எப்படி?  மோதிரத்தை எடுத்துக் காதில்; காதில் அணிய வேண்டிய வளையத்தை விரலில்; இடுப்பில் அணிய வேண்டியதைக் கழுத்தில்; கழுத்தில் அணிய வேண்டியதை இடுப்பில்..... சிரிக்கிறார் புலவர்.  'பாவம்.  இந்த எளிய மக்கள் இதற்கு முன்஡னல் பார்த்திராத அணிகலன்களைக் கொடுத்தாய்.   முன்னே எப்போதும் பார்த்திராத நகைகளை அணியத் தெரியாமல் இவர்கள் விழிக்கிறார்களே, அது எப்படி இருக்கிறது தெரியுமா?
 
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை

நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை....
 
மிகக் கடுமையாகப் போர் புரியக் கூடிய இராமனின் துணைவியான சீதையை, இராவணன் தூக்கிச் சென்றபோது, அவள் தன்னுடைய அணிகலன்களை ஒரு துணியில் பொதிந்து பூமியில் நின்றுகொண்டிருந்த வானரங்களுக்கு மத்தியில் வீசினாள்.  அந்த அணிகலன்களை எடுத்த குரங்குகள், துணி மூட்டையைப் பிரித்துப் பார்த்து, அணிகலன்களைக் கண்ணுற்று, மேனியில் அணிவதற்கானவை இவை என்பதை மட்டும் அறிந்து, இப்படித்தான் கைக்குப் போட வேண்டியதைக் காதிலும், காதுக்குப் போட வேண்டியதைக் கையிலும் மாற்றி மாற்றி அணிந்துகொண்டன.

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 1:14:10 PM8/31/08
to minT...@googlegroups.com
பிழை திருத்தத்திற்கு மிக்க நன்றி வேந்தன் அரசு ஐயா. என் பதிவிலும் மாற்றிவிடுகிறேன்.

Kumaran Malli

unread,
Aug 31, 2008, 1:21:21 PM8/31/08
to minT...@googlegroups.com
தங்கள் நூலிலிருந்து இந்தப் பகுதியை எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி ஹரியண்ணா. அடுத்த முறை தமிழகம் வரும் போது வாங்க வேண்டிய நூற்கள் பட்டியலில் தங்கள் நூலும் இருக்கிறது.

On 8/31/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
2008/8/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


2008/8/31 Kumaran Malli kumara...@gmail.com
 

கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
 

இராமன்
 
 
 
கடும்தேறல் வேறு 
கடுந்தெறல் வேறு. = மிக்க சினம் கொண்டவன்
 
மிகச் சரி.  இந்தப் பிழையை நானும் கவனிக்கவில்லை.   கடுந்தெறல் என்பதற்குக் கடுஞ்சினத்துடன் 'போரில் ஈடுபடுபவனான' என்று இந்த இடத்தில் பொருளை வருவித்துக்கொள்ள வேண்டும்.
 
அனுமன்:வார்ப்பும் வனப்பும் என்றொரு நூலை நான் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  ராமாயணப் பாத்திரப் படைப்புகளை (character study) ஆயும் வரிசையில் முதல் நூல்.  அதன் தொடக்க அத்தியாயத்தில் இந்தப் பாடலை, இதன் சூழலுடன் விளக்கி எழுதியிருக்கிறேன்.  அந்தப் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்:--

ஜடாயு

unread,
Aug 31, 2008, 2:00:23 PM8/31/08
to மின்தமிழ்
அன்புள்ள குமரன், அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இராமாயணம் பற்றிய
பழந்தமிழ் இலக்கியக் குறீப்புகள் பற்றிப் பலரும் இது போன்று
எழுதியிருக்கிறோம்.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இதே பாடலைப் பற்றீ
ஒரு வருடம் முன்பு அரவிந்தன் நீலக்ண்டன் எழுதியிருக்கிறார் -
http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html
இத்தகைய குறிப்புகளை கோர்வையாகத் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிட
வேண்டும்.. அது ஒரு சிறந்த தமிழ்ப்பணி மற்றும் தெய்வத் தொண்டாகவும்
இருக்கும்.

// அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து
சொன்னவைகளை அப்படி எளிதாக
புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக
இப்படி ஒரு
புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. //

ஒரு பாடலா? தமிழ் இலக்கியம் முழுவதும் அன்று தொட்டு இன்றூ வரை இராமனைத்
தெய்வம் என்றும் இராவணனை அரக்கன் என்றும் தான் கூறிவந்திருக்கின்றன...
வைணவ திவ்வியப் பிரபந்தம் மட்டுமல்ல, சிலப்பதிகாரம், மணிமேகலை, சைவத்
திருமுறைகள், திருப்புகழ் வரை இராமாயணம் பற்றிய பார்வை இப்படித் தான்
ஒரே மாதிரியாகத் தான் இருந்திருக்கிறது.. இந்த இலக்கியக் குறிப்புகளைத்
தொகுத்தளிக்கும் எனது பழைய கட்டுரை ஒன்று -

தமிழர் திருமகன் இராமன்: http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html

இந்த விஷயத்தில் "ஆராய்ந்து சொன்னவைகள்" என்று நீங்கள் குறிப்பிடும்
விஷயங்கள் வெறுப்பியல், இனவாதம், மொழிவெறி இவற்றின் கலவையால் குழம்பிய
ஒரு சாரார் எழுதிய சிறிதும் ஆதாரமில்லாத கருத்துக்கள் தான், அதில்
சந்தேகமே இல்லை... இவற்றில் பெரும்பான்மை தோமா கிறிஸ்தவம் பற்றிய
தற்போதைய கிறிஸ்தவ புளுகுகளுக்கு நிகரானவை... சைவ நூல்களில் "ஏசு"
இருப்பதாக சொல்லும் கிறிஸ்தவ ஜல்லிக்கும், திருக்குறளில் கொட்டுக்
கிடக்கும் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள் அனைத்திற்கும்
ம்கா காமெடித் தனமாக "பகுத்தறிவு" பொருள் கூறி ஒரு கால கட்டத்தில்
எழுதப்பட்ட "திராவிட" உரைகளுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை....
இரண்டுமே உள்நோக்கம் கலந்த திரிபுவாதங்கள் தாம்.

அவற்றை எளிதாக "புறம் தள்ள" வேண்டிய அவசியமே ல்லை... தெளிவான, எளிய
அடிப்படை ஆதாரங்கள் மூலம் அவற்றை சுக்குநூறாக உடைத்தே எறிந்து விடலாம்.
சொல்லப்போனால் இந்த "ஆராய்ச்சிகள்" வந்த காலத்திலேயே அத்தகைய ஆதாரங்கள்
உண்மையான தமிழறிஞர்களால் தரப்பட்டன, மிக உறுதியான வாதங்களும் வைக்கப்
பட்டன... ஆனால அந்த எதிர்த்தரப்புகளை நேர்மையாக எதிர்கொண்டு அல்ல, மாறாக
இழித்தும், பழித்தும் முத்திரை குத்தியுமே தமிழ் பொதுப்புத்தியில்
இத்தகைய "ஆராய்ச்சிகள்" ஏற்றப் பட்டன, அதுவும் வரலாற்றில் பதிவு செய்யப்
பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... அந்த உடைபட்ட வெற்று
வாதங்கள் தான் மறுபடி மறுபடி அதே வழிமுறைகளையே பயன்படுத்தி வைக்கப்
படுகின்றன - ஒரு மாநில முதல்வரே அந்தப் புளுகுகளில் சிலவற்றை
அவ்வப்போது ஒருவிதமான அம்னீஷியாவுடன் எடுத்துவிடும்போது, வலைப் பதிவு
"நண்பர்கள்" செய்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

Narayanan Kannan

unread,
Aug 31, 2008, 7:07:00 PM8/31/08
to minT...@googlegroups.com
On 8/31/08, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:

>> தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது.

