அயோத்திதாசர் - எழுத்துச் சீர்மை

1,230 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 27, 2014, 10:16:57 AM6/27/14
to mint...@googlegroups.com, vallamai
வரிவடிவ லிபிக்கு எந்த எழுத்துச் சீர்திருத்தமும் அயோத்திதாசர் புகுத்தவில்லை. அவர் அச்சிட்ட நூல்களில் பார்த்தால் இது தெரிகிறது.

ஆனால், ஐ வர்க்க உயிர்மெய் எழுத்துக்களில் மாற்றம் கொண்டுவர எழுதியுள்ளார். நன்மை என்பதை நன்மெய் என்றும், தன்மை என்ற சொல்லை தன்மெய் என்றும் எழுதலாம் என்று எழுதியுள்ளார். 

As far as we know, Ayoththidas Pandithar did not initiate any script reform in the shapes of Tamil letters, nor did he print any books in any reformed script.
But he asked for writing words like தன்மை, நன்மை etc., differently. BTW, if Tamil is written like that, its meanings would change. That may be one
reason why Ayothidas' suggestion was not followed by Tamil scholars or in educational institutions since these words, with a specific meaning, are written
even in Sangam texts.

"EVR Periyar admitted that he derived the enthusiasm and idea for Tamil Script reform from the writings of Ayothidasa Pandithar."

Does Periyar EVR talk about Ayothidas Panditar when he wants to change the Tamil script (like u,uu uyirmey-s), or, is Periyar referring to the dropping of the diphthong -ai uyirmeys & going for -ay as தந்தய், மலய், for thanthai, malai, etc., 

"தமிழ் எழுத்துகள் அச்சுக் கோர்ப்புக்கு எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும் பொருட்டு, அதே சமயம் பொருள் பிழை நேராத வகையில் எழுத்துகள் குறைக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் எழுத்துச் சீர்திருத்தத்தை முன் வைத்தார். உதாரணமாக 'பழைய' என்ற சொல்லை 'பழய' என்றும் 'மௌனம்' என்ற சொல்லை 'மவுனம்' என்றும் எழுதினார். அதே போல 'மை' மகர ஐகாரத்தை 'மெய்' என்ற மகர ஏகாரமாக மாற்றியமைத்து சீர்திருத்தம் செய்தார். இதனடிப்படையில் 'நன்மை' என்பதை 'நன்மெய்' என்றும் 'தன்மை' என்ற சொல்லை 'தன்மெய்' என்றும் தமது தமிழன் இதழில் எழுதியும் பின்பற்றியும் வந்தார். தன்மை என்று எழுதுவதைத் தவிர்த்துவிட்டு தன்மெய் என்று எழுதப்படும்போதுதான் அச்சொல் சரியான பொருளை உணர்த்துகிறது என்பதால் அவர் கோரிய சீர்திருத்தமாகும் இது. பண்டிதரின் இவ்வெழுத்துச் சீர்திருத்தம் மற்றபிற தமிழறிஞர்களால் பின்பற்றப் படாமலும் பேசப்படாமலும் போனது என்றாலும் எழுத்துச் சீர்திருத்தம் முன்வைத்தவர் என்ற முறையில் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கோரிய தமிழறிஞர்கள் வரிசையில் வீரமாமுனிவருக்கு அடுத்தவராக விளங்குகிறார் அயோத்திதாசர். "

Thanks
N. Ganesan

Prof. V. Nagarajan wrote:
"It is unfortunate that two learned scholars, though used smiley to connote the lighter side of the comment, indirectly promoted a fallacious and highly discriminating statement that Iyengar proposed and the Dravidian zealots dismissed. 
 
Is it necessary while presenting a fact on Tamil script reform?
 
It is a fact that all Brahmins of Tamilnadu did not know Sanskrit.  Only a miniscule mastered Sanskrit.  Even the priests of Agama based temples did not know Sanskrit and learnt the mantras through Grantha script
 
Similarly all non-Brahmin Tamils cannot be construed as "literates" i.e., know how to read and write.  Every Tamilan remained as orally literate.  The society enabled them to listen and retain the resources through memory management.  The written Tamil was temple based and royal court based and the oral Tamil was people based.  All the controversies on the written language was confined only to the learned and lettered.
 
Earlier in this forum itself I mentioned that while Kanchi Sankaracharya was mentored at the tender age his mentor used a bridge language to translate Sanskrit resources into Tamil.  There were many indigent and ingenious linguistic tools used by Tamil merchants and scholars for their  multi lingual international pursuits.
 
EVR Periyar admitted that he derived the enthusiasm and idea for Tamil Script reform from the writings of Ayothidasa Pandithar.
 
Therefore first it is imperative that we must list the innovations introduced irrespective of the originator whether Iyengar or Valluvan.
 
I will enjoy the discussion here only if it is jocular and mentioned in a lighter manner
 
Dr.V.Nagarajan"

Nagarajan Vadivel

unread,
Jun 27, 2014, 11:39:37 AM6/27/14
to மின்தமிழ்
 
 
​அயோத்திதாசர் தமிழ் எழுத்துரு வரலாற்றைப்பற்றி எழுதும்போது தமிழகத்தில் பரவியிருந்த பெளத்தமும் சமணமும் கி.பி 2 ஆம் நூற்றாண்டளவில் எழுத்துரு வரிவடிவங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்
 
Buddhists and Jains developed the Tamil language fonts. The stone inscription of 3rd and 6th Century B.C. confirms this. Tamil Buddhist scholor Pandit Iyotheethasar says, “When the status of a language was distorted, the people who spoke the language cannot be in equal status. Similarly, language of the people who were made to live low in social strata cannot also be in the equal state” (Iyotheethasar Sindanaigal (Tamil)  – Vol. II., p. 548, Gnana Aloysius).
 
கல்வெட்டிலும் ஓலைச் சுவடிகளிலும் இருந்து அச்சு ஊடகத்துக்கு ஏற்ற அச்சு எழுத்துரு உருவாக்குவதில் ஈடுபட்ட பாதிரிமார்கள் பைபிளைத் தமிழில் அச்சிட்டு வெளியிடுவதற்காகத் தமிழ் நெடுங்கணக்கில் சில மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்
 
தமிழைப் பொருத்தவரை வீரமாமுனிவரும் ஜீகன்பாலும் இரு எதிர்நிலைகளை ஏற்படித்திக் கொண்டனர்
 

 Roman Catholics accepted Manusmriti as their code. The Catholic priest Constantine Beski, called as Veeramamunivar (1680-1747) the contemporary of Zieganbalg was a Christian Brahmin who lived like a Hintholic Saint (Hindu + Catholic = Hintholic). Robert D’ Nobly who served in Madurai Diocese of the Catholic Church in 1606 was a Hintholic person who vigorously followed Hindu Varna dharma and untouchability. He worked against Dalit people and there was a criminal case on him accusing him of the murder of a Dalit Sexton. The case was filed at Thanjavur. This reference was made by Prof. Gajendhiran Ayyathurai (Dept of Anthropology, Columbia University), who is doing his research in Columbia University. This issue has been debated widely now. Many walked out from Roman Catholic order refusing to adhere to this saint’s caste discrimination and joined Protestant churches. Later, with Rajanaickan’s initiative many came out to the Protestant church and one among them is Sathyanathan. He served as Ubadhesigar of Tharangambadi church. Prof. Lawrence accuse Veeramamunivar who was known as father of Tamil format for not translating the Holy Bible in Tamil as he believed the Manu Dharma that says, Sudhras should not read Vedas. He also quotes Zieganbalg’s accusation in one of his letters about Veeramamunivar for his misinterpretation of Tamil language in Palm scripts. The reasons for quoting all these references are –

  1. In the name of serving Tamil, the Brahmins and modern Brahmin of Vellalars Sanskritised the Holy Bible.
  2. With concepts like school on phial, funding and the like, the modern Brahmin of Vellalars and Pillaimars inculcated caste feelings and caste domination in the Church’s mission and administration.
  3. The Protestant Mission slowly got into the Brahminical order as the German missionaries were not able to understand the complexity or Confusion of a caste based social order of Indian society.
​தமிழ் வரிவடிவ ​மாற்றம் கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் பெளத்த தமிழ் சமணர்கள் உழைப்பில் தொடங்கி கிறித்துவ சமயப் பாதிரிமார்களால் அச்சு ஊடகத்துக்கேற்ப மாற்றம் அடையும்வரை நடந்து வரலாற்று நிகழ்வுகள் ஆவணப்படுத்த இன்னும் முயற்சிகள் முறையாக நடக்கவில்லை

வீரமாமுனுவரின் எழுத்துச் சீர்திருத்தத்தைப்போன்றே தரங்கம்பாடியில் ஜீகன்பால் மேற்கொண்ட எழுத்துச் சீர்மை இன்னும் அவணக்காப்பகங்களில் மறைந்துள்ளது.  18 ஆம் நூற்றாண்டு 19 ஆம் நூற்றாண்டு அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள் எண்ணிம வடிவில் கிடைத்தால் மட்டுமே எழுத்துச் சீர்மையின் முழுமையான தகவல் கிட்டும்

 

நாகராஜன்


​​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 27, 2014, 9:38:30 PM6/27/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, June 27, 2014 8:39:37 AM UTC-7, தத்து பித்து wrote:

இங்கிருந்து எடுத்துள்ளீர்கள்: முழுக்கட்டுரையும் படித்தேன்,

1911 பாண்டியம் படித்தீர்களா? அது எழுத்துச் சீர்திருத்தம் அல்ல. முழுமையான ரிப்லேஸ்மெண்ட்,
நீங்கள் கேட்டது வலைக்கண் அனுப்பிருந்தேன்.

You said"EVR Periyar admitted that he derived the enthusiasm and idea for Tamil Script reform from the writings of Ayothidasa Pandithar."

இப்படி எங்காவது அயோத்திதாச பண்டிதரைப் பற்றி எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசுகையில்
ஈவேரா நாயக்கர் சொல்லியுள்ளாரா? நானறிய ஏதும் காணோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 1, 2014, 1:01:03 AM7/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Prince Ennares Periyar, Soma Ilangovan
அயோத்திதாஸ் பண்டிதர் வரிவடிவ மாற்றத்தின் தேவைகளைப் பற்றி எழுதவில்லை என்பதைக் கண்டோம். ஆனால், ஐ வர்க்க உயிர்மெய்களை மாற்றி எழுத சில உதாரணங்கள் தந்து இருக்கிறார். வரிவடிவ மாறுதல்களைப் பெரியார் ஈவேராவுக்கு முன்னமே சொல்லிய தமிழ்ப் பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள். குத்தூசி குருசாமி கட்டுரையைக் கண்டுபிடித்தால் அவர் கூறும் பண்டிதர்கள் பெயரை அறியலாம்.

1935-ல் எழுதிய கட்டுரையில் ஈவேரா குறிப்பிடுகிறார்:
தமிழ் எழுத்து சீர்திருத்தம்
”தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.

தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.

தமிழ் எழுத்துக்களைப் பற்றி அழுக்கு மூட்டைப் பண்டிதர்கள் எவ்வளவு தத்துவார்த்தம் சொன்னாலும் அது எவ்வளவோ விஷயத்தில் சீர்திருத்தமடைய வேண்டும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.

உதாரணமாக நெருப்புக்கு சுமார் நூறு ஆயிரம், பதினாயிரம் வருஷங் களுக்கு முந்தி சக்கி முக்கி கல்லுகள் தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ”

-------------

பின்னர் கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
பேசிய பேச்சில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் பெரியார்.

”எழுத்துக்கூட்டுதலும் இலக்கணமும் அதன் உச்சரிப்பும் பெரிதும் இயற்கையையே அடிப்படையாக கொண்டதாகும். அப்படிப்பட்ட மொழியை நாம் ஏன் நவீன முயற்சிக்கு ஏற்ற வண்ணம் செப்பனிடக் கூடாது. சாதாரணமாக தமிழ் உயிர் எழுத்துக்களில்
ஐ , ஒள ஆகிய இரண்டு எழுத்துக்களைக் குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துக்கள். மேலும் இவை கூட்டெழுத்துக்களே ஒழிய தனியெழுத்துக்களல்ல. இவை இல்லாமல் எந்த தமிழ் சொல்லையும் எழுதலாம் உச்சரிக்கலாம். இவைகளை எடுத்துவிட்டால் சொற்களில் உச்சரிப்பிலோ பொருளிலோ இலக்கணத்திலோ எவ்வித குற்றமும் குறையும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சுமார் 40 வருடத்திற்கு முன்னால் இருந்தே நான் இதைக் கவனித்து வந்திருக்கிறேன், இதன்படி எழுத்து கோத்து அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறள் புத்தகத்தையும் நான் 40 வருடத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன்.இப்படிச் செய்வதில் மொத்த்தம் 38 எழுத்துக்கள் ( அதாவது உயிரெழுத்து ஐ ஒள ஆகிய 2 ம் அவை ஏறும் மெய்யெத்துக்களில் 2 * 18 = 36 ம் ஆக 36 + 2 = 38 ) ஞாபகத்திற்கும் பழக்கத்திற்கும் தேவையில்லாத எழுத்துக்கள் ஆகிவிடும். ( ஐ -அய் , ஒள – அவ் என்று எழுதலாம். ) இவை தவிர உயிர் மெய் எழுத்துக்களில் தனிமாற்றம் பெற்றிருக்கிற ணா , றா , னா ஆகிய மூன்று எழுத்துக்களுக்கும் தனி உருவம் தேவையில்லாமல் ணா, றா, னா போல் எழுதலாம் .மற்றும் மெய் எழுத்துக்களில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில், நெடில் , எழுத்துக்கள் கொண்ட 4*18 =72 தனி உருவ எழுத்துக்களை நீக்கி விட்டு,தனிச்சிறப்புக் குறிப்பை (அதாவது ககரத்துக்கு ஆகார நெடில் உருவம் காட்ட ஒரு ா – கால் போட்டுவிடுவதுபோல் , ககரத்துக்கு எகரம், ஏகாரம் காட்ட ஒற்றைச்சுழி கொம்பு ,இரட்டைச்சுழி கொம்பு ெ , ே போடுவதுபோல மற்ற இகர ஈகாரத்துக்கும்,உகர ஊகாரத்துக்கும் சில குறிப்புகளை உண்டாக்கி உயிர் 10 மெய் 18 குறில் நெடில் குறிகள் 9 ஆயுதம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துக்களாய் சுருக்கி விடலாம்.

இதைப்பற்றி மற்றொரு சொற்பெருக்கில் தெளிவாக்க இருக்கிறேன். இந்த மாறுதல்களை செய்வதால் நாம் மொழிக்கோ பெருளுக்கோ
இலக்கணத்துக்கோ எவ்வித குறைபாடோ கேடோ செய்தவர்களாக ஆகமாட்டோம். துருக்கியில் கமால் பாட்சா அவர்கள் எழுத்துக்களின் அடிப்படையையே மாற்றி விட்டார்.அதாவது இருந்த எழுத்துக்களையே ஒழித்து விட்டு வேறு மொழி (ஆங்கில ) எழுத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டார்.அதனால கற்க மிகவும் வசதியம் இலகுவும் ஏற்பட்டுவிட்டது. அய்ரோப்பாவில் நான் சுற்றுப்பயணம் செய்த ரஷ்யா முதல் போர்த்துகல் வரை சுமார் 10 ,15 நாடுகளிலும் எத்தனையோ மொழிகள் இருந்தும் அந்த மொழிகளுக்கு பெரிதும் ஒரே மாதிரி 26 முதல் 32 எழுத்துக்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சில புதிய தனி ஒலி கொண்ட மொழிகள் இருக்குமானால் அவற்றிற்கு 2 அல்லது 3 புதிய உருவ எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டுருக்கிறார்கள்.அமெரிக்காவில் தற்சமயம் எழுத்துக்கூட்டும் முறையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.ஆகவே மேல் நாடுகளில் எழுத்துக்கள் , எழுத்துக்கூட்டும் முறைகள் இவைகளில் மாற்றம் செய்வதால் இலக்கணத்தில் உச்சரிப்பில் பொருளில் மாற்றம் ஏற்படுவதாயிருந்தாலும் கூட துணிவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்லும் மாற்றங்களுக்கு அப்படிப்பட்ட குற்றங்குறைகள் இல்லையென்றே கருதுகிறேன்.

நமது தமிழ் பண்டிதர்கள் இம்மாற்ங்களுக்கு ஒப்புக்கொள்ளவேண்டுமே. அதுவன்றோ பெரிய கஷ்டம், மேல் நாடுகளில் பண்டிதர்கள் என்றால் புத்துலக சிற்பிகளாக இருப்பார்கள். நம் நாட்டிலோ பண்டிதர்கள் என்றால் பழமைக்கு இழுத்துக்கொண்டுபோகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். பண்டு என்ற சொல்லிலிருந்து அதாவது பண்டையர்கள் என்பதுதான் பண்டிதர் என்ற சொல்லாகத் திரிந்தது என்று கண்டு பிடிக்கத்தக்கவர்களாக இருக்கிறார்கள். எழுத்து மொழி சீர்திருத்தத்தில் எனக்குத் தெரிய எந்த பண்டிதரும் பாடுபட்டு இருப்பதாக காணமுடியவில்லை. காலம் சென்ற மாணிக்க நாய்க்கர் அவர்கள் அக்காலத்தில் சிறிது பாடுபட்டார். ஆனல் அவர் சமயத்தை (ஓங்காரத்தை ) தலையாக வைத்துக்கொண்டு பாடுபட்டார்.ஆதலால் அக்காலத்தில அவரிடத்தில் எனக்கு பற்றிருந்தும் எனக்கு ஓங்காரத்தில் இருந்த வெறுப்பு அவரது முயற்சியையும் அறிவுத்திறனையும் அநுபுவிக்க முடியாமற் செய்து விட்டது. அவர் இப்போதிருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்.”

இப்போது எம்ஜிஆர் 1978-ல் நடைமுறை ஆக்கிய ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ எழுத்து வரிவடிவங்களை யார் முதலில் பரிந்துரைத்த தமிழ்ப் பண்டிதர் என்று அடுத்துப் பார்ப்போம். குத்தூசி குருசாமி கட்டுரைகளில் உள்ள பண்டிதர் பெயர்களை தேடுவது அவசியம். அப்பொழுதே துலக்கமடையும் எழுத்துச் சீரமைப்பு வரலாறு.

நா. கணேசன்

Pandiyaraja

unread,
Jul 2, 2014, 3:31:29 PM7/2/14
to mint...@googlegroups.com
>>
தமிழ் வரிவடிவ ​மாற்றம் கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் பெளத்த தமிழ் சமணர்கள் உழைப்பில் தொடங்கி கிறித்துவ சமயப் பாதிரிமார்களால் அச்சு ஊடகத்துக்கேற்ப மாற்றம் அடையும்வரை நடந்து <<


ஒன்றைக் கவனித்தீர்களா? எப்பொழுதெல்லாம் தமிழரல்லாதார் தமிழைக் கற்க முனைந்தார்களோ அப்போதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் மாற்ரம் செய்ய முனைந்திருக்கிறார்கள். காரணம் அவர்கள் தமிழில் கண்ட Context free rule-தான். அன்றைய தமிழில் உயிர்/அகர உயிர்மெய் வேறுபாடு, எகர/ஏகார உயிர்/உயிர்மய் வேறுபாடு, ஒகர/ஓகார உயிர்/உயிர்மெய் வேறுபாடு கிடையாது. பொன என்பதை, பொன, போன, பொன், போன் என்ற நாலுவகைகளில் படிக்கலாம். 'ஊருககுப பொனவன பொனனுடன வநதான' என்பதைத் தமிழர்கள் ஊருக்குப் போனவன் பொன்னுடன் வந்தான் என்று சரியாகப் படித்தார்கள். வெளியூர்க்காரர்களுக்கு இது மிகச் சிரமமாக இருந்திருக்கும். எனவே அவர்கள் மாற்ரங்கள் செய்ய முனைந்தார்கள். இன்றும் நாம் Ramanan, Raman என்பதை ரமணன், ராமன் என்று சரியாகப் ப்டிக்கிறோம். Rama என்பதை ரம என்றும் ராம என்றும் சரியாகப் படிக்கிறோம். ஆனால் வெள்ளையர்கள் திணறுகிறார்கள் எனவேதான் Ramanan, raaman என்று எழுத முனைகிறோம். முன்னது Context free. பின்னது Context sensitive இவ்வாறுதான் அன்றைக்கும் நடந்திருக்கிறது. இதை முதலில் உணர்ந்த தமிழர் தொல்காப்பியர். அவர் கொண்டுவந்த Context sensitive விதிகளே தொல்.நூன்மரபில் இருப்பவை.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Aug 13, 2014, 10:38:11 PM8/13/14
to mint...@googlegroups.com, vallamai
பெ. சு. மணி அவர்கள் அயோத்திதாசர் ஆய்வுகள் அண்மைக்காலத்தில் வளரும் வரலாற்றைப் பதிவுசெய்கிறார்.
மூத்த எழுத்தாளர் பெ. சு. மணி மறுஅச்சு செய்த திரு.வி.க. அவர்கள் அயோத்திதாசபண்டிதர் மீதியற்றிய
இரங்கற்பாவை தோழர் பாரி. செழியன் போன்றோர் வெளியிடவேண்டும். 

நா. கணேசன்


பெ.சு.மணி

ஒடுக்கப்பெற்ற, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் புதிய விழிப்புப் பெற்று உரிமைகளைப் பெறக் கொள்கைகளையும் இயக்கங்களையும் உருவாக்கும் முயற்சிகள் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரப் பிரதேசத்தில் தோன்றின. இதற்காக அரும்பாடுபட்ட போராளிகளில் மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் பூலே (1827-1890) ஈடுயிணையற்ற முன்னோடி யாவர். இவரைப் பற்றிச் சுருக்கமாக இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் என்னுடைய நூலில் (1973) எழுதியுள்ளேன். மேலும் சற்று விரிவாக்கம் செய்து மூன்றாம் பதிப்பில் (2002) எழுதியுள்ளேன்.

பிராமணரல்லாதவர் இயக்க வரலாற்றில் பூலேவிற்கு உரிய முதலிடத்தை அறிந்து கொள்ள வேண்டும். மராட்டியப் பிரதேசத்தில் சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்த காலத்தில் மகாத்மா பூலேதான் முதல் பிராமணரல்லாத சமூக சீர்திருத்தத் தலைவராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிரம்ம சமாஜம்(1818)ஆர்யசமாஜம் (1875), இராதாகிருஷ்ணா மிஷன் (1886), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 1865) தியோசாபிகல் சொஸைட்டி எனப்படும் பிரம்ம ஞான சபை (1875 ல் நியூயார்க்கில் நிறுவப் பெற்று 1879ல் தலைமையிடம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது) முதலானவையெல்லாம் சில, பல சமூக சீர்திருத்தங்களுக்குப் பாடுபட்டாலும் ஓடுக்கப்பெற்ற, தாழ்த்தப் பட்ட மக்களை மையப்படுத்தி முதன்மைப்படுத்தி போராடவில்லை என்பது வரலாற்றுண்மை.

இந்தச் சூழலில் மகாத்மா பூலே பிற்படுத்தப்பட்ட ‘மாலி’ சாதியில் (தோட்ட வேலை செய்பவர்கள்)தோன்றி பிராமணரல்லாத மக்களுக்காகவும் கொள்கைகளையும் போராட்ட முறைகளையும் வகுத்துப் பாடுபட்டார்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு புரோகித வர்க்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, முதலானவற்றையெல்லாம் பிராமணரல்லாதவர் இயக்க அடையாளச் சின்னங்களாக அமைத்தார் மகாத்மா பூலே. 1873ல் அவர் நிறுவிய சத்யஹோதக் சமாஜ் புரட்சிப் பாசறையாகச் செயலாற்றியது.

தமிழக பிராமணலரல்லாத இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு 1870லேயே வாழிகாட்டியவர், பதினாறு கொள்கை விளக்க நூல்களை மராத்திய மொழியில் எழுதியவர் மகாத்மாபூலே.

1873ல் வெளிவந்த அவருடைய ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்), சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் எவ்வாறு பிராமணியத்தால் அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதை ஆய்துள்ளது. 1869ல் வெளிவந்த ‘பிராம்மன் சே கஸப்’ (புரோகித வர்க்கம் அம்பலப் படுத்தப்படு கின்றது)எனும் நூல் மராட்டிய உழவர்கள், மாலி சாதியினர், தாழ்த்தப்பட்ட மாஸ், மகர் மக்களுக்கு காணிக்கையாக் கப்பட்டது. 1883ல் வெளிவந்த சேட்கார்யா அஸீத்’ (உழவர்களின் சாட்டை) ‘சூத்திர’ சமூகத்தினருக்கு அர்ப் பணிக்கப்பட்டது. இந்நூலில் உழவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர், உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது முதலானவை எழுதப் பெற்றுள்ளன.

பூலே 1889ல் பம்பாயில் ஐந்தாவது காங்கிரஸ் மகா சபை நடை பெற்ற பொழுது உழவர் பிரச்சினைகளை முன்வைத்து உழவர் பேரணி நடத்தினார், உழவனாகவே உடை உடுத்திச் சென்றார். பேரணியில் பின்வருமாறு உழவர் எழுச்சிப் பாடல் இசைக்கப் பெற்றது.

“உழவர் அரசனே விழித்தெழு

ஒவ்வொருவரும் ஏமாற்றுகின்றனர்

அடக்குமுறையை, அநீதியை

ஒன்றுபட்டு எதிர்த்திடும்

உழவர் அரசனே விழித்தெழு”!

முற்கூறிய வரலாற்றுப் பின்னணியில் தலித் விடுதலை இயக்கத்தின் ஆதிமூலர்களுள் ஒருவரான பண்டிதர் க.அயோத்திதாசரின் வரலாற்றுப் பாத்திரம் குறிப்பிடத் தக்கது என்னுடைய ‘நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு’ எனும் நூலில் ஆதிமூலம் எனும் தலைப்பில் அயோத்தியதாசர், இரட்டைமலை சீனிவாசன் ,எம்.சி.ராஜா ஆகியோர் குறித்து எழுதியிருக்கிறேன்.

1986ல் வெளிவந்த என்னுடைய ‘கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்’ எனும் நூலில் ‘பகுத்தறிவு இயக்கச் செம்மல் பண்டிதர் க.அயோத்திதாஸ் எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்நூலிற்கு புகழ்பூத்த படைப்பிலக்கியக் கர்த்தாவும் மார்க்சிய விமர்சன அறிஞருமான தொ.மு.சி. ரகுநாதன் பின்வரும் கருத்தைச் சுட்டிக் காட்டினார்.

‘பெரியார் ஈ.வெ.ரா. வுக்கும் முன்பே பகுத்தறிவு இயக்க, நாத்திக இயக்கச் சிந்தனைகளைப் பரப்பிய, உண்மையில் பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கிய எனினும் அறிவுலகம் அவ்வளவாகச் கண்டுணராது போய் விட்ட பண்டிதர் அயோத்திதாசர் பற்றியும் இந்நூலில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது?”

மறந்துபோன மறைக்கப்பட்ட பண்டிதர் க. அயோத்தி தாசரை ‘அம்பேத்கர் ’ இதழ் மூலம் 1962முதல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மறைந்த சிந்தனை யாளர், வரலாற்றாய்வாளர் அன்பு பொன்னோவியம். அவர் சுட்டிக் காட்டிய பின்வரும் வரலாற்றுண்மை அயோத்தி தாசரின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தவல்லது.

‘ அவர் காலத்திலும் பல பண்டிதர், புலவர்,கவிஞர், நாவலர், அவதானிகள், பாகவதர் பேச்சாளர், எழுத்தாளர் ஆதி திராவிடர்களிடையே இருந்தார்கள். இருப்பினும் சமுதாய, சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தொண்டாற்றி யதுதான் பண்டிதர் தனித்தன்மை கொண்ட மனிதராக எண்ணத் தூண்டியது எனலாம். அயோத்திதாசர் 1875 லிருந்து 1911வரை விதைத்த முன்னேற்ற சிந்தனைகளின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா போன்ற தலைவர்களைப் படைத்து மக்களுக் ககாகப் பாடுபடவைத்தது என்று தயக்கமில்லாமல் குறிப்பிடலாம்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு முதலானவற்றில் மகாத்மா பூலேவின் கருத்துகளுடன் ஒத்திசைவாகக் கொள்கைப் பிரச்சாரம் செய்தவர் பூலே. மத எதிர்ப்பாளராக இருந்தபோதிலும் கடவுள் மறுப்பாளாராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பூலே பற்றி அயோதிதாசர் எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அயோத்திதாசரின் முற்கூறிய எதிர்ப்புகள் எல்லாம் அவருடைய புத்தமதச் சார்பான அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டனவாகும். அக்கால ஆதிதிராவிடச் சிந்தனையாளர்களில் அயோத்தி தாசரே ஆதிதிராவிடர்களின் பூர்வீக மதம் பௌத்த மதமே என்று முழங்கியவர்.

1882’ல் மக்கட்தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்த பொழுது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை ‘பூர்வத்தமிழர்’ எனும் பெயரிலேயே குறிக்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுத்தவர் அயோத்திதாசர்

பௌத்த மதப் பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு 19-6-1907ல் சென்னையில் ‘ஒரு பைசாத் தமிழன் ’ எனும் பெயரில் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். பௌத்த சமயத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளையும் அவரே எழுதி வந்தார். முதல் இதழிலேயே புத்த பகவானின் போதனைகளை ‘பூர்வத் தமிழொளி ’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். தமது காலத்திலேயே 1912ல் ‘பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம் எனும் நூலை வெளியிட்டார். கோலார் மாரிக்குப்பம் சாக்கிய பௌத்த சங்கம் சார்பில் வெளியிடப் பெற்ற இந்நூல் 303 பக்கங்களைக் கொண்டது எட்டு பக்கங்களில் அவரால் எழுதப் பெற்ற விரிவான பாயிரம் பரந்துபட்ட அவருடையபௌத்தம் தமிழ் இலக்கியப் புலமையை எடுத்துக்காட்டியுள்ளது.

26-08-1908லிருந்து ‘ஒருபைசாத் தமிழன்’ எனும் பெயர் ‘தமிழன்’ என மாற்றம் பெற்றது. அவர் பொறுப்பில் 15-4-1914 வரையில் வெளிவந்து பிறகு அவருடைய புதல்வர் பட்டாபிராமன், கோலார் தங்கவயல் பண்டிதமலை ஜி,அப்பா துரையார் ஆகியோர் பொறுப்பில் வெளிவந்து.


தோழர் அன்பு பொன்னோவியம் தம்மிடமிருந்த ‘தமிழன்’ இதழ்களையெல்லாம் ஆய்வாளர் ஞான அலாய் சியஸிடம் வழங்கினார். ஞான அலாய்சியஸ் அரும்பாடு பட்டு அவற்றை‘அயோத்தியதாசர் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் இருபெரும் தொகுதிகளாக 1999இல் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற நானும் அழைக்கப் பெற்றேன். மிகச் சிறநத ஆவணக் களஞ்சியமான இவ்விரு தொகுப்புகளில் அயோத்திதாசரின் பன்முகப்பட்ட ஆளுமை பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்னுரையில் ஞான அலாசியஸ், அயோத்தி யதாசரின் வரலாற்றுப் பாத்திரத்தைப் பின்வருமாறு சாற்றியுள்ளார்.

‘நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டமாகிய பிந்திய பத்தொன்பதாம் முந்திய இருபதாம் நூற்றாண்டுகளில் வாழந்த இவர் பண்டைய இலக்கிய, சமூக, ,சமய,வரலாற்று, ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் நிர்மாணிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்தார் நவீன இந்தியாவில் பரவலாக நவீனத்துவம் முதலிய கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் தந்தை பெரியாருக்கும். இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கினார்.சமயம் சமுகம், வரலாறு, இலக்கியம், அரசியல், பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனி மனிதனின் கருத்துகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாகச் சிறந்தன ’


1986லேயே தலித் இயக்கச் சிந்தனையாளர்கள், அமைப்பாளர்கள் சிலரிடையே அயோத்திதாசர் குறித்த கருத்தரங்குகளை நடத்த பரிந்துரை செய்தேன். அப்பொழுது காலம் கனியவில்லை. பிறகு சமீப இருபது ஆண்டுகளாக அயோத்திதாசர் ஆய்வு மையங்கள் கொள்கைப் பரப்புரைகள் பெருகி வருகின்றன. ஆயினும் தலித் அல்லாத சமூகத்தினர் ஒத்துழைப்பும் புரிதலும் இயக்க அளவில் செயற்படவில்லை, அயோத்திதாசரை தாழ்த் தப்பட்ட சமூகத்தின் தலைவராக மட்டும் மதிப்பிடாமல் ஒடுக்கப் பெற்றவர்களின் போராளியாகவும் உலக மனித நேயப் பண்பாளராகவும் போற்றி தலித் அல்லாத சமூகச் சிந்தளையார்களும் ஒன்றுபட வேண்டும். அவர் பங்களிப்பு தமிழகத்தையும் தாண்டி இந்தியாவெங்கும் பரவவேண்டும் அண்ணல் அம்பேத்கர் இயக்கம் இந்தியா முழுவதிலும் இயங்குகின்றது. இதன் ஒரு பணியாக அய«த்திதாசரின் புகழ்பரப்பும் பணியும் இணைய வேண்டும். பல்கலைக் கழகங்களில் அயோத்திதாசர் பெயரில் இருக்கைகள் எற்படுத்த வேண்டும். கல்லூரி மற்றும் பிறகல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் அயோத்திதாசர் பற்றிய வரலாறு சேர்க்கப்பட வேண்டும்.

அவர் தமது மரணப் படுக்கையில் பௌத்தம் மேன்மேலும் பரவவேண்டும் எனவும் திருக்குறள் சிந்தனைகளை முழுமையாக எழுத முடியாமல் போயிற்றே எனவும் வருந்தினார்.


தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்றி ஸ்டீவ் ஆல்காட்டின் துணை கொண்டு இலங்கை சென்று பௌத்த மத தீட்சை பெற்ற அயோத்திதாசர், 1898ல் சென்னை, ராயப்பேட்டையில் நிறுவிய தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கம் அவருடைய இயக்க ஆற்றலுக்கு ஒரு சான்று. தோழர் சிங்காரவேலர் , பேராசிரியர் லட்சுமிநாதனுடன் இணைந்து தமிழகத்தில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்ததையெல்லாம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தமது வாழக்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அயோத்தியதாசர் மீது. திரு.வி.க. இயற்றிய இரங்கற்பா ஒரு வரலாற்று ஆவணமாகும் இதை முதன் முதலில் கண்டெடுத்து வெளியிட்டுள்ளேன்.

[நன்றி: ஜனசக்தி நாளேடு 02.06.2011]

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் -அரசு விழாவாக ஜெ அறிவிப்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற் காகவும், விடுதலைக்காகவும் குரல் எழுப்பிய, பாடுபட்ட முன் னோடிச் சிந்தனையாளர், அயோத்தி தாசருக்கு சமகாலத்த வராகவும், அவருக்குப் பிறகாகவும் பாடுபட்டவர், உழைததவர் இரட்டை மலை சீனிவாசன் (1859 – 1945) .

இவருடைய பணியைப் பாராட்டும் முகமாக இவருக்கு மணி மண்டபமும், முழு உருவச் சிலையும் அமைக்கப்படும் என தன் கடந்த ஆட்சிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 9 இல் அறிவித்திருந்தார் ஜெ தற்போது அவரது பிறந்த நாளான ஜூலை 7ஐயும் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். அறிவித்த ஜெ அரசுக்கு நன்றி.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் பாடுபட்டவர்களைப் பாராட்டுவது மதிப்பது என்பது சரி. எனில் இதோடு மட்டும் நின்று விடாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைக் களையவும், இம் மக்களின் கல்வி, சமூக நிலைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசு உரிய திட்டங்கள் தீட்டி தொடர்ந்து செயல்பட வேண்டும்.

சாதி வாரிக் கணக்கெடுப்பு-தில்லி அமைச்சரவை ஒப்புதல்

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, இந்த ஆண்டு சாதி வாரியாகவும் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, அது சர்ச்சைக்குள்ளானதை யட்டி இதுபற்றி ஆராய குழுவும் நியமிக்கப்பட்டு அது பரிந்துரை வழங்க தற்போது ஒருவாறு அச்சிக்கலுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு ஜீன் மற்றும் திசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பில் ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்கிற பிரிவோடு சாதிவாரியாகவும் கணக்கெடுக்க வேண்டுமென கடந்த 16-05-2011 அன்று நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதுவையிலும் ஜீலை 18முதல் 40 நாட்களுக்குள் இக்கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது 1931இல் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகான இந்த எண்பது ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி 7 முறை நடைபெற்றபோதும் ஒரு முறைகூட சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது எடுக்கப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தமிழ்ச் சமூகத்தின் சாதிய இருப்புகளின் தன்மைகளையும் அவற்றின் நிலைகளையும் அறியவும், அதனடிப்படையில் பின்தங்கிய கடைநிலை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டவும் பயன்படுவதாய் அமையும். அமையவேண்டும் என்பதே இதன நோக்கம்

Suba.T.

unread,
Aug 14, 2014, 3:07:14 AM8/14/14
to மின்தமிழ், Subashini Tremmel
நல்ல பகிர்வு.
நன்றி.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Aug 17, 2014, 6:09:59 AM8/17/14
to mintamil, Subashini Tremmel, Innamburan S.Soundararajan
மீள் பதிவு:
*

அன்றொரு நாள்: நவம்பர் 28

‘சூத்திரன்’

“ அன்னியரிடமிருந்து பெறும் விடுதலையை விட சமுதாய முன்னேற்றம் அளிக்கக்கூடிய ஜனநாயகம் தான் முக்கியமானது என்று போதித்தவரும், மேல்மட்டத்தின் அடிமைகளாக தாம் உழல்வதை அடிமட்டத்து ஹிந்துக்களுக்கு உணர்த்தியவருமான புத்துணர்ச்சி சூத்திரன் தான் ஜோதிராவ் பூலே.’’

~பாபா சாஹேப் அம்பேத்கர்.

நவம்பர் 28, 1890 அன்று அமரரான பாமரர் ஜோதிராவ் பூலே மே 11, 1888 அன்று ‘மஹாத்மா’ என்று பொதுமக்களால் போற்றப்பட்டவர். மஹாத்மா காந்தி பிற்காலமஹாத்மா. அருமை நண்பர்களே! குறித்துக்கொள்ளுங்கள். மஹாராஷ்டிரத்தில் சமுதாய சீர்திருத்தம் பதின்னெட்டாம் நூற்றாண்டிலேயே தலையெடுத்தது என்றாலும், பெண்ணியம் போற்றப்பட்டது என்றாலும், பல நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடிய கறிகாய் கடைக்காரன் வீட்டுப்பையன் ஜோதிராவ் தான் கண்ணில் படுவார்; பிறந்த தினம் ஏப்ரல் 11, 1827. கொடுத்து வைத்த மஹானுபாவன். அவருக்கு 13 வயதில் வாய்த்த இல்லத்தரசி சாவித்திரி பாய் எல்லா விதத்திலும் இந்த புரட்சிக்காரனுக்கு ஈடு கொடுத்தார். இருவரும் திவ்ய தம்பதி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தாமதமாக ஏழு வயதில் தொடங்கி 20 வயது வரை, முண்டியடித்துக்கொண்டு, ஒரு இஸ்லாமிய ஆசிரியரும் ஒரு கிருத்துவ அண்டை வீட்டுக்காரரும் அளித்த ஊக்கத்தால், கற்ற கல்வி, இவரை தாமஸ் பெய்ன் அவர்களின் ‘மனித உரிமை’ என்ற இறவா வரம் பெற்ற ( ஆங்காங்கே அவ்வப்பொழுது தடை செய்யப்பட்டதால், வாசகர்கள் கூடினர்.) நூலிடம் அடைக்கலம் நாட தூண்டியது, 20 வயதில். இவருடன் கூட்டு சேர்ந்தவர்கள்: சதாசிவ பல்லல் கோவாந்தே,மோரோ விட்டல் வல்வேகர்& சகாராம் யஷ்வந்த் பரஞ்சிபே. மூவரும் பக்கா பார்ப்பனர்கள். நால்வரின் நட்பும், கூட்டு சமூகப்பணியும் ஆயுசு பர்யந்தம் தொடர்ந்தது. சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். 1. 20 வயதில் என் மனதையும் ஆக்ரமித்துக்கொண்டவர் தாமஸ் பெய்ன். ஆறு வருடங்கள் முன்னால், அவரால் உலகம் அடைந்த பயனை பற்றி நான் எழுதிய கட்டுரையை தேடினேன். கிடைக்கவில்லை. 2. எந்ததொரு காலகட்டத்திலும், பிராமணர்களில் சிலர் முற்போக்காக  இன அபேதவாதிகளாக இயங்கியதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது ~ராஜாஜி.

அடுத்த வருடமே (1848), சூத்திரர்களின், அதி சூத்திரர்களின் பெண் குழந்தைகளுக்கு பள்ளி அமைத்தார். முதல் மாணவி, மனைவி. அதற்கு அடுத்த வருடமே, இருவரும் ஜாயிண்ட்-சந்நியாசம் எடுத்துக்கொண்டதாகச் சொல்லலாம். பஞ்சமர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதா? என்று கடும் எதிர்ப்பு. கல்வீச்சு. மேல்மட்டத்தின் தாக்குதல் தாங்க முடியாத தந்தை இவர்களை வீட்டை விட்டு போகசொல்கிறார். நல்லதா போச்சு. இங்கு ஒரு நுட்பம் காணவேண்டும், ஐயா. ‘பூலே’ ஒரு காரணப்பெயர். மஹாராஷ்ட்டிராவில் பேஷ்வா (பிராமணர்கள்) அதிகாரம் கொடிகட்டி பறந்தது. அந்த ராஜகுடும்பத்துக்கு பூக்கார வம்சம், பரம்பரை, பரம்பரையாக , இவரது. ‘பூலே’ என்றால் பூக்காரன். பூ வேண்டும். ஆனால் பூக்காரன் தள்ளுபடி! எப்படி? அடுக்குமா?

ஆரம்ப கல்வியின் பயனை நன்கு அறிந்த பூலே அவர்கள், அடிமட்டத்தின் வறுமை, தற்காப்பு இழந்த நிலை, மேல்மட்டத்தின் ஆளுமையில் அடங்கி கிடந்த நிலை எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் என்று உறுதி பட கூறி, இடை விடாத உழைப்பினால், பள்ளிகள் பல நிறுவினார். இதற்கெல்லாம் உற்றதுணை, பிராமண தோழர்கள்.

இவருடைய புரட்சி அன்றாட நடவடிக்கையில் பிரதிபலித்தது. தன் வீட்டில் பஞ்சமர்களுக்கு ஸ்னான கட்டம். சம பதி போஜனத்திற்கு வருக என்ற இவருடைய அறிவிப்பை அச்சிலேற்ற அச்சப்பட்டன, இதழ்கள். பிற்காலம் அழுத்ததுடன் தீண்டாமை பிரச்சாரம் செய்தவர்களில் பேச்சில், இவருடைய தீவிரம் காண இயலாது. சாத்தூர் பச்சை மிளகாய்.

உசிலம்பட்டி பெண் சிசு காப்பாளர்களே! செவி சாய்க்கவும். இவரது காலத்தில், கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னால், பிராமணர் வீடுகளில் விதவைகள் மறுமணம் தடை. குழந்தை விவாகம் தடபுடல். இளம் விதவைகள் கரு தரிப்பது உண்டு. சிசுஹத்தியும் தெருவில் விடுவதும் உண்டு. மண்ணாங்கட்டி சமூகம் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கரு தரித்த விதவைகளுக்கு புகலிடம் கொடுத்து, அவ்வாறு 1873ல் பிறந்த குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்ட மஹானை ஏன் ‘மஹாத்மா’ என்று விளிக்கக்கூடாது? அதே வருடம், இவரது தலைமையில் ‘சத்ய ஶோதக் சமாஜ் ( வாய்மை நாடுவோர் சங்கம்) நிறுவப்பட்டது. முதல் சபதம்: ‘சமத்துவம் போற்றுவோம். யாவரும் தெய்வத்தின் மக்கள்’. அடுத்த படியாக, பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு விசுவாசம்.

வேதங்கள் பெரிதல்ல; சிலை வழிபாடு வேண்டாம்; நான்கு வர்ணங்கள் வேண்டாம். இன பாகுபாட்டை ஒழி; ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமே;சமய வெறியும், ஆவேச தேசாபிமானமும் நன்மை தரா. இப்படியெல்லாம் தீவிர ‘திராவிட?’ போதனை செய்த பூலே அவர்கள் 1876ல் துரைத்தனத்தாரால், பூனே முனிசிபாலிடி கெளன்சிலராக நியமிக்கபட்டார். 1877ல் பஞ்சம் வந்த போது ஏழை பாழைகள், குழந்தைகளை கூட புறக்கணிக்க நேர்ந்தது. அந்த சிறார்களுக்கு அநாதை ஆசிரமம் அமைத்தார், மஹாத்மா.

பிரம்மோ சமாஜம், பிரார்த்தனா சமாஜம், சர்வஜனிக் சபை, இந்தியன் நேஷனல் காங்கிரஸ் ஆகியவையும் இவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டன. மக்கள் தொண்டு உதட்டளவில் என்று குப்பை கொட்டிய இந்த சபைகள், பிராமண ஆதிக்கத்தில் சிக்கியவை என்றார். நல்ல வேளை. இந்த தி/அ.தி./ம./ப~ க. திராவிட கட்சிகள் சாதி என்னும் சகதியில் உருண்டு, பிரண்டு வருவதை பார்க்காமல் கண்ணை மூடியது, மஹாத்மா பூலே அவர்களின் கொடுப்பினை. வெள்ளைக்காரனையும் அவர் விடவில்லை. அரசு போஷாக்கில் இருந்த அந்தக்காலத்து டாஸ்மாக் கடைகளை எதிர்த்தார். ராஜாங்கமானாலும், வீண் செலவு செய்யக்கூடாது என்றார். ஒரு சமயம் விக்டோரியா ராணியின் சார்பில் வந்திருந்த கன்னாட் பிரபுவை வரவேற்க, அணிகலம் பூண்ட படோடாபிகள் சூழ்ந்திருந்த மீட்டிங்கில், ‘இவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்ல. கிராமத்துக்கு வந்து பாருங்கள் என்று அறை கூவல் விட்டு, அவையோரை அசத்தினார். பிற்காலம் இன்னொரு மஹாத்மா இந்த மாதிரி வாரணாசியில் செய்த கதை தெரியுமோ?

சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் தான் இல்லை. கெடு நெருங்கி விட்டது. இவரது பிராமண துவேஷத்தை அலட்சியம் செய்யலாகாது, அதில் கசப்பான உண்மைகள் இருப்பதால். பரிகாரமாக, ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஜி.சுப்ரமண்ய ஐயர் பற்றி தெரியுமோ? ஹிந்து பத்திரிகை அவரை தாக்கிய கதை தெரியுமோ?

இன்னம்பூரான்

28 11 2011

http://4.bp.blogspot.com/_2BiG4q7GCqk/TQJy_30IXCI/AAAAAAAAB0E/A_uD921Mh_U/s1600/Mahatma+Pule+Stamp.jpg

Mahatma+Pule+Stamp.jpgphule.jpg

http://1.bp.blogspot.com/-SMHjTQ2qZf8/TrzrorilsFI/AAAAAAAAADU/ZoVQhfTYihY/s1600/phule.jpg

உசாத்துணை:

http://www.mahatmaphule.com/index.html

Suba.T.

unread,
Aug 17, 2014, 7:23:37 AM8/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.இன்னம்பூரான் - மீள்பதிவுதான் என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் வரிக்கு வரி சமுதாய சிந்தனைக்கு விருந்து.
மீண்டும் மீண்டும் படிக்கலாம்.

சுபா

Dev Raj

unread,
Aug 18, 2014, 3:18:19 AM8/18/14
to mint...@googlegroups.com
On Wednesday, 13 August 2014 19:38:11 UTC-7, N. Ganesan wrote:
பெ.சு.மணி

1873ல் அவர் நிறுவிய சத்யஹோதக் சமாஜ் புரட்சிப் பாசறையாகச் செயலாற்றியது.
 

அதன் பெயர் ‘ஸத்யஶோத₄க் ஸமாஜ்


தேவ்
 

N. Ganesan

unread,
Aug 18, 2014, 8:40:15 AM8/18/14
to mint...@googlegroups.com
பெ. சு. மணி சரியாகத்தான் எழுதியிருப்பார். அச்சான கட்டுரையை இணையத்தில் தட்டச்சியவர் பிழை
என நினைக்கிறேன்.

நா. கணேசன்
 
தேவ்
 

Dev Raj

unread,
Aug 18, 2014, 12:24:30 PM8/18/14
to mint...@googlegroups.com
On Monday, 18 August 2014 05:40:15 UTC-7, N. Ganesan wrote:
பெ. சு. மணி சரியாகத்தான் எழுதியிருப்பார். அச்சான கட்டுரையை இணையத்தில் தட்டச்சியவர் பிழை
என நினைக்கிறேன்.

இருக்கலாம்; பிழையையே மீண்டும் மீண்டும் வெட்டி ஒட்டி அதே நிலைத்து விடுகிறது;
அதனால் சுட்டிக்காட்டினேன். குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages