குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறு பதிவு - டாக்டர் வள்ளி அவர்கள் வழங்குகின்றார்கள். இதனைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் மண்ணின் குரலுக்குச் செல்க..! http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post_05.html
நண்பர்களே,குன்றக்குடிக்கென்று ஒரு வலைப்பக்கம் உள்ளதைப் பார்த்தேன். இங்கே ஒரு தல புராணம் நூல் மின்னூலாக உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கலாம். http://scp.rtbi.in/kundrakudi/index.php/ta/historyசுபா
2012/2/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,குன்றக்குடிக்குச் சென்றிருந்த போது குன்றக்குடி திருமடத்தின் வரலாறு பற்றிய செய்திகளை நமது வலைப்பக்கத்தில் இணைக்கும் வகையில் சில குறிப்புக்களைத் தர முடியுமா என அடிகளாரிடம் கேட்டபோது சிறு வரலாற்று நூல் ஒன்றினை எனக்குத் தந்தார்கள். அந்த நூலில் 70 பக்கங்கள் உள்ளன. இந்த நூலினை நமது குழுவினர் யாரேனும் தட்டச்சு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு நான் அனுப்பி வைப்பேன். சிறு நூல் என்பதால் ஏறக்குரை 35 A4 பக்கம் என்று சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக தட்டச்சினால் இந்த ஆதீன வரலாற்றை முழுமைப் படுத்தலாம்.திருமதி கீதா தான் ஞாபகம் வந்தார். உங்கள் இந்தப் பணி முடியுமென்றால் அமெரிக்க முகவரிக்கு இச்சிறு நூலை அனுப்பி வைக்கவா?சுபா2012/2/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>
அம்மையார் சுபா அவர்களுக்கு வணக்கம்.2012/2/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறு பதிவு - டாக்டர் வள்ளி அவர்கள் வழங்குகின்றார்கள். இதனைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் மண்ணின் குரலுக்குச் செல்க..! http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post_05.htmlநல்லதொரு பகிர்வுக்கு நன்றிஅன்பன்கி.காளைராசன்--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
குன்றக்குடிக்குச் சென்றிருந்த போது குன்றக்குடி திருமடத்தின் வரலாறு பற்றிய செய்திகளை நமது வலைப்பக்கத்தில் இணைக்கும் வகையில் சில குறிப்புக்களைத் தர முடியுமா என அடிகளாரிடம் கேட்டபோது சிறு வரலாற்று நூல் ஒன்றினை எனக்குத் தந்தார்கள். அந்த நூலில் 70 பக்கங்கள் உள்ளன. இந்த நூலினை நமது குழுவினர் யாரேனும் தட்டச்சு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு நான் அனுப்பி வைப்பேன். சிறு நூல் என்பதால் ஏறக்குரை 35 A4 பக்கம் என்று சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக தட்டச்சினால் இந்த ஆதீன வரலாற்றை முழுமைப் படுத்தலாம்.திருமதி கீதா தான் ஞாபகம் வந்தார். உங்கள் இந்தப் பணி முடியுமென்றால் அமெரிக்க முகவரிக்கு இச்சிறு நூலை அனுப்பி வைக்கவா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
..
Thiruvannamalai????

குன்றக்குடிக்கென்று ஒரு வலைப்பக்கம் உள்ளதைப் பார்த்தேன். இங்கே ஒரு தல புராணம் நூல் மின்னூலாக உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கலாம். http://scp.rtbi.in/kundrakudi/index.php/ta/history
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************குதிரையை உயிர்ப்பித்த குருநாதர்நமது குரு முதல்வர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருந்த காலத்தில் விளைந்த அற்புதங்கள் பல. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே காண்போம்.
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
2 ஆம் பட்டம் முதல் 17 ஆம் பட்டம் வரை (கி.பி.1325—1630)நம் ஆதிகுருமுதல்வரால் கி.பி. 1310-இல் நிறுவப் பெற்ற திருமடத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிந்த குருமூர்த்திகள் வருமாறு:2. திருவருள் திரு தாண்டவராய தேசிகர் I3. திருவருள் திரு வினைதீர்த்த தேசிகர்4. திருவருள் திரு கனகசபாபதி தேசிகர்5. திருவருள் திரு வேலப்ப தேசிகர்6. திருவருள் திரு சுப்பிரமணிய தேசிகர்7. திருவருள் திரு உருத்திரகோடி தேசிகர்8. திருவருள் திரு சதாசிவ தேசிகர்9. திருவருள் திரு கண்ணப்ப தேசிகர்10.திருவருள் திரு மாசிலாமணி தேசிகர்11.திருவருள் திரு சந்திரசேகர தேசிகர்12.திருவருள் திரு குமரகுரு தேசிகர்13.திருவருள் திரு அம்பலவாண தேசிகர்14.திருவருள் திரு அருணகிரி தேசிகர்15.திருவருள் திரு கந்தப்ப தேசிகர்16,திருவருள் திரு சுவாமிநாத தேசிகர்
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
38-ஆம் பட்டம் பெரிய ஆறுமுக தேசிகர் (கி.பி.1860—1889)இந்த ஆதீனத்தின் 38—ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக சுவாமிகள். இவர்கள் காலத்தில் இந்த ஆதீனம் மிகச் சிறந்து விளங்கியது. சபாபதி முனிவர் என்னும் பெரியார் காறுபாறாக இருந்து திருத்தொண்டு செய்தார். ஆதீன மடாலயமும் இப்போதிருக்கும் நிலையில் பெரிதாகத் திருப்பணி செய்யப் பெற்றது. குருமகாசந்நிதானம் சபாபதி முனிவரிடத்திலேயே எல்லாப் பொறுப்பையும் விடுத்துத் தாம் சிவபூசை, சிவஞானபோத உபதேசம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் காலத்தில் கி.பி.1864- இல் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் குன்றக்குடி ஆதீனத்திருமடத்துக்கு வந்தார்; சிறந்த சொற்பொழிவு நிகழ்த்தினார். குருமகா சந்நிதானம் அவர்கள் நாவலரை நன்கு பாராட்டி, எந்த ஆதீனமும் செய்யாத வகையில் புதிதாகச் சிவிகை (பல்லக்கு)செய்வித்து அதில் அமரச் செய்து ஊர்வலச் சிறப்பும் செய்வித்தருளினார்கள்.
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
ஆதீன அடியவர் திருக்கூட்டம்:ஞானப்பிரகாச முனிவர் (கி.பி.1550—1600)ஆதீன அடியவர் திருக்கூட்டத்தில் மிகச் சிறப்பாக வைத்து எண்ணப்படுபவர் ஞானப்பிரகாச முனிவர். இவர் யாழ்ப்பாணம் வீணாகானபுரம் சாலிவாடீசுரம் (திருநெல்வேலி) என்னும் ஊரில் கார்காத்த வேளாளருள் முடிதொட்ட வேளாளராய்ப் பாண்டி மழவர் குலத்தில் தோன்றியவர். யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களின் பாட்டனார். சிறந்த சிவநெறிச் செல்வராக விளங்கியவர். பறங்கியர் இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தைப் பிடித்து ஆண்டு வந்த காலத்தில், பறங்கி அதிகாரியின் உணவுக்காக, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமும் முறை வைத்து ஒவ்வொரு கொழுத்த பசுவைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஞானப்பிரகாசருடைய முறை வந்தது. அப்போது ஞானப் பிரகாசர், “நீசன் கொன்று சாப்பிடும் பொருட்டுப் பசுவை நான் கொடுப்பேனாயின் அப்பசுவைக் கொல்லுதலாகிய பாவம் எனக்கு வந்து சேரும்.” என்று கருதி, அதன் காரணமாக ஒருவருக்கும் தெரியாது இரவு நேரத்திலே புறப்பட்டு, தமிழ்நாடு வந்து அடைந்து சிதம்பரம் போய்ச் சேர்ந்தார். அந்தத் திருத்தலத்தில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் குளித்து மிளகும் சுத்தமான நீரும் உட்கொண்டு நாற்பத்தைந்து நாள் சிவகாமி அம்மை சந்நிதியில் அவ்வம்மையாரை வழிபட்டுக் கொண்டிருந்தார். பின் அங்கிருந்து திருவண்ணாமலையிலிருந்த நமது ஆதீனம் சென்றார். அங்குச் சென்று நமது குருமூர்த்திகளின் கட்டளைப்படி வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை செய்வான் வேண்டிப் புறப்பட்டுச் சென்றார். வடநாட்டிலுள்ள கெளடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு பிராமண சந்நியாசியார் தமது சீடர்களுக்கு நாள் தோறும் தருக்கம், வியாகரணம், மீமாஞ்சை முதலியவற்றைக் கற்பித்து வேதாத்தியயனமும் செய்து வைத்துக் கொண்டிருந்தார். ஞானப் பிரகாசர் நாள் தோறும் முறையாக அங்குச் சென்று தூரத்திலே நின்று அவற்றைக் கேட்டு மனத்தில் இருத்திக் கொண்டு சிந்தித்து வந்தார். ஒருநாள் அந்த ஆசிரியர் இவரை நோக்கி,”நீவிர் யாவீர்? நீர் இச்சாத்திரப் பாடங்களின் சாரத்தை உற்று நாள் தோறும் கவனிப்பதில் நன்கு புலப்படுகின்றனவா?” என வினவினார். அதற்கு ஞானப் பிரகாசர் கூறிய விடைகளைக் கேட்டு அவர் வியப்படைந்து, இவருக்கு அச்சாத்திரங்கள் முற்றும் முறையாகக் கற்பித்து வந்தார். ஞானப்பிரகாசர் ஓராண்டுக்குள் முற்றக் கற்றுணர்ந்தார். பின் ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பர்களே உங்களிடம் பிரான்மலை படங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியுமா? நமது தொகுப்புக்கு உதவியாக இருக்கும்.

இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள்சைவாதீனங்களில் சென்னை நகரத்தில் பழமையான கட்டளை மடங்கள் உள்ள ஆதீனம் நமது திருவண்ணாமலை ஆதீனமே. சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள ஆதீனக்கட்டளை மடத்தில் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் வசித்து வந்தார்கள்; மகாவித்துவானாக விளங்கினார்கள். பல புலவர்களுக்கு இலக்கிய, இலக்கண, சாத்திரப் பாடங்கள் கற்பித்தார்கள். நமது ஆதீனத் தம்பிரான்களில் பலர் இவரிடம் கல்வி பயின்று சிறப்புற்றார்கள். அவர்களில் ஒருவரே திருவாவடுதுறை ஆதீனத்தில் 17 ஆவது பட்டத்தில் விளங்கிய அம்பலவாண தேசிக குருமூர்த்தி ஆவார் என்பதை முன்னரே கண்டுள்ளோம். இவரது கலை நுட்பத்தைக் கொண்டே இவரது ஆசிரியராகிய நமது ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளின் புலமையை நன்கு உணரலாம். இவர் ஆற்றிய தொண்டுகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது பெரிய புராண உரையாகும். பெரிய புராணம் முழுவதற்கும் சிறந்த பதவுரை இயற்றித் தந்த பெருமை நமது ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளையும், நமது திருவண்ணாமலை ஆதீனத்தையுமே சாரும்.
நன்றி.இதனை கட்டுரைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.பிரான்மலைக்கு அடுத்த முறை நாம் நிச்சயம் சென்று வர வேண்டும்.
--
ஊமத்துறை ஒழிந்த இடம் //ஊமைத்துரை ஒளிந்த இடம்????
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
வேலாயுதத் தம்பிரான்இவர் சிறந்த புலமை படைத்தவர். நிர்வாகத் துறையிலும் வல்லவர். “பரதேசி முத்திரை” என்ற மரியாதையைப் பெற்றவர் இவர். குன்றக்குடிக்கு அருகிலுள்ள காட்டாத்தாங்குடி என்னும் சிற்றூருக்கு ஒரு முறை சென்றிருந்தார். அங்கிருக்கும் பொய் சொல்லா மெய்யரென்னும் ஐயனாருக்கு ஆதீனத்தின் சார்பாகப் பூசை நடந்தது. அப்பொழுது கிராம மக்கள் மழை இல்லாக் குறையை சுவாமிகளிடம் கூறி முறையிட்டனர். உடனே சுவாமிகளும் அங்கிருக்கும் ஐயனாரை நோக்கி ஒரு திருப்பாடல் பாடினார். மழையும் பெய்தது; வறட்சி நீங்கியது; மக்கள் மனமும் குளிர்ந்தது. அந்தத் திருப்பாடல் இதோ!“தருணம் இதுவாகும் தான் மாரி பெய்யக்கருணை செய்யாதிருக்கலாமா? – வருணனிடம்நீருரைத்துப் பொய் சொல்லா மெய்யரே இந்நிமிடம்மாரி பெய்யச் செய்வீர் வரம்.”
அன்பின் சுபா:
மின்தமிழின் அவ்வப்போதைய புயற்சின்னங்களுக்கு இடையிலும் நம் பணி
தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நம் சமீபத்திய களப்பணி தந்த விஷயங்களை
முறையாகப் பதியவே ஓர் வருடமாகும். இவையெல்லாம் யார் கண்ணிலும் படுகிறதா?
என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் கவன ஈர்ப்பு யார் தருவர்?
நமது சேகரம் அதிகமாகிக்கொண்டே போகிறது. ’புத்தகப்புழு’ என்றொரு குழு
உருவாக வேண்டும். அது அவ்வப்போது நம் சேகரிலுள்ள சிறப்புகள் பற்றிப் பேச
வேண்டும். ‘படிப்பின் வாசனை’, ‘படித்தான் படித்துரை’ போன்ற தொடர்கள் நம்
சேகரங்களுக்கும் அமைந்தால் நூல்களை வழங்குவோருக்கும், காப்போருக்கும்,
வாசிப்போருக்கும் பயனுள்ளதாக அமையும்.
நாளை மலேசியாவில், ‘வாசிக்க வாருங்கள்’ எனும் தேசிய இயக்கத்தின் சிறப்பு
நாள். பள்ளிக் குழந்தைகளை தாம் விரும்பி வாசித்த நூல்களிலிருந்து ஒரு சில
பத்திகளை வாசிக்கச் சொல்கிறோம்.
மின்தமிழ் (த.ம.அ) சேகரங்களையும் ‘வாசிக்க வாருங்களேன்’!
அன்புடன்
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தன்யன் ஆனேன்!
உங்கள் கண்காணிப்பில் நம் முதுசொம் இருப்பது சிறப்பே! அவ்வப்போது உங்கள்
வீச்சை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சும்மா டெஸ்டெல்லாம்
வைக்காதீர்கள் :-))
க.>
2012/3/24 Innamburan Innamburan <innam...@gmail.com>:

இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
ஆதீனப் பனுவல்கள்சிவஞான சித்தியார் சுபக்க உரை:இந்த அரிய உரை நமது ஞானப்பிரகாச முனிவரால் எழுதப் பெற்றது. இவ்வுரை சிவாக்கிரயோகிகள், மறைஞான தேசிகர் ஆகிய இரு உரைக்கும் பிற்காலத்தது. சிவஞான மாபாடியத்திற்கு முற்காலத்தது. இவ்வுரையில் எழுந்த சில கருத்துக்களையும் “எடுத்து” எ
On 3/24/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> அடிகளார் அவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவர்; நாவீறு > படைத்த நாவலர்; இவர்களது சொற்பொழிவு தனித்தன்மையுடையது. அடிகளார் அவர்கள் > தலைமை பூணாத அவைகள் இல்லை; அரசியல் மேடைகளும் இல்லை; இவர்களது சொற்பொழிவு
> அமையாத பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் இல்லை; கல்லூரிகள் இல்லை; மேனிலைப்> பள்ளிகள் இல்லை; உயர்நிலைப் பள்ளிகள் இல்லை;
முற்றிலும் உண்மை.
திருப்பூவணத்தில் நான் சிறுவனாகப் படித்த போது இரண்டுமுறை தவத்திரு
அடிகளார் அவர்கள் பள்ளியில் பேசிக் கேட்டுள்ளேன்.
தாய்மொழியில் கல்வி இருக்க வேண்டும்.
தமிழ்மொழியில் எல்லோரும் பேசிட வேண்டும் என்ற இரண்டு கருத்துக்களை
மையமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது.
தெய்வீகப் பேரவை.
திருப்பூவணம் திருக்கோயிலுக்கு தவத்திரு அடிகளார் அவர்கள் வந்து
வழிபட்டார். அப்போது, திருக்கோயிலில் ஒரு குப்பையும் ஒட்டடையுமாக
இருப்பதைக் கண்டு பெரிதும் வருந்தி, தானே முன்னின்று, தண்ணீர் வண்டியை
வரச் செய்து திருக்கோயிலைச் சுத்தம் செய்தார். அப்போது கோயிலுக்கு
வந்திருந்த எனது சகமாணவர்களையும், ஊர்ப் பெரியவர்களையும் ஒன்று கூட்டி
தெய்வீகப் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பு ஏற்படுத்தப்
பட்டு 26 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த அமைப்பினர், திருக்கோயில்
வளாகத்திலேயே மாணவர்களுக்கு இலவசக் கல்வி கற்பிக்கின்றனர். வார இறுதி
நாட்களில் உழவாரப்பணி செய்கின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள்
மாவட்டத்திலேயே முதலாவதாக வருகின்றனர். பலர் அரசுப் பணிகளில் உள்ளனர்.
திருப்பூவணம் திருக்கோயில் இன்று சுத்தமாக உள்ளதற்கும், மாணவர் நன்கு
பண்புள்ளவராகவும் அறிவுடையவராகவும் திகழ்வதற்குக் காரணம் தவத்திரு
குன்றக்குடி அடிகளார் அவர்களும், தற்போதையை குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
பொன்னம்பல அடிகளார் அவர்களுமே ஆகும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
சொற்பொழிவுப் பணி
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
மடாலயப் பணிஅடிகளார் அவர்கள் இளவரசாக இருந்தபோதே மடாலயத் திருமதிலை உயர்த்திக் கட்டுவித்தார்கள். பின் மடாலயக் கட்டடத்தைச் செப்பனிட்டுள்ளார்கள். மடாலயத்தின் மடைப்பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதுபட்டிருந்ததால் அதனைச் சின்ன மடத்திற்கு, மாற்றி அலுவலகக் கட்டடமாக முற்றிலும் புதுப்பித்துள்ளார்கள். சின்ன மடம் முழுவதையும் பிரித்துவிட்டுத் தேவைக்கேற்பப் புதிதாக அமைத்துள்ளார்கள்.திருவண்ணாமலையில்திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலைக்குத் தென்பால் உள்ளது ஆதீனக்குருமுதல்வர் திருக்கோயில். 1951—இல் அடிகளார் அவர்கள் இளவரசாக இருந்த காலத்திலேயே இத்
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம்அப்பரடிகள், திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில்“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிநற்கனகக் கிழிதருமிக்கருளினோன் காண்”
குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதினம் குறித்த அனைத்துத் தகவல்களையும்
அருமையாகத் தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.
--
அன்பன்
கி.காளைராசன்
http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>
இத்தொடரின் தொடர்ச்சி இன்று மேலும் வெளியிடப்படுகின்றது.*****************************************************************************************
....
கிராமத் திட்டக் குழு“கோயிலைச் சார்ந்து குடிகளும் குடிகளைச் சார்ந்து கோயிலும்” வாழ வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் முழக்கம். மக்கள் வறுமைப் பிணி நீங்கினாலே உயிர்ப்பிணி நீக்கும் சமயப்பணி சிறக்கும் என்பது இவர்களின் கோட்பாடு. இதனடிப்படையில் குன்றக்குடியில் இவர்கள் அருளாட்சிக்கு வந்த காலத்திலிருந்து கூட்டுறவு முறையில் தொழில்களைத் தொடங்குவித்து நடத்தி வந்தார்கள். இந்த உணர்வு காலப் போக்கில் வளர்ந்து 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளில் பிறந்த நாளன்று “குன்றக்குடித் திட்டக்குழு”வாக மலர்ந்தது. இத்திட்டக் குழுவுக்குக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் அறிவுக் கொடை வழங்கி வருகின்றனர்; அரசுடமையாக்கப் பெற்ற வங்கிகள் நிதி உதவி செய்து வருகின்றன. அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழி நடத்தி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் திட்டக்குழு உறுப்பினர்களாக இருந்து உழைப்புக் கொடை வழங்கி வருகிறார்கள். அடிகளார் அவர்கள் இத்திட்டக்குழுவின் நெறியாளராக இருந்து அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். குன்றக்குடியில் கூட்டுறவு முறையில் பல தொழில்கள் நிறுவப் பெற்றுள்ளன. தனியார் தொழில்கள் சிலவும் அமைக்கப் பெற்றுள்ளன. அரசுத் துறை நிறுவனங்கள் தோன்றியுள்ளன. எல்லா வகையாலும் குன்றக்குடியைத் தன்னிறைவுடைய கிராமமாக்குவது இவர்களது நோக்கமாக இருந்து வருகிறது. இதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். குன்றக்குடிக் கிராமத்தில் கூட்டுறவில் அங்கம் வகிக்காத குடும்பமே இல்லை என்பதும் வேலை வாய்ப்பில்லாத குடும்பம் குன்றக்குடியில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத் திட்டப் பணி பற்றி அறிந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள், “This is what I should like for all villages” என்று பாராட்டியுள்ளார். இந்திய அரசின் திட்டக்குழு, “Kundrakkudi Pattern” என்று ஏற்றுப் பாராட்டியுள்ளது. இந்தத் திட்டப் பணியை இப்போது பசும்பொன் மாவட்ட அளவிலும் அடிகளார் அவர்கள் செயற்படுத்தி வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப் பெற்று மக்கள் பலரை வாழ்வித்து வருகின்றன. நெல்லை, மதுரை, காயிதேமில்லத், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சை, தென்னார்க்காடு முதலிய மாவட்டங்களிலும் இத்திட்டப்பணி விரிவடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் திருநாளைப் போவார் தோன்றிய மேலாதனூர்க் கிராமத்தையும், மங்கையர்க்கரசியார் தோன்றிய கீழப் பழையாறைக்கிராமத்தையும் தன்னிறைவுக் கிராமங்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்விரு ஊர்களிலும் சில தொழில் நிறுவனங்களை இப்போது அமைத்துள்ளார்கள். இவ்வாறு கிராமத் திட்டக்குழுப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.தொடரும்...குறிப்பு: நூல் தட்டச்சு உதவி திருமதி.கீதா சாம்பசிவம்அன்புடன்சுபா