Re: [MinTamil] Re: சங்கநூல் + பழம் நூல்கள் சொல்வளம் = அலங்கு

134 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 4, 2014, 2:56:01 PM12/4/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, ara...@gmail.com, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran
அன்புள்ள பாண்டிய ராசா அவர்களுக்கு

சங்கச் சொல்வளம் எனும் இழையில்

அலங்கு
                துயல்
                              துளங்கு 
எனும் அசைதல் குறிப்புடைய சொற்களின் வேறுபாட்டினை விளக்கினீர் 

இருந்தும் ஒறிரு சொற்களினின்றும் நோக்குதலின் பற்பல நூல்களிலிருந்து பெறுதலின்
சிறப்பமைதலுடன் தமிழின் வளமும் விளங்கும் எனும் கருத்தில் 
முதலில் அசைதல் பொருள எனக்காட்டிய அலங்கு எனும்  சொல்லின் தொகுப்பினை
என்னிடமுள்ள பற்பல நூல்களினின்றும் தேடுதலை முயன்றேன் காண்க

பின் துயல் (வர) மற்றவைதனைக் கண்போம் 

(துயல் >> முன்னும் பின்னும் (காதில் குழை) )ஆடுதல்
              >>(உண்ணும்) துவையல் (அரைக்கும் அம்மியில் ஆடுதல்)
                 துணி துவைத்தல் (மேலும் கீழும் ஆட்டுதல் 

துளங்குதலுடன் விளங்குதலும் நோக்க வேறுமாறுபாடு இவற்றினால் பொருள் நன்கு விளங்கும் 
எனலாம்

சினை தார் இவற்றூடன் வர அசைதல் பொருளவாகத்தான் முதலில் தோன்றுகின்றது  
ஆனால் காந்தள் கதிர் மண்டிலம்  அருவி  உடன் வருமுடத்து கூம்பாக விரிதல்
               எனும் பொருள் படுதல் காணலாம் 
அதான்று ஆழ்ந்துநோக்க சினை எனும் மிடத்தும் கூம்பாக விரிதல்
எனப் பொருள்கொள்ளதலும் தகுமெனத்தோன்றுகின்றது
தார் எனுமிடத்து கீழ் நோக்கிய கூம்பு எனும்படி உள்ளமைக் காண்க 

ஒரு மீள் பார்வைத் தகும் என நினைக்கின்றேன் 

மேலும்  வேறான அலைதல்  ஆடல் ஆலல் ஆலுதல் என்பனதான்
அசைதல் உடன் நெருங்கிய  தொடர்புடைய சொற்களாகவே காண்கின்றேன் 

தேடித் தொகுத்த நிரல் தங்களின் பார்வைக்கு இங்கே
------------------------------------------------

முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே மலை 144

அலங்குகழை நரலும் ஆரிப் படுகர் மலை. 161

பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு திருமுரு 298

சுரம்புல் லென்ற ஆற்ற அலங்கு சினை அகம் 1-15

அலங்குகழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து அகம் 47-4

அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு அகம் 84-12

பல்துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் அகம் 108-15

அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலை அகம் 169-2

அலங்குகுலை அலரி தீண்டித் தாது உக அகம் 177-10

அலங்கு கதிர் திகிரி ஆழி போழ அகம் 224-14

கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ அகம் 236-7

புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை  அகம் 241-11

அழல் அகைந் தன்ன அலங்குசினை ஒண்பூ அகம் 245=15

மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய அகம் 272-14

அலங்கு சினைக் குருந்தின் அல்குநிழல் வதிய அகம் 304-10

அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் அகம் 381-5

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ புறம் 2-13

நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளி புறம் 4-13

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த புறம் 22-14

மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇ புறம் 22-21

நிற் பாடிய அலங்கு செந்நாப் புறம் 22-32

அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் புறம் 36=6

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் புறம் 325-11

அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி புறம் 375-1

அலங்கு உளை அணி இவுளி புறம் 382-4

அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் கலி 7-15

எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள் கலி 40-12

அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் கலி 139-8

பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கி குறு 134-4

அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை குறு 296-2

அலங்குவெயிற் பொதிந்த தாமரை குறு 376-5

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய பரி 15-21

அலங்குகதிர்த் திருமணி பெறூஉம் பரி 58-18

அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என பரி 64-10

அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும் ஐங்குறு 8-4

அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி ஐங்குறு 220

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய நற். 118-1

அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து நற். 185-8

அலங்குசினை பொதுளிய நறு வடி மாஅத்து நற்.  243-4

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த ந ற்.  292-1

அலங்கு குலைக் காந்தள் தீண்டி தாது உக நற். 359-2

ஆய்மணிப்பைம்பூண்அலங்குதார்க்கோதையை முத்தொள்ளாயிரம் 7

அலங்குதார்ச்செம்பியன்ஆடெழில்தோள்நோக்கி முத்தொள்ளாயிரம் 28

அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முத்தொள்ளாயிரம் 36

கச்சை யானை மானவேற் கண்ணி அலங்கு தாரினான் சூளாமணி 4 இரதநூபுர

ஆங்கெழில் பொலிந்தவன் இருந்தபின் அலங்குதார் சூளாமண 6 தூதூவிடு

அல்லதூஉம் கருமத்து) அலங்கு தார் இவுளித் திண்தேர் சூளாமணி 6 தூதூவி

அங்கவெங்க டம் கடந்(து) அலங்குதார் இலங்குபூண் சூளாமணி 7 சீயவதை

அலங்குஅலங்கு சிங்காதனத்தின்அண்ணல்அடிக்கீழ் அறநெறிச்சாரம் 199

விண்டுஅலங்கு எஃகொடு வேணாட்டு எதிர்நின்ற பாண்டிக்கோவை 31

ஒழுங்கு கண் அலங்கு சோதியொடு தக்கயாகப்பரணி 420

அலங்கு கோட்டு முத்திலங்கு நிலவுசெய்து நச்சி. உரை மேற்கோள் 8

அலங்குகுலைஈந்தின் சிலம்பி பொதிசெங்காய் நச்சி. உரை மேற்கோள் 125

அடக்க அரும்தானை அலங்குதார் மன்னர் புறப்பொருள். 132

ஆர்கழல்மன்னன்அலங்குஉளைமாவெஞ்சிலை புறப்பொருள். 132

அலங்குஅலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே இளம். மும்மணி 11.773

மன்றலங்குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான் பெரியபு. 12.476

மன்றலங்குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா பெரியபு. 12.1769

மன்றலங்குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும் பெரியபு. 12.2544

2014-12-04 18:45 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
//குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/32௩4//

இலக்கியச்செம்மல் திரு.ப.பாண்டியராஜா அவர்களே

மேலே கண்ட வரிகள் இன்றைய நுட்பமான லைன் கிங் படக்காட்சியையும் விட வெகு துல்லியமாய் மிக்க ஆழமான சொல்லாட்சியில் இருப்பதை வெகு அற்புதமாய் காட்டியிருக்கிறீர்கள்.
கலித்தொகையில் "உள்ளம்" கூட ஒலிக்கும் விந்தையை காண்கிறோம்.சங்கத்தமிழ் உங்கள் கைகளால் முத்துப்பேழையாய் மாணிக்கப்பேழையாய் ஆகியிருக்கிறது.அது வெறும் சங்கப்பலகை அல்ல என்பதை உயிர்ப்புடன் காட்டியிருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி.
உளம் வழியும் பாராட்டுகளுடன்
ருத்ரா

On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள்  இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?
கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.

சங்கச் சொல்வளம்

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  (எ.டு)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...

சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161  

தாளுருவி அசையும் காதினையும் ---

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330

நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,

இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.

இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.

முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு - தல்  To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.

1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

        பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298

        நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

        முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144

        அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.

அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.

அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்

மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway

துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.

வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79  

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86  

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207  

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164  

அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2  

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161  

வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127 

இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.

எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.

அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு

...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Dec 4, 2014, 10:12:33 PM12/4/14
to தமிழாயம், mintamil, வல்லமை, தமிழ் மன்றம், Sivakumar M A, Raji M, ara...@gmail.com, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran
கோவையில் அலங்காம இரு என்பார்கள். ஆடாமல் இருப்பதை.

அடிப்பக்கம் ஆடாமல் தலைப்பக்கம் ஆடுவதே அலங்கு, தலையாட்டி பொம்மை போல்
 தலைப்பக்கம் ஆடாமல் அடிப்பக்கம் ஆடுவது  துயல். ஊஞ்சல்போல்

மொத்தமாக அசைவது துளங்கு.. யானையின் அசைவுபோல்.

4 டிசம்பர், 2014 ’அன்று’ 2:55 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Dec 4, 2014, 10:47:19 PM12/4/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, abans...@gmail.com, myla...@gmail.com, ara...@gmail.com, podh...@gmail.com, tami...@gmail.com, banuk...@gmail.com
அன்பினுக்கினிய ஐயா,
மிக்க நன்றி. ஒரு பெருந்தொகுப்பினின்றும் வழங்கிடங்களைத் தெரிவுசெய்து, சொற்களுக்கு வண்ணமிட்டு, அவற்றைப் பெரிதாக்கி, அடிக்கோடிட்டு என பல செயல்களைச் செய்து தாங்கள் அளித்துள்ள அரிய தொகுதிக்காக மிக்க நன்றி. அதைக் காட்டிலும் அதனைச் செய்யவேண்டும் என்று தோன்றிய தங்களின் பெருவுள்ளத்துக்கு மிக்க நன்றி.
நான் உருவாக்கியுள்ள sangamconcordance.in என்ற வலைத்தளத்தினின்றும் ஒரு சொல் சங்க இலக்கியங்களில் காணப்படும் வழங்கிடங்களை எளிதாகப் பெறவியலும். என்னுடைய இழையின் தலைப்பே சங்கச் சொல்வளம் என்பதால் சங்கம் தவிர்த்த நிகழ்விடங்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மேற்கூறிய தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம், நளவெண்பா ஆகிய நூல்களினின்றும் வழங்கிடங்களைப் பெறவியலும். விரிவஞ்சியே சங்க வழக்காறுகளில் மிகச் சிலவற்றை எடுத்துப் படங்கள்மூலம் விளக்கியுள்ளேன்.
எனினும் தாங்கள் கொடுத்துள்ள தொகுப்பில் மேலும் பலநூல்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு பெருமகிழ்வு எய்தினேன். இது ஓர் ஆய்வினைப் பெரிதும் விரிவுபடுத்தும். இவ்வாறு தரக்கூடிய மென்பொருள் தங்கள்வசம் இருப்பது தெரிகிறது. அதைப் பற்றிய விபரங்களை எனக்குத் தெரிவிக்க இயலுமா? அது தனிப்பட்ட பயன்பாட்டுக்குமட்டும் என்றிருப்பதைவிட பொதுப்பயன்பாட்டுக்கும் வருமேயானால் தமிழ் ஆய்வுலகம் பெரிதும் பயனடையும் என்பதில் ஐயமில்லை. எனவே அத் தளத்தைப் பற்றிய விபரங்களைத் தெரிவித்தால் நலமாயிருக்கும்.
என்னுடைய இந்த ஆய்வில் நான் சங்க இலக்கியங்களில் வரும் அத்தனை இடங்களையும் கண்டு அவற்றில் ஒருசிலவற்றைமட்டுமே ஒளியிட்டுக் காட்டுகிறேன்.
தங்களின் அன்பு மடலுக்கு மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
...

நா. கணேசன்

unread,
Dec 5, 2014, 6:07:01 PM12/5/14
to thami...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, abans...@gmail.com, myla...@gmail.com, ara...@gmail.com, podh...@gmail.com, tami...@gmail.com, banuk...@gmail.com

On Thursday, December 4, 2014 7:12:32 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
கோவையில் அலங்காம இரு என்பார்கள். ஆடாமல் இருப்பதை.

அடிப்பக்கம் ஆடாமல் தலைப்பக்கம் ஆடுவதே அலங்கு, தலையாட்டி பொம்மை போல்
 தலைப்பக்கம் ஆடாமல் அடிப்பக்கம் ஆடுவது  துயல். ஊஞ்சல்போல்

அடிமரமே ஆட்டம் காண்பது “துயர்”. துயர்/துயல்.
 
...

வேந்தன் அரசு

unread,
Dec 6, 2014, 6:09:20 AM12/6/14
to vallamai, தமிழாயம், மின்தமிழ், தமிழ் மன்றம், M.A.Siva Kumar, Raji M, ara...@gmail.com, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran

5 டிசம்பர், 2014 ’அன்று’ 6:06 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, December 4, 2014 7:12:32 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
கோவையில் அலங்காம இரு என்பார்கள். ஆடாமல் இருப்பதை.

அடிப்பக்கம் ஆடாமல் தலைப்பக்கம் ஆடுவதே அலங்கு, தலையாட்டி பொம்மை போல்
 தலைப்பக்கம் ஆடாமல் அடிப்பக்கம் ஆடுவது  துயல். ஊஞ்சல்போல்

அடிமரமே ஆட்டம் காண்பது “துயர்”. துயர்/துயல்.

அப்படி பயிலும் இடம் பார்த்தது இல்லை. அடிமரம் ஆடாது. சாயும். அதுக்கு துளங்குதான் பொருத்தமான சொல். கப்பல் கடல்நீரில் ஆடிவருவதுபோல் ஆடுவது துளங்கு.

N. Ganesan

unread,
Dec 6, 2014, 6:48:11 AM12/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com
துயல்-/துயர்- தொடர்புடைய சொற்கள். எப்படி விளக்குவீங்க?

வேந்தன் அரசு

unread,
Dec 6, 2014, 6:55:17 AM12/6/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம்

6 டிசம்பர், 2014 ’அன்று’ 6:48 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
துயர், துன்பம், துனி, துக்கம் இவற்றின் வேர் வேறு

N. Ganesan

unread,
Dec 6, 2014, 7:02:28 AM12/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com

On Saturday, December 6, 2014 3:55:17 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

துயல்-/துயர்- தொடர்புடைய சொற்கள். எப்படி விளக்குவீங்க?

துயர், துன்பம், துனி, துக்கம் இவற்றின் வேர் வேறு

துக்கம் - வடசொல்.
துனி, துன்பு - துன்-

ஆனால்,
துயர்/துயல் வேறு.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 6, 2014, 7:24:51 AM12/6/14
to mintamil

மதுரைப் பக்கம் "அலுங்காமல் குலுங்காமல் ஆயிரமாயிரமாச் சம்பாதிக்கிறான் " என்பார்கள்

தேமொழி

unread,
Dec 6, 2014, 2:30:22 PM12/6/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in
எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை. 

ஊஞ்சலாடும் தேவியின் காது  தொங்கட்டான் குழையின்  நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட  ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற  பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum 

நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 
____________________________________________________________________________________________

On Friday, December 5, 2014 3:16 AM, tamilmani  wrote:
  
எனக்கு ஒரு அறிவியல் தேடல் விடையைக்காண முற்பட்டேன். சங்க தமிழ் இலக்கியத்தில் இரண்டு அறிவியற் கூறுகள் (தொல்காப்பியத்தில் ஒன்றில் குவிலேன்ஸ் பற்றிய ஒரு அறிவியல் & மற்றும் ஊஞ்சல் ஆடும் சிறுமியின் காதுஅணி சேர்ந்து (பெண்டுலம்) பற்றிய ஒரு அறிவியல் .இதை சார்ந்த பாடல்கள் வேண்டும் உங்கள் இடம் இருந்தால் எனக்கு அனுப்பிவைக்கவும் இதை இனையதளத்தில் தேட முற்பட்ட போது எனக்கு எதுவும் அகப்படவில்லை  
 
அது மட்டும் யின்றி !!எனக்கு சங்க தமிழ் இலக்கிய நூலில் உள்ள வியக்க வைக்கும் அறிவியல் உண்மை மற்றும் கோட்பாடு ,அதிசயம் பற்றிய (தொகுப்பு,நிரல்,லிங்க்ஸ்,அனைத்தும் அனுப்ப வேண்டுகிறேன் 
 
நன்றி!
வணக்கம்

வேந்தன் அரசு

unread,
Dec 6, 2014, 4:30:57 PM12/6/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம்

6 டிசம்பர், 2014 ’அன்று’ 7:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Saturday, December 6, 2014 3:55:17 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

துயல்-/துயர்- தொடர்புடைய சொற்கள். எப்படி விளக்குவீங்க?

துயர், துன்பம், துனி, துக்கம் இவற்றின் வேர் வேறு

துக்கம் - வடசொல்.

வடமொழியில் இருக்கும் சொல்

துனி, துன்பு - துன்-

ஆனால்,
துயர்/துயல் வேறு.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 7, 2014, 2:48:52 AM12/7/14
to mintamil

       மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

தேமொழி

unread,
Dec 7, 2014, 3:01:02 AM12/7/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in, kalair...@gmail.com

நீங்களே ஒரு அருமையான கட்டுரையும்  எழுதியுள்ளீர்களே ...அதன் சுட்டியையும் கொடுக்கலாம் அல்லவா.... :))

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. 

..... தேமொழி

ஆடல்வல்லான் ஒரு அறிவியல் இறைவன்

முனைவர்.கி.காளைராசன்

On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:

       மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

-- 
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 7, 2014, 12:48:23 PM12/7/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vallamai

On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:

       மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

இப்படி ஒருபாடல் மீனாட்சிக்கு இருக்கிறதா? எனக்குத் தெரியாது. இருந்தால் தாருங்கள். மகிழ்வேன்.
குமரகுருபரர் மீனாட்சியை பாதாதிகேசமாக துதிக்கும் பாடல் அவள் பிள்ளைத்தமிழில் உண்டு.
அதில் காதில் உள்ள குழை ஆடுகிறது. ஆனால் இந்தச் செய்தி இல்லை.

நா. கணேசன்
 
எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை. 

ஊஞ்சலாடும் தேவியின் காது  தொங்கட்டான் குழையின்  நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட  ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற  பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum 

நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 
____________________________________________________________________________________________

On Friday, December 5, 2014 3:16 AM, tamilmani  wrote:
  
எனக்கு ஒரு அறிவியல் தேடல் விடையைக்காண முற்பட்டேன். சங்க தமிழ் இலக்கியத்தில் இரண்டு அறிவியற் கூறுகள் (தொல்காப்பியத்தில் ஒன்றில் குவிலேன்ஸ் பற்றிய ஒரு அறிவியல் & மற்றும் ஊஞ்சல் ஆடும் சிறுமியின் காதுஅணி சேர்ந்து (பெண்டுலம்) பற்றிய ஒரு அறிவியல் .இதை சார்ந்த பாடல்கள் வேண்டும் உங்கள் இடம் இருந்தால் எனக்கு அனுப்பிவைக்கவும் இதை இனையதளத்தில் தேட முற்பட்ட போது எனக்கு எதுவும் அகப்படவில்லை  
 
அது மட்டும் யின்றி !!எனக்கு சங்க தமிழ் இலக்கிய நூலில் உள்ள வியக்க வைக்கும் அறிவியல் உண்மை மற்றும் கோட்பாடு ,அதிசயம் பற்றிய (தொகுப்பு,நிரல்,லிங்க்ஸ்,அனைத்தும் அனுப்ப வேண்டுகிறேன் 
 
நன்றி!
வணக்கம்

N. Ganesan

unread,
Dec 7, 2014, 12:51:41 PM12/7/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in, vallamai

On Saturday, December 6, 2014 11:30:22 AM UTC-8, தேமொழி wrote:
எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை. 

பாடல் தருகிறேன். தமிழ்.நெட் காலத்திலிருந்து இணையத்தில் குறிப்பிட்ட பாடல்தான்.
 
ஊஞ்சலாடும் தேவியின் காது  தொங்கட்டான் குழையின்  நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட  ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற  பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum 

நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 

இப்பாடலின் கருத்து: வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது.

பாடல் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஔவை??  தெரிந்தோர் சொன்னால் மகிழ்ச்சி.
சந்தவசந்தத்திலும் கேட்கிறேன்.

நா. கணேசன்
 
____________________________________________________________________________________________

வேந்தன் அரசு

unread,
Dec 7, 2014, 9:12:03 PM12/7/14
to vallamai, மின்தமிழ், Kalairajan Krishnan

7 டிசம்பர், 2014 ’அன்று’ 12:48 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:

       மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

>உயரம் குறைவான ஊஞ்சல் (காதில் உள்ள கம்மல்) வேகமாக 
துயலும் அல்லது ஊங்கும்

அலைதூரம் அதிகம் ஆனால் வேகம் கூடும்., ஆனால் துயல் எண்ணிக்கை மாறாது.
 
N. Ganesan

unread,
Dec 8, 2014, 1:18:23 AM12/8/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in, vall...@googlegroups.com

On Sunday, December 7, 2014 9:51:41 AM UTC-8, N. Ganesan wrote:

On Saturday, December 6, 2014 11:30:22 AM UTC-8, தேமொழி wrote:
எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை. 

பாடல் தருகிறேன். தமிழ்.நெட் காலத்திலிருந்து இணையத்தில் குறிப்பிட்ட பாடல்தான்.
 
ஊஞ்சலாடும் தேவியின் காது  தொங்கட்டான் குழையின்  நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட  ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற  பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum 

நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 

இப்பாடலின் கருத்து: வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது.

பாடல் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஔவை??  தெரிந்தோர் சொன்னால் மகிழ்ச்சி.
சந்தவசந்தத்திலும் கேட்கிறேன்.

கபிலர் - திருவள்ளுவமாலை:

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட 
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

தேமொழி

unread,
Dec 8, 2014, 2:09:41 AM12/8/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in, vall...@googlegroups.com
உதவிக்கு மிக்க நன்றி திரு. கணேசன் 

On Sunday, December 7, 2014 10:18:23 PM UTC-8, N. Ganesan wrote:

நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 

இப்பாடலின் கருத்து: வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது.

கபிலர் - திருவள்ளுவமாலை:

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட 
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

பொருள்:  வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும். 

N. Ganesan

unread,
Dec 9, 2014, 9:34:34 PM12/9/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com

On Sunday, December 7, 2014 9:48:23 AM UTC-8, N. Ganesan wrote:

On Saturday, December 6, 2014 11:48:52 PM UTC-8, kalai wrote:

       மதுரையை ஆளும் அன்னை மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறார்.   அவர் ஆடும்
ஊஞ்சலை விட அவர் காதில் அணிந்துள்ள கம்மல் வேமாக ஆடுகிறது என்பதை
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடுகிறது.  உயரம் குறைவான ஊஞ்சல் (காதில்
உள்ள கம்மல்) வேகமாக ஆடும்.  நீளமான ஊஞ்சல் மெதுவாக ஆடும்.  ஊஞ்சல்
அலையும் தூரம் (வீச்சு) கூடினாலும் குறைந்தாலும்,  அது ஆடுவதற்காக
எடுத்துக்கொள்ளும் நேரம் மாறாது.

இப்படி ஒருபாடல் மீனாட்சிக்கு இருக்கிறதா? எனக்குத் தெரியாது. இருந்தால் தாருங்கள். மகிழ்வேன்.
குமரகுருபரர் மீனாட்சியை பாதாதிகேசமாக துதிக்கும் பாடல் அவள் பிள்ளைத்தமிழில் உண்டு.
அதில் காதில் உள்ள குழை ஆடுகிறது. ஆனால் இந்தச் செய்தி இல்லை.

நா. கணேசன்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் கடைசிப் பாட்டில் பாதாதிகேசமாகக் குமரகுருபர சாமிகள் துதிக்கிறார்:
(ஆனால் நீங்கள் சொல்லும் ஊசல் இயற்பியல் விதி இதில் இல்லை. குமரகுருபரருக்குப்
பின்வந்த மாதவச் சிவஞான முனிவர் பாடலது.)

இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
   டரைத்திடு மரிச்சிலம்பும்
இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொன்
   எழுதுசெம் பட்டுவீக்கும்    

திருவிடையு முடைதார மும்ஒட் டியாணமும்
   செங்கைப் பசுங்கிள்ளையும்
திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
   திருநாணு மழகொழுகநின்

றருள்பொழியு மதிமுகமு முகமதியி னெடுநில
   வரும்புகுறு நகையுஞான
ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
   டமராடு மோடரிக்கட்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே! 

On Wednesday, April 2, 2014 5:13:25 AM UTC-7, Rajagopalan wrote:
- hide quoted text -
நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் பாதாதிகேச வண்ணம், வெண்டளையால் வந்த கலித் தாழிசையால் பாடப்பட்டுள்ளது.

அ.ரா

N. Ganesan

unread,
Dec 11, 2014, 10:47:01 AM12/11/14
to mint...@googlegroups.com, marxi...@gmail.com, tami...@tataelxsi.co.in, vallamai, Santhavasantham
On Saturday, December 6, 2014 11:30:22 AM UTC-8, தேமொழி wrote:
எனக்குத்  தனிமடலில் வந்த கேள்வியை இங்கு குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்... நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் பாடத்தில் படித்த செய்திதான் இது.....இப்பொழுது நினைவில்லை. 

ஊஞ்சலாடும் தேவியின் காது  தொங்கட்டான் குழையின்  நீளம் குறைவு காரணமாக வேக வேகமாக ஆடுவதையும் ...நீளாமான சங்கிலியைக் கொண்ட  ஊஞ்சலின் ஆட்டம் குறைவு என்ற  பொருளில் வரும். எளிய ஊசலின் விதி ...simple pendulum 

இந்த இயற்பியல் விதியை தமிழில் முதலில் சொன்னவர் மாதவச் சிவஞான யோகிகள். பாடல் இதுதான்:

சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்.

திங்களொளி காட்டுமுக மீதுலாவு நாட்டச் செழுங்கய லுதைந்தூக்கலாற் - 
        செம்பொனி னிழைத்தமகரக்குழைக ளுஞ்செவிச் செங்கனக வூசலாடப்,--
பங்கய விருக்கைமட மாதரது நோக்கியிரு பாலுமிரு வேமாட்டவும் - 
        பாயுங் கயற்குல மசைக்குமவ்வூசலிற் பாய்ந்திலதிவ் வூசலெனநீள்,-- 
அங்கையின் வலித்துநனி யாட்டுதொறு நின்வா யரும்புநகை நிலவெழிலினுக்- 
        காங்கவர் முகத்திங்கள் சாயப் புராணமறை யாகம மளந்தறிவரும்,-- 
புங்கவன் மருங்கு குடி கொண்டவமு தாம்பிகை பொன்னூச லாடியருளே - 
        பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (5)

முழு நூலும் இங்கே,

மாதவச் சிவஞான யோகிகள் பாரதத்தின் இரு செம்மொழிகளிலும் புலமை மிக்கவராய் வாழ்ந்தவர். தமிழுக்குத் திராவிடம் என்று வழங்கப்பெறுகிறது எதனால்? - என்று சைவசித்தாந்த நோக்கில் விளக்கியவர். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பெரும்புலவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சிவஞானமுனிவரின் வரலாற்றைப் பாட ஆரம்பித்தார். ஆனால் முடிப்பதன்முன்னமே காலமானார். வைணவத்தில் மணவாள மாமுனிகள் போல, சைவத்தில் சிவஞான முனிவரர் எனலாம். பன்னிருவர் இவரது மாணாக்கர்கள். முகவை சோமசுந்தரக் கவிராயர் அவர்களில் ஒருவர். அவரது மாணவர்கள் பலர் புதிதாய் காலனிய ஆட்சியில் அமைந்த கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவிக்கலாயினர். எ-டு: முகவை இராமனுசக் கவிராயர். இவர்களுடன் ஆராய்ந்துதான் எல்லிஸ், கால்ட்வெல் போன்றோர் திராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டைச் சென்னை மாநகரில் உருவாக்கினார்கள். அதுவரை, நீதியரசர் சர் வில்லியம் ஜோன்ஸ் போன்றோரது தேற்றப்படி  இந்தியாவின் மொழிகள் யாவும் சம்ஸ்கிருதத்தினின்றும் பிறந்தவை என்றே ஐரோப்பியப் பனுவலியலாளர் (Philologists) கருதிவந்தனர். படிக்க: மிச்சிகன் பேரா. தாமஸ் ட்ராட்மன் ஆய்வுநூல்கள்.

சிவஞானமுனிவர் வாழ்வு - புலவர் ர. வையாபுரி, பேரூர்

கால்ட்வெல் பாதிரியார் திராவிடதேசம் (தமிழ்நாடு என்பதன் மொழிபெயர்ப்பு) என்பதை அடிநாதமாகக் கொண்ட பஞ்ச திராவிட நாடுகளிலே வழங்கும் திராவிடபாஷைகளுக்கு Dravidian என்று பெயர்வைத்தார். அதற்கும் 40 ஆண்டு முன்னரே சென்னை கலெக்டர் எல்லிஸ் திராவிட மொழிக்குடும்பம் சம்ஸ்கிருதக் குடும்பத்தினின்றும் வேறான பிறப்புடையது என்று நாட்டினார். ஆனால், எல்லிஸ் Dravidian என்ற நாமகரணம் செய்யவில்லை. கால்ட்வெல் பாதிரியார் எல்லீசரின் தியரியை வளர்த்தபோழ்து செய்த பெயர்சூட்டல். அதாவது அமெரிக்கன் இங்கிலீஷில் பெயர்த்தால் “Tamil-like" language family (= Dravidian language family). இதற்கெல்லாம் எல்லீசர் போன்றோரின் தமிழ் ஆசிரியர்கள் - மாதவச் சிவஞான முனிவரரின் மாணாக்கர்கள் - ஒருவகையில் காரணகருத்தர்கள் எனலாம். சிவஞான முனிவர் 33 ஆண்டுகளே வாழ்ந்தவர் என்பார்கள். 70, 80 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அவரால் எத்தனையோ உரைகளும், இலக்கண இலக்கியங்களும் அழியாமல் காக்கப்பெற்றிருக்கும். அந்தோ! சிவபிரான் திருவடிக்கு இளவயதிலே சேந்துவிட்டார் மாதவ முனிவரர். கால்ட்வெல்லுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் மாணவர் சபாபதிநாவலர் தோன்றி, “திராவிடப் பிரகாசிகை” என்று நூலெழுதி இந்தியாவின் செம்மொழிகள் தமிழ், சம்ஸ்கிருதத்தை ஆராய்ந்தார்கள்.

தமிழ் இலக்கிய வரலாற்றைத் தொடங்கிவைக்கும் நூல் என 1899-ல் மகாவித்துவான் சபாபதி நாவலர் எழுதிய “திராவிடப் பிரகாசிகை என்னும் தமிழ்வரலாறு” நூலை உறுதியாய்க் கொள்ளலாம். சபாபதி நாவலரின், திராவிடப் பிரகாசிகை நூலுக்கு சுவாமிநாத பண்டிதர் வழங்கிய சிறப்புப் பாயிரச் செய்யுள்  வெண்பா வடிவில் இருக்கிறது. அதனை வாசிப்போம்:

திராவிடநன் னூன்மாண்பு தேறாரும் தேற
திராவிடப்ர காசிகையைச் செம்மை – விராவிடச்செய்
தீந்தான் சபாபதியென் றேயிசைக்கு நாவலன்றான்
றீந்தேன் றமிழருமை தேர்ந்து.

மணவாள மாமுனிகள் தொடங்கி சபாபதி நாவலர் வரை - ஆதியான செந்தமிழ், இந்தியாவின் செம்மொழி சம்ஸ்கிருதம் உறவுகள், கொடுக்கல்வாங்கள், மொழியியல்துறை வளர்ந்த வரலாறு என நல்ல ஆய்வுக் கருத்தரங்கம் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆய்வியல் கழகங்கள் நடத்தி நூல்கள் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். அவற்றில் செந்தமிழ், வடமொழி அறிஞர்கள், இருமொழி நிபுணர்கள் மணவாளமாமுனி, சிவஞானயோகி நூலகளை மொழியியல்வரலாற்று நோக்கில் கட்டுரைகள் அமையுமானால் அற்புதமாக இருக்கும். யாருமே செய்யாத துறையிது. 

திராவிட மாபாடிய கருத்தர் என்று போற்றப்பெறும் சிவஞான முனிவரர் இன்று இந்தியாவின் அரசியலாளர் நடைமுறைப்படுத்தி வரும் ஜாதி சமானம், சமபந்தி போஜனம் பற்றி முதலில் வடமொழி உபநிஷத் வாக்கியத்தை மேற்கோள் காட்டிப் பாடியவர் திராவிட மாபாடிய கருத்தரே. இதனை, கவிராக்ஷசர் என்ற பட்டம்பெற்ற கோவைக்கவியரசு கு. நடேசகவுண்டர் திருமகனாரும், பேரூர்த் தமிழ்க்கல்லூரி முதல்வராக இருந்தவரும் ஆன முனைவர் கோ. ந. முத்துக்குமாரசாமி தமிழ்ஹிந்து தளத்தில் விளக்குகிறார்:
“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக” என்று பொருளாகும்படி,"அபிவா யச் சண்டாள: சிவ இதிவாசம் வதேத் தேந ஸஹ ஸம்வஸேத்தேந ஸஹபுஞ்சீத” என முண்டகோபநிடதம் மொழிகின்றது. இது நீலகண்ட பாஷியத்து 4ஆம் அத்தியாயத்து 1ஆம் பாதத்து 15ஆம் சூத்திர பாஷியத்து உள்ளது. இதனைத் திராவிட மாபாடிய ஆசிரியரான மாதவச் சிவஞான முனிவர்கள் மொழிபெயர்த்துத் தம் குருவணக்கமாக மொழிகிறார்கள் -

“சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன் செப்பிடின் அவனுடன் உறைக
அவனோடு கலந்து பேசுக அவனோடு அருகிருந்து உண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா ஊமரோடு உடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவேறு எனக்கிலை கலைசையாண் டகையே”

[...]

இவ்வாறு உண்மையை அறியாமல் வேதம் ஒரு சாதியாருக்கே உரியது எனக் கூறுவார் உரை எல்லாம் நடுவு நிலைமை பிறழ்ந்து கூறும் அநீதி என்க.”

இப்போது வேதம் அமெரிக்கரும், ஜப்பானியரும், ஐரோப்பியரும் படிக்கும் நூல்கள் ஆகிவிட்டன என்பதுவும் இந்தியர்கள் பார்க்கவேண்டும். வேதம் பொது, எல்லோரும் கற்கலாம். இளவயதில் இருந்து கற்று ஆசாரமுடன் இருப்போர் அர்ச்சகர் ஆகலாம் எனும் நிலை அரசாங்கம், ஆலய நிர்வாகம் ஏற்படுத்தினால் சிறக்கும்.

நா. கணேசன்
 
நண்பர் கூறும் மற்றொன்று ... புல்லின் பனித்துளியில் ஒரு மரத்தின் முழு உருவமும்  தெரிவது பற்றியது. 
____________________________________________________________________________________________

கபிலர் - திருவள்ளுவமாலை:

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட 
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

அதன் பின்னர், யமுனைத் துறைவர்:
“வெப்ப மெங்கு மோங்க ருக்கன் றன்னைக் கைக்குடை
தப்பு றாத டைத்தல் தானுங் கண்டி லைகொ லைய!நீ
ஒப்ப வோங்கு தால முற்றும் புல்லி லையி லுற்றிடும்
அப்பு விந்து தன்னு ளேயடக்கல் தானுங் கண்டிலை .35.

அதன்பின்னர், பாரதியார் ஹேலி வால்வெள்ளியைப் பாடியது:
"தினையின் மீது பனை நின்றாங்கு" எனத் தொடக்கவரியில் இருக்கும் கருத்தும் அப் பழைய பாடல்

தெரிவு:
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages