பூப்பறிக்கிற நோம்பி

173 views
Skip to first unread message

PazamaiPesi

unread,
Jan 17, 2016, 11:34:55 AM1/17/16
to முத்தமிழ், மின்தமிழ், vallamai, tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamil...@yahoogroups.com, tamizhs...@googlegroups.com


காப்புக்கட்டி, பெரிய நோம்பி கும்புட்டு, பட்டி நோம்பியன்னிக்கு பட்டி மெரட்டி, இன்னிக்கி மாலகோயல் போய் வந்து, மூக்கரச்சுக்கு வழுக்காம் பாறை போய் வர சாய்ங்காலம் அஞ்சு மணியாயிருச்சா. வந்து ஒரு பாட்டம் மேலுக்குத் தண்ணி வாத்து, துணிமணிக மாத்தி, அப்பத்தா குடுத்த காப்பித்தண்ணி ஒரு லோட்டாக் குடிச்சதீமு பூநோம்பிக்கு ரெடியாய்ட்டமுல்ல இப்ப??

ஊர்வாசல்ல இருக்குற பூவரச மரத்தடியில பெரிய நோம்பியன்னிக்கே மார்கழி முச்சூடும் வெச்சிக் கும்புட்ட சாணிப்புள்ளையார்களை பெரிய பெரிய மக்கிரிகள்ள போட்டு வெச்சிருவாங்க. பூ நோம்பியன்னிக்கு பொம்பளையாளுக எல்லாம் கூட்டம் கூட்டமாக் கும்மியடிச்சுட்டே போயி ஆவரம்பூவு, துண்ணூர்ப்பத்திரி, பொன்னரளின்னு, மருகுத்தழைன்னு எல்லாம் பொறிச்சுட்டு ஊர்வாசலுக்கு வர மணி இராத்திரி பத்தாகும். அப்பறம் அங்கிருந்து பாட்டுப்பாடி, கும்மியடிச்சிட்டே போய் ஊர்க்கெணறு, ஆத்துல அந்த புள்ளையார்களையெல்லாம் உட்டுட்டு வர காலீல ரெண்டு மூனு மணி ஆயிரும்.

எடைக்கிடையில வெவகாரமான பாட்டுகளும் வருமல்லோ??

கறுப்பு துணி அறிவாள்
கள்ளவழி தானறிவாள்
கணவன் சரியாய் இருந்தால்
கள்ளவழி நடப்பாளோ?

அப்பறம் ஒரு சாமிப்பாட்டு:

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

தாழை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ போலவே நம்ம சவுண்டம்மா
தலை அலங்காரம் பாருங்கம்மா

நெல்லிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
நெத்தி வரிசையை பாருங்கம்மா

பாத்சரம் மம்மா பாதசரம் – தாயே
பத்து விரலுக்கும் பாதசரம்
பத்து விரலுக்கும் பாதசரம்
இருட்டு நாட்டிலே போட்டு நடந்திட்டா
எங்கும் ஜொலித்திடும் பாதசரம்.

கோவை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பூ போலவே தாயி சவுண்டம்மா
கொண்டை அலங்காரம் பாருங்கம்மா

செரி, செரி... அல்லாம் பொறப்படுங்க.... பூப்பறிக்க பெரிய வீட்டு பொண்ணுத்தாய் வந்துருவா.... ஊர்க்கண்ணு உழுகுறதுக்கு மின்னால போயி நாம பார்த்துருலாம்.... வாங்க போலா....

உடுமலை : பூப்பறித்தல் நிகழ்ச்சிக்காக, காணும் பொங்கலன்று பெண்கள் கும்மி பாடல் பாடியாடும் வழக்கம், உடுமலை பகுதி கிராமங்களில், இன்றும் பாரம்பரியமாக தொடர்கிறது.

தைத்திருநாளை, பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுடன் விவசாயிகள் வரவேற்பதை போல், மார்கழி மாத இரவில் கும்மியாட்டம் ஆடும் பெண்கள், பொங்கல் கொண்டாட்டங்களிலும் பங்கேற்று வந்துள்ளனர். இதேபோல், களைப்பு தீருவதற்கு, நாட்டுப்புற பாடல்களை பாடியபடி, வயல்களில் வேலை செய்து வந்த நடைமுறையும் காணாமல் போய்விட்டன.எனினும், உடுமலை பகுதியில் உள்ள பல கிராமங்களில், இன்றளவும் இக்கலைகள் அழியாமல், தொடர்கிறது. நாட்டுப்புற பாடல்களை முற்றிலுமாக அழியாமல் பாதுகாப்பதில், மார்கழி மாத வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தைத்திருநாளை வரவேற்க, சலகெருது ஆட்டம், ஒயிலாட்டம் ஆடி மகிழ்கின்றனர். இதேபோல், பெண்கள் கும்மியடித்து, தங்கள் களைப்பை விரட்டுகின்றனர்.

கும்மியாட்டத்தில், வயதில் மூத்தவர் பாடலை துவக்க, பின்னால் வருபவர்கள் தொடர்ந்து பாடுகின்றனர். இந்த ஆட்டத்தில், கை அடியில் விரல் தட்டு, உள்ளங்கை தட்டு, முழுக்கை தட்டு என பல வகைகள் உள்ளன. வட்டமாக குறிப்பிட்ட இடைவெளியில் சுற்றி வரும்போது, கைகள் தட்டப்படுவதால், இசைக்கருவிகள் தேவையில்லை. கால்களில் முழுப்பாதம் தரையில் படுதல், கட்டை விரல் மட்டும் படுதல், முன்னங்கால் படுதல் என ஆட்டத்தை மாற்றியும் ஆடுகின்றனர். இடையே பெண்கள் எழுப்பும் குலவை சத்தம், ஆட்டத்தின் வேகத்தை கூட்டுகிறது.இறைவனை மட்டுமின்றி, அப்பகுதியின் வளம், நாட்டுக்காக போரிட்டு இறந்த வீரர்கள், அறுவடை பாடல்கள் அதிகளவு பாடப்படுகின்றன. கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள் உட்பட நாட்டுக்காக போரிட்ட பல வீரர்களின் வரலாற்றை பாதுகாத்த ஆவணமாகவும், கும்மி விளங்கியுள்ளது. பனிக்காலங்களில், இயற்கையாகவே உடலுக்கு
உஷ்ணம் கிடைக்கவும், நரம்புகள், தசைகளுக்கு உடற்பயிற்சியாகவும், இந்த ஆட்டம் அமைகிறது.

மார்கழி மாதம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டின் முன் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அரசாணிப்பூவால் அலங்கரித்து வழிபடுகின்றனர். மாதம் முழுவதும் சேகரிக்கப்பட்ட பூ மற்றும் உருவத்தை பொதுக்கிணற்றில் கரைக்கின்றனர்.இதற்காக, விளைநிலங்களுக்கு சென்று ஆவாரம் பூக்களை பறிப்பது, பூப்பறித்தல் நோன்பு எனப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பெண்கள் கும்மியாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமங்கள் வரை பரவியுள்ள "டிவி' மோகத்துக்கு மத்தியில், உடுமலை பகுதி மக்கள், பாரம்பரிய கலைகளை இன்றும் போற்றி வருவது பெருமைக்குரிய, பாராட்டுக்குரிய செயலாகும். நன்றி: தினமலர்



-பழமைபேசி.

PazamaiPesi

unread,
Jan 17, 2016, 12:38:21 PM1/17/16
to முத்தமிழ், மின்தமிழ், vallamai, tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamil...@yahoogroups.com, tamizhs...@googlegroups.com

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

0o0o0o0o0o0o0o0o0o

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க..... அண்ணே வாங்க
அட ஏங்க?....?
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அப்படி போடுங்க...

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க..... அண்ணே வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

காரமடை கன்னிப்பொன்னுதாங்க
ஐயா காரமடை கன்னிப்பொன்னுதாங்க
எங்க கண்ணீர் பட்டா காரம் தூரம்தாங்க
அரேரேரேஏஏஏஏ

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

சேத்து வைக்கிற ஆசைதான் 
தீத்து வைக்க வேணுமா
தேக்கி வைக்கிற ஆசைதான் 
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா......ஆமா..
தேக்கி வைக்கிற ஆசைதான் 
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா...

பூப்பறிக்க்கோனும் தினம் தினம் பூப்பற்க்கோனும்
பூத்திருக்கிற மனசுக்குள்ள நானிருக்கோனும்

அப்படியொரு எண்ணம் இல்ல போஙக
நாங்க ஆக்க வந்தா சொல்லியனுப்புறேன் வாங்க

ஹொய்... ஹொய்ய்ய்ய்ய்ய்

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. வாங்க
ஐயா வாங்க.....வாங்க
அண்ணே வாங்க.. வாஆஆங்க...
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அட போங்க...

படம்:காந்தி பிறந்த மண்
நடிகர்கள்:விஜயகாந்த்,ரவளி,ரேவதி மேனன்,விவேக்
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி மற்றும் குழுவினர்
இயக்குநர்:ஆர்.சுந்தரராஜன்
வருடம்:1995


https://youtu.be/PaWFq1fiYOc

தேமொழி

unread,
Jan 18, 2016, 12:04:47 AM1/18/16
to மின்தமிழ்
நான் சிறுவயதில் 'பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்'
என்ற விளையாட்டு மட்டுமே விளையாடியுள்ளேன்.

பூப்பறிக்கிற நோம்பி பற்றி சொன்னதற்கு நன்றி.


..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages