திருமூலர் தமிழ் இருக்கை

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 17, 2025, 12:53:43 AM6/17/25
to மின்தமிழ்
“திருமூலர் தமிழ் இருக்கை”
வணக்கம்.
நான், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்,
தலைவர், தொல்காப்பிய மன்றம், கனடா.
ரொறொண்டோ வாழ் தமிழ் அன்பர்களே!
30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் என்றால் என்ன என்று அறியப்படாத ரொறொண்டோ மாநகரில், இன்று பல்கலைக்கழக மட்டத்தில்  தமிழ் இருக்கை அமைப்பதற்கு, அண்ணாமலைக் கனடா வளாகம்  ஊடாக பெரும் துணையாக இருந்திருக்கிறோம்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஊடாக, 2011 ஆம் ஆண்டிலிருந்து, யோகா பட்டயம், பட்டம், PG Yoga, முதுகலை முதலிய கற்கை நெறிகளை கனடாவில் எடுத்து வந்து நூற்றுக் கணக்கான யோகா ஆசிரியர்களை உருவாக்கி, இன்று கனடாவில் யோகா பயிற்சி வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்களுள் 90 விகிதமானவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய சாதனை.
புலம் பெயர் நாடுகளில் தமிழ் வளர்ப்பதிலும் தமிழ் இருக்கைகள் அமைப்பதிலும புலம் பெயர் தமிழர் மிக்க அக்கறை கொண்டவர்கள்.
புலம் பெயர் நாடுகளில் தமிழை வளர்க்கும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமெரிக்காவின் South Carolina விலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திருமூலர் பெயரால் “திருமூலர் தமிழ் இருக்கை” என்று ஒரு இருக்கை நிறுவப்படவிருக்கிறது.
இந்த இருக்கை நிறுவுவதற்கான நிதி திரட்டும் முயற்சியில், “ஈகை நிறுவனமும் தமிழ் இருக்கை நிறுவனமும் இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி”
எதிர் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு,
  Toronto தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் அன்பர்களே!
South Carolina பல்கலைக் கழகத்தில், திருமூலர் பெயரால் நிறுவ உள்ள  “திருமூலர் தமிழ் இருக்கை” யின் முக்கிய நோக்கம்,
திருமூலர் உள்ளிட்ட சித்தர்களின் மூச்சுப் பயிற்சி முறைகளை  அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்வது.
திருமூலர் திருமந்திரத்தை அறிவியல் முறையில் ஆராய்வது, இன்னும் இவை போன்ற பல.
இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்பர்களே!
இந்த இருக்கை நிறுவுவதில், கனடா தொல்காப்பிய மன்றத்தின்  பங்கு உழைப்பும் இருப்பது அவசியம். நாம் எம்மால் இயன்ற பங்களிப்புச் செய்வோம். .
இந்த இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டுக்கள் விபரம் வருமாறு:
1. நுழைவுச் சீட்டு:
1.1.  250 டாலர்கள்
1.2. 100 டாலர்கள்
1.3. 25 டாலர்கள்
தவறாது நிகழ்வில் கலந்து கொள்ளவும். இவை தவிர,
2. நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன.  
இந்த நுழைவுச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள், நன்கொடை வழங்குபவர்கள் தொடர்புகளுக்கு,
முனைவர் செ. ஸ்ரீதாஸ், தலைவர், கனடா, தொல்காப்பிய மன்றம்
தொலைபேசி எண்: 647-881-3613
பணம் அனுப்புவதற்கு: மின்னஞ்சல்:  selvam...@gmail.com
பணம் அனுப்பும் பொழுது – 1. உங்கள் முழுப் பெயர், 2. தொலைபேசி எண், 3. மின்னஞ்சல் முகவரி  4. வீட்டு முகவரி. முதலியவற்றை, குறிப்பு எழுதும் பகுதியில் தருவதற்குத் தவறாதீர்கள்.
சித்தர்கள் பெருமையை உலகறியச் செய்வோம்.
கனடா தொல்காப்பிய மன்றம்
சூன் 16, 2025
நன்றி. வணக்கம்.
Reply all
Reply to author
Forward
0 new messages