தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்

1,168 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 11, 2017, 11:24:47 PM2/11/17
to மின்தமிழ்
நன்றி: சிறகு 

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்

தேமொழி 

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

     இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் தீட்டு”  “விழுப்புஎன்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  தீண்டாமைஎன்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

     கோ. க. பிள்ளை (1969), ஜார்ஜ் ஹார்ட் (George L. Hart, 1975a) போன்ற தமிழ் ஆய்வாளர்கள் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமையும் சாதிப்பிரிவினையும் இருந்துள்ளது எனத் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் கூறியுள்ளார்கள். இதனை மறுப்பவர்கள், குறிப்பாக அயல்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை மறுப்பவர்கள், அந்த ஆய்வாளர்களின் ஆய்வின் அடிப்படையில் புரிதல்பிழை நேர்ந்துள்ளது எனக் கருதுகிறார்கள். அயலக ஆய்வாளர்கள்  இந்திய வாழ்வியல் குறித்துத் தாங்கள் கொண்ட கருத்துப்பிழை காரணமாக, இக்காலச் சமூகத்தின் நிலைமையை அக்காலத்திற்கு ஏற்றிப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகிறார்கள்.  நூறாண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் இந்தியாவின் சாதி குறித்து வழங்கிய கட்டுரை முதற்கொண்டு இக்கால இந்தியச் சாதி ஆய்வாளர்களின் ஆய்வுகள் வரை, அயல்நாட்டு ஆய்வாளர்களுக்கு இந்திய சமூகத்தைக் குறித்த புரிதலில் பிழையிருக்கிறது என வைக்கும் விமர்சனமும் தொடர்ந்தே வருகிறது.

     தமிழ்ப்பண்பாட்டில் வளர்ந்த தமிழறிஞர்கள் பாவாணர் (1992), கைலாசபதி (1968), வீ. எஸ். ராஜம் (1992) போன்றோர் சங்க இலக்கிய நூல்களில் பறையன்’, ‘புலையன்’, ‘புலைத்தி’, போன்ற தொழில் அடிப்படையிலான பெயர்கள்  ஒருவரின் தாழ்ந்த நிலையைக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள். இழிசினன், ‘இழிபிறப்பினோன், ‘இழிபிறப்பாளன்என்று சங்க இலக்கியங்களில் வழங்கிவரும் சொற்கள், இக்காலத்தில் நாம் கருதுவது போல, இழிந்தோன்என்ற பொருள் தரும் வகையில் ஒருவரைக் குறிக்கவில்லை என்றும் ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்கள். வீ. எஸ். ராஜம்  (2015) அவர்கள் தாம் எழுதிய  சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற …’ என்ற நூலில் தொல்காப்பியம் முதற் கொண்டு சங்ககால இலக்கியங்கள், இலக்கணங்கள், சங்கம் மருவிய நூல்கள், பிற்காலத்திய தொல்காப்பிய  இலக்கண உரைநூல்கள் என விரிவாக அலசிப் பல சான்றுகள் வழியாகச்  சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் சாதிக்கோட்பாடு இல்லை என்று நிறுவுகிறார். சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசும் சாதி, தீண்டாமை போன்றவை வழக்கத்தில் இல்லை என்றால்  எக்காலத்தில் இச்சொற்கள் தமிழ்ச் சமூகத்தின் தாழ்ந்த குலத்தவர் என ஒரு சில பிரிவினரைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தும் நிலை உருவானதுஏன் அந்த மாற்றம் என்பதை ஆராய்வது தொடர்ந்து வருகிறது.   இதன் பொருட்டு  சங்கம் மருவிய காலத்துத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலும், இலக்கியங்களிலும் விடை தேடி வருகிறார்கள் ஆய்வாளர்கள்.

     இந்த வரிசையில் ஆய்வாளர் முனைவர் பழனியப்பன் (முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், தலைவர், தென்னாசிய ஆய்வு மற்றும் தகவல் கழகம் / Dr. Sudalaimuthu Palaniappan, President, South Asia Research and Information Institute, www.sarii.org) அவர்கள் 2008 ஆம் ஆண்டு சர்வதேச சமண சமய ஆய்விதழில் வெளியிட்ட சங்கம் மருவிய தமிழகத்தில் சாதிகள் உருவானதில் சமணம் அளித்த எதிர்பாராத் தாக்கம்(On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society – https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf) என்ற ஆய்வுக் கட்டுரை சற்றே விரிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.  இலக்கிய ஆய்வுடன் நின்றுவிடாமல், வரலாற்றாய்வு, கல்வெட்டியல், சமண சமய நூல் விளக்கங்கள், மானுடவியல், மற்றும் திராவிட மொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டு, ஒரு பலதுறை அணுகுமுறையில் ஆய்வை மேற்கொள்ளும்பொழுது பழந்தமிழ்ச் சமூகத்தினரின் வாழ்வியல் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு புதிய கோணம் வெளியாகிறது என்கிறார் பழனியப்பன்.   முனைவர்  பழனியப்பன் சமணம் சமயம் ஏற்படுத்திய  தாக்கம் குறித்து  முன்வைக்கும் கருதுகோளையும்தனது கருதுகோளுக்குச் சான்றாக  அவர் வைக்கும் விவாதங்களையும் கொண்ட ஆய்வுக்கட்டுரையினைச் சுருக்கமாக  இனி காணலாம்.

சமண சமயம் எதிர்பாராதவிதமாகத் தமிழகத்தின் சாதிவளர்ச்சியின் வினையூக்கியாக மாறிய நிலை:

     சங்க இலக்கிய காலத்தில் பொருளாதார அடிப்படையில் செல்வந்தர்கள் வறியவர்கள் இருந்துள்ளனர், தலைவர் ஊழியர் இருந்துள்ளார்கள், மன்னர் குடிமக்கள் இருந்துள்ளார்கள், ஆனால் வறியவர்களை இழிவாக நினைத்து ஒதுக்கும் நிலை இருந்ததில்லை, தீண்டத்தகாதவர்கள் எனக் கருதிய நிலையும் இல்லை என்பதுவே சங்க இலக்கியங்கள் கூறுவது.  தங்களிடம் பரிசில் பெற வருபவர்களை மன்னர்கள் மதிப்புடன் நடத்தியுள்ளார்கள். புரவலர்கள் தங்களை மதித்துத் தங்களது திறமையைப் பாராட்ட வேண்டும் என்பதே பரிசில் பெறுவோரது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது. பொருநர்களை மதித்துப் பரிசில் வழங்கி அவர்களைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பும் கரிகால்வளவனின் செய்கையைக் குறிக்கும் பொருநராற்றுப்படை பாடல் (151-167) கூறுவதும் இத்தகைய நிகழ்வுகளையே.  இப்பண்புகளால் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தினர், பிறகு வந்த  சங்கம் மருவிய தமிழ்ச் சமூகத்தில் இருந்தும், வர்ணாசிரம பிரிவுகளைத் தழுவிக் கொண்ட வட இந்தியச் சமூகத்தில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவர்களாகவே  இருந்திருக்கிறார்கள். சுருங்கச் சொல்லின்சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறானது எவ்வாறு சாதிகளற்ற ஒரு சமூகம் உயர்வுதாழ்வுகளைப் பேசித் திரியும் சாதிகள் கொண்ட ஒரு சமூகமாக மாறியது என்ற  தனிப்பட்ட கோணத்தை வெளிக்கொணரும்  ஒரு வரலாறாகும்.

     பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்(1975) சங்க காலத்தில் துப்புரவற்ற தொழில் புரிந்த காரணத்தினால்  புலையர், புலைத்தி, பாணர், பறையர் ஆகியோர் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டனர் என்று கூறும் கருத்தினை மறுப்பதாகவே  இலக்கியமும் (பரிபாடல், 3.86), மொழியியல், வரலாற்றியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளும் அமைந்துள்ளன.  பொ.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல்லில் சாக்கைப் பறையனார்என்ற போர் வீரர் பற்றிய கல்வெட்டுக் குறிப்பொன்று, மதிப்பைக் காட்டப் பயன்படும் ஆர்விகுதி கொண்டு காணப்படுகிறது. அவ்வாறே, சங்கம் மருவிய காலத்துச் சோழ பாண்டிய மன்னர்கள் குறித்த செய்திகளிலும், பாணரைப் பெருமைப்படுத்தும் குறிப்புக்கள் கொண்ட  பல கல்வெட்டுத் தகவல்கள் கிடைத்துள்ளன. தர்மபுரிக் கல்வெட்டு ஒன்று (கல்வெட்டு எண், 1974/66) புலைய மன்னார்என்பவர் புறமலை நாடுஎன்ற தர்மபுரிப் பகுதியை ஆட்சி செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.  ஆகவே, பாணர், பறையர், புலையர்  போன்றோர் துப்பரவற்றது எனக் கருதப்படும் தொழில்களைச் செய்தவர்களும் அல்லர்.  இவர்கள் சமயச்சடங்கைச் செய்த தகவல்களும் இலக்கியத்தில் காணப்படுகின்றன.  சமயச் சடங்கில் ஈடுபட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக அக்காலத்தில் கருதினார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகவும் இல்லை. சங்ககாலச் சமயச்சடங்குகளை தீட்டு’, ‘தீண்டாமைஆகியவற்றுடன் தொடர்பு படுத்தும் முயற்சி ஆய்வாளர்களின்  புரிதல் பிழையையும் காட்டுகிறது.  இப்பிழைக்குக் காரணம் இக்காலச் சமூகத்தின் நிலைமையை அக்காலத்திற்கு ஏற்றிப் புரிந்து கொள்வதால் ஏற்படுகிறது. அத்துடன் காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறிவிடுவதையும் இந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

     சங்க இலக்கியப் பாடல்களில், ‘புலையன்என்ற சொல் பாணரையும்குறிக்கிறது, பறை முழக்கியவரையும் குறிக்கிறது (நற்றிணை 347), ஈமச்சடங்குகளைச் செய்யும் சமயக்குருமார்களையும் குறிக்கிறது (புறம். 360); ‘புலைத்திஎன்பவள் அழுக்குத் துணிகளை வெளுத்திருக்கிறாள் (குறுந்தொகை 330) எனச் சங்க இலக்கியப் பாடல்களில் காணக் கிடைக்கிறது.  அத்துடன்,  ‘புலைத்திசமயச் சடங்குகளைச் செய்திருக்கிறாள் (புறநானூறு  259) என்றும்கூடை முடைந்திருக்கிறாள் (கலித்தொகை  117) என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. இழிபிறப்பினோன்எனக் குறிப்பிடப்படுபவர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளார்; ‘இழிபிறப்பாளன்என்பவர் பறை முழக்கியுள்ளார்; ‘இழிசினன்எனப்படுபவர் தண்ணுமை இசைப்பவராகவும், கட்டில் செய்பவராகவும் காட்டப்படுகிறார்.

     இந்தச் சான்றுகளின் அடிப்படையில் இத்தொழில்களைச் செய்தவர்களை தாழ்ந்த சாதியினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றனவா என ஆராயத் தேவையுள்ளது. அத்துடன், சங்ககாலச் சமூகம் சாதிகளும் தீண்டாமையும் கொண்ட ஒரு  சமூகமாக இருந்திருக்கவில்லை என வாதிடுவோரும் இன்று இழிந்தஎன்ற பொருள் தரும் இச்சொற்கள் குறிப்பது எதை என்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தக்க விளக்கம் அளிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     கலாச்சாரத் தொடர்பில் விழுந்த இடைவெளியால் எழுந்த சொற்களில் ஏற்பட்ட பொருள் மாற்றத்தை அறியாமல் சங்க இலக்கியங்களை ஆராயும் தமிழறிஞர்கள் தற்கால நிலையைப் பண்டைக்கால வாழ்வு முறையில் ஏற்றி காலத்திற்கு ஒவ்வாத பொருளை அளித்து வருகிறார்கள் என்பதைச் சேரிஎன்ற சொல்லிற்கு இவர்கள் பொருள் கொள்ளும் முறை விளக்கும்.  சேரிஎன்று வாழ்விடத்தைக் குறித்த சங்ககாலச் சொல்லுக்கு இக்காலப் பொருளை ஏற்றி ஆய்வாளர் ஜார்ஜ் ஹார்ட் (1987) எவ்வாறு பிழையாக விளக்கம் தருகிறார் என்பதைப் பார்ப்போம். பண்டைத் தமிழகத்தில் தாழ்ந்த சாதி மக்கள் பெரும்பாலும் ஊரிலிருந்து தனித்து வாழ்ந்தார்கள், பட்டினப்பாலை 75-ஆம் வரி இப்பொழுது உள்ளது போலவே அக்காலத்திலும் ஊருக்குப் புறத்தே இருந்த சேரியைக் குறிப்பிடுகிறது. பன்றிகளும் கோழிகளும் மீனவர்களும் வாழும் இச்சேரிப் பகுதியில் தாழ்ந்த குல மக்களும் வாழ்ந்தனர்என ஜார்ஜ் ஹார்ட் விளக்கம் தருகிறார். ஆனால் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும்  குறிப்பிடப்பட்ட சேரிவேறு விதமானது.  குறுந்தொகை (231) பாடல் தலைவன் வாழ்ந்த வீதியைச் சேரி எனக் குறிப்பிடுகிறது. பிராமணர்கள் வாழ்ந்த பகுதியை சேரி எனக் குறிப்பிடும் கல்வெட்டுத் தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று பிராமணர்கள் குடியிருப்பைப் பார்ப்பனச்சேரிஎனக் குறிப்பிடுகிறது. மேற்கூறப்பட்ட பட்டினப்பாலை பாடல் விளக்கம், சங்க இலக்கியங்கள் காலத்திற்கு ஒவ்வாத பொருள் கொண்டு படிக்கப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது சங்ககாலச் சேரி வாழ் மக்களின் வாழ்வுமுறையைக் குறித்த பிழையான புரிதலுக்கும் வழிவகுக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களின் சேரிகளில் வாழும் இக்கால மக்களின் நிலையினை பண்டைய காலத்திற்கு  தொடர்புபடுத்திசங்ககாலச் சேரிமக்கள் தாழ்ந்தசாதி மக்கள் எனக்கூறுவது  பிழையான கருத்தாகும்.

     மேலும், இதே போன்று பிழையான மொழியியல் ஆய்வின் அடிப்படையில் புலைஎன்ற சொல்லுக்கும் அதிலிருந்து உருவான புலையன்’, ‘புலைத்திஎன்ற சொற்களுக்கும்  ஜார்ஜ் ஹார்ட் (1987)  அவர்களால் தவறான விளக்கமே அளிக்கப்படுகிறது.  இச்சொற்கள் பறையன்என்ற சொல் இகழ்ச்சியாக இக்காலத்தில் பயன்படுத்தப் படுவது போலவே பழந்தமிழகத்தில் இகழும் சொற்களாகப் பயன்படுத்தப்பட்டனஎன்பது ஜார்ஜ் ஹார்ட் கொடுக்கும் விளக்கம்.  ஆகவே, இது போன்ற தவறான விளக்கங்களைத் தவிர்த்து புலைத்தி’, ‘புலையன்’, ‘இழிசினன்’, ‘இழிபிறப்பினோன்’, ‘இழிபிறப்பாளன்போன்ற சொற்கள் சங்ககாலத்தில் எந்தெந்தப் பொருள்களில் பயின்று வந்தன எனத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

புலை’,‘புலையன்’,‘புலைத்தி’:

     பொதுவாக, சங்க இலக்கியம் காட்டும் புலையன்’,‘புலைத்திஎன்போர் தாழ்ந்த சாதி ஆண்மகன், பெண்மகள் என்று இன்று  புரிந்துகொள்ளப்பட்டாலும், ‘புலைத்திஎன்பவள் ஆடை வெளுக்கும் தொழிலை செய்த நற்பண்புகளைக் கொண்ட பெண்ணாகக் குறுந்தொகை (பாடல் 330) குறிப்பிடுகிறது.  புலைத்திஎன்பவள் முருகனுக்கு சமயச் சடங்கு செய்பவளாகப் புறநானூறு (பாடல் 259) குறிப்பிடுகிறது. இவ்வாறு முருகன் வழிபாட்டுச் சடங்கில் பங்கேற்பவளை குறமகள்’(குறிஞ்சி நிலத்தின் குறவர் இனப் பெண்) என்றும் திருமுருகாற்றுப்படை (வரி 241) காட்டுகின்றது.  முருகன் கோவில் வழிபாட்டை நடத்தும் பெண் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட வாய்ப்பில்லை. மேலும், ‘புலைத்திஎன்பவளைப் பூக்கூடை முடைந்து விற்பவளாகக் கலித்தொகை (பாடல் 117) காட்டுகிறது. [அவ்வாறே சங்க இலக்கியம் காட்டும் புலையன்என்பவனும் போரிலும் ஈடுபட்டுள்ளான் (நற்றிணை 77), துடி, தண்ணுமை, பறை, முழவு ஆகியவற்றை இசைத்திருக்கிறான்.  அத்துடன்இவை போன்ற இசைக்கருவிகளை வாசித்தவர்கள் புலையன்மட்டுமல்ல மழவர், மறவர், எயினர், பாணர் எனப் பலரும் இசைத்ததைப் பல சங்க இலக்கியப்பாடல்கள் காட்டுகின்றன.] இதனால் புலைஎன்ற சொல் தாழ்ந்த சாதியுடன் தொடர்புடையது என்ற கருத்தும் பொருளற்றுப் போகிறது.

இழிசினன்’, ‘இழிபிறப்பினோன்’, ‘இழிபிறப்பாளன்’:

     இழிசினன்என்ற சொல் இழிஎன்ற (உயர்வான இடத்தில் இருந்து கீழ்நோக்கி இறங்குதல், நிலை தாழ்வது என்ற பொருள் தரும்) சொல்லில் இருந்து தோன்றியது அல்ல (ஏனெனில் இழிஎன்ற சொல்லில் இருந்து வந்திருக்கவேண்டுமெனில் அது  இழிந்திசினோன்என்றுதான் வரமுடியும்.) சங்க இலக்கிய நூல்களில், ‘இழிசினன்என்ற சொல் மூன்று முறை இடம் பெறுகிறது. இருமுறை முரசு முழக்குபவரையும் (புறம் . 287; 289)  ஒருமுறை கட்டில் செய்பவரையும் (புறம். 82) குறிக்கிறது.  ஒரு அகநானூற்றுப் பாடலுக்கான (பாடல் 19) உரையில் உடுக்கை வகையைச் சார்ந்த மகுளி என்ற கருவியை இழுகு பறைஎன்கிறார்  தற்கால உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார். அவர்  கோல் கொண்டு இழுத்துத் தேய்த்து வாசிக்கும் இழுகு பறையின் ஒலி ஆந்தையின் குரலொலி போல இருக்கும் என்கிறார். [இழுகுதல் என்றால் ஒரு தளத்தின் மீது தடவுதல், இழுத்துத் தேய்த்தல், பூசுதல், உரசுதல் என்று பொருள். இன்றும் கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலில் "திருநீறு இழுகி விட முடிந்தது சடங்கு" என்ற சொல்லாட்சியைப் பார்க்கலாம்.] எனவே, இழுகு எனும் சொல்  பறையை  வாசிக்கும் முறையைக்  குறிக்கும் ஒரு சொல் என்றாகிறது.

     இழுகி என்ற சொல் திராவிட மொழியியல் காரணத்தால் இழுசி என்று மாறிப் பின் இழிசி என்று மாறும்.  இதற்குச் எடுத்துக்காட்டாகப் பெரிய திருமொழியில் (2.8.7) ஒரு பாடலுக்குச் சாந்து இழுசிய கோலம் என்றும் சாந்து இழிசிய கோலம் என்றும் பாட வேறுபாடங்கள் உள்ளதைச் சொல்லலாம். உரசுதல் போன்ற உராய்வு முறையில் பறை வாசிக்கும் செயலால் உண்டான  இழுகினன் என்ற சொல் இழுசினன் என்று மாறிப் பின்னர் இழிசினன்என்று மாறியிருக்கவேண்டும். ஆதலால் இழிசினன்என்பது  பறைவாசிப்பவரைக் குறிக்கும் பொருத்தமான சொல்லே.  மூன்றாவதாகக் குறிப்பிடும் இழிசினன் பற்றிய பாடலில், ‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்றுஎன்பது ஊரில் விழா நடக்கும்  நாளன்று, மகப்பேற்றை எதிர்நோக்கி இருக்கும் தன் மனைவிக்காகக் கட்டில் பின்னும் ஒருவன், பொழுது சாய்வதற்குள் விரைவாகக் கட்டிலைப் பின்னுவதைக் குறிக்கிறது. இப்பாடல் சுட்டும் இழிசினனும் ஊர் விழாவில் இரவு நிகழ்ச்சியில் ஒரு பறை வாசிப்பவனாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே பொழுது சாய்வதற்குள் கட்டிலைப் பின்னி முடிக்க முயல்கிறான்.

     சங்க காலத்தில் ஒருவர் குறிப்பிட்ட ஒரு தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலையும் இருந்ததில்லை. பூசாரி ஆகிய குயவரையும் (நற்றிணை 293), மீன் பிடிக்கும் பாணரையும் (அகநானூறு 196), சங்கு அறுத்து வளையல் செய்யும் வேள்வி செய்யாப் பார்ப்பாரையும் (அகநானூறு 24) சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.  எனவே பறை இசைக்கும் ஒருவன் கட்டில் பின்னுவதும்  சங்ககால வாழ்வியல் வழக்கத்திற்கு மாறானது அல்ல. விழாவில் பறை இசைக்கச்  செல்லும் அவசரத்தில் அவன் கட்டில் பின்னியிருக்கலாம். எனவே, பலநூற்றாண்டுகளாக இழிசினன்என்ற இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டு வந்திருந்தாலும், ‘இழிசினன்என்பது தாழ்ந்த குலத்தவனைக் குறிக்கிறது  எனப்பொருள் கொள்வது தவறாகும்.

     இழிபிறப்பினோன்எனக் குறிப்பிடப்படுபவர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளார், ‘இழிபிறப்பாளன்எனப் புறநானூறு (பாடல் 170) வேட்டுவக் குடியில் பறை இசைப்பவரைக் குறிக்கிறது. உடலை அறுத்து ஈமச்சடங்குகளைச்  செய்த சமய குருக்களைப்  புலையர்கள் என்று தமிழர் அழைத்தனர் என்றால் அத்தொழிலைப் பிராமணரும் செய்துள்ளனர் என்கிறது சங்க இலக்கியம்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் வேத பிராமணர்கள் ஈமச்சடங்குகளை நடத்தி வைக்கும் புரோகிதர்களாகத் தொழில் நடத்தியிருக்கிறார்கள்.  போர் முனையில் அன்றி  இயற்கையாக உயிரிழக்கும் வீரர்களின் மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது அக்காலத்தில்  மறக்குல மரபாகத்  தமிழ் நாட்டில் இருந்தது (புறம். 74). இம் மரபினையொட்டிப் போரில் இறக்காது இயற்கைச் சாவு எய்திய வீரர்களின் உடலை வெட்டி, சடங்குகள் செய்து அடக்கம் செய்வதை வேத பிராமணர்கள் ஈமச்சடங்குகளாகச் செய்துள்ளனர் (புறம். 93). அத்துடன் தோலால் செய்யப்பட்ட போர்முரசுகளை வழிபடும் சடங்குகளையும் செய்துள்ளனர்.  அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இச்சடங்குகள் செய்வது தூய்மையற்ற இழிந்த செயல்களாகக் கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை வேத பிராமணர்கள் இச்சடங்குகளைச் செய்ததில் இருந்து தெரிய வருகிறது. எனவே பழந்தமிழரிடையே தொழில் அடிப்படையினால்  தீண்டாமை இருந்திருக்கவில்லை என்பதற்கு இது சான்றாக விளங்குகிறது.

     சங்ககாலத்தில் வேத பிராமணர் ஈமச் சடங்குகளை செய்ததில் இருந்து புலைஎன்பதற்கு தீட்டுஎன்ற சொல்லுடன் தொடர்பிருந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. இது தீண்டாமை’ ‘சாதிகள்என்ற கோட்பாடுகள் அக்காலத்  தமிழரிடமும், பிற திராவிட மொழி பேசுவோரிடமும்  இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே காட்டுகிறது. பிராமணர்கள்’ ‘புலையர்கள்இடையே தூய்மை / மாசு என்ற வேறுபாடுகளைச் சங்க இலக்கியங்கள் காட்டாத பொழுது, சங்ககாலத்தில் சாதிகள், சாதி வேற்றுமைகள் இருந்தனவென்று கருதக் காரணமும் இல்லை.  அவ்வாறாயின்,   ‘புலை’, ‘புலைத்தி’, ‘புலையன்’, ஆகிய சொற்களுக்கு  இழிபிறப்பினோன்என்ற கருத்துடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பதற்குச் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் விடை பகரக்கூடும்.

தமிழகத்தில் சமணம்:

     கல்வெட்டுகள் தரும் தகவல் மூலம் பொ.மு.  2 ஆம் நூற்றாண்டு முதலே சமணம் தமிழகத்தில் பரவியிருந்தது தெரிகிறது (மகாதேவன், 2003).  மதுரைக்காஞ்சி  (476), அகநானூறு (123)  பாடல்களும் சமணர்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயத் தாக்கத்தில் பல தமிழ் நூல்கள் எழுதப்பெற்றன. சமண சமயம் தமிழ் இலக்கண இலக்கியங்கள் உருவாக்குவதில் கொண்டிருந்த பங்கு அளப்பரியது.  கமில் சுவலபில் (Kamil Zvelebil, 1975) தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றியது தொல்காப்பியர் என்றும், இந்நூல் பொது ஆண்டுகளுக்கு  முன்னர் (பொ.மு. 100) எழுதப்பட்ட நூல் என்றும் கருதுகிறார்.  அத்துடன், ஒரு சில வர்ணாசிரம  கருத்துக்களைக் கொண்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதியானது பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் திருத்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் கருதுகிறார். ஆகவே, தொல்காப்பியத்தில்  இடம்பெறும் வர்ணாசிரம கருத்துக்கள் பொ.மு. 100 ஆண்டுகளின் காலத்தில் எழுதப்பெற்ற தொல்காப்பிய மூலத்தில் பின்னர் பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் இறுதியாக நுழைக்கப்பெற்ற இடைச்செருகல்கள் என்று கூறும் கமில் சுவலபில் அவர்களின் கூற்று சாதி குறித்த ஆய்வில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கருத்து.

     தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, சமணர்களின் இலக்கியப்பங்களிப்பு சங்கம் மருவிய காலத்திலும், சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களையும், அறநூல்கள் பலவற்றையும் தமிழுக்குத் தருவது வரை தொடர்ந்தது.  சமணரின் தமிழ் இலக்கியப் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டாலும், சமண சமயக் கருத்துகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஏற்படுத்திய தாக்கம் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை.  சங்க இலக்கியங்களை ஆராயும்பொழுது அந்த ஆய்வு  பல்துறை அணுகுமுறையில் கையாளப்படாமல் அமைந்துவிடுவதே இக்குறைக்கான அடிப்படைக் காரணம்.

சமண சமய மரபு குறிக்கும் இழிபிறப்பினோன்என்போர்:

     கொல்லாமையை, அகிம்சையைப் போதித்த சமண சமயத் துறவிகள் சடங்கு செய்வதற்காக  உடலைக் கூறு போடுபவர்களையும்கொலைத்தொழில்  செய்பவர்களையும் நரகத்திற்குச் செல்பவர்கள் எனக் குறிப்பிட்டனர். சமணத்தின் சமயக் கோட்பாட்டின்படி  வானுலகில் தேவர்களும், மண்ணுலகில் மனிதர்களும், புவியின் கீழே  உள்ள  நரகத்தில்  தீவினை செய்த நரகர்களும் வாழ்கிறார்கள்.  கர்மவினைப் பயனின் காரணமாக  தேவ உலகில் இருப்பவர்கள் வினைப்பயன் காலம் முடிந்ததும் மண்ணுலகிற்குத் திரும்புவார்கள்.  பிற உயிரைத் துன்புறுத்தும் தீய  செயல்களைப் புரிந்தால்  மறுபிறப்பில் நரகத்தில் தள்ளப்படும் நிலையை அடைவார்கள்.  எனவேசமண சமயக் கோட்பாடுகளின்படி நரகம் என்பது கீழிருக்கும் ஓர் உலகம்.  சமண இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நூலிற்குப் பிற்காலத்தில் உரை வழங்கிய அடியார்க்கு நல்லார்  (12 ஆம் நூற்றாண்டு) தம் உரையில், துறவறத்தைத் துறந்து இல்லறத்தைத் தழுவிய துறவிகள் நரகத்திற்குச் செல்பவர்கள் என்ற சமண சமய நம்பிக்கையைக் குறித்து எழுதியுள்ளார்.  குறிப்பாகச் சிலப்பதிகாரம் (10.90-93 வரிகளுக்கு), உயிர்களைத் துன்புறுத்துபவர்கள்  இறப்பிற்குப் பிறகு புவிக்குக் கீழே உள்ள நரகத்திற்குச் செல்வதை இழிஎன்ற சொல் மூலம்தான் அவர் குறிப்பிடுகிறார்.

     சமண சமயக் கொள்கையில் பிறப்பின் அடிப்படையிலான  சாதி என்ற கோட்பாடு கிடையாது.  சமண சமயக் கொள்கைப்படி புலைஎன்பது இந்து சமய நம்பிக்கையின் கருத்தான  தீட்டுஎன்பதும்  அல்ல.  சமணத்தின் கொள்கையின்படி புலைஎன்பது தீயசெய்கையைக் குறிக்கிறது.  நற்பண்புகளைக் கொண்டோரே உயர்ந்தவர்கள், பிறப்பால் வருவதல்ல உயர்ந்தநிலை என்பது சமணம் காட்டும் நெறி.  ஆகவே, மறுபிறப்பில் கீழேயுள்ள நரகத்தில் பிறக்கும் தாழ்வை ஏற்படுத்தும் தொழிலைச் செய்வோன்  சமணரின் கொள்கைப்படி  புலையன்’, ‘இழிபிறப்பாளன்எனக் கருதப்பட்டனன். இவ்வாறே கொலைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் வேட்டுவன் தன் கர்மவினைப்பயன் காரணமாக நரகத்தில் மறுபிறவி எடுக்கும் நிலையில் உள்ளவன் எனக் கருதி அவனையும் இழிபிறப்பாளன்என்று சமணர் குறிப்பிட்டனர்.  இதில் இவ்வுலகில் உயர்வு தாழ்வு என்ற கருத்து நுழைக்கப்படவில்லை.  சமண நம்பிக்கையின்படி,  ‘இழிபிறப்பினோன்என்பதோ  இழிபிறப்பாளன்என்பதோ ஒருவர் செய்யும்  (அதாவது, சமணத்தின் கொல்லாமைக் கொள்கையுடன் முரண்படும்)  தொழிலால் உண்டாகும் கர்மவினைப்பயன் காரணமாக ‘‘நரகத்தில் மறுபிறவிஎடுக்கப்போவதைக் குறிப்பது. சங்கம் மருவிய காலத்துச்  சமணத் தமிழிலக்கியமான  ஏலாதியில் 67-ஆம் பாடலில் கணிமேதாவியார் (பொ.பி. 7 ஆம் நூற்றாண்டு) நரகத்தை இழிகதிஎனக் குறிப்பிடுகிறார்.

     சமணரின் பார்வையில், உயிர்ப்பலி கொடுக்கும் பூசாரிகளும் (அகநானூறு 242), உயிர்களைக் கொல்லும்  வேட்டுவர்களும் நரகத்திற்குச் செல்லும் இழிபிறப்பாளர்களே. இவர்களைச் சண்டாளர்கள் எனக் குறிப்பிடுகிறது சமணம். தமிழ்ச் சமூகத்தில் தீண்டத்தகாதவர் எனக் கருதப்படாத ஒரு சில உயர்நிலைப் பிரிவினரையும் இந்த வரிசையில் சேர்க்கிறது சமணம். சமணரான திவாகரர்’ (பொ.பி. 9 ஆம் நூற்றாண்டு) தொகுத்த திவாகர நிகண்டு’, தமிழகத்தின் கவுண்டர் பிரிவினரைச் சண்டாளர்கள், புலையர்கள் வரிசையில் சேர்த்துள்ளது. வேட்டுவக் கவுண்டர்கள் என அழைக்கப்பட்ட கவுண்டர்களின் ஒரு பிரிவினர் செய்த  வேட்டுவத் தொழிலின் காரணமாக இவ்வாறு அவர்களை  வகைப்படுத்துவது  சமணத்தின் கொல்லாமைக் கோட்பாட்டின் அணுகுமுறை.  வேதகால பிராமணரின் வைதீகச் சடங்குகளும், தொன்மையான தமிழரின் சமயச் சடங்குகளும் உயிர்ப்பலியைக் கடைப்பிடித்தவையே. சமணர் மட்டுமே தங்கள்  மதத்தின் அடிப்படைக் கொல்லாமைக் கொள்கையின் காரணமாக உயிர்ப்பலியை அக்காலத்தில் எதிர்த்தவர்கள்.

பார்ப்பனரும் புலையரும் செய்த தொழிலில் சங்க கால இலக்கியங்கள் வேறுபாடு காட்டாத பொழுது சங்ககாலத்தில் சாதிதீண்டாமை ஆகியவை இல்லை எனத் தெரிகிறது.  எனவே சங்ககாலத் தமிழரிடம் மாசு/தூய்மை காரணமாகத் தீட்டுஎன்ற கருத்தாக்கமும் அதனால் தீண்டாமையும்இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால், தற்கால  இந்தியச் சமூகத்தினை ஆராயும் மானுடவியல் ஆய்வாளர்கள்தொழில் முறைத் தூய்மை அடிப்படையில் தீட்டுஎன்பதுவே  தீண்டாமைமற்றும் சாதிப் பிரிவுகளுக்கு காரணம் எனக் கூறுவது பிழையான கருத்து என்பது தெரிகிறது.  சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர்  சமணம   சிறிது சிறிதாக தமிழகத்தில் வலுவிழக்கத் துவங்கிய காலத்தில், வைதீக பிராமண இந்து சமயம் எழுச்சியுற்று ஓங்கத் துவங்கியது.   இக்காலத்தில்   புலைஎன்பதை இறைச்சி உண்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளத் தலைப்பட்டனர் பிற்காலத் தமிழர்.     ஆகவே, புலை என்ற சொல்லின் தோற்றம், பொருள் குறித்துத் தீர ஆய்வு செய்தல் தேவை.

புலைஎன்ற சொல்லின் பொருள்:

     புலைஎன்ற சொல்லுக்கு   விழுப்பு’, ‘தீட்டுஎன்ற அடிப்படை இருக்க வாய்ப்பு இல்லை எனக் காட்டுகிறது சங்க இலக்கியம். எனவே, திராவிட மொழியியலின் வரலாற்றை மீளாய்வு செய்து புலை என்ற சொல்லின் பொருளை அறியலாம்.   ஜார்ஜ் ஹார்ட்  (1987) புலைஎன்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய சாதியின் தோற்றம் திராவிட மொழிகள் பேசியவரிடம் தோன்றியது என அவர் பயின்ற தமிழ்நூல்களின் அடிப்படையில் கூறுகிறார். புலைஎன்பதற்கும் புலவுஎன்பதற்கும் தொடர்புபடுத்தி, அதனை மாசு, இழிவு என்பதுடன் இணைத்து, அதன் அடிப்படையில்   தீண்டாமைக் கருத்திற்குப் பொருள் கொள்கிறார்.  மாறாகபுறநானூற்றுப் (93) பாடலின் பொருளோ இதை மறுக்குமாறு உள்ளது.   அத்துடன், சங்க நூல்களில் புலைஎன்பது இறைச்சிஎன்ற பொருளில் ஓரிடத்தில் கூடப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     புலையன், புலைத்தி, பாணன், துடியன் ஆகியோர் செய்த தொழில்களும் சமயச் சடங்குகளும் வாழ்வில் வளமை பெற, நன்மை பெற விரும்பிச்  செய்யப்பட்டவை.  அகநானூற்றுப்  பாடலின் (பாடல் 242) பொலியஎன்ற சொல்லும், மற்றொரு அகநானூற்றுப்  பாடலின் (பாடல் 370) பொலிந்தஎன்ற சொல்லும் சிறப்பு, நன்மை என்ற பொருளையே தருகின்றன.  நன்மையைக் குறிக்கும்  புலைஎன்ற சொல்லின் பொருள், பிற்காலத்தில் இழிநிலைஎன்ற  பொருள் கொண்டு  மாறிவிட்ட நிலையில் புலையன்என்போர்  இழிபிறப்பாளன்எனக் கருதப்பட அது  அடிப்படையாக அமைந்துவிட்டது எனக் கொள்ளலாம்.  கொங்கு வெள்ளாளரின் மூன்றாம் நாள் ஈமச் சடங்கில், இறந்தவரின் எலும்புகளை நீரில் வீசி, பசும் மரத்தினடியில் பாலை ஊற்றிச்  சடங்கு செய்யும் நாவிதர்சடங்கின் மரபாக பொலிகஎன உச்சரிப்பார் எனத் தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது.  தெலுங்கு மொழியில் நாவிதரைமங்கலஎன அழைப்பார்கள்.

     புறநானூற்றுப் பாடல்களில் (பாடல்கள் 29, 126, 373) வரும் பொலன், பொலிய, பொலிக, என்ற சொற்களும் பொன், அழகிய என்ற பொருளையே தருகின்றன.  கலித்தொகைப் பாடல் (பாடல் 68) குறிப்பிடும் பாணன் (இப் பாடலில் புலையன் என இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்) வாழ்க வளமுடன்என்ற பொருளில்  தலைவன் தலைவி வீட்டில் வளம் பெருக விரும்பி பொலிகஎன்று வாழ்த்துகிறான். புறநானூற்றுப் பாடல் (பாடல் 308) நன்மை நிறைந்த நயவரு பாண!என்றே பாணனைக் குறிப்பிடுகிறது.  ஒரு நற்றிணைப் பாடலில் (பாடல் 90) துணிவெளுக்கும் வண்ணாத்தியும் புலைத்தி எனக் குறிப்பிடப்படுவது அவளால் கிடைக்கும் நன்மையைக் குறிப்பதாகவே கொள்ளலாம். ஒரு புறநானூற்றுப் பாடல் (பாடல் 311) புலைத்தி கழீஇய தூ வெள் அறுவைஎன்றே துணி வெளுக்கும் வண்ணாத்தியைக் குறிப்பிடுகிறது. இங்குக் காட்டிய சான்றுகள் நன்மைக்குக் காரணமானவர்களையே புலையன் புலைத்தி  எனச் சுட்டுகிறது.  மேலும் இவர்கள் பாணனாகவும், துணி வெளுக்கும் பெண்ணாகவும் தொழில் செய்வதாகச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

     காலப்போக்கில் ஒரு சொல்லின் பொருள் மாறி வேறு ஒரு பொருளைக் குறிப்பதை நாம் அறிவோம். சில வேளைகளில் முற்றிலும் எதிரான பொருளும் கொள்ளப்படுவதுண்டு.  ஆகவே, நூல்களில் புலைஎன்ற சொல் இடத்திற்கு ஏற்ப என்ன பொருளில் வழங்கி வருகிறது என்பது ஆராயத் தேவையாகிறது. திராவிட மொழியியல் தோற்றப்பாட்டின் காரணமாக  என்பது  என்ற ஒலியாகக் காலப்போக்கில் வாய்வழிச் சொல் வரலாற்றில் மாற்றம் கண்டிருக்கிறது. பொத்என்ற வேரில் இருந்து  பொதி’, ‘புதைஎன்ற சொற்கள்  உருவானது போல; ‘ஒட்என்ற வேரில் இருந்து ஒடி’, ‘உடைஎன்ற சொற்கள்  உருவானது போல;  ‘பொல்என்ற வேரில் இருந்து  பொலி’, ‘புலைஆகிய சொற்கள் மற்றும்  ஒலி மாறுபாடுகளுடன் தோன்றியிருக்கின்றன.   பொலி, பொலிக, பொலிவு, பொலிய, பொலிதல், பொலிந்து, பொலிந்தஎன்ற சொற்கள் சிறப்பு, நன்மை, மங்கலம், வளமை, வளர்ச்சி, பொன் என்ற பொருள்களைத் தரும் சொற்கள்.  ஆகவே, ‘புலைஎன்ற சொல், தமிழில் பொலிவுஎன்ற பொருளையும், சமஸ்கிரத மங்கலம், சுபம்என்ற சொற்களுக்கும் இணையான பொருள் தருவது.

மாற்றம் பெற்ற தமிழ்ச் சமூகம்    

     சங்கம் மருவிய தமிழ்ச் சமூகமானது  சமணரின் கொல்லாமைக் கொள்கையின் அடிப்படையில் மாறுதல்களைக் கண்டது. கொல்லாமை, அகிம்சை என்ற சமண சமயக் கோட்பாடுகள் பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் பரவியிருக்கின்றன.  சங்கம் மருவிய காலத்தில் பிராமணர்களும், பிராமணர் அல்லாதாரும் பண்டைய தமிழ்ச் சமூகத்தின்  ஈமச்சடங்குகளைக் குறித்த எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, சங்ககாலத்தில் இருந்திராத வகையில் இச்சடங்குகளையும் அதைச் செய்வோரையும் இழிவாகக் கருதத் தலைப்பட்டனர் என்பதையும், அதற்குச் சமணத்தின் கொல்லாமை என்னும்  கொள்கை காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது எனவும் கருதலாம்.  இந்த மாற்றத்திற்கு இழிபிறப்பாளன’, ‘இழிசினன்என்ற சொற்களின் பொருளைத் தவறாகக் கையாண்டது காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது. இழிஎன்ற சொல்லில் இருந்து இழிசினன்என்ற தாழ்வு நிலையைக் காட்டும் சொல் பிறந்ததாக இன்றும் கருதப்படுவதில் இருந்து இதை நாம் அறியலாம்.

     இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வைணவ சமயத்தின் அடியார்கள் ஆழ்வார்கள்எனக் கடந்த 8  நூற்றாண்டுகளுக்கும் மேலாக அழைக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.   திருமாலிடம் கொண்ட  பக்தியில்  ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டதாகத் தமிழறிஞர்களாலும், வைணவப் பெரியோர்களாலும் பொருள் விளக்கம் தரப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த இறையடியார்கள்  தலைவர்என்று குறிக்கும் வகையில் ஆள்வார்கள்என்றுதான் முதலில் அழைக்கப்பட்டுள்ளார்கள் என மொழியியல் ஆய்வு காட்டுகிறது (பழனியப்பன், 2004). குறிப்பிடத்தக்க இம்மாற்றம் சற்றொப்ப  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைணவர்களிடம்  நிகழ்ந்திருக்கிறது. இந்த சொற்பொருள் மாற்றம் சமூகத்திலும் வைதீக கலாச்சாரத்திலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு மாற்றம் பெற்ற காலத்திற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து இந்து சமயத்தைச் சார்ந்த மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் இருந்து வந்தது இதற்குக் காரணமாகக் கூறலாம்.

     மாறாக, சங்ககாலத்திற்கும் சங்கம் மருவிய காலத்திற்கும் இடையே தமிழகத்தின் ஆட்சி தமிழர்களிடம் இருந்து களப்பிரர்கள் வசம் சென்றது. இதனால் பொ.பி. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழரின் சமூக கலாச்சார வாழ்வியலில் ஒரு பெருத்த இடைவெளியும் தோன்றியது. தமிழறிஞர்கள் இருண்டகாலம் எனக் குறிப்பிடும் இந்தக் காலத்தில் தமிழகத்திற்குச் சற்று வடக்கே இருந்த களப்பிரர்கள் தமிழகத்தினை ஆண்டதால் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை முறை முடிவுக்கு வந்து தமிழரின் கலாச்சாரத்தில் மாறுதல் நிகழ்ந்தது. கலாச்சாரம் மாறாத காலத்திலேயே ஒரு சொல்லின் பொருளும் ஒலியும்  மாறுகிறது என்றால், கலாச்சார இடைவெளி விழும்பொழுதும் சொல்லின் பொருளில்  மாற்றம்  நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.

     சமண சமயத்தினர் தீவிரமாகக் கொல்லாமைக் கொள்கையைப் பரப்பிய தாக்கத்தினால் சங்கம் மருவிய காலத்து மன்னர்களும்சமணத்தின் அகிம்சைக் கொள்கையின் தாக்கம் பெற்ற வைதீக பிராமண சமயத்தினரும் சமணத்தின்  கொள்கைகளை உள்வாங்கினர்.  இந்த மாறுதலால் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் சமயச் சடங்குகள் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கலாம். சமணரின்   கொல்லாமைக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கிய வைதீக பிராமணர் தமிழ்ப் பழங்குடியினரது சமயச் சடங்குகளைத் தாழ்ந்தவையாகவும் கருதத் தலைப்பட்டிருக்கக்கூடும். துடிப்பறையை  இசைக்கும் வேட்டுவக் குடியைச் சார்ந்த ஒருவனை  மறுபிறப்பில்  நரகத்திற்குப் போகும் இழிபிறப்பினோன்என உயர்வு தாழ்வு குறிக்காது சமணர் குறிப்பிட, பின்னர் சங்கம் மருவிய காலத்தில் உயிர்ப்பலி கொடுக்கும் வெறியாட்டுச் சடங்கில் முழவை இசைப்போனை வாழும் பிறவியிலேயே  கீழ்மகன்என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின்  பக்தி இயக்கம்காலத்தில்  (பொ.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டுகள்) இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

     நம்மாழ்வார் (9 ஆம் நூற்றாண்டு) தமிழரின்வெறியாட்டுஎன்ற சமயச் சடங்கைக் கீழான சடங்காகக் கருதியுள்ளார் (நாலாயிர திவ்யபிரபந்தம் 3069). அச்சடங்கில் பறை இசைப்பவரைக் கீழ்மகன்’(தாழ்ந்தவன்) எனக்குறிப்பிடுகிறார்.   வைதீக வழிபாட்டினை மேலான வழிபாட்டு முறையாகவும் குறிப்பிடுகிறார்.  தொண்டரடிப்பொடி ஆழ்வார் (9 ஆம் நூற்றாண்டு) ஒரு பாடலில் சமூகத்தில்  புலையர்களின் நிலையும் பிராமணர்கள் நிலையும் எதிரெதிர் நிலையில் இருப்பதைக் காட்டுகிறார் (நாலாயிர திவ்யபிரபந்தம் 914). ஆசாரக்கோவையின் (9 ஆம் நூற்றாண்டு) சைவசமய நூலாசிரியர் சடங்குகளைச் செய்ய நல்லநாள் குறித்து அறிய புலையரைக் கலந்தாலோசிக்க வேண்டாம், அதனை அறியப் பிராமணரையே  அணுகுமாறு அறிவுறுத்துகிறார் (ஆசாரக்கோவை 92). பத்தாம் நூற்றாண்டு கல்லாடம் என்ற சைவசமய இலக்கியம் (26.11) புலைஎன்பதைத் தீட்டுஎன்ற பொருளில் குறிக்கிறது.

     சமணத்தின் தாக்கத்தினால், சங்கம் மருவிய காலத்து இழிபிறப்பினோன்என்ற சொல் அடைந்த பொருள் மாற்றமும்; காலப்போக்கில் என்பது  என்ற ஒலியாக வாய்வழிச் சொல் வரலாற்றில் மாற்றம் கண்டதால்,  ‘புலைஎனப் பொருள்மாற்றம் அடைந்த  சொல்லும்அதன் தொடர்ச்சியாகப்  பிற்காலத்தில் அச்சொல் புலையன்’ ‘புலைத்திஎன்போர் தாழ்ந்த குல மக்கள் என்ற புரிதலுக்கு வழி வகுத்துள்ளது.  சமயச் சடங்குகளை நிகழ்த்திய இவர்கள் வறியவராக இருந்திருக்கலாம், ஆனால் தாழ்ந்தவர்களாக அக்காலத்தில் கருதப்படவில்லை. புலைஎன்ற சொல்லின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டால், வாழ்வில் வளம் பெருகும் சடங்குகளைச் செய்தவர்களாகவே அவர்கள் அறியப்படுகிறார்கள்.   இன்றும் சமயச் சடங்குகள் செய்யும்  கோவில் அர்ச்சகர்கள் வறியவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் தாழ்ந்தவர்களாகக் கருதுவதில்லை .

     கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றைப் போற்றிய சமணமே எதிர்பாராதவிதமாகப் பலநூற்றாண்டுகளாகத்  தமிழகத்தின் தீண்டத்தாகதவராகக் கருதப்படும் மக்கள் வன்முறையை எதிர்கொள்ளக் காரணமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது.  வைணவர்கள் ஆள்வார்’, ‘ஆழ்வார்வேறுபாடுகளைக் காலப்போக்கில் மறந்தது போலவே, தமிழர் சங்கம் மருவிய காலத்தில் நிகழ்ந்த மாறுதலில் தங்கள் வரலாற்றை மறந்து போனார்கள். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் மக்களால் வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் தாழ்ந்த சாதியினர் என்பவரோ, தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படுவோரோ இருந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய உண்மையை மறந்துவிட்டனர். இடைக்கால இலக்கிய உரைநூலாசிரியர்களின் நூல்களை விமர்சன நோக்குடன் கவனமாக ஆராயாமலும், அவற்றைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டதாலும், சமண சமயம் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களில், குறிப்பாக  புலையன்என்ற சொல்லின் பொருள் மாற்றத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த சரியான புரிதலைக் கொண்டிராததாலும், தமிழறிஞர்கள் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை சரிவரப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளார்கள்.

     இந்த ஆய்வின் முடிவும், எழுப்பியுள்ள விவாதங்களும்  அதன் தாக்கமும்  மிகமுக்கியமானவை.  திராவிடமொழிகளைப் பேசும் மக்கள் தொன்மையான காலத்தில் தங்களிடையே தீண்டாமை என்பதையோ சாதிகள் என்ற கோட்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. இக்காலத்தில் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிவரும் தென்னிந்தியப் பகுதிகள் சிலவும் முன்னொரு காலத்தில்  திராவிட மொழியினர் வாழ்ந்த பகுதிகளைச் சார்ந்தவையே.   ஆதலால், இக்கால இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்களில் பலரின் மூதாதையரும் சாதிகள், தீண்டாமை ஆகிவை இல்லாது வாழ்ந்திருக்கவே வாய்ப்புண்டு.  சுருக்கமாக, பட்டியல் சாதியினரும், தலித் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களும், தாழ்ந்த சாதியினராகக் கருதப்படுபவரும்இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிவரும் தென்னிந்தியப் பகுதி  மக்களின் மூதாதையரும் உண்மையில் தாழ்ந்தகுல மக்களாகக் கருதப் பட்டிருக்க மாட்டார்கள்.

     சங்க இலக்கியப் பாடல்கள் தரும் இந்தச் செய்திகள் இல்லாது போயிருந்தால் தென்னிந்தியாவின் தாழ்ந்த சாதியினர் குறித்த உண்மை வரலாறும்குறிப்பாக இந்தியாவின் தாழ்ந்த சாதியினர் எனக் கருதப்படுவோரின் வரலாறும் தெரியவராமல் போயிருக்கும்.  எனவே, சங்க இலக்கியப் பாடல்களை ஆராய்வதில்  பல்துறை அணுகுமுறையும், அவற்றைக் கல்வெட்டியல், சமய நூல் விளக்கங்கள், மொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டும் ஆய்வு செய்யவேண்டிய தேவையும்  இருக்கிறது என்று வலியுறுத்தும்  முனைவர் பழனியப்பன் அவர்களின் கோணம்  சாதிகளின் தோற்றத்தையும்  வளர்ச்சியையும் ஆராய்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய கருத்து.  முனைவர் பழனியப்பன் அவர்கள் அளிக்கும் கோணம் தமிழகத்தின் சாதிப்பிரிவுகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் புதிய கோணத்தில் காண வைக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

____________________________________________

On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society, Sudalaimuthu Palaniappan, International Journal of Jaina Studies (Online) Vol. 4, No. 2 (2008) 1-65.

https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf

Hart, George. L. “Ancient Tamil Literature: Its Scholarly Past and Future.” Essays on South India. Edited by Burton Stein, 41-63. Honolulu: The University Press of Hawaii, 1975a.

Hart, George. L. The Poems of Ancient Tamil. Berkeley and Los Angeles: University of California Press, 1975b.

Hart, George. L. “Early Evidence for Caste in South India.” Dimensions of Social Life: Essays in Honor of David G. Mandelbaum. Edited by Paul Hockings, 467-491. Berlin: Mouton de Gruyter, 1987.

Kailasapathy, K. Tamil Heroic Poetry. London: Oxford University Press, 1968.

Palaniappan, S. “Āvar or Nāyaār: The Role of Sound Variation, Hypercorrection and Folk Etymology in Interpreting the Nature of Vainava Saint-Poets.” South Indian Horizons: Felicitation Volume for François Gros on the Occasion of his 70th Birthday. Edited by Jean-Luc Chevillard, Eva Wilden & A. Murugaiyan, 63-84. Pondicherry: Institut Français De Pondichéry and École Française D’Extrême-Orient, 2004.

Pāvāar, G. Tēvanēyap. Paṇṭait Tamiar Nākarikamum Papāum. Ceṉṉai: The South India Saiva Siddhanta Works Publishing Society, 1992.

Pillay, Kōlappapiḷḷay Kanakasabhāpati. A Social History of the Tamils Part I. Madras: University of Madras, 1969.

Rajam, V. S. A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia: American Philosophical Society, 1992.

Zvelebil, K. V. Tamil Literature. Leiden: E. J. Brill, 1975.

N. Ganesan

unread,
Feb 12, 2017, 12:24:33 AM2/12/17
to மின்தமிழ்
சு. பழனியப்பனின் எட்டிமாலஜிகல் விசித்திரமானவை. நீண்ட வரலாறு கொண்ட இந்திய செம்மொழிகளின் இலக்கியங்களில் அவ்வாறு காணோம்.

உதாரணமாக, பொலிகபொலிக என்றும், பொன் என்ற சொல்லும் தொடர்புடையன.

ஆனால், புலைமை, புலவு, புலி போன்றவை முற்றிலும் வேறான அர்த்தம் கொண்டவை திராவிட மொழிகளில்.

புலை- என்ற சொல்லுக்கும், பொலி என்ற சொல்லுக்கும் திராவிட மொழிகளின் வார்த்தைகளை ஒப்பிட்டு
பேரா. ஹார்ட் போன்றோர் எழுதியுள்ளனர்.

அதேபோல, ஆழ்வார் - தியானத்தில் ஆழ்வார். இச்சொல்லை முதலில் தீர்த்தங்கரர்களுக்குப் பயன்படுத்தினோர் சமணர்கள். 
பின்னாளில் கிருஷ்ணர், விஷ்ணுவிடம் பக்தியில் ஆழ்ந்தோருக்கு ஆழ்வார் என்ற பெயர். ஆழ்தல், ஆள்தல் இரண்டும் வெவ்வேறு சொற்கள்.
புலை vs. பொலி, ஆழ்வார் vs. ஆள்வார் இவற்றை ஆராய்ந்தால் பழனியப்பன் கட்டுரைகளில் உள்ள பிழைகள் உணரலாம்.

பழைய இழைகளில் விரிவாக விளக்கம் இருக்கிறது,

இந்தியாவில் ஜாதிக் கோட்பாடு ஆழமானது. தமிழ்நாட்டில் மாத்திரம் இல்லை என்றால் தமிழர்கள் மார்ஸ் கோளிலா இருந்தார்கள்?

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
Feb 12, 2017, 12:54:21 AM2/12/17
to mintamil, jsthe...@gmail.com, Banukumar Rajendran

page 168

நால்வண்ணன் பற்றி குறிப்பிடும் யுவான் சுவாங்கு தீண்டாமை பற்றி ஏதும் குறிக்கவில்லை.

The Castes op India. Our author passes on to give a few particulars about the division of the people of India into castes. His statements may be loosely rendered as follows — There are four orders of hereditary clan distinctions. The first is that of the Brahmins or "purely living"; these keep their principles and liveconlinently, strictly observing ceremonial purity. The second order is that of the Kshatriyas, the race of kings ; this order has held sovereignty for many generations, and its aims are benevolence and mercy. The third order is that of the "Vaisyaa or class of traders, who barter commodities and pursue gain far and near. The fourth class is that of the Sudras or agriculturists; these toil at cultivating the soil and are in- dustrious at sowing and reaping. These four castes form classes of various degrees of ceremonial purity. The members of a caste marry within the caste, the great and the obscure keeping apart. Relations whether by the father's or the mother's side do not intermarry, and a woman never contracts a second marriage. There are also the mixed castes; numerous clans formed by groups of people according to their kinds, and these cannot be described. It will be seen from this passage that Tuan-chuang, like other Chinese writers on India, understood the term Brahman as meaning those who had hrahman in the sense of a chaste continent habit of life. The Kshatriyas were the hereditary rulers, and as such their minds were to be bent on benevolence and mercy. This is in accordance INTEBMAEBTINGS. 169 with Manu -who lays it down that the king should he a protector to his people.^ Yuan-chuang here puts the castes in the order given in brahmin books, but in the Buddhist scriptures the Kshatriyas are usually placed above the Brahmins. The phrase which he applies to the Vai^yas, whom he calls the trading caste, viz. "they barter what they have not" is one of some interest. The words are maoch'ien-yu-wu {% ^^ ^), and they are to be found in the Shu-ching with the substitution of ^ ioT ^, the two characters having the same sound but very different meanings. 2 Our pilgrim, it will be noticed, makes the ^udras to be farmers. But in Manu, and in some Buddhist works, the Vai^yas are farmers, and the business of the Sudras is to serve the three castes above them.^ The sentence here rendered "The members of a caste marry within the caste, the great and the obscure keeping apart" is in the original hu7i-chu-t'ung-ch'in-fei-fviryi-lu i^Wk'^UMik^W^ lit- "marriages go through the kindred, flying and prostrate different ways". Julien translates the words—"Quand les hommes ou les femmes se marient, ils prennent un rang eleve ou restent dans une condition obscure, suivant la difference de leur origine." This rendering seems to be absurd and it does violence to the text leaving out the two words t'ung-chHn and mistranslating yi-lu. What . our author states seems to be clear and simple. Marriages take place within a caste, and a Vaisya man, for example, may marry any Vaisya maid. And he will marry no other. To Yuan-chuang a caste was a gens or a clan denoted by one surname (^) and all who belonged to the gens were kindred, they were of one jati. So members of the caste might intermarry provided they were not already related by marriage. But though a man might espouse any maid of his caste, the rich and great married among themselves, and the poor 1 Ch. 1. 89 et al. 2 L. C. C. Vol. iii, p. 78, Shu-Ching, ch. 2. s Ch'eng-shih-lun, ch. 7 (No. 1274); Manu 1, 91. 170 THE AEMY IN INDIA. and obscure kept to themselves in their marriages. The words fei, "flying" and fu "prostrate", used for 'prosperous and ohscv/re have a reference to the first chapter of the Yih-ching. With vrhat Yuan-chuang tells us here we may compare Manu who lays down the law that "a father ought to give his daughter in marriage to a distinguished young man of an agreeable exterior and of the same class", and of the lady he says—"let her choose a husband of the same rank as herself." i The "mixed castes (tsa^hsing ^ ^)" are properly not "castes", but guilds and groups of low craftsmen and workmen. These include weavers, shoemakers, hunters, fishermen, and also water-carriers and scavengers. Alberuni's account of these and his description of the four castes may be used as a commentary to the short account given by our pilgrim.2

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

க. தில்லைக்குமரன்

unread,
Feb 13, 2017, 12:14:50 PM2/13/17
to மின்தமிழ்
அதானே பார்த்தேன் எங்கடா கணேசனார் வரவில்லை என்று? :)

N. Ganesan

unread,
Feb 13, 2017, 12:53:36 PM2/13/17
to மின்தமிழ்

On Monday, February 13, 2017 at 9:14:50 AM UTC-8, க. தில்லைக்குமரன் wrote:
அதானே பார்த்தேன் எங்கடா கணேசனார் வரவில்லை என்று? :)

Tamils and scholars know very well the differences between pulai- vs. poli-.
Check with Tamil professors.

N. Ganesan
 
தேனீ

unread,
Feb 13, 2017, 10:06:42 PM2/13/17
to மின்தமிழ்

"இந்தியாவில் ஜாதிக் கோட்பாடு ஆழமானது. தமிழ்நாட்டில் மாத்திரம் இல்லை என்றால் தமிழர்கள் மார்ஸ் கோளிலா இருந்தார்கள்?"

தொழிற்பெயரைக் கொண்டெழுந்த வகுப்பு முறைதான் பிற்காலத்தில் சாதி என்றாகியது. இப்படி சாதிக்கான மூலத்தைப் புரிந்து கொண்டு பிறகு அத்தகைய குலத் தொழில் தொடர்ச்சி இன்று இல்லாமல் போனமையால் சாதி எப்படி தொடர்ந்து நிலைத்திருக்க முடியும் என்பதை உணர்வதுகூடவா கற்றோருக்குச் சிரமம்?

இத்தகைய அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டு சாதியைக் களைவது கற்றோருக்கு கஷ்டமா அல்லது நட்டமா?

இந்தியா முழுவதும் பற்றி ஏன் நாம் பேசுவானேன்? தமிழர் உண்மை அறிந்து அறிவார்ந்த மக்களாக வாழ வழிகோல வேண்டுமென்று வலியுறுத்தினால் அதற்கு விதண்டாவாதமாக  தமிழர்கள் என்ன செவ்வாய் கிரகவாசிகளா என்று கேட்டால் எப்படி? 

பிற இந்திய இனத்து மக்களுக்கு தமிழர் ஓர் எடுத்துக் காட்டு இனமாக வாழ்வதால் நம்மை வேற்று கிரகவாசிகளாக பார்ப்பார்களா என்ன?   அப்படியே பார்த்தால் பார்த்து விட்டு  போகட்டுமே. அதனால் யாருக்கென்ன நட்டம்?
 
கமலநாதன்

Prakash Sugumaran

unread,
Feb 14, 2017, 8:14:30 AM2/14/17
to mintamil

சாதிய அடிப்படையிலான சமூக வளர்ச்சியில் சமணத்தின் தாக்கம் மிக அதிகமானது. குறிப்பாக, கல்வி போதனை என்ற அடிப்படையில் ஜைனத்தின் தொடக்கம் இருந்தாலும், சமய ரீதியாக உடனடி ஆதரவு கிடைத்தது வணிகர்களிடம் இருந்து தான். கல்வி போதனையில் சமணம் ஏற்றத்தாழ்வுகளை புறக்கணித்தாலும், நிர்வாக நடைமுறைகளில் அகிம்சையை புகுத்தி, கையாண்ட வழிமுறைகள் சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை சமூக அமைப்புகளில் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், சமணத்தின் கல்வி போதனை பெரும்பாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறதே தவிர, நிர்வாக நடைமுறைகள் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியை கண்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் சமணத்தால் தொடங்கப்படவில்லை என்றாலும், சாதிய கட்டமைப்பு வளர்ச்சி பெறக் காரணம் சமணம் என்பது சரியே.

பொதுவாக, ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கு மதிப்பு அளிப்பது அல்லது ஒதுக்கப்படுவது என்ற நிலை இப்போதும் நடைமுறையில் இருப்பதே. அது இருக்கும் வரை சாதிரீதியிலான கட்டமைப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் தொழிலாளியை தம் நண்பன் என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லை. காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு உறவுகளே கூட பெண் தர பல நேரங்களில் முன் வருவதில்லை. நிரந்தரமான தொழில் செய்யாதவர்கள், வருவாய் குறைந்த வேலைகளில் இருப்பவர்கள் என பலவித மக்களுக்கும் வாழ்க்கை தொடர வாய்ப்பு அளிப்பதே சாதிய கட்டமைப்புகள் மட்டும் தான்.

ஒரு நிறுவனத்தில் வேறு வேறு படி நிலைகளில் பணிபுரியும் ஒரே சாதியை சேர்ந்த இருவரில் யார் மேல் படியில் இருக்கிறாரோ அவருக்கு அதிக மரியாதை கிடைப்பது இயல்பானது. தொழில் அடிப்படையில் சாதி அமைப்பு வளர்ந்து விட்டாலும், மதிப்பு - பெருமை - வாய்ப்புகள் ஆகியவற்றை பொறுத்தவரையில், முன்னுரிமை என்பதில் படி நிலைகள் தொடர்கிறது. அது ஒரே சாதிக்குள் நடக்கும்போது அதிகம் பேசப்படுவதில்லை. மாற்று சாதிகளுக்குள் நடந்தால் மோதலாக வெடித்துக் கிளம்புகிறது.

கிராமங்களில் இப்போதும் சன்னதி தெரு, பெரிய தெரு, மேட்டு தெரு, கீழ் தெரு, பள்ளர் தெரு, பறையர் தெரு, சாணார் தெரு என பலவித படி நிலைகள் இருந்தபடியேதான் உள்ளன. அதோடு இதுபோன்ற பல தொழில் - சாதி அடிப்படையிலான பெயர்களும் அப்படியே உள்ளன.

சென்னை போன்ற மாநகரங்களில் நவீனமான, மேற்கத்திய கலாசார பிரதிபலிப்பாக, கட்சி - சமூகத் தலைவர்களின் பெயர்களாக, மத அடிப்படையிலான பெயர்களாக தெருக்கள் புதிது புதிதாக தெருக்களின் பெயர்கள் சூட்டப்பட்டு வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, ஒவ்வொரு பகுதியிலும் சன்னதி தெருக்கள், பெரிய தெருக்கள், வன்னியர் தெருக்கள், சாணார் தெருக்கள், மேட்டு - கீழ் தெருக்கள் இப்போதும் உள்ளன. குறிப்பாக, கோயில் - வழிபாட்டு முறைகளில் உள்ள சாதிய அணுகுமுறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து நிரந்தரமாகி உள்ளது. (இதற்கான மாற்று என்று அறிமுகமான தேவாலயங்களிலும், மசூதிகளிலும் கூட ஏற்றத்தாழ்வுகள் மிகவும் சகஜமாகி விட்டது)

Banukumar Rajendran

unread,
Feb 14, 2017, 9:31:33 AM2/14/17
to மின்தமிழ்
2017-02-14 18:44 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:

சாதிய அடிப்படையிலான சமூக வளர்ச்சியில் சமணத்தின் தாக்கம் மிக அதிகமானது. குறிப்பாக, கல்வி போதனை என்ற அடிப்படையில் ஜைனத்தின் தொடக்கம் இருந்தாலும், சமய ரீதியாக உடனடி ஆதரவு கிடைத்தது வணிகர்களிடம் இருந்து தான். கல்வி போதனையில் சமணம் ஏற்றத்தாழ்வுகளை புறக்கணித்தாலும், நிர்வாக நடைமுறைகளில் அகிம்சையை புகுத்தி, கையாண்ட வழிமுறைகள் சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை சமூக அமைப்புகளில் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், சமணத்தின் கல்வி போதனை பெரும்பாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறதே தவிர, நிர்வாக நடைமுறைகள் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியை கண்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் சமணத்தால் தொடங்கப்படவில்லை என்றாலும்,

சாதிய கட்டமைப்பு வளர்ச்சி பெறக் காரணம் சமணம் என்பது சரியே.

சுடலைமுத்து பழனியப்பன் அவர்களின் கட்டுரை மறுமுறை படிக்கவும் பிரகாஷ்.

சமண சொல்லாடல்களின் உட்பொருள் புரியாமல் உரையெழுதியவர்கள் செய்த குளறுபடியால் வந்ததேயன்றி சமணத்திற்கும்
சாதிக்கும் சம்பந்தமில்லை.

இரா.பா

Feb 14, 2017, 10:13:19 AM2/14/17
to மின்தமிழ், vallamai
On Monday, February 13, 2017 at 7:06:42 PM UTC-8, தேனீ wrote:

"இந்தியாவில் ஜாதிக் கோட்பாடு ஆழமானது. தமிழ்நாட்டில் மாத்திரம் இல்லை என்றால் தமிழர்கள் மார்ஸ் கோளிலா இருந்தார்கள்?"

தொழிற்பெயரைக் கொண்டெழுந்த வகுப்பு முறைதான் பிற்காலத்தில் சாதி என்றாகியது. இப்படி சாதிக்கான மூலத்தைப் புரிந்து கொண்டு பிறகு அத்தகைய குலத் தொழில் தொடர்ச்சி இன்று இல்லாமல் போனமையால் சாதி எப்படி தொடர்ந்து நிலைத்திருக்க முடியும் என்பதை உணர்வதுகூடவா கற்றோருக்குச் சிரமம்?

இத்தகைய அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டு சாதியைக் களைவது கற்றோருக்கு கஷ்டமா அல்லது நட்டமா?

இந்தியா முழுவதும் பற்றி ஏன் நாம் பேசுவானேன்? தமிழர் உண்மை அறிந்து அறிவார்ந்த மக்களாக வாழ வழிகோல வேண்டுமென்று வலியுறுத்தினால் அதற்கு விதண்டாவாதமாக  தமிழர்கள் என்ன செவ்வாய் கிரகவாசிகளா என்று கேட்டால் எப்படி? 

பிற இந்திய இனத்து மக்களுக்கு தமிழர் ஓர் எடுத்துக் காட்டு இனமாக வாழ்வதால் நம்மை வேற்று கிரகவாசிகளாக பார்ப்பார்களா என்ன?   அப்படியே பார்த்தால் பார்த்து விட்டு  போகட்டுமே. அதனால் யாருக்கென்ன நட்டம்?
 
கமலநாதன்
 
தமிழ் ஜாதிகளை ஒழிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும், ‘சிவசிவ’ கமலநாதன். இராமானுஜர், வள்ளலார், அயோத்திதாசர், பாரதியார், பெரியார், புரட்சிக்கவிஞர், அண்ணா, ஜெயலலிதா, ... என்று பலரும் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டவர்கள்தாம். இன்றைய பாரதநாட்டின் அரசியலமைப்பு, சட்ட திட்டங்கள் ஜாதிகளை ஒழிப்பதில் முன்னோடியாக அமைக்கப்பட்டுள்ளன. தீண்டாமை, ஒரு ஜாதி மாத்திரம் கோவில்களில் அர்ச்சனை, ... என்பதெல்லாம் கூட காலப்போக்கில் அழியக்கூடும்.

ஆனால், என் மடல் இன்றைய முன்னேற்றங்கள் பற்றியதன்று. தமிழில் புலை- பொலி- என்பன வேறுபாடு இல்லாதனவா? ஆள்தல் என்பதற்கும், ஆழ்வார் என்பதற்கும் சமண சமயத்தவர்கள், ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்கள் வித்தியாசம் தெரியாதவர்களா? - என்பதை சிந்தித்தால் தமிழ்ப் பேராசிரியர்கள் கூற்று என்னவென்று புரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 14, 2017, 10:40:22 AM2/14/17
to மின்தமிழ், vallamai
அன்பின் பிரகாஷ்,

நீங்கள் எழுதும் இவற்றுக்கும் சமண சமயங்களுக்கும் என்ன தொடர்பு? சமண சமயங்கள் (ஜைநம், ஆஜீவகம், பௌத்தம், ...) முதலியன ஜாதி, வர்ணாசிரமம், தீண்டாமை போன்றனவற்றை எதிர்த்த சமயங்கள். இன்று பசுக்கொலை ஆரிய வேள்விகளில் இல்லாமைக்கு வள்ளுவர் போன்ற சமண சமயத்தவர் முக்கியமானவர்கள். கங்கைச் சமவெளியில் மகாவீரரும், பௌத்தரும் பசுக்கொலை வேள்வி புலைவேள்வி என்று நிறுவினர். ஹவிஸ் ஆயிரம் சொரிந்து வேட்டலைவிட எதையும் கொலை செய்யாமல் இருப்பது சிறப்பு என்கிறது குறள். தூக்குதண்டனையை முதன்முதல் இந்தியாவில் எதிர்த்தவர் வள்ளுவர். ஆண் கற்புக்காக ஒரு குறள் இயற்றியுள்ளார். தீண்டாமை பற்றி குறிப்பிட்டுள்ளார்: அவர் எவ்வாறு சொல்கிறார் என்பது முக்கியம். உலகில் இல்லாத மித்தலாஜிகல் புஷ்பம் ஒன்றைச் சொல்லி பாடிச் சென்று கோடிகாட்டினார். அதாவது, த்வனியாய் தமிழர்கள் செய்யும் தீண்டாமை ஒரு பழைய Mythology. நடைமுறைக்கு ஒவ்வாதது, மாற்றணும் என்று அயோத்திதாசர், அம்பேத்காருக்கு முன்னாலே சொன்னவர் ஸ்ரீவல்லபதேவர் ஆவார். இனி தேவர் ஆட்சி 4.5 ஆண்டு நடந்தால் திருவள்ளுவர் வழிச்செல்ல வேண்டும். ஸ்டாலின் அவ்வாறு நடப்பார் என்கிறார்கள் திமுகவினர்.

அந்தணர், அம்பட்டர், அம்பணவர், ... என்போர் யார்? தமிழர்களது அணங்கு வழிபாடு என்ன? நம்மாழ்வார் ஒரு பதிகமே பாடிச் சென்றுள்ளார். ஒரு பள்ளியறை வகுப்பில் 100 மாணவர்கள். கிரேடு போடுகையில் நான்குதான்: ஏ, பி, சி, டி. அப்படி பிராமணர் பல ஜாதிகளுக்கும் வகுத்தது நான்கு வர்ணங்கள் என்பர் சம்ஸ்கிருத பேராசிரியர்கள். இந்தியாவில் இரண்டே இரண்டு செம்மொழிகள் தாம். சங்க இலக்கியத்தால் ஸம்ஸ்கிருதத்தில் சொல்லாத அணங்கு வழிபாட்டு ரிலிஜன், அந்தணர் என்பவர் யார், பெண்-அரசன்- தலித் கோட்பாடு, ... என அழிந்துபட்ட தமிழர் சமயம் விளங்குகிறது. சில குறிப்புகள் எழுதியுள்ளேன் பழைய மடல்களில். இவையெல்லாம் பழசா? சைவமும், சமணமும் காட்டும் ஜாதிகள் பழசா? சமணத்தை விட சைவத்தில் ஜாதி பற்றி - உ-ம்: ஆகமங்களில் - இருக்கிறது. படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இந்தியாவின் செமொழி இலக்கியங்கள் காட்டும் ஜாதி வரலாற்றை புலை, பொலி இரண்டும் ஒன்று என்று சொல்வதால் மறைக்க இயலாது. செம்மொழிகளின் (உ-ம்: தமிழ்ப் பேராசிரியர்கள் அவ் வேறுபாடுகள் உணர்ந்தவர்கள்.

நா. கணேசன்
இந்தியாவின் செம்மொழிகள் இரண்டே!

Prakash Sugumaran

unread,
Feb 14, 2017, 11:50:42 AM2/14/17
to mintamil
சுடலைமுத்து பழனியப்பன் அவர்களின் கட்டுரை மறுமுறை படிக்கவும் பிரகாஷ். சமண சொல்லாடல்களின் உட்பொருள் புரியாமல் உரையெழுதியவர்கள் செய்த குளறுபடியால் வந்ததேயன்றி சமணத்திற்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை.//

வணக்கம். தவறுகளை ஒப்புகொள்ளாத மதங்கள் வளர்ச்சி பெற்ற வரலாறு இல்லை என்பதற்கு சமணம் என்று குறிப்பிடப்படும் ஜிந மதத்தையே உதாரணமாக்கி மறுபடியும் குறிப்பிடுகிறேன். சமணம் எப்போது, எப்படி சாதிய மயமானது என்று கேட்டால் விவாதிக்கலாம். நான் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறேன். கல்வி போதனையில் சாதியத்தை ஏற்காத சமணம் நிர்வாக முறைகளில் சாதியம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததற்கு முக்கிய காரணமானது. அது இயல்பானது தான். அதுமட்டுமல்ல, ஆரம்பத்திலேயே அது தோல்வியில் முடிந்தது என்றும் தெரிவித்தேன். மேலதிகமாக குறிப்பிட வேண்டுமெனில், வழிபாட்டு முறையில் கூட எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்காத முதல் சமயம் சமணம் மட்டுமே. கல்வியிலும், வழிபாட்டிலும் உலகறியா இள உள்ளங்களும், அனுபவித்து அறிந்த முதிர் உள்ளங்களும் மட்டுமே இடம் பெறும். ஆனால் நிர்வாகம் அப்படியல்ல.

ஒரே ஒரு கேள்வி. சமண மதத்தின் சார்பில் நிர்வாக அதிகாரிகள் தேர்வு எப்படி நடைபெறும் என்பதை விவரித்தால் நலம்.

Prakash Sugumaran

unread,
Feb 14, 2017, 12:10:53 PM2/14/17
to mintamil

சமண சமயங்கள் (ஜைநம், ஆஜீவகம், பௌத்தம், ...) முதலியன ஜாதி, வர்ணாசிரமம், தீண்டாமை போன்றனவற்றை எதிர்த்த சமயங்கள்.//

மூன்றும் ஒன்று என்பதை முதலில் ஏற்கிறீர்களா கணேசன் ஐயா? உண்மையில், புத்தரே பசுக்கறி உண்பதாக ஜிநர்கள் போராடிய சம்பவங்கள் ஆய்வாளர்களின் கூற்றுகளில் தெரிய வருகிறது. அதை ஏற்காவிட்டாலும், மிமிச, வேதாந்த ஆகிய சமய போதனைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை சமணப்படுத்த முயன்ற ஸ்வஸ்திக போதனையை முன்னெடுத்த ஜிந சமயம் மற்றும் நைடிக போதனையை முன்னெடுத்த பவுத்த, கார்விக ஆகிய சமயங்களில் இருந்தும் உருவான அஜீவிக (ஜீவிகத்துக்கு எதிரான ஆசீவகம்) சமயத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை ஏற்க வேண்டும்.

சமண, நைடிக சமயங்கள் வர்ணாசிரமத்துக்கு எதிரான மாற்று வழிகளை முன்னிறுத்தின என்ற கருத்தை நானும் ஏற்கிறேன். ஆனால், சாதி - தீண்டாமையை மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் எதிர்த்து வெற்றி காணவில்லை.

சைவமும், சமணமும் காட்டும் ஜாதிகள் பழசா? சமணத்தை விட சைவத்தில் ஜாதி பற்றி - உ-ம்: ஆகமங்களில் - இருக்கிறது.//

இதையேதான் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.

தேமொழி

unread,
Feb 14, 2017, 10:30:30 PM2/14/17
to மின்தமிழ்

On Tuesday, February 14, 2017 at 5:14:30 AM UTC-8, Prakash Sugumaran wrote:

சாதிய அடிப்படையிலான சமூக வளர்ச்சியில் சமணத்தின் தாக்கம் மிக அதிகமானது. குறிப்பாக, கல்வி போதனை என்ற அடிப்படையில் ஜைனத்தின் தொடக்கம் இருந்தாலும், சமய ரீதியாக உடனடி ஆதரவு கிடைத்தது வணிகர்களிடம் இருந்து தான். கல்வி போதனையில் சமணம் ஏற்றத்தாழ்வுகளை புறக்கணித்தாலும், நிர்வாக நடைமுறைகளில் அகிம்சையை புகுத்தி, கையாண்ட வழிமுறைகள் சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை சமூக அமைப்புகளில் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், சமணத்தின் கல்வி போதனை பெரும்பாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறதே தவிர, நிர்வாக நடைமுறைகள் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியை கண்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் சமணத்தால் தொடங்கப்படவில்லை என்றாலும், சாதிய கட்டமைப்பு வளர்ச்சி பெறக் காரணம் சமணம் என்பது சரியே.

பொதுவாக, ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கு மதிப்பு அளிப்பது அல்லது ஒதுக்கப்படுவது என்ற நிலை இப்போதும் நடைமுறையில் இருப்பதே. அது இருக்கும் வரை சாதிரீதியிலான கட்டமைப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் தொழிலாளியை தம் நண்பன் என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லை. காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு உறவுகளே கூட பெண் தர பல நேரங்களில் முன் வருவதில்லை. நிரந்தரமான தொழில் செய்யாதவர்கள், வருவாய் குறைந்த வேலைகளில் இருப்பவர்கள் என பலவித மக்களுக்கும் வாழ்க்கை தொடர வாய்ப்பு அளிப்பதே சாதிய கட்டமைப்புகள் மட்டும் தான்.

ஒரு நிறுவனத்தில் வேறு வேறு படி நிலைகளில் பணிபுரியும் ஒரே சாதியை சேர்ந்த இருவரில் யார் மேல் படியில் இருக்கிறாரோ அவருக்கு அதிக மரியாதை கிடைப்பது இயல்பானது. தொழில் அடிப்படையில் சாதி அமைப்பு வளர்ந்து விட்டாலும், மதிப்பு - பெருமை - வாய்ப்புகள் ஆகியவற்றை பொறுத்தவரையில், முன்னுரிமை என்பதில் படி நிலைகள் தொடர்கிறது. அது ஒரே சாதிக்குள் நடக்கும்போது அதிகம் பேசப்படுவதில்லை. மாற்று சாதிகளுக்குள் நடந்தால் மோதலாக வெடித்துக் கிளம்புகிறது.

இவரிவரை இங்கிங்கு வைக்கவேண்டும்,  இவ்வாறு நடத்தவேண்டும்,
என்றெல்லாம் சிந்தித்து சட்டமியற்றி சாதிகளாக சமுதாயத்தைக் 
கூறுபோட்ட கூட்டத்தினர் சத்தமேதுமின்றி சமர்த்தாக இருக்கிறார்கள்
ஆனால், 
சிறப்புடன் இருப்பவரை வாய்பிளந்து பார்ப்பது
அழகுடன் இருந்தால் தனிக்கவனம் செலுத்துவது 
என இயற்கையில்  மனித  இயல்பாக மக்கள் செயல்படுவதை 
எல்லாம் ஒரு சமயம் செய்த  குற்றம் எனக் கருதும் 
பிரகாஷின் சிந்தனைக் கோணம் வியக்க வைக்கிறது.

இந்தச் செய்தியை எத்தனைப் பேர் அக்கறை எடுத்துப் பார்க்கவோ பகிரவோ செய்வார்கள்..
இதுவே கண்ணைக் கவரும் காட்சி, பூ, குழந்தை .... வேண்டாம் பூனை ...
எத்தனைப் பேர் பகிர்ந்து கொள்வார்கள்.
உலகம் முழுவதும் சாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்து  எல்லைகளைத் தாண்டிய  மக்களின் இயல்பு அல்லவா அது. 
பாராமுகம் என்ற  மனித இயல்பு வேறு, 
சட்டம் இயற்றி ஒதுக்கி வைப்பது வேறு 

பேதம் பார்ப்பதை எதிர்த்த சமயத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டீர்கள். 
சொல்லுங்கள் நீங்கள் குறிப்பிடும் இயல்பு சமண சமயத்திற்கு மட்டுமே உரியதா என்று?
அது சொல்லும் உங்கள் கோணம் பிழையா இல்லையா என்று. 

..... தேமொழி

Prakash Sugumaran

unread,
Feb 15, 2017, 1:05:29 AM2/15/17
to mintamil

//இவரிவரை இங்கிங்கு வைக்கவேண்டும், இவ்வாறு நடத்தவேண்டும், என்றெல்லாம் சிந்தித்து சட்டமியற்றி சாதிகளாக சமுதாயத்தைக் கூறுபோட்ட கூட்டத்தினர் சத்தமேதுமின்றி சமர்த்தாக இருக்கிறார்கள்.//

மனித இயல்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் என்று குறிப்பிட்டு இருந்தால் இன்னும் பலவற்றை விரிவாகப் புரிந்து கொள்ள உதவியிருக்கும்.

ஒரு உதாரணமாக, மொழியறிவு மற்றும் எழுத்தறிவின் மிக உயர்ந்த நிலையை எட்டுவது சமண சிந்தாந்தம் ஏற்படுத்திய அபூர்வ குணாம்சம். அவற்றில் தங்களுடைய உள்ளிடுகைகளை இட்டு சொந்தமாக்கிக் கொள்வது (நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டம்) வேறொருவரின் புத்திசாலித்தனம். ஒரு படைப்பை உருவாக்குவதற்கும், ஒரு படைப்பை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் மனித இயல்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது.

//ஆனால், சிறப்புடன் இருப்பவரை வாய்பிளந்து பார்ப்பது, அழகுடன் இருந்தால் தனிக்கவனம் செலுத்துவது என இயற்கையில் மனித  இயல்பாக மக்கள் செயல்படுவதை, எல்லாம் ஒரு சமயம் செய்த  குற்றம் எனக் கருதும் பிரகாஷின் சிந்தனைக் கோணம் வியக்க வைக்கிறது.//

என் கோணமாக வேறு ஒன்று தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் மனம் விட்டு சிரிப்பது கூட வேறு ஒருவருடைய மனதில் ஏக்கத்தையோ, வெறுப்பையோ, தாழ்ச்சியையோ ஏற்படுத்தும் என்பதால் சிரிப்புக்கும் கட்டுப்பாடு விதித்த சமயம் சமணம்.

ஆசை, பாசம், காமம், கோபம், பசி, வெறுப்பு, போட்டி உள்ளிட்ட இயற்கையான பல குணாதிசயங்களை, மிருகத்தனத்தின் எச்சம் (இச்சைகள்) என்று ஒதுக்க முயல்வதை எல்லா சமயங்களும் முன் மொழிந்து இருந்தாலும், அதையெல்லாம் அதிகபட்சமாக இறுக்கிக் கட்டி ஒதுக்கியது சமணம். எனவே, இயல்பாக மனிதர்கள் செயல்படுவதையும் கூட கட்டுப்படுத்தியதே சமணர்களுக்கு சமணம் செய்த (ஒருவித) தவறு என்று குறிப்பிடுகிறேன்.

//கண்ணைக் கவரும் காட்சி, பூ, குழந்தை.... வேண்டாம் பூனை... எத்தனைப் பேர் பகிர்ந்து கொள்வார்கள். உலகம் முழுவதும் சாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்து  எல்லைகளைத் தாண்டிய  மக்களின் இயல்பு அல்லவா அது. பாராமுகம் என்ற  மனித இயல்பு வேறு, சட்டம் இயற்றி ஒதுக்கி வைப்பது வேறு. பேதம் பார்ப்பதை எதிர்த்த சமயத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டீர்கள்.//

:-)மனித இயல்புகளை கண்டறிந்து அவற்றில் இருந்து விடுபட அல்லது அந்த இயல்புகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என சமணம் உலகறிய செய்த பிறகு, அதே இயல்புகளை ஊக்குவித்து, அதிகப்படுத்தி, பயன்படுத்தி, சமூக கட்டமைப்புகளாக உருமாற்றி, தனக்குச் சாதகமான சட்ட, திட்டங்களை, நியாய, தர்மங்களை கட்டமைத்து, தனது நிலையை உயர்த்திக் கொள்ள வேறொரு சமயம் முயல்கிறது. எனவே, அப்படியொரு வாய்ப்பை கண்டறிந்து, அதை அடுத்தவர் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு போதித்த சமணம் தானே முதல் குற்றவாளி:-)

ஆனால், இதற்காக எல்லாம் குற்றவாளிக் கூண்டில் சமணத்தை ஏற்ற முடியாது. குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது எனில் வேறு பல சிறப்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.

//சொல்லுங்கள் நீங்கள் குறிப்பிடும் இயல்பு சமண சமயத்திற்கு மட்டுமே உரியதா என்று? அது சொல்லும் உங்கள் கோணம் பிழையா இல்லையா என்று.//

கேவல ஞானத்தின் சொந்தக்காரர்கள் யார் என்ன சொல்வதென இப்போது முடிவு செய்யுங்கள். :-)

தேமொழி

unread,
Feb 15, 2017, 1:12:19 AM2/15/17
to மின்தமிழ்
ஆக மருந்து சாபிடும்போழுது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிறீர்கள்.

Prakash Sugumaran

unread,
Feb 15, 2017, 1:23:25 AM2/15/17
to mintamil
:-0 தலைப்பில் இருந்து மாறி விட்டீர்களே.

//மருந்து சாபிடும்போழுது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் என்ன நடக்கும்?//

குரங்கு(மருந்து)டன் அலைவதில் மருந்துக்கு என்ன பிரச்சினை?

தேமொழி

unread,
Feb 15, 2017, 1:31:01 AM2/15/17
to மின்தமிழ்
இப்படியும் கூட ஒரு கோணம் இருக்கிறதா?

சரி முக்கியமான ஆய்வை திசை திருப்புவதில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

..... தேமொழி

Prakash Sugumaran

unread,
Feb 16, 2017, 12:21:02 PM2/16/17
to mintamil
//முக்கியமான ஆய்வை திசை திருப்புவதில் இருந்து விலகிக் கொள்கிறேன்.//

என்னைய வெச்சி காமெடி எதுவும் செய்யலையே!?

தேமொழி

unread,
Feb 16, 2017, 4:05:39 PM2/16/17
to மின்தமிழ்

On Thursday, February 16, 2017 at 9:21:02 AM UTC-8, Prakash Sugumaran wrote:
//முக்கியமான ஆய்வை திசை திருப்புவதில் இருந்து விலகிக் கொள்கிறேன்.//

என்னைய வெச்சி காமெடி எதுவும் செய்யலையே!?

சேச்சே! அதெல்லாம்  நான் செய்வேனா என்ன?  உங்கள் கோணமும் முக்கியமானது அல்லவா?

:) 

..... தேமொழி
 
Prakash Sugumaran

unread,
Feb 17, 2017, 7:16:56 AM2/17/17
to mintamil

அதர்பந..

தமிழ் - நமக்கான மருந்து; ஜப்பானிய மொழியில் - நான் செய்த மருந்து; சீன மொழியில் - மருந்தாளுநர் செய்தது; பாஷ்தோ - மருந்தாளர் அறிவித்தது.

:-) எது சரியாக பொருந்துகிறது?

க. தில்லைக்குமரன்

unread,
Feb 20, 2017, 10:40:32 PM2/20/17
to மின்தமிழ்
பழனியப்பன் அவர்களது கருத்துகள் அல இந்தியவியல் அறிஞர்களால் மேற்கோளிடப்பட்டு வருகிறது. அவரது கருத்துகள் அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. திரு. கணேசன் அவர்களுக்கு பலமுறை பலர் இது குறித்து பதிலலித்துள்ளனர், இருந்தாலும் மீண்டும் மீண்டும் கிழிந்த ரெக்கார்டு போல கத்திக் கொண்டே உள்ளார். இந்த பதிவு அவருக்கல்ல. மின்தமிழ் படிக்கும் உங்கள் அனைருக்காக   எழுதுவது. முனைவர் பழனியப்பன், முனைவர் இராசம் போன்றோர்கள் இன்று வாழும் தமிழறிஞர்களுள் மிக முக்கியமானவர்களுள் முதன்மையானவர்கள். அவர்கள் கருத்துகளுக்கு எதிராக திரு. கணேசன் மீண்டும் மீண்டும் பொய்ச் சொல்லி வருவதால் இந்த நீண்ட பதிவு. 

ஆழ்வார் - ஆள்வார் பற்றி முனைவர் பழனியப்பன் எழுதிய கட்டுரை பற்றி தேமொழி அவர்கள் கொடுத்த விவரம் இது. "Palaniappan, S. “Āḻvar or Nāyaṉār: The Role of Sound Variation, Hypercorrection and Folk Etymology in Interpreting the Nature of Vaiṣnava Saint-Poets.” South Indian Horizons: Felicitation Volume for François Gros on the Occasion of his 70th Birthday. Edited by Jean-Luc Chevillard, Eva Wilden & A. Murugaiyan, 63-84. Pondicherry: Institut Français De Pondichéry and École Française D’Extrême-Orient, 2004.” (கட்டுரையைக் காண ழான் அவர்களின் வலைத்தளத்தில் சுட்டி: http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf இக்கட்டுரையில் சமணக் கல்வெட்டுகளும் ஆயப்பட்டுள்ளன.)  நூலைத் தொகுத்த ழான் செவியார் தமிழ் இலக்கண வல்லுநர். ஈவா வில்டென் தமிழ் இலக்கிய வல்லுநர். அ. முருகையன் கல்வெட்டியல் வல்லுநர். இவர்களெல்லாம் சரிபார்த்து தொகுத்ததுதான் பழனியப்பனின் கட்டுரை. மேலும்  இலக்கிய, கல்வெட்டு சான்றுகளை நுணுகி ஆய்ந்து ஆள்வார் என்பதிலிருந்துதான் ஆழ்வார் வந்திருக்கிறது என பழனியப்பன் நிறுவியதை வேறு சிறந்த ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டுவிட்டனர் என்பதற்கு கூகுளில் தேடினாலே சான்றுகள் கிடைத்து விடுகின்றனவே.

1. 2005-இல் வெளிவந்த ஒரு பிரஞ்சு மொழிக் கட்டுரையில் முனைவர் சார்லட் ஷ்மிட் என்பவர் (http://www.persee.fr/doc/befeo_0336-1519_2005_num_92_1_5983) 92-ஆம் பக்கத்தில் 83-ஆம் அடிக்குறிப்பில் திருவாலந்துறை ஆழ்வார் என்ற பெயரைப் பற்றிச் சொல்லும்போது இவ்வாறு கூறுகிறார்.  "The recent article by S. Palaniappan (2004), which takes up the history of the Vaishnava term, shows that "āḻvār" results from a hypercorrection of āḷvār, and that a devotional etymology has been constructed for this term: Is in fact an equivalent of nāyaṉār, whose traditional opposition as a  Śaiva term to a Vaishnava āḻvār is therefore not original. That is what we are seeing here.” (உதவி: கூகுள் மொழிபெயர்த்தி)

2. மூத்த வைணவ அறிஞர் பண்டிதர் வரததேசிகன் அவர்களை பாராட்டும் மலரில் (http://tinyurl.com/gveu3fa) 9-ஆம் பக்கத்தில் 2-ஆம் அடிக்குறிப்பில் முனைவர் வாலரி ஜில்லெட் இவ்வாறு கூறுகிறார். “The word Āḻvār is usually explained as the “one who is immersed” [in god], from the root āḻ—to sink, dive, be absorbed, immersed. However, S. Palaniappan considers that the term Āḻvār is derived from the word āḷvār, which means the “ruler, Lord” (from āḷ—to rule), found in the pre-Bhakti and Bhakti texts as well as in inscriptions, and synonymous with the word nāyaṉār, used for the Śaiva saints."

3.  http://www2.rsuh.ru/binary/object_40.1412591563.13923.pdf என்ற சுட்டியில் காணும் ஆண்டாளை பற்றிய கட்டுரையின் மூன்றாம் பக்கத்தில் பேரா. அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி இவ்வாறு கூறுகிறார். 

"Āṇṭāḷ was among the twelve Āḻvārs, the poet-saints, adepts of Viṣṇu, canonized by the tradition, which accepted the interpretation of the meaning of the word āḻvas “submerged, plunged [in love for god],” from the verbal root āḻ, “to plunge, to be in the deep.” But recently it was convincingly shown by S. Palaniappan (2004) that initially the term in question was represented by the word āḷv(from the verbal root āḷ “to rule”), which reads as “those who rule, lords”, and was applied in the texts, both Śaiva and Vaiṣṇava, to Śiva and Viṣṇu accordingly (pp. 66–70). In the course of time the term underwent the process of sound variation, took the form āḻvand acquired the folk etymology which was accepted and fixed by the tradition. It is worth noting here that this interpretation agrees well with the meaning of the poetess’ nickname Āṇṭāḷ, which means “she who rules.””

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, அரசர்களும் அரசிகளும் ஏன் ஆழ்வார் (ஆழ்வார் பராந்தகன் குந்தவை தேவியார் என்பது போல) என அழைக்கப்பட்டனர்? (பார்க்க: http://ponniyinselvan.in/forum/discussion/17506/repost-ps-facts-and-fiction-azhvar-paraantakan-kundavai-pirattiyar/p1). அவர்கள் சமணத் தீர்த்தங்கரர் போலத் தியானத்தில் ஆழ்ந்திருந்தனரா?

உங்களுக்கு வரலாற்று மொழியியல் புரியவில்லையென்றால் ‘ஆள்வார்' என்ற சொல்லிலிருந்து ‘ஆழ்வார்' வருவது இல்லையென்று ஆகிவிடுமா? அல்லது ‘பொலி’ ‘புலை' என்ற சொற்கள் ‘பொல்- என்ற ஒரே வேரில் இருந்து வந்தவை என்பது இல்லாமல் போய்விடுமா? மேலும் என்னிடம் எம்மானுவல் பிரான்ஸிஸும் சார்லட் ஷ்மிட்டும் தொகுத்த Archaeology of Bhakti II: Royal Bhakti, Local Bhakti என்ற நூல் இருக்கிறது. அந்நூலில் ஒரு கட்டுரையில் முனைவர் பழனியப்பன் இவ்வாறு சொல்கிறார். "As I have already discussed:

the words, ‘pulaiyaṉ’ and ‘pulaitti’, had positive connotations in Classical Tamil. They did not connote despised persons as happened in later times. We can also conclude that ‘pulai’ meant ‘prosperity, auspicious- ness’ (synonymous with Tamil ‘polivu’ and Sanskrit ‘maṅgala’) and not ‘pollution’. Accordingly, ‘pulaiyaṉ’/‘pulaitti’ was a male/female, who was supposed to engender auspiciousness or prosperity through different occupations such as priest, washerwoman, drummer, and bard. They were not considered polluted. (Palaniappan 2008: 47) நூலைத்தொகுத்த அறிஞர்கள் இக்கருத்தோடு உடன்படாமலா இக்கட்டுரையை வெளியிட்டார்கள்? மேலும் கூகுளில் தேடினால் http://tinyurl.com/gmlx65h என்ற சுட்டியில் காணும் நூலில் 32-ஆம் பக்கத்தில் பேரா. யோஹான்னெஸ் பிரான்க்ஹார்ஸ்ட் முனைவர் பழனியப்பனின் கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறார்.

உங்களுக்கு வரலாற்று மொழியியல் இன்னும் புரிபடவில்லை என்பது உங்களுடைய ‘விடங்கர்-இடங்கர்’ கூற்றுகளிலிருந்து தெரிகிறது. (எனக்கும் தெரியாதுதான். ஆனால் தெரியாத ஒன்றைப்பற்றி தெரிந்தவன் போல் நான் பேசமாட்டேன்.) உங்களுடைய வேர்ச்சொல் கற்பனைகளைப் பற்றி இந்தாலஜி  குழுமத்தில் சுரேஷ் கொலிசெலா எழுதியதை இங்கு நினைவுகூர்கிறேன். (பார்க்க: http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2015-January/040639.html

பழந்தமிழ் நாட்டில் சாதிகள் இருந்தன என்று நீங்கள் இவ்வாறு முரண்டு பிடிப்பது உலகம் உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் உலகம் தட்டையானது என்று ஏற்கெனவே பல அறிஞர்கள் சொல்லியுள்ளனர் என ஒருவர் சப்பைக்கட்டு கட்டுவது போன்றதே.

சாதி சேர்ந்த சுட்டிகளை நான் பதிவதில்லை.. இருந்தாலும் இந்த பக்கத்தில் பழனியப்பனின் கருத்துகளை எடுத்துக்காட்டி எழுதியிருப்பதால் இந்த சுட்டியைய இங்கு சுட்டிக்காட்டுகிறேன்... http://konguvettuvagounderperavai.blogspot.com/2015/03/blog-post.html. பழனியப்பனின் கருத்துகள் பொதுமக்களிடம் போய்ச் சேர்ப்பது நம் போன்றோர் கடமை.

அன்புடன், 
தில்லைக்குமரன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 12:52:37 AM2/21/17
to மின்தமிழ்
உங்களுக்கு வரலாற்று மொழியியல் புரியவில்லையென்றால் ‘ஆள்வார்' என்ற சொல்லிலிருந்து ‘ஆழ்வார்' வருவது இல்லையென்று ஆகிவிடுமா?

சு. பழனியப்பனே எழுதலாமே. தில்லைக்குமரன் தான் என் போன்றவர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் (உ-ம்: உவேசா) பொலி வேறு, புலை வேறு
என்பது தமிழ்/திராவிட மொழிகளில் சரியில்லை. பொலி தான் புலை என எழுதலாமே.

பொலி என்பதில் இருந்து புலை வந்தது. ஆள்தல் என்பதில் இருந்து ஆள்தல் - சமணர்கள் கல்வெட்டுகளில் ஆழ்வார் என்பது இருக்கிறது. இது ஆள்வார் தான்
என யாராவது எழுதியுள்ளனரா? 

நான் வேலரி கில்லெட் தலைமையில் பேசியிருக்கிறேன். அவர் ஆர்ட் ஹிஸ்டரி அறிஞர். சங்கத் தமிழ் அறிஞர் இல்லை. சார்லட் ஸ்மிட் தமிழ் அறிஞரா?
ழான் - லூய்க் புலை = பொலி என்று எங்கே எழுதியுள்ளார்? அறிந்துகொள்ள ஆவல்,

தில்லைக்குமரன்: 
பழந்தமிழ் நாட்டில் சாதிகள் இருந்தன என்று நீங்கள் இவ்வாறு முரண்டு பிடிப்பது உலகம் உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் உலகம் தட்டையானது என்று ஏற்கெனவே பல அறிஞர்கள் சொல்லியுள்ளனர் என ஒருவர் சப்பைக்கட்டு கட்டுவது போன்றதே.

நான் மட்டும் இல்லை. தமிழ்ப் பேராசிரியர்களும் புலை, பொலி இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்பதைச் சொல்லுகின்றனர். உங்களுக்கு வரலாற்று மொழியியல் தெரியாது என்கிறீர்கள்.

எமனோ - பர்ரோ வரலாற்று மொழியியல் தெரிந்தவர்கள். அவர்கள் புலை என்ற சொல்லையும், பொலி என்ற சொல்லையும் எவ்வாறு தொகுத்துள்ளனர் என்று பார்த்து எழுதினால்
வேறுபாடு தெரிந்துவிடும். நீங்கள் குறிப்பிடும் அறிஞர்கள் யாராவது பழந்தமிழ் நாட்டில் சாதிகள் இல்லை என்று எழுதியிருந்தால் காட்டவும்.

நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் பழந்தமிழ் நாட்டு ஜாதிகள் பற்றி எழுதியுள்ளனர். பழனியப்பன் சொல்வதால் புலைக்கும், பொலிக என்ற வாழ்த்தும் ஒன்றாகிவிடாது.
இரண்டும் அடிப்படையில் வெவ்வேறான சொற்கள். வரலாற்று மொழியியல் தெரிந்த, சங்க இலக்கியம் தெரிந்த பேராசிரியர்கள் இரண்டும் ஒன்று என எழுதினால்
அக் கட்டுரை தாருங்கள். சு. பழனியப்பன் என்னும் எஞ்சினீர் கற்பனை புலைக்கும், பொலிக்கும் வேறுபாடில்லை என்பது. யாராவது அக் கற்பனை சரிதான்,
பழந்தமிழ் நாட்டில் ஜாதிகள் இருக்கவில்லை என கட்டுரை எழுதினால் தரவும்.

சாதி சேர்ந்த சுட்டிகளை நான் பதிவதில்லை..

அப்படியா? நல்லது. 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 1:05:41 AM2/21/17
to மின்தமிழ்
புறநானூறு, அகநானூறு, கலித்தொகை முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பார்த்தால் தமிழகத்தில் ஜாதியின் ஆழம் தெரியும்.
அவ்வாறு செய்தவர் எழுதிய கட்டுரை. http://ww.tamilnation.co/caste/hart.pdf
இதிலோ, பழனியப்பன் கட்டுரைக்கு பின்னர் மொழிபெயர்த்த நூல்களிலோ புலை என்று வரும் இடங்களில் பழனியப்பன் சொல்லும்
புதுப்பொருள்களில் யாரும் மொழிபெயர்த்ததாகக் காணோம்.

சு, பழனியப்பன் என்னும் எஞ்சினீருக்கு கொடுத்துள்ள பதில்களையும் தில்லைக்குமரன் தரலாமே. யாராவது ஒரு தமிழ் தெரிந்த பேராசிரியர்
புலை என்பதும் பொலி என்பதும் சங்கத் தமிழில் ஒன்றுதான் என்று கட்டுரை எழுதியிருந்தால் அதனைப் படிக்க ஆவல் உடையவன் நான்.
புலி-புலை-புலா என்னும் சொற்களும், பொலிக பொலிக என்று ஆழ்வார் வாழ்த்தும் பாசுரமும் ஒன்றா? ஒரே பொருளா? எந்த தமிழ்ப் பேராசிரியர்
அவ்வாறு எழுதுகிறார்?

ஆழ்வார் என்று சமணர்கள் தெரியாமலா தீர்த்தங்கரர்களுக்குப் பெயர் வைத்தார்கள்?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 1:10:32 AM2/21/17
to மின்தமிழ்

On Monday, February 20, 2017 at 7:40:32 PM UTC-8, க. தில்லைக்குமரன் wrote:
பழனியப்பன் அவர்களது கருத்துகள் அல இந்தியவியல் அறிஞர்களால் மேற்கோளிடப்பட்டு வருகிறது. அவரது கருத்துகள் அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. திரு. கணேசன் அவர்களுக்கு பலமுறை பலர் இது குறித்து பதிலலித்துள்ளனர், 

உங்களைத் தவிர எந்த இந்தியவியல் அறிஞரும் சு. பழனியப்பன் சொவது சரி என்று பதில் அளிக்கவில்லை. மாறாக, பழனியப்பன் சொல்வது தவறு என்று எழுதியுள்ளனர் தமிழறிஞர்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 1:14:29 AM2/21/17
to மின்தமிழ்

On Tuesday, February 14, 2017 at 9:10:53 AM UTC-8, Prakash Sugumaran wrote:

சமண சமயங்கள் (ஜைநம், ஆஜீவகம், பௌத்தம், ...) முதலியன ஜாதி, வர்ணாசிரமம், தீண்டாமை போன்றனவற்றை எதிர்த்த சமயங்கள்.//

மூன்றும் ஒன்று என்பதை முதலில் ஏற்கிறீர்களா கணேசன் ஐயா? உண்மையில், புத்தரே பசுக்கறி உண்பதாக ஜிநர்கள் போராடிய சம்பவங்கள் ஆய்வாளர்களின் கூற்றுகளில் தெரிய வருகிறது. அதை ஏற்காவிட்டாலும், மிமிச, வேதாந்த ஆகிய சமய போதனைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை சமணப்படுத்த முயன்ற ஸ்வஸ்திக போதனையை முன்னெடுத்த ஜிந சமயம் மற்றும் நைடிக போதனையை முன்னெடுத்த பவுத்த, கார்விக ஆகிய சமயங்களில் இருந்தும் உருவான அஜீவிக (ஜீவிகத்துக்கு எதிரான ஆசீவகம்) சமயத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை ஏற்க வேண்டும்.

சமண, நைடிக சமயங்கள் வர்ணாசிரமத்துக்கு எதிரான மாற்று வழிகளை முன்னிறுத்தின என்ற கருத்தை நானும் ஏற்கிறேன். ஆனால், சாதி - தீண்டாமையை மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் எதிர்த்து வெற்றி காணவில்லை.

// சைவமும், சமணமும் காட்டும் ஜாதிகள் பழசா? சமணத்தை விட சைவத்தில் ஜாதி பற்றி - உ-ம்: ஆகமங்களில் - இருக்கிறது.//

இதையேதான் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.

நன்றி, பிரகாஷ். இந்தியாவில் ஜாதிகள் பழசா? சமயங்கள் பழசா? - சிந்தித்தால் தெரியும் என்கின்றனர் இந்தியவியல் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள்.

எனக்கு சுரேஷ் கொலிசாலம் - அட்லாண்டா எஞ்சினீர் - தமிழ் தெரியும் என்றே தெரியாது. அவரை 20+ ஆண்டுகளாக அறிவேன்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Feb 21, 2017, 1:19:48 AM2/21/17
to மின்தமிழ்

On Tuesday, February 14, 2017 at 6:31:33 AM UTC-8, இரா.பா wrote:

2017-02-14 18:44 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:

சாதிய அடிப்படையிலான சமூக வளர்ச்சியில் சமணத்தின் தாக்கம் மிக அதிகமானது. குறிப்பாக, கல்வி போதனை என்ற அடிப்படையில் ஜைனத்தின் தொடக்கம் இருந்தாலும், சமய ரீதியாக உடனடி ஆதரவு கிடைத்தது வணிகர்களிடம் இருந்து தான். கல்வி போதனையில் சமணம் ஏற்றத்தாழ்வுகளை புறக்கணித்தாலும், நிர்வாக நடைமுறைகளில் அகிம்சையை புகுத்தி, கையாண்ட வழிமுறைகள் சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை சமூக அமைப்புகளில் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், சமணத்தின் கல்வி போதனை பெரும்பாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறதே தவிர, நிர்வாக நடைமுறைகள் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியை கண்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் சமணத்தால் தொடங்கப்படவில்லை என்றாலும்,

சாதிய கட்டமைப்பு வளர்ச்சி பெறக் காரணம் சமணம் என்பது சரியே.

சுடலைமுத்து பழனியப்பன் அவர்களின் கட்டுரை மறுமுறை படிக்கவும் பிரகாஷ்.

சமண சொல்லாடல்களின் உட்பொருள் புரியாமல் உரையெழுதியவர்கள் செய்த குளறுபடியால் வந்ததேயன்றி சமணத்திற்கும்
சாதிக்கும் சம்பந்தமில்லை.

நல்ல கருத்து. தீண்டாமை பற்றி சமணர்கள் என்ன சொல்லியுள்ளனர் என்று படித்தால் சமண சமயங்கள் (ஜைநம், பௌத்தம்)
இந்தியா முழுமையும் இருந்த ஜாதி ஸிஸ்டத்தை எதிர்த்தமை விளங்கும்.

நா. கணேசன்
 
இரா.பா

பொதுவாக, ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கு மதிப்பு அளிப்பது அல்லது ஒதுக்கப்படுவது என்ற நிலை இப்போதும் நடைமுறையில் இருப்பதே. அது இருக்கும் வரை சாதிரீதியிலான கட்டமைப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் தொழிலாளியை தம் நண்பன் என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லை. காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு உறவுகளே கூட பெண் தர பல நேரங்களில் முன் வருவதில்லை. நிரந்தரமான தொழில் செய்யாதவர்கள், வருவாய் குறைந்த வேலைகளில் இருப்பவர்கள் என பலவித மக்களுக்கும் வாழ்க்கை தொடர வாய்ப்பு அளிப்பதே சாதிய கட்டமைப்புகள் மட்டும் தான்.

ஒரு நிறுவனத்தில் வேறு வேறு படி நிலைகளில் பணிபுரியும் ஒரே சாதியை சேர்ந்த இருவரில் யார் மேல் படியில் இருக்கிறாரோ அவருக்கு அதிக மரியாதை கிடைப்பது இயல்பானது. தொழில் அடிப்படையில் சாதி அமைப்பு வளர்ந்து விட்டாலும், மதிப்பு - பெருமை - வாய்ப்புகள் ஆகியவற்றை பொறுத்தவரையில், முன்னுரிமை என்பதில் படி நிலைகள் தொடர்கிறது. அது ஒரே சாதிக்குள் நடக்கும்போது அதிகம் பேசப்படுவதில்லை. மாற்று சாதிகளுக்குள் நடந்தால் மோதலாக வெடித்துக் கிளம்புகிறது.

கிராமங்களில் இப்போதும் சன்னதி தெரு, பெரிய தெரு, மேட்டு தெரு, கீழ் தெரு, பள்ளர் தெரு, பறையர் தெரு, சாணார் தெரு என பலவித படி நிலைகள் இருந்தபடியேதான் உள்ளன. அதோடு இதுபோன்ற பல தொழில் - சாதி அடிப்படையிலான பெயர்களும் அப்படியே உள்ளன.

சென்னை போன்ற மாநகரங்களில் நவீனமான, மேற்கத்திய கலாசார பிரதிபலிப்பாக, கட்சி - சமூகத் தலைவர்களின் பெயர்களாக, மத அடிப்படையிலான பெயர்களாக தெருக்கள் புதிது புதிதாக தெருக்களின் பெயர்கள் சூட்டப்பட்டு வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, ஒவ்வொரு பகுதியிலும் சன்னதி தெருக்கள், பெரிய தெருக்கள், வன்னியர் தெருக்கள், சாணார் தெருக்கள், மேட்டு - கீழ் தெருக்கள் இப்போதும் உள்ளன. குறிப்பாக, கோயில் - வழிபாட்டு முறைகளில் உள்ள சாதிய அணுகுமுறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து நிரந்தரமாகி உள்ளது. (இதற்கான மாற்று என்று அறிமுகமான தேவாலயங்களிலும், மசூதிகளிலும் கூட ஏற்றத்தாழ்வுகள் மிகவும் சகஜமாகி விட்டது)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Feb 21, 2017, 4:40:00 AM2/21/17
to mintamil
ஒரு நல்ல ஆய்வு மடல்
 நன்றி  திரு தில்லைக்குமரன் 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Dev Raj

unread,
Feb 22, 2017, 9:00:38 AM2/22/17
to மின்தமிழ்
விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.
                                        -  சீவக சிந்தாமணி

Banukumar Rajendran

unread,
Feb 22, 2017, 9:12:26 AM2/22/17
to மின்தமிழ்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - திருக்குறள்

ஊன் உண்பவர்களை இழிஉலகமான நரகத்திலிருந்து வெளிவர முடியாது!

இழி = ஒரு நிலை தாழ்ந்த; மேல், நடு, இழி (கீழ்)!

இரா.பா

--

N. Ganesan

unread,
Feb 22, 2017, 10:13:49 AM2/22/17
to மின்தமிழ்

On Wednesday, February 22, 2017 at 6:12:26 AM UTC-8, இரா.பா wrote:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - திருக்குறள்

ஊன் உண்பவர்களை இழிஉலகமான நரகத்திலிருந்து வெளிவர முடியாது!

இழி = ஒரு நிலை தாழ்ந்த; மேல், நடு, இழி (கீழ்)!

இரா.பா

2017-02-22 19:30 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த

கொங்குவேளிர்களில் ஒருவரான திருத்தக்கதேவர் கம்பனுக்கு பாட்டை போட்டுத் தந்தவர்,

முதற்சீர் இவ்விருத்தத்தில்: வில்லின் 

நா. கணேசன்
 
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.
                                        -  சீவக சிந்தாமணி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Feb 22, 2017, 1:36:42 PM2/22/17
to மின்தமிழ்
On Wednesday, 22 February 2017 19:42:26 UTC+5:30, இரா.பா wrote:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - திருக்குறள்

ஊன் உண்பவர்களை இழிஉலகமான நரகத்திலிருந்து வெளிவர முடியாது!

இழி = ஒரு நிலை தாழ்ந்த; மேல், நடு, இழி (கீழ்)!

வில்லின் மாக் கொன்று வெள் நிணத் தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே

[வில்லால் விலங்குகளைக் கொன்று, வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்,
மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக அளவு கடந்த இழிதொழிலைப் புரிவோர், இழிகுலத்தினின்று தப்பி,
உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.]

வள்ளுவம் திரு பானுகுமார் சொல்வது போலவே  மறுமைப் பயனான - இழிந்த உலகான நரகத்தைச் சொல்கிறது;

சிந்தாமணி எல்லை நீங்கிய இழி தொழில் என அவர்களது தொழில் இழிவானது எனவும், அவர்கள் 
பிறந்த குலம் இழிவானது எனவும் சொல்கிறது; மறுமையில் கிடைக்க இருக்கும் உலகைப் பற்றி 
இங்கு அந்நூல் பேசவில்லை. வள்ளுவத்தை இங்கு ஒட்டுப்போட வேண்டா.

சிந்தாமணி, பதுமையார் இலம்பகத்தில் ‘ஈனராய்ப் பிறந்தது இங்ஙன்...’ கள்ளையும், ஊனையும் உட்கொள்ளும்
வேடராய்ப் பிறப்பது ஈனப் பிறவி எனச் சொல்லப்பட்டது

தேவ்
 
தேமொழி

unread,
Feb 22, 2017, 4:33:52 PM2/22/17
to மின்தமிழ்
சீவக சிந்தாமணி சங்க கால நூல் அல்லவே!!!

பத்தாம் நூற்றாண்டு காலங்களில்தான் சாதிப் பிரிவினையில் உயர்வு தாழ்வு பேதம் இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றனவே.  

நந்தனார் திருப்பாணாழ்வார் போன்றவர் குறித்து  நாமறிந்த கோயில் அனுமதி மறுப்பு கதைகள் எக்காலத்தைச் சேர்ந்தவை.

சங்க காலத்திற்கும்  சங்கம் மருவிய காலத்திற்கும் இடையே நிகழ்ந்த மாற்றத்தை முனைவர் சு. பழனியப்பன் சொல்லியிருக்கிறார்.

சமய சச்சரவாக திசை திருப்ப விரும்பினாலன்றி..... பிற்கால சீவகசிந்தாமணி பற்றிய குறிப்பு பொருத்தமாகத் தெரியவில்லை.

..... தேமொழி 

Banukumar Rajendran

unread,
Feb 23, 2017, 2:09:28 AM2/23/17
to மின்தமிழ்
2017-02-23 0:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Wednesday, 22 February 2017 19:42:26 UTC+5:30, இரா.பா wrote:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - திருக்குறள்

ஊன் உண்பவர்களை இழிஉலகமான நரகத்திலிருந்து வெளிவர முடியாது!

இழி = ஒரு நிலை தாழ்ந்த; மேல், நடு, இழி (கீழ்)!

வில்லின் மாக் கொன்று வெள் நிணத் தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே

[வில்லால் விலங்குகளைக் கொன்று, வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்,
மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக அளவு கடந்த இழிதொழிலைப் புரிவோர், இழிகுலத்தினின்று தப்பி,
உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.]

வள்ளுவம் திரு பானுகுமார் சொல்வது போலவே  மறுமைப் பயனான - இழிந்த உலகான நரகத்தைச் சொல்கிறது;

புலால் உண்போர் நரகம் புகுவர் என்பது சமண சமய சிந்தனை.. இக்கோட்பாடு வேறேந்த
சமயத்திலும் கூறப்பட்டிருக்கிறதா என அறிய ஆவல்.

சிந்தாமணி எல்லை நீங்கிய இழி தொழில் என அவர்களது தொழில் இழிவானது எனவும், அவர்கள் 
பிறந்த குலம் இழிவானது எனவும் சொல்கிறது; மறுமையில் கிடைக்க இருக்கும் உலகைப் பற்றி 
இங்கு அந்நூல் பேசவில்லை.

இப்பாட்டில் கூறப்படவில்லயா அல்லது நூலிலேயேக் கூறப்படவில்லையா??

வள்ளுவத்தை இங்கு ஒட்டுப்போட வேண்டா.

ஏன் ஒட்டுப்போடக்கூடாது. எம் ஒத்து, எமக்கு இல்லாத உரிமையா! :-))

இரா.பா

சிந்தாமணி, பதுமையார் இலம்பகத்தில் ‘ஈனராய்ப் பிறந்தது இங்ஙன்...’ கள்ளையும், ஊனையும் உட்கொள்ளும்
வேடராய்ப் பிறப்பது ஈனப் பிறவி எனச் சொல்லப்பட்டது

தேவ்
 
--

Dev Raj

unread,
Feb 23, 2017, 6:27:16 AM2/23/17
to மின்தமிழ்
On Thursday, 23 February 2017 03:03:52 UTC+5:30, தேமொழி wrote:
சீவக சிந்தாமணி சங்க கால நூல் அல்லவே!!!
பத்தாம் நூற்றாண்டு காலங்களில்தான் சாதிப் பிரிவினையில் உயர்வு தாழ்வு பேதம் இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றனவே.

நந்தனார் திருப்பாணாழ்வார் போன்றவர் குறித்து  நாமறிந்த கோயில் அனுமதி மறுப்பு கதைகள் எக்காலத்தைச் சேர்ந்தவை.

நந்தனார் , திருப்பாணாழ்வார் இருவரும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்களா ?
 
சங்க காலத்திற்கும்  சங்கம் மருவிய காலத்திற்கும் இடையே நிகழ்ந்த மாற்றத்தை முனைவர் சு. பழனியப்பன் சொல்லியிருக்கிறார்.

சமய சச்சரவாக திசை திருப்ப விரும்பினாலன்றி..... பிற்கால சீவகசிந்தாமணி பற்றிய குறிப்பு பொருத்தமாகத் தெரியவில்லை.

சமண சமயத்தில் சி.மு,  சி,பி [ சிந்தாமணிக்கு முன் , சிந்தாமணிக்குப்பின் ] என இரு பிரிவுகள் உண்டா ?

தேவ் 

Dev Raj

unread,
Feb 23, 2017, 6:37:26 AM2/23/17
to மின்தமிழ்
On Thursday, 23 February 2017 12:39:28 UTC+5:30, இரா.பா wrote:
ஏன் ஒட்டுப்போடக்கூடாது. எம் ஒத்து, எமக்கு இல்லாத உரிமையா! :-))

நீவிர் உரிமை கோருவதில் யாதொரு தடையுமில்லை;
அது உலகப் பொது மறை. உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரிய நூல். 

ஆதிபகவன் முதற்றே உலகு.
எனும் வள்ளுவக் கோட்பாட்டுக்கும்,

மூவா முதலா  உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி.....
எனும் சமணக் கோட்பாட்டுக்கும்  மலைக்கும்,
மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவதேவ நாயனார்.
இதே கருத்தைச் சீவகசாமி சொன்னதாகச் சிந்தாமணி சொல்லியிருந்தால்
எடுத்துக் காட்டலாம்

தேவ்  
 
தேமொழி

unread,
Feb 23, 2017, 6:43:30 AM2/23/17
to மின்தமிழ்

On Thursday, February 23, 2017 at 3:27:16 AM UTC-8, Dev Raj wrote:
On Thursday, 23 February 2017 03:03:52 UTC+5:30, தேமொழி wrote:
சீவக சிந்தாமணி சங்க கால நூல் அல்லவே!!!
பத்தாம் நூற்றாண்டு காலங்களில்தான் சாதிப் பிரிவினையில் உயர்வு தாழ்வு பேதம் இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றனவே.

நந்தனார் திருப்பாணாழ்வார் போன்றவர் குறித்து  நாமறிந்த கோயில் அனுமதி மறுப்பு கதைகள் எக்காலத்தைச் சேர்ந்தவை.

நந்தனார் , திருப்பாணாழ்வார் இருவரும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்களா ?

சைவ சமய (வைதீக?) சமய மறுமலர்ச்சிக்குப் பின் கதை வேறு என்று நான் படித்த தமிழக சாதி ஆய்வாளர்கள் கட்டுரையின் அடிப்படையில் கூறினேன்.

சங்க காலத்திற்கும்  சங்கம் மருவிய காலத்திற்கும் இடையே நிகழ்ந்த மாற்றத்தை முனைவர் சு. பழனியப்பன் சொல்லியிருக்கிறார்.

சமய சச்சரவாக திசை திருப்ப விரும்பினாலன்றி..... பிற்கால சீவகசிந்தாமணி பற்றிய குறிப்பு பொருத்தமாகத் தெரியவில்லை.

சமண சமயத்தில் சி.மு,  சி,பி [ சிந்தாமணிக்கு முன் , சிந்தாமணிக்குப்பின் ] என இரு பிரிவுகள் உண்டா ?

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ச.மு; ச.பி  (சமய மறுமலர்ச்சிக்கு முன்னும் பின்னும்) என்று பார்ப்பது உதவும்.

அத்துடன் பானுகுமாரின் "இப்பாட்டில் கூறப்படவில்லயா அல்லது நூலிலேயேக் கூறப்படவில்லையா??"  என்பதற்கும் விடை தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.

ஆனால் அது சாதிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வில் இருந்து திசை திருப்புமானால், மெய்யியல் ஆய்வுகள் பக்கம் திரும்புமானால் தவிர்த்துவிடலாம்.

நன்றி .

,,,,, தேமொழி

தேவ் 

Dev Raj

unread,
Feb 23, 2017, 6:53:59 AM2/23/17
to மின்தமிழ்
On Thursday, 23 February 2017 17:13:30 UTC+5:30, தேமொழி wrote:
அத்துடன் பானுகுமாரின் "இப்பாட்டில் கூறப்படவில்லயா அல்லது நூலிலேயேக் கூறப்படவில்லையா??"  என்பதற்கும் விடை தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.
ஆனால் அது சாதிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வில் இருந்து திசை திருப்புமானால், மெய்யியல் ஆய்வுகள் பக்கம் திரும்புமானால் தவிர்த்துவிடலாம்.
,,,,, தேமொழி
 
ஆம், கட்டாயமாக அது மெய்யியல் ஆய்வுகள் பக்கமே திரும்பும்.
தவிர்ப்பதே நல்லது

தேவ்

Dev Raj

unread,
Feb 23, 2017, 8:08:30 AM2/23/17
to மின்தமிழ்
On Thursday, 23 February 2017 12:39:28 UTC+5:30, இரா.பா wrote:
புலால் உண்போர் நரகம் புகுவர் என்பது சமண சமய சிந்தனை.. இக்கோட்பாடு வேறேந்த
சமயத்திலும் கூறப்பட்டிருக்கிறதா என அறிய ஆவல்.

மரக்கறி உண்போரும் சரி, பயிர் - பச்சைகளுக்கும் உயிருள்ளது என்பதால்  பஞ்ச மஹாயஜ்ஞம் வாயிலாகக்
கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும். நாம் உணவேற்குமுன் இறைவனுக்குப் படைத்தல், காக்கைக்கு
அன்னம் வைத்தல் எல்லாம் கழுவாய் போன்றவைதாம்.

பச்சிலைக்கு உயிருள்ளதால் வனம் வாழ் தவசியர் தானே உதிர்து கிடக்கும் கனிகளையோ,
வாடிக்கிடக்கும் இலைச் சருகுகளையோ உணவாக ஏற்பர்.

இழை பிரிவதை இழை ஆசிரியர் விரும்பாததால் மேலும் விவரிக்கவில்லை.

தேவ்

Banukumar Rajendran

unread,
Feb 23, 2017, 10:44:25 PM2/23/17
to மின்தமிழ்
2017-02-23 17:07 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 23 February 2017 12:39:28 UTC+5:30, இரா.பா wrote:
ஏன் ஒட்டுப்போடக்கூடாது. எம் ஒத்து, எமக்கு இல்லாத உரிமையா! :-))

நீவிர் உரிமை கோருவதில் யாதொரு தடையுமில்லை;
அது உலகப் பொது மறை. உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரிய நூல். 

ஆதிபகவன் முதற்றே உலகு.
எனும் வள்ளுவக் கோட்பாட்டுக்கும்,

இது அருகர் வணக்கம்!

மூவா முதலா  உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி.....

இது சித்தர் வணக்கம்!!

எனும் சமணக் கோட்பாட்டுக்கும்  மலைக்கும்,
மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

அருக, சித்த வணக்க முறை அறியாதவர்கள் இவ்வாறுதான் சொல்வார்கள்! :-)

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவதேவ நாயனார்.
இதே கருத்தைச் சீவகசாமி சொன்னதாகச் சிந்தாமணி சொல்லியிருந்தால்
எடுத்துக் காட்டலாம்

அப்படியே சொல்லிட்டாலும்...... 

:-)))

இரா.பா

Banukumar Rajendran

unread,
Feb 23, 2017, 10:49:51 PM2/23/17
to மின்தமிழ்
2017-02-23 18:38 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 23 February 2017 12:39:28 UTC+5:30, இரா.பா wrote:
புலால் உண்போர் நரகம் புகுவர் என்பது சமண சமய சிந்தனை.. இக்கோட்பாடு வேறேந்த
சமயத்திலும் கூறப்பட்டிருக்கிறதா என அறிய ஆவல்.

மரக்கறி உண்போரும் சரி, பயிர் - பச்சைகளுக்கும் உயிருள்ளது என்பதால்  பஞ்ச மஹாயஜ்ஞம் வாயிலாகக்
கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும். நாம் உணவேற்குமுன் இறைவனுக்குப் படைத்தல், காக்கைக்கு
அன்னம் வைத்தல் எல்லாம் கழுவாய் போன்றவைதாம்.

ஐயா, கேள்வியை மீண்டும் ஒருமுறை படிக்கவும். 

புலால் உண்டால் நரகம் கிடைக்கும் என்பது சமண சமய சிந்தனை. இச்சிந்தனை மற்ற
சமயங்களில் கூறப்பட்டிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி??

புலால் மறுத்தல் என்பதனை எந்த சமயமானாலும் போதிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம். ஆயின், புலால்
உண்டால் நரகம் கிடைக்கும் என்பது ஒரு ஒழுக்கத்தையும் மீறி தத்துவம் பேசுவதாக அமைகிறது. 

இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணரவேண்டும்.

இரா.பா

பச்சிலைக்கு உயிருள்ளதால் வனம் வாழ் தவசியர் தானே உதிர்து கிடக்கும் கனிகளையோ,
வாடிக்கிடக்கும் இலைச் சருகுகளையோ உணவாக ஏற்பர்.

இழை பிரிவதை இழை ஆசிரியர் விரும்பாததால் மேலும் விவரிக்கவில்லை.

தேவ்

--

Dev Raj

unread,
Feb 28, 2017, 10:29:15 AM2/28/17
to மின்தமிழ்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவதேவ நாயனார்.
இதே கருத்தைச் சீவகசாமி சொன்னதாகச் சிந்தாமணி சொல்லியிருந்தால் எடுத்துக் காட்டலாம்

On Friday, 24 February 2017 09:14:25 UTC+5:30, இரா.பா wrote:
அப்படியே சொல்லிட்டாலும்...... 
:-)))
இரா.பா

சீவகசாமி சொல்லாத கருத்து என நீங்கள் ஒப்புக்கொள்வதாக முடிவு செய்து கொள்ளலாம்

தேவ் 

Dev Raj

unread,
Feb 28, 2017, 10:33:29 AM2/28/17
to மின்தமிழ்

சமண சமயத்தில் சி.மு,  சி,பி [ சிந்தாமணிக்கு முன் , சிந்தாமணிக்குப்பின் ] என இரு பிரிவுகள் உண்டா ?

On Thursday, 23 February 2017 17:13:30 UTC+5:30, தேமொழி wrote:
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ச.மு; ச.பி  (சமய மறுமலர்ச்சிக்கு முன்னும் பின்னும்) என்று பார்ப்பது உதவும்.

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம் 

சிலம்பு -
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற....

நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை.......
[tvu : ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரை]

உணவேற்கும் கலங்கள் இல்லை இவை; உணவாக்குவதற்கான  - அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள்

தூய்மை என்ற பெயரில் பாகுபாடு ஏற்பட்டு விடுகிறது.
சி.மு, சி.பி [சிலப்பதிகாரத்துக்கு முன் - பின்] எனப் பகுக்கலாம் எனத் தோன்றுகிறது

தேவ்

தேமொழி

unread,
Feb 28, 2017, 1:26:58 PM2/28/17
to மின்தமிழ்
[அடிகள் சாவக நோன்புடையராகலான்]

நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
[நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே]

அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
[உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு அமைந்த நற்கலங்கள்] 

நெடியா தளிமின் நீரெனக் கூற
[பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல]

அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
[உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு அமைந்த நற்கலங்கள்] 
நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. 

மேன்மக்கள் !!!  இளங்கோ தனது பாடலில்  அவ்வாறு குறிப்பிட்டுள்ளாரா?

உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால்  தூய்மையான உறை போட்ட தலையணை, போர்வை, படுக்கை,  துண்டு, புது சோப், பிரஷ் கொடுக்க மாட்டீர்களா?
அதற்கு காரணம் அவர்கள் மேன்மக்களா? அல்லது அது அடிப்படை  விருந்தோம்பல் பண்பா?

இதுவே முனைவர் பழனியப்பன் தமது கட்டுரையில்  பிற்காலத்தில் மக்கள்  தங்கள் விருப்பம்போல பொருள் கொண்டதன் விளைவு என்று கூறிய மையக்கருத்துக்கு தக்கதொரு எடுத்துக்காட்டு
தக்க எடுத்துக்காட்டை முன்வைத்து  வைத்து ஆய்வாளரது  கருத்திற்கு மேலும்  வலுவேற்றிய  உங்களுக்கு  நன்றி சொல்ல வேண்டும். 

..... தேமொழி

iraamaki

unread,
Feb 28, 2017, 7:11:09 PM2/28/17
to mint...@googlegroups.com
சிலம்பைத் தங்களின் விருப்பம்போல் வளைப்போர் பெருகிவிட்டார்.
 
அன்புடன்,
இராம.கி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Mar 1, 2017, 12:37:52 AM3/1/17
to மின்தமிழ்
முக்கியமான கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே தேவ்ஜி!

புலால் உண்போர் நரகம் புகுவர் என்பது சமண சமய சிந்தனை.. இக்கோட்பாடு வேறேந்த
சமயத்திலும் கூறப்பட்டிருக்கிறதா என அறிய ஆவல்.

இரா.பா

--

Banukumar Rajendran

unread,
Mar 1, 2017, 12:45:44 AM3/1/17
to மின்தமிழ்
தாங்கள் சுற்றிவளைத்து எழுதுவது, தங்கள் மனதைக் காட்டுகிறது ஐயா! :-))

எப்படியாவது, தற்போதுள்ள சாதி பிரச்சனைக்கு சமணம்தான் காரணம் என்ற முடிச்சி
போடுவதுபோல முனைப்புத் தெரிகிறது தங்கள் எழுத்துக்களில். 

அப்படியே சமணம்தான் காரணம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கி.பி.10 நூற்றாண்டிலிருந்து சமணம் தான் இருந்த முதன்மை இருப்பிலிருந்து, அருகத்தொடங்குகிறது. 
கிட்டதட்ட ஆயிரம் வருடமாக (கி.பி.10நூற்றாண்டிலிருந்து, தற்போதுவரை) இந்துமதத்தால் 
அவற்றை ஒழிக்க முடியவில்லை, ஏன்??

நாயான்மார்களும் ஆழ்வார்களும் தோற்றுவிட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா
அல்லது சமணர்கள் ஏற்படுத்தியத் தாக்கத்தை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை
என்று ஒப்புக்கொள்கிறீர்களா??

இரா.பா

தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 1, 2017, 12:58:57 AM3/1/17
to மின்தமிழ்
நன்றி தேமொழி!

இது மிக முக்கியமான குறிப்பு!

இரா.பா

இதுவே முனைவர் பழனியப்பன் தமது கட்டுரையில்  பிற்காலத்தில் மக்கள்  தங்கள் விருப்பம்போல பொருள் கொண்டதன் விளைவு என்று கூறிய மையக்கருத்துக்கு தக்கதொரு எடுத்துக்காட்டு
தக்க எடுத்துக்காட்டை முன்வைத்து  வைத்து ஆய்வாளரது  கருத்திற்கு மேலும்  வலுவேற்றிய  உங்களுக்கு  நன்றி சொல்ல வேண்டும். 

..... தேமொழி

Prakash Sugumaran

unread,
Mar 1, 2017, 1:40:21 AM3/1/17
to mintamil

சாவக நோன்பிக ளடிக ளாதலின்

நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்

அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற....

தொன்மையான நோன்பிகளில் ஒருவராக அடிகள் இருந்து வருபவர் ஆதலால், இல்லறத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் சிறந்த பெண்களுள் ஒருத்தியாக, இல்லத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் (அண்ணன் மனைவி அல்லது மருமகள்) நங்கையாகிய நீங்கள் (அவரது) வழிப்பயணத்திற்கு பொருத்தமாக அமைந்து, எப்போதும் (அவர்) உங்களை விட்டு விலகாமல் நெருங்கியே இருந்து, (அவரது) உடலை தாங்கும் உயிர் கலமாக விளங்குபவர் நீங்கள் என..

இதில் எங்கேயிருந்து சோறு, உணவு, சுத்தம், சாதி எல்லாம் வருகின்றன??? பொருள் விளக்கத்துக்கான குறிப்புகள் இங்கே..

நாத்தூண் - நாத்தூணங்கை

அடி - அடியொற்றி

சிலாக்கு - சிலாக்கியம் - சிறப்பு; பொருத்தம். (apt)

கலங்கள் - உடலைத் தாங்கும் உயிர் கலங்கள்

தளி - விளக்கு தண்டு; விளக்கு தகழி.

வழிப்படூ - எ.கா: மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூ ஊம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர்.

நெடியா – எ.கா. நெடியா னோடு நான்மு கன்னும், வானவரும் நெருங்கி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 1, 2017, 9:32:14 PM3/1/17
to mintamil

வணக்கம்.

On 01-Mar-2017 11:07 AM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
> முக்கியமான கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே தேவ்ஜி!
>
> புலால் உண்போர் நரகம் புகுவர் என்பது சமண சமய சிந்தனை..

என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள் ஐயா.
வள்ளுவரின் சிந்தனையைச் சமணச் சிந்தனை என்று எவ்வாறு கொள்கின்றீர்கள்.

அன்பன்
கி. காளைராசன்

இக்கோட்பாடு வேறேந்த
> சமயத்திலும் கூறப்பட்டிருக்கிறதா என அறிய ஆவல்.
>
> இரா.பா
>
>
>
>
>
> 2017-02-28 20:59 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
>>>>
>>>> ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவதேவ நாயனார்.
>>>> இதே கருத்தைச் சீவகசாமி சொன்னதாகச் சிந்தாமணி சொல்லியிருந்தால் எடுத்துக் காட்டலாம்
>>
>>
>>
>> On Friday, 24 February 2017 09:14:25 UTC+5:30, இரா.பா wrote:
>>>
>>> அப்படியே சொல்லிட்டாலும்...... 
>>> :-)))
>>> இரா.பா
>>
>>
>>
>> சீவகசாமி சொல்லாத கருத்து என நீங்கள் ஒப்புக்கொள்வதாக முடிவு செய்து கொள்ளலாம்
>>
>>
>> தேவ் 
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Mar 4, 2017, 7:12:20 AM3/4/17
to mintamil

//வள்ளுவரின் சிந்தனையைச் சமணச் சிந்தனை என்று எவ்வாறு கொள்கின்றீர்கள்.//

வள்ளுவர் சமணரா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். வள்ளுவ சாதியினர் யார் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கும் திருவள்ளுவர் என்று குறிப்பிடப்படும் வள்ளுவருக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருப்பதையும் பார்ப்போம்.

தொழில் அடிப்படையில் உருவான சாதிகளில், சமூக நியாய, தர்மங்களை சொல்லும் திறன் கொண்டவர்கள் வள்ளுவன் சாதியினர். வள்ளுவன் சாதியை உருவாக்கியதாக குறிப்பிடப்படும் 5 பேர்;

1.கச்சக் குலாவன், 2.காக்ய நாய்க்கன், 3.ஓடிவந்த செல்வன், 4.பாலவராயன், 5.கூவம் சம்பந்தன்.

வள்ளுவன் என்பதர் அர்த்தம் - வளமாக, மிகுதியாக படைப்பவன். (மன்னர்களுக்கு அறிவுரை சொல்லும் திறன் உள்ளவர்கள்; மன்னனுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலான தூதுவர்கள்.

கச்ச குலாவன்:- உண்மையை உள்ளபடி உரைப்பவன். (Kachcha–Raw, Kulava - Enjoying)

காக்ய நாய்க்கன்:- மேலெழும் தீர்வுகளை உரைப்பவன். (Kaakya–Settlement; Naikan – Raise)

ஓடிவந்த செல்வன்:- வெளிவரும் வளமான, எளிமையான மகிழ்வான செய்தியை உரைப்பவன். (Selvan - Simple of Joy, Prosperous)

பாலவ்ராயன்:- கூர்மையாக சிந்தித்து சிறந்த நன்மையை உரைப்பவன். Balava – Benific; Rayan – Clever or Brilliant.

கூவம் சம்மந்தன்:- பெண்மையின் மென்மையோடு ஆழமாக யோசித்து உரைப்பவன். (Koovam(Koopam in Tamil literature – Deep Pit; Sammanthan–Feminine Man)

இந்த பெயர்களே அந்த சாதியினரின் கோத்திரங்கள். சைவம், வைணவம் இரு பிரிவுகளை சேர்ந்தவர்ளும் வள்ளுவர்களாக உள்ளனர். தங்களுக்குள் வடக்கத்தியர், தெற்கத்தியர் என்ற வேறுபாடு கொண்டவர்கள். பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள். குடும்பத்தில் மூத்தவருக்கு நாயனார் என்ற பட்டம் வழங்கும் வழக்கம் உள்ளது.

பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்து, அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்களிடம் நீண்டகாலம் போராடி தொடர் தோல்விகளை தழுவிய, இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்த சேர வம்ச அரசன், கோவையை ஒட்டி, கேரளாவில் உள்ள வள்ளுவநாடு என்ற பகுதியை இச்சாதியினருக்கு மானியமாக வழங்கி விட்டு, ஹஜ் பயணம் மேற்கொண்டவன் பிறகு திரும்ப வரவேயில்லை.

https://glosbe.com/ta/en/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D

http://agarathi.com/word/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

https://www.translate.com/english/naikkan/24253144

http://vedictime.com/en/library/panchanga/karana/balava

http://dict.hinkhoj.com/kachcha-meaning-in-english.words

http://dict.hinkhoj.com/%E0%A4%95%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%9A%E0%A4%BE-meaning-in-english.words

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF)

பெரும்பாலானவை செவி வழி செய்திகளாகவே இருந்தாலும், அந்த சமூகத்தினர் இப்போதும் தங்கள் வரலாறாக கூறுபவையே இந்த தகவல்கள்.

Dev Raj

unread,
Mar 4, 2017, 7:52:50 AM3/4/17
to மின்தமிழ்
புலை , புலைமை

கீழ்க்காணும் பாக்களில் முதுமொழிக்காஞ்சியும், மணிமேகலையும்  சொல்லும் ‘புலைமை’யின் பொருள் யாது ?

பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது 
செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது 
பொய் வேளாண்மை ’புலைமை’யின் துவ்வாது  
கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது 
அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது 
                                                   - முதுமொழிக்காஞ்சி

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமை’யென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்
என்னோ டிருக்குமென் றீங்கிவை சொல்வுழி....
                                                   - மணிமேகலை

பொய் வேளாண்மையைப் புலைமையுடன் ஒப்பிடக் காரணம் யாது ?

சிந்தாமணி சுட்டும் ‘புலைமகன்’ யார் ? பொருள் யாது ?

உப்பு இலிப் புழுக்கல் காட்டுள் புலைமகன் உகுப்ப ஏகக்
கைப் பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
மைப் பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
இப் பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்மின் என்றான்
                                                            -   சீவக சிந்தாமணி  

தேவ்

தேமொழி

unread,
Mar 5, 2017, 4:11:11 AM3/5/17
to மின்தமிழ்
ஆய்வாளரின் கருத்து:
சங்க காலத்தில் சாதிகளற்று தமிழகம் இருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.    
சங்கம்  மருவிய காலத்தில் சாதி, தீண்டாமைக் கொள்கைகள் தமிழகத்தில் தலையெடுக்க முற்பட்டன 

முதுமொழிக்காஞ்சி - 
இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு

மணிமேகலை - 
இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஆறாம்  நூற்றாண்டு

சீவக சிந்தாமணி - 
இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான பத்தாம்  நூற்றாண்டு

எனப் பொதுவாக அறியப்படுவதால்...
 மேற்கண்ட நூல்கள் குறித்த "புலைமை" என்பதன் பொருள் ஆய்வு குறித்து வேறொரு இழை துவக்கினால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. 

..... தேமொழி

Prakash Sugumaran

unread,
Mar 5, 2017, 5:48:07 AM3/5/17
to mintamil

புலைமை - தீய செயல்; வேளாண்மை - வேள் ஆண்மை.

Dev Raj

unread,
Mar 17, 2017, 6:48:08 AM3/17/17
to மின்தமிழ்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவதேவ நாயனார்.
இதே கருத்தைச் சீவகசாமி சொன்னதாகச் சிந்தாமணி சொல்லியிருந்தால்
எடுத்துக் காட்டலாம்>

On Friday, 24 February 2017 09:14:25 UTC+5:30, இரா.பா wrote:
அப்படியே சொல்லிட்டாலும்...... 

:-)))

இரா.பா

Caste System in Jainism, Jain Society
Caste System in Jainism is an important aspect of Jain society. Jainism divides society into a number of castes and sub-castes. Basically in the Jain society there are four types of caste.

Jainism divides mankind into a caste system which is further divided into numerous sub-castes (Jatis). All sorts of beings belong to Jainism, but it does not mean that they are equal in their status. 

The division into castes came only during Risabha's period, and besides, there were only three castes at the beginning: Kshatriyas who were supposed to protect humanity with the help of the weapons, Vaishyas who were to look after trade, agriculture and cattle-breeding and Sudras whose duty it was to do all sorts of works. Sudras were divided into two groups: workmen and others. The former were either "touchable", i.e. ritually pure (like barbers) or impure (like those who have to live segregated from others). 
Caste-system experienced further development under Bharata

http://www.indianetzone.com/49/caste_system_jainism.htm

********************************

The Jains reject the authority of the Vedas but recognize the caste System.

http://www.hindubooks.org/sudheer_birodkar/hindu_history/jainism.html

Banukumar Rajendran

unread,
Mar 17, 2017, 11:53:00 PM3/17/17
to மின்தமிழ்
Thanks Devji, for such a scholarly articles from an authentic referral sites. :-))

இந்த கட்டுரைகளில் கொடுத்திருக்கும் தரவுகளை படித்து மாளவில்லை. அப்பப்பா,
என்ன ஒரு கட்டுரை. சமண மூல நூல்களிலிருந்து எத்தனை எத்தனை குறிப்புகள்.

You made my day Devji. ;-)

Keep trying. (P.S I hope this is not in response to இன்னிலை thread) :-)))

இரா.பா

Banukumar Rajendran

unread,
Mar 17, 2017, 11:55:53 PM3/17/17
to மின்தமிழ்
இதற்கு இன்னும் பதில் தரவில்லையே தேவ்ஜி! :-)

nkantan r

unread,
Mar 18, 2017, 8:11:04 AM3/18/17
to மின்தமிழ்
நெடுமிழை; நிதானமாகப்   படிக்க வேண்டும்; ஆனால் முதலில் ஒரு வினா!  எதிர்பாரா என்பது unexpected or unintended?

regards
rnkantan

On Sunday, February 12, 2017 at 9:54:47 AM UTC+5:30, தேமொழி wrote:
நன்றி: சிறகு 

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்

தேமொழி 

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

     இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் தீட்டு”  “விழுப்புஎன்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  தீண்டாமைஎன்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

     கோ. க. பிள்ளை (1969), ஜார்ஜ் ஹார்ட் (George L. Hart, 1975a) போன்ற தமிழ் ஆய்வாளர்கள் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமையும் சாதிப்பிரிவினையும் இருந்துள்ளது எனத் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் கூறியுள்ளார்கள். இதனை மறுப்பவர்கள், குறிப்பாக அயல்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை மறுப்பவர்கள், அந்த ஆய்வாளர்களின் ஆய்வின் அடிப்படையில் புரிதல்பிழை நேர்ந்துள்ளது எனக் கருதுகிறார்கள். அயலக ஆய்வாளர்கள்  இந்திய வாழ்வியல் குறித்துத் தாங்கள் கொண்ட கருத்துப்பிழை காரணமாக, இக்காலச் சமூகத்தின் நிலைமையை அக்காலத்திற்கு ஏற்றிப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகிறார்கள்.  நூறாண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் இந்தியாவின் சாதி குறித்து வழங்கிய கட்டுரை முதற்கொண்டு இக்கால இந்தியச் சாதி ஆய்வாளர்களின் ஆய்வுகள் வரை, அயல்நாட்டு ஆய்வாளர்களுக்கு இந்திய சமூகத்தைக் குறித்த புரிதலில் பிழையிருக்கிறது என வைக்கும் விமர்சனமும் தொடர்ந்தே வருகிறது.

     தமிழ்ப்பண்பாட்டில் வளர்ந்த தமிழறிஞர்கள் பாவாணர் (1992), கைலாசபதி (1968), வீ. எஸ். ராஜம் (1992) போன்றோர் சங்க இலக்கிய நூல்களில் பறையன்’, ‘புலையன்’, ‘புலைத்தி’, போன்ற தொழில் அடிப்படையிலான பெயர்கள்  ஒருவரின் தாழ்ந்த நிலையைக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள். இழிசினன், ‘இழிபிறப்பினோன், ‘இழிபிறப்பாளன்என்று சங்க இலக்கியங்களில் வழங்கிவரும் சொற்கள், இக்காலத்தில் நாம் கருதுவது போல, இழிந்தோன்என்ற பொருள் தரும் வகையில் ஒருவரைக் குறிக்கவில்லை என்றும் ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்கள். வீ. எஸ். ராஜம்  (2015) அவர்கள் தாம் எழுதிய  சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற …’ என்ற நூலில் தொல்காப்பியம் முதற் கொண்டு சங்ககால இலக்கியங்கள், இலக்கணங்கள், சங்கம் மருவிய நூல்கள், பிற்காலத்திய தொல்காப்பிய  இலக்கண உரைநூல்கள் என விரிவாக அலசிப் பல சான்றுகள் வழியாகச்  சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் சாதிக்கோட்பாடு இல்லை என்று நிறுவுகிறார். சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசும் சாதி, தீண்டாமை போன்றவை வழக்கத்தில் இல்லை என்றால்  எக்காலத்தில் இச்சொற்கள் தமிழ்ச் சமூகத்தின் தாழ்ந்த குலத்தவர் என ஒரு சில பிரிவினரைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தும் நிலை உருவானதுஏன் அந்த மாற்றம் என்பதை ஆராய்வது தொடர்ந்து வருகிறது.   இதன் பொருட்டு  சங்கம் மருவிய காலத்துத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலும், இலக்கியங்களிலும் விடை தேடி வருகிறார்கள் ஆய்வாளர்கள்.

     இந்த வரிசையில் ஆய்வாளர் முனைவர் பழனியப்பன் (முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், தலைவர், தென்னாசிய ஆய்வு மற்றும் தகவல் கழகம் / Dr. Sudalaimuthu Palaniappan, President, South Asia Research and Information Institute, www.sarii.org) அவர்கள் 2008 ஆம் ஆண்டு சர்வதேச சமண சமய ஆய்விதழில் வெளியிட்ட சங்கம் மருவிய தமிழகத்தில் சாதிகள் உருவானதில் சமணம் அளித்த எதிர்பாராத் தாக்கம்(On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society – https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf) 

தேமொழி

unread,
Mar 19, 2017, 12:26:39 AM3/19/17
to மின்தமிழ்

On Saturday, March 18, 2017 at 5:11:04 AM UTC-7, nkantan r wrote:
நெடுமிழை; நிதானமாகப்   படிக்க வேண்டும்; ஆனால் முதலில் ஒரு வினா!  எதிர்பாரா என்பது unexpected or unintended?

வேந்தன் அரசு நன்று. எதிர்பாராத் தாக்கம்” (On the Unintended Influence of Jainism = வேளா தாக்கம், விழையா தாக்கம்.

வேந்தர் பேஸ்புக்கில் வழங்கிய கருத்தின்படி, "விழையா தாக்கம்" என்பது மேலும் பொருத்தமான மொழிபெயர்ப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

..... தேமொழி

nkantan r

unread,
Mar 19, 2017, 2:02:26 AM3/19/17
to மின்தமிழ்
மீண்டும் ஒரு வினா! (அறியாவினா );
ஒற்று மிகாதா? (வேளாத்  தாக்கம், விழையாத்  தாக்கம்)

rnkantan

Dev Raj

unread,
Apr 1, 2017, 1:35:22 PM4/1/17
to மின்தமிழ்
சிலம்பு -
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற....

நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை.......
[tvu : ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரை]

உணவேற்கும் கலங்கள் இல்லை இவை; உணவாக்குவதற்கான  - அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள்

தூய்மை என்ற பெயரில் பாகுபாடு ஏற்பட்டு விடுகிறது.

On Tuesday, 28 February 2017 23:56:58 UTC+5:30, தேமொழி wrote:
உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால்  தூய்மையான உறை போட்ட தலையணை, போர்வை, படுக்கை,  துண்டு, புது சோப், பிரஷ் கொடுக்க மாட்டீர்களா?
அதற்கு காரணம் அவர்கள் மேன்மக்களா? அல்லது அது அடிப்படை  விருந்தோம்பல் பண்பா?

தேமொழி அவர்களே, 
என் இல்லிற்கு வருவோர்க்குப் புதுமனை அமைத்துத் தரும் வசதி என்னிடம் கிடையாது.
ஆனால் சிலம்பு கூறுவதோ -

அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற

இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை

அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு

மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்

பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் 

காவற் சிற்றிற் கடிமனைப் படுத்து..... 

ஆயர் மகளிர் அவர்களைக் கோவலர்தம் குடியிருப்போடு இல்லாமல் தனியே ‘ பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர்க் காவல் சிற்றில் கடிமனைப் படுத்து’கின்றனர்.

மேலும் உரைப்பகுதியில் ஜைன தத்துவ நூலாசிரியர், ஸ்ரீ புராணச் செம்மல் திரு ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்கள்  ‘ ....... பகற்பொழுதில் உணவு சமைப்பதற்கேற்ற  நல்ல புதுப் பாத்திரங்களைக் காலம் கடத்தாமல் நீங்கள் கொடுங்கள் !’ என்று ஆயர்குல மகளிரை நோக்கி மாதரி கூறியதாக உரை வரைந்துள்ளார்.

தம் இல்லிற்கு வருவோர்க்குத் தனியே புதுப் பாண்டங்களையும், அரிசி, பருப்பு, காய்கறிகளையும் கொடுத்து ’நீங்களே உணவு தயாரித்துக்கொள்ளுங்கள்’ என யாரும் சொல்வதாகத் தெரியவில்லை.

நாத்தனார் இல்லிற்கு மதனியார் சென்றாலும் இவ்வாறு செய்யமாட்டார்கள்; ’நாத்தூண் நங்கை’ எனச் சிலம்பு சொல்வது ஓர் உபசார வழக்கு. கோவலனையும் , கண்ணகியையும் நோக்கி ‘இவர்கள் யாவர்?’ என வினவிய இணையரிடம் கவுந்தி அடிகளார் ‘இவர்கள் என் மக்கள்’ என மறுமொழி கூறிய செய்தியும் சிலம்பின்கண் உளது. இதுவும் ஓர் உபசார வழக்கே.

ஏதோ ஒருவிதத்தில் பாகுபாடு தொடங்கி விட்டது என ஏற்பதால் யாதொரு கவுரவக் குறைவும் ஏற்பட்டு விடாது.

தேவ்

தேமொழி

unread,
Apr 1, 2017, 4:50:35 PM4/1/17
to மின்தமிழ்
திரு தேவ் அவர்களே, 

இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து (12-13)

என்ற  சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்  (3. அரங்கேற்று காதை) வரிகளுக்கு  உரை எழுதிய ( 12-ஆம் நூற்றாண்டின்) அடியார்க்கு நல்லார் எவ்வாறு பொருள்  விளக்கம் தருகிறார்? விளக்க முடியுமா? 

இதை விளக்கினால் எவ்வாறு காலம் தோறும் தங்கள் கருத்துகளை உரையாசிரியர்கள் தங்கள் கோணத்தில் பொருள் சொல்லிச் சென்றார்கள் எனத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

..... தேமொழி
 
தேவ்

N. Ganesan

unread,
Apr 1, 2017, 7:01:19 PM4/1/17
to மின்தமிழ்

On Saturday, April 1, 2017 at 10:35:22 AM UTC-7, Dev Raj wrote:
இதுபோல் வழக்கம் உண்டு. சன்னியாசிகள் திருச்செந்தூர், ராமேசுவரம், ... தென்மாவட்டங்களில் போகும்போது கிராமங்களில் ஓய்வெடுக்க வீடுகளில் தங்குவர். அல்லது, ஊர் விநாயகர் கோயில்
சமையல் செய்ய வசதி இருந்தால், புதுக் கலங்கள் அளிப்பர். தங்கல் முடிகிறபோது பாத்திரத்தை கொடுத்துவிட்டுப் புறப்படுவர். அதைத் தான் நாட்டார் ஐயா குறிப்பிடுகிறார். மேலும், இடையர்கள்
அசைவ உணவு செய்யும் பாத்திரம் இல்லாமல், விருந்தினராக வந்துள்ள சாவக நோன்பிகளுக்கு நல்ல தூய்மையான புதுப் பாத்திரங்களை அளிப்பது இயற்கை.

வீட்டில் தங்கும் துறவிகள் செய்த சாப்பாட்டை பள்ளி நாட்களில் சாப்பிட்டுள்ளேன். இப்போது பழனி போன்ற ஊர்களில் சாமியார்கள் குறைந்துவிட்டனர். சைவ மடங்களுக்கே தலைமை
பூண அருளும், அமைதியும், ஞானமும் கொண்டவர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்கின்றனர்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Apr 2, 2017, 1:11:54 AM4/2/17
to மின்தமிழ்
On Sunday, 2 April 2017 02:20:35 UTC+5:30, தேமொழி wrote:
இதை விளக்கினால் எவ்வாறு காலம் தோறும் தங்கள் கருத்துகளை உரையாசிரியர்கள் தங்கள் கோணத்தில் பொருள் சொல்லிச் சென்றார்கள் எனத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

உரைகாரர்கள் நம் போன்ற மனிதர்தாமே. வானிலிருந்து திடீரெனக் குதித்தவர் இல்லையே !
இன்றும்கூடப் பொதுப்பிரச்னைகளை நாம் ஒவ்வொருவரும் தத்தம் கோணத்தில் , தம் கருத்தியலுக்கு
ஏற்பத்தானே அணுகுகிறோம் ;

இங்கு நாம் பேசிவரும் கொலைக்களக்காதையில் மூலவரிகளே மிகத் தெளிவாகத்தானே
அமைந்துள்ளன; அகவையால், விழுமியங்களால், ஒழுக்கத்தால், செல்வத்தால் ஏதோ ஒருவகையாற் 
பாகுபாடு சமுதாயத்தில் இருந்தே வந்துள்ளது

தேவ்

Dev Raj

unread,
Apr 2, 2017, 1:16:35 AM4/2/17
to மின்தமிழ்
வழக்கம் நிலவுவதைச் சுட்டியதற்கு நன்றி, கணேசர் ஐயா.

ஒருவித மரியாதையின் அடிப்படையில் சமய விழுமியம் சார்ந்த  பாகுபாடு  
இருப்பதை இது இன்னும் தெளிவாக்குகிறது;

அதை அப்படியே சிலம்போடு பொருத்திப் பார்க்கவும் வேண்டிய
இடமுள்ளது. நான் சொல்ல விழைவதும் அதையே

தேவ்

தேமொழி

unread,
Apr 2, 2017, 1:38:53 AM4/2/17
to மின்தமிழ்
இது இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆய்வாளரின் முடிவு....

சமண சமயத்தினர் தீவிரமாகக் கொல்லாமைக் கொள்கையைப் பரப்பிய தாக்கத்தினால் சங்கம் மருவிய காலத்து மன்னர்களும்;  சமணத்தின் அகிம்சைக் கொள்கையின் தாக்கம் பெற்ற வைதீக பிராமண சமயத்தினரும் சமணத்தின்  கொள்கைகளை உள்வாங்கினர்.  இந்த மாறுதலால் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் சமயச் சடங்குகள் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கலாம். சமணரின்   கொல்லாமைக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கிய வைதீக பிராமணர் தமிழ்ப் பழங்குடியினரது சமயச் சடங்குகளைத் தாழ்ந்தவையாகவும் கருதத் தலைப்பட்டிருக்கக்கூடும். துடிப்பறையை  இசைக்கும் வேட்டுவக் குடியைச் சார்ந்த ஒருவனை  மறுபிறப்பில்  நரகத்திற்குப் போகும் இழிபிறப்பினோன்’ என உயர்வு தாழ்வு குறிக்காது சமணர் குறிப்பிடபின்னர் சங்கம் மருவிய காலத்தில் உயிர்ப்பலி கொடுக்கும் வெறியாட்டுச் சடங்கில் முழவை இசைப்போனை வாழும் பிறவியிலேயே  கீழ்மகன்’ என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின்  பக்தி இயக்கம்’ காலத்தில்  (பொ.பி. 6 முதல் – 9 ஆம் நூற்றாண்டுகள்) இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

..... தேமொழி

Dev Raj

unread,
Apr 2, 2017, 10:15:44 AM4/2/17
to மின்தமிழ்
On Sunday, 2 April 2017 11:08:53 UTC+5:30, தேமொழி wrote:
இது இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆய்வாளரின் முடிவு....

சமண சமயத்தினர் தீவிரமாகக் கொல்லாமைக் கொள்கையைப் பரப்பிய தாக்கத்தினால் சங்கம் மருவிய காலத்து மன்னர்களும்;  சமணத்தின் அகிம்சைக் கொள்கையின் தாக்கம் பெற்ற வைதீக பிராமண சமயத்தினரும் சமணத்தின்  கொள்கைகளை உள்வாங்கினர்.  இந்த மாறுதலால் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் சமயச் சடங்குகள் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கலாம். சமணரின்   கொல்லாமைக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கிய வைதீக பிராமணர் தமிழ்ப் பழங்குடியினரது சமயச் சடங்குகளைத் தாழ்ந்தவையாகவும் கருதத் தலைப்பட்டிருக்கக்கூடும். துடிப்பறையை  இசைக்கும் வேட்டுவக் குடியைச் சார்ந்த ஒருவனை  மறுபிறப்பில்  நரகத்திற்குப் போகும் இழிபிறப்பினோன்’ என உயர்வு தாழ்வு குறிக்காது சமணர் குறிப்பிடபின்னர் சங்கம் மருவிய காலத்தில் உயிர்ப்பலி கொடுக்கும் வெறியாட்டுச் சடங்கில் முழவை இசைப்போனை வாழும் பிறவியிலேயே  கீழ்மகன்’ என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின்  பக்தி இயக்கம்’ காலத்தில்  (பொ.பி. 6 முதல் – 9 ஆம் நூற்றாண்டுகள்) இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

வடபுலத்திலும் இதே போன்ற மாற்றங்கள் இதே காலகட்டத்தில் சமணக் கொள்கைகளின் பாதிப்பினால் ஏற்பட்டனவா ?

தேவ் 

N. Ganesan

unread,
Apr 2, 2017, 10:39:27 AM4/2/17
to மின்தமிழ், vallamai
இழிபிறப்பாளன், இழிபிறப்பினோன் என்று பாடிய சங்கப் புலவர்கள் சமணர்கள் அல்லர். அவர்கள் எச் சமயத்தவராயினும் இருக்கலாம். சமயமே இல்லாதவராயினும், (அ) கிராம தேவதை வழிபாடு உடையோராகவும் இருக்கலாம். இன்றளவும் கிராமதேவதை, குலதெய்வம் வழிபாடுகளே தமிழரிடையே அதிகம்.

வடபுலச் சமயங்கள் தென்னாட்டுக்கு வந்து மக்களிடம் ஆதரவு பெறப் போட்டியிட்டன. ஆனால், ஜாதி அடிப்படை வேறு. கீழ்மகன், புலையன், இழிபிறப்பாளன் என்றுள்ள சங்கப் பாடல்கள் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு வரை இலக்கியங்கள் தெளிவாக உள்ளன. 

சங்கப் பாடல்களில் உள்ள ஜாதி குறித்த இழிபிறப்பாளன் போன்ற பாடல்களை முழுமையாகப் படித்தால் இவை சமணர் கருத்துகள் அல்ல. தமிழர்கள் உருவாக்கிய கருத்துகள் என்று தெரியும். பிற செம்மொழி இலக்கியங்களிலும் உள்ள இவ்வகையான கருத்துக்களிடம் ஒப்பிட்டு பார்க்கலாம். சமணம் எழுத்துக்களை தமிழுக்கு தருகிறது - ப்ராமி வழியாக. அப்போது இருந்த மக்கள் பழக்க வழக்கங்களைப் புலவர்கள் பாடலை எழுதப் பயன்படுத்தலாயினர், ஆனால், சமணமோ, பௌத்தமோ மக்களிடம் பெரிதாக சங்க காலத்தில் வேரூன்றவில்லை. மன்னர்கள் வேத யக்ஞங்களுக்கு ஆதரவு நல்கினர். வேம்பிற்றூர் முதலைக்குளத்தில் சோழிய ப்ராமணர்கள் ராஜசூயம் போன்றவை வருணனுக்கு செய்திருக்கவேண்டும். காசுகள் கிடைத்துள்ளன.

இவையெல்லாம் சமூகத்தின் மிக உயர் நிலையில் இருந்த வேளிர் வருகை தொடர்பானது. ஆனால் பொதுமக்கள் வாழ்க்கை, சமூக, சமய நிலைகள் வேறு. http://www.tamilnation.co/caste/hart.pdf

ஆனால், பொதுவான மக்கள் வாழ்க்கைப் பாடல்களில் பாடும் ஜாதியின் தோற்றக்கூறுகள் - இந்தியா முழுதும் உள்ளவற்றை சங்க இலக்கியங்கள் எதிரொளிக்கின்றன - சமணர் செய்ததல்ல. எல்லோரும் செய்தது. அப்போதிருந்த தமிழரின் சங்கச் சமயம் அணங்கு வழிபாடு. இது சமணம் தந்ததல்ல. சங்க காலச் சமயம் பற்றி அறிய  .
அதை விளங்கிக்கொண்டால் இழிபிறப்பாளன் எனப் புலவோர் பாடிய்யிருப்பது புரியும். அப்போது வந்த ஒரு சில சமணர்கள் இழிபிறப்பாளன் என்ற கருத்தாக்கம் உருவாக்கி எல்லா மக்களுக்கும் பரப்ப முடியாது. அவர்கள் ஆளும் நிலையிலும் இல்லை. சமணர்கள் என்பது ஜைநம், பௌத்தம் இரண்டுமாகும்.

ஆள்- “to rule", ஆழ்- “to sink in yoga, dhyana" வேறுபாடு உண்டு. சங்கத் தமிழர்கள் இழிபிறப்பாளன் என்ற கோட்பாட்டை வடநாட்டு சமண சமயங்களில் இருந்து பெறவில்லை. சொல்லப்போனால், இந்தியா முழுதும் திராவிடப் பண்பாடு, சமயம் இருந்திருக்கிறது. அது கொஞ்சம், கொஞ்சமாக மாறியிருக்கிறது. வட இந்தியா த்ராவிட பாஷைகளை விடுத்து ஆர்ய பாஷைகள் பேசுவது என்றானபோது. அணங்கு வழிபாட்டுச் சமயம் அந்தப் பழைய சமயத்தை காட்டும் பனிப்பாறையின் முனை ‘tip of the iceberg'. சமண சமயங்கள், சைவ சமயங்கள் பிற்காலம். இவற்றை எல்லாம் முழுதுமாக தமிழர் ஏற்றதுமில்லை.

நா. கணேசன்
 சங்க காலத் தமிழர் சமயம் எது? அறிய:

Reply all
Reply to author
Forward
0 new messages