இற்றைத்திங்கள் இளையதோர் பிஞ்சும்....

21 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 21, 2020, 1:14:06 PM4/21/20
to மின்தமிழ்
இற்றைத்திங்கள் இளையதோர் பிஞ்சும்....
====================================================ருத்ரா

கொல் களிறும் வெரூஉம் வரிநெடு வேங்கை
இணரிய பூக்களின் சொரிபடு வெதிர்ப்பில்
கொடிய மருப்பொடு அறையும் அறையும்.
வேய்மறை அடர்கான் கண்ணொளி ஒளிக்கும்
எல்லே ஆற்றின் எழில் இலஞ்சி துழாஅய்
மயிரிழை அன்ன நுண்மணல் நூல்பிரி
நுடங்கு நுண்டுளி தூம்புக்கை கொடு
தன் மேல் நீர் இறைத்துக்களிக்கும்.
பொன்னின் வெற்பன் தண்ணிய நாடன்
குறி ஈண்டு தந்து பாணாள் கங்குல்
பிறை வருடி சில்லென புல்லின் சிறுபூ
சிலிர்த்திட என் நெடுவிழி கொய்தான்
இற்றைத்திங்கள் இளையதோர் பிஞ்சும்
என்னொடு உகுக்கும் நோன்மாண் நெஞ்சே!

==================================================

N. Ganesan

unread,
Apr 21, 2020, 6:33:55 PM4/21/20
to மின்தமிழ்
பானாள் - சரியா?

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 21, 2020, 9:44:00 PM4/21/20
to மின்தமிழ்
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

நீங்கள் குறிப்பிட்ட "பானாள் கங்குல்" என்பதே சரி.
"பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும்.."என்று மதுரை மருதன் இளநாகனார் (அகம்.297)(மணிமிடை பவளம்) ஒரு சங்கப்பாடல் இயற்றியுள்ளார்.இரவைக்கூட பாதி நாள் என்று பார்ப்பது அன்றைய புலவர்களின் ஒரு வித அறிவியல் மரபு.
பூமியின் ஒரு சுற்று "முழுது" என்றால் இரவு அதில் பாதி தானே.ஆனால் இதில் தலைவியின் உணர்வு மீதூர்ந்த நிலையில் நாள் முழுவதுமே தலைவனை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் அது "பாழ்நாள்" ஆயிற்று.அதனால் பாணாட்கங்குல் என்று எழுதினேன்.இருப்பினும் இதுவும் ஒரு மீறல் தான்.விரிவான உரை எழுதும்போது இதைக்குறிப்பிட எண்ணியிருந்தேன்.இருப்பினும் மரபு மீறல் தவிர்க்கப்படவேன்டும் என்றால் தாங்கள் குறிப்பிட்ட பானாட்கங்குல் என்பதே சரி.
ஒரு இலக்கிய நுண்செறிவு ஒன்றை தாங்கள் சுட்டிக்காட்டியது மிகவும் மகிழ்ச்சி நிறைந்தது.அதற்கு மிக மிக நன்றி

அன்புடன் ருத்ரா

N. Ganesan

unread,
Apr 22, 2020, 5:05:55 AM4/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நன்றி, ருத்ரா அவர்களே.

பாழ்நாள் (பாணாள்) எனலும் பொருந்தும். ஆனால், இந்தச் சந்தி மிக அரிது என்பர்: உ-ம்: சோணாடு.

சேரலாதனின் ஆடுகோட்பாடு, சாதாரணமான ஆட்டைப் பிடிக்க அவன் சட்டிஸ்கார் மாநிலம்
செல்லவில்லை. அகஸ்தியரின் தண்டகாரண்யம் சென்று சக வமிசத்தார் கால (சாலிவாகன சகாப்தம், விக்கிரம சகாப்தம்)
சௌரமான ஆண்டைக் கொணர்ந்தான் எனப் பதிற்றுப்பத்து பதிகத்தை விளக்கினேன். படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/296db3f0-f430-491c-96a1-07749275a5a4%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 22, 2020, 5:59:12 AM4/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Apr 21, 2020 at 8:44 PM ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> wrote:
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

நீங்கள் குறிப்பிட்ட "பானாள் கங்குல்" என்பதே சரி.
"பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும்.."என்று மதுரை மருதன் இளநாகனார் (அகம்.297)(மணிமிடை பவளம்) ஒரு சங்கப்பாடல் இயற்றியுள்ளார்.இரவைக்கூட பாதி நாள் என்று பார்ப்பது அன்றைய புலவர்களின் ஒரு வித அறிவியல் மரபு.
பூமியின் ஒரு சுற்று "முழுது" என்றால் இரவு அதில் பாதி தானே.ஆனால் இதில் தலைவியின் உணர்வு மீதூர்ந்த நிலையில் நாள் முழுவதுமே தலைவனை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் அது "பாழ்நாள்" ஆயிற்று.அதனால் பாணாட்கங்குல் என்று எழுதினேன்.இருப்பினும் இதுவும் ஒரு மீறல் தான்.விரிவான உரை எழுதும்போது இதைக்குறிப்பிட எண்ணியிருந்தேன்.இருப்பினும் மரபு மீறல் தவிர்க்கப்படவேன்டும் என்றால் தாங்கள் குறிப்பிட்ட பானாட்கங்குல் என்பதே சரி.
ஒரு இலக்கிய நுண்செறிவு ஒன்றை தாங்கள் சுட்டிக்காட்டியது மிகவும் மகிழ்ச்சி நிறைந்தது.அதற்கு மிக மிக நன்றி
அன்புடன் ருத்ரா

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன - தொல்காப்பியர்
(மாதப் பெயர்களுக்கும், நட்சத்திரப்பெயர்களுக்கும் இலக்கணம் கூறும் தொல்காப்பியச் சூத்திரங்கள்).

திங்கள் உங்கள் கவிதைத் தலைப்பில் உள்ளது. பானாள், பாணாள் விளக்கம் சிறப்பு.

நாள் என்ற பெயர் நள்-“இருள், கருமை, செறிவு” என்ற வேரில் உருவாகியுள்ள சொல். நள்ளமலை >> நல்லமலை ஆந்திராவில்
கரும்பெண்ணை பேரியாறு பிறக்கும் மலை. கரிய பெண்ணை என்பான் கம்பன். இன்று, கிருஷ்ணா (க்ருஷ்ணவேணி, ப்ராகிருதம்:: கண்ஹபெண்ணா)
ஆகிவிட்டது. நாளணன் > நாரணன் என நாராயணன் பெயரின் மூலம். நாளகிரி அஞ்சனமலை போன்ற யானை.
கொங்குவேளிரின் பெருங்கதை, புத்த சரித்திரத்தில் புத்தரைக் கொல்லவந்த யானைப் பெயர் கருமலை என்பது நாளகிரி.
ஆக, இரவுக்குப் பெயராக நாள் ஆரம்பித்து, பகலையும் சேர்த்து 24 மணிநேர “நாள்” ஆகிவிட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்(குறள்). ஆனால், சொல் தோற்றத்தில்
நாள் என்றால் இருட்டு, இருள் செறிந்த இரவு தான். பிறகு பகலையும் சேர்த்துக்கொண்டது: நாளங்காடி, அல்லங்காடி.
இதில் முக்கியம் என்னவென்றால், அல் என்பதே நள்- என்பதில் பிறப்பதுதான். அல், அலவன் (இருளில் திரியும் நண்டு) < நள்-.
கிழமை = இரவு(நாள்) + பகல். கோளுக்கு உரிமை செய்து முழுநாளையும் அழைக்கலாயினர். திங்கட் கிழமை, செவ்வாய்க்கிழமை, ....

நாள் இரவு என்பதால், அதில் உள்ள நக்ஷத்ரங்களையும் நாள் என அழைக்கிறோம். நாள்மீன்கள் அவை.
இது மிகப் பழைமையான திராவிடர்களின் வானியற்கோட்பாடு. ஈரான் தேசத்தில் உள்ள
அவெஸ்தா என்னும் பாரசீக ஆரியர்களின் (இந்தியாவில் பார்ஸி மதத்தார், டாட்டா உள்பட)
வேதத்துக்கும், பாரதத்தின் ரிக் வேதத்துக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை பாரசீக நாட்டில்
பகல், பகலில் நடந்த வேள்விகள் இந்தியாவில் இரவுக் காலத்தில் நடப்பதாக மாறின.
பாரசீகத்தில் அசுரன் என்றால் பெருந்தெய்வம்: அஹுர மஃஜ்த(Ahura Mazda).
அங்கே பகலுக்கும், இரவுக்கும் போர். இந்தியாவில் மாறி இராப் போது முக்கியத்துவம் பெற்றது.
சிந்துவெளியில் இருந்த விடங்க வழிபாடு, வருணனுடன் ஒன்றி இருக்குவேத காலத்தில் ஆகிவிட்டான்.
அவனது சின்னம் துருவ நட்சத்திரம். பிற்காலத்தில், கனலிவட்டம் (ஃசோடியாக்கு) சிந்தாமணி
தரும் கலைச்சொல்) இந்தியா வந்தபோதும், தை மாத சின்னமாக மகரம் - வருணனின் சின்னம் -
அப்படியே நின்றுவிட்டது. குடிமல்லத்தில் வணங்கப்படுவது இந்த வேதக் கடவுளின் வடிவமே.

நேரம் கிடைக்கிறபோது, தொல்காப்பியர் திங்கள் என்று மாதத்தையும், நாள் என்று நட்சத்திரத்தையும்
(வெய்-வெயில். அதை மறைக்கும் கூரை அமைப்பது வேய்தல். வே(ய்)ந்து - வேந்தன்) அழைப்பதும்
மாஸ, நக்ஷத்ர சந்தி இலக்கணத்தை எவ்வாறு காப்பியர் கூறுகிறார் என என் போன்றவர்களுக்கு
விளக்க வேண்டுகிறேன்.  தொல்காப்பியர் எழுத்ததிகாரம், உயிர்மயங்கியலில் நக்ஷத்ரங்கள், மாதங்கள்
இவற்றின் சந்தி இலக்கணம் கூறுகின்றார்:
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர்மயங்கியல் நூற்பாக்கள்:
  திங்கள் முன்வரின் இக்கே சாரியை. (தொல்,248) 
  திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல்,286) 
இவற்றில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்கள் பற்றிய இலக்கணம் அறியத் தாருங்கள்.
நக்ஷத்ர கணிதம் இந்தியாவில் 4500 ஆண்டுகளாய் இருக்கிறது.

நா. கணேசன்

On Wed, Apr 22, 2020 at 4:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நன்றி, ருத்ரா அவர்களே.

பாழ்நாள் (பாணாள்) எனலும் பொருந்தும். ஆனால், இந்தச் சந்தி மிக அரிது என்பர்: உ-ம்: சோணாடு.

சேரலாதனின் ஆடுகோட்பாடு, சாதாரணமான ஆட்டைப் பிடிக்க அவன் சட்டிஸ்கார் மாநிலம்
செல்லவில்லை. அகஸ்தியரின் தண்டகாரண்யம் சென்று சக வமிசத்தார் கால (சாலிவாகன சகாப்தம், விக்கிரம சகாப்தம்)
சௌரமான ஆண்டைக் கொணர்ந்தான் எனப் பதிற்றுப்பத்து பதிகத்தை விளக்கினேன். படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நா. கணேசன்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 22, 2020, 7:49:38 AM4/22/20
to மின்தமிழ்
மிகவும் ஆழ்ந்த செறிந்த சொல் இயலும் பொருள் இயலும் இயைந்த தங்கள் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கட்டுரை வெகு அருமை திரு.கணேசன் அவர்களே.
மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

On Tuesday, April 21, 2020 at 10:14:06 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages