உலகத்தில் இருக்கின்ற அத்துணை மொழிகளைக் காட்டிலும் தலைசிறந்த இலக்கிய
இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே மொழி தமிழ்மொழிதான். ஏனைய உலக
மொழிகளில் பயிலப்படுகின்ற இலக்கணங்கள் சொல்லுக்கும் எழுத்துக்கும்
மட்டுமே வழிவகுத்துக் கொடுத்தன. ஆனால் நம் அன்னை மொழியாம் அருந்தமிழில்
தான். வாழ்வுக்கு இலக்கணம் அமைத்துக் கொடுத்தார்கsள் அருந்தமிழ்ப்
புலவர்கள். நம்முடைய வாழ்வை. அகவாழ்வு. புறவாழ்வு எனப் பிரித்து இவைகளின்
பின்னணியில் பல இலக்கண இலக்கியங்களும் வளர்ந்தன, வாழ்ந்தன. புறத்துறை
இலக்கியமான புறநானூறு என்ற இலக்கியத்தில் ஓர் செய்யுளைத் திறனாய்வு
செய்வதே இக்கட்டுரையின் உள்நோக்கு.
"யாண்டு பல வாக நரையில வாகுதல்
யாங்காகிய ரென வினவுதிராயின்
மாண்ட வென் மனைவி யோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனை யரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்ற விந்தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழுமூரே"
- புறநானூறு 191 தினை - பொதுவியல், துறை - பொருள்மொழிக்காஞ்சி
இந்தச் செந்தமிழ்ச் செய்யுளைப் பாடிய பாவலர் பிசிராந்தையார் என்ற புலவர்
பெருமகனார். ஆண்டால் மூத்த பெருந்தகையாளர், கலைமலி உள்ளத்தான் மூப்புடைய
அறிஞர்.
அறிவாலும், காலத்தாலும் மூப்புடைய முத்தமிழ்க் காவலர். கண்டோர்
நோக்குக்கு மூப்புடையவராகத் தெரியவில்லை. மூத்தவர்களை விமர்சனம் செய்வது
வெள்ளிமயிர். இவரிடத்திலோ நரையே இல்லை. கண்டவர் கேட்டனர் காரணத்தை.
விளித்தவர்களுக்கு விடையளித்த செய்யுளே இச்செய்யுள். முதல் ஈரடிகளும்
வினா கேட்டவர்களுக்கு விடையளித்து கூறியது. அதைவிட்டு மூன்றாம் அடியாகிய
"மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்"
என்பது மூன்றாம் அடி. தமிழகத்து குலமகளிருடைய பண்பை "மாண்ட" என்ற ஒரு
சொல், கலங்கரை விளக்குப் போன்று உலகோர்க்கு உணர்த்துகின்றது. கணவன்
கைபிடிக்கும் காரிகையாளின் பண்பு நலனை விளக்கவந்த வள்ளுவப் பெருமான்
"தெய்வந் தொழஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" - குறள் 55
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்வலி£ள் பெண்" - குறள் 56
என்று சொல்லிப் போனான், பிறிதொரு இடத்தில்
"மனைத்தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை" - குறள் 51
என்று வள்ளுவம் வடித்தெடுக்கின்ற குறளிலே "மாண்புடைய" என்றதொரு சொல்லின்
திறத்தைத்தான் பிசிரா ந்தையார் தனது பாவிலே அமைத்தார். "மாண்ட" என்ற
சொல்லை, மாட்சிமைப்பட்ட இல்லக்கிழத்தி என்ற பொருளை பின்னணியாக வைத்துத்
தான், அவர் பாவிலே அமைத்திருக்கின்றார். மாட்சிமைப்பட்ட மனைவி எப்படி
இருப்பாள் என்று விளக்கம் கொடுக்கின்றது விநாயகர் புராணம்.
"வருவாய்க் கியைய வாழத்தலுறு
மறுவில் கற்பின் மனையாற்போல்" - வி.பு. அரசியற் படலம் 20
"மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை"
"காதன் மங்கையர் கற்பினுக்கோர் பெய்யும் மழை" - விவேகசிந்தாமணி
குறளார் வழங்கிய கருத்துக்களும் விவேகசிந்தாமணி விநாயக புராணம் போன்ற
பெருநூல்கள் வடித்தெடுத்த கற்புடை மகளிரின் பண்புகளையெல்லாம், ஒருங்கே
ஒன்றாக ஒரே சொல்லிலே குலமகளிரின் குணநலனை "மாண்ட" என்ற சொல்லால் பதிவு
செய்துள்ளார் பிசிராந்தையார். மனைவியின் மாட்சிமையைப் பேசி முடித்த
செந்தமிழ்க்காவலர், மக்கட் பேற்றைப் பற்றி மிக அழகாகப் பாராட்டுகின்றார்.
"மக்களும் நிரம்பினர்" மனைவியை, மக்களைப் பற்றி பாராட்டும் போது, ஓர்
உம்மையை அடுத்து உள்வைத்து பொருள்பட அழகாக விளக்கியுள்ளார். "மக்களும்"
என்ற சொல்லில் உள்ள உம்மையில் ஆயிரம் ஆயிரம் பொருள்கள் பொதிந்து
கிடக்கின்றது. அந்தச் சிறப்பும்மையால் பல நுண்ணிய பொருள்கள்
விளங்குகின்றன. மக்கட்பேறு எல்லோருக்கும் கிடப்பது அரிது. குழந்தைகள் பல
இருந்தாலும் அவர்கள் தங்களுக்குரிய அறிவு, ஆக்கம், உள்ளத்தூய்மை இவைகள்
நிரம்பி இருப்பது அரிது. ஆனால் நமது பாவுடை வேந்தருக்கு வாய்க்கப்பெற்ற
மக்கள், பல நல்ல உயரிய உன்னத பல செல்வங்களைப் பெற்று நிறைவு
பெற்றிருந்தனர் என்ற செய்தியை, அந்த உம்மை உணர்த்துகின்றது. உம்மைக்கும்
"அசைக்கும்" பொருள்கள் நிறைய உண்டு நமது மொழியில். வேறு எந்த மொழிகளில்
இல்லாத தனிச்சிறப்பு நம் அன்னை மொழிக்குண்டு. அடுத்த சொல்லாகிய
"நிரம்பினர்" என்ற சொல்லும் ஆழமுடையது. எல்லா ஆக்கத்தாலும் எனது மக்கள்
நிறைவுடையவர்கள் என்று பெருமிதம் கொள்கின்றார். தனது வாழ்வின்
வனப்புக்கும், வளத்துக்கும் இன்பத்துக்கும் நிறைவுடைமை நிறைந்த
பெருமகிழ்வுக்கும் காரணம், தான் பெற்ற மக்கள் என்று கூறுகின்றார்.
எல்லா பண்புகளை குறைவுறாது பெற்ற மக்களைப் பெற்று பெருமிதம் கொண்டவர்கள்
உலக அரங்கில் ஏராளம். "நான் பெற்றெடுத்த மக்களின் காரணமாக துன்பமே என்னை
வாட்டாது", என்று பெருமைபட மேலைநாட்டு இலக்கிய ஆசிரியன் ஒருவன்
"ழிஷீ மீஸ்வீறீ நீணீஸீ தீமீயீணீறீறீ னீமீ
தீஹ் ரீஷீபீ, மி லீணீஸ்மீ ணீ sஷீஸீ" - சிலீக்ஷீவீstஷீஜீலீமீக்ஷீ
விஷீக்ஷீறீமீஹ்
என்றான். ஷேக்ஸ்பியர் என்ற தலைசிறந்த நாவலாசிரியன் ஜாண் அரசன் என்ற நாடக
நூலில்
"ளி லிஷீக்ஷீபீ, னீஹ் தீஷீஹ், னீஹ் கிக்ஷீtலீமீக்ஷீ, னீஹ் யீணீவீக்ஷீ!
sஷீஸீ னீஹ் றீவீயீமீ, னீஹ் ழீஷீஹ், னீஹ் யீஷீஷீபீ, னீஹ் ணீறீறீ tலீமீ
ஷ்ஷீக்ஷீறீபீ னீஹ் ஷ்வீஸீபீஷீஷ் நீஷீனீயீஷீக்ஷீt, ணீஸீபீ னீஹ்
sஷீக்ஷீக்ஷீஷீஷ்'s நீuக்ஷீமீ" - ஷிலீணீளீமீsஜீமீணீக்ஷீமீ ரிவீஸீரீ
யிஷீலீஸீ மிமிமி 4.
என்றான். வாழ்வுக்கும், இன்பத்திற்கும் உணவுக்கும் உலகுக்குமே பணயமாக
செகசிற்பியன் மக்களை மேம்பட்ட பொருளாக மதித்து வாழத்தினான். இதைத்தான்
பிசிராந்தையார் "மக்களும் நிரம்பினர்" என்றார்.
"யான் கண்டனையரென் இளையரும்" என்பது. "இளையர்" என்பது பணியாள் என்ற
பொருள்படும். இவருடைய பணியாளன் இளமை நிறைந்தவன், உள்ளத் துடிப்பும்
உணர்வும்உ டையவன். இவருடைய நோக்கைக் கண்டு, இன்ன பணி செய்ய வேண்டும் என
அவர் உள்ளக் கருத்துக்கு ஏற்ப நடக்கும் ஏவலர்களை, நமது முதுபெரும் புலவர்
பெற்றிருந்தார் என்பது பொருள். ஏவலருக்கும், நரை தோன் றாமைக்கும்
இதற்கும் இணைப்பு உண்டோ என ஐயம் எழுவது உலக இயல். அருந்தமிழ் வளர்ந்த
ஔவைக்கிழவி
"ஏவா மக்கள் மூவா மருந்து" என்றார்,, - ஔவை அருந்தமிழ்
நம் புலவரிடத்திலே ஏவல் செய்தோர், ஏவா பணியாளர்களாகவே இருந்தார்கள்.
பொதுவாக மனிதனுடைய நித்தல் வாழ்விலே (ஞிணீவீறீஹ் லிவீயீமீ) குறைவோ,
மனக்குறைவோ, துன்பமோ காணுமானால், வாழ்விலே சுவை இல்லாது வாழ்ந்தும் வாழழத
வாழ்க்கையாக மாறிவிடும். மனித மன இயல் வல்லுனர்கள் மனிதனின் வாழ்க்கையிலே
துன்பம் வளர வளர, அவனின் வாழ்நாள் குறுகும். குறைவுடைய வாழ்வால்
தொல்லையும் துன்பமும் வளரும் என்று கூறுகின்றார்கள். தொல்லைகளும்
துன்பங்களும் இல்லாது காக்க வேண்டிய கடப்பாடு பணியாளர்களைப் பொருத்தது.
இதைக் குறித்துத்தான்
"மேகமே சேர்கொடை வேந்த மிர்து
சேவகனும் ஆகவே செய்யினமிர்து" - சிறுபஞ்சமூலம் -
"வெங்குருதி மல்க விழுப்புண்ணுகு தொறூஉ
மிங்குலிகஞ் சோரும் வரைபேய்க்கும் - பைங்க
ணினம் போக்கி நின்றாரிகல் வாட்டி வேந்தன்
மனம் போல வந்த மகன்" - புறப்பொருள் வெண்பா - 26
என மேலே கண்ட இலக்கிய இலக்கணங்கள் பணியாளர்களின் சிறப்பையும் மாண்பையும்
போற்றி வாழ்த்துகின்றன. இத்தகைய ஏவலர்களை நமது புலவர் பெற்றிருந்தார்.
அடுத்து
"அரசன் அல்லவை செய்யான்"
என்பது. குற்றமற்ற மாசுமறுவற்ற மாண்புகளை உடையவன் அரசன். தமிழக அரசர்கள்
மக்கள் நலனே தனது நலன் எனக் கருதி அரசாட்சி செய்து வந்தவர்கள். அரசன்
ஏதேச்சதிகாரமாக எதுவும் செய்ய முடியாது. ஐம்பேராயமும் எண்பேராயமும்
நாட்டையும் குடியையும், அரசையும், அமைச்சர் அவையையும் காத்து வந்தன. இந்த
இனிய செய்தியை சேரன் தம்பி இசைத்த செந்தமிழ்க் காப்பியமான சிலம்பு
"ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்" - சிலப்பதிகாரம் 5 - 157
எனப் பேசும் நாட்டு மக்கள் உயிராகவும் மன்னன் உடலாகவும் இருந்தான் என்ற
புரட்சி மிக்க கருத்தை கன்னித் தமிழ் வளர்த்த கம்பநாடான் தனது காதையில்,
"வயிரவன் பூணணி மடங்கன் மொய்ம்பினான்
உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலாற்
செயிரிலா வுலகினிற் சென்று நின்றுவாழ்
உயிரெலா முறைவதோ ருடம்புமாயினான்" என்று கூறுகின்றான்.
- கம்பராமாயணம் அரசியற்படலம்
தான் செய்த குற்றம் தாங்கமாட்டாது தன் உயிரையே மாய்த்துக் கொண்டான்
பாண்டியன் நெடுஞ்செழியன். பசு ஒன்று நீதி கேட்டதாலே தன் புதல்வனையே
தேர்க்காலில் இட்டு மடிய வைத்ததான் ஒருவன். எனவே பண்டையிலே வாழ்ந்த தமிழ்
அரசர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் உறுதுணையாக இருந்தார்கள். அதனால் தான்
பிசிராந்தையார் தனது அரசன் துன்பம் செய்யான் என்று தனது பாவிலே "அல்லவை
செய்யான்%" என்ற தொடரால் விளக்கிப் போந்தார். அரசனின் சிறப்பை,
"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" - புற 186
"மன்பதை காக்கும் நன்குடி" - சிலப்பதிகாரம் காட்சிக்காதை 103
"உறங்கு மாயினும் மன்னவன் தண்ஒளி
கறங்கு தெண்திரை வையகம் காக்குமால்" - சீவகசிந்தாமணி 248
"மண்ணில் வாடழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலன்" - பெரியபுராணம் திருநகரச்சிறப்பு 14
"மன்னுயிர் ஞாலக் கின்னு யிரெக்கு மறை" - பெருங்கதை 11
என்பன போன்ற நம் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக, நாம் அரசனின் ஆளும் திறமையை
நன்கு உணர முடிகிறது. எனவே ஆந்தையார், அல்லவை செய்யாத உயரிய பண்புடைய அரச
ஆட்சியின் குடிமகனாகத் திகழ்ந்த காரணத்தால் அவர் முடி நரை பெறவில்லையாம்.
இறுதியாக ஆந்தையார் உலகு உய்வதற்கும் தான் நலம் பலகுறையாது வாழ்வதறகும்
காரணம் காட்டுகின்றார்.
"தென்றலை, ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழுமூரே"
என்பது இறுதி அடிகள். இந்த அடிகளிலே "ஆன்றவிந்தடங்கிய" என்ற சொற்றொடர்
இனிப்பதாகும். நாட்டைக் காக்கும் நல்லறம் வளர்த்த சான்றோர்களின் பண்பை
விளக்க வந்த புலவர் பெருமகனார், ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையை உடைய
என்று சான்றோர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றார். 2000
அண்டுகட்கு முன்னர் பாண்டிப¢பெருநாட்டை ஆண்டு வந்த இளம்பெருவழுதி என்ற
அரசன் நாடு வாழ, அறம் செழிக்க, நீதி வளர உறுதுணையானவர்கள் சான்றோர்களே
என்றான். இதைத்தான் புறப்பொருள் வளர்த்த புறநானூற்றிலே
"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே" - புறநானூறு 182
என்று சான்றோர்களுக்கு வகுத்த இலக்கணக் கருத்துச் செல்வத்தை, ஆந்தையார்
தனது பாவிலே "ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்" என்ற தொடரால்
விளக்கிப் போந்தார். இக்கருத்தை வழிமொழிவது போன்று இன்தமிழ்க் கவிஞர்
இளங்கோவடிகளார் தனது காப்பியத்தில்
"அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்ற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நன் நாட்டுக்கு
இறைவனாகிய பெருவிறல் வேந்தே"
என அரசாளும் அரசனுக்கு "அச்சாணி" சான்றோர்கள் என விளக்கிச் சொல்வார்.
"ஆன்ற" என்ற சொல்லில் கல்வி கேள்விகளாற் சிறப்புற்று அறிவு கெழுமிய
தலைமகனே ஆன்ற தலைமகனாக மதிக்கப்படுவான். இத்தகைய பெருமக்கள் இயற்கையாகவே
பல நுண்ணறிவுகளைப் பெற்றிருக்க வேண்டும். இதைத்தான் மேலைநாட்டுக் கவிஞன்
"ரிஸீஷீஷ்றீமீபீரீமீ நீஷீனீமீs, தீut ஷ்வீsபீஷீனீ றீவீஸீரீமீக்ஷீs" -
ஜிமீஸீஸீஹ்sஷீஸீ என்று சொன்னான். அந்த நுண்ணறிவும், உள்ளத்தின்
ஆழத்திலேயிருந்து பிறக்க வேண்டும். அதனை வேறெங்கேயும் பெற முடியாது என்று
கீணீறீறீமீக்ஷீ கீலீவீtனீணீஸீ என்ற புலவன் ஷிஷீஸீரீ ஷீயீ tலீமீ ஷீஜீமீஸீ
க்ஷீமீறீஷீணீபீ என்ற நூலில் இதனையே வழிமொழிந்து கூறுகின்றான். எனவே தமது
காலத்துச் சான்றோர்கள் கல்வி கேள்விகளாற் சிறந்து நுண்ணறிவை இயற்கையாகப்
பெற்றுத் திகழ்ந்த காரணத்தால் தனக்கு நரை நாடவில்லை எனப் பாடினார்.
புறநானூற்றில் உள்ள அத்துணைச் செய்யுட்களும் பல்பொருள் விரித்துப்
பல்சுவை நாட்டும் பழந்தமிழ் இலக்கிய மரபுடைய கவிதைகளாகும். அவைகள் யாவும்
2000 ஆண்டுகட்கு முன்னர் நமது பரம்பரையினர் வாழ்ந்த வாழ்வியல் ஆவணங்கள்.