இஃது பெருங்காப்பியங்கள் 5 என பேசப்படுவதில் நான்காவது
வளையாபதி நூலின் ஆசிரியர், இயற்றப்பட்ட, காலம், காவியக் கதை, தலைவன்
போன்றவை கிட்டவில்லை
காவியத்தின் 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதனில்
66 பாடல்கள் புறத்திரட்டு வழி
3 சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள் வழி
2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை பெயர் தெரியாத விருத்தியுரை வழியும்
இளம்பூரணரின் தொல்காப்பிய உரைமேற்கோள் வழியும்
1 கடவுள்வாழ்த்து பாடல் நச்சினார்க்கினியர் உரைமேற்கோள் வழி
இஃது ஒரு சமண சார்பு நூல் ஆகவேண்டும்
நவகோடிநாராயணன் எனும் புகார்நகர செல்வச்செழிப்பு மிக்க வணிகன் சைவ சமயத்தவன்
இரண்டு மனைவியர் முதல்மனைவி வணிக குலத்தைச் சார்ந்தவள் இரண்டாம் மனைவி வேறு
குலத்தவள் வேற்றுக் குலப் பெண்ணை மணந்ததை எதிர்த்து குலத்தவர்கள் அவனைச் குல ம்
விட்டு ஒதுக்கிவைக்க அச்சுறுத்த அவன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அந்நாளில்
அப்பெண் கருவுற்றிருக்க பின்னர் ஒர் கடற்பயணம் மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டி பின்
திரும்பி முதல் மனைவியுடன் வாழ்ந்து வர இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை
வழிபட சிலமாதம் கழித்து அவள் ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்து நன்முறையில் வளர்த்து வர
அச்சிறுவனின் விளையாட்டு தோழர்கள் தகப்பன்பெயர் தெரியாதவனென்று எள்ளித் நகையாட
அச்சிறுவன் தன் தாயிடம் முறையிட அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவிக்க
அதுகேட்டு தன் தந்தையைத் தேடிச்சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டினான்
ஆயினும் ஊர்க்கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடிநாராயணன் அவனை ஏற்றுக்
கொள்ள மறுத்துவிட பின் அவன்தாய் காளியை வழிபட வணிககுல பெரியவர்களிடம் தன்
கற்பின் உண்மையை நிலைநாட்ட நாராயணன் அவனைத் தன்மகனாக ஏற்று வீரவாணிபன்
எனும் பெயரிட்டு அவர்களுடன் இனிது வாழ்ந்தான். காப்பியம் இவ்வாறு சென்றாலும் இந்நூல்
சமணசமயக் கருத்துக்களை கூறுவதோடு காளியைப் பற்றி செய்திகள் இடம் பெறுவதாலும்
இந்நூல் முழுமையாக கிடைக்கப் பெறாததாலும் கதை பற்றி ஐயம் பெரிதுளது
நூல்
கடவுள் வாழ்த்து
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான் 1
{இளம்பூரனார் தொல்காப்பியஉரை நூற்பா 98 வுக்கும், யாப்பருங்கலக்காரிகை
விருத்தியுரை ஆசிரியர் நூற்பா 37 வுக்கும் நூல் பெயர் குறிப்பிடாமல் மேற்கோளாக
இச் செய்யுளைக் காட்டியுள்ளர் ஆனால் நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்
செய்யுளியல் நூற்பா 148 இன் உரை இப்பாடல் வளையாபதிச் செய்யுள் எனக்
காட்டுகின்றது}
{பின் வரும் 66 பாடல்கள் புறத்திரட்டிலிருந்து கிடைத்துள்ள தன் தொகுப்பு}
வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல்; தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம் 2
உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கை ஆதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்
பெரிதுணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்கு
அரிதிவை பெறுக லோடே பெற்றவர் மக்கள் என்பார் 3
நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்
பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே 4
பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்ளவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ 5
உண்டியுள் காப்புண்டு; உறுபொருள் காப்புண்டு;
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு;
பெண்டிரைக் காப்பது இலம் என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே 6
எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்து இலை நுண்மயிர்
அத்துணை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார் 7
தனிப்பெயல் தண்துளி தாமரையின் மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார் 8
பொறையிலா அறிவு; போகப் புணர்விலா இளமை; மேவத்
துறையிலா வசன வாவி; துகில் இலாக் கோலத் தூய்மை;
நறையிலா மாலை; கல்வி நலமிலாப் புலமை; நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே 9
ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநரகத்து உய்விக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்குஅல்லது இல்லை நனிபேணும் ஆறே 10
தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே 11
பெண்ணின் ஆகிய பேர் அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில்பெண் நீக்குமின் 12
பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்றுஉண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின் 13
கள்ளன் மின் களவு ஆயின யாவையும்;
கொள்ளன் மின் கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின் இலர் என்றெண்னி யாரையும்;
நள்ளன் மின் பிறர் பெண்ணொடு நண்ணன்மின் 14
துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்தது
எற்றுக்கு அஃது உன்னின் இதுஅதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னும் ஆறே 15
ஆற்று மின் அருள் ஆருயிர் மாட்டெல்லாம்;
தூற்று மின்அறம் தோம்நனி துன்னன்மின்;
மாற்று மின்கழி மாயமும் மானமும்;
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர் 16
பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லாது
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருள் இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள் 17
தகாது உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையில் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற ஊன்கொன்று
அவாவிலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால்
18
பிறவிக் கடலகத்து ஆராய்ந்து உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவு இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர் 19
உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்துஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர் 20
பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்று இனிஇவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே 21
தவத்தின் மேல் உரை தவத்திறை தனக்குஅலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாதுபல் வகைஉயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ 22
எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;
உள்நின்று உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்
நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும் 23
சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்றுஆங்கு அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால் 24
மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
பூஎன்று எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்று எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்பர்; காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்25
நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும் 26
அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே 27
பீடுஇல் செய்திக ளால்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன் எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே 28
பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துஉறல் ஒன்றுஇன்றிக்
கௌவை இல்உலகு எய்துதல் கண்டதே 29
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின் 30
உலகுஉடன் விளங்கஉயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கின் இடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார் 31
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்று இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ 32
ஒழிந்த பிறஅறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறர் அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க்கு அல்லாப் பவரே 33
இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே 34
ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே 35
இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே 36
வேல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே 37
இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்
38
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே 39
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே 40
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ
மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால் 41
பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே 42
உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே 43
செந்நெலங் கரும்பினொடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே 44
குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ 45
கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே 46
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே 47
நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து
ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே 48
அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்குஅறிவு இல்லான் அஃதுஅறி யாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே 49
யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம் 50
ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய 51
வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப 52
எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப 53
கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப 54
நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப 55
வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப 56
தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப 57
ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப 58
வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார் 59
நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப 60
முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப 61
மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே 62
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே 63
பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார் 64
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ 65
தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப 66
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப 67
{சிலம்பு அடியார்க்குநல்லார் உரைமேற்கோள்}
துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி 68
{சிலம்பு_கனாத்திறம்_13-க்கு மேற்கோள்}
பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான் 69
{சிலம்பு_கனாத்திறம்_14-க்கு மேற்கோள்}
அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும் 70
{சிலம்பு__ஆய்ச்சியர்குரவை_3-க்கு மேற்கோள்}
{யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் மேற்கோள்}
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலம் குயின்ற குழலும் கொழும்சிகையும்
காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என்வாழி நெஞ்சே 71
{யாப்பருங் கலம்_93-ஆம் நூற்பா மேற்கோள்}
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக்கண் நின்றுஊக்கஞ் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே 72
2015-03-05 11:51 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:சமணம். பௌத்தம் என்றவுடன் சிலம்பு ,மணிமேகலை இவற்றைப் பற்றி மட்டும்பேசுகிறோமே.?
சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி இவற்றைப் பேசுகிறோமா?மின் தமிழில் சில பதிவுகள் வந்துள்ளன மலர்விழி. நீங்கள் ஆர்க்கைவில் தேடிப்பார்த்து பயன் பெறலாம்.சரி.. ஏன் ’பேசுகின்றோமா’ எனப் பிறரைக் கேட்க வேண்டும்.. நீங்களே சிந்தாமணி,குண்டலகேசி,நீலகேசி பற்றி கருத்து பதிய ஆரம்பிக்கலாமே..காத்திருக்கின்றோம்.. நல்ல பதிவுகளை வாசிக்க..சுபாOn 04-Mar-2015 11:08 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:----
On Wednesday, March 4, 2015 at 3:00:38 AM UTC-8, இரா.பா wrote:தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.On Wednesday, March 4, 2015 at 3:00:38 AM UTC-8, இரா.பா wrote:தேமொழி, இணையத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் சமண ஆகமங்கள் எழுத்தில் எழுதவில்லை என்று சொல்கிறது இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில் சமண கருத்துக்கள் விரவி வருவது யாவரும் அறிவர். மேலே கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை (சமணத் தத்துவம்) போன்ற நூல்களின் காலத்தை பின்னுக்கு தள்ளவேண்டியிருக்கும். சிந்தித்துப் பாருங்கள்.கட்டுரையாளருக்கு தமிழின் இலக்கிய/இலக்கண நெடுங்கணக்குகள் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார். சமணமும்-பெளத்தமும் ஒரே மரத்தின் கிளைகள். கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல் இல்லை.ஓகே..8.3.1 சிலப்பதிகாரம்இளங்கோ அடிகள் சமயப் பொதுமை மிக்கவராகச் சிலப்பதிகாரத்தைப் படைத்திருக்கிறார் என்பது குறித்து அலகு 5 - இல் பார்த்தோம். சிலப்பதிகாரத்தின் தலைமைப் பாத்திரங்களாக (கோவலன், கண்ணகி) வணிக (வைசிய)க் குலத்தவரைத் தேர்தெடுத்ததில் இளங்கோ அடிகளின் சமணச்சார்பு வெளிப்படுகிறது. வடநாட்டில் சமணம் சத்திரிய வைசியர்களின் சமயமாகப் பிறப்பெடுத்தது என்பது இங்குக் கருதத்தக்கது. ஆயினும் இளங்கோ அடிகள் படைத்த கவுந்தி அடிகள் சமணர் என்பதும் எண்வகைச் சாரணர் பற்றி அவர் கூறியிருப்பதும் அருகத்தானம் என்னும் அருகன் கோவில் பற்றிக் கூறியிருப்பதும் அவரது சமணசமயச் சார்பைப் புலப்படுத்துவன எனலாம்.அவர் அருகனது பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதும் நம் கவனத்திற்குரியது.அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன்செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்தரும முதல்வன் தலைவன் தருமன்பொருளன் புனிதன் புராணன் புலவன்சினவரன் தேவன் சிவகதி நாயகன்பரமன் குணவதன் பரத்தில் எளியோன்தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்சித்தன் பெரியவன் செம்மல் திகழொளிஇறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனிபண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளிஓதிய வேதத் தொளியுறின் அல்லதுபோதார் பிறவிப் பொதியறை யோர்(நாடுகாண் காதை: 176-191)இது இளங்கோ அடிகளுடைய சமண ஈடுபாட்டை உணர்த்துகிறது. சாரணர்கள் இவ்வாறு பெயர்களைக் குறிப்பிடக் கவுந்தி அடிகள் தம் செவி, நா, கண், உடல், கை, தலை, மனம் ஆகிய எல்லாமே அருக வணக்கம் தவிர வேறெதையும் செய்யா எனச் சபதம் செய்வதும் காட்டப்பட்டிருக்கிறது (நாடுகாண் காதை: 194-208).அருகனுடைய தலைக்கு மேலே மூன்று குடைகள் உண்டு. தமிழகத்தில் வடிக்கப்பட்டுள்ள அருகன் புடைச்சிற்பங்களில் இதைக் காணலாம். இக்குடைகள் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இதை இளங்கோஅடிகள்,திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்(காடுகாண் காதை: 1)என்று மூன்று நிலவுகளை அடுக்கியது போல என்ற உவமை கூறி வருணிக்கிறார்.சமணத்தின் வினைத்தத்துவம் காப்பிய முக்கொள்கைகளுள் ஒன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. கோவலன் மதுரை நோக்கி வருதற்கும் கொலைப்படுதலுக்கும் மதுரை எரிதலுக்கும் வினையே காரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது காப்பிய நிகழ்வுகளை வழிநடத்திச் செல்கிறது. ஊழ் வினையின் செயல்பாட்டைக் கீழ்வரும் அடிகள் விளக்குகின்றன.ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினைஇட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்திஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணாகடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்னஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்.(நாடுகாண் காதை, 71-75)முற்பிறவியின் வினைப்பயனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்ற சமணக்கொள்கை சிலப்பதிகாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது என்ற சமணக்கருத்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கோவலன் கண்ணகியோடு மதுரைக்குப் புறப்படும் கவுந்தி அடிகள் வண்டினமும் நண்டும் நத்தையும் கூடத் துன்பப்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்கிறார். ‘தோம் அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் கைப்பீலியும் கொண்டு’ அவர் புறப்படுகிறார். நடக்கும் போது கால் பட்டுச் சிற்றுயிர்கள் அழிந்துவிடாத வண்ணம் மயிற்பீலியால் தரையைக் கூட்டிக் கொண்டே நடப்பது சமணர் வழக்கம்,கவுந்தி அடிகள்,வாய்மையின் வழா அது மன்னுயிர் ஓம்புநர்க்குயாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்(காடுகாண் காதை: 158-159)என்று பேசுவதும்மறத்துறை நீங்குமின் (ஊர்காண் காதை: 27)என்று அறிவுறுத்துவதும் சமண நெறியின் வெளிப்பாடுகள்.கவுந்தி அடிகள் பாத்திரப்படைப்பின் மூலம் சமணக் கொள்கைகளுக்கு இளங்கோ விளக்கமளித்திருக்கிறார். வடக்கிருத்தல் (சல்லேகன்) என்னும் சமண நெறியையும் கவுந்தி அடிகள் மூலமே காட்டுகிறார். காப்பிய அழகு கெடாமல் சமணத் தத்துவத்தை இளங்கோ அடிகள் இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.மேலே சிலம்பு குறிப்பிடும் அருகனின் குணங்களும் திருக்குறள் கடவுள் வாழ்த்தும்...குறள் :1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.4.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--Suba.T.http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வ வளையாபதி 72 பாடல்கள் மட்டுமே.தமிழண்ணல், மோகன்ஐயா போன்ற எனது ,மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பச்சைக்கொடி காட்ட கற்பனையில் எழுதிய நாடகம் அது. நியூ செஞ்சுரி பதிப்பகம் ,ஆறு பதிப்புகள் வெளியிட்டு உள்ளது.கணினி வடிவம் கைவசம் இல்லை.
"Tamil in Digital Media...
வ வளையாபதி 72 பாடல்கள் மட்டுமே.தமிழண்ணல், மோகன்ஐயா போன்ற எனது ,மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பச்சைக்கொடி காட்ட கற்பனையில் எழுதிய நாடகம் அது.
2015-03-11 10:34 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
வ வளையாபதி 72 பாடல்கள் மட்டுமே.தமிழண்ணல், மோகன்ஐயா போன்ற எனது ,மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பச்சைக்கொடி காட்ட கற்பனையில் எழுதிய நாடகம் அது.
ஆம் சரியான தகவல். வளையாதி என்ற பெயரில் பின்னாளில் எழுதியது. கிடைத்துள்ள வளையாபதி பாடல்களைபார்க்கும்போது, இக்கதை பொருந்தாமை உணரலாம்.வளையாபதிக் குறிப்புகளை தொகுத்து வழங்கிய லோகசுந்தரம் ஐயாவிற்கும் நன்றி.இரா.பானுகுமார்
நியூ செஞ்சுரி பதிப்பகம் ,ஆறு பதிப்புகள் வெளியிட்டு உள்ளது.கணினி வடிவம் கைவசம் இல்லை.
...
[Message clipped]
லோகசுந்தரம் ஐயாவிற்கு நன்றி.நீங்கள் கொடுத்தது சரியே.அந்தத் தகவல்களை வைத்துத்தான் நான் கற்பனை
கலந்து நாடகம் வடித்தேன். பெரிகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில்
பாடநூலாகவைத்துள்ளனர்.
...
நன்றி தே மொழி.ஒரே கல்லில் தமிழன்னை என்னை மூன்று மாங்காய்கள் விழுமாறு அடிக்கவைத்தாள்.
1.காப்பியங்களை நாடகவடிவாக்கியது.
2.வானொலி நாடகமாகவானலைகளில் உலாவந்தது.
3NCBH புத்தகவடிவம்.
4.கல்லூரியில் பாடநூல்கள் ஆனது.
டட்டடொய்ங்...........
--
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
டீச்சர் ...டீச்சர் ... எனக்கு எண்ணிப் பார்த்தா 4 பாயிண்ட்/மாங்காய் வருதுங்களே....நீங்க மூணுன்னு சொல்றீங்களே ........ தேமொழி
...
...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மேகலா நீங்கள் தான் சரி.
நீங்கள் எல்லாம் என்னை
டீச்சர் என்பது எனக்கு ஒறக்கவேயில்லை.ஏன்னா
என் பிள்ளைகள் அம்மா
என்று தான் அழைப்பார்கள்.
//1.காப்பியங்களை நாடகவடிவாக்கியது.தேமொழி, நான் நினைக்கிறேன்....
2.வானொலி நாடகமாகவானலைகளில் உலாவந்தது.
3NCBH புத்தகவடிவம்.
4.கல்லூரியில் பாடநூல்கள் ஆனது.
டட்டடொய்ங்...........//
நம்ம மலர்விழி டீச்சர் காப்பியங்களை நாடகவடிவாக்கியது = கல்இந்தக் கல்லால் டீச்சர் வீழ்த்திய 3 மாங்காய்கள்:
1. வானொலி நாடகம்.2. NCBH புத்தக வடிவம்.3. கல்லூரிப் பாடநூல்கள். சரிதானா டீச்சர்?டீச்சர்! நீங்க ஒங்களோட எல்லா மெயில்லெயும் ‘டட்டடொய்ங்’, டொட்டடய்ங்-னு ’special effects' ல்லாம் குடுக்கறீங்களே.... உங்களுக்கு பாட்டுக்கூட நல்லாப் பாட வருங்களா? :-))

சுபா..அம்மாடி..
மலேசியாவில்
பார்த்த பொழுதுகளோ கொஞ்சம்.
பதிந்த நினைவுகளில் நெஞ்சம்.
புகைப்படம் போட்டு என்னை
புளகாங்கிதப்பட வைத்து விட்டீர்களே?
அன்புக்கும் என்னை அடையாளஞ்
சொன்ன உங்கள் வார்த்தைகளுக்கும்
நன்றி.
மேகலாசுபா புண்ணியத்துல நாங்களும் அடையாளம் கண்டுகினோம் மலர்விழி டீச்சரை! :))அன்புடன்,
2015-03-27 12:47 GMT-04:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
சுபா..அம்மாடி..
மலேசியாவில்
பார்த்த பொழுதுகளோ கொஞ்சம்.
பதிந்த நினைவுகளில் நெஞ்சம்.
புகைப்படம் போட்டு என்னை
புளகாங்கிதப்பட வைத்து விட்டீர்களே?
அன்புக்கும் என்னை அடையாளஞ்
சொன்ன உங்கள் வார்த்தைகளுக்கும்
நன்றி.
On 27-Mar-2015 2:55 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
யெக்கா. யெக்கா..யெக்கக்கா
உங்கள் பெயர் ஓரம்போகியாரால்
தேமொழி என்று எழுதப் பட்டிருக்குன்னு சொல்லி
மறுநாள் ஆச்சு இன்னமும்
பாக்கலையா?
அகநானூறு ...316வது பாடல்
படிச்சுப் பாத்துட்டு எனக்கு மியூஸிக் போடுங்க.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆமாம்.எனக்கும் பதிவுகளில்
குழப்பம் வருகிறது.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சுபா,தேமொழி,மேகலா மூவருக்கும்
எனது அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.
ஊ.....லல்லா...
ஊ.......லல்லா...லா..லா.
தொடர் கிறேன்.ஆனால் குழுமம்
மாறி விடும் போல.புரிபடவில்லை.
ஷைலஜா.என் செய்வேன்?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--Suba.T.http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி