எனது அடுத்த தொடரடைவுகள்.

21 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Apr 29, 2026, 3:59:46 PM (2 days ago) Apr 29
to மின்தமிழ்

ன்புடையீர்,

சென்ற 6-1-2026 அன்று பாரதிதீபம் என்ற நிகண்டுக்கான தொடரடைவினை உருவாக்கி வெளியிட்ட செய்தியை அறிவித்திருந்தேன். அது என்னுடைய 116-ஆவது நூலுக்கான தொடரடைவு ஆகும். நிகண்டுகளில் அது 14-ஆவது நிகண்டு ஆகும். அதன் பின்னர் இது தொடர்பான வேறு அறிவுப்புகள் இல்லை. அறிவிப்பு இல்லாவிட்டாலும், பணி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

சென்ற மூன்றரை மாத காலமாக நான்கு நிகண்டுகளுக்கான தொடரடைவுகளை உருவாக்கி என் இணையதளத்தில் (tamilconcordance.in) அவ்வப்போது வெளியிட்டேன். அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை மட்டும் நிறுத்திவைத்திருந்தேன்.   

அந்த நான்கு நிகண்டுகள்:

1. அகராதி நிகண்டு (உ.வே.சா - பசுபதி – 2003) - நாள் 8-2-2026

2. அகராதி நிகண்டு - இரேவண சித்தர் - நாள்: 18-2-2026

3. கைலாச நிகண்டு சூளாமணி - நாள் : 28-2-2026

4. பொதிகை நிகண்டு – முதற்பகுதி - நாள்: :29-4-2026

இவற்றையும் சேர்த்து மொத்தம் 120 நூல்களுக்கான தொடரடைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிகண்டுகளில் மொத்தம் 18 நிகண்டுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு தொடரடைவுகளையும் உருவாக்கி வெளியிட்டிருந்தாலும், அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை நான் வெளியிடாததற்கு முக்கிய காரணம்  என்னுடைய பிறந்தநாள் அறிவிப்பாக மொத்தமாக இதனை அறிவிக்கலாம் என்பதுதான்.

ஆம், நண்பர்களே, இறைவன் இயேசுபிரானின் திருவருளால் இன்று (30-4-2026) நான் என் 83-ஆவது பிறந்தநாளைக் காண்கிறேன். வீட்டிலுள்ள குடும்பச் சூழ்நிலை எத்துணையோ இடர்ப்பாடுகளை என் முன் குவித்தாலும், கிடைக்கின்ற நேரத்தில் இப்பணியை நான் விடாமல் செய்து முடித்ததற்கு இறைவனின் திருவருளேயன்றி வேறு ஒன்றும் இல்லை.

இந்த நான்கு தொடரடைவுகளை என் பிறந்தநாள் பரிசாகத் தமிழுலகிற்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ப.பாண்டியராஜா

 

தேமொழி

unread,
Apr 29, 2026, 4:17:20 PM (2 days ago) Apr 29
to மின்தமிழ்

மிக்க நன்றி ஐயா, மிக்க மகிழ்ச்சி. 

மனம் கனிந்த இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 

happy birthday.jpg

-----

சக்திவேலு கந்தசாமி

unread,
Apr 29, 2026, 11:13:53 PM (2 days ago) Apr 29
to mint...@googlegroups.com
நீடூழி வாழ்க.  தம்முடைய விலை மதிப்பற்ற காலத்தையும் பொன்னையும் பொருளையும் தமிழுக்கு அர்ப்பணித்துவருபவர்.  'நாளும் நவை போகான் கற்றல் இனிதே.."   

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d4e09031-be4b-4f68-87d9-da262f18b4cen%40googlegroups.com.

இளங்குமரன்

unread,
Apr 30, 2026, 12:11:21 AM (yesterday) Apr 30
to mint...@googlegroups.com
பல்லாண்டு உடல் நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துகிறேன் ஐயா.



--
அன்புடன்
         ஐயா
எழுத்தேணி அறக்கட்டளை
 

Pandiyaraja Paramasivam

unread,
Apr 30, 2026, 1:22:29 PM (15 hours ago) Apr 30
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா. தங்களின் இணையதளத்தைத் திறக்கமுடியவில்லையே. சொடுக்கினால்,

This site can’t be reached

Check if there is a typo in ezhutheni.org.

DNS_PROBE_FINISHED_NXDOMAIN
என்ற செய்தி வருகிறது.


Pandiyaraja Paramasivam

unread,
Apr 30, 2026, 1:23:02 PM (15 hours ago) Apr 30
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.

On Thu, Apr 30, 2026 at 9:41 AM இளங்குமரன் <ssda...@gmail.com> wrote:

Pandiyaraja Paramasivam

unread,
Apr 30, 2026, 1:23:43 PM (15 hours ago) Apr 30
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, தேமொழி அம்மையே!.

On Thu, Apr 30, 2026 at 1:47 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--
Reply all
Reply to author
Forward
0 new messages