சொட்டாங்கல்லுக்குப்பின் யாரும் பதியவில்லையே எனஎண்ணினேன்.மொத்தப் பட்டியல் வழங்கிய நண்பருக்குப் பாராட்டுகள்.விடுபட்டவை சில :
சிறுவர் விளையாட்டுகள் _குண்டு.
1.கோடுகிழித்து ஆடும் குண்டு (பூந்தா)
2.குழி பறித்து ஆடும் குண்டு.(சிறு குழிக்குள் விரலால் அடித்துக் கொண்டுவந்து சேர்த்தல்)
இருபாலர் விளையாட்டு _
காலாட்டுமணி கையாட்டுமணி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றி தெரிந்த ஏனையோரும் தொடரலாமே.சுபா
நளினி இன்னும் விடுதலை ஆகவில்லை. ஆனால், அவர் முயற்சியால் ஒரு அப்பாவிப் பெண் விடுதலை ஆகிவிட்டார்!
''இந்த சிறையில் 'பக்கா’ என்ற விஜயா என்று ஒரு கைதி கடந்த 24 ஆண்டுகளாக இருக்கிறாள். கழைக்கூத்தாடியான அவளது நடனத்தினால் கவரப்பட்ட ஒருவர் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய வீட்டில் சாதியைக் காரணம்காட்டி, திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு இருவரும் கழைக்கூத்து நடத்தி பிழைத்தனர். ஒருநாள் இரவு ரோட்டோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். கணவன், மனைவி இருவரும் அவனைக் கல்லால் அடித்து விரட்டினர். காயம்பட்ட அவன் இறந்துவிட்டான். இவர்களைக் கைதுசெய்த போலீஸ், 500 ரூபாயைத் திருடுவதற்காக இவர்கள் அவனைக் கொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தனர். இரண்டு பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர். அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு, குழந்தையைப்போல் உளறிக் கொண்டிருக்கிறாள். ஒட்டுமொத்த சிறைக்கும் அவள்தான் செல்லப்பிள்ளை. இப்போது
என்னுடைய விடுதலையைவிட அவளுடைய விடுதலைக்காகத்தான் அதிகமாக என் வழக்கறிஞரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்''
- கடந்த வாரம் ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார் வேலூர் சிறையில் இருக்கும் நளினி. இந்த நிலையில் விஜயா, கடந்த 20-ம் தேதியன்று விடுதலையாகி இருக்கிறார்.
வேலூரில் உள்ள ஓ.ஆர்.டி. பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் விஜயா. இவரின் விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.
''நளினியின் வழக்குத் தொடர்பாக வேலூர் பெண்கள் சிறைக்குச் சென்றபோதுதான், என்னிடம் விஜயாவை அறிமுகப்படுத்தினார். 'இவங்க கஷ்டப்படுறாங்க. இவரை விடுதலை செய்றதுக்கு முயற்சி எடுங்க’னு சொன்னார். இவர் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமா வாங்கினேன். மேலும், 'சிறைக் கைதிகள் உரிமை மையம்’ என்ற எங்கள் அமைப்பு மூலமாக... தமிழ்நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் பற்றிக் கணக்கெடுத்தேன். அதில், பெண்களில் அதிகமான ஆண்டுகள் சிறையில் இருப்பது 'பக்கா’ விஜயா மட்டும்தான். அவருடைய விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப் போட்டேன். 30 வாய்தாக்கள் கடந்து, 2012 பிப்ரவரி மாதம் 'இவரின் முன் விடுதலைக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட கோப்பு அனைத்தும் உள்துறை செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது’ என தகவல் கொடுத்தனர். அதிகாரிகளுக்கு அக்கறை இல்லாததால், விஜயாவின் விடுதலைக்கான கோப்பு உள்துறை செயலாளர் அலுவலகத்தில் உறங்கியது. கடந்த வாரம் இளங்கோ என்பவர் வழக்கில் விடுதலை செய்யச் சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் பிரகாசம், சிறைத் துறைக்கு வழங்கி இருந்த உத்தரவைச் செயல்படுத்தாமல் காலதாமதம் செய்தது, நீதிமன்ற அவமதிப்பாக மாறியது. விஜயா கேஸில் பிரச்னை வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் 20-ம் தேதி காலையிலேயே விஜயாவை அவசர அவசரமாக விடுதலை செய்துவிட்டனர்.
கழைக்கூத்தாடியான விஜயாவிடம் காதல் கொண்டார் கோயம்புத்தூர் மாவட்டம் நாச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பிறகு விஜயாவோடு சேர்ந்து அவரும் கழைக்கூத்தாடி வாழ்க்கை நடத்தினர். சுப்ரமணியன், 'நாங்கள் ஒருநாள் தெருவோரத்தில் தூங்கியபோது விஜயாகிட்ட, ஒருத்தன் தவறாக நடந்துக்க முயற்சி செஞ்சான்.
அவனை எதிர்த்து நடந்த சண்டையில இறந்திட்டான்’னு சொல்கிறார். இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர் காவல் நிலையத்தில் 1990-ம் ஆண்டு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, 91-ம் ஆண்டில் 500 ரூபாய் வழிப்பறி மற்றும் கொலைக் குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது, கோவை நீதிமன்றம். கணவன், மனைவியாக இருந்ததால் இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்ததால்... மனநிலை பாதித்து, பேச முடியாமல் இருக்கிறார் விஜயா. இவருடைய வழக்கை எடுத்து நடத்த ஆட்கள் இல்லாததால்தான் இவ்வளவு நாட்கள் சிறையில் இருந்தார். அடுத்து அவருடைய கணவரின் முன்விடுதலைக்காக வழக்குப்போட இருக்கிறேன்'' என்றார்.
வேலூர் பெண்கள் சிறையில், கைதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்துவரும் மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் பேசினோம். ''விஜயாவுக்கு 60 வயதாகிறது. நான், அங்கே போவதற்கு முன்பே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 'மாமா... பாஸு... டாட்டா’ இந்த மூன்று வார்த்தைகள் மட்டும்தான் பேசுவார். சின்ன குழந்தை மாதிரி நடந்துகொள்வார்'' என்றார்.
விஜயா விடுதலை பற்றி வேலூர் பெண்கள் சிறையின் காவல் கண்காணிப்பாளர் ராஜலெஷ்மியிடம் பேசியபோது, ''91-ம் ஆண்டு வேலூர் சிறைக்கு வந்துள்ளார். இவரின் செயல்பாடுகளைப் பார்த்து, நாங்கள் பரிந்துரை செய்திருந்த விடுதலைக்கான ஆவணங்கள் கையெழுத்தாகி வருவதற்குத் தாமதமான நிலையில்... புகழேந்தி வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.
விஜயா, விடுதலை ஆகிவிட்டார். அடுத்து குணம் அடைய வேண்டும்!
- காசி.வேம்பையன்
ஆரியக்கூத்தாடிகளின் இன்றைய நிலை.
கழைக்கூத்து
| முடச்சிக்காடு புதியபாரதி | ilam...@gmail.com |
கழை என்பது மூங்கில் களிகளைக் குறிக்கும் வார்த்தை. மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிறில் நடந்து வித்தை காட்டுவது கழைக்கூத்து. இதை ஆரியக்கூத்து என்றும், ஆரியக் கழைக்கூத்து என்றும் அழைக்கிறார்கள். வடநாட்டில் இருந்து வந்த கலை என்பதால் இதை ஆரியக்கூத்து என்று அழைக்கப்டுகிறது.
இந்தக்கலை இரவு நேரத்தில் நிகழ்வதில்லை. பகல் நேரத்தில் காலை 8 மணி முதல், பதினோரு மணிவரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை நிகழ்த்துவது மரபு. பொதுவாக சூரிய ஒளியில் நிகழ்த்த வேண்டும் என்பது நியதி.
கழைக்கூத்து நிகழ்த்துபவர்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட காட்டுநாயக்கர்கள். இவர்களை ரெட்டி டொம்பரர்கள் என்றும் அழைப்பார்கள். இவர்கள் வடநாட்டில் இருந்து வந்து ஆந்திரத்தில் குடியேறியவர்கள். நாயக்கர் காலத்தில் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.
![]() | இக்கலையில் இசை கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. தவில் அல்லது தட்டு பயன்படுத்துவார்கள். முழுக்க, முழுக்க இந்த கலையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்கள் இக்கலைஞர்கள். ஆண், பெண், குழந்தைகள் என இக்கலையை அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள். எனவே இதை குடும்பக்கலை என்றும் அழைப்பதுண்டு. |
இந்த கூத்தை பெரும்பாலும் மணற்பாங்கான இடத்தில் தான் நடத்துகிறார்கள். இக்கூத்து நிகழ்த்த 4 வலிமையான மூங்கில்கள் தேவை. 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் வரை உயரம் இருக்கலாம். முந்தையக் காலங்களில் இதைவிட அதிக உயரமுள்ள குச்சிகளை பயன்படுத்தினார்கள். இரண்டு கம்புகளை பெருக்கல் குறிபோல இருபுறமும் நட்டு வைத்து, கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் செய்யப்பட்ட கயிரைக்கொண்டு கட்டி, பூமியில் இரும்புக் கம்பியை நட்டு கட்டிவிடுவார்கள். நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.
கூத்து தொடங்குவதைக் குறிக்கும் விதத்தில் தட்டு அல்லது தவில் இசைப்பார்கள். தொடக்கத்தில் சில சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள். தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மேல் கத்தியை வீசுவது, கர்ணம் அடிப்பது என கலை நீளும். அடுத்து கயிற்றில் நடப்பது. பெரும்பாலும் பெண்கள் தான் கயிற்றில் நடக்கிறார்கள்.
பெருமளவில் இக்கலை இப்போது நடைமுறையில் இல்லை. சென்னையில் ஜல்லடியான் பேட்டை என்ற கிராமத்தில் குடியிருக்கும் கழைக்கூத்தாடிகள் பற்றி ஒரு பிரபல இதழில் நான் எழுதிய கட்டுரை இதன் தொடர்ச்சியாக வருகிறது. அக்கட்டுரை இம்மக்களின் இன்றைய வாழ்க்கைச்சிக்கலைச் சொல்லும்.
தென் சென்னையில் மேடவாக்கத்துக்கு அருகில் இருக்கிறது ஜல்லடியான்பேட்டை. கழிவுகளால் மூழ்கி வரும் பள்ளிக்கரணையின் நோய்க்காற்று தொட்டுச் செல்லும் 'புண்ணிய' பூமி. இங்குதான் இருக்கிறது கழைக்கூத்து நகர்.
ஒரு நேர்க்கோட்டு ரோடு சென்று, திரும்பி, நீளும் ஒரு குறுக்குச் சந்தில் நிசப்தமாக அமர்ந்திருக்கும் இந்த கழைக்கூத்து நகரில் 40 கூத்துக் குடும்பங்கள், கொஞ்ச நஞ்ச ஆயுளை குடிசை கட்டி கழிக்கின்றன.
![]() | கழைக்கூத்தாடிகளை தரிசிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. தவிலும் தட்டும் முழங்க, பச்சைக் குழந்தையை ஒற்றைக்கையில் தூக்கி வித்தை காட்டிய மனிதர்கள் தட்டை நீட்டி பிச்சை கேட்கையில், முகத்தைத் திருப்பி நகர்ந்து வந்த அனுபவம் அநேகம் பேருக்கு இருக்கக்கூடும். வேகாத வெயிலில், உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்துவிட்டு, உணவுக்கு கையேந்துகையில் பல வீடுகளில் |
ஜன்னல்கள் கூட சாத்தப்படுகின்றன. காலம் கலைத்துப் போட்ட வாழ்க்கை. குழந்தைகளைக் கூத்துக்குப் பயன்படுத்தக் கிளம்பிய எதிர்ப்பு, அந்த மக்களின் பட்டினி நாட்களை அதிகமாக்கி விட்டது.
இப்போது...
குழந்தைகள் பள்ளி செல்கின்றன. கம்பங்களையும், கயிறுகளையும் தூர வீசிவிட்டு மினிடோர் ஆட்டோக்களின் டிரைவர்களாகவும், குப்பை பொறுக்குபவர்களாகவும் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளனர் அந்தக் கலைஞர்கள்.
வெள்ளை வெளேரென திரும்பிப் பார்க்கத் தோன்றும் அழகுப் பெண்கள், கம்பீரம் பொருந்திய ஆண்கள், மொழுமொழுவென்று தூக்கிக் கொஞ்சத் தோன்றும் குழந்தைகள்...
இவர்களின் பூர்வீகம் குஜராத். குஜராத்தின் பூர்வகுடிகளான தோம்பரா மக்களின் பாரம்பரிய கலைதான் கழைக்கூத்து. தோம்பராக்கள் காட்டுநாயக்கர்களின் ஒரு பிரிவு என்ற கருத்து உண்டு. குஜராத், இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், ஜீவனம் தேடி இடம்பெயர்ந்தவர்கள், ஆந்திரம் வழியாக தமிழகம் வந்து அடைக்கலமானார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர் கழைக்கூத்தாடிகள். தமிழகத்தில் மொத்தம் 500 கூத்தாடிக் குடும்பங்கள் இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.
இவர்களின் வாழ்க்கை சோகமும் கண்ணீரும் கலந்தது. ஆயினும், அந்த வலிகள் பிறப்பிலேயே பழக்கப்பட்டு விடுவதால் அந்த நேர்க்கோட்டு வாழ்க்கை திசை திரும்புவதை யாரும் விரும்புவதில்லை.
தங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்களை, பசிக்குப் பறிகொடுத்த கழைக்கூத்தாடிகள் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதம் நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர். கழைக்கூத்து நகரில் அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக நிற்கிறது ஜெபக்குடில்.
தமிழ்நாடு கழைக்கூத்து கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் பாபுஜி. 'நல்ல நேரம்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு கே.ஆர்.விஜயாவின் தலையோடு, தலை சேர்த்து கூத்தாடியவர் இவர்தான்.
''தெருவுல கூத்தாடுறதைத் தவிர வேறெதும் எங்களுக்குத் தெரியாது. இப்ப தெருவுல கூத்துப் போட்டா போலீசுக்காரங்க புடிச்சிடுறாங்க. அதனால, நெறைய பேரு தொழிலை விட்டுட்டு வேற பக்கம் திரும்பிட்டாங்க. இப்போ புள்ளைகளையும் பள்ளிக்கூடத்துல சேத்துட்டோம்" என்று கூறும் பாபுஜிதான் கழைக்கூத்து நகரின் தலைவர்.
![]() | குழந்தைகளுக்கு 2&வது மாதத்திலேயே கூத்துப்பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். தலையே நிமிராத இரண்டு மாதக் குழந்தையை ஒரு கையால் தூக்கி, மேலே நிறுத்துவது தான் முதல்கட்டப் பயிற்சி. கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றைக் கட்டி, ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் நீள்கின்றன. 3 வயதிலேயே குழந்தை |
தட்டோடு தெருவிறங்கி விடுகிறது.
உறவுகளை அறிந்து கொள்ளும் முன்பாகவே பிச்சைக்குப் பழக்கப்பட்டு விடுகின்றன குழந்தைகள். பெண்ணாக இருந்தால் 12 வயதிலேயே திருமணம் முடிந்து விடுகிறது.
'இப்படி சிறு வயதில் திருமணம் செய்வது தப்பில்லையா?'
''தப்பு, சரியெல்லாம் யோசிக்க முடியாது. எங்களுக்கு சாப்பாடுதான் பிரதானம். நாளெல்லாம் பட்டினி கெடக்குற மனுஷங்களுக்கு சோறுபோட வழி செய்யாத சட்டம், எங்க பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் குறை சொல்ல மட்டும் ஏன் வருது?" & வெடிக்கிறார் பாபுஜி.
கூத்து நடக்கும் தெருவே பெண் பார்க்கும் இடம். பல்டியடிப்பது, கயிறு மேல் நடப்பது, தவில் தட்டுவது இவைதான் பெண்களின் திருமணத் தகுதி. நன்றாகக் கூத்தாடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள கடும் போட்டி நிலவும். மாப்பிள்ளை பார்த்தலும் கூத்திலேயே நிறைவடையும். திருமணத்துக்கு முதல்நாள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மணமக்கள் நெல் வசூலிப்பார்கள். கிடைக்கும் நெல்லை குத்தி, அரிசியாக்கி, நெல் தந்த உறவினர்களிடமே திருப்பி தந்து விடுவார்கள். திருமணத்தன்று மணமக்கள் குத்தி தந்த அரிசியில் சோறாக்கி சாப்பிட்டு விட்டு உறவினர்கள் திருமண நிகழ்விடத்துக்கு வருவார்கள். திருமண சடங்குகள் மிக எளிமையாகவே நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கட்டாயம் தனிக்குடித்தனம் தான். ஆனாலும், எல்லோருமே கூத்தை நம்பி வாழ்வதால் திருமணத்துக்குப் பிறகும் தம்பதியர் தத்தம் பெற்றோரை எளிதில் கைகழுவிவிட முடியாது.
'' முன்னாடியெல்லாம் கல்யாணமான ஆம்பிளை பொண்ணு வீட்டில தான் இருக்கனுன்னு கட்டுப்பாடு இருந்துது. காலப்போக்குல கலைக்கூத்து அழிஞ்சது மாதிரி கட்டுப்பாடும் அழிஞ்சிருச்சு. இப்போ, கல்யாணமாகி தனிக்குடித்தனம் போற ஆம்பிளை, தன்னோட வருமானத்துல பாதியை, ஒரு மாதம் பெத்தவங்களுக்கும், மறு மாதம் மாமியாரு வீட்டுக்கும் தரணும். அப்படித் தர மறுத்தா அந்த ஆம்பிளையை, ஊர் கூடி மொட்டையடிச்சு கழுதையில் ஏத்தி தண்டிப்போம்" என்கிறார் இந்த நகரின் இன்னொரு முக்கியஸ்தர் சேகர்ஜி.
தங்கள் கிராமத்து பெண்களை அசலூருக்குக் கட்டித் தருவதையும் கலைக்கூத்து மக்கள் விரும்புவதில்லை. 'புள்ளைகளை பக்கத்தில கட்டிக்கொடுத்தா, புருஷன் அதட்டிப் பேசாம பாத்துக்கலாம்..' என்று காரணம் சொல்கிறார்கள். திருமணமான ஜோடிகள் ஒருமாதம் வரை தொழிலைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. அதன் பிறகு வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பினால், ஒரு வருடமோ, ஆறு மாதமோ? கோயில்கள், பொது இடங்களில் இரவு தங்கல். தெருவோரம் கட்டிக்கொள்ளும் தற்காலிகக் கூடாரங்களில்தான் தாம்பத்யம்.
இவர்களின் குலதெய்வம் கம்பத்தடி கருப்பர். கழைக்கூத்து நகரில் உள்ள கம்பத்தடி கருப்பருக்கு தை மாதம் 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. ஆடு, கோழி என்று பூஜைகள் அனல் பறக்கும். இரவுகளில், தினமும் ஒரு குழுவின் கூத்து. பத்தாம் நாள் இரவு, கழைக்கூத்து நகரே கலந்து கட்டி ஆடும்.
20 அடி உயரத்தில், கயிறில் நடக்கும்போது தவறி விழுந்து கால், கை முறிந்தவர்கள், உயரிழந்தவர்கள் அநேகம் பேர். அப்படி பாதிக்கப்படுவோருக்கு எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை.
இமிதிஜியை மாதிரி கயிற்றில் நடக்கும் கூத்தாடி யாரும் இல்லை. லாவகமாக நடந்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று காசை அள்ளும் இமிதிஜி, சில வருடங்களுக்கு முன் சென்னை அமைந்தகரையில் கூத்து நடத்தும்போது அந்தரத்தில் இருந்து கீழே விழுந்தார். ஒரு காலை எடுத்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை. 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு வழி? கூத்துக்கு குட்பை சொல்லிவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று வருகிறார் இமிதிஜியின் மனைவி ராணி.
''சில நேரங்கள்ல இது என்னடா பொழப்புன்னு தோணுது. லாட்டரி சீட்டு மாதிரிதான் வாழ்க்கை. ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்குத் தேறும். இன்னொரு நாளைக்கு பட்டினி. தலைமுறை, தலைமுறையா கம்பியிலே நடக்குறதையும், குட்டிக்கரணம் போடுறதையும் விட்டுட்டு எங்க குழந்தைகளுக்காவது வேற திசை காட்டணும். அதுக்காகத்தான், அங்க இங்க கடன வாங்கி ஒரு லோடு ஆட்டோ வாங்க முடிவு பண்ணியிருக்கேன்" என்கிறார் கலைக்கூத்தாடி கணேஷ்.
குழுவாக கூத்தாடப்போன இடத்தில் கணேசும், பக்கத்து வீட்டு சந்திராவும் காதலிக்க, சின்ன சலசலப்போடு ஊர் கூடி திருமணம் செய்து வைத்திருக்கிறது. கூத்துகிராமத்தில் முதல் காதல் திருமணம்.
முத்துவுக்கும் ரேவதிக்கும் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. வெளியூருக்கு கூத்துக்கட்ட செல்ல வண்டி ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ''கைநிறைய கலை இருந்தாலும் கையேந்தி நிக்கிற இந்த பொழப்பு வெறுப்பா இருக்கு. எங்க குழந்தையை நிச்சயம் கழைக்கூத்தாடியா வளக்க மாட்டோம்" & முத்துவின் வார்த்தைகளில் விரக்தி அப்பிக் கிடக்கிறது.
On Saturday, June 13, 2015 at 9:02:44 AM UTC-7, Suba.T. wrote:தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றி தெரிந்த ஏனையோரும் தொடரலாமே.சுபாஆரிய மொழிகளைப் பேசிக்கொண்டு கழைக்கூத்தாடிகள் பிழைப்புத்தேடித் தமிழகம் வந்தனர்.சங்க காலத்தில் ஆரியக்கூத்து என அறியப்பட்ட கலை.
7. வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 5 வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே
கழைக்கூத்து
சுபா