மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வ-அளவே தான்-நிற்க – “பொங்கும்
பரிவாலே” வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
“பெரியாழ்வான்” என்னும் பெயர்
மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்!
'பல்லாண்டு பல்லாண்டு' என்று வாழ்த்துகிறார் என்றால் பட்டர் பிரானின் தாயன்பை என்னவென்று சொல்வது.?வடிவாய் மாலின் வல மார்பினில் வாழும் அன்னைக்கும், சுடராழி பாஞ்சசன்னியம் சார்ங்கம் என்னும் வில் என்று திவ்ய ஆயுதங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.
பல்லாண்டு தினமும் பாடாத வைணவக்கோயில்களே இல்லை.
எதற்கு வந்தது இந்த பல்லாண்டு?
அன்று..
பாண்டியமன்னன் வல்லபதேவனுக்கு ஒரு சந்தேகம்(அதென்ன பாண்டிய மன்னர்களுக்கே இப்படி சந்தேகம் வருகிறது?:) அதைத்தீர்த்துவைக்க வில்லிபுத்தூரிலிருந்து மாலின் பக்தர் விஷ்ணூ சித்தர் வருகிறார்.
அவையில் வாதங்கள் நடக்கின்றன. விஷ்ணு சித்தரே வெற்றிபெறுகிறார், வல்லபதேவன் வெற்றி பெற்றவருக்கு தர நினைத்த அந்தப்பொற்கிழி தானே அறுந்து விஷ்ணு சித்தரின் மடியில் விழுத்ததும் மன்னன் அவையெங்கும ஆரவாரம் எழுந்தது. இவ்வளவு தெளிவாக மறுமைக்காக இம்மைக்குச் செய்ய வேண்டியதை சொன்னதால் பாண்டியன் அவருக்கு 'பட்டர் பிரான்' என்ற பட்டம் கொடுத்து மிகவும் கொண்டாடினான்.
அவருக்கு மேலும் சிறப்பு செய்ய எண்ணி பட்டத்து யானையின் மேல் அவரை அமரவைத்து ஒரு அரச ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தான். தானும் பின்னால் அமர்ந்து சாமரம் வீசிக்கொண்டே சென்றான்.
ஊர்வலம் மதுரை மாநகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மன்னனே சாமரம் வீசி செல்வதைக் கண்டு மக்கள் எல்லோரும் மன்னன் போற்றிக் கொண்டாடும் மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வருகிறார்கள்.
பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று்
என்று பாடினார் ஒரு புலவர்.
”பூவுலகில் என்ன ஒரு ஆராவாரம் பாருங்களேன்?” என்கிறாள் வைகுண்டத்தில் வைதேகி.
அண்ணலும் பார்க்கிறார்..”ஆஹா என் பக்தனுக்குப்பாராட்டு! வா வா திருமாமகளே! இதை நேரில் சென்று காண்போம்” என்கிறார் ஆவலுடன்
கருடன் பறக்கத்தயாராக தன் சிறகுகளை விரித்துத்தாழ அமர்கிறான்.திவ்யதம்பதிகள் அதில் ஏறிக்கொள்கின்றனர்.
பெருமானும் பிராட்டியாரும் தோன்றும் காட்சியை அனைவரும் காண்கின்றனர் கை குவிக்கின்றனர்.விஷ்ணுசித்தருக்கோ பரவசத்திலும் ஒரு பதட்டம்.. பாணபெருமான் பாடியதைப்போல, ’செய்யவாய் ஐயோ என்னைச்சிந்தை கவர்ந்ததுவே” என்று அழகனின் அழகுக்கு யாரும் திருஷ்டி செய்துவிட்டால் என்ன செய்வது?
இந்தப்பேரழகுக்கு திருஷ்டி ஏற்பட்டுவிடுமே என அந்ததாய் உள்ளம் அஞ்சியது. கண்ணேறு பட்டு விடுமோ என்று பதறுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லவரும் இருப்பர்; கெட்டவரும் இருப்பர். எல்லார் கண்ணும் ஒன்று போல் இல்லை. எல்லாருமே அவனை இப்போது பார்க்கிறார்கள்; போற்றுகிறார்கள். நல்லவர் கண்டது போல் கெட்டவரும் காண்கிறார்கள்; அதனால் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று அஞ்சி அதற்குப் பரிகாரமாய் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப் பாட ஆரம்பித்துவிட்டார் பட்டர் பிரான்.
நிலையான ஒன்றுக்கு கண்ணேறு படுமா என்றெல்லாம் சிந்திக்க இயலாத நிலமை. பக்தியின் உச்சக்கட்டம் அதீதப்பரிவும் அகத்தில் குழந்தைத்தனமும்தானே!
பாடுகிறார் ஆழ்வார் .
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
நெய்யிடை நல்லதோர் சோறும் - நல்ல சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்.! தந்கையடைக் காயும் தை வழி மகளும் மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்கிறாளோ?:)
நியதமும் அத்தாணிச் சேவகமும் - நித்தமும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவையும் (கைங்கர்யமும்),
- கை + அடைக் காய்; அடைக்காய் இலை என்பது கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்... விருந்துணவு முடித்தபின் நம் கைகளில் தாங்கி விருந்தினரை எடுத்துக் கொள்ளச் சொல்லும் வெற்றிலைப் பாக்கு(அடைக்காய் - தாம்பூலம், பாக்கு)
கழுத்துக்குப் பூணொடு -கழுத்துக்குத் தேவையாண அணிகலன்களொடு
காதுக்குக் குண்டலமும் - காதுக்குத் தோடும் (காதணி)
மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய அரைச்ச சந்தனமும்
தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும் நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையே குறிக்கிறது.
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே - படமெடுக்கும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டுள்ள மன்னவனுக்கு நான் எந்நாளும் பல்லாண்டு பாடுவனே!( பையுடை நாகம் - படமெடுக்கும் தேகமுடைய நல்லப் பாம்பு, நாகப் பகை - நல்லப் பாம்பின் பகைவன், கருடன்; கொடியான் - கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவன், ஸ்ரீமன் நாராயணன் )
இன்னொரு பாடலில் பரமனை” பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே” என்கிறார். பந்தனை என்றால் களைப்பாம்..வேறு எங்காவது இலக்கியத்தில் இச்சொல் கையாளப்பட்டுள்ளதா? தமிழை மட்டுமே தன் பாக்களில் அழுத்தியவர் பெரியாழ்வார் .
பாடுகிறாரே ஒழிய அவருக்கு மனசுக்குள் அண்ணலுக்கு கண்ணேறு பட்டுவிடப்போகிறதே எனப்பதட்டமாய் வருகிறது ..இவர் தாய் ஸ்தானத்தில் இறைவனை நினைத்துப்பரிந்து போனாலும் என்றும் தாயினும் சாலப்பரிபவன் அவன் அல்லவா? அவனே”பெற்றதாயினும் ஆயின செய்யும் ” என்று இன்னொரு ஆழ்வார் பெருமகனார் அருளிச்செய்துள்ளாரே! ஆகவே...
இன்றையதினம் பெரியாழ்வார் பொற்கிழி பெற்றதினம்! மதுரை கூடலழகர் சந்நிதி இன்று அமர்க்களப்படுமாம்!
.
”அத்தாணிச் சேவகமாவது - ஆஸ்தாநஸேவகம்; எம்பெருமானிருக்கும் இடத்தில்
கூடவேயிருந்துகொண்டு பிரியாமல் நின்று செய்கிற கைங்கரியம் ”
அத்தாணிச் சேவகம் என்றால் அந்தரங்க கைங்கர்யம் என்பது
பொருளாக இருக்கலாம்.
அவரே வேத ஸ்வரூபியான வைநதேயரின்
அம்சமாக இருப்பதால் வேண்டிய வேதங்களோதி
விரைந்து கிழி அறுப்பது அவருக்கு எளிதாக இருந்துள்ளது
தேவ்
On 13 Dec, 09:54, shylaja <shylaj...@gmail.com> wrote:
> பெரியாழ்வார்!
>
> திருப்பாவை எனும் சிறப்புமிக்க பாசுரங்களைப்பாடிய பூமகளாம்
> கோதையைவளர்த்த பட்டர்பிரான். பிற ஆழ்வார்கள் எம்பெருமானிடம் பேரன்புகொண்டு
> பாடினாலும் அவர்களை அனைவருடைய பரிவையும் விஞ்சி நிற்கும் காரணத்தால்,
> மணவாளமாமுனிகள் இப்படி அருள்கிறார்.
>
> *மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
> தங்கள் ஆர்வ-அளவே தான்-நிற்க – “பொங்கும்
> பரிவாலே” வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
> “பெரியாழ்வான்” என்னும் பெயர்*
> ஆழ்வார்கள் எல்லோரையும் போல அல்லர் பெரியாழ்வார் என்று பிள்ளை
> லோகாச்சாரியாரின் கூற்று நோக்கத்தக்கது.
>
> சோராத காதல் பெருஞ்சுழிப்பால், சொல்லைமாலை யொன்றும்
>
> பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்...
>
> என்று போற்றுகிறார் திருவரங்கத்தமுதனார்.
>
> வேதத்திற்கு ஓம் எனும் பிரணவ மந்திரம் போன்று நாலாயிரதிவ்யப்பிரபந்தம்
> அனைத்திற்கும் காப்புச்செய்யுளான ‘திருப்பல்லாண்டு’ என்கிற பிரபந்தத்தை
> அருளியவர்.
>
> மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை
> ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ
> அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட
> ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட
>
> *பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
> வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
> நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
> பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
> *
> என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு
> பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை
> எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்!
>
> 'பல்லாண்டு பல்லாண்டு' என்று வாழ்த்துகிறார் என்றால் பட்டர் பிரானின் தாயன்பை
> என்னவென்று சொல்வது.?வடிவாய் மாலின் வல மார்பினில் வாழும்
> அன்னைக்கும், சுடராழி பாஞ்சசன்னியம் சார்ங்கம் என்னும் வில் என்று திவ்ய
> ஆயுதங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.
>
> பல்லாண்டு தினமும் பாடாத வைணவக்கோயில்களே இல்லை.
>
> எதற்கு வந்தது இந்த பல்லாண்டு?
>
> அன்று..
>
> பாண்டியமன்னன் வல்லபதேவனுக்கு ஒரு சந்தேகம்(அதென்ன பாண்டிய மன்னர்களுக்கே
> இப்படி சந்தேகம் வருகிறது?:) அதைத்தீர்த்துவைக்க வில்லிபுத்தூரிலிருந்து
> மாலின் பக்தர் விஷ்ணூ சித்தர் வருகிறார்.
>
> அவையில் வாதங்கள் நடக்கின்றன. விஷ்ணு சித்தரே வெற்றிபெறுகிறார், வல்லபதேவன்
> வெற்றி பெற்றவருக்கு தர நினைத்த அந்தப்பொற்கிழி தானே அறுந்து விஷ்ணு
> சித்தரின் மடியில் விழுத்ததும் மன்னன் அவையெங்கும ஆரவாரம் எழுந்தது. இவ்வளவு
> தெளிவாக மறுமைக்காக இம்மைக்குச் செய்ய வேண்டியதை சொன்னதால் பாண்டியன் அவருக்கு
> 'பட்டர் பிரான்' என்ற பட்டம் கொடுத்து மிகவும் கொண்டாடினான்.
>
> அவருக்கு மேலும் சிறப்பு செய்ய எண்ணி பட்டத்து யானையின் மேல் அவரை அமரவைத்து
> ஒரு அரச ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தான். தானும் பின்னால் அமர்ந்து சாமரம்
> வீசிக்கொண்டே சென்றான்.
>
> ஊர்வலம் மதுரை மாநகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மன்னனே சாமரம் வீசி
> செல்வதைக் கண்டு மக்கள் எல்லோரும் மன்னன் போற்றிக் கொண்டாடும் மகானைப் பற்றித்
> தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வருகிறார்கள்.
>
> *பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
> ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
> வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
> பாதங்கள் யாமுடைய பற்று்*
> 1330Vishnu&LakshmiridingGaruda.jpg
> 59KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கேரளத்தின் முதன் மொழி தமிழாகத்தான் நீண்டநாள் இருந்தது. இது குறித்து,
‘பால்’ எனும் சொல்லிற்கு வலிந்து கேரள அரசு ஒரு சமிஸ்கிருத பதத்தைப்
போட்டு கஷ்டப்படுவதைக் குறித்து ஜெயமோகன் ஒரு அழகான கட்டுரை
எழுதியிருந்தார் (Kerala Diary Board).
திருவோணத்திருவிழவு என்ற தலைப்பில் கமலம் சேச்சிக்கு நான் முன்பொரு
நாடகம் எழுத்திக் கொடுத்திருக்கிறேன்.
நா.கண்ணன்
> நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
> கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
> மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
> பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
>
> மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய > அரைச்ச சந்தனமும்> தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும்
> நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய
> எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையே குறிக்கிறது.
>
வெத்தலை, பாக்கு, சந்தனம், நெய்ச்சோறு இவை கிடைத்தால் வெறும் உயிர்
வெள்ளுயிர் ஆகிவிடுமா?
ஆழ்வானின் உளக்கிடக்கை என்ன?
நா.கண்ணன்
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்....
கோது கலமுடைக் குட்டனேயா ! குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா !!
குட்டன் - மலையாளப் பேச்சு வழக்கில் உள்ள சொல்
தேவ்
On 13 Dec, 14:50, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> அனுபவித்துப் படித்தேன்
> அடைக்கா .--அசல் மலையாளச்சொல்
> நித்தமும் அத்தாணிசேவகம்--இச்சொல்லும் மலையாளத்தில் புழக்கத்திலுண்டு
> பந்தனைத் தீரப்பல்லாண்டு --கல்வெட்டு ஆய்வுக் குறிப்பில் படித்த ஞாபகம் உண்டு
> பெரியாழ்வார் பிள்ளையின் அழகு சொல் ஒன்று இன்னும் ஒன்று உண்டு சட்டென்று நினைவில் வர மறுக்கிறது
> ஆக---- அருமை மைதிலி.
> வெறும் சபை சம்பாஷனையாயில்லாமல் அருகிப்பருகும் சம்பாஷிதம் நெஞ்சை கொள்ளை
> கொள்ளுகிறது
> கமலம்http://www.kamalagaanam.blogspot.com
>
> ________________________________
> From: shylaja <shylaj...@gmail.com>
> அண்ணலும் பார்க்கிறார்..”ஆஹா என் பக்தனுக்குப்பாராட்டு! வா வா திருமாமகளே! இதை நேரில் சென்று ...
>
> read more »
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உண்ணும் சோறு பாசுரத்தில் வரும், ‘தின்னும் வெற்றிலை’ என்பதற்கு உருவகப்
பொருள் வழங்குவர் பெரியோர். அது போல் இங்கு நெய், சோறு, பாக்கு, வெற்றிலை
ஆன்மாவின் இயல்புகளைச் சொல்ல வருகின்றதோ? என்றொரு சம்சயம். யோசித்துச்
சொல்லுங்கள்.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ஆஹா ஆன்மாவின் இயல்பு! உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை பருகும் நீர்!
> முக்குணங்களை சொல்கிறதோ? யோசிக்கவேண்டும் நிறைய
>>
ஷைலு
உங்களுக்கு இயல்பாகவே ஆழ்வார்களிடம் ஒரு ஒட்டுதல் இருப்பதைக் காண்கிறேன்.
அது கிடைப்பதே துர்லபம்! மேலும் உங்களுக்கு நல்ல தொடர்புகள் உள்ளன,
வியாக்கியானங்களை அணுகவும் வசதியுள்ளது. எங்களுக்கு அதுவெல்லாம்
கிடையாது. எனவேதான் அத்தனை கேள்விகள் :-) கிடைத்தால், ‘நூறு தடா சக்கரைப்
பொங்கல் அளித்த எம்பெருமானார் வைபத்தில் நம்ம கைக்கும் ஒரு வாய்
கிடைக்காதா? என்பது போன்ற ஒரு ஆவல்தான். மேலும் ஆழ்வார்களின் ஆழம்
காணுதல் அரிது. எனவேதான் எம்பெருமானாரே அந்த பகவத் விஷயங்களை அடியார்கள்
சுயமாக அனுபவிக்கும்படி செய்திருக்கிறார். கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.
நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம் :-)))
நா.கண்ணன்
--கண்ணன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஷைலஜாவின் ஆழ்வார் பக்தி மேலும் மேலும் பிரகாசிக்கிறது. ஆழ்வார்கள் விஷயத்தில் பிறர் சொல்லிக் கேட்பது ஓர் அலாதியான இன்பம். அந்த இன்பத்தை நன்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். பெரியாழ்வாரும், ஆண்டாளுமாகச் சேர்ந்து சொன்னால் போல் தேவ்ஜீயும், ஸ்ரீரங்க ப்ரியாவுமாக ஆழ்வார்களின் அமுது படைப்பது அருமை.
நடுநடுவில் ஸ்ரீவைஷ்ணவப் புயல் போல் கண்ணன் அனுபவம் வேறு சுவை கூட்டுகிறது. மார்கழி இப்பொழுதே களைகட்டத் தொடங்கிவிட்டது. கமல்ம்மையின் நல்ல மனசைப் போன்று மார்கழி இளங்காலை ஞாயிறு ஆரம்பிக்கட்டுமே.
தேவ்ஜீ! அத்தாணி என்ற வார்த்தை ஆஸ்தான என்பதன் ப்ராக்ருத வடிவம் போலும். ஆஸ்தான சேவை என்பது அத்தாணிச் சேவகம். அத்தாணி என்ற சொல் பெருங்கதையிலும் ஆளப்படுகிறது. ஓலக்கம், அரண்மனை என்று வருகிறது.
அதாவது House Affairs of the Royal Family என்ற வகையில் சேரும். அப்படிப் பார்த்தால் ஸ்ரீரங்கமே ராஜதானி ஆகையாலே ஸ்ரீரங்கத்தில் அரங்கன் திருமுற்றத்துச் சேவையே அத்தாணிச் சேவகம் எனப்படும் போலும்.
வெறும் காமம், குரோதம் அகங்காரம் முதலியனவே உடைய என் போல்வாரும் பயன்பெறும் வண்ணம் ஷைலஜா மேலும் நடத்திச் செல்ல வேண்டும். தேவ்ஜீ இருக்க பயமேன்?
***
<<<>ஆஹா அரஙக்மே ராஜதானி என்னும் சொல்லே கம்பீரம்! ரங்கராஜனுக்குத்தான் தினமும் விஸ்வரூப சேவையில் ரத கஜ துரகபதாதிகள் பணிய வருகிறார்களே! யானைக்கென்ன கொடுப்பினை அது தவறாமல் அத்தாணிச்சேவகம் செய்கிறதே!
திருமாலையில் ’அளியன் நம் பையல்’ என்பது
கருணைக்குப் பாத்திரனாகுமவன் எனும் பொருள்
தருவது.
கும்மாயம் மலையாளத்திலும் உள்ளது.
ஆழ்வார் சொல்வது ஓர் இனிப்பு வகை;
மலையாளத்தில் அது சுண்ணாம்பைக்
கலவையை [அ] ஔஷத லேபத்தைக் குறிக்கும்
தேவ்
On 13 Dec, 18:23, sowmya narayan <akramesisow...@gmail.com> wrote:
> மலையாளச் சொற்க்களை கூறும்போது திருப்பள்ளி பத்தாம் பாசுரத்தில்
> அளியன் என்ற சொல் இடம் பெற்றுள்ளது அது தறபோதும் மலையாளத்தில் உப்யோகிக்க
> கூடியது . மைத்துனன் என்று பொருள் .
>
> 2012/12/13 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
>
>
>
>
>
>
>
>
>
> > இவ்விடம் ஞான் ஒரு தகவல் பகிர்ந்து கொள்ளலாமா ?
> > பல ஆண்டுகளாக மின்தமிழில் எழுத நினைத்து தயங்கிய விஷயம்.நரசையா சார் கூட
> > ஒருமுறை எழுதப் பணித்தார்.
> > இன்று உரையாடுபவர்கள் த்ரும் வாக்கு சுகம் எழுத வைக்கிறது
> > எந்த அம்பலம் என்று மட்டும் கேட்கவேண்டாம். தமிழகத்தின் மிக முக்கிய அம்பலம்
> > .இங்கும் கூட பலர் அவ்வூர் அன்பர்கள் இங்குண்டு
> > அந்த அம்பலம் கட்டுபணிக்கு முக்காத்துட்டுக்கு ஈஷ்வரனுக்காக தன்னை
> > அர்ப்பணித்த குழந்தைப்பெண், ஒருவளிடம்
> > போற்றி ஒருவர் கேட்டாராம்.
> > வெற்றிலை போட்டுக்கொண்டு தான் இசைந்தயா ?
> > சந்தனம் மணக்கும் மார்பில் அந்தணனிடம் தான் இசைந்தேன் . அம்பலப்பணிக்கு
> > ஈட்டிய இச்சக்கரம்
> > இறையிடம் சேர்ந்தால் போதுமே என்ற கவலைதான் ஸ்வாமி ! என்றாளாம்
> > அழுதிருக்கிறேன் இவ்வரிகளை படித்தபோது. என்னுடன் அன்று ஆய்விலிருந்த புலவர்
> > நாச்சிமுத்து, தந்த நூல்
> > தேவருக்கு அடியாள் “ பல சேதிகளிச்சொல்லியது
> > வெற்றிலையும் சந்த்னமும், --எத்தகு முக்யத்வம் பாருங்கள்
> > கமலம்
>
> >http://www.kamalagaanam.blogspot.com
> > ------------------------------
> > **
>
> > .
>
> > வெத்தலை, பாக்கு, சந்தனம், நெய்ச்சோறு இவை கிடைத்தால் வெறும் உயிர்
> > வெள்ளுயிர் ஆகிவிடுமா?
>
> > ஆழ்வானின் உளக்கிடக்கை என்ன?
>
> > நா.கண்ணன்
>
> > --
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> ஆழ்வார்க்கடியான் தாங்கள்..உங்களுக்குத் தெரியாத எதை நான் சொல்ல இயலும்?
தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லிவிடாதீர்கள். ஆழ்வார்களை
புதிதுபுதிதாய் அனுபவிக்கும் நிகழ்ச்சிகளுக்காக ஏங்கிக்கிடப்பவன்.
அவ்வளவுதான். நாம் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும் என்பதே
எம்பெருமானாரின் விருப்பம். ஆழ்வார்களை, ‘அப்பாடா! எல்லாம்
அனுபவிச்சாச்சு!’ என்ற எண்ணமே எழுதல் கூடாது. அது முடியாது என்பதே உண்மை.
சக்கரவாக பறவை நான், ஆழ்வார் விஷயத்தில்.
புதன் கிழமை இங்கொரு ஜெர்மன் சத்சங்கம் கூடும். இந்த மாதம் புனித மாதம்
என்றழைக்கப்படுகிறது இங்கு. வீட்டிற்கு வீடு விளக்கேற்றி வைத்து, ஒரு
தெய்வீகக்களை சொட்டும் காலம். இரவு குளிர் மைனஸ் 10 டிகிரி. அதை யார்
கண்டு கொள்கிறார்கள். நாங்கள் சத் சங்கத்திற்குக் கிளம்பிவிட்டோம்
(ஆண்டாள்! குளிருக்குப் பயந்து வீட்டில் தூங்கும் தோழிகளை, ஊமையோ?
செவிடோ? என்று திட்டுகிறாள் :-)
என்னைத்தவிர மற்றவர்கள் கிறித்தவ வழியில் இறமையைத் தேடுபவர்கள். ஆனாலும்,
திறந்த உள்ளத்தவர். இந்திய மரபின் தாக்கம், மரியாதை உள்ளவர்கள். இப்படி
அவரவர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, எங்களுக்கு
இடமளிக்கும் வீட்டுக்கார அம்மா, ஒருமுறை தானொரு பெரிய ஒளிப்பிழம்பைக்
கண்ணுறும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த ஒளியின் அதீதப் பிரகாசத்தைக்
காணக் கண்கள் கூசி, திருவடி சேவித்து நின்றதாகவும். அந்த ஒளி ஓர் ஆண்
என்று உணர்ந்ததாகவும், அது ஏசு என்று தான் கற்பனை செய்து கொண்டதாகச்
சொன்னார். பிறகு பேசிக்கொண்டே வரும் இன்னொரு பொழுதில் எனக்கு கணவன்,
குடும்பம், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று எல்லாம் வந்தாகிவிட்டது.
ஒரு குறையுமில்லை. ஆயினும் அவ்வப்போது நான், தனிமையில், home sick
ஆகிவிடுகிறேன். நல்லவேளை அது சில பொழுதுகள் என்றாலும் அந்த home sick
ஏனென்று புரியவில்லை என்றார்.
எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. ஏனெனில் ஆழ்வார்களின் அனுபவம்
அவளுக்குக் கிட்டியிருக்கிறது. பக்தியின் ஊற்று இத்தகைய
அனுபவத்திலிருந்துதான் வருகிறது என்று விளக்கினேன். அந்த ஒளிப்பிழம்பு
ஏன் ஆண்? என்று உணர வேண்டும்? நம்மாழ்வார் எப்படிக் காண்கிறார் பாருங்கள்
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.
கடவுள் ஆண் இல்லை. சரி. பெண்ணுமில்லை. சரி. அலியுமல்ல. சரி, காணக்கூடிய
ஆளில்லை, சரி. இருப்பதாய் சொல்லமுடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது.
வேண்டிய போது வேண்டிய வடிவில் வரத்தக்கது, அப்படி இல்லாமலும் இருக்கும்.
என்னத்த! நான் இதப்பத்தி சொல்லறதுக்கு இருக்கு! என்று முடிகிறது. சரி,
ஆணல்லன் சரி, பெண் அல்லள் என்றல்லவோ ஒருக்க வேண்டும். அலிக்குத்தான் பால்
வேறுபாடு இல்லையே? பின் ஏன் அலியுமல்லன்? என்று ‘அன்’ விகுதி போட
வேண்டும். சொலப்படும் பொருள் ஆண் என்று திடமாக ஏதோ உள்ளுணர்வு சொல்கிறது.
அது! அதுதான் அந்தப் பெண்மணி பேசுவதும் (இதுவொரு அழகான பாசுரம், மேல்
விவரங்கள் படித்து மகிழ:
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3645:3062&catid=576:---5.
சரி, அந்த அம்மாவுக்கு ஏன் திடீர், திடீர்ன்னு, வீட்டுக்குப் போணும்ன்னு
அழத்தோன்றுகிறது? உங்களுக்கு இப்படி அனுபவம் வந்ததுண்டா? ஏண்டா! நான்
இங்கே உட்கார்ந்து இருக்கிறேன். நான் எங்கோ இருக்க வேண்டிய ஆள், ஆதலால்
பிறவி வேண்டேன்! எனும் உணர்வு. ஆழ்வார்கள் பனுவலின் அடிப்படை உணர்வு
இந்தப் பிரிதல்தான்.
மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ!
வண்குறிஞ் சிஇசை தவரும் ஆலோ!
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ!
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ!
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறுஅரி ஏறுஎம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியல் ஆலோ!
எல்லாப்பசுக்களும் வீடு வந்து சேர்ந்துவிட்டன. கன்றுகள் மகிழ்ச்சியில்
துள்ளுகின்றன. ஆனால் என் மனது ஏன் இப்படித் துடிக்கிறது? புகலிடம் என்று
நான் எங்கு செல்வேன்? ஒரு அகதியுணர்வு! என்றாவது உங்களுக்கு வந்ததுண்டா?
வரணும். ஏனெனில் நம் புகல் அவன் திருவடிதான். அதுவே நம் நித்யவாசம். நம்
குடில். ஏனோ நம்மை இக்கால இடவெளிக்குள், சம்சார சாகரத்தில் தள்ளிவிட்டு
அவர் பள்ளி கொண்டு இருக்கிறார்? ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? என்று நாமும்
கதற வேண்டும். அதுவே பக்தியின் உச்ச நிலை. திக்குத்தெரியாத காட்டில் நாம்
தேடித்தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.
(மல்லிகை கமழ் தென்றல் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களை நண்பர்
நா.கணேசன் கேட்டுக்கொண்டபடி நான் அனுபவித்த காலங்களுண்டு.
http://thirumozi.blogspot.de/2007/07/079.html.
ஆக நாம் இந்துவோ, கிறித்தவமோ, இஸ்லாமோ, யூதமோ மேற்சொன்ன உணர்வுகள்
ஆன்மாவிற்குரியன. நாம் உடலென்று ஆழமாக நம்பி வாழ்ந்தாலும், எப்போதாவது
ஆன்மா இப்படித் தன்னைக் காட்டிக்கொடுக்கும் தருணங்கள் உண்டு. அதைச்
சிக்கெனப்பிடித்து நம் சுயமான சொரூபத்தை அறிந்துணர வேண்டும்.
நா.கண்ணன்
பிகு: அரங்கனார் நம்மைப் புயல் என்று சொல்லிவிட்டார். புயலுக்கு திக்கு
திசை தெரியாது, சும்மா சுழன்று அடிக்கும். அவ்வளவுதான். அதுதான் நான்
:-)))
பெரியாழ்வார்!
திருப்பாவை எனும் சிறப்புமிக்க பாசுரங்களைப்பாடிய பூமகளாம் கோதையைவளர்த்த பட்டர்பிரான். பிற ஆழ்வார்கள் எம்பெருமானிடம் பேரன்புகொண்டு பாடினாலும் அவர்களை அனைவருடைய பரிவையும் விஞ்சி நிற்கும் காரணத்தால், மணவாளமாமுனிகள் இப்படி அருள்கிறார்.
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வ-அளவே தான்-நிற்க – “பொங்கும்
பரிவாலே” வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
“பெரியாழ்வான்” என்னும் பெயர்
ஆழ்வார்கள் எல்லோரையும் போல அல்லர் பெரியாழ்வார் என்று பிள்ளை லோகாச்சாரியாரின் கூற்று நோக்கத்தக்கது.
சோராத காதல் பெருஞ்சுழிப்பால், சொல்லைமாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்...
என்று போற்றுகிறார் திருவரங்கத்தமுதனார்.
வேதத்திற்கு ஓம் எனும் பிரணவ மந்திரம் போன்று நாலாயிரதிவ்யப்பிரபந்தம் அனைத்திற்கும் காப்புச்செய்யுளான ‘திருப்பல்லாண்டு’ என்கிற பிரபந்தத்தை அருளியவர்.
மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்!
'பல்லாண்டு பல்லாண்டு' என்று வாழ்த்துகிறார் என்றால் பட்டர் பிரானின் தாயன்பை என்னவென்று சொல்வது.?வடிவாய் மாலின் வல மார்பினில் வாழும் அன்னைக்கும், சுடராழி பாஞ்சசன்னியம் சார்ங்கம் என்னும் வில் என்று திவ்ய ஆயுதங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.
பல்லாண்டு தினமும் பாடாத வைணவக்கோயில்களே இல்லை.
எதற்கு வந்தது இந்த பல்லாண்டு?
அன்று..
பாண்டியமன்னன் வல்லபதேவனுக்கு ஒரு சந்தேகம்(அதென்ன பாண்டிய மன்னர்களுக்கே இப்படி சந்தேகம் வருகிறது?:) அதைத்தீர்த்துவைக்க வில்லிபுத்தூரிலிருந்து மாலின் பக்தர் விஷ்ணூ சித்தர் வருகிறார்.
அவையில் வாதங்கள் நடக்கின்றன. விஷ்ணு சித்தரே வெற்றிபெறுகிறார், வல்லபதேவன் வெற்றி பெற்றவருக்கு தர நினைத்த அந்தப்பொற்கிழி தானே அறுந்து விஷ்ணு சித்தரின் மடியில் விழுத்ததும் மன்னன் அவையெங்கும ஆரவாரம் எழுந்தது. இவ்வளவு தெளிவாக மறுமைக்காக இம்மைக்குச் செய்ய வேண்டியதை சொன்னதால் பாண்டியன் அவருக்கு 'பட்டர் பிரான்' என்ற பட்டம் கொடுத்து மிகவும் கொண்டாடினான்.
அவருக்கு மேலும் சிறப்பு செய்ய எண்ணி பட்டத்து யானையின் மேல் அவரை அமரவைத்து ஒரு அரச ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தான். தானும் பின்னால் அமர்ந்து சாமரம் வீசிக்கொண்டே சென்றான்.
ஊர்வலம் மதுரை மாநகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மன்னனே சாமரம் வீசி செல்வதைக் கண்டு மக்கள் எல்லோரும் மன்னன் போற்றிக் கொண்டாடும் மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வருகிறார்கள்.
பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று்
என்று பாடினார் ஒரு புலவர்.
”பூவுலகில் என்ன ஒரு ஆராவாரம் பாருங்களேன்?” என்கிறாள் வைகுண்டத்தில் வைதேகி.
அண்ணலும் பார்க்கிறார்..”ஆஹா என் பக்தனுக்குப்பாராட்டு! வா வா திருமாமகளே! இதை நேரில் சென்று காண்போம்” என்கிறார் ஆவலுடன்
கருடன் பறக்கத்தயாராக தன் சிறகுகளை விரித்துத்தாழ அமர்கிறான்.திவ்யதம்பதிகள் அதில் ஏறிக்கொள்கின்றனர்.
பெருமானும் பிராட்டியாரும் தோன்றும் காட்சியை அனைவரும் காண்கின்றனர் கை குவிக்கின்றனர்.விஷ்ணுசித்தருக்கோ பரவசத்திலும் ஒரு பதட்டம்.. பாணபெருமான் பாடியதைப்போல, ’செய்யவாய் ஐயோ என்னைச்சிந்தை கவர்ந்ததுவே” என்று அழகனின் அழகுக்கு யாரும் திருஷ்டி செய்துவிட்டால் என்ன செய்வது?
இந்தப்பேரழகுக்கு திருஷ்டி ஏற்பட்டுவிடுமே என அந்ததாய் உள்ளம் அஞ்சியது. கண்ணேறு பட்டு விடுமோ என்று பதறுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லவரும் இருப்பர்; கெட்டவரும் இருப்பர். எல்லார் கண்ணும் ஒன்று போல் இல்லை. எல்லாருமே அவனை இப்போது பார்க்கிறார்கள்; போற்றுகிறார்கள். நல்லவர் கண்டது போல் கெட்டவரும் காண்கிறார்கள்; அதனால் எங்கே இறைவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று அஞ்சி அதற்குப் பரிகாரமாய் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப் பாட ஆரம்பித்துவிட்டார் பட்டர் பிரான்.
நிலையான ஒன்றுக்கு கண்ணேறு படுமா என்றெல்லாம் சிந்திக்க இயலாத நிலமை. பக்தியின் உச்சக்கட்டம் அதீதப்பரிவும் அகத்தில் குழந்தைத்தனமும்தானே!
பாடுகிறார் ஆழ்வார் .
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்லபையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனேநெய்யிடை நல்லதோர் சோறும் - நல்ல சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்.! தந்கையடைக் காயும் தை வழி மகளும் மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்கிறாளோ?:)
நியதமும் அத்தாணிச் சேவகமும் - நித்தமும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவையும் (கைங்கர்யமும்),
- கை + அடைக் காய்; அடைக்காய் இலை என்பது கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்... விருந்துணவு முடித்தபின் நம் கைகளில் தாங்கி விருந்தினரை எடுத்துக் கொள்ளச் சொல்லும் வெற்றிலைப் பாக்கு(அடைக்காய் - தாம்பூலம், பாக்கு)
கழுத்துக்குப் பூணொடு -கழுத்துக்குத் தேவையாண அணிகலன்களொடு
காதுக்குக் குண்டலமும் - காதுக்குத் தோடும் (காதணி)
மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய அரைச்ச சந்தனமும்
தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும் நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையே குறிக்கிறது.
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே - படமெடுக்கும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டுள்ள மன்னவனுக்கு நான் எந்நாளும் பல்லாண்டு பாடுவனே!( பையுடை நாகம் - படமெடுக்கும் தேகமுடைய நல்லப் பாம்பு, நாகப் பகை - நல்லப் பாம்பின் பகைவன், கருடன்; கொடியான் - கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவன், ஸ்ரீமன் நாராயணன் )
இன்னொரு பாடலில் பரமனை” பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே” என்கிறார். பந்தனை என்றால் களைப்பாம்..வேறு எங்காவது இலக்கியத்தில் இச்சொல் கையாளப்பட்டுள்ளதா? தமிழை மட்டுமே தன் பாக்களில் அழுத்தியவர் பெரியாழ்வார் .
பாடுகிறாரே ஒழிய அவருக்கு மனசுக்குள் அண்ணலுக்கு கண்ணேறு பட்டுவிடப்போகிறதே எனப்பதட்டமாய் வருகிறது ..இவர் தாய் ஸ்தானத்தில் இறைவனை நினைத்துப்பரிந்து போனாலும் என்றும் தாயினும் சாலப்பரிபவன் அவன் அல்லவா? அவனே”பெற்றதாயினும் ஆயின செய்யும் ” என்று இன்னொரு ஆழ்வார் பெருமகனார் அருளிச்செய்துள்ளாரே! ஆகவே...
அவரின் இந்தப் பதட்டத்தையும் தாயன்பையும் கண்ட வைகுண்ட நாதன் புன்முறுவல் பூத்து 'விஷ்ணுசித்தரே. மற்றவர் எல்லாம் தங்கள் நலனை என்னிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வார்கள். நீங்களோ அப்படியின்றி என் நலனை வேண்டிப் பாடுவதால் மிக உயர்ந்துவிட்டீர்கள். இன்று முதல் நீர் பெரியாழ்வார் என்று அழைக்கப்படுவீர்' என்று அருளினார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>அதென்ன பாண்டிய மன்னர்களுக்கே இப்படி சந்தேகம் வருகிறது?:)பாண்டிய மன்னர்கள்தான் அந்தக் காலத்தில் "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு" சொல்லிக்கிட்டே இருந்தவங்க போலிருக்கு :)
இப்ப என்ன சொல்லவரீங்க தேமொழி நம்ம பேராசிரியர் போன ஜன்மத்துல பாண்டிய மன்னரா இருந்திருப்பார் என்றா?:):)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா,
துறையின் ஆழமறிந்தவர் தேவரீர்;
அது நன்றாகவே தெரியும். இந்த இடத்தை நன்கு விளக்கி
இதம் இத்தம் என்று உறுதிபட எழுதினால் எல்லாருக்கும்,
என்றைக்கும் பயன்படும் வகையில் அமையும்.
திரு அரங்கம் என்பதன் தனித்தகைமையை
உணர்த்த வல்ல சொல் ஆஸ்தாநம் என்பது அடியேனது
தாழ்மையான ஊகம்.
அருளிச்செயல் அவரவர் தம் மநோதர்மப்படிப்
பொருள்கொண்டு ஆஸ்வாதநம் செய்யவும்
இடமளிக்கிறது; ஸர்வ ஜாக்ரதையாக நிர்வசநம்
செய்து பொருள்கொள்ள வேண்டிய இடங்களும்
அதில் உள்ளன. அதனால்தான் ஸ்ரீபாஷ்யத்தில்
அருளிச்செயலின் உட்கருத்து மையம் கொண்டு
விளங்குகிறது.
அகத்துறை சார்ந்த சில சொற்கள் ஆன்மிக
நூலான அருளிச்செயலில் கொச்சையான
சொற்கள்போல் தோற்றம் தரினும்
அவை மிக உயரிய ஆன்ம அநுபவத்தைச்
சொல்வதற்கான குறியீடுகள் என்பதையும் நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும்
தேவ்
On 13 Dec, 21:36, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ...
>
> read more »
மேலும் கௌஷீதகீ உபநிஷதத்தில் இந்த ஜீவன் விரஜா நதியைக் கடந்தவுடன் அமானவ கரஸ்பர்சம் பட்டதும் உலகியல் முற்றும் கழன்று எம்பெருமானின் திருவோலக்கத்துள் நுழையத் தகுந்த தேஜோமய ஜீவனாய் அலங்கரிக்கப் படுகிறான் என்பது இங்கே பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு அந்தர்கதமான பொருள். <<<..
நலமந்தமில்லதோர் நாடு புகும் ஜீவனை நித்தரும் முத்தரும் சர்வாலங்காரமாகக் கொண்டாடி வரவேற்கும் வைபவம் - அந்த வைபவத்திற்கு ஏற்ற பக்குவத்தை இந்த ஜீவனுக்குத் தந்து, இவன் தான் இழந்தது ஒரு நாளும் இல்லை என்று நினைக்கும்படிப் பண்ணி தனக்கும் இவனுக்கும் உள்ள நித்ய சம்பந்தத்தை மட்டுமே நெஞ்சில் நிலவ வைத்து பரமன் இவனை உகக்கும் அத்தனை வைபவத்துக்கும் சூசகம் இந்தச் சொற்கோவை - வெள்ளுயிர் ஆக்கவல்ல. >>>
***
2012/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
http://glosbe.com/ta/en/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF&matchtype=contain&display=utf8
அத்தாணி, அத்தாணிச் சேவகம் என்பதற்கு மேல் இரண்டு சுட்டிகளைக் காண்க.
***
On 13 Dec, 21:36, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
>> அத்தாணி என்ற வார்த்தை ஆஸ்தான என்பதன் ப்ராக்ருத வடிவம் போலும். <<
>> திருமுற்றத்துச் சேவையே அத்தாணிச் சேவகம் எனப்படும் போலும். <<ஐயா,
துறையின் ஆழமறிந்தவர் தேவரீர்;
அது நன்றாகவே தெரியும். இந்த இடத்தை நன்கு விளக்கி
இதம் இத்தம் என்று உறுதிபட