கேள்வி -- "உன் பெயர் என்ன?" ...

190 views
Skip to first unread message

rajam

unread,
Jan 22, 2012, 4:44:01 PM1/22/12
to மின்தமிழ், tamilmanram
முன் குறிப்பு
--------------
இழையின் தலைப்பின் பொருளைத் திசை திருப்பாமல், யார் வேண்டுமானாலும் இந்த இழையில் பங்கு பெறலாம். சும்மா தம்பட்டம் அடிப்பவர்கள் குறுக்கிட வேண்டாம். உண்மையாகவே, தனியாகக் கஷ்டப்பட்டவர்கள் அவரவர் இடர்ப்பாடுகளைச் சொல்லி. அதோடு அவர்களுடைய தீர்வுகளையும் சொல்லவேண்டும். சும்மா "self-pity"யில் புலம்பிப் பயன் இல்லை; பாரதியார் சொன்ன "... வேண்டும், ... வேண்டும்" பாட்டை மீண்டும் கற்பனை செய்து அதுபோலப் பாடியும் பயனில்லை. 

என் பெயர் என்ன?
-------------------------
"கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, என் பெயர் என்ன?" என்று தொடங்கும் சிறுவர்க்கான பாடல் சிலருக்காவது நினைவில் இருக்கும்.

ஆனால் ... இங்கே என் கேள்வி "உன் பெயர் என்ன?" என்பது.

உன் பெயர் என்ன?
----------------------------
இது என்ன பெரிய சிக்கல்? என்று சிலர் நினைக்கலாம்!

யாராவது உங்களிடம் "உன் பெயர் என்ன?" என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? தமிழ்நாட்டு ஆட்களாக இருந்தால் ... நம் பெற்றோர் நாம் பிறந்த ஏழாம் நாளில், நம்மைத் தொட்டிலில் போட்டு, நமக்குக் காதில் ஓதிய பெயர் என்று ஏதோ நமக்கு தெரிந்ததைச் சொல்வோம், இல்லையா? 

அந்த, அதே பெயர் நாம் பிறந்த அன்றைக்கு, அதாவது நம் தாய் நம்மை ஈன்றெடுத்த நாளில் ... மருத்துவ மனையிலோ, கிராமத்துத் தாசில்தார் அலுவலகத்திலோ பதிவான பெயராக இருக்கத் தேவையில்லை. 

நான் பிறந்த செய்தியை எங்கள் நெல்லைச் சீமைக் கிராமத்துத் தாசில்தார் அலுவலகத்தில் பதிந்த நாளில் கொடுக்கப்பட்ட என் பெயர் ஒன்று, பிறகு வழங்கும் பெயர்(கள்) வேறு! அந்தக் காலத்தில் ... பிறந்த எல்லாப் பெண் குழந்தைக்கும் "லக்ஷ்மி" என்பதே ஒட்டு மொத்தமாகத் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தார்கள்போல! அல்லது, என் அப்பாவழிப் பாட்டி பெயரும் அதுதான் போல. பிறகு "லக்ஷ்மி" என்பது "ராஜலக்ஷ்மி"யாக உருவெடுத்து, கழுதை தேய்ந்த கட்டெறும்பாக "ராஜம்" ஆனது. அதோடு என் "லக்ஷ்மீகரமும்" போச்சு! 

பள்ளிக்கூடத்தில் படிக்கப் போட்டார்கள். அங்கே பெயர்ப் பதிவேடு (register) என்று ஒன்று இருக்குமே, அதில் பதிவதற்காக, பிறந்த ஊர்ப்பெயரும் அப்பா பெயரும் எனக்கு முன்-ஒட்டு ஆக, "வி.எஸ்.ராஜம்" ஆனேன். தனித்தமிழில், என் அன்பிற்குரிய இலக்குவனார் சொன்னபடி, இது "வீ.சு.இராசம்" என்று ஆனது. அதாவது, வீரவநல்லூர் சுந்தரத்தின் மகள் இராசம் என்று விரியும். பள்ளி, கல்லூரிகளில் நான் அவளே: "வி.எஸ்.ராஜம்" /  "வீ.சு.இராசம்." கல்லூரியில் வேலை செய்ததுக்கான மாத வருவாய் பெற்றதைப் பதிவு செய்யும் ஏட்டில்  "வி.எஸ்.ராஜம்"; தமிழ் மாணவியரின் கட்டுரை ஏடுகளைத் திருத்துவதில் கையொப்பம் இட்டபோது "வீ.சு.இராசம்." நான் ஓர் இரட்டைப் பிறவியானேன்! :-) 

சரி. அப்படியே இருந்திருக்கலாமே. அதுதான் இல்லை. திருமணம் ஆனபோது கணவனின் பெயர் அப்பாவின் பெயரைத் துரத்திவிட்டது. "வி.எஸ்.ராஜம்." என்பவள் "ராஜம் *****" ஆனேன். இதை விரித்து "ராஜம் அகமுடையார்" என்று கற்பித்துக்கொள்ளுங்களேன். 

வெளிநாடு பற்றிக் கனவில்கூட நினைத்ததில்லை; விதி வலியது, என்னை மதுரையிலிருந்து தனியாளாகத் துரத்திவிட்டது.

சரி, வெளிநாடு போக, கடவுச்சீட்டுப் பத்திரம் (passport) வேண்டுமே. 

இந்தக் கடவுச்சீட்டுப் பத்திரம்தான் நம் தமிழ் மக்களைக் குழப்பியடிக்கும். ஏன்? அந்தக் கடவுச்சீட்டுப் பத்திரம் வாங்குவதற்காக என்று நாம் விவரம் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தில் First Name, Middle Initial, Last Name, Surname என்று பல "கூடு"கள் இருக்கும்! இதெல்லாம் முதலில் சரியாகப் புரியாது; நமக்குப் பொருத்தமாகவும் இருக்காது.

இந்தக் கூடுகளில் நம்மைப் பொருத்தி ஒருவழியாக அந்த விண்ணப்பத்தை நிரப்பும்போது நம் உண்மை அடையாளத்தை இழந்துவிடலாம்! ஏனென்றால் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நம் பெயர் ஒன்றாக இருக்கும்; வெளிநாட்டில் அவர்கள் நம்மை அழைப்பது வேறு பெயரில் அமையலாம். 

இப்படியாக, ஒரு வழியாக வெளிநாடு வந்துசேர்ந்த என் பெயர் "ராஜம் அகமுடையார்."

அது போகட்டும். நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத துன்பம் எல்லாம் பட்டு, பல்கலைக்கழகத்தில் படித்து, ஓர் இள முனைவர் பட்டமும் (A.M.) "முனைவர்" (Ph.D) பட்டமும் பெற்றபோது விழிப்பு வந்தது; என் பள்ளிக்கூடப் பத்திரங்களில் உள்ள "வி.எஸ்.ராஜம்" என்பதை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டேன். "இள முனைவர்" (A.M.) பட்டம் பெற்றபோது அந்தக் கூர்மையில்லை! பழைய "ராஜம் அகமுடையார்" தான் அந்த "இள முனைவர்" (A.M.) பட்ட அறிக்கையில் இருக்கும்.

ஏன்? எப்படி? 

சோதனை வந்தது எப்போ? வேலைக்குப் போகும்போது ... "கடவுச்சீட்டுப் பத்திரத்தில்" (passport) உள்ள பெயர்தானே கேட்பார்கள். அப்படியே என் பெயரும் பதிவாச்சு. அப்போது "முனைவர்" பட்டத்துக்கான ஆய்வு செய்துகொண்டிருந்த நேரம். பல்கலைக்கழகத்தில் எனக்கெனத் தனி அலுவலகம். வெளியே பெரிய பெயர்ப்பலகை "ராஜம் அகமுடையார்" என்று. மிக விரைவில் முனைவர் பட்ட ஆய்வு முடித்து, பட்டமும் கிடைத்தவுடன் எனக்குப் பதவி உயர்வு ... "அஸ்ஸிஸ்டன்ட் ப்ரொஃபஸர்" (Assistant Professor) என்று.

அது கிடக்க.

என் அலுவலக அறைக்கு வெளியே என் பெயர்ப் பலகை மாறியது. "Dr. அகமுடையார்" என்று. "ராஜம்" என்ற பெயர் தள்ளப்பட்டுவிட்டது! மற்றவர்கள் என்னை அழைக்கும்போதும்,  "Dr. அகமுடையார்" என்று சொல்வார்கள். அப்போதுதான் என் எரிச்சல் தொடங்கியது! ஆங். அது என் பெயர் இல்லை! நான் இந்த நாட்டில் தனியாளாக இவ்வளவு தொல்லைப்பட்டு இப்படி முன்னேறி வந்திருக்கிறேன்; இப்படி ஒரு பட்டமும் வாங்கியிருக்கிறேன். அந்தப் பட்டம் வேறு யார் பெயருக்கோ போகிறதே! இதைத் துறைத் தலைவருக்கு எடுத்துச் சொல்லி வாதாடி என் பெயர்ப் பலகையை மாற்றப் பார்த்தேன். அவர்களால் முடிந்தது "ராஜம்" என்ற பெயரைச் சேர்த்தது மட்டுமே. பிறகு எனக்கு மிக நீளமான பெயர்ப் பலகை: "Dr. ராஜம் அகமுடையார்" என்று. 

பிறகு, நான்தான் முனைந்து பல தொல்லைகளுக்கு இடையில் துயரப்பட்டு இந்த முனைவர் பட்டம் பெற்றேன்; அதனால் எனக்குத்தான் அந்தப் "புகழ்" சேரவேண்டும் என்ற "வெறி" வந்துவிட்டது! :-) உடனே, பல்கலைக்கழகத் தொடர்பான செயல்களுக்காக மட்டும் என்று என் பெயரைப் பழைய பெயருக்கு மாற்றிக்கொண்டேன்! இப்பொ ... எனக்கு மூன்று பெயராக்கும்! நிறையப் பேருக்கு இது குழப்பம். அதனால் எனக்கென்ன; பிறர் குழப்பம் கண்டு நான் நல்லாவே வேடிக்கை பார்க்கலாம்! இது பிறர் குழப்பத்தை நம் தெளிவு நிலையில் நாம் நின்று கண்டு பெற்றுச் சுவைக்கும் ஒரு "கொடிய" மகிழ்ச்சியோ?! :-) 

அப்புறம் ... அந்தப் "பச்சை அட்டை" (Green Card) வாங்க வேண்டியபோது மீண்டும் சிக்கல். நல்லவேளை, பிறந்த நாளில் பிறந்த ஊர்க் கிராமத்தில் பதிவான பத்திரம் கைவசம் இருந்தது. ஆனால், அதுதான் நான் என்பதை விளக்கிக் காட்ட வேண்டிவந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்யவேண்டிய நிலையும்கூட! ஒருவழியாக  அதுவும் முடிந்தது. 

பிறகு, குடியுரிமைப் பத்திரம் (Citizenship) வாங்க வேண்டி வந்தபோதும், Person of Indian Origin (PIO) என்ற பத்திரம் வாங்க வேண்டி வந்தபோதும் ... எதிர்பாராத "பரம பத வழுக்கு!" எல்லாமே முதல் கட்டத்திலிருந்து தொடங்கவேண்டிவந்தது. நல்ல வேளை, எல்லாப் பத்திரமும் பத்திரமாக இருந்தது, உதவியாக இருந்தது! :-) காலத்தாழ்ச்சி என்றாலும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

****************** 
நம் தமிழ்ப் பெயர் வழக்காறு வெளிநாட்டவருக்குப் புரிவது கொஞ்சம் கடினம். இந்த நாட்டுக்கு நான் வந்த புதிதில், என் ஆசிரியர் கார்டோனா இதைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார். நான் விளக்கியபோது வியந்திருக்கிறார். தென்னிந்தியாவிலேயே ... தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ... இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் பெயர் வழக்காறுகள் மாறுபடும் என்பதும் அவருக்குப் புதிய செய்தியாக இருந்தது. 

பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, வருவாய்க்காகக் கணினித் துறையில் நுழைந்தபோது, ஓர் அம்மையார் கேட்டார் ... பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது பெயர் மாறினால், எப்படிக் கொடிவழி (family lineage) பற்றித் தெரியவரும்? எப்படிப் பரம்பரைச் சொத்து பற்றியெல்லாம் முடிவு செய்வார்கள்? இப்படிப் பல கேள்விகள் இவர்களுக்கு.

நான் சொன்னேன்: "எங்க ஆட்கள் ரொம்பத் திறமைசாலிகள். எதையும் எழுதிவைக்கவேண்டிய தேவை இல்லாமலேயே ... வெறும் நினவு மூலமாகவே பரம்பரைகளை நினவில் வைத்திருப்பார்கள்; பரம்பரைச் சொத்துகளையும் கணக்குப்பார்த்துப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்." அந்த அம்மையார் அசந்துபோனார்கள்!

****************** 
எதற்காக இவ்வளவு பெரிய முன்னுரை?

1. தமிழ்ப்பெண்களின் பெயர் மாற்றத்தின் விளைவுகள் என்ன என்பதைப் புரிய வைக்க விருப்பம். 

2. தொல்காப்பியத்தில் பெயர்ச்சொற்கள் எப்படி விளக்கப்படுகின்றன என்று நான் படித்துப் புரிந்துகொண்ட கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் விருப்பம்.

3. மேற்சொன்ன #2-ஆம் கருத்தின் தொடர்ச்சியாக "வண்ணச் சினைச்சொல்" என்ற மிக அழகான கருத்தையும் (concept) அதன் வழக்கு முறையையும் விளக்க வேண்டும் என்ற விருப்பம்.
இயன்றபோது சொல்கிறேன். 
+++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம் 


















செல்வன்

unread,
Jan 22, 2012, 4:56:53 PM1/22/12
to mint...@googlegroups.com
இந்த பெயர் பிரச்சனை தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா வந்த எல்லோரையும் துன்புறுத்தாமல் விடுவதில்லை.நான் இதனால் படாத பாடு பட்டுகொண்டிருக்கிறேன்.குழந்தைகள், தங்கமணி என எல்லோருக்கும் இதனால் பெரும் அவதி.பச்சை அட்டை விண்ணப்பம், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் என ஒவ்வொன்றிலும் இதில் ஆயிரத்தெட்டு சிக்கல். எனக்கு வெறுத்தே போய்விட்டது:-((


--
செல்வன்

"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்




rajam

unread,
Jan 22, 2012, 5:03:59 PM1/22/12
to mint...@googlegroups.com, செல்வன்
ஹா, ஹஹ்ஹா! அந்த எல்லாச் சிரமத்தெயும் நான் தன்னந்தனியாக, அதுவும் என் 33 வயது நேரத்திலிருந்து பல ஆண்டுகளாகச் சமாளித்தேன்! அதுக்காகவே எனக்கு ஒரு "தங்கமணி"ப் பதக்கம் வேணும்! :-) 
அது கிடக்க.
நிலைமையைப் புரிந்துகொண்டதற்கு நன்றி!
எப்பவும்போல்,
ராஜம் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Jan 22, 2012, 8:31:21 PM1/22/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம் அம்மா,

என் மகளுக்கு அவள் தாத்தா தேடிப்பிடித்து, மிக விரும்பி, ஞானப்பூங்கோதை என்ற நாமகரணம் சூட்டினார். என் கணவரின் பெயர் திருநாவுக்கரசு. இப்போது என் மகளின் பெயரின் நீளத்தை நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில் அப்பெயர் படும் பாடு சொல்லி மாளவில்லை. அவள் பெயரை ஒவ்வொரு எழுத்தாக உதாரணத்துடன் உச்சரித்து வாழ்க்கையே வெறுத்து விட்டது என்று புலம்புகிறாள்... இனி பாஸ்போர்ட் பெயர் மாற்றம் என்பது பெருந்தலைவலி. அது மட்டுமல்லாமல் என் கணவரின் கட்டாய ஆணை அவர் தந்தை வைத்த பெயரை மாற்றம் செய்யக் கூடாது என்று. ஒவ்வொரு நாளும் அவளுடைய ஓயாத புலம்பல்.... அவசியமான ஒரு பதிவு இது. அவசியம் தொடருங்கள் அம்மா...

அன்புடன்

பவளா.

2012/1/23 rajam <ra...@earthlink.net>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2012, 9:47:50 PM1/22/12
to mint...@googlegroups.com
சகோதரி  ராஜம் அவர்களுக்கு வணக்கம்
 
பொதுவாகவே நாம் அனைவருமே  நம் சுயத்தை இழந்துவிட்டோம்
 
பல் வீடுகளில்  இன்னாரது மனைவி, இன்னாரின் தாய், இன்னாரின் சகோதரி
என்று அடையாளம் காட்டுகிறார்கள்
 
பிறந்த குழந்தையின் பெயர் லக்‌ஷ்மி என்றால் அந்தப் பெயரைச் சொல்லி  ஓ நீங்க  லக்‌ஷ்மியோட  அம்மாவா  என்கிறார்கள்
 
பிறகு  அந்தப் பெயரே  நிலைத்துவிடுகிறது
அந்தப் பகுதியில் இருப்பவர்கள்  லக்‌ஷ்மி அம்மா என்றே  அழைக்கத் தொடங்கி விடுகிறார்கள்
 
ஆக அவருக்கு அவர்கள் பெற்றோர் வைத்த பெயர் நிலைப்பதில்லை
 
 
அதே போல  தந்தைக்கும்  அவர் வேலை செய்யும் பதவியை ஒட்டியோ, அல்லது நடிகராக இருந்தால்  நடிகர்  என்றும், உபாத்யாயர் என்றால்  வாத்தியார் ஐய்யா  என்றும்  பெயர் மாறிவிடுகிறது
 
நினக்குச் சிரிப்பாய் வரும்  பெயர் மாற்றினால் அதிர்ஷ்டம் கொட்டும் என்று  னியூமராலஜியில் சிலர் சொல்லும்போது
 
 
சுயம் இழந்துவிட்டோம்
 
அன்புடன்
 
கிருஷ்ணமாச்சாரி என்கிற
தமிழ்த்தேனீ
 


 
2012/1/23 coral shree <cor...@gmail.com>

Raja sankar

unread,
Jan 23, 2012, 12:25:02 AM1/23/12
to mint...@googlegroups.com
எங்கள் ஊர்ப்பக்கம் கிராமத்து பெயர் பின்பு குலப்பெயர் பின்பு அப்பா பெயர் என சொல்லி சொல்வார்கள். இதை நான் எங்கேனும் எழுதுவது ஆகிற காரியமா?  :-))) இதிலே சாதிப்பெயர் வேறு பின்னாடி சேர்க்கவேண்டுமாம். அப்புறம் அது ஒரு கிலோமீட்டருக்கு நிற்கும். :-))) அது கூட பரவாயில்லை என்று கிராமத்தின் உட்பிரிவு பெயர், வீட்டுப்பெயர் எல்லாவற்றையும் சேர்க்கும் ஆட்களும் உண்டு. அது அந்தக்காலத்தின் அரசர்கள் வைத்திருக்கும் பெயர் போல் இருக்கும்.

இதனால் சுருக்கமாக நான் செய்வது என்னுடைய பெயர் அதன் அப்பா பெயர். அவ்வளவு தான். அதுவே போதும் என நினைக்கிறேன். பாஸ்போர்ட் என எல்லா இடங்களிலும் இது மட்டுமே.

ராஜசங்கர்

2012/1/23 rajam <ra...@earthlink.net>

விஜயராகவன்

unread,
Jan 23, 2012, 3:40:16 AM1/23/12
to மின்தமிழ்
"வி.எஸ்.ராஜம்"; "வீ.சு.இராசம்." நான் ஓர் இரட்டைப்

பிறவியானேன்! :-)


I think there is no difference between வி.எஸ்.ராஜம் and வீ.சு.ராஜம்
since the sounds remain the same . But the archaic இ in front ராஜம்
and the ideological replacement of ராஜம் with ராசம் make the
difference.

என் பெயர் கிராமப்பெயர் + கிராமப்பெயர் + சொந்தப்பெயர் என்ற பார்மூலாவில்
உள்ளது. என் குடும்பத்தில் அதுதான் பெயர், என் கொள்ளுத்தாத்தா வரை.
ஸ்கூலில் அப்படித்தான் சேர்க்க்பட்ட்டேன், பாஸ்போர்ட் போன்ற
ரெகார்டுகலில் அபடித்தான் ஆனால் கூப்பிடும் பெயர் விஜி அல்லது
விஜயராகவன். சில பள்ளி நண்பர்கள் வீஸீ என கூட கூப்பிடுவார்கள்.

வெளிநாடு வந்தவுடன் , பெயர் குழப்பம் இல்லாவிட்டாலும் , பெயர் முறை
மாற்றத்தினால் சில மாற்றங்கள். மேலை நாடுகளில் ஒரு ஆளின் பெயர் இப்படி
கையாளப்படுகிறது

சொந்தப்பெயர் + குடும்பப்பெயர்
கிருஸ்துவப்பெயர் + குடும்பப்பெயர்
முதல்பெயர் + கடைசிப்பெயர்
முதல்பெயர் + சர்நேம் (உதவிப்பெயர்)


பல மேலைநாட்டவரின் மனதில் சொந்தப்பெயர் = கிருஸ்துவப்பெயர் =
முதல்பெயர்.

அதனால் என் பெயர் பலருக்கு குழப்பம், பலருக்கு சொந்தப்பெயர் கடைசியில்
வரலாம் என்பது புரியவே இல்லை.

அதனால் பல தடவை போனில் என்ன சர்நேம் என்றால் விஜயராகவன் என
சொல்லிவிடுவேன். அதற்கு மேல் ஈமெயில் போன்ற இடங்களில் கையெழுத்தை விஜய்
வன்பாக்கம் என போட்டுடுவேன். பெயரில் ஒரு மாற்றம் - அதாவது
குடும்பப்பெயரை கடைசியில் போடும்போது, ஏன் என் பெயரையும் சுருக்கக்
கூடாது என விஜயராகவனை விஜய் ஆக்கினேன்.

பல மேற்கத்தியருக்கு விஜய் என்பது இந்திய பெர்சனல் நேம் என்பது
தெரியும், அதனால் உன் சர்நேம் என்றவுடன் V I J A Y என ஆரம்பித்த்வுடன் ,
I want your Surname, not Personal Name என்பார்கள். அவர்களுக்கு என்
பேரைப்பற்றி ஒரு குட்டி லெக்சர் கொடுக்கணும்

ஆனால் தமிழர்கள் மத்தியில் வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன் தான்.
அல்லது வகொவி.

என பெயரை ஆங்கிலத்தில் Vijay Vanbakkam என எழுதுவதில் , பலர் நான்
டட்ச் , அல்லது ஃப்ளெமிஷ் அல்லது தென் ஆப்பிரிக்க பூயர் பூர்வீகம் என
நினைத்து விடுகின்றனர், ஏனெனில் டட்ச் குடும்பப் பேர்கள் Van என
ஆரம்பிக்கும் . ஓரளவு உலகத்தில் குழப்பம் நல்லதே .

கடந்த 100 தமிழ்நாட்டில் ஆண்டுகளில் திராவிட இயக்க / தனித்தமிழால்
ஏற்பட்டுள்ள ஆரோக்கிமற்ற, நோய் பிடித்துள்ள போக்கு பெயர்களை மாற்றுவது,
தன் பெயரை மாற்றுவது, மற்றவர்கள் பெயரை மாற்றுவது.

வகொவி

Nagarajan Vadivel

unread,
Jan 23, 2012, 4:03:44 AM1/23/12
to mint...@googlegroups.com
//திராவிட இயக்க / தனித்தமிழால்

ஏற்பட்டுள்ள ஆரோக்கிமற்ற, நோய் பிடித்துள்ள போக்கு  பெயர்களை மாற்றுவது,
தன் பெயரை மாற்றுவது, மற்றவர்கள் பெயரை மாற்றுவது.//
அது எப்புடி
ஒங்கபேர மாத்தக்கூடாதுன்னு சொல்லுங்க ஒப்புத்துக்கறேன்
எம்பேர மாத்த ஒங்க அண்மைதி வேணுமா என்ன?
நீங்க இன்னம்  அரதப்பழசா திராவிட இய்க்கத்தைப் பாக்குறீங்க.  நானும் அந்த இயக்கத்த்தை நெருக்கத்தில் பார்த்தவன் எங்க குடும்பத்தில் இப்ப ஐந்து தலைமுறை இருக்கு. கடைசி தலைமுறைப்புளைகள் எந்த ஜாதின்னு சொன்னாலும் அந்தப்புள்ளகள் பேர் துய தனிப்பெயர்களாக இருந்தாலும் ஒங்களுக்குப் பொற்கிழி உண்டு
திராவிட இய்க்கத்தில் தீவிரமா இருந்த என் முத்த அண்ணனின் மருமகன் ஒரு ஐயர்.
எல்லாம் காதல் பண்னுன வேலைங்க.காலம் செய்யும் கொடுமைங்க விஞயராகவன் ஐயா
நாகராசன்


2012/1/23 விஜயராகவன் <vij...@gmail.com>

விஜயராகவன்

unread,
Jan 23, 2012, 4:26:56 AM1/23/12
to மின்தமிழ்
நாகராசன் ஐயா

நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளை எடுத்தால் இழை திரும்பி விடும்.
அதனால் உங்கள் கேள்களுக்கு மற்றொரு இதழில் .அவசரமே இல்லை. அந்த வாய்ப்பு
வராமல் போகாது.


வகொவி


rajam

unread,
Jan 23, 2012, 5:22:45 PM1/23/12
to மின்தமிழ், coral shree, Tthamizth Tthenee
உண்மை, உண்மை, தேனீயாரே! நீங்கள் சொல்வதும் பண்டைத் தமிழ் வழக்கே. இன்னாருடைய தாய், இன்னாருடைய தந்தை, இன்னார் வழி ... இப்படி. அதுவும் சரியே. 

என்னைச் சுவாமி சிவானந்தாவுக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா சொன்னது ... "கோடகநல்லூர் சுந்தரம் சுவாமிகள் வழிப் பேத்தி." பாவாடை, சட்டை போட்டிருந்த சின்ன வயது. பிற விவரம் தெளிவில்லை. அவரும் சரி, புதுக்கோட்டையில் லக்ஷ்மண சர்மாவும் சரி ... "அம்பாள் மாதிரி இருக்கா குழந்தை" என்று சொல்லி ஆசீர்வதித்தார்கள். (எந்த/என்ன அம்பாளோ தெரியலெ. இங்கெ ஒரு அம்பாளெயும் காணோம். ஒரு பேய்/காளி மாதிரிதான் நடப்பு! அது தனிக்கதை.)

இதைத் தொடர்ந்த பதிவில் வகொவி சொன்ன கருத்துக்கள் முழுக்க முழுக்க உண்மையானவை! அதிலும் நம் பெயர்ச் சுருக்கத்தினால் / மாற்றத்தினால் சிலருக்குக் கிடைக்கும் நன்மைகளும் உண்டு! பின்னர் ஒரு நாள் அதைப்பற்றிச் சொல்ல முயல்வேன்.

"ராஜம்" என்ற பெயரும், ஐவி லீக் யுனிவெர்சிட்டியான பென் பல்கலைக்கழகத்தில் வேலையில் இருந்தபோதும் ... இந்தியாவிலிருந்து வந்த மடல்கள் பெரும்பாலும் "Dr. Mr. Rajam ******" என்றுதான் வரும்! முதலில் ஆத்திரம்/ஆவேசம் கொண்டேன். பிறகு அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டேன்.  தமிழர் ஒருத்தர் வெளிநாட்டில் ஒரு பதவியில் இருந்தால் அவர் ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்ற நம் அருமைத் தமிழ்ச் சிந்தனை எனக்குப் பெரும் நகைப்பைக் கொடுத்தது. அதன்பின் என் சிந்தனையும் செயலும் வேறுபட்டன. அதையெல்லாம் இங்கே சொல்லத் தேவையில்லை. பிறகு பார்ப்போம். 

நிற்க. 

பவளஸ்ரீ,

"ஞானப்பூங்கோதை திருநாவுக்கரசு" -- அழகான பெயர்! நம் போன்றவர்களுக்கு அந்த மாதிரிப் பெயர் உண்டாக்கும் உள்ளக் கிளர்ச்சியும் அமைதியும் இனிமையும் வெளிநாட்டில் எடுபடாது'ப்பா. திருமண அழைப்பிதழ், பத்திரங்கள் (பாஸ்போர்ட், வீட்டு மனைப் பத்திரம், ... போல) இவற்றில் இருப்பதோடு அதன் வேலை முடியும் வெளியுலகில் இந்தப் பெயரெல்லாம் இவர்கள் வாயில் நுழையாது!
இந்தப் பெயர்தான் இதுவரை எனக்குத் தெரிந்த நீளமான தமிழ்ப்பெயர் -- 12 syllables கொண்டது! அதை நினைத்துப் பெருமை அடைவோம்! 


அவள் பெயரை ஒவ்வொரு எழுத்தாக உதாரணத்துடன் உச்சரித்து வாழ்க்கையே வெறுத்து விட்டது என்று புலம்புகிறாள்...

அந்த வேதனை எனக்குப் புரிகிறது. பாவம், அந்தக் குழந்தை! இரண்டு வாரங்களுக்கு முன்னால் கூட, மருத்துவ நிலையத்தார் கேட்ட கேள்விக்கு ... ரொம்பப் பெருமையோடு சொன்னேன் ... எப்படி நம் தமிழ்ப் பெயர் ஒவ்வொன்றையும் பிட்டுப் பிட்டு அசை அசையாகப் பொருள் சொல்லலாம் என்று. அந்த ஆள் அசந்து போனார்!

இவர்கள் நம் தமிழ்ப் பண்பாடு கண்டு பிரமிப்பார்கள், ஆனால் நம் பெயர் சொல்ல அவர்கள் நாக்கு புரளாது. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

சில கருத்துக்கள்:
----------------------

1. பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்வது பற்றி.

பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என்பது என் கருத்து. ஏன் என்றால் ... பின்னால் பச்சை அட்டை, குடியுரிமை, PIO card, OCI card ... இதெல்லாம் வாங்க முயன்றால் ... "பரம பத வழுக்கு மாதிரி" முதலிலிருந்து தொடங்கணும் -- Birth certificate, Social Security card, எல்லாம் கேட்பார்கள். அப்போது ... இந்த எல்லாப் பத்திரங்களிலும் ஒரே மாதிரியாக ... பெயரும், பிறந்த தேதியும் பதிவாகி இருந்தால் சிக்கல் குறைவு.  
 

2. வேலைக்குப் போகும் இடத்தில் பெயரைச் சுருக்கிக் கூப்பிடும்படிச் செய்யலாம். இதற்குப் பாஸ்போர்ட் மாற்றம் தேவையில்லை.

சீன/வியட்நாமிய/கொரியப் பெயர்களில் பார்த்தால் ... முதலில் இருக்கும் பெயர் ஆங்கிலத் தன்மை கொண்டதாக இருக்கும்: Kathy, Miranda, Yuvett, Chris, Tim, Oscar, Paul ... இப்படி. Last Name என்பது Chen, Liu, Ding, Hsu, Yu ...  என்ற அவர்களின் குடும்பப் பெயரின் தன்மையைப் பிடித்துவைத்துக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்த முதல் பெயர்கள் (Kathy, Chris ... போல) அவர்களின் உண்மைப் பெயரை ஆங்கிலப்படுத்தியதாக இருக்கும். 

என்னுடன் வேலை பார்த்த ஓர் இந்தோனேஷியச் சீனரின் Last Name சரியான உச்சரிப்பின்படி "ச்சஹ்யாதி." ஆனால் ஆங்கிலத்தில் அது எழுதப்பட்ட விதம் பலரையும் குழப்பும்! பலரும் அதை "ஜஜாதி" என்று உச்சரிப்பார்கள். அவனுக்கு என் சரியான உச்சரிப்பின்மேல் ஒரு பெரும் மதிப்பு! அவனுடைய இயற்பெயர் (First Name) சீன மொழியில் எப்படியோ, தெரியாது, ஆனால் அலுவலகப் பெயர் ஆங்கிலவழிப்பட்டது. மிக நல்ல நண்பனாக அமைந்தான்.
அதேபோல் ஒரு சீனப்பெண்ணின் முதற்பெயர் Xiao-Yu. (கடவுளே, அந்தப் பெயர் படும் பாடு! அவளுக்கு ஆங்கிலம் பேச வரவில்லை; ஒரு வகுப்புக்குப் போனாள். சரியான பலன் இல்லை; நான் உதவினேன். பெரும் உதவியாக நினைத்தாள்.)

மும்பையில் பிறந்து வளர்ந்து இங்கே கணினித்துறை வேலைக்கு வந்த ஒரு தமிழ்ப்பெண் தன் அப்பாவின் திருநாவுக்கரசு என்ற பெயரை "அரசு" (Arasu) என்று சுருக்கிக்கொண்டாள். அந்த மாதிரி உங்கள் மகள் பெயரைக் "கோதை அரசு" என்று நினைத்து  Kathy Sue என்று கூப்பிடச் சொன்னால் இந்த வாய்களில் அந்தப் பெயர் நுழைவது எளிது! :-)  

உங்கள் மகள் Kathy Sue என்று தன் பெயரைச் சுருக்கி, resume-யில் போட்டால் உடனே பல இடங்களிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரும்! :-)  நேரில் போனால் ... முதலில் அந்த அலுவலகத்தார்க்கு அதிர்ச்சியாக இருக்கும் (ஒரு தமிழ் முகத்தைப் பார்த்து); ஆனால் மகளின் திறமையால் வேலை பெற வாய்ப்பு மிகுதி! உண்மை!    
   
என் "ராஜம் அகமுடையார்" என்ற பெயரும் அமெரிக்கப் பதவியும் ஏற்படுத்திய குழப்பம் நிறையவே. அதைப் பற்றித் தனியாகச் சொல்கிறேன்.


3. பிறந்த தேதி பற்றி.

என் பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்ய நான் விரும்பவில்லை. பழைய "ராஜம் அகமுடையார்" தான் இருக்கு. இதெல்லாம் விமானப் பயணத்துக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் இருக்கட்டும் என்று விட்டுவைத்திருக்கிறேன். ஆனால், பல்கலைக்கழக/academic/புத்தகம் தொடர்பான விஷயங்களில் மட்டும் "வி. எஸ். ராஜம்" என்று குறிக்கப்படுவதையே விரும்புகிறேன். 

எனக்கு வேறு ஒரு சிக்கல் இருந்தது -- பிறந்த தேதி பற்றி. Birth certificate-இல் இருக்கும் தேதிக்கும் பாஸ்போர்ட்டில் இருக்கும் தேதிக்கும் சரியாக ஓர் ஆண்டு வித்தியாசம். (சின்ன வயசில் சுட்டி/வாயாடி ... எப்படி இருந்தேனோ தெரியலெ; வீட்டுலெ வச்சுக்க முடியாம 4 வயசிலெயெ 5 வயசுனு காமிக்கிற மாதிரி ஒரு வயசு கூட்டிச் சொல்லிட்டாங்களோ என்னவோ? பள்ளிக்கூடத்துலெ சேத்துக்கிட்டாங்க. அது வேற ஒரு தனிச் சிக்கல் ... எல்லா வகுப்பிலெயும் நான்தான் கடைக்குட்டி! குட்டு வாங்குவேன். ஆனா மார்க் வாங்கிக் காட்டினதாலெ மதிப்பு!)

பள்ளிக்கூடப் பத்திரம், அதாவது எங்க காலத்து S.S.L.C certificate மாதிரி, இருந்தா அதை வைத்துத்தான் பாஸ்போர்ட் விவரம் அமையும். அப்படித்தான் எனக்கு அமைந்தது என்று நினைவு.


4. பத்திரங்களில் இருக்கும் விவரங்களின் ஒற்றுமை பற்றி.

முதல் படியாக ... Birth certificate, பாஸ்போர்ட், Social Security card ... இவற்றில் உள்ள விவரம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்படாமல் எல்லா விவரமும் ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்க்கவும்.

இதெல்லாம் சரியாக இருந்தால் பச்சை அட்டை (Green Card) வாங்குவதில் தொல்லை குறையும்.


5. பெயர்களை உச்சரிக்கும் தொல்லை

எத்தனைப்பேர் எங்க மாநில கவர்னர் ஆர்னல்ட் ஷ்வாட்சனேகர் பெயரைச் சரியாக உச்சரிப்பார்கள்?! 

பத்தாண்டுகளுக்கும் மேலே நடந்த ஒரு கொலை வழக்கில் சாட்சி சொல்லவேண்டிய ஒரு தமிழரின் பெயர் (லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் என்று நினைக்கிறேன்) தொலைக்காட்சியில்/வானொலியில் எப்படிச் சிதைத்துச் சொல்லப்பட்டது என்று எனக்கும் இங்கே பிறருக்கும் தெரியும்.

நான் நினைத்திருந்தேன் அதுதான் மிக நீளமான தமிழ்ப்பெயர் என்று (9 syllables). என்னுடன் வேலை பார்த்த ஒரு தமிழ்ப் பெண்ணின் பெயர் அதே போல 9 syllables ஆகிவிட்டது! ஒரே ஒர் உயிரெழுத்தை மட்டும் அவள் தந்தை பெயரில் நுழைத்திருந்தால் ... அவள் பெயரே மிக நீளமான தமிழ்ப்பெயர் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனாலும் ... அவள் பெயர்ப் பலகைதான் அந்தக் கணினி அலுவலகத்தில் மிக நீளமானது! தன் இயற்பெயரை (First Name) அவள் சுருக்கிக் கொண்டதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் அது அவள் வசதி. அழகான, பொருள் பொதிந்த "ஷைலஜா"-வை "ஷய்" என்று மாற்றிக்கொண்டாள். பெயரின் அடிப்படைப் பொருளைப் பார்க்கும் என் போன்ற பைத்தியங்களுக்கு இது சிக்கல். ஆனாலும் ஒத்துக்கொண்டேன்; இவள் என் வயிற்றில் பிறக்காத என் பெண்போல.  அவ்வளவு நல்ல குணம். 


5. பெயர் வைக்கும்போது/மாற்றும்போது நினைக்கவேண்டிய கருத்துக்கள் பல.
 
புலப்பெயர்ச்சி காரணமாகவோ, புது நாகரிகம் (modernization) காரணமாகவோ குழந்தைக்குப் பெயர் வைக்க முனைந்தால் ... குழந்தையின் பெயர் இரண்டு அல்லது மூன்று syllable-க்குள் அமைந்தால் நல்லது. எடுத்துக்காட்டு: நிலா, மலர், சாலா, செல்லி, கவின். அதிலும் தமிழின் சில சிறப்பொலிகள் (ஞ, ழ) இரண்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

"தமிழ்" "தமிழ்" என்று அடித்துக்கொள்ளும் தமிழ்நாட்டிலேயே ... உருவாக்கப்படும் சொற்களை எத்தனைப் பேர் சரியாக உச்சரிப்பார்கள்? ஏற்கனவே நமக்குத் தெரிந்த உச்சரிப்புப் போராட்டம் இருக்கிறது: ன்~ண், ந்~ன், ற்~ர், ல்~ள், ள்~ழ்.

அதோடு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று, "ஞ்" என்பதின் உச்சரிப்பு, அது வரும் இடம் பொருத்து. "ச்" என்பது அடுத்து வராவிட்டால் இதன் ஒலிப்பில் குழறுபடிதான்! யாருக்காவது "**** வினைஞர்/அறிஞர் ... " என்ற பட்டமும் விருதும் கொடுக்கிறார்கள் என்று கற்பனை செய்வோம். அந்த "வினைஞர்" என்ற சொல்லை எத்தனைப்பேர் சரியாக உச்சரிப்பார்கள்? இது எனக்குப் பெரிய கேள்வி.
6. "கூப்பிடும் பெயர் / அழைக்கும் பெயர்"  

எல்லா அமெரிக்கப் பெயர்களுக்கும் அடிப்படையில் ஒரு நீளமான பெயர் இருக்கும். NIck < Nicholas; Mandy < Miranda; Peggy < Margaret; Maggi < Margaret; Alec < Alexander; Mike < Micheal; Larry < Lawrence; ... இன்ன பிற.

ஆனால் "கூப்பிடும் /அழைக்கும் பெயர் அல்லது "குறிப்பிடும் பெயர்  (nick name)" என்பது பெரும்பாலும் இரண்டு syllable-க்குள் அமையும். "டையானா (Diana)" என்பதைக் கூட "டை" என்று சுருக்கிவிடுவார்கள்! ஹேய், இங்கே "கூப்பிடும் / அழைக்கும் பெயர், குறிப்பிடும் பெயர்" என்ற சொல்லாட்சியெலாம் என் காப்புரிமையாக்கும் (copyright). யாராவது தன் சொந்தக் கருத்து என்று இதை எடுத்துப் பிற இணையங்களில் வழங்கினால் என்ன நேரும் என்று நான் சொல்லத் தேவையில்லை! :-)  

இங்கே பல தமிழ்க் குடும்பத்தார் தம் குழந்தைகளுக்கு என்ன நல்ல தமிழ்ப் பெயர் வைக்கலாம் என்று என்னிடம் கேட்டதுண்டு. நான் சொன்ன பெயர்ப்பட்டியலிலிருந்து சில இங்கே: கீர்த்தி, சீர்த்தி, ஏரோன், கவின்.
ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காகத் தள்ளப்பட்டது. எடுத்துக்காட்டாக ... "ஏரோன்" என்பது Aaron http://en.wikipedia.org/wiki/Aaron) என்ற ஹீப்ரூ மொழி/பண்பாட்டுடன் தொடர்பு கொண்டதாக அமையும் என்றார்கள். கடைசியில், கீர்த்தியும் கவினும் இன்று மிகப் பெரிய பிள்ளைகள்!  

பிற பின்னர்,
அன்புடன்,
ராஜம் 

விஜயராகவன்

unread,
Jan 24, 2012, 3:48:02 AM1/24/12
to மின்தமிழ்
On Jan 23, 11:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
>
> சில கருத்துக்கள்:
> ----------------------
>
> 1. பாஸ்போர்ட்டில் பெயர்
> மாற்றம் செய்வது பற்றி.
>
> பாஸ்போர்ட்டில் பெயர்
> மாற்றம் செய்ய வேண்டாம்
> என்பது என் கருத்து.


ராஜம் அவர்களே

உங்கள் கருத்துடம் முழு சம்மதமே. நாம் ஆவணப்பெயர் ஒன்றை ஒரு பொழுதும்
மாற்றக்கூடாது. அதாவது ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட், பாஸ்போர்ட் , போன்றவை.
அஃபிசியல் நேம் என்றால் , அது எவ்வளவு பெரிதாக (மேற்கத்தியர்களுக்கு)
தோன்றினாலும், ஒன்றையே எல்லா இடத்திலும் கையாளவேன்டும்

பொதுவாக வேலை செய்யும் இடங்களில் இஷ்டப்பெயர் (Preferred name) ஒன்றை
வைத்துக் கொள்ளலாம் .

எங்கு பெயர் அபிசியலாக இருக்க வேண்டாமோ, அங்கெல்லாம் தேவையான பெயரை
போட்டுக் கொள்ளலாம்.


இன்னொரு விஷயம். பிசினஸ் கார்ட், அல்லது பிசினஸ் சூழ்நிலைகளில் வாய்க்கு
வர முடியாத தமிழ் பெயர்களை பார்த்தால் , படிப்பவர், உங்களுடன் பிசினஸ்
செய்யப் போகுபவர் நம்பிக்கையை இழக்கலாம், ஒரு ஆளை பெயரை பார்த்து அவரின்
நம்பகத்தன்மையையும், திறமையையும் எடை போடுவது சர்வ சகஜம். அதனல்
பிசினஸ்கோசரம் பெயரை சுரிக்கி "நம்பகத்தன்மையை" அதிகரிக்கும் படி செய்ய
வேன்டும். உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர் கிடைக்க வாய்ப்பு என்றால்,
பெயர் ஏன் நடுவில் நிற்க்க வேன்டும் !!!!


பிசினஸ், கரியர் முன்னேற்றத்திற்க்காக ஏன வேண்டுமானாலும் பெயர் போட்டுக்
கொள்ளுங்கள் - அது என் அறிவுரை .

மேலும் என் பிறந்த தேதி இஷ்யூவும் உங்களைப்போலதான். நான் பிறந்தது 12
ஏப்ரல், என்னை ஒரு விஜயதசமி நாளில் பள்ளியில் சேர்க்க , என் பி.தே. யை 12
ஜனவரி என கொடுத்து விட்டனர். அது S.S.L.C. பத்திரத்திலேஎயும் இருந்தது.,
பாஸ்போர்ர்ட்டிலேயும் அதேதான். அபிசியல் ரெகார்டுகளிலேயும் அதேதான்.
ஆனால் என் பர்த் சர்டிபிகேட் படி 12 ஏப்ரல் சென்னை, தி.நகர். கேப்டன்.
ஐயர் மருத்துவமனையில் நான் பிறந்தேன். சென்னை கார்ப்போரேஷனில் பல
ஆவணங்களை கம்ப்யூட்டரில் போட்டு விட்டனர், அதனால் பழைய பர்த்
சர்டிபிகேட்களையும் கார்போரேஷனில் கேட்டால் கொடுப்பார்கள்.

வகொவி

துரை.ந.உ

unread,
Jan 24, 2012, 3:57:26 AM1/24/12
to tamil...@googlegroups.com, மின்தமிழ்
அம்மா .....

வீரவநல்லூரில் எனது அப்பாவழிச் சொந்தங்கள்உண்டு ,, சாந்தியின் வழியில் ஊரில் பாதிக்கும் மேல் உரவுகள்தாம் .... அப்படியே ஆராய்ந்தால் நான் உங்க வட்டத்துக்குள் வந்துவிடுவேன் போல இருக்கிறது :)))


பெயர் மாற்றத்தால் நானும் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறேன் அம்மா 

2012/1/23 rajam <ra...@earthlink.net>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

rajam

unread,
Jan 24, 2012, 11:08:52 AM1/24/12
to mint...@googlegroups.com, tamilmanram, "துரை.ந.உ"
அன்பின் துரை,

On Jan 24, 2012, at 12:57 AM, துரை.ந.உ wrote:

அம்மா .....

வீரவநல்லூரில் எனது அப்பாவழிச் சொந்தங்கள்உண்டு ,, சாந்தியின் வழியில் ஊரில் பாதிக்கும் மேல் உரவுகள்தாம் .... அப்படியே ஆராய்ந்தால் நான் உங்க வட்டத்துக்குள் வந்துவிடுவேன் போல இருக்கிறது :)))
நான் என்னைக்கோ உங்க வட்டத்துக்குள் வந்தாச்சே! அதுக்கப்புறம் எனக்கு-னு என்னா இன்னொரு தனி வட்டம்?!
இதெப் படிக்கிற சிலர் set, super set, set theory என்று பெயர்களை அந்தக் கணக்கு முறையில் அலசித் தள்ளிவிடுவார்கள்! :-)
அடுத்த வாட்டி, நான் இந்தியாவுக்கு வரும்போது, நாம எல்லாரும் சேர்ந்தே வீரவநல்லூர் போகலாம்! 



பெயர் மாற்றத்தால் நானும் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறேன் அம்மா
சொல்லுங்கள். கேட்க மிகவும் ஆவல்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Jan 24, 2012, 11:37:53 AM1/24/12
to mint...@googlegroups.com
என் பெயர் சிதம்பர ரகசியம்.  முதலில் வைத்த பெயர் சிதம்பரம். சிறு குழந்தையாக இருந்தபோது நாக பாம்பு (நல்லவேளை கட்டு விரியன், சாரை, மண்ணுள்ளி இல்லை) மேலே ஊர்ந்து சென்றதால் நாகராசன் என்ற பெயர்.  நல்ல வேளை நான் தப்பித்துக்கொண்டேன்.  அந்த நாகம் என்ன ஆனது?யாருமே சொல்லலை
பாஸ்போர்ட்டில்  எது முதல் எது இறுதி என்று தெரியாமல் எழுதியதால் வடிவேல்முதன்மை பெற்றது.  ஒருமுறை நைரோபி விமான நிலையத்தில் தன்சானியாவின் டாரெஸ்சலாம் விமானத்துக்காகக் காத்திருந்தபோது அறிவிப்பாளர் வடிவேலுக்கு முக்கியச் செய்தி என்று திரும்பத்திரும்ப அறிவிப்பு செய்துகொண்டிருந்தார். அதை நான் வேறு யாரோ என்று கவனிக்காமல் இருந்தேன்.  சிறிதுநேரம் கழித்து ஒரு சீக்கியர் என்னருகே வந்து நீங்கள் நாகராசனா என்று கேட்டார்.  ஆம் என்று சொன்னேன்.  இவ்வளவு நேரம் அறிவிப்பு செய்தும் நீங்கள் கவனிக்கவில்லை.  நீங்கல் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளீர்கள்.  அந்த நாட்டில் நுழைய மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடவேண்டும் நீங்கள் போடவில்லை என்றால் இரண்டுவாரம் கூண்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் நான் உங்கள் கூட வருகிறேன் உங்களைக் நண்பர் உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உங்களைச் சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறென் என்று கூறினார்.  அதுபோன்றே ஒரு கனிசமான தொகை லஞ்சம் கொடுத்து என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.  கொடுத்த காசுக்கு எனக்கு பன்னாட்டு உடல்நலச் சான்று கையேடு ஒன்றை அநத் நாட்டு அடையாளத்துடன் பெற்றுக்கொடுத்தார்.  அதையே இப்பொழுதும் பயன் படுத்துகிறேன்.  பார்க்கும்போதெல்லாம் ஆஃப்ரிக்கக் களி உண்ணும் சிக்கலைப் பாஸ்போர்ட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் நடக்க இருந்ததையும் அதிலிருந்து தப்பியதும் நினைவுக்கு வரும்
நாகராசன்


2012/1/24 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Jan 27, 2012, 4:10:45 PM1/27/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நீளமான தமிழ் பெயர்கள் முன்னர் எங்கள் ஊரிலும் (பினாங்கிலேதான்) பலருக்கும் பிடிக்கும். ஜெர்மனிக்கு வந்த பின்னர் சில சங்கடங்கள் எனக்கும் இல்லாமல் இல்லை.

என் தந்தைதையார் பெயர் கனகசுந்தரம். இதனை இங்கு பலருக்கு சரியாகமுழுதாகக் கூப்பிடத் தெரியாது. இங்கே என்னை கூப்பிடுபவர்கள் Mrs.Kanagasundaram எனக் கூப்பிடுவது எனக்கு மிகச் சங்கடமான விஷயமாக ஆரம்பத்தில் இருந்தாலும் பின்னர் சகஜமாகிவிட்டது. 

நான் திருமணம் செய்யும் போது எனது குடும்ப பெயரை நிர்ணயிக்க எனக்கு மூன்று வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன.. 
எப்படியாயினும் First name + Family name  இரண்டும் கட்டாயம் தேவை.
இங்கே முதல் பெயர் என்பது நமது அழைக்கும் பெயர் என்றும் Family name என்பது குடும்பப் பெயர் என்றும் கொள்ள வேண்டும்.
அதில் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு திருமணத்தின் போது நமக்கு வழங்கப்படுகின்றது. இது மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அதில் என் குடும்பப் பெயர் கனகசுந்தரம்;  என் கணவரின் குடும்பப் பெயர் ட்ரெம்மல்.
இதில் நானோ அல்லது என் கணவரோ நாங்கள் கீழ்க்காணும் மூன்றில் ஏதாவது ஒரு குடும்பப் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.
1. கனகசுந்தரம்
2. ட்ரெம்மல்
3. கனகசுந்தரம்-ட்ரெம்மல் / ட்ரெம்மல்-கனகசுந்தரம்

இங்கே கணவர்கள் மனைவியின் குடும்பப் பெயரை தன் பெயரில் இணைத்துக் கொள்வது புது விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. இப்போது என் அலுவலக நண்பர்கள் மத்தியிலேயே சில நிகழ்ந்திருக்கின்றன. 

டோய்ச் மொழியில் Herr, Frau என்ற அழைப்பு முறையே வழக்கத்தில் உள்ளதால் குடும்பப் பெயரை குறிப்பிட்டு அழைப்பது மரியாதையான முறையாகக் கையாளப்படுகின்றது. ஆக 
என்னை அழைக்கும் போது Frau Tremmel or Mrs.Tremmel
என் கணவரானவரை Herr.Tremmel or Mr.Tremmel
எனக்கு மகளிருந்தால் Frau Tremmel or Mrs.Tremmel/Ms.Tremmel
எனக்கு மகனிருந்தால் Herr.Tremmel or Mr.Tremmel
என்றும் அழைப்பது முறையாக உள்ளது.

பெயர் மாற்றம் எனக்கு அவ்வளவாக எந்தப் பிரச்சனைகளையும் தந்து விடவில்லை. பாஸ்போர்ட்டிலும் இரண்டு பெயர்களும் உள்ளன. பெயர் மாற்றம் செய்த போது எனக்கு வங்கி, மற்ற அரசாங்கப் பதிவு, எனது அலுவலக தகவல் வங்கி, ஆகியவை செய்ய வேண்டியிருந்தது. அனைத்தும் ஒரு வாரத்திற்குள் முடிந்தன. 

சுபா


2012/1/22 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Kamala Devi

unread,
Jan 28, 2012, 12:28:18 AM1/28/12
to mint...@googlegroups.com
ராஜம் சேச்சி,
என்ன அற்புதமான பதிவு. சுய சரிதம் கூட இவ்வளவு அழகாக யாரேனும் எழுதியிருக்கிறார்களா? பெண்ணியம் பேசும் பெண்கள் கூட மறுக்கமுடியாத
சாத்வீகம் எப்படி  அழகு பொலியப்பொலிய எழுதியுள்ளீர்கள். சென்றமுறைசேச்சி சென்னை வரும் நாளை ஞான் காத்து ஏமாந்தேன். இம்முறை--
ஹ்ம்ம், ஞான் சத்யமாயிட்டும் நிங்ஙளை காண ஆசைப்படுகிறேன்.
எழுதுங்கள் , நிறைய எழுதுங்கள், நிங்ஙளின் எழுத்தை வாசிக்க அவ்வளவு தாகமாயிருக்கிறது.அன்புத்தங்கை
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

விக்ரமன்

unread,
Jan 29, 2012, 1:19:48 AM1/29/12
to மின்தமிழ்
1968 ஏப்ரலில் மைசூர் ரீஜனல் காலேஜ் ஆஃப் எஜுகேஷனில் பி.எட்.
படிப்பிற்குச் சேர்வதற்காக நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருந்தது. நான்கு
தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். வந்தவுடன் எல்லாச்
சான்றிழ்களையும் நேர்முகத் தேர்வுக்கான உத்தரவையும் சேர்த்து கல்லூரி
அலுவலகத்தில் கொடுத்து விட்டோம். எழுத்தர் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டு
முதல்வர் அறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அத்தானி
லங்கிரான் என்று கூப்பிட்டார். எவரும் பதில் அளிக்கவில்லை. பின்னர்
ராமமூர்த்தி என்று கூப்பிட்டார். அந்தப் பெயருக்குரியவரும் வரவில்லை.
பின் அடுத்த நபரை அனுப்பிவிட்டு மீண்டும் அத்தானி லங்கிரான், ராமமூர்த்தி
என்ற பெயர்களைக் கூப்பிட்டார். இப்படி அடுத்தடுத்து நாலைந்து முறை
கூப்பிட்டும் பதில் இல்லை. ஒரு வழியாக எல்லா (220) மாணவர்களும் போன பின்
காத்திருக்கும் அறையில் ஒரே ஒரு மாணவர் மிச்சம். அவர் எழுந்து போய் ஏன்
என் பெயரைக் கூப்பிடவில்லை என்று எழுத்தரிடம் வினவினார். அதன் பின் தான்
உண்மை புலப்பட்டது. அவரது பழைய பெயர் ராமமூர்த்தி. எஸ். எஸ். எல்.சி.
புத்தகத்தில் அப்படித் தான் இருந்தது. பின்னர் அவர் ஆதன் இளங்கீரன் என்று
பெயரை மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் பி.ஏ., எம்.ஏ. சான்றிதழ்கள்,
நேர்முகத்தேர்வு உத்தரவு ஆகியவற்றில் இருந்தது. அந்தக் கன்னட எழுத்தர்
ஆதன் இளங்கீரனை அத்தானி லங்கிரான் என்று படித்ததாலும், ராமமூர்த்தி என்ற
தன் பழைய பெயரை அந்த மாணவர் மறந்தே போய்விட்டதாலும் வந்த குழப்பம் இது என
அறிந்து சிரித்தோம்.

கி.காளைராசன்

unread,
Jan 29, 2012, 10:42:34 AM1/29/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/1/29 விக்ரமன் <ekam...@gmail.com>
ஆதன் இளங்கீரனை அத்தானி லங்கிரான் என்று படித்ததால் வந்த குழப்பம் இது என

அறிந்து சிரித்தோம்.
 
நல்ல வேலை,
அத்தானி லங்கிரான் என்ற பெயரை 
ஆதன் இளங்கீரன் என்று படிக்காதவரை நல்லது.


அன்பன்
கி.காளைராசன்

360.gif

Dhivakar

unread,
Feb 1, 2012, 5:56:10 AM2/1/12
to mint...@googlegroups.com, rajam
"கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, என் பெயர் என்ன?"

நான் ஒன்றாம் வகுப்பில் படித்த இந்தப் பாட்டு இன்னும் நினைவில் உள்ளது. தன் பெயர் தேடி அலைந்த ஈ, அந்தச் சின்ன விஷயம்’யாருக்குமே தெரியாமல் இருக்க, கடைசியில் ஹி..ஹி..ஹீ என்று கழுதை (குதிரை?) ஒன்று கண்டுபிடித்து அந்த ஈக்கு அந்தப் பெயரை ஞாபகப்படுத்தும்.

என்னுடைய பெயர்க் கதையே எழுத்தாளர் லக்‌ஷ்மியால் ஏற்பட்டதுதான். மிதிலா விலாஸம் படித்துக் கொண்டிருந்த கௌசல்யா, அந்தக் கதையில் வரும் அந்த திவாகர் கதாபாத்திரமோ அல்லது அந்த பெயரோ மிகவும் பிடித்துப் போய் அந்தப் பெயரையே எனக்கும் நாமகரணமாக சூட்டிவிட்டாள். 

பிற்காலத்தில் ‘என்ன கௌசல்யா இப்படி ஈஸியா பண்ணிட்டியே.. உனக்கு எதிர்ப்பே யாரும் இல்லையா அப்போ.. அட்லீஸ்ட், தாத்தாவுக்கு தாத்தா பேர் வெக்கணும்னு யாராவது ஒரு கிழமாவது ஆலோசனை கொடுத்திருக்குமே’ ந்னு கேட்டேன். ‘அடப்போடா.. என்னெ எதிர்த்துப் பேச யாருக்காவது தைரியம் இருக்கோ..’ அப்படீன்னு ஒரே போடு போட்டாள் கௌசல்யா. 

கௌசல்யா என் பாட்டியார்.

ஆனால் 1980 இல் பாஸ்போர்ட் ஆபீஸில் என் இத்துனூண்டு பெயரை மிக நீளமானதாக சுப்ரெமணிய வேங்கடராவ் திவாகரன் பொரிஸகிரிஸி என்று போட்டார்கள். அப்படியே பாஸ்போர்ட்டும் போஸ்ட்டில் வந்துவிட்டது. இந்த ஜப்பானிய பெயரின் அதிசயத்தை வியந்து பாராட்டிக்கொண்டே விஜயவாடாவில் எனக்கு வாங்கிக்கொடுத்த பாஸ்போர்ட் ஏஜெண்டிடம் இந்த பாஸ்போர்ட் தப்பாக வந்திருக்கிறது. அந்த போட்டோ, விலாஸம் மட்டுமே சரி, பெயர் என்னுடையது இல்லை என்றேன்.அந்த ஏஜெண்ட் நிதானமாக, என்னுடைய அப்ளிகேஷன் காப்பியை எடுத்து வைத்துக் கொண்டு என் பெயரை எனக்கே விளக்கினார். 

’இதோ பார்.. இந்த வேங்கடராவ் என்ப்து உன் தகப்பனார் பெயர் வெங்கடராமனை இங்கே இப்படிதான் போடுவார்கள், இந்த சுப்ரெமணி என்பது யார்னு தெரியலே? நல்லா உத்துப் படி.. இவர் உங்கப்பாவுக்கு அப்பா.. அடுத்தது திவாகரன் ந்னு இருக்கு, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அதான் உன் பேரா இருக்கணும்.. பொரிஸகுரிஸி எப்படி வந்ததுன்னு தெரியலே’ என்று சொல்லி விட்டு பிறகு யோசித்துவிட்டு, ஏன்பா உங்கப்பா பேரு பொறிச்சகுறிச்சி சுப்பிரமணியன் வெங்கடராமன். நு எழுதிக்கொடுத்திருக்கே.. அதைத்தான் அவங்க பாஷைல போட்டுருக்காங்க.. அட கையிலே பாஸ்போர்ட் வந்தாச்சுன்னு சந்தோஷப்படுவியா அத வுட்டுட்டு பேர் இப்படி மாத்திட்டாங்களேன்னு அழுவியா..’

ஆனால் அடுத்தமுறை பாஸ்போர்ட் மாறியபோது சுதாரித்துக் கொண்டேன். பாஸ்போர்ட் ஆபீஸர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் என் முன்பாகவே என் பெயர் சூட்டும் படலம் (என் பாஸ்போர்ர்ட்டுக்குதான்) ஒழுங்காக நடந்தது.

ஆந்திராவில் தன் பெயருக்கு முன்பாக அவர்கள்தம் குடும்பப் பெயர் வைத்துக் கொள்வது வாடிக்கை. வேங்கடராமன் திவாகர் என்பது கொஞ்சம் பழக்கமில்லாததுதான். ஆனால் என்னுடைய சகநண்பர் பெயர் வேதுல.வீர வேங்கட சாயி லக்‌ஷ்மி சத்தியநாராயண மூர்த்தி அதாவது வேதுல என்பது அவர் குடும்பப்பெயர். வெங்கடேஸ்வர சுவாமி ஆந்திராவின் குலதெய்வம்.. கட்டாயமாக அவர் குடும்பங்களில் இடம் பெறவேண்டும். சத்தியநாராயண சகஜமாகவே வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பெயர், லக்‌ஷ்மி இல்லாமல் நாராயணனா - அது எப்படி என்று லக்‌ஷ்மியயும் சேர்த்து வைத்தார்கள். நடுவில் ஸாயி உண்டு, ஏனெனில் ஸாயி பக்தர்கள் கூட, அதனால் கட்டாயம் ஸாயி இருக்கவேண்டும். ஆனால் இதையெல்லாம் மூர்த்தி (இந்தப் பெயர்தான் நிலைத்தது) கண்டுகொள்வதே இல்லை. தன் விஸிட்டிங் கார்டில் சிம்பிளாக VVVSSN MURTHY என்று வைத்திருக்கிறார். ஆனால் இங்கு இப்படி உள்ள பெயரை டெலிபோன் டைரக்டரியில் தேடினீர்களேயானால் குறைந்தது 500 அல்லது 600 VVVSN மூர்த்தியாவது (எங்கள் பழைய எம் பி உட்பட) இருப்பார்கள். இந்தச் சமயத்தில் நமக்கு கை கொடுப்பது இந்தக் குடும்பப்பெயர் மட்டுமே.

இப்போது மறுபடியும் என் பெயருக்கு வருவோம். ஆனாலும் இந்த ஆன் லைன், நெட், ஈ மெயில் வந்தாலும்.வந்தது. உண்மையான பெயருக்கு மௌஸே இல்லாமல் போயிற்று.. எல்லா மெயில்களுமே என் தகப்பனார் பெயருக்குதான் வருகிறது. ஒவ்வொரு சமயம் ‘ஹே வெங்கட்ராமன், வில் யூ மேரி மீ’ என்று எல்லாம் வரும்போது என்னைப் பெற்றெடுத்து மேல் உலகம் சென்றுவிட்ட அந்த மகானுபாவரைத்தான் நினைத்துக் கொள்வேன்.. ச்சே.. விஷயம் தெரியாமல் முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார். கொஞ்சம் லேட்டாகச் சென்றிருந்தாரேயானால் இந்த மெயில்களையெல்லாம் காண்பித்து கொஞ்சம் சந்தோஷப்படுத்தி அந்தப் பொக்கைவாய் சிரிப்பையும், அம்மாவின் எரிச்சலையும் பார்த்திருக்கலாமே என்று தோன்றும்..

அவ்வளவு ஏன்.. என் கதையில் ஆசிரியர் பெயரில் கூட சிம்பிளாக ‘திவாகர்’ என்றேதான் போடுவேன். ஆனால் இந்த ஈ மெயில் உலகத்தில் அதை ஒப்புக் கொள்வதாக இல்லை போலும். சமீபத்தில் ஒரு சைட் இல் என்னுடைய கதையை போட்டுவிட்டு, எழுதியவர் ‘வேங்கட்ராம் திவாகர்’ என்று போட்டிருக்கிறார்கள். எல்லாம் ஈ மெயில் செய்த மாயை.

இந்தப் பெயர்கள் படும் பாட்டுக்கு, பேசாமல் ராஜம் அம்மா சொன்ன, பெயரே தெரியாத ஈ மாதிரி இருந்துவிட்டால் தேவலையோ என்னவோ.. . இல்லாவிட்டால் எல்லோருக்கும் கைதி எண் நம்பர் கொடுத்தாலும் தேவலை என்றுதான் தோன்றுகிறது.. ஆனால் இதிலும் ஒரு சௌகரியம் கூட இருக்கிறது. அவரவர் ந்ம்பர்களையே அவர்களுக்கு டெலிபோன்/மொபைல் நம்பராகக் கொடுத்துவிட்டார்களானால் இன்னமும் நல்லது.. 

காலம் வரும். நம்பிக்கையோடு காத்திருப்போம். ((

அன்புடன்
திவாகர்



2012/1/23 rajam <ra...@earthlink.net>
முன் குறிப்பு
--------------
இழையின் தலைப்பின் பொருளைத் திசை திருப்பாமல், யார் வேண்டுமானாலும் இந்த இழையில் பங்கு பெறலாம். சும்மா தம்பட்டம் அடிப்பவர்கள் குறுக்கிட வேண்டாம். உண்மையாகவே, தனியாகக் கஷ்டப்பட்டவர்கள் அவரவர் இடர்ப்பாடுகளைச் சொல்லி. அதோடு அவர்களுடைய தீர்வுகளையும் சொல்லவேண்டும். சும்மா "self-pity"யில் புலம்பிப் பயன் இல்லை; பாரதியார் சொன்ன "... வேண்டும், ... வேண்டும்" பாட்டை மீண்டும் கற்பனை செய்து அதுபோலப் பாடியும் பயனில்லை. 

என் பெயர் என்ன?
-------------------------

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages