--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முதல் எண்ணம் தான் சரியெனப்படுகிறது.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்
பின் எப்படி மறுபடி ’.பஸ்ச்சிம் பங்கா’ என்றே ஆகிறது என்று தெரியவில்லை
விகாரம் என்பது புத்த கோயிலைத் தமிழில் அழைக்கும் வழமை. Bihar இன்று
பீகார், பிகார் என வழங்குகிறது. அதே புத்த கோயிலின் பெயர்
மாநிலத்துக்கானதும் இந்த மாற்றம்.
கள்ளிக்கோட்டையை ஆங்கில வழி கலிக்கட் என்றே வழங்குகிறோம்.
கண்டம் தமிழ் வழக்கு. ஜார்க்கண்ட், உத்தரகண்ட் அப்படியே தமிழுக்கு
வந்தது. கண்டம் நீங்கியது.
Bangaladesh பங்காளதேஷ், பங்காளதேசம், வங்காளதேசம் என்றெல்லாம்
பாடப்புத்தகங்களில் மாறி மாறி வரும், இதழ்களிலும் அவ்வாறே. மக்கள்
புரிந்து கொள்கிரார்கள்.
மேற்கு வங்கம் என்பதில் உள்ள இனிமை, எளிமை பஸ்ச்சிம் பங்கா பெறுமா
தெரியவில்லை, பழகப் பழக எதுவும் இனிமையாகும்.
இடப்பெயர்களுக்கு உரோம வரிவடிவங்களில் சீர்மை நோக்கிய ஐக்கிய நாடுகள்
குழு 1960 தொடக்கம் உண்டு.
Dated 2 May 2011
Experts from around the world gathered in Vienna today for the start
of a five-day United Nations conference aimed at standardizing the use
of place names so that governments, organizations and the public can
benefit.
The UN Group of Experts on Geographical Names (UNGEGN), which was
created in 1960, is holding its latest session at a time when digital
technology has made it easier to disseminate and obtain detailed
geographic information.
“Global expectations are for correct and authoritative information to
be available virtually on demand,” said UNGEGN Chairperson Helen
Kerfoot, adding that “the challenges we face today remain as thought-
provoking as in the past.”
UNGEGN was established to try to promote the use and availability of
accurate, clear and unambiguous geographic names given their
importance to national and international communication.
Place names are fundamental to many aspects of society, including the
coordination of emergency services, tourism, communications systems,
economic development and the setting up of planning databases.
International standards and the challenges of making standardized
names available for disaster responses are among the subjects to be
discussed at this week’s session in Vienna.
UNGEGN is one of seven standing expert bodies of the UN Economic and
Social Council (ECOSOC).
இடப்பெயர்களுக்குத் தமிழ் வரிவடிவங்களில் சீர்மை, தரக்கட்டுப்பாடு
நோக்கிய பயணமே தொடங்கவில்லை.
நன்றி
On Aug 20, 5:41 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/20 geeyes <gmsantha...@gmail.com>
அல்லாவிடில் சென்னையில் உள்ள Fort, Park, Beach போன்ற பல
ரயில்நிலையங்களின் பெயர்களை மொழிபெயர்த்து போட்டிருப்பதைப் பார்க்கையில்
ஏற்படும் நகையுணர்வுதான் ஏற்படும். அப்படி அல்லாது அந்தப் பெயர்களை
அப்படியே ஆங்கிலத்தில் Kottai, Poonga, Kadarkkarai என்றே
குறிக்கப்பட்டிருக்கவேண்டும்; ஏடுகளிலும் பதிவுசெய்யப்பட்டிருக்க
வேண்டும்.
நான் ‘பஸ்ச்சிம்’ என்று கூறியது ஹிந்தியை அடியொற்றித்தான். தில்லியில்கூட
‘பஸ்ச்சிம் விஹார்’ என்றொரு பகுதி இருக்கிறது. (நல்லவேளை அவர்கள் அதை
‘West Vihar' என்று(ம்) குறித்து, குழப்பவில்லை)
மேற்குத் திசையை ஹிந்தியில் ‘பஸ்ச்சிம்’ என்று குறிப்பதைப்போல,
வங்காள (பாங்லா) மொழியில் எப்படிக் குறிக்கிறார்கள் என்று எனக்குத்
தெரியவில்லை.
எவ்வாறானலும், இந்தியாவில் ஒரு வங்காளம் மட்டுமே இருப்பதால் ‘பங்க
ப்ரதேஷ்’ என்று மட்டுமே வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.
On Aug 20, 7:41 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/20 geeyes <gmsantha...@gmail.com>
>
வடமொழி திசைப்பெயர்கள் வந்ததெப்படி?
என்று எழுதியிருக்கிறேன். சூர்ய நமஸ்காரத்தால்
ஏற்பட்ட பெயர்கள் இவை.
பஶ்சிமம் என்றால் முதற்பொருள் “பின்னால்”.
சூரியனைப் பார்க்கும் கிழக்கு “முன்னால்” எனவே,
பூர்வம் = கிழக்கு, பஶ்சிமம் என்றால் பின் திசை
(அதாவது காலையில் சூரியோதயத்தில் சந்தியா
வந்தனம் அனுஷ்டிப்போருக்கு). வலது கை (டெக்ஷ்ட்றஸ்)
- தக்ஷிணம் (தென்திசை). இடதுகை வாமம் அல்லது
உத்தரம் = வடக்கு.
மேலும் அறிய, 1805 ரெபரன்ஸ்
http://books.google.com/books?id=3CYoAAAAYAAJ&pg=PA274&dq=paschima+west+sun+worship&hl=en&ei=ae9PTvv_KImatwfChqmyBw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD8Q6AEwAw#v=onepage&q=paschima%20west%20sun%20worship&f=false
தமிழின் திசைப் பெயர்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.
வடக்கு ஆலமரம் (வடம்), தெற்கு தென்னை சின்னங்கள்.
குணக்கு - கடலை தோண்டி சூரியன் உதிப்பதால்.
குடக்கு - குடைந்து மலையினுள் மறைதலால்.
நா. கணேசன்
ஆங்கிலத்தில், alphabetical orderஇல் குறிப்பிடப்படும் இடங்களில் 'W'வில் துவங்கும் West Bengal என்ற தங்களது மாநிலத்தின் பெயர் எப்போதும் கடைக்கோடியில் வருவதைத் தவிர்க்க எண்ணியே வங்காளிகள் தம் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரத்துவங்கினர். இந்த 'West'க்கு 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. வங்கப்பிரிவினை (Partition of Bengal) 1905இல் அந்த மொழி பேசும் மக்களை இரண்டு மாநில மக்களாகப் பிரித்துப்போட்டது மறக்க முடியாத வரலாறு. பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள். 'மேற்கு' என்ற பொருளுடைய இந்த 'பஸ்சிம்' இந்தி மொழியில் மிகச்சரளமாகப் புழங்கும் ஒரு சொல்தான். அன்புடன் ஆர்.எம்.பால்ராஜ் --- On Sat, 20/8/11, geeyes <gmsan...@gmail.com> wrote: |
பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.
| பெயர் மாற்றம் வேண்டும் என்பவர்கள் கூறும் காரணம் அத்தனை பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு விதத்தில் சிறுபிள்ளைத்தனமானதும் கூட. 'மேற்கு'வை விட மனதில்லாதவர்கள், மிகப்பெரும்பாலும் அந்த சொல்லில் அடங்கியுள்ள சரித்திரத்தை மறக்க விரும்பாதவர்கள்; அந்த சொல் அம்மாநிலத்தின் வரலாற்றில் வந்து ஒட்டிக்கொண்ட கதை ஒரு பெரிய வரலாறு அல்லவா? அன்புடன், |
ஆர்.எம்.பால்ராஜ் |
| --- On Sun, 21/8/11, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote: |
|
அந்த 'பெரிய வரலாற்றை' சொல்லுங்களேன், திரு. பால்ராஜ்.இன்னம்பூரான்
On Aug 21, 1:19 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> பெயர் மாற்றம் வேண்டும் என்பவர்கள் கூறும் காரணம் அத்தனை பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு விதத்தில் சிறுபிள்ளைத்தனமானதும் கூட.
>
> 'மேற்கு'வை விட மனதில்லாதவர்கள், மிகப்பெரும்பாலும் அந்த சொல்லில் அடங்கியுள்ள சரித்திரத்தை மறக்க விரும்பாதவர்கள்; அந்த சொல் அம்மாநிலத்தின் வரலாற்றில் வந்து ஒட்டிக்கொண்ட கதை ஒரு பெரிய வரலாறு அல்லவா?
