காளமேகம் பாடல்களில் அங்கதம்!

739 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Feb 28, 2009, 5:13:26 PM2/28/09
to Min Thamizh
தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்று; காப்பியங்கள், தொகை நூல்களுக்கு இணையாகத் தனிப்பாடல்களும் இலக்கிய, இலக்கணச் சுவை மிக்கவைகளாக நிலைபெற்று இன்றும் சிறப்புடன் வழங்கி வருதலே ஆகும்.

தனிப்பாடல் திரட்டுகளில் அடங்கும் புலவர் பெருமக்களின் எண்ணிக்கையும் அதிகம்; அவ்வப்புலவர்களின் சிறப்பியல்புகளும் கணக்கில் அதிகம். எனினும் அருந்தமிழ் மூதாட்டி ஒவ்வையாரும், கவி காளமேகப் புலவரும் தனிப்பாடல்கள் பல தந்து தத்தமது காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளனர்.

  • விருத்தப்பாவுக்குக் கம்பரும்
  • வெண்பாவுக்குப் புகழேந்தியும்
சிறப்புற்று விளங்கியமை போல, "வசைபாடக் காளமேகம்" என்ற தனித்துவமான அடைமொழியைத் தனது காலகட்டத்திலேயே பெற்றவர் காளமேகப் புலவர். ஒரு கால் திருவரங்கத்து அரங்கன் கோயிலிலும், மற்றொரு கால் திருவானைக்கா சிவன் கோயில் மடப்பள்ளியிலும் பரிசாரகராப் பணியாற்றி இறைத்தொண்டும், ஆன்மிகச் சிந்தையும் மிக்கவராகத் திகழ்ந்தார் என்றும் இவரது காலம் 15ஆம் நூற்றாண்டு என்றும், இயற்பெயர் "வரதன்" என்றும், தஞ்சை மண்டலத்துக் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் ஊரினர் என்றும் கூறுவர்.

அவரது பிறப்பிடமும், காலமும் எவ்வாறாயினும் காளமேகத்திற்குத் தமிழகத்தின் இருபெரும் சமயங்களான சைவ, வைணவ தத்துவங்களும், புராணங்களும் அத்துபடியாயிருந்தன என்பதும், சுவைகளுள் சிறந்ததான நகைச்சுவையின் மற்றோர் அம்சமான;
  • எள்ளல்
  • ஏசல்
  • கிண்டல்
என்னும் வசைபாடும் பாவினங்களைப் பாடுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய்த் திகழ்ந்து வந்திருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கைக் குறிப்பு மற்றும் பாடல்களின் மூலம் அறிகிறோம். இரட்டுற மொழியும் உயரிய சிலேடைப் பாடல்கள் இயற்றுவதிலும் இவரே தமிழ் இலக்கியத்தின் சாதனையாளராகத் திகழ்ந்துள்ளார்.

அங்கதச்சுவை மேலை நாட்டு இலக்கியங்களில் வளர்ந்த அளவுக்குத் தமிழில் வளரவில்லை என வாதிடுபவர், இவரது தனிப் பாடல்களைப் படித்தறிவதன் மூலம் எளிதில் தம்முடைய கருத்தை மாற்றிக்கொள்வர். சிவன், பெருமாள் வழிபாட்டிலும் கூட அங்கதச் சுவை சொட்டச் சொட்ட எழுதி, அன்பர்களை அசரடித்திருப்பவர் காளமேகம்.

சிவபிரான் முக்கண்ணன், உமையொருபாகன் ஆதலால் முக்கண்ணில் பாதியான ஒன்றைரைக் கண் உமையவளுக்குச் சொந்தம்; ஒரு கண் வேடன் கண்ணப்ப நாயனாரால் இடந்து அப்பப்பட்டதனால் ஒரு கண் கண்ணப்பருக்கு உரியது. உமைக்கு ஒன்றரை, கண்ணப்பருக்கு ஒன்று போக சிவனுக்கு அரைக்கண் தான் என்ற பொருள்பட,

"முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்
 அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே."

என்ற பாடலால் ஆன்மிக அன்பர்களையும் அங்கதச் சுவையால் கலங்கடித்தவர் காளமேகம். சாதாரண மனிதர்களை விட்டு வைத்திருப்பாரா என்ன?

பாடிப் பரிசில் பெறவேண்டி நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவரும் திருமலைராயனைச் சந்திக்க விழைகிறார் கவிஞர். பின்னிரவில் நாகப்பட்டினம் சென்றவர்க்கு பசி அதிகமாயிற்று; உணவுக்கான சத்திரத்தை தேடியலைந்தார். முடிவில் "காத்தான்" என்பவரின் சத்திரத்தைக் கண்டடைந்தார். இவரது போதாதகாலம் பணியாளர்கள் வேலை முடித்துத் தூங்கப் போய்விட, உணவு வேண்டிப் பணியாளை எழுப்புகிறார். பணியாளர், புதிதாக உலையேற்றிச் சமைத்து கவிஞருக்குப் படைக்கிறார். பசிக்கடுப்பு அவரை உசுப்பேற்றுகிறது. சாப்பிட்டு முடிந்ததும் "இவனிடம் ஓரகப்பை அன்னம் பெற்று உண்பதற்கு ஊரடங்கி விடிந்துவிடும்", என்ற பொருளில் உரத்த குரலில் பின்வரும் பாடலைப் பாடுகிறார்.

"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
 அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
 உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
 இலையிலிட வெள்ளி எழும்."

கவிஞர் வாய் பழிச்சொல் காலங்கடந்தும் நின்றுவிடும் என்பதை அறிந்த பணியாளர், தன் முதலாளியிடம் ஓடிச் சென்று முறையிடுகிறான். முதலாளியும் ஓடோடி வந்து கவிஞரை வணங்கி, உபசரணைகள் பல புரிந்து தம்மை நிந்தித்த பாடலைக் கைவிட்டு வேறுபாடல் தந்திட வேண்டி நிற்கிறார். காத்தானை ஏசிய கவிஞரின் வயிறும், நெஞ்சும் தற்போது நிறைந்திருப்பதால் மேற்படிப் பாடலை அப்படியே பொருள் மாற்றிச் சொல்கிறார்.

"ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அத்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு வெள்ளியும் வெட்கப்பட்டு மேற்கிளம்பும்."

வசைமொழியைக் கிளப்பிய பாடல், வயிறு நிறைந்ததும் புகழ்மொழியாய் மாறிப்போன அதிசயத்தைக் காத்தானோடு சேர்ந்து நாமும் இன்றும் அனுபவிக்கிறோம். இத்தனிப்பாடல், தரத்தால் சிம்மாசனத்தில் எளிதாய் ஏறி அமர்ந்துவிட்டது.

மு.செல்வா

நன்றி: தமிழ்மணி (தினமணி)

வேந்தன் அரசு

unread,
Feb 28, 2009, 8:20:52 PM2/28/09
to minT...@googlegroups.com
அங்கதம் என்றால் என்ன?

2009/2/28 Kannan Natarajan <thar...@gmail.com>



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.

Kumaran Malli

unread,
Feb 28, 2009, 10:23:59 PM2/28/09
to minT...@googlegroups.com
Digital Dictionaries of South Asia Tamil lexicon
Searching the entire dictionary for அங்கதம். Your search located 6 occurrences.

Click here for a key-word-in-context display.


1. அங்கதச்செய்யுள் aṅkata-c-ceyyuḷ : (page 19)

Members, as of an assembly; சபைக்குறுப்பானவர்.

*அங்கதச்செய்யுள் aṅkata-c-ceyyuḷ

, n. < அங்கதம் +. Stanza of abuse, lampoon; வகைக் கவி. கைக்கிளை பரிபாட்டங்கதச் செய்யுளொடு (தொல். பொ. 430).


2. அங்கதம் aṅkatam : (page 19)

*அங்கதப்பாட்டு aṅkata-p-pāṭṭu

, n. See அங்கதச் செய்யுள். (தொல். பொ. 471.)

*அங்கதம்¹ aṅkatam

, n. prob. aṅka- or aṅga-da. 1. Abuse; வசை. (தொல். பொ. 436, உரை.) 2. See அங்கதச் செய்யுள். (தொல். பொ. 436.) 3. Falsehood; பொய். (அக.


3. அங்கதம் aṅkatam : (page 19)

1. Abuse; வசை. (தொல். பொ. 436, உரை.) 2. See அங்கதச் செய்யுள். (தொல். பொ. 436.) 3. Falsehood; பொய். (அக. நி.)

*அங்கதம்² aṅkatam

, n. < aṅgada. Bracelet worn on the upper arm; வாகுவலயம். புயவரை மிசை...அங்கதம் (திருவிளை. மாணிக். 12).


4. அங்கதம் aṅkatam : (page 19)

(அக. நி.)

*அங்கதம்² aṅkatam

, n. < aṅgada. Bracelet worn on the upper arm; வாகுவலயம். புயவரை மிசை...அங்கதம் (திருவிளை. மாணிக். 12).

*அங்கதம்³ aṅkatam

, n. prob. aṅga-da. Serpent; பாம்பு. அங்கத


5. அங்கதம் aṅkatam : (page 19)

n. < aṅgada. Bracelet worn on the upper arm; வாகுவலயம். புயவரை மிசை...அங்கதம் (திருவிளை. மாணிக். 12).

*அங்கதம்³ aṅkatam

, n. prob. aṅga-da. Serpent; பாம்பு. அங்கத மொக்குஞ்சில (இராகு.யாகப். 71).


6. அங்கதம் aṅkatam : (page s011)

to tāṅkaḷ, taṅkaḷ; தாங்கள் தங் கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். Loc.

அங்கதம் aṅkatam

, n. 1. Food of elephants; யானையின் உணவு. போந்தபிடி யினமு மங்கதங்கிட் டாம லறமெலிந்து (பஞ்ச. திருமு. 158). 2. cf.



2009/2/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

V, Dhivakar

unread,
Mar 2, 2009, 12:51:39 AM3/2/09
to minT...@googlegroups.com
அன்புடையீர்   !!

கம்பனுக்குப் பிறகு சொல்லாடலில் காளமேகம் தமிழை மிக அழகாகச் சிறப்பித்தவர். சரியான நாடோடி. காலில் சக்கரம் ரொம்ப சுறுசுறு. இவர் மனம் வைத்திருந்தால் தமிழில் மாபெரும் காவியம் பாடி இருந்திருக்கலாம் என்றே தோன்றும். யாருக்கும் அஞ்சாதவர். அடியேனுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் (கடந்த ஐந்து நூற்றாண்டுகள்) வரிசைப் படுத்தினால் இவர் பெயர் முன்னே இருக்கும். பிறகு பாரதியும் கண்ணதாசனும்.

இவரைப் பற்றிய ஒரு அழகான ஓவியங்கள்  திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி வாசலில் படம் போடப்பட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. தலையைத் தூக்கி சற்று நிதானமாக பார்க்கவேண்டும். ஆனால் அன்னையைக் காணும் ஆவலில் இவர் ஓவியங்களை ஏறெடுத்துப் பார்க்காமலே உள்ளே பக்த ஜனம் ஓடும்.

பிராஜக்ட் மதுரையில் இவர் கவிதைகள் சேர்க்கப்பட்டு மின்னாக்கம் பெற்றுள்ளன. இவர் கவிதைகளுக்கு இங்குள்ள தமிழ்ப் பெரியோர்களில் யார் ஒருவராவது நாளொன்றுக்கு ஒரு கவிதை எழுதி விளக்கம் எழுதினால் மிக நல்லது. யார் செய்தாலும் தமிழுக்குப் பெரும் சேவையாக இருக்கும். இளைய தலைமுறையினர் கூட மிகவும் விரும்பிப் படிப்பர்.

கண்ணன் - கொஞ்சம் பலமாக சிபாரிசு செய்யுங்களேன்..

திவாகர்
Reply all
Reply to author
Forward
0 new messages