தமிழகத்தில் நாடக முயற்சிகளும் அவை பற்றிய தகவல்களும்

1,506 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Dec 1, 2012, 5:35:43 AM12/1/12
to மின்தமிழ், Subashini Tremmel
நேற்று மின்தமிழில்  ஹனுமன் என்ற பெயரில் ஒரு புதிய நண்பர் இணைவதற்காக விண்ணப்பித்திருந்தார். மின் தமிழில் இணைய அவர் காரணமாக நாடகங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நமது உறுப்பினர்களிலேயே சீத்தாம்மா, திவாகர், தமிழ்த்தேனியார், இன்னும் மேலும் சிலர் நாடகக் கலையில் பின்னனி உள்ளவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் மட்டுமன்றி மேலும் பலரும் கூட இருக்கலாம். அவர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் கூட வழங்கலாமே.. தமிழக நாடகக் கலை பற்றிய மேலும் பல தகவல்கள் இதன் வழி கிடைக்க வாய்ப்பிருக்கின்றதே என்ற எண்ணத்தில் இந்த இழையைத் துவங்குகின்றேன்.

எனது புத்தக சேகரிப்பில் நாடகங்களைப் பற்றிய நூல் ஏதாகினும் இருக்கின்றதா என்று காலையில் தேடிப்பார்த்த போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும் நாடகக் களஞ்சியம் தொகுதி இரண்டு தென்பட்டது.

இந்த நூலைத் தொகுத்திருப்பவர் தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முனைவர் சி.நயினார் முதம்மது, முனைவர் இரவீந்திரன் ஆகியோர். 

இந்த நாடக் களஞ்சியத்திலிருந்து சில தகவல்களை அவ்வப்போது வழங்கலாமே என்றும் நினைக்கின்றேன். 

தகவல்களை குறிப்பாக மட்டுமே வழங்க நினைக்கின்றேன். மேல் விபரம் அறிந்தவர்கள் இந்த விஷயங்களைப் பற்றி தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

1. சக்குபாய் சரித்திர டிராமா - இந்த நாடகம் சக்குபாய் என்பவரைப் பற்றி கூறும் நாடகம் என்றும் பாடல்கள் மிகுதியாக அமைந்தும் உரையாடல்கள் இடைக்கிடையே கொஞ்சம் அமைந்தும் இருக்கும் நாடகம் என்று தெரிகின்றது. இதனை 1932ம் ஆண்டு சென்னை வி.ர. தியாகராச செட்டியார் எழுதியிருக்கின்றார்.

2.சகதேவன் சூழ்ச்சி - மகாபாரத கதையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது.  இந்த நாடகத்தின் மையக் கருத்து சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றவர்களின் தீய குணங்களை காட்டுவதும், வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.

இந்த நாடகத்தின் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்றும் 1928ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்த்து என்ற செய்தியையும் நூலில் காண்கின்றேன்.

இந்த நாடகங்களைப் பார்த்தவர், கேள்விப்பட்டவர் யாரேனும் நம்மிடையே இருக்கின்றீர்களா?

அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Geetha Sambasivam

unread,
Dec 1, 2012, 7:50:03 AM12/1/12
to mint...@googlegroups.com
சாந்த சக்குபாய்னு சினிமா கூட வந்திருக்கிறதாய்ச் சொல்வாங்க.  1942-ஆம் வருடம்னு நினைக்கிறேன்.  ஏனெனில் என் பெரிய நாத்தனாருக்கு அந்தப் படத்தின் நாயகி பெயரைத்தான் வைத்திருக்கிறதாய்ச் சொல்வாங்க.  பண்டரிபுர பக்தர்களில் இந்த சக்குபாயும் ஒருவர்.  பண்டரிநாதரைத் தரிசிக்கும் ஆவல் நிறைந்த இவரை பகவான் பண்டரிபுரம் போகச் சொல்லிவிட்டு இவர் இடத்தில் தான் இருந்ததாக பகவான் பண்டரிநாதரே இவருக்காக சக்குபாயாக வேடமிட்டு இவர் மாமியாரிடம் கஷ்டப்பட்டுக் கொண்டு அவர் சொல்லும் வசைமொழிகளைக் கேட்டுக் கொண்டு அன்றாட வேலைகளைச் செய்திருக்கிறார்.  விரைவில் இவரைக் குறித்தும் எழுதுகிறேன்.

2012/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

1. சக்குபாய் சரித்திர டிராமா - இந்த நாடகம் சக்குபாய் என்பவரைப் பற்றி கூறும் நாடகம் என்றும் பாடல்கள் மிகுதியாக அமைந்தும் உரையாடல்கள் இடைக்கிடையே கொஞ்சம் அமைந்தும் இருக்கும் நாடகம் என்று தெரிகின்றது. இதனை 1932ம் ஆண்டு சென்னை வி.ர. தியாகராச செட்டியார் எழுதியிருக்கின்றார்.

2.சகதேவன் சூழ்ச்சி - மகாபாரத கதையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது.  இந்த நாடகத்தின் மையக் கருத்து சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றவர்களின் தீய குணங்களை காட்டுவதும், வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.

இந்த நாடகத்தின் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்றும் 1928ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்த்து என்ற செய்தியையும் நூலில் காண்கின்றேன்.

இந்த நாடகங்களைப் பார்த்தவர், கேள்விப்பட்டவர் யாரேனும் நம்மிடையே இருக்கின்றீர்களா?

அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Dec 1, 2012, 7:51:57 AM12/1/12
to mint...@googlegroups.com
சகதேவன் சூழ்ச்சி என்பது கொஞ்சம் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது.  சாத்திரத்தில் வல்ல சகதேவன் சரியான நாளையே கணித்துக் கொடுப்பான். இத்தனைக்கும் கேட்பவர்களோடு தான் தாங்கள் போரிடப் போகிறோம் என்பதை நன்கு அறிந்தே சொல்வான்.  நாளை மாற்றுவது கண்ணனே.   நாடகங்களை இப்போது எண்பது வயதான பெரியோர்கள் பார்த்திருக்கலாம். விசாரிக்கணும்.

2012/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

1. சக்குபாய் சரித்திர டிராமா - இந்த நாடகம் சக்குபாய் என்பவரைப் பற்றி கூறும் நாடகம் என்றும் பாடல்கள் மிகுதியாக அமைந்தும் உரையாடல்கள் இடைக்கிடையே கொஞ்சம் அமைந்தும் இருக்கும் நாடகம் என்று தெரிகின்றது. இதனை 1932ம் ஆண்டு சென்னை வி.ர. தியாகராச செட்டியார் எழுதியிருக்கின்றார்.

2.சகதேவன் சூழ்ச்சி - மகாபாரத கதையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது.  இந்த நாடகத்தின் மையக் கருத்து சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றவர்களின் தீய குணங்களை காட்டுவதும், வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.

இந்த நாடகத்தின் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்றும் 1928ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்த்து என்ற செய்தியையும் நூலில் காண்கின்றேன்.

இந்த நாடகங்களைப் பார்த்தவர், கேள்விப்பட்டவர் யாரேனும் நம்மிடையே இருக்கின்றீர்களா?

அன்புடன்
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
360.gif

kra narasiah

unread,
Dec 1, 2012, 9:01:21 AM12/1/12
to mint...@googlegroups.com
சரியாக 81 வருட்ங்களுக்கு முன்னால் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகமேடை அனுபவங்கள் கட்டுரைகள் உள்ளன. ஸ்கேன் செய்து அனுப்ப முயல்கிறேன்.
நரசய்யா

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Saturday, December 1, 2012 4:05:43 PM
Subject: [MinTamil] தமிழகத்தில் நாடக முயற்சிகளும் அவை பற்றிய தகவல்களும்

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2012, 9:37:27 AM12/1/12
to mint...@googlegroups.com
"சகதேவன் சூழ்ச்சி என்பது கொஞ்சம் ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது"
 
வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.

சகாதேவன் செய்யவில்லை எந்த சூழ்ச்சியும்
 
துரியோதனன் வஞ்சக  எண்னத்துடன் சகாதேவனை அணுகி போருக்கு நாள் குறித்துத் தருமாரு கேட்டான்
 
சகாதேவனும் தரும நியாயப்படி ஜோதிட முறைப்படி  கேட்பவருக்கு உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் நியதியில்  நாள் குறித்துக் கொடுத்தான் அவ்வளவுதான்.

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/12/1 kra narasiah <nara...@yahoo.com>

Subashini Tremmel

unread,
Dec 2, 2012, 6:24:18 AM12/2/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/12/1 kra narasiah <nara...@yahoo.com>

சரியாக 81 வருட்ங்களுக்கு முன்னால் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகமேடை அனுபவங்கள் கட்டுரைகள் உள்ளன. ஸ்கேன் செய்து அனுப்ப முயல்கிறேன்.
இவை நமக்கு மிகப் பயனுள்ள தகவல்களை மேலும் வழங்கும். காத்திருக்கின்றேன்.

சுபா

Subashini Tremmel

unread,
Dec 2, 2012, 6:39:43 AM12/2/12
to மின்தமிழ், Subashini Tremmel
தொடர்கின்றேன்....

3.சகுந்தலா சரித்திரம் - நம்மில் பலர் அறிந்த சகுந்தலை கதையை பின்னனியாகக் கொண்ட நாடகம் இது. உடுமலை பூமிபாலகதாசு என்பவர் எழுதிய நாடகம். 1924ம் ஆண்டில் நூலாக வெளிவந்த நாடகம். பார்சி இந்துசுதான் நூதன வர்ணமெட்டுடன் கூடிய பாடல்கள் இந்த நூலில் அடங்கியுள்ளதாக தொகுப்பாசிரியர் குறிப்பிடுகின்றார். இதில் பார்சி இந்துசுதான் நூதன வர்ணமெட்டு என்பதன் பொருள் புரியவில்லை. இதனை அறிந்தோர் விளக்கினால் உதவும்.

4.சகுந்தலா சரித்திரமென்றும் துசியந்த நாடகக் கும்மி - வே.நாராயணசாமி பிள்ளை எழுதி 1915ம் ஆண்டு நூலாகவும் வெளிவந்தது. 

இந்த நாடகம் சகுந்தலைக்கும் துசியந்தனுக்கும் நிகழ்ந்த திருமண வைபவத்தை விவரிக்கும் கும்மி வடிவில் அமைக்கப்பட்ட ஒரு நாடகம்.

5.சகுந்தலா விலாசம் - மூலத்தில் வடமொழியில் அமைந்த சாகுந்தலம் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு நாடகம் இது. திரு.இராமச்சந்திரன் என்பவர் 1876ம் ஆண்டு இதனை நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்தியை அறிகின்றோம்.

6.சகுந்தலை அல்லது காணாமல் போன கணையாழி -  வடமொழி மூலமான காளிதாசரின்சாகுந்தலம் நாடகத்த்தின் தமிழ் மொழி பெயர்ப்பு நாடக் நூல் இது. எசு.பவானந்தம் பிள்ளை என்பவர் 1912ம் ஆண்டு இந்த நூலை எழுதி வெளியிட்டார் என்று அறிகின்றோம்

இப்பதிவிற்கான தகவல்கள்: நாடகக் களஞ்சியம் தொகுதி இரண்டு - தமிழ்ப் பல்கலைக்கழ வெளியீடு நூலிலிருந்து கையாளப்படுகின்றது.

சுபா

2012/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 2, 2012, 7:39:52 AM12/2/12
to mint...@googlegroups.com
திருமங்கலம்: 1931:
நாடகமேடையில் 'வள்ளி திருமணம்' கன ஜோரா நடக்கிறது. எக்கச்சக்கக்கூட்டம். வள்ளி ஒய்யாரமாக நடை பயிலும்போது தரை மகாஜனங்கள் விசில் அடிக்கிறார்கள். காதல் ததும்பும் பாடல்கள். திடீரென்று, முதல் வரிசையில் இருக்கும் ராஜ விசுவாசி வைகுண்ட்,'நிறுத்துடா' என்று கூவினார். ஏன் தெரியுமா? உரத்த குரலில் முருகன், 'பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே!' என்று அலறிக்கொண்டே, காதலை தொடர்ந்தார். அந்த காலத்தில் தேசபக்தி பாடல்கள் இப்படியாக வருவது உண்டு.
~ இது அப்பா சொன்னது. 
குறிப்புக்கடுதாசியில் இன்னும் இருக்கலாம். தேடுகிறேன்.
இன்னம்பூரான்
02 12 2012

2012/12/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 2, 2012, 11:55:53 AM12/2/12
to ANUMAN VELLIYANGIRI, மின்தமிழ், Subashini Tremmel
திரு.ஹனுமன்,

த.ம.அ மின்னூல் சேகரத்திலிருந்து நூல்களை பெற்று வாசித்ததை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. 

நீங்கள்  மின் தமிழிலேயே இவ்விரங்களை பகிர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல் பகிர்ந்து கொள்ளும் போது minT...@googlegroups.com என்ற முகவரிக்கும் சேர்த்து மடலிடுங்கள். நூல் உள்ளவரக்ள் அதனை மின்னாக்கத்திற்கு வழங்கினால் அதனை நாம் த.ம.அ சேகரத்தில் இணைத்து வைப்போம். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு அது பயன்படும். 

சுபா 

2012/12/2 ANUMAN VELLIYANGIRI <anum...@gmail.com>

...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

       வணக்கம்நான் இந்த பகுதிக்கு புதுசு, அதனால் என்னுடைய வேண்டுகோளில் எதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கும்படி மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  

அறக்கு மாளிகை நாடகம்
ஆரவல்லி சூரவல்லி கதை 
கர்ண மகாராஜன் சண்டை
மயிலி இராவணன் கதை
குச லவ வாக்கியம்
பஞ்ச பாண்டவர் வனவாசம்
இராம நாடகக் கீர்த்தனை

வள்ளி திருமணம்
பவளக்கொடி நாடகம் 

மேலே குறிப்பிட்டுள்ள கதைகள் மற்றும் நாடகங்களை  நான்
தமிழ் மரபு அறக்கட்டளை  http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

 யில் இருந்து நான் Download செய்து பெற்றுக்கொண்டேன்.  ஒவ்வொன்றும் படிக்க மிகவும் சுவாரசியமாக இருப்பதோடு பாடல் வடிவில் இருப்பது மிகவும் பிடித்து இருக்கிறது . 
      கீழே குறிப்பிட்டுள்ள நாடகம் மற்றும் புராணங்களோ அல்லது  கீழே குறிப்பிட்டுள்ள புராணங்கள் தொடர்பான நாடகங்கள் இருந்தால் அதை  Pdf file வடிவிலோ அல்லது Image file வடிவிலோ அளித்தால் மிகவும் நன்மையாய் இருக்கும்.
      B.
இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களும் மிகவும் விருப்பமுடையது.இவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் இருந்தாலும் சந்தோசம்தான்.

சிவபுராணம்
விஷ்ணுபுராணம்
விநாயகபுராணம்
கந்தபுராணம்
ஆஞ்சிநேயர் புராணம்  
ராமாயணம்
மகாபாரதம்
ஸ்ரீராமர் தரிசன நாடகம்
ராஜசூய நாடகம்
நளாங்கினி மாலையிடு நாடகம்
மதுகயிடாசூர சம்மார நாடகம்
அஞ்சுமதி கலியாண நாடகம்
மதிவல்லபண் கலியாண நாடகம்
பனிரண்டாநாள் சண்டை நாடகம்
விறகு விற்ற படல நாடகம்
தண்டகாசூரன் சண்டை நாடகம்
பத்மாசூர சம்மார நாடகம்
இராமரிஷி நாடகம்
அமராவதி மோக்ஷ நாடகம்
அபிமன்னன் சண்டை நாடகம்
சயிந்தவன் சண்டை நாடகம்
இராவணன் சம்மார நாடகம்
கர்ன மோக்ஷ நாடகம்
வாலி மோஷ நாடகம்
மாடுபிடி சண்டை நாடகம்
மின்னொளி குறவஞ்சி நாடகம்
விநாயகர் திருக்கலியாண நாடகம்
ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாடகம்
சந்திரகலை கர்வபங்க நாடகம்
அரவான் கடபலி நாடகம்
சந்திரகாச நாடகம்
கிருஷ்ண விலாசம்
பதினெட்டாம்போர் நாடகம்
சயிந்தவ நாடகம்(வி.கிருஷ்ணப் பிள்ளை இயற்றியது)

கீசகன் சம்பார நாடகம்
கண்ணன் கபட நாடகம்
அர்ஜுனன் தபசு நாடகம்
தாடகை சம்பாரம் நாடகம்
கிருஷ்ணன் பிறப்பு நாடகம்
வன்னிய நாடகம்
பிரகலாதன் பள்ளிக்கூடம் நாடகம்
சுந்தரி மாலையிடு நாடகம் 

Innamburan Innamburan

unread,
Dec 2, 2012, 12:09:30 PM12/2/12
to mint...@googlegroups.com
1. அவருடைய ஆர்வம் நம் ஆரவத்தை ஊக்குவிக்கிறது. வாழ்த்துக்கள்.  நமபர் 147 நலங்குப்பாட்டு & பாதர் வெள்ளை:  B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் பிரசுரம் என்று ஞாபகம்.
2. நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.மின்னாக்கத்துக்கு வருவதாக வாக்களித்த ஒருவரும் வரவில்லை என்றேன். தவறு. நிவாரணம். என் கை நலிந்த போது, பல நூல்களை வாங்கிச்சென்று மின்னாக்கம் செய்தார், தமிழ்த்தேனீ மட்டும். நன்றி. சுவாமி.
இன்னம்பூரான்

2012/12/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 3, 2012, 5:21:04 AM12/3/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/12/2 Innamburan Innamburan <innam...@gmail.com>

1. அவருடைய ஆர்வம் நம் ஆரவத்தை ஊக்குவிக்கிறது. வாழ்த்துக்கள்.  நமபர் 147 நலங்குப்பாட்டு & பாதர் வெள்ளை:  B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் பிரசுரம் என்று ஞாபகம்.
2. நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.மின்னாக்கத்துக்கு வருவதாக வாக்களித்த ஒருவரும் வரவில்லை என்றேன். தவறு. நிவாரணம். என் கை நலிந்த போது, பல நூல்களை வாங்கிச்சென்று மின்னாக்கம் செய்தார், தமிழ்த்தேனீ மட்டும். நன்றி. சுவாமி.
தமிழ்த்தேனீயாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழகத்தில் உள்ள நண்பர்கள் பழை நாடக நூல்கள் எந்தக் கடைகளில் கிடைக்கும் அல்லது எந்த நூலகங்களில் கிடைக்கும் என்று தேடிப்பார்த்து தகவல் சொன்னால் அது நமது முயற்சிகளுக்கு மிக உதவும்.

பழம் நூல்களைச் சேகரிக்கும் பெரியவர்கள் சிலர் வீட்டிலும் இவ்வகை நூல்கள் இருக்கலாமே. உங்கள் வட்டாரத்தில் தேடிப்பார்த்து தகவல் சொல்லுங்கள் நண்பர்களே.

சுபா

Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 5:26:54 AM12/3/12
to mint...@googlegroups.com
ஆமாம். இருக்கின்றன. மறைமலை அடிகளார், பாகனேரி, மு.வ.வின் நூலகம் போன்ற இடங்களில் அவை காணக்கிடைக்கின்றன. என்னுடைய நூலகத்தில் இருந்த பழைய நூல்களை, தமிழ்த்தேனீ, திவாஜி ஆகியோரும், நானும் மின்னாக்கம் செய்துவிட்டோம். தேடணும். பிடிக்கணும். மின்னாக்கணும்.
இன்னம்பூரான்

2012/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 3, 2012, 6:03:49 AM12/3/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/12/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

ஆமாம். இருக்கின்றன. மறைமலை அடிகளார், பாகனேரி, மு.வ.வின் நூலகம் போன்ற இடங்களில் அவை காணக்கிடைக்கின்றன.
அப்படியா. இந்த நூலகங்களுக்கு நமது நண்பர்கள் சென்று நூலக அதிகாரிகளுடன் பேசினால் நமது மின்னாக்க முயற்சிகளை நாம் தொடங்கலாமே? தமிழக நண்பர்கள் யாரேனும் இதற்கு உதவ முடியுமா?

சுபா

Dhivakar

unread,
Dec 3, 2012, 6:05:56 AM12/3/12
to mint...@googlegroups.com
சுபா,
என்னிடம் பல பழைய குறிப்புகள் உள்ளன. எடுத்து வைத்துள்ளேன். சிறிது கால அவகாசம் கிடைத்தால் முழு நீளக் கட்டுரை கிடைக்கும். மணிமேகலை காலத்திலிருந்து வரும் :-)

அன்புடன்
 திவாகர்

2012/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Kamala Devi

unread,
Dec 3, 2012, 8:42:08 AM12/3/12
to mint...@googlegroups.com
சுபாஷினி,
பழைய கடைகளில் கிடைக்குமா ?
ஆனால் கன்னிமாரா நூலகத்தில் கேட்டுப்பெற்றால் மின்னாக்கம் செய்ய பல பொக்கிஷங்கள் கிட்டுமே.
எனது சிறிய சஜஷன் .
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 3/12/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 9:05:16 AM12/3/12
to mint...@googlegroups.com
கேட்பவர்களுக்கு எனக்கு தெரிந்த தொடர்புகளை தருகிறேன். 40 நூல்களை மின்னாக்கம் செய்தோம். அதை வைத்திருப்பவர்களை பிடிக்ககுடியவில்லை.
காலம் சென்ற  வெங்கட தாயுமானவனின் கலெக்‌ஷன் சிறந்தது. சில பழைய பள்ளிகளில் பல மூடிக்கிடக்கின்றன. என்னிடமிருந்து காலம் சென்ற அண்டோ பீட்டர் எடுத்த சென்றவற்றில் நிறைய இருக்கின்றன. முதலில் அவற்றை எடுக்கலாம், ஆர்வலர்கள் கிடைத்தால். அவை நம்மிடம் தானே இருக்கின்றன. உடனே செய்யலாம்.

Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 10:01:48 AM12/3/12
to mint...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Dec 14, 2012, 5:18:48 PM12/14/12
to மின்தமிழ், Subashini Tremmel
நாடக நூல்களைப் பற்றிய தகவல்களைத் தொடர்கின்றேன்....

7.சகுந்தன் சரித்திரமென்னும் ஸ்ரீராம ஆஞ்சநேய யுத்தம்  - இந்த நாடகம் ராமரின் மகிமையை விவரிக்கும் வகையில் எழுதப்பட்டது.  இந்த நாட்கத்தின் கதை சுருக்கம் இதுதான்.

ஒரு சமயத்தில் விசுவாமித்திர முனிவர் சகுந்தன் என்ற மன்னனை அழிக்குமாறு இராமனிடம் வாக்கு பெற்றுக் கொள்கின்றார். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்வோமே, அப்படி அவர் செய்த ஒரு கலகத்தால் அனுமன், இராமரை நினைத்து  பூஜித்துக் கொண்டிருக்கையில் இராமர் அனுப்பிய அம்புகள் அனுமனையோ சகுந்தனையோ தாக்காமல் திரும்பி வர, இராமர் சோர்வுறுகின்றார். சிவ பெருமான் இராமனைச் சமாதானப் படுத்தி அனுமன், சகுந்தன், இராமன் மூவரையும் நண்பர்களாக்குகின்றார் என இந்த நாடகத்தின் கதை செல்கின்றது.

இந்த நாடக நூல் வி.வை.செயதேவுக்கவிராயர் என்பவரால் எழுதப்பட்டு 1931ம் ஆண்டில் நூலாக வெளிவந்தது.

8.சங்கமித்திரை  - விசாகை, தெய்வத்தைக் கொன்ற மனிதர்கள், சங்கமித்திரை தகடூர்க்கோட்டை நிழல் என்ற 5 நாடகங்களை உள்ளடக்கி வெளிவந்த ஒரு நாடக நூல் இது. தாமரைக்கண்ணன் என்பவர் எழுதி 1982ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்தது.

9.சங்கர விசய விலாசம் -  இது ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நாடக மேடைக்கு ஏற்றவாறு வடிவமைத்து நூலாகவும் வெளிவந்தது.  ஆதி சங்கரரின் பெறுமைகளைப் பரப்புவதற்காக எழுதப்பட்ட இந்த நாடகக்கதையில் அவர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களைச் சொற்போரால் வென்று அறுவகைச் சமயத்தை நிறுவியதை விளக்குவதாக இந்த நாடகம் அமைந்துள்ளது என்ற குறிப்பைக் காண முடிகின்றது. 

இந்த நூலை எழுதியவர் பவானி அன்னபூரணியம்மாள். இது 1913ம் ஆண்டில் நூலாகவும் வெளிவந்தது.

9.சங்கிராந்தி அல்லது சூழ்ச்சியுள்ள சூப்பிரிண்டெண்டெண்ட் - செயிண்ட் பேட்ரிக் ஆங்கில நாடகத்தைத் தழுவிய தமிழாக்கம் இது. சமூக பிரச்சனைகளை அலசும் வகையில் நாடக ஆசிரியர் இந்த நாடகத்தின் கதையை அமைத்திருக்கின்றார்.  

இந்த நாடகத்தை எசு.கே.பார்த்தசாரதி ஐயங்கார் என்பவர்  எழுதி இந்த நூல் 1982ம் ஆண்டில் நூலாகவும் வெளிவந்தது.

நன்றி:  நாடகக் களஞ்சியம் தொகுதி 2 - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு

சுபா

2012/12/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 22, 2012, 3:02:47 AM12/22/12
to மின்தமிழ், Subashini Tremmel
இப்பதிவில் பிழை ஏற்பட்டுள்ளது...

8.சங்கமித்திரை  - விசாகை, தெய்வத்தைக் கொன்ற மனிதர்கள், சங்கமித்திரை தகடூர்க்கோட்டை நிழல் என்ற 5 நாடகங்களை உள்ளடக்கி வெளிவந்த ஒரு நாடக நூல் இது. தாமரைக்கண்ணன் என்பவர் எழுதி 1982ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்தது.

9.சங்கர விசய விலாசம் -  இது ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நாடக மேடைக்கு ஏற்றவாறு வடிவமைத்து நூலாகவும் வெளிவந்தது.  ஆதி சங்கரரின் பெறுமைகளைப் பரப்புவதற்காக எழுதப்பட்ட இந்த நாடகக்கதையில் அவர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களைச் சொற்போரால் வென்று அறுவகைச் சமயத்தை நிறுவியதை விளக்குவதாக இந்த நாடகம் அமைந்துள்ளது என்ற குறிப்பைக் காண முடிகின்றது. 

இந்த நூலை எழுதியவர் பவானி அன்னபூரணியம்மாள். இது 1913ம் ஆண்டில் நூலாகவும் வெளிவந்தது.

10.சங்கிராந்தி அல்லது சூழ்ச்சியுள்ள சூப்பிரிண்டெண்டெண்ட் - செயிண்ட் பேட்ரிக் ஆங்கில நாடகத்தைத் தழுவிய தமிழாக்கம் இது. சமூக பிரச்சனைகளை அலசும் வகையில் நாடக ஆசிரியர் இந்த நாடகத்தின் கதையை அமைத்திருக்கின்றார்.  

எண் வரிசையை சரி செய்திருக்கின்றேன்.

சுபா

2012/12/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 22, 2012, 3:04:13 AM12/22/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/12/3 Dhivakar <venkdh...@gmail.com>

சுபா,
என்னிடம் பல பழைய குறிப்புகள் உள்ளன. எடுத்து வைத்துள்ளேன். சிறிது கால அவகாசம் கிடைத்தால் முழு நீளக் கட்டுரை கிடைக்கும். மணிமேகலை காலத்திலிருந்து வரும் :-)

அருமை.
காத்திருக்கிறேன்.

சுபா
 
Subashini Tremmel

unread,
Dec 22, 2012, 3:05:42 AM12/22/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/12/3 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

சுபாஷினி,
பழைய கடைகளில் கிடைக்குமா ?
ஆனால் கன்னிமாரா நூலகத்தில் கேட்டுப்பெற்றால் மின்னாக்கம் செய்ய பல பொக்கிஷங்கள் கிட்டுமே.
எனது சிறிய சஜஷன் .

கமலம் - நீங்களும்  நாடகப் பயிற்சி மேற்கொண்டதாக வாசித்த நினைவு. உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். சிங்கப்பூர் நாடக முயற்சிகளையும் இங்கே எழுதலாமே.

சுபா

Subashini Tremmel

unread,
Dec 22, 2012, 3:25:52 AM12/22/12
to மின்தமிழ், Subashini Tremmel
மேலும் சில நாடகங்களைப் பற்றி சில தகவல் பகிர்ந்து கொள்ளலம என நினைக்கின்றேன்.

11.சங்கல்ப சூரியோதம் - பிரபோத சந்திரோதயம்  என்ற அத்வைத கருத்துக்களைக் கொண்ட ஒரு நாடகத்திற்கு மறுப்பாக விசிஸ்டாத்வைத கருத்துக்களை முவைக்கும் வகையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபோத சந்திரோதயம் நாடகத்தை எழுதியவர் கிருட்டிண மிசுரர் என்பவர்.  இந்த சங்கல்ப சூரியோதயம் நாடகம் தமிழில் தயாரிக்கப்பட்டு தமிழ் மக்கள் முன்னே நடித்துக் காட்டப்பட்டது என்ற குறிப்பை காண முடிகின்றது. 

யார் இதனை எழுதினார்கள் என்பதோ அல்லது எந்த ஆண்டு தொடக்கம் வந்தது என்ற குறிப்போ கிடைக்க வில்லை. எழுதியவர் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.

12. சங்கீத சரச உல்லாச ரஞ்சனியின் கேசு அல்லது அவசரக் கோர்ட்டு அடுத்த நாள் தீர்ப்பு  - 1927ல் அச்சு நூலாக வெளிவந்த இந்த நாடகத்தை வெ.சிவகுருநாதன் என்பவர் எழுதியிருக்கின்றார். 

நகைச்சுவை தன்மை கொண்ட படைப்பு. துல்லுக்கண்ணன் என்பவர் ரஞ்சனி என்னும் தாசிக்குப் பொட்டு கட்டி அவளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாயும் 2 புடவைகளும் 3 பாவாடைகளும், 6 ரவிக்கைகளும் கொடுத்து விடுவதாக  எழுதிக் கொடுக்கிறான். ஆனால் சில காலங்களுக்குப் பின்னர் இதனை நிறுத்தி விடுகின்றான். ரஞ்சனி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க தீர்ப்பு ரஞ்சனிக்கு சாதகமாக அமைகின்றது. தண்டனையாக துலுக்கண்ணன் முன்னர் கொடுத்ததை விட 2 மடங்கு அதிகம் தரவேண்டும் என்று தீர்ப்பாகின்றது. சமாதானமாகாத துலுக்கண்ணன் மேல் கோர்ட்டிற்குச் செல்ல அங்கே தண்டனை மேலும் அதிகரிக்கின்றது. முன்னர் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டும் என்றும் ரூபாய் 5 லட்சம் அபராதமும் 14 ஆண்டுகள் ரஞ்சனிக்கு சேவகம் செய்ய வேண்டும் என்ற முடிவும் ஆகின்றது. இப்படிச் செல்கின்றது கதை.

இந்த நாடகத்தின் தலைப்பை பாருங்கள். இரண்டு தலைப்புக்களை ஒரே நாடகத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். இந்த பாணியிலான தலைப்புக்களை சில நாடகங்களுக்கிருப்பதை நாடகக் களஞ்சியம் நூலில் மேலும் காண முடிகின்றது.

13. சங்கீதப் பைத்தியம் - இதுவும் ஒரு நகைச்சுவை தன்மையில் அமைந்த ஒரு நாடகம் தான். 1956ம் ஆண்டு அச்சு வடிவமும் கண்ட இந்த நூலை ப.சம்பந்த முதலியார் எழுதி இயற்றியிருக்கின்றார்.

கதை இப்படி செல்கின்றது. ஒரு அரசன்.. இறந்து போன தன் தாயின் ஆன்ம சாந்திக்காக பொதுமக்களின் தினசரி வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதி அதனை அமல்படுத்த கட்டளையிடுகின்றான். இதனால் பல குடும்பங்களில் சிக்கல்கள் ஏர்படுகின்றன. ஒரு வேளையில் இறந்து போன இரண்டு பிணங்களை இரண்டு வீட்டில் மாற்றி வைத்து விடுகின்றனர்.இறுதியில் இந்த விஷயம் அரசனின் சபைக்கு வருகின்றது. அப்போது இறந்து போன ஒரு பிணம் எழுந்து விடுகின்றது. எழுந்ததோடு இறந்து போன அரசனின் தாயார் இந்தப் பாடல்களால் தான் தலைவலி கொண்டு துன்புறுவதாகச் சொன்னதாகச் சொல்ல அரசன் உடனே தன் ஆணையை நிறுத்தும்படி கட்டளையிடுகின்றார்.

தொடரும்...
சுபா

2012/12/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Kamala Devi

unread,
Dec 24, 2012, 8:42:16 AM12/24/12
to mint...@googlegroups.com
சுபாஷினி
இங்கு குறிப்பிடும் நாடகங்கள்எல்லாம் பதிவுகள்தான். எவ்வளவு தேடியும்
மூலமோ ஆண்டோ கிட்டவில்லை. என்றாலும் அருமையான பதிவு
கமலம்

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Saturday, 22 December 2012, 16:25
Subject: [MinTamil] Re: தமிழகத்தில் நாடக முயற்சிகளும் அவை பற்றிய தகவல்களும்

Kamala Devi

unread,
Dec 24, 2012, 8:48:36 AM12/24/12
to mint...@googlegroups.com
ஆறு நாட்களாக நிங்ஙள் ஊரில் பினாங்கில் இருந்தேன்.
சேச்சியின் [மருத்துவர்] மகளுக்கு திருமணம்.
மணம் முடிந்து கோலாலம்பூரில் விருந்து,.மற்ற அலைச்சல், என. 3 ஊர்களுக்கு 
அலைந்து ஓய்ந்து வந்துள்ளேன்
நிச்சயமாக  நாடக அனுபவம் பற்றி எழுத வேண்டும்.
விருது பெற்ற என்டெ  மேடை நாடக அனுபவங்கள், 
இயக்குனராக, வானொலிஆசிரியராக, தொலக்காட்சி நாடகாசிரியராக எல்லாமே எழுத வேண்டும்.
கணவர் பலமுறை சொல்கிறார். செய்ய வேண்டும்
கமலம்
 
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Saturday, 22 December 2012, 16:05

Subashini Tremmel

unread,
Jan 6, 2013, 12:14:14 PM1/6/13
to மின்தமிழ், Subashini Tremmel
நாடகக் களஞ்சியம் நூலை வாசித்த போது மேலும் சில நாடகங்களைப் பற்றிய விபரங்கள் கிடைத்தன. இந்த இழையில் இன்று மேலும் சில தகவல்களை வழங்குகிறேன்.

14.சங்கு சூடாமணி நாடகம் - சாலை கிருட்டிணப்ப நாயக்கர் என்பவர் எழுதி 1920ம் ஆண்டில் சென்னையிலுள்ள  ஒரு பதிப்பகத்தாரல் அச்சு வடிவத்திலும் வெளிவந்த ஒரு நாடகம் இது. 

இந்த நாடகம் கீர்த்தனைகளால் ஆனது. வசனமின்றி பாடலாகவே அமைந்திருக்கும் போல! 

ஸ்ரீமகாபாகவதத்தில் ஒரு பிரிவாகிய குயகாசூரன்  என்னும் சங்கு சூடாமணி நாடகம் என்று இந்த நாடகத்திற்கு ஒரு பெயர் இருந்திருக்கின்றது.  ஸ்ரீமகாபாகவத்தின் ஒரு கதையே இந்த  நாடகத்தின் கதையாக அமைந்ததால் இந்தப் பெயர் என் நாடகக் களஞ்சியம் நூல் குறிப்பிடுகின்றது.

15.சண்டைக்காரி சாதுவாக்கப்பட்டது - எப்படியெல்லாம் தலைப்புக்கள் வைத்திருக்கின்றார்கள் என்று என்னை கொஞ்சம் சிரிக்கச் செய்த ஒரு தலைப்பு. :-)

ஷேக்ஸ்பியரின் Taming of the Surew நகைச்சுவை நாடகத்தைத் தழுவிய நாடகம் என்ற குறிப்பு தென்படுகின்றது.  இது. டி.எஸ்.சி.சாமி என்பவரால் 1913ம் ஆண்டு எழுதி அச்சு நூலாகவும் வெளிவந்த நாடகம்.

16.சண்டியை சாதுவாக்கியது - இதுவும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு நாடகம். இந்த நாடகம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகக் கொத்து வரிசையில் பன்னிரெண்டாவது நூல். பதிப்பித்தவர் சி.குமாரசாமி நாயுடு அண்ட் சன்ஸ். 1916ம் ஆண்டிலே வெளியிட்டிருக்கின்றார்கள்.

17.சத்தியபாசா அரிச்சந்திர விலாசம்

இந்த தலைப்பில் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன.

முதலாவது, 1894ம் ஆண்டில் டி.அப்பாவுப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட நாடகம். உண்மைக்காக வாழ்ந்த  அரிச்சந்திரனின் சிறப்பு குணங்களை எடுத்துச் சொல்லும் நாடகம். 24 பக்கங்கள் அடங்கிய நூல்.

இரண்டாவது, அரிச்சந்திரனின் கதையை 15 இரவுகள் ஆடிப்பாடி நடிப்பதற்கு ஏற்றவாறு அமைக்கபப்ட்ட ஒரு நாடகம். டி . அப்பாவுப்பிள்ளையே இந்த நூலையும் செய்திருக்கின்றார். இது 799 பக்கங்களில் அமைந்த நூல் . 1905ம் ஆண்டில் வெளியிட்டிருக்கின்றனர். 

ச வரிசையிலேயே இத்தனை நாடகங்களா?  என இதனை வாசிக்கும் போது வியந்தேன். இன்னம் இருக்கின்றது. தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

2012/12/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 20, 2013, 5:10:14 AM2/20/13
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்தின் 18ம் 19ம் 20ம் நூற்றாண்டு நாடகத்துறைத் தொடர்பான தகவல்களைத்  தொகுக்க வேண்டும் என்று வெகுநாளாக எனக்கு ஆவல். அதன் ஒரு முயற்சியாக இந்தத் தொடரில் அவ்வப்போது சில குறிப்புக்களை நாடகக் கள்ஞ்சியம் நூலிலிருந்து வாசித்து எழுதி வருகின்றேன். தமிழக நாடகக் துறையில் ஆர்வம் கொண்டவர்களும் தங்கள் அனுபவங்களை  அவ்வப்போது வழங்கி கருத்து பதிந்தால் இவ்விஷயங்களைப் பற்றிய நல்ல அறிமுகம் வாசகர்களுக்கும் அமையும்.

சரி.. மேலும் சில நாடகங்களைப் பார்ப்போம்.

18. சதிசக்தி அல்லது இடையனும் இடைச்சியும் - இது ஒரு நகைச்சுவை நாடகம். பம்மல் சம்பந்த முதலியார்  தயாரிப்பு. நூலாக அச்சு வடிவட்தில் 1947ம் ஆண்டு பியர்லெஸ் அச்சுக்கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 

நாகக்கோணி கருடக் கோணான் என்ற தம்பதியிரையிடையே நடைபெறும் ஊடலை மையமாக வைத்து புணையப்பட்ட நாடகம் இது. மனைவியை ஏமாற்றி அவளிடம் சாமியார் மாறுவேடத்தில் வந்து நன்கு உணவு வாங்கிச் சாப்பிகின்றான் கருடக் கோண். இதனை நாக கோணி கண்டு பிடித்து விடுகின்றாள். பிறகு ஊடல் கூடலாகி மகிழ்ச்சியாக முடிகின்றது நாடகம்.

19. சதிசுலோசனா - இதுவும் பம்மல் சம்பந்த முதலியாரின் உருவாக்கத்தில் வந்த நாடகம். 1935ம் ஆண்டில் அச்சு வடிவத்தில் இதனை பியர்லெஸ் அச்சுக்கூடத்தில் பிரசுரித்திருக்கின்றார்கள்.

புராண இதிகாசக் கதையைத் தழுவிய ஒரு நாடகம் இது. ஆதிசேடன் மகள் சுலோசனையை இந்திரஜித் மணம் செய்துகொள்ள கடத்திச் சென்று விடுகின்றான். இந்திரஜித்தைப் பழிவாங்க எண்ணிய ஆதிசேடன்  மாறு வேடத்தில் வந்து இந்திரஜித்தின் உயிரை தானமாகக் கேட்டு வரம் பெறுகின்றான். ஆதிசேடன் மீண்டும் மறுபிரவியில் இலக்குவனாகப் பிறந்து இராமன் இராவணன் போரில் இந்திரஜித்தைக் கொல்வதாக நாடகக் கதை. 

49 பக்கங்கள் அடங்கிய நாடக  நூல் இது. கடஹியை வாசிக்கும் போதே இக்கால தமிழ் ஹிந்தி படங்களின் ஞாபகம் தான் வருகின்றது :-)

20. சதிசோனாராணி - ஆ.பார்த்தசாரதி முதலியார் கற்பனையில் உதித்த நாடகம். 1930ம் ஆண்டில் கற்பகம் கம்பெனியாரால் நூல் வடிவிலும் வெளியிடப்பட்டது.

பேரரசர் அக்பர் வரலாற்றுடன் இணைந்த  வகையில் உருவாக்கப்பட்ட நாடகம்.  நாடக வசனத்தோடு பாடல்களும் அடங்கிய நாடகம், பெண்களின் கற்பு, அதன் அடைப்படையில் சோதனை என்ற வகையில் அமைந்த ஒரு நாடகம் போல இது அமைந்திருக்கின்றது.

தொடரும்...

சுபா

2013/1/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 5:13:30 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
​சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. நாடகப் பிரியர் ஒருவர் கேட்டமையினால் என்னிடம் இருக்கும்  நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து பழைய தமிழ் நாடகங்கள் தொடர்பான விஷயங்களை இந்த இழை​யில் பகிர்ந்து வந்தேன். 

மீண்டும் இன்று இதனை தொடர்கிறேன். 

நம் குழுவில் தமிழ் நாடகங்கள், தமிழக நாடகங்களில் ஆர்வமுள்ளோர் யாராகினும் இருப்பின் அவர்களும் இணைந்து இந்த இழையை தொடரலாம். 

21. சதுரங்கம் - தவம், சதுரங்கம், சலனம், தீர்ப்பு, சங்கமம், இது ஒரு கோணம், கரியும் வைரமும், வைகறை, துருவன் ஆகிய ஒன்பது நாடகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இந்த நாடக நூல் வெளிவந்தது. பழனியப்பா பிரதர்ஸ் 1975ல் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றனர். இந்த நூலிலுள்ள நாடகங்களை எழுதிய ஆசிரியர் தி.பட்சிராசன்.

இந்த ஒன்பது நாடகங்களும் அக்கால சமூக நிலையைப் பிரதிபலிக்கும் விஷயங்களைப் பின்னனியாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது நூல் விளக்கத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

22. சந்திரகரி (சந்திரஹரி) - இது பம்மல் சம்பந்த முதலியார் எழுதி வெளியிட்ட நாடகம். 1923ம் ஆண்டு பியர்லசு அச்சுக்கூடத்தின் வெளியீடாக இது வந்தது. 60 பக்கங்களைக் கொண்ட நூல் இது.

கதையைப் பார்க்கும் போது மிக சுவாரஸியமாக இருக்கின்றது. தன் வாழ் நாளில் ஒரு உண்மை கூட சொல்லக் கூடாது என உறுதியாக இருக்கும் மன்னன் சந்திரஹரி.  அவனை மாற்ற சிட்டவாசி முனிவர் பல தந்திரங்களைச் செய்து பார்க்கிறார். ஆனால் ஏதும் பலிக்கவில்ல்லை. இறுதியில் தன் தோல்வியை முனிவர் ஒப்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பரமசிவன் தோன்றி கல்மழை பெய்வித்து அவை இயமன் உலகுக்கு அனுப்புகிறார்.

அங்கோ அவனை ஏற்க மறுக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் பாவிகளை சந்திரஹரி மேலும் கெடுத்துவிடக் கூடாது என இயமனுக்கு பயம். அவனை அங்கிருந்து மீண்டும் மண்ணுலகிற்கு அனுப்புகின்றனர். 

அரிச்சந்திரன் நாடகத்தை நையாண்டி செய்வது போல அமைக்கபப்ட்ட ஒரு நாடகம் என்றும் தெரிகிறது.

தொடரும்...

சுபா

http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
vaiyavan mspm

unread,
Feb 23, 2014, 7:39:15 AM2/23/14
to mint...@googlegroups.com
Very useful posting

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Feb 23, 2014, 11:21:46 AM2/23/14
to mintamil
நாடோடி இலக்கியங்களை பாராட்டாமல் காலம் போக்கியது தமிழகம், ஒரு
காலகட்டத்தில். நாடக இலக்கியங்கள் இரு வகைப்படும். சில படிக்க; சில
நடிக்க. அவற்றில் பல காணாமல் போயின. உமது தொகுப்பு ஒரு அருமையான தமிழ்
பணி. எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.
இன்னம்பூரான்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 23, 2014, 11:02:33 PM2/23/14
to Minthamil

2014-02-23 21:51 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.
இன்னம்பூரான்

எனக்கும் இருந்ததாலெ அப்பிடி ஒரு ஆசெ எங்கள் குடும்ப தளத்திற்கு ஒர் நாடகம் எழுதினேன், "பல்லாங்குழியும் பல் போன கிழவியும் என்று  அதன் ஒன்றிரெண்டு பகுதிகளை மோன்றே பேர் படித்ததாகத் தெரிந்தது வந்த பின்னூட்டங்களில் இருந்து.  அதை இண்டு இணைத்துள்ளேன்.  நேரம் கிடைத்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்தினைச் சொல்லவும்.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

பல்லாங்குழியும் பல் போன கிழவியும்.pdf

Nagarajan Vadivel

unread,
Feb 23, 2014, 11:51:47 PM2/23/14
to மின்தமிழ்

2014-02-24 9:32 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.

​நாங்களும் பாலபருவத்தில் நாடகம் எழுதி நாடகம் நட்ச்சவங்கதான்

அப்போதெல்லாம் திருவிழாக் கூத்து என்றபேரில் பணம்படைச்ச விடலைகளுக்குத் திடீரென்று நாடக ஆசை வந்துவிடும்

வேறென்ன நாடகத்துக்கு ஸ்த்ரீ பார்ட்டுக்கு தகரப்பெட்டி அம்மா சகிதம் நாடக நடிகை நாளுநாள் வந்து ஒத்திகை நாடகம் வரை கம்பெனி குடுப்பாய்ங்களே

அப்படி ஒரு நாடகத்துக்கு நடிக்கவந்த ​நடிகை அந்நாளைய நாடக நடிகை கே.ஆர்.விஜயாவாக்கும்

நாடகத்தை ரசிக்கவும் நாடக நடிகைகளைக் கவரவும் கைதேர்ந்த வித்தைக்காரர்கள் தஞ்சாலூர்க்காரவுகதான்

அதிலும் நாகபட்டினம் சொல்லவே வேண்டாம்.

நாடகத்துக்கென்றே ஒரு ரயிலும் யாழ்ப்பானத்தில் இருந்து பாய்மரச் சேவையும் நாகபட்டின நாடகத்துக்கு நடந்ததுன்னாப் பாத்துக்கங்க

இந்த நாடகக் கலை நாட்டார் கதையாகப் பலர் ஆழ்மனத்தில் அடிமனத்தில் உறங்குகிறது

யாராவது வெட்கத்தைவிட்டு எடுத்துவிட்டால்தான் உண்டு

மெளனம்

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2014, 12:57:50 AM2/24/14
to mint...@googlegroups.com
நானும்  பதினாலு  நாடகங்கள்  எழுதி இயக்கி உள்ளேன், அவ்வை ஷண்முகம்  விருது, பம்மல் சம்பந்த முதலியார் விருது போன்றவைகளை வாங்கி உள்ளேன்

அதைத் தவிர    சபா நாடகங்களில் கிட்டத் தட்ட  15  ஆண்டுகள்  போகாத ஊரில்லை   நடிக்காத   மேடையில்லை

சமீபத்தில் அமெரிக்காவிலும்  ஒரு நாடகத்தில் நடித்தேன்

இன்னமும் நாடகக் கலைமேல் உள்ள ஆர்வம்  குறையவில்லை

தரமான நாடகங்களை  மேடையேற்றவேண்டும்  நான் எழுதி இயக்கத் தயார்

நடிப்பு சொல்லிக் கொடுத்து  மேடையேற்றத் தயார்

நான் நடிப்புக் கலையை  முறையாக  நாடக மேடைகளில்  கற்றுக் கொண்டேன்

இயக்குனர்  திரு விசு அவர்களின்   அண்ணன் எம் ஆர் ராஜாமணி என் குரு

அவர்கள் நாடகக் குழுவில் இணைந்து   15  ஆண்டுகள்  நடித்தேன்

    திரைப்படங்களிலும்  தொலைக் காட்சித் தொடர்களிலும்  நான் நடித்தாலும்   நாடகம் நடிக்கும்போது   உடனடியாக மக்கள்  அளிக்கும்  கைதட்டலும்  உறசாகமூட்டலும்   கிடைக்கும் போது  அனுபவிக்கும்
  ஆனந்தமே தனிதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ 

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 24, 2014, 1:33:33 AM2/24/14
to mintamil
2014-02-24 11:27 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
நானும்  பதினாலு  நாடகங்கள்  எழுதி இயக்கி உள்ளேன், அவ்வை ஷண்முகம்  விருது, பம்மல் சம்பந்த முதலியார் விருது போன்றவைகளை வாங்கி உள்ளேன்

தரமான நாடகங்களை  மேடையேற்றவேண்டும்  நான் எழுதி இயக்கத் தயார

மகிழ்ச்சி சார்.
 
    திரைப்படங்களிலும்  தொலைக் காட்சித் தொடர்களிலும்  நான் நடித்தாலும்   நாடகம் நடிக்கும்போது   உடனடியாக மக்கள்  அளிக்கும்  கைதட்டலும்  உறசாகமூட்டலும்   கிடைக்கும் போது  அனுபவிக்கும்
  ஆனந்தமே தனிதான்

மிகவும் சரி. எனக்கும் ஒரு வகையில் வாய்த்தது.
 
40 ஆண்டுகள் பணியில் 30 ஆண்டுகள் நிர்வாகப் பணியிலும் பின்னர் வணிகப் பணியிலும் கழிந்துவிட்டாலும் கடைசி 10 ஆண்டுகள் பயிற்சியாளாராகக் கல்விப் பணி வாய்த்தது. பல்வேறு வயதினர். சூழலில் வந்தவர்கள்.
நம்முடைய பாடத்தை, உரையை இரசித்து, மகிழ்ந்து கைதட்டல் காதுக்கு, மனதுக்கு அளிக்கும் மகிழ்ச்சி தனிப் பேறுதான். அந்த இன்பமே இன்றும் மாணவர்களைத் தேடிச் செல்ல உந்து சக்தியாக விளங்குகிறது.
இணையத்தில் நண்பர்கள் எழுதுவதும் உடன் அங்கீகார ஏக்கமே!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Subashini Tremmel

unread,
Feb 24, 2014, 3:07:59 AM2/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-24 6:57 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

இயக்குனர்  திரு விசு அவர்களின்   அண்ணன் எம் ஆர் ராஜாமணி என் குரு

திரு.விசு அவர்களே உங்களுக்கு வழங்கிய கடிதத்தை சென்ற முரை சென்னை வந்த போது எடுத்தி வந்திருந்தீர்களே. பார்த்த ஞாபகம் இருக்கின்றது. ​​ நிறைந்த அனுபவம் உங்களுக்கு நாடகத்துறையில் இருக்கின்றது.

அவர்கள் நாடகக் குழுவில் இணைந்து   15  ஆண்டுகள்  நடித்தேன்

    திரைப்படங்களிலும்  தொலைக் காட்சித் தொடர்களிலும்  நான் நடித்தாலும்   நாடகம் நடிக்கும்போது   உடனடியாக மக்கள்  அளிக்கும்  கைதட்டலும்  உறசாகமூட்டலும்   கிடைக்கும் போது  அனுபவிக்கும்
  ஆனந்தமே தனிதான்

புரிகிறது. நேரடியாக கிடைக்கும் வரவேற்பு தரும் உற்சாகம் தனி தான்.

சுபா​​

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
..​​

Subashini Tremmel

unread,
Feb 24, 2014, 3:09:51 AM2/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-24 5:02 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

2014-02-23 21:51 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.
இன்னம்பூரான்

எனக்கும் இருந்ததாலெ அப்பிடி ஒரு ஆசெ எங்கள் குடும்ப தளத்திற்கு ஒர் நாடகம் எழுதினேன், "பல்லாங்குழியும் பல் போன கிழவியும் என்று  அதன் ஒன்றிரெண்டு பகுதிகளை மோன்றே பேர் படித்ததாகத் தெரிந்தது வந்த பின்னூட்டங்களில் இருந்து.  

ஐயா,
பலர்​​ வாசித்தாலும் பதில் இடுகை போடுவதில்லை. இது எல்லோருக்கும் நடப்பதுதான். ஆக பலர் நிச்சயம் படித்திருப்பார்கள். ரசித்திருப்பார்கள்.

சுபா

அதை இண்டு இணைத்துள்ளேன்.  நேரம் கிடைத்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்தினைச் சொல்லவும்.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Feb 24, 2014, 7:54:49 AM2/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-24 5:51 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-02-24 9:32 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.

​நாங்களும் பாலபருவத்தில் நாடகம் எழுதி நாடகம் நட்ச்சவங்கதான்

அப்படியா? என்ன கதாபாத்திரம் செய்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?​​

நாடகத்தை ரசிக்கவும் நாடக நடிகைகளைக் கவரவும் கைதேர்ந்த வித்தைக்காரர்கள் தஞ்சாலூர்க்காரவுகதான்

அதிலும் நாகபட்டினம் சொல்லவே வேண்டாம்.

நாடகத்துக்கென்றே ஒரு ரயிலும் யாழ்ப்பானத்தில் இருந்து பாய்மரச் சேவையும் நாகபட்டின நாடகத்துக்கு நடந்ததுன்னாப் பாத்துக்கங்க
அப்படியா. கொஞ்சம் விவரமாகச் சொல்லலாமே நீங்கள் ?
​​

இந்த நாடகக் கலை நாட்டார் கதையாகப் பலர் ஆழ்மனத்தில் அடிமனத்தில் உறங்குகிறது

யாராவது வெட்கத்தைவிட்டு எடுத்துவிட்டால்தான் உண்டு
பலர் தயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றே நினைக்கிறேன்.

சுபா​​

மெளனம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Suba.T.

unread,
Apr 12, 2014, 7:46:47 AM4/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த இழையில் மேலும் சில நாடகங்கள் நாடக நூல்கள் பற்றிய தகவல்களைப் பார்ப்போமா..

23. சந்திரகாச நாடகம் - இது பாலையூர் கி.இராமசாமி ஐயங்கார் என்பவரால் எழுதப்பட்ட நாடகம். சென்னை அ.மாமுண்டி பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை  என்ற பதிப்பகத்தாரால் 1911ம் ஆண்டு வெளியிடப்பட்டது இந்த நாடக நூல். 216 பக்கங்களைக் கொண்ட இந்த நாடக நூலின் கதை மகாபாரதக் கதையை தழுவியது. பாண்டவர்கள் ஐவரும் அசுவமேதயாகம் செய்த போது அர்ச்சுணனுக்கு கண்ணபிரான் கூறிய கதை இங்கே நாடகமாக்கப்பட்டது. இந்த நாடக நூல் உரைநடையும் கவிதையும் என கலந்ததாக அமைந்துள்ளது.

24.சந்திரகாந்தன் சரித்திரம் - கள்வர்கள் கூட்டத்தினரால் கவரப்பட்ட அரச குல இளவரசன் சந்திரகாந்தன் பின்னர் தனது வரலாறு அறிந்த ​பின்னர் எதிரிகளிடம் போரிட்டு தன் நாட்டைக் காப்பாறுவதே இந்த நாடகம். இது ஒரு வகையில் 50, 60ம் ஆண்டுகளில் வந்த தமிழ் சினிமா கதை போல இருக்கின்றது. சினிமா படங்கள் இத்தகைய நாடகங்களையே பின்னர் கதையாக்கியிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகின்றது.

இந்த நாடக நூலை தி.தி. அப்பாவு பிள்ளை என்பவர் எழுதியிருக்கின்றார். சி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை எலக்ட்ரிக் அச்சியந்திர சாலை என்ற பதிப்பகத்தாரால் 1925ம் ஆண்டில் இந்த நாடக நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

24. சந்திரகாந்தா - சே.ஆர். அரங்கராசு என்பவர் எழுதிய நாடக நூல் இது. சென்னை இராசு பிரஸ் என்னும் பதிப்பகத்தாரால் 1923ம் ஆண்டில் இது வெளியிடப்பட்டிருக்கின்றது.

கதைச் சுருக்கம் மிக சோகமானது. கதாநாயகி சந்திரகாந்தா ஒரு பணக்கார சீமான் ஒருவனிடம் சிக்கிக் கொள்கின்றாள். அங்கு மிகக் கொடுமைப்படுத்தப்படுகின்றாள். துன்பங்கள் பல ஏற்பட்ட பின் சந்திரகாந்தா காப்பாற்றப்படுகின்றாள் என்பது தான் கதை. 

25. சந்திர குப்தன் - சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒரு நாடகம் இது. நாடக நூலை எழுதியவர் ஆர்.நாராயணசாமி ராவ். கும்பகோணம் ஆரியன் பிரஸ் வெளியீடாக 1924ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கின்றது. சந்திரகுப்தனின் வீரச் செயல்கள், ஆட்சிச் சிறப்புக்கள் என்பன நிறைந்த ஒரு நாடகம் இது.

இந்த நாடகங்கள் பற்றி அறிந்தோரும் நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும் உங்கள் அனுபவங்களையும் சேர்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

​தொடரும்..​

​சுபா​

Suba.T.

unread,
May 18, 2014, 2:54:17 AM5/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
மேலும் சில நாடகங்களைப் பற்றிய தகவல்களை இன்று  பார்ப்போம். சில நாடகங்களின் பெயர்கள் வாசிக்கும் போது நம்மை சிரிக்க வைக்கின்றன. வித்தியாசமான முயற்சிகளில் பல நாடகக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை இது காட்டுகின்றது. 

26. சந்திர மண்டபத்தில் அறிவாளி - 1970ல் கே.கே.சானகிராமன் என்பவரால் எழுதப்பட்ட நாடக நூலாக வடிவம் கொண்ட நாடகம் இது.  சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடகத்தின் கரு அமைந்ததாகத் தெரிகின்றது. நிகழ்ச்சிகள் முழுவதையும் சந்திர மண்டலத்திலேயே நிகழ்வது போல உருவாக்கியிருக்கின்றார்கள். அக்காலத்தில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

​27. சந்திரமதி கல்யாணமென்னும் சந்திரன் கர்வபங்க நாடகம் - நா.நாகரத்தின முதலியார், வீரப் படையாச்சியார் என்னும் இருவர் இணைந்து எழுதி உருவாக்கிய நாடகம் இது. பெரிய நாயகியம்மன் அச்சுக்கூட வெளியீடாக 1934ம் ஆண்டில் வெளிவந்திருக்கின்றது இந்த நாடக நூல்.

28. சந்திர மோகன் - பேரறிஞர் சி.என் அண்ணாதுரை எழுதி பூம்புகார் பிரசுரத்தின் வெளியீடாக 1980ம் ஆண்டில் இது அச்சு வடிவிலும் வெளிவந்தது. 139 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 29 காட்சி அமைப்புக்களும் இடம் பெறுகின்றன.
இந்த நாடகம் சிவகாசி கண்ட இந்து ராச்சியம் வரலாற்றினை தழுவிய நாடகம். சுயமரியாதை இயக்கத்தில் தன்மான உணர்வையும் பகுத்தறிவு வாதத்தையும் விளக்கும் நோக்குடன் இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது.

மொழி நடை மிகச் சிறப்பாக அமைந்தஒரு நாடகப் படைப்பு இது.

29. சபதம் - கிறிஸ்துவ சமய பிரச்சார நோக்கத்துடனும் சில நாடக முயற்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் காணமுடிகின்றது. உதாரணமாக இந்த நாடகம். கிறித்தி என்ற இளம் பெண் காச நோயால் பாதிக்கப்பட்டு சமூக சேவை செய்ய இயலாமல் போகும் போது ஏனைய பிற பெண்களை கன்னிகாஸ்திரிகளாகி இறை தொண்டு பணிக்கு உரியவராக ஆக்கும் சபதம் செய்கின்றார். அதன்படி பல நல்ல உள்ளம் படைத்த பெண்களை இறை பணி செய்ய தயார் செய்து அனுப்புகின்றார். இத்திருப்பணியை விளக்குவதாக அமைந்த நாடகம் இது. இந்த நாடகம் 1972ல் தமிழ்நாடு தேவ அழைத்தல் பணி நிலையத்தாரால் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.

இந்தநாடகங்கள் பற்றி கேள்விப்பட்டோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே?

தொடர்வோம்..

சுபா​

2014-04-12 13:46 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
இந்த இழையில் மேலும் சில நாடகங்கள் நாடக நூல்கள் பற்றிய தகவல்களைப் பார்ப்போமா..

23. சந்திரகாச நாடகம் - இது பாலையூர் கி.இராமசாமி ஐயங்கார் என்பவரால் எழுதப்பட்ட நாடகம். சென்னை அ.மாமுண்டி பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை  என்ற பதிப்பகத்தாரால் 1911ம் ஆண்டு வெளியிடப்பட்டது இந்த நாடக நூல். 216 பக்கங்களைக் கொண்ட இந்த நாடக நூலின் கதை மகாபாரதக் கதையை தழுவியது. பாண்டவர்கள் ஐவரும் அசுவமேதயாகம் செய்த போது அர்ச்சுணனுக்கு கண்ணபிரான் கூறிய கதை இங்கே நாடகமாக்கப்பட்டது. இந்த நாடக நூல் உரைநடையும் கவிதையும் என கலந்ததாக அமைந்துள்ளது.

24.சந்திரகாந்தன் சரித்திரம் - கள்வர்கள் கூட்டத்தினரால் கவரப்பட்ட அரச குல இளவரசன் சந்திரகாந்தன் பின்னர் தனது வரலாறு அறிந்த ​பின்னர் எதிரிகளிடம் போரிட்டு தன் நாட்டைக் காப்பாறுவதே இந்த நாடகம். இது ஒரு வகையில் 50, 60ம் ஆண்டுகளில் வந்த தமிழ் சினிமா கதை போல இருக்கின்றது. சினிமா படங்கள் இத்தகைய நாடகங்களையே பின்னர் கதையாக்கியிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகின்றது.

இந்த நாடக நூலை தி.தி. அப்பாவு பிள்ளை என்பவர் எழுதியிருக்கின்றார். சி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை எலக்ட்ரிக் அச்சியந்திர சாலை என்ற பதிப்பகத்தாரால் 1925ம் ஆண்டில் இந்த நாடக நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

24. சந்திரகாந்தா - சே.ஆர். அரங்கராசு என்பவர் எழுதிய நாடக நூல் இது. சென்னை இராசு பிரஸ் என்னும் பதிப்பகத்தாரால் 1923ம் ஆண்டில் இது வெளியிடப்பட்டிருக்கின்றது.

கதைச் சுருக்கம் மிக சோகமானது. கதாநாயகி சந்திரகாந்தா ஒரு பணக்கார சீமான் ஒருவனிடம் சிக்கிக் கொள்கின்றாள். அங்கு மிகக் கொடுமைப்படுத்தப்படுகின்றாள். துன்பங்கள் பல ஏற்பட்ட பின் சந்திரகாந்தா காப்பாற்றப்படுகின்றாள் என்பது தான் கதை. 

25. சந்திர குப்தன் - சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒரு நாடகம் இது. நாடக நூலை எழுதியவர் ஆர்.நாராயணசாமி ராவ். கும்பகோணம் ஆரியன் பிரஸ் வெளியீடாக 1924ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கின்றது. சந்திரகுப்தனின் வீரச் செயல்கள், ஆட்சிச் சிறப்புக்கள் என்பன நிறைந்த ஒரு நாடகம் இது.

இந்த நாடகங்கள் பற்றி அறிந்தோரும் நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும் உங்கள் அனுபவங்களையும் சேர்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

​தொடரும்..​

​சுபா​

2014-02-23 11:13 GMT+01:00 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
​சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. நாடகப் பிரியர் ஒருவர் கேட்டமையினால் என்னிடம் இருக்கும்  நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து பழைய தமிழ் நாடகங்கள் தொடர்பான விஷயங்களை இந்த இழை​யில் பகிர்ந்து வந்தேன். 

மீண்டும் இன்று இதனை தொடர்கிறேன். 

நம் குழுவில் தமிழ் நாடகங்கள், தமிழக நாடகங்களில் ஆர்வமுள்ளோர் யாராகினும் இருப்பின் அவர்களும் இணைந்து இந்த இழையை தொடரலாம். 

21. சதுரங்கம் - தவம், சதுரங்கம், சலனம், தீர்ப்பு, சங்கமம், இது ஒரு கோணம், கரியும் வைரமும், வைகறை, துருவன் ஆகிய ஒன்பது நாடகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இந்த நாடக நூல் வெளிவந்தது. பழனியப்பா பிரதர்ஸ் 1975ல் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றனர். இந்த நூலிலுள்ள நாடகங்களை எழுதிய ஆசிரியர் தி.பட்சிராசன்.

இந்த ஒன்பது நாடகங்களும் அக்கால சமூக நிலையைப் பிரதிபலிக்கும் விஷயங்களைப் பின்னனியாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது நூல் விளக்கத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

22. சந்திரகரி (சந்திரஹரி) - இது பம்மல் சம்பந்த முதலியார் எழுதி வெளியிட்ட நாடகம். 1923ம் ஆண்டு பியர்லசு அச்சுக்கூடத்தின் வெளியீடாக இது வந்தது. 60 பக்கங்களைக் கொண்ட நூல் இது.

கதையைப் பார்க்கும் போது மிக சுவாரஸியமாக இருக்கின்றது. தன் வாழ் நாளில் ஒரு உண்மை கூட சொல்லக் கூடாது என உறுதியாக இருக்கும் மன்னன் சந்திரஹரி.  அவனை மாற்ற சிட்டவாசி முனிவர் பல தந்திரங்களைச் செய்து பார்க்கிறார். ஆனால் ஏதும் பலிக்கவில்ல்லை. இறுதியில் தன் தோல்வியை முனிவர் ஒப்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பரமசிவன் தோன்றி கல்மழை பெய்வித்து அவை இயமன் உலகுக்கு அனுப்புகிறார்.

அங்கோ அவனை ஏற்க மறுக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் பாவிகளை சந்திரஹரி மேலும் கெடுத்துவிடக் கூடாது என இயமனுக்கு பயம். அவனை அங்கிருந்து மீண்டும் மண்ணுலகிற்கு அனுப்புகின்றனர். 

அரிச்சந்திரன் நாடகத்தை நையாண்டி செய்வது போல அமைக்கபப்ட்ட ஒரு நாடகம் என்றும் தெரிகிறது.

தொடரும்...

சுபா

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 18, 2014, 6:23:05 AM5/18/14
to Minthamil
நாடகமே உலகம் என்று பாடினார் ஒருவர்.  நாடகம் என்றால் அதில் நகைச் சுவையும் தேவை.  நகைச் சுவை அளிப்பதோ ஒரு கோமாளி.

பெரியோர்கள் எல்லாம் அறிவு பூர்வமான தன் ஆக்கங்களைத் தந்திடும் பொது இந்தக் கோமாளியும் படைத்திடுறேன் சிலவற்றை, "நாடகமே உலகம் - திரைக்குப் பின்னால்" என்ற தனி இழையில்.  அடிக்க வந்திடாதீர் என்னை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 25, 2014, 4:13:35 PM7/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
நாடகக் களஞ்சியம் வழங்கும் மேலும் சில நாடகங்களைப் பாற்றிய தகவல்களைத் தொடர்கின்றேன். இந்த நாடகங்களைப் பற்றி மேலும் தகவல் அறிந்தோர் தகவல் பகிர்ந்து கொள்ளலாமே.

30.சந்திராபீட சரிதம் - வடமொழியில் முதலில் காதம்பரி என்ற பெயரில் எழுதப்பட்ட இந்நாடக நூல் ஒரு தமிழாக்க முயற்சி. விவரணையைப் பார்க்கும் போது பொதுமக்களுக்குச் சமூகத்தில் நீதி, அறம் என்பன பற்றி வலியுறுத்தும் நாடகம் போலத் தெரிகின்றது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், கனவு தவறாது பலிக்கும், வேட்டையாடுதல் வருத்தத்தை உண்டாக்கும், கணவரைப் பிரிந்த மகளிரின் நிலை, வரம்புடன் கூடிய ஒழுக்கம், பெற்றோரிடம் புதல்வர் ஒழுகவேண்டிய முறை ஆகியன பற்றி விளக்கும் கதைப் பின்னனியைக் கொண்டதாகத் தெரிகிறது.

68 பக்கங்கள் கொண்ட இந்த நாடக நூலை வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் எழுதியிருக்கின்றார். 1918ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.

31.சபலை - வடமொழி மட்டுமல்ல, ஆங்கிலத்தில் வெளிவந்த நாடகக் கதையைப் பின்னனியாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட நாடக முயற்சிகளும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக இந்த நாடக நூல். இது  ஈஸ்ட் லின் (East Lynne)  என்ற பெயரில் அமைந்த ஆங்கில நாடக நாவலைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட நாடக நூல். அ.கிருஷ்ணசாமி ஐயரால் சென்னை ஸ்டார் ஆஃப் இந்தியா பிரஸ் பதிப்பகத்தாரால் 1910ம் ஆண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

32. சபாபதி துணுக்குகள் - இது 5 நாடகங்களின் தொகுப்பாக பம்மல் சம்பந்த முதலியாரால் எழுதப்பட்டு அருட்பெருஞ்சோதி பதிப்பகத்தாரால் 1949ம் ஆண்டில் வெளிவந்த நாடக நூல்

இந்த நாடக நூலில் இடம்பெறும் 5 நாடகங்கள்:
  • சபாபதியும் தமிழ் வாத்தியாரும்
  • சின்னச்சாமி வாத்தியாரும் கன்னியம்மாளும்
  • வேலைக்கார சபாபதியும் சிவகாமுவும்
  • சபாபதி முதலியார் பாடம் கற்றது
  • சபாபதி முதலியார் விடம் சப்பிட்டது

இந்த ஐந்து நாடகங்கள் பற்றியும் அடுத்த பதிவில் சற்று விரிவாக தகவல் பகிர்ந்து கொள்கின்றேன்.

தொடரும்..
சுபா

Suba.T.

unread,
Jul 31, 2014, 3:26:42 PM7/31/14
to மின்தமிழ், Subashini Tremmel
குறிப்பு - நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

சபாபதி துணுக்குகள் என்ற நாடகத்தில் 5 நாடகங்கள் இடம்பெறுகின்றன என முந்தைய பதிவினில் குறிப்பிட்டிருந்தேன். 

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் இவை. இதில் இரண்டு கதாபாத்திரங்கள் சபாபதி என்ற பெயருடன் வலம் வருகின்றன. ஒன்று சபாபதி என்ற வேலைக்காரன், மற்றொரு கதாபாத்திரம் சபாபதி முதலியார் என்ற முதலாளி மகன்.

1. சபாபதியும் தமிழ் வாத்தியாரும் - இது இந்த நூலில் முதலாவதாக இடம்பெறும் நாடகம். சின்னச்சாமி என்ற தமிழாசிரியர் ஒருவர். அவர் பாடம் நடத்தத் தெரியாதவர், ஒழுங்கு இல்லாதவர் என்ற பெருமைகளை :-) உடையவர்.  இந்த நாடகத்தில் சபாபதி அவரை பலவகையில் கிண்டல் செய்வதாக கதையமைப்பு அமைந்துள்ளது.  சபாபதியின் கிண்டலைப் பார்த்து மாணவர்கள் சிரிக்கின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியரோ  மாத ஊதியத்தைக் குறைத்து விடுவதாக எச்சரிக்கின்றார்.

நாடகம் முழுமைக்கும் நான்கே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.

2. சின்னசாமி வாத்தியாரும் கன்னியம்மாளும் - இது இந்த நூலில் இரண்டாவதாக இடம்பெறும் நாடகம். இதிலும் சின்னசாமி ஒரு தமிழ் ஆசிரியர் கதாபாத்திரத்தில் வருகின்றார். அவர் ஏழை. ஏழ்மை நிலையை வைத்து ஏதோ ஒரு வகையில் அவரது மனைவி கன்னியம்மாள் சின்னசாமியை ஏமாற்றுகின்றார். பதிலுக்கு சின்னசாமியும் கன்னியம்மாளை ஏமாற்றுகின்றார். சூசகமாக  இந்த இருவரது பண்புகளும் இந்த நாடகஹ்ட்தில் உணர்த்தப்படுகின்றன. அக்காலத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு குறைந்து வந்த நிலை இந்த நாடகத்தில் பூடகமாகக் காட்டப்படுகின்றது.

நாடகம் முழுமைக்கும் மூன்றே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.

​3. வேலைக்கார சபா​பதியும் சிவகாமுவும் - இது இந்த நூலில் மூன்றாவதாக இடம்பெறும் நாடகம். வேலைக்காரன் சபாபதியும் வேலைக்காரி சிவகாமுவும் யாரும் அறியாமல் மறைவாகச் சந்தித்துத் தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதைத் தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை சொல்கின்றனர். திருமணமும் நடக்கின்றது. இவர்களது கதையையே இந்த நாடகம் விவரிக்கின்றது. இது ஒரு நகைச்சுவை நாடகம்.

நாடகம் முழுமைக்கும் இரண்டே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.

4. சபாபதி முதலியார் பாடம் கற்றது - இது இந்த நூலில் நான்காவதாக இடம்பெறும் நாடகம்.  இதுவும் ஒரு நகைச்சுவை நாடகமே. இளைஞன் சபாபதி முதலியாருக்குப் பாடம் ஏறுவதில்லை. குறிப்பாக கணிதம் புரியவே புரியாது. இந்த சபாபதிக்கு பக்கத்து வீட்டு ஞானாம்பாளை திருமணம் செய்ய உறுதி செய்கின்றார்கள். ஞானாம்பாள் தன் வருங்கால கணவனுக்கு யாருக்கும் தெரியாமல் வந்து கணக்குப் பாடம் கற்றுத் தருகின்றாள்.  ஒரு நாள் சபாபதியின் தந்தை இதனை கண்டு பிடித்து விடுகின்றார். பாடம் தொடர்கின்றது. சபாபதி ஞானாம்பாள் கற்றுக் கொடுத்து நன்கு கற்று தேர்விலும் வெற்றி பெருகின்றான். இதுவே நாடகம்.

நாடகம் முழுமைக்கும் நான்கே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.

5. சபாபதி முதலியார் விடம் சாப்பிட்டது - இது இந்த நூலில் நான்காவதாக இடம்பெறும் நாடகம். இந்த நாடகத்தில் சபாபதி முதலியார் தேர்வில் தோற்றுவிட்டதால் சாக நினைக்கின்றான். வேலைக்கார சபாபதியிடம் தனக்கு நஞ்சு வாங்கி வரக் கூறுகிறான். வேலைக்கார சபாபதி மருத்துவரிடம் சென்று இதனைக் கூற, மருத்துவர் நஞ்சுக்குப் பதில் இனிப்பு பாயாசம் கொடுத்து அனுப்புகின்றார். இந்த பாயாசத்தை நஞ்சு என நினைத்து சாப்பிட்டு விட்டு சாவு இன்னமும் வரவில்லையே என காத்திருக்கின்றான் சபாபதி முதலியார்.  அப்போது மனைவி ஞானாம்பாளும் மருத்துவரும் வந்து விஷயம் அறிந்து கேட்டு சிரிக்கின்றனர். 

இதே நாடகத்தில் வேலைக்கர சபாபதியை எல்லோரும் அவன் தலையில் மண்ணாங்கட்டி இருப்பதாக சொல்வதை நினைத்து  வீட்டுக்குச் சென்று தலைகீழாக அவன் நிற்கின்றான்.  அப்படி நின்றால் இரத்தம் தலைக்கு வந்து மண்ணாங்கட்டி கரைந்துவிடும் என்று நிற்பதாகத் தன் மனைவியிடம் சொல்கின்றான்.  தன் மனைவியிடம் தான் கற்ற பாடங்களை தப்பும் தவறுமாகச் சொல்லி அவளையும் சிரிக்க வைக்கின்றான். 

ஆறு கதாமாந்தர்களைக் கொண்ட நாடகம் இது. ஒரு நகைச்சுவை நாடகம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

தொடரும்..

K R A Narasiah

unread,
Jul 31, 2014, 4:51:07 PM7/31/14
to mintamil
சுதேசமித்திரன் வார இதழில் தொடர்ந்து சம்பந்த முதலியார் எழுதி வந்த் கட்டுரைகள் (!@) உள்ளன. சென்னைக்குச் சென்ற பிறகு விவரம் சொல்கிறேன்
நரசய்யா

On Fri, Aug 1, 2014 at 12:56 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info

2014-07-25 22:13 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

--

Suba.T.

unread,
Jul 31, 2014, 5:59:15 PM7/31/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-31 22:51 GMT+02:00 K R A Narasiah <naras...@gmail.com>:
சுதேசமித்திரன் வார இதழில் தொடர்ந்து சம்பந்த முதலியார் எழுதி வந்த் கட்டுரைகள் (!@) உள்ளன. சென்னைக்குச் சென்ற பிறகு விவரம் சொல்கிறேன்
​.

​ஆஹா, மிக முக்கியமான தகவலாயிற்றே. ​நிச்சயம் மின்னாக்கம் செய்து வைக்க வேண்டும்.

சுபா

Suba.T.

unread,
Aug 1, 2014, 11:26:47 AM8/1/14
to மின்தமிழ், Subashini Tremmel
நேற்று நான் பதிந்திருந்த சபாபதி துணுக்குகள் நூல்.. அதிலுள்ள சபாபதி நாடகம் பற்ரி மாலனின் மேலும் சில கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் வந்திருந்தன. அதனைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

சபாபதி திரைப்படம் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தை தழுவியதுதான் அந்ததத் திரைப்படம் குறித்த சில தகவலகள் (நன்றி தமிழா தமிழா வலைப்பூ) தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற
்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்.http://tvrk.blogspot.com/2010/10/3.html
tvrk.blogspot.com
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

Suba.T.

unread,
Sep 29, 2014, 3:08:38 PM9/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து தொடர்கிறேன்..

33. சபாபதி பாகம் 1 - இதுவும் பம்மல் சம்பந்த முதலியாரின் மற்றுமொரு நாடக நூல்தான். இவருக்கு சபாபதி என்ற பெயர் பிடிக்கும் போலிருக்கின்றது. செல்வந்தர்கள் வீட்டு பிள்ளைகள் போலியான மதிப்பை முன்வைத்து எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்ற வகையில் அமைக்கப்பட்ட ஒரு நாடகம். நினைத்துப் பார்க்கும் போதே 60களில் வெளிவந்த சினிமா படங்களின் சில கதாபாத்திரங்கள் கண் முன்னே தெரிகின்றன.

இக்கதையில் சபாபதி முதலியார் புகழ் பெற்ற மாணிக்க முதலியாரின் மகன். பணக்காரர் வீட்டுப் பிள்ளையென்றால் வால் என்ன கொம்பே முளைத்து விடும் அல்லவா..? அப்படி ஒரு கதாபாத்திரம். சரியாக படிக்காமல் தேர்வில் தோற்று விடுகின்றார் சபாபதி. நண்பர்களுடன் வீணாக பொழுதைப் போக்குகின்றார். ஆனால் தான் ஒரு திறமைசாலி என வெளியே எல்லோருக்கும் போலியாக வேஷம் போட்டுக் காட்டுகின்றார். இதுதான் கதை.

இது 52 பக்கங்கள் கொண்ட நாடக நூல் சென்னை அருட்பெருஞ்சோதி அச்சகத்தாரால்1956ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

34. சபாபதி முதலியாரும் பேசும் படமும் -  சபாபதி என்ற கதாபாத்திரத்தைக் கொண்ட மேலும் ஒரு நாடகம் இது. இந்த நாடகமும் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகமே. 

சபாபதி வேலையில்லாமல் இருக்கின்றார். என்ன செய்யலாம் என யோசிக்கின்றார். அக்காலகட்டத்தில் தானே திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆக ஒரு பேசும் படம் எடுக்கலாமே என்று இந்த பணக்கார வாலிபனுக்கு ஆசை. பலரை அனுகி பேசிகின்றார். நடிகர் தேர்வும் நடைபெறுகின்றது. பலர் தாம் பெரிய நடிகர்கள் என பொய் சொல்லிக் கொண்டு நடிக்க வருகின்றனர். பின்னர் இவர்களது பொய்கள் தெரியவருகின்றன. ஒரு பேசும் படம் எடுப்பதென்றால் எளிமையான காரியமல்ல என்பதைச் சபாபதி உணர்கின்றார். திரைப்படம் எடுப்பதில் இருக்கும் சிரமங்களை விளக்கும் வகையிலான ஒரு படம் இது. சமூக நாடக வகையைச் சேர்ந்தது. 

28 பக்கங்கள் கொண்ட இந்த நாடக நூல் சென்னை அருட்பெருஞ்சோதி அச்சகத்தாரால்1956ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

35. சம்பவாமி யுகே யுகே - இந்த நாடகத்தைச் சோ அவர்கள் நடித்து வானொலி நாடகமாகக் கேட்ட ஞாபகம் எனக்கு இருக்கின்றது. இந்த நாடகத்தின் ஆசிரியர் சோ இராமசாமி. இது நூல் வடிவில் சென்னை மங்கல நூலகத்தாரால் 1969ல்  அச்சு வடிவில் வெளியிடப்பட்டது. அரசியல் சமூகக் கருத்துக்கள் நிறைந்த ஒரு நாடகம் இது. சிந்தனைக்கு உகந்த சீரிய கருத்துக்கள் நிறைந்த நாடகம்.

தொடரும்...

சுபா

2014-07-31 21:26 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

--
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

Suba.T.

unread,
Oct 10, 2014, 11:41:48 AM10/10/14
to மின்தமிழ், Subashini Tremmel

நாடகக் களஞ்சியம் நூல் தரும் தகவல் தொகுப்பிலிருந்து தமிழக நாடக முயற்சிகள் பற்றிய சில தகவல்கள்.. தொடர்கின்றேன்.

36. சம்பூர்ண அரிச்சந்திரா - 66 பக்கங்கள் கொண்ட ஒரு நாடக நூல் இது. 15 காட்சிகள் இந்த நாடகத்தில் இடம்பெறுகின்றன. குற்றாலம் பிள்ளை என்பவர் எழுதிய இந்த நூல் நாடகமாகவும் அரங்கேறியது. நாடக நூல் சென்னை இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்  பதிப்பகத்தாரால் 1980ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்த நாடகம் புராணக் கதையை தழுவியது. இசைப் பாடல்கள் நிறைந்த, ஆங்காங்கே உரை நடை வசனங்களும் இடம் பெறும் நூல் இது.

37. சம்பூர்ண இராம நாடகம் - சம்பூர்ண இராமாயணம், இராம நாடகம் என்ற தலைப்பில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சில நாடகங்கள் 20ம் நூற்றாண்டில் பல்வேறு காலகட்டங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. 

அவற்றில் இந்த சம்பூர்ண இராம நாடகம் என்னும் நூல் சி.செங்கைய பக்தர் என்பவரால் எழுதப்பட்ட நாடகம். இது நூலாக ஆதிலெட்சுமி நாராயணா பிரசின் வெளியீடாக 1914ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்த நாடகம் இராமாயண இதிகாசக் கதையை தழுவிய நாடகம். உரை நடையுடன் இசைப்பாடல்களும் அமைந்த நாடகம். பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரை என ஆறு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது இந்த நாடக நூல். 

தியாகரராஜ பாகவதர் கால சினிமா படங்கள் போல இந்த நாடகம் இருந்திருக்கும் போல!

38. சம்பூர்ண இராம நாடகம் - அதே தலைப்பில் மேலும் ஒரு நாடகம். ஆனால் இராமாயணக் கதை முழுமையையும் நாடகமாகக் கொண்டது இந்த நாடகம். இதனை எழுதியவர் வெங்களத்தூர் சாமிநாத சர்மா அவர்கள்.   நூலாக சென்னை வி.சி. இரமணி காந்தம்மாள் திருமகள் விலாசம் அச்சியந்திரசாலையில் 1923ம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட நூல் இது.

நாடகத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு ராக தாள குறிப்புக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரமும் தெரிகின்றது.

தொடரும்..

சுபா

Suba.T.

unread,
Dec 25, 2014, 3:33:29 AM12/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழக நாடக முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயன் தரும் என்ற வகையில் களைக்களஞ்சியம் தரும் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கின்றேன்.

39. சம்பூர்ண ராமாயணம் - ஏகை சண்முகம்பிள்ளை எழுதி உருவாக்கிய நாடகம் இது. சென்னை திருமகள் விலாசம் பிரசினால் 1936ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சம்பூர்ண ராமாயணம் என்ற பெயரில் திரைப்படம் கூட வெளிவந்தது   எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

ராமன் பிறப்பிலிருந்து முடிசூடுவது வரைக்குமுள்ள முக்கிய நிகழ்ச்சிகளை நன்கு தொகுத்து இந்த நாடக நூலை ஆசிரியர் எழுதியிருக்கின்றார். இசைப்பாடல்கள் அதிகமாக நிறைந்த நாடகம்.

40. சம்பூர்ண கோவலன் - இந்த நாடக நூலை எழுதியவர் பி.சம்பந்தம் எனபவர். மதுரை சி.எம்.பி.அச்சகத்தாரால் 1934ம் ஆண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. 30 பக்கங்கள் கொண்டது இந்த நூல். கோவலனின் கதையை முழுமையாகக் கூறும் நாடகம். கண்ணகி கோவலன் திருமணம், மாதவியிடம் செல்தல்  பின்னர் வறுமையுற்று கண்ணகியுடன் மதுரைக்கு வருதல், திருடன் என வீண்பழி சுமத்தப்பட்டு கொல்லப்படுதல், மதுரை நகர் கண்ணகியின் சாபத்தால் தீக்கிரையாகுதல் என ஏறக்குறைய முழு கதையைக் கொண்டு அமைந்தது இந்த  நாடகம். இதே கதையின் அடிப்படையில் திரைப்படமாகவும் வந்ததாக அறிய முடிகின்றது.

41. சம்பூர்ண சகுந்தலா சரித்திரம் - வி.ர.தியாகராச செட்டியார் எழுதிய நாடகம் இது. 56 பக்கங்கள் கொண்ட இந்த நூல் செல்வரங்கன் பிரஸ், தியாகராச செட்டியார் பதிப்பாக வெளிவந்தது. வடமொழியில் காளிதாசன் எழுதிய நாடகத்தைத் தழுவி துசியந்தன்-சகுந்தலை காதல் கதையைத் தமிழில் தருகிறது இந்த நாடக நூல். அதிக பாடல்களும் உரையாடலுமாக அமைந்த நாடகம் இது.

42. சம்பூர்ண மகாபாரதம் - ஏகை சிவசண்முகம் பிள்ளை எழுதிய நூல். இதன் சிறப்பாவது, இந்த நூல் கடினமான மொழி நடை என்றில்லாமல் சாதாரண மக்களும் சுவைக்கத்தக்க முறையில் மகாபாரதம் முழுதும் நாடகமாக்கப் பட்டுள்ளது. இதில் பாரதக் கதை இடையறாது கூறப்படுகின்றது.  மேடை நாடகத்துக்கு ஏற்றவாறு காட்சி அமைப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இசைப்பாடல்களும் நிரம்பியுள்ளன. இது அக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு நாடகமாகத் திகழ்ந்தது. இதன் காரணமாக பல இடங்களில் இந்த நாடகம் நடந்தேறியது என்ற விஷயத்தையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

தொடர்வோம்..

சுபா

க்ருஷ்ணகுமார்

unread,
Dec 25, 2014, 6:37:26 AM12/25/14
to mint...@googlegroups.com
சபாபதி திரைப்படம் நாலைந்து முறையாவது பார்த்திருப்பேன். சபாபதியும் தமிழ் வாத்யாரும் மறக்க முடியாத காட்சிகள்.

Oru Arizonan

unread,
Dec 25, 2014, 1:20:31 PM12/25/14
to mintamil
நானும் 'சபாபதி' திரைபடம் பார்த்து வயிறு குலுங்கச்சிரித்திருக்கிறேன்.  பழைய படங்களில் கருத்து இருந்தது, குழப்பம் இல்லை.  

On Thu, Dec 25, 2014 at 4:37 AM, க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com> wrote:
சபாபதி திரைப்படம் நாலைந்து முறையாவது பார்த்திருப்பேன். சபாபதியும் தமிழ் வாத்யாரும் மறக்க முடியாத காட்சிகள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Dec 26, 2014, 6:23:42 AM12/26/14
to mintamil
நான் நடித்திருக்கிறேன். சுகுணவிலாஸ் சபா: 1952. டைரக்‌ஷன்: ஒய்.ஜி.பட்டு.

இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Dec 26, 2014, 8:08:50 AM12/26/14
to mint...@googlegroups.com
20 வயதில்      நாடகத்தில்  ஈடுபடத் தொடங்கினேன்

முதலில் ஒரு நாடகம்  நடித்தேன்,   21ம் வயதில்      ஒரு நாடகம் எழுதி  இயக்கினேன்

14 மேடை  நாடகங்கள் எழுதி இயக்கி  [பல முதற் பரிசுகள் பெற்றேன்

புஷ்பா தங்கதுரை, எழுத்தாளர்   லக்ஷ்மி  டாக்டர்   திரிபுரசுந்தரி அவர்கள் , உயர் திரு பாலச்சந்தர்,உயர் திரு நாகேஷ்,     எஸ் பீ முத்துராமன்,  எஸ் வீ வெங்கட்ராமன் (எஸ் வீ சேகர் அவர்களின் தந்தையார்)   கூத்த பிரான்  , ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர்  புனிதவதி இளங்கோவன் அவர்கள்,  இயக்குனர்  திரு விசு, அவர்கள்,  உயர் திரு எம் ஆர் ஆர்  ராஜாமணி அவர்கள்  , முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள், போன்ற பல நாடக, திரை   வித்தகர்களால் பாராட்டப்பட்டேன்

இத்தனைக்கும் மேலாக  என் தாயார்  ஆர் கமலம்மாள் அவர்கள் மகிழும் வண்ணம் நாடகம் எழுதினேன், இயக்கினேன்  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்  

(தரமாக இல்லையென்றால்   அவர்கள்    நானே எழுதி இயக்கினாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்)

என் நாடக  அனுபவங்களை  எழுதவேண்டும்   என்றுதான்  நினைக்கிறேன்

விரைவில் எழுதுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Suba.T.

unread,
Dec 26, 2014, 9:16:04 AM12/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-12-26 12:23 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நான் நடித்திருக்கிறேன். சுகுணவிலாஸ் சபா: 1952. டைரக்‌ஷன்: ஒய்.ஜி.பட்டு.

​அப்படியா.. என்ன நாடகம் அது?

சுபா
 
சி. ஜெயபாரதன்

unread,
Dec 26, 2014, 9:57:05 AM12/26/14
to mintamil, vallamai, tamilmantram
கடந்த 13 ஆண்டுகளாக திண்ணையில் [http://puthu.thinnai.com/ ;  http://www.thinnai.com/index.php; http://jayabarathan.wordpress.com/ ] வெளிவந்த ​எனது மூல நாடகம் சீதாயணம், தமிழாக்க நாடகங்கள் ஆஸ்கர் ஒயில்டின் ஸாலமி, பெர்னாட்ஷா & ஷேக்ஸ்பியரின் கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீசர், உன்னத மனிதன், ஜோன் ஆஃப் ஆர்க்,  ​ஆயுத மனிதன், ஆப்ரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், வேதாளத்தின் மாணாக்கன், படக்கதை நாடகம் முக்கோணக் கிளிகள் போன்றவை.

சி. ஜெயபாரதன்.

--

வேந்தன் அரசு

unread,
Dec 28, 2014, 11:10:03 PM12/28/14
to vallamai, mintamil, tamilmantram

26 டிசம்பர், 2014 ’அன்று’ 6:56 முற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

கடந்த 13 ஆண்டுகளாக திண்ணையில் [http://puthu.thinnai.com/ ;  http://www.thinnai.com/index.php; http://jayabarathan.wordpress.com/ ] வெளிவந்த ​எனது மூல நாடகம் சீதாயணம், தமிழாக்க நாடகங்கள் ஆஸ்கர் ஒயில்டின் ஸாலமி, பெர்னாட்ஷா & ஷேக்ஸ்பியரின் கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீசர், உன்னத மனிதன், ஜோன் ஆஃப் ஆர்க்,  ​ஆயுத மனிதன், ஆப்ரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், வேதாளத்தின் மாணாக்கன், படக்கதை நாடகம் முக்கோணக் கிளிகள் போன்றவை.

சி. ஜெயபாரதன்.

ஒரு நாள் படிச்சிருவேன் 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Suba.T.

unread,
Jan 7, 2015, 4:30:39 PM1/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழக நாடக முயற்சியில் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பயன் தரும் என்ற நம்பிக்கையில் இந்த இழையைத் தொடர்கின்றேன்.

43. சம்பூர்ண சிறீ சக்குபாய் சரித்திரம் - டி.ஏ.சண்முகம்பிள்ளை அவர்களின் நாடகம் இது. நூல் வடிவில் 1934ம் ஆண்டு  இந்த நாடக நூல் வெளிவந்தது. 56 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 19 காட்சிகளில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. கதை கற்புக்கரசியான சக்குபாய் அம்மையாரின் சீரியப் பத்தினித் திறத்தை விளக்குவதாக அமைக்கப்பட்டது. பொதுவாகவே பக்தர்கள் திருவருளால் சோதிக்கப்படுவதும் பின்னர் அப்பக்தர்களின் உண்மையான பக்தி அவர்களுக்கு வெற்றியையே தருவது போலவும் பல கதைகள் பார்த்திருப்போம். அதே வகையிலான ஒரு கதையமைப்புடன் கொண்ட ஒரு நூல் இது.

44. சமத்கார சற்குண சாவித்திரி - சத்தியவான் சாவித்திரியின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம். நூல் வடிவில் சென்னை முரசுரி பிரசு வாணி விலாச பிரசினால் 1923ம் ஆண்டில் நூலாக பதிப்பிக்கப்பட்டது இந்த நாடகம். இதன் ஆசிரியர் சி.சின்னப்ப நாயுடு.

45. சமுதாயச் சிற்பிகள் - திரு. ஆறு.இராமனாதன் என்பவரால் எழுதி உருவாக்கப்பட்ட நாடகம் இது . வசந்த மலர் மதிப்பகத்தாரால் 1974ம்  ஆண்டில் பதிப்பிக்கபப்ட்டது.  இது சற்றே நவீன கதையமைப்பைக் கொண்ட நாடகம். பலகலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்கள்  செய்யும் விளையாட்டுக்களை மையமாக வைத்து புனையப்பட்டகதை. நள்ளிரவில் பல்கலைக்கழகத் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தோப்பில் இளநீர் திருடி  பின்னர் உரிமையாளரிடம் பிடிபட்டு தண்டனைக்குள்ளாவது போல சித்தரிக்கப்பட்ட கதை.  சமூகச் சிந்தனைகளை வெளிப்படுத்துவது போல அதே வேளை இளைஞர்களின் மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுவது போல அமைக்கப்பட்ட நாடகம் இது.

46. சயந்தவன் சண்டை நாடகம் - திரு.கிருட்டிணசாமி நாயக்கர் என்பவரால் எழுதி உருவாக்கப்பட்ட நாடக நூல் இது. சென்னை, சூரை தனலக்‌ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலையினரால்  1911ம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது.  பாரதப் போரில் பதினான்காம் நாள்  நிகழ்ந்த போரில் சயந்தவன் பெற்ற பங்கு பற்றிய கதையைத் தழுவிய நாடகம் இது.

தொடரும்

சுபா

Suba.T.

Suba.T.

unread,
Mar 20, 2015, 2:51:42 PM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த கலை இலக்கிய வளர்ச்சியில் நாடகத்துறையின் வளர்ச்சி என்பது தனிச்சிறப்பு பெறுவது. 

இந்த இழையில் அக்காலகட்டத்தில் நடத்தப்பட்ட நாடகங்கள் பற்றியும் அவற்றிற்கு அடிப்படையாக அமைந்த நூல்களைப் பர்றியும் தொடர்ந்து தகவல் பகிர்ந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியை காண்போம்.

47. சயிந்தவ நாடகாலங்காரம் - மகாபாரதக் கதையைப் பின்னனியாகக் கொண்ட நாடகம் இது. அதில் சயிந்தன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதி வடிவமைக்கப்பட்ட நாடகம் தான் ஒது. இதன் ஆசிரியர் விக்கிரவாண்டி சாலை கிருட்டிணப்பிள்ளை என்பவர். 88 பக்கங்கள் கொண்ட இந்த  நூல் சென்னை அருணாசல முதலியார் பதிப்பிபகத்தாரால் 1919ம் ஆண்டில் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. அதே  கிருட்டிணப்பிள்ளை அவர்களால் இதே நாடகம் மீண்டும் 1973ம் ஆண்டில்  சயிந்தவ நாடகம் என்ற பெயரில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

48. சர்சன் செனரல் விதித்த மருந்து - வி.வி.சிறீனிவாச ஐயங்கார் எழுதிய ஆங்கில மூல குறுநாடகமே தமிழாக்கம் செய்யப்பட்டு இப்பெயருடன் வெளிவந்தது.  இது ஒரு நகைச்சுவை நாடகம். கர்னல் கமர் என்ர ஆங்கில சர்ஜன் ஒருவர் சீதாபதி முதலியார் என்ற கதாபாத்திரத்தின் நோய்க்கு வழங்கிய மருத்து பற்றியது இந்த நாடகம்.  வைத்தியத்துக்கான மருத்துவ முறைகளில் பிழைகள் நடப்பதை நகைச்சுவையாக சொல்லும் நாடகம். இதனை எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார் . 1929ம் ஆண்டில் சென்னை இந்தியா அச்சுக்கூடத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது. 25 பக்கங்கள் கொண்ட நூல் இது.

49. சரச பூடணம் சரித்திரம் - இந்த தலைப்பே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.  பார்சி ஒரிசினல் பாய்சு கம்பெனி என்ற நாடகக்குழு நடத்திய நாடகம் இது. 1920ம் ஆண்டில்  வேலூர் நாராயணசாமிப் பிள்ளை என்பவரால் நூலாக எழுதப்பட்டது. சென்னை ஆதிமூலம் முதலியார் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 56 பக்கங்கள் கொண்ட நூல் இது.

50.சரசாங்கி - 1897ல் முதலில் இந்த நாடகம் நூலாக வடிவம் பெற்றது என்பதுடன் நாடகமாகவும் அரங்கேற்றம் கண்டது. சேக்ஸ்பியர் நாடகத்தைத் தழுவி பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை இந்து வாலிய நாடகச் சங்கத்து உறுப்பினர்கள் நடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட நாடகம் இது. அடிப்படையில் அரச குடும்பத்துக் கதை. அரசன் மகள் சரசாங்கி அவளது காதல் என்பதாக கதை செல்கின்றது. தி.இரா.சலசலோசன் செட்டியார் என்பவர் இந்த நாடகத்தை எழுதினார். முதற்பதிப்பு 1897ம் ஆண்டில் சென்னை தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டது. ஐந்து அங்கங்களும் 17 காட்சிகளும் கொண்ட நாடகம் இது.

தொடரும்..
சுபா

ஜீவ்ஸ்

unread,
Mar 21, 2015, 9:09:46 AM3/21/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
என்னிடம் அல்லி அரசாணி மாலை என்றொரு புத்தகம், தொட்டாலே உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது.  இது ஏற்கனவே மின் தமிழ் சேகரிப்பில் இல்லை என்றால் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய  அனுப்பி வைக்கிறேன். ( பெங்களூர் திரும்பியதும் ) 

Suba.T.

unread,
Mar 21, 2015, 9:39:23 AM3/21/15
to ஜீவ்ஸ், மின்தமிழ்
​அருமை. மிக்க நன்றி

சுபா​

2015-03-21 14:09 GMT+01:00 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
என்னிடம் அல்லி அரசாணி மாலை என்றொரு புத்தகம், தொட்டாலே உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது.  இது ஏற்கனவே மின் தமிழ் சேகரிப்பில் இல்லை என்றால் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய  அனுப்பி வைக்கிறேன். ( பெங்களூர் திரும்பியதும் ) 

Innamburan S.Soundararajan

unread,
Mar 21, 2015, 8:16:04 PM3/21/15
to mintamil, ஜீவ்ஸ்
நான் ஒழுங்காகப் படித்து வருகிறேன்.

--

Suba.T.

unread,
Apr 17, 2015, 6:29:18 PM4/17/15
to ஜீவ்ஸ், மின்தமிழ், Subashini Tremmel
2015-03-21 14:09 GMT+01:00 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
என்னிடம் அல்லி அரசாணி மாலை என்றொரு புத்தகம், தொட்டாலே உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது.  இது ஏற்கனவே மின் தமிழ் சேகரிப்பில் இல்லை என்றால் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய  அனுப்பி வைக்கிறேன். ( பெங்களூர் திரும்பியதும் ) 

​இந்த நூல் மின்னாக்கம் செய்து விட்டீர்களா ஐயப்பன்?
​சுபா​

Suba.T.

unread,
Apr 17, 2015, 6:57:25 PM4/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்தின் 20ம் நூற்றாண்டு நாடக முயற்சிகளைப் போலவே இலங்கையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களைப் பற்றியும் தகவல் சேகரிக்கச் சொல்லி சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் செய்ய நிச்சயம் இலங்கைத் தமிழ் நண்பர்களின் உதவியும் எனக்குத் தேவை.

சரி.. தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த தமிழகத்தின் தமிழ்  நாடக முயற்சிகளின் தகவல்களைத் தொடர்கின்றேன்.

51. சராசந்த நாடகம் - இசைக்கவிதையும் உரை நடையும் இணைந்த வகையில் அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது. மகாபாரதத்தின் கதாபாத்திரங்களான சராசந்தன், சிசுபாலன் இருவரது வரலாற்றையும் சொல்லும் வகையில் புணையப்பட்ட நாடகம். இந்த நூல்19ம் நூற்றாண்டின் இறுதியில் வந்திருக்கலாம். நூல் வெளியிடப்பட்ட ஆண்டும், ஆசிரியரின் பெயரும் நூலில் குறிப்பிடப்படவில்லை. 100 பக்கங்கள் கொண்ட நூல் இது. சென்னை பி.இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட நாடக நூல் இது.

52. சராசந்தன் பீமனாலும் சிசுபாலன் கிருட்டிணமுர்த்தியாலும் இறந்த இராசசூய யாகம் - இந்த நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரங்கள் மகாபாரத பாத்திரங்களான சராசந்தனும் சிசுபாலனும் தான்.  நாடகத்தின் மையக் கருத்து பாண்டவர்கள் நடத்திய இராசசூய யாகம் பற்றியது. 71 பக்கங்கள் கொண்ட இந்த நாடகநூலை ஏ.எசு.சதாசிவதாசு என்பவர் எழுதி 1923ம் ஆண்டில் இந்த நூல் முனிசாமி முதலியார்-பெரிய நாயகி அம்மன் அச்சுக்கூடத்தாரல் வெளியிடப்பட்டது.

53. சரிநிகர் சமானம் - இது சற்றே புதிய நாடக நூல் என்று சொல்லலாம். திரு.ஆர்.தயாநிதி என்பவர் 1976ம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நான்கு நாடக நூல்களின் தொகுப்பே இந்த நாடக நூல்.

இதில் இடம்பெறும் நான்கு நாடகங்களாவன:
அ. சரிநிகர் சமானம் -  நூலின் தலைப்பு இந்த நாடகத்தை சார்ந்ததே. 68 பக்கங்கள் கொண்ட நாடகம்.  நாடகத்தின் மையக் கருத்தாக அமைவது சாதி வேறுபாட்டைக் களைந்து பிறப்பால் ஒரு மனிதருக்கு ஏற்றத்தாழ்வு இருக்கின்றது என்பதை மறுக்கும் கதை.  சாதி வேற்றுமையை வலியுறுத்தாத சமுதாயம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நாடகம்.

ஆ.முள் நடுவே ரோசா - 7 கதாமாந்தர்கள் கொண்ட இந்த நாடகத்தின் மையக் கருத்தாக அமைவது குடிப்பழக்கத்தால் ஒரு மனிதர் அடையும் சீர்கேடு என்பதைப் பற்றியது.

இ. பாலும் உப்பும் -  8 கதாமாந்தர்களைக் கொண்ட இந்த நாடகம் இந்த நூலில் மூன்றாவதாக இடம்பெறுகின்றது. பணத்திற்கு மிகுதியான மதிப்புக் கொடுப்பதையும் தகுதியற்ற செயல்களையும் சீர்கெட்டையும் கண்டிக்கின்ற சமுதாயத்தைக்காட்டும் கதையை மையமாகக் கொண்ட நாடகம் இது.

ஈ. நிலவின் மறுபக்கம் -11 கதாமாந்தர்களைக் கொண்ட நாடகம் இது. நூலின் இறுதி நாடகமாக அமைவது. அம்பிகாபதி என்ற எழுத்தாளன் குடிகாரன் என்பதை அறியாத உமா திருமணத்திற்குப் பிறகு இதனை அறிய வர வெளி உலகத்தோருக்காக தனது மனக்கஷ்டங்களை மறைத்து துன்பத்தில் வாழும் நிலையைக் காட்டும் ஒரு நாட்கம்.

அடுத்தபதிவில் மேலும் சில தலைப்புக்களிலான நாடகங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

தொடர்வோம்

சுபா

Mohanarangan V Srirangam

unread,
Apr 17, 2015, 11:12:33 PM4/17/15
to min tamil

2015-04-18 4:27 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
தமிழகத்தின் 20ம் நூற்றாண்டு நாடக முயற்சிகளைப் போலவே இலங்கையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களைப் பற்றியும் தகவல் சேகரிக்கச் சொல்லி சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் செய்ய நிச்சயம் இலங்கைத் தமிழ் நண்பர்களின் உதவியும் எனக்குத் தேவை.

தமிழ்த்தேனியாரின் நாடகத் துறை அனுபவங்கள் சுவையானவை, பலரகப்பட்டவை. வளரும் நாடக ஆக்குநர்களுக்கு நல் உதவியாய் அமையக் கூடியவை. அவர் தமது அனுபவங்களை எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ பதிவு செய்வது நல்ல ஆவண முயற்சியாகவும் அமையும்.

***

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2015, 12:25:52 AM4/18/15
to mint...@googlegroups.com
​ஆஹா!   மாட்டிவிட்டாரையா

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Suba.T.

unread,
Apr 18, 2015, 1:23:17 AM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-18 6:25 GMT+02:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​ஆஹா!   மாட்டிவிட்டாரையா

​ண்மைதானே தமிழ்த்தேனியார்.
தங்கள் நாடக முயற்சிகளை இந்த இழையில் பதியுங்கள். இந்த இழைக்கு கூடுதல் சிறப்பளிக்கும்.

சுபா​

Suba.T.

unread,
Apr 18, 2015, 1:24:29 AM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
​தாங்களும் இலம் வயதில் நாடகத்துறையில் அனுபவம் உள்ளவர் என்றே நினைக்கின்றேன்.
உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே.

சுபா
 
Tthamizth Tthenee

unread,
Apr 18, 2015, 1:24:44 AM4/18/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பதிகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2015, 1:28:21 AM4/18/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
​அதானே!  

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2015, 1:40:41 AM4/18/15
to min tamil
சில இழைகள் எனக்கு வரவே மாட்டேன் என்கிறது. என்ன செய்ய ;-))

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2015, 1:57:41 AM4/18/15
to mint...@googlegroups.com
இழைந்தால் வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

தேமொழி

unread,
Apr 18, 2015, 2:49:29 AM4/18/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
குழும உறுப்பினர்களில் மேலும் சிலரும் நாடகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் சுபா...

எனக்கு சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்....

விசாகை திரு. திவாகர் அவர்களும்  திரு. கிரேசி மோகன் அவர்களும்.

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
May 1, 2015, 11:58:33 PM5/1/15
to min tamil
மேதினம் அன்று ரிலீஸாகும் என்று நம்பி எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ’தமிழ்த்தேனியாரின் நாடக அனுபவங்கள்’ என்று ரிலீஸாகும் என்று கேட்கிறார்கள். தொடர்பு கொண்டு கேட்டால் ‘நீங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளீர்கள்’ என்று வருகிறது. தமிழ்த்தேனியாரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ;-)

***

Tthamizth Tthenee

unread,
May 2, 2015, 12:05:48 AM5/2/15
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ

"ஒரு கதாபாத்திரத்தின்  தன்மையை உள்வாங்கி  கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டுவது  நடிப்பல்ல

மீண்டும்  எந்த வினாடியும்  தன் இயல்பு நிலைக்கு வர இயன்றால்  அதுவே  நடிப்பின் உச்சம்"

இப்படி   கொதிநிலைக்கும்    குளிர்நிலைக்கும்   மாறி மாறி  வர   இயன்றால்   அதுவே   நடிப்பு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

2015-05-01 20:58 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மேதினம் அன்று ரிலீஸாகும் என்று நம்பி எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ’தமிழ்த்தேனியாரின் நாடக அனுபவங்கள்’ என்று ரிலீஸாகும் என்று கேட்கிறார்கள். தொடர்பு கொண்டு கேட்டால் ‘நீங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளீர்கள்’ என்று வருகிறது. தமிழ்த்தேனியாரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ;-)

***

--

துரை.ந.உ

unread,
May 2, 2015, 1:24:19 AM5/2/15
to Groups
2015-05-02 9:35 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ

"ஒரு கதாபாத்திரத்தின்  தன்மையை உள்வாங்கி  கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டுவது  நடிப்பல்ல

மீண்டும்  எந்த வினாடியும்  தன் இயல்பு நிலைக்கு வர இயன்றால்  அதுவே  நடிப்பின் உச்சம்"

​ 

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Suba.T.

unread,
May 17, 2015, 10:07:01 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
நாடகக் களஞ்சியம் தரும் தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் வெளிவந்த நாடக நூல்கள், அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பற்றிய தகவல்களை இந்த இழையில் பகிர்ந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

54. சலந்திராசூர நாடகம் - இந்த நாடக நூலை எழுதியவர் வீராசாமி படையாட்சி. நூல் சென்னை சண்முகானந்தா புத்தக சாலை பதிப்பகத்தினரால் 1927ம் ஆண்டில் நூலாக அச்சு வடிவம் கண்டது. ஸ்ரீகந்தபுராணத்தில் வருகின்ற ஒரு பகுதியாகிய சலந்திராசூரசம்மாரம் பகுதியே இந்த நாடகத்தின் மையப்பொருள். கதைப்படி, சலந்திராசூரனின் வலிமையை தாங்கமுடியாது அஞ்சிய தேவேந்திரன் மகாஷ்ணுவிடம் சென்று தஞ்சமடைகின்றான். மகா விஷ்ணுவால் சலந்திரா சூரனை அடக்க முடியவில்லை. பின்னர் தேவேந்திரன் கயிலை சென்று சிவபெருமானிடம் புகலிடம் கேட்கிறான். சிவபெருமான் சினம் கொண்டு சூரனைக் கொன்று இரு கூறுகளாக்கி விடுகின்றார். சலந்திரசூரனை இவ்வாறு சம்ஹாரம் செய்த கதையைத் தழுவிய இசை நாடகமே இது.

55.சலனமா? சாகசமா? - உசாகாந்தன் என்ற நாடக ஆசிரியர் எழுதிய நாடக நூல் இது. 1962ம் ஆண்டில் ஈரோடு கைத்தறி நெசவாளர் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட நூல். 4 அங்கங்களைக் கொண்ட இந்த நாடகத்தில் 13 காட்சிகள் உள்ளன.10 கதாமாந்தர்கள் நடிக்கும் வகையில் புனையப்பட்ட கதை.  மனிதருக்கு எழும் ஆசை, சபலம், ஆபாசம் ஆகியன பற்றி வெளிப்படுத்தும் ஒரு உளவியல் நாடகம்.

56. சவால் சம்பந்தம் - ஆலந்தூர் கோ.மோகனரங்கன் என்பவர் எழுதிய நாடக நூல் இது. 8 ஓரங்க நாடகங்கள் அடங்கிய நூல் தொகுப்பு. இதில் 
  • மனமாற்றம், 
  • சவால் சம்பந்தம்,
  • இதயம் காணவில்லை,
  • சைக்கிள் ரிக்சா
  • புத்திசாலி மாப்பிள்ளை
  • பெரிய மனிதன்
  • யார் பக்கம்
  • ஏமாற்றம்
என்ற எட்டு நாடகங்கள் உள்ளன. வசந்தா பதிப்பகத்தினரால் 1978ல் முதல் பதிப்பும் பின்னர் 1982ல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தன. 134 பக்கங்களைக் கொண்ட நூல் இது.

57. சவிட்டு நாடகம் - சவிட்டு நாடகம் என்பது மிகப்புதுமையான ஒரு பெயராக எனக்குத் தோன்றுகின்றது. நாடகக்களஞ்சியம் நூலில் அ.நா.பெ என்பவர் இது பற்றி விளக்கியுள்ளதாக குறிப்பு உள்ளது. அதன் அடிப்படையில், சவிட்டு நாடகம் எனப்படுவது கேரளாவில் இலத்தீன் கிறித்துவரிடம் வழக்கத்தில் உள்ளது. இது போர்த்துக்கீசியரால் அறிமுகம் செய்யப்பட்டதாக அறியப்படுவது. சவிட்டு நாடகத்திற்கும் 17ம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய ஓபரா நாடக வகைக்கும் ஒப்புமை உள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த சின்னத்தம்பி அண்ணாவி சவிட்டு நாடகத்தைக் கேரளாவிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. சவிட்டு நாடகக் காட்சிகளில் நடிப்பு வேகமும் அளவுமுறைத் தன்மைகளும் இருப்பதாக அறியமுடிகின்றது. பாய்ச்சல் துள்ளல் தன்மைகள் உள்ளன. இது சுவடு முறைத் தன்மையைக் காட்டும் சுவடு முறைகளும் பாடல்களும் இணைந்த நாடக வகையாகக் கருதலாம். இதில் விருத்தப்பாக்கள் மிகுதியாக இடம் பெறும். இசைப்பாடல்கல், உரை நடை உரையாடல்கள், கண்ணிகள் விரவி வரும். கையெழுத்துப் படியாக உள்ள மூவரசர் நாடகம் அல்லது மூவரசர் நாடக வாசிப்பு நடிக்கப் பெற்ற சவிட்டு நாடகம் (அ.நா.பெ.)

சுபா

Suba.T.

unread,
May 29, 2015, 6:10:58 AM5/29/15
to மின்தமிழ், Subashini Tremmel, kattalai kailasam
2015-05-17 16:06 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
57. சவிட்டு நாடகம் - சவிட்டு நாடகம் என்பது மிகப்புதுமையான ஒரு பெயராக எனக்குத் தோன்றுகின்றது. நாடகக்களஞ்சியம் நூலில் அ.நா.பெ என்பவர் இது பற்றி விளக்கியுள்ளதாக குறிப்பு உள்ளது. அதன் அடிப்படையில், சவிட்டு நாடகம் எனப்படுவது கேரளாவில் இலத்தீன் கிறித்துவரிடம் வழக்கத்தில் உள்ளது. இது போர்த்துக்கீசியரால் அறிமுகம் செய்யப்பட்டதாக அறியப்படுவது. சவிட்டு நாடகத்திற்கும் 17ம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய ஓபரா நாடக வகைக்கும் ஒப்புமை உள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த சின்னத்தம்பி அண்ணாவி சவிட்டு நாடகத்தைக் கேரளாவிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. சவிட்டு நாடகக் காட்சிகளில் நடிப்பு வேகமும் அளவுமுறைத் தன்மைகளும் இருப்பதாக அறியமுடிகின்றது. பாய்ச்சல் துள்ளல் தன்மைகள் உள்ளன. இது சுவடு முறைத் தன்மையைக் காட்டும் சுவடு முறைகளும் பாடல்களும் இணைந்த நாடக வகையாகக் கருதலாம். இதில் விருத்தப்பாக்கள் மிகுதியாக இடம் பெறும். இசைப்பாடல்கல், உரை நடை உரையாடல்கள், கண்ணிகள் விரவி வரும். கையெழுத்துப் படியாக உள்ள மூவரசர் நாடகம் அல்லது மூவரசர் நாடக வாசிப்பு நடிக்கப் பெற்ற சவிட்டு நாடகம் (அ.நா.பெ.)

சுபா

​திருநெல்வேலி நண்பர் டாக்டர்.கட்டளை கைலாசம் அவர்கள் சவிட்டு நாடகம் லிங்க் அனுப்பியிருந்தார்கள். ஏனையோரும் பார்த்து மகிழலாம். 1 மணி நீர நாட்டிய நட்டகம்.​ அவருக்கு நம் நன்றி.

​சுபா
 
Suba.T.

unread,
Jun 5, 2015, 5:50:20 PM6/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்து நாடக முயற்சிகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம். நாடகக் களஞ்சியம் நூலில் குறிப்புக்களின் உதவியோடு இதனை வழங்குகின்றேன்.

58. சவுக்கடி சந்திரகாந்தா - பெயரைக் கேட்டாலே தைரியமான ஒரு பெண்ணின் கதையைப் பின்னனியாகக் கொண்ட நாடகமோ என ஊகிக்க வைக்கும் தலைப்பாக இருக்கின்றது அல்லவா?
இது நாடகம் என்று மட்டுமல்லாமல் பின்னாளில் திரைப்படமாகவும் வந்த கதை. இதனை எழுதியவர் கே.ஆர்.ரங்கராஜூ என்பவர். கதை இன்னாளிலும் நாம் அறிந்த ஒரு விஷயம் தான். மடாதிபதிகள் சிலர் மக்களை ஏமாற்றி சமய நெறியிலிருந்து விலகி போலித்தனம் செய்வதும் தீய ஒழுக்கத்தில் செயல்படுவதும் என்பது புதிய விஷயமல்ல என்ற வகையில் அமைந்த நாடகம். இந்தக் கதையில் காமச்செயல்களில் ஈடுபட்ட ஒரு மடாதிபதியின் வாழ்க்கையை கதாசிரியர்  படைத்துள்ளார். சந்திரகாந்தா என்ற துணிச்சலான பெண் சவுக்கு கொண்டு செயல்பட்டு சமூக சீர்திருத்தத்தை செய்வது போன்ற ஒரு நாடகம் இது. எந்த ஆண்டு வெளிவந்த  நூல் என்பன போன்ற வேறு குறிப்புக்கள் கிடைக்கவில்லை.

59. சர்குண சாவித்திரி - இந்த நாடக நூல் கந்தசாமிப்பிள்ளை என்பவரால் 1915ம் ஆண்டு எழுதப்பட்டு சென்னை சிவகாமி விலாசம் பிரசில் அச்சிடப்பட்ட நாடக நூல்.  எமனிடம் போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் கதையை மையக் கருவாகக் கொண்டு அமைந்த நாடக நூல் இது.

இதே ஆசிரியர் சற்குண சாவித்திரி அல்லது கற்பின் வெற்றி என்ற பெயரில் ஒரு நாடக நூலை வெளியிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட கதையே மையக் கருவாகவும் உள்ளது. இந்த நூல் சென்னை கணபதி முதலியார் வெளியீடாக 1915லும் பின்னர் 1926லும் வெளியிடப்பட்டது.

60.சனாபாய் சரித்திர நாடகம் -  இது சனாபாய் எனப்படும் ஒரு அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்த நாடக நூலின் ஆசிரியர் திரு.எம்.நடேச சுந்தர். சென்னை மனோரஞ்சனி பிரசின் வெளியீடாக 1933ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்தது. 56 பக்கங்களைக் கொண்ட ஒரு நாடக நூல் இது.

தொடரும்..

சுபா

Suba.T.

unread,
Jul 9, 2015, 6:47:20 PM7/9/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

61. சனீசுவர பகவான் - சண்முகப் பெருமான் சண்டை நாடகம் - இதனைப் பற்றிய விரிவான தகவல் கிடைக்கவில்லை.

62. சாகரன் - கே.சேசாத்திரி ஐயர் என்னும் நாடக ஆசிரியரால் எழுதபப்ட்ட நூல் இது. 1922ம் ஆண்டில் வெளிவந்த நாடக நூல். பதிப்பகம் பற்றிய தகவல் கிடைக்க வில்லை.  இந்த நாடகம் சற்று வித்தியாசமானது. இந்த  நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு பண்புக் குறிப்புக்களை அடையாளம் காட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அகிம்சன் (தோழன்), இதோபதேசன் (மந்திரி), சுத்த பிரம்மசாமன் (குரு), சாகரன் (விகடன்), சுபாசினி (தாய்) ஆகியவை இதில் வரும் கதாபாத்திரங்கள். தாயுணர்வு, வீர உணர்வு, சிந்தனைச் செயலுணர்வு, அறிவற்ற செயலுணர்வு போன்றவை நாடக ஓட்டத்தில் இயல்பாக விளக்கப்படுகின்றன.  நாடக வசனங்கள் மிக நீளமானவையாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  அறிவுரை கூறும் வகையில் அமைக்கப்பட்ட நாடகக் கதை இது.

63.சாகுந்தல நாடகம்  - காளிதாசர் வடமொழியில் எழுதிய சாகுந்தலம் காவியத்தின் தமிழாக்கம் இது. பல நாடக ஆசிரியர்கள் இந்தக் கதையை மையமாக வைத்து நாடகங்கள் அமைத்திருக்கின்ரனர் என்பதை அறிய முடிகின்றது.
சுதேசமித்திரன் பதிப்பாக எசு.சாமிநாத சாத்திரி எழுதிய ஒரு நாடக நூல் 1902ம் ஆண்டில் வெளிவந்தது. 

அ.கு. ஆதித்தர் எழுதி இரீட் அண்ட் கம்பெனி வெளியீடாக 1938ம் ஆண்டில் ஒரு நாடக நூல் வெளிவந்தது, இதன் கதை வசனம்  எளிய தமிழில் அமைந்தது.

மறைமலையடிகள் (நாகை வேதாசலம் பிள்ளை) அவர்கள் இயற்றிய இதே தலைப்பிலான ஒரு நாடக நூல் 1907ம் ஆண்டில் வெளிவந்தது. இது 146 பக்கங்கள் கொண்ட நாடக நூல். இது சற்று கடினமான தமிழ் நடையைக் கொண்ட நாடக நூல்.

சாகுந்தல சரித்திரம் என்ற பெயரில் பூமிபாலக தாசு என்பவர் இயற்றிய ஒரு நாடக நூல் 1924ல் வெளிவந்தது. 

மறைமலையடிகளின் மற்றுமொரு முயற்சியாக சாகுந்த நாடக மொழி பெயர்ப்பும் அதன் ஆராய்ச்சியும் என்ற  நூல் சென்னை இ.எம்.பிரசு வெளியீடாக 1934ல் வெளிவந்தது. இந்த நூல் சற்று வித்தியாசமான அமைப்பைக் கொண்டது. மூன்று பிரிவுகளைக் கோண்ட நூல். 
முதல் பிரிவில் நாடக ஆராய்ச்சிக் குறிப்புக்கள் 182 பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன.
2ம் பிரிவில் நாடகம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
3ம் பிரிவில் சாகுந்தலம் நாடகம் விளக்கக் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. நாடகம் முழுமையும் தூய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Suba.T.

unread,
Sep 2, 2015, 5:48:38 PM9/2/15
to மின்தமிழ், Subashini Tremmel
சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்.
தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

64. சாத்தியமா - டி.எல்.ஆர்.சந்திரன் என்பவர் 1937ம் ஆண்டு எழுதி சென்னை மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் வெளியீடாக வந்த  ஒரு நாடக நூல் இது.
இந்த நாடகம் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்த  நிலையை  விளக்கும் தன்மை கொண்ட வகையில் அமைக்கப்பட்டது. இது கூட்டுறவு என்ற வகையான வர்த்தக முறையை ஆதரிக்கும் குறிக்கோளுடன் அதே சமயம் அதனை செயல்படுத்த முனைந்த கதாநாயகனுக்கு ஏற்படும் சிக்கல்களை விளக்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்ட மையக் கருத்தைக் கொண்ட ஒரு நாடகம். 

65. சாத்மீக சற்குண ஞான சவுந்தரி - இந்த நாடகத்தை நா.கிருட்டிணசாமி நாயுடு என்பவர் எழுதி மதுரை எக்சல்சியர் பிரசு பதிப்பாக  இந்த நூல்1928ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 36 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நாடக நூல் இது.   கதை வசனங்களை விட பாடல்களால் ஆன ஒரு நாடகம் இது. ஒரு அபலைப் பெண்ணான ஞான சவுந்தரி காட்டில் விடப்பட்டு பல இன்னல்கள் உற்று பின்னர் ஒரு மன்னரை மணந்து அன்னை மரியாளின் அருளால் நல்ல வாழ்க்கையைப் பெற்று வாழ்வதாக அமையும் ஒரு மையக் கருவைக் கொண்ட நாடகம்.

66.சாந்தகுண சக்குபாய் சரித்திரம் - ச.க. சங்கரலிங்கக் கவிராயர் என்பவர் எழுதிய ஒரு நாடக நூல். 1932ம் ஆண்டில் சென்னை பி.இரத்தினசபாபதி அண்ட் சன்சு பதிப்பகத்தாரல் வெளியிடப்பட்டது.  ஒரு கற்புக்கரசியான சக்குபாய் தன் கற்பை காக்கப்படும் பெறும் துன்பத்தை விளக்குவது போல அமைந்த நாடகம் இது. 

தொடரும்..
சுபா

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்

Suba.T.

unread,
Oct 27, 2015, 4:05:46 PM10/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
​சில வாரங்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்.
தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

67. சாந்தி - 1957லும் மீண்டும் 1975லும் இருபதிப்புக்களாக வெளிவந்த நாடக நூல் இது. இன்று பலரும் நன்கறிந்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் வெளியீடாக இந்த நாடக நூல் வெளி வந்தது.  ஏழு ஓரங்க நாடகங்கள் அடங்கிய நாடகங்களின் தொகுதி என அறியமுடிகின்றது. அவை, சாந்தி, நீதி, கனிவு, பக்தி, தோல்வி, மானம் சாவு என்ற ஏழு நாடகங்களாகும்.

சாந்தி - இது பழங்கால வரலாற்று விசயம் ஒன்றின் நாடக வடிவம்.  கலிங்கப்போரில் மாபெரும் வெற்றி பெற்ற மாமன்னன் அசோகன் போர்க்கள அவலங்களைக் கண்டு மனம் நொந்து இனி போரிடுவதே வேண்டாம் என முடிவு எடுக்கின்றான். இதனை தனது ஆட்சிக்குக் கீழ் இருக்கும் நாடுகளிலும் இச்செய்தி பரவுமாறு ஆட்களை அனுப்பி தெரிவிக்கின்றான். எங்கும் சாந்தியும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதை தன் அரசியல் கொள்கையாக அறிவிக்கின்றான். இதுவே இந்த நாடகத்தின் மையக் கதை.

நீதி - ஒரு நாட்டில் எல்லா பிரஜைகளுக்கும் ஒரே வகையான நீதி இருக்க வேண்டும். அரசனுக்கு ஒன்றும் ஆண்டிக்கு ஒன்றும் என இருக்கக் கூடாது தவறுசெய்யும் எவரும் குற்றவாளிதான் என்னும் கருத்தை மையமாக வைத்து மன்னர் மக்கள் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை கொண்ட நாடகம் இது.

கனிவு - போரினால் ஏற்படும் இன்னல்களைக் காஞ்சி மன்னன் தொண்டைமானிடமும் தகடூர் மன்னன் அதியமானிடமும் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் ஔவையின் கதை.

பக்தி - தன் நாட்டு மன்னனைக் காக்க வேண்டி செயல்புரியும் ஒரு கோயில் பூசாரியின் கதையைப் பின்புலமாகக் கொண்ட நாடகம்.

தோல்வி - அப்சல்கான், சிவாசி என்ற இரு பாத்திரங்கள். அதில் பிசப்பூர் சுல்தானின் தளபதி  சிவாசியைக் கொலை செய்ய  செய்யும் சதி வேலையைக் கதைப்பின்னனியாக கொண்ட நாடகம் இது.

மானம் - சாதாரணக் குடிமகன் ஒருவனின் தன்மான உணர்வுகளைச் சித்தரிக்கும் ஒரு நாடகம் இது. அரசனிடமிருந்து தன் மகளைக் காக்க பெற்றோரே மண்ணில் குழி வெட்டி தன் மகளை  புதைத்து விடும் ஒரு கதை.  இது ஒரு வகை கொலை. ஆயினும் இங்கு தன்மானம் என்ற வகையில் நாடகத்தின் மையக்கருவாக வைத்து   பின்னப்பட்டுள்ளது.

சாவு - சேரன் இரும்பொறையைச் சோழன் கோச்செங்கணான் ஒரு போரில் தோற்கடித்து சிறை வைக்கின்றான். அவனை மிக மோசமாக சிறையில் நடத்த மனம் பொறுக்காது சோழனின் முறையற்ற செயலை எண்ணி வாடி இறந்து போகின்றான் சேரன். அரசர்கள் வரலாற்றுக் கதை இந்த நாடகத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது.

இந்த ஏழு நாடகங்களையும் எழுதியவர் தே.ப.பெருமாள் என்பவர்.

தொடரும்.
சுபா

K R A Narasiah

unread,
Oct 28, 2015, 12:33:41 AM10/28/15
to mintamil
முன்னரே சொன்னபடி, சுதேசமித்திரன் வாரமலரில் தொடர்ந்து 30களில் ப. சம்பந்த முதலியார் அவரது நாடக முயற்சிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகள் உள்ளன. 
சென்னை வரும்போது நீங்கள் அவற்றை எனது இல்லத்தில் பார்க்கலாம். 
நரசய்யா

On Wed, Oct 28, 2015 at 1:35 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info

​சில வாரங்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்.
தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

67. சாந்தி - 1957லும் மீண்டும் 1975லும் இருபதிப்புக்களாக வெளிவந்த நாடக நூல் இது. இன்று பலரும் நன்கறிந்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் வெளியீடாக இந்த நாடக நூல் வெளி வந்தது.  ஏழு ஓரங்க நாடகங்கள் அடங்கிய நாடகங்களின் தொகுதி என அறியமுடிகின்றது. அவை, சாந்தி, நீதி, கனிவு, பக்தி, தோல்வி, மானம் சாவு என்ற ஏழு நாடகங்களாகும்.

சாந்தி - இது பழங்கால வரலாற்று விசயம் ஒன்றின் நாடக வடிவம்.  கலிங்கப்போரில் மாபெரும் வெற்றி பெற்ற மாமன்னன் அசோகன் போர்க்கள அவலங்களைக் கண்டு மனம் நொந்து இனி போரிடுவதே வேண்டாம் என முடிவு எடுக்கின்றான். இதனை தனது ஆட்சிக்குக் கீழ் இருக்கும் நாடுகளிலும் இச்செய்தி பரவுமாறு ஆட்களை அனுப்பி தெரிவிக்கின்றான். எங்கும் சாந்தியும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதை தன் அரசியல் கொள்கையாக அறிவிக்கின்றான். இதுவே இந்த நாடகத்தின் மையக் கதை.

நீதி - ஒரு நாட்டில் எல்லா பிரஜைகளுக்கும் ஒரே வகையான நீதி இருக்க வேண்டும். அரசனுக்கு ஒன்றும் ஆண்டிக்கு ஒன்றும் என இருக்கக் கூடாது தவறுசெய்யும் எவரும் குற்றவாளிதான் என்னும் கருத்தை மையமாக வைத்து மன்னர் மக்கள் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை கொண்ட நாடகம் இது.

கனிவு - போரினால் ஏற்படும் இன்னல்களைக் காஞ்சி மன்னன் தொண்டைமானிடமும் தகடூர் மன்னன் அதியமானிடமும் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் ஔவையின் கதை.

பக்தி - தன் நாட்டு மன்னனைக் காக்க வேண்டி செயல்புரியும் ஒரு கோயில் பூசாரியின் கதையைப் பின்புலமாகக் கொண்ட நாடகம்.

தோல்வி - அப்சல்கான், சிவாசி என்ற இரு பாத்திரங்கள். அதில் பிசப்பூர் சுல்தானின் தளபதி  சிவாசியைக் கொலை செய்ய  செய்யும் சதி வேலையைக் கதைப்பின்னனியாக கொண்ட நாடகம் இது.

மானம் - சாதாரணக் குடிமகன் ஒருவனின் தன்மான உணர்வுகளைச் சித்தரிக்கும் ஒரு நாடகம் இது. அரசனிடமிருந்து தன் மகளைக் காக்க பெற்றோரே மண்ணில் குழி வெட்டி தன் மகளை  புதைத்து விடும் ஒரு கதை.  இது ஒரு வகை கொலை. ஆயினும் இங்கு தன்மானம் என்ற வகையில் நாடகத்தின் மையக்கருவாக வைத்து   பின்னப்பட்டுள்ளது.

சாவு - சேரன் இரும்பொறையைச் சோழன் கோச்செங்கணான் ஒரு போரில் தோற்கடித்து சிறை வைக்கின்றான். அவனை மிக மோசமாக சிறையில் நடத்த மனம் பொறுக்காது சோழனின் முறையற்ற செயலை எண்ணி வாடி இறந்து போகின்றான் சேரன். அரசர்கள் வரலாற்றுக் கதை இந்த நாடகத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது.

இந்த ஏழு நாடகங்களையும் எழுதியவர் தே.ப.பெருமாள் என்பவர்.

தொடரும்.
சுபா
2015-09-02 23:48 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

--

Suba

unread,
Feb 11, 2016, 3:10:46 PM2/11/16
to மின்தமிழ், Subashini Tremmel
சில மாதங்கள் கடந்து விட்டன. மீண்டும் இந்தப் பதிவைத் தொடர்கின்றேன்.

தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

68. சாந்தி எங்கே? - ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடகம் இது. பணி ஓய்வு பெற்ற சாந்தியின் தந்தை கைலாசம் ஒரு நாடக் குழு வைத்து ஆர்வலர்களுக்கு நாடகம் கற்றுக் கொடுகின்றார். அதில் சாந்தியும் ஒருவர். வீட்டில் இருக்கும் மருமகள் பவானி,  சாந்தி வேற்று சாதி ஆண்களுடன் இணைந்து நடிப்பதை பிடிக்காது  இந்த நாடக வகுப்பு முயற்சிகளை தடுக்க முயற்சிக்கின்றார். வேற்று சாதி இளைஞனான பாபுவை சாந்தி காதலித்து விடுவாளோ என்று பயத்தையும் கிளப்பி விடுகின்றாள்.  சாந்தி தன் சாதிக்காரனான குமாரை மணப்பதினால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று கருதி குமாரை மணக்க முடிவு செய்கின்றாள். அதே வேளை பாபுவுடன் தொடர்ந்து நாடகத்தில் இணைந்து நடிக்கவும் குடும்பத்தார் சம்மதத்தை பெற்று விடுகின்றாள். இது தான் நாடகத்தின் மையக் கதை. மெரீனா என்ற நாடக ஆசிரியரால்  எழுதப்பட்டு, பூரம் பப்ளிகேசன்சினால் 1977ம் ஆண்டில் இது  பதிப்பிக்கப்பட்டது. 160 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. சாதிப் பிரச்சனை தமிழக சூழலில் தொடர்ந்து இருந்து வருவது. சாதி மாறி குடும்பத்தில் திருமணம் செய்து விடுவரோ என்ற அச்ச உணர்வை மையமாக வைத்து அதற்கு ஒரு தீர்வு தருவது போல இந்த நாடகத்தை உருவாக்கி இருக்கின்றனர். இப்படியும் ஒரு நாடகம்.

69. சாமக்கோழிகள் சங்கம் - இரண்டு நாடகங்களை உள்ளடக்கிய நூலில் இது முதல் நாடகம்.  இது மதம்சார்ந்தது. கிறித்துவ சமய நம்பிக்கையைப் பரப்பும் பெண்களை மையமாக வைத்து புனையப்பட்ட நாடகம் இது. இந்த நாடகத்தில் வரும் பெண்கள் குடும்பங்களில் இருக்கும் பெண்களிடம் பேசி அவர்கள் கணவன்மார்களுக்குத் தெரியாமல் அவர்களை மதமாற்றம் செய்வதைக் குறை கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது இந்த நாடகம்.  'ஒருவர் எந்த சமயத்தில் இருக்கின்றாரோ அதுவே சிறந்தது. வேறு சமயத்துக்கு மாற வேண்டியதில்லை' என்று இந்த நாடகம் அமைந்திருக்கின்றது.  இந்த நடகத்திற்கு ஒரு சிறப்பு இருப்பதாக நூல் குறிப்பிடுகின்றது. அதாவது கதாமாந்தர்களின் வசனங்கள் ஒரு வரிக்கும் மேல் நீளமில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த நாடகத்தை ஒரு வரி நாடகம் என்று நூலாசிரியர் குறிப்பிடுவதாக தகவல் உள்ளது.

70.திருப்பிக்கொடு -  இது மேற்குறிப்பிட்ட அதே நாடக நூலில் இடம்பெறும் இரண்டாவது நாடகம். படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலையின்றி ஏதொன்றும் செய்யாமல் திரிவதைக் கேலி செய்து குறிப்பிடும் வகையில் அமைக்கபப்ட்ட நாடகம் இது.  இந்த நாடகத்தில் வரும் இளைஞன் கன்ணன் தான் படித்து பட்டம் பெற்ற பின்னர் வேலை கிடைக்காததால் தன் படிப்பிற்குச் செலவான பணத்தை கல்லூரி முதல்வரிடமே சென்று திருப்பித் தருமாறு கேட்கிறான். பயணற்ற பட்டச் சான்றிதழ் பறக்க விடத்தான் பயன்படும் என்பதை இது வலியுறுத்தும் வகையில் உருவாக்கபப்ட்டுள்ளது.  இதுதான் கதை.  

69, 70 ஆகிய இரு நாடகங்களும் அடங்கிய தொகுப்பை கணபதி ராமன் என்ற நாடக ஆசிரியர் எழுதி, தூத்துக்குடி இராகம் பிரிண்டர்சு அச்சகத்தாரால் இந்த நாடக நூல் பதிக்கப்பட்டிருக்கின்றது. ஆண்டு பற்றிய குறிப்பு நூலில் இல்லை.

தொடரும்..
சுபா

Suba

unread,
Feb 22, 2016, 5:00:43 PM2/22/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழகத்தில்   குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

71. சாமியாரின் மாமியார் - மெரினா என்னும் நாட ஆசிரியர் எழுதி பூரம் பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக 1981ல் வந்த  நாடக நூல் இது. இந்த நாடகத்தின் மையக் கருவாக அமைவது வரதட்சணை கொடுமை நீக்கம் என்பது. ஆண்கள் சுய காலில் நிற்க வேண்டும். தன்மானத்தோடு வாழ வேண்டும். வரதட்சணை பெறக்கூடாது என்ற கருத்தைக் கூறுவதோடு நில்லாமல் இளம் பெண்களும் தன்மான உணர்வு குறையாது தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் இருக்க வேண்டும். வரதட்சணை கேட்கும் இளைஞர்களைத் திருமணம் செய்ய சம்மதிக்கக்கூடாது என்ற கருத்தை நாடகத்தின் கதை சொல்கின்றது. அப்படி ஆண் பெண் இருவருமே ஒழுக்கத்தையும் சுயமரியாதையையும் போற்றினால் வரதட்சணை சிக்கல் தானே ஒழிந்து விடும் என்கின்றது நாடகம்.

72. சாரங்கதரன் - தமிழகம் நன்கறிந்த பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடக நூல் இது.  சென்னை இந்தியா அச்சகத்தில் 1931ம் ஆண்டில் 4ம் பதிப்பாக இது வெளிவந்தது. 85 பக்கங்களைக் கொண்ட நூல். இது ஒரு ராஜா ராணி கதைதான். அதிக காமம் அழிவையே தரும் என்ற கருத்தை முன்வைக்கும் கதை இதன் மையக் கரு. மிக சோகமான கதையாக இது இருக்கின்றது. சித்திராங்கி இளம் பெண்.  அவள் அத்தினாபுரி மன்னன் நரேந்திரனின் மகன் சாரங்கதரனை விரும்புகின்றாள். ஆனால் அதிக ஆசை கொண்ட மன்னன்  நரேந்திரன் சித்திராங்கியை விரும்புகின்றான். சித்திராங்கி தீயில் விழுந்து சாகின்றாள். தந்தையின் காமத்திற்குப் பலியாகிய சித்திராங்கியின் சோகம் ஒரு பக்கம். தந்தையால் வஞ்சிக்கப்பட்டு இறக்கும் மகன் சாரங்கதரனின் சோகம் ஒரு பக்கம் என நாடகம் சோகமாக அமைந்திருக்கின்றது.

 73. சாரங்கதரன்  - என்ற அதே தலைப்பில் புகழ்மிக்க நாடக ஆசிரியராகிய டி.டி.சங்கரதாசு சுவாமிகள் ஒரு நாடக நூலை எழுதினார். இது மதுரையில் ஒரு அச்சகத்தில் 1938ம் ஆண்டில் வெளிவந்தது என்ற தகவல் மட்டும் கிடைக்கின்றது. 12 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய நூல் இது. 

74. சாரங்கதரன் - இதே பெயரில் மேலும் ஒரு நாடக நூல் கே.குற்றாலம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. 1932ம் ஆண்டில் சென்னை இரத்தினநாயகர் அண்டு சன்சு பதிப்பகத்தால் இந்த நாடக நூல் பதிப்பிக்கப்பட்டது. முன்னர் கூறிய அதே கதைதான் ஆனால் சற்று மாற்றங்களுடன் இக்கதை அமைந்துள்ளது. சித்திராங்கி சாரங்கதரனின் அழகில் மயங்கி அவளை மணக்க மறுக்கும் சாரங்கதரன் மீது வீண் பழி சுமத்துகின்றாள். அதனால் மன்னன் தன் மகன் சாரங்கதரனை மாறுகால் மாறுகை வாங்கி தண்டனை கொடுக்கின்றான். அதே வேளை சித்திராங்கியை மணமுடிக்க என்னும் மன்னன் அவளை மறுமணம் செய்ய திட்டமிடுகின்றான். இதனை அறிந்து சித்திராங்கி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றாள். சாவு..தண்டனை.. பிரிவு  இப்படி சோகம்.. சோகம்..  எனச் செல்கின்றது இந்த நாடகம்.

தொடரும்..
சுபா
 
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs

Innamburan S.Soundararajan

unread,
Feb 22, 2016, 11:28:27 PM2/22/16
to mintamil, Dr.Subashini
என்னிடம் சில நூல்கள் கிடைத்ததை இங்கு எழுத நினைத்து, நேரமின்மையால் முடியவில்ல. அவற்றை தேடி அனுப்புகிறேன், மின்னூலாக.
--

Suba

unread,
Mar 13, 2016, 6:14:32 PM3/13/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

75. சாரங்கதரன் சரித்திரம் - முந்தைய பதிவில் கூறிய அதே மையக்கதையுடன் கூடிய நாடக நூல் இது. 1922ம் ஆண்டில் மதுரை எம்.கிருட்டிணா பிள்ளை என்பவரது  விலாசம் அச்சகத்தில் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் பூமிபால் தாசு. இந்த நாடக நூல் 16 பக்கங்கள் கொண்டது.

76. சாரங்கதரன் சரித்திரப்பா - 1887ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்திருக்கின்றது. ஆசிரியர் நாராயணசாமி நாயுடு என்ற தகவல் ஒன்று மட்டுமே கிடைக்கின்றது.

77. சாரங்கதாரா - சாரங்கதார என்ற நாடக நூலை 1931ல் எழுதி வெளியிட்ட பம்மல் சம்பந்த முதலியார் 1907ம் ஆண்டில் எழுதிய நாடக நூல் இது. சென்னை டௌடன் அண்டு கம்பெனி, பியர்லசு பிரசு அச்சகத்தாரால் இது பதிப்பிக்கப்பட்டது. 96 பக்கங்கள் கொண்ட நூல் இது. 

78. சாலரம்பை நீலகோசணி சரித்திரம் - மாயாஜாலக் கதை இது.  ஜாலங்கள் பல செய்வதில் சிறந்தவரான நீலலோசனியின் வரலாற்றைக் கூறும் நாடகம் இது என்று தெரிகின்றது. இந்த நூலின் ஆசிரியர் மதுரை கந்தசாமிப்பிள்ளை. சென்னையிலுள்ள சி.எசு. அங்கையா நாயுடு பாலவிர்த்தினிபோதினி அச்சுக்கூடத்தில் 1908ம் ஆண்டில் இந்த நாடக நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 16, 2016, 7:38:46 AM3/16/16
to மின்தமிழ், Dr.Subashini
மிக அருமையான தொடர் பதிவு.. தொடர்ந்து வருகிறேன்!..

//சித்திராங்கி சாரங்கதரனின் அழகில் மயங்கி அவளை மணக்க மறுக்கும் சாரங்கதரன் மீது வீண் பழி சுமத்துகின்றாள். அதனால் மன்னன் தன் மகன் சாரங்கதரனை மாறுகால் மாறுகை வாங்கி தண்டனை கொடுக்கின்றான். அதே வேளை சித்திராங்கியை மணமுடிக்க என்னும் மன்னன் அவளை மறுமணம் செய்ய திட்டமிடுகின்றான். இதனை அறிந்து சித்திராங்கி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றாள். சாவு..தண்டனை.. பிரிவு  இப்படி சோகம்.. சோகம்..  எனச் செல்கின்றது இந்த நாடகம்.//

இந்தக் கதை, 'சாரங்கதாரா' என்ற பெயரில், பின்னால் திரைப்படமாகவும் வந்ததென நினைவு.. முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து வெளிவந்ததெனவும் சொல்கிறார்கள். நான் நடிகர் திலகம் சிவாஜியும்,  பானுமதி அவர்களும் நடித்து வெளியான படம்
தான் பார்த்திருக்கிறேன்.. இதே கதை.. ஆனால், சிலபல மாற்றங்கள். குறிப்பாக, சாரங்கதரன் சித்ராங்கியை மணக்க மறுத்ததால் ஏற்படும் பகையை நீக்குவதற்காக, சாரங்கதரனின் தந்தை, தன் வாளை, சாரங்கதரனின் வாள் என்று சித்ராங்கி நம்பி மாலையிடும்படி செய்து விடுகிறார்..(அப்போதெல்லாம் வீரனின் வாளுக்கே மாலையிட்டு மணம் செய்வார்களாம்)..இப்படிப் போகும் கதை..

பார்வதி இராமச்சந்திரன்.

2016-03-14 3:44 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
​ 

Suba

unread,
Apr 27, 2016, 3:46:17 PM4/27/16
to மின்தமிழ், Dr.Subashini
​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

79. சாலரம்பை நீலலோசனி சரித்திரம் - இது மதுரை கந்தசாமி பிள்ளை என்பவரால் 1908ம் ஆண்டில் எழுதி சென்னை சி.எசு.அங்கையா நாயுடு பாலவிர்த்தினிபோதினி அச்சுக்கூடத்தால் பதிப்பிக்கப்பட்ட நாடக நூல். 76 பக்கங்களே கொண்ட ஒரு நாடகம்.  ஜாலங்கள் செய்வதில் கெட்டிக்காரியான நீலலோசினி என்ற ஒரு பெண்ணின் வரலாற்றைக் கூறுவதாக அமைந்த நாடக நூல் இது. நாடகத்தின் வசனம் உரைநடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

80.சாவித்திரி - இந்த தலைப்பில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடக நூல்களை நாடக ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியிருக்கின்றார்கள். சத்தியவான் சாவித்திரி கதை என்பது தமிழ் நிலத்து மக்கள் மத்தியில் மிக விரிவாகப் பரவிய ஒரு புராணக் கதை. இதனை சென்ற நூற்றாண்டு உரைநடையில் பொது மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கித் தர பல நாடக ஆசிரியர்கள் முனைந்திருக்கின்றார்கள். அவ்வகை முயற்சிகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

1916ம் ஆண்டில் சதாவனம் தெ.கிருட்டிணசாமி பாவலர் என்பவர் எழுதி சென்னை சி.ந செல்வராய நாயுடு  அச்சகத்தாரால் ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. இது சத்யந்தன் சாவித்திரி புராண மூலக்கதையிலிருந்து சிறிதும் மாற்றமில்லாமல் எழுதப்பட்ட புதிய தமிழ் வடிவ நூல் என அறியமுடிகின்றது.

1912ம் ஆண்டில் சங்கிலியாப்பிள்ளை என்ற ஒரு நாடக ஆசிரியர் எழுதி சென்னை எசு.மூர்த்திஅண்டு கோ என்ற அச்சகத்தாரால் இதே தலைப்பில் ஒரு நூல் வந்திருக்கின்றது. இது சாவித்திரியின் கற்பின் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எழுதப்பட்ட நாடக நூல்.

1918ம் ஆண்டில் மேலும் ஒரு நூலை இதே தலைப்பில் சதாவனம் தெ.கிருட்டிணசாமி பாவலரே மறுபடியும்  எழுதி சென்னை ஆர்.வெங்கடாசலம் கம்பெனி அச்சகத்தில் பதிப்பிக்கபப்ட்டிருக்கின்றது. மறு பிரசுரமாக இருக்கலாம்.

81. சாவித்திரி அல்லது கற்பின்மாட்சி - குன்றத்தூர் வி.எசு.வாசு என்பவர் எழுதி உருவாக்கிய சாவித்திரி பற்றிய நாடகம் தான். இது 1932ம் ஆண்டில் ஈரோடு சிறீவாணி அச்சாபீசு பதிப்பாக வெளி வந்தது-

82. சாவித்திரி சந்த்தியவந்தன் - வே நாராயணப்பிள்ளை என்பவர் எழுதி உருவாக்கிய நாடக நூல் இது. அதே சாவித்திரி புராணக் கதை தான். 1922, 1923 என இருமுறை இந்த நூல் சென்னை பெரிய நாச்சியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சத்தியவான் சாவித்திரி கதை நாடக உலகில் பொதுமக்கள் மிக ஈர்த்த கதையாக இருந்திருக்கின்றது. சினிமா படமும் வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

தொடரும்...
சுபா

Suba

unread,
Jun 3, 2016, 2:23:43 PM6/3/16
to மின்தமிழ், Dr.Subashini
​​தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

83. சான் மன்னன் - பெரியநாயகம் செட்டியார் என்பவர் தாமே எழுதிதாமே பதிப்பித்து 1919ம் ஆண்டில் இந்த நாடக நூல் வெளிவந்தது. சேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதிய கிங் ஜோன் என்ற பெயரில் அமைந்த நாடகத்தைத் தழுவிய முயற்சி இது. இது ஒரு விதமான சோக நாடகம் தான். மன்னன் சான் சிறையில் அடைத்த ஆர்தர் தப்பி ஓடும் போது மதிற்சுவறைத் தாண்டிக் குதிக்கின்றான். அவன் துரதிட்டம். அவன் விழுந்த இடத்தில் ஒரு பாறாங்கல் இருக்கின்றது. அதனால் பலமாக காயம் அடைந்து விடுகின்றான். தனது மூச்சை விடும் போது வருகின்ற இறுதிப்பேச்சு அவலம் நிறைந்தது. இது ஏறக்குறைய ஒரு கிறிஸ்துவ வேத நூலைப்போல அமைந்தது. 

84.சான்றோர் பழிக்கும் வினை - வி கலைமாமணி என்பவர் எழுதி தமிழ்மணி பதிப்பகத்தால் அச்சிடப்பட்ட 116 பக்கங்களைக் கொண்ட நாடக நூல் இது 1878ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. மூன்று தனித்தனி ஓரங்க நாடகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூல் இது. அவை, சான்றோர் பழிக்கும் வினை, கணைக்கால் இரும்பொறை, வீரன் விசுவநாதன் ஆகிய மூன்று நாடகங்கள். இலக்கியமும் வரலாறும் என இரு வேறு வகை நாடகங்கள் இவை. 

சான்றோர் பழிக்கும் வினை - திருக்குறள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. தன் தாயே கூடப் பசியால் வாடினாலும் அவளுக்கு உதவுகின்றேன் என நினைத்து தவற்றை செய்துவிடக்கூடாது என்னும் நீதியைச் சொல்லும் நூல். இன்று நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் காலத்தில் இத்தகையை நாடகங்களை மீண்டும் நடித்துக் காட்டி மக்கள் மத்தியில் நேர்மை பற்றிய பாலபாடம் புகட்டலாம். 

கணைக்கால் இரும்பொறை - புறநானூற்றுப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட நாடகம் இது. சோழன் செங்கணான் சேர மன்னன் கணைக்கால் இரும்பொறையைச் சிறையில் அடைக்கின்றான். மான உணர்வு மிக்க சேரன் கணைக்கால் இரும்பொறை உணவேதுமின்றி பட்டினி கிடந்து இறக்கின்றான். இந்த மன்னனின் குணத்தை வியந்து புலவர் பொய்கையார் பாராட்டி பேசி அழுகின்றார். இதுவே நாடகம். 

வீரன் விசுவநாதன் - இது வீர வரலாற்றைக் குறிப்பிடும் நாடகம். மதுரை நாயக்க மன்னர் விசுவநாத நாயக்கர் நாட்டின் அநீதியை ஒழிக்க தன் தந்தையையே கைது செய்கின்றார். இது போன்ற கதைகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய சூழலும் காலத்தின்கட்டாயமும் இப்போது அதிகரித்துக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்..

சுபா

2016-04-27 21:46 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
​​
​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

Innamburan S.Soundararajan

unread,
Jun 3, 2016, 9:16:03 PM6/3/16
to mintamil, Dr.Subashini
இந்த் தொகுப்பின், சாராம்சத்தின் முக்கியத்துவம் இலக்கிய/கலாச்சார/ வரலாறு ஆய்வுக்கு மிக உதவும். என்னிடம் சில நாடக சம்பந்தமான நூல்கள் இருக்கின்றன. சுபாஷிணியிடம் ஒப்படைத்த்து விடுகிறேன்.

Suba

unread,
Jun 26, 2016, 5:20:22 PM6/26/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

85. சிக்கல் சிங்காரவேலன் -  கே.தங்கராசு என்பவர் எழுதி சென்னை புகழ்நிலையம் பதிப்பகத்தாரால் 1981ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூல் இது. இது ஒரு சமுதாய சீர்திருத்தம் தொடர்புடைய ஒரு மையக் கருத்தைக் கொண்ட நாடகம்.  மிக ஏழ்மையான சிஙாரவேலன் பரிசுச்சீட்டில் கிடைக்கும் பணத்தால் செல்வந்தனாகின்றார். ஆனால் தொடர்ந்து எளிமையாகவே  இருக்கின்றார். ஆனால் ஏனைய பணக்காரர்கள் இதனை விரும்பவில்லை. சொல்லொணா துன்பத்தை சிங்காரவேலனுக்கு அளிக்கின்றனர். ஆயினும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு நல்ல மனிதராக எப்படி வாழ வேண்டும் என உதாரண  மனிதராக வாழ்ந்து இறக்கின்றார். இது ஒரு சோகமான கதையினைக் கொண்ட நாடகம்.

86. சானகி பரிணயம் - பு.வ.முத்து சுப்பையர் என்ற நாடக  ஆசிரியர் எழுதி திருநெல்வேலி  ஆரியபிரகாசினி அச்சுக்கூடத்தில்1901ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாடக நூல். இராமயண இதிகாசத்தில் இராமன் சீதையைத் திருமணம் செய்யும் சூழலை மையமாக வைத்து புனையப்பட்ட நாடகம்.

87. சித்தர் மகள் -  இது ஒரு வகையான சோகக்கதை நாடகம் தான். நீலமதி என்ற பெண் தன் தாயார் யார் என்பதை  அறியாத சூழலில் வளர்கின்றாள்.  ஒரு நாள் உண்மையான தாயார், தான் தான் அன்னை எனச் சொல்லி விட்டு உயிர் விடுகின்றார். பின்னர் அனாதையான நீலமதி ஒரு சித்தர் ஆசிரமத்தில் வளர்கின்றாள். பின்னர் தன் தந்தை யார் என்பதை அறிகின்றாள். தன் தந்தை சிவநேசன் தன் தாயாருக்கும் தனக்கும் செய்த கொடுமைகளை அறிய வருகின்றாள். ஆனாலும் தன் தந்தையின் தவற்றை  மன்னித்து விட்டாலும் அவரை தந்தையாக ஏற்றுக் கொள்ளாமல் தான் வளர்ந்த சித்தர் ஆசிரமத்திலேயே தன் வாழ்க்கையைத் தொடர்கின்றாள்.  இந்த நாடகம்  1983ம் ஆண்டில் நா.பாண்டுரங்கன் என்பவரால் எழுதப்பட்டு சென்னை பாரிநிலையம் அச்சகத்தாரால் வெளியிடப்பட்டது.

தொடரும்..

சுபா

Suba

unread,
Aug 4, 2016, 3:41:37 PM8/4/16
to மின்தமிழ், Dr.Subashini
​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

88.  சித்திரசேனன் சண்டை நாடகம் - இந்த நாடக நூலை ஆதிமுத்து செட்டியார் என்பவர் எழுதி ராமசாமி நாயுடு அண்டு சன்சு, சென்னை  சிறீலட்சுமி பிரசு ஆகிய இரண்டு அச்சகங்கள் நூலாக 1907ம் ஆண்டில் வெளியிட்டனர். 64 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. இது இராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதி கதையைத் தழுவிய நாடகம். இதில் சித்திரசேனன் என்பவன் துரியோதனன் சகிதம் 100 பேரையும்  அவர்களின் மனைவியரையும் கட்டி சிறையில் போட்டு விடுகின்றான். இதனைக் கேள்விப்பட்ட தருமர் தனக்கு தீமை செய்த துரியோதனன் என்றும் பாராமல் சித்திரசேனனை வென்று துரியோதனைனையும் அவன் சகோதரர்களையும் மனைவிமார்களையும் மீட்பதாகக் கதை. 
என்ன.. துரியோதனன் சற்று யோசித்திருக்கலாம். தீங்கு செய்தவருக்கு தண்டனை கொடுக்கும் போது அமைதியாக ஒதுங்கிப் போயிருக்கலாம். மாறாக காப்பாற்றி பிறகு அவர்களாலேயே சிரமப்பட்டிருக்க வேண்டுமா என சற்று சிந்திக்கத்தான் தூண்டுகின்றது.

89.சித்திரசேனன் சரித்திர நாடகம் - கோதண்டம் உபாத்தியாயர் என்னும் ஒருவர் எழுதிய நாடகம் இது. இது மேற்குறிப்பிட்ட அதே ராமாயண இதிகாசத்தைச் சார்ந்த நாடகம் தான் என்றாலும் கதையின் பகுதி வேறொரு கோணத்தில் செல்கின்றது. இந்த நூல் 1977ம் ஆண்டில்  சென்னை மலர்மகள் விலாச அச்சுக்கூடத்தில் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. 
கதை வசனம் என்று இல்லாமல் முற்றிலும் இசை வடிவில் அமைந்த நாடகம். கவனக்குறைவாக சித்திரவீரியன் என்பவன் எச்சில் துப்ப அதுவே கதைக்கு ஆரம்பமாகின்றது. கவனக்குறைவு உயிரை இழக்கவும் வைக்கும் என்று நீதி சொல்லும் வகை நாடகம்.

90. சித்திரலேகா -  அ.வைத்தியநாதன் எழுதி 1965ம் ஆண்டு இந்தியா பிரிண்டிங் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. ஐந்து தனித்தனி நாடகங்களின் தொகுப்பு நூல்.
  • சித்திரலேகா
  • மானனீகை
  • இளவரசி
  • பாஞ்சாலி சபதம்
  • பட்டர்பிரான் கோதை
ஆகியவையே இந்த ஐந்து தனி நாடகங்களாக இத்தொகுப்பில் இடம்பெறுபவை.

இவை ஒவ்வொன்றையும் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்..
சுபா

2016-06-26 23:20 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
​​
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

Suba

unread,
Aug 5, 2016, 12:59:47 AM8/5/16
to மின்தமிழ்

On 4 Aug 2016 21:41, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> ​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 
>
> 88.  சித்திரசேனன் சண்டை நாடகம் - இந்த நாடக நூலை ஆதிமுத்து செட்டியார் என்பவர் எழுதி ராமசாமி நாயுடு அண்டு சன்சு, சென்னை  சிறீலட்சுமி பிரசு ஆகிய இரண்டு அச்சகங்கள் நூலாக 1907ம் ஆண்டில் வெளியிட்டனர். 64 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. இது இராமாயண இதிகாசத்தின்

-மகாபாரதம் என்றிருக்க வேண்டும். தவறுதலாகிவிட்டது.

ஒரு பகுதி கதையைத் தழுவிய நாடகம். இதில் சித்திரசேனன் என்பவன் துரியோதனன் சகிதம் 100 பேரையும்  அவர்களின் மனைவியரையும் கட்டி சிறையில் போட்டு விடுகின்றான். இதனைக் கேள்விப்பட்ட தருமர் தனக்கு தீமை செய்த துரியோதனன் என்றும் பாராமல் சித்திரசேனனை வென்று துரியோதனைனையும் அவன் சகோதரர்களையும் மனைவிமார்களையும் மீட்பதாகக் கதை. 
> என்ன.. துரியோதனன் சற்று யோசித்திருக்கலாம். தீங்கு செய்தவருக்கு தண்டனை கொடுக்கும் போது அமைதியாக ஒதுங்கிப் போயிருக்கலாம். மாறாக காப்பாற்றி பிறகு அவர்களாலேயே சிரமப்பட்டிருக்க வேண்டுமா என சற்று சிந்திக்கத்தான் தூண்டுகின்றது.
>
> 89.சித்திரசேனன் சரித்திர நாடகம் - கோதண்டம் உபாத்தியாயர் என்னும் ஒருவர் எழுதிய நாடகம் இது. இது மேற்குறிப்பிட்ட அதே ராமாயண இதிகாசத்தைச்

-மகாபாரதம் என்றிருக்க வேண்டும். தவறுதலாகிவிட்டது.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Aug 14, 2016, 8:17:29 AM8/14/16
to mintamil
சித்திர சேனன் கதை சுவையாக உள்ளது, அதே மாதிரி, மாவிந்தம் (நாடகமும் படைக்கப்பட்டது) தருமன் தன் தருமத்தில் பாதியை துரியோதனனுக்குக் கொடுத்து, அவரையும், அவரது சுற்றத்தையும் நரகத்திலிருந்து மீட்டதாக, நாடகபாணியில் கூறுகிறது.
இன்னம்பூரான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 24, 2016, 4:29:54 PM8/24/16
to மின்தமிழ், Dr.Subashini
நாடக பிரியர்களுக்காக..
​​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

91. சித்திராங்க விலாசம் -  19ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதி பதிப்பிக்கப்பட்டு நாடகமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் இது.  இதனை பரசுராம கவி என்பவர் எழுத  சென்னை கலைக்ஞான முத்திராட்சரசாலை அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு 1881ம் ஆண்டு நூலாக வெளிவந்தது.  இது ஒரு இதிகாசம் தழுவிய நாடகம் தான். அர்ச்சுனன் பாண்டிய மன்னனின் மகள் சித்திராங்கதை என்பவரை  திருமணம் செய்யும் நிகழ்வுகளை மையமாக வைத்து புனையப்பட்ட கதை இது.

92. சித்ரா - எசு.அழகப்பன் என்பவர் எழுதி காரைக்குடி புரொகிராசிங் அச்சகத்தின் வெளியீடாக 1962ம் ஆண்டில் இந்த நாடக நூல் வெளிவந்தது.  44 பக்கங்கள் கொண்ட நூல் இது. தாகூரின் வங்காளி மொழியில் உருவான சித்ரா என்ற  நாடகத்தின் தமிழாக்கம் தான் இது. சமூக நிகழ்வுகளைப் பின்னனியாகக் கொண்ட ஒரு நாடக நூல் இது.

93. சிதம்பர ரகசியம் - இது மிக பிரசித்தி பெற்ற தலைப்புத்தான் அல்லவா?  நாடகம்  மட்டுமில்லாமல், கதைகள் என பல படைப்புக்களை இதே தலைப்பில் வெளிவந்திருப்பதைப் பலரும் அறிந்திருப்போம். நாகர்கோயில் கிருட்டிணன் என்பவர் எழுதிய நூல் 112  பக்கங்கள் கொண்டது. சென்னை மீனா புத்தக நிலையத்தாரால் 1978ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.  இது ஒரு சமூகச்  செய்தியை மையமாக வைத்து புனையப்பட்ட நாடகம் தான்.  மருத்துவர் சிவா தான் கதாநாயகன். அந்த ஊரில் ஊருக்குப் பெரியவர் என இருக்கும் ஒருவர் பொது மக்களுக்குப் பல வகையில்  தீங்குகள் செய்கின்றார். அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றார் கதாநாயகன்.  ஏழைப்பெண் அபிராமியை கதாநாயகன் மணக்கின்றார்.  

தொடரும்..

சுபா

2016-08-04 21:41 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
​​
​தமிழகத்தில்  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

Suba

unread,
May 10, 2017, 4:47:05 PM5/10/17
to மின்தமிழ், Dr.Subashini
​நாடக பிரியர்களுக்காக.. கடந்த நூற்றாண்டு ​​தமிழகத்தில்,  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

94. சிந்தனை விருந்து
- ஊரார் உரையாடல், ஆலை ஆறுமுகம், பாப்புலர் ஸ்டோர்சு, கலப்பு மணம் என நான்கு நாடகங்களின் தொகுப்பாக அமைந்த நாடக நூல் இது. இந்த நாடக நூலை எழுதியவர் தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவருமான அறிஞர் அண்ணாதுரை ஆவார். இந்த நூலை அறிவுத்தாய்க்கழகம் வெளியிட்டது. 1950ம் ஆண்டில் நூலாக வெளிவந்தது இந்த நாடகத் தொகுப்பு. சமூகத்தில் நடக்கின்ற ஏமாற்றுத்தனத்தையும், சாதி வழி சமூகத்தில் உயர்வை எதிர்பார்க்கும் சிந்தனையையும், பக்தியை வியாபாரமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் கலப்பு மணத்தை ஆதரிக்கும் கொள்கைகளைக் கொண்டதாகவும் இந்த நாடக நூலில் உள்ள நான்கு நாடகங்களும் அமைந்துள்ளன. மக்களின் அக்காலத்திய சமகால சிந்தனையை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நூலைக் காணலாம். 

95. சிந்தாமணி - இந்த நாடக நூல் சிந்தாமணி அல்லது காதலின் வெற்றி என்று இரண்டு தலைப்புக்களைக் கொண்டது.  இதனை எழுதியவர் கே.இராமசாமி ஐயங்கார் என்பவர்.  சென்னையில் 1935ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்தது. இந்த நாடகத்தின் கதை காமத்தால் மனைவியை மறந்து விலைமகளிரோடு வாழ்ந்த ஒரு ஆணைப் பர்றியது. அன்பான மனைவி இருந்தாலும் ஒரு விலைமகள்  மேல் காதல் கொண்டு மனைவியை விட்டு விட்டு போய்விடுகின்றான் கணவன். மனைவியோ மனம் தளராது தன் கணவனை அன்பினால் அவன் மனதை மாற்றி  விலைமகளிடமிருந்து பிரித்து கொண்டு வருகின்றாள். அடிப்படையில் கண்ணகி கோவலன் கதை போன்ற அமைப்பு. இதே போன்ற கதைகள் இன்னமும் கூட சினிமா படங்களில் மையக்ககதையாக அமைவது காலத்தின் கொடுமை அல்லவா? 

96. சிந்தாமணி நாடகம் - இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி கதையைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். சச்சந்தன் என்ற மன்னன் விசயையிடம் தீராத காதல் கொள்கிறான். காதலில் மயங்கி இருக்கும் சச்சந்தன் நாட்டை கவனிக்க மறந்து விட, அவனது அமைச்சன் கட்டியங்காரன் நாட்டை கைப்பற்றி விடுகிறான். தன் மனைவியைக் காப்பாற்ற எண்ணி  ஒரு மயில் வாகனத்தில் மனைவி விசயை ஏற்றி அனுப்பி விடுகிறான் சச்சந்தன். கருவுற்றிருந்த விசயை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். அவள் மயங்கிய நிலையில் கிடக்க, அங்கு வரும் கந்துக்கடன் என்ற ஒரு வணிகன் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு போய் சீவகன் எனப் பெயரிட்டு  வளர்க்கிறான். சீவகன் அச்சணந்தி ஆசிரியரிடம் கல்வி கற்கிறான்.  பின் தன் பிறப்பின் ரகசியத்தையும் அறிகிறான்.  பின்னர் எட்டு மனைவியரை மணந்து தன் தாயையும் தேடிக் கண்டுபிடித்து நாட்டை வென்று மன்னனாகின்றான். இதுதான் கதை. நூலாக 1915ம் ஆண்டு இலாலி இலக்ட்ரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்ற அச்சகத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது. இதனை எழுதியவர் இராசகோபால் ஐயங்கார்.

தொடரும்

சுபா

Suba

unread,
Sep 22, 2017, 1:55:17 PM9/22/17
to மின்தமிழ், Dr.Subashini
​​நாடகப் பிரியர்களுக்காக.. கடந்த நூற்றாண்டு ​​தமிழகத்தில்,  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

​97. ​சிம்கள நாதன் கதை - ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களைத் தழுவி தமிழ் நாடகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று தான் இந்த நாடக நூல். சிம்பலின் என்ற நாடகத்தின் தமிழ் படைப்பு என்றாலும் தமிழகச் சூழலுக்கேற்ற வகையில் அமைக்கப்பட்ட நாடகம். இதனைப் படைத்தவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார். இந்த நூல் சென்னை பியர்லசு பிரசு அச்சுக்கூடத்தில் 1914ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 167 பக்கங்களைக் கொண்ட நூல். ஐந்து அங்கங்களாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. 

98.சிம்பொலிசு ராசாவின் கதை - இதுவும் சேக்ஸ்பியரின் ஒரு மூல நாடகத்தின் தமிழாக்கம் தான். சிம்பொலிசு மகாராசன் கதையை Lamp என்னும் பெயர்கொண்ட ஆங்கிலேய நாடக் ஆசிரியர் எழுத அதனைத்மிழ் மொழியாக்கம் செய்து தமிழக நாடகச்சூழலுக்கு ஏற்ற வண்ணம் உருவாக்கப்பட்ட நாடக நூல் இது. இதனையும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களே மொழி பெயர்த்து உருவாக்கியிருக்கின்றார். இந்த நூல் சென்னை எம்.எஸ்.பி. அண்டு வி.எல்.சொசைட்டி, சி.கே.எசு. பிரசு, என்ற அச்சுக்கூடத்தில் 1878ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 28 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. 

99. சிரவணன் - சிரவனன், மருள் நீக்கியார், போரும் புலமையும் ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பாகும். பள்ளிச் சிறுவர்கள் வாசித்து மனனம் செய்து நடித்துப் பழக ஏதுவாக உருவாக்கப்பட்ட நாடக நூல் இது. மலேசிய மண்ணில் உருவாக்கப்பட்ட நாடக நூல். எழுத்தாளர் முரசு. நெடுமாறன் அவர்கள் எழுதி 1987ம் ஆண்டு கோலாலம்பூர் உமா பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் மலேசியாவிலும் தமிழ் நாடக நூல்கள் உருவாக்கப்பட்டன என்பதற்கு இது ஒரு சான்றாகிறது. இந்த நூல் 32 பக்கங்கள் கொண்ட நூலாகும். 

100. சிரித்த மலர் - இரண்டு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு நூல். இதனை எழுதியவர் ஆறு. அழகப்பன் என்பவர். முதல் நாடகம் ஒலியா மணி என்ற பெயர் கொண்ட நாடகமாகும். இந்த நாடகத்தில் வரும் பெண் கதாப்பாத்திரம் நற்காரியங்களைச் செய்து உலகம் புகழும் பெருமை பெற்று வாழ்கின்றர். இவரது வாழ்வு சிரித்த மலருக்கு ஒப்பாகக் காட்டப்படுகின்றது. 66 பக்கங்கள் கொண்ட நூல் இது. இதில் இடம் பெறும் இரண்டாம் நூல் நல்ல முடிவு என்ற பெயர் கொண்ட நாடக நூலாகும். இந்த நாடகத்தில் வரும் கமலம் என்ற கதாப்பாத்திரம் ஊரார் கேலிசெய்து சிரிக்கும் வகை வாழ்க்கை என்ற வகையில் காட்டப்படுகிறது. ஏறக்குறைய 75 பக்கங்களில் இந்த நாடக நூல் அமைந்திருக்கின்றது. 

தொடரும்..
சுபா
2017-05-10 22:46 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
​​
​நாட
​​
க பிரியர்களுக்காக.. கடந்த நூற்றாண்டு ​​தமிழகத்தில்,  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

Suba

unread,
Feb 18, 2018, 5:13:01 AM2/18/18
to மின்தமிழ், Dr.Subashini
நாடகத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், நாடகப் பிரியர்களுக்காக.. கடந்த நூற்றாண்டு ​​தமிழகத்தில்,  குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம். 

​101
. சியா மளா, சே.சி -
 புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ப.சம்பந்த முதலியார்  எழுதி உருவாக்கிய  ஒரு நூல் இது  சிறந்த நாடக நடிகையாக அக்காலகட்டத்தில் பிரபலமாகியிருந்த சியாமளா சே.சி பற்றிய நூல் இது. சென்னை பியர்லெசு பிரசு பதிப்பகத்தால் 1914ம் ஆண்டு வெளியிடப்பட்டது இந்த நூல். 167 பக்கங்கள் கொண்டது.  தந்தை திரு.டி.வி. கோபாலன், தாய் பார்வதியம்மாள் இருவருக்கும் பிறந்தவர்  சியாமளா சே.சி . தனது ஐந்தாம் வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.  தேவி நாடக சபா கே.எசு.மணியிடம் நாடகக் கலையை இவர் பயின்றார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர்.  இவரது கலைப்பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசு 1994ம் ஆண்டு கலைமாமணி பரிசு வழங்கி பாராட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

​102
. சிரித்துக் கொண்டே இருப்பேன் -
 எசு.டி.சுந்தரம் என்பவர் எழுதி சென்னை உலக நூலகவெளியீடாக 1974ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாடக நூல் இது. 67 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில்  ஐந்து ஓரங்க நாடகங்கள் அடங்கியுள்ளன. தலைவர் சாக்கிரதை, காதல் செடியும் கல்யாண இடியும், சிரிக்காதவர் மாநாடு,  பட(ம்) முடியாது இனித்துயரம், இட்லர் காணின் இருட்டறை நாடகம் என்ற ஐந்து நாடகங்கள் கொண்ட நூல். சமூகப் பார்வையுடன் கூடிய கதைப்பின்னனியைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடக நூல் இது.

​103
. சிலப்பதிகாரக் கூத்து -  
சிலப்பதிகாரக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள கூத்து பற்றிய அருமையான ஒரு நாடக நூல் இது.  புரட்சிதாசன் என்பவர் எழுதி நல்ல தமிழ் நடையில் உருவாக்கியிருக்கும்  இந்த நூல் சென்னை பாண்டியன் பாசறை பதிப்பகத்தில் 1991ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  இந்த நூலின் முகவுரையில் பழந்தமிழர் சமய வாழ்வு பற்றி விளக்கப்படுகின்றது. ஆரியர் சூழ்ச்சி என்ற பகுதி ஆரியர்கள் செய்த சூழ்ச்சியால் தமிழர் வாழ்வியலில்  எழுந்த மாற்றங்களை விளக்குவதாக அமைகின்றது.  தமிழகக் கூத்துக் கலையின் வரலாறு விளக்கப் படுகின்றது. ஆரியர் திராவிடர்களை அடிமைப்படுத்தும் நோக்குடன் வாழ்வியலில் புகுத்திய சமய, புராணக் கதைகள், சாதி, சமயப் பிரிவுகள் எடுத்துக் காட்டப்படும் வகையில் எழுதப்பட்ட நூல் இது.  இளங்கோவடிகள்  வகுத்துத் தந்த குரவை, பதினோராடல், அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர் குரவை ஆகியன விவரிக்கப்படுகின்றன.  இந்த நூலில் பகுத்தறிவுப் பிரச்சார தொணியுடன் கூடிய விளக்கங்கள் நிறைந்துள்ளன.

​101
. சிலப்பதிகார நாடகம் -
 அரங்க வேங்கடாசலம் பிள்ளை என்பவர் எழுதித் தயாரித்த நாடக நூல் இது. அடிப்படையில் கோவலன் கண்ணனி கதை இந்த நூலின் மையக் கதையாக அமைகின்றது.  இந்த நாடகம் இலக்கிய நாடக வகையைச் சேர்ந்தது. 26 காட்சிகளுடன் 196 பக்கங்களில் இந்த நூல் வடிக்கப்பட்டுள்ளது.   சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இனத் நூலை 1949ம் ஆண்டில் வெளியீடு செய்தது.

தொடரும்
சுபா

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2018, 9:39:08 AM2/18/18
to mintamil, Dr.Subashini
பல நாட்களுக்கு பிறகு இந்த நல்வரவு,

தேமொழி

unread,
Mar 12, 2018, 6:44:11 PM3/12/18
to மின்தமிழ்

source: https://www.pinterest.com/pin/14636767523306996

picture: https://i.pinimg.com/736x/60/b0/7c/60b07ce2293eeb926b66b93e8e0a4c92.jpg

டி.கே.எஸ்.சகோதரர்கள்

http://tamizhnatakavaralaru.blogspot.com/2016/03/8.html

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதியருக்கு நான்கு மகன்கள். டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி., இந்த நால்வரும் நாடக உலகில், திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.ஆறாவது வகுப்பு, நான்காவது வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று முறையே படித்துக் கொண்டிருந்தனர்.கடைசி மகன் பகவதி கைக்குழந்தை.

ஷண்முகம் இளமையிலேயே ,துடிப்பு, ஆர்வம்,சிந்தனைக் கூர்மை, உடையவராய் விளங்கினார்.சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் அபிமன்யுவாக நடித்து புகழ் பெற்றார். தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய நாடக ஆசிரியர்களிடம் ஷண்முகம் நடிப்புப் பயின்றார்.

1925 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" என்ற நாடகக் குழுவைத் தொடங்கி 1950 வரை தமிழ் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.

1937ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி திரு டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்" என்ர வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.

பின்னர் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் முத்துசாமி அவர்களால் நாடக மாக்கப்பட்டு நடந்தது

தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர்.இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது.108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர். 

1942ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 2ஆம் தேதி மதுரையில் , பி.எத்திராஜுலு அவர்கள் எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது.கதாநாயகி உண்டு...ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி.காதல் காட்சிகள் இல்லை.நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம்.இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம்.இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள்.இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு எனலாம்.இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு "ஔவை சண்முகம்' என்று அழைக்கப்பட்டார் அவர்.

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, டி.கே,எஸ். சண்முகத்தின் ஔவையார் நடிப்பைப் பாராட்டி கவி ஒன்று புனைந்தார்

மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது

ஔவையின் நடிப்பை விமரிசித்த கல்கி அவர்கள்-

"நடிப்புத் திறமையை பொறுத்த வரையில் இந்நாடகத்தில் ஔவைப்பாட்டியாக நடிக்கும் திரு டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.வேஷம்,பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.நடிப்பு அபாரம்" என்று கல்கியில்  (3-6-42)விமரிசித்தார்

திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய பில்ஹணன், டி.கே.முத்துசாமி எழுதிய காளமேகப் புலவர்,கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, ஆகிய நாடகங்களை அரங்கேற்றினர்.

நாடு சுதந்திரம் அடைந்தபின், முதல் வரலாற்று நாடகமாக ரா.வெங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் நாடகமும், (இது சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது),, தொடர்ந்து திரு நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் என்ற தமிழ்ச்சுவையும்.நகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் அரங்கேறின.

"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

அடுத்ததாக இவர்கள் அரங்கேற்றிய நாடகம் அகிலன் எழுதிய "புயல்".தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.

திரு ரா.வெங்கடாச்சலம் எழுதிய முதல் முழக்கம் என்ற நாடகத்தை நடத்தி னர் 1950ல் டிகேஎஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை"  நாடகக் குழு தன் நிறைவு விழாவை நடத்தியது.

அதற்கான காரணம் என்ன? பின்னர் என்ன செய்தார்கள் சகோதரர்கள் என  பார்ப்போம்

தொலைக்காட்சி வந்தப் பிறகு நாடகங்கள் அழிந்துவிடும் என ஆங்காங்கே கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது போல....அன்று..பேசும்படம் வந்த காலகட்டத்தில்..நாடக மேடை அழிந்துவிடும் என்றனர்.

இது குறித்து திரு சண்முகம் அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.அவர் சொன்னார்....

"நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை.திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றை கையாண்டு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது" என்றார்

இன்றும் அது பொருந்துகிறது அல்லவா? ஆனால் என்ன ஒன்று...

"அந்த நாட்களில் நாடகக் கொட்டகை எல்லாம்...திரைப்பட கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.ஆகவே நாடகம் நடத்துபவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை.அப்படியே கிடைத்தாலும் பலமடங்கு வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியிருந்தது.அது நாடக வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது.டி.கே,சண்முகம் அவர்களின் நாடகசபையும் இந்த காரணத்தினாலேயே மூடுவிழா கண்டது.

பின்னர் 1950ல் நாடகக் கழகம் தோன்றியது.நாடக அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு....முதல் வகுப்பு எட்டணா...இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன.பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது.

மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார்.

இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார்.(பின்னர் இன்றுவரை பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றனர்)தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனராம்.

பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம்.இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.

டி.கே.சண்முகத்தின் நண்பர் பொதுவுடமைக் கட்சி ஜீவானந்தம்.அவருடன் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை நாட்டுடமையாக்க முயன்று வென்றார்.

இனி டி.கே.சண்முகம் அடைந்த பொறுப்புகளும், விருதுகளும்-

1950ல் நாடகக் கழகம் அமைக்கப்பட்டு...முதல் தலைவர் ஆனார்.நாடகங்களுக்கு கேளிக்கைவரி பெற்று தந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திவந்த "நடிகன் குரல்" பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்

தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளராக நான்காண்டுகள் இருந்தார்.

தவிர்த்து, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகடெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்

1941ல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் "முத்தமிழ்க் கலாவித்துவ ரத்தினம்" , 1944ல் ஈரோட்டில் நாடகக் கலை மகாநாட்டில் "ஔவை" பட்டம்,புதுவை ராமகிருஷ்ணா பாடசாலை வழங்கிய "நாடக வேந்தர்:" பட்டம்,குன்றக்குடி அடிகளாரால், "நாடகக் கோ" பட்டம்,1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகக் கழகம் வழங்கிய,"சிறந்தத் தமிழ் நாடக நடிகர்" பட்டம்,1962ல். புதுதில்லி சங்கீத நாடக அகடெமி வழங்கிய , "சிறந்த நாடக நடிகர்" விருது, 1966ல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில்"தமிழ் நாடக வரலாறு" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கினார்.

திரு அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி அளித்தார்

1971ல் இந்திய அரசின் தேசிய விருதான "பத்மஸ்ரீ" விருது பெற்றார்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடக வாழ்க்கை ஆகிய நூல்களை எழுதினார்.

1973 ஃபெப்ருவரி 15ல் மறைந்தார்.

இவரது நூற்றாண்டை இவரது மகன்கள் டி.கே.எஸ்.கலைவாணன், புகழேந்தி ஆகியோர் 26-4-2012 அன்று சிறப்பாகக் கொண்டாடினர்.இன்று நாடக உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறு கலைஞர்களுக்கு "நாடகச் செல்வம்" என்று விருது கொடுத்து கௌரவித்தனர்.

அன்று விருது பெறும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது. 

"தமிழ் நாடக முன்னோடிகள்" குறித்து "T.V.ராதாகிருஷ்ணன்" தளத்தில் 
http://tamizhnatakavaralaru.blogspot.com/search/label/நாடகம்
மேலும் பல  கட்டுரைகள் உள்ளன. 

..... தேமொழி 

தேமொழி

unread,
Sep 7, 2019, 5:31:47 PM9/7/19
to மின்தமிழ்

சீர்திருத்த நாடக மரபு - திராவிட இயக்க நாடக வரலாறு 

நாடகத்தில் பெரியாரின் தாக்கம் | 
பேராசிரியர் சாரோன் பென்னி | Saron Benny

சுட்டி கொடுக்கும் (25:30) துவக்கத்திலிருந்து இறுதிவரை பார்க்கவும். தேவை சுமார் 45:00 மணித்துளிகள்.

பேராசிரியர் சாரோன் பென்னி உரையின் கருத்துகளில்  கவனத்தைக் கவர்ந்த ஒரு சில. 

தமிழகத்தில் நாடக முயற்சிகளும் அவை பற்றிய தகவல்களும் என்ற வரிசையில் அறியப்பட வேண்டியது   சென்ற நூற்றாண்டில்  திராவிட இயக்கம் நாடகக் கலையில் ஏற்படுத்திய தாக்கம்.

ஆய்வுலகம் இதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.  ஒருவகையில் இப் பங்களிப்பு மறைக்கப்படுகிறது/மறுக்கப்படுகிறது/மறக்கப்படுகிறது.

கோயில் திருவிழா என்பவற்றின் பகுதியாகப் புராணக்கதைகள் சொல்ல வேண்டிய சூழ்நிலையிலிருந்து தனித்து நடத்தப் பெறும் நாடகங்கள் என்ற திருப்பம் சென்ற நூற்றாண்டின் சிறப்பு. 

அவற்றைப் பரவலாக்கியதிலும் ம் சமூக நாடகங்கள் என்று மாறிய துவக்கத்திலும் திராவிட இயக்கத்தின் பங்குண்டு. 

சாதாரண சமூக நாடகங்கள் என்ற துவக்கமும், அவற்றில்  சீர்திருத்தக் கருத்துகளைக்  கூறி, பொழுது போக்கு என்பதற்கும் மேலாகப் புரட்சி ஏற்படுத்தும்  கருவிகளாக சமூக மாற்றத்திற்குப் பயன் படுத்தியது திராவிட இயக்கம்.

புராண  நாடகங்களை மீள்பார்வை செய்கையில் எதிர் பாத்திரத்தின் கோணத்தை விளக்கி, வைதீக புராணங்கள் பழங்குடி அரசர்களை,  மண்ணின் மைந்தர்களை அரக்கர்களாக உருவகப்படுத்தின என்ற கோணத்தில் அவை அரங்கேற்றப்பட்டன.  அவ்வாறே  இராவணன், இரணியன் போன்றவர்களே நாடகத்தின்  நாயகர்களாகவும் முன்னிறுத்தப்பட்டனர்.

அது போன்றே வேலைக்காரி, கைம்பெண்  என்பவர்  போன்ற சராசரி மக்களும்  கதையின் முக்கிய பாத்திரங்கள் ஆயினர். அவர்கள் வாழ்வின் கோணமும் துயரங்களும் மக்கள் முன்னர் கொண்டு செல்லப்பட்டது.  

பொது ஊடகங்கள் இந்த நாடகங்களுக்கு முக்கியத்துவம் தராது இருட்டடிப்புச் செய்தன.

திராவிட இயக்கமும்   சீர்திருத்த நாடகங்களுடன்  கைகோர்த்து இயக்கத்தின் பரப்புரைகளும் அவற்றில்  பிரதிபலித்தது.

நாடகத்தில் நடித்திடாத பிரபலம் பெரியார் ஈ.வெ.ராமசாமி மட்டுமே.  இயக்க உறுப்பினர்களும், நாடகம் எழுதிய தோழர்களும் அவற்றில் நடிக்கவும் செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி, பட்டுக்கோட்டை அழகிரி என எவரும் இதற்கு  விதிவிலக்கல்ல. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  நடந்த பொழுது தடையை எதிர் கொள்ளாத இயக்க நாடகம், விடுதலை பெற்ற இந்தியாவில் தடை செய்யப்பட்டு நடிகர்கள் சிறையில் தள்ளப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டார்கள்.  

நாடகக் கொட்டகைகள் தாக்குதலுக்கு உள்ளாயின.  144 சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்ட நாடகங்கள் என்பவையெல்லாம் திராவிடஇயக்கத்  தோழர்களின் நாடகங்கள்  என்பது வரலாறு.

இவ்வரிசையில் எம். ஆர். ராதா. அவர்களின் நாடக வாழ்க்கையும், பங்களிப்பும் சிறப்பாகக் குறிப்பிடும் இடம் பெற்றுள்ளது.

தேமொழி

unread,
Oct 3, 2019, 4:30:56 PM10/3/19
to மின்தமிழ்

நாடக திருவிழா குறித்து சிவகுமாரின் உரையில் 
தமிழக நாடக வரலாற்றைச் சிறந்த முறையில் தொகுத்துள்ளார் 
கேட்க தேவைப்படும் நேரம்: 4:00 

It is loading more messages.
0 new messages