1. தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 24, 2023, 5:41:47 PM5/24/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி

 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 May 2023      அகரமுதல



(தமிழ்நாடும் மொழியும் 39 : நாடகத்தமிழ்– தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

4. தமிழ் இலக்கண வளர்ச்சி

மிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி இலக்கண நூல்களும், அகப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஒவ்வொரு துறையிலும் இலக்கண நூல்களும் உள. ஆனல் தொடக்கத்தில், அஃதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இல்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஓர் இலக்கண நூல் இருந்தது. தொல்காப்பியம் அதற்குச் சான்று தரும். சின்னஞ்சிறு ஆல வித்திலிருந்து ஏராளமான கிளைகள் கிளைப்பதைப்போலத் தொல்காப்பியத்திலிருந்து பல இலக்கண நூல்கள் கிளைத்துள்ளன.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகும். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியர் தொல்காப்பியக் குடியிற் பிறந்தவர். இவரது காலம் கி. மு. 500 க்கும் 300 க்கும் இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன. மேலும் பொருளதிகாரத்தின் மூலம் பழந் தமிழ் மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியவற்றை நன்கு அறியலாம். நச்சினர்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணர், பேராசிரியர்,தெய்வச்சிலையார், கல்லாடனார் என்போர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இந்நூல் இடைச்சங்கக் காலத்தைச் சேர்ந்தது.

தொல்காப்பியருக்குப் பின்னால் பொருள் பிரியலாயிற்று. பிற்காலத்தில் பொருளியல் நான்காக வளரலாயிற்று. தொல்காப்பியர் சில நூற்பாக்களினுல் கூறிய யாப்பும், அணியும் தனித்தனி இலக்கணங்களாக வளரலாயின. அகத்திணையியலும் புறத்திணையியலும் இவ்வாறே தனித் தனியாகப் பிரிந்து வளரலாயின. எனவே அவற்றிற்கு எல்லாம் தனித்தனி நூல்கள் உண்டாயின.

அகப்பொருள் இலக்கண நூல்கள்

அகப்பொருள் இலக்கண நூல்கள் பல. அவற்றுட் சிறந்தது நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலே. இது தொல்காப்பியத்தைப் பின்பற்றியதாகும். இந்நூலாசிரியர் காலம் பாண்டியன் குலசேகரன் காலமாகும். இவன் காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டாகும். இந்நூல் 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூலின் துணை கொண்டு ஐந்திணைகளைப் பற்றிய செய்திகளையும், காதல், கற்பு இவற்றைப் பற்றியும், மக்களது ஒழுகலாற்றையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். மாறனகப் பொருள் என்பது மற்றொரு அகப்பொருள் நூலாகும். இதன் ஆசிரியர் குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார்.

புறப்பொருள் இலக்கண நூல்கள்

தொல்காப்பியத்திற்குப் பின்பு புறப்பொருளுக்கு எனத் தோன்றிச் சிறந்து விளங்கும் நூல் புறப்பொருள் வெண்பா மாலையாகும். இந்நூல் வெட்சி, கரந்தை, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய புறப் பொருள்களைப் பற்றி வெண்பாவால் பாடப்பட்டதாகும். இந்நூலாசிரியர் ஐயனாரிதனார் ஆவார். இவரது காலம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டாகும். சாமுண்டி தேவனார் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுப் போர் முறைகளை இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்நூலுக்கு அடிப்படை தொல்காப்பியமும், பன்னிரு படலமுமாகும். தொல்காப்பியத்தில் புறப்பொருள் ஏழு திணைகளை உடையது. ஆளுல் புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு திணைகளையுடையது.

யாப்பிலக்கண நூல்கள்

தொல்காப்பியர் உவம இயல் ஒன்றே கூறினர். ஆனல் பிற்காலத்திலோ யாப்பிலக்கணங்கள் எனத் தனிப் பெரு நூல்கள் பல உண்டாயின. அவற்றுள் ஆன்றோராலும் சான்றோராலும் நன்கு போற்றப்படுபவை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையுமாகும். இவற்றை யாத்தவர் அமிர்த சாகரர் ஆவார். இவர் வேளாளர்; சமண சமயத்தினர்; கி. பி. 11-ஆம் நூற்றாண்டினர். இவர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகை யாப்பிலக்கணத்தைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவால் கூறுகின்றது. இதற்குக் குணசாகரர் என்பவர் உரை எழுதி உள்ளார். மற்றொரு நூலாகிய யாப்பருங்கலவிருத்தி சூத்திரப்பாவால் ஆனது.

அணி இலக்கண நூல்கள்

அணியை மட்டும் பெரிதும் விரித்துக் கூறும் நூல்கள் இரண்டு. ஒன்று தண்டியலங்காரம்: மற்றொன்று மாறன.லங்காரம். தண்டியலங்காரம் என்பது மகாகவி தண்டியாசிரியர் எழுதிய காவியாதரிசம் என்னும் வடநூலின் மொழி பெயர்ப்பு ஆகும். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 125 சூத்திரங்களை உடையது. இந்நூலாசிரியர் வரலாறு தெளிவாகத் தெரிவதற்கில்லை. இந்நூலில் கவி வகைகளும், கவிகளினுள்ளே நின்று அழகு செய்வனவாகிய குண வகைகளும், பொருளணி வகைகளும், மடக்கு, சித்திர கவி இவற்றின் வகைகளும், செய்யுளுக்கு ஆகாத வழுக்களும் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மாறனலங்காரம் என்ற அணி நூல் குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டதாகும். தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை உதாரணங்காட்டி விரிவாக இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூல் சூத்திர யாப்பால் அமைந்தது.

இவை போக, எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் நூல் நன்னூல் என்னும் பொன்னூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். இவர் தொண்டை நாட்டுச் சனகாதிபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை சன்மதி முனிவர் ஆவார். இவரது சமயம் சைன சமயமாகும். சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளின்படி இவர் நன்னூலை இயற்றினார். இவரது காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டு ஆகும். மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர், விசாகப்பெருமாள் ஐயர், இராமானுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் என்போர் நன்னூலுக்கு உரை எழுதி உள்ளனர். இவற்றுள் சங்கர நமச்சிவாயர் உரை விருத்தி உரை எனப்படும்.

தொல்காப்பியத்திற்குப் பின்பு ஐந்திலக்கணமும் கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவாம். வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்தரனார் ஆவார். இவர் தஞ்சையைச் சேர்ந்த பொன்பற்றி என்னும் ஊரினர். இவரது காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டாகும். இவர் வீரசோழன் பெயரால் இந்நூலை இயற்றினர். இந் நூலின் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை நன்கு அறியலாம். இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகராவார். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்பர். இதில் ஐந்திலக்கணங்களும் நன்கு கூறப்பட்டுள்ளன. ஆனால் எழுத்து, சொல், பொருள் என்றே இந்நூல் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அணியிலக்கணம், யாப்பிலக்கணம், பாட்டியல் இம்மூன்றும் பொருளதிகாரத்தில் அடங்கியுள்ளன. தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், அகப்பொருள், வெண்பா மாலை போன்ற நூற்கருத்துகளைத் தழுவி இதனை இந் நூலாசிரியர் எழுதி உள்ளார். மேலும் இந்நூலுக்கு உரையும் இவரே எழுதியுள்ளார். இவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். படிக்காசுப் புலவர் இவரது மாணவர் ஆவார். திருவாரூர்ப் பன்மணிமாலை, மயிலம்மை பிள்ளைத் தமிழ் முதலியன இவரது பிறநூல்களாகும். இவர் சைவ சமயத்தினர். தொன்னூல் என்பது மற்ருெரு நூலாகும். இதன் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைச் சுருக்கிக் கூறும் வசன நூலாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

++

தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 May 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 110 : புதிய அறிவாய்தங்கள் தொடர்ச்சி)

கரிகாலனின் அரும்பணி

நேற்று நமது செய்தி அரசியல் இணைய அரங்கில் (உ)ரூட்சு வலையொளியின் அன்பர் கரிகாலன் ‘வேங்கைவயல் இழிவு’ குறித்து விரிவாகப் பேசினார். அன்பர்களின் வினாக்களுக்கும் விடையளித்தார். ஒற்றை வீரர் படையாக அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. புறஞ்சார்ந்து புலனாய்வு செய்து உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குடிநீரில் மலங்கலந்த கொடியவன் அல்லது கொடியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையை அவர் நெருங்கி விட்டார். ஆனால் அந்த இறுதி உண்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறைதான். காவல்துறை என்ன செய்துள்ளது? என்ன செய்யாமல் உள்ளது? ஏன்? ஏன்? காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டுகிறோம்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறிமதி சாவையொட்டி அப்பாவி மக்கள் மீது காவல்துறை தொடுத்த அடக்குமுறையையும் பொய் வழக்குகளையும் திறம்பட அம்பலமாக்கியவர் இதே (உ)ரூட்சு கரிகாலன்தான். அவர் வெளிப்படுத்திய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஆங்கில நாளேடு இந்து ஒரு செய்திக் கட்டுரையே வெளியிட்டது. காவல் துறையின் கண்மூடித்தனமான அனாட்சிக்கு (அராசகத்துக்கு) ஓரளவு கடிவாளமிட்டதே கரிகாலனின் அயரா முயற்சிதான். குண்டர் சட்டப் பொய் வழக்கில் சிறைவைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் இராமலிங்கத்துக்காக அறிவுரைக் கழகத்தில் நான் வாதிட்ட போதும் கரிகாலன் வெளிப்படுத்திய உண்மைகளைத்தான் சான்றாகக் கொண்டேன். இராமலிங்கம் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை நீதியர்களே ஒப்புக் கொண்டனர். அரசு அவரை விடுதலை செய்து விட்டது.


ச. தமிழ்ச செல்வனின் செவ்வினாக்கள்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் நேற்று இந்து தமிழ் திசை நாளிதழில் ‘இடையிலாடும் ஊஞ்சல்’ பகுதியில் “போதுமான அதிர்ச்சி இல்லாப் பொதுச் சமூகம்” என்ற தலைப்பில் வேங்கைவயல் இழிவு குறித்து எழுதியுள்ளார்.
தாழி அவரைப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரையை அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ்ச்செல்வனின் எழுத்தில் எடுப்பாக வெளிப்படும் சில பார்வைகள் – உள்ளத்தின் அடியாழத்திலிருந்து அவர் எழுப்பும் செவ்வினாக்கள் – நம் ஆழ்ந்த கவனத்துக்குரியவை:
1) வெண்மணி (1968), திண்ணியம் (2002) வரிசையில் மற்றுமொரு கொடுமை இறையூர் வேங்கைவயல்.

2) தமிழ்ச் சமூகம் இந்த இழிவு குறித்துத் அதிர்ச்சி அடைய வில்லை, தலித் மக்களுக்கு அநீதி நிகழும் போது அசட்டையாக இருக்கிறது என்றால், நம் சமூகம் என்கிற பொதுச் சமூகம் ஒன்று இருக்கிறதா?
3) உண்மையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்பதாக நம் சமூகம் பிளவுண்டிருப்பதை விட ஒடுக்கப்பட்டோர் -ஓடுக்கப்படாதோர்(தலித்து – தலித்து அல்லாதோர்) என்கிறதாகத்தான் ஆழமாகப் பிளவுண்டு கிடக்கிறது.
4) சாதி இந்துச் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் பேரியக்கமாக ஓர் அறிவியக்கம் தேவைப்படுகிறது.
உரையாடல் மட்டுமல்ல, ஒன்றுபட்ட முயற்சிகளும் தொடர வேண்டும். கரிகாலனும் தமிழ்ச்செல்வனும் ஏற்றியுள்ள சுடர்களைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம். ஏற்றுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 79



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages