காலஞ்சென்ற திருக்குறளார் அவர்களின் வீட்டிற்கு அண்மையில் சென்றிருந்தேன்.
அங்கு என் பார்வையில்பட்ட பழையப் புத்தகம் ஒன்றை,
குறளாரின் மகனார் பாலு அவர்களின் ஒப்புதலுடன் வாங்கி வந்தேன்.
பெயர்: பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை.
“இஃது வா.சரவணமுத்துப் பிள்ளையவர்களால் ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் சேர்க்கப்பட்டதோடு 26 சித்தர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்”
- எனும் குறிப்புடன் தொடங்குகிறது இந்நூல்.
சென்னை B.இரத்தின நாயகர் ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. துணியால் பைன்ட் செய்யப்பட்டுள்ளது.
சுத்தப் பதிப்பு 1958. விலை ரூ.8-50. திருமகள் விலாச அச்சகம், சென்னை -1.
இதில் அடங்கியிருக்கும் புத்தகங்களாக முகவுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிவவாக்கியர் 518 பாடல்,
பட்டினத்துப் பிள்ளைப் பாடல்,
மேற்படி சரித்திர சுருக்கத்துடன் மேற்படியார் புலம்பல்,
மேற்படியார் ஞானம்,
பத்திரகிரியார் புலம்பல்,
சரித்திர சுருக்கத்துடன் பாம்பாட்டி சித்தர் பாடல்,
இடைக்காட்டுச் சித்தர் பாடல்,
அகப்பை சித்தர் பாடல்,
குதம்பை சித்தர் பாடல்,
கடுவெளி சித்தர் பாடல்,
திருவள்ளுவர் ஞானம்,
சட்டைமுனி ஞானம்,
சிவயோக சாரம்.
776ஆம் பக்கத்தில் ஞானக் கோவையின் மூன்று பாகங்களும் முற்றுப் பெறுகின்றன.
காகிதங்கள் உளுத்துக் கொட்டும் நிலையில் இருக்கின்றன. கவனத்துடன் கையாள வேண்டும்.
மின் தமிழ் நண்பர்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். நான் இனிமேல்தான் படிக்கத் தொடங்க வேண்டும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.