தமிழோசையே வடமொழியாகியது - திரு நெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வார்:

211 views
Skip to first unread message

Yuvaraj Amirthapandian

unread,
May 27, 2016, 6:12:19 AM5/27/16
to mintamil

திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகம் என்னும் பாசுரத்தில், தமிழோசையே வட சொல்லாகி பின் மந்திரங்கள் ஆனது என பதிவு செய்கிறார்.

Inline image 1

இதோ பாசுரம்:

"இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை 
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் 
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி 
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி 
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா 
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த 
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் 
வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே."

--(2054), திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திரு நெடுந்தாண்டகம்.

என்கிறார்.

மேலும் தனது பெரிய திருமடலில் ."மறை நான்கும் ஆனானை புல்லாணித்தென்னன் தமிழை வடமொழியை" என்கிறார். ஆழ்வாரடிகள் தமிழே முந்தியது என்பதை முயன்று பதிகிறார் எனலாம்.

செந்திறத்த தமிழோசையே வடசொல்லானது...ஆம் தமிழிலிருந்தே வடமொழி பிறந்தது...

நன்றி:

ராஜ்குமார், யாழ்ப்பாணம்.

‪#‎திருமங்கையாழ்வார்‬ ‪#‎தமிழ்‬ ‪#‎வடமொழி‬

Thanking you.

--
With best regards,

Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.

N. Kannan

unread,
May 27, 2016, 8:26:06 AM5/27/16
to மின்தமிழ்
2016-05-27 18:12 GMT+08:00 Yuvaraj Amirthapandian 

"இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை 
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் 
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி 
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி 
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா 
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த 
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் 
வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே."

--(2054), திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திரு நெடுந்தாண்டகம்.

​நல்ல முயற்சி. ஆனால் அதற்கு அவ்வாறு பொருள் காணுதல் கூடாது. முழுப்பாசுரத்தையும் மனதில் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். நீங்கள் சுட்டும் வரிகளுக்கான பொருள்:

​செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி=தமிழ் வேதத்தையும் ஸம்ஸ்க்ருத வேதத்தையும் வெளிப்படுத்தினவன் என்றாவது, தமிழ் வேதத்தாலும் ஸம்ஸ்க்ருத வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன் என்றாவது பொருள் கொள்க. ஆர்ய பாஷையாகிய ஸம்ஸ்க்ருத பாஷையை முன்னேசொல்லி ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷையைப் பின்னே சொல்ல ப்ராப்தாயிருக்க, முன்னே சொல்லிற்று என்னென்னில்; தமிழ்வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும், ”செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும், ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம் போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும் இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க. வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர்பெற்றிருக்கும்; இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத்தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும் சிறப்புறுதல் பற்றிச் ‘செந்திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.

முழுப்பாடலுக்கும் பொருள் காண: 

.

மேலும் தனது பெரிய திருமடலில் ."

​​
மறை நான்கும் ஆனானை புல்லாணி
​​
த்தென்னன் தமிழை வடமொழியை" என்கிறார். ஆழ்வாரடிகள் தமிழே முந்தியது என்பதை முயன்று பதிகிறார் எனலாம்.

​"தென்னன் தமிழை வடமொழியை" என்பதை "உபயவேத ப்ரதிபாதயனாய்" என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது தமிழ், வடமொழி இரண்டையும் உடையவனாய் இறைவன் இருக்கிறான் என்று பொருள்.

மேலுமறிய: 

இரண்டு மொழிகளுமே அநாதி என்பதே ஆழ்வார்களின் உள்கிடைக்கை. அதில் தமிழ் கூடுதல் இனிமையானது, பொருள் கொள்ள இலகுவானது என்பது நான்கு வேதங்களுமறிந்த ஆச்சார்யர்களின் புரிதல். 

​தென்னன் தமிழ் - வடமொழிப் பிரிவினைவாதம் தமிழ் மண்ணில் விதைக்கப்பட விஷ வித்து. அது காடாய் மண்டிக்கிடக்கிறது. 

தமிழிலிருந்து வடமொழி வந்தது என்று கொண்டாலும், தாய் தன் சேய் மேல் பொறாமைப்பட வேண்டிய அவசியமென்ன? உலகிற்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்றால் ஏனிந்த இனவெறி, மொழி வெறி? புரிவதே இல்லை. இப்படி நம்மை மண்டை காய வைப்பதால் யாரோ சுகப்படுகின்றனர் என்று தெரிகிறது! :-))

நா.கண்ணன்​

செந்திறத்த தமிழோசையே வடசொல்லானது...ஆம் தமிழிலிருந்தே வடமொழி பிறந்தது...

நன்றி:

ராஜ்குமார், யாழ்ப்பாணம்.

‪#‎திருமங்கையாழ்வார்‬ ‪#‎தமிழ்‬ ‪#‎வடமொழி‬

Thanking you.

--
With best regards,

Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Dhivakar

unread,
May 27, 2016, 9:17:58 AM5/27/16
to மின்தமிழ்
//செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி 
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி //

தமிழோசை வடசொல் ஆகி என்பதை தமிழிலிருந்து வடமொழி வந்தது எனப் பொருள் கொண்டீர்களென்றால் அடுத்துவரும் கீழே உள்ள பாடல் வரிக்கு திங்களிலிருந்து ஞாயிறு தோன்றியது எனப் பொருள் கொள்ளலாமே..

ஆழ்வார்களுக்கு மட்டுமல்ல செந்தமிழால் சிவனைப் பாடிய நால்வருக்கும் தமிழும் வடமொழியும் இரண்டு கண்களே.. தமிழும் வடமொழியுமானாய் போற்றி என மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றுகின்றார். இதே போலத்தான் நம்மாழ்வாரும் பாடுகின்றார்.

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

N. Ganesan

unread,
May 27, 2016, 9:19:45 AM5/27/16
to மின்தமிழ்

On Friday, May 27, 2016 at 5:26:06 AM UTC-7, N. Kannan wrote:
2016-05-27 18:12 GMT+08:00 Yuvaraj Amirthapandian 

"இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை 
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் 
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி 
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி 
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா 
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த 
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் 
வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே."

--(2054), திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திரு நெடுந்தாண்டகம்.

​நல்ல முயற்சி. ஆனால் அதற்கு அவ்வாறு பொருள் காணுதல் கூடாது. முழுப்பாசுரத்தையும் மனதில் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். நீங்கள் சுட்டும் வரிகளுக்கான பொருள்:

​செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி=தமிழ் வேதத்தையும் ஸம்ஸ்க்ருத வேதத்தையும் வெளிப்படுத்தினவன் என்றாவது, தமிழ் வேதத்தாலும் ஸம்ஸ்க்ருத வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன் என்றாவது பொருள் கொள்க. ஆர்ய பாஷையாகிய ஸம்ஸ்க்ருத பாஷையை முன்னேசொல்லி ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷையைப் பின்னே சொல்ல ப்ராப்தாயிருக்க, முன்னே சொல்லிற்று என்னென்னில்; தமிழ்வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும், ”செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும், ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம் போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும் இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க. வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர்பெற்றிருக்கும்; இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத்தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும் சிறப்புறுதல் பற்றிச் ‘செந்திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.

முழுப்பாடலுக்கும் பொருள் காண: 

இவ்வுரையில் ”ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷை”  என்னும் கருத்து மாறிவிட்டது. ஆரிய மொழி சிதைந்து தமிழ் மொழி உருவாகவில்லை. தொல்லியல், மொழியியல் போன்ற விஞ்ஞான அறிவு
இந்தோ - ஈரானிய மொழி சம்ஸ்கிருதமாக உருவாக த்ராவிட பாஷையின் தாக்கம் காரணம் என்கிறது. உதாரணம்: subject-verb-object (SVO) structure of Aryan language changes to subject-object-verb (SOV) structure,
due to Dravidian. 

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 27, 2016, 9:56:44 AM5/27/16
to மின்தமிழ்

On Friday, May 27, 2016 at 6:17:58 AM UTC-7, dhivakar wrote:
//செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி 
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி //

தமிழோசை வடசொல் ஆகி என்பதை தமிழிலிருந்து வடமொழி வந்தது எனப் பொருள் கொண்டீர்களென்றால் அடுத்துவரும் கீழே உள்ள பாடல் வரிக்கு திங்களிலிருந்து ஞாயிறு தோன்றியது எனப் பொருள் கொள்ளலாமே..

ஆழ்வார்களுக்கு மட்டுமல்ல செந்தமிழால் சிவனைப் பாடிய நால்வருக்கும் தமிழும் வடமொழியும் இரண்டு கண்களே.. தமிழும் வடமொழியுமானாய் போற்றி என மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றுகின்றார். இதே போலத்தான் நம்மாழ்வாரும் பாடுகின்றார்.

தமிழும், வடமொழியும் இரண்டு கண்கள் என்பது சரியே. இதற்குத்தான் தமிழர்கள் இரண்டு லிபிகளை உருவாக்கிப் பயன்படுத்தினர். தமிழுக்கு தமிழ் எழுத்தும்,
வடமொழிகளுக்கு கிரந்த எழுத்தும் எனக் கொண்டனர். தமிழைத் தவிர பிற இந்திய மொழிகள், வேதம், ஆகமம், படிக்க கிரந்த எழுத்து உதவும். தமிழ் எழுத்தொடு மிகத் தொடர்புடைய
எழுத்து கிரந்தமே. கணினி இணைய உலகில் மலையாளம் போன்ற திராவிட மொழிகள், வடமொழிகள் (ஹிந்தி, சம்ஸ்கிருதம், ப்ராகிருதம், ...) படிக்க உதவும். ஹிந்தி எழுத்தின்
மாற்றாக அந்தந்த மாநில எழுத்துக்களைப் பயன்படுத்தும் நிலை வரவேண்டும். எல்லா மாநில லிபிகளும் ஒன்றுக்கொன்று சமமானவை என்னும் நிலை இந்தியாவில் வேண்டும்/

”தமிழும் வடமொழியும் ஆனாய் போற்றி” என மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றியுள்ளாரா? பாடலைப் படிக்க ஆவல்.

நா. கணேசன்

Yuvaraj Amirthapandian

unread,
May 27, 2016, 11:15:04 AM5/27/16
to mintamil
திவாகர் ஐயா, கணேசன் ஐயா ஆகியோரின் விளக்கங்களுக்கு நன்றி.

Yuvaraj Amirthapandian

unread,
May 27, 2016, 11:15:39 AM5/27/16
to mintamil
கண்ணன் ஐயா தங்களின் விளகத்திற்கும் நன்றி.

N. Kannan

unread,
May 27, 2016, 12:21:54 PM5/27/16
to மின்தமிழ்
2016-05-27 21:19 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இவ்வுரையில் ”ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷை”  என்னும் கருத்து மாறிவிட்டது. ஆரிய மொழி சிதைந்து தமிழ் மொழி உருவாகவில்லை. தொல்லியல், மொழியியல் போன்ற விஞ்ஞான அறிவு
இந்தோ - ஈரானிய மொழி சம்ஸ்கிருதமாக உருவாக த்ராவிட பாஷையின் தாக்கம் காரணம் என்கிறது. உதாரணம்: subject-verb-object (SVO) structure of Aryan language changes to subject-object-verb (SOV) structure,
due to Dravidian. 

​நானும் இது குறித்து யோசித்தேன். ஆச்சார்யர்களுள் வேதாந்த தேசிகன் மட்டும் இந்த இருமொழிகளின் தோற்றம் பற்றிய கருத்துக் கொண்டு இருந்ததாகப் படித்திருக்கிறேன். அதைத் திருவரங்கக் கோயிலை வைத்து விளக்கி இருப்பதாகவும் நினைவு.

உண்மையில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா, ஒப்புவித்து ஒன்றின் சிறப்பைச் சொல்லும் போது ஈரத்தமிழ் என்பதோடு நின்று இருக்கலாம் என்றே தோன்றியது. ஆயினும் பெரும்பாலோர் கொண்டிருக்கும் கருத்து அதுவே (இந்தியாவின் எல்லா மொழிகளும் சமிஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்று என்னிடம் ஒரு கர்நாடக மாணவன் சொல்லி அடிவாங்கி இருக்கிறான் என்பது வேறு கதை ;-)

நா.கண்ணன்​
 
N. Ganesan

unread,
May 27, 2016, 6:47:55 PM5/27/16
to மின்தமிழ், vallamai

On Friday, May 27, 2016 at 3:12:19 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகம் என்னும் பாசுரத்தில், தமிழோசையே வட சொல்லாகி பின் மந்திரங்கள் ஆனது என பதிவு செய்கிறார்.

இறைவனுக்கும் முன்னால் தமிழ் - குமரன் பதிவு:

வேந்தன் அரசு

unread,
May 27, 2016, 9:14:19 PM5/27/16
to vallamai, மின்தமிழ்
ஓ 

27 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 6:47 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Parvathy ramanathan

unread,
May 27, 2016, 10:50:49 PM5/27/16
to mint...@googlegroups.com
வணக்கம் அனைவருக்கும்
குமரனின் பதிவு பார்த்தேன்.
இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால், பெருமாள் "வட்டார மொழிப்பற்றூள்ளவர்" என்பதுதான்.

அவருக்கென்று தனி ஒரு மொழி இல்லை.
பார்வதி

28 மே, 2016 ’அன்று’ முற்பகல் 9:14 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 28, 2016, 1:19:24 AM5/28/16
to மின்தமிழ்

On Friday, May 27, 2016 at 7:50:49 PM UTC-7, pramanathan42 wrote:
வணக்கம் அனைவருக்கும்
குமரனின் பதிவு பார்த்தேன்.
இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால், பெருமாள் "வட்டார மொழிப்பற்றூள்ளவர்" என்பதுதான்.

இவையெல்லாம் தமிழகத்தில் நடந்த சமய அரசியலின் விளைவாக  இருக்கலாம்.

சைவத் தமிழ், தென்னாடுடைய சிவன் என்பதன் எதிர் கோணமாகத்தான் இது எனக்குத் தெரிகிறது.  

இப்பொழுது நடக்கும் மொழி அரசியல் போல.... 

தமிழர்களைக்  கவரும் நோக்கில் முன் வைக்கப்படும் இந்நாளைய  திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய முயற்சிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல. 

தமிழைத்தான் நம் கடவுள் விரும்புவார் என்றவுடன் அந்நாட்களில் வாழ்ந்த தமிழரும் ஆகா...என்று உச்சி குளிர்ந்து அந்தக் கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்... அதாவது அந்தச் சமயத்தின் மீது பற்று கொண்டிருக்கலாம். 

 ..... தேமொழி

ஓ 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Dhivakar

unread,
May 28, 2016, 1:24:31 AM5/28/16
to மின்தமிழ்
திரு கணேசன், 
அது திருமூலர்.

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்

சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே 

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

2016-05-27 20:45 GMT+05:30 Yuvaraj Amirthapandian <yuva....@gmail.com>:

Parvathy ramanathan

unread,
May 28, 2016, 2:13:04 AM5/28/16
to mint...@googlegroups.com
தேமொழீ!
உங்கள் கணீப்புத்தான் என்னுடையதும்.  மதப்பிரசாரமும் கீழ்கண்டவாறுதான்.

கூர்ந்து, நடுனிலையிலிருந்து  கவனித்தால் தான் புரியும்.

தமிழர்களைக்  கவரும் நோக்கில் முன் வைக்கப்படும் இந்நாளைய  திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய முயற்சிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.

பார்வதி

28 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 1:19 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
ஓ 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Yuvaraj Amirthapandian

unread,
May 28, 2016, 10:39:49 AM5/28/16
to mintamil
தமிழையும் வடசொல் சங்கதத்தையும் இரு கண்களாக சமமாகக் கருதித் தான் அப்போதுள்ள புலவர்களும் இருந்துள்ளனர் என்பது கண்கூடு.

ஆனால், சேக்கிழார் காலத்தில் கூட தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த நிலை இருந்ததாகக் கேள்விபட்டுள்ளேன். அது உண்மையா?

N. Ganesan

unread,
May 28, 2016, 11:05:32 AM5/28/16
to மின்தமிழ்
On Friday, May 27, 2016 at 10:24:31 PM UTC-7, dhivakar wrote:
திரு கணேசன், 
அது திருமூலர்.

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்

சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே 

நன்றி, திரு. திவாகர். திருமந்திரம் அனேகமான பாடல்கள் சோழர் காலம்: 10 - 13ஆம் நூற்றாண்டு.

அதற்கும் முன்பே பல பாடல்கள் உண்டு.

கீதா சாம்பசிவம் குறிப்பிட்ட வரியை உங்கள் மடலில் கண்டேன். உ-ம்: சிதம்பர ரகசியம்,
கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே , எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.”

Dhivakar

unread,
May 30, 2016, 11:49:30 AM5/30/16
to மின்தமிழ்
வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே (ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் 6/7 ஆம் நூற்றாண்டு)

தொகுத்த வடமொழி தென்மொழி
    யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
    வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
    தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
    லோரென்ப ருத்தமரே   (நம்பியாண்டார் நம்பி 11ஆம் திருமுறை - 11ஆம் நூற்றாண்டு)

மன்னவரும் பணிசெய்ய
    வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
    பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
    எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
    நயந்தளிப்பார் ஆயினார்  (12ஆம் திருமுறை சேக்கிழார் - காடவர்கோன் புராணம்) 13 ஆம் நூற்றாண்டு.

அன்புள்ள யுவராஜ்,

வடமொழிபால் பற்று என்பதை விட வடமொழிக் கல்வி இருபதாம் நூற்றாண்டு வரை மிக அவசியமாகக் கற்றனர். ஆதினங்களில் உள்ள புலவர்கள், ஆதினகர்த்தாக்கள் அனைவரும் இரண்டு மொழிகளையும் அவசியம் கற்றே ஆகவேண்டும். 16 ஆம் நூற்றாண்டுமுதல் கப்பலில் தென்னகம் வந்த பாதிரிமார்கள் கூட இருமொழியையும் பயின்றார்கள். பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பில் பல இடங்களில் வடமொழியை அதிகமாகப் பிரயோகப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். தமிழ் கிருத்துவர்களில் ஆசிர்வாதம் என்கிற பெயர் இருபதாம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலம். 

இப்போதுதான் அதுவும் 60 ஆண்டுகாலமாகத்தான் வடமொழியை எதற்காக எதிர்க்கவேண்டும் எனத் தெரியாமலே எதிர்க்கிறார்கள்.

அன்புடன்

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

nkantan r

unread,
May 31, 2016, 9:27:54 AM5/31/16
to மின்தமிழ்
all!

this thread started on a mistaken or convoluted interpretation of the phrase  தமிழ் ஓசை வடசொல் ஆகி;  the mistake has been pointed out and explained well. As with most threads, the topic has become வடமொழி  and/vs தென்மொழி;  (to be precise Sanskrit and/vs Tamil) as used by poets and common men

I remember mentioning in an another thread, that as per my mother's instructions and wishes, I used to go to the famous Thillai Kali temple and recite Sakalakalavalli maalai as there is a Saraswathi Statue (rare to a see a saraswathi sannidhanam in Tamil nadu) and most students in Chidambaram would go there and do pooja.
=======================
குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷாஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாதுஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு தேவையான உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெற வேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.

தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.

அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்குகிறது.
========================

I take this opportunity to quote two beautiful stanzas from thereof:

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங்கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
4

regards
rnkantan

PS: During DMK rule, 2010, a stamp was issued on Kumaraguruparar:

======================================================
Reply all
Reply to author
Forward
0 new messages