கதிர் - முரண்சுவை:- செல்லம்மா

147 views
Skip to first unread message

தாரகை

unread,
Aug 4, 2010, 5:28:24 AM8/4/10
to மின்தமிழ்
மிகப்பெரிய சாதனைகள் செய்த ஆண்களுக்குப் பின்னால், அவர்களது மனைவிமார்கள்
மிகப் பெரிய துணையாக நின்றிருக்கிறார்கள். கணவர்களுடன் முரண்பட்டு
அவர்களுக்கு எதிராக நின்று தொல்லை கொடுத்தவர்களும் உண்டு.

http://www.dinamani.com/Images/article/2010/8/1/kadir4.jpg

பாரதிக்கு உயிராக இருந்து செயல்பட்டிருக்கிறார் அவரது அருமை மனைவி
செல்லம்மா. பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, வழிகாட்டி. பெண்கள்
அனைவரும் படிக்க வேண்டிய பாடம்.

பாரதியைக் கைப்பிடிக்கும்போது செல்லம்மாவுக்கு வயது எட்டு. அவருடைய
எட்டாவது வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் பாரதியோ
யாருக்கும் அடங்காத முரட்டு மனிதர். வீட்டைக் கவனிப்பதை விட்டுவிட்டு,
நாட்டைக் கவனித்தவர். வீட்டுத் தேவைகளை உணராமல் நாட்டினுடைய தேவைகளை
உணர்ந்தவர். தன்னுடைய மனைவி மக்களை மட்டும் பார்க்காமல் இந்திய நாட்டு
மக்களையே தன்னுடைய குடும்பமாகப் பார்த்தவர்.

பொதுவாகவே கலைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்கள். கவிஞர்களைப் பற்றி சொல்லவே
வேண்டாம். அதிலும் பாரதி ஒரு மகாகவி. அவருடைய கற்பனைக்கும்
செயல்களுக்கும் ஒரு எல்லை என்பதே கிடையாது.

பாரதியின் வீட்டிலோ வறுமை தாண்டவமாடும். அந்த நேரத்தில் சமைக்க
வைத்திருந்த அரிசியை எடுத்து குருவிகளுக்குப் போட்டுவிட்டு அது உண்பதைப்
பார்த்துப் பரவசப்பட்டவர் பாரதி. அந்த பாரதியின் செயல்களைப் பொறுத்துக்
கொண்டார் செல்லம்மா.

வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும், மரணம் நம்மை
பிரிக்கும் மட்டும் ஒன்றாக இருப்போம் என்று உறுதி மொழி எடுத்துதான்
திருமணம் முடிக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்னால் உறுதிமொழிகளை
எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள்.

பாரதியின் மேல் செல்லம்மா வைத்திருந்தது முதிர்ந்த காதல். அந்தக் காதல்,
அன்பு, மரியாதை, குடும்பப் பொறுப்பு இந்த நான்கு தூண்களில்தான் செல்லம்மா
தனது கணவர் பாரதியைத் தாங்கிக் கொண்டார்.

செல்லம்மாவின் சொந்த ஊர் கடையம். செல்லம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.
பாரதியார் இறந்த பிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்திருக்கிறார்.
பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக
வெளியிட்டார்.

அன்பு, பண்பு, பாசம் இவற்றுக்கெல்லாம் செல்லம்மா சொந்தக்காரி. அவர் கடைசி
காலங்களில் நடமாட்டமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். சுயநினைவு
இல்லாத நிலையிலும், வாயைத்திறந்தால் பாரதியின் பாட்டுதான் வரும். தன்
கணவரை நினைத்து, "என்னை விட்டுப்போய் விட்டாயே இராஜா நீ சொன்னதை சில
நேரங்களில் நான் கேட்காமல் போய்விட்டேனே'' என்று சொல்லி கண் கலங்கினார்.

பாரதி உடல், பொருள், ஆவி, சொல், செயல் ஆகிய ஐந்தையும் இந்தியத்
திருநாட்டிற்கே அர்ப்பணம் செய்தார். மேலே குறிப்பிட்ட ஐந்தையும்
செல்லம்மா தன் கணவர் பாரதிக்கு அர்ப்பணம் செய்தார். எனவே தான், பாரதியால்
நிமிர்ந்து நடக்க முடிந்தது. வறுமையிலும் கவிதை எழுத முடிந்தது. நாட்டைப்
பற்றியும், இயற்கையைப் பற்றியும் கவிதை எழுத முடிந்தது.

அவ்வளவு வறுமையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கெடுபிடியிலும்
பாரதிக்கு சொர்க்கத்தைத் தந்தவள் செல்லம்மா. எனவே தான் இன்றைக்கும் பாரதி
பேசப்படுகிறார்; பாரதியைப் போற்றுபவர்கள் செல்லம்மாவையும் பாராட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.

செல்லம்மா பாரதியின் பாடல்களைக் கேட்டு இரசித்து இதயத்திற்குள் அவர்
சொர்க்கத்தைக் கண்டார். "பாரதியோடு வாழ்ந்த இந்த பாக்கியத்தை மறுபடியும்
பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் தவமிருக்கத் தயாராக
இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் செல்லம்மா.

பாரதியார் இறந்த பிறகு, பாரதியின் கவிதைகளோடும் அவரது நினைவுகளோடும்
உயிர் வாழ்ந்திருக்கிறார். முழுமைப் பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி
வரும் என்றார் கண்ணதாசன்.

இந்தக் காதல் இறந்த பிறகும் ஓடிக் கொண்டிருந்தது.

இப்பொழுதும் பேசப்படுகிறது.

எனவே தான் புரட்சிகவிஞர் பாரதிதாசன் செல்லம்மா - பாரதியின் காலில்
சாஷ்டாங்கமாக விழுந்தார் என்று சொல்லுவார்கள். இப்போது வாழும்
கவிஞர்களில் வாலியும் செல்லம்மாவை ஐம்பதுகளில் சந்தித்திருக்கிறார்.

செல்லம்மா, பாரதி கண்ட புதுமைப் பெண் இல்லைதான்.

ஒன்பது கஜம் புடவை கட்டிய ஆசாரமான வாழ்க்கையைக் கடைபிடித்தவர்தான்.

மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு பூணூலை அறுத்தெறிந்து வீறுநடை போட்ட
பாரதியை, செல்லம்மா இல்லாமல் நினைவுகூர முடியுமா?

தமிழில் எத்தனை கவிஞர்களின் மனைவியைரை அப்படி நினைவுகூர
முடிந்திருக்கிறது?

இராஜேஷ்

நன்றி:- தினமணி கதிர்

Hari Krishnan

unread,
Aug 4, 2010, 5:33:10 AM8/4/10
to mint...@googlegroups.com


2010/8/4 தாரகை <thar...@gmail.com>

பாரதியார் இறந்த பிறகு, பாரதியின் கவிதைகளோடும் அவரது நினைவுகளோடும்
உயிர் வாழ்ந்திருக்கிறார். முழுமைப் பெற்ற காதலெல்லாம்  முதுமை வரை ஓடி
வரும் என்றார் கண்ணதாசன்.

இந்தக் காதல் இறந்த பிறகும் ஓடிக் கொண்டிருந்தது.

இப்பொழுதும் பேசப்படுகிறது.

இதையெல்லாம் பேசவேண்டியவர் திருலோக சீதாராமனும், அவரோடு பழகும் பாக்கியம் பெற்ற ரங்கனும்தான்.  நெருங்கிப் பழகும் வாய்ப்பிருந்தவர்களே பயகிரஃபிகல் ஸ்கெட்ச் கொடுக்கத் தகுதியானவர்கள்.  என்னதான் பாராட்டி எழுதினாலும், நேரடி அனுபவம் உள்ளவர் சொல்வதைப் பிறரால் சொல்ல முடியாது.  ரங்கன் வாயத் திறந்தா நமக்கு பாக்கியம்.  நான் வாயத் திறக்காம இருப்பது சிலாக்கியம். :))

--
அன்புடன்,
ஹரிகி.

தாரகை

unread,
Aug 4, 2010, 5:37:05 AM8/4/10
to மின்தமிழ்
> அரங்கன் வாயத் திறந்தா நமக்கு பாக்கியம்.

> நான் வாயத் திறக்காம இருப்பது சிலாக்கியம். :))

:-))))

Tthamizth Tthenee

unread,
Aug 4, 2010, 5:53:58 AM8/4/10
to mint...@googlegroups.com
ரங்கன் வாயத் திறந்தா நமக்கு பாக்கியம்.  நான் வாயத் திறக்காம இருப்பது சிலாக்கியம். :))
 
முத்தான  வாக்கியம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
4-8-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

srirangammohanarangan v

unread,
Aug 4, 2010, 9:02:41 AM8/4/10
to mint...@googlegroups.com
>> ரங்கன் வாயத் திறந்தா நமக்கு பாக்கியம்<<
 
ஹரியண்ணாவின் ஆசீர்வாதம் இன்னிக்கு.
பதினாயிரம் கட்டி வராகன். :--)))
 
யாராவது திட்டினா சந்தோஷமா இருக்கு!
(கர்மா ஒழியறதுன்னு)
 
இப்படி பெரியவர்களிடமிருந்து ஆசீர்வாதம்
வந்தா பயமா இருக்கு.
(இதுக்கு தகுதியானவனா இருக்கணுமேன்னு)
:--)))

 

N. Kannan

unread,
Aug 4, 2010, 9:32:24 AM8/4/10
to mint...@googlegroups.com
2010/8/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> யாராவது திட்டினா சந்தோஷமா இருக்கு!
> (கர்மா ஒழியறதுன்னு)
>


ஓகோ! இப்படியொரு விஷயமிருக்கா!

க.>

Geetha Sambasivam

unread,
Aug 4, 2010, 11:27:24 AM8/4/10
to mint...@googlegroups.com


2010/8/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>
360.gif

srirangammohanarangan v

unread,
Aug 7, 2010, 11:56:54 AM8/7/10
to mint...@googlegroups.com
>>இதையெல்லாம் பேசவேண்டியவர் திருலோக சீதாராமனும், அவரோடு பழகும் பாக்கியம் பெற்ற ரங்கனும்தான்.<< 
 
ஸ்ரீ ஹரிகி, 
 
இவ்வாறு குறிப்பிடப்படுவது எவ்வளவு மகிழ்ச்சிகரமானது என்பது
பெரியோர்களுடன் பழகி, அந்தப் பெருமிதமும் உணர்ந்த உள்ளங்களே 
அறியமுடியும். 
 
பாரதியைப் பற்றிய முதல் மேடைச் சொற்பொழிவில் நான் முதன்முதல் 
மேடையேறியது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் விழா சார்பாக நடக்கும் 
இலக்கிய விழாவில் 1968 -1969 என்று ஞாபகம். சிறு பிள்ளை. காசிராஜன், அறிவொளி, புத்தனாம்பட்டி ராஜகோபாலன், சத்தியசீலன் ஆகியோர் சக சொற்பொழிவாளர்கள். காலை அரங்கத்தில் பாரதி  கருத்தரங்கம். தலைமை திருலோக சீதாராம். எனக்கு  உள்ளூர உதறல். தந்தையின் ஜாக்கிரதை வார்த்தைகள் வேறு.
 
‘மனிதன் வாமனன் போல் இருப்பார். கவிதை என்று வந்துவிட்டால் விண்ணுக்கும் மண்ணுக்கும் விச்வரூபம் எடுத்துவிடுவார். பாரதி பற்றிப் பேசி அவரிடம் நீ பேரெடுக்கிறாயா என்பதில்தான் இருக்கிறது. பார்த்து கவனமாக உச்சரிப்பு, நடிப்பு, குரல் ஏற்ற இறக்கம் எல்லாவற்றையும் திறம்பட வைத்துக்கொள்’ 
 
இப்படிச் சொன்னால் அந்தச் சிறுவன் உதறாமல் என்ன செய்வான்.?  
 
தந்தை திரு ஆர் வேணுகோபாலுக்கும்   ஷைலஜாவின் தந்தை திரு ஏ எஸ் ராகவனுக்கும் நெடுநாள் பழக்கம் கவிஞரோடு.
 
பாரதி குடும்பத்தில் அப்பொழுது நடந்த திருமணம் திருச்சியைச் சேர்ந்த பாரதி   அன்பர்களால் திருலோகம்  வழிநடத்தத் தங்கள் வீட்டுத் திருமணம் போல் நடத்துவிக்கப்பட்டது. 
இதை இன்றும் என் தாயார் நினைவு கூறுவார்.
 
செல்லம்மா அவர்களைத் திருச்சி ஸ்டோர்ஸில் கொண்டு வந்து குடியமர்த்திப் பெற்ற தாயினும் மேலாகப் பார்த்துக்கொண்டார் கவிஞர். அதாவது பாரதி மணிமண்டபம் முடிந்த கையோடு.  பாரதியின் ஞான புத்ரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவர் திருலோகம். அது சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று கேட்டவர்கள் எல்லாம் சொல்லும் படியாகத்தான் இருந்தது பாரதியைப் பற்றிய அவருடைய நாவீறு.
 
இன்றும் அந்தத்தாய்க்கும் தனயனுக்கும் நடந்த பரிமாற்றங்களை சொல்வதற்கு சேக்கிழார் அடிப்பொடி டி என் ஆர் அவர்கள் உண்டு.
 
அமுதசுரபி அமரர்  மஹி பலமுறை திருலோகத்தின் புத்ர வாஞ்சையைப் பற்றிக் கூறிக்கொண்டிருப்பார். திருச்சி ஸ்டோர்ஸ் வாழ்க்கையில் அன்று திருலோகத்தால் பெரும் எழுத்தாளராகவும், கவிஞராகவும் மலர்ந்தவர். 
 
இன்று திரு ஏ எஸ் ராகவனும், திரு டி என் ஆரும் நம்மிடையே தம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
 
திருலோக சீதாராம் அவர்களுடன் நான் நேரடியாகக் கண்ட அனுபவங்களைத் துண்டு துண்டாகப் பல இடுகைகளில் குறிப்பிட்டதுண்டு. ஆயினும் கோவைபட ஒரு கட்டுரை தருகிறேன், அவருடைய கவிதைகளைப் பற்றிய ஆய்ந்த தோயலுடன்.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
 
On 8/4/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

 

--

ஆராதி

unread,
Aug 7, 2010, 9:37:43 PM8/7/10
to mintamil
திரு ஸ்ரீரங்கரே
திரு ஹரிகி சொன்னதுபோல் இவற்றை எல்லாம் உங்களைவிட்டால் எழுது ஆள்இல்லை என்னும்போது, இத்தனை நாள் எழுதாமல் இருந்ததே சரியில்லை.
ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன். பாரதியின் மகள் திருமண ஏற்பாடான போது பாரதி புதுவையில் இருந்தார் என்றும், அவர் மகள் திருமணத்திற்கு அவருக்குப் புதுவைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்றும் ஒரு தகவல் உண்டு. இதன் சரி தவறு அறியேன்.
அதேபோல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பாரதி பாடல்களைக் கால வரிசைப்படியான ஆய்வுப் பதிப்பு என ஒன்றைக் கொண்டு வந்ததற்குப் பாரதி குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வந்தது. அத்தகைய பேட்டி ஒன்றை ஓர் இதழில் படித்தேன்.
உங்களைப் போன்றவர்கள், பாரதி குடும்பத்தோடு நெருக்கமான பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே சரியான தகவல்களைச் சொல்ல முடியும்.
அன்புடன்
ஆராதி

Hari Krishnan

unread,
Aug 7, 2010, 11:38:41 PM8/7/10
to mint...@googlegroups.com


2010/8/8 ஆராதி <aara...@gmail.com>

ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன். பாரதியின் மகள் திருமண ஏற்பாடான போது பாரதி புதுவையில் இருந்தார் என்றும், அவர் மகள் திருமணத்திற்கு அவருக்குப் புதுவைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்றும் ஒரு தகவல் உண்டு. இதன் சரி தவறு அறியேன்.

பாரதி பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்பியது 1918ல.  கடலூர் அருகே கைதானது நவம்பர் 1918ல்.  விடுதலைக்குப் பிறகு கடையத்தில் வாசம்.  1919 ஆகஸ்ட் (என்று நினைவு.  குறித்து வைத்திருந்த இடம் உடனடியாகக் கிட்டவில்லை) வாக்கில் தங்கம்மாவின் திருமணம்.  பாரதிக்குச் சொல்லாமல், தெரியாமல் இந்தக் கல்யாண ஏற்பாடுகளை நடத்தினார்கள் என்று மயக்கம் தோன்ற, எப்படிவேண்டுமானாலும் பொருள்படும்படியாக சித்திர பாரதியில் ரா அ பத்மநாபனும் எழுதியிருக்கிறார்.  இந்த விஷயத்தில் ராஅப அவர்களுடைய பதிவின்மேல் ஐயம் உண்டு.  எட்டயபுரம் ஜமீந்தாரருக்கு எழுதிய சீட்டுக்கவி மே 1919ல் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.  ஆகவே, தன் மகளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்பது பாரதிக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அப்படி ஏன் மறைத்துக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கவேண்டிய அவசியம் என்பதும் தெளிவாக்கப்படவில்லை.  யாருமே இப்படியொரு அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்துப் பேசவில்லை.  ஆனால், திருமண தினத்தன்று, பூணூல் அணிந்து (அதைக் கழற்றினவர் என்பதாலேயே செல்லம்மாவுக்குத் தன் பெண்ணுடைய திருமண விஷயத்தில் பதற்றம் இருந்திருக்க வாய்ப்புண்டு; ஆனால் பாரதிக்குத் தெரியாமல் மறைக்கும் அளவுக்கு தங்கம்மாவின் திருமணத்தில் என்ன அவசியம் இருந்தது என்பது தெளிவாகவிலலை.  ஒருவேளை எதையாவது மறைக்கவேண்டிய அவசியமிருந்திருந்தால் ‘பாரதி பூணூல் அணிந்திருக்கவில்லை: என்ற உண்மையை சம்பந்தி வீட்டாரிடம் சொல்லாமல் மறைத்திருக்கவேண்டிய கட்டாயம் செல்லம்மாவுக்கு இருந்திருக்கக் கூடும்.  மற்றபடி, பாரதிக்குத் தெரியாமல் நடந்த திருமண ஏற்பாடு என்பது அபத்தமான பொய்யாக நிற்கிறது.)

ஆராதி ஐயா, உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பொய் இன்னமு்ம் அடர்த்தியானது. :))  1918ல பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்பிய பாரதி பின்னர் என்றுமே பாண்டிச்சேரிக்குப் போகவில்லை.  கானாடுகாத்தான், கடையம், திருவாங்கூர் என்று பல இடங்களுக்கு 1918 முதல் 1921 வரை சுற்றியிருக்கிறான்.  திருவண்ணமாலையில் (மரணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால்) ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறான்.  ரமணரைப் பார்த்துவிட்டு, அவருடைய முன்னிலையில் சில மணிநேரங்கள் அமர்ந்திருந்துவிட்டுப் போயிருக்கிறான்.  பத்திரிகைகளில் அவனுடை மரணச் செய்தியும் புகைப்படமும் வந்தபோது, பார்த்துவிட்டு, ‘இவர் இங்கே வந்திருந்தாரே’ என்று ரமணரே குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1919ன் இறுதிப் பகுதியில் தங்கம்மாவின் திருமணம்.  அப்போது எப்படி பாரதி பாண்டிச்சேரியில் இருந்திருக்க முடியும்!  எடுத்த எடுப்பிலேயே உடைந்து போகிறது.  தங்கம்மா பாரதியின் திருமணம் பாரதிக்குத் தெரிந்துதான் ஏற்பாடாகியிருக்கிறது.  அதற்குப் பணம்தேடும் முயற்சிதான் ஜமீன்தாரருக்கு எழுதிய சீட்டுக்கவி என்பது a conclusion that needs nothing more than an iota of intelligence to conclude.  ஆய்வறிஞர்கள், வறிஞர்கள்.  அறிவைப் பயன்படுத்தினால்தானே!  

ரங்கன் தன்னுடைய மடலில் குறிப்பிட்டிருப்பது சகுந்தலாவின் திருமணத்தைப் பற்றி.  ரங்கன் அதைப்பற்றி அவசியம் எழுதவேண்டும்.  அவதூறுத் திலகங்களும் கலைமாமணி வக்கிரங்களும் ரகசியத்தில் பேசித் திரியும் பொய்யை உடைக்கவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.  இதை இப்போதே செய்யாவிட்டால் இந்த ரகசியப் பொய் பலவிதமான வக்கிர வடிவங்களை எடுக்கும்.  ரங்கா... பாத்துக்கேபாப்பா....

Hari Krishnan

unread,
Aug 7, 2010, 11:42:01 PM8/7/10
to mint...@googlegroups.com


2010/8/8 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஆனால், திருமண தினத்தன்று, பூணூல் அணிந்து (அதைக் கழற்றினவர் என்பதாலேயே செல்லம்மாவுக்குத் தன் பெண்ணுடைய திருமண விஷயத்தில் பதற்றம் இருந்திருக்க வாய்ப்புண்டு; ஆனால் பாரதிக்குத் தெரியாமல் மறைக்கும் அளவுக்கு தங்கம்மாவின் திருமணத்தில் என்ன அவசியம் இருந்தது என்பது தெளிவாகவிலலை.  ஒருவேளை எதையாவது மறைக்கவேண்டிய அவசியமிருந்திருந்தால் ‘பாரதி பூணூல் அணிந்திருக்கவில்லை: என்ற உண்மையை சம்பந்தி வீட்டாரிடம் சொல்லாமல் மறைத்திருக்கவேண்டிய கட்டாயம் செல்லம்மாவுக்கு இருந்திருக்கக் கூடும்.  மற்றபடி, பாரதிக்குத் தெரியாமல் நடந்த திருமண ஏற்பாடு என்பது அபத்தமான பொய்யாக நிற்கிறது.)

மேற்படி வாக்கியத்தை,

ஆனால், திருமண தினத்தன்று, பூணூல் அணிந்து பாரதி காட்சியளித்ததை அனேகமாக எல்லோருரம் எழுதியிருக்கிறார்கள். (அதைக் கழற்றினவர் என்பதாலேயே செல்லம்மாவுக்குத் தன் பெண்ணுடைய திருமண விஷயத்தில் பதற்றம் இருந்திருக்க வாய்ப்புண்டு; ஆனால் பாரதிக்குத் தெரியாமல் மறைக்கும் அளவுக்கு தங்கம்மாவின் திருமணத்தில் என்ன அவசியம் இருந்தது என்பது தெளிவாகவிலலை.  ஒருவேளை எதையாவது மறைக்கவேண்டிய அவசியமிருந்திருந்தால் ‘பாரதி பூணூல் அணிந்திருக்கவில்லை: என்ற உண்மையை சம்பந்தி வீட்டாரிடம் சொல்லாமல் மறைத்திருக்கவேண்டிய கட்டாயம் செல்லம்மாவுக்கு இருந்திருக்கக் கூடும்.  மற்றபடி, பாரதிக்குத் தெரியாமல் நடந்த திருமண ஏற்பாடு என்பது அபத்தமான பொய்யாக நிற்கிறது.)

என்று பூர்த்தி செய்துகொள்ளவும்.  

srirangammohanarangan v

unread,
Aug 8, 2010, 1:39:23 AM8/8/10
to mint...@googlegroups.com
>>>பாரதி குடும்பத்தில் அப்பொழுது நடந்த திருமணம் திருச்சியைச் சேர்ந்த பாரதி   அன்பர்களால் திருலோகம்  வழிநடத்தத் தங்கள் வீட்டுத் திருமணம் போல் நடத்துவிக்கப்பட்டது. 
இதை இன்றும் என் தாயார் நினைவு கூறுவார்.<<< 
 
திரு ஹரிகி,  இதில் குறிப்பிடப்படுவது பாரதியாரின் பேத்தி திருமணம். 
 
தாங்கள் குறிப்பிடும் விஷயங்களில் கூடுதல் தகவல்களும், தெளிவும் தர  சேக்கிழார் அடிப்பொடி திரு டி என் ஆர், ஷைலஜாவின் தந்தை 
திரு ஏ எஸ் ராகவன்  ஆகியோர் இருக்கின்றனர்.  கவிஞர் திருலோக சீதாராம் அவர்களிடம் நெருங்கிப் பழகிய இருவரிடமும் அவர்தம் நினைவுகளைப் பதிய வைத்துக்கொள்வது நமக்கு நலம்.


--

srirangammohanarangan v

unread,
Aug 9, 2010, 11:33:41 AM8/9/10
to mint...@googlegroups.com
பல நாளாகக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்த புத்தகம் திடீரென்று கண்ணில் தென்பட்டது. என்னிடம் உல்ள புத்தகங்கள் பெரிய மந்திர மூலிகை மாதிரி. அவற்றுக்கா மூட் இருந்தால்தான் கண்ணில் படும்.
 
அப்படி ஒரு புத்தகம் திரு டி ஆர் குருஸ்வாமி என்னும் ‘மஹி’ என்பவருடைய ‘தமிழ் வளர்த்த தெலுங்கர்கள்’ என்னும் புத்தகம். (ஸ்ரீராஜேஸ்வரி புத்தக நிலையம், டிசம்பர், 1998)
 
நினைவுகள் அலை மோதுகின்றன. பாரதி சுராஜ் வீட்டில் திருலோக சீதாராம் பற்றி என்னைக் கொண்டு ஒரு நிகழ்த்துகலைப் பிரசங்கம் ஏற்பாடு செய்திருந்தார். குறிப்பாக ஒரு பத்து பேர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து.
 
அது எதற்கு என்றால், அடுத்த வாரம் டி நகர் பாண்டி பஜார் ஒரு டாக்டரின் வீட்டில் நடக்கக் இருந்த கவியரங்கத்தின் போது  திருலோகத்தைப் பற்றி நான் ஒரு உபந்யாஸம் செய்ய வேண்டும். அதற்கு இது அப்பிடைஸர். 
 
அப்பொழுதுதான் இந்த ‘மஹியை’ப் பார்த்தேன். பல நாளாகத் தெரிந்த ஒருவர் அப்பொழுதுதான் முக ரீதியாக அறிமுகம் என்னும்படியாக நேசம் வளர்ந்தது. 
 
’அப்படியே  திருலோகத்தைக் கேட்பதுபோல் இருக்கிறது. அதே பந்தா லாகவம். அதே வேகம். எப்படி இது ? ஏதாவது உறவா? எப்படிப் பழக்கம்?’
 
இந்த வியப்பு ‘மஹி’க்கு என்னிடம் அவரது கடைசி காலம் வரை மறையவில்லை.
 
சேக்கிழார் அடிப்பொடி திரு டி என் ஆருக்கு திருலோகம் செய்த உபதேசம் --- ‘வயதானவர்களுடன் ஸ்நேகம் வைத்துக் கொள்ளாதே. கூடியமட்டும் சமவயதுக் காரரகளுடன் பழகு. இல்லையேல் வாழ்க்கையில் துக்கம்தான் அதிகமாகும். இது நான் கடைப்பிடிக்காது கஷ்டப்படுகிறேன்.’
 
இந்த உபதேசம் கடைப்பிடிக்க வேண்டிய உபதேசம் அன்று. இதுதான் வாழ்க்கை. மஹியை நினைத்து இன்று பெருமூச்சு வருகிறது.
 
போய்ப்பார்க்கலாம் என்று எங்கும் உரிமையோடு போகமுடியவில்லை. பலபேர் கிளம்பிச் சென்றாகிவிட்டது.
 
சமவயதுக் காரர்களுடன் பழகியிருக்க வேண்டும். என்ன செய்வது?
 
மஹியைப் பார்க்கும் போதெல்லாம் என் கவிதைகளைச் சொல்ல வேண்டும். திருலோகத்தின் கவிதைகளைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏதாவது பழைய ஞாபகம் வரும். முத்தான சம்பவம். மீண்டும் அந்தக் காலத்தில் வாழ்வார் மஹி. எனக்குப் பெரும் லாபம். நானும் பெரும் சுக்கான் செட்டி. பெரும் லாபம் இல்லாத இடத்தில் ஸ்நேகம் வைத்துக் கொள்வதில்லை. பாரதி குடும்பத்திடம் திருலோகம் வைத்திருந்த பொய்யற்ற பாசத்தைப் பற்றி அடிக்கடி சொல்வார்.
 
நல்ல வேளை. வாயால் சொன்னதை எழுத்திலும் வடித்துவிட்டுப் போயிருக்கிறார். மேற்படி ’தமிழ் வளர்த்த தெலுங்கர்கள்’ நூலில் பக்கம் 23, 24,25 முக்கியமான பகுதி. அதை மட்டும் இங்கேயே தட்டச்சிவிடுகிறேன்.
 
முழுநூலையும் மின்மேய்ந்து வான்பரணில் ஏற்றும் புண்ணியவான்கள் யாரோ? அதற்கான பூர்வாங்கம் அந்த ஹரிக்கே வெளிச்சம். 
 
பக் 23,24,25 
 
“அது சமயம் அமரர் கல்கி எட்டயபுரத்தில் பாரதிக்குக் கட்டிய பாரதி மண்டபத் திறப்புக்கு சீதாராமுடனே பயணித்தேன். உடன் கௌசிகன், தி ஜானகிராமன் வந்திருந்தார்கள். அங்கு எனக்குப் பல எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். என்னிடம் காமிரா இருந்த காரணத்தால் அனைவரையும் போட்டோ பிடித்து வைத்துக் கொண்டேன். 
 
மஹாகவி பாரதியின் ‘மானஸீக புத்ரன்’ என்று தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் சீதாராம் அங்குதான் செல்லம்மாள் பாரதியைச் சந்தித்தார். பாரதி மண்டபத் திறப்பு விழா லக்ஷ ரூபாய் செலவில் கோலாஹலமாகக் கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் சாப்பாடு, அதற்கான டிக்கெட்டுகள் தபாலில் முதலிலேயே வந்திருந்தன. சாப்பிட்டுவிட்டு ஹாய்யாக இரண்டு மணி  சுமாருக்கு சீதாராம், ஜானகிராமன், மகரம், கௌசிகன், நான், குஹப்பிரியை, ஜானம்மாள், வை மு கோதைநாயகி அம்மாள் கோஷ்டியாகப் பாரதி பிறந்த புனித ஸ்தலத்தைத் தரிசிக்கச் சென்றோம்.  
 
பாரதி பிறந்த வீட்டில் பாரதி பிறந்த அறையின் பக்கத்தில் வரிசையாக, செல்லம்மாள் பாரதியுடன், மகள் தங்கம்மாள் பாரதி, பேத்திகள் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள். “அம்மா, சாப்பிட்டீர்களா?” என்று கேட்க “அனுப்புகிறேன் உட்கார்ந்திரு” என்றார்கள். “இன்னம் ஏதும் வரவில்லை. தண்ணீர்கூட அக்கம்பக்கம் அறிமுகம் இல்லை. உட்கார்ந்திருக்கிறோம்” என்றார்கள் செல்லம்மாள். 
 
உடனே வை மு கோதைநாயகி, குகப்பிரியை ஆகியோர் குடம் இரவல் வாங்கி, தண்ணீர் சேந்திக் கொடுத்ததுடன் அரண்மனையில் தங்கியிருந்த அமரர் கல்கிக்குச் சொல்லியனுப்பி சாப்பாடு வரவழைத்தார்கள். அப்போது சீதாராம் சொன்னார். “அம்மா அக்காளையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்கு வந்துவிடுங்கள்” என்று. அப்போது செல்லம்மாள் கடையத்தில் இருந்தார்கள். 
 
சீதாராம், அ வே ரா கிருஷ்ணஸ்வாமி ரெட்டியாரின் வேண்டுகோளின்படி திருமதி செல்லம்மாள் பாரதி, மகள் தங்கம்மாள் பாரதி, பேத்தி  பானுமதி, லலிதா, விஜயா ஆகியோர் திருச்சிக்கு குடிபெயர, சீதாராம் அப்போது அவர் வசித்து வந்த குஜிலித் தெருவிலேயே பாரதி குடும்பத்துக்கு வீடு பார்த்துக் கொடுத்தார்கள். 
 
லலிதா விஜயாவின் கல்வி தொடர்ந்தது. லலிதாவுக்கு சாவித்திரி வித்யாசாலையில் ஆசிரியர் உத்யோகம் செய்துவைத்தார்.   லலிதாவின் திருமணமும் திருச்சியில் நடத்தினார் சீதாராம். நாங்கள்  தொண்டர்கள் ஆனோம். “  
 
---------------- 
 
என்னத்தைச் சொல்வது? அது ஒரு யுகம். 
***  

 

Hari Krishnan

unread,
Aug 9, 2010, 9:59:11 PM8/9/10
to mint...@googlegroups.com


2010/8/9 srirangammohanarangan v <ranga...@gmail.com>

அப்படி ஒரு புத்தகம் திரு டி ஆர் குருஸ்வாமி என்னும் ‘மஹி’ என்பவருடைய ‘தமிழ் வளர்த்த தெலுங்கர்கள்’ என்னும் புத்தகம். (ஸ்ரீராஜேஸ்வரி புத்தக நிலையம், டிசம்பர், 1998)
 
நினைவுகள் அலை மோதுகின்றன. பாரதி சுராஜ் வீட்டில் திருலோக சீதாராம் பற்றி என்னைக் கொண்டு ஒரு நிகழ்த்துகலைப் பிரசங்கம் ஏற்பாடு செய்திருந்தார். குறிப்பாக ஒரு பத்து பேர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து.
 

நங்கநல்லூர் மாக்மில்லன் காலனியில் இருந்தார்.  அந்தக் காலத்து வானொலியில் காப்புகட்டி சத்திரம், ஜனதா நகர், ஜனதா நகர் சங்கம் போன்ற நகைச்சுவை நாடகத் தொடர்களில் பங்கேற்று எழுதியவர். (பின்னால் காப்புக்கட்டி சத்திரம் நாடகத் தொடர் ஒரு நாடகாசிரியருடைய பெயரால் குறிக்கப்பட்டது என்றாலும் இந்த மூன்று தொடர்களையும் எழுதியவர்கள் மொத்தம் 13 நாடகாசிரியர்கள்.  அவர்களில் ஒருவர் மஹி)   நல்லூர் இலக்கிய வட்டத்தின் குரு.  கிவாஜ அவர்களின் நேர்முக உதவியாளர். அமுத நிலையத்தில் நெடுங்காலம் பணியாற்றியவர் கவிமாமணி மஹி.

இந்தப் புத்தகம் என்னிடமும் இருந்தது.  தமிழ் இலக்கிய வரலாற்றுப் பொக்கிஷம் அது.  வைத்த இடம் தெரியவில்லை.  தொலைந்துவிட்டதோ என்னவோ.  இந்தப் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய யாராவது முயற்சி எடுத்தால், மஹியின் மகன் சிவராமனிடமிருந்து அனுமதி பெற்றுத் தரவேண்டியது என் பொறுப்பு.  சிவராமன் என் சுருக்கெழுத்து மாணவன்.  

ரங்கப்பா சொல்லிட்டேன்.  (பழைய எழுத்து அது இதெல்லாம் எனக்கு மட்டும்தான்.... மத்தபடி பழைய எழுத்துன்னா சத்விஷயம் சத்விஷயம்னு சலாம் போடத் தயாராக்கும்.....ம்க்கும்.)  அப்புறம் ஒங்க பாடு மின்தமிழ் மட்டு பாடு.  

Innamburan Innamburan

unread,
Aug 9, 2010, 11:22:52 PM8/9/10
to mint...@googlegroups.com
திரு ஹரிகி,

நான் மின்னாக்கம் செய்கிறேன், உவகையோடு. திரு. சிவராமனிடமிருந்து/ உரியவர்களிடமிருந்து, காப்புரிமை தளர்த்துவதாக, கடிதமும் வேண்டும். இது 1998 ஆண்டு நூல். அதனால். 
இன்னம்பூரான்

2010/8/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages