பஞ்சு மிட்டாய்

26 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jan 8, 2016, 1:08:29 PM1/8/16
to மின்தமிழ்


http://oosiyilaikkaadukal.blogspot.in/

பஞ்சு மிட்டாய்




பஞ்சு மிட்டாய்
===================================================ருத்ரா இ.பரமசிவன்

காயமே இது பொய்யடா
என்பதும் பொய்யடா.
பஞ்சு இனிப்பு  அடை த்த
கனவுகள் கண்களில் மிளிர
வாழ்க்கையை
சில்லறை சில்லறையாக
விற்று வாங்கி
நகர்ந்து செல்லும் உற்சாக விழா.
மதுரை கோ.புதூரில்
அருள் மிகு கள்ளழகருக்கு
எதிர் சேவை திருவிழா.
பல்லக்கு
கண்ணாடி பிம்பத்தில்
அழகர் திரு முகம்!
பக்தர்கள் பரவசம்.
இந்த ஆண்டு
அழகர்
 பச்சைப்பட்டு உடுத்திவந்தால்
பருவ மழை பூரிக்கும்.
பச்சைநிறமே அங்கு
சோழி குலுக்கிய "ப்ராபபிலிடி."
அந்த அழகரின் கண்கள் வீசும் ஒளியில்
தெரிகிறதா
"ருதம்பரா தத்ர பிரக்ஞா ?"
பதஞ்சலி யோக  சூத்திரத்தின்
48 ஆம் சூத்திரம்.
(சமாதி பாதம்)
"உண்மையையே உள்ளுணர்வு
உடுத்தியிருக்கும்"
என்பதே அர்த்தம்.
அந்த பக்தர்களின் உள்ளுக்குள் எல்லாம்
பச்சைப்பட்டு
நெசவு செய்யப்படும்
தறி ஒலியே கே ட்டுக்கொண்டிருக்கிறது.
பல்லக்கு தூக்கிகளாயினும் சரி
மயில் விசிறி ஏ ந்தியவர்களாயினும் சரி \
ஆட்டுத்தோல் பையிலிருந்து
தண்ணீர் பீய்ச்சுபவர்களாயிருந்தாலும் சரி
உலககச்சாயம் கழன்ற
"நிர்பீஜ சமாதி"யில் ஆழ்ந்து போனார்கள்.
அதாவது
எந்த கர்மவினைகளின் மூல விதைகளும்
 மூச்சிழந்து அமைதி  எனும்
சமாதி அங்கே ஜன வெள்ளமாய்
பரந்தாமனுக்கு
பாம்புப்படுக்கை போட்டது.
பெருமாள் இடம் மாற்றிக்கொண்டார்.
பல்லக்கில் பக்தர்கள்.
பல்லக்குத தூக்கியாய்
அந்த கள்ளழகன்
அநாயசமாய் அற்புதமாய்
ஊர்ந்து வருகின்றான்.

=========================================================

yesu rajan

unread,
Jan 8, 2016, 10:31:02 PM1/8/16
to mintamil
சார் பக்தி என்பது பிரி கேஜி மாதிரி ஒரு ஆரம்ப பள்ளி கூடம் அவ்ளோதான் அதுக்கடுத்து நிறைய இருக்கு

பக்தியை வச்சி குறை சொன்னால் மதம் என்ற வகையில் ஆன்மீகத்தை பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jan 9, 2016, 4:02:54 AM1/9/16
to மின்தமிழ்
பக்தி என்பது ஒரு பொது இயல்பு.
குடிப்பவனுக்கு டாஸ்மாக் கோயில்
கிரிக்கெட் விளையாடுவனுக்கு
பவுண்டரியும் சிக்ஸரும்
பாஷ்யங்கள்.
சினிமா ரசிகனுக்கு
தன் ரசிகனின்
முதல் ஷோ தான் 
வைகுண்ட வாசல்.
ஆன்மீகவாதிகள் சொல்லும் பக்தி
படைப்புக்கும் முன் 
உள்ள "ப்ளாங்க் ஸ்லேட்"ல்
இருக்கும் "அக்ஷரம்" மீது
ஈடுபாடு (பக்தி)காட்டு என்பதே.
மனமும் மனம் சார்ந்த விஷயங்களும்
என்பதால்
அதைப்பற்றி எழுதுவது
எதையும் குறை சொல்வதாக ஆகாது.
இறைவர்கள் தொண்டர்களுக்குள் ஒடுக்கம்.
தொண்டர்கள் தம் பெருமை 
சொல்லவும் பெரிதே.
தொண்டர்கள் என்பவர்கள்
மனிதர்கள் என்பதால்
மனித சமுதாயம் பற்றிய‌
அக்கறையே 
எல்லாவற்றிலும் பெரிது.

============================================ருத்ரா
Reply all
Reply to author
Forward
0 new messages