தமிழில் துணைக் குறியீடுகள்

481 views
Skip to first unread message

ananda rasa thiruma

unread,
Jun 5, 2010, 8:32:54 PM6/5/10
to mint...@googlegroups.com
மின் தமிழ் அன்பர்களே
இரண்டு மூன்று மாதமாக எழுத்துச் சீர்திருத்தம் பற்றி மின்தமிழிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் அதன் அமைப்பு முறை பற்றியும் நமக்கு எவ்வளவு தெரியும் என எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
சான்றுக்கு ஒன்று கேட்கிறேன். தமிழ் பேசுகிற எழுதுகிற நமக்கு அதன் குறியீடுகளுக்குப் பெயர் தெரியுமா?
கா, கெ என்னும் எழுத்துக்களை எடுத்துக் கொள்வோம். முதல் எழுத்தில் க என்பதன் பக்கத்தில் உள்ளதைக் கால் எனக் குறிப்பிடுகிறோம். இன்னும் தெளிவாகத் துணைக் கால் எனச் சொல்கிறோம். இரண்டாவது எழுத்தில் ககரத்துக்கு முன் உள்ளத் துணைக் குறியீட்டைக் ஒற்றைக் கொம்பு என்கிறோம். சரிதானே?
முதல் எடுத்துக்காட்டில் துணைக் குறியீடு முதன்மை எழுத்திற்கு முன்னால் வருகிறது. இரண்டாம் எழுத்தில் முதன்மை எழுத்திற்குப் பின்னால் வருகிறது. கொ என்னும் எழுத்தில் முதன்மை எழுத்திற்கு முன்னாலும் பின்னாலும் துணைக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்? தமிழின் இத்தகைய எழுத்து அமைப்பைச் சிந்தித்துள்ளோமா?
கு, கூ என்னும் எழுத்துக்களை எடுத்துக் கொள்வோம். இதில் துணைக் குறியீடுகள் முதன்மை எழுத்துட்ன் பிரித்தறிய முடியாமல் இணைந்துள்ளன. ஆனாலும் முதன்மை எழுத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய துணைக் குறியீடுகளுக்குப் பெயர் இருந்திருக்கும் அல்லவா? அத்துணைக் குறியீடுகளுக்குப் பெயர் என்ன?
 இப்படித் தமிழில் உள்ள துணைக் குறியீடுகள் எல்லாவற்றிற்கும் பெயர் அறிந்திருக்கிறோமா? அதன் அமைப்பு முறையைப் பற்றிய தெளிவு நமக்கு இருகிறதா?
நான் கேட்ட இந்த வினாக்கள் அறியா வினாக்கள் அல்ல. அறிவினாக்கள்.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
அன்புடன்
ஆராதி

வினோத் ராஜன்

unread,
Jun 5, 2010, 8:56:50 PM6/5/10
to மின்தமிழ்
//இந்த வினாக்கள் அறியா வினாக்கள் அல்ல. அறிவினாக்க//

அப்படின்னா ???

மேற்படி (அறி)(யா)வினாக்கு பதில் அளிக்கும் பட்சத்தில் மேற்படி
கேள்விகளுக்கு மறுமொழி அளிக்கப்படும் :-))

V

ananda rasa thiruma

unread,
Jun 5, 2010, 10:30:37 PM6/5/10
to mint...@googlegroups.com
திரு வினோத் ராஜன்
ஒரு மொழியில் சீர்திருத்தம் தேவை என நினைக்கிறவர்களுக்கு ஏன் சீர்திருத்தம் தேவை? சீர்திருத்தத்திற்குரியவற்றின் அடிப்படை என்ன? அவற்றின் அமைப்பு முறை என்ன? அவற்றில் எங்கே குறை உள்ளது? என்பன போன்ற செய்திகள் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் சீர்திருத்ததை எதிர்க்கிறவர்கள், நிறை குறையைத் தம்மளவில் அறிந்து எதிர்க்கிறார்களா?  சீர்திருத்தம் தேவையில்லை என்பதற்குத் தக்க காரணம், விளக்கம் அவர்களிடம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன போன்ற செய்திகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும்.
மக்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் தொட்டு ஒருவர் சொல்வதை மற்றவர் எதிர்ப்பது அல்லது மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது இயல்பாகக் காணப்படும் ஒன்று.

அடுத்து உங்கள் ஐயப்பாட்டிற்கு வருவோம்.
தமிழ் இலக்கணத்தில் வினாக்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு அறிவினாவும், அறியாவினாவும்.
அறிவினா என்றால் விடை தெரிந்த ஒருவர் மற்றவர்க்கு விடை தெரிந்திருக்கிறதா என்பதற்காகக் கேட்பது.
அறியாவினா என்றால் விடை தெரியாத ஒருவர் விடை தான் மற்றவரிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகக் கேட்பது.

அன்புடன்
ஆராதி

2010/6/6 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத் ராஜன்

unread,
Jun 5, 2010, 10:54:50 PM6/5/10
to மின்தமிழ்
> அறிவினா என்றால் விடை தெரிந்த ஒருவர் மற்றவர்க்கு விடை தெரிந்திருக்கிறதா
> என்பதற்காகக் கேட்பது.
> அறியாவினா என்றால் விடை தெரியாத ஒருவர் விடை தான் மற்றவரிடமிருந்து
> தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகக் கேட்பது.

ஹ்ம்ம்.. அப்ப சரி.. மௌனம் சர்வார்த்த சாதகம் :-)

V

On Jun 6, 7:30 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு வினோத் ராஜன்
> ஒரு மொழியில் சீர்திருத்தம் தேவை என நினைக்கிறவர்களுக்கு ஏன் சீர்திருத்தம்
> தேவை? சீர்திருத்தத்திற்குரியவற்றின் அடிப்படை என்ன? அவற்றின் அமைப்பு முறை
> என்ன? அவற்றில் எங்கே குறை உள்ளது? என்பன போன்ற செய்திகள் தெரிந்திருக்க
> வேண்டும்.
> அதேபோல் சீர்திருத்ததை எதிர்க்கிறவர்கள், நிறை குறையைத் தம்மளவில் அறிந்து
> எதிர்க்கிறார்களா?  சீர்திருத்தம் தேவையில்லை என்பதற்குத் தக்க காரணம்,
> விளக்கம் அவர்களிடம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன போன்ற
> செய்திகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும்.
> மக்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் தொட்டு ஒருவர் சொல்வதை மற்றவர் எதிர்ப்பது
> அல்லது மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது இயல்பாகக் காணப்படும் ஒன்று.
>
> அடுத்து உங்கள் ஐயப்பாட்டிற்கு வருவோம்.
> தமிழ் இலக்கணத்தில் வினாக்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில்
> இரண்டு அறிவினாவும், அறியாவினாவும்.

> அன்புடன்
> ஆராதி
>

> 2010/6/6 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 6, 2010, 2:10:42 AM6/6/10
to mint...@googlegroups.com
அறிந்த தாங்களே இந்த அரிய விடைகளையும் சொல்லி விடுங்கள். தெரிந்து கொள்கிறோம். நன்றி.

2010/6/6 ananda rasa thiruma <aara...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

ananda rasa thiruma

unread,
Jun 6, 2010, 9:32:46 PM6/6/10
to mint...@googlegroups.com
திரு வினோத் ராஜன் ///ஹ்ம்ம்.. அப்ப சரி.. மௌனம் சர்வார்த்த சாதகம்/// என்கிறார். திருமிகு கீதா சாம்பசிவம் ‘நீங்களே சொல்லிவிடுங்கள்‘ என்கிறார். எந்தவழி நடப்பது?

மௌனத்திற்கு இணையான சிறந்த மொழி உலகில் இல்லை என்பது என் கருத்து. இருப்பதைக் கேட்டும் கொடுக்காமல் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது.
அதனால் திருமிகு கீதா சாம்பசிவம் அவர்களுக்காகவாவது தெரிந்ததைச் சொல்லியாகவேண்டும்.

தமிழின் வரிவடிவங்களைப் பற்றிப் பேசும்போது ஒட்டு மொத்தமாகத் தமிழ் மொழி அமைபின் நிறைகுறைகளையும் பேச வேண்டிவரும். அப்பொழுது ஏற்படும் எதிர்விளைவுகளையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து நாம் இப்பொழுது திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ளப் பெற்றுள்ள வரிவடிவங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12. அவற்றில் 5 குறில் 7 நெடில்.
இவற்றில் 5 குறில் அதன் ஒலி நீட்சியாக 5 நெடில் என அமைந்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் 2 நெடில் கூடுதலாக இடம் பெற்று 7 என்றானது. இதுவோ மொழிச் சிக்கலுக்கு வழி வகுத்துவிட்டது.

5 குறில்கள் யாவை?  அ, இ, உ, எ, ஒ
இந்த 5 குறில்களையும் இரண்டு அணிகளாகப் பிரிக்கலாம்.
தன் வடிவில் துணைக் குறியீடு பெறுவதால் நெடிலாக மாறுபவை ஓர் அணி. அவை அ, உ, எ, ஒ
முற்றிலும் வேறு வரிவடிவம் பெறுவதால் நெடிலாக ஒலிக்கப்பெறுவது இரண்டாவது அணி. அது  இ.

இவற்றை எழுத்து வடிவில்
                      அ > ஆ
                      உ > ஊ
                      எ > ஏ
                      ஒ > ஓ
                    ------------
                      இ > ஈ
எனப் பிரித்துக் காட்டலாம். இப்பொழுது மேலே சொன்னது தெளிவாகியிருக்கும்.

அடுத்து வரிவடிவ ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஏனைய இரண்டு நெடில்களான ஐ, ஔ  என்னும் உயிர் எழுத்துக்களை இந்த அணியில் சேர்த்துப் பார்க்கலாம்.
            ஔ என்பது ஒ - ஓ பிரிவில் சேர்கிறது (ஒ > ஓ > ஔ)/ இதனால் இந்தப் பிரிவில் 3 எழுத்துக்கள் ஆகின்றன. இது இந்தப் பிரிவில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு.
             ஐ எதனோடும் சேராமல் தனித்து நிற்கிறது.

ஔ என்தை முன்னர் உள்ள உயிர்க் குறில் வடிவத்தோடு சேர்த்ததைப் போலவே ஐ என்பதையும் ஏதேனும் ஓர் உயிர்க்குறில் வரிவடிவத்தோடு சேர்த்திருக்க வேண்டும். அப்படி ஏன் சேர்க்க வில்லை என்பது கவனத்திற்கு உரியது.
ஆக வரிவடிவ ஒற்றுமை அடிப்படையில் மூன்று அணிகள் உயிர் எழுத்துக்களில் காணப்படுகின்றன. அவை
  1. வரிவடிவ ஒற்றுமை உடைய குறில் நெடில்கள்
  2. வரிவடிவ ஒற்றுமை இல்லாக் குறில் நெடில்கள்
  3. வரிவடிவத் தனித்தன்மை பெற்ற ஒரு நெடில்
இப்படித் தமிழ் வரிவடிவங்களையும் அமைப்பு முறையையும் இதற்கு முன்னர்ப் பிரித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.  அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அடுத்து இதுவரை சொன்னவை புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருந்தனவா? இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதைத் தெளிவுபடுத்திக் கொண்டு மேலே தொடர்வோம்.

அன்புடன்
ஆராதி


                    



2010/6/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Raja sankar

unread,
Jun 6, 2010, 9:55:38 PM6/6/10
to mint...@googlegroups.com
என்னுடைய கருத்து.

ஏதாவது ஒன்னை பண்ணியே ஆகனும்னு எழுத்து சீர்திருத்தம் ஆரம்பிச்சிருக்கு. எழுத்து சீர்திருத்தம் செஞ்சே ஆகனும்கிறது ஒரு வகையில் சொல்லப்போனா தாழ்வு மன்ப்பான்மை.

என்னுடைய மொழி சரியில்லை. அதனால தான் எல்லோரும் அதை படிக்க மாட்டீங்கறாங்க. சீர்திருத்தம் பண்ணின உடனே உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழியா ஆயிடும்.


என்கின்ற மனப்பான்மையே இதற்கு காரணம். தமிழில் செய்யவேண்டிய வேலைகளே இல்லியா? இல்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்போ இது மட்டும் தான் பாக்கியா?

ஒரு அற்சொற்பொருள் அகராதி
ஒரு சொற்பொருள் விளக்க அகராதி
அபிதான சிந்தாமணி போன்ற நூல்களின் திருத்திய பதிப்பு

இதுக்கெல்லாம் ஆளையே காணோம். ஆனா எழுத்து சீர்திருத்ததிற்கு வேனா ஆட்கள் முதல்ல நிக்கிறாங்க.

என்னையை திட்றதுக்கு முன்னாடி இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க.

எழுத்து சீர்திருத்தத்தால் வரும் நன்மை என்ன?

ராஜசங்கர்



2010/6/7 ananda rasa thiruma <aara...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jun 7, 2010, 7:36:10 AM6/7/10
to mint...@googlegroups.com
திரு ராஜா சங்கர்
இந்த இழை எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்படவில்லை.  தமிழ் எழுத்துக்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையாவது தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சீர்திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பன எல்லாம் அடிப்படை தெரியாவிடால் பொருத்தாமாய் இருக்குமா? அதனால் எழுத்துக்களின் அடிப்படைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த இழை தொடங்கப்பட்டது.  புரிந்துகொண்டு தெளிவு ஏற்பட்ட பிறகு அடுத்த கட்டம் சீர்திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது. ஆனால் அது இந்த இழையில் இடம் பெறாது.
அன்புடன்
ஆராதி

2010/6/7 Raja sankar <errajasa...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jun 7, 2010, 10:45:37 AM6/7/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி சார்,
 
தாங்கள் இந்த இழையைத் தொடங்கியதும் மிக உன்னிப்பாக தங்களது எண்ண ஓட்டத்தைக் கவனித்து வருகிறேன். ஆக்க பூர்வமான அணுகுமுறையைத் தாங்கள் கையாளுகிறீர்கள். அதுவுமின்றி மிக நயமான விமரிசனம் சொல்லாமல் சொல்கிறது தங்கள் அணுகுமுறை.
 
இருப்பது என்னவென்றே அறியாமல் வரவேண்டியது என்ன என்று விதானம் போடும் பெரும் மேதாவிகளுக்குக் கொஞ்சம் ஊன்றிக்கொள்ளத் தரையை ஞாபகப்படுத்துகிறீர்கள்.
 
‘கம்பன் வயிறெரியச் சிரையாய்ச் சிரைத்து
நிதம் செந்தமிழைத் தின்று தின்று
பாத்திகட்டி பம்மாத்து பண்ணிவரும்’
 
விரசத்தை ஒருகாலத்தில் ஒரு பெரியவர் விஷயமாகச் சாடிப் பாட்டு எழுதினார் புதுமைப் பித்தன். இன்று தமிழுக்கே அந்த விரசம் நடந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்று தோன்றுகிறது.
 
தங்களைப் போன்ற பெரியவர்கள் பொறுமையாகச் சில விஷயங்களை எடுத்துச் சொன்னால்தான் நல்லது.
 
நன்றிகள் பல.

 

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jun 7, 2010, 11:45:01 AM6/7/10
to மின்தமிழ்
இயற்கைக்கு மறுபெயர் மாற்றம்.
இயல்பாக இருக்கிறோம் எனில்
மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதாகும்.
மாறிக்கொண்டிருந்தால் வளர்ச்சி, உயர்ச்சி.
மாறாதிருந்தால் தளர்ச்சி, தேய்வு.
காலங்‌களூடாக மாறிக்கொண்டிருக்கிறோம்.
மாற்றவேண்டியதை மாற்றிககொண்டிருக்கிறோம்.
உள்வாங்‌கியவற்றை உரியதாக்கிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் ஒலிகள்தான் அடித்தளம்.
வரிவடிவங்‌கள் ஒலிகளின் குறியீடுகள்.
அதற்குமேல் அவற்றுக்கு மதிப்பில்லை.
தமிழ் ஒலிகள் மாற்றம் பெற்று வந்துள்ளன.
வல்லினத்தில் றகரம் பிற்சேர்க்கை.
மெல்லினத்தில் ஙகரம், ஞகரம் நகரம் பிற்சேர்க்கைகள்.
தொடக்கத்திலிருந்து தேடினால் மேலும் சொல்லலாம்.
ஆய்தம் பிற்சேர்க்கை.
கூட்டொலிகளான ஐ, ஔ உள்வாங்‌கித் தமிழுக்கு உரித்தாகியவை.
எண்கள் ஒரே நாளில் வந்தனவா?
ஒன்றுக்குப் பின் இரண்டு வந்ததா?
இரண்டுக்குப் பின் ஒன்று வந்ததா?
எட்டுக்குப் பிறகு ஒன்பதும் பத்தும் சுழியத்தைக் கண்டதால் சேர்ந்தன.
அனைத்துமே இயற்கை தந்த பேறு,
மாற்றம் தந்த விளைவு.
மாற்றம் இழுத்துச் செல்லமுன்
மாற்றத்தை இழுத்துச் செல்வதால்
இயல்பை இயல்பாக்கலாம்.
வரிவடிவ மாற்றக் கருத்துரைகளில்
ஆள்களைக் குறிப்பிடுவதும்
அவர்களைத் தனிப்படுத்திப் பெயர்சொல்லிக் குறைகூறுவதும்
கருத்துரைக்கு அப்பாற்பட்டதாகும்.
மின் தமிழ் குழுமத்தில் தொடர்ந்து ஆள்களைச் சுட்டிப் பேசுவதால்
விலகினேன்.
வாசெகு கொண்டுவரும் எழுத்துச் சீர்மை என்ற வரிகள் ஆளைச் சுட்டுபவை.
அண்மையில் அவர் கேட்டு அவருடன் என் செய்திகளைப் பகிர்ந்தேன்.
1981இல் என் கருத்துரை வரும்பொழுது அதற்கு முன்னும் பலர்
கூறியிருந்ததைக்
காட்டினேன்.
தொடர்ச்சியான முயற்சியின் விளைவுதான் இன்றைய நிலை.
நன்றி

On Jun 7, 7:45 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> திரு ஆராதி சார்,
>
> தாங்கள் இந்த இழையைத் தொடங்கியதும் மிக உன்னிப்பாக தங்களது எண்ண ஓட்டத்தைக்
> கவனித்து வருகிறேன். ஆக்க பூர்வமான அணுகுமுறையைத் தாங்கள் கையாளுகிறீர்கள்.
> அதுவுமின்றி மிக நயமான விமரிசனம் சொல்லாமல் சொல்கிறது தங்கள் அணுகுமுறை.
>
> இருப்பது என்னவென்றே அறியாமல் வரவேண்டியது என்ன என்று விதானம் போடும் பெரும்
> மேதாவிகளுக்குக் கொஞ்சம் ஊன்றிக்கொள்ளத் தரையை ஞாபகப்படுத்துகிறீர்கள்.
>
> ‘கம்பன் வயிறெரியச் சிரையாய்ச் சிரைத்து
> நிதம் செந்தமிழைத் தின்று தின்று
> பாத்திகட்டி பம்மாத்து பண்ணிவரும்’
>
> விரசத்தை ஒருகாலத்தில் ஒரு பெரியவர் விஷயமாகச் சாடிப் பாட்டு எழுதினார்
> புதுமைப் பித்தன். இன்று தமிழுக்கே அந்த விரசம் நடந்துவிடாமல் இருக்கவேண்டுமே
> என்று தோன்றுகிறது.
>
> தங்களைப் போன்ற பெரியவர்கள் பொறுமையாகச் சில விஷயங்களை எடுத்துச் சொன்னால்தான்
> நல்லது.
>
> நன்றிகள் பல.
>

> On 6/7/10, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > திரு ராஜா சங்கர்
> > இந்த இழை எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்படவில்லை.
> > தமிழ் எழுத்துக்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையாவது தெரிந்துவைத்திருக்க
> > வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சீர்திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பன
> > எல்லாம் அடிப்படை தெரியாவிடால் பொருத்தாமாய் இருக்குமா? அதனால் எழுத்துக்களின்
> > அடிப்படைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த இழை தொடங்கப்பட்டது.  புரிந்துகொண்டு
> > தெளிவு ஏற்பட்ட பிறகு அடுத்த கட்டம் சீர்திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது.
> > ஆனால் அது இந்த இழையில் இடம் பெறாது.
> > அன்புடன்
> > ஆராதி
>

> > 2010/6/7 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> > என்னுடைய கருத்து.
>
> >> ஏதாவது ஒன்னை பண்ணியே ஆகனும்னு எழுத்து சீர்திருத்தம் ஆரம்பிச்சிருக்கு.
> >> எழுத்து சீர்திருத்தம் செஞ்சே ஆகனும்கிறது ஒரு வகையில் சொல்லப்போனா தாழ்வு
> >> மன்ப்பான்மை.

> >> *


> >> என்னுடைய மொழி சரியில்லை. அதனால தான் எல்லோரும் அதை படிக்க மாட்டீங்கறாங்க.

> >> சீர்திருத்தம் பண்ணின உடனே உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழியா ஆயிடும். *


>
> >> என்கின்ற மனப்பான்மையே இதற்கு காரணம். தமிழில் செய்யவேண்டிய வேலைகளே இல்லியா?
> >> இல்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்போ இது மட்டும் தான் பாக்கியா?
>
> >> ஒரு அற்சொற்பொருள் அகராதி
> >> ஒரு சொற்பொருள் விளக்க அகராதி
> >> அபிதான சிந்தாமணி போன்ற நூல்களின் திருத்திய பதிப்பு
>
> >> இதுக்கெல்லாம் ஆளையே காணோம். ஆனா எழுத்து சீர்திருத்ததிற்கு வேனா ஆட்கள்
> >> முதல்ல நிக்கிறாங்க.
>
> >> என்னையை திட்றதுக்கு முன்னாடி இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில்
> >> சொல்லிடுங்க.
>

> >> *எழுத்து சீர்திருத்தத்தால் வரும் நன்மை என்ன?*
>
> >> ராஜசங்கர்
>
> >> 2010/6/7 ananda rasa thiruma <aaraa...@gmail.com>

> ...
>
> read more »

Dr M.D.Jayabalan

unread,
Jun 7, 2010, 12:11:02 PM6/7/10
to மின்தமிழ், mdjch...@rediffmail.com
திரு ஆனந்த் அவர்களுக்கு

வணக்கம். உங்களுடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்
றாலும் பின் வரும் கருத்துபரிமாற்றத்தை அனும்திக்க வேண்டுகிறேன்.

அற்புதமான சிந்தனை. நல்ல கேள்வி. இது போன்ற கேள்விகள் என் மனதிலும்
எழுந்ததுண்டு. மெய் எழுத்துக்களை நடுநிலைப் படுத்தி உயிர்மெய்
எழுத்துக்களை உருவாக்கும்போது உயிர் ஒலிக் குறியீடுகளை முன்னொட்டு,
பின்னொட்டு, மற்றும் எழுத்து உருமாற்றம் என்ற மூன்று வழிகளில்
குறிப்பிட்டு வந்துள்ளார்கள். இதே முறைமை பிற இந்திய மொழிகளிலும்,
குறிப்பாகத் திராவிட மொழிகளிலும் பின்பற்றப் பட்டு வந்துள்ளது கவனத்தில்
கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்தி.

மெய்யெழுத்துகளுக்குத் தலைப் புள்ளி வைத்தது இரு நூறு ஆண்டுகளுக்கு
முன்னர்தான். எ-கரம், ஏ-காரம் இரண்டும் ஒரு குறியீட்டால்தான் எழுதப்பட்டு
வந்தன. மேலை அறிஞர்களின் சிந்தனையால் இப் பரிணாமம் நிகழ்ந்தது.
எடுத்துக்காட்டாக, [கபபல] என்ற வரிவடிவத்தை எப்படி உச்சரிக்கவேண்டும்
என்று ஆசிரியர் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இன்றும் இந்தியில்
कमल, कलम என்ற இரு சொற்களிலும் ஈற்றொலி மெய்யெழுத்து (ஒற்றொலி) என்பதை
ஆசிரியர் சொல்லித்தான் பழக வேண்டும். முதல் சொல் ‘கமல்’; இரண்டாவது,
‘கலம்’. கடை ஒலி உயிர்மெய்யாக ஒலிப்பதில்லை.


நம் கேள்விக்கு வருவோம். மெய்யுடன் உயிர் ஒலிகளின் சேர்க்கையை மூன்று
வகையில் குறித்தனர். பின்னொட்டாக {+ஆ,+இ,+ஈ} மூன்று வடிவங்களும்,
முன்னொட்டாக {எ+,ஏ+,ஐ+} மூன்று வடிவங்களும், முன்பின் ஒட்டாக (ஒ,ஓ,ஔ-
கொ,கோ,கௌ) மூன்று வடிவங்களும், முதன்மை மெய் எழுத்தின் வேர் உருமாற்றமாக
(+உ+, +ஊ+) ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்படுத்தப் பட்டன.

இது மட்டுமன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் பயன்பாட்டில் சமீப காலம்வரை
இருந்துவந்துள்ளது. க்+கு போன்றவை இணைந்து ஒரே வரிவடிவமாக எழுதப்பட்டன.

ஆகவே,மெய் எழுத்துடன் உயிர் இணைவதை 3+3+3+2 ஆகிய பத்து வழிகளில்
பயன்படுத்தி வந்துள்ளனர். தர்கரீதியாகப் பார்த்தாலும் இவை ஓர் அறிவியல்
சிந்தனையின் பரிமாணமாகத்தான் தெரிகிறது.

ஆனால், இக் குறியீடுகளுக்கு என்ன பெயர் என்ற கேள்விக்கு ‘சரியாகத்
தெரியாது’ என்பதுதான் என் பதில். இத் துணைக்குறியீடுகள் அடிப்படையில்
குற்றொலி. நெட்டொலி (குறில், நெடில்) இவற்றைக் குறிக்க வந்தவையே.


On Jun 6, 7:30 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு வினோத் ராஜன்
> ஒரு மொழியில் சீர்திருத்தம் தேவை என நினைக்கிறவர்களுக்கு ஏன் சீர்திருத்தம்
> தேவை? சீர்திருத்தத்திற்குரியவற்றின் அடிப்படை என்ன? அவற்றின் அமைப்பு முறை
> என்ன? அவற்றில் எங்கே குறை உள்ளது? என்பன போன்ற செய்திகள் தெரிந்திருக்க
> வேண்டும்.
> அதேபோல் சீர்திருத்ததை எதிர்க்கிறவர்கள், நிறை குறையைத் தம்மளவில் அறிந்து
> எதிர்க்கிறார்களா?  சீர்திருத்தம் தேவையில்லை என்பதற்குத் தக்க காரணம்,
> விளக்கம் அவர்களிடம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன போன்ற
> செய்திகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும்.
> மக்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் தொட்டு ஒருவர் சொல்வதை மற்றவர் எதிர்ப்பது
> அல்லது மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது இயல்பாகக் காணப்படும் ஒன்று.
>
> அடுத்து உங்கள் ஐயப்பாட்டிற்கு வருவோம்.
> தமிழ் இலக்கணத்தில் வினாக்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில்
> இரண்டு அறிவினாவும், அறியாவினாவும்.
> அறிவினா என்றால் விடை தெரிந்த ஒருவர் மற்றவர்க்கு விடை தெரிந்திருக்கிறதா
> என்பதற்காகக் கேட்பது.
> அறியாவினா என்றால் விடை தெரியாத ஒருவர் விடை தான் மற்றவரிடமிருந்து
> தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகக் கேட்பது.
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/6/6 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>> //இந்த வினாக்கள் அறியா வினாக்கள் அல்ல. அறிவினாக்க//

ananda rasa thiruma

unread,
Jun 7, 2010, 8:48:38 PM6/7/10
to mint...@googlegroups.com
திரு மறவன்புலவு சச்சிதானந்தம், திரு டாக்டர் ஜெயபாலன் இருவரும் என்னைத் தெளிவு பெறச் செய்யுங்கள்.

நீங்கள் இந்த இழையில் கூறியுள்ள செய்திகள் வெவ்வேறு தனி இழைகளிலும் காணப்படுகின்றன. உங்கள் தனி இழைகள் தவறுதலாக இந்த இழையில் இணைக்கப்பட்டனவா? அன்றித் தேவை கருதி நீங்கள் இந்த இழையில் இணைத்துள்ளீர்களா?

திரு ஜெயபாலன், நீங்கள் திரு ஆனந்த் என்பவரிடம் வினாக்களைத் தொடுத்துள்ளீர்கள். ஆனால் அவை இந்த இழை தொடர்பானவையாக உள்ளன.

திரு மறவன்புலவு சச்சிதானந்தம், நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு  உங்கள் இழையில் விடை சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இல்லை எனில் இரண்டு இழைகளின் நோக்கங்களும் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு. இந்த இழை தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி திரு ஸ்ரீரங்கரே.
           பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
           தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்றும்
          விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
          மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

என்றும் வள்ளுவன் சொன்னதை ஓரளவாவது கடைப்பிடிப்போம்.

அன்புடன்
ஆராதி

2010/6/7 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Jun 7, 2010, 9:50:15 PM6/7/10
to mint...@googlegroups.com
ஆராதி ஐயா,

விநோத் தான் மெளனமாய் இருந்து கவனிக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கலாம். தாங்கள் தொடருங்கள். படித்துத் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி, பொறுமையாகவும், கனிவாகவும் விளக்குவதற்கு.

2010/6/7 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு வினோத் ராஜன் ///ஹ்ம்ம்.. அப்ப சரி.. மௌனம் சர்வார்த்த சாதகம்/// என்கிறார். திருமிகு கீதா சாம்பசிவம் ‘நீங்களே சொல்லிவிடுங்கள்‘ என்கிறார். எந்தவழி நடப்பது?

ananda rasa thiruma

unread,
Jun 8, 2010, 7:42:02 AM6/8/10
to mint...@googlegroups.com

தமிழில் துணைக் குறியீடுகள்  - 2 

 

தமிழ் உயிர் எழுத்துக்கள் வரிவடிவ அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. இப்பொழுது வேறோர் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்த வேண்டியுள்ளது.

 

தமிழ் வரிவடிவங்கள் அனைத்தையும் முதன்மை வடிவங்கள், துணை வடிவங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

எ-டு. கா இந்த எழுத்தில் முதன்மை வடிவம் க. துணை வடிவம் பக்கத்தில் உள்ள கால். க் என்னும் மெய்யெழுத்தை எடுத்துக்கொள்வோம். இதில் க முதன்மை வடிவம். அதன்மேல் உள்ள புள்ளி துணைவடிவம். ஆ என்னும் எழுத்தை எடுத்துக்கொண்டால் அ முதன்மை வடிவம், அதன் அடியில் வளைகோடு துணைவடிவம்.

 

முதல் எழுத்து என்பது வேறு முதன்மை எழுத்து என்பது வேறு. குழப்பத்தைத் தவிர்க்க, முதன்மை எழுத்து என்பதற்கு மாற்றாக முதன்மை வடிவம் என்னும் பெயர் பயன்படுத்தப்படுகிறது.  

 

இப்பொழுது, உயிர் எழுத்துக்களை முதன்மை வடிவம் துணை வடிவம் என்பனவற்றின் அடிப்படையில் பிரித்துக் காணலாம்.

1.   முதன்மை வடிவம் மட்டுமே உள்ள உயிர்கள்   , , ,, , ,

2.   துணைவடிவம் பெற்ற உயிர்கள்    , , , ,

முதன்மை வடிவம் மட்டுமே உள்ள உயிர்களில் இரண்டு நெடில்கள் உள்ளன. அவை ஈ, ஐ என்பன. இவை இரண்டும் ஓசையில் ஒற்றுமை உடையன.

 

துணை வடிவம் பெற்ற 5 உயிர்களை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை

1.   ஒட்டிய துணைக் குறியீடுகளைப் பெற்ற உயிர்கள்  ,,

2.   தனித்த துணைக் குறியீடுகளைப் பெற்ற உயிர்கள்  ,

 

இவற்றில் முதல் வகையான, ஒட்டிய துணைக் குறியீடுகளைப் பெற்ற உயிர்களான ஆ, , ஓ என்பன ஒரு சொல்லின் ஈற்றில் வருமானால் வினாப் பொருள் தருவன. இம்மூன்று எழுத்துக்களின் துணைக் குறியீடுகளில் ஒற்றுமை ஏதும் இல்லை.

 

இரண்டாவது வகையான தனித்த துணைக் குறியீடுகளைப் பெற்ற உயிர்களான ஊ, ஔ என்பன மூன்று ஒற்றுமைகளை உடையன.

1.   இரண்டும் ஒரே துணைக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன.

2.   இரண்டும் மொழி இறுதியில் வாரா.

3.   ஒலிப்பில் ஒற்றுமை உடையன.

இரண்டும் மொழி இறுதியில் வாரா என்பது பல எழுத்துக்கள் சேர்ந்து உருவான சொற்களின் இறுதியில் வாரா என்னும் பொருளில் கூறப்பட்டது.  ஓரெழுத்து ஒரு மொழியில் இரண்டும் வருகின்றன. எ-டு. பூ, கௌ

 

இவ்வாறு பிரித்து அணி சேர்ப்பதில் காணப்படும் சில ஒற்றுமைகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டன. அவை தற்செயலா, அல்லது திட்டமிடலா என்பதைப் பற்றி விரிவான ஆய்வு தேவை. இக்கட்டுரை நோக்கம் கருதி அது இங்கு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மொழி அமைப்புக்கும் வரிவடிவத்திற்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருப்பது தெரிகிறது.

 

அன்புடன்

ஆராதி

 



2010/6/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Dr M.D.Jayabalan

unread,
Jun 9, 2010, 11:55:36 AM6/9/10
to மின்தமிழ்
அன்புடையீர்

துணைக் குறியீடுகள் பற்றிய கேள்வியின் தொடர்பாக எழுதப்பட்டது தான் என்
விளக்கம். அவற்றிற்குரிய பெயர்கள் தெரியவைல்லை என்பதை ஆரம்பத்திலேயே
குறிப்பிட்டிருந்தேன். ஆயினும் இது தொடர்பாக நான் மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்பிய செய்திகளை அதனுடன் இணத்துவிட்டேன். வேறு
இழையில் காணப் படுகிறது என்பது புரியவில்லை. இத் தகவல் உங்களுக்குத்
தெளிவு உண்டாக்கியதா அல்லது மேலும் குழப்பி விட்டதா என்பது தெரியாது.
[ஒரு வேளை, பதில் எழுதும் கட்டம் மாறியிருக்குமோ தெரியவில்லை].

அன்பன்
எம்.டி.ஜெயபாலன்

On Jun 8, 5:48 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு மறவன்புலவு சச்சிதானந்தம், திரு டாக்டர் ஜெயபாலன் இருவரும் என்னைத் தெளிவு
> பெறச் செய்யுங்கள்.
>
> நீங்கள் இந்த இழையில் கூறியுள்ள செய்திகள் வெவ்வேறு தனி இழைகளிலும்
> காணப்படுகின்றன. உங்கள் தனி இழைகள் தவறுதலாக இந்த இழையில் இணைக்கப்பட்டனவா?
> அன்றித் தேவை கருதி நீங்கள் இந்த இழையில் இணைத்துள்ளீர்களா?
>
> திரு ஜெயபாலன், நீங்கள் திரு ஆனந்த் என்பவரிடம் வினாக்களைத் தொடுத்துள்ளீர்கள்.
> ஆனால் அவை இந்த இழை தொடர்பானவையாக உள்ளன.
>
> திரு மறவன்புலவு சச்சிதானந்தம், நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு  உங்கள்
> இழையில் விடை சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இல்லை எனில் இரண்டு இழைகளின்
> நோக்கங்களும் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு. இந்த இழை தொடர்பான கருத்துக்களைப்
> பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
>
> ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி திரு ஸ்ரீரங்கரே.

>            *பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
>            தொகுத்தவற்றுள் எல்லாம் தலை*
> என்றும்
>           *விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
>           மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று*


> என்றும் வள்ளுவன் சொன்னதை ஓரளவாவது கடைப்பிடிப்போம்.
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/6/7 Dr M.D.Jayabalan <jayabalanmdjchey...@gmail.com>> திரு ஆனந்த் அவர்களுக்கு

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

N. Ganesan

unread,
Jun 9, 2010, 7:20:41 PM6/9/10
to மின்தமிழ்

On Jun 7, 10:45 am, "Maravanpulavu K. Sachithananthan"

அன்பின் சச்சிதானந்தம் ஐயா,

இப்பொழுது க்‌ஷ = க்ஷ இரண்டும் உள்ளது,
இரண்டு விதமாகவும் எழுதலாம் என்பதுபோல்,
உ,ஊ உயிர்மெய்களை பிணைத்தும், பிரித்தும்
எழுதலாம் என்று அங்கீகாரம் கணிகளில்
கொடுக்கலாம்.

இதனால் கு,ஙு, சு, ஞு, ... என்றும் இருக்கும்,
கூடவே பெரியார் சீர்மையும் இருக்கும்.

மற்றவை அரசாங்கங்கள் நிரணயிக்கும்
- வருங்காலங்களில்.

நா. கணேசன்


ananda rasa thiruma

unread,
Jun 9, 2010, 8:45:27 PM6/9/10
to mint...@googlegroups.com
திரு எம்.டி.ஜெயபாலன்
///மெய்யெழுத்துகளுக்குத் தலைப் புள்ளி வைத்தது இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான். எ-கரம், ஏ-காரம் இரண்டும் ஒரு குறியீட்டால்தான் எழுதப்பட்டு வந்தன. மேலை அறிஞர்களின் சிந்தனையால் இப் பரிணாமம் நிகழ்ந்தது.///

தொல்காப்பியம் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பது அறிஞர் பலரும் ஏற்றுக் கொண்ட கருத்து. வையாபுரி பிள்ளை அதன் காலத்தைக் கி.பி. 4ஆம் நூற்றாண்டு என்பார். இதற்குப் பிற்பட்டதாக அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை. அதில்
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
என்னும் நூற்பா காணப்படுகிறது. அதாவது மெய்யெழுத்துக்கள் புள்ளி பெற்றிருக்கும் என்பது இதன் பொருள்.

இதற்கு அடுத்த நூற்பா
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே
அதாவது எகரம் ஒகரம் என்னும் இரண்டு உயிர் எழுத்துக்களும் புள்ளி பெற்றிருக்கும் என்பது இதன் பொருள்.

நேரிழையார் கூந்தலிலோர் புள்ளிபெறின் நீள்மரமாம்
 நீர்நிலையோர் புள்ளிபெறின் நெருப்பாம்..
.“
என்பது தண்டியலங்கார மேற்கோள் பாடல். இதுவும் எகரம், ஒகரம் புள்ளி பெறும் என்பதைப் பொருளாகக் கொண்டது. இவ்வாறு இவ்விரு உயிர்களும் புள்ளி பெற்றமை ஏகார, ஓகாரங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே.


அன்புடன்
ஆராதி


2010/6/10 N. Ganesan <naa.g...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 4, 2010, 9:00:03 PM7/4/10
to mint...@googlegroups.com

தமிழில் துணைக் குறியீடுகள்  - 3


கணினியின் பயன்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது தேவையற்ற காலநீட்டிப்பாகத் தெரிகிறது. கரும்பலகையில் அல்லது தாளில் எழுதிக்காண்பித்து விளக்குவதுபோல் சிலவற்றை மின்மடல் வழியாக எழுதிக்காட்டினால் தெளிவாக இருக்கும் என நினைத்தேன். கணினியில் என் பயிற்சியும் அறிவும் போதாமையால் அது இப்போதைக்கு நிறைவேறாது எனத் தெரிகிறது. எனவே நேரடியாகவே தொடங்கிக் கூறவேண்டியதைச் சொல்லிவிடுவது நல்லது என்பதால் சொல்லவந்த்தைத் தொடர்ந்து சொல்லிவிடுகிறேன்.

மூன்றாவது பகுதியைத் தொடங்கும் முன் அது தெடர்பான சில தகவல்களைச் சொல்லியாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் திண்ணைப் பள்ளிகள் என்னும் கல்வி நிறுவனங்கள் நடைபெற்று வந்தன. அப்படிப்பட்ட ஒன்றில் எனது தொடக்கக் கல்வி தொடங்கியது.

அக்காலத்தில் தன் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்குவது என்பது குடும்பத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. பெரும்பாலும நடுத்தர, வசதி படைத்த குடும்பங்களில் வீட்டில் தெய்வ வழிபாட்டோடுதான் ஒவ்வொருவருடைய கல்வியும் தொடங்கப்பட்டது. நல்ல நாள் பார்த்து, அவரவர் வழிபடு தெய்வத்திற்குப் படையலிட்டுப் பெற்றோரோ, அல்லது அந்த ஊரில் உள்ள ஆசிரியரை அழைத்து வந்தோ எழுத்தைக் கற்பிப்பார்கள்.

தரையில் அல்லது இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரமுள்ள மேல் மூடியில்லாத மரப் பெட்டியில் முதலில் ஆற்று மணலைச் சம்மாகப் பரப்பி வைத்திருப்பார்கள். தெய்வ வழிபாடு முடிந்தபின் ‘அரிநமோத்து சிந்தம்‘ என்பதை ஆசிரியர் சொல்ல மூன்றுமுறை மாணவன் சொல்ல வேண்டும். பின்னர் வாக்குண்டாம்...’, ‘பாலும் தெளிதேனும்...’, ‘ வெள்ளைக் கலையுடுத்தி...முதலிய கல்வி தொடர்பான பாடல்கள் பாடப்பெறும். பின்னர் ஆசிரியர் மாணவன் கையைப் பிடித்துப் பரப்பிவைத்துள்ள ஆற்று மணலில் ‘அ‘ என்னும் எழுத்தை எழுதச் செய்வார். அதன்மேல் மாணவன் திரும்பத் திரும்ப அ  எனச் சொல்லிக்  கொண்டே எழுதுவான். இப்படித்தான் அக்காலத்தில் ஒருவரின் கல்வி தொடங்கியது.

(இதற்கு மாறாக அல்லது வேறு வகையில் கல்வி கற்பிக்கத் தொடங்கியிருந்தால் தயவு செய்து மின்தமிழ் அன்பர்கள் அதைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.)

இதில் கவனிக்க வேண்டியது கல்வியின் முதல் தொடக்கமே ‘அ‘ என்னும் எழுத்தில்தான் தொடங்கியது. தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இரண்டு முதன்மையான நூல்களிலும் அகரம்தான் நூல்தொடக்கமாக அமைந்தது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ‘எழுத்துக்களில் நான் அகரமாக இருக்கிறேன்‘ எனக் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறான். சைவர்களும் அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறியதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இப்படி இருக்கையில் கல்வியின் தொடக்கத்தை அகரத்தில் தொடங்கியதில் வியப்பேதும் இல்லை.

ஆனால் இன்றைய கல்விமுறை குழந்தை மையக் கல்வி முறை என்னும் பெயரில் இம்மரபைக் கைவிட்டுவிட்டது. குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறி ட என்னும் எழுத்தில் பாடம் கற்பிக்கத் தொடங்குகின்றனர்.

அன்புடன்

ஆராதி.




2010/6/10 ananda rasa thiruma <aara...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 4:10:01 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 ananda rasa thiruma <aara...@gmail.com>

தமிழில் துணைக் குறியீடுகள்  - 3


கணினியின் பயன்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது தேவையற்ற காலநீட்டிப்பாகத் தெரிகிறது. கரும்பலகையில் அல்லது தாளில் எழுதிக்காண்பித்து விளக்குவதுபோல் சிலவற்றை மின்மடல் வழியாக எழுதிக்காட்டினால் தெளிவாக இருக்கும் என நினைத்தேன். கணினியில் என் பயிற்சியும் அறிவும் போதாமையால் அது இப்போதைக்கு நிறைவேறாது எனத் தெரிகிறது.



கணினியில் ஏதேனும் தமிழிற்காக செய்து தர வேண்டும் எனில் சொல்லவும்.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


ananda rasa thiruma

unread,
Jul 5, 2010, 9:07:13 AM7/5/10
to mint...@googlegroups.com
திரு வினோத்
உங்கள் மடல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அ என்னும் எழுத்தை மேல் உள்ள வளைவு, கீழ் உள்ள வளைவு, நடுவில் உள்ள படுக்கைக்கோடு, இறுதியில் உள்ள குத்துக்கோடு என நான்கு பகுதியாகப் பிரித்து மின் மடலின் இடையே எழுதிக் காட்ட, அல்லது இந்நான்கு வடிவங்களைத் தனித்தனியே காட்ட வேண்டும். இயலுமா?  எனக்குத் தெரிவியுங்கள். அல்லது அவ்வாறு எழுதிக்காட்ட நான் என்ன செய்யவேண்டும்? power point எல்லாம் கோப்பாக இணைக்கப் பயன்படும். ஆனால் நான் மடலின் இடையே இவற்றைப் பயன் படுத்த வேண்டும். உதவுங்கள்.

அன்புடன்
ஆராதி


2010/7/5 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 9:13:20 AM7/5/10
to mint...@googlegroups.com
2010/7/5 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு வினோத்

உங்கள் மடல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அ

இதற்கு ஏற்கெனவே பதிலளித்துள்ளோம்.. எல்லோரும் கூறியது போல தனித்தனி படங்களாக வரைந்து அதை இடையிடையே இணைப்பது தான் தற்போதைய மின்னஞ்சலின் வரையரைக்குட்பட்ட வழிமுறை

இதில் அனிமேஷன் வேண்டும் எனில் gif format அனிமேஷனாக இணைக்கலாம்

இணையதளத்தில் எனில் Flash அனிமேஷனாக வைக்கலாம்.

படங்கள் இவ்வாறு செய்து தரவேண்டும் எனில் சொல்லுங்கள்,.

--

Geetha Sambasivam

unread,
Jul 6, 2010, 9:02:32 AM7/6/10
to mint...@googlegroups.com
தரையில் அல்லது இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரமுள்ள மேல் மூடியில்லாத மரப் பெட்டியில் முதலில் ஆற்று மணலைச் சம்மாகப் பரப்பி வைத்திருப்பார்கள். தெய்வ வழிபாடு முடிந்தபின் ‘அரிநமோத்து சிந்தம்‘ என்பதை ஆசிரியர் சொல்ல மூன்றுமுறை மாணவன் சொல்ல வேண்டும். பின்னர் வாக்குண்டாம்...’, ‘பாலும் தெளிதேனும்...’, ‘ வெள்ளைக் கலையுடுத்தி...முதலிய கல்வி தொடர்பான பாடல்கள் பாடப்பெறும். பின்னர் ஆசிரியர் மாணவன் கையைப் பிடித்துப் பரப்பிவைத்துள்ள ஆற்று மணலில் ‘அ‘ என்னும் எழுத்தை எழுதச் செய்வார். அதன்மேல் மாணவன் திரும்பத் திரும்ப அ  எனச் சொல்லிக்  கொண்டே எழுதுவான். இப்படித்தான் அக்காலத்தில் ஒருவரின் கல்வி தொடங்கியது. //

எங்கள் பிள்ளைகளுக்கும் இப்படித் தான் தொடங்கினோம். என் மகள் அவள் பெண்ணிற்கும் விஜயதசமி அன்று இப்படித் தான் தொடக்கி வைத்தாள்.

2010/7/5 ananda rasa thiruma <aara...@gmail.com>

தமிழில் துணைக் குறியீடுகள்  - 3

Nagarajan Vadivel

unread,
Jul 9, 2010, 3:05:03 AM7/9/10
to mint...@googlegroups.com
கணினியும்  எழுத்க் கற்றுக் கொடுக்கும்.  எடுத்துக்காட்டாக கீழே உள்ள இணைப்பைச் சுட்டியால் சொடுக்கவும்
http://fms.edhub.net/tutorflash.html
வலதுபுறம் உள்ள மாணவ்ர் ஆசிரியர் இடங்களில் ஆசிரியரும் மாணவ்ரும் ஒளி வடிவில் தோன்ற எழுத்துப் பலகையில் ஆசிரியரும் மாணவரும் உலகில் எங்கிருந்தாலும் இந்தத் த்ளத்தில் வந்து தமிழ் எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளலாம்.
இதன் சிறப்பே மாணவ்ரும் ஆசிரியரும் தங்கள் இல்லத்தில் இருந்தே தங்கள் கணினி மூலம் கற்றுக் கொள்ளலாம்
பேரா.நாகராசன்


2010/7/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Dr M.D.Jayabalan

unread,
Jul 10, 2010, 1:48:14 AM7/10/10
to மின்தமிழ்
என் தந்தை மறைந்த மாவண்ணா தேவராசன் ஒரு தமிழாசிரியராகப் பணியாற்றிவர்.
1950-ல் நான் சிறுவனாக இருந்தபோது என்னைப் பள்ளியில் சேர்க்கும் முன்னர்
எனக்கு அவர் தமிழை எழுதவும் படிக்கவும் --நம்மால் முடியும் என்ற --
தன்னம்பிக்கையை வளர்க்கவும் இம் முறையைத் தான் கையாண்டார். முதலில்
நேர்க்கோடுகள் மூலம் அமைந்த சொற்களை அடையாளம் காணவைத்தார்.
படம், பாடம்,பட்டம்,பயம், என. இவற்றுடன் உயிர் எழுத்துக்களையும்
தாழ்வாரத்து ‘எரவாணம்’ என்று சொல்லக்கூடிய தடித்த மரத்தில்
எழுதிவைத்தார், போகும்போது வருபோதும் அவற்றைப் பார்த்துப் பார்த்து அவை
வெகுவிரைவில் மனதில் நின்றுவிட்டது. இவ்விதமாக என் பிள்ளைகளுக்கும்
சொல்லித் தந்தேன் எனினும் முறைப்படி பள்ளியில் சேர்த்தபோது ஆசிரியர்
அகரத்தைத் தான் மணலில் எழுதிக் காட்டினார். இது முறைசார்ந்த கல்வி. அது
முறைசாராக் கல்வி.


எம்.டி.ஜெயபாலன்


On Jul 9, 12:05 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> கணினியும்  எழுத்க் கற்றுக் கொடுக்கும்.  எடுத்துக்காட்டாக கீழே உள்ள இணைப்பைச்
> சுட்டியால் சொடுக்கவும்http://fms.edhub.net/tutorflash.html
> வலதுபுறம் உள்ள மாணவ்ர் ஆசிரியர் இடங்களில் ஆசிரியரும் மாணவ்ரும் ஒளி வடிவில்
> தோன்ற எழுத்துப் பலகையில் ஆசிரியரும் மாணவரும் உலகில் எங்கிருந்தாலும் இந்தத்
> த்ளத்தில் வந்து தமிழ் எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளலாம்.
> இதன் சிறப்பே மாணவ்ரும் ஆசிரியரும் தங்கள் இல்லத்தில் இருந்தே தங்கள் கணினி
> மூலம் கற்றுக் கொள்ளலாம்
> பேரா.நாகராசன்
>

> 2010/7/6 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> > தரையில் அல்லது இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரமுள்ள மேல் மூடியில்லாத மரப்
> > பெட்டியில் முதலில் ஆற்று மணலைச் சம்மாகப் பரப்பி வைத்திருப்பார்கள். தெய்வ
> > வழிபாடு முடிந்தபின் ‘அரிநமோத்து சிந்தம்‘ என்பதை ஆசிரியர் சொல்ல மூன்றுமுறை
> > மாணவன் சொல்ல வேண்டும். பின்னர் ‘வாக்குண்டாம்...’, ‘பாலும் தெளிதேனும்...’,
> > ‘ வெள்ளைக் கலையுடுத்தி...’ முதலிய கல்வி தொடர்பான பாடல்கள் பாடப்பெறும்.
> > பின்னர் ஆசிரியர் மாணவன் கையைப் பிடித்துப் பரப்பிவைத்துள்ள ஆற்று மணலில் ‘அ‘
> > என்னும் எழுத்தை எழுதச் செய்வார். அதன்மேல் மாணவன் திரும்பத் திரும்ப அ  எனச்
> > சொல்லிக்  கொண்டே எழுதுவான். இப்படித்தான் அக்காலத்தில் ஒருவரின் கல்வி
> > தொடங்கியது. //
>
> > எங்கள் பிள்ளைகளுக்கும் இப்படித் தான் தொடங்கினோம். என் மகள் அவள்
> > பெண்ணிற்கும் விஜயதசமி அன்று இப்படித் தான் தொடக்கி வைத்தாள்.
>

> > 2010/7/5 ananda rasa thiruma <aaraa...@gmail.com>
>
> >> *தமிழில் துணைக் குறியீடுகள்** ** - **3*
>
> >> **

> >> 2010/6/10 ananda rasa thiruma <aaraa...@gmail.com>


>
> >>> திரு எம்.டி.ஜெயபாலன்
> >>> ///மெய்யெழுத்துகளுக்குத் தலைப் புள்ளி வைத்தது இரு நூறு ஆண்டுகளுக்கு
> >>> முன்னர்தான். எ-கரம், ஏ-காரம் இரண்டும் ஒரு குறியீட்டால்தான் எழுதப்பட்டு
> >>> வந்தன. மேலை அறிஞர்களின் சிந்தனையால் இப் பரிணாமம் நிகழ்ந்தது.///
>
> >>> தொல்காப்பியம் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பது அறிஞர் பலரும்
> >>> ஏற்றுக் கொண்ட கருத்து. வையாபுரி பிள்ளை அதன் காலத்தைக் கி.பி. 4ஆம் நூற்றாண்டு
> >>> என்பார். இதற்குப் பிற்பட்டதாக அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை. அதில்

> >>> “*மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்*“


> >>> என்னும் நூற்பா காணப்படுகிறது. அதாவது மெய்யெழுத்துக்கள் புள்ளி
> >>> பெற்றிருக்கும் என்பது இதன் பொருள்.
>
> >>> இதற்கு அடுத்த நூற்பா

> >>> “*எகர ஒகரத்து இயற்கையும் அற்றே*“


> >>> அதாவது எகரம் ஒகரம் என்னும் இரண்டு உயிர் எழுத்துக்களும் புள்ளி
> >>> பெற்றிருக்கும் என்பது இதன் பொருள்.
>

> >>> “*நேரிழையார் கூந்தலிலோர் புள்ளிபெறின் நீள்மரமாம்
> >>>  நீர்நிலையோர் புள்ளிபெறின் நெருப்பாம்..*.“


> >>> என்பது தண்டியலங்கார மேற்கோள் பாடல். இதுவும் எகரம், ஒகரம் புள்ளி பெறும்
> >>> என்பதைப் பொருளாகக் கொண்டது. இவ்வாறு இவ்விரு உயிர்களும் புள்ளி பெற்றமை ஏகார,
> >>> ஓகாரங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே.
>
> >>> அன்புடன்
> >>> ஆராதி
>

> >>> 2010/6/10 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>>> send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

ஆராதி

unread,
Oct 5, 2010, 8:54:05 PM10/5/10
to mint...@googlegroups.com


தமிழில் துணைக்குறியீடுகள் - 4

அன்பார்ந்த மின் தமிழ் அன்பர்களே,

நீண்ட நாளைக்குப் பிறகு உங்களுடன் தமிழில் துணைக் குறியீடுகள் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வந்துள்ளேன்.

,,, என்னும் எழுததுக்களை இரண்டு படங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு பகுதிகளாகக் கீழே பிரித்துக் கொடுத்துள்ளேன். தமிழில் உள்ள துணைக் குறியீடுகள் பெரும்பாலும் இந்த நான்கு எழுத்துக்களில் இடம் பெறும் வடிவ அமைப்புக்களைக் கொண்டே உருவாக்கப் பட்டிருப்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தமிழ்த் துணைக் குறியீடுகளின் வரிவடிவங்களை மட்டும் அன்றி இவ்வடிவங்களுக்கான இதுவரை வழக்கில் இல்லாத பெயர்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இன்றைக்கு வழங்கும் துணைக் குறியீடுகனின் பெய்ரகளில் உள்ள குறைகளையும் அறிந்துகொள்ள வழி ஏற்படும். 

முதலில் என்னும் எழுத்தில் அடங்கியுள்ள நான்கு பகுதிகளை முதல் படம் காட்டுகிறது.

t.letters4.bmp
முதல் படத்தில்
1. எண் ஒன்றில் உள்ளது அகரவடிவத்தின் மேல் பகுதி. இதன் பெயர் கொம்பு.  
2. இரண்டாம் எண்ணில் உள்ளது கீழ் வளைவு. இதன் பெயர் கீழ் விலங்கு (கீழ் வளைவு)  
3. மூன்றாம் எண்ணிற்கு உரியது நடுக்கோடு. இதன்  பெயர் படுக்கைக் கோடு.
4. நான்காம் எண்ணிற்கு உரியது நேர்க்கோடு. இதன் பெயர் குத்துக்கோடு.

இரண்டாம் படத்தில் ,,என்னும்  மூன்று எழுத்துக்களின் அடங்கியுள்ள வடிவங்கள்.

t letters5.bmp
1. முதல் எண்ணில் உள்ளது ஆகார வடிவத்தின் அடிவளைவு. இதன் பெயர் பிறைக்கோடு. (கீழ் விலங்கு அன்று)
2. இரண்டாம் எண்ணிற்கு உரியது இகரத்தின் மேல் வளைவு., இதன் பெயர் மேல் விலங்கு. (மேல் வளைவு)
3. மூன்றாம் எண்ணில் உள்ளது
, ஈகார வடிவிற்கு உரியது. புள்ளி நீக்கிய இதன் பெயர் கால்.
4. நான்காம் எண்ணில் உள்ளது, ஈகார வடிவின் உள் அமைந்த புள்ளி.                         

பெரும்பாலும் இவ்வடிவங்களை வைத்துத்தான் பிற எழுத்து வடிவங்களையும் துணைக் குறியீடுகளையும் உருவாக்கியுள்ளனர்.

...தொடரும்

(மடல் பகுதியில் படங்களை இணைக்க உதவிய மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.)


அன்புடன்
ஆராதி



2010/7/5 ananda rasa thiruma <aara...@gmail.com>

தமிழில் துணைக் குறியீடுகள்  - 3

t letters5.bmp
t.letters4.bmp

Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 6:23:48 AM10/6/10
to mint...@googlegroups.com
ஆனால் இன்றைய கல்விமுறை குழந்தை மையக் கல்வி முறை என்னும் பெயரில் இம்மரபைக் கைவிட்டுவிட்டது. குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறி ட என்னும் எழுத்தில் பாடம் கற்பிக்கத் தொடங்குகின்றனர்.
 
அதனால்தான் தற்காலக் குழந்தைகளுக்கு  அறமும் வரவில்லை, அகரமும் வரவில்லை
 
அடம்  மட்டும் வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/6 ஆராதி <aara...@gmail.com>

ஆனால் இன்றைய கல்விமுறை குழந்தை மையக் கல்வி முறை என்னும் பெயரில் இம்மரபைக் கைவிட்டுவிட்டது. குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறி ட என்னும் எழுத்தில் பாடம் கற்பிக்கத் தொடங்குகின்றனர்.



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Reply all
Reply to author
Forward
0 new messages