தமிழகத்தில் உயர்குடிப் பெண்டி நடனமாடுவது அதிலும் சதிராடுவது வரவேற்பில்லாமல் புறக்கணிக்கப்பட்ட காலம். ஒரு கிறித்துவ மேநாட்டுப் பாதிரியாரக் கைப்பிடித்த இளம்பெண் ருக்மணிதேவியின் ஆர்வம் அன்னா பாவ்லோவிடம் பாலே நடனம் கற்ருக்கொள்வது. அனால் அன்ன பாவ்லோவ் முதலில் உங்களூர் நடனக்கலையில் நாட்டம் செலுத்துங்கள் என்று சொன்னதால் அவர் சதிரைக் கையில் எடுத்தார். அதைச் செப்பனிட்டு அதில் உள்ள சிருங்கார ரசத்தையும் மாம உணர்வைத் தூண்டுக் உடல் அசைவுகளையும் வடிகட்டிவிட்டு விரசம் என்று ஒன்றுமில்லாத ஒரு புதிய ஆடல்கலையை அறிமுகப் படுத்தினார். முதலில் எதிர்ப்புத் தொன்றினாலும் ஆழ்ந்து பார்த்தால் அதில் உள்ளுரைப் பொருளை உணர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டதோடு பரத நாட்டியம் கற்றுக்கொள்வது வாழ்க்கையின் அடிப்படை என்ற நிலைக்கு வளர்ந்தது
தகவலியல் மற்றும் கருத்துப்பரிமாற்றம் பற்றிய அறிஞர் மார்ஷல் மக்லுகன் என்பவர் MEDIA IS THE MESSAGE என்ற கருத்தை முன்வைத்தார். அதன்படி பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் பெண் அந்த ஊடகம் சொல்லும் செய்தியை உள்வங்கிகொள்ளுவார் அதையே பெரிதும் நம்பி வாழ்வார் என்ற கருத்தை முன்மொழிந்தார்
நாயகனைக் கவரும் விதத்தில் ஆடை அலங்காரம்
நாயகன் பிரிவால் வாடவேண்டும்
நாயகனுக்கு அடிபணிந்தே அவனைக் கவரவேண்டும்
நாயகனுடன் ஊடல் கொள்ளுதல், சினம் காட்டுதல் பிரிவினால் ஏமாற்றம் பசலை நோய் என்ற மனப்பிறழ்வை அடைதல் கூடாது
என்று நடனக்கலை ஒரு பெண்ணை ஆணின் ஆதிக்க வலைக்குள் வீழ்த்த உதவுகிறது
ஆனென்றால் காலைத் தலிக்குமேல் தூக்கி காலைத் தூக்கி நின்றாடலாம் ஆனல்ல் பெண் அவ்வாறு செய்ய முடிந்தாலும் செய்யக்கூடாது



சதிரில் இருந்த தோன்றிய பரத நாட்டியம் சாரத்தை இழந்து பெண் அவளை அறியாமலேயே ஆணாதிக்கத்துக்குள் அழைத்துச் செல்லும் கலையாக சிருங்காரம் இல்லாத நடனமாக் இருப்பதாக பாலசரஸ்வயி ருக்மணிதேவிக்கு ர்திராக வாதம் புரிந்தவர்
நாட்டியம் என்ற ஊடகம் சொல்லும் செய்தி இது
ஆராய்ச்சிக் குஞ்சு