கொற்றிகோடு = சிலப்பதிகாரத்தின் ‘குமரிக்கோடு’

557 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 9, 2017, 7:56:00 PM12/9/17
to மின்தமிழ், vallamai, kanmani tamil, housto...@googlegroups.com
பேரா. கண்மணி :

On Saturday, December 9, 2017 at 5:00:00 AM UTC-8, kanmanitamilskc wrote:
<பெருஞ்சுனாமி மதுரையை மையமாகக் கொண்டு கடாரம், தென்னிந்தியா, இலங்கை, குமரிக்கோடு முதலானவற்றை அழித்து என்பன உண்மையா? அல்லது கற்பனையா? என அறிவியல் அடிப்படையில் அடிப்படையில் கூற முடியும்.  இதற்குச் சில ஆண்டுகாலம் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.>
ஐயன்மீர் ,வணக்கம்.
அமைதியாக இந்த இழையை அவ்வப்போது வாசித்து வருபவள்தான் நான்.
என்றாலும் -குமரிக்கோடு பற்றிக் குறிப்பிடுவதால் அது பற்றிய என் கருத்தை மட்டும் பதிவு செய்ய விழைகிறேன்.
"பஹ்ருளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் 
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள "-காடுகாண் காதை -19-20(மன்னிக்கவும் .ஆய்த எழுத்தை தட்டச்சு செய்ய இயலவில்லை.அதனால் '-ஹ்-'......)
இம்மேற்கோள் சுட்டும் குமரிக்கோடு என்பதற்கு குமரிமலை என்று அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட )அனைவரும் கூறுகின்றனர் .ஆனால் அப்படி ஒரு மலை இருந்தமைக்குச் சான்று ஏதும் இல்லை.
தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன.
அதங்கோடு 
புதாங்கோடு 
மூதாலங்கோடு 
திருவிதாங்கோடு 
கழிக்கோடு
வித்துவக்கோடு 
கோழிக்கோடு 
முயிரிக்கோடு 
நெடுங்குளக்கோடு 
அழிக்கோடு 
காரிக்கோடு 
இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.இவை அனைத்தும் நீர்த்துறைகளை ஒட்டி உள்ளமையை அரும்பதஉரைகாரரின் கூற்றும் உறுதி செய்கிறது.   
பாலக்காட்டைச் சேர்ந்த புலவர்.செல்லன்.கோவிந்தனும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.(சிலப்பதிகாரம் 11ம்.நூ.டுக் காப்பியம் -66)குமரிக்கோடு என்ற நீர்த்துறை 
பஹ்ருளி ஆற்றின் கரையில் பன்மலையை அடுத்து இருந்தது.கடல்கோளால் அத்துறையும் ஊரும் அழிந்தன.'பம்மலா 'என்ற பெயரில் பன்மலையின் ஒரு பகுதி இன்றும் உள்ளது.பறளையாறு என்ற பெயரில் ஓடும் ஆறு அன்றைய பஹ்ருளி ஆற்றின் எச்சம் என்றும் கூறலாம்.
கண்மணி   

(1) வணக்கம். If you type "q" in phonetic keyboard, you will get ஃ.

---------------------------

அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

cascade of water falls = நீரருவி அடுக்கம்.  
There are several waterfalls in the area = அங்கே அருவிகளின் கூட்டம்/திரள் இருக்கின்றன.

Cascade of Mountains = நெடுமலை அடுக்கம்.

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் (அகநானூறு)

Famous lines of CilappatikAram:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

cascade of mountains near Kumaricode. This cascade can be seen in Kotricode near Kanyakumari.

On Tuesday, October 11, 2016 at 4:40:06 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அடுத்தடுத்த?

I know this from experience; I was a writer on an early example of a show to benefit from this cascade of affection.

அடுத்தடுத்த (அ) அடுக்கடுக்கிய ... 

அடுக்கருவி = cascade of waterfalls.

அடுக்கம் = cascade. 2000 ஆண்டுகளாய்த் தமிழில் பதிவு ஆகியுள்ளது.

கொற்றிகோடு மலைகள் குமரி மாவட்டத்திலே பக்கமலைகளாய் இருக்கின்றன.
இவற்றை குமரிக்கோடு என்று பரியாயப் பெயரால் அழைத்து ”பன்மலை அடுக்கம்
என்கிறார் தாம் எழுதிய தமிழ்தேசீய நாவலில் இளங்கோ அடிகள்.

நா. கணேசன்

On Tuesday, August 16, 2016 at 8:07:27 AM UTC-7, Suba.T. wrote:
எனது வினாக்கள்

தமிழகம் போன்ற சூழலில் வரலாற்றுத் தகவல்கள் பாதுகாப்பு என்பவை சிறப்பாகச் செயல்படவில்லை. காலின் மெக்கன்சி காலத்தில் தான் அது பற்றிய பிரக்ஞை ஏற்படுகின்றது.   இந்தச் சூழலில் அனைத்து  பூளோக  நில சம்பந்தப்பட்ட தகவல்களும், நமக்கு இப்போது கிடைக்கின்ற நூல்களில் இருந்தே ஆக வேண்டும் எனக் கொள்ள முடியாது அல்லவா..?

இதே தொடர்ச்சியாக... குமரி என்ற பெயரில் தான் அது சுட்டப்பட்டிருக்க வேண்டும் என  நினைத்து நாம் தேட அது வேறு பெயரில் சுட்டப்பட்ட ஒரு பொருளாகவும் அல்லது  சேர நாடு, தென்னாடு, பாண்டிய நாடு என்ற வேறு பெயரால்  சுட்டப்பட்ட காரணமும் இருந்திருக்க வாய்ப்புண்டா?

சுபா

நல்ல வினாக்கள். இளங்கோ அடிகள் கற்பனையில் புனைந்த காவியத்தில் வழங்கும்பெயர்களைச் சற்றே மாற்றிப் பயன்படுத்தியுள்ளார்.
கோவலன் (விஷ்ணு-க்ருஷ்ணன்),  மாதவி (குருக்கத்தி. முல்லைத்திணையின் கோபியர் குறியீடு), கண்ணகி (கர்ணகீ, தாமரைப் பொகுடு, இலக்குமி),
கனகவிஜயர் (18 நாழிகைப் போர், மகாபாரதம் சுட்டும் கனக (ஹரி = விஷ்ணு), விஜயர் (அர்ஜுனன்) - கனகவிஜயர் வடநாட்டு மன்னர் கதாபாத்ரம், ....

அதுபோல், பறளி ஆறு குமரி மாவட்டத்தில் (கோவை மாவட்டத்திலும் பறளி ஆறு உண்டு) - பழம்பெயர் பஃறுளி ஆறு.
இளங்கோ கொற்றவை வழிபாட்டை பல இடங்களில் சொல்கிறார். லலிதா சகசிரநாமத்தில் 40 தொடர்களை அப்படியே மொழிபெயர்க்கிறார்.
பாய்கலைப்பாவை மந்திரம் எல்லாம் உண்டு. வேட்டுவவரி தனியாக நிற்கிறது. எனவே, கொற்றிகோடு என்னும் பன்மலை அடுக்கத்தை
குமரிக்கோடு என்று பரியாயப் பெயரால் அழைக்கிறார் எனலாம். குமரிக்கோடு = கொற்றிகோடு, இன்றும் உள்ள ஊரும், பல மலை அடுக்கமும்

நா. கணேசன்

நீர்க்கரைக்கு கோடு என்னும் பெயரை வேறுமுறையில் எழுத 4-5 ஆம் நூற்றாண்டில் முயற்சி செய்தனர். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். வட்டெழுத்து தொடக்க காலம்.
காசரகோடு (காஞ்சிரங்கோடு) அருகே கிடைத்த கல்வெட்டு.

செங்கோடு, சேரங்கோடு, காஞ்சிரங்கோடு போல மலைக்கு -கோடு என்ற பெயரில் கொற்றிகோடு உள்ளது. கன்யாகுமரிக்கு மிக அருகே.
கொற்றவை (கன்யாகுமரி) கொற்றி என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறாள். அதன் அருகே வேளிமலை உள்ளது. பிரசித்தமான முருகன் தலம் வேளிமலை.
வேள் - வேளி எனவாகும்.  கொற்றி = குமரி (கன்யா குமரி), எனவே தன் தமிழ்தேசிய நாவலில் இளங்கோ அடிகள் கொற்றிகோடு, சற்றுமாற்றி குமரிக்கோடு என்றால்.
கோற்றிகோடு மலையே கடல் சுனாமியின் போது மூழ்கியது என்கிறார். காலப்போக்கில் இக் கதை விசுவரூபம் எடுத்து, குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம்
என வளர்ந்துவிட்டது. 

இக்கதைகளுக்கான அடிப்படையை இலக்கிய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. சமணர்களின் கொடையை மறைக்க அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார்
என்றும், முதல், இடை, கடை சங்கங்கள் என்றும் சைவர்கள் “இறையனார் அகப்பொருள்” நூலிலும், உரையிலும் கதைகள் கட்டினர். 

கொற்றிகோடு

 ‘என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .’

கொற்றிகோடு - பன்மலை அடுக்கம்:

Local News In Kotticode!

Sunday, January 30, 2011

கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்

       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .
 வேளிமலை தோற்றம் 

இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவடத்தின்  மையபகுதியில்  மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து , வானுயர மப்புடன் உயர்ந்து நின்று இளம்தென்றல் வீசி வரும் சுகம் கொடுக்கும் எழில் மிகு பசும்சோலைகளையும் கொண்டு ,முக்கனியும் ,தேங்கனியும் முதிர்ந்து , பணப்பயிரும்,மணபயிரும், குணப்யிரும் வாரிவழங்கி இம்மாவட்டத்தின் ஜீவாதாரமாக அமைந்திருப்பதும் , தமிழர்களின் தனித்தெய்வமான எழில்மிகு திருமுருகன்  தன் இதயம் கவர்ந்த கன்னி ,அன்று தினைப்புலம் காத்த வள்ளியை  தேடிவந்து திருவிளையாடல் நடத்திய இடமும் , தக்கராஜன் வேள்வி வளர்த்த இடமாகையால் இம்மலைக்கு வேளிமலை என்று வரலாறு கூறுவதுமான வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரார் வேளிமலையிலிருந்து உதித்து வரும்உதயசூரியனை காலையில் கிழக்கு திசையில் கண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் வேளிமலை முகட்டிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டத்தில்  விளைந்தோடி வளபடுத்தும் ஆறுகளில் ஒன்றான கயலைகள் துள்ளி ஓடும் வள்ளி ஆறு இவ்வூரின் தெற்கு எல்லையிலும் , இன்னொன்றான தட்சணகோதையாறு என்ற சடையாறு இதன் வடக்கு எல்லையிலும் வளைந்தோடியும், பேச்சிபாறை  பெருஞ்சாணி அணைகளின் நீரைசுமர்ந்து வரும் பத்மனபாபுரம் புத்தனாறு என்ற வெட்டாறு  இதன் தென்மேற்கு  எல்லையில் விளைந்தோடி வளபடுத்தியும், இதன் 3 திசைகளிலும் விளைந்தோடி அரண்போல் அமைந்த பத்மனபாபுரம் புத்தனாறை கடந்து செல்ல குமாரபுரம் அம்மன்கோயில் பக்கமுள்ள பாலம் மட்டும் இதன் முக்கிய கணவாய் போன்று அமைந்த ஓர் பாதுகவல் ஊர்தான் கொற்றிகோடு .

          இவ்வளவு பாதுகாவலும் செல்வசெழிப்பும்  கொண்டு குறிஞ்சியும் ,முல்லையும் , மருதமும் ,ஒருங்கே அமைந்த  இவ்வூரிலே ஒரே மொழி பேசும் ஒரே இனம்  குழுமி வாழ்ந்து கொண்டிருகிறது . இந்த இனம் தான்  நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை  மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும்  கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ  மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம்  வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர்  இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .
பழைய வரலாற்றுகளிலே . சங்க இலக்கியங்களிலே வெற்றிவேண்டி போர் தொடுத்து செல்லும் வேந்தர்கள் தங்கள் வெற்றிக்காய் கொற்றவை தெய்வத்தை(பத்திரகாளியை) வேண்டிகொண்டனர் . கொற்றவையை வெற்றிதேவதயாக வழிபட்டனர். தங்கள் நாடார் குலத்தை பனம்பால் கொடுத்து வளர்த்த கொற்றவையை இவ்வூர் மக்கள் தங்கள் குலதெய்வமாககொண்டு  வழிபட்டு அன்று வாழ்ந்திருந்தார்கள் . இத்தகவலை பெயர் தெரியாத ஒரு புலவர் எந்த நாளிலோ எழுதி வில்லுப்பட்டுகளில் பாடிவந்த பாடலான

                                         "கட்ட கட்ட உச்ச நேரம்"
                                           காளியம்மா வாற நேரம்
                                          பொட்டகுளத்து  இசக்கி யம்மை
                                          பொழுதடைய வாற நேரம்"

புத்தனாறு 

என்ற வரிகளால் தெரிய வருகிறது . இதிலிருந்து கூழக்கடை பக்கமுள்ள மக்கள் பொட்டைகுளக்கரையில் காளி (கொற்றவை) கோயில் இருந்ததாகவும் அங்கிருந்த மக்கள் காளியை  குல தெய்வமாக கொண்டு வழிபட்டதும்  தெரிய வருகிறது .
(இப்பாடல் மீட் நினைவு ஆலய 150 வது விழா மலரில் பக்கம் 44 ல்  இடம்பெற்றுள்ளது).

                      ஆனால் கி. பி. 1818 ல் பண்டைய வேணாட்டில் இன்றைய குமரி மாவட்டத்தில் மயிலாடியை மையமாக கொண்டு திருதொண்டாற்ற  சங். சார்லஸ் மீட் அவர்கள் வந்தார்கள் .திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் தாழ்த்தப்பட்டு அடிமைபடுத்தபட்டு கிடந்த நாடார் குலத் தமிழர்களின் விடுதலைக்காய் தோள்சீலை போராட்டத்தை நடத்தியவரும் , ஆட்சியாளர்களின் அனுமதியால் நாகர்கோயில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும் , இன்று நாகர்கோயிலில் தன்னாட்சி கல்லூரியாக (autonomouse college )ஆக வளர்ந்திருக்கும் scott christian  college - அன்று  ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்தவரும் ,1828 ல் நெய்யூரை தலைமையிடமாககொண்டு செயல் பட்ட நெய்யூர் மருத்துவமனையை நிறுவியவருமான  மேலே குறிப்பிட்ட சார்லஸ் மீட் ஐயர்  அவர்கள் 1830 ல் கிறிஸ்தவ நற்செய்தியை தெரிவிக்கும் படி கொற்றவையை  வழிபட்ட மக்கள் வாழ்ந்த கொற்றிகோட்டிற்கு  வந்தார் . அவர் அவர்களிடம் கிறிஸ்தவத்தை போதித்து திருத்தொண்டாற்றினார் அவரது போதனையால் தங்கள் குல வழிபாட்டை விட்டு ,இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட மக்கள் , தங்கள் குல தெய்வ சிலையையும் , வஸ்திரங்களையும் ,பூததடிகளையும் , கிலுக்குமணியையும்  சார்லஸ் மீட்  அவர்களிடம் ஒப்படைத்தனர் .

                          அவைகளை பெற்று கொண்ட மீட் ஐயர் அவர்கள் , அவற்றை லண்டனில் உள்ள ஆஸ்டின் பிரேயர்ஸ் என்ற  பொருட்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு   கொற்றவை தெய்வ வழிபாட்டிற்கு ஒரு கோடு போட்டு நிறுத்திவிட்டு கொற்றிகோடு குளத்திற்கும் பொட்டைகுழி குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சீனிவிளையில் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி , கிறிஸ்தவ சமயதொண்டும், அங்கு ஓர் பாடசாலையை கட்டி கல்வியறிவு புகட்டி , சமுதயதொண்டும் ஆற்றி அச்சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றார் . அவர் வைத்த" கொற்றவைகோடு" காலபழக்கத்தில் மருவி "கொற்றிகோடு " ஆக மாறியது . இவ்வாறாக கொற்றிகோடு பெயர் பிரபலமாகி இன்று  வெற்றிகள் பல குவிக்கும் கொற்றிகோடாக மாறி வெற்றிகள் குவித்துகொண்டிருக்கிறது .மீட் ஐயர் தன்  குறிப்பில் "KOTTICODE  IS THE HEAVEN OF SOUTH TRAVANCORE "என்று குறிப்பிட்டுள்ளபடி மேன்மை பெற்று திகழ்கிறது .

எழுதியவர் : உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை இ . ஞானதாஸ் (+919944373580
                          கொற்றிகோடு குமாரபுரம் அஞ்சல் 

பதிவு செய்தவர் : ஜே.டி .சிபி டேவிட 

N. Ganesan

unread,
Dec 9, 2017, 8:04:27 PM12/9/17
to மின்தமிழ், vallamai, kanmani tamil, housto...@googlegroups.com
https://ta.wiktionary.org/wiki/கோடு
  • மலை, மலைப் பகுதி, மேட்டு நிலம் என்னும் பொருளில் கோடு என்னும் சொல் பல ஊர்ப்பெயர்களோடு இணைந்து வழங்கப்படுவதைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணலாம். எ.டு.: கொற்றிகோடு வேங்கோடு, கொல்லங்கோடு, திருச்செங்கோடு, திருவிதாங்கோடு, ஏற்றக்கோடு, வெள்ளிகோடு.

கொற்றிகோட்டை குமரிக்கோடு என மாற்றி,  அதன் உச்சிக்கு சுனாமி அலைகள் சென்றன என்கிறார் இளங்கோ அடிகள்.

kanmani tamil

unread,
Dec 11, 2017, 1:05:45 PM12/11/17
to mintamil

குமரிக்கோடு அழிந்த பின்னர் குமரியம்பெருந்துறை தோன்றியது.
இப்போதிருக்கும் கன்னியாகுமரி காலவோட்டத்தில் மிகவும் மாறுபட்டது.
குமரியம்பெருந்துறை புனிதநீராடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது.ஆனால் இன்றைய குமரிமுனையில் புனித நீராடுவது என்பது அபாயகரமானதாகும் . 
புகார்  என்பது காவிரியின் சங்கமத்துறைக்கு உரிய பெயராக வழங்கியது போல குமரித்துறை பஃறுளியாற்றின் சங்கமத்துறைக்குரிய பெயராக வழங்கியிருக்க வேண்டும். 
புகார்த்துறையின் பெயர் ஒரு ஊருக்கு ஆகி வந்ததைப் போல குமரித்துறையின் பெயர் கரையிலிருந்த ஊருக்கு ஆகி குமரிக்கோடு என வழங்கியது.
கடல்கோளால் குமரிக்கோடும் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியும் அழிந்து விட்டதால் புதிதாகத் தோன்றிய கடல்முனைக்கு பழைய குமரித்துறையின் நினைவாகவே குமரித்துறை என்றும் குமரிமுனை என்றும் பெயர் வழங்கியது.
கண்மணி    

2017-12-11 19:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
குமரித்துறை இருந்தது என்பதற்கு வலுவான சான்றுகள் இத்தனை இருக்கும்போது எதற்காக அதை மலை என்று சொல்ல வேண்டும்?

குமரித்துறை என்று சொல்லாமல், குமரிக்கோடு என்பதால் அந்த மலையளவு நீர் புகுந்தது என எழுதியுள்ளார்
- கற்பனைக் காவியத்தில். 

கோடு என்றால் நீர்க்கரை என்று கொடுத்திருந்தீர்கள். மலை என்ற பொருளிலும் குமரி மாவட்டத்தில்
இடங்கள் உண்டு எனக் குறிப்பிட்டேன்.

குமரிக்கோடு வெறும் கன்யாகுமரித் துறை என்றால் குமரிக்கண்டம் என்பதை அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா
வரை தமிழர்கள் வளர்த்து வருகிறார்களே!!

அங்கேயே இருக்கிற பறுளி ஆறு, கொற்றிகோட்டைப் பார்க்கட்டும் என எழுதிய மடல்.

நா. கணேசன்

2017-12-11 5:47 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<கொற்றிகோட்டை குமரிக்கோடு என மாற்றி,  அதன் உச்சிக்கு சுனாமி அலைகள் சென்றன என்கிறார் இளங்கோ அடிகள்>

என்ன ஆயிற்று ?
ஏன் இப்படி?
ஒருவேளை எனக்கு ஏதாவது தேர்வு நடத்துகிறீர்களா?
இளங்கோவடிகள் சுனாமி பற்றிப் பேசவே இல்லை.அவர் ஒரு கடல்கோளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.
கடல்கோளுக்கும் சுனாமிக்கும் வேறுபாடு இல்லையா?
எனக்குப் புவியியல் தெரியாது.(ஒரு கலைச்சொல்லை இன்னொன்றாகப் பயன்படுத்தினால்பொருளில்  பெருந்தவறு ஏற்படும் என்னுமளவுக்கு அறிவியல் புரியும்.) ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளீர்கள் .அதன் உள்ளே சென்று பார்த்துவிட்டேன் .
புவியியல் விஞ்ஞானியாகிய தாங்கள் இரண்டும் ஒன்று என்று கூறினால் மறு வார்த்தை பேசவும் மாட்டேன்.
இப்போது குமரிக்கோட்டிற்கு வருவோம்
எனது கருதுகோள் :இளங்கோவடிகள் சுட்டும் குமரிக்கோடு ஒரு நீர்த்துறை ஆகும்.
முதன்மைத் தரவுகள் : 
1)பெரிப்ளூஸ் பலிதா என்னும் துறைமுகத்தை அடுத்து கொமார் என்ற முனையும் துறைமுகமும் உள்ளன.அங்கு ஒரு பெண் தெய்வத்திற்கு எல்லா மக்களும் வழிபாடு செய்கின்றனர் என்கிறது.(Foreign Notices Of South India-From Megasthanes To Ma-Huan-K.A.Neelakanda sasthri-p.58)
2)டாலமி குமரி என்ற முனையும் அப்பெயர்கொண்ட ஊரும் அயாய்நாட்டில் இருந்தது என்கிறார்.(டி.தேவகுஞ்சரி-Madurai Through The Ages-ப.65)
3)ஸ்டராபோ குமரியில் ஒரு கோட்டை உண்டு என்கிறார்.(V.Kanagasabai Pillai-The Tamils 1800 Years Ago-p.68
2ம்.நிலைத் தரவுகள் :
1)அரும்பத உரைகாரர் குமரிக்கோடு என்பதற்கு குமரிக்கரை என்றே பொருள் கொள்கிறார்.
2)குமரியில் சற்று தூரம் கடலுக்குள் சென்றால் ஒரு பாறையில் குடிநீர்க் கிணறு உள்ளது என்றும் கிரேக்கர் கூறும் கோட்டையும் துறையும் இருந்து அழிந்தமைக்கு இது ஒரு சான்று என்றும் கே.பி.பத்மநாபமேனன் கூறியுள்ளார்.(History Of Kerala -p.10)
3)இன்றைய குமரிஅம்மன் கோயில் பண்டு கடலிலிருந்து 60 லி தூரம் உள்நாட்டில் தள்ளி இருந்தது என்று ஃ பரியாய் சௌயா என்னும் போர்ச்சுகல் வரலாற்றாசிரியர் சொல்வதை ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர் .(கே.பி.பத்மநாப மேனன்-ப.8) 
           இன்று பறளையாறும்,பம்மலாவும் முறையே இளங்கோவடிகள் சுட்டிய பஃறுளி,பன்மலைஅடுக்கம்என்றுஇனம்காணப்படுகிறது.அதற்காக கடல்கோள் நிகழ்ந்தது கற்பனை என்று சொல்ல இயலாது.
அந்தக் கடல்கோள் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியையும் அதன் கரையிலிருந்த குமரித்துறையையும் உட்கொண்டு இருக்க வேண்டும்.   
        கணேசன் அவர்கள் கூறுவது போல கொற்றிக்கோட்டை இளங்கோவடிகள் குமரிக்கோடு என்று பெயர் மாற்றிக் காப்பியம் எழுத வேண்டிய தேவை எதுவும் அவருக்கு இல்லை.அதற்காக சிலப்பதிகாரக்கதை ஒரு வரலாறு என்று நான் சொல்லமாட்டேன். 
         கொற்றவை கோடு >>>கொற்றிக்கோடு என்ற மாற்றம் இயல்பானது.நம் நாட்டில் ....மட்டுமல்ல.கிழக்கே கொல்கத்தா முதல் மேற்கே காந்தாரம்(காந்தாரியை கொற்றவையாகக் கூறும் நாட்டார் பாடல்கள் உண்டு ) வரையிலும் ,வடக்கே ஜம்மு முதல் தெற்கே இலங்கை வரை .......அதற்கும் அப்பால் ஆப்பிரிக்காவில் கூட தாய்த்தெய்வ வழிபாடு இருந்துள்ளதே உங்களுக்கு என்னைக் காட்டிலும் நிறையத் தெரியும்..
இவற்றில் பல கோயில்கள் மலைமேல் உள்ளன.எ .கா.வைஷ்ணோ தேவி கோயில்-சமணக் கோயில் .ஒரு ஆண்டுக்கு முன்னர் சென்று வந்தேன்.
குமரித்துறை இருந்தது என்பதற்கு வலுவான சான்றுகள் இத்தனை இருக்கும்போது எதற்காக அதை மலை என்று சொல்ல வேண்டும்?
கண்மணி  

N. Ganesan

unread,
Dec 11, 2017, 9:50:49 PM12/11/17
to மின்தமிழ்

On Monday, December 11, 2017 at 10:05:45 AM UTC-8, kanmanitamilskc wrote:

குமரிக்கோடு அழிந்த பின்னர் குமரியம்பெருந்துறை தோன்றியது.
இப்போதிருக்கும் கன்னியாகுமரி காலவோட்டத்தில் மிகவும் மாறுபட்டது.
குமரியம்பெருந்துறை புனிதநீராடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது.ஆனால் இன்றைய குமரிமுனையில் புனித நீராடுவது என்பது அபாயகரமானதாகும் . 
புகார்  என்பது காவிரியின் சங்கமத்துறைக்கு உரிய பெயராக வழங்கியது போல குமரித்துறை பஃறுளியாற்றின் சங்கமத்துறைக்குரிய பெயராக வழங்கியிருக்க வேண்டும். 
புகார்த்துறையின் பெயர் ஒரு ஊருக்கு ஆகி வந்ததைப் போல குமரித்துறையின் பெயர் கரையிலிருந்த ஊருக்கு ஆகி குமரிக்கோடு என வழங்கியது.
கடல்கோளால் குமரிக்கோடும் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியும் அழிந்து விட்டதால் புதிதாகத் தோன்றிய கடல்முனைக்கு பழைய குமரித்துறையின் நினைவாகவே குமரித்துறை என்றும் குமரிமுனை என்றும் பெயர் வழங்கியது.
கண்மணி    

இளங்கோ அடிகள் பரியாயப்பெயரால் ஒரு பொருளை, மனிதனைக் குறிப்பிடுவார். இதைப் பௌத்த நூல்களிலும் காணலாம் (உ-ம்: கொல்லிப்பாவை வசுமித்திரா என்கிறது கண்டவியூக சூத்திரம்).
கர்ணகி - தாமரைப்பொகுட்டினில் வாழ்பவள் (லக்ஷ்மி) > கண்ணகி என்ற பெயர் தருகிறார் ...
செங்கோடு என சுருளி/சுள்ளி மலையைச் சொல்கிறார். சுள்ளியாறு/சூர்ணியாறு பெயர் சுருளிமலையில் பிறப்பதால். கொங்கச் செல்வியான கண்ணகி திருச்செங்கோடு எது என அரும்பத உரைகாரரும்,
அடியார்க்கு நல்லாரும் வேறுபடுகின்றனர். ...

”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என்கிறபோது கோடு = மலை என்று சொல்லிவிடுகிறார், கொற்றிகோடு குமரி மாவட்டம்.
குமரித்துறை என்று இரண்டு இடங்களில் பயன்படுத்தும் இளங்கோ அடிகள் கவனமாக குமரித்துறை அன்று தாம் பேசுவது
என்பதற்கு குமரிக்கோடு என்கிறார். அம்மலை அடுக்கம் வரை கடல்கொண்டது என்பது நாவலின் உயர்வுநவிற்சி.

மதுரைக்காண்டம், அடைக்கலக் காதை:
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து, 
தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,

வஞ்சிக்காண்டம், நீர்ப்படைக்காதை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்: 
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு, 
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன், 
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின் 
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்: 

பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்டவதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு - வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ;

இவ்வுரை கொண்டே குமரிக்கோடு = கொற்றிகோடு என எழுதினேன்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 13, 2017, 1:09:23 AM12/13/17
to mintamil
முசிறித்துறை இருக்கும் ஊர் முசிரிக்கோடு
காரித்துறை இருக்கும் ஊர் காரிக்கோடு  
குமரித்துறை இருக்கும் ஊர் குமரிக்கோடு
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 13, 2017, 10:03:28 AM12/13/17
to மின்தமிழ்

On Tuesday, December 12, 2017 at 10:09:23 PM UTC-8, kanmanitamilskc wrote:
முசிறித்துறை இருக்கும் ஊர் முசிரிக்கோடு
காரித்துறை இருக்கும் ஊர் காரிக்கோடு  
குமரித்துறை இருக்கும் ஊர் குமரிக்கோடு
கண்மணி  

கோடு நீர்க்கரை என்ற பொருளில் சொல்கிறீர்கள்.
வஞ்சி மூதூர் என்னும் கரூரின் ஆன்பொருனைக்கரையில்
இருந்து, கேரளாவுக்கு வித்துவக்கோட்டை 10-ஆம் நூற்றாண்டின்
பின் சேர மன்னர்கள் மாற்றினார்கள். பொன்வானி பாரதப்புழையின் கரையில்
உள்ள வயல்களின் நடுவே. அதனை, வஞ்சிக்கோடு, திருவஞ்சிக்கோடு
என்கின்றனர். இங்கேயும் கோடு = நீர்க்கரை.
 
ஆனால்,
”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” இங்கே, கோடு = மலை (திருச்செங்கோடு, வேங்கோடு, ஏற்றக்கோடு, கொற்றிகோடு, ... போன்ற குமரி மாவட்ட மலைகள்).

இதனை 
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங்
கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் 

இந்தக் குமரி மலை = குமரிக்கோடு (கொற்றிகோடு).

NG

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 14, 2017, 1:02:44 AM12/14/17
to mintamil
இளங்கோவடிகள் கொற்றிக்கோடு என்ற மலையை குமரிக்கோடு என்று மாற்றித் தன் கற்பனைக் காவியத்தில் வழங்குகிறார் என்ற உங்கள் கொள்கைக்கு ஆதரவாக நீங்கள் கொடுக்கும் தரவு ஒன்றே ஒன்று தான்.
அதாவது அவர் கதைப் பாத்திரங்களின் பெயர்களை -கோவலன்,கண்ணகி ,கவுந்தி -முறையே கிருஷ்ணன்,கர்ணகி .......-என்ற பெயர்களிலிருந்து மாற்றிச்
சூட்டியுள்ளார் என்கிறீர்கள்.
சிலப்பதிகாரக் கதை கற்பனைக் கதை.கற்பனைப் பாத்திரங்களுக்கு கற்பனைப் பெயர் என்பது சரியே.
ஆனால் தன் கற்பனைக் கதை நிகழ்ச்சிகளை சரியான வரலாற்றுப் பின்னணியில் அவர் நடத்திச் செல்கிறார் .அதனால் தான் அவரது  நாடகம் பெரும் வெற்றி பெற்று இன்றுவரை போற்றப்படுகிறது.அவர் கையாளும் இடப்பின்புலம் அவரது சமகால நடப்பியல் கூறுகளுடன் மாறுபடாமல் இருந்ததால் தான் தனித்தமிழ் தேசீயக் காப்பியம் என்னும் சிறப்புக்கு இன்றும் பொருந்தி வருகிறது.கதைக்கேற்ற காலப் பின்புலத்தையும் மிக மிகத் துல்லியமாகத்
தேர்ந்தெடுத்துள்ளதால் -வெற்றிகரமான இயக்குனர் என்று இக்காலத்தில் புகழ்வது போல -அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து புகழ்ந்து வருகிறோம்.

எந்த ஒரு ஊரின் பெயரையும் அவர் மாற்றிக் கற்பித்தார் என்பதற்கு சான்றுகளே இல்லை .
குமரிக்கோடு குமரித்துறை இருந்த ஊர் என்னும் கொள்கைக்கு ஆதரவாக முதல் நிலையிலும் 2ம்.நிலையிலும் ஆறு தரவுகளைக் கொடுத்துள்ளேன்.
அந்தத் தரவுகளைப்  பொய்யாக்கினால் மட்டுமே உங்கள் கருதுகோளை ஏற்க இயலும்.
கண்மணி       

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Dec 14, 2017, 8:38:05 AM12/14/17
to mint...@googlegroups.com
(திருச்செங்கோடு, வேங்கோடு, ஏற்றக்கோடு, கொற்றிகோடு, ... போன்ற குமரி மாவட்ட மலைகள்).

இவை எங்கே உள்ளன என்று சொல்லுங்கள் . அறிந்து கொள்வேன்.

அரும்பத உரையாசிரியர், கோடு என்பதற்கு நீர்க்கரை என்று சரியாக பொருள் கொண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா. 

N. Ganesan

unread,
Dec 14, 2017, 9:02:43 AM12/14/17
to மின்தமிழ்

On Thursday, December 14, 2017 at 5:38:05 AM UTC-8, singanenjan wrote:
(திருச்செங்கோடு, வேங்கோடு, ஏற்றக்கோடு, கொற்றிகோடு, ... போன்ற குமரி மாவட்ட மலைகள்).

இவை எங்கே உள்ளன என்று சொல்லுங்கள் . அறிந்து கொள்வேன்.

அரும்பத உரையாசிரியர், கோடு என்பதற்கு நீர்க்கரை என்று சரியாக பொருள் கொண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா. 

இங்கே பாருங்கள்: இவற்றை குமரிமாவட்ட வரைபடத்தில் குறிக்கவேண்டும்.

https://ta.wiktionary.org/wiki/கோடு
  • மலை, மலைப் பகுதி, மேட்டு நிலம் என்னும் பொருளில் கோடு என்னும் சொல் பல ஊர்ப்பெயர்களோடு இணைந்து வழங்கப்படுவதைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணலாம். எ.டு.: கொற்றிகோடு வேங்கோடு, கொல்லங்கோடு, திருச்செங்கோடு, திருவிதாங்கோடு, ஏற்றக்கோடு, வெள்ளிகோடு.

கொற்றிகோட்டை குமரிக்கோடு என மாற்றி,  அதன் உச்சிக்கு சுனாமி அலைகள் சென்றன என்கிறார் இளங்கோ அடிகள். அடியார்க்குநல்லார் கோடு என்பதை மலை எனக் கொள்கிறார்.
அதையே 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள் கொள்கின்றனர். கண்மணி குமரி என்பது குமரித்துறை என 6 காரணம் தருகிறார். அதர்கு மேலும் காரணங்கள் குமரித்துறை என்பதற்கு உள்ளன.
எல்லாருக்கும் தெரிந்ததுதான் குமரித்துறை. ஆனால், ”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என் இளங்கோ அடிகள் குமரித்துறையினின்றும் வேறுபடுத்தியுள்ளார். அவரே குமரித்துறையில் நீராடுவது பற்றி இரண்டு இடங்களில் பாடியுள்ளமை கொடுத்துள்ளேன். எனவே தான் ‘பன்மலைஅடுக்கத்துக் குமரிக்கோடு’ = பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும்  என உரைகள் குறிப்பிடுவது சரி.

குமரிக்கோடு = குமரிமலை. எது அந்தக் குமரிமலை என்றால் கொற்றிகோடு.   கண்மணி கொற்றவை அதிலிருந்து கொற்றி என விளக்கம் கொடுத்தார். அதைப் பழநூல்களில் இருந்து காட்டி முன்னரே நச்சினார்க்கினியர் செய்துவிட்டார். சிறுபாணாற்றுப்படையில் வரும் வஞ்சி மாநகரம் கரூர் என்பதற்கும் நச்சினார்க்கினியர் உரையைப் படிக்கலாம்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 15, 2017, 11:01:45 AM12/15/17
to mintamil
 <ஆனால், ”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என் இளங்கோ அடிகள் குமரித்துறையினின்றும் வேறுபடுத்தியுள்ளார். அவரே குமரித்துறையில் நீராடுவது பற்றி இரண்டு இடங்களில் பாடியுள்ளமை கொடுத்துள்ளேன். எனவே தான் ‘பன்மலைஅடுக்கத்துக் குமரிக்கோடு’ = பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும்  என உரைகள் குறிப்பிடுவது சரி.>

பன்மலையை அடுத்திருந்த-/ஒட்டியிருந்த  குமரிக்கோடு என்பது தான் பொருள்.

 1)பன்மலையை மலை என்று சொன்னவர் குமரியை மட்டும் ஏன் 'கோடு 'என்று குறித்தார் ?
    2)"பன்மலை அடுக்கத்துக் குமரிமலையும் கொடுங்கடல் கொள்ள " என்று ஏன் பாடவில்லை.?
    3)கொற்றவை >>>கொற்றி என மாற்றம் பெறுவது இயற்கை 
        "பன்மலையடுக்கத்துக்  கொற்றிமலையும் கொடுங்கடல் கொள்ள "என்று என் பாடவில்லை.?

கண்மணி 

--

N. Ganesan

unread,
Dec 16, 2017, 1:21:45 AM12/16/17
to மின்தமிழ்
2017-12-15 8:01 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 <ஆனால், ”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என் இளங்கோ அடிகள் குமரித்துறையினின்றும் வேறுபடுத்தியுள்ளார். அவரே குமரித்துறையில் நீராடுவது பற்றி இரண்டு இடங்களில் பாடியுள்ளமை கொடுத்துள்ளேன். எனவே தான் ‘பன்மலைஅடுக்கத்துக் குமரிக்கோடு’ = பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும்  என உரைகள் குறிப்பிடுவது சரி.>

பன்மலையை அடுத்திருந்த-/ஒட்டியிருந்த  குமரிக்கோடு என்பது தான் பொருள்.

 1)பன்மலையை மலை என்று சொன்னவர் குமரியை மட்டும் ஏன் 'கோடு 'என்று குறித்தார் ?
    2)"பன்மலை அடுக்கத்துக் குமரிமலையும் கொடுங்கடல் கொள்ள " என்று ஏன் பாடவில்லை.?
    3)கொற்றவை >>>கொற்றி என மாற்றம் பெறுவது இயற்கை 
        "பன்மலையடுக்கத்துக்  கொற்றிமலையும் கொடுங்கடல் கொள்ள "என்று என் பாடவில்லை.?

கொற்றிகோடு = கொற்றிமலை. கோடு = மலை.

kanmani tamil

unread,
Dec 16, 2017, 1:43:20 AM12/16/17
to mintamil
இழையின் நோக்கம் கொற்றிக்கோட்டின் பொருள் என்ன என்பதல்ல.
குமரிக்கோடு எது என்பதே.

கொற்றிக்கோடு என்ற பெயரை குமரிக்கோடு என்று மாற்றி இளங்கோவடிகள் பயில்கிறார் என்ற உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்- அவ்வாறு அவர் மாற்றிப் பயிலும் பிற இருப்பிடங்கள் எவையேனும் இருந்தால் காட்டுங்கள்.
                                                                                                                                                                          ஒரு நகரம் =?
                                                                                                                                                                             ஒரு ஊர் =?
                                                                                                                                                                             ஒரு ஆறு =?
கண்மணி 

N. Ganesan

unread,
Dec 17, 2017, 12:22:05 PM12/17/17
to மின்தமிழ், vallamai
2017-12-15 22:43 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இழையின் நோக்கம் கொற்றிக்கோட்டின் பொருள் என்ன என்பதல்ல.
குமரிக்கோடு எது என்பதே.

கொற்றிக்கோடு என்ற பெயரை குமரிக்கோடு என்று மாற்றி இளங்கோவடிகள் பயில்கிறார் என்ற உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்- அவ்வாறு அவர் மாற்றிப் பயிலும் பிற இருப்பிடங்கள் எவையேனும் இருந்தால் காட்டுங்கள்.
                                                                                                                                                                          ஒரு நகரம் =?
                                                                                                                                                                             ஒரு ஊர் =?
                                                                                                                                                                             ஒரு ஆறு =?
கண்மணி 

குமரிக்கோடு = கொற்றிகோடு.

தென்திசை - கொற்றவைக்கும், வடசிசை - சிவனுக்கும்/ரிஷபநாதர் (ஆதிநாத தீர்த்தங்கரருக்கும்) ஆனது என்பது இந்திய செம்மொழி இலக்கியங்களின் பழமரபு.
குமரித்துறை என்று பாடிய இளங்கோஅடிகள் அதனணித்தே உள்ள கொற்றிகோட்டை அதன் பரியாயப் பெயரால் குமரிக்கோடு எனக் குறித்தார்.
கடலின் பேரலை வந்தபோது குமரிக்கோடு/கொற்றிகோட்டையே மூழ்கடித்தது என்கிறார். இது உயர்வுநவிற்சியணி. இதுபோல பல சிலம்பிலே உள்ளன.
உ-ம்: வட இந்திய மன்னரை 18 நாழிகையில் வென்ற போர்.

குமரிக்கடல் என்னும் தென்கடலை ‘தொடியோள் பௌவம்’ என்பது கொற்றிகோட்டை குமரிக்கோடு என்னுமாப்போன்ற இலக்கிய உத்தியே
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்பதிகாரம்). ஏன் இளங்கோ அடிகள்
குமரிக்கடல் என்றி பாடவில்லை? - என யாரும் கேட்பதில்லை.

தெற்கே நித்தம் தவம்செய்யும் குமரியன்னை, வடக்கே ஆல மர நீழலில் உள்ள தவ யோகியாம் சிவன்/ரிஷபநாதர். வடக்கே இருந்து
தெற்கே கொற்றித் தொடியோளைக் கலியாணம் மூய்க்க வருகிறான். சைவ புராண வளர்ச்சி. ஆல மரம் இந்தியாவின் முதற்கடவுள்
விடங்கருக்குத் தொடர்புடையது. வடமீன், வட விருக்‌ஷம் = ஆல மரத்தின் த்ராவிடசொல்லை வடமொழி ஏற்றுள்ளது. வடம் = aerial roots
of the Banyan. ஆலமரம் இமையமலை இறைவன் எனக் குறிக்க, கற்பனையான ஓர் இடத்தில் (ஆல் - ஆலுவம். சோழநாட்டில் குயில் ஆலந்துறை
உள்ளது.) செங்குட்டுவன் போர் கனக விஜயருடன் என இளங்கோ அடிகள் பாடுகிறார்.

ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
“ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு,
கயந் தலை யானையின் கவிகையின் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோர்-தம்மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது” என்றனன் போர் வேல் செழியன்’ என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-

விஷ்ணு பெருமாளின் நிறம் பொன் மயமானது (சூரியக் கதிர்கள்)
எனவே, கனக-விசயர் = விஷ்ணு-அர்ஜுநன் என தம் நாவலில் வைத்தார்.
இளங்கோ வாழ்ந்த வஞ்சி மாநகர் (கரூர்) அருகிலே இதனைக் காட்டலாம்.
கொங்கில் அண்ணமார்கதை நாட்டார்காவியம் புகழ்பெற்றது.
அதில் முக்குழந்தைகள் பற்றிய கதை. பொன்னர், சங்கர், தாமரை.
பொன்னர் - கனகமயான ஆழி, சங்கர் - சங்கு. விஷ்ணுவின் அம்சமாக சங்கும், சக்கரமும்
அவர்கள் பெயர்கள். தாமரை = கர்ணகீ என்று இளங்கோ பெயர்கொடுத்தாரே, அதே லக்ஷ்மி.
முல்லைக் கோபியரின் குறியீடாக, மாதவி (குருக்கத்தியை) பெயராக ஆள்கிறார்.
இன்னும் பல இட, மக்கள் பெயர்களைக் குறிப்பால் வைத்தார் இளங்கோ அடிகள்.
உ-ம்: கொற்றிகோட்டை குமரிக்கோடு என்றும், குமரிக்கடலை தொடியோள்பௌவம் என்றும் ...
இது பௌத்த நூல் கண்டவியூகத்தில் அவர் தம் தொல்குலம் வாழ்ந்த வஞ்சிமாநகரில் 
பல ஆசான்களிடம் கற்றுக்கொண்ட நூல். அதனைத் தமிழில் தம் ஜைநம் பரப்புமுகமாக
நாவலில் கைக்கொண்டார். வட பெருங்கோடு - காதத்தைக் கணித்துப் பார்க்கையில்
அறியலாம், காவேரி பிறக்கும் இடம், கங்க ராஜ்யத்தில். வடபெருங்கோடு - காவேரி
பிறக்கும் சையமலைப் பிரதேசம். அங்கே பொழில்மண்டிலம் உண்டு.
வணிகர்களுக்கு ஐம்பொழில் பரமேசுவரி என்பது குலதெய்வம்.
இளங்கோ அடிகள் கூறும் வடபெருங்கோட்டுத் தண்பொழில் மண்டிலம் தான் அது.
ஐம்பொழில் என தமிழ் ஜைந கல்வெட்டுகள் குறிப்பிடும் ஊர் இன்று
ஐஹொளெ என்பர் கர்நாடகத்தில். ஹொளெ நர்சிபூரும் அப்பகுதி தான்.

கண்டவியூகப் பாதையில் நாடுகாண் காதை: இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். இவை வட கொங்கு தேசம். இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்பவை மரபுச் சொற்கள் காவிரி தோன்றும் பகுதியைச் சார்ந்தனவாதலாலும்  கவுந்தி அடிகள் ஊர் காவேரி நதி தோன்றும் பிரதேசம் எனத் தெளிவடைய முடிகிறது. சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், மலை அடுக்கங்கள் கொண்ட சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்க பட்டினம் கங்கர் ராஜ்யத்தைச் சேர்ந்தது. ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி அருகே இருந்த துருத்தி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண் காதையின் பொருள் தெளிவாக விளங்கும். சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் காவேரி பாயும் நாடு முழுமையும் பாட கவுந்தி அடிகளைச் சையமலையில் சந்தித்து, சுமார் 360 மைல் தூரம் கொண்ட மார்க்கத்தில் திருவரங்கம் வந்து பின் மதுரை செல்வதாகப் பாடியுள்ளார். பூம்புகாரில் இருந்து நேராக மதுரை சென்றால் தூரம் குறைவு என்பது உண்மையே. கர்நாடகாவில் என்றுமே சிறப்பாக இருப்பது சமண சமயம். சீரங்க பட்டின மன்னர்கள் கங்க ராஜாக்கள், அந்த ஊரிலே சமணத்தைக்  கவுந்தி வாயிலாகக் கோவலன் – கண்ணகி கற்கின்றனர். பௌத்த சமயக் கோட்பாடுகள் கண்டவியூகத்தில் வருகின்றன. கண்டவியூக உத்தியில் சோழ ராஜ்ஜியத்தின் வளமைக்குக் காரணமான காவிரியின் தோற்றம் முதல் பாடி, கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து,அவர் வழியாக சமண சமயத்தின் முக்கியக் கோட்பாடுகளை விரிவாக நாடுகாண் காதையில் விளக்குகிறார். பௌத்தத்துக்கு கண்டவியூகம் பாரதம் முழுதும் காட்டுவது போல, சோழர்களின் காவேரியின் பெருமை முழுவதையும் புகழ்ந்து நாடுகாண் காதையை முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்திலே அமைத்திருப்பது மிகச் சிறப்பு. மகாகவி பாரதியார் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று போற்றியது பொருள்பொதிந்த வாக்கு!

இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:

நா. கணேசன்

தேமொழி

unread,
Dec 17, 2017, 12:40:31 PM12/17/17
to மின்தமிழ்
///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.
..... தேமொழி

N. Ganesan

unread,
Dec 17, 2017, 12:46:48 PM12/17/17
to மின்தமிழ்
2017-12-17 9:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.

தொல்லியல், வரலாறு, இந்திய செம்மொழிகளின் இலக்கியங்கள் ஒப்பிட்டுப் பார்க்காமல் எழுதியுள்ளனர்.

நா. கணேசன்

..... தேமொழி

kanmani tamil

unread,
Dec 17, 2017, 2:36:28 PM12/17/17
to mintamil

உங்கள் மின்மடலிலிருந்து இன்று எனக்குக் கிடைத்த புதுத்  தகவல் -ஆலமரத்துக்கு வேர்ச்சொல் திராவிடத்திலிருந்து ......அழகான சுவையான தகவல்.

கண்டவியூகம் நான் படித்தது இல்லை.அதைப் பற்றி நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள்.-தெரிந்து கொள்கிறேன்.

பிற செய்திகள் எல்லாம் ......நீங்கள் இவ்வாறு தொகுத்துக் கொடுப்பதன் காரணமாக நான் என்ன கருதுகிறேன் தெரியுமா?
என் பட்டறிவிற்கு எட்டியதைக் கூறுகிறேன்......அருள் கூர்ந்து சினம் கொள்ள வேண்டாம்.....நீங்கள் என்னை விடப் பெரியவர்.

மிகமிக வேகமாக -ஆசிரியர்க்கு சவாலாக -ஆழமாகவும்,அகலமாகவும் கற்றுக் கொள்ளும் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
இவர்களிடம் என்ன பிரச்னை இருக்கும்/ஏற்படும் தெரியுமா !
தாம் தெரிந்து கொண்ட செய்திகளை அவர்களால் விடைத்தாளில் கொட்டாமல் இருக்கவே முடியாது.
அந்தச் செய்திகளுக்கு இடையில் தொடர்பையும் இவர்களே கற்பித்து விடுவார்கள்.
இவர்களைத் தேர்விலே ஒப்பேற வைப்பதற்கு ஆசிரியர் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

கண்டவியூகம் பற்றி உங்களுக்கு மிகுதியாகத் தெரிந்திருப்பது தான் பிரச்சினையே.
சிலப்பதிகாரம் அழகான நாடகக் காப்பியம்.அதன் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக அதில் கண்டவியூகத்தைத் திணிப்பானேன் !
நாடுகாண் காதை -100%புகாரிலிருந்து உறையூர் வரை உள்ள சோழநாட்டு வளம்.
அது சமணசமயம் சார்ந்தது என்பதை நான் மறுக்கவில்லை.அதற்காக புகாரிலிருந்து கிளம்பி மதுரை வரவேண்டியவர்கள் சீரங்கப்பட்டணத்தைச் சுற்றி வந்தனர் என்றால் .......தன் பாத்திரங்களை அவ்வளவு முட்டாள்களாக இளங்கோவடிகள் படைக்கவில்லை.

"வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் "ஆகிய தன் மனைவி ஊரை விட்டு வெளியேறிய சில நாழிகைக்குள் ,'மதுரை மூதூருக்கு இன்னும் எவ்வளவு தூரம்?' என்று கேட்க -"ஆறைங்காதம் நம் அகநாட்டும்பர் "என்று--- அவள் மலைத்து விடக்கூடாதெனச் சொன்னவன் கோவலன். மனைவி மேல் அன்பும்,ஒருவர் மேல் மற்றவர்க்கு அக்கறையும் தோன்றியதன் அடையாளமாக அமைந்த உரையாடல் இது. கணவன் மனைவி நெருக்கத்தைப் பொய்யாக்கி அதற்கு கண்டவியூகம் என்ற சாயத்தைப் பூசி இலக்கிய அழகைச் சிதைக்க வேண்டாமே .

குமரிக்கோடு என்ற பெயருக்கு பெரிப்ளூஸ் ,டாலமி ,ஸ்டராபோ,ஃ பரியாய் சௌயா காலத்திலிருந்து ஒரு வரலாறு இருக்கிறது.நான் கொடுத்துள்ள ஆறு  தரவுகளும் அந்த வரலாற்றைப் பேசுகின்றன.

கொற்றிக்கோடு என்ற பெயருக்கு என்ன வரலாறு இருக்கிறது? பொருள் ஒப்புமை இருப்பதை நான் மறுக்கவில்லை.

எனவே குமரிக்கோடு  என்பது பன்மலை அடுக்கத்தை ஒட்டி/அடுத்து  குமரித்துறை இருந்த ஒரு ஊரின் பெயர் ஆகும்.வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோள் பஃறுளி ஆற்றின் கழிமுகப் பகுதியையும் அதன் கரையிலிருந்த குமரிக்கோட்டையும் அழிக்க புதிதாக குமரியம்பெருந்துறை தோன்றியது.

குணகடல் ,குடகடல், தொடியோள் பௌவம் அனைத்தும் காரணப்பெயர்களே .இவை அனைத்திற்கும் வரலாறு உள்ளன .
கொற்றிக் கோடு என்ற பெயர்ச் சொல்லுக்கு  ...........வரலாறு ..........??????? 
கண்மணி     

iraamaki

unread,
Dec 17, 2017, 6:05:34 PM12/17/17
to mint...@googlegroups.com
இவர் கண்டவியூகம் என்று சொல்வது படிப்போரைப் பயமுறுத்தும் சொல். ”ஒருநாள்கூட கணடவியுகத்தின் உள்ளடக்கம் என்ன? அது கதையா? கட்டுரையா? அதற்கும் சிலப்பதிகாரத்திற்கும் என்ன ஒப்புமை? எங்கெலாம் அவை ஒன்றுபடுகின்றன?  எங்கெலாம் வேறுபடுகின்றன?  கண்டவியூகத்தின் மொழிபெயர்ப்பு உண்டா?”  என்றேதும் கூறவில்லை. 70/80 ஆண்டுகள் சிலப்பதிகாரம் பற்றிப் பலரும் பலவற்றையும் எழுதுகிறார். ஒருவர்கூட அது கண்டவியூகத்தின் படியெடுப்பென்று இதுவரை சொன்னதில்லை.  பாகதம் தெரியாத இவரோ சும்மா பம்மாத்து/பூச்சாண்டி செய்துகொண்டேயிருக்கிறார் இளங்கோவிற்கு திருட்டுப்பட்டமும் கட்டுகிறார். நாமெல்லாம் காதில் பூவைத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணுகிறார்.
 
அப்புறம் வேறொரு செய்தி:
 
நான் திருப்புனல்வாசலுக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ளவன். பாம்பாற்றின் கரையிலுள்ள அந்தவூரில் மதகு இருப்பதாய் நான் கேள்விப் பட்டதில்லை.  இவர்பாட்டிற்கு புனல்வாயில் பற்றிக் கதைவிடுகிறார்.  குடவஞ்சி பற்றி இவரெழுதும் பலவும் 100/90 கதையாகவேயுள்ளன. உரையாட்டின் நடுவில் ஊடே வரவேண்டாமென்றே ஒதுங்கியிருக்கிறேன்.  எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.  இவருடைய கொங்குவஞ்சியின் இருப்பை யாரும் குறை சொல்லவில்லையே? பிறகு ஏன் இப்படி விழுந்துவிழுந்து எழுதுகிறார்?
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 18, 2017, 10:32:08 AM12/18/17
to மின்தமிழ்

On Sunday, December 17, 2017 at 9:46:48 AM UTC-8, N. Ganesan wrote:

2017-12-17 9:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.

கற்பனை வளம் குறைவு எனச் சொல்லவியலாது. சங்க இலக்கிய காலத்தில் இமயமலையை வென்றனர். சிலம்பில் செங்குட்டுவன் சென்றது
கி.மு. நூற்றாண்டுகள், இளங்கோ கி.மு. நூற்றாண்டினர், மாணிக்கவாசகர் கி. பி. 3-ஆம் நூற்றாண்டு என்றெல்லாம் 20-ஆம்
நூற்றாண்டில் எழுதினர். இப்போது எந்தத் தமிழறிஞரும் இளங்கோ அடிகள் காலம் கி.மு. நூற்றாண்டு, திருவாசகம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு
என்பதெல்லாம் இல்லை. It takes Time.

பெரியார் அவர் கண்ட தமிழ்ப் புலவர்களைப் பற்றி என்னவெல்லாம் கூறியுள்ளார் என தொகுத்து எழுதுங்கள். அப்போதைய நிலைமை புரியும்.
குமரிக்கண்டம் புராண வளர்ச்சி, தமிழ்த்தாய் உலக மொழிகள் எல்லாம் தந்தவள் - இவை பற்றி நல்ல நூல்கள் பல்கலைக்கழகங்களில்
வந்தாயிற்று. 20-ஆம் நூற்றாண்டு கற்பனை வஞ்சி மாநகரம் அறபிக் கடற்கரையில் என்பது பற்றி சங்க இலக்கிய ஆய்வு செய்யும்
ஹார்வர்ட், பிற உலகப் பல்கலைகளில் ஆராய்ந்து எழுதுவர். தரவுகளை அளிப்போம். கொச்சி சமஸ்தானத்தின் பங்கு, 20-ஆம் நூற்றாண்டின்
தமிழ்நாட்டு அரசியல் சூழல், .. பங்களிப்பு ...

வஞ்சி மாநகர் சேரர் மலை கொல்லிமலை ஆனதால் கொல்லிநகர் எனப்பட்டது. அவ்வூரின் மன்னர் கொல்லிநகர்க்கிறை என்று
அழைத்ததை நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரம் அளித்தேன்.  அதே போல, குமரி தெற்கு திசை என்பது இந்தியர்களின்
சமய மரபு. தமிழகத்தில் ராமேசுவரம் சேது தீர்த்தமும், கன்யாகுமரி தீர்த்தமும் 3000 ஆண்டுகளாகப் புகழ்பெற்றவை.
மணிமேகலையில் வடநாட்டில் இருந்து கன்யாகுமரித் துறைக்கு தீர்த்த யாத்திரை வருதலைக் கூறும் பகுதிகள் முக்கியமானவை.
சிலம்பில் இரண்டு இடங்களில் குரைத்துறை ஆடல் கூறப்படுகிறது.
குமரியம்பெருந்துறை பாரத தேசத்தவர் எல்லாரும் அறிந்தது. அதன் அருகே குமரி பெயரால் கொற்றிகோடு மலை அமைந்துள்ளது.
கொற்றிகோடு கடலலையால் மூழ்கியது என்பதைப் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு என்றார் இளங்கோ அடிகள்.

பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்டவதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு - வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ;

குமரிக்கோடு கொற்றிகோட்டின் பரியாயப் பெயர்களில் ஒன்று. கோடு என்றால் மலை என்று பல மலைகள் குமரிமாவட்டத்தில் உள்ளதே பலரும் அறியாதுள்ளனர். வஞ்சி மாநகரம் கொல்லிநகர் என்பதுபோல கொற்றிகோட்டை குமரிக்கோடு என அழைத்து கடலலையின் உயரத்தை, தாக்கத்தை உயர்வுநவிற்சியால் வர்ணிக்கிறார் அடிகள். பரியாயப் பெயர்களால் குறிப்பது அடிகள் பல இடங்களில் செய்துள்ளார். உ-ம்: வஞ்சி மாநகர் அருகே உள்ள செங்கோடா, சுருளிமலைக்கு அவர் சூட்டும் பெயரான செங்கோடா என்பது உரையாசிரியர்களிடையே வேறுபாடுண்டு. குமரிக்கடலை தொடியோள்பௌவம் என அழைப்பது போல, குமரிமலையினை குமரிக்கோடு என கடல்கோளின் வலிமையைச் சொல்கிறார்.

------------

புனவாசல் என்று பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் குளங்களும், அவற்றின் மதகுகளும் நீர்வளத்தை அளித்தன. புனல்வாயில் என்பது புனவாசல் என்றிருக்கும் ஊர்களுக்கெல்லாம் தூய செந்தமிழ்ப் பெயராகும். புனல்வாயில் என்றால் மதகு (Sluice to canals from lakes) என்பது பொருள். சேரநாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தால் இது விளங்கும். ஆனால், அரசர்களின் தலைநகரங்களில் எல்லா ஊரிலும் இருக்கும் புனவாசலைப் பொருளாகக் கொள்ளவேண்டா என வலியுறுத்தியுள்ளார் நச்சினார்க்கினியர்,

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது - பெருகுகின்ற நீரையும் கோபுரவாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் 
பரிசில் சிறியதாயிருக்கும்; - நச்சினார்க்கினியர், சிறுபாண். உரை. It takes Time, to realize the philological conclusion that there was no Vanji major city

on the Arabian sea coast during Sangam times (1-3rd centuries CE). Similarly, kumaricode in Cilambu is kumarimalai (cf. kotricode). It all takes Time.

அடியார்க்குநல்லார்  போன்றோர் விளக்கிய குமரிக்கோடு என்பதில் கோடு = மலை. It takes Time, as the pseudo-history of KumarikkaNDam gets understood.

NG

N. Ganesan

unread,
Dec 18, 2017, 10:59:50 AM12/18/17
to மின்தமிழ், vallamai
On Monday, December 18, 2017 at 6:14:06 AM UTC-8, THEETHARAPPAN R wrote:
கோடு என்பது மலையைத்தான் குறிக்கிறது. குமரி மாவட்டத்தில் விளவங்கோடு என்று ஊர்ப் பெயர் இருப்பதைக் காணலாம்.

விளக்கியமைக்கு நன்றி, தீத்தாரப்பன் ஐயா. குமரி மாவட்டத்தில் பல மலைகளுக்குப் பெயர் -கோடு என இருக்கிறது,

https://ta.wiktionary.org/wiki/கோடு
  • மலை, மலைப் பகுதி, மேட்டு நிலம் என்னும் பொருளில் கோடு என்னும் சொல் பல ஊர்ப்பெயர்களோடு இணைந்து வழங்கப்படுவதைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணலாம். எ.டு.: கொற்றிகோடு வேங்கோடு, கொல்லங்கோடு, திருச்செங்கோடு, திருவிதாங்கோடு, ஏற்றக்கோடு, வெள்ளிகோடு.
 
குமரிக்கோடு என கொற்றிகோட்டை கடல்கோளின் போது வந்த ஆழிப்பேரலையின் உயரத்தை உயர்வுநவிற்சியாகப் பாவிக்கிறார் அடிகள்.
குமரிக்கடலை ஏன் குமரிக்கடல் என்று சொல்லாமல், தொடியோள்பௌவம் என பரியாயப் பெயரால் அழைக்கிறார் என யாரும் கேட்பதில்லை.
அதே போல, குமரிகோடு = கொற்றிகோடு. கோடு = மலை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 18, 2017, 11:38:01 AM12/18/17
to mintamil, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.

மற்றபிற கோடுகளைவிட குமரிக்கோடு வயதில் இளையது.  அதனால் குமரி என்ற பண்பாகுபெயர்.
கடலில் குமரி யில்லை.  எனவே குமரிக்கடல் என்ற பெயரில்லை.

அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Dec 19, 2017, 6:24:44 AM12/19/17
to மின்தமிழ், vallamai
2017-12-18 8:37 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

மற்றபிற கோடுகளைவிட குமரிக்கோடு வயதில் இளையது.  அதனால் குமரி என்ற பண்பாகுபெயர்.
கடலில் குமரி யில்லை.  எனவே குமரிக்கடல் என்ற பெயரில்லை.

2000 வருஷமுன்பு ஜியாலஜி என்னும் ஸயன்ஸ் உருவாகவில்லை. தமிழர்
பாரதாமாதா என்கிறீர்களே, வாலைக்குமரி அவள் பெயரால் குமரிமுனையை அழைத்தனர்.
குமரித்துறை அருகே உள்ள கடல் குமரிக்கடல். சிலப்பதிகார உரையாசிரியர்கள்
‘குமரிக்கடல்’ என்று பாவிக்கின்றனர். இன்று பத்திரிகைத்துறையில்
பெருவழக்காக் உள்ளது: குமரிக்கடலில் ஒக்கிப் புயல் ... 
கொற்றிகோட்டை குமரிக்கோடு எனப் பரியாயப்பெயரால் இளங்கோவடிகள் அழைப்பதுபோலவே,
குமரிக்கடலை ‘தொடியோள் பௌவம்’ என்கிறார்.
திசைகள் பெயரால் வடகடல், தென்கடல், குணகடல், குடகடல் நடுவே இருப்பது
நாவலந்தீவு (நாவல்பழப்பெயர்: ஜம்புத்வீபம்). இந்த நாலு கடலிலும்
தீர்த்தம் கொணர்ந்து மண்ணுமங்கல நாளில் (ராஜ்ய பட்டாபிஷேக நாள்)
நீராட்டு நடப்பதை மெய்க்கீர்த்திகள் தாம்பிர சாசனங்களில் கூறும். இதனை
’இருகடல் நீர் ஒருபகல் ஆடி’ எனல் சங்க இலக்கிய வழக்காறு.

தென்கடலை குமரிக்கடல் ‘தொடியோள் பௌவம்’ என்பது ஹிந்து சமயம்.
குமரித்துறைக்கும், ராமேசுவரத்துக்கும் ஹிந்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக
தீர்த்தமாட வருகிறார்கள். இவை செம்மொழி இலக்கியங்களிலே பார்க்கலாம்.
குமரிக்கடல் அருகே உள்ளது குமரிக்கோடு (=கொற்றிகோடு). கோடு என்று
பல மலைகள் குமரி மாவட்டத்தில் உள்ளன அறிவீர்கள். அம்மலைகளை
சுரேஷ்குமார் போன்றோர் குறித்து ‘குமரி மாவட்ட மலைகளும், பெயர்களும்’
என கூகுள் மேப் தயாரித்தால் பயன்மிகும்.

இளங்கோ அடிகள் இருபொருள்பட எழுதுவதில் வல்லாளர்.
ஆலு = ஆலமரம் என்பது சேரநாட்டுவழக்கு
(கோல்:கோலு, வேல்:வேலு, பால்:பாலு, கால்:காலு, ... என்கிறோமே,
அதுபோல, ஆல்:ஆலு - இந்தியாவின் தேசியமரம்.)
சிவன் இமையத்தில் ஆலின் அடிஅமர்ந்து இருடியர்க்கு மறைபுகல்பவன்.
அதனால், சேரன் செங்குட்டுவன் இமையமலையில்
சிவனை வணங்கினான் எனக் குறிக்க, ஒரு (கற்பனை) தலப்பெயரை
உருவாக்கிச் சொல்கிறார் அடிகள். ஆலுவம் = ஆலு + வ் + அம்.
வ் = உடன்படுமெய் (glide), அம் - சாரியை.
ஆலுவத்தில் (ஒரு ஆலந்துறையில்) சிவனை வணங்கிச் சேரராஜன்
வடக்கத்தி மன்னரைப் 18 நாழிகையில் வென்றானாம்.

தென்திசை - கொற்றவைக்கும், வடசிசை - சிவனுக்கும்/ரிஷபநாதர் (ஆதிநாத தீர்த்தங்கரருக்கும்) ஆனது என்பது இந்திய செம்மொழி இலக்கியங்களின் பழமரபு.
குமரித்துறை என்று பாடிய இளங்கோஅடிகள் அதனணித்தே உள்ள கொற்றிகோட்டை அதன் பரியாயப் பெயரால் குமரிக்கோடு எனக் குறித்தார்.
கடலின் பேரலை வந்தபோது குமரிக்கோடு/கொற்றிகோட்டையே மூழ்கடித்தது என்கிறார். இது உயர்வுநவிற்சியணி. இதுபோல பல சிலம்பிலே உள்ளன.
உ-ம்: வட இந்திய மன்னரை 18 நாழிகையில் வென்ற போர்.

குமரிக்கடல் என்னும் தென்கடலை ‘தொடியோள் பௌவம்’ என்பது கொற்றிகோட்டை குமரிக்கோடு என்னுமாப்போன்ற இலக்கிய உத்தியே
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்பதிகாரம்). ஏன் இளங்கோ அடிகள்
குமரிக்கடல் என்றி பாடவில்லை? - என யாரும் கேட்பதில்லை.

தெற்கே நித்தம் தவம்செய்யும் குமரியன்னை, வடக்கே ஆல மர நீழலில் உள்ள தவ யோகியாம் சிவன்/ரிஷபநாதர். வடக்கே இருந்து
தெற்கே கொற்றித் தொடியோளைக் கலியாணம் மூய்க்க வருகிறான். சைவ புராண வளர்ச்சி. ஆல மரம் இந்தியாவின் முதற்கடவுள்
விடங்கருக்குத் தொடர்புடையது. வடமீன், வட விருக்‌ஷம் = ஆல மரத்தின் த்ராவிடசொல்லை வடமொழி ஏற்றுள்ளது. வடம் = aerial roots
of the Banyan. ஆலமரம் இமையமலை இறைவன் எனக் குறிக்க, கற்பனையான ஓர் இடத்தில் (ஆல் - ஆலுவம். சோழநாட்டில் குயில் ஆலந்துறை
உள்ளது.) செங்குட்டுவன் போர் கனக விஜயருடன் என இளங்கோ அடிகள் பாடுகிறார்.

செங்கோடு என்பதும் இருபொருளில் சொல்கிறார்:
சுருளிமலை எல்லோரும் அறிந்த பழம்பெயர். இதனால் சுருளியாறு சுள்ளியாறு
என சங்க இலக்கியத்தில். சுள்ளி/சூர்ணி ஆறு, இதன் கரையில்
பெருந்துறைமுகம் முசிறி பட்டினம். இப்போது தொல்லியலாளர்
கண்டுபிடித்தனர். சுருளி/சுள்ளிமலையைச்
செங்கோடு என அழைக்கிறார். கூடவே, நெடுவேலான் குன்றம்
செங்கோடு என்றும் சொல்கிறார். காந்தார நாட்டிலிருந்து
ஸ்கந்தஸ்வாமியின் வடிவம் தமிழ்நாட்டுக்கு சேவலைப் பிடித்துக்கொண்டு
வரும் இடம் திருச்செங்கோடு. அதனையும் குறிப்பால் உணர்ந்தினார்
அடிகள். சுருளி = சாம்பிராணி மரங்கள். இவைமிகுந்த மலை சுருளிமலை/சுள்ளிமலை:
இந்தத் தொல்பெயர் இருக்க, செங்கோடு என்று இன்னொரு பெயரால்
கண்ணகி தெய்வமான, கோயில் அமைந்த இடம் பற்றிக் கூறினார் அடிகள்.
செங்கோடு எந்த இடம் என்று அடிகள் கருதினார் என்பதனை
மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் விரிவாக ஆராய்ந்து
எழுதியுள்ளார்.  இந்தியாவின் முதல் சுற்றுலா இலக்கியம் கண்டவியூகம்.
மிகுபுகழ்பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே சீன மொழியில்
மொழிபெயர்க்கப்பட்ட் மஹாயாந சூத்திரம். மகாகவி காளிதாசருக்கும்,
இளங்கோ அடிகளுக்கும் பாட்டை போட்டுக்கொடுத்த நூல்.
அந்நூலில் இட, மக்கள் பெயர்களைக் குறிக்கும் முறையை
தமிழில் சிலம்பு அறிமுகப்படுத்துகிறது. தமிழின் இயல்பாகிய
உள்ளுறை, இறைச்சிப்பொருள் இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரம்.
த்வனி என்னும் கோட்பாடு தமிழில் இருந்து வடமொழிக்குச்
செல்வது போல, உள்ளூறையாக இட, மக்கள் பெயர்களை
குறியீடாகச் சொல்கிறார் அடிகள்.

மன்னர்கள் குமரித்துறைப் பகுதியை ஆள்வதில் பெருவிருப்புடையவராய்
இருந்தமை இச்செய்யுளால் தெரியும்:
   மன்ன னேரியன்
   சென்னி மானதன்
   கன்னி காவலன்
   பொன்னி நாயகன்

ஆறாண்டு+ முன்பு கன்னிநாடு (=பாண்டிநாடு) பெயர்பற்றி ஒருமுறை பலர் பேசினர்.
அப்போது எழுதினேன்:
கன்னி = குமரி. இது வாலை ஆகிய கொற்றி பெயரால் நாவலந்தீவின் தென்முனைக்கு
அமைந்தது. அப்போது ஜியாலஜி எல்லாம் உருவாகலை. இளங்கோ அடிகள் வஞ்சி மாநகர
அரண்மனையில் கற்றபோது அவருக்கு யாரும் கற்பிக்கலை. குமரித்துறை, குமரிக்கடல் ‘தொடியோள் பௌவம்’,
குமரிக்கோடு ‘கொற்றிகோடு’ எல்லாம் தாய்த்தெய்வத்தின் பெயரே. 

நீலத் திரைகடல் ஒரத்திலே நின்று 
  நித்தம் தவம்செய் குமரி எல்லை - வட 
மாலவன்குன்றம் இவற்றிடையே புகழ் 
  மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு! - பாரதி

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 19, 2017, 7:13:22 AM12/19/17
to mintamil
 <புனல்வாயில் என்றால் மதகு (Sluice to canals from lakes) என்பது பொருள். சேரநாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தால் இது விளங்கும். 
கணேசன் எழுதியது ->
சேர நாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தில் 'புனல் வாயில் 'எங்கே உள்ளது?
பதட்டத்தோடு எழுதுவதாகத்  தெரிகிறது.
'புனல்வாயில் '-----சிறுபாணாற்றுப் படையில் இடம் பெறும் தொடர்.
கண்மணி 

kanmani tamil

unread,
Dec 19, 2017, 7:18:46 AM12/19/17
to mintamil
<இளங்கோ அடிகள் இருபொருள்பட எழுதுவதில் வல்லாளர்.
ஆலு = ஆலமரம் என்பது சேரநாட்டுவழக்கு
(கோல்:கோலு, வேல்:வேலு, பால்:பாலு, கால்:காலு, ... என்கிறோமே,
அதுபோல, ஆல்:ஆலு - இந்தியாவின் தேசியமரம்.)
சிவன் இமையத்தில் ஆலின் அடிஅமர்ந்து இருடியர்க்கு மறைபுகல்பவன்.
அதனால், சேரன் செங்குட்டுவன் இமையமலையில்
சிவனை வணங்கினான் எனக் குறிக்க, ஒரு (கற்பனை) தலப்பெயரை
உருவாக்கிச் சொல்கிறார் அடிகள். ஆலுவம் = ஆலு + வ் + அம்.
வ் = உடன்படுமெய் (glide), அம் - சாரியை.
ஆலுவத்தில் (ஒரு ஆலந்துறையில்) சிவனை வணங்கிச் சேரராஜன்
வடக்கத்தி மன்னரைப் 18 நாழிகையில் வென்றானாம்.>

இரண்டு பொருள்கள் என்னென்ன?
1)குயிலாலுவம் கற்பனைப் பெயர் என்கிறீர்கள் .
2)...............................................................................?
கண்மணி 

kanmani tamil

unread,
Dec 19, 2017, 7:27:01 AM12/19/17
to mintamil
<திசைகள் பெயரால் வடகடல், தென்கடல், குணகடல், குடகடல் நடுவே இருப்பது
நாவலந்தீவு (நாவல்பழப்பெயர்: ஜம்புத்வீபம்). இந்த நாலு கடலிலும்
தீர்த்தம் கொணர்ந்து மண்ணுமங்கல நாளில் (ராஜ்ய பட்டாபிஷேக நாள்)
நீராட்டு நடப்பதை மெய்க்கீர்த்திகள் தாம்பிர சாசனங்களில் கூறும்.>

வடகடல்என்ற தொடர் எந்த இலக்கியம் /சாசனத்தில் உள்ளது?
நாலு கடல் நீரைப் பற்றிப் பேசும் நூல் எது?
ஆதாரம் காட்டவில்லை எனின் இது கப்ஸா என்று பொருள்.
கண்மணி  

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
Dec 19, 2017, 8:53:35 AM12/19/17
to N. Ganesan, மின்தமிழ், vallamai
ஆகா! ஆகா! என்னே ஆராய்ச்சி!! மிகு நன்றி ஐயா!

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUewsP_fc8Fy-kbmOXUwesV%3DPJz3%3De47GycbaYZhR0fr1A%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

N. Ganesan

unread,
Dec 19, 2017, 9:58:09 AM12/19/17
to மின்தமிழ், vallamai
2017-12-19 4:18 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<இளங்கோ அடிகள் இருபொருள்பட எழுதுவதில் வல்லாளர்.
ஆலு = ஆலமரம் என்பது சேரநாட்டுவழக்கு
(கோல்:கோலு, வேல்:வேலு, பால்:பாலு, கால்:காலு, ... என்கிறோமே,
அதுபோல, ஆல்:ஆலு - இந்தியாவின் தேசியமரம்.)
சிவன் இமையத்தில் ஆலின் அடிஅமர்ந்து இருடியர்க்கு மறைபுகல்பவன்.
அதனால், சேரன் செங்குட்டுவன் இமையமலையில்
சிவனை வணங்கினான் எனக் குறிக்க, ஒரு (கற்பனை) தலப்பெயரை
உருவாக்கிச் சொல்கிறார் அடிகள். ஆலுவம் = ஆலு + வ் + அம்.
வ் = உடன்படுமெய் (glide), அம் - சாரியை.
ஆலுவத்தில் (ஒரு ஆலந்துறையில்) சிவனை வணங்கிச் சேரராஜன்
வடக்கத்தி மன்னரைப் 18 நாழிகையில் வென்றானாம்.>

இரண்டு பொருள்கள் என்னென்ன?
1)குயிலாலுவம் கற்பனைப் பெயர் என்கிறீர்கள் .
2)...............................................................................?

குயிலாலந்துறை சோழநாட்டுத்தலம். எங்கே என உவேசா எழுத்தில் பார்க்கவும். வைப்புத்தலம்.

இருங்குயில்  ஆலுவம் - சிலம்பு.

(1) பெரிய குயில்கள் போன்ற பறவைகள் வதியும் ஆலுவம் (ஆலந்துறை) இமைய மலையிலே.
(2) இருங்குயில்கள் பாடுகின்ற(ஆலுகிற) இமைய மலை இடம்.

சிவபிரான்/ரிஷ்பநாதர் குறிப்பு  : ஆலு (சேரனாட்டுவழக்கு) ரிஷபநாதர் ஆதிநாதரின் தீக்ஷாவிருக்ஷம்.

N. Ganesan

unread,
Dec 19, 2017, 10:08:09 AM12/19/17
to மின்தமிழ், vallamai, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
2017-12-19 4:13 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 <புனல்வாயில் என்றால் மதகு (Sluice to canals from lakes) என்பது பொருள். சேரநாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தால் இது விளங்கும். 
கணேசன் எழுதியது ->
சேர நாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தில் 'புனல் வாயில் 'எங்கே உள்ளது?
பதட்டத்தோடு எழுதுவதாகத்  தெரிகிறது.
'புனல்வாயில் '-----சிறுபாணாற்றுப் படையில் இடம் பெறும் தொடர்.
கண்மணி 

புனவாசல் என்றுள்ள பல ஊர்களின் பெயர்க்காரணம் பற்றி எழுதியபோது கொடுத்திருந்தேன். பார்க்கவில்லையா?

Themozhi>> வரும் புனலுக்கும் இந்த வாயிலுக்கும் இருக்கும் தொடர்பை அறிய விரும்புகிறேன்.

ஏற்கெனவே சொல்லியுள்ளேன்: https://groups.google.com/forum/#!topic/mintamil/pEe53IL8K1E%5B151-175%5D

On Thursday, December 14, 2017 at 11:20:18 AM UTC-8, தேமொழி wrote:
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த 
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் 
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(41-50)

"வருபுனல் வாயில்"  குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் திரு. கணேசன்.

 வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது - பெருகுகின்ற நீரையும் கோபுரவாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் 

பரிசில் சிறியதாயிருக்கும்; - நச்சினார்க்கினியர்
 
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் இவ்வாறு உரைகூறுதற்குப் பொருள் உண்டு:

புனல்வாயில் என்றால் மதகு  Sluice  of a Channel என்று சங்க இலக்கியகாலத்தில் அர்த்தமும் காண்கிறோம்.
ஆறகளூர், ஆத்தூர், கள்ளகுறிச்சி அருகே புனவாசல், திருவையாறு வட்டத்திலே புனவாசல்,
தேவாரம்பெற்ற (திருப்) புனவாசல், ... போன்றவை இதனால் பெயர்பெற்றவை.
சேர நாட்டு (= இப்போது கொங்கு + கேரளா) இலக்கியமான பதிற்றுப்பத்து:
புனல்வாயில் puṉal-vāyiln. < புனல்¹ +. Sluice of a channel; மதகு. புனல்வாயிற் பூம் பொய்கை (பதிற்றுப். 13, 8).
திருப்புனவாசலில் பாம்பாறு - தாமரைக்குளம் இரண்டுக்கும் புனல்வாசல். அதனால் ஊர்ப்பெயர் உண்டானது.
புனவாசல் (புனல்வாயில்) ஊர்ப்பெயர்களை தொகுத்து கூகுள்மேப்பில் ஏற்றிப்பார்த்தால் புனல்வாயில்/புனவாசல்
காரணம் தெளிவடையும்.

ஆனால், பெருநகர வண்ணனைகளில் இவ்வாறு செய்தல் கூடாது எனச் சொல்கிறார் நச்சர். Entrance Tower என்ற பொருளில் ’வாயில் வஞ்சி’  
எனச் சிறுபாணாற்றுப்படை ஆன்பொருனை நதைக்கரையில், கோபுர/மாட வாசலுடன் விளங்கிய வஞ்சி மாநகரை (கரூர்) வர்ணிக்கிறது.
முடியுடை மூவேந்தருள் முதன்மையான சேர மன்னர்களின் ராஜதானி நகரான வஞ்சிக்கு கோபுரவாசல் இருந்தது என்னும் சங்க இலக்கிய வரிகள்.
இதே போல, ஒரு தலைவன் தலைநகரம் நற்றிணையில் வர்ணிக்கப்படுகிறது. ’மலிபுனல் வாயில் இருப்பை’.
இதிலும் இருப்பை ஊரில் ஓடிய நீரையும், கோபுர/மாட வாயிலையும் உடைய இருப்பை என்பது அருத்தம் ஆகும்.

பதிற்றுப்பத்தில் புனல்வாயில். இதனாற்றான் புனவாசல் என்னும் பல ஊர்ப்பெயர் விளங்குகிறது,
முழுப்பாடலும் பாருங்கள்:

3. பூத்த நெய்தல்
 
13.தொறுத்தவய1 லாரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு வுழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும்
 
5கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவும்
 
ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
 
10நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
 
15கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
வூரிய
2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து)
உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
 
20காடே கடவுண் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
3
குடிபுறந் தருநர் பார மோம்பி
 
25அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப  
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே
 
துறை : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர் : பூத்தநெய்தல்.

வளைதலை  மூதா  -  வளைந்த  தலையையுடைய முதிய
ஆக்கள்;  ஆம்பல்  ஆர்நவும்  -  அவர்  தழையுடையினின்றுதிர்ந்த
ஆம்பலை  மேயும்  இடங்களாயினவும்;  ஒலி  தெங்கின்  - தழைத்த
தென்னைகளும்;   இமிழ்  மருதின்  -  புள்ளினம்   கூடியொலிக்கும்
மருதமரங்களும்; புனல் வாயிற் பூம்பொய்கை - கால்வாய்களையுடைய
பூம்பொய்கைகளு முடைமையால்; பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
-  புலவர்  பாடும் புகழ்பெற்ற செல்வம் பொருந்திய வூர்களையுடைய;
நாடு - நாடானது,

 http://www.tamilvu.org/slet/l1241/l1241ine.jsp?txt=%EB&x=13

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 19, 2017, 11:47:45 AM12/19/17
to mintamil
வடகடல் ...........,நாலு கடல்..............இதெல்லாம் எதற்கு?
இதற்குப் பெயர் என்ன?
வாதமா?..........எதிர் வாதமா?.............வேறு ....?
கண்மணி                

N D Logasundaram

unread,
Dec 19, 2017, 8:35:06 PM12/19/17
to mintamil
அன்புள்ள கண்மணி 

நாவலம் எனும் இடப்பெயர் நா + வல ம் எனததன் பிரிக்க வேண்டும் 
வலம் ஈற்று இடப்பெயர்கள் ஏராளம் 
புலிவலம் வலிவலம் வேட்டவலம் திருவலம் என மிக நீளும் 

நாவல் + அம  இதனில் அம என்பது எப்படி இடப்பெயரைக்கட்டும் ??

நா எனும் சொல் மனித நாவினைப்போன்ற  வடிவத்தில் கடல் பரப்பில் துருத்திக்கொண்டு
அதனால் சூழப்பட்டுள்ளதால் நாவலம் எனப்பெயராயிற்று எனல்  வேண்டும் 
வரலாற்றில் எங்கும் குறிப்பிடத்தக்கதாக நாவல் மரங்கள் மலிந்துள்ளமை இல்லை 

பனைமரங்கள்தான் நிறைந்து பெண்ணாகடம் அல்லது பெண்ணை நிலப்பரப்பு
என வழங்கி வந்துள்ளது இந்த மிக நீண்ட பரப்பினால் ஓடிய ஆற்றினுக்கு பெண்ணாறுகள் 
வடபெண்ணை ஆறு தென் பெண்ணையாறு என நெல்லூரிலிருந்து திருவண்ணாமலை
வரை யம் மேலும் பரந்துபடம் நிலப்பரப்பினுக்கு தன் பனைமரம்   பற்றி பெயர்வந்துள்ளது உண்மை 
தமிழநன்கு அறியாத வடமொழி பற்றுள்ளவர்கள் அவர்கள் மனம் பெண்வழி சம்புத்தீவு  என்றார்கள் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 19, 2017, 11:59:13 PM12/19/17
to mintamil
வணக்கம்.

நாவலம் = நா+வலம் (நெடில், குறில் குறில்)
நல்லதொரு விளக்கம்.

அருமை, நன்றி ஐயா.

N. Ganesan

unread,
Dec 20, 2017, 9:48:44 AM12/20/17
to மின்தமிழ்

On Sunday, December 17, 2017 at 11:36:28 AM UTC-8, kanmanitamilskc wrote:

உங்கள் மின்மடலிலிருந்து இன்று எனக்குக் கிடைத்த புதுத்  தகவல் -ஆலமரத்துக்கு வேர்ச்சொல் திராவிடத்திலிருந்து ......அழகான சுவையான தகவல்.

யால்- (cf. யானை < யால்- (வினைச்சொல்) தொங்கும் கையுடையது ) தொங்குதல். எனவே, யால் ஆல மாத்தின் முந்து-த்ராவிடப் பெயர் (*yAl- :Proto-Dravidian name for Indian national tree, the banyan).
இதன் இன்னொரு பெயர் வடம். இதுவும் திராவிடச்சில்லே. வடம் = கயிறு போன்ற ஆலின் விழுது. வடதிசைக்கு இம்மரத்தால் பெயர். வேதத்தில் வடமீன் மரம் ஆலு தான்.
கேரளாவில் ஆலுவிளக்கு, ‘ஆலு ஆஸநத்தில் கிளர்த்தாலும் ...’ (பழமொழி) ... நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவலை ரா. ரா. ராகவையங்கார் ஓலைச்சுவடியில் இருந்து மீட்டார்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூலகத்துக்கு அளித்தேன். அப்பாடலில் ‘பெருமரம்’ என்று வேதார்த்தம் சொல்லும் அகவல். ரா.ரா. உரை திருப்தியாக இல்லை என்பார் கம்பராமன் ஐயா.
பின்னர் நாராயணயைங்காரும் ஓரு உரை செய்துள்ளார். இப்போதைய ‘India as a Linguistic area' கோட்பாட்டை வைத்தும் ஓரு உரை செய்யலாம்.

not retired. so have to wait to do ...
 
கண்டவியூகம் நான் படித்தது இல்லை.அதைப் பற்றி நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள்.-தெரிந்து கொள்கிறேன்.

முடிந்தால் இந்தோனேசியா ஒரு வாரம் சுற்றுலா போகவும். 2 நாள் போரோபுதூரில் செலவிடுங்கள்.
30+ நூல்கள் கண்டவியூகம் பற்றி ஆங்கிலத்தில் உள்ளன. Jan Fontein, The pilgrimage of Sudana. பெரிய நூல்.
ஒரு நல்ல பிஎச்டி ஆய்வு ஓர் ஈரானியர் சுவிட்சர்லாந்து பல்கலையில் கண்டவியூகம் பற்றிச் செய்துள்ளார்.
அப்போதெல்லாம் ‘Indic diacritics' இப்போதைய யூனிகோட் போல சுலபம் அல்ல. எனவே, கைப்பட எழுதிய ஆய்வேடு.
அது என்னிடமுண்டு. அதில்தான் வட இந்திய இடப்பெயர்களைச் சரியாகச் சொல்லியுள்ளனர். இன்னும்
தென்னிந்திய இடங்களை சரியாக கூற தெரியவில்லை என உணர்ந்தேன். சங்க இலக்கியமோ,
தென்னினிதிய மாநிலங்கள் வரலாறோ, நிலவியலோ அறியாமல் இந்தாலஜி, சம்ஸ்கிருத பேராசிரியர் பலர்
ஐரோப்பா, அமெரிக்காவில். தமிழர்கள் கோயில் கட்டுவதுபோல, பல பேராசிரியர் இருக்கைகளை
திராவிடாலஜி ஆய்வுகளுக்கு நிறுவினால் நிலைமை சீர்பெறும்.
 
பிற செய்திகள் எல்லாம் ......நீங்கள் இவ்வாறு தொகுத்துக் கொடுப்பதன் காரணமாக நான் என்ன கருதுகிறேன் தெரியுமா?
என் பட்டறிவிற்கு எட்டியதைக் கூறுகிறேன்......அருள் கூர்ந்து சினம் கொள்ள வேண்டாம்.....நீங்கள் என்னை விடப் பெரியவர்.

மிகமிக வேகமாக -ஆசிரியர்க்கு சவாலாக -ஆழமாகவும்,அகலமாகவும் கற்றுக் கொள்ளும் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
இவர்களிடம் என்ன பிரச்னை இருக்கும்/ஏற்படும் தெரியுமா !
தாம் தெரிந்து கொண்ட செய்திகளை அவர்களால் விடைத்தாளில் கொட்டாமல் இருக்கவே முடியாது.
அந்தச் செய்திகளுக்கு இடையில் தொடர்பையும் இவர்களே கற்பித்து விடுவார்கள்.
இவர்களைத் தேர்விலே ஒப்பேற வைப்பதற்கு ஆசிரியர் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

கண்டவியூகம் பற்றி உங்களுக்கு மிகுதியாகத் தெரிந்திருப்பது தான் பிரச்சினையே.
சிலப்பதிகாரம் அழகான நாடகக் காப்பியம்.அதன் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக அதில் கண்டவியூகத்தைத் திணிப்பானேன் !
நாடுகாண் காதை -100%புகாரிலிருந்து உறையூர் வரை உள்ள சோழநாட்டு வளம்.
அது சமணசமயம் சார்ந்தது என்பதை நான் மறுக்கவில்லை.அதற்காக புகாரிலிருந்து கிளம்பி மதுரை வரவேண்டியவர்கள் சீரங்கப்பட்டணத்தைச் சுற்றி வந்தனர் என்றால் .......தன் பாத்திரங்களை அவ்வளவு முட்டாள்களாக இளங்கோவடிகள் படைக்கவில்லை.

நிச்சயமாக, வஞ்சி மாநகர அரண்மனையில் பல சமயத்தவர்களிடம் கற்ற இளங்கோ அடிகள் முட்டாள் அல்லர். அவரது பாத்திரங்களும் அவ்வாறே.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, - எனப் பாரதி சும்மா சொல்லியிருப்பாரா?

தன் ஜைந சமய போதனைக்கு தலைக்காவேரி பகுதியில் கங்க மன்னர்கள் ஜைநத்தின் பாதுகாவலராக இருப்பதும், அவர்களுக்கு மூதூர் வஞ்சி என்பதும் அறிந்தவர்.
அப் பகுதியில் சமணத்தைக் கற்றிருக்கலாம். காதம்/காவதம் என்று அங்கே பெருவழக்காக இருந்த தூர அளவை அறிமுகப்படுத்துகிறார் அடிகள்.
காவேரி நாடு முழுதும் பாடுகிறார். சோழ நாட்டின் உயிர்நாடி காவேரி ஆனதாலும், கரிகால சோழன் காலத்தில் இருந்து சோழர்கள் காவேரிபிறக்கும்
சையமலைப் பகுதியின் மீது ஒருகண் வைத்தே ஆண்டு இறையாண்மையைச் செலுத்தினர் என்பதாலும் புகார்க்காண்டத்தின் கடைசியில்
காவேரியின் முழுப்பரப்பையும் பாடினார். இப்போதைய ஸ்டேட் பௌண்டரி எல்லாம் இளங்கோ அடிகள் அறியாதன. கன்னடமும் முழுதுமாக உருவாகாத காலம் அது.
 
"வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் "ஆகிய தன் மனைவி ஊரை விட்டு வெளியேறிய சில நாழிகைக்குள் ,'மதுரை மூதூருக்கு இன்னும் எவ்வளவு தூரம்?' என்று கேட்க -"ஆறைங்காதம் நம் அகநாட்டும்பர் "என்று--- அவள் மலைத்து விடக்கூடாதெனச் சொன்னவன் கோவலன். மனைவி மேல் அன்பும்,ஒருவர் மேல் மற்றவர்க்கு அக்கறையும் தோன்றியதன் அடையாளமாக அமைந்த உரையாடல் இது. கணவன் மனைவி நெருக்கத்தைப் பொய்யாக்கி அதற்கு கண்டவியூகம் என்ற சாயத்தைப் பூசி இலக்கிய அழகைச் சிதைக்க வேண்டாமே .

இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்தும் காத அளவைக் கொண்டும், ’வடபெருங்கோடு’ என்பது என்ன? பொழில்மண்டிலம் என்பது என்ன? - என்றெல்லாம்
வரலாற்றூ நோக்கில் பார்த்து சமண சமயத்தைப் பரப்ப அவர் பாடிய நாடுகாண்காதையைப் புரிந்துகொண்டால் அழகு எப்படி சிதைகிறது என விளங்கவில்லை.
வடபெருங்கோட்டில் கவுந்தியடிகளின் தவப்பள்ளி இருந்தது என்கிறார் அடிகள். சீரங்கபட்டினத்தை அரங்கம் என்றும், திருவரங்கத்தைத் துருத்தி என்றும்
கூறுகிறார். திருவரங்கம் முழு தீவாக சோழர்களால் ஏற்படுவதன் முன்னர் பாடியது சிலப்பதிகாரம்.
 
குமரிக்கோடு என்ற பெயருக்கு பெரிப்ளூஸ் ,டாலமி ,ஸ்டராபோ,ஃ பரியாய் சௌயா காலத்திலிருந்து ஒரு வரலாறு இருக்கிறது.நான் கொடுத்துள்ள ஆறு  தரவுகளும் அந்த வரலாற்றைப் பேசுகின்றன.

கொற்றிக்கோடு என்ற பெயருக்கு என்ன வரலாறு இருக்கிறது? பொருள் ஒப்புமை இருப்பதை நான் மறுக்கவில்லை.

எனவே குமரிக்கோடு  என்பது பன்மலை அடுக்கத்தை ஒட்டி/அடுத்து  குமரித்துறை இருந்த ஒரு ஊரின் பெயர் ஆகும்.வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோள் பஃறுளி ஆற்றின் கழிமுகப் பகுதியையும் அதன் கரையிலிருந்த குமரிக்கோட்டையும் அழிக்க புதிதாக குமரியம்பெருந்துறை தோன்றியது.

குணகடல் ,குடகடல், தொடியோள் பௌவம் அனைத்தும் காரணப்பெயர்களே .இவை அனைத்திற்கும் வரலாறு உள்ளன .
கொற்றிக் கோடு என்ற பெயர்ச் சொல்லுக்கு  ...........வரலாறு ..........??????? 

குமரித்துறை பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத தேசத்தவர் அறிந்த தீர்த்தத்துறை. மணிமேகலையில் ஆபுத்திரன் கதை, ...
அதற்கருகே உள்ளது குமரிக்கோடு. பரியாயப்பெயர். கொற்றிக்கோட்டுக்கு. கொல்லிமலை சேரர்க்கானது. சற்று தூரத்தில்
வஞ்சி மாநகரம். அதற்குக் கொல்லிநகர் என்ற பெயரும் உண்டு. வஞ்சியை சில பாடல்கள் கொல்லிநகர் என்பதுபோல,
கொற்றிகோட்டை குமரிக்கோடு என்கிறார் அடிகள். அவ்வளவுதான். தென்கடலை குமரிக்கு உரிமையாக்கி,
‘தொடியோள் பவ்வம்’ என்பதுபோல.
 
not yet retired. so I have to wait to do comprehensive essays...
Have a great 2018. will continue in the coming year.

அன்புடன்,
நா. கணேசன்

கண்மணி     

2017-12-17 23:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2017-12-17 9:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.

தொல்லியல், வரலாறு, இந்திய செம்மொழிகளின் இலக்கியங்கள் ஒப்பிட்டுப் பார்க்காமல் எழுதியுள்ளனர்.

நா. கணேசன்

..... தேமொழி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 20, 2017, 12:45:01 PM12/20/17
to mintamil
<குயிலாலந்துறை சோழநாட்டுத்தலம். எங்கே என உவேசா எழுத்தில் பார்க்கவும். வைப்புத்தலம்.
இருங்குயில்  ஆலுவம் - சிலம்பு.
(1) பெரிய குயில்கள் போன்ற பறவைகள் வதியும் ஆலுவம் (ஆலந்துறை) இமைய மலையிலே.
(2) இருங்குயில்கள் பாடுகின்ற(ஆலுகிற) இமைய மலை இடம்.
சிவபிரான்/ரிஷ்பநாதர் குறிப்பு  : ஆலு (சேரனாட்டுவழக்கு) ரிஷபநாதர் ஆதிநாதரின் தீக்ஷாவிருக்ஷம்>

குயிலாலுவம் இமயமலைப்பகுதியில் இருந்தது.அங்கு மக்கள் சிவனை வழிபட்டனர்.---இவை  இளங்கோவடிகள் வெளிப்படையாகப் பேசும் தகவல்கள்.
இங்கே இரண்டாவது பொருள் கொள்வதற்கு என்ன தேவை உள்ளது.?
நம்மால் குயிலாலுவம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே இளங்கோவடிகள் இருபொருள் பட எழுதுவதாக ஒரு கருத்தைக் கற்பித்து நமக்குத் தெரிந்த ஊரை இயைத்துப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

நீலகேசி -மொக்கலவாதச் சருக்கம் -190ம்.பாடல் குயிலாலபுரம் என்று ஒரு ஊரைச் சுட்டுகிறது.-உ.வே.சா.உரை -ப.561
புத்தரின் பூர்வ அவதார ஸ்தலங்களில் ஒன்றான குயிலாலபுரம் -இளங்கோவடிகள் சுட்டுவது -மணிமேகலை உரைப்பதிப்பு 
எனவே கபிலவஸ்துவுக்கு அருகில் குயிலாலுவம் இருந்திருக்க வேண்டும்.T.G.Aravamuthan-Kaveri The Maukaris And The Sangam Age-p.40 
மு.இரா .வுக்கு உ.வே.சா.கருத்தில் உடன்பாடோ திருப்தியோ இல்லை(சேரன் செங்குட்டுவன் -ப.151)
அதற்காக சோழ நாட்டில் இருக்கும் சிவத்தலத்தை உட்பொருளாகக் கொள்கிறார் இளங்கோ என்பது எந்த ஒரு ஆய்வு நெறிமுறைக்குள்ளும் அடங்குவதன்று.

எந்த ஊரின் பெயரையும் இருபொருள் பட அவர் பாடவில்லை.
கண்மணி   .

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 20, 2017, 12:56:45 PM12/20/17
to mintamil
'புனல் வாயில் ' என்ற தொடர் புனவாசலைக் குறிப்பது என்பதையே மீண்டும் சொல்கிறீர்களே; அன்றியும் வாசல்  என்ற சொல்லுக்கு கோபுரம் என்ற பொருள் இருப்பதென வேறொரு சான்றை உங்களால் கூற இயலவில்லை.

வடகடல் .....நாலுகடல் .......என்பதெல்லாம் சேரன் மண்ணுமங்கலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்ற கேள்விக்கும் உங்களிடமிருந்து பதில் இல்லை 
கண்மணி 

N. Ganesan

unread,
Dec 20, 2017, 11:42:04 PM12/20/17
to மின்தமிழ், vallamai
2017-12-20 9:56 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
'புனல் வாயில் ' என்ற தொடர் புனவாசலைக் குறிப்பது என்பதையே மீண்டும் சொல்கிறீர்களே; அன்றியும் வாசல்  என்ற சொல்லுக்கு கோபுரம் என்ற பொருள் இருப்பதென வேறொரு சான்றை உங்களால் கூற இயலவில்லை.

வாயில் என்பது பெரிய நகரங்கள், ராஜதானி நகர்கள் இவற்றின் பெருவாயில் என்ற பொருள் உண்டு. கோபுரம்/மாடம் பெருவாயிலில் அமைப்பர்.

’புகழ்மிக்க புறப்பாடல் - அன்னம் விடுதூது பாடலில் பாருங்கள்:
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்’

வாயில் கடந்து கோயில் புகுதல்.
இதே பொருளைத்தான் நச்சினார்க்கினியர் சிறுபாணாற்றுப்படை வரிக்கும் தருகிறார்.
”வாயில் வஞ்சி” பெரிய வாயிலையுடைய வஞ்சி.

வடவாயிற்செல்வி என்கிறோம். வடக்கு (கோபுர/மாட) வாசலைக் காக்கும் எல்லைத் தெய்வம்.
Kāḷi, as presiding at the northern gate of a town of city;
[ஊரின் வடபுறத்து எல்லைத் தெய்வம்.] காளி. Loc.

அயோத்தி நகரத்தில் நான்கு வாயில்கள். வாயில் = கோபுர வாயில்.

வாயில் காடு
 
114.எல்லை நின்ற வென்றி யானை என்ன
   நின்ற; முன்னம் மால்.
ஒல்லை. உம்பர் நாடு அளந்த
   தாளின் மீது உயர்ந்தவால்-
மல்லல் ஞாலம் யாவும்
   நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும்
   அன்ன- வாயிலே.
 
வாயில்     - அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள்   (நான்கும்);
எல்லை  நின்ற வென்றியானை  என்ன நின்று
- நான்கு திசைகளிலும்
நிற்கும்  திக்கு  யானைகள்  என்னும்படி  நின்றன (அன்றியும்);   மால்
முன்னம்   ஒல்லை உம்பர்   நாடு   அளந்த  தாளின்
-  திருமால்
வாமனனாகவந்து   விரைவாக   திருவிக்கிரமனாகி     விண்ணுலகத்தை
அளந்த  திருவடியைவிட;  மீது  உயர்ந்தவால்-  மேலும்  வாயில்கள்
உயர்ந்து   நின்றன;  மல்லல்   ஞாலம்   யாவும்-  வளம்  நிறைந்த
உலகத்தவரெல்லாம்;  நீதி மாறுறா வழக்கினால்- நீதி தவறாது நடக்கச்
செய்வதால்; நல்ல ஆறு சொல்லும்- நல்ல நெறிகளைக் கூறும்; வேதம்
நான்கும் அன்ன
- நான்மறைகளையும் ஒத்திருந்தன.

கெடிகாவல் உள்ள ராஜதானி நகரங்களிலே, உ-ம்: சேரர் தலைநகர் வஞ்சியிலே, கோபுர/மாட வாயில்கள் இருந்தன என்கிறார் நச்சர்.
எனக்கு அது பிழையாகத் தெரியவில்லை. இந்தியாவில் எல்லா இடத்திலும் பழைய நகரங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன.
போர்க்காலங்களில் யார் வருகிறார், போகிறார் எனக் கண்காணிக்கத் தேவையானதாக இருந்தது.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 21, 2017, 12:47:18 AM12/21/17
to mintamil

<

N D Logasundaram <selvi...@gmail.com>

20 Dec (1 day ago)
<
to mintamil
அன்புள்ள கண்மணி 
நாவலம் எனும் இடப்பெயர் நா + வல ம் எனததன் பிரிக்க வேண்டும் 
வலம் ஈற்று இடப்பெயர்கள் ஏராளம் 
புலிவலம் வலிவலம் வேட்டவலம் திருவலம் என மிக நீளும் 
நாவல் + அம  இதனில் அம என்பது எப்படி இடப்பெயரைக்கட்டும் ??
நா எனும் சொல் மனித நாவினைப்போன்ற  வடிவத்தில் கடல் பரப்பில் துருத்திக்கொண்டு
அதனால் சூழப்பட்டுள்ளதால் நாவலம் எனப்பெயராயிற்று எனல்  வேண்டும் 
வரலாற்றில் எங்கும் குறிப்பிடத்தக்கதாக நாவல் மரங்கள் மலிந்துள்ளமை இல்லை>

ஐயா ,
            நீங்கள் காட்டும் புலிவலம் ,வலிவலம் ,வேட்டவலம் ,திருவலம் ஆகியவற்றின் வரிசையில் நாவலம் என்ற சொல்லை வைக்கும் போது ஒலியளவில் ஒப்புமை உள்ளது என்பதை மறுக்க இயலாது.ஆனால்.........
                                                நாவலந்தீவு ,
                                                நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில்                                                                                            சுள்ளியம்பெரியாறு ,
                                                குமரியம்பெருந்துறை .....................என்ற தொடர்களும் உள்ளன.
இப்போது இத்தொடர்களை ................               குமரி+அம் +துறை =குமரியம்பெருந்துறை 
                                                                             சுள்ளி+அம் +பேரியாறு =சுள்ளியம்பேரியாறு .......என்று பிரித்துத் தான் பொருள் கொள்கிறோம்.எனவே                                                                                          நாவல்+அம் +தீவு =நாவலந்தீவு 
                                                                              நாவல் +அம் +தண்பொழில் =நாவலந்தண்பொழில்............ என்று தான் பிரித்தாக வேண்டும்.
என்ன பொருள் என்பது அடுத்த கட்ட ஆய்வு.

சம்பா என்று இன்றும் ஒரு மாவட்டத்தின் பெயர் --ஜம்முவில் வழங்குகிறது.பௌத்தம் தோன்றித் தழைத்த மாநிலம்.அங்கிருந்து சமயம் தமிழகம் வந்த போது சம்பா என்ற பெயரும் வந்தது.
சம்பாபதி ;புகார் நகரின் காவல் தெய்வம் ஆனாள் .
சம்பா என்ற பெயரில் நெல் வகைகள் தோன்றின.
கண்மணி 

--

kanmani tamil

unread,
Dec 21, 2017, 1:08:59 AM12/21/17
to mintamil
<உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்’

வாயில் கடந்து கோயில் புகுதல்.
இதே பொருளைத்தான் நச்சினார்க்கினியர் சிறுபாணாற்றுப்படை வரிக்கும் தருகிறார்.
”வாயில் வஞ்சி” பெரிய வாயிலையுடைய வஞ்சி.>

இல்லை .
இங்கே சொல்லப்படுவது மன்னனின் அரண்மனை.
கோட்டை வாயில் இல்லை.
நச்சினார்க்கினியர் மதுரைவாசி என்று வாசித்ததாகத்தான் நினைவு.
அவர் படுஅப்பாவித்தனமாக வாயில் என்பதற்கு கோபுரம் என்று பொருள் எழுதி விட்டார்.
அவர் மனதில் மதுரைக்கோட்டையும் கோபுரத்துடன் கூடிய வாயிலும் ஆழமாகப் பதிந்து இருந்ததால் அப்படி எழுதி விட்டார்.
இப்படி இந்தக் கொங்குவஞ்சி பட்டப்பகலில் மதுரையின் பெருமையைக் கொள்ளையடித்து விடும் என்று சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.வடகடல் ,நாலு கடல் என்றெல்லாம் ........
இந்தச் சிக்கலைத் தீர்த்த பிறகு தான்  சேரரின் மூதூரை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இயலும். 
ஒரு வழி இருக்கிறது.
பரத்துவாசியாகிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியரே ;-----சாமீ 
கண்மணி  

2017-12-21 11:17 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

<

N D Logasundaram <selvindls61@gmail.com>

to mintamil

N D Logasundaram

unread,
Dec 21, 2017, 4:58:06 AM12/21/17
to mintamil
அன்புள்ள கண் மணி அவர்களுக்கு 

நீங்கள் காட்டியபடி  நாவலந்தீவு' எனும் சொல்  சிலப்பதிகாரத்தில் இல்லை அய்யா   

உள்ளவை நான்கு வரிகளில் மட்டும்தான் வேறு கிடையாது 
இவற்றினில் எங்கும்நாவல் எனும் பயிரினம் தொடர்பு கா ட்ட வழியில்லை
நாவலமேதான் தண்  பொழிலாகுமே தவிர  நாவல் (மர) தண்பொழில் அல்ல 

மேலும் தமிழில் உள்ள நாவலம் எனபதை ஜம்புதீவு  என மொழிபெயர்த்தார் அன்றி 
ஜம்புத்தீவினில் இருந்து நாவலம் பிறக்கவில்லை 

அதான் நான் நீண்ட வாதத்தில் குறுக்கிட வரவில்லை அந்த நாவலம் எனும் சொல்லின் 
பொருளை மட்டும் கா ட்டவந்தேன் 
வடமொழியாளர்  அறியாது மொழிபெயர்த்த சொல்தான் ஜம்புத்தீவு 
தீவு எனும் சொல்ல எங்கிருந்து நுழைந்தது முளைத்தது ??

17 ஆய்ச்சியர் குரவை

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழில் மன்னர் 
ஏவல்கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 5
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன் 10

          23 கட்டுரை காதை

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற

             25 காட்சிக் காதை
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் 170
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175

             29 வாழ்த்துக் காதை
  உரைப் பாட்டு மடை  (செங்குட்டுவன் கூற்று)

என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல்
பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலைவளைக்கை
நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால் 9

நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-12-21 11:17 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

<

N D Logasundaram <selvindls61@gmail.com>

to mintamil

N. Ganesan

unread,
Dec 21, 2017, 8:50:37 AM12/21/17
to மின்தமிழ், vallamai
2017-12-20 21:47 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

.ஆனால்.........
                                                நாவலந்தீவு ,
                                                நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில்                                                                                            சுள்ளியம்பெரியாறு ,
                                                குமரியம்பெருந்துறை .....................என்ற தொடர்களும் உள்ளன.
இப்போது இத்தொடர்களை ................               குமரி+அம் +துறை =குமரியம்பெருந்துறை 
                                                                             சுள்ளி+அம் +பேரியாறு =சுள்ளியம்பேரியாறு .......என்று பிரித்துத் தான் பொருள் கொள்கிறோம்.எனவே                                                                                          நாவல்+அம் +தீவு =நாவலந்தீவு 
                                                                              நாவல் +அம் +தண்பொழில் =நாவலந்தண்பொழில்............ என்று தான் பிரித்தாக வேண்டும்.
என்ன பொருள் என்பது அடுத்த கட்ட ஆய்வு.

சிலப்பதிகாரத்தில் ‘நாவலந்தீவு’ உள்ள வரிகள் எவை? அல்லது, உரையில் இருப்பன. சிறப்பான பதில்.

கணபதிக்கு சுலோகத்தில் ‘ஜம்பூபல ஸார பக்ஷிதம்’ என்றுள்ளது. சம்பு - கரி, சாம்பர் - ஜம்பூ என வடசொல் ஆகியிருக்கலாம்.
ஆனால், இந்தியாவின் மூன்று மதங்களும் - ஹிந்து, சமண, பௌத்த மதங்களும் - மக்களும் ஒரு பழைய ஜியாகிரபி செய்தனர்.
ஜம்புத்வீபம். அதனைசுற்றி நாலாபுறமும் கடல். அந்த நாலுகடலும் உப்பு. அதனைச் சுற்றி வளையம் வளையமாக பிற கடல்கள்.
மொத்தம் 7 கடல்கள், வளையம், வளையமாக என்று பல புராணங்கள் உண்டு. நாலு கடலில் இருந்தும் அபிஷேக தீர்த்தம் வந்து
மஹாராஜாக்களின் மண்ணுமங்கல பெருநாளில் நீராடலை தமிழ் சாசனங்கள் நீராடலைக் குறிப்பிட்டேன். அதன் அடியாக
இரு கடலில் இருந்து தீர்த்தக்குடம் வந்ததை சங்கப் பாடல் பாடுகிறது. ஜம்புத்வீபம், நாலுபுறமும் கடல், .. இவற்றை எல்லாம் இந்தியாவை 
ஆளுமைகொண்டபின்ஆராய்ந்த ஐரோப்பியர் ஹிந்து ஜியாகிரபி என்றனர். அப்போது ஹிந்துக்களைப் பற்றி மெக்காலே போன்றோர் 
குறித்த கருத்துகள்புகழ்மிக்கவை. 

தமிழிலே முதன்முறையாக சமணர்கள் இந்த ஜியாகிரபியைக் கொணர்ந்தனர். அப்போது தான் ஜம்புத்வீபம் நாவலந்தீவு என்றாகிறது.
உ-ம்: அரிய நூல் தந்த சமணரின் ஏலாதியில். அவருக்கு சற்று முன்பு இளங்கோ அடிகள் இந்த கான்செப்ட்டை தமிழில் சொல்கிறார்.

வங்காளத்தில் சம்பா என்ற துறைமுகம் உண்டு. வியட்நாமில் முதல் அரசர்கள் சைவர்கள். சம்பா அரசாங்கம்.
சம்பா - பூம்புகாரின் அருகே சண்பை (சீகாழி - கழி அருகே வளரும் புல்). சம்பங்கோழி .... விரிக்கில் பெருகும்.
ஏற்கெனவே பல மடல்களில் கொடுத்துள்ளேன்.

2018-ல் விரிவாகப் பேசுவோம்.

2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள்,
நா. கணேசன்

சம்பா என்று இன்றும் ஒரு மாவட்டத்தின் பெயர் --ஜம்முவில் வழங்குகிறது.பௌத்தம் தோன்றித் தழைத்த மாநிலம்.அங்கிருந்து சமயம் தமிழகம் வந்த போது சம்பா என்ற பெயரும் வந்தது.

kanmani tamil

unread,
Dec 21, 2017, 12:15:45 PM12/21/17
to mintamil
இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்தும் காத அளவைக் கொண்டும், ’வடபெருங்கோடு’ என்பது என்ன? பொழில்மண்டிலம் என்பது என்ன? - என்றெல்லாம்
வரலாற்றூ நோக்கில் பார்த்து சமண சமயத்தைப் பரப்ப அவர் பாடிய நாடுகாண்காதையைப் புரிந்துகொண்டால் அழகு எப்படி சிதைகிறது என விளங்கவில்லை.
வடபெருங்கோட்டில் கவுந்தியடிகளின் தவப்பள்ளி இருந்தது என்கிறார் அடிகள். சீரங்கபட்டினத்தை அரங்கம் என்றும், திருவரங்கத்தைத் துருத்தி என்றும்
கூறுகிறார். திருவரங்கம் முழு தீவாக சோழர்களால் ஏற்படுவதன் முன்னர் பாடியது சிலப்பதிகார>

விளக்குகிறேன்.
இளங்கோவடிகள் சமணசமயத்தைப் பரப்புவதற்காக இந்த நாடகத்தை எழுதவில்லை.
சமயம் பரப்புவதற்காக எழுதியிருந்தால் சமய வாதத்திற்கு இடம் கொடுத்திருப்பார்.
எல்லாச் சமயங்களையும் பற்றிப் பேசும் பாத்திரங்கள் இந்த நாடகத்தில் உள்ளனர்.
அவை அனைத்துமே நடப்பியலை எடுத்துக் கூறுவனவாகவே உள்ளன.
சமயம் பற்றி கவுந்தி பேசினாலும் தன் கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பு அவளிடம் இல்லை.
"நலம் புரி கொள்கை நான்மறையாள "என்று மாடலனை அழைத்து ---வாய்மையைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு கிடைக்க முடியாத நற்பேறு இருக்கிறதா?
சென்ற பிறவிப் பயனையெல்லாம் இந்தப் பிறவியில் காண்கிறோமே!இந்திரன் இயற்றிய வியாகரணத்தை அருகன் அருளிய பரமாகமங்களில் பார் ---என்று ஒரேயொரு அறிவிப்பு மட்டுமே அவள் வாயிலிருந்து வெளிப்படுகிறது.

ஆனால் மணிமேகலை சமயம் பரப்புவதற்காக எழுந்த நூல்.
அங்கே கதைத்தலைவி சமயவாதம் செய்வாள்.அது மட்டுமல்ல.---
கிளைக் கதைகளும் பௌத்தம் தான் ஜைனத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்று நிலைநாட்டும்.----சுதமதியின் கதை ஒன்று போதுமே.---மாடு முட்டி வெளியே வந்த குடலைக் கையிலேந்திக் கொண்டு சமண முனிவர்களிடம் சென்று அடைக்கலம் கேட்டனர்.-தந்தையும் மகளும் --அவர்கள் வைதீகர் என்பதால் --'இவண் நீர் அல்லர்' என்று வெகுண்டு விரட்டி விட்டனராம் சமண முனிவர்கள்.--தமிழ் சினிமா ஹீரோ மாதிரி அங்கே சங்கதருமன் வருவான்.--அவர்களுக்கு வைத்தியம் செய்து ஆதரவு கொடுப்பான்.---அவர்கள் பௌத்தம் போற்றுவார்கள்.---இங்கே ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கிறார் சாத்தனார்.
வைதீகர் ஆதரிக்காத சுதமதி (ஏனென்றால் அவள் விஞ்சையனால் தன் கன்னிமை இழந்தவள்.)
அவளை அபலை என்று ஆதரித்தது சமணம்.அவளது தந்தையாகிய வைதீகன் அவளைச் சேர்ந்தவுடன் இருவரையும் புறக்கணித்தது.
சமணத்திற்கு இல்லாத சகிப்புத்தன்மை பௌத்தத்திற்கு இருக்கிறது,
'உயிர்களிடத்தில் அன்பு' என்பது மட்டுமே பௌத்தத்தின் தலையாய குறிக்கோள் .
இப்படி எங்கேயாவது சமயம் பரப்புகிறதா சிலம்பு?

இல்லை.     இளங்கோவின் நோக்கம் சுவையான நாடகம் படைக்க வேண்டும் என்பது மட்டும் தான்.---
சரி--- அரங்கம் என்பது சீரங்கப் பட்டணம் என்பதற்கு காவதக் கணக்கு  ஆதாரம் என்கிறீர்கள்.
ஊரைவிட்டு வெளியேறி அறியாத ஊதாரி---கோவலன்.புகார் நகருக்குள் மட்டும் தான் சுற்றித் திரிந்தான்.---பொறுப்பே இல்லாமல்...அவன் சொல்லும் காவதக்கணக்கு வீட்டுக்காரி கிட்ட காட்டின ஜம்பம். 
வீட்டை விட்டு வெளியேறி அறியாத மங்குணி ---கண்ணகி
இருவரும்இ ரவோடு இரவாக புகாரை விட்டுக் கிளம்புகிறார்கள்.............முதலில் மணிவண்ணன் கோட்டத்தை வலம் செய்கின்றனர் 
இந்திர விகாரம் ஏழையும் சுற்றித் தொடர்கின்றனர்..............அருகரின்  சிலாதலத்தை வலங்கொண்டனர் ...
உலக இடைக்கழியைக் கடந்தனர்..............இலவந்திகையின் எயிற்புறம் போய்... காவிரி வாயிற் கடைமுகம் கழிந்தனர் ... 
மேற்கு நோக்கி காவிரியின்வ டபெருங்கோட்டில் (கோடு=கரை)நடக்கின்றனர்.இங்கே சொல்லப்படுவது காவிரியின் படுகை
அவர்கள் திசை மாறியமைக்கு சான்றே இல்லை.ஒரு காவதத்தில் கவுந்தி இருந்த பள்ளி வருகிறது.      

நம் கருத்துக்கள் மீண்டும் கோடு=கரை என்பதில் மோதுகின்றன.!!!
திசை மாறாமல் மேற்கு நோக்கி காவிரியின் படுகையில் நடக்கும் போது சீரங்கப்பட்டணம் வராது.
பாதைகளை இளங்கோவடிகள் தெளிவாகச் சுட்டுவார்.இன்று வரை அரங்கம் என்று பெயர் பெறும் துருத்தி இருக்கும்போது எதற்காக இங்கே சீரங்கப் பட்டணம் குறுக்கே வருகிறது.? 
இலக்கிய ரசனை எப்போது மேலோங்கும்?
படைப்பவனின் உள்ளக்கிடக்கை அவன் படைப்பில் அதே பரிமாணத்தோடு வெளிப்பட்டு .....பின்னர் வாசிக்கும் ரசிகன் மனதில் அந்த உள்ளக்கிடக்கையும் பரிமாணமும் அப்படியே பதியும் போது ....இதை ஒத்துணர்வு என்று சொல்வோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.இன்னும் நாள் இருக்கிறது.
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் .
கண்மணி  

N. Ganesan

unread,
Dec 22, 2017, 5:53:17 AM12/22/17
to மின்தமிழ், vallamai

2017-12-20 21:47 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

.ஆனால்.........
                                                நாவலந்தீவு ,
                                                நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில்                                                                                            சுள்ளியம்பெரியாறு ,
                                                குமரியம்பெருந்துறை .....................என்ற தொடர்களும் உள்ளன.
இப்போது இத்தொடர்களை ................               குமரி+அம் +துறை =குமரியம்பெருந்துறை 
                                                                             சுள்ளி+அம் +பேரியாறு =சுள்ளியம்பேரியாறு .......என்று பிரித்துத் தான் பொருள் கொள்கிறோம்.எனவே                                                                                          நாவல்+அம் +தீவு =நாவலந்தீவு 
                                                                              நாவல் +அம் +தண்பொழில் =நாவலந்தண்பொழில்............ என்று தான் பிரித்தாக வேண்டும்.

கிளியந்தட்டு, நாவலந்தீவு, புளியங்காடு, ஆலங்காடு, விளவங்கோடு, 
கல்லங்கோரை, யானையங்குருகு, புளியங்கொட்டை, வெள்ளியங்கிரி, 
பனங்காடு (பனை + அம் +காடு), தென்னந்தோப்பு (தென்னை + அம் + தோப்பு), 
மாந்தோப்பு (மா + அம் + தோப்பு) புள்+அம்+குழல் (புள்ளாங்குழல்/புல்லாங்குழல்),
அகிலங்கட்டை, இலம்பையங்கோட்டூர் (தேவாரதலம்), குமரியந்துறை,
சுள்ளியம்பேரியாறு, மதியஞ்சூடி (சிவன்) ...

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 22, 2017, 6:01:12 AM12/22/17
to மின்தமிழ்

On Wednesday, December 20, 2017 at 10:08:59 PM UTC-8, kanmanitamilskc wrote:
<உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்’

வாயில் கடந்து கோயில் புகுதல்.
இதே பொருளைத்தான் நச்சினார்க்கினியர் சிறுபாணாற்றுப்படை வரிக்கும் தருகிறார்.
”வாயில் வஞ்சி” பெரிய வாயிலையுடைய வஞ்சி.>

இல்லை .
இங்கே சொல்லப்படுவது மன்னனின் அரண்மனை.
கோட்டை வாயில் இல்லை.

அரண்மனைகளில் பெருவாயில் (Entrance Tower/Gopura) உண்டு. 
 
நச்சினார்க்கினியர் மதுரைவாசி என்று வாசித்ததாகத்தான் நினைவு.
அவர் படுஅப்பாவித்தனமாக வாயில் என்பதற்கு கோபுரம் என்று பொருள் எழுதி விட்டார்.
அவர் மனதில் மதுரைக்கோட்டையும் கோபுரத்துடன் கூடிய வாயிலும் ஆழமாகப் பதிந்து இருந்ததால் அப்படி எழுதி விட்டார்.
இப்படி இந்தக் கொங்குவஞ்சி பட்டப்பகலில் மதுரையின் பெருமையைக் கொள்ளையடித்து விடும் என்று சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.வடகடல் ,நாலு கடல் என்றெல்லாம் ........
இந்தச் சிக்கலைத் தீர்த்த பிறகு தான்  சேரரின் மூதூரை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இயலும். 
ஒரு வழி இருக்கிறது.
பரத்துவாசியாகிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியரே ;-----சாமீ 
கண்மணி  
2017-12-21 11:17 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

<

N D Logasundaram <selvi...@gmail.com>

to mintamil
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 22, 2017, 6:16:27 AM12/22/17
to மின்தமிழ்
2017-12-20 9:44 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<குயிலாலந்துறை சோழநாட்டுத்தலம். எங்கே என உவேசா எழுத்தில் பார்க்கவும். வைப்புத்தலம்.
இருங்குயில்  ஆலுவம் - சிலம்பு.
(1) பெரிய குயில்கள் போன்ற பறவைகள் வதியும் ஆலுவம் (ஆலந்துறை) இமைய மலையிலே.
(2) இருங்குயில்கள் பாடுகின்ற(ஆலுகிற) இமைய மலை இடம்.
சிவபிரான்/ரிஷ்பநாதர் குறிப்பு  : ஆலு (சேரனாட்டுவழக்கு) ரிஷபநாதர் ஆதிநாதரின் தீக்ஷாவிருக்ஷம்>

குயிலாலுவம் இமயமலைப்பகுதியில் இருந்தது.அங்கு மக்கள் சிவனை வழிபட்டனர்.---இவை  இளங்கோவடிகள் வெளிப்படையாகப் பேசும் தகவல்கள்.
இங்கே இரண்டாவது பொருள் கொள்வதற்கு என்ன தேவை உள்ளது.?
நம்மால் குயிலாலுவம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே இளங்கோவடிகள் இருபொருள் பட எழுதுவதாக ஒரு கருத்தைக் கற்பித்து நமக்குத் தெரிந்த ஊரை இயைத்துப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

நீலகேசி -மொக்கலவாதச் சருக்கம் -190ம்.பாடல் குயிலாலபுரம் என்று ஒரு ஊரைச் சுட்டுகிறது.-உ.வே.சா.உரை -ப.561
புத்தரின் பூர்வ அவதார ஸ்தலங்களில் ஒன்றான குயிலாலபுரம் -இளங்கோவடிகள் சுட்டுவது -மணிமேகலை உரைப்பதிப்பு 
எனவே கபிலவஸ்துவுக்கு அருகில் குயிலாலுவம் இருந்திருக்க வேண்டும்.T.G.Aravamuthan-Kaveri The Maukaris And The Sangam Age-p.40 
மு.இரா .வுக்கு உ.வே.சா.கருத்தில் உடன்பாடோ திருப்தியோ இல்லை(சேரன் செங்குட்டுவன் -ப.151)
அதற்காக சோழ நாட்டில் இருக்கும் சிவத்தலத்தை உட்பொருளாகக் கொள்கிறார் இளங்கோ என்பது எந்த ஒரு ஆய்வு நெறிமுறைக்குள்ளும் அடங்குவதன்று.

எந்த ஊரின் பெயரையும் இருபொருள் பட அவர் பாடவில்லை.

செங்கோடு - நல்ல உதாரணம். இரண்டு இடங்கள். சுருளிமலை/சுள்ளிமலைக்கு சொல்லி, திருச்செங்கோட்டை நினைக்கச் செய்கிறார்.
ஆலுவம் என்று கற்பனைப்பெயரை இமயமலைத் தலத்துக்கு அளிக்கிறார். புத்தரின் பூர்வ அவதார ஸ்தலம் “குயிலாலபுரம்” என்று காணோம்,
அது தமிழ் மொழிபெயர்ப்பா? - எனப் பார்க்கணும். அதன் வடமொழியில் பெயர் என்ன எனக் கண்டறிய முயல்வோம்.

குமரிக்கோடு என்று பெயர் சூட்டி கொற்றிகோட்டை நினையச்செய்தார். அடிகள் கூறும் ஏரகம் என்னுமிடமும் சிக்கலானது.

N. Ganesan

unread,
Dec 22, 2017, 11:57:20 AM12/22/17
to மின்தமிழ்

On Wednesday, December 20, 2017 at 9:47:18 PM UTC-8, kanmanitamilskc wrote:

            நீங்கள் காட்டும் புலிவலம் ,வலிவலம் ,வேட்டவலம் ,திருவலம் ஆகியவற்றின் வரிசையில் நாவலம் என்ற சொல்லை வைக்கும் போது ஒலியளவில் ஒப்புமை உள்ளது என்பதை மறுக்க இயலாது.ஆனால்.........
                                                நாவலந்தீவு ,
                                                நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில்           

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஏறக்குறைய சிலம்பின் நெருங்கிய காலத்தில் இயற்றப்பெற்றவை.
சிறுபாணாற்றுப்படையில் வஞ்சி மாநகரை (கரூர்) பெருவாயிலுடன் (Entrance Tower of the city/fort/palace) வர்ணிக்கிறது (சான்று: நச்சினார்க்கினியர்).
அந்நகரத்தின் வர்ணனையை மிக அழகாக இளங்கோ அடிகள் தந்துள்ளார். பெரும்பாணாற்றுப்படை நூலில் இருந்து
ஜம்புத்வீபம் என்பதன் மொழிபெயர்ப்பை ‘நாவலந்தண்பொழில்’ என எடுத்துப் பயன்கொள்கிறார் அடிகள்.
பின்னர் சில ஆண்டு சென்றபின், சாத்தனார் தம் பௌத்தக்காப்பியத்தில் நாவலந்தீவு பற்றிய வர்ணனைகளை மேற்கொள்கிறார்.

நா. கணேசன்
 
                                                                                சுள்ளியம்பெரியாறு ,

kanmani tamil

unread,
Dec 22, 2017, 12:51:11 PM12/22/17
to mintamil

<N D Logasundaram <selvi...@gmail.com>

21 Dec (1 day ago)
to mintamil
அன்புள்ள கண் மணி அவர்களுக்கு 
நீங்கள் காட்டியபடி  நாவலந்தீவு' எனும் சொல்  சிலப்பதிகாரத்தில் இல்லை அய்யா   
உள்ளவை நான்கு வரிகளில் மட்டும்தான் வேறு கிடையாது 
இவற்றினில் எங்கும்நாவல் எனும் பயிரினம் தொடர்பு கா ட்ட வழியில்லை
நாவலமேதான் தண்  பொழிலாகுமே தவிர  நாவல் (மர) தண்பொழில் அல்ல 
மேலும் தமிழில் உள்ள நாவலம் எனபதை ஜம்புதீவு  என மொழிபெயர்த்தார் அன்றி 
ஜம்புத்தீவினில் இருந்து நாவலம் பிறக்கவில்லை 
அதான் நான் நீண்ட வாதத்தில் குறுக்கிட வரவில்லை அந்த நாவலம் எனும் சொல்லின் 
பொருளை மட்டும் கா ட்டவந்தேன் 
வடமொழியாளர்  அறியாது மொழிபெயர்த்த சொல்தான் ஜம்புத்தீவு 
தீவு எனும் சொல்ல எங்கிருந்து நுழைந்தது முளைத்தது ??>

ஐயா 
         நாவலந்தண்பொழில் என்றதொடர் சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை &காட்சிக்காதை)
                                                                    பெருங்கதை (இலாவண காண்டம் -கோயில்வேவு )
                                                                    பரிபாடல் -(பா.5)
                                                                    பெரும்பாணாற்றுப்படை -(அ .465)போன்ற நூல்களில் காணப்படுகிறது.
                                                           " நாவலோடு பெயரிய மாபெரும்தீவத்து" என்னும் தொடர் மணிமேகலையில் உள்ளது.(பாத்திரம் பெற்ற காதை-107)
                                                           "சம்புத் தீவினுட் தமிழக மருங்கில் "என்பதும் மணிமேகலை.(உலக அறவி புக்க காதை -62)   
நாவலந்தண்பொழில் என்பது பாரதம் .
சம்புத்தீவு என்பது நாவலந்தீவு என்பதற்கு நேரான சமஸ்கிருதச் சொல் என்பார் என் .மகாலிங்கம் .
பௌத்தர்களின் பழங்குறிப்பேடுகள் சீனாவைத்தவிர்த்து ஆசியத் துணைக்கண்டத்தில் மௌரியப் பேரரசு ஆட்சி செலுத்திய பெருநிலப் பரப்பை சம்புத்தீவு என்ற பெயரால் அழைக்கின்றன.(R.C.Majumdar&Co-Advanced History Of India-p.3)எனவே அது பாலிமொழியிலிருந்து தமிழில் வந்திருக்கவேண்டும்  
தமிழைப் பொறுத்த வரை நாவலந்தீவு என்ற சொல் தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் தமிழில் சொல்லின் முதலெழுத்தாக  'ச்' இடம் பெறாது.(தொல்காப்பிய விதி )  
தீவு என்ற சொல் வழக்கின் காரணம் ----வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இமயமலை கடலுக்கடியில் இருந்தமை எனலாம்.பௌத்தர்களின் அறிவியல் இந்த உண்மையை உணர்ந்து இருந்ததால் ....என்று சொல்ல வாய்ப்புண்டு.
கண்மணி 

--

kanmani tamil

unread,
Dec 22, 2017, 12:58:45 PM12/22/17
to mintamil
<மாந்தோப்பு (மா + அம் + தோப்பு) --22.12அன்று கணேசன் எழுதியது >

மா+தோப்பு --->மாந்தோப்பு (இப்புணர்ச்சியில் 'அம் ' கிடையாது.
கண்மணி 

2017-12-22 23:21 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

<N D Logasundaram <selvindls61@gmail.com>

to mintamil

N D Logasundaram

unread,
Dec 23, 2017, 1:10:57 PM12/23/17
to mintamil
நூ த லோ சு
மயிலை

திரு கண் மணி 

​               முன்பு காட்டாத சிலம்பு வரி ​

சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு 115
​ ​
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து                 
​சிலம்பு 
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை               3 அரங்கேற்று காதை

​இங்கு கீழே காணும் தீவு நாவல் பழம் புதியவகை  எங்குள்ளது??​

தமிழக மருங்கு என்பதால் சிறிது தமிழகத்திக்கு வேறுபாடும் என்பது புலனாம் 

      நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள் 
      காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த 
      தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் 
      மணிமேகலையொடு மாதவி வாராத் 
      தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர 
​    ​மணிமேகலை 
      சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி   2. ஊரலர் உரைத்த காதை

​      ​
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப் 
      பூருவ தேயம் பொறை கெட வாழும் 
      அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் 
      மைத்துனன் ஆகிய பிரமதருமன்! 
      ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் 
      "தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை 
      இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் 
      நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே! 
      பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர் 09-020
      நாக நல் நாட்டு நானூறு யோசனை 
      வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் 
      இதன்பால் ஒழிக" என இரு நில வேந்தனும் 
      மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் 
      "ஆவும் மாவும் கொண்டு கழிக" என்றே 
      பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு 
      இடவயம் என்னும் இரும் பதி நீங்கி 
      வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன் 
      காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை 
​  
மணிமேகலை
      சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப 09-030 பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

​     ​
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் 
      ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது 
      நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து 
      வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் 
      துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து 
​                      
மணிமேகலை
      வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி 11-110   11. பாத்திரம் பெற்ற காதை

   மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் 
      தற்காத்து அளித்த தகை ஆ அதனை 
      ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் 
      ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத் 
      தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு 15-020
      ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன் 
      பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ 
      இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து 
​              
மணிமேகலை
      ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்       15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை

      பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற 
      பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை 
      அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் 
      திறத்து வழிப்படூஉம் செய்கை போல 
      வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் 
      தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி 
      யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய 
      காயசண்டிகை எனும் காரிகை வணங்கி 
      'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி 
      அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 17-010
      குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் 
      அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு 
      இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் 
      பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் 
      அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி 
      துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும் 
      எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் 
      பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் 
      வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் 
      துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் 17-020
      'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக் 
      காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன் 
      விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத் 
      தென் திசைப் பொதியில் காணிய வந்தேன் 
      கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த 
      இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் 
      புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை 
      மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் 
      பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர் 
      இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி 17-030
      தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின் 
      பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன் 
      தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் 
      காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் 
      உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் 
      கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன் 
      "சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது 
      ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது 
      அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு 
​                       
மணிமேகலை
      மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் 17-040   17. உலக அறவி புக்க காதை

      அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து 
      தருமசாவகன் தன் அடி வணங்கி 
      அறனும் மறனும் அநித்தமும் நித்தத் 
      திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும் 
      சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் 
      ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு 
      'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள் 
      கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா 
      அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் 
      இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன 25-010
      காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் 
      'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார் 
      யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் 
      கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக் 
      கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி 
​                   
மணிமேகலை
      காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்        25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை

 பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு 28-170
      நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து 
      தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி 
      செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் 
      பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய 
      சேதியம் தொழுது தென்மேற்கு ஆக 
      தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் 
      வையம் காவலன் தன் பால் சென்று 
      கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 
      'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் 
      நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180
      அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு 
      தங்காது இப் பதித் தருமதவனத்தே 
      வந்து தோன்றினள் மா மழை போல்' என 
      மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 
      'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் 
      வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி 
      ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 
      'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ 
​​
​          
மணிமேகலை
      கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ 
​   ​
 
   ​
28. கச்சி மாநகர் புக்க காதை
    
நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-12-22 23:21 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

<N D Logasundaram <selvindls61@gmail.com>

to mintamil
Reply all
Reply to author
Forward
0 new messages