நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள்: அரசாணை வெளியீடு

36 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 25, 2019, 3:47:26 AM10/25/19
to மின்தமிழ்
source: https://www.dailythanthi.com/News/State/2019/10/25110355/November-1-is-Tamil-Nadu-Day-Publication-of-Government.vpf


நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
சென்னை,

நவம்பர் 1-ம் தேதி 1956-ம் ஆண்டு, 63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நவம்பர் 1-ம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாட தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியதுள்ளது.

Message has been deleted

தேமொழி

unread,
Oct 30, 2019, 11:41:42 PM10/30/19
to மின்தமிழ்

source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2400386

10 சிற்ப கலைஞர்களுக்கு 'கலைச்செம்மல் விருது'


அக் 31, 2019 

சென்னை, :ஓவிய, சிற்பக் கலையில் சிறந்த, 10 கலைஞர்கள், 'கலைச்செம்மல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மரபு வழி, நவீன பாணிப் பிரிவுகளில் சிறந்து விளங்கும், ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு, தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில், கலைச்செம்மல் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறும் கலைஞர்களுக்கு, செப்புப் பட்டயம், விருதுத் தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மரபு வழியில், ஒரு கலைஞருக்கும், நவீன பாணி பிரிவில், ஒரு கலைஞருக்கும், விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2013 - 14 முதல், 2017 - 18 வரை, கலைச்செம்மல் விருதுக்கு, 10 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நாளை சென்னை, கலைவாணர் அரங்கில் நடக்கும், 'தமிழ்நாடு நாள்' விழாவில் விருதுகள் வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., கவுரவிக்க உள்ளார்.அதேபோல், ஒவ்வொரு ஆண்டும், மரபு வழி, நவீன பாணிப் பிரிவுகளில், ஓவிய, சிற்ப கலைக் காட்சி நடத்தப்படுகிறது. அதில், தேர்வு செய்யப்படும், 15 மூத்த கலைஞர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய்; 15 இளம் கலைஞர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில், 2017 - 18 மற்றும் 2018 - 19ம் ஆண்டுக்கு, 132 கலைஞர்களின் கலைப் படைப்புகள் பெறப்பட்டன. அதில், மிகச்சிறந்த, 60 கலைப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.நாளை நடக்க உள்ள, 'தமிழ்நாடு நாள்' விழாவில், கலைஞர்களுக்கு விருதுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

கலைச்செம்மல் விருது பெறும் கலைஞர்கள்!
ஆண்டு - நவீன பாணி பிரிவு - மரபு வழி பிரிவு
2013 - 14 / பி.எஸ்.நந்தன் / எஸ்.கணபதி ஸ்தபதி
2014 - 15 / பி.கோபிநாத் / ராமஜெயம்
2015 - 16 / அனந்தநாராயணன் நாகராஜன் / எம்.தமிழரசி
2016 - 17 / சி.டக்ளஸ் / எஸ்.கீர்த்திவர்மன்
2017 - 18 / ஜெயகுமார் / ஆ.கோபாலன் ஸ்தபதி

தேமொழி

unread,
Nov 1, 2019, 12:45:07 AM11/1/19
to மின்தமிழ்
தமிழ்நாடு தனித்துவம் மிக்கது உலகில்                                    
தமிழ்நாடு போற்றுதும்  
தமிழ்நாடு போற்றுதும்
தமிழ்நாடு போற்றுதும்
தமிழ்நாடு நாள் விழாச்
சிறக்க வாழ்த்துகள்

 — முனைவர் க பசும்பொன்

#whatsapp
[7:30 PM, 10/31/2019] முனைவர் பசும்பொன்


On Friday, October 25, 2019 at 12:47:26 AM UTC-7, தேமொழி wrote:

தேமொழி

unread,
Nov 1, 2019, 6:01:11 AM11/1/19
to மின்தமிழ்



'தமிழன் என்பதே நம் பெருமை! தமிழராய் தலை நிமிர்வோம்!' 
- ட்விட்டரில் கொண்டாடப்படும் தமிழ்நாடு


சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி ட்விட்டரில் #தமிழ்நாடுநாள், #TamilNaduDay, #தமிழ்நாடு64 ஆகிய ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழராக பிறந்ததே தங்களுக்கு பெருமை என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டு, இந்திய அளவில் இந்த ஹேஷ்டாகை வைரலாக்கி வருகின்றனர்.

டுவிட்டர் பதிவு:
அரவிந்த் தமிழன்
@Aravind21258663
#தமிழ்நாடு64
தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க! 


"தமிழராக இருப்பது பெருமை அளிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. நாம் இந்தியராக இருந்தாலும், தமிழர் என்ற உள்ளுணர்வு ஓங்கி இருக்கிறது" என கோகுல்ராஜ் என்ற ட்விட்டர் நேயர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியத்தின் கொள்கைகள் பரவலாகப் பரவத் தொடங்கியதன் விளைவாக, நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என தனபாலன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு:
Sanjit Prakash
@Sanjitprakash10
காவிரி மீதினிலே கல்லணை கட்டினோம், 
களிறு கொண்டு போரடித்து- நெற்களஞ்சியம் செய்தோம் 

திரைகடலோடி திரவியம் தேடினோம்!
கரைகளைத் தேடி அகதிகளாய் வந்தோம்!

என்று சொல்லி தீரும் எம் தமிழர் பண்பாடு! 
எங்கு சொல்லி தீரும் எம் தமிழர் படும் பாடு! 
#நவம்பர்01 #தமிழ்நாடுநாள் #தமிழ்நாடு64 💛


டுவிட்டர் பதிவு:
முரளிதீர தொண்டைமான் / 𑀧𑁂𑁆. 𑀫𑀼𑀭𑀴𑀺𑀢𑀻𑀭𑀷𑁆
@Muralitheeran
தமிழ் நாட்டின் முன்னோர்களின் 
புகழுடன் 
தமிழ் வாழ்க!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தின் மூத்தகுடி 
எங்கள் தமிழ் குடி!
#TamilNaduDay#தமிழ்நாடுநாள் #தமிழ்நாடு_நாள்#தமிழ்நாடுநாள்64

டுவிட்டர் பதிவு:
sparkkannan
@sparkkannan
The one man who gave the absolute pride to Tamilians.. Happy Tamilnadu day.. 
#தமிழ்நாடுநாள்


"என்ன தவம் செய்தேனோ தமிழ் மண்ணில் பிறந்ததற்காக" என பிரகதி எனும் ட்விட்டர்வாசி பதிவிட்டிருக்கிறார்.

டுவிட்டர் பதிவு:
Amar Prasad Reddy
@amarprasadreddy
All over the world, only this piece of land, language and people has History. Being it Revolution to Evolution, Tradition to Culture, Rulers to Democracy, in everything #Tamilians stand out unique in nature. More than everything it's emotional bonding. #தமிழ்நாடுநாள்

டுவிட்டர் பதிவு:
veni ashok🇮🇳
@veniashok
இனிய #தமிழ்நாடுநாள் வாழ்த்துக்கள் ! தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம் ! வாழ்க தமிழகம் ,வெல்க தமிழ் , வளர்க பாரத தேசம் !!

டுவிட்டர் பதிவு:
humourkanth
@humourkanth
The only state where nobody uses caste surnames 
#தமிழ்நாடுநாள் #TamilNaduDay

தமிழ் சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்காக போராடிய தலைவர்களை இந்நாளில் நினைவுகூர்வோம் என்று ராஜசேகர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

Innamburan S.Soundararajan

unread,
Nov 1, 2019, 6:10:46 AM11/1/19
to mintamil
இணையம் மூலம், உலகின் எல்லா பகுதிகலிலும் தமிழர் வாழ்வதையும் அவர்கள் தமிழார்வம் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. அது நல் வரவு. தமிழ் நாட்டில் உதட்டளவோடு நிற்காமல் தமிழ் கற்க வேண்டும். பள்ளிகளிலும் சரி, பல்கலைகழகங்களிலும் சரி, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழி மேன்மை கற்றுக்கொடுக்கப்படுவது
சொற்பம்.நுனிப்புல் மேய்கிறார்கள். அந்த குறை களையபடவேண்டும்.


இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/fc2b4ede-73cb-49a6-bd83-78cac7665714%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 1, 2019, 5:04:47 PM11/1/19
to மின்தமிழ்
தமிழ்நாடு மாநிலம் உதய நாள் | 01 - 11 - 2019

DDPodhigaiTV


https://youtu.be/lViMeqDGISQ


பங்கேற்போர்:

K.R.A.நரசய்யா - வரலாற்று ஆய்வாளர் 

கவிக்கோ ஞானச்செல்வன் - தமிழறிஞர் 



நேரம்: 46:07
Reply all
Reply to author
Forward
0 new messages