தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. - 5 - இயற்பியல்

274 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 18, 2018, 1:08:44 AM7/18/18
to



தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. - 5 - இயற்பியல்



முன்னுரை:

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. என்னும் தலைப்பில் இதுவரை வேதியியல், கணிதம், உணவியல் சார்ந்த கட்டுரைகளைக் கண்டோம். இவற்றில் உணவியல் சார்ந்த கட்டுரைகளில் பல்வேறு உணவுகளுக்கான கலைச்சொற்களைத் தமிழில் கண்டோம். தமிழில் அறிவியல் நூல்களை இயற்றுவதற்குத் தேவையானவற்றில் கலைச்சொற்களே முதலிடம் பெறுகின்றன. ஆனால், கலைச்சொற்கள் என்பதை விளக்கச் சொற்கள் அல்லது பொருட்களுடன் அடிக்கடி குழப்பிக் கொள்கிறோம். ஒரு திணைக்குரிய பெயர்ச்சொல்லில் இருந்து அத்திணையின் தன்மைகளோ பயன்பாடோ வெளிப்படையாகத் தெரியுமானால் அது கலைச்சொல் அன்று; விளக்கப் பொருள் ஆகும். தன்னளவில் சுருக்கமானதும் வெளிப்படையாகப் புலப்படாததுமான சொல் எதுவோ அதுவே கலைச்சொல் ஆகும். ஆக, கலைச்சொல் என்பது விளக்கப் பொருளைக் காட்டிலும் அளவில் சிறியதாய் செறிவுடன் விளங்கக்கூடியது என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இதனை ஒரு எளிய சான்றுடன் விளக்கமாகக் கீழே காணலாம்.

வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` = காய்கறி வறுசோறு
வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` = காய்நிமிரல்

வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் காய்கறி வறுசோறு என்று கூறுவது விளக்கப் பொருள் ஆகும். காய்நிமிரல் என்பது அதற்கான கலைச்சொல் ஆகும். இதுபோல ஒவ்வொரு துறையிலும் ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு தமிழ் அகராதிகளில் சேர்க்கப்படும்போது தமிழ்மொழியின் சொல்வளம் பெருகும். இதன் விளைவாக, துறைசார்ந்த தமிழ்வழிக் கல்வியறிவு பரவலாகி தமிழ்மக்கள் திறமையானவர்களாக மாறுவர். இதனால் சுயதொழில் வேலைவாய்ப்புக்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை பெருகி நமது தமிழ்நாடு ஒரு தற்சார்பு நிலையை அடையும். மொத்தத்தில் எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்காமல் தன்னிறைவு பெற்றுப் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும். இக்கட்டுரையில், இயற்பியல் நூல்களைத் தமிழில் இயற்றுவதற்குத் தேவையான புதிய கலைச்சொற்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, அணு இயற்பியல் தொடர்பாக பழந்தமிழர்கள் எவ்வித அறிவினைக் கொண்டிருந்தனர் என்றும் அணு இயற்பியலுக்கான கலைச்சொற்களை உருவாக்கும் முறைகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

பழந்தமிழரின் அணுக் கொள்கை:

அணு என்பது என்ன?. என்ற கருத்தாக்கத்தினை முதன்முதலாக ஔவையார் என்னும் பெண்பாற் புலவரே கூறியதாக அறியப்படுகிறது. திருவள்ளுவரைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள 'திருவள்ளுவ மாலை' என்னும் தொகைப்பாட்டில் தான் ஔவையார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

அணு என்னும் மிகச்சிறிய திணையைத் துளைத்து அதற்குள் ஏழுகடல் நீரைப் புகுத்தியதைப் போல இரண்டே அடிகளுக்குள் எல்லையற்ற விரிவான கருத்துக்களைப் புகுத்தி இயற்றப்பட்டது என்று ஔவையார் இப்பாடலில் திருக்குறளைப் புகழ்கிறார். இப்பாடலில் இருந்து, அணு என்பது மிகச்சிறிய திணை என்றும் அதனையும் துளைக்க முடியும் என்றும் அக் காலத்திலேயே அணுவைப் பற்றிய கருத்தாக்கத்தினை ஔவையார் அறிந்திருக்கிறார் என்பதனை அறியலாம். இது திருவள்ளுவரைப் பற்றிய புகழ்மாலை என்பதால் கண்டிப்பாக இப்பாடல் திருக்குறளுக்கு அடுத்து எழுந்ததே என்பதனை உறுதியாகக் கூறலாம்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், அணு என்ற சொல் சங்க இலக்கியங்களிலோ சங்க மருவிய இலக்கியங்களிலோ காணப்படவில்லை. முதன்முதலாக, அணு என்ற சொல் மணிமேகலையில் தான் பல இடங்களில் பயிலப்படுகிறது. அணு என்னும் சொல் பயிலும் சில இடங்களைக் கீழே காணலாம்.

உரம் தரும் உயிரோடு ஒருநால் வகை அணு ... - மணி 27/113,114
முது நீர் அணு நில அணுவாய் திரியா - மணி 27/129
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் - மணி 27/138

மணிமேகலையானது அணுக்களை நில அணு, நீர் அணு, காற்று அணு, தீ அணு என்று நால்வகையாகப் பிரிக்கிறது. இவற்றைப் பரமாணுக்கள் என்றும் கூறுகிறது. நீர் அணு நில அணுவாய் மாற்றமடையாது என்பது உட்பட நால்வகை அணுக்களின் இயல்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.

மணிமேகலையை அடுத்து அணுவைப் பற்றிக் குறிப்பிடுவது கம்பராமாயணம் ஆகும். அணுவைப் பற்றிக் குறிப்பிடும் கம்பராமாயணப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் - யுத்2:19 185/4
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு
உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா - யுத்3:29 52/4

அணு என்பது மிகச்சிறிய ஒரு திணை என்ற கருத்தினை முதல்பாடல் வரியும் ஒரு அணுவைக் கொண்டு விண்ணைத் தொடுவதான மிகப்பெரிய மலையையும் தகர்க்க முடியும் என்ற கருத்தினை இரண்டாம் பாடல் வரியும் நமக்கு மறைமுகமாகக் கூறுகின்றன.

அணுவின் அளவு:

அணு என்பது மிகச் சிறிய ஒரு திணை என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்று மேலே கண்டோம். ஆனால் எந்த அளவுக்கு அது சிறியது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களின் உதவியால் அணுவின் அளவு கண்டறியப்பட்டுள்ளது. ஒரு திணையில் இருக்கும் அணுக்களின் அளவானது அதன் ஆரம் கொண்டு அறியப்படுகிறது. காரணம், எல்லாத் திணைகளின் அணுக்களும் ஒரே அளவு கொண்டவை அல்ல. சான்றாக,

கை`ட்`ரச^ன் அணுவின் ஆரம் = 25 / 10 ^ 12 மீட்டர்,
லித்தியம் அணுவின் ஆரம் = 145 / 10 ^ 12 மீட்டர்

தெளிவாகச் சொன்னால், 

கை`ட்`ரச^ன் அணுவின் ஆரம் = 0.000000025 மில்லிமீட்டர்,
லித்தியம் அணுவின் ஆரம் = 0.000000145 மில்லிமீட்டர்.

இவ்வளவு சிறிய துகளான அணுவுக்குள் அதைவிட மிகச் சிறிய துகள்களும் இருக்கின்றன. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

அணுத் துகள்கள்:

மிகச் சிறிய திணையான அணுவுக்குள்ளும் மிகமிகச் சிறிய துகள்கள் இருப்பது நுட்பமான அறிவியல் கருவிகளின் உதவியுடன் கண்டறியப்பட்டது. இவற்றை அணுத்துகள்கள் என்று கூறலாம். பொதுவாக, அணுத்துகள்கள் மூவகைப்படும். அவற்றின் ஆங்கிலப் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்.

மேலே காணும் இந்த மூன்று துகள்களில் கடைசி இரண்டு துகள்கள் அணுவின் மையப்பகுதியில் இருக்கும். ஒரு திணையில் இருக்கும் அணுவின் எடைக்கு இந்த இரண்டு துகள்களே காரணமாக அமைகின்றன. பொதுவாக, அணுவின் மையப்பகுதியினை அணுக்கரு என்று அழைப்பர். இந்த அணுக்கருவினை மையமாகக் கொண்டு எலக்ட்ரான் துகளானது அணுவின் வெளிப்பகுதியில் எப்போதும் சுற்றிக் கொண்டேயிருப்பதாகும். இனி, இந்த மூன்று துகள்களைப் பற்றிய மேலதிக விளக்கங்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இத் துகள்களைக் குறிக்கின்ற ஆங்கிலச் சொற்களுக்கு மிக எளிமையான கலைச்சொற்களைத் தமிழில் எவ்வாறு படைக்கலாம் என்றும் கீழே பார்க்கலாம்.

அணுத்துகள்களின் தன்மைகள்:

தமிழில் சார்தல் என்றால் பொருந்துதல், சேர்தல் என்று பொருள். சார்த்துதல் என்றால் பொருந்தச்செய்தல், சுமக்கச் செய்தல் என்று பொருள். சார்த்தப்படுவது சாரம் அதாவது ஒன்றின்மேல் ஏற்றப்படும் / சுமத்தப்படும் சுமை ஆகும். உயரமான கட்டிடங்களில் ஏறிநின்று வேலை செய்ய ஏதுவாக கட்டிடச் சுவரின்மேல் மரக்கழிகளைப் பொருத்திச் சாரம் அமைப்பர். அதைப்போல, அணுத்துகள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுமை அல்லது சாரத்தைக் கொண்டது. இங்கே சாரம் என்பது சார்ச்^ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கானத் தமிழ்ச் சொல்லாகும். அதாவது,

சார்ச்^ = சாரம்
எலக்ட்ரிக் சார்ச்^ = மின்சாரம்

அணுத்துகள்களில் எலக்ட்ரான் என்பது எதிர்மின் சாரமுடையது. இதனை - என்ற கழித்தல் குறியீட்டால் குறிப்பது வழக்கமாகும். புரோட்டான் என்பது நேர்மின் சாரமுடையது. இதனை + என்ற கூட்டல் குறியீட்டினால் குறிப்பது வழக்கம். நியூட்ரான் என்பது எவ்வித சாரமும் அற்றது என்பதால் இதற்கு எவ்விதக் குறியீடும் இல்லை.

பொதுவாக, அணுத்துகள்கள் மூன்றிலும் எலக்ட்ரானே ஒரு அணுவின் வெளிப்பகுதியில் இருப்பதால் பிற அணுக்களுடனான தொடர்பு வினைகளில் எலக்ட்ரானே பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். அதாவது, ஒரு அணுவானது இன்னொரு அணுவுடன் தொடர்பு கொள்ளும்போது தனது புறத்திலுள்ள எலக்ட்ரான் துகள்களையே பகிர்ந்து கொள்கிறது. இவ்வாறு பகிரும்போது எலக்ட்ரான் துகள்கள் ஒரு அணுவில் அதிகமாகவும் இன்னொரு அணுவில் குறைவாகவும் ஆகும். இந்த கொடுக்கல் வாங்கலின்மூலம் ஒரு அணுவின் இயல்பான எலக்ட்ரான் எண்ணிக்கை மாறுபடுவதால் அது ஒரு சாரமுடையதாக மாறுகிறது. இதனையே ஆங்கிலத்தில் அயன் என்று அழைப்பர். அயன் என்பது சாரமுடைய ஒரு அணு என்பதால் அதனைக் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தலாம்.

அயன் = (சாரம் - அம்) + அணு = சாரணு.

இப்படி, இயல்பு நிலையில் இருக்கும் அணுவினை ஒரு சாரமுடையதாக மாற்றும் வினையை அயனைசே`ச`ன் என்று ஆங்கிலத்தில் கூறுவர். இதனையே நாம் எலக்ட்ரிக் சார்சி^ங் என்று பொதுவழக்கில் சொல்கிறோம். இச் சொல்லைக் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தலாம்.

எலக்ட்ரிக் சார்சி^ங் / அயனைசே`ச`ன் = மின்சார்த்தல்.

" எனது செல்பேசியை அரைமணி நேரம் மின்சார்த்திக் கொடுங்கள் " என்று இனி அழகுதமிழிலேயே கூறலாம்.

மின்சார்த்தல் மூலமாக, ஒரு அணுவானது சாரம் உடையதாக மாறுகிறது என்று கண்டோம். அப்படி மாறும்போது, ஒரு அணுவில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இன்னொன்றில் குறைவாகவும் ஆகும் என்று கண்டோம். எந்த அணுவில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதோ அதனை பாசி`டிவ் அயன் அல்லது கேட்டையன் என்றும் எதில் அதிகமாக உள்ளதோ அதனை நெக~டிவ் அயன் அல்லது ஆனையன் என்றும் ஆங்கிலத்தில் கூறுவர். இச் சொற்களையும் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தலாம்.

பாசி`டிவ் அயன் அல்லது கேட்டையன் = குறைச்சாரணு >>> குறணு என்றும்
நெக~டிவ் அயன் அல்லது ஆனையன் = மிகைச்சாரணு >>> மிகணு என்றும் கூறலாம்.

இதிலிருந்து, சாரணுக்கள் குறணு என்றும் மிகணு என்றும் இருவகைப்படும் என்று அறியலாம். இவற்றில் குறணுவானது கூட்டல் (+) குறியீட்டுடனும் மிகணுவானது கழித்தல் (-) குறியீட்டுடனும் குறிக்கப்படும். சான்றாக, சோ`டி`யம் குளோரைடு` என்ற சாதாரண உப்பை எடுத்துக் கொள்வோம். இதில் சோ`டி`யம் அணுவும் குளோரின் அணுவும் சேர்ந்து வினைபுரிகின்றன. இவ்வினையில்,

சோ`டி`யம் என்னும் அணுவானது தனது ஒரு எலக்ட்ரானைக் கொடுத்து நேர்மின் சாரமடைவதால் அதனை சோ`+ என்றும்
குளோரின் என்னும் அணுவானது சோ`டி`யத்திடம் இருந்து ஒரு எலக்ட்ரானை ஏற்று எதிர்மின் சாரமடைவதால் அதனை கு- என்றும் எழுதுவர்.

ஆகமொத்தம், - என்னும் கழித்தல் குறியீடானது எலக்ட்ரான் மிகைநிலையினையும்
+ என்ற கூட்டல் குறியீடானது எலக்ட்ரான் குறைநிலையினையும் குறிக்கும் என்பது வெளிப்படை ஆகும்.

அணுத்துகள்களின் தமிழ்ப்பெயர்கள்:

வறுமையில் வாடும் ஒருவர் தனது பசித்துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் பிறரிடம் இரக்கும்போது, அவர் தன்னிடம் உள்ள செல்வத்தினை இரப்பவருக்குக் கொடுத்து உதவுவதலைப் புரத்தல் என்று கூறுவோம். இவ் வினையில், செல்வத்தைக் கொடுத்து உதவியவரைப் புரந்தான் என்றும் அதனை ஏற்றுக்கொண்டவரை ஏற்றான் என்றும் கூறுவோம். பசித்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு யாரிடமும் இரவாமல் இருப்பவரை நோற்றான் என்று கூறுவோம். இப்படி, பொதுவழக்கில் பயன்படுத்தப்படும் ஏற்றான், புரந்தான், நோற்றான் ஆகிய சொற்களைக் கொண்டே மூன்றுவகையான அணுத்துகள்களுக்கும் தமிழில் பெயர் அமைக்கலாம். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

எலக்ட்ரான் என்பது பசிக்காக செல்வத்தை இரந்து ஏற்றானைப் போல (-) என்னும் மிகைநிலைக் குறியீட்டைக் கொண்டிருப்பதால்
எலக்ட்ரான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்றான் என்றும்

புரோட்டான் என்பது இரந்தவனுக்குச் செல்வத்தைக் கொடுத்துப் புரந்தவன் போல (+) என்னும் குறைநிலைக் குறியீட்டைக் கொண்டிருப்பதால்
புரோட்டான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் புரந்தான் என்றும்

நியூட்ரான் என்பது பசியைப் பொறுத்துக் கொண்டவனைப் போல யாரிடமும் இரந்து பெறாததால்
நியூட்ரான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நோற்றான் என்றும் பெயர் சூட்டலாம். சுருங்கச் சொன்னால்,

எலக்ட்ரான் = ஏற்றான்
புரோட்டான் = புரந்தான்
நியூட்ரான் = நோற்றான்

மூன்று அணுத்துகள்களுக்கும் உரிய மேற்காணும் தமிழ்ப்பெயர்கள் ஆங்கிலச் சொற்களைப் போன்ற ஒலிப்புடன் 'ஆன்' விகுதி பெற்று ஆங்கிலப் பெயர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன என்று பாருங்கள். 'ஆன்' விகுதிக்குப் பதிலாக 'ஐ' விகுதியினைப் பயன்படுத்தி இப்பெயர்களை இன்னும் சுருக்கலாம்.

எலக்ட்ரான் = ஏற்றான் >>> ஏற்றை
புரோட்டான் = புரந்தான் >>> புரந்தை
நியூட்ரான் = நோற்றான் >>> நோற்றை

இவற்றில் எலக்ட்ரானை அடிப்படையாகக் கொண்டு பல பயன்பாட்டுச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை எவ்வாறு தமிழில் மொழிபெயர்த்துக் கலைச்சொற்களாக மாற்றுவது என்றும் கீழே காணலாம்.

எலக்ட்ரானிக் = ஏற்றைய
எலக்ட்ரானிக்ச்` = ஏற்றையம்
எலக்ட்ரானிக் டிவைச`ச்` / எக்யூப்மெண்ட்ச்` = ஏற்றைய கருவிகள்
எலக்ட்ரானிக் கு~ட்`ச்` = ஏற்றைய திணைகள்
எலக்ட்ரானிக் சர்க்குட் = ஏற்றைய சுற்று

முடிவுரை:

இதுவரை நாம் மேலே கண்ட கலைச்சொற்களைத் தொகுத்துக் கீழ்க்காணுமாறு வழங்கலாம்.

CHARGE = சார்ச்^ = சாரம்
ELECTRIC CHARGE = எலக்ட்ரிக் சார்ச்^ = மின்சாரம்
ION = அயன் = சாரணு
ELECTRIC CHARGING = எலக்ட்ரிக் சார்சி^ங் = மின்சார்த்தல்
IONIZATION = அயனைசே`ச`ன் = மின்சார்த்தல்
POSITIVE ION = பாசி`டிவ் அயன் = குறணு
CATION = கேட்டையன் = குறணு
NEGATIVE ION = நெக~டிவ் அயன் = மிகணு
ANION = ஆனையன் = மிகணு
ELECTRON = எலக்ட்ரான் = ஏற்றை
PROTON = புரோட்டான் = புரந்தை
NEUTRON = நியூட்ரான் = நோற்றை
ELECTRONIC = எலக்ட்ரானிக் = ஏற்றைய
ELECTRONICS = எலக்ட்ரானிக்ச்` = ஏற்றையம்
ELECTRONIC DEVICES / EQUIPMENTS = எலக்ட்ரானிக் டிவைச`ச்` / எக்யூப்மெண்ட்ச்` = ஏற்றைய கருவிகள்
ELECTRONIC GOODS = எலக்ட்ரானிக் கு~ட்`ச்` = ஏற்றைய திணைகள்
ELECTRONIC CIRCUIT = எலக்ட்ரானிக் சர்க்குட் = ஏற்றைய சுற்று
GOODS = கு~ட்`ச்` = திணைகள்

... தொடரும் ..............








--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Jul 18, 2018, 2:22:00 AM7/18/18
to மின்தமிழ்
அணு என்பது மிகச் சிறிய ஒரு திணை என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்று மேலே கண்டோம். ஆனால் எந்த அளவுக்கு அது சிறியது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறவில்லை....

திருமந்திரம்

ref:

&



1971. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே.

(ப. இ.) அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் அளவின்றி நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். அணுகுவது - மாணடி சேர்வது.

-----------------------
கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?
[...]
இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன 

வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் 

முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை 

எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் 

அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு

ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்ப்போம். ஒரு 

மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின்

முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் 

என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்

(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்

(100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)

அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் 

சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 

0 .00000000025 மில்லிமீட்டர் (MM).



இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல்

ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட

பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன 

இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற 

பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் . நாம்

பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று.

 இப்பொழுது ஹிக்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் 

படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் 

காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் 

அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.
 
-----------------------------------

S. Jayabarathan

unread,
Jul 18, 2018, 7:34:24 AM7/18/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Raju Rajendran, kanmani tamil
நண்பர் சரவணன், 

Atomic Mass, Atomic Number, Atomic Mass Unit , Atomic Weight - அணு நிறை, அணு எண், அணு நிறை அளவி, அணு எடை. 

அணு நிறை வேறு, அணு எடை வேறு.

Electron - எதிரான், எதிர்த்துகள்

Proton  - நேரான், நேர்த்துகள்

Neutron - நடுவான், சமவான், முடவான் - முடத்துகள்

சி. ஜெயபாரதன்.


The atomic mass is expressed in units of atomic mass unit, or amu, and consists primarily of the protons and neutrons in the atom's nucleus, making it closely match the mass number of an atom. When an element has two or more isotopes, the atomic weight is expressed as an interval with an upper and lower number. Both atomic masses and atomic weights are determined by mass spectrometry, a technique where electrically charged particles are separated by their masses.


What Is the Difference Between Atomic Mass and Atomic Weight?

A:

QUICK ANSWER

Atomic mass is the mass of a single atom or an individual isotope. The atomic weight is the average mass of all naturally occurring isotopes of an element. 

CONTINUE READING



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages