குந்தியின் குழந்தைகள்.

174 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 14, 2013, 12:52:16 AM8/14/13
to mintamil, vallamai
திரு செல்வனின் கீழ்க்கண்ட பின்னூட்டம் பார்த்தேன்.

13 ஆகஸ்ட், 2013 2:58 PM அன்று, Selvan Kovai <hol...@gmail.com> எழுதியது:

பாரத கதையை "குந்தி இன்னாரிடம் குழந்தை பெற்றாள்" என தன் இஷ்டத்துக்கு மாற்றி எழுதுவதை தான் புரிந்து கொள்ள முடிவது இல்லை.

உண்மை. 
இந்த வகையில் முன்னதாக எம்.டி.வாசுதேவன் நாயருடைய சாகியத்திய அகடமி வெளியீடு நூல் ‘இரண்டாம் இடம்’ (மலையாள மூலம் தமிழில் - பீமனின் பார்வையில் மகாபாரதம்) மற்றும் சமீபத்தில் அருணனின் ‘பூரு வம்சம்’ என்ற பதிவுகள் படித்தேன். தெய்வம் மனித உருவில் தானே அருள் பாலிக்கும் என்ற வடமொழிச் சொற்றொடரை வைத்துக்கொண்டு கற்பனை செய்யப்பட்டுள்ளது.

குந்திக்கு கணவர்கள் யாராக இருந்திருக்கக் கூடும் என்று துப்பறியும் வேலை பல்நெடுங்காலம் இருந்து வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. மனித உளவியல், வக்கிரங்களுக்கு ஏற்பத் தேடல் விதுரரில் தொடங்கி விரிந்திருக்கிறது.

மனிதனின் செய்கைகளையும் சிறப்பியல்களையும் நோக்காமல் அவனது பிறப்பை ஆராய்ந்து கீழ்மை,பொதுமை சொல்வதும் அல்லது சார்ந்து கொண்டாடுவதும் காலந்தோறும் மனிதர்களிடம் படிந்திருக்கிறது. மனிதர்களின் பல்வேறு மனக்கூறுகளில் இதுவும் ஒன்று!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Selvan Kovai

unread,
Aug 14, 2013, 1:21:49 AM8/14/13
to vallamai, mintamil

2013/8/13 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

குந்திக்கு கணவர்கள் யாராக இருந்திருக்கக் கூடும் என்று துப்பறியும் வேலை பல்நெடுங்காலம் இருந்து வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. மனித உளவியல், வக்கிரங்களுக்கு ஏற்பத் தேடல் விதுரரில் தொடங்கி விரிந்திருக்கிறது.


வணக்கம் வினைதீர்த்தான் ஐயா...சந்தனவீரப்பன், கோயில்பட்டி வீரலட்சுமி, மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என வில்லர்களை நாயகனாக்கி பார்க்கும் ஆசை குந்தியின் கணவர்கள் மாதிரி எபிசோடுகளில் தொடர்கிறது. அவரவர் மனதில் உள்ள அழுக்கு தான் இதில் வெளிவருதே ஒழிய இம்மாதிரி புனைவுகளுக்கு என்ன ஆதாரம்? எதுவும் கிடையாது. வாய்க்கு வந்தததை எழுதவேன்டியது. குந்தி என்ன வந்து வழக்கா தொடரபோகிறார்?

--

Gopalan Venkataraman

unread,
Aug 14, 2013, 1:36:48 AM8/14/13
to mint...@googlegroups.com
அன்பிற்கினியவர்களே! மகாபாரத குந்தி குறித்த விவாதத்தைப் படித்து வருகிறேன். மகாகவி பாரதி தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறான், வேதங்களை உண்மை என்று நம்பு; புராணங்கள் வேதங்களின் சாரங்களை எடுத்துரைக்க வந்த கற்பனைக் கதைகள் என்பதைப் புரிந்து கொள் என்று. புராணங்கள் வரலாறு அல்ல. சொல்ல வந்த நீதி அல்லது வேதாந்தக் கருத்தை பாமரன் (அந்தக் காலத்தில், இப்போது பாமரன் என்பவன் இல்லை) புரிந்து கொள்ளும் வகையில் அவற்றைக் கதை உருவத்தில் சொல்லி புரியவைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மகாவிஷ்ணு ஒரு அவதாரம் எடுத்தார் என்றால் வைகுந்தத்தில் அவர் இடம் காலியாக இருந்தது என்பது பொருளல்ல. மகாவிஷ்ணுவின் அம்சங்கள் நிறைந்த அல்லது அவருடைய அருளோடு கூடிய ஒரு மனிதன் அவதாரம் செய்தான் என்பதுதான். இராமன் மிதிலையிலிருந்து திரும்புகையில் பரசுராமன் எதிர் வந்து ராமனை எதிர்க்கிறான். இருவரும் விஷ்ணுவின் அவதாரங்கள். ஒரே நேரத்தில் இரு அவதாரங்களும் எப்படி இருந்திருக்க முடியும்? இதுபோன்ற பல கேள்விக் குறிகள் புராணங்களில் தோன்றத்தான் செய்யும். குந்திக்கு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள் பிடித்துப் போயின, அவற்றின் சக்தி கொண்ட பிள்ளைகளைப் பெற விரும்பினாள், பெற்றாள். விசித்திரவீரியன் தன் மனைவிகளுக்குப் பிள்ளைப் பேறு தரமுடியவில்லை. வியாச முனியைக் கொண்டு பிள்ளைகளை அம்பிகாவும் அம்பாலிகாவும் பெறுகிறார்கள். வியாசரின் கோர உருவம் கண்டு கண்களை மூடிக் கொண்டதால் குருடனாக திருதராஷ்டிரனும், பயத்தில் வெளுத்துப் போன முகத்தோடு அவரைக் கூடியதால் பாண்டுவையும் பெற்றதாக மகாபாரதம் கூறுகிறது.  மகாபாரதத்தில் வம்சோத்பத்தி எப்படி என்பதைக் காட்டிலும், அந்தப் பிள்ளைகள் சாதித்ததைச் சொல்ல வந்ததே அந்த இதிகாசம். சிகண்டி பெண்ணாய்ப் பிறந்து ஆணாக ஆனவன்; பீஷ்மரைக் கொல்ல அவன் இந்த அவதாரம் எடுக்க நேர்ந்தது. அப்படி வந்தவள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை எனும் சகோதரிகளில் மூத்தவளான அம்பை. அவளுடைய சால்வனுடன் கூடிய காதலை அடையமுடியாமல் இடையூறு செய்த பீஷ்மன் மீது காண்டு. எப்படியும் அவரைக் கொல்ல சிகண்டியாக வந்தாள் என்கிறது மகாபாரதம். புராணங்களின் கருத்துக்களில் இதுபோன்ற விவாதங்கள் எந்த முடிவையும் தராது, அவற்றை உள்ளது உள்ளபடி எடுத்துக் கொள்வதுதான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனது இந்தக் குறுக்கீடு பெரியவர்களின் உரையாடலுக்கு இடையூறு எனக் கருதினால் மன்னித்து விடுங்கள். அன்பன் தஞ்சை வெ.கோபாலன்


2013/8/14 Selvan Kovai <hol...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
VGopalan

வேந்தன் அரசு

unread,
Aug 14, 2013, 7:47:19 AM8/14/13
to vallamai, மின்தமிழ்



14 ஆகஸ்ட், 2013 3:40 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:


யமதர்மராஜன், வாயு, இந்த்ரன், அச்விநீகுமாரர் இவர்களின்
வாயிலாக மைந்தர் பிறந்ததும் அவை நடுவே முனிவர்களால்
தெரிவிக்கப்பட்டது.


விந்துத்தானம் எனும் ஒரு மந்திரம் குந்திக்கு சொல்லிக்கொடுக்கப்பட குந்தி தானும் பயன்பெற்று தன் சக கிழத்திக்கும் சொல்லிகொடுத்தாள். 21 ஆம் நூற்றாண்டில் இது சாத்தியம் ஆகுது என்றால் நம் முன்னோர்களின் கற்பனை ஆற்றலை நம்மால் கற்பனையும் செய்ய இயலவில்லை.

இவரு இப்படி என்றால் இவருடைய ஒன்றுவிட்ட மருமகள் போலிமை முறையில் நூறு பிள்ளைகள். பலே போட்டி.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Aug 14, 2013, 7:54:48 AM8/14/13
to vallamai, மின்தமிழ்
போலிமை முறை என்றால் ஒரு ”செல்”லைக்கொண்டு  அதே போன்ற பல செல்களை உருவாக்கும் முறை.


14 ஆகஸ்ட், 2013 7:47 AM அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

ஜீவ்ஸ்

unread,
Aug 14, 2013, 8:09:20 AM8/14/13
to mint...@googlegroups.com, mintamil, vallamai
வணக்கம் வினைதீர்த்தான் ஐயா,

இந்த வக்கிர ஆராய்ச்சியாளர்கள்  ஏன் மஹாபாரதத்தை முழுதாகப் படிக்கக் கூடாது என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது. மற்றோர் ஆடவனின் உறவால் குழந்தை  என்பது அம்பிகா அம்பாலிகா விற்கு வியாசர் மூலம் பிறந்த குழந்தைகள் என்று வெளிப்படையாகத் தானே சொல்லி இருக்கிறார்கள் ? அப்படி ஏதும் மற்ற ஆடவர்கள் நேரடித் தொடர்பு இருந்திருந்திருந்தால் அதுவும் மஹாபாரதத்தில் வந்திருக்கவேண்டுமே என்ற ஐயம் கூடவா எழாது இவர்களுக்கு ?

மேலும் மஹாபாரதம் இராமாயணம் கற்பனை என்பார்கள் உண்டு.  கற்பனை என்றால் கற்பனை எந்த திக்கும் பறக்கும் என்பதையும் உணராதவர்களா இவர்கள்? அப்புறம் ஏன் இத்தனை கேள்வி.

நிஜம் என்று நம்பும் மக்கள் ஏன் முழுவதையும்  மூலத்தில் படித்து தெளிந்து பின் கேள்விகளை வைக்கக் கூடாது ?

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 14, 2013, 11:33:17 AM8/14/13
to mintamil, vallamai

2013/8/14 ஜீவ்ஸ் <jee...@gmail.com>
வணக்கம் திரு ஐயப்பன்.


 மற்றோர் ஆடவனின் உறவால் குழந்தை  என்பது அம்பிகா அம்பாலிகா விற்கு வியாசர் மூலம் பிறந்த குழந்தைகள் என்று வெளிப்படையாகத் தானே சொல்லி இருக்கிறார்கள் ? அப்படி ஏதும் மற்ற ஆடவர்கள் நேரடித் தொடர்பு இருந்திருந்திருந்தால் அதுவும் மஹாபாரதத்தில் வந்திருக்கவேண்டுமே 
 
உண்மையே. 

 

நிஜம் என்று நம்பும் மக்கள் ஏன் முழுவதையும்  மூலத்தில் படித்து தெளிந்து பின் கேள்விகளை வைக்கக் கூடாது ?
 
அதிகம் படித்தவர்கள் இவர்கள்! 
மீள்பார்வை என்றே பூரு வம்சம்’ நூலின் முன்னுரையில் அருணன் எழுதியிருக்கிறார். பழங்குடிகளில் ஏகலைவன் திறன் பெற்றது பொறாது ஒடுக்கப்பட்டமை, வியாசனுடன் கூடிய தாதியின் மன நிலை, தாதியின் மகனான விதுரனுக்கு அரசனுக்குரிய தகுதியிருந்தும் சூழ்நிலை அமைந்தும் அடிமை மகனென்றதால் அரசுரிமை பெறாமை, அம்பையின் கேள்விகள், தேவயானி - சர்மிஷ்டை நிகழ்வுகளில் அரச வம்ச சர்மிஷ்டை மகன் யயாதி முதல் மனைவியான குரு மகள் தேவயானியின் மகன் பெற வேண்டிய அரசுரிமையைப் பெறுதல் என்று பலநிகழ்ச்சிகள் பேசப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டு பார்வைகளான பெண்ணியக் குரலென, ஒடுக்கப்பட்ட மக்கள் குரலென, அடிமைப்படுத்தப்பட்ட மக்களது உணர்வுகளென, பாலியல் சுரண்டலென, சாதிய தர்மமெனப் பல்வேறு சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. 
 
எம்.டி.வாசுதேவ நாயரின் இரண்டாம் இடம் நூலும் மெத்தப் படித்தவரது நூல். இரண்டாம் இடத்தில் உள்ள பீமனது பார்வையில் மகாபாரத நிக்ழ்ச்சிகள் விவரிக்கப் படுகின்றன். சூதாட்டம் விரும்பாத பீமன் சூதாட்ட விளைவுகளில் தலைவனது செயல்களில் பங்குகொள்ளுதல், பிள்ளைகளின் ஒற்றுமையை விரும்பிய குந்தி பெண்ஒருத்தி தான் தன் பிள்ளைகளளை இணைத்துவைக்கும் சக்தியாக விளங்கமுடியுமென எண்ணி திரௌபதியை ஐவருக்கும் பத்தினி ஆக்கல்  என்று பல எண்ணங்களை முன்வைக்கிறது.

எவர் எதனையெழுதினாலும் பல நூற்றாண்டுகளாக பலருடைய சிந்தனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்து விமரிசனங்களுக்கு ஆட்பட்டுத் தெளிவு அடைய மகாபாரதக் கதை உதவி பாரதத்தின் அங்கமாகத் திகழ்ந்துவருகிறது. தீமையொழிய நன்மை மேன்மையுற வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது. வாழ்வைக் குறைகளுடன் பொறுத்துக்கொண்டு நற்சிந்தனைகளுடன் வாழ வழிகாட்டியுள்ளது.
நண்பர்கள் திரு செல்வன், திரு  வேந்தன், திரு தேவ், திரு ஐயப்பன், பேரா.நாகராசன், பெரியவர் திரு கோபாலன் கருத்துக்களுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


Tthamizth Tthenee

unread,
Aug 14, 2013, 1:07:20 PM8/14/13
to vall...@googlegroups.com, mintamil
இலக்கியத்தை அதன் போக்கில் புரிந்துகொள்ள
வேண்டும்.


மெத்தச்
​ சரி!

இலக்கிய  நாயகர்கள், நாயகிகள்  போல்  நாமெல்லோரும்  சக்திமான்கள் அல்ல

அப்படியே  சக்திமான்களாக இருந்தாலும் 


அப்போதைய   நடைமுறைகளும்,  சட்டங்களும்   இப்போது செல்லாது

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/8/14 DEV RAJ <rde...@gmail.com>
இலக்கியத்தை அதன் போக்கில் புரிந்துகொள்ள
வேண்டும். 


Iyappan Krishnan

unread,
Aug 14, 2013, 2:48:57 PM8/14/13
to mintamil
வணக்கம் ஐயா,

மூல நூலை ஒட்டிய ஆய்வு வரவேற்புக்கு உரியது. அதை சொல்லவில்லை. ஆனால் "போற போக்குல பொற மண்டைல " தட்டுற மாதிரி " பாஞ்சாலி ஆறாவது கணவனுக்கு ஆசைப் பட்டாள்  " அப்படின்னு வில்லிப் புத்தூரார் எழுதுன மாதிரி, " குந்தி ஐந்து  குழந்தைகள் பெற்றெடுத்தால் " அப்படிங்கற மாதிரியான அபத்தங்களைத் தான் நான் எதிர்க்கிறேன்.

நன்றி



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/8/14 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/RzIthNXr6uI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Aug 15, 2013, 7:42:08 PM8/15/13
to mintamil, vallamai
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.
யமதர்மராஜன், வாயு, இந்த்ரன், அச்விநீகுமாரர் இவர்களின்
வாயிலாக மைந்தர் பிறந்ததும் அவை நடுவே முனிவர்களால்
தெரிவிக்கப்பட்டது.
குந்தியைப் பற்றியும், பாண்டவர் பற்றியும் வியாசர் சொல்லித்தானே அறிந்துகொள்கிறோம் ? பிற செய்திகளையும் அவர் கூறிய வழியில்
புரிந்துகொள்வதுதான் நியாயம்

நல்லதொரு விளக்கம்,
நன்றி ஐயா,

அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Aug 18, 2013, 10:48:56 AM8/18/13
to DEV RAJ, vallamai, mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2013/8/16 DEV RAJ <rde...@gmail.com>
On Thursday, 15 August 2013 16:42:08 UTC-7, Kalairajan Krishnan wrote:
நல்லதொரு விளக்கம்,


நன்றி ஐயா.

பாண்டு மன்னர் மனைவியருடன் வாழ்ந்தது
சதச்ருங்கம் எனும் ஸித்த புருஷர்கள்
தவமியற்றிய மலைப்பகுதியில்.
தேவர்களிடமிருந்து மக்களை அடையுமாறு
பாண்டுவுக்கு ஆலோசனை கூறியதே அந்த
ஸித்தர்கள்தான். மக்கள் சூழ்ந்த அவையில்
அவர்களே இதைத் தெரிவிக்கின்றனர் -
அஸ்மாகம் வசநம் ஶ்ருத்வா தே₃வாந் ஆராத₄யத் ததா₃|
[நாங்கள் சொல்வதைக்கேட்டு தம்பதியர்
தேவர்களை ஆராதித்தனர்]

அப்பேரவையில் பீஷ்மரும், குரு வம்சத்தினரில் பெரியவரான
பாஹ்லிகரும், அவர் மகனான ஸோமதத்தனும் இருந்தனர்.
பாஹ்லிகர் பாண்டுவின் பெரிய பாட்டனார். இவர்
பாரத யுத்தத்தில் தம் மகனுடனும், பேரனுடனும் 
கௌரவர் அணியுடன் இணைந்து கொண்டார்.

அந்த அத்யாய முடிவில் கூறப்படுவது -

ஏவம் உக்த்வா குரூந்ஸர்வாந் குரூணாமேவ பஶ்யதாம்| 
க்ஷணேந அந்தர்ஹிதா​: ஸர்வே தாபஸா கு₃ஹ்யகை​: ஸஹ|| 

[குரு வம்சத்தினரிடம் செய்திகளைக் கூறிய அத்தவசியர்
அனைவரும் குஹ்யகர்களோடு கணப்பொழுதில் அவையினர் 
பார்வையிலிருந்து மறைந்தனர்.]

க₃ந்த₄ர்வநக₃ராகாரம் ததை₂வாந்தர்ஹிதம் புந​:| 
ருʼஷிஸித்₃த₄க₃ணம் த்₃ருʼஷ்ட்வா விஸ்மயம் தே பரம் யயு​:|| 

[விண்ணில் தோன்றி மறையும் கந்தர்வ நகரம்போல்
கணப்பொழுதில் சித்தர்கணம் மறைந்தது கண்டு
அனைவரும் மிகவும் வியப்படைந்தனர்]


தேவ்

  

குழந்தைகள் பெற்றபின்னரும் குந்திதேவியானவள் கன்னியாகவே இருந்தாள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.  அதுபற்றியும் கூறிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Geetha Sambasivam

unread,
Aug 19, 2013, 9:22:50 AM8/19/13
to மின்தமிழ்
அருமையான விளக்கம்.  மேலும் இது போன்ற தகவல்களைத் தாருங்கள்.


2013/8/19 DEV RAJ <rde...@gmail.com>
On Sunday, 18 August 2013 07:48:56 UTC-7, Kalairajan Krishnan wrote:
குழந்தைகள் பெற்றபின்னரும் குந்திதேவியானவள் கன்னியாகவே இருந்தாள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.  அதுபற்றியும் கூறிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


விரிவாக எழுதலாம்தான்; ஆனால் விருப்பமில்லை.
வியாச பாரதத்தில் ஒளிவு மறைவு கிடையாது.
இந்து மதச் செய்திகளைத் திரித்தும், பழித்தும் 
கூறினால்தான் கவன ஈர்ப்பும், ஆராய்ச்சி அந்தஸ்தும்
கிடைக்கும் எனும் சூழலில் எதை எழுதுவது ?


கழிவிரக்கத்தோடு ஈசனைத் தொழுது
தொண்டுள்ளத்தோடு தூய வாழ்க்கை வாழ்ந்த
அப்பரடிகளாரைச் சைவ வேடம் தாங்கித் திரிந்த
பாசுபதர், காபாலிகர் என்றெல்லாம் எழுதினால்தான்
பதிவுகள் ஆராய்ச்சி மதிப்பைப் பெறும். யாரும் அகச்
சான்றோ, புறச்சான்றோ கேட்க மாட்டார்கள்;
கேட்டால் விடையும் பெற முடியாது.

பிறர்க்குதவப் பணத்தேவை நேர்ந்த தருணங்களில் 
சமய குரவர்  ஈசனிடம் கோரி அதைப் பெற்றதாகவே 
அகச்சான்று சொல்கிறது.  அரசர்களிடம் யாசித்ததாகவோ,
யாரையும் அடித்துப் பறித்ததாகவோ வரலாறு அமையவில்லை.
சம்பந்தரின் தமிழிசைக்கு அரசியல் செல்வாக்கை உள்நோக்கம்
கற்பித்து எழுதுகிறார் ஓர் அறிஞர்.

அப்பர் - சம்பந்தர் காலத்தில் வலிமை பெற்றுக் 
கோலோச்சியவர் பல்லவரும், பாண்டியரும். 
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்14 மட்டுமே. 
தொண்டை மண்டலத்தில் சற்று அதிகம். 
சோழவள நாட்டில்தான் மிகுதியான பாடல்பெற்ற 
தலங்கள்; ஆனால் அது சோழர் செல்வாக்கிழந்திருந்த காலம்.
சைவ சமயம் சார்ந்த வளவர்கோன் பாவை சமணரான
பாண்டிய மன்னருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.
சமய குரவர் காலத்துக்குப் பின்னரே பெருவாரியாகக்
கற்றளிகளும், பேராலயங்களும் உருப்பெற்றன.


தேவ்


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Gopalan Venkataraman

unread,
Aug 19, 2013, 10:22:28 AM8/19/13
to mint...@googlegroups.com
"குந்தி சிறு பெண்ணாக இருந்த போது அவள் இல்லத்துக்கு வந்த துர்வாச முனிவருக்கு குந்தி பணிவிடை செய்தாள். அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் குந்திக்கு ஒரு மந்திரம் உபதேசம் செய்தார். அந்த மந்திரத்தை உச்சரித்து எந்த தேவதையை அழைக்கிறாளோ, அந்த தேவதை தன் மகிமையால் அவளுக்கு ஒரு புத்திரனைக் கொடுப்பான் என்கிறார் அவர். சிறு பெண்ணான படியால் முனிவர் தனக்கருளிய மந்திரத்தைச் சோதிக்க எண்ணி அந்த மந்திரத்தைச் சொல்லி சூரியனை வேண்டினாள். ஒளிவீசும் முகத்தோடு சூரியன் தோன்றி தான் யார் என்பதையும், அவள் அழைத்ததால் வந்ததாகவும் சொன்னான். குந்தி நடுநடுங்கிப்போய் முனிவர் கொடுத்த வரத்தைச் சோதிக்க எண்ணி அந்த மந்திரத்தைச் சொல்லி அழைத்துவிட்டதாகவும், தன்னை மன்னித்தருள வேண்டுமென்றும் வேண்டினாள். அதற்கு சூரியபகவான் அவளைத் தேற்றி, பெண்ணே! பயப்பட வேண்டாம். என் அனுக்கிரகத்தால் உனக்கு ஒரு குற்றமும் ஏற்படாது. நீ என்னை விட்டுப் பிரிந்ததும் மீண்டும் நீ முன்போல் பூரண கன்னித்தன்மையை அடைந்துவிடுவாய் என்றான். அப்படி சூரியபகவான் கொடுத்த கர்ப்பத்தில் கர்ணன் தோன்றினான். அவன் பிறந்ததும் அவள் மீண்டும் சூரியன் கொடுத்த வரத்தின்படி பூரண கன்னிகையானாள்." 

இதுதான் மகாபாரதம் சொல்லும் விவரம். இதை ராஜாஜியும் சரி, சுவாமி சித்பவானந்தரும் சரி மேலே கண்ட விவரப்படி சொல்லியிருக்கிறார்கள். Thanjai V.Gopalan


2013/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
VGopalan

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 20, 2013, 5:42:54 AM8/20/13
to mint...@googlegroups.com
நன்றி,
திரௌபதியை “ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி” என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன். அது பற்றி பாரதத்தில் பதிவுகள் உண்டா? அல்லது உலக
வழக்கில் சொல்லப்பட்டதா?

--
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages