வைரமுத்துவின் தினமணி ஆண்டாள் பற்றிய கட்டுரை

783 views
Skip to first unread message

Suba

unread,
Jan 18, 2018, 3:52:16 PM1/18/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram


செந்தில் பரிதி பதிவிலிருந்து.




தமிழை ஆண்டாள் - 
                கவிஞர் வைரமுத்து

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. 

புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. 
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; 
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; 
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. 
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. 
"இன்னுமா உறக்கம்! 
எல்லே இளங்கிளியே! 
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. 
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. 

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். 
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. 
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. 

கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. 
"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு. 

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், 
திங்கள் மும்மாரி பெய்யும்; 
நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; 
வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், 
ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்' 
- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது 
அல்லது 
திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது. 

இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. 
அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. 

கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது. 

எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். 

எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். 

"இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.

"இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.

வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. 

இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; 
கொண்டு செலுத்தியது. 

வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று. 

"மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது. 
கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், 
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் -
பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும் 
உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம் (புறம் 58) 
- என்று பாடுகிறார்.

கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் 
"தெய்வம்' என்கிறார். 
சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.
தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; 
பழகிய பொருள். 
கடவுள் என்பது பரம்பொருள்; 
பழகாத பொருள். 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்'. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்; 

கடவுள் என்பது வழிபடுபொருள். 
அது எட்ட முடியாதது. 
எல்லார்க்கும் வாய்க்காதது. 
அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்; 
கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். 
இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன. 
ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது? 

குரு பரம்பரைக் குறிப்புகள் கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. 
"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற திருப்பாவை வரிகொண்டு 
கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.

ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.
பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? 

மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. 
பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; 
தெய்வக் காதலில் திளைக்கிறாள்.
தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார். 

அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. 
எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார். 

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் 
"அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்' என்று சொல்லி மறைகிறார். 

கோதையின் பெருமை கண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.
மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது. 
மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. 
"மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!' 
என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.

"உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்கிறாள். "மாலிருஞ்சோலை 
எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்' 
என்று உறுதி உரைக்கிறாள்.

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. 
இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். 

ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், 
உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே' 
என்ற குலசேகர ஆழ்வார் குரலில், 
ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு 

ஞானத் தமிழ் புரிந்த நான்
என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.

வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது. 
ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்; 
மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம். 

அது கட்டற்ற காட்டாறு. 
இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள் 
"ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்; 
ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்' 
என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.

ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. 
நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள். 

அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.

"மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்' 
என்று கனவு கண்டாள். 
"அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள். 
அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. 
தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று. 

கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள். 

"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்; 
செய்யா தனசெய்யோம்; 
தீக்குறளை சென்றோதோம்' 
-என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள். 

ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?

கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?

உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். 
"குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். 
மெத்தென்ற பஞ்சசயனமாவது 
தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள். 

மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்'
என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. 

இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.
கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது 
அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன. 
மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். 
கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். 
எவரிடம் கேட்பது? 

அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். 
ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். 
அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள். 
"சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான். 
எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?' என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது. 
ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.

"காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை' என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது. 
"என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ' என்ற பொருளில் இயங்கும் "முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்' என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.
கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட 
"கன்று முண்ணாது கலத்தினும் படாது' என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான். 
ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். 
"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்' 
என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். 
கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது. 
ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. "ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்; 
உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்' 
என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள், 
பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் "திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்' 
என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க, 
போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர, 
பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள். 
திருவரங்கக் கோயில் புகுந்து, 
வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்; 
ஐக்கியமுற்றாள். 
இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. 
மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; 
கண்ணனும் ராதையும் போல. 
ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால், 
அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.
"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்' 
- என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த 
"கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.
ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், 
ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள். 
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட 
Indian Movement: some aspects of dissent, protest and reform  
என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. 
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். 
ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.
சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.

"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். 
தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். 
இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று' 
என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.
ஒன்றையே நினை 
- ஒருமுகப்படு 
- ஒப்புக்கொடு 
- நம்பு 
- கருதியதில் உறுதிகொள் 
- வினைப்படு 

வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று. 
தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், 
மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச் 
செல்லும் அருஞ்செய்தி இதுதான்.

செல்வன்

unread,
Jan 18, 2018, 4:43:29 PM1/18/18
to mintamil
நன்றாக எழுதியுள்ளார்.

ஆனால் பக்தர்கள் இருக்கும் சபையில் பேசும் உரையாடல் இதுவல்ல. வலைபதிவுகளில், ஆய்வரங்குகளில் எழுதக்கூடிய பொருத்தமான கட்டுரை.

"...
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச் 
செல்லும் அருஞ்செய்தி இதுதான்..."


"....Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. 
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். 
ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்...."


-------
பக்தர்கள் சபையில் போய் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள் என அவருக்கே தெரிந்த கருத்தை சொல்வதும், சமய மறுப்பாளர்கள் மட்டுமே ஏற்கும் கருத்தை ஆண்டாள் பக்தர்களிடமும் போய் சொல்லுவது பொருத்தமானதுதானா?







--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

N. Ganesan

unread,
Jan 18, 2018, 11:57:17 PM1/18/18
to மின்தமிழ், vallamai
ஆண்டாள் பற்றிய ஆழமான கட்டுரையை ஏர் மகாராசன் எழுதியுள்ளார்:

வைரமுத்து ஆய்வுக்கட்டுரை:

--

வேந்தன் அரசு

unread,
Jan 19, 2018, 1:24:43 AM1/19/18
to vallamai, மின்தமிழ்
வைரமுத்து இந்தியான பல்கலைப்பற்றிச்சொல்லியது முழுபொய் அல்ல. இந்தியானா பல்கலை சுபாஷ் சந்திர மாலிக்'கின் நூலை முதலில் வெளியீட்டது. அதை கூகுள் இலக்க நூலாக்கியுள்ளது" இதை கூகுள் தேடலில் கண்டேண்.

Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform ...
https://books.google.com/.../about/Indian_Movements.html...
Title, Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform Studies in Indian and Asian civilizations. Editor, Subhash Chandra Malik. Publisher, Indian Institute of Advanced Study, 1978. Original from, Indiana University. Digitized, Mar 11, 2009. Length, 296 pages. Export Citation, BiBTeX EndNote


18 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:56 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jan 19, 2018, 1:42:08 AM1/19/18
to மின்தமிழ், vallamai
“கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஒரு திறந்த மடல்” - சு. ராசேந்திரன்

“மொழி காத்தான் சாமி” என்ற தலைப்பில் உ.வே.சா பற்றி தாங்கள் உரையாற்றுவதற்கு முன்பே தினமணியின் நோக்கத்தைப்பற்றி எனது முகநூல் பக்கத்தில் எச்சரித்திருந்தேன். மேலும் அந்த கட்டுரைக்கு “மொழி காத்தான் சாமி” என்று தலைப்பிட்டு இருந்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். அடுத்து தாங்கள் வாசித்த ‘கருமூலம் கண்ட திருமூலர்’ என்ற கட்டுரையில், திருமூலர் உடலில் இருந்தவர் ஒரு சிவயோகி என்ற கருத்தை மறுத்து திருமூலர் ஒரு இடையர்தான் என்று நிறுவியதற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தால் கடவுளாக தங்களால் உருவாக்கப்பட்ட ஆயர் குல கண்ணனைப்பற்றி கேள்விகள் எழும். அல்லது ஒரு சமூகத்தின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் என்று வாளாயிருந்து விட்டனரோ, என்னவோ?. ஆனால் கடந்த 8ந் தேதி அன்று ஆண்டாள் கட்டுரையை படித்ததும் எதிர்ப்பு வருமென்ற எனது கணிப்பு பொய்க்கவில்லை..

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் இருந்த, அந்த காலத்திலேயே ‘ஆண்டாள்’ வேண்டப்படாத பெண் குழந்தையாகி துளசி வனத்தில் வீசியெறியப்பட்டாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட அவள், பிற்காலத்தில் தனது பிறப்பின் ரகசியத்தை அறிந்து வாழ்க்கையின் மீதே வெறுப்படைந்தாள். பெண்களுக்கு எதிரான கொடுந்தளைகளை எண்ணி மனதிற்குள் குமைந்த அவள், அதில் இருந்து விடுதலை பெற, ‘மானிடர்க்கு வாழ்க்கைப்படேன்’ என்று சூளுரைத்தாள். . கண்ணனையே காதலனாக, கணவனாக கைத்தலம் பற்றி, நாள்தோறும் அவனுக்கு பாசுரங்களால் அமுதூட்டி சூடிக்கொடுத்த சுடர் கொடியானாள். அவளை எந்த அக்கரகாரமும், அரண்மனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இரத்தமும் சதையுமாக அரங்கனுடன் கலந்தாள் என்பதுடன் அவள் வாழ்க்கை முற்றுப்பெற்று விடுகிறது. ஆண்டாள் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தாங்கள் மேற்கோள் காட்டியதற்காக பொங்கும் இந்துத்துவாக்களிடம் மன்னிப்பு கோருவதில் தயக்கமில்லை என்கிறது தினமணி. இதன் மூலம் தங்களை சிறுமைப்படுத்திவிட்ட தினமணிக்காக இனியும் கட்டுரை வாசிக்கப் போகிறீர்களா? எண்ணியல் முதல் வானியல் வரை உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும், ஆரியர்களே மூலவர்கள் என பொய்யை புனைந்துரைக்கும் தினமணிக்கு வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் நோக்கமே தவிர, தமிழ் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட பற்றல்ல. தமிழ்த் தாயின் தவப்புதல்வனாகவும் மூத்தக் கவிஞனாகவும் வலம்வரும் தாங்கள், இனியாவது தினமணிக்காக வாசிப்பதை நிறுத்திவிட்டு தமிழ் மக்களுக்காக வாசியுங்கள். இடம், நாள், பொழுது மூன்றையும் கூறுங்கள்; உங்கள் வாசிப்பை கேட்க இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடுவார்கள்; உறுதி.

சு. இராசேந்திரன்
பத்திரிகையாளர்

Singanenjam Sambandam

unread,
Jan 19, 2018, 6:18:42 AM1/19/18
to mint...@googlegroups.com
தமிழ் இனிக்கிறது வைரமுத்துவின் வரிகளில் ........

சில இடங்களில் கண்ணதாசன் வந்து மறைகிறார்.

தன்மீது வீசப்படும் சாணியையும்  சகதியையும் எருவாக்கிக்கொண்டு 

வாழ்க வைரமுத்து.. 

Chandrasekaran

unread,
Jan 19, 2018, 9:06:55 AM1/19/18
to minTamil digest சந்தாதாரர்கள்
Please delete this whole session of crap

J. Chandrasekaran

Give the world clean water & Sanitation

Visit www.terafilwater.in to provide clean drinking water to Rural India

Visit www.toiletforall.org to provide clean toilets for all Indians!

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

தேமொழி

unread,
Jan 19, 2018, 9:38:05 AM1/19/18
to mint...@googlegroups.com
மிக அருமையான அறிவுரை, வைரமுத்து நல்லதொரு  முடிவெடுக்கட்டும். 
கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொன்னதும் தமிழிலக்கியமே.
‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’  என்று தன் புலமையின் பெருமையுணர்ந்து  செருக்குடன் வாழ்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதும் தமிழ்  கூறும் வரலாறு. 

N. Ganesan

unread,
Jan 19, 2018, 9:53:55 AM1/19/18
to மின்தமிழ், vallamai, guna thamizh, மு இளங்கோவன், George Hart
2018-01-19 6:38 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மிக அருமையான அறிவுரை, வைரமுத்து நல்லதொரு  முடிவெடுக்கட்டும். 
கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொன்னதும் தமிழிலக்கியமே.
‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’  என்று தன புலமையில் பெருமையுணர்ந்து  செருக்குடன் வாழ்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதும் தமிழ்  கூறும் வரலாறு. 


ஔவை பாட்டு - தமிழ்ப் பேரா. குணசீலன் பதிவு:
 
தமிழ் இலக்கியங்களை வரலாற்றுப் பின்னணியுடன் வைரமுத்து போன்றோர் விளக்கி நூல்கள் எழுதிடவேண்டும்.
யுட்யூப் போன்றவற்றால் இளைஞர்களுக்கு நவீனப் பல்கலைகளில் History of Religion துறைகள் இயங்குவதை அறிந்துகொள்ளச் செய்ய இயலும்.
வைரமுத்து போன்றோர் இந்த ஆய்வுத்துறைகளை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்திடல் வேண்டும்.
ராஜாஜி தான் முதலில் ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆங்கிலக் கட்டுரை எழுதியவர். அதற்கு முன் வட்டத்தொட்டியில்
பேசப்பட்டது தான் இது (டிகேசி, ராஜாஜி, ...). பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் ராஜாஜி ஆண்டாள் பற்றிக் கூறிய கருத்து போலவே,
வரலாற்றுப் பின்னணியுடன் சங்க கால சமயம், சமூகம் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். 

ஆண்டாளை பெரியாழ்வாரின் மனோபுத்ரி என்பர் ராஜாஜி, டிகேசி போன்றோர். 10 ஆழ்வார் தான் முதலில். ஆண்டாள், மதுரகவி பின்னர்
சேர்க்கப்பட்டனர்.

ஆழ்தல் என்ற வினைச்சொல் தரும் ஆண்டி (உ-ம்: கொங்குநாட்டின் தலைமை ஸ்தலம் பழனியில் நிற்கும்  தண்டாயுதபாணி), ஆண்டாள், ...
இவை தியானத்தில் ஆழ்தலால் ஏற்படும் பெயர்கள். கவராண்டி = வஜ்ரபாணி, கொத்தாண்டி = பத்மபாணி, ... போதிசத்துவர்கள்.
விருமாண்டி = பிரமா (தியானக்கோலம்) ... ஆண்டாள் = கிருஷ்ண பக்தியிலே ஆழ்ந்தவள்.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் கோதா ஸ்துதி:
கேட்டு மகிழ்க.

'தேவதாசி’ சொல் பற்றி வைரமுத்து குறிப்பிடுவதில் பிழை யுள்ளது. பார்ப்போம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Jan 19, 2018, 10:10:11 AM1/19/18
to மின்தமிழ்


On Friday, January 19, 2018 at 6:53:55 AM UTC-8, N. Ganesan wrote:


2018-01-19 6:38 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மிக அருமையான அறிவுரை, வைரமுத்து நல்லதொரு  முடிவெடுக்கட்டும். 
கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொன்னதும் தமிழிலக்கியமே.
‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’  என்று தன புலமையில் பெருமையுணர்ந்து  செருக்குடன் வாழ்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதும் தமிழ்  கூறும் வரலாறு. 


ஔவை பாட்டு - தமிழ்ப் பேரா. குணசீலன் பதிவு:
 
தமிழ் இலக்கியங்களை வரலாற்றுப் பின்னணியுடன் வைரமுத்து போன்றோர் விளக்கி நூல்கள் எழுதிடவேண்டும்.
யுட்யூப் போன்றவற்றால் இளைஞர்களுக்கு நவீனப் பல்கலைகளில் History of Religion துறைகள் இயங்குவதை அறிந்துகொள்ளச் செய்ய இயலும்.
வைரமுத்து போன்றோர் இந்த ஆய்வுத்துறைகளை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்திடல் வேண்டும்.
ராஜாஜி தான் முதலில் ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்.

///ராஜாஜி தான் முதலில் ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்///

ராஜாஜி எழுதிய  கட்டுரை உங்கள் நூலகத்தில் இருந்தால் கொஞ்சம் பகிருங்களேன் திரு. கணேசன். 

ராஜாஜி குறித்த ஆண்டாள் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம் என்ற ஆய்வு மட்டுமென்ன,    ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை என்று ஆய்வுகள் சொல்வதை ஆய்வென்று ஒதுக்கித் தள்ளும் மனம் உள்ளவர்களாகத்தான் 
 "ஆன்மீக"  மக்கள் "இதுநாள்வரை" இருந்தார்கள். 

N. Ganesan

unread,
Jan 19, 2018, 10:20:06 AM1/19/18
to மின்தமிழ்
2018-01-19 7:10 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, January 19, 2018 at 6:53:55 AM UTC-8, N. Ganesan wrote:


2018-01-19 6:38 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மிக அருமையான அறிவுரை, வைரமுத்து நல்லதொரு  முடிவெடுக்கட்டும். 
கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொன்னதும் தமிழிலக்கியமே.
‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’  என்று தன புலமையில் பெருமையுணர்ந்து  செருக்குடன் வாழ்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதும் தமிழ்  கூறும் வரலாறு. 


ஔவை பாட்டு - தமிழ்ப் பேரா. குணசீலன் பதிவு:
 
தமிழ் இலக்கியங்களை வரலாற்றுப் பின்னணியுடன் வைரமுத்து போன்றோர் விளக்கி நூல்கள் எழுதிடவேண்டும்.
யுட்யூப் போன்றவற்றால் இளைஞர்களுக்கு நவீனப் பல்கலைகளில் History of Religion துறைகள் இயங்குவதை அறிந்துகொள்ளச் செய்ய இயலும்.
வைரமுத்து போன்றோர் இந்த ஆய்வுத்துறைகளை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்திடல் வேண்டும்.
ராஜாஜி தான் முதலில் ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்.

///ராஜாஜி தான் முதலில் ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்///

ராஜாஜி எழுதிய  கட்டுரை உங்கள் நூலகத்தில் இருந்தால் கொஞ்சம் பகிருங்களேன் திரு. கணேசன். 

என்னிடம் உண்டு. எங்கு என்று தேட வேண்டும். திரிவேணி என்ற ஆங்கிலப் பத்திரிகை (சென்னை, தெலுங்குதேசத்தார் நடத்தியது).
இணையத்திலும் பல காலம் அக் கட்டுரை இருந்தது. இப்பொழுது ‘பே வால்’ பின்னாடி என நினைக்கிறேன்.

NG
 

பழமைபேசி

unread,
Jan 19, 2018, 5:28:20 PM1/19/18
to மின்தமிழ்
//பக்தர்கள் சபையில் போய் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள் என அவருக்கே தெரிந்த கருத்தை சொல்வதும், சமய மறுப்பாளர்கள் மட்டுமே ஏற்கும் கருத்தை ஆண்டாள் பக்தர்களிடமும் போய் சொல்லுவது பொருத்தமானதுதானா?//

வெற்றித்தமிழர் பேரவைக் கூட்டம் அது.

//சமய மறுப்பாளர்கள் மட்டுமே//
ஆணாதிக்க எதிர்ப்பாளர்களை டீல்ல வுட்டாரு நம்ப அண்ணாச்சி. இப்படித்தான் அவரவர்க்கு வேண்டியதை, அவரவர்க்கு வேண்டிய வண்ணம்..... யாரோ ஆட்டுவிக்கிறாங்க.... நாமல்லாம் ஆடுறோம்!! ஆட்றா ராமா ஆட்றா ராமா!!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

செல்வன்

unread,
Jan 19, 2018, 5:52:54 PM1/19/18
to mintamil
2018-01-19 16:28 GMT-06:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
//பக்தர்கள் சபையில் போய் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள் என அவருக்கே தெரிந்த கருத்தை சொல்வதும், சமய மறுப்பாளர்கள் மட்டுமே ஏற்கும் கருத்தை ஆண்டாள் பக்தர்களிடமும் போய் சொல்லுவது பொருத்தமானதுதானா?//

வெற்றித்தமிழர் பேரவைக் கூட்டம் அது.



Tamil poet and lyricist Vairamuthu found himself embroiled in a controversy after a speech he gave was published under the title 'Tamizhai Aandal' in Dinamani.

Vairamuthu gave the speech at the Srivalliputhur Andal Temple during a discussion on Andal, an Alvar saint. 


 https://www.thenewsminute.com/article/poet-vairamuthu-lands-controversy-speech-andal-expresses-regret-74443



//சமய மறுப்பாளர்கள் மட்டுமே//
ஆணாதிக்க எதிர்ப்பாளர்களை டீல்ல வுட்டாரு நம்ப அண்ணாச்சி. இப்படித்தான் அவரவர்க்கு வேண்டியதை, அவரவர்க்கு வேண்டிய வண்ணம்..... யாரோ ஆட்டுவிக்கிறாங்க.... நாமல்லாம் ஆடுறோம்!! ஆட்றா ராமா ஆட்றா ராமா!!

வைரமுத்து ஆணாதிக்க எதிர்பாளரு...ரைட்டு..நம்பிட்டோம்..வேணாம் அண்னாச்சி..காமடி பண்ணாதீங்க..முடியல.

தேமொழி

unread,
Jan 19, 2018, 6:48:26 PM1/19/18
to mint...@googlegroups.com


On Friday, January 19, 2018 at 2:52:54 PM UTC-8, செல்வன் wrote:


2018-01-19 16:28 GMT-06:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
//பக்தர்கள் சபையில் போய் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள் என அவருக்கே தெரிந்த கருத்தை சொல்வதும், சமய மறுப்பாளர்கள் மட்டுமே ஏற்கும் கருத்தை ஆண்டாள் பக்தர்களிடமும் போய் சொல்லுவது பொருத்தமானதுதானா?//

வெற்றித்தமிழர் பேரவைக் கூட்டம் அது.



Tamil poet and lyricist Vairamuthu found himself embroiled in a controversy after a speech he gave was published under the title 'Tamizhai Aandal' in Dinamani.

Vairamuthu gave the speech at the Srivalliputhur Andal Temple during a discussion on Andal, an Alvar saint. 


 https://www.thenewsminute.com/article/poet-vairamuthu-lands-controversy-speech-andal-expresses-regret-74443




நான் வைரமுத்துவின்  பேச்சைக் காணொளியில் பார்த்த பொழுது, நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஏதோ ஒரு திருமண அரங்கம் என்பதாகப் புலப்பட்டது. இது பின்னால் இருந்த சுவரொட்டிச் செய்தியில் இருந்து நான்  புரிந்து கொண்டது. அதாகப்பட்டது, அந்தச் சொற்பொழிவு ஒரு  கதா காலட்சேப நிகழ்ச்சி அல்ல.   

பழமைபேசி

unread,
Jan 19, 2018, 6:57:37 PM1/19/18
to மின்தமிழ்
ஆரமிச்சிட்டார்யா.... கூடுவிட்டு கூடு பாயுறதை.... இஃகிஃகி.

Geetha Sambasivam

unread,
Jan 19, 2018, 7:39:18 PM1/19/18
to மின்தமிழ்
இந்த http://www.ibiblio.org/sripedia/ramanuja/magazine/RD_0103_online_vers.pdf சுட்டியில் ராஜாஜி அவ்வாறு கருதியதைச் சுட்டுகிறார்கள். (3-ம் பக்கத்தில் காணலாம்).

N. Ganesan

unread,
Jan 20, 2018, 2:24:17 AM1/20/18
to மின்தமிழ், vallamai

ஆண்டாள் புகழ்பாடியது தவறா? - வைரமுத்து

Suba

unread,
Jan 20, 2018, 4:33:09 AM1/20/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2018-01-20 8:23 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஆண்டாள் புகழ்பாடியது தவறா? - வைரமுத்து


​வைரமுத்து இப்பதிவில் (வீடியோ)  முன்வைக்கும் தன் கருத்து தொடர்பாக என் இரு கருத்துக்கள்

1. ​தேவதாசி என்ற சொல்பயன்பாட்டில் தேவ என்பதை கத்தரித்து விட்டு தாசி என்பதை வைத்து தான் ஆண்டாளை தவறாகச் சித்தரித்து விட்டதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள் என்கின்றார். உண்மை.  அதிலும் பா.ராகவனின் எழுத்து தோற்றுவிக்காத வெறுப்பலையை இந்தச் சொல் தேவையற்ற வகையில் எழுப்பியிருப்பது தான் மிகப் பெரிய கேள்வி.  இந்த வெறுப்பு, போராட்டம் என்பன எல்லாமே தேவையற்றவை.

2. வைரமுத்து குறிப்பிடுவது போல தேவதாசி என்பது உயர்குலப் பெண்களில் கடவுளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்களுக்கு  வழங்கப்பட்ட அடையாளம் என்பது தவறான கருத்து. ஏனெனில் தேவதாசியாக கோயிலில் பணிசெய்த பெண்டில் மூன்று வகைப்படுவர்.
-தானே இறைவனுக்காக தன்னை வலிந்து ஒப்படைத்துக் கொண்ட பெண்கள்
-கோயிலுக்கு வலுக்கட்டாயமாக ஒப்படைக்கப்பட்ட பெண்கள். 
-பெற்றோரால் கடன் சுமையை தாங்க முடியாதபோது தங்கள் குழந்தைகளை அடிமையாக கோயில் சேவைக்கென் ஒப்படைத்த் வகையில் வந்த பெண்கள்.

ஆக தேவதாசி அல்லது தேவரடியார் என்ற சொல்லை இந்திய சூழலில் அதிலும் குறிப்பாகத் தமிழக சூழலில் எனும் போது ஒரு  அர்த்துடன் மட்டும் பார்க்க முனைவது தவறு.

வைரமுத்து வரலாற்று நூல்களையும் வாசிப்பது பயனளிக்கும் என நினைக்கின்றேன்.

சுபா






 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Jan 20, 2018, 8:34:06 AM1/20/18
to mint...@googlegroups.com


On Friday, January 19, 2018 at 4:39:18 PM UTC-8, myself wrote:
இந்த http://www.ibiblio.org/sripedia/ramanuja/magazine/RD_0103_online_vers.pdf சுட்டியில் ராஜாஜி அவ்வாறு கருதியதைச் சுட்டுகிறார்கள். (3-ம் பக்கத்தில் காணலாம்).

பகிர்வுக்கு நன்றி கீதா,  பொன்மணியின் பதிவு (? :-))  என்ற  செய்தியால் திசை திரும்பி இப்பொழுதுதான் படித்து முடித்தேன்.  


இராஜாஜியின் கோணம்;  இத்தகைய வரிகளை எழுதுவது ஒரு  பெண்ணின் இயல்பல்ல என்ற கோணமாக இருந்திருப்பது என்று இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட வரிகளில்   இருந்து புரிந்து கொள்கிறேன்.

இராஜாஜியின் கட்டுரை கிடைத்தால், அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதையும் யாரேனும் முன்னெடுக்கலாம், இதுவரை  யாரேனும் செய்யாதிருந்தால். 

அன்புடன் 

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 20, 2018, 8:42:41 AM1/20/18
to மின்தமிழ்


On Friday, January 19, 2018 at 11:24:17 PM UTC-8, N. Ganesan wrote:

ஆண்டாள் புகழ்பாடியது தவறா? - வைரமுத்து


In his statements he takes the high road, and that is laudable, good for him.

N. Ganesan

unread,
Jan 20, 2018, 10:08:40 AM1/20/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
2018-01-19 3:18 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
தமிழ் இனிக்கிறது வைரமுத்துவின் வரிகளில் ........

சில இடங்களில் கண்ணதாசன் வந்து மறைகிறார்.

தன்மீது வீசப்படும் சாணியையும்  சகதியையும் எருவாக்கிக்கொண்டு 

வாழ்க வைரமுத்து.. 


கவிஞர் வைரமுத்துவின் மற்றுமோர் கட்டுரையை இன்று தினமணி வெளியிட்டுள்ளது. இந்தியப் பக்தி இயக்கத்தில் பெரியாழ்வார்-ஆண்டாள் செய்த மடைமாற்றம் மிகப்பெரிது. இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படையாக பக்தி இயக்கம். அதில் கோதை நாய்ச்சியார் பாடல்கள் “விரஹ பக்தியின்” உச்சம். தேவதாசி என்ற சொல் புதிது (Devadasi is a neologism not found in Tamil inscriptions, DevaTiyaaL, aTiyaaL is replaced with dAsi). இ. கிருஷ்ண ஐயர் சதிரை பரதநாட்டியம் என்று சபாக்களுக்கு மேடை நாட்டியங்கள் ஆக்கியபோது செய்துதந்த சொல். கல்வெட்டுகளில் தேவரடியார்/தேவடியார்/தேவடியாள் என்று காண்கிறோம். தேவ(ர)டியாள் பற்றி விரிவாக சுப்பிரதீபக் கவிராயரின், சரவணப்பெருமாள் கவிராயரின் ... விறலி விடுதூது பிரபந்தங்களிலே விரிவாக அறியலாம். தமிழ்நாட்டின் தேவ(ர)டியார்களின் பல்கலைச் சேவையை விரிவாக ’நித்திய சுமங்கலி’ என்ற நூலில் ஆய்ந்தவர் பேரா. கமில் சுவெலெபில்லின் மாணவி ஸஸ்க்கியா கெர்சென்பூம் ஆவார், அந்த நூல் ஆய்வுகளில் ஆர்வம் உடைய அனைவரும் படிக்க வேண்டும். பலமுறை மறுபதிப்பு ஆகிய நூல். ஆகமங்களிலே தமிழ்-ஸம்ஸ்கிருத ஊடாடல்கள் சதிர் ஆட்டம் ஆனதும், பரத சாஸ்திரத்தின் தொடக்கமும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதுறை. வைரமுத்து அவர்கள் வேசி என்று குறிப்பிடும் சொல்லுக்கு நேரானது தமிழ்ச்சொல்லாகிய பரத்தை. பரத்தையர். மருதத்திணைக் கிழார்களுக்கு பரத்தையரை ஆற்றுப்படுத்தும் தொழில்கொண்டோர் விறலியர், பாணர்கள் என்பது சங்க இலக்கியம். சங்க காலத்தின் பெரும்புலவர், ஜர்னலிஸ்ட் பரணர். அவரது பாடலை நற்றிணையில் பார்க்கலாம்: http://nganesan.blogspot.com/2012/12/310.html ; விறலியர் தேவ(ர)டியாள்கள் சமூகமாகவும், 20-ஆம் நூற்றாண்டில் சினிமாத்துறை போன்றவற்றில் பிரபலமாக தேவதாசி என்ற நியோலாஜிஸம் ஆளப்பெறுகிறது. ஹிந்து சமய வளர்ச்சியில் ஆதி காலத்தில் இருந்தே தேவதாசிகளின் கலைக்கொடை இருந்திருக்கிறது. சங்க கால விறலியர் தேவதாசிகளால்க மாறுபாடு அடைதலை முனைவர் ஸஸ்க்கியா கெர்சென்பூம் நல்ல கட்டுரை எழுதியுள்ளார். ராஜாஜி ஆண்டாள் கற்பனைப் பாத்திரம் என்றெழுதிய கட்டுரையை அடுத்துத் தருகிறேன். சிந்து முத்திரைகளிலே கூட https://en.wikipedia.org/wiki/Hieros_gamos உண்டு என இந்தியவியல்/ஸம்ஸ்கிருத நிபுணர்கள் விரிவாக ஆய்ந்து எழுதியுளர். தமிழ்நாட்டில் பெருங்கோயில்கள் பல்லவர் காலங்களில் எழுந்தபோது Hieros gamos சடங்குகள் நிறுவனமயமாக்கப்பட்டன. அவற்றின் இலக்கியவடிவம் ஆண்டாள் (பெரியாழ்வார்-ஆண்டாள்) பாசுரங்கள் எனலாம்.

ராஜாஜியோ, பா. ராகவனோ எழுதியபோது இல்லாத எதிர்வினைகள் தமிழை முறையாகக் கற்ற கவிஞர் வைரமுத்து தினமணி வெளியிடும் ஆய்வுக்கட்டுரையால் எழுதுவது ஏனோ? சமூக ஊடகங்களின் தாக்கமா? தினமணியில் வைர(வ)முத்துவின் விளக்கம் இன்று. ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் ஆய்வு இருக்கை சிறப்பாக அமையவுள்ள நிலையில், திராவிடாலஜி/தமிழியல் துறை ஆய்வுகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பரவலாக அறிந்துகொள்ள அறிமுகமாக பாடலாசிரியர் வைரமுத்து கட்டுரைகள் ஏதுவாகின்றன.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் கோதா ஸ்துதி:
கேட்டு மகிழ்க.

பிற பின்,
நா. கணேசன்

ஆண்டாள் புகழ்பாடியது தவறா? - வைரமுத்து

வைரமுத்து, ஆண்டாள் - ஜெமோ:

ஆண்டாள் தன் பாசுரங்களில் 12 மலர்கள்:

சு. இராசேந்திரன், பத்திரிகையாளர் - வைரமுத்துக்கு வேண்டுகோள்:
ஆண்டாள் பற்றிய ஆழமான கட்டுரையை ஏர் மகாராசன் எழுதியுள்ளார்:

சிங்கையில் இருந்து முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் நாய்ச்சியார் என்னும் சொல்லின் பொருளை விளக்கினார்.
என் பின்னூட்டம்:
நாயகன், நாயகி - என்னும் சொற்களில் உள்ள நா- என்னும் வேர் நாயக் (மாநாயகன் - சிலம்பில் அடிகள் பயன்படுத்தும் வடசொல்), நாய்ச்சி/நாச்சி இவற்றில் உள்ளவை.
முன்பு ஒரு முறை தேவ் அவர்களும், நானும், பிறரும் -முத்து என்று முடியும் பெயர்கள் பற்றிப் பேசினோம். பலபெயர்கள் அவ்விழையில் இருக்கும்.
காளி - காளிமுத்து, காளியப்பன், காளியணன்;
நாச்சி (அரியநாச்சி, அழகுநாச்சி அம்மன் பலருக்கும் குலதெய்வம்.) அவ்வகையில் நாச்சியப்பன், நாச்சிமுத்து, ... எனப் பெயர்கள் அமைந்துள்ளன.

தமிழர்களில் தொழிலதிபராக ஆகிச் சாதனை புரிந்தவர் அமரர் நாச்சிமுத்து அவர்கள்:
அவர் பற்றிய குறிப்பும், சிலையின் ஒளிப்படமும்:

-----------------------

வைரமுத்து தினமணியின் ஆய்வுக்கட்டுரை:

தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாளை தவறாகச் சொல்வேனா? வைரமுத்து விளக்கம்- 
Dinamani
சர்ச்சைக்குள்ளான ஆண்டாள் கட்டுரை குறித்து கவிஞர் வைரமுத்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விடியோவில், https://www.youtube.com/watch?v=RTAIv3KZPfs

என் மனம் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. எப்போதுமே என் நெஞ்சுக்குள் கூவிக் கொண்டிருக்கும் ஒரு குயில் கடந்த 10 நாட்களாக மூர்ச்சையற்றுக் கிடக்கிறது.

ஏன் என்ன காரணம் யார் செய்த பிழை?

ஆண்டாள் புகழ் பாட நான் ஆசைப்பட்டது தவறா?

3 மாதங்கள் ஆண்டாள் குறித்து நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளை திரட்டியது பிழையா?

ராஜபாளையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பிறந்த மண்ணில் நான் ஆசை ஆசையாக ஓசையோடு அரங்கேற்றியது தவறா?

நான் ஆண்டாளைப் பற்றி மட்டும் ஏன் கட்டுரை எழுதுகிறேன் என்று கேட்கலாம்? இது ஆண்டாளைப் பற்றி  மட்டுமல்ல.. 3000 ஆண்டு நீண்டு பரந்து இருக்கும் தமிழ் வெளியில் தமிழுக்கு தடம் சமைத்தவர்களை, இந்த புதிய தலைமுறைக்கு, இளைய தலைமுறைக்கு ஆற்றுப்படுத்த ஆசைப்பட்டேன்.

தொல்காப்பியர் முதல் நிகழ்கால படைப்பாளன் வரை ஒரு பருந்துப் பார்வையில் ஆராய்ச்சிப் பார்வையில் எழுதிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், திருமூலர், அப்பர், வள்ளலார், உ.வே. சுவாமிநாத அய்யர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என விரிந்து பரந்து உள்ளது.

நாயன்மார்களில் அப்பரை தேர்ந்தெடுத்த நான் ஆழ்வார்களில் ஆண்டாளை தேடி எடுத்து எழுதினேன். ஆண்டாளின் பாசுரங்களைப் பாடப் பாட பக்தியில்லாத எனக்கு சக்தி பிறக்கிறது. தமிழ் பிறக்கிறது. ஆண்டாளை கொண்டாடி கொண்டாடி குதூகலித்தேன். 

ஆண்டாளின் பெருமையெல்லாம் அங்கு உவந்து சொன்னேன். தமிழ் வெளியில் முதலில் கேட்ட பெண் விடுதலைக் குரல் ஆண்டாளின் குரல் என்று நான் அங்கு பதிவு செய்தேன். என் மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் உரிமை எனக்குத்தான் என்று கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாள் குரல் என்று சொன்னேன்.

8ம் நூற்றாண்டின் மையம் என்று அவளது காலத்தைக் கணித்துக் கொண்ட பிறகு, அது ஆணாதிக்க சமூகம், சமய சமூகம்,  நிலவுடைமை சமூகம், இந்த சமூகத்தில் ஆண்டாள் மட்டும் ஒரு தனிக்குரலாக,  நான் தனி மனுஷி இந்த மானிடருக்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்று கேட்ட அந்த குரலுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து ஆராய்ந்து எழுதினேன். எத்தனையோ மேற்கோள்களைக் காட்டினேன்.

கடைசியில் ஒரே ஒரு மேற்கோளைக் காட்டினேன். சமூகவியல் பார்வையில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை அது. அந்த கட்டுரையை எழுதிய 86 வயது இந்தியப் பேராசிரியர் இன்னும் இருக்கிறார். அவர் சொன்னதை ஏன் பதிவு செய்தேன் என்றால், தேவதாசி என்பது உயர்ந்த  குலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை அது. நான் மனிதனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் கடவுளைத்தான் திருமணம் செய்து கொள்வேன். நான் கடவுளுக்கு அருகில் சென்று விட்டேன். எந்த மனிதனுக்கும் கட்டுப்பட்டு வாழேன் என்ற உயர்ந்த குரல் அது.  அந்த உயர்ந்த குரல் எப்படி வந்தது என்றால், மனிதக் கூட்டத்தில் இருந்த விடுபட்டு கடவுளைச் சென்றடைந்த ஒருத்தியின் குரலாக இருக்க முடியுமோ என்ற ஆதாரத்தைக் காட்டுவதற்காக அந்த வரிகளை மேற்கோள் இட்டேன்.

ஒருவேளை அந்த வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற அச்சத்தில் தான் பக்தர்கள் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற அச்சத்தோடு பேசுகிறேன், பேராசிரியர் நாராயணன், கேசவன் என்ற இருவரின் கருத்து அது.

மூலத்தை  எழுதியவர்களே குற்றமற்றவர்கள், தீங்கற்ற பார்வை பார்த்தவர்கள், ஆண்டாளை உயர்த்தி சொன்னவர்கள் என்றால், மேற்கோள் காட்டிய நான் இழிந்த பார்வை பார்த்தவர் ஆவேனா, மூலமே உயர்த்திப் பேசுகிறதே, மேற்கோள் காட்டிய நான் ஆண்டாளை சிறுமைப்படுத்திவிட்டேனா? 

ஆண்டாள் எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய். கற்ற தாய். எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய ஆண்டாளை தவறாகச் சொல்வேனா? என்னை தமிழ்ச் சமூகம் சந்தேகப்படலாமா? நான் இழிவு செய்வேனா? அப்படி குற்றம் செய்வதாக இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் போய் அதனை செய்வேனா? 

யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்துக்காகவோ திரித்துப் பரப்பிவிட்டார்கள். தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையை கத்தரித்துவிட்டார்கள்.  வைரமுத்து ஆண்டாளை தாசி என்று கூறிவிட்டதாக முதல் செய்தி பரவுகிறது. அதை மேலும் பரப்பியவர்கள், தாசி என்பதை திரித்து வேசி என்று பரப்புகிறார்கள்.

நான் உயர்வாக சொன்னதை தாழ்வாக சொன்னதாக திரித்துக் காட்டுவது எந்த வகையில் நியாயம்? இதனால் எனக்கு நேர்ந்த இழிவுகள் அதிகம். சொல்லால், செயலால், எழுத்தால், ஊடகங்களால், எத்தனையோ இழிவுகளை நான் தாங்கிக் கொண்டேன். எல்லா விஷத்தையும் நான் குடித்துக் கொள்கிறேன். என்னை ஆதரித்த தமிழ் சமூகம் அமிர்தத்தை மட்டுமே அருந்தட்டும். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டால் ஆண்டாளையும் புரிந்து கொள்வீர்கள், இந்த வைரமுத்துவையும் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு வேளை யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கேட்டது எனது மனிதாபிமானம். என் தமிழால் யாரும் புண்பட்டு விடக் கூடாது என்று வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

வருத்தம் தெரிவித்த பிறகும், நாங்கள் விடைகொண்ட பிறகும், இந்த சமூகத்தை வணங்கிய பிறகும் இவர்கள் மேலும் திரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், இனக் கலவரத்தை மதக் கலவரத்தை பரப்பப் பார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமூகமே நீ ஞானச் சமூகம்.. புரிந்து கொள்வாய் நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.
from Dinamani, January 20, 2018.

 

Suba

unread,
Jan 24, 2018, 2:55:23 AM1/24/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
எனது அண்மைய நூல் விமர்சனம் நமது இந்தியா பத்திரிக்கையில்.



N. Ganesan

unread,
Jan 24, 2018, 3:29:00 AM1/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சிறந்த குறிப்பு. ஆய்வுலகில் சொல்லப்படும் கருத்து யார் கூறியது என்பது போன்ற அடிப்படைச் செய்திகளைக்
கோட்டை விட்டுவிட்டார் கவிஞர் வைரமுத்து. ஹார்வர்ட், பெர்க்கிலி, .... இன்னும் பல பல்கலைகளில்
தமிழ்/திராவிடாலஜி பேராசிரியர் இருக்கைகள் ஏற்படும்போது இன்னும் புதிய கோணங்களில்
தமிழ் இலக்கியங்களை, த்ராவிட மொழியியலை ஒப்பீட்டு நோக்கோடு வரலாற்றியல் அறிஞர்கள்
ஆய்ந்து வெளியிடுவார்கள். சமூக, சமய, வரலாற்று நோக்கில் இந்தியர்கள் தங்கள் சரிதங்களை
அறிந்துகொள்ள அவை துணைசெய்யும்.

ஆண்டாள் ஆராய்ச்சிகள் பாரத தேசப் பழமையான வரலாற்றில் ‘பனிப்பாறைநுனி’ தாம்.
It is just a tip of the iceberg how Hinduism is constructed across centuries, Viraha Bhakti as part of the Emotional Bhakti
that forms the core of Hinduism today (Friedhelm Hardy's classic work on Srimad Bhaagavatam written after Alwars),
and ultimately how Dravidian languages got replaced by Indo-Aryan in the North.

நா. கணேசன்

On Tue, Jan 23, 2018 at 11:55 PM, Suba <ksuba...@gmail.com> wrote:
எனது அண்மைய நூல் விமர்சனம் நமது இந்தியா பத்திரிக்கையில்.



--

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2018, 10:18:08 AM1/24/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
அருட்செல்வர் மகாலிங்கம் இன்றிருந்தால் 6 மில்லியனை  ஏற்கனவே தொட்டிருப்போம்

24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 12:28 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 15, 2018, 3:51:49 AM2/15/18
to மின்தமிழ், vallamai
2018-01-19 6:53 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-01-19 6:38 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மிக அருமையான அறிவுரை, வைரமுத்து நல்லதொரு  முடிவெடுக்கட்டும். 
கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சொன்னதும் தமிழிலக்கியமே.
‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’  என்று தன புலமையில் பெருமையுணர்ந்து  செருக்குடன் வாழ்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதும் தமிழ்  கூறும் வரலாறு. 


ஔவை பாட்டு - தமிழ்ப் பேரா. குணசீலன் பதிவு:
 

அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. தமிழ் ஹிண்டு பத்திரிகையில் மறைமலை அடிகள் கட்டுரை வெளியாகி உள்ளது.


இன்னும் பல தமிழ் அறிஞர்களை சினிமா, மொபைல் ஃபோன் என்றிருக்கும் காலேஜ் மாணாக்கர்களுக்கு
வைரமுத்து அறிமுகம் செய்திடல் வேண்டும். ஹிண்டு ராம், தினமணி வைத்தியநாதன் ... மாறிமாறி
வெளியிடலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages