செய்திச் சுரங்கம்

75 views
Skip to first unread message

Rama Samy

unread,
Nov 18, 2012, 1:18:17 PM11/18/12
to நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari

எல்லோரும் எல்லாமும் பெற்ற, இல்லாமை இல்லாத கிராமம், ஸ்பெயின் நாட்டில் !


















தீபாவளிக்கு 10ரூபாய்க்கு மூன்று புத்தகங்களைத் தந்தது வாராந்தரி ராணி.

 அதிசயம்  என்னும் தலைப்பில் உலகுக்கே வழிகாட்டும் உன்னத கிராமம்




என்ற கட்டுரையை 57-ஆம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது. அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்தப் படங்களை
இணையத்தில் தேடி எடுத்து வலைப்பதிவர்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

 ஐரோப்ப்பிய நாடு ஸ்பெயின். மரினலேடா அங்குள்ளதோர் கிராமம். தெற்கு செவியா நகரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் 2,700 பேர் வசிக்கின்றனர்.

வயல்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றன. இங்கு வேலை இல்லாதவர்களே கிடையாது. ஊதியத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லை. அனைவருக்கும் சொந்தமாக வீடும் உண்டு. குற்றச் செயல்களே நடக்காது என்பதால் காவல் நிலையம்-நீதிமன்றம்கூட கிடையாது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10,000 ஏக்கர் நிலம், ஒரே நபரிடம் இருந்தது. நிலமற்ற விவசாயிகள் அதை ஆக்கிரமித்தார்கள் அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. நிலமற்றவர்களின் தலைவராக ஜுவான் சஞ்செஸ் கொர்டியே என்பவர் உருவான பிறகு நிலைமை மாறியது.

செவியா நகரின் விமான நிலையம், ரெயில் நிலையங்களை முற்றுகையிட்டு போக்குவரத்தை முடக்கினார்கள். அரசு அலுவலகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில், கொண்டு வந்தனர். 1991-ஆ ஆண்டு நிலங்களுக்கான உரிமைப் பத்திரத்தை, போராடிய மக்களிடமே அரசு வழங்கியது.

அதன்பிறகு கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தார்க. வயல்கள், தோட்டங்கள், பண்ணைகளில் அனைவரும் சரிசமமாக உழைத்தார்கள்.விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த லாபமும் மக்களிடையே திரும்ப வந்தது.உயர்தொழில்நுட்ப தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டுத்திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.

கத்தரி, தக்காளி, மிளகாய், கடுகு போன்றவைகளை வெவெவேறு இடங்களில் அறுவடை செய்யும் மாதங்கள் மாறுபடும். எனவே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் அறுவடை செய்யலாம். மக்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி அறுவடை செய்கிறார்கள். வயல்களில் உற்பத்தியாகும் காய்கறிகள்-பழங்கள், மக்களின் தேவையைப் பூர்த்தி செகின்றன. தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை நாட்டின் மற்ற பகுதிகளில் விநியோகிக்கிறார்கள்.  

அகதிகளுக்கு வேலை !

அருகில் உள்ள கிராம மக்களையும் வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். ஏழை நாடுகளைச் சேர்ந்த  அகதிகளுக்குத் தொழில் வாய்ப்பும் கிடைக்கிறது. ஒருவர் சொந்த வீடு கட்ட விரும்பினால், நகரசபை அனைத்து உதவிகளையும் செய்கிறது. சிமெண்டு, மண், கல், மரம் எல்லாவற்றையும் வழங்குகின்றது. வீட்டையும் கட்டிக் கொடுக்கிறது. தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதும். ஆனால், வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது. வேலை செய்யும் பெற்றோர், குழந்தைகளைப் பாதுகாக்க காப்பகத்துக்குக் குறைந்த தொகை செலுத்தினால் போதும். மருத்துவ வசதியும் இலவசம். பள்ளிக் கூடத்தில் இலவச மதிய உணவு கிடைக்கிறது. பாட நூல்களும் இலவசம்தான்.

உயர் கல்வி கற்க பிற நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனாலும், படிப்புச் செலவுகளை நகரசபை ஏற்றுக் கொள்ளும். நகரசபைக் கூட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். சாலை போடுவதிலிருந்து பள்ளிக்கூடம் கட்டுவதுவரை அனைத்துமே மக்கள் வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படுகிறது.

ஜுவான் மனுவேல் சஞ்செஸ், மேயராக இருக்கிறார். ஸ்பெயினின் பிற நகரங்களில் வசிக்கும் ஏழைகளை “சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு” அழைத்துச் சென்று அங்கிருந்த பொருட்களைப் பகிர்ந்தளிக்கின்றார். அவரை இப்போது ”ராபின் ஹூட்” என்றுய் அழைக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதால், அவரைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறது காவல் துறை.



















Historical population of Marinaleda, Spain
Year 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2008 2011
Population 2,623 2,634 2,638 2,647 2,645 2,676 2,655 2,689 2,708 2,778



Posted 7 minutes ago by Rama Samy


--



சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

sk natarajan

unread,
Nov 18, 2012, 8:06:54 PM11/18/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari
அருமையான பகிர்வுக்கு நன்றி ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/18 Rama Samy <rssai...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2012, 8:57:31 PM11/18/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari
>>ஜுவான் மனுவேல் சஞ்செஸ், மேயராக இருக்கிறார். ஸ்பெயினின் பிற நகரங்களில் வசிக்கும் ஏழைகளை “சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு” அழைத்துச் சென்று அங்கிருந்த பொருட்களைப் பகிர்ந்தளிக்கின்றார். அவரை இப்போது ”ராபின் ஹூட்” என்றுய் அழைக்கிறார்கள்.

ஒரு தடவை கொடுக்கலாம்
மறுதடவை அங்கு அங்காடி வைப்பவன்  பேமானி



வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Nov 19, 2012, 1:14:02 AM11/19/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com
2012/11/18 Rama Samy <rssai...@gmail.com>

ஜுவான் மனுவேல் சஞ்செஸ், மேயராக இருக்கிறார். ஸ்பெயினின் பிற நகரங்களில் வசிக்கும் ஏழைகளை “சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு” அழைத்துச் சென்று அங்கிருந்த பொருட்களைப் பகிர்ந்தளிக்கின்றார். அவரை இப்போது ”ராபின் ஹூட்” என்றுய் அழைக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதால், அவரைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறது காவல் துறை.



அந்த ஊரில் ஒருவர் தலா 1450 டாலர் மாதம் சம்பளமாக பெறுகிறார். மெக்டானல்ட்ஸில் பர்கர் தட்டும் வேலை செய்தாலே அந்த சம்பளம் கிடைக்கும். அதுக்கு பதில் இங்கே நிலத்தில் விவசாய வேலை செய்யணும். என்னவோ விவசாய வேலை பிடித்து மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி.

கடைகளில் புகுந்து எடுத்து தானதருமம் செய்வது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்டா இருக்கலாம். ஏதோ மேயர் கேட்கிறார் என சில கேன் உணவுபொருட்களை கடைகாரர்கள் காந்தி கணக்கில் எழுதுவிடுவார்கள். கட்டுபடி ஆகலைன்னா ஒன்று கடையை மூடுவார்கள் அல்லது பொருட்களின் விலையை ஏற்றுவார்கள்.
--
செல்வன்


Rama Samy

unread,
Nov 19, 2012, 8:02:01 AM11/19/12
to நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari

புதியதலைமுறை டிவி செய்தி வாசிப்பாளர் தற்கொலை !



சென்னை: சென்னையில் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறையில் வணிகச் செய்திகள் வாசிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் நெடுஞ்செழியன். இவர் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தலைத்தீபாவளி கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்றுவிட்டு இருதினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்குத் தனது வீட்டில் நெடுஞ்செழியன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அவருடன் பணி புரியும் சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தித்துறையில் பணிபுரியும் சக பணியாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

புதிய தலைமுறை அஞ்சலி
நெடுஞ்செழியன் மறைவுக்கு புதியதலைமுறை தொலைக்காட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.

பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்குப் புதிய தலைமுறை தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.

சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி :- ஒன் இந்தியா, 19-11-2012

Posted 1 minute ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 19, 2012, 6:52:00 PM11/19/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor, தமிழ் சிறகுகள்

நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் தெய்வநாயகம் மறைவு


பிரபல நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ.தெய்வநாயகம் (70) சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 19) காலமானார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் உடல் நலக் குறைவுடன் இருந்தார். மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981ம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமை டாக்டர் தெய்வநாயகத்துக்கு உண்டு. லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி., எஃப்.ஆர்.சி.பி. பட்டங்களைப் பெற்றவர்.

சித்த மருத்துவத்துக்கு ஆதரவு: அலோபதி மருத்துவராக இருந்தாலும்கூட, தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் பரப்பியவர் டாக்டர் தெய்வநாயகம்.

சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து "ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பை ஏற்படுத்தி பொது மக்களுக்கு அலோபதி-சித்த மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.

இத்தகைய சிகிச்சை முறை காரணமாக ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகள் பலன் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சக நோய்த் துறையின் தலைவர், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துள்ளார்.






மருத்துவப் பணியுடன் சேர்த்து டாக்டர் தெய்வநாயகம் கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியின் செயலாளராக இருந்தார்.

லாப நோக்கமின்றி 3 மேல்நிலைப் பள்ளிகள், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றைச் சென்னையிலும், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்திலும் நடத்தி வந்தார்.

இறுதிச் சடங்கு: மறைந்த டாக்டர் தெய்வநாயகத்துக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு தி.நகர் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் புதன்கிழமை (நவம்பர் 21) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

அவரது உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு தொ.பே. எண்: 24346233.

நன்றி ;- தினமணி, 20-11-2012
Posted 7 minutes ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 20, 2012, 3:08:14 AM11/20/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor, தமிழ் சிறகுகள்

ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்!



மும்பை: ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

''மரியாதை என்பது ஒருவர் சம்பாதிப்பது, கட்டாயப்படுத்திப் பெறுவதில்லை. இன்று (நேற்று முன்தினம்) மும்பையில் முழு பந்த் நடப்பதற்கு காரணம் மரியாதை அல்ல பயம்'' என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஷாஹீன் தெரிவித்திருந்தார். அதற்கு ரேணு லைக் கொடுத்திருந்தார். உடனே இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஷாஹீன் மற்றும் ரேணுவைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஷாஹீனின் உறவினர் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் வைத்துள்ள கிளினிக்கைச் சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

ஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்விகள் குவியவே, இப்போது இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்காக 2 பெண்களைக் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ மகாராஷ்டிரா முதல்வர் பிரி்த்விராஜ் சவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் 2 பெண்களைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவை விட அதிகச் சொத்து வைத்துள்ளார் என்று டுவிட்டரில் தெரிவித்த புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.

சைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் நினைப்பதே சட்டம் என்றாகி வருவது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல! 

நன்றி:- ஒன் இந்தியா, 20-11-2012
Posted just now by Rama Samy

N. Kannan

unread,
Nov 20, 2012, 11:08:05 AM11/20/12
to mint...@googlegroups.com
2012/11/20 Rama Samy <rssai...@gmail.com>


> சைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் நினைப்பதே சட்டம் >என்றாகி வருவது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல!
>

வருத்தமளிக்கிறது...

பிபிசி தலைப்புகள்:

India arrests over Facebook post criticising Mumbai shutdow




Inline images 1


உலகம் கவனித்துக்கொண்டுதான் உள்ளது!

நா.கண்ணன்

Rama Samy

unread,
Nov 21, 2012, 12:50:31 AM11/21/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள்

நோபல் பெற்ற ஸ்டெம் செல் தீட்டு ரத்தம்... இனி, தீர்த்தம் ஆகும் !



தொடர்ந்து நன்கு படித்திட குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் நவம்பர்16-30

ஸ்டெம் செல் சிகிச்சையால் பயன்பெற்றவர் குறித்த கட்டுரை ஏற்கனவே நம் வலைப்பூவில் வெளிவந்ததன் மகத்துவம் முன்னரே பதிவாகியுள்ளது.
Posted 2 minutes ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 21, 2012, 8:43:41 AM11/21/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor, தமிழ் சிறகுகள்

பூசணிக்காயை உடைக்காமலேயே அதிலுள்ள மொத்த விதைகளைக் கண்டுபிடிக்க உதவும் சித்தரின் பாடல் !





கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்


பாடலின் பொருள் :-



ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு

அதை மூன்று, ஆறு , ஐந்து,  இவற்றால் பெருக்கி ,

வருகின்ற விடையைப் பாதியாக்கி,

மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

விளக்கம் :- 


ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை  X என்க.

பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X  ஆகும்

அதைப் பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்கக் கிடைப்பது 135X  ஆகும்

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை

 X=6  ஆறு  எனக்கொண்டால்,

(135 * 6 = 810)   135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது  810 ஆகும்

எனவே, பூசணியில் உள்ள விதைகளின்  எண்ணிக்கை 810 ஆகும்

அடுத்த முறை பூசணிக்காயை வாங்கும் போது

இந்தப் பாடலின் உண்மையைக் கண்டறிய முயற்சிக்கலாம் அல்லவா ?  

உதவியவர் :- வின்மணியார்.
Posted 15 minutes ago by Rama Samy

rajam

unread,
Nov 21, 2012, 1:00:09 PM11/21/12
to mint...@googlegroups.com, Rama Samy
ஆ! மிக நல்ல பாடல். இதை நான் செய்துபார்க்கப் போகிறேன். ஒரு சின்ன பூசணிக்காய் இருக்கிறது. அதை அப்படியே அவனுக்குள் (oven) வேக/சுட வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்ல வேளை இந்தக் கணக்குப் பாடம் கிடைத்தது. பொறுமையோடு செய்யமுடிந்தால் சொல்கிறேன்.
ஆமாம், அப்படிக் கணக்குப் பார்ப்பதின் நோக்கம் என்ன என்றும் சொல்வீர்களா? நன்றி! 

Subashini Tremmel

unread,
Nov 21, 2012, 1:51:49 PM11/21/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/11/21 rajam <ra...@earthlink.net>

ஆ! மிக நல்ல பாடல். இதை நான் செய்துபார்க்கப் போகிறேன். ஒரு சின்ன பூசணிக்காய் இருக்கிறது. அதை அப்படியே அவனுக்குள் (oven) வேக/சுட வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்ல வேளை இந்தக் கணக்குப் பாடம் கிடைத்தது. பொறுமையோடு செய்யமுடிந்தால் சொல்கிறேன்.
சோதனை செய்து பார்த்து விட்டு சொல்லுஙக்ள் அம்மா. 

சுபா
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

rajam

unread,
Nov 21, 2012, 7:51:24 PM11/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
கொஞ்சம் சிக்கல்.

என் பூசணிக்காய் ரொம்ப நல்ல பிள்ளை! பத்தே பத்துக் கீற்றுகளுடன் வந்தது:
  
  

 பாதியாக நறுக்கிய தோற்றம்:
  
  
  
விதைகளை எடுத்தவுடன் :
விதைகளைக் கழுவி எடுத்தவுடன்:
 
ஹ்ம்ம்ம்.இவற்றின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்? சித்தர் பாடல் கணக்குப்படி 1,350 ஆக இருக்கவேண்டும்!!! 
என் தோழி வீட்டில் அவர்கள் வாடவிட்ட ஒரு கறிவேப்பிலைச் செடியைப் புதுப்பிக்க நான் செய்த முயற்சிகளைப் பார்த்துவிட்டு என் தோழியின் கணவர் ஒரு பழமொழியைச் சொன்னார்: "வேலையிலா அம்பட்டன் பூனையைப் பிடுத்துச் சிறைத்தானாம்."
நான் மேற்காட்டிய என் பூசணியின் விதைகளை எண்ணிக்கொண்டிருக்கப் போவதில்லை. போய் நல்லா ... சோளப் பொங்கலும் மோர்க்குழம்பும் சமெச்சுச் சாப்பிடப் போறேன். யாராவது அந்தச் சித்தர் பாடலின் புதிரை விடுவிக்கவும்.
மிக்க நன்றி! 
:-) :-) :-) 

Rama Samy

unread,
Nov 21, 2012, 10:23:17 PM11/21/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு வரலாற்றில் இலக்கியவாதி வ.உ.சி. !!


வ.உசி. என்னும் பதிப்பாளன்

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஐ.எஸ்.பி.என். நம்பரோடு கூடிய நூலை வெளியிட்டிருந்தால் தகுதியாளர் என்று அரசு அறிவிப்பு வந்தவுடன், அடுத்தவர் எழுதிய நூலைக்கூடத் தன் பெயரில் அச்சிட்டுக்கொள்ளப் பதிப்பகத்தைத் தேடி அலையும் பலருக்கு வ.உ.சிதம்பரனாரின் பதிப்புப் பணியைத் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை.

சுயநல உணர்வில் தன் மரபையே மறந்துபோன தமிழனுக்கு வ.உ.சி.யின் பதிப்புப் பணியை மறந்து போயிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. வ.உ.சி.யின் மாபெரும் அரசியல் சாதனைகள் மறக்கப்படும் நிலையில், அதிகம் மறியப்படாதவையான அவருடைய தமிழ்ப் பணியின் ஒரு பகுதியாக உள்ள பதிப்புப் பணியின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.

தமிழன் என்றுமே வரலாற்ற மறந்து போகக் கூடியவன் என்பதற்கு,

        நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப் பாடுபட்ட
        ஓட்டப் பிடார ஒளிர்மறவன் - மாட்டன்று
        நன்றி பாராட்டாத நாடொரு நூற்றாண்டு
        சென்றபின் செய்யும் சிறப்பு.
என்று, வ.உ.சி. நூற்றாண்டு விழா நேரத்தில் பாவாணர் சொன்ன மேர்கண்ட பாடல் சிறந்த சான்றாக உள்ளது.

பலரின் தமிழ்நூல் பதிப்புப்பணி, வரலாற்ரில் பரந்து காணப்பட்டாலும், வ.உ.சி.யின் பதிப்புப் பணியை வியந்து பார்ப்பதற்குக் காரணங்கள் பல உண்டு. கோவை சிறையில் செக்கிழுத்த சூழலில் தொல்காப்பியத்தை முழுமையாக வாசித்து அதன் பெருமையை உணர்ந்தநிலையில், எளிய உரையொன்று எழுதிப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வ.உ.சி. முடிவு செய்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை பொதுவெளிக்கு வராது ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரைச் சுவடியை அச்சிட்டுத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியவர் வ.உ.சி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுத்ததிகார, சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையுடன் கூடிய பதிப்புக்கள் வெளிவந்துவிட்டன. 1920-ல் கா.நமச்சிவாய முதலியார் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியலை இளம்பூரணர் உரையுடன் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். என்றாலும், பொருளதிகாரம்- இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன்முதலில் வ.வு.சியே பதிப்பித்து வெளியிட்டார்.

1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் இருந்த நேரத்தில் தொல்காப்பியத்தை முழுவதுமாக வாசித்ததன் பயனாகப் பழைய உரைகளின் கடுநடையை வ.உ.சி. உணர்ந்துள்ளார். இதனால் எளிய உரை எழுத எண்ணியிருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்தபின்னர் எளிய உரையையும் எழுதியுள்ளார். சென்னை எழும்பூரில் வசித்த காலத்தில் தான் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக் கருதி தி.செல்வகேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று சரிபார்த்துள்ளார். அப்பொழுது த.கனக சுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த தொல்காப்பிய இளம்பூரண அச்சுப் புத்தகமும், சொல்லதிகார ஏட்டுப் பிரதியும், பொருளதிகார ஏட்டுப்பிரதி சிலவும், வ.உ.சி.க்குக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அவற்றைப் படித்துப் பார்த்த சூழலில் இளம்பூரணரின் எளிய உரையைக் கண்டு தாம் உரை எழுதும் நோக்கத்தைக் கைவிட்டுள்ளார். இதன் பின்னரே தொல்காப்பியம்-இளம்பூரணர் உரைச் சுவடியைப் பதிப்பிக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளார்.  

1920-ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் அச்சிடத் தொடங்கியுள்ளார். 1921-ல் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை வெளியிட்டுள்ளார். 1928-ல் எழுத்ததிகார இளம்பூரணர் உரையை வெளியிட்டுள்ளார். பொருளதிகார இளம்பூரணர் ஏடுகளை எஸ்.வையாபுரிப் பிள்ளை, தி.நா. சுப்பிரமணிய ஐயர், த.மு.சொர்ணம் பிள்ளை ஆகியோரிடமிருந்து வ.உ.சி.பெற்றுள்ளார்.

பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களை வையாபுரிப்பிள்ளையுடன் இணந்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். 1938-ல் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்று இயல்களை மட்டும் தனி நூலாக வெளியிட்டுள்ளார். பின்னர் 1936-ல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் கொண்ட தனி நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இந்த ஏழு இயல்களில் மட்டும்878 பாட வேறுபாடுகளை வ.உ.சி. சுட்டிக்காட்டியுள்ளார். வையாபுரிப் பிள்ளையுடம் இணந்து செயல்பட்டு இவ்வகையான கடினமான பணியை வ.உ.சி. சாத்தியப்படுத்தியுள்ளார்.


இந்தப் பொருளதிகாரப் பதிப்பாக்கத்திற்குத் த.மு. சொர்ணம் பிள்ளையின் கடிதப் பிரதி, தி.நா.சுப்பிரமணிய ஐயர் கடிதப்பிரதி, எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ஏட்டுச் சுவடி ஆகியன உதவியதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். இதுமட்டுமல்ல, வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு பொருளுதவி புரிந்ததாகவும் வ.உ.சி. முன்னுரையில் குறிப்பிடுகிறார். தனக்கு உதவியவர்கள நன்றி உணர்வோடு பதிவு செய்கின்ற உயரிய வழக்கத்தை அவர் பின்பற்றியுள்ளார்.

தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரத்திற்குமான நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பைச் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டதப்போன்று, தொல்காப்பியம் முழுமைக்குமான இளம்பூரணர் உரையைப் பதிப்பிக்க வ.உ.சி. எண்ணியிருக்கிறார். ஆனால், எழுத்து, பொருள் எனும் இரண்டு அதிகாரங்களை மட்டுமே பதிப்பித்து வெளியிட அவரால் முடிந்தது.சொல்லதிகார இளம்பூரணர் உரையைக் இறுதிவரை அவரால் பதிப்பிக்க முடியாமலேயே போனது.

தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணர் உரையை மட்டுமல்ல, திருக்குறள் மணக்குடவர் உரையை முதன் முறையில் அச்சிட்டு வெளியிட்டவர் வ.உ.சி. அது 1917-ல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலைக்கும் விருத்தியுரை எழுதி அவர் வெளியிட்டார்.

வ.உ.சி. பதிப்புக்களின் சிறப்புக் கூறுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று ஏட்டுப்பிரதிகளிலும், அவருக்கு முந்தைய பதிப்புக்களிலும் நூற்பாவுக்குத் தரப்பட்டிருந்த பொழிப்புரைக்கு மாற்றாகப் பதவுரை எழுதிப் பதிப்பித்தது. மற்றொன்று உரைவேறுபாடு காட்டல். உதாரணமாக நூன்மரபு 14-ஆவது நூற்பாவிற்கு,
                                                
புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளத்தாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவம் என்ற இளம்பூரணர் உரையை  மறுத்து உள்ளாற் பெறும் புள்ளி  குறுகிய மகரத்திற்கு வடிவம் என்பதே இச்சூத்திரத்திற்குச் சரியான உரை எனக் குறிப்பிட்டுப் புறத்தாற் பெறும்புள்லி என்னும் சொற்றொடரைத் தேவையற்ரதாக்கி உரை வேறுபாடு காட்டுகிறார். ( 1928 )

அரசியல் போராட்டப் பின்புலத்தில் வாழ்ந்த வ.உ.சியால் எப்படி நூல் பதிப்புப் பணியில் ஈடுபட்டுச் செயபட முடிந்தது என்பது வியப்பான வரலாறாகும். இதற்கான காரணங்கள் சில அவரது வரலாற்றில் காணப்படுகின்றன.அவரிடம் இயல்பாக இருந்த தமிழார்வமும், 1912-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திருமணம் செல்வகேசவராய முதலியார் , எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோரிடத்து ஏற்பட்ட தொடர்புகளையும் முக்கியமானவைகளாகச் சொல்லலாம்.

வ.உ.சி-க்கு. தமது 40 ஆண்டுகால அரசியல் பணியை மக்கள் போதிய அளவு உணரவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கிறது. அவ்வருத்தத்தைப் போக்கி ஆற்றிக்கொள்ளும் துறையாக இலக்கியத்துறை அவருக்கு வாய்த்ததாகவும், அதன் மூலம் தன் துயரத்தை வ.உ.சி. போக்கிக் கொண்டதாகவும் க.ப. அறவாணன் கூறுகின்றார். (செந்தமிழ்ச் செல்வி 1972 )

விடுதலைப் போராட்ட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வ.உ.சியின் மாபெரும் அரசியல் பணியையும் தமிழ்ப் பணியையும் இன்று நாம் மறந்துவிட்டாலும் அவர் பதிப்பித்துச் சென்ற தொல்காப்பியப் பதிப்புக்கள் தமிழ் பதிப்பு வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன.

துணை நின்ற நூல்கள் :-

1. அரசு.மா.ரா.2005 வ.உ.சிதம்பரனார்.புதுதில்லி/சென்னை சாகித்திய அகாதெமி

2. சிதம்பரம் பிள்ளை வ.உ. (ப. ஆ.) 1928. தொல்-எழுத்து இளம்பூரணர் உரை.சென்னை: வாவிஉள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்டு சன்ஸ்

இதழ் :-

1. அறவாணன். க. ப. 1972. செந்தமிழ்ச் செல்வி, செப்டம்பர், வ.உசியின் இலக்கணப் பதிப்புப் பணி.

இந்தக் கட்டுரையானது, இரா.வெங்கடேசன் எழுதியுள்ள தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\

இதனை வெளியிட்டவர்கள் :- இராசகுணா பதிப்பகம், 101/ 3/3 ஜீனியஸ் சாலை, சைதாப்பேட்டை,, சென்னை-600 015. விலை ரூ.75/- கைபேசிஎண் ;- 94440 23182

நூல் விளக்கக் குறிப்புரை :-

1 .தமிழ்ப் புலமை மரபில் சிலப்பதிகாரப் பதிப்புருவாக்கம்.

2 .சமயப் பரவல் எதிர்ப்பும் ஆசாரக்கோவை அச்சுருவாக்கமும்

 3. வ.உ.சி. எனும் பதிப்பாளன் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு வரலாறு

4. 19-ஆம் நூற்றாண்டின் நூல் பதிப்பு முறைமைகளும் தொல்காப்பியப் பதிப்புக்களும் 

5. செவ்விய நூல்கள் சந்தி பிரித்தல் குறித்த விவாதங்கள்: சாக்கை ராஜம் பதிப்புக்களை முன்வைத்து

6. உ.வே.சா.வின் புலமைச் செயல்பாடுகள் அல்லது சங்கநூல்களின் அச்சுருவாக்க வரலாறு

7. சிந்துவெளி ஆய்வுகள் :- இரண்டு தமிழ்ப் பதிப்புக்களும், இருவேறு ஆய்வு அணுகுமுறைகளும்

8. தமிழ் இலக்கண நூல்களின் பதிப்புருவாக்க வரலாறு.

இவற்றுடன், அணிந்துரை, வாழ்த்துரை, தமிழ் நூல் பதிப்பு வரலாறு அல்லது தமிழ்ச் சமூக வரலாறு -ஆசிரியரின் தன்னுரை இடம்பெற்றுள்ளது.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் தமிழை இன்றளவும் தொட்டுக் கூடப்பார்க்காதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். திருக்குறளைப்போன்று ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெற வேண்டிய நூல்.

இதனைத் தக்க தருணத்தில் எழுதியுள்ள பெரியவர் இரா.வெங்கடேசன், வெளியிட்டுள்ல இராசகுணாபதிப்பகத்தார் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்.

மேலும் வ.உ.சி.-யின் இலக்கியப் பணிகளின் சுருக்கத்தைக் கீழ்க்கண்ட பதிவிலும் படித்து மகிழலாம்.                                                                              

http://rssairam.blogspot.in/2012/11/blog-post_6607.html 

இலக்கியத்திலும் தோய்ந்த தேசியவாதி ! தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை ! 

இப்பதிவினை முழுமையாகப் படிக்கும் வலைப்பதிவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வ.உ.ச தேசியவாதி மட்டுமல்ல, தமிழிலக்கியத்திலும் தலை சிறந்த பண்பாளர் என்பதை அறியலாம்.

Rama Samy

unread,
Nov 21, 2012, 8:54:17 PM11/21/12
to mint...@googlegroups.com
 பழந்தமிழர்களின் புத்திசாலித் திறத்தை நினைத்துப் பார்த்து வியப்படைவதே நோக்கம்.


2012/11/22 rajam <ra...@earthlink.net>
pumpkinseedscounting_2.jpg
pumpkinseedscounting_3.jpg
pumpkinseedscounting_1.jpg
pumpkinseedscounting_4.jpg

Rama Samy

unread,
Nov 21, 2012, 8:50:50 PM11/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் நாம் வாழும் காலத்திற்கும் உள்ள இயற்கை மாற்றங்களின் காரணமாக எண்ணிக்கைகள் வேறுபடக் கூடும். ஆனால், ஒரு பாடலின் மூலம் உண்மையை உணர்த்தியவர்களிடம் உண்மை இல்லாதிருந்திருக்க முடியாது. இதேபோன்று பலாப்பழத்திற்கும் ஒரு பாடல் கிடத்துள்ளது, எமது அடுத்த வெளியீடு பலாப்பழப் பாடல்தான். பாடலை மட்டும் சொல்லிவிட்டு, பொருள்-விளக்கத்தை வலைப்பூ அன்பர்களின் முடிவிற்கே விட்டுவிடலாமா என்ற யோசனையின் காரணமாகவே தாமதமாகின்றது.
2012/11/22 rajam <ra...@earthlink.net>
pumpkinseedscounting_4.jpg
pumpkinseedscounting_3.jpg
pumpkinseedscounting_2.jpg
pumpkinseedscounting_1.jpg

rajam

unread,
Nov 22, 2012, 12:31:21 PM11/22/12
to மின்தமிழ், Rama Samy
Begin forwarded message:

From: Rama Samy <rssai...@gmail.com>
Date: November 21, 2012 5:54:17 PM PST
Subject: Re: [MinTamil] செய்திச் சுரங்கம்

 பழந்தமிழர்களின் புத்திசாலித் திறத்தை நினைத்துப் பார்த்து வியப்படைவதே நோக்கம். 

ஐயா, பாடல் செய்த சித்தர்களின் நோக்கம் அறிய ஆவலாக இருந்தது. தொடர்ந்து நினைத்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது ... சித்த மருத்துவத்துக்கு இயற்கைப் பொருள்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவேளை, பூசணிக்காயை அல்லது அதன் விதைகளை மருத்துவப் பயனுக்குத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வகைக் கணக்குப் போட்டிருப்பார்கள். அருமையான சிந்தனை என்று வியக்கிறேன் 

rajam

unread,
Nov 22, 2012, 12:35:29 PM11/22/12
to மின்தமிழ், Rama Samy
Begin forwarded message:

From: Rama Samy <rssai...@gmail.com>
Date: November 21, 2012 5:50:50 PM PST
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Subject: Re: [MinTamil] செய்திச் சுரங்கம்

அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் நாம் வாழும் காலத்திற்கும் உள்ள இயற்கை மாற்றங்களின் காரணமாக எண்ணிக்கைகள் வேறுபடக் கூடும். ஆனால், ஒரு பாடலின் மூலம் உண்மையை உணர்த்தியவர்களிடம் உண்மை இல்லாதிருந்திருக்க முடியாது.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

இதேபோன்று பலாப்பழத்திற்கும் ஒரு பாடல் கிடத்துள்ளது, எமது அடுத்த வெளியீடு பலாப்பழப் பாடல்தான். பாடலை மட்டும் சொல்லிவிட்டு, பொருள்-விளக்கத்தை வலைப்பூ அன்பர்களின் முடிவிற்கே விட்டுவிடலாமா என்ற யோசனையின் காரணமாகவே தாமதமாகின்றது.
இல்லை, இல்லை. பொருள் விளக்கம் தாருங்கள். பலாப்பழத்தை முழுமையாக வாங்க இங்கே வசதியில்லை, ஆனாலும் பாடலையும் விளக்கத்தையும் அறிந்துகொள்ளலாமே. மிக்க நன்றி.

Subashini Tremmel

unread,
Nov 22, 2012, 12:43:01 PM11/22/12
to rajam, மின்தமிழ், Subashini Tremmel



2012/11/22 rajam <ra...@earthlink.net>
கொஞ்சம் சிக்கல்.
..

என் தோழி வீட்டில் அவர்கள் வாடவிட்ட ஒரு கறிவேப்பிலைச் செடியைப் புதுப்பிக்க நான் செய்த முயற்சிகளைப் பார்த்துவிட்டு என் தோழியின் கணவர் ஒரு பழமொழியைச் சொன்னார்: "வேலையிலா அம்பட்டன் பூனையைப் பிடுத்துச் சிறைத்தானாம்."

:-) நல்ல பழமொழிதான்.
 
நான் மேற்காட்டிய என் பூசணியின் விதைகளை எண்ணிக்கொண்டிருக்கப் போவதில்லை. போய் நல்லா ... சோளப் பொங்கலும் மோர்க்குழம்பும் சமெச்சுச் சாப்பிடப் போறேன்.
இது நல்ல யோசனை. நான் மோர் குழம்பை மறந்தே ரொம்பா நாளாச்சு. நாளைக்கு சமைச்சு சாப்பிடனும் :-)
சுபா

Rama Samy

unread,
Nov 22, 2012, 6:51:40 PM11/22/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor, pollac...@gmail.com

ஐந்து பெண்களில் யாரால் ஆபத்து ? மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாறாம் மகிந்த ராஜபக்சே !


நவநீதம் பிள்ளை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையரான தென்னாப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளை. மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் இலங்கையைச் சர்வதேச முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிப்பது போல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பெண்மணி. இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் என்றாலே கிலி பிடித்து ஆட நவநீதம் பிள்ளையின் கடுமையான நிலைப்பாடுதான் காரணம். மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை தரக்கூடியவர்களின் முதன்மையான பெண் நவநீதம் பிள்ளை

சூசன் ரைஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவுக்கான தூதர் சூசன் ரைஸ். இவரது பணிக்காலத்தில்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இப்பொழுது இவரை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒபாமா நியமிக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அப்படி சூசன் ரைஸ் மட்டும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகிவிட்டால் மகிந்த ராஜபக்சேவுக்கு சுத்தமாக தூக்கமே வராது. இலங்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.


சமந்தா பவர்

சூசன் ரைஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகிவிட்டால் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்படக் கூடியவர் சமந்தா பவர். சூசன் ரைஸால் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கை மீதான கொள்கையைக் கடுமையாக்க முடியுமேயானால் சமபந்தா பவர், அப்படியே நடந்தாக வேண்டும். அப்படியானால் இனிவரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை என்பது இலங்கைக்கு எரிச்சலூட்டக் கூடிய ஒரு அமைப்பாகவே இருக்கும். இன்னும் எத்தனை கண்டனக் கணைகள் ஐ.நா.விலிருந்து வருமோ? என்று கலங்கிக் கிடக்கிறார் மகிந்த ராஜபக்ச.

ஷிராணி பண்டாரநாயக்கே

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே. இவர் மீது இம்பீச்மெண்ட் எனப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் விவகாரம் சர்வதேச விஷயமாகிப் போனது. ஐக்கிய நாடுகள் சபையும் ஷிராணி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கண்டித்தது. உலக நாடுகள் பலவும் இலங்கையின் நீதித்துறை சுதந்திரமற்றுக் கிடப்பதையே ஷிராணி பண்டாரநாயக்கே விவகாரம் வெளிப்படுத்துகிறது என்று கையில் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்தன. அனேகமான ஷிராணி விவகாரம்தான் மகிந்த ஆட்சிக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்க வைத்த முக்கிய விவகாரமும் கூட.

சோனியா காந்தி....

இவரால் நேரிடையாக மகிந்த ராஜபக்சேவுக்கு ஆபத்து இல்லை என்று தோன்றலாம். ஆனால் இந்திய அரசியல் சூழல், அமெரிக்காவின் நிலைப்பாடு, தமிழக அழுத்தம் இவற்றினால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு எடுக்க சோனியாவே காரணமாக இருக்கலாம். குறிப்பாக இந்தியா வலியுறுத்தி வரும் டிஏ 13-வது அரசியல் சாசனத் திருத்தத்தை மகிந்த ராஜபக்சே கைவிட்டால் இந்தியா கடும்போக்கை மேற்கொள்ள சிக்னல் கொடுக்கக் கூடியவராக சோனியா காந்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆக 5 பெண்களால் தூக்கத்தை தொலைக்கிறார் மகிந்த என்கின்றனர் இலங்கை ஊடகவியலாளர்கள்

சோதிடமும் அப்படித்தானாம்
சோதிடத்தை அப்படி நம்புகிறவர்கள் இலங்கைவாசிகள். மகிந்த ராஜபக்சேவும்கூட அப்படித்தான். அப்படித்தான் அண்மையில் சோதிடம் பார்த்தபோது அவரது ஆட்சிக்கு ஒரு பெண்தான் சூனியம் வைக்கப் போகிறார் என்று சொல்ல வெளவெளத்துப் போயிருக்கிறாராம்

மகிந்த. இந்த 5 பேரில் யாரால் நமக்கு ஆபத்து என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம் மகிந்த ராஜபக்சே.                                                      
நன்றி :- ஒன் இந்தியா, 23-11-2012                                            





Posted 1 minute ago by Rama Samy

sk natarajan

unread,
Nov 23, 2012, 8:31:41 PM11/23/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com
இங்கே கூட சில கோவில்கள் அது போல சாலைக்கு மத்தியில் உள்ளது ( கோட்டூர் , மேற்கு மாம்பலம் , அசோக் நகர் )



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்






Rama Samy

unread,
Nov 23, 2012, 8:13:12 PM11/23/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறது.

லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.

அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாகக் காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.

சே, நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே...!

Topics: china, சீனா, நெடுஞ்சாலை

ஒன் இந்தியா:- 23-11-2012
Posted just now by Rama Samy

Rama Samy

unread,
Nov 23, 2012, 11:48:15 PM11/23/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor, தமிழ் சிறகுகள்

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012





தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும்

முதல் ஆண்டு விழாவிற்கான

ஹைக்கூப் போட்டி !


கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து 

இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை

அனுப்பி வைக்கலாம்.

முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப 


வேண்டும். கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ 

இலக்கணத்திற்குட்பட்டு 

இருக்க வேண்டியது அவசியம்.

இறுதி நாள் :- 10-12-2012

அனுப்ப வேண்டிய முகவரி:-

கவிஞர் சுடர் முருகையா

பி3/ பிளாக் 59, ஜீவன் பீமா நகர்,

( சென்னை பப்ளிக் ஸ்கூல் எதிரில் )

அண்ணாநகர் மேற்கு விரிவு

சென்னை- 600 101


தொடர்பு எண் :- 99400 60707


தகவல் உதவி :-

பாவையர் மலர், மாத இதழ்,

25, வ.உ.சி.நகர், மார்க்கட் தெரு,

தண்டையார்பேட்டை, சென்னை-600 081


044 / 2596 4747

pavai...@yahoo.com

wc...@yahoo.com


Posted 3 minutes ago by Rama Samy

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

unread,
Nov 23, 2012, 11:52:39 PM11/23/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor
sudarm...@gmail.com,

2012/11/24 Rama Samy <rssai...@gmail.com>



--
=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
------------------------------------------------------------------
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi - 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.

Rama Samy

unread,
Nov 24, 2012, 4:15:52 AM11/24/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor

பெருஞ்சித்திரனாரின் மருமகன் புலவர் இறைக்குருவனார் காலமானார்.!






சென்னை: தமிழறிஞரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனுமான "திருக்குறள் மணி" புலவர் இறைக்குருவனார் (வயது 70) உடல்நலக் குறைவால் காலமானார்.

தஞ்சாவூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு சென்னை செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட்டது. பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னைக்கு இன்று முற்பகல் கொண்டுவரப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் இருக்கும் தமிழ்க்களத்தில் புலவர் இறைக்குருவனாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழக ஊர்ப்பெயர்கள் பற்றி அரிய செய்திகளை வழங்கியவர். தமிழ் ஓசை நாளிதழில் பணியாற்றியவர். வயிரமூக்குத்தி, வல்லினம் மிகுதலும் மிகாமையும் போன்ற நூல்களை எழுதியவர்.                  

seshadri sridharan

unread,
Nov 24, 2012, 10:05:20 AM11/24/12
to mint...@googlegroups.com
 தொடர்ந்து தமிழ், தமிழர் தொடர்பான சேதிகளை வழங்கிவருகின்றீர்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்! 

சேசாத்திரி 
 
2012/11/24 Rama Samy <rssai...@gmail.com>

Rama Samy

unread,
Nov 24, 2012, 10:23:55 AM11/24/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள், winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari, vallamai editor

முடிவைத்தானேந்தல் மிஸ்டிக் செல்வம் !


http://omshivashivaom.blogspot.in/2012/06/blog-post.html

Monday, June 4, 2012

நமக்கு ஓம்சிவசிவஓம் உபதேசித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சமாதி இதுதான்!!!

இந்த புகைப்படத்தை லேமினேஷன் செய்துகொண்டு,
 
இந்த புகைப்படத்தின்முன்பாகத்
 
தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போமா? 
 
ருத்ராட்சதெரபிஸ்ட்,
 
ஆன்மீக ஆராய்ச்சியாளர்,
 
ஓம்சிவசிவஓம் மந்திரத்தை 
 
நமக்குஉபதேசித்தவர் 
 
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.
 
அவரது சமாதி இதுதான்.
 
இது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் 
 
முடிவைத்தானேந்தல் 
 
என்னும் கிராமத்தில்
 
 அமைந்திருக்கிறது.
 
Posted by aanmiga kkadal at 6:09 PM

Rama Samy

unread,
Nov 25, 2012, 7:53:11 AM11/25/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor

உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 பெண்கள் !


ஆண்களுக்கு நிகராக நாங்களும் சாதிப்போம் என்று வர்த்தகத்தில் இறங்கியுள்ளனர் பெண்கள். உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் பத்துப் பெண்களின் 2011-ம் ஆண்டுக்கான வருமானம் இதோ:

சஃப்ரா ஏ.கேட்ஸ்
நிறுவனம்: ஆரக்கிள்
மென்பொருள் நிறுவனம்
பதவி: தலைவர் மற்றும் முதன்மை இயக்குநர்.
வருமானம்: ரூ. 284.45 கோடி

கரோல் பார்ட்ஸ்
நிறுவனம்: யாஹூ
பதவி: முன்னாள் தலைவர்
மற்றும்
தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 89.11 கோடி

வெலிங்டன் ஜெ. டென்ஹேன்- நோரிஸ்
நிறுவனம்: அனலி கேபிட்டல் மேனேஜ்மென்ட்
பதவி: துணைத் தலைவர், முதன்மை முதலீட்டு அதிகாரி மற்றும் தலைமை
செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 192.64 கோடி

ஐரின் பி.ரோஸன்ஃபெல்ட்
நிறுவனம்: கிராஃப்ட் ஃபுட்ஸ்
பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 86.60 கோடி

ஷெரில் கே.சேண்ட்பெர்க்
நிறுவனம்: ஃபேஸ்புக்
பதவி:
தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 170.34 கோடி

மேரி சி. ஈரோட்ஸ்
நிறுவனம்: ஜெ.பி. மோர்கன் சேஸ் அண்ட் கார்பரேஷன்
பதவி: சொத்து மேலாண்மை பிரிவு தலைமை செயல்
அதிகாரி.
வருமானம்: ரூ. 84.48 கோடி

டிபிரா கேஃபரோ
நிறுவனம்: வென்டாஸ்
பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 101. 78 கோடி

இனா ஆர். ட்ரூ
நிறுவனம்: ஜெ.பி. மோர்கன் சேஸ் அண்ட் கார்பரேஷன்
பதவி: தலைமை முதலீட்டு
அதிகாரி.
வருமானம்: ரூ. 82.24 கோடி

மார்கரெட் சி. விட்மேன்
நிறுவனம்: ஹீவ்லெட் பக்கார்ட்
பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 90. 89 கோடி

இந்திரா நூரி
நிறுவனம்: பெப்சிகோ
பதவி: தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
வருமானம்: ரூ. 77.51 கோடி                                                                                                

 நன்றி :- தினமணி கதிர், 25-11-2012
Posted 4 minutes ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 26, 2012, 12:33:53 AM11/26/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, vallamai editor, தமிழ் சிறகுகள்

கூத்துக்கலையின் நடவு வயலாகப் புரிசை - கவிஞர் ஆரிசன்., தீக்கதிர்.


புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான்


மண்ணின் மணத்தோடு அரிதாரம் பூசி அடவு தப்பாமல் ஆடி மக்களுக்கு விடிய விடிய கதை சொல்லும் கூத்துக்கலை இன் னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆண்டுதோறும் திருவிழாவாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தி வரும் பாரம்பரியமிக்க மண்தான் புரிசைக் கிராமத்து மண்.

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றமும், தஞ்சை தெற்கு மண்டல கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து,




கலைமாமணி கண் ணப்ப தம்பிரான் நூற்றாண்டு நிறைவு விழா

 மற்றும் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவாக 9வது தியேட்டர் திருவிழா 2012 ,

கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

ஆகிய முப்பெரும் விழாக்கள் அண்மையில் புரிசையில் நடைபெற்றது.

துவக்க நாளில் பயிற்சியாளர் எம். பழனி,

ஏரியல் ஆக்ரோபட் எனும் தொங்கும் ஒற்றைத்துணியில் தெருக் கூத்துப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சிகள்  மக்கள் கண்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது.

பின்னர் கௌரி சம்பந்தன் குழுவினரின் தமிழிசைப் பாடல் நிகழ்வோடு கூத்துத்திரு விழா துவங்கியது.

வைகறை கோவிந்தன் குழுவினரின் கிராமிய இசைப்பாடல்களைத் தொடர்ந்து கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கண்ணப்பகாசி தலைமை தாங்கினார். மூத்த தெருக்கூத்துக் கலைஞர் வி. ரத்தினம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதுதினை பத்திரிகை யாளர் மயிலைபாலு வழங்கி கௌரவித்தார்.

‘நான் சின்ன வயசுல கூத்துப் பார்க்க எங்க கிராமத்துல பாய் எடுத்துக் கொண்டு போய் கூத்து நடக்கும் இடம் முன்பாக விரித்தமர்ந்து  விடிய விடியக் கூத்துப் பார்த்த அதே நினைவை இந்த மண்ணிலும் பார்க்க முடிகிறது’ என்று தன் நினைவுகளை மயிலைபாலு பகிர்ந்து கொண்டார்.

சிறப்புரையாற்றிய பத்திரிகையாளர் ஞாநி ‘ என் சொந்த ஊர் ஆர்க்காடுக்கு அருகே உள்ள நல்லூர் கிராமம் தான் . நான் என் சொந்த கிராமத்துக்குப் போனால் கூட ஏற்படாத  மகிழ்ச்சி இந்தப் புரிசை மண்ணில் நிற்கும் போது ஏற்படுகிறது. கண்ணப்ப தம்பிரான் வாழ்ந்த பூமியில் நிற்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.

நிகழ்வில் முனைவர் செ. இரவீந்திரன், தமுஎகச திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் கவிஞர் ஆரிசன், ஊராட்சி மன்ற தலைவர் லதா லட்சுமணன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூஜூபீ, மௌனக் குறம், தெனாலி ராமன், ரேணுகாம்பாள் சரித்திரம் ஆகிய நாடகங்களும் தெருக்கூத்து நிகழ்வுகளும் இடம் பெற்றன.

மறுநாள் 21ம் நூற்றாண்டில் தமிழ் நாட கம் தெருக்கூத்து மற்றும் நவீன தியேட்டர் குறித்த கருத்தரங்கம் முனைவர் செ. இரவீந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் பணியினை முனைவர் மு. இராமசாமி ,நிஜ நாடக இயக்கம், சிறப்புறச் செய்தார்.

கருத்தரங்கில் ஞாநி, ‘இயக்குநர் பரிக்ஷா நாடக்குழு’, பிரளயன் ,சென்னை கலைக் குழு,, டாக்டர் பார்த்திபராஜா, டாக்டர் கே. பழனி, டாக்டர்
அ. அறிவுநம்பி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினைச் சமர்ப்பித்தனர்.

பின்னர் இரவில் தற்காப்புக்கலை நிகழ்வு துவங்கியது. இரா. இராமலிங்கம் வந்தவாசி, தமுஎகச உதவிப் பொதுச் செயலாளர் எஸ். கருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

‘வட்டம்’ பரிக்ஷா குழுவின் நாடகம் தொடர்ந்து காபிரியேல் தார்ஷியா மார்கோஸின் -‘பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனி தன்’ நாடகம் நடைபெற்றது. பின்னர் மின்னல் ஒளி சிவ பூஜை - தெருக்கூத்தோடு அன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது.

இறுதி நாளில் ஜெயசந்திர ஹாஷ்மியின் மௌன மொழி, ஆர். பச்சமுத்துவின் மூன்றாம் தமிழ், செந்தில்ராமின் கிரியா ஆகிய குறும் படங்கள் திரையிடப்பட்டன.

பி. ஹேமநாதன் ,உதவி இயக்குநர் கலை பண்பாட்டுமையம், காஞ்சிபுரம்) வாழ்த்துரை வழங்க கிராமிய இசை , ஒயிலாட்டம், தப்பாட் டம் மற்றும் வேலூர் சாரல் கலைக்குழுவின் அரங்கதிர்ந்த ஆடலும் , பாடலும் ,இடி முழக்கம் போன்றும், பறை இசையுடனும் விழா களைகட்டியது.

இறுதியில் ஸ்ரீவள்ளி திருமணம், மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் மூலம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வினை இரா. லோக நாதன் ஒருங்கிணைத்தார். கண்ணப்ப சம்பந் தன் நன்றி கூறினார்.

அடவு சொல்லித் தரும் மண்ணாக கூத்துக் கலையின் நடவு வயலாக புரிசை எப்போதும் இருப்பது, தமிழகத்திற்கு மட்டு மல்ல இந்தியாவுக்கும் பெருமையே.                                                                                                                               

Posted just now by Rama Samy

Rama Samy

unread,
Nov 26, 2012, 12:58:13 AM11/26/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor, dhillita...@gmail.com

டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள் -தங்க. ஜெயசக்திவேல்.


வானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. டி.ஆர்.எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.

இதற்கு  அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான "வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாகப் பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால் இப்பொழுது "வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ளது.

அகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.

வானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது "அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் "டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், "எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்  கண்டுகொள்ளலாம்.

இன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்குக் கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.

இவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென தனியான ஒலிபரப்புக் கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு "உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.

ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று.

 ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது.

டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம்.  ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.

ஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம்.  வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம்.

ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு.

இன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைபேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றித் தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.

ஆக, இனி வானொலி ஒலிபரப்புகளை வானொலிப் பெட்டியில் மட்டும்தான் கேட்க வேண்டும் என்று இல்லாமல்,

 நமது கைப்பேசி, கணினி, ஐபேட் என எல்லா வகையான மின்னணு சாதனங்களின் ஊடாகவும் கேட்க முடியும்                                                                          

நன்றி :-  கருத்துக்களம், தினமணி ,25-11-2012         .

Rama Samy

unread,
Nov 26, 2012, 2:20:30 AM11/26/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, T Parameswari, தமிழ் சிறகுகள், vallamai editor

உலகக் கழிப்பறை தினம்- 19-11-2012..-கே.ஆர்.இரமேஷ், கீரனூர்.



வீதிக்கு வீதி வகைவகையான உணவகங்கள், கடைகள் இருக்கின்றன. கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை.கழிப்பிடத் தேவையில் தன்னிறைவு அவசியம் !


உலகமெங்கும் 250 கோடி மக்கள் நல்ல கழிப்பறை வசதிகள் இல்லாதவர்களாகவும், அதில் 120 கோடி பேர் கழிப்பறை வசதியே இல்லாதவர்களாக, திறந்தவெளியையே கழிப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் 13 நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஜார்கண்ட், ஒரிசா, பிகார், தமிழ்நாட்டில்தான் இது அதிகம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னையில் 95 சதவீதமும், கன்னியாகுமரியில் 87 சதவீதமும் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றார்கள். மாறாக அரியலூர், தருமபுரி மாவட்டங்களில் திறந்த வெளியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.

இந்தியாவில் (அறுபது கோடி மக்கள்) 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதி கொண்டவையாக உள்ளன.. ஒருபோர் விமானம் வாங்கச் செலவிடும் பணத்தைக் கொண்டு 1,000 கிராமங்களுக்குக் கழிப்பறை வசதி ஏற்படுத்த முடியும்).

கழிப்பறை வசதி இன்மையால் சுகாதாரக் கேடுகள், தொற்றுநோய்கள், அவற்றுக்கான சிகிச்சைகள், மனிதசக்தி இழப்பு, உற்பத்திக் குறைவு என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் கோடியை நாம் இழக்கிறோம் என்கிறது யூனிசெப் நிறுவனம். அந்தப் பணத்தைக் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளில் செலவழித்தால் கழிப்பறை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

2011 ஆண்டு மக்கள் தொகையின்படி இந்தியாவில் படித்த பெண்கள் 65 சதவீதமாகும். 2001ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும். அதே சமயம் எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டுவிலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இதற்கு பள்ளிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீரும் இல்லை என்பதே காரணமாகும் என்கிறது உலக வங்கியின் ஆய்வு.  இந்தியாவில் உள்ள 51 சதவீதம் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. 74 சதவீதம் பள்ளிகளில் தண்ணீர் இல்லை.

தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவர்களுக்குக் கழிப்பறைப் பயன்பாடு மற்றும் அது குறித்த சுகாதாரக் கல்வியை பள்ளிகள் வழங்கத் தவறியதன் விளைவு பொது இடத்தில் அருவெறுப்பு இல்லாமல் சிறுநீர் கழிப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்கதையாக உள்ளது. 

60 கோடி இந்தியர்கள் சாலையோரங்களிலும், ரயில்தண்டவாளத்தின் இருபுறங்களிலும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்கிற ஷரத்துக்கு புறம்பானது என்றும், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தரவேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர் போன காலனித்துவ ஆட்சியாளர்களையே  தலைவணங்க வைத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தாமே, கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, கழிப்பிடப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மற்றவருக்கு முன்னோடியாக விளங்கினார். 

சர்வதேச அளவில் கழிப்பறைப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் பொருட்டு 2001 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் "உலக கழிப்பறைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19}ம் தேதி அனைத்து நாடுகளிலும் உலகக் கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். 

2025 ஆம் ஆண்டுக்குள் கழிப்பறை பிரச்னைக்குத் தீர்வுகாண ஐ.நா. சபையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.                                                       

நன்றி :- கருத்துக்களம், தினமணி, 26-11-2012                                              

Rama Samy

unread,
Nov 26, 2012, 8:49:25 AM11/26/12
to நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, winmani wordpress, pavai...@yahoo.com, T Parameswari

"தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" ! ! !

http://tamil.boldsky.com/inspiration/short-story/the-natural-order-002350.html



ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான்.

அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார்.

அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. "என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும்.

எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை.

ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும்.

அதையே சந்ததியினரும் பின்பற்றுவர்.

ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்"

என்று விளக்கம் தந்தார்.                                                                         

Subashini Tremmel

unread,
Nov 26, 2012, 12:26:17 PM11/26/12
to மின்தமிழ், Subashini Tremmel
தகவல் பகிர்வுக்கு நன்றி.

2010ல் நான் சீத்தாமா, ப்ரகாஷ் ஆகியோருடன் புரிசைக்குச் சென்றிருந்த போது செய்த பதிவு இங்குள்ளது. இதிலுள்ள நான் எடுத்த படங்களைத்தான் உங்கள் பதிவில் இணைத்திருக்கின்றீர்கள்.  தமிழ் மரபு அறக்கட்டளை படங்கள் என்ற செய்தியைத்தான் பதிவில் காணவில்லை.:-(

சுபா



2012/11/26 Rama Samy <rssai...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Nov 26, 2012, 12:34:54 PM11/26/12
to mint...@googlegroups.com
ஆண்டவனே! என் வாய்க்குப் பூட்டுப்போடு. Niebuhr அவர்கள் சொல்லிக்கொடுத்த அமரிக்கையையும், துணிவையும்  விவேகத்தையும் கொடு. மேலதிக விவரங்களுக்கு அண்ணா கண்ணனை அணுகவும்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2012/11/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Rama Samy

unread,
Nov 27, 2012, 8:05:22 AM11/27/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress, vallamai editor, தமிழ் சிறகுகள், T Parameswari

தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் !



காரமான உணவுகள்
வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.


சிட்ரஸ் உணவுகள்

இதுவும் ஒரு வகையான காரமான உணவுப் பொருட்கள் தான். அதிலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் அசிடிட்டி அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களான அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்
பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.

பால் பொருட்கள்
தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் தாயானவள் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும். ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மீன்

மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது. இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

காப்ஃபைன்
காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.

சாக்லேட்

சாக்லேட்டிலும் காப்ஃபைன் உள்ளது. இவற்றை அதிகம் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே குறைந் அளவில் சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலை

தாய்ப்பால் கொடுக்கும் தாய் வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் உடலில் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறுகிறது. இருப்பினும் அவை முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்கலாமே!!!

ஆல்கஹால்
ஆல்கஹால் பருக வேண்டுமெனில் குழந்தைக்கு நிச்சயம் பக்கவிளைவுகள் உள்ளது. அதிலும் இதனை தாய் பருகினால், குழந்தைக்கு அதிக நேர தூக்கம், உடல் எடை குறைந்துவிடுதல் போன்றவை ஏற்படும். இப்போது நீங்களே ஆல்கஹால் பருக வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுங்கள்.

நன்றி, ஒன் இந்தியா, தமிழ்.

Rama Samy

unread,
Nov 28, 2012, 11:40:41 PM11/28/12
to mint...@googlegroups.com
பொதுவாகப் படங்கள் அனைத்துமே கணினியிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. இனிமேல் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட படங்கள் எனத் தெரிய வந்தால் எடுத்தோரின் பெயர்களைக் குறிப்பிட்டு விடுகின்றேன்.
2012/11/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Rama Samy

unread,
Nov 29, 2012, 4:01:50 AM11/29/12
to mint...@googlegroups.com
”பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.” என்றிருக்க வேண்டும். சித்தர் பாடலுக்குச் சுட்டிக்காட்டிய உவமானம் வெகு அருமை ???

2012/11/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

sk natarajan

unread,
Nov 29, 2012, 9:23:22 PM11/29/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor

பயன் தரும் பதிவிற்கு நன்றி ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/26 Rama Samy <rssai...@gmail.com>

sk natarajan

unread,
Nov 29, 2012, 9:24:27 PM11/29/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, vallamai editor, dhillita...@gmail.com
பயன் தரும் பதிவிற்கு நன்றி ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்






Reply all
Reply to author
Forward
0 new messages