திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்

1,100 views
Skip to first unread message

Dhivakar

unread,
Feb 19, 2011, 5:50:13 AM2/19/11
to மின்தமிழ், rajam
திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்


பிரசாதங்களின் வரலாறு:

திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும். 

1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான்.

கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன். 

முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான்.

திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.

இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை.  திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது.

லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை. வேறு என்னென்ன இந்தக் கல்வெட்டுகளில் பிரசாதங்களாக சொல்லப்பட்டிருந்தது என்பதையும் பார்ப்போம்.

(தொடர்ந்து வரும்)

திவாகர் 

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

rajam

unread,
Feb 19, 2011, 10:29:45 AM2/19/11
to Dhivakar, மின்தமிழ்
தகவலுக்கு மிகவும் நன்றி, திவாகர்!
தொடரும் கருத்துக்களைப் படித்துத் தெரிந்துகொள்ள ஆவல்!
அன்புடன்,
ராஜம்

N. Ganesan

unread,
Feb 19, 2011, 11:14:13 AM2/19/11
to மின்தமிழ்

On Feb 19, 9:29 am, rajam <ra...@earthlink.net> wrote:
> தகவலுக்கு மிகவும்  

> நன்றி, திவாகர்!...
>
> read more »


>
> தொடரும் கருத்துக்களைப்  
> படித்துத் தெரிந்துகொள்ள  
> ஆவல்!
>
> அன்புடன்,
> ராஜம்
>

பலருக்கும் தெரியாத செய்தி ஒன்றை தேவ் ஸார், ..., நான்
பேசியிருக்கிறோம். திருமலை வேங்கடவன் இருகரம் தான்.
சங்கு, சக்கரம் பின்னால் சேர்த்துவைக்கப்படுகிறது.

வரம்தரும் முத்திரை, ஊருஹஸ்தம் (குருவாயூர், பழனி, செந்தூர்,
உடுப்பி, விட்டல், ... எல்லாம் தக்காண மரபு கடி/ஊரு ஹஸ்தம்).

நா. கணேசன்

> > மலைகுனிய நின்றபெருமாள்  - Hide quoted text -
>
> - Show quoted text -

rajam

unread,
Feb 19, 2011, 11:18:34 AM2/19/11
to mint...@googlegroups.com
நன்றி, கணேசன்!

ஆனால், திவாகரிடம் நான்
கேட்டது "சாப்பாட்டு"ப்
பொருள்கள் பற்றி மட்டுமே! :-)
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/
> group/minTamil

N. Kannan

unread,
Feb 19, 2011, 10:20:05 PM2/19/11
to mint...@googlegroups.com
2011/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

> பலருக்கும் தெரியாத செய்தி ஒன்றை தேவ் ஸார், ..., நான்
> பேசியிருக்கிறோம். திருமலை வேங்கடவன் இருகரம் தான்.
> சங்கு, சக்கரம் பின்னால் சேர்த்துவைக்கப்படுகிறது.
>

ஆம்! இது குறித்து திவாகரின் திருமலைத் திருடனிலும் விவரம் வரும்!

ஏனோ வேங்கடவன் தன்னிகரில்லா தனியொரு பொருளாய் அங்கு நிற்கிறார் (அதுதான்
அந்தக் கூட்டம் போலருக்கு!)

‘மாமேகம் சரணம் விரஜ’ எனும் கூற்றுப்படி!

ஆயினும் ஆழ்வார்களுக்கு அதில் அவ்வளவாக உவப்பில்லை. எனவே எம்பெருமானார்
ஏற்பாட்டின் படி திருமஞ்சனத்தின் போது ஸ்ரீவத்ஸம் நீக்கப்படுகின்ற
வேளையில் திருவாய்மொழி சாதிக்க வைக்கிறார். நொடிப்பொழுதும் அகலகில்லேன்
என்பது அம்பாள் ஆக்ஞை அல்லவோ!

க.>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

vallima

unread,
Feb 20, 2011, 12:24:15 AM2/20/11
to மின்தமிழ்
பெருமாள் தொண்டைமான் அரசரிடம் தன் சங்கு சக்கரத்தைக் கொடுத்த
வைத்ததாகவும், பின்னர் ஸ்ரீ ப்ராமனுஜர், உடையவர் அவற்றைப்
பெருமாளிடம் சமர்ப்பித்துவிட்டுச் சென்றதாகவும், அடுத்த நாள் காலை அவை
ஸ்ரீநிவாசனின் இரு தோள்களின் மேல் காட்சி அளித்ததாகவும் கூறப்படுவது?
கல்வெட்டில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆசை.

On Feb 19, 10:20 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/2/20 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

Dhivakar

unread,
Feb 20, 2011, 1:23:03 AM2/20/11
to mint...@googlegroups.com
’ஸ்ரீவைஷ்ணவர்களின் ரட்சை திருமலை’ என்ற ஒரு வாக்கியம் கல்வெட்டாக உள்ளது. உடையர் சொல்ல பதிக்கப்பட்டதாக வைஷ்ணவர்கள் சொல்லியதாக வரலாற்றில் பதிவாகியுள்ளதைத் தவிர சங்கு சக்கரம் பற்றிய ஏனைய குறிப்புகள் அனைத்தும் இலக்கிய ஆதாரங்களே.. 2ஆம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் ஆரம்பிக்க, பதினைந்தாம் நூற்றாண்டி திவ்வியகவியின் பாடலில் முடிவடைகிறது.

சங்கு சக்கரம் பற்றிய கல்வெட்டு ஆதாரம் ஏதும் இல்லை.

திவாகர் 

2011/2/20 vallima <revathi.n...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Feb 20, 2011, 1:50:34 AM2/20/11
to மின்தமிழ்
நண்பர்களே,

இங்கு வக்தா திவாகர் ஐயா, ச்ரோதா ராஜம் அம்மா, வசந விஷயம் ப்ரஸாத
விசேஷங்கள்.

ஒரு காலத்தில் பேச்சு நடந்தது ‘ஊரு ஹஸ்தம்’ பற்றியது;
பிற விஷயங்களைப் பேச வேண்டுமானால் தனி இழை தொடங்கலாம்.
எம்பெருமான் போர உகந்தருளி அமுது செய்த பண்ட வகைகளை அறிந்துகொள்வதில்
அடியேனுக்கும் ஆவல். திவாகர் ஐயா அது குறித்தே தொடர்ந்து கூற வேண்டும் என
வேண்டுகோள்.

வக்தா ச்ரோதா வசநவிஷயம் ப்ரீயதாம் வேங்கடேச:


தேவ்

Subashini Tremmel

unread,
Feb 20, 2011, 2:46:02 AM2/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
சுவாரசியமான தொடர் திரு.திவாகர். இனிப்பாக ஆரம்பித்திருக்கின்றது.
 
உங்கள் குறிப்புக்களைக் காணும் போது லட்டு கல்வெட்டுக்கலில் குறிப்பிடப்படவில்லை என்று கொள்ளலாமா? வடைப்பிடி மனோகரம் அவல் ஆகியவை மட்டும்தான் குறிப்பிடப்படுகின்றன  அல்லவா? லட்டு 20ம் நூற்றாண்டில் தான் பிரசாதமாக அரிமுகப்படுத்தப்பட்ட தகவல் உள்ளதென குறிப்பிட்டுள்ளீர்கள். இது வாய் மொழிச் செய்தியா அல்லது ஏதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
 
-சுபா

2011/2/19 Dhivakar <venkdh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Dhivakar

unread,
Feb 20, 2011, 4:32:54 AM2/20/11
to mint...@googlegroups.com
வடைப்பிடி மனோகரம் அவல் ஆகியவை மட்டும்தான் குறிப்பிடப்படுகின்றன  அல்லவா? 

சுபா,
எல்லாவற்றையும் விவரமாகவே தருகிறேன். அந்தக் குறிப்பிட்ட கல்வெட்டில் இருப்பது கொடுத்துள்ளேன்.. ஏராளமான கல்வெட்டுகள் அனைத்தும் பண்டிகை, பிரசாதம், கட்டளை சம்பந்தப்பட்டவையே.

லட்டு பற்றி அவ்வளவுதான்.. தி. தி.தே ஆவணங்களில் கல்யாணம் அய்யங்கார் லட்டு பற்றியும், ’கொண்டந்த லட்டு’ பிரார்த்தனை 1940 ஆம் ஆண்டில் செய்யப்பட்டதையும் விவரமாகக் கொடுத்துள்ளார்கள். லட்டு கட்டாயப் பிரசாதமாக கல்யாண உற்சவம் செய்பவருக்கு 1943 இல் இருந்து கொடுப்பது ஆரம்பமானதாக தி.தி.தே ஆவணம் சொல்கிறது. அத்துடன் சாதாரணமான குறைந்த அளவில் அதே ஆண்டில் கோவிலில் வரும் பக்தருக்கும் லட்டு பிரசாதமாகத் தந்தனர். அப்போதெல்லாம் கூட்டம் மிக மிகக் குறைவு.  அதே போல சமையலறை வசதியும் அதிகமாக இல்லை. பிரசாதங்களில் லட்டும் உண்டு. அவ்வளவுதான். 

தி


2011/2/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
சுவாரசியமான தொடர் திரு.திவாகர். இனிப்பாக ஆரம்பித்திருக்கின்றது.
 
உங்கள் குறிப்புக்களைக் காணும் போது லட்டு கல்வெட்டுக்கலில் குறிப்பிடப்படவில்லை என்று கொள்ளலாமா? லட்டு 20ம் நூற்றாண்டில் தான் பிரசாதமாக அரிமுகப்படுத்தப்பட்ட தகவல் உள்ளதென குறிப்பிட்டுள்ளீர்கள். இது வாய் மொழிச் செய்தியா அல்லது ஏதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 4:36:01 AM2/20/11
to mint...@googlegroups.com
 அதே போல சமையலறை வசதியும் அதிகமாக இல்லை. பிரசாதங்களில் லட்டும் உண்டு. அவ்வளவுதான்.

ஆனால் அப்போது கொடுக்கப்படும் லட்டுகள் அளவில் மிகப் பெரியதாகவும்
மிகவும் ருசியாகவும் இருக்கும்.இப்போது லட்டு தரமும் அளவும் குறைந்துவிட்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/20 Dhivakar <venkdh...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2011, 10:11:31 AM2/20/11
to மின்தமிழ்

On Feb 20, 4:32 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

>
> லட்டு பற்றி அவ்வளவுதான்.. தி. தி.தே ஆவணங்களில் கல்யாணம் அய்யங்கார் லட்டு
> பற்றியும், ’கொண்டந்த லட்டு’ பிரார்த்தனை 1940 ஆம் ஆண்டில் செய்யப்பட்டதையும்
> விவரமாகக் கொடுத்துள்ளார்கள். லட்டு கட்டாயப் பிரசாதமாக கல்யாண உற்சவம்
> செய்பவருக்கு 1943 இல் இருந்து கொடுப்பது ஆரம்பமானதாக தி.தி.தே ஆவணம்
> சொல்கிறது. அத்துடன் சாதாரணமான குறைந்த அளவில் அதே ஆண்டில் கோவிலில் வரும்
> பக்தருக்கும் லட்டு பிரசாதமாகத் தந்தனர். அப்போதெல்லாம் கூட்டம் மிக மிகக்
> குறைவு.  அதே போல சமையலறை வசதியும் அதிகமாக இல்லை. பிரசாதங்களில் லட்டும்
> உண்டு. அவ்வளவுதான்.

என் உறவினர் ஒருவர் நீரிழிவு நோயாளி. ஒருநாள் காலையில் கோவையில் இருந்து
புறப்பட்டு காரில் பழனிபோய் மலை ஏறினார். மலை ஏறியதும் அவருக்கு தலை நோவு
வந்து படிகட்டில் உடகார்ந்து விட்டார். கீழே இருந்த ஓட்டுநரை அழைத்து
சொல்லி இருக்கிறார். அவரும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து அவரை தேனி
மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பின் அங்கிருந்து கோவை
மெடிக்கல் எனும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கடும்கவனிப்பு பிரிவில்
சில் வாரங்கள் இருந்து குணம் ஆனார்.

என்ன நடந்தது என்று அவரை கேட்டேன். வெறும் வயிற்றில் சாமி கும்பிட
போனேன். சக்கரையின் அளவு குறைந்து இருக்கலாம். ஒரு ஜாங்கிரி வாங்கி
சாப்பிட்டு இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது என்றார்.

ஏழு மலையேறி வருபவர்களுக்கு லட்டு கொடுப்பதன் காரணம் இதுவோ?

Dhivakar

unread,
Feb 20, 2011, 11:37:58 AM2/20/11
to mint...@googlegroups.com
திடீர் நு ராஜா வெளியே வந்து ‘மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று கேட்டதைப் போல உள்ளது வேந்தரே உங்கள் பதிவு.

ஆனாலும் வருகைக்கு மகிழ்ச்சி.. அடிக்கடி வாருங்கள்.

ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் மலைக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?.பழனி, திருப்பதி என்றில்லை.. எங்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம்.  நீரிழிவு நோயுள்ளவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கையில் ஒரு சாக்லேட் வைத்திருக்கவேண்டும் - பாதுக்காப்புக்காக..

தி

2011/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Feb 20, 2011, 11:42:55 AM2/20/11
to mint...@googlegroups.com
அன்பு திவாகர்,
இப்பொழுதுதான் நிங்ஙளின் திருப்பதி லட்டு குறித்த கட்டுரை படித்துமுடித்தேன்
பயனுள்ள கட்டுரை. மீண்டும் வருகிறேன்
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Dhivakar <venkdh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 21 February 2011 00:37:58
Subject: Re: [MinTamil] Re: திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்

திடீர் நு ராஜா வெளியே வந்து ‘மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று கேட்டதைப் போல உள்ளது வேந்தரே உங்கள் பதிவு.

ஆனாலும் வருகைக்கு மகிழ்ச்சி.. அடிக்கடி வாருங்கள்.

ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் மலைக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?.பழனி, திருப்பதி என்றில்லை.. எங்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம்.  நீரிழிவு நோயுள்ளவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கையில் ஒரு சாக்லேட் வைத்திருக்கவேண்டும் - பாதுக்காப்புக்காக..

தி

2011/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


On Feb 20, 4:32 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

>
> லட்டு பற்றி அவ்வளவுதான்.. தி. தி.தே ஆவணங்களில் கல்யாணம் அய்யங்கார் லட்டு
> பற்றியும், ’கொண்டந்த லட்டு’ பிரார்த்தனை 1940 ஆம் ஆண்டில் செய்யப்பட்டதையும்
> விவரமாகக் கொடுத்துள்ளார்கள். லட்டு கட்டாயப் பிரசாதமாக கல்யாண உற்சவம்
> செய்பவருக்கு 1943 இல் இருந்து கொடுப்பது ஆரம்பமானதாக தி.தி.தே ஆவணம்
> சொல்கிறது. அத்துடன் சாதாரணமான குறைந்த அளவில் அதே ஆண்டில் கோவிலில் வரும்
> பக்தருக்கும் லட்டு பிரசாதமாகத் தந்தனர். அப்போதெல்லாம் கூட்டம் மிக மிகக்
> குறைவு.  அதே போல சமையலறை வசதியும் அதிகமாக இல்லை. பிரசாதங்களில் லட்டும்
> உண்டு. அவ்வளவுதான்.






வேந்தன் அரசு

unread,
Feb 20, 2011, 1:42:33 PM2/20/11
to mint...@googlegroups.com


20 பிப்ரவரி, 2011 11:37 am அன்று, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

திடீர் நு ராஜா வெளியே வந்து ‘மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று கேட்டதைப் போல உள்ளது வேந்தரே உங்கள் பதிவு.

ஆனாலும் வருகைக்கு மகிழ்ச்சி.. அடிக்கடி வாருங்கள்.

திவாகர் ஐயா

முரட்டுகுதிரை தனக்குதானே கடிவாளம் போட்டுக்கணும்னு நினைச்சது


--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Dhivakar

unread,
Feb 21, 2011, 5:49:03 AM2/21/11
to மின்தமிழ், rajam
திருமலைப் பிரசாதங்களின் வரலாறு - 2

பிரசாதங்கள் என்பது கோயில்களில் மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட்ட காலம் அவைகள். பிரசாதம் மூலமாக திருமலை ஏறி வரும் அடியார் பசி தீர்க்கவே பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட விஷயங்களுக்காக பலர் நிவந்தங்களை விட்டுச் சென்றுள்ளனர். பிறரும் தம்மைப் போல இப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே கல்லிலும் தாங்கள் செய்த செயலை செதுக்கிவிட்டுச் சென்றார்கள். 

அரசர் முதலியோர் விட்டுச்சென்றுள்ள கல்வெட்டுகளிலிருந்து அவர்கள் பிரசாதத்தைப் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றும். ஏனெனில் தாங்கள் பெரிதாக வழங்கிய நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள், தங்கப் பேலா (ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியரிடையே போட்டி போலும், ஒரு ராணி ஒரு தங்கப்பேலா கொடுத்தாள் என்பதற்காக அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை இன்னொரு ராணி ஓரிரு வருடங்கள் இடைவெளியில் கொடுத்துவிட்டு அந்த இருவரும் கன்னட பாஷையில் கல்லில் பதித்து விட்டுச் சென்றுள்ளனர்) இவற்றின் மீதே இந்த அரசர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளனர். ஆனால் பொதுமக்களோ, வணிகர்களோ, பெரிய தனவந்தர்களோ அப்படி இல்லை. ராஜகுடும்பத்தைத் தவிர்த்து ஏனையோர் வெட்டிய கல்வெட்டுகளின் படி பார்க்கும்போது அந்த ஏனையோர்தான் பிரசாதங்களுக்காக ஏராளமாக காணிக்கையளித்துள்ளனர் என்பது புலப்படும். பசியின் அருமை தெரிந்தவர்கள்.

9ஆம் நூற்றாண்டில் சாமவை எனும் பல்லவ இளவரசிதான் முதன்முதலில் தாம் செய்ததை கல்வெட்டில் ஏற்றிய உத்தமபுத்திரி. இவள் கைராசி அடுத்த 700 ஆண்டுகளில் ஏறத்தாழ அறுநூறு கல்வெட்டுகள் திருமலையில் செதுக்கப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக இவள் வடித்த இரண்டு தமிழ் கல்வெட்டுகளிலும் திருவேங்கடமுடையான் பெயரும், அவனுடைய உற்சவ மூர்த்தியாக வெள்ளியிலே வார்க்கப்பட்ட மணவாளப்பெருமான் பெயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு முறை நான்காயிரம் குழிகள் தனித்தனியாக நிலங்கள் நிவந்தமாக அளித்து, அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் தொகையில் முதன் முதலாக பத்து நாள் உற்சவம் ஏற்பாடு செய்யவும் அவள் கட்டளையாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆக திருமலையில் முதல் பிரும்மோற்சவத்தை பல்லவ இளவரசி சாமவைதான் ஏற்பாடு செய்ததாக இதன் மூலம் உறுதியாகிறது. இவள் பெயரால் உற்சவம் ஏற்பாடு செய்யும் சபைக்குக் கூட சாமவை அல்லது சாம்பவை என அழைக்கப்பட்டது. இந்த உற்சவகாலம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் ஆரம்பித்து வைகுண்ட ஏகாதசியோடு பூர்த்தி ஆகுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளான துவாதசி நாளன்று சுதர்சனருக்கு நீராடல் செய்யப்பட்டு உற்சவம் முடியும். (இந்தக் கல்வெட்டு ஆதாரமாகத்தான் ‘திருமலைத் திருடன்’ நாவலில் கூட மார்கழி மகோற்சவம் சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் கதையின் முக்கிய சாராம்சம் கூட சொல்லப்படும்.) 

லட்டுக்குப் பிறகு எல்லோருக்கும் பிரியமான பிரசாதம், அதுவும் பெருமாள் கோயிலென்றால் அது புளியோதரைதான். இந்தப் பதார்த்தம் எப்போதையிலிருந்து ஆரம்பித்தது என்று ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். 

ஆனால் புளியோதரைக்கு அடிப்படை தேவையான புளி எனும் வார்த்தை திருமலை கல்வெட்டுகளில் இல்லை. அல்லது என் கண்களுக்குத் தென்படவில்லை. ஆனால் 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளில் பிரசாத விஷயங்கள் வருகின்றன. தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை வருகின்றன. புளியோதரையை விட எலுமிச்சை சாதம் செய்வது மிக எளிது. (அப்படியே புளிப்பு ருசி சற்று குறைந்தாலும் பிழிந்த எலுமிச்சை மீது பழியைப் போட்டு மடைப்பள்ளிக்காரர்கள் தப்பித்துவிட சந்தர்ப்பம் உண்டுதான்) 

ஆனால் அடுத்த பதின்மூன்று, பதிநான்காம் நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகளில் பொங்கல் வருகிறது. பொங்கல் எனும் பெயர் வரவில்லையென்றாலும், பாசிப்பருப்பும், அரிசியும், உப்பு, நெய் போன்றவை (இவை நான்கும் சேர்ந்து சமைக்கப்பட்டால் பொங்கல்தானே!) ஏராளமாக கொடையாக கொடுக்கப்பட்டதற்கான கல்வெட்டுகள் உள்ளன. அடுத்து அதிகம் கல்வெட்டுகளை ஆக்கிரமித்திருப்பது பானகம். மலையில் நடந்து செல்லும் பக்தருக்காக, கோயில் நிர்வாகமே (தனத்தார் செலவில் இருந்து) பானகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அரசர் முதற்கொண்டு சாதாரண பொதுமக்கள் வரை தனத்தாருக்கு (temple treasury) பணம் செலுத்தியதற்கு அந்தக் காலத்தில் கல்லிலே உளி கொண்டு எழுதி ரசீதாகக் கொடுத்திருப்பது ஒரு விசேஷம்தான். 

வருடம்: ஆங்கிலம் 1446:

கல் ரசீது பெறுபவர்: எர்ர கம்பய்யத் தேவரின் மகனான பெரியமல்லையத்தேவர்,

தொகை: 1000 பணம்

பானகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக மேற்படியாரால் தனத்தாரிடம் வழங்கப்பட்டது.
 

வருடம்:1451.

பெயர்: துவாரபதி மலையபெருமாள் மகனான பிள்ளைபொறுத்தார் தன் பிறந்தநாளான உத்திரநட்சத்திரத்து நாளில் திருமலை மலைகுனிய நின்றானுக்கு பானக ஆராதனைக்காக, பானகம் பொருள் வாங்க 5000 பணம் தனத்தாரிடம் செலுத்தப்பட்டது.

பானகம் தவிர அடுத்து அதிகமாகப் பேசப்பட்ட பிரசாதம் மனோகரம் எனும் தின்பண்டம்தான். இப்போதெல்லாம் மனோகரம் கோயில் பிரசாதங்களில் நடைமுறையில் இல்லையென்றாலும் இன்னமும் ஆந்திரக் குக்கிராமங்களில் மனோகரம் செய்வதும், விருந்து உபசாரத்தில் அதை வைப்பதும் உண்டுதான். மனோகரம் என்பது அரிசிமாவும், வெல்லப்பாகும் கலந்த உலர்ந்த கலவையை எண்ணெயில் போட்டு (முறுக்கு போல) வறுத்தெடுப்பதுதான். ஆனால் எண்ணெய் பணியாரமாகப் பார்ப்பதற்குத் தெரியாது. மனோகரம் என்றால் அழகானது என்ற பொருள். கோலம் என்றாலும் அழகு என்றுதான் சொல்வார்கள். கோலமாவில் கோலம் போடுவது போல அழகான நெளிவு சுளிவு கொண்டு, பார்ப்பதற்கு எழிலாக இருக்கும் இந்த தின்பண்டம் வெறும் அரிசி மாவும் வெல்லமும் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதற்குத் தேவையான பொருட்களாக, அரிசி, வெல்லம், கடலை (எண்ணெய்க்காக) போன்றவை நிவந்தனமாக ஏராளமான கல்வெட்டில் காணப்படுகிறது. மனோகரம் படையல் செய்வதற்காக எனும் பெயரோடும் சில கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கால லட்டுவின் இடத்தை இந்த மனோகரம்’தான் ஒருகாலத்தில் திருமலையில் பிடித்திருந்ததாகக் கூட சொல்லலாம். கரகரவென பல்லால் கடித்து உண்ண சுவையான ஒரு தின்பண்டம்தான் இது.

தமிழகத்தில் திருமணங்களில் இந்த மனோகரத் தின்பண்டம், (கொஞ்சம் கரகரவென இல்லாமல், மெத்தனமாக இருக்கும், ஆனால் ருசி ஒன்றுதான்) கூம்பு போல செய்யப்பட்ட கூடுகளில் அடைத்து மணமகள் சார்பில் மணமகன் வீட்டாருக்கு சீர் செய்வது பழையகால வழக்கம். பிராம்மணர் இல்லத்துத் திருமணங்களில் ’பருப்புத் தேங்காய்’ எனும் பெயரிட்டு இன்னமும் முந்திரிப்பருப்பு தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், அல்லது இந்த மனோகர தின்பண்டத் தேங்காய்’ என சீர் செய்து எல்லோர் கண்களிலும் ’காண்பித்துக் கொண்டுதான்’ இருக்கிறார்கள். 

மனோகரமான இந்த குறிப்பிட்ட தின்பண்டம் ஆந்திர மக்களிடையே மிகப்பிரபலம். 

அடுத்து வருவது அப்பம். இதுவும் மேற்கண்ட பொருள்களினைக் கொண்டே செய்யப்படுவது. ஆனால் மனோகரத்துக்கு உலர்ந்த கலவை தேவைப்படும். அப்பம் அப்படி செய்யப்படுவதில்லை. மனோகரம் இன்று திருமலைக்கோயில் பிரசாதங்களில் இருந்து மறைந்தாலும் இந்த அப்பம் இன்னும் மறையவில்லை. இன்றும் திருவேங்கடத்தானுக்கு முக்கியப் பிரசாதங்களில் ஒன்றாக அப்பமும் இருந்து வருகிறது. அப்பமும், மனோகரமும் அதிக நாட்கள் இருக்கக்கூடியவை கூட.. மலையேறி திருவேங்கடவனைத் தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அதிக நாள் நீடிக்கக்கூடிய பிரசாதமாக 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததை கல்வெட்டுகள் பேசுகின்றன. 

அடுத்து இந்த பிரசாத விஷயங்களில் கூட சில ஊழல் நடைபெற்றதை ஒரு கல்வெட்டு சுட்டிக் காட்டுகிறது. அதையும் அடுத்துப் பார்ப்போம்.

திவாகர்




> திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்
>
>
> பிரசாதங்களின் வரலாறு - 1:

kalairajan krishnan

unread,
Feb 21, 2011, 8:21:22 AM2/21/11
to mint...@googlegroups.com
ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்பல,

தித்திக்கும் லட்டுப் பிரசாதம் பற்றி தகவல் அருமை,
புளியோதரை இல்லையா? இது ஆச்சரியமாக உள்ளது,

அடுத்து அதிகம் கல்வெட்டுகளை ஆக்கிரமித்திருப்பது பானகம். மலையில் நடந்து
செல்லும் பக்தருக்காக, கோயில் நிர்வாகமே (தனத்தார் செலவில் இருந்து)
பானகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழிபாடு முடிந்த இடத்தில் பிரசாதம் கொடுக்கிறார்களே, அந்த இடத்தில்
பானகமும் கொடுத்தால் என்போன்றோருக்கு நலம் பயக்கும்,

திவாகர் ஐயா அவர்களின் திருவுள்ளத்தைச் சிந்தித்து
திருவேங்கடவனின் திருவருளைச் சிந்தித்து
அன்பன்
கி. காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

karuannam annam

unread,
Feb 21, 2011, 9:48:39 AM2/21/11
to mint...@googlegroups.com
காரைக்குடிப் பகுதிகளில் மனோகரம் என அழைப்பதில்லை. மனகோலம் என்கிறோம். முறுக்கும் மனகோலமும் கலியாணச் சீர்வரிசையில் சிறப்பிடம் பெறுவன. முறுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று முறுக்கு இத்தனை என்றும் மனகோலம் இத்தனை படி பெண்வீட்டார் கொடுக்க வெண்டும் என்றும் முன்னதாகவே ரொக்கம், நகைகள் பேசும்போது பேசிக்கொள்வார்கள். பலகாரத்தைக் கொடுத்துவிட எவர்சில்வர் பாத்திரங்களும் உண்டு. மணமகன் வீட்டார் பெற்ற பலகாரங்களை தங்கள் உறவினருக்கு அளிப்பார்கள். இன்று இவற்றுக்கும் ரொக்கம் பெறுகிறார்கள்.
 
மனோகரம் இடும் கோலம் போல இருக்கும் என்று திரு திவாகர் எழுதியுள்ளது எங்கள் பக்க மனகோலத்தை நினைவுபடு்த்திவிட்டது.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Feb 21, 2011, 10:50:14 AM2/21/11
to mint...@googlegroups.com
முறுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று முறுக்கு இத்தனை என்றும் மனகோலம் இத்தனை படி பெண்வீட்டார் கொடுக்க வெண்டும் 

கைமுறுக்குதானே சொல்கிறீர்கள்? 
நானும் கேள்விப்பட்டுள்ளேன்.  
இது எல்லா கல்யாணவிசேஷங்களுக்கும் பொதுவானதுதான். சீர்வரிசை விஷயங்களில் மக்களின் ‘மன கோலம்’ என்று மாறுமோ???


2011/2/21 karuannam annam <karu...@gmail.com>
காரைக்குடிப் பகுதிகளில் மனோகரம் என அழைப்பதில்லை. மனகோலம் என்கிறோம். முறுக்கும் மனகோலமும் கலியாணச் சீர்வரிசையில் சிறப்பிடம் பெறுவன. என்றும் முன்னதாகவே ரொக்கம், நகைகள் பேசும்போது பேசிக்கொள்வார்கள். பலகாரத்தைக் கொடுத்துவிட எவர்சில்வர் பாத்திரங்களும் உண்டு. மணமகன் வீட்டார் பெற்ற பலகாரங்களை தங்கள் உறவினருக்கு அளிப்பார்கள். இன்று இவற்றுக்கும் ரொக்கம் பெறுகிறார்கள்.

Dhivakar

unread,
Feb 21, 2011, 10:45:34 AM2/21/11
to mint...@googlegroups.com
காளை ராஜன் அவர்களின் அன்புச் சொற்களுக்கு நன்றி!

2011/2/21 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Feb 21, 2011, 11:46:59 AM2/21/11
to mint...@googlegroups.com
உங்கள் ஆசிகள் அடியேன் பாக்கியம்.

ராஜம் அம்மா ‘ஸ்ட்ரிக்ட்டாக’ சாப்பாடு மட்டும்தான் எனக் கேட்டிருந்தார்கள். இருந்தாலும் சாப்போடோடு இணைந்த இதர இத்தியாதிகள், அதுவும் இண்ட்ரெஸ்ட்டான இத்தியாதிகள் தரலாம் என நினைக்கின்றேன்.

போகும் பாதை மங்கலாய்
கண்முன்னே தெரிந்தாலும்
பயணம் எதுவரையோ, 
அவனே அறிவான்..

திவாகர்

2011/2/21 Innamburan Innamburan <innam...@gmail.com>
அன்பின் திவாகர்,
இதுவே திருமலையின் வரலாற்று இழையாக இருக்கட்டுமே. பக்ஷணங்களுடன், பதியும், பரவசமும் இருக்கட்டுமே.
என்னிடம் இருந்த திரு. ரமேஷ் ஐ.ஏ.எஸ். அவர்களின் (அவர் அந்தக்காலத்து மனிதர். அமரர் ஆகிவிட்டார். அன்பார்ந்த நண்பனும், ஆசானும் எனக்கு.) ஆதாரபூர்வமான திருமலை வரலாற்று நூல் ஒரு மின் தமிழர் கையில் சேர்ந்து விட்டது. உங்களுக்கு அந்த நூல் எளிதில் கிடைக்கும். அதையும் இணைத்து எழுதவும்.

அன்புடன்,
இன்னம்பூரான்
21 02 2011


2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 21, 2011, 11:34:00 AM2/21/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அன்பின் திவாகர்,
இதுவே திருமலையின் வரலாற்று இழையாக இருக்கட்டுமே. பக்ஷணங்களுடன், பதியும், பரவசமும் இருக்கட்டுமே.
என்னிடம் இருந்த திரு. ரமேஷ் ஐ.ஏ.எஸ். அவர்களின் (அவர் அந்தக்காலத்து மனிதர். அமரர் ஆகிவிட்டார். அன்பார்ந்த நண்பனும், ஆசானும் எனக்கு.) ஆதாரபூர்வமான திருமலை வரலாற்று நூல் ஒரு மின் தமிழர் கையில் சேர்ந்து விட்டது. உங்களுக்கு அந்த நூல் எளிதில் கிடைக்கும். அதையும் இணைத்து எழுதவும்.

அன்புடன்,
இன்னம்பூரான்
21 02 2011

2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>
முறுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று முறுக்கு இத்தனை என்றும் மனகோலம் இத்தனை படி பெண்வீட்டார் கொடுக்க வெண்டும் 

rajam

unread,
Feb 21, 2011, 12:09:27 PM2/21/11
to mint...@googlegroups.com, Dhivakar V

ராஜம் அம்மா ‘ஸ்ட்ரிக்ட்டாக’ சாப்பாடு மட்டும்தான் எனக் கேட்டிருந்தார்கள். இருந்தாலும் சாப்போடோடு இணைந்த இதர இத்தியாதிகள், அதுவும் இண்ட்ரெஸ்ட்டான இத்தியாதிகள் தரலாம் என நினைக்கின்றேன்.


எனக்குத் தடையில்லை, திவாகர்! எனக்கு வேண்டிய "சாப்பாட்டை"மட்டும் நான் எடுத்துச் சுவைக்கிறேன், என்ன! :-)
(நடுவில் வேறு பல விவாதங்களில் இழை பிரிந்துவிடுமோ என்ற கவலைதான், வேறென்ன?)
ஒரு காலத்தில் ... திருப்பதி கல்வெட்டுக்களைப் படித்துப் புரிந்துகொள்ள ஓர் அமெரிக்க அம்மையாருக்கு உதவினேன். அப்போதுதான் பல புதிய செய்திகள் அங்கே இருப்பது தெரியவந்தது. அதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவும், விரும்புகிறவர்களுக்குப் புதிதாகத் தெரிவிக்கலாமே என்ற ஆசையுடனும் அப்படிக் கேட்டேன்!
அருமையான செய்திகள் தருகிறீர்கள். மிகவும் நன்றி!
அன்புடன்,
ராஜம்

Tthamizth Tthenee

unread,
Feb 21, 2011, 12:39:02 PM2/21/11
to mint...@googlegroups.com
திருப்பதியில் ப்ரசாதங்களை அதாவது

புளியோதரை, வெண்பொங்கல், தயிர்சாதம் போன்றவற்றை முன்பெல்லாம் பெரிய பெரிய உடைந்த பானையின் சில்லுகளில் (அதுவே பெரிய பாத்திரம் போல் இருக்கும்) அதில் கொடுப்பார்கள்

திருப்பதியில் பரகால மடத்தின் தலைமை பீடத்தில் இருப்பவர் என்னுடைய ஒன்று விட்ட சகோதரர்
தேசிகன் என்பவர். அவர் எங்களை கோயிலினுள் அழைத்துச்சென்று வேங்கடவனின் அருகே நிற்கவைத்து தரிசம் செய்வித்து வெளியே கூட்டிவந்து மடைப்பளியிலிருந்து ப்ரசாதம் கொண்டுவந்து தருவார்.அவர் அப்ப்டி ப்ரசாதம் கொண்டு வந்து தரும் பாத்திரம்தான் உடைந்த பானையின் சில்லுகள்

பானையில் ப்ரசாதம் வைத்து நைவேத்தியம் செய்வதன் ஐதீகம் ஒன்று உண்டு. (திரு திவாகர் அறிவார்).

காரணம் பானையில் செய்யும் நிவேதனங்கள் தோஷமில்லாதவை, அதனால் ஒவ்வொரு நாளும் வேங்கடவனுக்கு பானையில் நிவேதங்கனளை வைத்து நைவேத்தியம் செய்து விட்டு அந்த நிவேதனங்களை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றுவர். அதன் பிறகு அன்றே அந்தப் பானை  உடைக்கப்படும், மறுநாள் வேறு ஒரு புதுப் பானையில் செய்வார்கள். தினமும் வேங்கடவனுக்கு  புதுப் பானைகளிதான் நைவேத்தியம் தயாராகும்.

அன்புடன்
தமிழ்த்தேனீ.



2011/2/21 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Feb 21, 2011, 4:02:15 PM2/21/11
to mint...@googlegroups.com, Dhivakar V

கைமுறுக்குதானே சொல்கிறீர்கள்? 


இந்த "முறுக்கு" என்ன பாடு பட்டிருக்கிறது!

அச்சு வழியாகப் "பிழிவது" "முறுக்கு" இல்லை -- அது "தேன் குழல்." அச்சு வழியாகப் பிழிவதை நம் காலக் குழந்தைகள் சும்மா ... "முறுக்கு" என்று சொல்லப்போய் ... "ஒரிஜினல்" முறுக்குக்கு ... "கை முறுக்கு" என்று அடைமொழி கொடுத்துச் சொல்லவேண்டி வந்ததே, என்ன கொடுமை!
இனியாவது நம் குழந்தைகள் "முறுக்கு" "தேன் குழல்" இரண்டுக்கும் நடுவே இருக்கிற வேறுபாட்டை உணர்ந்து ... சரியான பெயர்களைப் பயன்படுத்தினால் நல்லது.
நானும் காரைக்குடித் திருமண வீடுகளின் சீர்களைக் கண்டும் பெற்றும் சுவைத்திருக்கிறேன்!

Geetha Sambasivam

unread,
Feb 21, 2011, 9:32:31 PM2/21/11
to mint...@googlegroups.com
அட?? இந்த இழையை இப்போத் தான் பார்க்கிறேன். படிச்சுட்டு வரேன்.

2011/2/19 Dhivakar <venkdh...@gmail.com>
திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்


karuannam annam

unread,
Feb 22, 2011, 4:57:16 AM2/22/11
to mint...@googlegroups.com
பிரசாதங்கள் இழையில் திருமிகு கீதா கலந்து கொண்டால் சுவை கூடும்.
முறுக்கு, சீடை நிவேத்தியம் உண்டா திரு திவாகர்.
திருமிகு ராஜம் குறித்துள்ள தேன்குழல் சரியான முறையில் வந்தால் தேன் தான். கை சுற்று முறுக்கு தவிர மகிழம்பூ முறுக்கு, பிரண்டை முறுக்கு என்பனவும் சுவைத்துள்ளேன். சீப்புச் சீடைக்கு இணையில்லை. நண்பர்கள் திருமிகு மீனா, ராஜம் அம்மா, கீதாம்மா தனி இழையே ஆரம்பிக்கலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2011/2/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

kalairajan krishnan

unread,
Feb 22, 2011, 5:34:11 AM2/22/11
to mint...@googlegroups.com
தேன்குழல் சரியான முறையில் வந்தால் தேன் தான்
அதுவும் முக்கால் வேக்காட்டில் (நூடுல்ஸ் பதத்தில்) எடுத்துச்
சாப்பிட்டால் திகட்டாத சுவையோ சுவை

Geetha Sambasivam

unread,
Feb 22, 2011, 6:01:48 AM2/22/11
to mint...@googlegroups.com
பிரசாதங்கள் இழையை இன்னமும் பார்க்கலைனு நினைக்கிறேன்.  தேடிப் பார்க்கிறேன்.

2011/2/22 karuannam annam <karu...@gmail.com>
பிரசாதங்கள் இழையில் திருமிகு கீதா கலந்து கொண்டால் சுவை கூடும்.
முறுக்கு, சீடை நிவேத்தியம் உண்டா திரு திவாகர்.
திருமிகு ராஜம் குறித்துள்ள தேன்குழல் சரியான முறையில் வந்தால் தேன் தான். கை சுற்று முறுக்கு தவிர மகிழம்பூ முறுக்கு, பிரண்டை முறுக்கு என்பனவும் சுவைத்துள்ளேன். சீப்புச் சீடைக்கு இணையில்லை. நண்பர்கள் திருமிகு மீனா, ராஜம் அம்மா, கீதாம்மா தனி இழையே ஆரம்பிக்கலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


Kamala Devi

unread,
Feb 22, 2011, 6:07:01 AM2/22/11
to mint...@googlegroups.com
கீதா,
ஒரு உதவி தேவை,
தமிழில் ரசம்வாங்கி என்று ஒரு சமையல் உண்டா?
எனில் அது என்ன ? சொல்லமுடியுமா?
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 22 February 2011 19:01:48
Subject: Re: [MinTamil] திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்
--

Geetha Sambasivam

unread,
Feb 22, 2011, 6:01:08 AM2/22/11
to mint...@googlegroups.com
ஏற்கெனவே நளபாகம் இழையில் கை முறுக்கு, சீடை போன்றவற்றின் செய்முறை எழுதி அதை மரபுவிக்கியிலும் பதிந்திருக்கேன்.  சுட்டி தேடித் தரேன்.  சிலது எழுதி வைத்துள்ளேன்.  போடணும்.  மின்சாரமும், இணையமும் மாற்றி மாற்றிப் படுத்தல்.  போடுவதில் தாமதம்! :(

2011/2/22 karuannam annam <karu...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 22, 2011, 6:32:30 AM2/22/11
to mint...@googlegroups.com
திவாகர் ஆரம்பிச்ச புதிய இழையில் பதில் கொடுத்திருக்கேன் கமலம். 

2011/2/22 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
கீதா,
ஒரு உதவி தேவை,
தமிழில் ரசம்வாங்கி என்று ஒரு சமையல் உண்டா?
எனில் அது என்ன ? சொல்லமுடியுமா?


Dhivakar

unread,
Feb 23, 2011, 2:49:37 AM2/23/11
to மின்தமிழ், rajam
திருமலைப் பிரசாதங்களின் வரலாறு - 3 

ராஜராஜசோழன் காலத்து அரசு என்பதுதான் மொத்த தமிழகத்துக்கு ஏன் இந்தியாவின் தென்னகத்துக்கே பொற்காலம் என்றே சொல்லலாம். அவன் காலத்தில்தான் ஏகப்பட்ட கல்வெட்டுகள் கணக்கில்லாமல் காணப்படுகின்றன. அரசாங்கம், நிர்வாகம், கொடை, கோயில், நீதி, நியாயம், தேர்தல்,  தண்டனை என எத்தனையோ விஷயங்களில் இந்தக் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு கல்வெட்டும் ஒரு நிகழ்வை நமக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே போகும். இவையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து பார்த்தோமென்றால் எப்பேர்ப்பட்ட ஒரு அரசனை நாம் தமிழினத்தில் பெற்றிருக்கிறோம் என்ற பெருமிதம் உண்டாகும். அவன் பிள்ளை ராஜேந்திர சோழனும் தந்தைக்கு ஒரு மாத்திரை குறைவில்லை. 

இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு திருமலைக் கோயில் பூசைக்காக – விளக்கேற்றவும்  மற்றும் பிரசாதங்கள் செய்யவும் ராஜராஜன் காலத்தில் தனத்தாருக்காக நிலங்கள் நிவந்தமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில வருடங்கள் கழித்துப் பார்த்தபோது, இந்த நிலவருவாய் திருமலைக் கோயில் பூசைக்காகவோ, பிரசாதங்களுக்காகவோ செலவிடப்படவில்லை. இது மிகப் பெரிய ஊழலாகக் கருதப்பட்டு அப்போதைய மன்னன் ராஜேந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தக் காலத்திலும் இப்போதைய நடைமுறையைப் போலவே ஒரு விசாரணைக் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்நாட்களில் விசாரணைக் கமிட்டி என்றாலே அது கண் துடைப்பு நாடகம் என்ற உண்மை மக்களுக்கு விளங்கும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட விசாரணக் கமிட்டி என்ன சொல்கிறது என்பதை இந்தக் கல்வெட்டு மூலம் சுருக்கமாகப் பார்ப்போம். 


மன்னர்: ராஜேந்திர சோழச் சக்கரவர்த்தி

காலம்: கி.பி. 1019.(மன்னரின் ஏழாம் ஆண்டு ஆட்சிக் காலம்)

செதுக்கப்பட்ட இடம்: திருமலைக் கோயிலில் முதல் பிரகாரத்து வடக்குச் சுவர் 

விஷயம்: ராஜேந்திர சக்கரவர்த்தியின் சார்பில் கொற்றமங்கல உடையான் தலைமையில்  விசாரணைக்காக வந்த குழு திருமலைக் கோயிலில் நிவந்தங்கள் மூலம் கிடைத்த வருவாய், கோயிலின் நித்ய பூசைக்காகவும் பிரசாதங்களுக்காகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி செலவிடப்படவில்லை என்பதை தகுந்த விசாரணை மூலம் கண்டுபிடித்துள்ளது. கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். இந்த ஒழுங்கீனம் இனியும் நடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், இதுவரை நடந்த ஒழுங்கீனங்கள் மூலம் கிடைத்த அத்தனை பணத்தையும் ஒழுங்கீனம் செய்தவர்களிடமிருந்து (முக்கியமாக திருமுண்டிய சபையிடமிருந்து) கைப்பற்றப்பட்டு, தனத்தாரிடம் மறுபடியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை கோயிலுக்கு விளக்கேற்றவும், ஏனைய பூசை விஷயங்களுக்கும் செலவிட உத்தரவிடப்பட்டது.

 

ஆக விசாரிக்கவந்த குழுவே தீர விசாரித்து அங்கேயே தீர்ப்பையும் வழங்கிவிட்டதை இந்தக் கல்வெட்டு மூலம் அறியலாம். 

சரி, கீழ்க்கண்ட அளவில் ஒரு பட்டியல் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. இதனைச் சற்று பார்ப்போம். இந்த அளவையில் எப்படிப்பட்ட பிரசாதங்கள் செய்யமுடியும் என்பதினை எளிதாக உணர்ந்தாலும் எத்தனை பேருக்காக சமைக்கப்பட்டிருக்கிறதோ என்பதையும் கவனிக்கவேண்டும். ஏனெனில் இந்த அளவைகள் ஒரு குறிப்பிட்ட தினத்துக்காக மட்டுமே. 

153 மரக்கால் அரிசி (8 படி = ஒரு மரக்கால்)
506 நாழி நெய் (ஒரு நாழி என்பது 1.3 லிட்டர்)
12660 பலம் வெல்லம்,
14 நாழி மிளகு,
24 மரக்கால் பச்சை பருப்பு
30 மரக்கால் கடலைப் பருப்பு
30 மரக்கால் கோதுமை
67 மரக்கால் நெல்
100 நாழி: பால்
5 நாழி: தேன்

திருக்கை விளக்கம் (தட்சிணை அல்லது செய்கூலி) 896-1/4 பணம் 

இவை அனைத்தும், அதிரசம், வெல்லப்பொங்கல், வெண்பொங்கல் செய்வதற்காக சாளுவ நரசிங்கராயாரால் 1473 ஆம் ஆண்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது திருவேங்கடமுடையானுக்கு நிவேதனம் செய்ய நிவந்தமாக அருளப்பட்டது. கோதுமை எந்தப் பதார்த்தம் செய்வதற்காக என்பது குறிப்பிடப்படவில்லை.  

உற்சவங்கள் போதுதான் அடியவர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடமுடையானோ உயரத்தே மலை மீது கோயில் கொண்டவன். கஷ்டப்பட்டு மலை  ஏறி வரும் அடியவர் கூட்டம், பொதுவாக இந்த உற்சவ கால கட்டத்தில் சாப்பிடுவதற்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் அரசர்கள் மிகவும் சிரத்தையுடன் இருந்தார்கள். உற்சவகாலங்களில் அன்னதானம் என்பது மிகப் பெரிய புண்ணிய காரியமாக பழங்காலத்திலிருந்து நம்பப்பட்டு செயல்பட்டு வந்தாலும், இந்த அன்னதானமானது இன்னொரு வகையில் (பொதுவாக பசியால் வாடும் )ஏழைகளின் பசியை சில நாட்களாவது தீர்க்கும் எனப் பார்க்கும்போது அன்னதானத்தின் உயர்வை நம்மால் உணரமுடியும். இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டில் திருமலையில் வருடத்துக்கு ஒருமுறையாக மார்கழிமாதத்தில் பத்தே நாட்கள் நடைபெற்ற உந்த உற்சவம், மெல்ல மெல்ல விரிவடைந்து, அடுத்த 500, 600 ஆண்டுகளில் வருடத்துக்கு பதினோறு மாதங்களாக நடந்து வந்திருக்கிறது. 

முதலில் குறிப்பிட்ட மார்கழி மாதத்தைத் தவிர ஏனைய தமிழாண்டுகள் பதினொன்றிலும் இந்த உற்சாக உற்சவங்களைக் கல்வெட்டுகள் விவரித்துக் கொண்டே வருகின்றன. அவற்றோடு பிரசாதங்களுக்குத் தேவையான பொருள்களும் அடக்கம். சிற்சில உற்சவக் குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.  

திவாகர்

2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>

kalairajan krishnan

unread,
Feb 23, 2011, 3:27:27 AM2/23/11
to mint...@googlegroups.com
ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம் பல,

திருவேங்கடம் செல்லும் போதெல்லாம் கல்வெட்டுக்களைப் பார்த்துப்
பார்த்து, இதில் என்ன உள்ளதோ? அறியமுடியவில்லையே என ஆதங்கப்படுவேன்,

எனது மனக்குறையைத் தீர்க்கும் வகையில் தங்களது இந்த இழை உள்ளது,

நன்றிகள் பல,
அன்பன்
கி.காளைராசன்

karuannam annam

unread,
Feb 23, 2011, 4:08:36 AM2/23/11
to mint...@googlegroups.com
திருமுண்டிய சபை என்ற சபையின் விளக்கம் என்ன
அன்புடன்
சொ.வி

2011/2/23 Dhivakar <venkdh...@gmail.com>

Kamala Devi

unread,
Feb 23, 2011, 5:34:00 AM2/23/11
to mint...@googlegroups.com
திவாகர்,
மிகவும் பயனுள்ள கட்டுரை இது. தொடருங்கள்,
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Dhivakar <venkdh...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>; rajam <ra...@earthlink.net>
Sent: Wednesday, 23 February 2011 15:49:37
Subject: [MinTamil] Re: திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்

Dhivakar

unread,
Feb 23, 2011, 6:49:20 AM2/23/11
to mint...@googlegroups.com
திருமுண்டிய சபை என்ற சபையின் விளக்கம் என்ன
அன்புடன்
சொ.வி

சாது சுப்பிரமணிய சாஸ்திரி எடிட் செய்த தி.தே. பொஸ்தகத்தில் இருக்கும் விவரம் அது. திரு நாகசாமி அவர்களிடம் கேட்டு பதில் சொல்கிறேன். ஒருவேளை திருமந்திரசபையாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தச் சபையினர் பொறுப்பில் நிலங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என அறிகிறோம்.

தி
2011/2/23 karuannam annam <karu...@gmail.com>

rajam

unread,
Feb 23, 2011, 11:20:18 AM2/23/11
to Dhivakar, மின்தமிழ்
நன்றி, திவாகர்!
1. திரு சொ. வி. ஐயா கேட்டதுபோலவே எனக்கும் கேள்வி -- "திருமுண்டிய சபை" என்பது எதைக் குறிக்கிறது? 
இறைவன் "திருமுன்" ( == "சந்நிதியின் முன்னால்") "முண்டிய" ( == "கூடிய" ?) "அணுக்கத் தொண்டர்"? 
2. அப்புறம் ... தமிழக உணவுப் பொருள்களில் "கோதுமை" சேர்ப்பது பற்றி இங்கேதான் முதல் முதலாகப் பார்க்கிறேன். வடக்கத்தி வழக்கமும் தெக்கத்து வழக்கமும் இணைகிறதுபோல!
"கோதுமை"க்கு என்ன சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? சொல்லுவீர்களா? ("கோதுமை" என்றா? "கோதும்பை" என்றா? "கோதும" என்றா?)
அன்புடன்,
ராஜம்


Dhivakar

unread,
Feb 24, 2011, 6:53:26 AM2/24/11
to மின்தமிழ், rajam
 திருமலைப் பிரசாதங்களின் வரலாறு - 4 (நிறைவுப் பகுதி)

முதலில் மார்கழிமாதத்தில் வரும் சுக்லபட்ச வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் நடைபெற்ற உற்சவமானது பிற்பாடு பிரம்மோற்சவமாகப் பேசப்பட்டது. பிரும்மா திருவேங்கடவனுக்கு எடுத்த விழாவாகக் கருதப்பட்டு பிரும்மோத்சவம் எனும் பெயரும் கொடுக்கப்பட்டது 1491 ஆம் ஆண்டில்தான். 

இந்தக் காலகட்டத்தைப் பற்றிய முக்கியமான விஷயம் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது 1460 ஆம் ஆண்டிலிருந்து விஜயநகரசாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த சாளுவ நரசிம்ம மகராஜா என்பவரைப் பற்றியும் அறியவேண்டும். இவரின் இயற்பெயர் செல்லப்பர் எனும் தமிழ்ப்பெயராகும். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் (தற்சமயம் லண்டனில் ஓய்வு வாழ்க்கை வாழ்ந்து வரும்) பர்டன் ஸ்டீய்ன் இவரை தமிழ்பிராம்மணர் என்கிறார். இவர்தாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை சீரமைத்து பெரிய கோபுரத்தையும் கட்டியது. இவரின் தலைநகரம் திருப்பதியின் தென்னடிவாரப் பகுதியான சந்திரகிரியாகும். இப்போதும் அங்கே பாழடைந்த கோட்டையைப் (திருப்பதி-பங்களூரு நெடுஞ்சாலையில்) பார்க்கலாம். பத்து லட்சம் காலாட்படை கொண்ட இவரது (பர்டன் ஸ்டீய்ன்) பெரும்படைக்கு அஞ்சி பல சிற்றரசர்கள் தாமாகவே இவர் அடி பணிந்ததாக எழுதுகிறார். இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தின் தென்பகுதி, ஆந்திரத்தில் மூன்றில் இரண்டு பகுதி, தெற்கு ஒரிஸ்ஸா போன்றவை இவர் ஆதிக்கத்தில் இருந்தன. பல தென்னகக் கோயில்கள் இவர் காலத்தில் புதிப்பிக்கப்பட்டன. 

இவருடைய குருவின் பெயர் கந்தாடை மணவாள ஐயங்கார், வைணவ உலகில் மிகவும் போற்றப்படும் ஆச்சாரியார். இன்னொரு நண்பர் அன்னமய்யா கீர்த்தனைகள் எனும் புகழ்பெற்ற திருவேங்கடவன் தெலுங்குப் பாடல்களைப் பாடிய அன்னமாச்சாரியார். (இவரை சக்கரவர்த்தியாகப் பாடியிருக்கிறார் அன்னமய்யா. அத்தோடு அன்னமய்யாவுக்கும் நரசிம்மருக்கும் இடையே இருந்த நட்பு ஆந்திரத்தில் கதையாகப் பேசப்பட்டது, பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது) சாளுவ நரசிம்மா திருமலைக் கோயிலுக்கு என எழுதிவைத்த கல்வெட்டுகள் எல்லா அரசர்களையும் விட அதிகம். இவர் சீடரான ஸ்ரீகிருஷ்ணதேவராயரை விட திருமலைக்கு அதிக சேவைகள் இவர் செய்துள்ளார். இதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு ஆச்சாரியர்களுமே காரணம்.  

சாளுவநரசிம்மரின் விருப்பப்படி பண்டிதர்களின் உதவியோடு திருவேங்கடத்தான் புராணமான ’திருவேங்கடமகாத்யம்’ 1491 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்றைய திருவேங்கடத்தான் கோயில் புராணக் கதையான பத்மாவதி கல்யாணம், குபேரனுக்குக் கடன் பட்டது போன்றவையும் இந்த ‘திருவேங்கடமகாத்யத்தில்’ சொல்லப்பட்டதுதான். இந்தப் புராணக் கருத்துக்களையும் மக்களிடையே பரவலாக்க உத்தரவிட்டதற்கான ஒரு கல்வெட்டும் அதற்கு தேவைப்படும் சில நிவந்தங்களும் கீழ்திருப்பதி கோவிந்தராஜனின் கோயிலில் இருக்கிறது. இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயர் (துளுவவம்சம், கிருஷ்ணதேவராயரின் தந்தை) சாளுவ நரசிம்மரின் இந்த ஏற்பாட்டை மிக விரிவாகச் செய்ததற்கும் கல்வெட்டுகள் மலைக் கோவிலிலேயே உள்ளன. 

இந்தப் புராணக் கதை வெளியான பிறகுதான் வைகானஸ விதிப்படி முறையான ஆகமவிதிகளை திருமலைக் கோயிலில் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்லலாம். ஆகம விதிகளின்படி முறையான வழிபாடுகளும் ஆரம்பித்தன. முதலில் ஸ்ரீனிவாஸ ஸகர்ஸநாமம் எழுதப்பட்டு ஓதப்பட்டு அர்ச்சனையை ஆரம்பித்ததும் 1491 ஆம் வருடம்தான் என்றொரு கல்வெட்டு சொல்கிறது. இந்த அர்ச்சனையைப் பற்றிய இன்னொரு கல்வெட்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது 1517 ஆம் ஆண்டும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. 

ஆண்டு: 1517,

காலம்: ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் 8ஆம் ஆண்டு.

விஷயம்: ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பிறகு பிரசாதமாக நான்கு நாழி நெய், தேவைப்படும் அரிசி, பச்சைப் பருப்பு, உப்பு, மிளகு, தயிர் போன்றவை முறையே பயன்படுத்திக் கொள்ள 5000 குழி நிலங்கள் நிவந்தனமாக திருமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை சூர்யனும் சந்திரனும் உள்ளவரை ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாமம் பூஜைக்குப் பிறகு பிரசாத செலவுகளுக்காக பயன்படுத்தவேண்டும். 

இன்றும் கூட அதிகாலை தரிசனம் செய்து வருவோருக்கு பொங்கல், தயிர்சாதம் போன்றவை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல அரசனின் கோரிக்கை இத்தனை நாட்களாகப் பின்பற்று வருகிறது. இனியும் நீடிக்கும். 

10 லிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை மார்கழியில் நடந்து வந்த பிரும்மோற்சவம் என்று காலத்தால் மாற்றம் செய்யப்பட்ட விழாக்காலத்தை விவரித்தோம் அல்லவா.. இதன் மத்தியில் உற்சவம் பற்றி 1230 ஆம் ஆண்டு ஒரே ஒரு கல்வெட்டு அன்ன ஊஞ்சல் (ஹம்ஸ ஊஞ்சல்) திருநாளை விமரிசையாகக் கொண்டாடியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. யார் இந்தக் கல்லை செதுக்கினர் அல்லது யார் இந்த மன்னர் என்ற விவரங்கள் இல்லை. கல்வெட்டு இன்றைய சமையல்கட்டின் தெற்கு வாசல் சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. அடுத்து 1250 ஆம் ஆண்டில் திருமலை வந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் கோயில் கருவறைக் கோபுரத்துக்கு முதன்முதலாக பொன் வேய்ந்த விஷயத்தையும் கோயில் பிரகாரச் சுவரில் மிகப் பெரிதாகப் பொறித்துள்ளான். (பின்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரும் தம் ஆட்சிக் காலத்தில் கருவறைக் கோபுரத்துக்குப் பொன் வேய்ந்துள்ளான்) 

1308 ஆம் ஆண்டில் கைசிக ஏகாதசியை ஐந்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடியதாகவும் 1360ஆம் ஆண்டு முதல் உற்சவங்களின் பொற்காலம் ஆரம்பமானதாக கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். 1360ஆம் ஆண்டில் நடைபெற்ற கோடை கால உற்சவத்தை வசந்தோற்சவமாக மாற்றிக் கொண்டாடிய செய்தியையும் கல்வெட்டில் பொறித்துள்ளார்கள்.

காலம்: 1360
மன்னர்: எர்ரமஞ்சி பெரிய பெம்ம நாயகர்.
விஷயம்: ஐந்துநாள் கோடை வசந்தோற்சவத் திருவிழாவுக்காக
575 சீர் அரிசி
289 வீசை நெய்
125 வீசை பச்சைப் பருப்பு
270 வீசை வெல்லம்
587 வீசை கடலை எண்ணெய்.
பொருளாகக் கொடுக்கப்பட்டது. 

நெய்யளவையும் எண்ணெய் அளவையும் வீசை அளவு கொண்டே பொறித்துள்ளார்கள். இதற்குப் பின் வந்த உணவுப்பொருட்கள் கற்களில் நெய் நாழி அளவில் பொறித்திருப்பது இங்கே கவனிக்கப்படவேண்டும்.இரண்டாவது இந்தக் கல்லைச் செதுக்கக் காரணமான நாயகர் பற்றியும் சொல்லவேண்டும்,

எர்ரமஞ்சி பெரிய பெம்ம நாயகர்தான் மதுரை சுல்தானின் 38 வருட ஆட்சிக் காலத்தை, கிபி.1360 ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவந்தவர். தென்னகப்பகுதிகளில் வட இந்திய சுல்தான்களின் பிரதிநிதியையும், சுல்தான் படைகளையும் அழித்தவர். இந்த வெற்றியின் காணிக்கையாகவே இந்தக் கல்வெட்டுப் பதித்திருக்கிறார் என்று திருப்பதி சரித்திரம் எழுதிய டி,கே, வீரராகவர் தன் புத்தகத்தில் பதிப்பித்திருக்கிறார் (நன்றி – சப்தகிரி).

1464ஆம் ஆண்டிலிருந்து உற்சவத்துக்கான கல்வெட்டுகள் ஏராளமாகக் காணப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாத உற்சவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனோ பழைய மார்கழி மாத உற்சவத்தைப் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லை. போகப்போக மார்கழி தவிர்த்து ஏனைய அனைத்துத் தமிழ் மாதங்களிலும் பிரும்மோற்சவம் நடைபெற்றதாக கல்வெட்டுகள் உள்ளன. என்னென்ன வாகனங்கள் என்ற விவரமும், முதன் முதலாக கருட வாகன உற்சவத்தையும் வீதிஉலா பற்றியும் கல்வெட்டுகள் பேசுகின்றன. 

திருமலையின் கோயில் உள்ளே செல்லவும் திருவேங்கடவனைத் தொட்டுப் பார்க்கவும் அரசனுக்கு அனுமதி உண்டு. ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் தம்பி துளுவ அச்சுதராயர் 1529 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அச்சுதராயர், ஆங்கிலக் கணக்குப்படி, ஜனவரி மாதம் 31 ஆம்தேதி. 1533 ஆம் ஆண்டில் அர்ச்சகர்கள் 1008 முறை ஸ்ரீநிவாஸ ஸகர்ஸநாமங்கள் சொல்ல தன் கையாலேயே பூசித்து அலங்காரம் செய்ததாக, அச்சுத ராயரின் கல்வெட்டு (தென்னிந்திய கல்வெட்டுகள் நான்காம் பகுதி, பதினாறாம் குறிப்பு) ஒன்று சொல்கிறது. 

இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே என்று அந்தக் கால அரசர்கள் நமக்குக் காண்பித்ததைத்தான்.

திவாகர்.

*********************************************************************************************************************************************************

2011/2/23 Dhivakar <venkdh...@gmail.com>

Kamala Devi

unread,
Feb 24, 2011, 9:17:32 AM2/24/11
to mint...@googlegroups.com

 
திவாகர்,
மிக அருமையான கட்டுரை இது. பொறுமையாகப்படித்தேன்.என்ன விதரணை?
 ஒரு கேள்வி உண்டு. ஆனால் கேட்கலாமா என்று தெரியவில்லை,
கமலம்





http://www.kamalagaanam.blogspot.com



From: Dhivakar <venkdh...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>; rajam <ra...@earthlink.net>
Sent: Thursday, 24 February 2011 19:53:26
Subject: [MinTamil] Re: திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்

Dhivakar

unread,
Feb 24, 2011, 11:29:02 AM2/24/11
to mint...@googlegroups.com
கமலம், தாராளமாகக் கேட்கலாம்.

(இந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம், இப்போதுதான் மோகினியாட்டம்  நாட்டியநாடகத்தில் குருவாயூர் குரூரம்மா கதையைக் கேட்டுப் பார்த்து ரசித்தேன். இன்னொரு இழையில் இதை விளக்கமாக சொல்லுங்கள்)

அன்புடன்
திவாகர்.

2011/2/24 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 3:27:52 AM2/25/11
to mint...@googlegroups.com, Dhivakar, rajam
திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும்//

இந்த இழை இன்று தான் கண்ணில் பட்டது.  இது தான் பிரசாதங்கள் இழையா?  சுவையான பிரசாதமாய் இருக்கு.  போற்றிப் பாதுகாக்கவேண்டிய பிரசாதம்.  நன்றி திவாகர்.  கடும் உழைப்பும் தெரிகிறது.


2011/2/19 Dhivakar <venkdh...@gmail.com>
திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்

Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 3:38:38 AM2/25/11
to mint...@googlegroups.com

அந்த ஏனையோர்தான் பிரசாதங்களுக்காக ஏராளமாக காணிக்கையளித்துள்ளனர் என்பது புலப்படும். பசியின் அருமை தெரிந்தவர்கள்.//

உண்மை தானே, அரசர்களுக்கும், அரசியர்க்கும் பசின்னா தெரியாதே/


(இந்தக் கல்வெட்டு ஆதாரமாகத்தான் ‘திருமலைத் திருடன்’ நாவலில் கூட மார்கழி மகோற்சவம் சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் கதையின் முக்கிய சாராம்சம் கூட சொல்லப்படும்.) //

அப்படியா?  படிக்கணும் திருடனை ஒரு கை பார்க்கணும். :D


மனோகரமான இந்த குறிப்பிட்ட தின்பண்டம் ஆந்திர மக்களிடையே மிகப்பிரபலம்.//

வெறும் அரிசிமாவு மட்டும் பத்தாதே, மநோஹரத்துக்கு.  கடலை மாவும் வேண்டும்.  இவை மட்டும் அந்தக் காலத்திலிருந்து வந்ததுனு சொல்ல முடியாது.  தோசை பிரசாதமும் பல நூற்றாண்டுகளாய் உண்டு என்று என் அப்பா சொல்லுவார்.  இட்லி தான் லேட்டஸ்ட் என்றும் கோயில்களில் அரிசி மட்டுமில்லாமல் அனைத்துத் தானியங்களோடும்  மிளகு, சீரகம் போட்டு உடைத்த ரவையில் தோசை செய்வார்கள் என்றும் கூறுவார்.

2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>


> (தொடர்ந்து வரும்)
>
> திவாகர் 
>


Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 3:41:22 AM2/25/11
to mint...@googlegroups.com
ஆமாம்.  திரு வினை தீர்த்தான் சொல்வது போல் திருநெல்வேலிப் பக்கம் மநோஹரம் பருப்புத் தேங்காய்க் கூட்டில் அடைத்தால் ஒத்துக்க மாட்டாங்க (முன்பெல்லாம்.)  அடுக்குகள், அண்டாக்களில் நிரப்பி நடுவில் கூடு மாதிரியாகச் சின்னதாய்ச் செய்து வைக்கவேண்டும்.  இப்போல்லாம் அப்படி இல்லை! 

ஊழல் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கு. 

2011/2/21 karuannam annam <karu...@gmail.com>

 
மனோகரம் இடும் கோலம் போல இருக்கும் என்று திரு திவாகர் எழுதியுள்ளது எங்கள் பக்க மனகோலத்தை நினைவுபடு்த்திவிட்டது.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2011/2/21 Dhivakar <venkdh...@gmail.com>


திவாகர்



Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 3:47:01 AM2/25/11
to mint...@googlegroups.com

இந்த ஒழுங்கீனம் இனியும் நடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், இதுவரை நடந்த ஒழுங்கீனங்கள் மூலம் கிடைத்த அத்தனை பணத்தையும் ஒழுங்கீனம் செய்தவர்களிடமிருந்து (முக்கியமாக திருமுண்டிய சபையிடமிருந்து) கைப்பற்றப்பட்டு, தனத்தாரிடம் மறுபடியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை கோயிலுக்கு விளக்கேற்றவும், ஏனைய பூசை விஷயங்களுக்கும் செலவிட உத்தரவிடப்பட்டது.//

இழைக்குச் சம்பந்தமில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை!  இதைக் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கலாமோ? இப்படி எல்லாம் ஆட்சி செய்த நாம் இப்போ எப்படி ஆயிட்டோம்! :(

2011/2/23 Dhivakar <venkdh...@gmail.com>
திருமலைப் பிரசாதங்களின் வரலாறு - 3 


> > (தொடர்ந்து வரும்)
> >
> > திவாகர் 
> >
> > --
>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

--

Geetha Sambasivam

unread,
Feb 25, 2011, 3:49:44 AM2/25/11
to mint...@googlegroups.com
சம்பா கோதுமை பயன்படுத்துவார்கள் என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  எங்க வீடுகளில் பல வருடங்கள் எனக்கு நினைவு தெரிந்து சம்பா கோதுமை மட்டுமே சாப்பிட்டும் பார்த்திருக்கேன். மற்ற கோதுமையை "மொட்டை கோதுமை"  என்பதோடு ஆசாரக் காரர்கள் சாப்பிட்டும் பார்த்ததில்லை.   இப்போல்லாம் சாப்பிடுகிறோம்.

2011/2/23 rajam <ra...@earthlink.net>
நன்றி, திவாகர்!

"கோதுமை"க்கு என்ன சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? சொல்லுவீர்களா? ("கோதுமை" என்றா? "கோதும்பை" என்றா? "கோதும" என்றா?)
அன்புடன்,
ராஜம்


On Feb 22, 2011, at 11:49 PM, Dhivakar wrote:

திருமலைப் பிரசாதங்களின் வரலாறு - 3 

360.gif

Tthamizth Tthenee

unread,
Feb 25, 2011, 3:51:22 AM2/25/11
to mint...@googlegroups.com
"இந்த ஒழுங்கீனம் இனியும் நடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், இதுவரை நடந்த ஒழுங்கீனங்கள் மூலம் கிடைத்த அத்தனை பணத்தையும் ஒழுங்கீனம் செய்தவர்களிடமிருந்து (முக்கியமாக திருமுண்டிய சபையிடமிருந்து) கைப்பற்றப்பட்டு, தனத்தாரிடம் மறுபடியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை"


மீண்டும் நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்படும் வகையில்


செய்யவேண்டும் 

இந்த இழைக்கு தொடர்பில்லையெனினும் இடுகிறேன்

அன்புடன் 
தமிழ்த்தேனீ

2011/2/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Dhivakar

unread,
Feb 25, 2011, 4:05:48 AM2/25/11
to mint...@googlegroups.com
ஒரே எட்டில்  படிப்பதற்கு வசதியாக ‘எடிட்’ செய்யப்பட்ட வசதியோடு, பிரசாத குறிப்புகளை மட்டும் சுருக்கமாக கீழ்க்கண்ட பதிவில் வெளியிட்டுள்ளேன்.

நன்றி!
அன்புடன்
திவாகர்

2011/2/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

prakash sugumaran

unread,
Mar 4, 2011, 5:44:33 AM3/4/11
to mint...@googlegroups.com
அறிந்து கொள்வோம்.
திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம்.
 
அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க
வைக்கும் திருப்பதி அதிசிங்கள்
திருப்பதி
ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.
அவைகளில் சில:.

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.
உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம்.
ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.
இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்.
இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.
ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.
ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்.
ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.
உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.
எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.
ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.
வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும்.
பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள்.
இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது.
வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது.
ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது.
திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள்.
இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும்.
பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை.
சாத்துவதற்கு நேரமும் இல்லை.
அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை
12கிலோ எடை.
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை.
பாதக்கவசம் 375 கிலோ.
கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.
இதன் மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர்.
ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்.
 



2011/2/25 Dhivakar <venkdh...@gmail.com>



--
prakash sugumaran

kalairajan krishnan

unread,
Mar 5, 2011, 9:57:33 AM3/5/11
to mint...@googlegroups.com
அவ்வளவும் அதி அற்புதமான தகவல்கள்
ஐயா திவாகர் அவர்களுக்கும்
ஐயா பிரகாஷ் சுகுமாரன் அவர்களுக்கும்
நன்றிகள் பல

kalairajan krishnan

unread,
Mar 5, 2011, 9:57:48 AM3/5/11
to mint...@googlegroups.com

Dhivakar

unread,
Mar 5, 2011, 11:12:46 AM3/5/11
to mint...@googlegroups.com
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.
இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்.
இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்.
ஆனால்சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள்பெடிப்பதில்லை.
ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்.
ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.


இப்படியெல்லாம் எப்படி ஃபார்வேர்ட் செய்து பரப்புகிறார்களோ.. எங்கேயிருந்து இத்தனை கற்பனைகள் வருகிறதோ.. வேங்கடவனுக்கே வெளிச்சம்.
மின் தமிழில் முடிந்தவரை நம்பகத்தக்க செய்திகளைத் தருவது நல்லது என நினைக்கிறேன்.

மேற்கண்ட செய்திகள் அத்தனையும் வதந்திதான்.. 
அப்படியெல்லாம் அல்ல.. வேங்கடவனின் மேனியில் இவ்வகை ரசாயனம் என்றெல்லாம் தடவுவதில்லை. அவரைத் தொட்டு ஆடை அணிவிக்கிறார்கள். கழட்டிய ஆடையைக் கூட பக்தர்கள் முகரலாம். இரண்டு நாட்கள் முன்பு கூட, அடியேனும் மறவன்புலவு சச்சி அவர்களும் தரிசனத்துக்குச் சென்றபோது எங்கள் முகத்தில் இந்த திருவாடையைத் தடவி ஆசீர்வாதம் செய்தார்கள்.

அதே போல 110 டிகிரி இந்த மாதிரி செய்திகளையெல்லாம் எல்லாம் வதந்’தீ’.  தீ பரவாமல் பார்த்துக் கொள்வது நம் கையிலும் இருக்கிறது.

வேங்கடவன் நம் எல்லோருக்கும் தோழன், இனியவன், குளிர்ந்தவன்.. கேட்டவர் கேட்பதைக் கொடுப்பவன்..

திவாகர்






2011/3/4 prakash sugumaran <praka...@gmail.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Mar 5, 2011, 1:18:26 PM3/5/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'மின் தமிழில் முடிந்தவரை நம்பகத்தக்க செய்திகளைத் தருவது நல்லது என
நினைக்கிறேன்.' I agree. ஆதாரங்கள், குறிப்பு, சுட்டிகள் குறிப்பது
மேலும் நல்லது. கட் & பேஸ்ட் செய்தால், லின்க் கொடுப்பது நாகரீகம்.
Innamburan
05 03 2011

2011/3/5 Dhivakar <venkdh...@gmail.com>

kanniappan

unread,
Mar 6, 2011, 1:35:26 AM3/6/11
to mint...@googlegroups.com
இத் தகவல்கள் எந்த அளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தவை? யாராவது விளக்குங்களேன்.

4 மார்ச், 2011 4:14 pm அன்று, prakash sugumaran <praka...@gmail.com> எழுதியது:



--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

Reply all
Reply to author
Forward
0 new messages