நடனங்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்..!

444 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Feb 22, 2014, 3:36:34 AM2/22/14
to மின்தமிழ், Subashini Tremmel
இசையைக் கேட்டாலே தலையாட்டி கால் அசைத்து ஏதாவது அங்க அசைவுகள் என்னை அறியாமலேயே எனக்கு நிகழும். நாட்டியத்தின் மேல் எனக்கு இயல்பாகவே பிரியம் அதிகம். அதற்காக நாட்டியத்தில் பெரிய திறமை என்றெல்லாம் சொல்லி விடமுடியாது.

இளமையில் என் தந்தையாருக்கு என்னை நாட்டியம் கற்பிக்கச் செய்ய வேண்டும் என பெரிய ஆசை. அதனால் மலேசியாவில் நான் பிறந்து வளர்ந்த பினாங்கில் ஒரு ஆசிரியரிடம் பரதம் படிக்கச் சென்றேன். 

பரதம் பிடித்ததால் ஆசிரியரை பிடித்ததா.. ஆசிரியரைப் பிடித்ததால் பரதம் பிடித்ததா எனத் தெரியவில்லை. 

கௌரி நாட்டியப்பள்ளி என்பது அதன் பெயர். இந்தியாவில் வழுவூர் ராமையா பிள்ளையவர்களின் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று வந்தவர் அவர்.

ஆசிரியரே அழகு. அந்த அழகும் அவர் அபிநயமும் என்னை ஈர்த்ததில் தொடர்ந்து 5 ஆண்டுகள் அவரிடம் பரதம் பயிலும் வாய்ப்பு அமைந்தது. பின்னர் கல்வி தொடர ஒரு இடைவெளி பிறகு மீண்டும் ஒரு நாட்டியப்பள்ளியில் ஒரு வருடம் படித்தேன். ஆசிரியை இந்தியாவிலிருந்து வந்தவர். அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு அந்த முயற்சி தடைபட்டு போனது.

பிறகு ஷங்கர் என்ற ஆசிரியரிடம்  சில ஆண்டுகள் நடனப் பயிற்சி தொடர்ந்தது. ஆசிரியர்களின் பாணியில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைp பார்த்திருக்கின்றேன். கௌரி நடனப்பள்ளியில் படித்த போது சக மாணவர்களோடு நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனுபவம் உண்டு. 

ஜெர்மனிக்கு நான் வந்த பிறகு நாட்டியம் என்பதே எனக்கு பல கோணங்களில் அறிமுகமாகியது.

மோடர்ன் ஹிப் ஹாப் நடனங்கள், டிஸ்கோ, என்பது ஒரு தன்மை. லத்தின் அமெரிக்க வகை ஸ்பேனிஷ் சால்ஸா, டாங்கோ ஒரு வகை என கொஞ்சம் கொஞ்சம் இவ்வகை நடங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சால்ஸா எனை மிக ஈர்க்க ஒரு ஆண்டு காலம் வாரா வாரம் சால்ஸா நடனம் நானும் என் கணவரும் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டோம். சால்ஸா ஒரு ஆண் துணையோடு ஆடவேண்டிய நடனம். ஆக எங்கள் இருவருக்குமே இது  மிகப் பிடித்தமான நடனமாக ஆகியது. 

ஜெர்மனி பல இனங்கள் குடியேறிய ஒரு நாடு. அருகாமையில் இருக்கும் பல நாடுகள் தத்தமக்கென பாரம்பரிய விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் போது நானும் கண்டு மகிழ்வதுண்டு.

அப்படி பார்த்தவை, புகைப்படம் எடுத்தவை ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளஇந்த இழை. 

நான் மட்டுமல்ல.. ஏனையோரும் நீங்கள் பார்த்து, கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளைப் பற்றியோ உங்களுக்கு அறி முகமான நடனக் கலை பற்றியோ இந்தஇழையில் பகிர்ந்து கொள்ளலாம். 

முதலில் ஒரு புகைப்படம் பகிர்ந்து கொள்கிறேன்.

Inline image 1

ப்ளெமிங்கோ நடனம் - ஆண் பெண் நடனக் கலைஞர்களுடன் இசைக் கலைஞர்களும் பங்கு பெறுவது.

தொடர்வோம்..!

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 5:21:35 AM2/22/14
to மின்தமிழ்
தமிழ்நாட்டில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் ஆண்களுக்கு இடமே இல்லை சிலநேரம் அவ்வாறு இருக்கவேண்டிய நிலையில் ஆண்களுக்கு இரண்டாம் நிலையே இருந்துவந்தது.  நடனத்தின் தலைவன் என்ற தகுதி ஆணுக்கு இருந்தும் இநத் நடனத்தில் போட்டியிட்டுப் பெண் தோற்றுப்போனள் என்ற கதைகள் மலிந்த தமிழகத்தில் நடனத்தில் ஆண்கள் தனியே நடனம் ஆடுவது என்பது அரிதாக இருந்தது.  ஆண்கள் பெண்களுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் பணி அல்லது நடனத்துக்கு நட்டுவாங்கம் பின்பாட்டு என்று ஒரங்கட்டப்பட்ட நிலையில் விளிம்புநிலையில் இருந்தார்கள்

ருக்மணிதேவி அவர்கள் பரதத்தை சதிரிலிருந்து மாற்றி அதை சமூக மதிப்பைப் பெற்ற கலையாக முன்னெடுத்தபோது கலாஷேத்ராவில் பல நாட்டிய நாடகங்களை உருவாக்கியபோது பல ஆண்களுக்கு மேடையில் பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்புக் கிடைத்தது அப்போதும் அவர்கள் சரிநிகர் சமானமாக ஆடும் வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரிய்வில்லை.  கலாஷேத்ராமூலம் பல நடன்க்கலைஞர்கள் உருவானார்கள்.காலமாற்றத்தால் அவர்கள் எல்லாம் வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரமில்லாமல் இப்போது தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை

படத்தில் நடிகராக நடிப்பதற்குமுன் நடனக்குழுவில் உறுப்பினராக ஒரு நடனக்கலைஞராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியவர் உலக நாயகன் கமல் அவர்கள்

மெளனம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 8:22:36 AM2/22/14
to மின்தமிழ்
////படத்தில் நடிகராக நடிப்பதற்குமுன் நடனக்குழுவில் உறுப்பினராக ஒரு
நடனக்கலைஞராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியவர் உலக நாயகன் கமல்
அவர்கள்////

'படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்' அப்படின்னு இருந்திருக்கணும்னு
நினைக்கறேன்..( நானு திருவாயை மூடிக்கிட்டு இருக்கணுன்னு நினைச்சாலும்
விதி விடுதில்லையே சொக்கேசா!...)

http://www.youtube.com/watch?v=7J8B37yFtjg

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-22 15:51 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2014, 8:23:22 AM2/22/14
to min tamil
நல்ல இழையைத் துவக்கியிருக்கிறீர்கள். நடனம் என்பதின் முழு பரிமாணத்தையும் நம்மவர்கள் அறிந்தார்களா என்பது எனக்கு ஐயமே. 

இசையில் எடுத்துக்கொண்டால் நம் இசைமுறைகளில் சொல்வது என்பதுதான் கோலோச்சுகிறது. நாம் இசை என்று சொல்வதெல்லாம் இசையுடன் சொல்வது  
அவ்வளவுதான். Music is crucified on the lyrics. 

நடனம் என்று எடுத்தோமானால் கைகளாலும் அங்க அசைவுகளாலும் காட்டும் சமிக்ஞைகளாக இருக்கின்றன. Dance is crucified on the signals. 

The pure flow of the musical being and the self-transcending evolvings of the Musical Form are conspicuous by their absence in our systems. 

***

2014-02-22 14:06 GMT+05:30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 8:38:52 AM2/22/14
to மின்தமிழ்
////அதில் சால்ஸா எனை மிக ஈர்க்க ஒரு ஆண்டு காலம் வாரா வாரம் சால்ஸா நடனம் நானும் என் கணவரும் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டோம். சால்ஸா ஒரு ஆண் துணையோடு ஆடவேண்டிய நடனம். ஆக எங்கள் இருவருக்குமே இது  மிகப் பிடித்தமான நடனமாக ஆகியது. ///////

 கற்றுக் கொள்ள மிகக் கடினமான நடன வகை என்று தோன்றும் எனக்கு.. இது குறித்த மேலதிகத் தகவல்கள் பகிர இயலுமா சுபா!..

சமீபத்தில் நடந்த 'சூப்பர் சிங்கர்' போட்டி நிறைவு நாளில், மேடையில் 'சால்ஸா' நடனத்தில் அசத்தியவர்கள்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-22 18:53 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
                   
Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 8:59:31 AM2/22/14
to மின்தமிழ்

2014-02-22 18:52 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
.( நானு திருவாயை மூடிக்கிட்டு இருக்கணுன்னு நினைச்சாலும்
விதி விடுதில்லையே சொக்கேசா!...)

​அக்கா தெக்கத்திச் சீமைக்கு வைர வேட்டைக்குப் போயிட்டாங்க நானும் அப்புடியே கிழக்காலெ போறேன்னுட்டு கிழக்கே போற ரயில்ல ஏறிட்டீங்களே

கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடித்தது திட்டமிட்டு நடந்ததல்ல.  கமலின் குடும்ப நண்பரான பெண் டாக்டர் ஏ.வி.எம் குடும்ப டாக்டர்.  எப்போதும் துறு துறுவென்று டாக்டரிடம் ஒட்டிக்கொண்டு வந்த கமலை ஏ.வி.எம் நடிக்க வைத்தார். அத்தோடு கதை முடிந்தது

திரையுலகில் நுழைய கமல் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை.  முதலில் நடனக் குழுவிலும் பின்னர் சிறு பாத்திரங்களிலும் நடித்தார் என்று சொல்ல வந்தேன்

நமக்கு காலம் சரியில்லை என்று மெளனியாக வாயை மூடிக் கொண்டிருந்தாலும் வம்ப செய்கிறார்களே சொக்கா
Inline image 1
​மெளனகுரு​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 9:11:05 AM2/22/14
to மின்தமிழ்
////அக்கா தெக்கத்திச் சீமைக்கு வைர வேட்டைக்குப் போயிட்டாங்க நானும் அப்புடியே கிழக்காலெபோறேன்னுட்டு கிழக்கே போற ரயில்ல ஏறிட்டீங்களே///

ஆமா சாமி!.. ஒங்க கோவத்த தாங்குற சக்தி எனக்கு இல்லிங்களே!.. ஆனாலும் பாருங்க.. நடுவழில கிடைச்ச ஸ்டேஷன்ல இறங்கி வார வேண்டியதாயிருச்சு...

/////கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடித்தது திட்டமிட்டு நடந்ததல்ல.  கமலின் குடும்ப நண்பரான பெண் டாக்டர் ஏ.வி.எம் குடும்ப டாக்டர்.  எப்போதும் துறு துறுவென்று டாக்டரிடம் ஒட்டிக்கொண்டு வந்த கமலை ஏ.வி.எம் நடிக்க வைத்தார். அத்தோடு கதை முடிந்தது///

அப்படிங்களா!.. எனக்குத் தெரியாது சாமி மன்னாப்பு... ஆமா அப்புடியே இதுங்கள்ல நடிச்சதுக்கும் காரணமிருந்தா சொல்லீருங்க சாமி தெரிஞ்சுக்கறேன் ....நெசம்மா தெரிஞ்சுக்கணுன்னு கேக்கறேனுங்க.. தயவு பண்ணுங்க..(எனக்கு நேரம் சரியில்லையோ)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-22 19:29 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
    
Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 10:57:21 AM2/22/14
to மின்தமிழ்

2014-02-22 19:41 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
அப்படிங்களா!.. எனக்குத் தெரியாது சாமி மன்னாப்பு... ஆமா அப்புடியே இதுங்கள்ல நடிச்சதுக்கும் காரணமிருந்தா சொல்லீருங்க சாமி தெரிஞ்சுக்கறேன் ....நெசம்மா தெரிஞ்சுக்கணுன்னு கேக்கறேனுங்க.. தயவு பண்ணுங்க..(எனக்கு நேரம் சரியில்லையோ)

​எனக்குத்தான் நேரம் சரியில்ல

அப்புடியே லக்கேஜ் எதுவும் இல்லாம ரயிலவிட்டு இறங்கினதா நெனச்சனே அங்க என் ஜட்ஜ்மென்ட் தப்பாப் போச்சு

வில் அம்பு அம்புறாத்தோணி என்று நிராயுதபனியான என்னை எதிர்த்து நிப்பீங்கன்னு எதிர்பார்க்கல

பரவாயில்ல நான் சொல்ல வந்தது குழந்தை நடிகராக இருந்து தொடர்ந்து ஸ்ரீதேவிபோல் நடிப்புத் துறையில் ஈடுபடவில்லை.  களத்தூர் கண்ணம்மாவைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஐந்து படங்களில் நடித்துவிட்டு கல்வி கற்க படவுலகைவிட்டு ஒன்பது ஆண்டுகள் ஒதுங்கியிருக்கவேண்டியதாயிற்று

அவர் பட்டம் வாங்கவில்லை ஆனால் கல்லூரியின் படித்தார இல்லையா என்பதும் சரியாகத் தெரியவில்லை. என்னுடைய கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு அவர் விவேகாநந்தா கல்லூரியின் சார்பாக வந்திருந்தார்.  சட்டக் கல்லூரியில் இருந்து ​வந்தவர் ராதா ரவி

1960 தொடங்கி குழந்தை நடிகராக மூன்றாண்டுகள் நடித்துவிட்டு படிக்கப் போகிறார் 1972-ல் மீண்டும் நடிக்கத் தொடங்குகிறார்.  இடைப்பட்ட காலத்தில் நடனக் குழுவில் நடனம் ஆடுபவராக இருந்தார்

இப்போதைக்கு இவ்வளவுதான் மேற்கொண்டு செய்திகள் அவரின் அண்ணன் சாருஹாசனைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும்

மெளனம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 22, 2014, 11:16:51 AM2/22/14
to mintamil, Subashini Tremmel
2014-02-22 14:06 GMT+05:30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
இசையைக் கேட்டாலே தலையாட்டி கால் அசைத்து ஏதாவது அங்க அசைவுகள் என்னை அறியாமலேயே எனக்கு நிகழும். 
(நம் இசையைக் கேட்டால் தலை அசையுமாம். மேல் நாட்டு இசை கேட்டால் கால் தாளமிடுமாம். இரண்டு இசையின் வேறுபாடாக முன்பு படித்தது இது.) 

மேல்நாட்டுப் பல்வேறு நடன வகைகளைப் பற்றி படிக்கவும் படங்கள் காணவும் ஆவலாக உள்ளேன். அதுதான் முடியும். 
ஆட முடியாது!
அன்புடன் 
சொ.வினைதீர்த்தான்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 11:19:29 AM2/22/14
to மின்தமிழ்
சாமி திருப்பியும் மன்னிச்சிருங்க.. நான் சொல்ல வந்தது, 'கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பு'ன்னு இருக்கணுன்னு தான்.. நான் வேற எதுவும் சொல்ல வரலீங்களே!...

///வில் அம்பு அம்புறாத்தோணி என்று நிராயுதபனியான என்னை எதிர்த்து நிப்பீங்கன்னு எதிர்பார்க்கல///

ஆரு நானா!.. உங்களை எதிர்த்து நிக்கறதா முடியுங்களா.. நினைப்பேனுங்களா அப்புடி!...ஏதோ தெரிஞ்சத சொல்ல வந்தேனுங்க.. தப்புன்னா வுட்டுருங்க...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 12:19:09 PM2/22/14
to மின்தமிழ்

2014-02-22 21:49 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
'கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பு'

​சிறிய வேடங்களில் நடித்துவந்தார்

மெளனம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 22, 2014, 1:03:58 PM2/22/14
to mintamil
2014-02-22 21:49 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
சாமி திருப்பியும் மன்னிச்சிருங்க.. நான் சொல்ல வந்தது, 'கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பு'ன்னு இருக்கணுன்னு தான்.. நான் வேற எதுவும் சொல்ல வரலீங்களே!...

///வில் அம்பு அம்புறாத்தோணி என்று நிராயுதபனியான என்னை எதிர்த்து நிப்பீங்கன்னு எதிர்பார்க்கல///

ஆரு நானா!.. உங்களை எதிர்த்து நிக்கறதா முடியுங்களா.. நினைப்பேனுங்களா அப்புடி!...ஏதோ தெரிஞ்சத சொல்ல வந்தேனுங்க.. தப்புன்னா வுட்டுருங்க...

உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க சொல்றீங்க. அவர் அறிஞ்சதை அவர் சொல்றார். எங்களாலே முடிஞ்சதை நாங்க எழுதுகிறோம். இதில் மன்னிப்புக் கேட்கவும், திருப்பியும் மன்னிப்பு கேட்கவும் வேண்டுவதில்லை. ஏதாவது மனக்காயம் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 1:18:26 PM2/22/14
to மின்தமிழ்

2014-02-22 23:33 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க சொல்றீங்க. அவர் அறிஞ்சதை அவர் சொல்றார். எங்களாலே முடிஞ்சதை நாங்க எழுதுகிறோம். இதில் மன்னிப்புக் கேட்கவும், திருப்பியும் மன்னிப்பு கேட்கவும் வேண்டுவதில்லை. ஏதாவது மனக்காயம் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

​ஐயா நீங்க அவய்ங்க வாசகத்தைப் படித்து அசந்துடாதீங்க. எல்லாம் பாயிரம் பாடி அவையடக்கம் சொல்லித் தொடங்குறாங்க அவங்க ஆட்டத்தை

மெளனம்​

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2014, 1:20:21 PM2/22/14
to min tamil
ஐயா! பத்திரம்! பத்திரம்! அவ்ளோதான். எனக்குப் பட்டதைச் சொல்லிப்புட்டேன் :-) 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 6:55:38 PM2/22/14
to மின்தமிழ்
/////இதில் மன்னிப்புக் கேட்கவும், திருப்பியும் மன்னிப்பு கேட்கவும் வேண்டுவதில்லை. ஏதாவது மனக்காயம் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்////

மிக்க நன்றி ஐயா!.. தங்கள் அன்பான வார்த்தைகள் மிகுந்த ஆறுதலளித்தன..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 7:04:25 PM2/22/14
to மின்தமிழ்
////ஐயா நீங்க அவய்ங்க வாசகத்தைப் படித்து அசந்துடாதீங்க. எல்லாம் பாயிரம் பாடி அவையடக்கம் சொல்லித் தொடங்குறாங்க அவங்க ஆட்டத்தை////

இப்புடி நீங்களே சொன்னா நானு என்னா பண்ண? பேசாம கேட்டுக்குறேன்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-23 5:25 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
/////        

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 7:05:46 PM2/22/14
to மின்தமிழ்
/////ஐயா! பத்திரம்! பத்திரம்! ////

அவுங்க கிட்ட குடுத்து வச்சிருக்கீகளா!.... நல்லதுங்க..
  
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-23 5:34 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
    
Megala Ramamourty

unread,
Feb 22, 2014, 8:16:12 PM2/22/14
to மின்தமிழ்
பார்வதி! இதுக்குப் பேரு குடுத்து வைக்கிறதா....இல்ல போட்டுக் குடுக்கறதா...எனக்கு(ம்) ஒரு உண்மை தெரிஞ்சாகணுஞ்சாமி!!!!!

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 22, 2014, 8:20:02 PM2/22/14
to மின்தமிழ்
////பார்வதி! இதுக்குப் பேரு குடுத்து வைக்கிறதா.////

பத்திரத்த குடுத்துத் தான வைக்க முடியும்!!:)))!!.. பத்திரம் பத்திரமான இடத்துல இருக்கணுன்னு நினைச்சுக் குடுத்திருக்காங்க... இதுல போட்டு எப்படிக் குடுக்கறது?!!(எனக்குமே ஒரு உண்ம தெரிஞ்சாகணும்..)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

coral shree

unread,
Feb 22, 2014, 8:45:57 PM2/22/14
to மின்தமிழ்
ஒன்னுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது! 
மர்மமாய் இருக்குது!
ஒன்னுமே புரியல உலகத்துல!!!!

ஆனா அருமைத் தோழிகள் மேகலாவும், பார்வதியும் உஷாரா இருக்காங்கன்னு புரியுது! வாழ்த்துகள் எனதருமை தோழிகளே! 

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2014, 9:53:35 PM2/22/14
to மின்தமிழ்

2014-02-23 7:15 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
ஒன்னுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது! 
மர்மமாய் இருக்குது!
ஒன்னுமே புரியல உலகத்துல!!!!

​ஒன்னுமே நடக்காதப்ப என்ன புரியும்

ஒன்னுமே நடக்கல.  நான் வழக்கம்போல தப்பான தமிழில் எழுத அவங்க ஆசிரியராச்சேன்னு பணிவா தப்பத் திருத்திக்கங்கன்னு அன்பா மிரட்சலாச் சொன்னாங்க

அவங்க தன் நிலை விளக்கமாக சில திரைப்பட ஆதாரங்களை எடுத்து வச்சதும் ரங்கன் ஐயாவுக்குப் பயம் வந்துட்டது.  அப்படியே மெதுவா மெதுவா கூட்டங்கூடி மடக்கீடுவாங்களேன்னு பத்திரம் பத்திரம் என்று எச்சரிக்கை கொடுத்தார் அம்புட்டுத்தேன்

எனக்குத் தெரியாத திரைப்படம் பற்றி நிறைய சரக்கு அவங்க கிட்டங்கீல ரெடி ஸ்டாக்குன்னு

இப்பகூடப் பாருங்க பாருங்க ஒரு கண்ணுல வெண்ணெய் ஒரு கண்ணுல சுண்ணாம்பு என்ற கருத்துள்ள பாடலப் போடுவாங்க

என்ன ரங்கன் ஐயா பத்திரம் பத்திரம்னு பதறிக் கதறி ஓடிப்போன்னு கையைக் காட்டுறீங்ஙக்

ஓ வெண்ணெய் சுண்ணாம்பா 

ஐயோடா சாமி எந்தக் கண்ணுல வெண்ணெய் எந்தக் கண்ணுல சுண்ணாபுன்னு தெரியாக கண்ணக் கட்டுதடா சாமி

தாங்கதப்பா தாங்காது 

மெளனம்​

shylaja

unread,
Feb 22, 2014, 10:25:40 PM2/22/14
to mintamil
நான் ஒருத்தி நாலுநாள் இல்லைன்னா இங்க என்னென்னவோ நடக்குது...ம்ம்..நடத்துங்க..புரபசர் நடத்துங்க..ஆனா  காரைக்குடிக்காரர்கள்  போன் செய்தால் மட்டும் போனை எடுக்காதீங்க...உங்க சீடர்  காளை  இதுக்கு உங்களைஎப்படிக்கேக்கணுமோ அப்படிக்கேட்டுக்கட்டும் எனக்கென்ன?:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
அன்புடன்
ஷைலஜா

//மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்.//

கம்பன்
Reply
Forward
 
shylaja

unread,
Feb 22, 2014, 10:29:21 PM2/22/14
to mintamil
பாரு  நான் வந்துட்டேன்  கவலை வேண்டாம்  :):)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 2:15:04 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-22 11:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தமிழ்நாட்டில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் ஆண்களுக்கு இடமே இல்லை

​பரதம், கிராமிய நடனம் என இதனைப் பிரித்தும் காணலாம் என நினைக்கிறேன்.

கிராமிய நடனங்களாக உதாரணமாக சென்னையில் சென்ற ஆண்டு சங்கம நிகழ்ச்சியில் நடைபெற்ற  நடன நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதில் ஆண்கள் பறை வைத்து ஆடுவது .. இன்னும் பல வகைகளில்.... என பார்த்த நினைவு இருக்கின்றது.

இதே வகையில் கிராமிய நடனம் என துருக்கிய கிராமிய நடனம் ஒன்று சென்ற ஆண்டு பார்த்தேன். அதில் ஆணும் பெண்ணும் இணைந்து ஆடுவது  அது. ஆண்களும் இந்த குதூகலத்தில் இணைந்து பங்கேற்கின்றார்கள். 
துருக்கியர் மாத்திரம் அல்ல.. பல இனக்குழுக்கள் ஆண்-பெண் இணைந்து நாட்டியமாடுவதை கலாச்சார விழுமியங்களில் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

சுபா​

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 2:21:17 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-22 14:23 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நல்ல இழையைத் துவக்கியிருக்கிறீர்கள். நடனம் என்பதின் முழு பரிமாணத்தையும் நம்மவர்கள் அறிந்தார்களா என்பது எனக்கு ஐயமே. 

இசையில் எடுத்துக்கொண்டால் நம் இசைமுறைகளில் சொல்வது என்பதுதான் கோலோச்சுகிறது. நாம் இசை என்று சொல்வதெல்லாம் இசையுடன் சொல்வது  
அவ்வளவுதான். Music is crucified on the lyrics. 

:-)

பாடலின் பொருளை கேட்போர் புரிந்து அதனை (மட்டுமே) ரசிக்க வேண்டும் என எண்ணம் பொதுவாக இருப்பதால் இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
 ​​
நடனம் என்று எடுத்தோமானால் கைகளாலும் அங்க அசைவுகளாலும் காட்டும் சமிக்ஞைகளாக இருக்கின்றன. Dance is crucified on the signals. 

The pure flow of the musical being and the self-transcending evolvings of the Musical Form are
​​
conspicuous by their absence in our systems. 
எதனை நமது சிஸ்டம் என சொல்கின்றீர்கள் என் விளக்கினாலும் ​​உதவும். பொதுவாக இப்போது பரதம் என இருக்கின்றதே.. அதனைக் குறிப்பிடுகின்றீர்களா?
சந்திரலேகாவின் நாட்டியம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  சந்திரலேகாவின் உத்திகள் இந்த பொதுவான சிஸ்டத்திலிருந்து மாறுபட்டவை என்பது என் கருத்து. 

சுபா

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 2:29:00 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-22 14:38 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
////அதில் சால்ஸா எனை மிக ஈர்க்க ஒரு ஆண்டு காலம் வாரா வாரம் சால்ஸா நடனம் நானும் என் கணவரும் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டோம். சால்ஸா ஒரு ஆண் துணையோடு ஆடவேண்டிய நடனம். ஆக எங்கள் இருவருக்குமே இது  மிகப் பிடித்தமான நடனமாக ஆகியது. ///////

 கற்றுக் கொள்ள மிகக் கடினமான நடன வகை என்று தோன்றும் எனக்கு.. இது குறித்த மேலதிகத் தகவல்கள் பகிர இயலுமா சுபா!..

சமீபத்தில் நடந்த 'சூப்பர் சிங்கர்' போட்டி நிறைவு நாளில், மேடையில் 'சால்ஸா' நடனத்தில் அசத்தியவர்கள்..

சால்ஸா நாட்டியத்தில்  வகைகள் உண்டு.
சா சா சா, மாம்போ, கூபானியன் ஸ்டைல், பச்சாட்டா, மெரெங்கூ, சம்பா,   என வகைகள் உண்டு. ​​
நானும் என் கணவரும் படித்தது பச்சாட்டா வகை. 
கற்றுக்  கொள்ள சிரமம் இல்லை.
சால்ஸாவில் ஆண்களின் செயல்பாடு தான் அதிகம். ஆன்கள் தான் கால் ஸ்டெப்ஸ், கையசைவு என அனைத்தையும் செய்ய வேண்டும். பெண் துணை மூவ்மண்ட்டிற்கு ஏற்ற வகையில் நடத்தல் நகர்தல், சுற்றுதல் என அமையும். 

விரிவாக ஒரு பதிவாக எழுதுகிறேன்.

சுபா

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-22 18:53 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
                   
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 23, 2014, 7:22:01 AM2/23/14
to மின்தமிழ்
////ஒன்னுமே நடக்கல.  நான் வழக்கம்போல தப்பான தமிழில் எழுத அவங்க ஆசிரியராச்சேன்னு பணிவா தப்பத் திருத்திக்கங்கன்னு அன்பா மிரட்சலாச் சொன்னாங்க////

ஆத்தாடியோ!.. நாங்க ஆசிரியரானா நீங்க பேராசிரியராச்சே!... 

///எனக்குத் தெரியாத திரைப்படம் பற்றி நிறைய சரக்கு அவங்க கிட்டங்கீல ரெடி ஸ்டாக்குன்னு///

உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதத்தான இப்ப கொஞ்சம் எடுத்து விடுறேன்..

மத்தபடி  பொது அறிவு மற்றும் பொதுவாவே அறிவும் இல்லாதோர்  சங்கத்தின் ஒரே தலைவரும் தொண்டருமான என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-02-23 8:23 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Feb 23, 2014, 11:37:15 AM2/23/14
to mintamil
இசை நோக்கி அசையின் திசை திருப்ப:

ஒரு ஜப்பானிய-அமெரிக்க பெண்மணியின் பாலே நடனத்தில் மனதை பறி கொடுத்தோம்.

சிநேகிதி ஷோவனா நாராயணனின் கதக் நடனம் கண்ணை பறித்தது.

மாதவியின் அரங்கேற்றமும், திரை எழிலும், அரங்கத்தின் அழகும், கூடிய
இசையில் மோகனமும் மனக்கண் முன்னே.

வித்யாவின் கலாக்ஷேத்ரா பரதநாட்டியத்துக்கு நான் முதல் விசிறி.

ருக்மணியின் அரங்கேற்றம் வாணி மஹாலில்: 26 ஆகஸ்ட் 2014 மாலை. யாவரும் வருகை தருக.

அன்புடன்,
இன்னம்பூரான்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

தேமொழி

unread,
Feb 24, 2014, 3:15:12 AM2/24/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel
நன்றி: வல்லமை இதழ்   [ http://www.vallamai.com/?p=42364 ]

மாக்கரீனா….. மாக்கரீனா…..

தேமொழி

மாக்கரீனா (Macarena) என்ற நடனம் 1990 களில் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிய நடனம். ஸ்பானிஷ் மொழியில் முதலில் வெளியான ‘ரும்பா’ (rumba) வகையில் அமைந்த இப்பாடல், 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த பிறகு ஒரு ஆண்டுக்கு எங்கு திரும்பினாலும் இதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இப்பாடல் யாரையும், எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வெளிநாட்டுப் பாடல் அமெரிக்கர்களை அந்த அளவிற்குக் கவர்ந்ததன் காரணம் அதன் எளிய இடை அசைவு கொண்ட நடன பாணியும், ஆடத் தூண்டும் இசையும்தான் (Macarena: a dance performed with exaggerated hip motion to a fast Latin rhythm). முழுப்பாடலையும் 16 நடன அசைவுகளில் ஆடிவிடலாம், அத்துடன் 10 நொடிகள் மட்டும் வரும் இந்த அங்க அசைவுகளை இரண்டு வினாடிகளுக்குள் கற்றும் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.

சரியாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் இருந்த இந்த நடனம் விளையாட்டு போட்டிகள், அலுவலகக்  கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், பள்ளி விழாக்களை மட்டுமல்ல தேசிய அளவில் நடந்த தேர்தலையும் இந்தப் பாடல் விட்டு வைக்கவில்லை. பிறகு அமெரிக்கர்கள் கொடுத்த கவனிப்பால் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.

ஸ்பெயினைச் சேர்ந்த ‘லாஸ் டெல் ரியோ’ (Los Del Río) என்ற ஸ்பானிஷ் பாப்பிசை இரட்டையர்களான ‘அந்தோணியோ ரோமிரோ மாங்கே’ என்பவரும் அவரது தோழர் ‘ராஃபியல் ரூயிஸ்’ (Antonio Romero Monge and Rafael Ruiz, Pop duo) என்பவரும் 1962 ஆம் ஆண்டிலிருந்து பாப்பிசையில் பற்பல பாடல்கள் பாடி வந்தவர்கள். ‘லாஸ் டெல் ரியோ’ என்றால் ‘ஆற்றின் மக்கள்’ (மண்ணின் மைந்தர்கள் என்பது போல) எனப் பொருள் கொள்ளலாம். அவர்களை ‘ஸ்பானிஷ் ஃப்லேமன்கோ’ (Spanish flamenco) பாப்பிசைக்குழு என்றும் சொல்வார்கள். இவர்கள் தாங்கள் பாடத்தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது நடுத்தர வயதை அடைந்த பிறகு தங்களுக்கு உலகளாவிய புகழ் வரும் என்று கனவும் கண்டிருக்க மாட்டார்கள்.

அந்தோணியோவும் ராஃபியலும் வெனிசுலா (Venezuela) நாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சென்றார்கள். அந்த நாட்டின் மொழியும் ஸ்பானிஷ்தான். அங்கு ‘டயானா பாட்ரிஷியா குபில்லன்’ (Diana Patricia Cubillan) என்ற 25 வயது நடனமாடும் பெண்ணை ஒரு விழாவில் நடனமாடுகையில் பார்த்தார்கள். அவரது அழகும் ஆடும் திறமையும் இப்பாடகர்களைக் கவர உடனே அங்கேயே அவரைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடினார்கள். இப்பாடல் தோன்றக் காரணமானவரே டயானாதான். பிறகு ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் டயானாவை சந்திக்க நேர்ந்தபொழுது, அந்தோணியோவும் ராஃபியலும் தங்கள் பாடலுக்கு அன்று உணவு விடுதியில் நடனமாட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே அவரும் ஒப்புக் கொண்டார். உயர முடிந்த கொண்டையும், அதில் ஒரு பூவும் செருகி, குதிகால் செருப்பும், இறுகத் தழுவிய நடன ஆடையும் அணியும் டயானா அன்று சாதாரண கால்சராய் சட்டையுடன்தான் வந்திருந்தார். ஆனாலும் நடன ஒப்பனைகள் இல்லாததைப் பொருட்படுத்தாது மிகவும் ஆர்வத்துடன் ஆடி முடித்தார். இப்பாடல் தோன்றக் காரணமான இவரே பிறகு ‘மாக்கரீனா; என்றும் அழைக்கப் பாடலானார். இவருக்கும் பிறகு பல வாய்ப்புகள் குவிந்தன.

இப்பாடலில் முதலில் ‘மேக்டலினா’ (Magdalena) என்று அன்னை மேக்டலினாவைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தி இருந்தனர். பிறகு ஏற்கனவே  மேக்டலினா என்ற ஒரு பாடலும் இருந்ததால், ’லாஸ் டெல் ரியோ’ இசைக் குழுவினர் “மாக்கரீனா” (Macarena is a female name which means “Mother of God”)என்று தாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் வகையில் சொல்லை மாற்றினர். முதலில் “நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் உடலை நாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம், நம் உடலைப் போற்றுவோம்” என்ற பொருளில் இப்பாடல் எழுதப்பட்டது. பிறகு, தன்னைப் பிரிந்த காதலன் மேல் ஒரு பெண் ஊடல் கொண்ட பாணியிலும் பின்னர் பல பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலை ஸ்பானிஷ் இசைநிறுவனம் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.

அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் அதிகம் உள்ள ஃப்ளோரிடா மாநில வானொலி நிலையமொன்றின் நிகழ்ச்சித்  தொகுப்பாளருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. இப்பாடலை தங்கள் வானொலி நிலையத்தின் வழி ஒலி பரப்ப  விரும்பினார். ஆனால் பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பும் கொள்கையை ஏனோ அந்த வானொலி நிலையம் கொண்டிருக்கவில்லை. எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தானே ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ‘பேசைட் பாய்ஸ்’ இசைக்குழுவுடன் இணைந்து ஆங்கில வரிகளில் (Bayside Boys, Macarena English-language remix or Bayside Boys Mix) இப்பாடலை உருவாக்கி அமெரிக்க ‘பி ஜி எம்’ (BGM) நிறுவனம் மூலம் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த இப்பாடலுக்கு ராயல்டி தொகையின் மூலமே நல்ல வருமானம் ‘லாஸ் டெல் ரியோ’ இசைக்குழுவிற்கு கிடைத்தது. இதுவல்லவோ கனகதாரா சோஸ்திரம். பத்தாண்டுகளில் இப்பாடல் கொணர்ந்த வருமானம் 250,000 அமெரிக்க டாலர்கள். இப்பாடல் தந்த புகழின் காரணமாக அந்த ஊரின் மாநகராட்சியின் நடன அரங்கிற்கும் அப்பெயர் சூட்டி கெளரவிக்கப்பட்டது.

பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் பெரிய இசைகுழுவினர்கள், நடன நிகழ்சிகள் என எங்கும் இப்பாடல் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. ஒருமுறை புகழ் பெற்ற அமெரிக்க யான்கீ (Yankee) பேஸ்பால் விளையாட்டரங்கில் விளையாட்டிற்கு இடையில் 50,000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  பாடல் ஒலித்தவுடன் எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.

காணொளி: Macarena dance record set at Yankee Stadium: http://youtu.be/0NpscLUEx0Y

விடாது கருப்பு! என்பது போல நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், கொண்டாட்டமும் இப்பாடல் இன்றி நடக்காது என்ற நிலைக்குப் போனது.

காணொளி: National Down Syndrome Congress: http://youtu.be/gpu–VdIF78

1996 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்காகத் தயாரான டெமாக்ரட் கட்சியின் கருத்தரங்கில் இப்பாடல் பாடி ஆடப்பட்டது. பில் கிளிண்டனும், அல்கோரும் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வாக்காளர்களைக் கவர முயற்சி செய்த கருத்தரங்கம் அது. அப்பாடலுக்கு ஹில்லாரி கிளிண்டன் நடனமாடியும், எப்பொழுதும் கலகலப்பின்றி இருக்கும் அல்கோர் ‘நானும் கூட மாக்கரீனா ஆடுவேனே’ என்று கூறி அசையாது சிறிது நேரம் சிலை போன்று நின்றுவிட்டு ‘மீண்டும் ஒருமுறை என் நடத்தைப் பார்க்க விருப்பமா?’ எனக் கேட்டு நகைச்சுவையுடன் கலாய்த்து மக்களைக் கவர முற்பட்டனர்.
காணொளி: Delegates were shown dancing the Macarena on the convention floor: http://www.c-span.org/video/?74656-1/delegates-macarena-dance

இப்பாடலின் முதல் மூன்று வரிகள் மிகவும் புகழ் பெற்றது.

ஒலி வடிவில்: http://upload.wikimedia.org/wikipedia/en/5/50/Macarena_%28Bayside_Boys_Mix%29_sample.ogg

Dale a tu cuerpo alegría Macarena
Que tu cuerpo es pa’ darle alegría y cosas buenas
Dale a tu cuerpo alegría Macarena
¡Eh,… Macarena! Aaay!

காணொளி: Macarena: http://youtu.be/i1im74-XgYA

“Dale a tu cuerpo alegria, que tu cuerpo es para darle alegria y cosas buenas, Macarena! Aaay” — என்றால் ஆங்கிலத்தில்

“Give your body joy, because your body is for giving happiness and good things, Hey, Macarena! என்று பொருள்.

இப்பாடலின் ஆங்கில வரிகள் …

Give happiness to your body Macarena
’cause your body is for giving happiness and nice things to
Give happiness to your body Macarena
Heeey,… Macarena! Aaay!

இந்தியாவில் பாலிவுட் வழியாக நுழைந்த இப்பாடலின் வரிகள்….

Are Baba Are Baba, Kare Kya Diwana
Ladka Jab Bhi Ladki Dekhe Gaye Yahi Gana
Dil Deke Dena, Dil Le Le Lena

http://youtu.be/0cMfviJD24I
காணொளி: Dil Le Le Lena (Macarena Song): http://youtu.be/0cMfviJD24I

குஷி (2000) திரைபடத்தில் விஜய்யும் ஷில்பா ஷெட்டியும் “மாக்கரீனா….. மாக்கரீனா…..” என்று பாடி ஆடிய ஆட்டத்தில் மாக்கரீனா என்ற பெயரைத் தவிர அசல் மாக்கரீனா பாடலின் மெட்டும், நடன அசைவுகளும் இல்லை.

http://youtu.be/04L4itcCc4Y
காணொளி: Kushi (2000) movie: http://youtu.be/04L4itcCc4Y

எனவே என் சொந்த முயற்சியாக …

நல்லது ஒன்றையே நினைவில்வை
நன்மைகள் செய்வதையே கருத்தில்வை
நல்லது ஒன்றையே நினைவில்வை
ஹே…மக்களே …

என்று புனைந்துள்ளேன்.
பாடல் வரிகளும், எப்படி ஆடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. அடுத்த கட்ட முயற்சியாக நாமே எப்படி ஆடலாம் எனப் பார்ப்போம். படிப்படியாக ஒவ்வொரு அசைவுகளும் பற்றியக் குறிப்பு கீழே:

Dancing the macarena requires you to move with the 16 beats of the music. Here’s what to do:

Beat 1: Put your right arm straight in front of you with your palm down.
Beat 2: Put your left arm straight in front of you with your palm down.
Beat 3: Put your right arm straight in front of you with your palm up.
Beat 4: Put your left arm straight in front of you with your palm up.
Beat 5: Grab the inside of your left elbow.
Beat 6: Grab the inside of your right elbow.
Beat 7: Grab the back of your neck with your right hand.
Beat 8: Grab the back of your neck with your left hand.
Beat 9: Put you right hand on your left front pocket.
Beat 10: Put your left hand on your right front pocket.
Beat 11: Put your right hand on your right rear pocket.
Beat 12: Put your left hand on your left rear pocket.
Beat 13: Move your bottom to the left.
Beat 14: Move your bottom to the right.
Beat 15: Move your bottom to the left again.
Beat 16: Clap and turn to the right.

கணினியை கற்றுக் கொள்ள செயல்முறைப் புத்தகங்கள் எப்படி சுலபமான வழியில்லையோ, அது போன்றேதான் நடனமும், நேரே களத்தில் இறங்க வேண்டியதுதான் சரியான முறை.

அதற்கு உதவியாக இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள நல்ல காணொளி ஒன்றும் உண்டு…
(எச்சரிக்கை: சுட்டியைச் சொடுக்கி காணொளி மூலம் நடனம் கற்றுக் கொள்ளும் முன், முதல் படியாக அறைக்கதைத் தாழிடவும். கணினியை விட்டு எழுந்து திடீரென ஆடத் தொடங்கினால், அருகில் உள்ளவர்கள் அரண்டு போய் உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று அவசர உதவி செய்தால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பழி என் மேல் விழுந்து… சட்டம் என் மேல் பாயக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கைதான் இந்த வேண்டுகோளுக்குக் காரணம்)

http://youtu.be/OzV63IRR8BQ
காணொளி: How To Dance Macarena – http://youtu.be/OzV63IRR8BQ

சிறுவயதில் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் செய்தது போலவே இருக்கிறதே என்று தோன்றினால் தவறு கிடையாது. அதுவேதான்….அதே அசைவுகள்தான். கொஞ்சம் அப்படி, இப்படி இடையை ஒடித்து, ஒடித்து, அசைத்து நளினமாக செய்தால் அது மாக்கரீனா நடனம். சிறுவர்களுக்கும் நல்வழி என்று கருதி கற்றுக் கொடுக்கலாம். பெரும்பாலும் அவர்கள்தான் நமக்கு இந்த நடனத்தைச்  சரியாக ஆடக் கற்றுக் கொடுப்பார்கள்.

காலையில் உடல் நலம் மேம்பட சுக்குக் காப்பி குடிப்பீர்களோ, இல்லை சூரிய நமஸ்காரம்தான் செய்வீர்களோ அது தனிப்பட்டவர் விருப்பம். ஆனால் “நல்லது ஒன்றையே நினைவில்வை, நன்மைகள் செய்வதையே கருத்தில்வை, நல்லது ஒன்றையே நினைவில்வை,ஹே…மக்களே … ” என்று பாடி ஆடினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லதோர் பயிற்சிதான். எனவே……

அனைவரும் “மாக்கரீனா” நடனம் ஆடி மகிழவும்.

அடியோஸ் அமிகோஸ், ஹஸ்டா லாவிஸ்டா!!!
(Adios Amigos, hasta lavista)

On Saturday, February 22, 2014 12:36:34 AM UTC-8, Suba.T. wrote:
இசையைக் கேட்டாலே தலையாட்டி கால் அசைத்து ஏதாவது அங்க அசைவுகள் என்னை அறியாமலேயே எனக்கு நிகழும். நாட்டியத்தின் மேல் எனக்கு இயல்பாகவே பிரியம் அதிகம். அதற்காக நாட்டியத்தில் பெரிய திறமை என்றெல்லாம் சொல்லி விடமுடியாது.

இளமையில் என் தந்தையாருக்கு என்னை நாட்டியம் கற்பிக்கச் செய்ய வேண்டும் என பெரிய ஆசை. அதனால் மலேசியாவில் நான் பிறந்து வளர்ந்த பினாங்கில் ஒரு ஆசிரியரிடம் பரதம் படிக்கச் சென்றேன். 

பரதம் பிடித்ததால் ஆசிரியரை பிடித்ததா.. ஆசிரியரைப் பிடித்ததால் பரதம் பிடித்ததா எனத் தெரியவில்லை. 

கௌரி நாட்டியப்பள்ளி என்பது அதன் பெயர். இந்தியாவில் வழுவூர் ராமையா பிள்ளையவர்களின் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று வந்தவர் அவர்.

ஆசிரியரே அழகு. அந்த அழகும் அவர் அபிநயமும் என்னை ஈர்த்ததில் தொடர்ந்து 5 ஆண்டுகள் அவரிடம் பரதம் பயிலும் வாய்ப்பு அமைந்தது. பின்னர் கல்வி தொடர ஒரு இடைவெளி பிறகு மீண்டும் ஒரு நாட்டியப்பள்ளியில் ஒரு வருடம் படித்தேன். ஆசிரியை இந்தியாவிலிருந்து வந்தவர். அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு அந்த முயற்சி தடைபட்டு போனது.

பிறகு ஷங்கர் என்ற ஆசிரியரிடம்  சில ஆண்டுகள் நடனப் பயிற்சி தொடர்ந்தது. ஆசிரியர்களின் பாணியில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைp பார்த்திருக்கின்றேன். கௌரி நடனப்பள்ளியில் படித்த போது சக மாணவர்களோடு நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனுபவம் உண்டு. 

ஜெர்மனிக்கு நான் வந்த பிறகு நாட்டியம் என்பதே எனக்கு பல கோணங்களில் அறிமுகமாகியது.

மோடர்ன் ஹிப் ஹாப் நடனங்கள், டிஸ்கோ, என்பது ஒரு தன்மை. லத்தின் அமெரிக்க வகை ஸ்பேனிஷ் சால்ஸா, டாங்கோ ஒரு வகை என கொஞ்சம் கொஞ்சம் இவ்வகை நடங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சால்ஸா எனை மிக ஈர்க்க ஒரு ஆண்டு காலம் வாரா வாரம் சால்ஸா நடனம் நானும் என் கணவரும் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டோம். சால்ஸா ஒரு ஆண் துணையோடு ஆடவேண்டிய நடனம். ஆக எங்கள் இருவருக்குமே இது  மிகப் பிடித்தமான நடனமாக ஆகியது. 

ஜெர்மனி பல இனங்கள் குடியேறிய ஒரு நாடு. அருகாமையில் இருக்கும் பல நாடுகள் தத்தமக்கென பாரம்பரிய விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் போது நானும் கண்டு மகிழ்வதுண்டு.

அப்படி பார்த்தவை, புகைப்படம் எடுத்தவை ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளஇந்த இழை. 

நான் மட்டுமல்ல.. ஏனையோரும் நீங்கள் பார்த்து, கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளைப் பற்றியோ உங்களுக்கு அறி முகமான நடனக் கலை பற்றியோ இந்தஇழையில் பகிர்ந்து கொள்ளலாம். 

முதலில் ஒரு புகைப்படம் பகிர்ந்து கொள்கிறேன்.

Inline image 1

ப்ளெமிங்கோ நடனம் - ஆண் பெண் நடனக் கலைஞர்களுடன் இசைக் கலைஞர்களும் பங்கு பெறுவது.

தொடர்வோம்..!

சுபா

Subashini Tremmel

unread,
Feb 24, 2014, 7:30:10 AM2/24/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
சூப்பர்ப். :-)

இந்த நடனத்தின் வரலாறு, பிற கலாச்சாரத்தில் தாக்கம், மொழி பெயர்ப்பு, கூடுதல் செய்திகள், செய்முறை பயிற்சி விளக்கம் என அசத்தி விட்டீர்கள் தேமொழி. 

அலுவலகத்தில் இருந்து வாசிப்பதால் பாடல்களை கேட்கவில்லை. மாலை எல்லா பாடல்களையும் கேட்டுப் பார்க்கிறேன்.

நடன அசைவை காட்டும் வீடியோ அனிமேஷன் பார்த்ததில் மிக சுலபமான ஸ்டெப்ஸ்தான் என்பது தெரிகிறது. நடனத்தோடு நல்ல எக்ஸர்ஸைஸ் ஆகவும் இருக்கும். 

சுபா

Nagarajan Vadivel

unread,
Feb 24, 2014, 8:30:07 AM2/24/14
to மின்தமிழ்
கொஞ்சம் நம்ம ஊர்ப்பக்கமும் பார்வையைத் திருப்பலாமே

ஆடலழகர்கள் ஆடும் போட்டி

நடனம் 1

நடனம் 2

நடனம் 3

நடனம் 4

நடனம் 5

நடனம் 6

நடனம் 7

வீட்டுக்குப்போய் நிதானமாப் பாருங்க

மெளனம்

--

துரை.ந.உ

unread,
Feb 24, 2014, 10:34:51 AM2/24/14
to Groups, Subashini Tremmel
வாழ்க அக்கா .. 
 நானும் கலந்து கொள்கிறேன் .. (கொஞ்சம் வித்தியாசமான படங்களுடன்)
Inline image 1ஆப்பிரிக்கப் பழங்குடியினர் நடனம் 
(இவருக்கு ஒரு அஞ்சு வயசு இருக்குமா ... ’காத்தாட’ ஆடுகிறார் :)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Feb 24, 2014, 10:36:21 AM2/24/14
to Groups, Subashini Tremmel
Inline image 1இவங்க நம்மூரு போலத் தெரியுது :))

Subashini Tremmel

unread,
Feb 24, 2014, 3:08:45 PM2/24/14
to துரை.ந.உ, மின்தமிழ், Subashini Tremmel
2014-02-24 16:34 GMT+01:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
வாழ்க அக்கா .. 
 நானும் கலந்து கொள்கிறேன் .. (கொஞ்சம் வித்தியாசமான படங்களுடன்)
Inline image 1ஆப்பிரிக்கப் பழங்குடியினர் நடனம் 
(இவருக்கு ஒரு அஞ்சு வயசு இருக்குமா ... ’காத்தாட’ ஆடுகிறார் :)

அழகாத் தான் ஆடறார். மிக  இயற்கையாக.. ஆனால் இது பழங்குடி நடனமில்லையே.. பையன் மோடர்ன் டான்ஸை பார்த்து  எல்லோரும் நான் சொல்றதைக் கேளுங்க என 360 டிகிரி சுற்றி வலம் வந்து கண்டித்து சொல்கிறார். பாருங்கள்.

சுபா​​

Subashini Tremmel

unread,
Feb 25, 2014, 3:14:51 AM2/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-24 14:30 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கொஞ்சம் நம்ம ஊர்ப்பக்கமும் பார்வையைத் திருப்பலாமே

பரதம் எனக்கு தூரமில்லையே பேராசிரியரே.. :-)
நேற்றைய கணக்கு 3 பார்த்தேன். 1,3, 7 - மூவருமே வெவ்வேறு வகையில் கவர்கின்றனர். பகிர்வுக்கு நன்றி.

சுபா

Suba.T.

unread,
May 10, 2014, 2:07:51 PM5/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் என் டைம்லைனில் பகிர்ந்திருந்தார்.
3 நிமிட தேவராட்டம். வீடியோ பதிவு.

பலவித நடனங்களில் ... இதுவும் ஒரு வகை..
தளிஜல்லிபட்டி  உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த நடனத்தை வழங்குகின்றனர்.

பார்த்து மகிழ்க!

தேமொழி

unread,
May 10, 2014, 6:08:59 PM5/10/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி சுபா, பார்த்தால் ஒயிலாட்டம் என்று கூறப்படும் நடனம் போலவே இருக்கிறதே!!!

தேவராட்டத்திற்கும் ஒயிலாட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன? என்று தேடியதில் கிடைத்த தகவல் கீழே......

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு.[1] எனலாம். இந்த ஆட்டத்தை தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமிமேளம்பறைமேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில்விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.

மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என்று கிராமியக் கலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் முன்தேர்குறுவை மற்றும் பின்தேர்குறுவை என்று இதற்குப் பெயர். மன்னரின் தேரின் முன்னும் பின்னும் போர் வீரர்களும் ஆடல் அணங்குகளும் வரிசையாக அணிவகுத்து ஆடி வருவார்கள். சமயங்களில் மன்னரும் தளபதிகளும்கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள்.

தேவர்களால் ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்பட்டு, வேட்டைத்தொழிலை அடிப்படையாக கொண்ட ராஜகம்பளம் சமூகத்தினரின் வாழ்வின் அங்கமாக தேவராட்டம் உள்ளது. தாங்கள் தேவர்களின் வழிவந்தவர்கள் என்று இந்த மக்கள் நம்பிவருவதால் தாங்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் என்று அழைத்து கொள்கிறார்கள் .இறைவனை வழிபடவும், வேட்டைக்கு செல்லும் போது பாவனையாகவும், மழை, திருமணம் மற்ற விசேஷங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது. தேவராட்டத்திலுள்ள 32 அடவுகளும், மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், தேவையான உடற்பயிற்சியாகவும் உள்ளது.

தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் தலைப்பாகை போல் மினு மினுப்பான துண்டு கட்டி ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப "சுருதி' ஏற்றப்படுகிறது. வரிசையாக ஒவ்வொரு "விசில்' சத்தத்திற்கும் இடையே "அடவு' கள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. தேவராட்டப்பாடல்கள் தெலுங்கில் பாடப்படுகின்றன.

தேவராட்டம் ஆடும்போது துவக்கத்தில் மெதுவாக துவங்கும் "அடவு' மாற.. மாற... வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித "உச்சநிலை'க்கு செல்கிறது. இதில் முதலில் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளருக்கு நன்றி சொல்லும் "அடவு'க்கு வரும் போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது.ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது. இதன் அசைவுகள் மனிதனின் அனைத்து பாகங்களையும் "அசைத்து' பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது.

..... தேமொழி 

Suba.T.

unread,
May 11, 2014, 1:24:24 AM5/11/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel

2014-05-11 0:08 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​..

தேவராட்டம் ஆடும்போது துவக்கத்தில் மெதுவாக துவங்கும் "அடவு' மாற.. மாற... வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித "உச்சநிலை'க்கு செல்கிறது. இதில் முதலில் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளருக்கு நன்றி சொல்லும் "அடவு'க்கு வரும் போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது.ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது. இதன் அசைவுகள் மனிதனின் அனைத்து பாகங்களையும் "அசைத்து' பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது.

​ஆமாம். மெதுவாக ஆரம்பித்து இசையில் வேகமும் நடனத்தில் வேகமும் அதிகரிக்கின்றன​.
ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர்.
நேரில் பார்க்கவும் எனக்கு ஆவல் உள்ளது.

சுபா

Geetha Sambasivam

unread,
May 11, 2014, 1:26:32 AM5/11/14
to மின்தமிழ்
தேவராட்டம் ஒரு காலத்தில் பெண்களும் ஆடியதாகக் கேள்விப் பட்டிருக்கேன். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கூட முதன் முதலாக வந்தியத் தேவன் கடம்பூர் மாளிகைக்குச் சென்ற அன்றிரவு தேவராளனும், தேவராட்டியும் தேவராட்டம் தான் ஆடுவார்கள்.  பின்னால் தேவராளனுக்கு வெறி கூடக் கூட தேவராட்டி விலகி விட தேவராளன் மட்டுமே ஆடுகிறான்.  முருகன் மேல் பாடி ஆடுவது என்றும் சொல்லிக் கேள்வி.  சூரன் வதமெல்லாம் சில தேவராட்டங்களில் இடம் பெறும் என்றும் கேள்வி.

2014-05-11 10:54 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages