கோவில் கோபுரம் மற்றும் தேர் சிற்பங்களில் விரசம் ஏன்?
நம் நாட்டுக் கோவில்களில் பலவற்றிலும் மற்றும் கோவில் தேர் சிற்பங்களிலும் விரசமான சிற்பங்களையும் காண்கிறோம். இது ஏன்? தூய்மையான மனத்தோடு இறை வழிபாடு செய்ய வேண்டிய இடத்திலே விரசம் வரலாமா?
இந்தக் கேள்வி என் மனதை வெகு நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒன்று. யோசித்துப் பார்த்ததில் சில விடைகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை அன்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
முதலாகத் தோன்றியது, பாலியல் உறவோ அது சம்பந்தப் பட்டவையோ மனித வாழ்க்கையில் ஒரு பகுதி. அதை கோவில்களிலும் தேர்களிலும் காட்டுவதில் என்ன தவறு?
கூடவே வந்தது ஒரு கேள்வி, “விரசமான காட்சிகள் பார்ப்பவரை தவறான வழிகளில் நடக்கச் செய்திடாதா?” என்று. வந்தது பதிலும் அதற்கு. மேலே படியுங்கள்.
ஊருக்கு வெளியிலிருந்தே கண்ணில் படுவது வானளாவிய கோபுரம். அட. ரொம்ப அழகாயிருக்கும் போல இருக்கிறதே. அருகில் சென்று பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற கோயிலை நெருங்குகிறோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில விரசமானவையும் கூட. நம் மனம் சிறிதளவாவது பக்குவம் அடைந்த நிலயில் இருந்தால் அந்த வரிசைக்கு மேல் உள்ள உருவங்களைப் பார்கிறோம். அவற்றில் விரசம் இல்லை. இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம். நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய் என்பதை போதிக்கிறது.
நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம். நம் மனதிலே தோன்றுவது என்ன? ‘ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று பார்த்தால் இன்னும் பல விரசமான காட்சிகளையும் காண முடியுமோ?’ என்னும் எண்ணம். உள்ளே செல்கிறோம். அங்கு காண்பது என்ன? நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபம் என பெரிய பெரிய மண்டபங்கள். இவற்றில் மக்கள் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து ரசிக்கவோ வசதி. சொல்லப் போனால் இலவச பாட சாலைகள்தானே கோயில்கள்?
வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள் பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி வருகிறோம். நல்ல வெளிச்சமாக இருந்த வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள கருவறையில் கும்பிருட்டு. அங்கு எண்ணை விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. பூஜை செய்பவர் ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின் சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார். இப்போது இறைவனின் முகம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம். “உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்”, என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.
என்ன அன்பர்களே கோவில் தேர்களிலும், கோபுரங்களிலும் விரசமான சிற்பங்களும் இன்ருப்பதால் தவறு இல்லைதானே?
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
கோவில் கோபுரம் மற்றும் தேர் சிற்பங்களில் விரசம் ஏன்?
நம் நாட்டுக் கோவில்களில் பலவற்றிலும் மற்றும் கோவில் தேர் சிற்பங்களிலும் விரசமான சிற்பங்களையும் காண்கிறோம். இது ஏன்? தூய்மையான மனத்தோடு இறை வழிபாடு செய்ய வேண்டிய இடத்திலே விரசம் வரலாமா?
இந்தக் கேள்வி என் மனதை வெகு நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒன்று. யோசித்துப் பார்த்ததில் சில விடைகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை அன்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
முதலாகத் தோன்றியது, பாலியல் உறவோ அது சம்பந்தப் பட்டவையோ மனித வாழ்க்கையில் ஒரு பகுதி. அதை கோவில்களிலும் தேர்களிலும் காட்டுவதில் என்ன தவறு?
கூடவே வந்தது ஒரு கேள்வி, “விரசமான காட்சிகள் பார்ப்பவரை தவறான வழிகளில் நடக்கச் செய்திடாதா?” என்று. வந்தது பதிலும் அதற்கு. மேலே படியுங்கள்.
அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம். “உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்”, என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.
என்ன அன்பர்களே கோவில் தேர்களிலும், கோபுரங்களிலும் விரசமான சிற்பங்களும் இன்ருப்பதால் தவறு இல்லைதானே?
இந்தக் காரணம் நிச்சயமாக இருக்க முடியாது. ஏனென்றால் சாதாரண புணர்ச்சி சிற்பங்கள் மற்றும் இன்றி பல வக்ரப் புணர்ச்சி சிற்பங்களையும் காண முடிகிறதே. இது சூதறியா மக்களை படுகுழியில் தள்ளிடாதா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பொதுவாக, பரிகாரத் தலங்கள் என்று சொல்லப்படுகின்ற கோயில் கோபுரங்களில் இம்மாதிரி சிற்பங்கள் அதிகம்.
அந்தக்காலத்தில் அது விரசமாக தோணலை. இன்று நாம் கெட்டுபோயிட்டோம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.
எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.
காமத்தை கடந்தால்தான் பிரம்ம நிலையை அடைய முடியும். இல்லாவிட்டால் காமம்
மீண்டும் பிறவிக்குள் தள்ளும். இதுவே இந்தச் சிலைகளின் தத்துவம்.
நாத்திகர்களின் சிந்தனையற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இந்து மதம்
பற்றிய தேடுதலை மறந்து விட்டோம். தற்போது நமக்கும் இந்தச் சிலைகள்
விரசமாகத் தோன்றுகின்றன.
உண்மையில் பாலியலை இந்து மதம் புரிந்துகொண்ட அளவு வேறு எந்த மதமும்
புரிந்துகொண்டதா என்பது தெரியவில்லை.
திருமணஞ்சேரி என்னும் தலம் திருமணத் தடைகள் நீங்க பரிகாரத் தலமாகும். :)))) சென்னையிலேயே நவகிரஹ பரிகாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அம்பத்தூருக்கு அருகிலுள்ள பாடியில் திருவாலீசுவரர் கோயிலும் ஒரு பரிகாரத் தலமே. இங்குள்ள மாப்பிள்ளைவிநாயகருக்கு மாலை வாங்கிப் போட்டு வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நீங்கள்சொல்வது தான் சரியான காரணம். இதைப் பரமாசாரியார் அவர்கள் கூறியதாகப் படித்திருக்கிறேன். நானும் விரிவாக பதிலளிக்க வந்து உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லாமல் விடுகிறேன். தங்கள் புரிதலுக்கு நன்றி.
2014-03-10 20:46 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.
எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.
காமத்தை கடந்தால்தான் பிரம்ம நிலையை அடைய முடியும். இல்லாவிட்டால் காமம்
மீண்டும் பிறவிக்குள் தள்ளும்.
உண்மையில் பாலியலை இந்து மதம் புரிந்துகொண்ட அளவு வேறு எந்த மதமும்
புரிந்துகொண்டதா என்பது தெரியவில்லை.
காமத்தைக் கடப்பதென்பதெல்லாம் ஹிப்போகிரசி.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-03-10 20:46 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.
எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
கி.வா.ஜ தன்னுடைய ஆசிரியப் பிரானான உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரத்தில் சொல்லாத விஷயங்களை "என் ஆசிரியப்பிரான்" என்ற புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். அதில் "போலீஸ் அதிகாரியின் செயல்" என்ற கீழ்க்காணும் முதல் கட்டுரை மிகவும் சுவாரசியமானது.
திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜெயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார். அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. “இப்படியெல்லாம் பாடல்களைப் பாடிக் குழந்தைகளின் மனசைக் கெடுத்துவிடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்களை வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்” என்று பேசிக் கொண்டிருந்தார்: அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யத் தொடங்கினார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியப் பெருமானிடம் வந்து சொன்னார்கள்.
ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருந்த திருவேட்டீசுவரன் பேட்டையில்தான் ஜெயசிங் குடியிருந்தார். ஒரு நாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் போய்ப் பார்க்க ஆசிரியர் சென்றார்.
“எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்؟ நானே தங்களைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். தங்களுக்குக் கோர்ட்டிலிருந்த ஸம்மன் வரும்” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னார்.
“எனக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம்؟”
“ஒரு முக்கியமான விஷயத்தில் தாங்கள் சாட்சி சொல்ல வேண்டும். தமிழ் நூல்கள் சிலவற்றில் பெண்களைப் பற்றி ஆபாசமான வர்ணனைகள் வருகின்றன. அத்தகைய நூல்களையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அது பற்றித் தங்களைச் சாட்சியாகப் போடப் போகிறேன். “
“அப்படியா! அதுபற்றித்தான் தங்களைக் கண்டு பேசலாம் என்று வந்தேன்.”
“என்ன அது؟”
“தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப் பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக் கூடாது என்று எண்ணம் தங்களுக்கு இருப்பது தெரிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகத்தைத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த உண்மை நன்றாகத் தெரியும். ஆனால் இலக்கியங்களை நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சிருங்காரச் சுவையுடைய நூல்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பல காலமாக இந்த நாட்டில் புலவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். செய்யுள் வடிவில் இருப்பதனால் அவற்றைப் படிப்பவர்களுக்கு இலக்கியச் சுவை தோன்றுமேயொழிய ஆபாசமான உணர்ச்சி தோன்றாது” என்று ஆசிரியப் பெருமான் பேச்சை ஆரம்பித்தார்.
“சில பைத்தியகாரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்து விடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதுபற்றி எனக்கு ஒரு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அவர் சொன்னார்.
“இப்போது தங்களுக்கு அவகாசம் இருக்கும் அல்லவா؟ நிதானமாகப் பேச வேண்டும் என்று வந்திருக்கிறேன்” என்று சொன்னார் ஆசிரியர்.
“பெரியவர்களாகிய தாங்களே வந்திருக்கிற போது, தங்களோடு பேசிக் கொண்டிருப்பதைவிட வேறு வேலை எனக்கு என்ன இருக்கிறது؟ தாங்கள் சொல்லுங்கள்: நான் கவனிக்கறேன்.” என்றார் ஜெயசிங்.
“என்னிடம் சில புலவர்கள் வந்து, தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், தாங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று சொன்னேன். பழைய இலக்கியங்களை எல்லாம் கொளுத்திவிட வேண்டும் என்று தாங்கள் சொல்வதாகச் சொன்னார்கள். தங்களைத் தவறாக அவர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் தீர்மானமாக எண்ணினேன். அதனால்தான் தங்களை நேரில் பார்த்துப் போக வந்தேன்” என்றார் ஆசிரியர்.
“எல்லாப் புலவர்களுக்கும் என்மோல் கோபம் இருக்கலாம். ஆனால் எனக்கு ஆபாசம் கூடாதென்பதுதான் எண்ணம். அதனால்தான் காவடிச் சிந்து போன்ற புத்தகங்கள் பரவக்கூடாது என்று எண்ணுகிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி.
“காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வருணனைகளை எல்லாம் படித்து அவற்றோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால் அந்த மாதிரி ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது ரசங்களில் சிருங்கார ரசம் என்பது ஒன்று. அதைப்பற்றி பல நூல்கள் தமிழில் இருக்கின்றன: வடமொழியிலும் இருக்கின்றன. பெண்களுடைய வருணனை கூடாது என்று சொன்னால் எத்தகைய இலக்கியத்தையும் படிக்க முடியாது. நான் மிகப் பழைய நூல்களாகிய சங்க நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழ்நாடு எனக்குக் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அந்த நூல்களிலும் கூடப் பெண்களின் வருணனை இருக்கிறது. ஆனால் அவற்றைப் படிக்கிற போது ஆபாச உணர்ச்சி தோன்றாது: இலக்கியச் சுவைதான் தெரியும். தாங்கள் இவற்றை எல்லாம் பொசுக்க வேண்டும் என்று நினைப்பதாகச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்க நூல்களை எல்லாம் கடலில் போட வேண்டியதுதான்: காவியங்களை எல்லாம் பொசுக்கிவிட வேண்டியதுதான். வடமொழியில் உள்ள நூல்களில் கூட அத்தகைய வருணனைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் யாரும் படிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படிப் பார்த்துக் கொண்டே போனால், பிறகு தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு ஒன்றுமே அகப்படாது” என்றான் ஆசிரியர்.
“அப்படியா؟ தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களுமே ஆபாசம் என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது؟” என்றார் ஜெயசிங்.
“ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி என்பது வேறு. மனித வாழ்க்கையில் காதல் என்பது மிக முக்கியமான உணர்ச்சி: காவியங்களும், சாஸ்திரங்களும் இந்தக் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. கடவுளைப் பாடுகிறவர்கள்கூட ஆண்டவனைக் காதலனாகவும் தங்களைக் காதலிகளாவும் வைத்துப் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்”.
“அப்படியா؟ தேவாரம், திருவாசகம் போன்று நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா”” என்று கேட்டார் ஜெயசிங்.
“தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றிப் பாடியிருக்கிறார்கள். ‘எல்லி செட்டி லக்க ஏக லக்கா’ என்றபடி பெண் வருணனை வருவதனால் ஆபாசம் என்று இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டால் தமிழுக்கு தேவாரம் கிடைக்காது: திவ்யப்பிரபந்தம் கிடைக்காது.”
“அப்படியா؟ இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறதே!”
“தாங்கள் இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து இருக்கு மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். கிராமாந்தரங்களில் பெண்கள் கச்சு அணியாமல் வருகிறார்கள். காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள் அப்படித்தான் இன்னும் கூட நடமாடுகிறார்கள். அவர்களைக் கண்டு யாரும் தவறாக எண்ணுவது இல்லை. பார்க்கிறவர்களுடைய கண்ணில் உள்ள தவறுதான் அவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது.”
“தாங்கள் சொல்வது உண்மைதான்” என்று ஒருவாறு இறங்கி வந்தார் ஜெயசிங்.
“மற்றொரு விஷயம். தாங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா”” என்று கேட்டார் ஆசிரியப் பெருமான்.
“ஏன் போகாமல்؟ நாள் தவறாமல் கோவிலுக்குப் போவேன்: அரச்சனையும் பண்ணுவேன்” என்றார் ஜெயசிங்.
“அங்கே உள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா؟”
“ஓ! பார்த்திருக்கிறேனே!”
“அங்கேயுள்ள சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் அவற்றைக் கண்டு பக்தர்கள் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அன்று. பல காலமாக இருக்கிற செய்தி. தாங்கள் சொல்கிறபடி திருப்புகழை, காவடிச் சிந்தை, அவற்றில் வருகிற பெண் வருணனைக்காக எரிக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியகளையும். வடமொழி இலக்கியங்களையும் கடலில் கொண்டுபோய்ப் போடவேண்டும்: கோவில்களில் உள்ள விக்கரங்களை எல்லாம் உடைத்தெரிய வேண்டும்.”
“ஐயா, ஐயா! ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்؟ நான் அந்தக் காரியத்தைச் செய்ய உடந்தையாக இருப்பேனா” எனக்கு இந்த விஷயம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் தாங்கள் எனக்கு இந்த உண்மையைச் சொன்னீர்கள். இந்த மாதிரியான விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் நான் எதையும் இனிச் செய்யத் துணியமாட்டேன். தங்களுக்கு மிகவும் நன்றி” என்றார் ஜெயசிங். ஆசிரியர் வீட்டிற்குத் திரும்பும்போது, தம் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார், அந்தப் போலீஸ் அதிகாரி.
அன்புள்ள
பா.மாரியப்பன்