இந்தத் தலைப்பில் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி 2005ம் வருடத்திலிருந்து முடிந்த போதெல்லாம் கோதையின் திருக்கதையினை எழுதி வருகிறேன். திருப்பாவையை உரையுடன் எளிதாக எழுத எண்ணித் தொடங்கியது. இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அங்கே இதுவரை எழுதி இட்டுள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்து இடுகிறேன். படித்துப் பார்த்து சொல்லுங்கள்.
கோ - அரசன், இறைவன்
தை - பெண்
கோதை - அரசி, இளவரசி, இறைவி ?!
வாங்கய்யா. வாங்கம்மா. வணக்கம். என் பேரு ரங்கனுங்க. ஐயா வீட்டுல தோட்டக்காரனா இருக்கேனுங்க.
ஹரியண்ணா.
புனிதவதி என்ற பெயர் அவர் பேயுரு கொண்ட அம்மை என்பதால் பூதவதி என்று திரிந்து கன்னட பலுக்கலில் Puuthavathi என்று ஆகிவிட்டதோ என்னவோ. ஆனால் நீங்கள் காட்டும் தொடர்பை நானும் காண்கிறேன்.
நஞ்சங்கூடு கோவிலில் அறுபத்து மூவர் சிலாரூபம் இருந்த போதிலும், அங்கே தேவாரம் ஒலிக்கவில்லை. இன்னொரு சுவாரசியமான விஷயத்தை அங்கே கவனித்தேன். காரைக்கால் அம்மையார் வடிவம் அங்கே உள்ள அறுபத்து மூவர் வடிவங்களில் இல்லை. மாறாக, கொழுக் மொழுக் என்று ஒரு அம்மணி மண்டியிட்டு வணங்கிய நிலையில் அமர்ந்திருக்கிறார். பூதவதி என்று அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Buthavathi இல்லை Puthavathi. இவர்தான் பேய் அம்மையாக அழைக்கப்படும் அம்மையாருடைய கர்நாடக வடிவமா தெரியவில்லை.
அன்புடன்,
ஹரிகி.
> பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே!
>
வைணவ மரபில் சில ஆச்சர்யமான பிரயோகங்கள் உள்ளன. அதில் இதுவொன்று.
பெரியாழ்வார் பெற்று எடுத்த பிள்ளை கோதை என்கின்றனர். ஆண் எப்படி பெற்று
எடுக்க முடியும்? அது தாய்க்கே உரிய பேறு இல்லையா?
அதே போல் நம்மாழ்வாரைச் சுட்டும் போது "முதல் தாய் சடகோபன்" என்கின்றனர்,
எம்பெருமானார் இராமானுசரையோ "இதத்தாய் இராமானுசன்" என்கின்றனர்.
ஆண் எப்போது தாயாகிறான்?
இதுதான் மார்கழி மாதத்துப் புதிர் ;-)
க.>
நன்றி திரு. சதீஷ்குமார்.
கண்ணன் ஐயா, தமிழ்த்தேனீ ஐயா சொன்ன பொருளில் தான் இதுவரை 'பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய்' சொற்றொடருக்குப் பொருள் கொண்டு வருகிறேன்.
ஒவ்வொரு படைப்பாளியும் ஆணோ பெண்ணோ தங்களின் படைப்பிற்குத் தானே தாய் ஆகிறார்கள். பெறாவிட்டாலும் பேணி வளர்த்தவர்களும் தாய் ஆகிறார்கள். தேவகியையும் அசோதையையும் போல். திருவாய்மொழியைப் பெற்ற முதல் தாய் சடகோபன்; பேணி வளர்த்த 'மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்'.
திவா
2008/12/29 Kumaran Malli <kumara...@gmail.com>:
க.>
2008/12/30 Kumaran Malli <kumara...@gmail.com>:
இந்த கேள்வி குறித்து நெடுங்காலமாக ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆனால், pinpoint செய்ய இயலவில்லை. ஆனால், முன்பு
திருமணத்தை 'வாக்கப்படுவது' என்றே கூறிவந்தனர். இன்னாருக்கு இன்னவளை
கொடுப்பதாக " வாக்கு " - படுவது.( இன்றைய பதிவு ஆவணங்களுக்கு
முன்னோடியான ப்ராமிசரி நோட் போல- பிராமிஸ் தவறத் தவற, நாளடைவில் பதிவு
ரிக்கர்ட் அவசியமானது. ) வாக்கு தவற, தமிழர்களின் மங்கள அடையாளமான
மஞ்சளைக் கட்டி வாக்கு உறுதி என்பது தொடங்க, வசதி படைத்தோர் மஞ்சளுக்கு
பதிலாக பொன்னை பயன்படுத்த, அதில் அந்தந்த குழுக்கள் தங்கள் குழு
அடையாளங்களைப் பொறிக்க என்று தாலி என்பது காலப்போக்கில் வளர்ந்து சடங்காக
மாறியிறுக்கலாம். இப்போதும் பொற்கொல்லர்கள் வசம் எல்லா சாதியினருக்கான
தாலிகளும் கிடைக்கும்.இது இன்று சடங்காகிப்போனது.
என்றார் கி. ரா.
அன்புடன் சித்தன்
On 12월30일, 오전6시36분, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> இந்த மாத யுகமாயினி படித்துக் கொண்டிருந்தேன். கி.ராஜநாராயணின் கடித
> இலக்கியத்தில் அவர் தாலியைக் கொண்டு இன்ன சாதி என்று
> கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆண்டாள் காலத்தில் ஏன்
> அவள் சமூகத்தில் தாலி கட்டும் வழக்கமில்லை?
>
> க.>
>
> 2008/12/30 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>:
>
>
>
> > ஆமாம் ஐயா. தாலி கட்டும் வழக்கம் வைதீகத் திருமணத்தில் கோதையின் காலத்தில்
> > இருந்ததில்லை என்று இந்தப்பாசுரங்களைக் கொண்டு சொல்வதைப் படித்திருக்கிறேன்.
>
> > 2008/12/28 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
>
> >> திருமணத்தின் எல்லா முக்கிய படிகளையும் அழகாக சொல்லிவிட்டார்! தாலி
> >> கட்டுவது என்று எதுவும் வரவில்லை பார்த்தீர்களா? அது காலத்தில்
> >> பிற்சேர்க்கை போல இருக்கிறது. கைத்தலம் பற்றுதல், தீயை வலம் வருதல்தான்
> >> முக்கியமானவை.
>
> >> திவா- 따온 텍스트 숨기기 -
>
> - 따온 텍스트 보기 -
இதுவொரு அரிய தகவல். "வாக்குப்படுதல்" என்பது எவ்வளவு அழகிய வழக்கம்.
அக்னி முன் வலம் வந்து திருமணம் செய்து கொள்வதிலும் அக்னியே சாட்சியாக
உள்ளது. அது வந்து சாட்சி சொல்லப்போவதில்லை. ஆனால், மனசாட்சிக்கு அது
நிகராக நிற்கிறது.
இந்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டுக் குடியுரிமை
வேண்டுவோர் பாடு திண்டாட்டம். உள்ளூரில் இருக்கும் வரை எல்லாமே சரியாக
இருக்கும். இன்னாருக்கு இன்னார் வாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை ஊர்
கவனித்துக் கொள்ளும். ஆனால், இந்த மனோதர்மம் 'கடல்தாண்டி'ப் போகும் போது
இடர்படுகிறது. அதனால்தான் கடல்தாண்டக்கூடாது என்று வைத்தார்களோ என்னவோ!
கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தாலும் எல்லோரும் திருமணத்தைப் பதிவு
செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்து கொண்டு இருக்கிறது.
கி.ரா ஒரு பொக்கிஷம். அவரோடு உட்கார்ந்து கதை கேட்க வேண்டுமென்று நீண்ட நாளைய ஆசை.
கண்ணன்
2008/12/30 <chitha...@yahoo.co.in>:

கன்னிகாதானம்தானே!
திவா
2008/12/30 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>:
On 2008년12월31일, 오후5시06분, "Geetha Sambasivam" <geethasmbs...@gmail.com>
wrote:
> வார்க்கப் படுவது எல்லாம் இல்லை! வாழ்க்கைப் படுவதன் கிராமீய மணம் கமழும்
> வார்த்தை வாக்கப் படுவது என்று வரும். அதிகம் தென் மாவட்டங்களில் இன்றும் பயன்
> படுத்தும் சொல்.
>
> 2008/12/31 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
>
>
>
> > ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
> > வார்க்கப்படுவது?
> > அதன் மரூஊ வாயும் இருக்கலாம்.
>
> > கன்னிகாதானம்தானே!
>
> > திவா
>
> > 2008/12/30 NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com>:
>
> > --
> > My blogs:(all in Tamil)
> >http://anmikam4dumbme.blogspot.com/
> >http://chitirampesuthati.blogspot.com/
> >http://kathaikathaiyaam.blogspot.com/
>
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!- 따온 텍스트 숨기기 -
தாலி – பனை ஓலையாலானது. மணமான பெண்கள் அணிவது.
(தால பத்ரம் – பனை ஓலை)
காதில் துளையிட்டு பனையோலைச் சுருளை அதில் செருகிக் கொள்வர்.
காதோலை என்று பெயர். பின்னால் அவை பொன்னாகவும், வைரமாகவும்
வடிவம் பெற்றன. வைரத்தோட்டை ‘வைரவோலை’ என்று கூறும் வழக்கமும் இருந்தது.
தாலி கட்டுவதற்கு – மாங்கல்ய தாரணத்திற்கென்று தனித்த வேத
மந்திரங்கள் கிடையா. ‘மாங்கல்யம் தந்துநாநேந ......’ என்றாரம்பிக்கும்
சுலோகம்
மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாலி கட்டுவது வைதிகச் சடங்கு அன்று. மரபில்
வந்தது.
(ஆதாரம் – தெய்வத்தின் குரல்)
தேவ்
அது தனி, தாரை வார்த்துக் கொடுத்தல் வேறே. வாழ்க்கைப் படுதல், வாக்கப் படுதல் என்று வருவது வேறே. இங்கே வாழ்க்கைப் படுதலைத் தான் சொல்கின்றனர் என்றே நினைக்கிறேன்."உங்களுக்கு வாக்கப் பட்டு என்ன கிடைச்சது?" என்று கேட்பார்களே? :)))))))) இது இங்கே வாழ்க்கைப் பட்டு என்பதையே குறிக்கும்.


'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே
'வளர்ந்த குழந்தைகளைப் போன்ற இந்த முலைகளின் இடர் தீர கோவிந்தனுக்கு ஒரு குற்றேவல் இந்தப் பிறவியிலேயே செய்யாமல் மறுபிறவியில் வைகுந்தம் சென்று அவனுக்குக் குற்றேவல் செய்யும் தவம் செய்து என்ன பயன்? சிறந்த அவனுடைய திருமார்பகத்தில் என் முலைகளை அவன் சேர்க்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது 'நான் உன்னை காதலிக்கவில்லை' என்ற உண்மையாவது என் முகத்தை நோக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அது மிக நல்லதாக இருக்கும்'
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே


எல்லா நிறத்திலும் பூக்கள் நம் நந்தவனத்தில் மலர்கின்றன. ஒவ்வொன்றும் மாலவன் திருமேனியை அலங்கரிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளுகின்றனவே. 'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?!
இந்த நீல நிற மலரை பார்த்தால் நம் நீலமேக வண்ணனின் திருநிறத்திற்கு தான் ஏற்றதாக இருப்போம் என்ற மகிழ்வும் பெருமிதமும் தெரிகிறதே. வெண்ணிறப் பூக்கள் அவன் புன்சிரிப்பு பூக்கும் போது தெரியும் பற்களின் நிறத்திற்கு தாம் பொருத்தமாக இருப்போம் என்று சொல்கின்றனவே. சிவந்த மலர்கள் அவன் திருக்கண்களின் நிறத்திற்கும் கொவ்வைச் செவ்வாயின் நிறத்திற்கும் தாங்கள் போட்டி என்று சொல்கின்றனவே. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டிற்குத் தாங்கள் தான் பொருத்தம் என்று சொல்கின்றனவே.



'கோமளவல்லி சொல்வதும் சரி தான் போலிருக்கிறதே. இது கண்ணாடி தான். பல நாட்கள் நானும் இதில் என் முகம் பார்த்திருக்கிறேன். ஏன் இன்று என் முகம் தெரியாமல் கண்ணனின் முகம் இதில் தெரிகிறது. அதோ அந்த நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்போம்.'
நிலைக்கண்ணாடியில் கண்ணனின் முழு உருவம் தெரிகிறது. இவள் என்ன செய்கிறாளோ அதனையே கண்ணன் நிலைக்கண்ணாடியில் செய்கிறான்.
'ஆகா. எத்தனை நாளாக உருகினோமோ அதற்கு பயன் கிட்டிவிட்டதா? கண்ணன் மனம் கடைசியில் இரங்கிவிட்டதா? அதனால் தான் கண்ணாடியில் காட்சி தருகிறானா? அவன் உருவத்தைக் கண்டு மனம் துள்ளுகிறதே. ஆகா அவனுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிவோம் என்றால் இது என்ன கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவே முடியவில்லையே. அவன் திருவுருவம் தானே தெரிகிறது. இது நாள் வரை கண்களில் தென்படாமல் கொடுத்தத் தொல்லை போதாதென்று இன்று கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தென்பட்டு தொல்லை கொடுக்கிறானே. இவனை என் சொல்ல? தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே. என்னைப் போன்ற பேதைப் பெண்களைத் தொல்லைப் படுத்திப் பார்ப்பதே இவனுக்கு வேலையாகப் போய்விட்டது.
கண்ணாடி இல்லாவிட்டால் என்ன? கைகளும் கால்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியாமலா போய்விட்டது. முடிந்த வரை கண்ணாடி பார்க்காமலேயே நம்மை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் தெரியும் கண்ணன் முன் வருவோம்'.
இப்படி எண்ணிக் கொண்டு கோதை தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியின் முன் வருகிறாள். அங்கே கண்ணனைக் கண்டு மிக மகிழ்ந்து நிற்கிறாள். அப்போது அருகில் பெருமானுக்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலைகள் தென்படுகின்றன.
'என் கண்ணனுக்காகவே அப்பா இந்த மலர் மாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார். அவனுக்கு இந்த மாலைகள் தான் எவ்வளவு பொருத்தமாக இருக்கும். கண்ணாடியில் தெரியும் கண்ணனுக்கு இவற்றை அணிவித்துப் பார்ப்போம். கண்ணா, இந்தா இந்த மலர் மாலையை அணிந்து கொள்'.
கண்ணாடியில் தெரியும் கண்ணன் திருவுருவம் மலர் மாலையை அணிந்து கொள்ளவில்லை.
'கண்ணா. உன் மனம் மீண்டும் கல்லாகிவிட்டதா? கண் முன் தெரிகிறாய். ஆனால் நான் வேண்டிக் கொண்டு தரும் இம்மாலையை அணிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். உன்னை என்ன தான் செய்வது?'
கண்ணன் கண் முன் தெரிவதால் கண்ணனை முன் போல் கடிய வார்த்தைகளால் கடிந்து கொள்ள கோதைக்கு முடியவில்லை. ஆனாலும் தந்தையார் மிகுந்து பக்தியுடன் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலையைக் கண்ணனுக்கு அணிவித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
'கண்ணா. நான் வருந்தி அழைத்துக் கொடுத்தாலும் மாலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே. உனக்கு இந்த மாலைகளை எப்படி அணிவிப்பது என்று எனக்குத் தெரியும்'
இப்படி சொல்லிக் கொண்டே மாலைகளை ஒவ்வொன்றாக தானே அணிந்து கொள்கிறாள்.
ஒவ்வொரு மாலை அணியும் போதும் கண்ணாடியில் இருக்கும் திருவுருவமும் அந்த மாலையை அணிந்து கொள்கிறது. ஒவ்வொரு மாலையை அணிந்து கொண்டும் அவனின் திருவுருவத்திற்கு அந்த மாலை எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி அழகு பார்க்கிறாள் கோதை. இப்படி எல்லா மாலைகளையும் அணிந்து பார்த்த பின் அவற்றை திரும்பவும் குடலையில் இட்டுவிட்டு கைக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு மீண்டும் கண்ணன் திருமுகத்தைக் காண வேறுபுறம் சென்றுவிடுகிறாள். இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தது என்று தெரியாமல் இருந்த மகிழ்ச்சி மீண்டும் அவள் முகத்தில் குவிந்திருக்கிறது.





குமரன்!
வாழி நீடூழி!
அற்புதமாகப் போய்க்கொண்டு இருக்கிறது!
திருப்பாவையில் "மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்" என்று சொல்லும்
போது வியாக்யாதா 'கோபியரின் ப்ரகிருதி சம்மந்தம் வேண்டுமென்று ஆண்டாள்
ஆசைப்படுகிறாள்" என்று சொல்வார்கள். அத்வைத திலகம் ஆதிசங்கரர் வழிவந்த
ஸ்ரீதர ஸ்வாமிகள் "ஞானிகள்" எனும் இடத்து எல்லோரையும் விட்டு "கோபியர்கள்
போல்" என்கிறார். அது எப்படி?
இறைவனைக் கண்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பார்த்து அலசுவது அல்ல
ஞானித்துவ்ம். இறைவனின் இருப்பை உணர்ந்து அனுபவிப்பது ஞானித்துவம்.
பாயாசம் செய்துவிட்டு அதை உண்ணாமல், அதன் வேதிமச் சேர்க்கை பற்றி
ஆராய்ந்து கொண்டிருப்பவன் முட்டாள். கோபியர் ஒவ்வொரு நொடியும்
கண்ணனுடனேயே வாழ்ந்தனர். அவனை சதாகாலமும் அனுபவித்து வந்தனர். அதனால்தான்
ஆண்டாளும் தன்னை கோபி ஆக்கிக் கொண்டாள்!
மேலும் இராமானுஜருக்கு தாம் நரகம் புக்கிலும் அனைவருக்கும்
திருமந்திரத்தைச் சொல்ல வேண்டுமென்று எப்படித்தோன்றியது? எல்லாம் இந்த
கோபி பாவம்தான்.
அது சரி, எங்கிருந்து பிடித்தீர்கள் இத்தனை பெண் குட்டிகள் பெயரை!? அடேங்கப்பா!
அசத்தறீங்க குமரன்!
கணிகண்ணன்
சந்த்ராவளி, லலிதா, விஷாகா, சித்ரா, இந்துலேகா, ரங்கதேவி, சுதேவி. இவள்
எங்களுக்கெல்லாம் நாயகப் பெண்பிள்ளையான ராதிகா. //
ஸ்ரீ க்ருஷ்ண ஸகீ கணத்தின் திருநாமத் தொகுப்பு வெகு அருமை.
ரங்கதேவிக்கு முற்பட்ட துங்கவித்யாவின் பெயரையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீராதிகையின் அஷ்ட ஸகிகளில் ஒருத்தி. நிகுஞ்ஜ ஸேவையில் இடம் பெற்றவள்.
தேவ்
சொல்ல மறந்து போனது.கோபியர் இங்கு காட்டும் பாவம்தான் நம் மனதில் என்றும்
பதிய வேண்டும். கோயிலுக்குப் போய் 'இறைவா! அதைக்கொடு, இதைக்கொடு' என்று
மன்றாடிக்கொண்டு இருக்கக்கூடாது. அதற்குப்பதில் அவன் நம்மையும் ஓர்
ஆளாக்கி உலவவிட்டு, அவன் சந்நிதிக்கு வரும்படி செய்து வாழ வைக்கிறானே என
நெக்குருக வேண்டும். அவன் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்த வேண்டும். இதனை
'மங்களாசாசனம்' என்று சொல்வார்கள். அவருக்கு மங்களமான சாசனம் எழுதத்தான்
நாம் பிறந்திருப்பதே. கோபியர் துடித்துப் போவதன் காரணம் இதுவே. "ஒருத்தி
மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்துவளர" என்று ஆள்சுட்டாமல்
பாடுவதும் இந்த பாவம்தான். கண்ணன் பிறந்தத்திலிருந்து சோதனைதான்.
எனவேதான், பாவமான வசுதேவரைக் 'கூர்வேல் கொடுந்தொழிலன்' ஆக்கியது. "சுற்றி
நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல்!" என்று இருப்பானாம்.
கோபியர் பக்தர்களா? அவர்களுக்குத்தெரியாது! கோபியருக்கு பாதுகாதூளி
கொடுத்தால் பாவம் வருமா? தெரியாது. அங்கு "தான்" என்பது இருந்தால்தானே
இந்தக் கவலையெல்லாம். கோகுலத்தில் இருப்பதெல்லாம் 'கண்ணன் மட்டுமே'. இதை
நாரதர் கண்டு கொள்ள வேண்டுமென கண்ணன் அனுப்புகிறான். [ஆமாம்! இந்தக்கதை
எதில் வருகிறது? இது அக்கூரர் கதை என்று நினைத்திருந்தேன்]
கோபி பாவம் பிடிபட்டு விட்டதெனில் நமக்கு உஜ்ஜீவனம் (உய்யும் வழி)
ஆகிவிட்டது என்று பொருள்.
க.>
குமரன்!
வாழி நீடூழி!
அற்புதமாகப் போய்க்கொண்டு இருக்கிறது!
உண்மை தான் ஐயா. கோபியர் பாவம் புரியாமல் தானே கிருஷ்ணலீலைகளைக் கண்டு திகைத்துக் கொண்டிருக்கிறோம்.
இக்கதை பாகவதத்தில் தான் வருகிறது என்று நினைக்கிறேன். பிருந்தாவனத்திற்குச் சென்றவர் அக்ரூரராக இருக்கலாம்; அவரும் நாரதரைப் போல் பக்தியில் சிறந்தவர் தானே.

கோபி பாவம் பிடிபட்டு விட்டதெனில் நமக்கு உஜ்ஜீவனம் (உய்யும் வழி)
ஆகிவிட்டது என்று பொருள்.//
கோபீ பாவம்
‘பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் ...’ - ஆடவர்தம் மனங்களையும்
கவர்பவனாகவும், கண்டவர் மனம் வழங்கும் வள்ளலாகவும் அன்றோ ஐயன் ஸ்ரீ
ராமாவதாரத்தில்
இருந்தபடி; அவன் வடிவழகில் மோஹித்த மஹரிஷிகளும்,
மறைத்தொகுதிகளும் ஆய்ச்சியராகப் பிறந்தனர்.ப்ரேம பக்தியே ஒரு
பெண்ணுருக்கொண்டு அவர்களின் தலைவியான ஸ்ரீராதையானது.
‘விதக்த மாதவம்’ போன்ற நூல்களில் சைதன்ய மஹாப்ரபு
ஆதரித்த ராகானுக பக்தியை ப்ருந்தாவனத்தில் வாழ்ந்த கோஸ்வாமிகள்
விரித்துரைத்தனர்.அந்த ப்ரேம பக்தியின் விளக்கத்தை ’ராதிகா விலாஸ
சம்பூ’,’ப்ருந்தாவன மாஹாத்ம்யம்’ போன்ற நூல்களில் பரனூர்ப் பெரியவர் எளிய
வடமொழியில்
பேதை,பாமரரும் அறியும் வண்ணம் தந்துள்ளார்.
ஸகிகளின் திருநாமங்கள் அவற்றில் இடம் பெறுகின்றன.
கோபீபாவத்தை யோகியரில் சிறந்த பீஷ்மர் கொண்டாடுகிறார்;
நாரத பக்தி ஸூத்ரம் போற்றுகிறது; திருகயிலையில் ஈசன் அம்மையிடம்
விரித்துரைகிறார்;
வேதாந்தம் வல்ல உத்தவன் அவர்களுக்குத் தலை வணங்குகிறான்;
உத்தவன் வியாழ பகவானிடம் கல்வி கற்றவன்.
‘மற்றிருந்தீர்கட்கு அறியலாகா மாலவன் என்பதோர் அன்பு’
அதை உணர்வதுதான் கோபீ பாவம்!
தேவ்
நன்றி. ஆம், அது உத்தவன். அக்கூரர் அல்ல. பிழை பொறுக்க.
பரனூர்ப் பெரியவர் சொல்லித்தெரிந்த இன்னொரு அரிய சேதி. மகாத்மா காந்தி
போற்றிக் கொண்டாடிய "வைஷ்ணவ ஜனதோ!" எழுதிய நரசிம்ம மேத்தா பற்றியது.
பெற்றோரைப் பிரிந்து தனியாகக் கானகம் வரும் சிறுவன் மேத்தா, ஒரு சிவன்
கோயிலில் இரவு தங்குகிறான். இரவில் அவனுக்கு சிவபெருமான் ராசலீலை
காட்டித்தந்ததாகவும் அதன் பின் அவன் "'மற்றிருந்தீர்கட்கு அறியலாகா
மாலவன் என்பதோர் அன்பு' என்பதை உணர்கிறான், என்பது.
க.>