>
> அன்புடன்,
> ஆர்.எம்.பால்ராஜ்
>
> --- On Sun, 21/8/11, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> Subject: Re: [MinTamil] Re: பஷிம் பங்கா
> To: mint...@googlegroups.com
> Date: Sunday, 21 August, 2011, 9:28 AM
>
> 2011/8/20 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
>
> பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.
>
> கிழக்கு வங்காளம், வங்கதேசமாக (பங்ளாதேஷ்) மாறிய பிறகு, இந்த மேற்கு என்ற அடையே தேவையற்றது. வங்காளம் என்றாலே போதுமே! கிழக்குப் பகுதிதான் இல்லையே! அப்புறம் எதற்காக, மேற்கு என்று பிரித்துக்காட்ட வேண்டிய அவசியம்! Mental block. மனத்தடை,
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
Tamilization by Kampar (pazchima > paccimam):
பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து அடங்கினர், அமரர். 69
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14375&st=420
NG
> --
>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே. தி.10404025
உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.தி.10614011
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.தி.10704012
பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே தி.10708003
கம்பருக்கு நெடுங்காலம் பின்பு அருணகிரிநாதர் பச்சிமம் = மேற்கு
என்கிறார்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள ... கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள
கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பச்சிம = மேற்கு எனப் பொருள்பட,
அகராதி தந்த மேலைப்புலோலி நா.சதாவதானி கதிரைவேற்பிள்ளை, தாம் வழிபட்ட
குலதெய்வம் முருகன் ஆலயத்தை "புதுச்சந்நதிக் கந்தன்" ஆலயம் எனவும்
மகாவேலன் தணி (மாலந்தெணி) வேலன் தங்கும் இடம், மேலைப்புலோலி (புலோலி
மேற்கு) "பச்சிம புலவ கான நகரம்"(பச்சிமம்-மேற்கு திசை) மாயக்கை (மாயா
யாக்கை) இப்படியாக பல தீந்தமிழ்ச் சொற்களை தமது பேச்சிலும் எழுத்திலும்
எடுத்தாண்டு வந்தார்
பச்சிம வங்கம் = மேற்கு வங்கம் ஆகும்
நன்றி
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com
ஆட்சி மொழி வடமொழி.
அரசன் வேற்றவன்.
தமிழே பேசக்கூடாது என்ற ஆணை.
அதை மீறித் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் எனப் பாடியமையால்
நீற்றறையில், கல்லோடு கடலுள், யானைக்காலில், என உடல் வதை.
அதை மீறி ஊர் ஊராகச் சென்றனர்.
சிறு சிறு ஊர்கள்.
சிறிய சேரிகள்.
மக்களோடு தங்கினர்,
பெயரைக் கொடுத்தனர்.
ஒவ்வொரு ஊருக்கும் திரு அடைமொழி கொடுத்தனர்.
ஸ்ரீ யைத் தூக்கி எறிந்தனர்.
மக்கள் வாய்களுள் தமிழை அமுதமாக ஊட்டினர்.
தமிழைப் பாடு துயரம் போகும்.
தமிழைப் பாடு இன்பம் பெருகும்.
தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
என்றனர்.
அரசன் செய்யான்.
ஆணைகள் வரா.
ஆனாலும் தமிழாக்குவோம்.
போராடுவோம்.
மக்களுக்குச் சொல்வோம்.
இதுவே போராளிகளின் அணுகு முறை.
அப்பர் முதலில், சம்பந்தர் தொடர்ந்தார், ஆழ்வார்கள் பரந்தனர்.
இன்று வரை ஊர்ப்பெயர்கள் பெரும்பான்மை திருவுடன் தொடங்குகின்றன.
விருத்தாசலம், லாலாபாத், டால்மியாபுரம், மாயவரம், இடைச் செருகல்கள்.
நன்றி
On Aug 21, 10:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com
தமிழ் சீர் எழுத்து முறையை தனித்தமிழ் வெறியர்கள் முக்கியமாக கிரந்த
எழுத்துகள் மேலுள்ள காழ்ப்பினால் குலைத்து விட்டனர்.
உதாரணம்: தமிழ் பத்திரிக்கைகள் ஜெர்மனி என எழுதுகின்றன, லக்ஷக்கணக்கானவர்
அதை படிக்கின்ரனர். இபோது மேல் சொன்ன காரணத்தால் செர்மனி, செருமனி,
யெர்மனி என பல மாத்தல் பெயர்கள் தமிழர்களை குழப்பி அடிக்கின்றன. இது
தமிழில் வலிமை இல்லை, மாறாக வீக்னஸ், இன்னும் சொல்லப்போனால் இது தமிழின்
வீக்னஸ் இல்லை, தனித்தமிழ் என்ற ஐடியாலஜியினால் வரும் கோளாருகள்.
ஜப்பான் எல்லோருக்கும் தெரிந்தது, தனித்தமிழ் வக்ரங்கள் யப்பான்,
நிப்பான் போன்றவை
ஸ்பெயின் தெரிந்தது, இசுப்பானியா, இசுப்பெய்ன் போன்றவை குழப்பும்
முயற்சிகள்.
கிரந்த வெறுப்பை குப்பைத் தொட்டியில் தள்ளினால் ஒழிய, தமிழ் பெயர்கள்
சீர் பெறாது.
படிப்பவர்கள், எழுதுபவர்கள் முக்கியமாக பாலகர்கள் - இந்த குழப்பங்களை
தவிர்க்க தமிழ் பேச்சு/எழுத்தையே தவிர்க்கின்றனர். ஆங்கிலம்தாம் ரெடியாக
காத்துக் கொண்டு இருக்கிறதே, ஏன் தமிழில் மாரடிக்க வேன்டும் என்ற
மனோபாவத்திற்க்கு ஒரு நல்ல காரணம் இருக்கு. அது எளிதான காரனம் - தமிழில்
ஸ்டாண்டார்ட் இல்லை
ஸ்டாண்டார்ட் பயன்பாடுதான் மொழியையே நிலைநிருத்துகிறது. தனித்தமிழ் -
கிரந்த , சமஸ்கிருத வெறுப்பு அந்த ஸ்டாண்டார்ட் தமிழின் காலை வாருகின்றது
விஜயராகவன்
இந்த "ஆணை" கற்பனையா, அல்லது ஆதாரம் இருக்கா?
>
>
> விருத்தாசலம், லாலாபாத், டால்மியாபுரம், மாயவரம், இடைச் செருகல்கள்.
> நன்றி
டால்மியா என்ற பண எஜமான் , தன் பணத்தை தமிழ்நாட்டில் இடைச்செருகல்
செய்தார், அந்த இடைச்செருகலை வாழ்த்தி டால்மியாபுரம் என்ற இடைச்செருகல்.
தமிழ்நாட்டில் உடை, உணவு, வீடு , பாட்டு, டான்ஸ், சினிமா இவற்றில் வட
இந்திய அல்ல்து மேற்ககத்திய இடைச்செருகல் இருக்கும் போது, ஊர் பெயர்களில்
இருந்தால் என்ன தப்பு
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சச்சிதானந்தம் தமிழை பேசக் கூடாது என்ற அரசு ஆணை(கள்) இருப்பதாக
குறிப்பிட்டார். அந்த ஆணை, அப்படி ஒன்றோ, பலவோ இருந்தால், அதற்க்கான
ஆதாரங்களை கேட்டேன். அந்த ஆணை தம்ழில் பேசுவதை - யாரால், எங்கு , எப்படி
தடை செய்யப்பட்டது என சச்சிதானந்தம் கூறினால் நன்றாக இருக்கும்
உங்களுக்கு தெரிந்து எந்த அரசோ தமிழை யாரும் எங்கேயும் பேசக் கூடாது என்ற
ஆணை பிறப்பித்தனரா??
விஜயராகவன்
> 2011/8/22 விஜயராகவன் <viji...@gmail.com>
> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com- Zitierten Text ausblenden -
>
> - Zitierten Text anzeigen -
டால்மியா என்ற பண எஜமான் , தன் பணத்தை தமிழ்நாட்டில் இடைச்செருகல்
செய்தார், அந்த இடைச்செருகலை வாழ்த்தி டால்மியாபுரம் என்ற இடைச்செருகல்.
மீண்டும், மீண்டும் ஒரு மொழி மீதே சாடும் தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது
பெருத்த சந்தேகமே வந்துவிட்டது இப்போது!
நாயக்கர் காலத்தில் தெலுங்கு, மராட்டியர் காலத்தில் மராட்டி. அரசனுக்குப்
ப்யந்து அடங்கிக் கிடந்தார்கள் என்று கொள்ளலாம்.
இன்று ஆங்கிலேயர்களா நம்மை ஆள்கிறார்கள். ஏன் விழுந்து அடித்து
கிண்டர்கார்டனுக்கு பிள்ளையை அனுப்புகிறார்கள். யாருக்குப் பயந்து
பிள்ளைகள் தமிழே பேசுவதில்லை.
கண்ணெதிரே ஒரு எதிரியை வைத்துக் கொண்டு சமிஸ்கிருதத்தை வம்பிற்கு
இழுக்கும் இவர்கள், ஆங்கிலமொழி ஏஜெண்டுகளா? இல்லை, பார்வை அற்றவர்களா?
இவர்கள் தமிழுக்கு நண்பர்களா? விரோதிகளா?
தமிழ் இவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதே சவால்! கூப்பிய கையில்
வாளோடு இருக்கும் இவர்களை!!
நா.கண்ணன்
2011/8/22 Dhivakar <venkdh...@gmail.com>:
>
> ஆனால் விஜயநகர ராஜாக்களையும், நாயக்க ராஜாக்களையும், மராத்தி ராஜாக்களையும்
> தமிழில் விருப்பம் காட்ட வைக்க நம் புலவர்கள் முன் வரவில்லை என்றே சொல்வேன்.
> ஒருவிதமான குழப்பமான சூழ்நிலையில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் இப்படித்தான்
> தமிழகம் இருந்தது.
திவாகர்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கிணறுகளை வெட்டுங்கள், பூதங்களை கிளப்புங்கள். ஃஜீபூம்பா
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Anbudan
NG
> 2011/8/22 விஜயராகவன் <viji...@gmail.com>
> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 21, 5:18 pm, "Maravanpulavu K. Sachithananthan"
Yes. pa'schima banga in Bengali will be "paccima vaGkam" in Tamil.
BTW, Tirumantiram verses are not much before Kamban.
NG
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group, send email to minT...@googlegroups.com
>
> > > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>
> > > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
| தமிழ் எதையும் புறந்தள்ளியதில்லை (சமஸ்கிருதம் போலவே); நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல. ஆனால், 'தமிழ்ப்படுத்தி' ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கம்பரை உதாரணமாகக் கூறும் வழக்கம் எனக்கும் உண்டு. அவ்வளவு ஏன், 'தமிழ்ப்படுத்துவதற்கான' விதிமுறைகளைதான் தொல்காப்பியரே தந்துவிட்டாரே. பின் வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதம் தேவைதானா என்றே கேட்கத்தோன்றுகிறது. கால ஓட்டத்தில் தமிழ் வடிவம் பெற்றுவிட்ட சொற்களை, அவை தமிழ் சொற்கள்தான் என்று வாதிடுவதும் தேவையற்றது. |
அன்புடன், ஆர்.எம்.பால்ராஜ் |
| --- On Sun, 21/8/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote: |
|
இதெல்லாம் நம்பலாம். நம் கண் எதிரிலேயெ சென்னை ஹைகோர்ட்டில் தமிழுக்கு
தடை, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்
போலீஸ் மார்ச் , இதற கமாண்டுகள் ஆங்கிலத்தில்தன் உள்ளன - மார்ச்
செய்யும்போது லெஃப்ட், ரைட், அபௌட் டர்ன் எனத்தான் சொல்கின்ரனர். வலது,
இடது, திரும்பு என இல்லை.
தமிழுக்கு "தடை" இல்லாவிட்டாலும் எந்த தமிழக அரசாங்க ஆவணமும்
ஆங்கிலத்திற்க்குதான் முதல் மரியாதை. தமிழ்நாடு அரசாங்கத்தின் வெப்சைட்
போய் பருங்கள் , நான் சொல்வது புரியும், அல்லது மாவட்ட
வென்ப்சைட்டுகளுக்கு போய் பாருங்கள், பல இங்லீஷில்தான் உள்ளன. இதெல்லாம்
எங்கும் தமிழ் என 60 வருடங்கள் மார்பில் அடித்த பின்பு.
ஒரு அரசர் ஒரு சூழ் நிலையில் தமிழில் தடை செய்து இருக்கலாம் - அது
இன்னும் நிரூபிக்கப் பட வில்லை. ஆனால் மொத்தமாக எந்த அர்சாவது தமிழை
விட்டில் பேசாதே, தெருவில் பேசாதே என ஆனை கொடுத்த தொனியில் சச்சிதாநந்தம்
எழுதினார், அதற்குத்தான் இத்தனை கேள்வி.
அண்ணாதுரை இருந்தபோது , அவர் என்.சி.சி. யை தமிழகத்தில் தடை செய்தார்,
ஏன்? அதில் உள்ள கமான்டுகள் ஹிந்தியில் உள்ளதென. ஆனால் அண்ணாதுரையோ,
கருணாநிதியோ கேட்டது ஹிந்திக்கு பதிலாக தமிழ் ஆணைகள் அல்ல, ஆங்கில
ஆணைகள் . அப்புறம் ஆங்கில ஆணைகளோடு என்.சி.சி. திரும்பி வந்தது.
இனமான தலைவர்களே ஆங்கில ஆணைதான் கேட்டபோது, தெலுங்கு, மராட்டியர் ஏன்
தமிழில் மட்டும் ஆணை விட வேன்டும்.
விஜயராகவன்
விஜயராகவன்
On 22 Aug., 16:22, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
2011/8/22 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
>
> தமிழ் எதையும் புறந்தள்ளியதில்லை (சமஸ்கிருதம் போலவே); நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல. ஆனால், 'தமிழ்ப்படுத்தி' ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கம்பரை உதாரணமாகக் கூறும் வழக்கம் எனக்கும் உண்டு.
>
உண்மைதான். Rishikesh என்பதைப் பெரியாழ்வார் இருடிகேசா! என்கிறார்.
Sridhar என்பதைச் சிரீதரா! என்கிறார். ஆனால் எப்போதும் அப்படி இல்லை. பல
வடமொழிச் சொற்களை அப்படியே கையாளும் வழக்கமும் உண்டு. ஒலிப்பொருத்தம்
இருந்தால் போதும் போலுள்ளது. இல்லையெனில் வள்ளுவன் ”மங்கல்ம் என்ப
மனைமாட்சி” எனச் சொல்லாட மாட்டான்.
> அவ்வளவு ஏன், 'தமிழ்ப்படுத்துவதற்கான' விதிமுறைகளைதான் தொல்காப்பியரே தந்துவிட்டாரே. பின் வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதம் தேவைதானா என்றே கேட்கத்தோன்றுகிறது. கால ஓட்டத்தில் தமிழ் வடிவம் பெற்றுவிட்ட சொற்களை, அவை தமிழ் சொற்கள்தான் என்று வாதிடுவதும் தேவையற்றது.
>
இது ஏற்புடைய கருத்து. சென்னை மொழியில் `என்னப்பா! நாஷ்டா ஆச்சா!
என்கிறார்கள். மலேசியா போனால், `பசி ஆறினீர்களா?` என்கிறார்கள்.
உண்மையில் தமிழில் Breakfast எனும் சொல் கிடையாது. பசி ஆறுதல் என்பது
Breakfast ன் தமிழாக்கம். எனவே இவையிரண்டில் எதைத்தமிழ் எனக்கொள்வது?
தமிழின் திசை அறிதல் சிரமாக உள்ளது.
தொல்காப்பியரின், `தமிழ்ப் படுத்தல்` விதிகூட சாதீயச் சிந்தனையின் விளைவோ
என்று பின்நவீனத்துவம் கேட்கிறது. சுத்தப் படுத்துதல், தீட்டு போன்ற
கருத்துக்கள் சாதீய அடையாளங்கள். அந்தக் காலத்தில்
தீட்டுப்பட்டுவிட்டால் நீர் தெளித்து பயன்படுத்துவர் (சமீபத்தில் ஒரு
மலையாள தலித் அதிகாரி பயன்படுத்திய காரை நீர் தெளித்து
சுத்தப்படுத்தப்போய், சேதி அமர்களப்பட்டது). அதுபோல்,
‘தமிழ்ப்படுத்திவிட்டால்’ ஏற்றுக்கொள்ளலாம் போல :-)
வெண்பாப் பாடும் வழக்கம் சமகால தமிழ்ப்போக்கில் இல்லாத போது பழைய தமிழ்
விதிகள் தளர்ந்து போகின்றன. புதுக்கவிதையில் தனித்தமிழ் தேடுதல் கடினம்!
தனித்தமிழ் ஒரு விளையாட்டு. பேரா. சொல்வதைப் போல் ஓட்டையான கருவி
என்றாலும் இருப்பதை வைத்துதானே விளையாட முடியும் :-))
நா.கண்ணன்