நூல் நயமறியும் திறத்தோர் இப்படியெல்லாம் பிறழ்பட பொருள் கொள்ள மாட்டார்கள் ;-)

சூரிச்சில் நடந்த கம்பன் விழாவில் சுகி சிவம் அவர்கள் கம்பனின்
பாத்திரப்படைப்புகள் பற்றிச் சொல்லும் போது, தெய்வம், மனிதன், விலங்கு
(குரங்கு), அரக்கன் எனும் நான்கு வகை மனோநிலைகளை கம்பன் எவ்வளவு அழகாக
சித்தரித்துள்ளான் என்று விரிவாகச் சொன்னார். அதன் சுருக்கம். தெய்வம்
என்பது ஒப்பு உயர்வற்ற உயர்ந்த தனி நிலை. அதை அப்பழுக்கற்ற இராமன்
கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கின்றான். அடுத்து மனித நிலை. இது நடு
நிலை. மேலேயும் போகலாம், கீழேயும் போகலாம். எனவே மனிதருள் குரங்குண்டு,
அரக்கனுமுண்டு. விலங்கில் மனிதனுண்டு, தெய்வமும் உண்டு. அரக்கனில்
மனிதனுண்டு, விலங்குமுண்டு. இப்படி (உதாரணங்களை எளிதாக யூகிக்கலாம்).
அரக்கன் என்பது தெரிந்தே ஒரு தவறைச் செய்வது. செய்த பின் நிற்க
அதற்குத்தக என இருப்பது.

அவ்வளவுதான். தமிழர்களில் தெய்வமுண்டு, மனிதருண்டு, விலங்குகளுமுண்டு,
அரக்கர் பலவுண்டு :-)

கண்ணன்

devoo

unread,
Sep 1, 2008, 5:14:43 AM9/1/08
to மின்தமிழ்


// இதிகாசங்களும் நம் சொத்தில் ஒரு பகுதிதான்.  இதை மறக்காமல் இருப்பது
நம் பண்பாட்டுக்கு நல்லது.//


நன்றி ஹரிகி !
சங்கத் தராசை மட்டுமே வைத்துக்கொண்டு எடைபோடுவோர் உணர்ந்து கொள்ளும்
வகையில் எழுதியுள்ளீர்கள்.
விழுமியங்கள், உணர்ச்சிகள், மரபுகள், Sentiments ஆகியவை பாரதம்
முழுவதிலும் ஒன்றே !

தென்புலத்தார், தெய்வம், விருந்து ஆகியோரைப் பேணும் நெறியை இயன்றவரை
அனைவருமே பின்பற்றுகின்றனர்.

‘ஆர்ய’ சப்ததிற்கு எதிர்ப்பதம் ‘அநார்ய’ என்பதே. கீதை ‘அநார்யஜுஷ்டம்’
என்கிறது.
வரம் கேட்ட கைகேயியை தசரதர் ‘அநார்யே!’ என்று நிந்திக்கிறர்.
எங்குமே, யாரையுமே ’த்ராவிட’ பதத்தால் ஏசியதில்லை.

பாண்டிய நாட்டின் நல்முத்துகளையும், காஞ்சி மாநகரையும் வடமொழி
இலக்கியங்கள் போற்றுகின்றன.

வடமொழி நூல்களால் தமிழ் வளம் பெற்றது யாருமே மறுக்க இயலாத உண்மை.
‘அலங்கார சாஸ்த்ரம்’ தமிழுக்கு அணி செய்தது. ‘ச்லேஷை’ சிலேடையானது.
வடபுலத்திலிருந்து தமிழகம் வந்த அகத்தியனாரும், பௌத்தரும்,சமணரும்
தமிழுக்கு நன்மையே செய்தனர்.

வாழ்வில் வெறுப்புற்ற மன்னர்கள் வடக்கிருந்து உயிர் துறப்பர்;
வடபுலத்தில் இதை ‘ப்ராயோபவேசம்’ என்பர்.
‘ஸதி’ ஆவதும், எரியிடை மூழ்குவதும் இரு புலங்களிலும் உண்டு.
நடு நிசியில் மன்னரிடம் வரம்பெற்ற கைகேயி தேவர்களை ஸாக்ஷி வைத்தாள்;
கண்ணகி காய்கதிர்ச் செல்வனிடம் முறையிட்டாள்.
ஆண்மகவின் ஆயுள் வளர்ச்சிக்கு மூக்கில் துளைபோட்டு சிறு வளையம் இடுவர் ;
பெயர் பெரும்பாலும் ’மூக்கையா’ என்று இருக்கும். வட புலத்தில் ’நாது
ராம்’ என்று பெயரிடுவர்.
இரு கரம்கூப்பி வரவேற்பதும், வழியனுப்புவதும், திருஷ்டி கழிப்பதும்,
கன்னம் வழித்து விரல் நெறிப்பதும் இந்தியா முழுவதும் உண்டு.

ப்ரகாஷ்,ப்ரஷாந்த்,சரத் போன்ற பெயர்களை இந்தியா முழுவதும் காணலாம். சீனப்
பெயர்களையும், இத்தாலியப் பெயர்களையுமா வைத்துக்கொள்கிறோம்?
ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படம் ஏனைய இந்திய மொழிகளில் மறுவடிவம்
பெறக்காரணம் என்ன?

இதே காரணத்தால்தான் வடமொழி இலக்கியங்கள் தமிழில் ‘Remake’ செய்யப்பட்டன.
த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும், உபமந்யு பக்த விலாஸமும் ‘Remake’
தான்.

தேவ்

Neduchezhian T. Chezhian

unread,
Sep 1, 2008, 7:51:13 AM9/1/08
to minT...@googlegroups.com
// திருக்குறளில் கொட்டுக் கிடக்கும் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள் அனைத்திற்கும்
ம்கா காமெடித் தனமாக "பகுத்தறிவு" பொருள் கூறி ஒரு கால கட்டத்தில் எழுதப்பட்ட "திராவிட" உரைகளுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை.....//

அன்புள்ள மின்தமிழ் அன்பர்களே, வணக்கம்,
திருக்குறளில் கொட்டுக் கிடக்கும் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள் 
என நண்பர் ஜடாயு குறிப்பிட்டுள்ளார். இதில் கால முரண்பாடுகள் உள்ளன. இந்து மதம் அல்லது சமயம் என்ற ஒன்று வழக்கில் இல்லாத காலத்தில் எழுதப்பட்டது திருக்குறள். அந்த திருக்குறளில் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள் எவ்வாறு இடம் பெற்றிருக்கும்? திருக்குறளில் இந்து மதத்திற்கு அல்லது சமயத்திற்கு ஆதரவான சிந்தனைப் போக்குகள் (உலகப் பொதுதன்மையில்) அமைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. வாதிடுகிறபோது காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்

2008/8/31 ஜடாயு <jata...@gmail.com>

ஜடாயு

unread,
Sep 1, 2008, 9:30:18 AM9/1/08
to மின்தமிழ்
On Sep 1, 4:51 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> திருக்குறளில் கொட்டுக் கிடக்கும் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள்
> என நண்பர் ஜடாயு குறிப்பிட்டுள்ளார். இதில் கால முரண்பாடுகள் உள்ளன. இந்து மதம்
> அல்லது சமயம் என்ற ஒன்று வழக்கில் இல்லாத காலத்தில் எழுதப்பட்டது திருக்குறள்.

அன்புள்ள நெடுஞ்செழியன் அவர்களுக்கு, தங்கள் கருத்துப் படி இந்து
சமயத்தின் காலம் என்ன - இந்து என்ற சொல் வழங்க ஆரம்பித்த காலம் தானா?
அப்படிப் பார்த்தால் வேதங்கள், உபநிஷதம், கீதை, ராமாயணம், மகாபாரதம்
எதுவுமே இந்து நூல் அல்ல என்று வாதிடலாம் அல்லவா? ஏன் திருக்குறளோடு
நிற்க வேண்டும்?

"பண்டைய இந்திய இலக்கியம், கலை, பண்பாடு" என்று சொன்னால், 1947-ல் தானே
இந்தியா என்ற நாடு வந்தது, பின் எப்படி அதற்கு முன் எப்படி இந்திய
இலக்கியம் இருக்க முடியும் என்று கேட்பது போன்ற கேள்வி இது.

இந்து மதம் என்று இன்று நாம் அழைப்பது இந்த மண்ணில் தோன்றிச் செழித்து
வளர்ந்த "பெயரிலாப் பெருவழியாகிய" சனாதன தர்மம் என்பதைத் தானே?

> அந்த திருக்குறளில் இந்து ஆன்மிக, தத்துவ, வாழ்வியல் சிந்தனைகள் எவ்வாறு இடம்
> பெற்றிருக்கும்? திருக்குறளில் இந்து மதத்திற்கு அல்லது சமயத்திற்கு ஆதரவான
> சிந்தனைப் போக்குகள் (உலகப் பொதுதன்மையில்) அமைந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
> வாதிடுகிறபோது காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த "உலகப் பொதுமறை" என்கிற முத்திரை எல்லாம் வந்தது இருபதாம்
நூற்றாண்டில். அதை வைத்து திருக்குறள் என்ற நூலின் உண்மையான தொன்மைக்
கூறுகளை ஆராய்ச்சி செய்யப் புகுவது இன்றைய பெண்ணியத்தை வைத்து கண்ணகியை
மதிப்பீடு செய்வது போல.

திருக்குறளில் இந்து, சமண, பௌத்த தர்மங்கள் மூன்றும் ஏற்ற்க் கொள்ளும் பல
பொது அறங்கள் பேசப் படுகின்றன. ஆயினும், சிறப்பாக குறள் கூறும் பல
விஷயங்கள் சமண, பௌத்த நெறிகளால் கண்டிக்கப் பட்டு, இந்து தர்மத்தால்
ஏற்கப் பட்டவை (அரசன் கொடியவரைக் களைதல்; அறம்-பொருள்-இன்பம் என்ற மூவகை
நெறியாகிய த்ரிவர்கம் முதலியன...). மேலும் பின்னாளில் திருக்குறளைப்
பெரிதும் ஏத்திக் கூறுவன சைவ, வைணவ நூல்களே, அதுவும் இந்து-பௌத்த, இந்து-
சமண மோதல்கள் இருந்த அந்தக் காலகட்டத்தில். திருக்குறள் இந்து தர்ம
நூலாகவே தமிழ்க் கலாசாரத்தில் வழங்கியது என்பதற்கு இது ஒரு முக்கியமான
புறச்சான்று.

இது பற்றிய பல குறிப்புக்கள் அடங்கிய எனது கட்டுரை ஒன்றைப் பார்வையிட
வேண்டுகிறேன்.. திண்ணை இதழிலும் இது வெளிவந்தது -

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம் - http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html

அன்புடன்,
ஜடாயு


Narayanan Kannan

unread,
Sep 1, 2008, 9:52:47 AM9/1/08
to minT...@googlegroups.com
On 9/1/08, ஜடாயு <jata...@gmail.com> wrote:
மேலும் பின்னாளில் திருக்குறளைப்
> பெரிதும் ஏத்திக் கூறுவன சைவ, வைணவ நூல்களே,

அகோ! வாரும் பிள்ளாய்...

வள்ளுவம் என்னவென நம்மாழ்வாரையும் கேட்கலாமே!

வள்ளுவமும் வைணவமும் 1

http://thirumozi.blogspot.com/2007/08/073.html

வள்ளுவமும் வைணவமும் 2

http://thirumozi.blogspot.com/2007/08/074.html

வள்ளுவம் சமயச் சார்ப்பற்றது என்று யார் சொல்வது?

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages