சாப்பாடு

221 views
Skip to first unread message

வி. சு.

unread,
Mar 4, 2010, 11:10:02 PM3/4/10
to மின்தமிழ்

சாப்பாடு என்ற சொல்லின் மூலம் என்ன?

ஆடு என்ற பின்னொட்டை எடுத்துவிட்டால், சாப்பு - சாம்பு - சம்பு (சம்பளம்)
- நெல் ?!

Venkatachalam Subramanian

unread,
Mar 5, 2010, 12:59:22 AM3/5/10
to mint...@googlegroups.com
ஓம்.
பரவாயில்லை! பல்வேறு வேர்ச் சொற்களின் வேர்களை அலசுகிறீர்கள். நலம்.
’பரவாயில்லை’க்கு சரியான தமிழ்ச்சொல் எது?
உட்காருதல் தமிழ்ச் சொல்லன்று என்கிறார் ஞானியார் அடிகள்!

2010/3/5 வி. சு. <vijayakuma...@gmail.com>

சாப்பாடு என்ற சொல்லின் மூலம் என்ன?

ஆடு என்ற பின்னொட்டை எடுத்துவிட்டால், சாப்பு - சாம்பு - சம்பு (சம்பளம்)
- நெல் ?!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ananda rasa thiruma

unread,
Mar 5, 2010, 7:49:13 PM3/5/10
to mint...@googlegroups.com
குழந்தை தாயிடம் பால் குடித்தலைச் சப்புதல் என்னும் வழக்காறு உண்டு. சப்பிச் சாப்பிடு என்றும் சொல்வார்கள். சப்புதல் என்பதற்குச் சுவைத்தல் என்னும் பொருளும் உண்டு. எனவே சப்புதல் என்பதிலிருந்து சாப்பாடு வந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சுடு என்பது சூடு என்று ஆவதுபோல் சப்பிடு என்பது சாப்பிடு என்று ஆகியிருக்கலாம். ஈடுகளில் சாப்பிடுதல் என்னும் வழக்காறு காணப்படுகிறது. ஆனால் பண்டைய இலக்கியச் சான்றுகளைக் காணமுடியவில்லை. இக்கருத்து உறுதியானது அன்று.

பரவாயில்லை என்னும் தமிழ் வழக்கு சற்று விந்தையானது. இந்தியில் உள்ள கூட்டுச் சொல்லான பர்வாநகி என்பதில் நகி என்பதற்குத் தமிழில் இல்லை என்பது பொருள். அதை மட்டும் மொழி பெயர்த்துச் சேர்த்துப் பர்வாஇல்லை என வழங்கியுள்ளனர். ஒரு சொல் குறில் எழுத்தில் தொடங்கும் போது அதன் பக்கத்தில் ரகரமெய் தமிழில் வராது. அதனால் அது ரகர உயிர்மெய்யாகியது. இவ்வாறு பரவாயில்லை என்பது தமிழில் வழங்கத் தொடங்கியது.

உட்கார்தல் என்பதை ஞானியார் அடிகள் தமிழ் இல்லை எனச் சொன்னதற்கான அடிப்படை தெரியவில்லை. வேறு எம்மொழிச் சொல் என்பதும் தெரியவில்லை. இதன் வேர்ச் சொல் பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் உள்ளன.
உளுக்கா - தல் என்பதிலிருந்து உட்கார்தல் என்பது வந்தது என்பது ஒன்று.
உள்குறு - தல் என்பதிலிருந்து வந்தது என்பது மற்றொன்று. மலையாளத்தில் உள்ளு என்பது உட்கார் என்னும் பொருளில் வழங்குவதை இதனோடு ஒப்பிட்டுக் காணலாம்.

வேறு ஒரு கருத்தையும் எண்ணிப் பார்க்கலாம். ஒக்க + ஆர்தல் = ஒக்கார்தல் - உட்கார்தல். ஆர்தல் என்பது அமைதல் என்னும் பொருளுடையது. ஒக்க என்பதற்கு ஒழுங்குபட என்பது பொருள். ஒழுங்குபட அமைதல் என்னும் பொருளில் ஒக்கார்தல் - உட்கார்தல் ஆகியிருக்கலாம். இதற்கம் பண்டைய இலக்கியச் சான்று இல்லை.

ஆராதி


2010/3/5 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Mar 6, 2010, 8:37:11 AM3/6/10
to mint...@googlegroups.com
ஓம்
நன்றி.

பர்வாநகி என்பதில் நகி என்பதற்குத் தமிழில் இல்லை என்பது பொருள். அதை மட்டும் மொழி பெயர்த்துச் சேர்த்துப் பர்வாஇல்லை என வழங்கியுள்ளனர்.
இந்தச் சொல் ‘பரவாயில்லை’ என்பதில் வரும் ‘பர்வா’ இந்தியில் என்ன பொருள்?
இந்த இந்திச் சொல் பயன்பாட்டுக்கு முன்னர் வேறு ஏதாவது சொல் இப்பொருளில் இருந்திருக்குமா?

சிலர் உடல் நலம் பற்றி விசாரிக்கையில் ‘தேவலை’ என்று கூறுகிறார்கள்.
அதுவும் பரவாயில்லை என்பதும் ஒரே பொருளாக இருக்குமா? தேவலை எப்படி உருவாகியிருக்ககும்?

கலெக்டர் என்பதைப் புரிந்துகொள்வதைப் போன்று அதன் கலைச்சொல்லாக மாவட்டத் தண்டல் நாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதனை மாற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் உண்டானது.

உண்டுx கிடையாது. உண்டு என்ற சொல்லுக்கு அதன் அடியாகவே வேறு சொல் உண்டா?
’கிடையாது’ கிடைக்காது என்பதன் மருவா?

என் பேரன் கோயில் வலம் வருகையில், நவக்கிரஹ பீடங்களில் பூமியினை ஏன்  கிரஹமாக வைக்கவில்லை. பூமி சூரியன் சந்திரன் போன்று ஒரு கோள் அல்லவா? என்று கேட்டான்.
மேருவை மையமாக வைத்து  பிற கோள்கள் சுற்றுவதாக நம் பெரியோர் கூறியிருக்கிறார்கள் என்றேன். அவனை திருப்திப்படுத்தமுடியவில்லை.

அன்புடன் வெ.சுப்பிரமணியன்.
ஓம்

2010/3/6 ananda rasa thiruma <aara...@gmail.com>

N. Kannan

unread,
Mar 6, 2010, 9:48:29 PM3/6/10
to mint...@googlegroups.com
2010/3/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

> என் பேரன் கோயில் வலம் வருகையில், நவக்கிரஹ பீடங்களில் பூமியினை ஏன்  கிரஹமாக
> வைக்கவில்லை. பூமி சூரியன் சந்திரன் போன்று ஒரு கோள் அல்லவா? என்று கேட்டான்.
> மேருவை மையமாக வைத்து  பிற கோள்கள் சுற்றுவதாக நம் பெரியோர்
> கூறியிருக்கிறார்கள் என்றேன். அவனை திருப்திப்படுத்தமுடியவில்லை.
>

Geocentric view!

K.>

MANICKAM POOPATHI

unread,
Mar 7, 2010, 3:16:50 AM3/7/10
to mint...@googlegroups.com
வணக்கம்:

தமிழில் இருந்து வடக்கே போயிருக்கலாம் இல்லீங்களா..? ;-p

உட்காருதல் (உள்) என்பது தமிழில்
இருத்தல் குந்தியிருத்தல்  என்பதெல்லாம்
வந்து கோருங்க..  இங்கதான்  கோந்திருந்தாங்க
என்றெல்லாம்.. இன்னும் பலவாறு இடம் பொருளுக்கேற்ப
பேச்சுத் தமிழில் பயின்று வரும்...?

சவை (ச்சவை) சவைத்தல் / சௌவைத்தல் சுவைத்தல் 
என்பது சமூக விருந்து என்றானால் சாப்பாடு என்றாகும்..
அது கடல் கடந்து இன்றைக்கும் "சாபு-சாபு" என்று ஆகி
ஜப்பான் முதாலான நாடுகளில் வழங்கி வருவதாகத தெரிகிறது.

chow என்பது சீனமொழியில் உணவு என்பதற்கு நிகராக
பலவாறும் பயின்று வருவது கவனிக்கத்தக்கது..

அன்றைய துறவியர் அரிசி உணவை சௌவூசி (சோப் ஸ்டிக் )
கொண்டு உண்பர்.. அரிசியில் மூங்கில் அரிசி சௌ அரிசி
என உண்டு.. அரிசிச்சோறு என்பதனை நெல்லஞ் சோறு
என்றுதான் அழைப்பார்கள்..  சௌவரிசி என்பது ஒருவகை
கலியாணப்   பனையின் சோற்றில் இருந்து தயாரிப்பது ஆகும்..?

வெள்ளையன்.. காலம் காலமாய்  எமது பொது உடைமையாயிருந்த
சௌந்திர வனக் காடுகளை ஆக்கிரமிப்பு செய்ததோடு.. ஒரு  காலத்தில் கோடி கட்டிப் பரந்த எமது சவ்வரிசி தயாரிப்பு ஒரு முடிவுக்கு வந்ததோடு அதன் கலப்படமாக  கப்பைக்கிழங்க்கில் இருந்து
தயாரிக்கப்படும் நகல் அசலை மறைத்து, இன்றைக்கு,
அது ஜவ்வரிசி  (sabudana(m))என அறியப்படுவதாகத் தெரிகிறது....

நன்றி, வணக்கம்...!

சௌக்கியத்துடன்.../ பூபதி  
___________________________

பிகு:  விருந்தவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது சொந்தமன்றோ..??  |-)
(எமது மண்ணில் பொது உடைமை இருந்ததில்லை
என்று யாரோ எங்கோ எழுதியிருந்ததாக நினைவு..? )








2010/3/4 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Mar 7, 2010, 7:58:07 AM3/7/10
to mint...@googlegroups.com
திரு வெ.சுப்பிரமணியன்
1. பர்வா என்னும் இந்திச் சொல்லிற்குப் பொருட்படுத்துதல் என்பது பொருள். பர்வா+நகி = பொருட்படுத்த + இல்லை = பொருட்படுத்தவில்லை
இதற்கு ஈடாகத் தகவில்லை (தகவு + இல்லை) என்னும் பொருளில் தேவலாம் என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2. உண்டு என்பதற்கு எதிர்ச் சொல் இன்று பேச்சு வழக்கில் கிடையாது என்பது கையாளப்படுகிறது. ஆனால் உண்டுxஇல்லை என்பன எதிர்ச் சொற்கள்.
கிடையாது என்பது சரியான சொல்தான். தமிழில் சில சொற்களில் ஒரு சொல்லின் ஒரு பகுதி மட்டும் அந்த முழுச் சொல்லையும் குறிக்கும். சுடுதல் - சூடு, கெடுதல்- கேடு என்பது போல வரும் கிடைத்தல் என்னும் சொல் ஆ என்னும் எதிர்மறை இடைநிலையைப் பெற்றுக் கிடையாது (கிடை + ஆ + து = கிடை + ய் + ஆ + து = கிடையாது) என வழங்குகிறது.

3. பழங்காலத்தில் மனிதன் தான் வாழும் பூமியையே சூரியன் முதலியவை சுற்றி வருகின்றன என நினைத்தான். அதனால் தான் வாழும் பூமியை மையமாகக் கருதி இதனைச் சுற்றி வருவனவற்றைக் கோள்கள் என வரையறை செய்தான். பாஸ்கரர் காலத்தில் ஏழு கிரகங்களே குறிப்பிடப்பட்டன என கணித வல்லுநர் குறிப்பிடுகின்றனர் சாயாக் கிரகங்களான ராகு, கேது அவர்காலத்தில் குறிப்பிடப்படவில்லையாம்.
உங்கள் பேரன் அறிவியல் யுகத்தில் வாழ்கிறான். அதனால் அவனுக்கு பூமியும் ஒரு கோள் என்பது தெரிந்துள்ளதால் இந்த வினா எழுந்தது. எதனையும் கூர்மையாகப் பார்த்து வினா எழுப்பும் உங்கள் பேரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆராதி

2010/3/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Mar 7, 2010, 8:25:58 AM3/7/10
to மின்தமிழ்
For some strange reasons.. I am beginning to feel allergic to
Etymological discussions in Tamil Mailing Lists. :-/

At some point of time, they all boil down to... errr..you guys know
what it is .... the same stuff over and over again.

(Nothing against this specific thread, really :-) )

V

வி. சு.

unread,
Mar 7, 2010, 9:55:42 PM3/7/10
to மின்தமிழ்
On Mar 7, 5:58 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
...

> 2. உண்டு என்பதற்கு எதிர்ச் சொல் இன்று பேச்சு வழக்கில் கிடையாது என்பது
> கையாளப்படுகிறது. ஆனால் உண்டுxஇல்லை என்பன எதிர்ச் சொற்கள்.
> கிடையாது என்பது சரியான சொல்தான். தமிழில் சில சொற்களில் ஒரு சொல்லின் ஒரு
> பகுதி மட்டும் அந்த முழுச் சொல்லையும் குறிக்கும். சுடுதல் - சூடு, கெடுதல்-
> கேடு என்பது போல வரும் கிடைத்தல் என்னும் சொல் ஆ என்னும் எதிர்மறை இடைநிலையைப்
> பெற்றுக் கிடையாது (கிடை + ஆ + து = கிடை + ய் + ஆ + து = கிடையாது) என
> வழங்குகிறது.
...

உண்டு x உண்டாது (உண்டது)

தெலுங்கில் இது வழக்கு.

Reply all
Reply to author
Forward
0 new messages