பாரதியின் "கண்ணன்" பாட்டு!

687 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Sep 10, 2008, 6:34:52 PM9/10/08
to Min Thamizh
இன்று(11/09/2008) மகாகவி பாரதியாரின் 87வது நினைவு நாள்
 
பாரதியின் கண்ணன் பாட்டு கவிதையழகையும், பண்ணழகையும் கொண்டது என்று பல்லோராலும் பாராட்டப் பெற்றது.

தேசிய எழுச்சியின் காலகட்டத்தில் பாரதியின் தேச பக்திப் பாடல்கள் தேசிய இலக்கியத்தில் தனித்துவம் பெற்றமை போன்றே, பக்திச் சிற்றிலக்கியத்தில் அவர் இயற்றிய "கண்ணன் பாட்டு"ம் ஒப்புயர்வற்று விளங்குகிறது.

இந்திய நாட்டு விடுதலைக்காகப் போர்ப் பரணிப் பாடல்களை இயற்றிய காலப் பகுதியிலேயே பாரத தேசத்தின் குல தெய்வமாகிய கண்ணபிரான் பேரில் பாரதி பக்தி ஈடுபாடு கொண்டு விட்டவர்.

 
ஆரிய தரிசனம் - ஓர் கனவு என்னும் பாடலில் இடம் பெற்றுள்ள,
  • கிருஷ்ணார்ஜுன தரிசனம்
  • ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்
  • ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஸ்துதி

ஆகிய பாடல்களே தக்க சான்றுகள். வேறு பல பாடல்களும் உண்டு.

கண்ணன் பேரில் தமக்குள்ள ஆழ்ந்த பக்தியைப் பின்னிட்டுப் பாரதியே "வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி மறவாத மனத்தான்" என்று பெருமையாகக் கூறிக் கொண்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 
பாரதி தாம் இயற்றிய "கண்ணன் பாட்டு"க்களைக்
  • கனவு
  • குயில்
  • பாஞ்சாலி சபதம்

ஆகியன போன்று திட்டமிட்டு எழுதினார் என்று கருதுவதற்கு இயலவில்லை.

ஆரம்ப காலங்களில், அவ்வப்போது கண்ணன்பேரில் தனித்தனிப் பாடல்களாக இயற்றி, பத்திரிகைகளில் பிரசுரத்திற்கு அனுப்பியவர், பாரதி. சில சந்தர்ப்பங்களில் எழுதிய கண்ணன் பேரிலான தனிப்பாடல்களில் ஒருசில கையெழுத்து வடிவிலேயே நின்றுவிட்டன என்பதும் உண்மை.

"கண்ணன் - என் தாய்" என்ற பாடல் 1913ம் ஆண்டு அக்டோபர் மாதத்திய ஞானபாநு இதழில் வெளிவந்தது ஆகும். இந்தப் பாடல் கண்ணன் பாட்டு நூல் தொகுதியுள் இரண்டாம் பாடலாக இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

20-3-1916ம் தேதிய சுதேசமித்திரன் பத்திரிகையில் "கண்ணம்மா - என் குழந்தை" என்ற பாடல் பிரசுரமானது. இந்தப் பாடல் நூலில் எட்டாம் பாடலாக இடம்பெற்றுள்ளது. "கண்ணன் என் காதலன்" (உறக்கமும் விழிப்பும்) பாடலின் 4ம் செய்யுளில் 6 வரிகளும், 5ம் செய்யுளும், கண்ணன் - என் காதலன் (ஆசை முகம் மறந்துபோச்சே), "கண்ணம்மா - என் காதலி" (பாயுமொளி நீ யெனக்கு) ஆகிய பாடல்களும் கையெழுத்து வடிவிலே காணக்கிடக்கின்றன.

இந்தப் பாடல்களும் தற்கால வழக்கில் உள்ள பதிப்புகளில் முறையே 11ம் பாடலாகவும், 14ம் பாடலாகவும், 21ம் பாடலாகவும் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

இந்தச் செய்திகள் ஒருபுறமிருக்க, "My Journal of Thoughts & Deeds" என்றுள்ள பகுதியில் "List of works & fragments to be completed" என்ற தலைப்பில் கண்ணன், கண்ணன் in English என எழுதியுள்ள குறிப்புகளின் தன்மைகளையும் நினைவில் கொள்ளவேண்டியதும் அவசியமாகின்றது.

கண்ணன் என்று குறிப்பிட்டு இருப்பதால், மேற்கொண்டு கண்ணன் பேரில் பாட்டுக்கள் எழுதத் திட்டமிட்டிருந்தார் பாரதி என்பது தெரிகிறது. கண்ணன் in English என்று குறித்துள்ளதால், கண்ணன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் எண்ணி இருந்தார் என்று கருதவும் இடமளிக்கிறது. அந்த வகையில், ஞானபாநுவில் வெளிவந்த "கண்ணன் - என் தாய்" என்ற பாடல் Krishna - My Mother எனவும், கண்ணம்மா - என் காதலி என்ற பாடல் "In Each Others Arms" எனவும் பாரதியே மொழிபெயர்ப்புச் செய்து அனுப்பியமை "New India" பத்திரிகை இதழ்களில் முறையே 26-6-1915 மற்றும் 11-9-1915 ஆகிய தேதிகளில் பிரசுரமாகி உள்ளன.

ஆக, தனித்தனிப் பாடல்களாகக் கண்ணன் பேரில் பாடல்கள் புனைந்து பரவசப்பட்டவர் பாரதி. காலப்போக்கில் கண்ணனுடைய செயல்களும், திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பரிபூரணமாக ஆகர்ஷிக்கவே கண்ணன் பேரிலான பாட்டுக்களை நூலாக்கத்திற்கான முறையில் அருளிச் செய்தார் என்று கொள்வதே பொருத்தமானது. பாரதியின் பெருமையையும், புகழையும் பேசி வருவதில் "தினமணி"க்கென்று தனிச் சிறப்பு உண்டு.

 
பத்திரிகை தோற்றுவிக்கப்பட்ட நாள்தொட்டே பாரதிக்காகத் "தினமணி" ஆற்றிவரும் அரும் பணியைத் தமிழ் உலகம் நன்கு அறியும். அந்த வகையில், 1938ம் வருட "தினமணி" வருஷ மலரில் குவளை கிருஷ்ணாமாச்சாரியார் - புனைபெயர் குவளையூர் கண்ணன் -எழுதியிருந்த "எனது முதல் சந்திப்பு" என்ற கட்டுரையின் இடையே தரப்பட்டிருந்த மகாகவியின் "கண்ணன் பாட்"டின் ஒரு பகுதியை அவரது கையெழுத்து வடிவிலேயே 70 ஆண்டுகளுக்குப் பின்னர் மீளவும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
சீனி. விசுவநாதன்
 
நன்றி: தினமணி

Gokulan

unread,
Sep 10, 2008, 6:49:33 PM9/10/08
to minT...@googlegroups.com
அன்பு கண்ணன்,
 
கட்டுரை பகிர்வுக்கு நன்றி..
 
பாரதி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது கண்ணன் பாட்டு.. பிரபந்தம் போலே இதையும் மனமுருகி வாசிக்க எனக்குப்பிடிக்கும்...
 

2008/9/10 Kannan Natarajan <thar...@gmail.com>
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/

Narayanan Kannan

unread,
Sep 10, 2008, 7:52:02 PM9/10/08
to minT...@googlegroups.com
2008/9/11 Kannan Natarajan <thar...@gmail.com>:

> பத்திரிகை தோற்றுவிக்கப்பட்ட நாள்தொட்டே பாரதிக்காகத் "தினமணி" ஆற்றிவரும்
> அரும் பணியைத் தமிழ் உலகம் நன்கு அறியும். அந்த வகையில், 1938ம் வருட "தினமணி"
> வருஷ மலரில் குவளை கிருஷ்ணாமாச்சாரியார் - புனைபெயர் குவளையூர் கண்ணன்
> -எழுதியிருந்த "எனது முதல் சந்திப்பு" என்ற கட்டுரையின் இடையே தரப்பட்டிருந்த
> மகாகவியின் "கண்ணன் பாட்"டின் ஒரு பகுதியை அவரது கையெழுத்து வடிவிலேயே 70
> ஆண்டுகளுக்குப் பின்னர் மீளவும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


அடடா! எங்கே அந்த கையெழுத்து மீள்பிரசுரம்?

அன்னை விஜயபாரதியை "பாரதியின் பேத்தி" என்று அறிமுகப்படுத்தியவுடன் கை
குலுக்கவில்லை. கையை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டேன். நமக்கு பாரதியை
சேவிக்கும் பாக்கியமில்லை. அவரது வழிவரும் பேத்தியை சேவிக்கலாம் அல்லவா!
(பாவம் அவர் இப்போது எவ்வளவு மனத்துயரில் இருப்பார் ;-(

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages