avial

125 views
Skip to first unread message

Kesaven Thirumalai Numbakkam

unread,
Jan 30, 2010, 2:05:59 AM1/30/10
to mintamil digest subscribers

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 1வ. உ. சிதம்பரம் பிள்ளை

 


கப்பலோட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் அனைவராலும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்கு தமிழும் தேசியமும் தமது இரு கண்கள்; எந்த அளவிற்கு தேசப்பற்றும் விடுதலை உணர்வும் கொண்டிருந்தாரோ, அதே அளவு மறுபக்கம் தாய்மொழியான தமிழ் மீது பற்றும் இலக்கிய உணர்வும் கொண்டிருந்தார்.  நாடு தழுவிய நிலையில் அன்றைய அரசியல் களத்தில் ஒரு சாதனையாளராக,  தன்னிகரில்லாத் தலைவராக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தியத் தலைவர் அவர். அவரின் வீரார்ந்த அரசியல் சாதனைகளே அவர் சிறைமீண்டு வெளிவரும் பொழுது, மறக்கப்பட்டு விட்டன. அவர் 4 ஆண்டு  சிறைவாசத்திற்குப்பின்  விடுதலையாகி  மீண்ட பொழுது அவரை எதிர்கொள்ள  சுப்பிரமணிய  சிவா மட்டுமே  காத்திருந்தார் என்கிறது  வரலாற்றுக் குறிப்பு. இந்நிலையில்  அவருடைய  தமிழ்ப்பணிகளின்  நிலை கேட்கவும் வேண்டுமோ?

:
•       உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இரண்டு நூல்கள்: எஸ். கண்ணனின் "வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை " (2005), மற்றும் ம.ரா. அரசுவின்  "வ.உ.சி.  வளர்த்த  தமிழ்" (2002);
•       சாகித்திய  அகாதெமி் வெளியிட்டு வரும் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் ம.ரா.அரசு எழுதிய "வ.உ. சிதம்பரனார்"(2005);
•       ஆ.இரா. வேங்கடாசலபதியின் "வ.உ.சியும் பாரதியும்" (மக்கள் வெளியீடு,1994)

இந்த உரையில் வரும் அனைத்துக் குறிப்புகளும், கருத்துகளும், மேற்கோள்களும் தகுந்த உரிமம் பெறாமல் இந்த ஆய்வு நூல்களிலிருந்து பெற்ற இரவல்களேயாகும்.

வ.உ.சியின் இளம்பிராயத்திலேயே அவருக்கு ஒரு நல்ல இலக்கிய அடித்தளம் அமைந்தது. வ.உ.சியின் முன்னோர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்கினர்; கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். ஒட்டப்பிடாரத்தில் இவருடைய வீட்டிற்குக் "கவிராயர் வீடு" என்ற பெயரும் உண்டு. இளமையில் வ.உ.சிக்குக் கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆதலால், இயல்பாகவே இலக்கிய நூல்களைப் பயிலும் வாய்ப்பினை அவர் பெற்றார். ஆத்தி சூடி, உலகநீதி முதலிய ஒழுக்க நூல்களைப் பலமுறை கேட்டுப் பயின்றார். கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நளவெண்பா, மூதுரை ஆகிய நூல்களைப் பொருளுணர்ந்து கற்றார். மகாபாரதம் மற்றும் திருவிளையாடல் புராணக்கதைகளையும் நீதிக்கதைகளை யும் பாட்டனார், பாட்டியிடமிருந்து விரும்பிக் கேட்டவர்.

தொடக்க காலத்தில் வ.உ.சி யின் மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தோய்ந்திருந்தது. தனிமனித ஒழுக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில், "விவேகபாநு" என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து, "லெளகிகத்திற்கும் வைதீகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை"யாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் 'விவேகபாநு'வில்தான் வெளியாயின. அவருடைய முதல் கட்டுரை "கடவுளும் பக்தியும்" என்பதாகும். 1936 ஜனவரி 17, தினமணியில் வெளிவந்த "உலகமும் கடவுளும்" என்பதே அவர் எழுதிய கடைசிக் கட்டுரையாகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளில் ஆன்மீகம், அரசியல்,வாழ்க்கை வரலாறு, மொழி, இலக்கியம், மர்றும் பொதுவான பொருள்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

வ.உ.சி யின் கட்டுரைகளின் சிறப்பு அவற்றிலிருந்த எளிமையும் தெளிவும். உதாரணத்திற்கு "கடவுள் ஒருவரே" என்ற கட்டுரையில், "எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறாரென அவர் அறிகின்றிலர். தமது மதத்திற்குரிய கடவுளே உண்மையானவரென்றும், பிற மதத்துவருடைய  உண்மையல்லாதவரென்றும் அவர் நினைக்கின்றனர். அவ்வெண்ணந்தான் இவ்வளவு  விபரீதங்களையும்  விளைவிக்கிறது" என்கிறார். மேலும், "ஒவ்வொரு  மதமும் ஒவ்வொரு  காலத்தில் தோன்றிய  ஒவ்வொரு  பெரியவருடைய அறிவு விளக்கமேயன்றி வேறன்று. ஒருவர் அறிவுக்கு மற்றொருவர் அறிவு எல்லா விஷயங்களிலும் பொருத்த முடையதாக இருக்குமா? சில விஷயங்களில் பொருத்தமின்றித்தானே இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா?" என்று எளிமையாக தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

தாய் நாட்டின் பெருமை உணரப்பட வேண்டும் என்பதை, "ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவர் அவருக்கு தாயென்றால், அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப் பெற்ற தாயினும்  மேலென்பதற்குத் தடையென்ன?" என்றும், "வறுமையினும் வியாதியினும் சகிக்கொணாக் கொடியது அடிமைத்தனமே" என்றும் சொல்கிறார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் "வீரகேசரி" என்னும் நாளிதழில் 'பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் வரலாறு' என்னும் தலைப்பில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். இது இவருடைய கட்டுரைப் பணியில் மற்றுமொரு சாதனையாகும்.

மேடைப் பேச்சு:

ஆன்மிக உணர்வும் தமிழ் உணர்வும் வ.உ.சியின் குருதியில் கலந்தவை. இடையில் தோன்றிய அரசியல் ஈர்ப்பு அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றியது. தமிழகத்தில் விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் தலைவரானார். விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் தமிழைப் பயன்படுத்தினார். இன்று பெருவழக்காகவும், இயல்பாகவும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் நடைமுறையில் உள்ள அரசியல் மேடைப்பேச்சு என்பது வ.உ.சியின்  அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அரிய பொருளாகவே இருந்தது. சொற்பொழிவுக் கலையை - மேடைப்பேச்சைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் என்ற  வகையில்  குறிக்கத்தக்கவர்  சுப்பிரமணிய சிவா ஆவார்.

ஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை- அரசியல் சொற்பொழிவை ஒரு கலையாகவே வளர்த்துப் பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து புதிய வரலாறு படைத்தவர்.

வ.உ.சியின் பேச்சுத் தமிழ், ஆழமும் வேகமும் உள்ள ஓர் ஆறு கரைபுரண்டு வெள்ளமிட்டு வரும் அழகை நினைவூட்டும் என சான்றோர்கள் பாராட்டியுள்ளார்கள். அன்றைய சுயராஜ்ய கட்சியிநன் கொள்கை பரப்புச் செயலாளர் அவர். தமிழை எளிமைப்படுத்தி, பொதுக்கூட்டம்  கூட்டிப்  பேசும் முறையை பிரசித்தமாக்கி, அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் ஆழந்து கிடந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெற வைத்த தமிழ் புரட்சியாளரும் ஆவார்.

மெய்ஞான நூல்கள்:

பால கங்காதிர திலகர் பர்மா சிறையில் அடைப்பட்டிருந்த பொழுது "கீதாரகசியம்" என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவும் "நான் கண்டுணர்ந்த இந்தியா" என்ற வரலாற்று நூலை எழுதி முடித்தார் சிறையில் இருந்தபடியே. அதுபோலவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறையில் இருந்த பொழுது தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூல், நீதிமுறை போதித்தார். அக்குற்றவாளிகளில் சிலர் "பாக்களாகச்  செய்து கொடுத்தால்  மனனம் செய்து  நினைவு கூற இலகுவாக இருக்கும்" என்ற வேண்டிக் கொண்டனர். அதற்கிணங்கி பத்து அதிகாரங்களைக் கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய "மெய்யறிவு" என்ற நூலை இயற்றினார்.

இந்த நூல் 1.தன்னையறிதல், 2. விதியிலறிதல், 3. உடம்பை வளர்த்தல், 4. மனத்தையாளுதல், 5. தன்னிலையில் நிற்றல், 6. மறங்களைதல், 7. அறம்புரிதல், 8. தவஞ்செய்தல், 9. மெய்யுணர்தல்,  மற்றும் 10. மெய்ந்நிலையடைதல் என்ற அதிகாரங்களைக் கொண்டதாகும். உடல், உள்ளம், உயிர் என்ற மூன்றின் சேர்க்கைதான் நாம். "உடலைப் புறக்கணித்தல் தவறு", "ஒருவன் முதலில் தான் யார் என்பதை அறிதல் வேண்டும்", "மறம் களைய வேண்டும்" என்பன போன்ற பல்வேறு கருத்துகள் கொண்ட நூல் இது. அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அனுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும் பயன்களாகும்.

அடுத்ததாக, திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துகளை மையமாக வைத்து எழுதப்பெற்ற நூல் "மெய்யறம்". தமிழ் இலக்கியங்களுள் வ.உ.சியின் மனத்தை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு  வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ.உ.சியின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மனநலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் இந்நூலை இயக்கி உள்ளார்.

இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் 5 இயல்களைக் கொண்டது. ஓர் இயலுக்கு 25 அதிகாரங்கள் என்றும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஒற்றை அடிகள் கொண்டு 1250 அடிகள் உண்டு. "மானுடப் பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வராய், அரசராய், அந்தணராய் படிப்படியாய் வாழ்வில் உயர்ந்து இறுதியில் மெய்ந்நிலையை அடையலாம்" என்பது அவர் வலியுறுத்தும் கருத்து. மெய்யறத்தைப் பற்றி ராஜாஜி பாராட்டுகையில் "இந்நூலிற் கூறியுள்ள பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய  கருத்துகளால் மணப்படுத்தி அற்பக் கல்வி உடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது" என்கிறார்.

மெய்யறத்தின் முதல் பகுதியான மாணவரியலில் முதல் அதிகாரமான மாணவர் கடமை என்ற பகுதியில்:

"மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்
ஆணும் பெண்ணும் அது செயவுரியர்
இளமைப் பருவம் இயைந்ததற்கே
மற்றைய பருவமும் வரைநிலையிலவே
அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்
அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்
தக்க ஆசிரியரால் இன்னியலறிதல்
ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்
இறைவன் நிலையினை எய்திட முயறல்"

மொழி பெயர்ப்பு நூல்கள்:

அடுத்ததாக கலாசாலைகளுக்குப் பாடநூல்கள் விதிக்கும் பாடப் புத்தகச் சபையார் (Text Book Committee) வ.உ.சியின் காலத்திலேயே  ஏற்றுக் கொண்ட நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வ.உ.சி மொழிபெயர்த்தவை ஆகும்.

சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் தத்துவ நூல்களை எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலேய எழுத்தாளரின் எழுத்துக்களால் கவரப்பட்ட வ.உ.சி அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சிறைக்காலத்தில் அது ஈடேறியது. ஜேம்ஸ் ஆலன் தமது 24ஆம் வயதில் "ஆசிய தீபம்" (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. "கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்" என்று அவர் கருத்து கொண்டிருந்தார்.  அவர் இறந்து பிறகு கூட கீழை நாட்டு வழக்கப்படி தனது உடலை  தகனம் செய்ய வேண்டும் என அவர்  விருப்பத்திற்கேற்ப, அவர் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாக சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவருடைய ஆணித்தரமான கருத்து.

"அகமே புறம்"-" Out from the Heart"  என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலுக்கு சுதேசமித்திரனில் வந்த விளம்பரம்: "இது  ஸ்ரீமான்  வ.உ சிதம்பரம் பிள்ளையவர்கள்  கோயம்புத்தூர்  சிறை வீட்டிலிருந்து இயற்றிய இரண்டாவது தமிழ் நூல். இது லெளகிக உன்னத நிலையையும் வைதிக உன்னத பதவியையும்சுலபமாக அடையச் செய்யும் மார்க்கங்களை வரிசைப்படுத்தித்  தெளிவாகக் கூறுகிறது. இதனைக் கற்றுணர்ந்து இதில் கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும்  நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம்". இது விளம்பரத்துக்காக எழுதப்பட்ட மிகையான வார்த்தை களல்ல.  ஒரு சிறிய அளவிலான சரியான மதிப்பீடாகும்.

"இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வோர் ஆடவரும், பெண்டிரும், சிறுவரும், சிறுமியரும் கற்க வேண்டும் என்பதும், இந்நூல் நமது நாட்டில் நிலவும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும்  நிலைபெற்று,  நமது  நாட்டில்  நிலவ  வேண்டும் என்பதும் எனது கோரிக்கை", என்று  பாயிரத்தில் வ.உ.சி அவரின்  உள்ளக்கிடக் கையை தெரியப்படுத்தி உள்ளார். இந்நூலை மூன்று பாடங்களாகப் பிரித்து,  முதல் பாடத்தில் சரீர தீயொழுக்கங்களாக சோம்பலும், மீதூண் (அதிகம் உண்பதும்) எனவும், இரண்டாம் பாடத்தில் நாவின்  தீயொழுக்கங்களாக புறங்கூறல், பயனில சொலல்,  நிந்தித்தல், புன்மொழி  பகரல்,  குதர்க்கம்  பேசல் எனவும் குறிப்பிட்டு, மூன்றாவது பாடத்தில் கொள்ள  வேண்டிய  நல்லொழுக்கங்களாக  மனத்திருத்தத்தில்  நிஷ்காமிய  கருமம்,  கடமை, அசையாத நடுவு நிலைமை, அளவற்ற  பொறுமை எனவும் எடுத்து இயம்பியுள்ளார்.

இந்த நூலைப் பற்றி பாரதியார் தனது மதிப்புரையில் கூறுகிறார்: "அகமே புறம் என்ற  பெயருடன் ஸ்ரீமான்  பிள்ளையவர்கள் எழுதி  வெளியிட்டிருக்கும்  புதிய நூல்,ஆலன் என்ற பண்டிதரின் ஆங்கில் நூல் ஒன்றிலிருந்து  மொழி பெயர்த்தது. எனினும்,  பிள்ளையவர்கள் அதிலே பரிபூரணமான  தமிழ்  மணத்தையேற்றியிருக்கிறார்கள்.  பிற  நாட்டுப்  பொன்னிலே நமது  முத்திரையை  வைத்து  நமது பொருளாக்கி  விட்டார்கள்.  இது மொழிபெயர்ப்பென்று  பிள்ளையவர்கள்  சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில்  சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம். நோய், கீழ்மை, மிடிமை  முதலிய தளைகளை இப்பிறப்பில் இன்றே, இப்பொழுதே  தொலைத்து  நலமெய்த  வேண்டுவோர் இந்நூலின் உபதேசங்களைக் கைக்கொள்க. உடலுறுதி, அறிவு, ஆக்கம், தெளிவு, வீடு ஆகிய இன்ப நிலைகளைப் பெற  விரும்புவோர்க்கு  ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் நல்ல துணையாக அமைந்துள்ளார்கள். இது நன்று." இவ்வண்ணமான பாரதியின் மதிப்புரை, வ.உ.சியின் தமிழ் நடையையும் மொழியாக்கச் சிறப்பையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.

"மனம் போல வாழ்வு" - As a man thinketh என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் தமிழாக்கம் "எண்ணிய எண்ணியாங் எய்துவ; எண்ணியார் திண்ணியராகப் பெறின்" என்னும் திருக்குறளுடன் பாயிரத்தை ஆரம்பித்திருக்கிறார். "தம்மை ஆக்குபவர் தாமே" என்ற உண்மையை மக்கள் உணருமாறு செய்யக் கருதிய சிறுநூல் "இது முதனூற்குச் சற்றேறக்குறைய சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ, அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன். மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில இடங்களில் முதலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில  சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன்", என்று வ.உ.சி பாயிரத் தில் குறித்திருப்பது அவர் எடுத்திருக்கும் சிரத்தையைக்காட்டுகின்றது.


"வலிமைக்கு மார்க்கம்". "From Poverty to Power" என்றா  ஜேம்ஸ்  ஆலனின் நூலின்  முதல் பாகமான "The part of Prosperity"இன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதில் துன்பக் கடலைக் கடக்கும் நெறிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. "உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. துக்கத்தால் துயர் உறாத கண்ணே இல்லை. கவலையும் துன்பமும், துக்கமும் வாழ்க்கையின் மாயைகள் எனலாம். துன்பத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் தப்புவதற்குரிய மார்க்கம், துன்பமோ துக்கமோ அவற்றின் தன்மையைச் சரியாக அறிதலேயாகும்.துன்பத்தை வெறுப்பதாலோ கவனியாது இருத்தலினாலோ தப்பிக்க முடியாது. அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பது மட்டும் போதாது, அது எதன் பொருட்டு வந்ததென்றும், எதனை அது கற்பிக்க நிற்கிறதென்றும் அறிதலே அவசியம்" என உணர்த்தும் நூல்.இதில் வழக்கிலுள்ள பல வட மொழி வார்த்தைகளை உபயோகித்திருக்கும் வ.உ.சி, அதற்கு இணையானதமிழ் வார்த்தைகளையும்  ஆரம்பித்திலேயே கொடுத்திருக்கிறார்.

"சாந்திக்கு மார்க்கம்", "From Poverty to Power" என்ற நூலின் இரண்டாம் பாகமான "The  way to peace" என்பதனின் மொழியாக்கம் இது. இதில் தியான வலிமை, யானும் கடவுளும், ஆன்ம வலிமையை அடைதல், சுயநலமற்ற அன்பை அனுபவித்தல், கடவுளோடு ஐக்கியமாதல், முனிவர்களும், முனிகளும், இரஷிகர்களும் ஊழியம் புரிதல், பூரண சாந்தியை அடைதல் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.

உரை நூல்கள் :

ஆழ்வார் திருநகரில் வாழ்ந்த இரத்தினக்கவிராயர் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு "இன்னிலை"க்கு விருத்தியுரை எழுதி பதிப்பித்தார். அறப்பால், பொருட்பால், இன்பப்பால்,வீட்டுப்பால் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டு 45 பாடல்களால் ஆனது இன்னிலை.வ.உ.சி அவர்கள் இன்னிலையை ஆய்ந்து அதன் சிறப்பினை, திருக்குறளோடு உள்ள ஒப்பினை அக்குவேர் ஆணிவேராகக் காட்டியுள்ளமை  போற்றற்குரியது ஆகும்.  மேலும், “இந்நூலாசிரியர் போன்றதக்க புலவர் திருக்குறளின் பொருள்களையும்  சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நூல் செய்யுள்களதுஅழகு  முதலியவை திருக்குறட்  செய்யுள்களது  அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட் டனவாயிருக்கும்" என முடிவுரையில் முடித்திருக்கின்றார்.

வ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது "சிவஞான போத" சூத்திரங்களுக்காகும். இது பதினான்கு மெய்ப்பொருள் நூல்களில் ஒன்றாகும். மெய்கண்டார் இந்நூலை அருளிச் செய்தார். சிவஞானபோதத்திற்கு முதன் முறையாக சிற்றுரையும் பேருரையும் வழங்கியவர் சிவஞான முனிவர் ஆவார். திருக்குறளுக்கும், சிவஞானபோதத்திற்கும் எளிய உரை காண வேண்டும் என்று வ.உ.சி ஆசைப்பட்டிருந்தார். நாள் ஒன்றிற்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாட்களுக்கு சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எழுந்த உரைகள் பல மதக்கோட்பாடுகளையும் அவற்றின் கண்டனங்களையும் காட்டியுள்ளன. ஆனால், வ.உ.சி அவற்றினைத்  தமது உரைநடையில் காட்டாது, எளிய, நேரிய உரையினை எழுதியுள்ளார்.

பாடல் திரட்டு:

இது வ.உ.சி எழுதிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் வ.உ.சி எழுதிய பாடல்கள் இதன் முதல் பகுதியாகவும், சிறையிலிருந்த காலத்தில் எழுதிய பாடல்கள் இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 380 பாடல்கள். அவற்றுள் 100 பாடல்கள் கடவுள் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கம் பற்றியும் அமைந்தவை. எஞ்சிய 180 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவுமுறைத் தொடர்பில் அமைந்தார்க்கும் எழுதப்பட்டவை.

இந்த தனிப்பாடல் திரட்டிலிருந்து சில கவிதைத் துளிகள்.

சிறைவாழ்க்கையில் ஒரு நாள் கேழ்வரகுக் கூழை உண்ண நேர்ந்த நாள் - வ.உ.சியின் மனத்தில் பின்னோட்டமாகக் கடந்த காலத்தின் இனிய நினைவுகள். தம் மனைவிக்கு எழுதியது இக்கவிதை.

"முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம் வாதம்
அக்காரம் தேன்பாலோ டட்டூட்டக் - கக்குமென்னா
கேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்
வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து"

இப்பாடல் தொகுப்பில் 350 வெண்பாக்கள், 1 தாலாட்டுப் பாடல், 3 விருத்தப்பாடல்கள், 15 கட்டளைகவித்துறைப் பாடல்கள், 11 நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் அடங்கும்.

சுயசரிதை:

சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார்.  தமிழ் மொழியில் தன்னுடைய  சுயசரிதையைக்  கவிதை வடிவில் எழுதிய  முதல் மனிதர் வ.உ.சி என்றே  கூறலாம். பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார். இது ஒரு வரலாற்று  ஆவணம். அவருடைய குடும்ப வரலாறு; அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன  இதில் இடம்  பெறுகின்றன. இதிலிருந்து சில வரிகள் :

இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி:

"சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
'தம்' மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்."

சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:

"தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே"

செக்கிழுத்ததைப் பற்றி:

"திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான் , உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!"
வ.உ.சி வாழ்ந்த வாழ்க்கை என்பது உலகம் அறிந்த ஒரு திறந்த புத்தகம் போன்றது. அதில் ஒளிவு மறைவு என்பதற்கே இடமில்லை. அதற்கு அணி சேர்த்தாற் போன்று அவர் வரைந்த சுயசரிதம் அமைகின்றது. சுயசரிதையில் உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டு, அனைத்தும்  சொல்லும் பாங்கும்,  தம்முடைய  தவறு, குற்றம், குறை  போன்றவற்றையும்  மறைக்காமல் எழுதிச்  சொல்லும்  பாங்கும்  உலகோர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது.

பதிப்பு நூல்கள் :

தன்னை "திருக்குறள் அன்பன்' என்று அறிமுகம் செய்து கொண்டவர் வ.உ.சி. "தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத  தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னை பெற்ற தந்தையேயாயினும்  யான் பெற்ற மக்களேயாயி னும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை" என வ.உ.சி கூறியுள்ளார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை ஓதுவதும், திருக்குறளைச் சுட்டுவதும் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் எடுத்தாள முடியுமோ அங்கெல்லாம் குறளடிகளைக் கையாண்டார்.


திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் பதிப்பித்தவர் வ.உ.சியே ஆவார். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி திருமலையர், மல்லர், கவிப்பெருமாள் என்ற பதின்மர் உரைகளில் அச்சமயத்தில் தமிழ்நாட்டில் பயின்று வந்தது பரிமேலழகருரை ஒன்றே. மற்ற உரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும், தேடுவிக்கவும் முயன்று, அதன் பலனாக அவருக்குக் கிடைத்தது மணக்குடவருடைய பிரதி ஒன்றே. அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றியது. வ.உ.சி க்கு அவ்வுரையில் கண்ட எளிமையும் தம்மனமொத்த கருத்துப் பரிமாற்றலும்அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது. அதைப் பதிப்பித்தது மட்டுமன்றி, தானும் ஒரு உரை நூல் எழுதினார்.  அவருடைய உரையில் பரிமேலழகரினின்றும் பல அதிகாரங்களை மாற்றியும், கருத்துக்களில் புது வீச்சினை வரைந்தும் ஒரு புது வழியைக் காட்டியுள்ளார்.
தொல்காப்பியம் இளம்பூரணம் உரையை பதிப்பித்ததும் அவருடைய இலக்கியப்  பணிகளில் ஒன்றாகும். எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ம் ஆண்டு அச்சிடத் தொடங்கி, 1928-ல் எழுத்ததிகாரம் வெளிவந்தது. 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் பகுதிகள் தனிநூலாக வெளிவந்தன. 1936-ல் எஞ்சிய மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் தனிநூலாக வெளியாயின.  ஏடுகளிலும் அச்சேடுகளிலும் பொழிப்புரையாகக் கொடுக்கப்பட்டிருந்த உரைப்பகுதி இவரால்  பதவுரையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இடத்திலும் கற்போர் எளிதில் உணருமாறு  பொருள்  தொடர்பு  நோக்கி, நூற்பாவின் சொற்களும், அவற்றின் பொருள் சொற்களும் பிரிக்கப்பட்டு  அடையாளங்கள் இட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.

தமிழறிஞர்:

அவருடைய நூல்கள் மொத்தம்- 16.அவை மொழியாக்கம் -4, உரைநூல்கள்-3, பதிப்புகள்-3, மெய்ஞ்ஞானம்-2, பாடல் திரட்டு-1, சுயசரிதை -1 மற்றும் அரசியல் பெருஞ்சொல் என்று அவருடைய அரசியல் மேடைப்மொழிவுகளின் தொகுப்பு, வ.உ.சி கண்ட பாரதி என்ற  மற்றுமொரு  தொகுப்பு. வ.உ.சி யின் சுயசரிதையும், வ.உ.சி கண்ட பாரதியும் தொகுத்து பதிக்கப்பட்டது 1946-ல், அவரது மறைவுக்குப் பின்.  வ.உ.சி யின் இலக்கியப் பணி ஒரு மேடைப்பேச்சாளராக, கட்டுரையாளராக, மொழி பெயர்ப்பாளராக, பதிப்பாளராக நின்று விடாமல் தமிழை, தமிழ் இலக்கியங்களை மற்றவருக்கு போதித்த சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். சுவாமி சகஜானந் தருக்கு, பிற்காலத்தில் சிதம்பரத்தில் நந்தனார் கழகம், நந்தனார் பாடசாலை ஏற்படுத்திய அவருக்கு தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்து தமிழ் பயிற்சி ஊட்டினார். ராஜாஜியும் வ.உ.சி யிடம் திருக்குறள் பயின்றதாக சரித்திரம் சொல்லுகிறது. தம்முடைய வாழ்வின் இறுதி நாட்களில் அன்றாடம் தம்முடைய வீட்டில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். "தூத்துக்குடி சைவசித்தாந்த சபை" என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம், தொடர்பான சொற்பொழிவுகளை பல இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்தி வந்தார்.

தம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை - 'மேடைத்தமிழ்' என்னும் துறையை வழங்கினார்.  தம்முடைய ஆன்மிக எழுத்துகளால், பின்னாளில்  பல்கிப் பெருகித் தழைத்த 'வாழ்வியல் நூல்கள்' என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார். இன்று மில்லியன் கணக்கில் 'வாழ்வியல் நூல்கள்' விற்பனையாகும் நேரத்தில், வ.உ.சியின் தமிழ் மொழியாக்கங்களை நம் தமிழகம் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. இவை கருத்துக் கருவூலப் பெட்டகங்கள்; நம் வாழ்வுடன் இணைந்து பொருள் உணர வைப்பவை. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நீதிப்பாட (Moral Science) வகுப்புகளுக்கு பாடநூல்களாக இவைகளை மீண்டும் கொணர்ந்தால் சமூகமும், நாடும் உயரும். 'அகமே புறம்' சிறிய அளவிலான நூல்-56 பக்கங்கள்; 'மனம் போல வாழ்வு'-59 பக்கங்கள்; 'வலிமைக்கு மார்க்கம்'- 100 பக்கங்கள்; 'சாந்திக்கு மார்க்கம்'-102 பக்கங்கள். சாத்தியப்பட்டால் இணையதளத்தில் ஏற்றி வ.உ.சி யின் தமிழ்த் தொண்டைப்  பரப்ப  முயற்சிக்கலாம்.

செல்வமும், செல்வாக்குமாக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936),  தமிழை மறவாது, இலக்கியத்  தொண்டைத்  தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி  வாழ்ந்த  தன்னலமற்ற தேசபக்தரான, கப்பலோட்டிய  தமிழரான, திருக்குறள் அன்பரான  வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தமிழ் தொண்டை நாம் மறவாதிருப்போம், அவரது நூல்களைக் கற்றுத் தேர்வோம்.
 
2;திரு வீ. க
 
எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம்  எண்ணத் தோன்றுகிறது.

வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?

ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை  பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும்..

இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர்.

இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன், திரு.வி.க-விற்குப் பின் என்று நாம் பிரித்துவிடலாம். அயல்மொழிகளின் நெடி வீச, நெடிய சொற்றொடர்களில், கடினமான, புரியாத, பண்டிதச் சொற்களைக் கொண்டு, உரைநடை எழுதப்பட்டு வந்தபோது, எளிய, இனிய தமிழ்ச் சொற்களைக்கொண்டு, சிறு சிறு சொற்றொடர்களை உருவாக்கி, அரிய பெரியக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிக் காட்டியவர் திரு.வி.க. பாரதியைப் பற்றிப் பேசும்போது, கவிதையைத் தேனாய், பாலாய், பாகாய், அமுதாய்க் கருதி வந்தக் காலத்தில், அதை மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவையான குடிநீராய் ஆக்கியவன் என்று சொல்வார்கள். அதுபோலவே, திரு.வி.க தமிழ் உரைநடையைத் தூய, தெளிந்த, குளிர்ந்த, சுவையான குடிநீராய் ஆக்கிக் காட்டியவர் என்பது ஒரு பேருண்மை. தமிழ் மணம் கமழ அவர் உருவாக்கியச் சொற்றொடர்கள், குறியீடுகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் மொழிநடை பத்திரிக்கைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பின்பு பலராலும் பின்பற்றப்பட்டது. கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் 'திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,' என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.

எழுத்தாளர் வ.ரா. எழுதினார்: 'தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள், திரு.வி.க நடத்தி வந்த 'தேசபக்தன்' இதழின் பழைய படிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களேயானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழில் உரைநடையில் ஒலியழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்பவர்கள் அவரின் எழுத்தைப் படித்தால் தெளிவார்கள்.'

திரு.வி.க சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். கல்யாணசுந்தரம் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டார். மூதாதையர்களின் ஊரான திருவாரூரின் நினைவாக 'திருவாரூர்' அவர் பெயரில் இணைக்கப்பட்டது. எனவே, அவர் முழுப் பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம். சுருக்கமாக, 'திரு.வி.க.' அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' ஒரு அடைமொழியோ, விளிமொழியோ அல்லது அணிமொழியோ அல்ல. அது ஒரு வெறும் அடையாளமொழிதான். இருப்பினும், அவரிடம் இயற்கையிலே அமைந்திருந்தப் பேரறிவு என்னும் திருவாலும், அதைவிட மேலாக அவரிடமிருந்த மனிதநேயம் என்னும் பெரும் திருவாலும் அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' திருவடைந்தது., பெருமைக்குரியதாகியது. திருவள்ளுவரைப்போல!

திண்ணைப் பாடமாக ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமே கற்றார். கற்றது அரிச்சுவடி முதல் ஓரளவு ஆங்கிலம்வரை. பின்பு, சென்னை இராயப்பேட்டை ஆரியன் பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்புத் தொடங்கி, வெஸ்லி கல்விச்சாலையில் நான்காம் படிவம் வரைப் படித்தார். படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். உடல் பருமன் குறைய உட்கொண்ட ஒரு நாட்டு மருந்து, பத்திய முறிவின் காரணமாக ஒத்துக்கொள்ளாமல் போய், முடக்கு நோய்க்கு ஆளாகினார். அதனால், பள்ளிப் படிப்பு பாதியில் கெட்டது. புகழ் பெற்ற அயோத்திதாசப் பண்டிதரிடம் சித்த வைத்தியச் சிகிச்சைப் பெற்று, இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குணமானார். இதற்கிடையில், குடும்பமும் வறுமைக்கு ஆளானது; பெற்றோரும் நோய் வாய்ப்பட்டனர்.

நான்காண்டு இடைவெளிக்குப் பின் உடல் தேறிய திரு.வி.க மீண்டும் வெஸ்லி பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தன் அறிவாலும் திறமையாலும் மீண்டும் படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். அவர் ஐந்தாம் படிவம் படிக்கும்போது அவரின் தமிழாசிரியாரக இருந்தவர் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளை. பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, திரு.வி.க-விற்கு ஏனோ படிப்பில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மேலும், ஒரு தேர்வு நாளன்று, தான் பெருமதிப்பு வைத்திருந்த கதிரைவேல் பிள்ளைமேல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சான்று கூறச் சென்றதால், தேர்வு எழுதமுடியாமல் போய், படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கிய திரு.வி.க, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்றார். அதனால் மனம் விரக்தி அடைந்து, சிலகாலம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பின், உறவினர் ஒருவரின் வற்புறுத்தலால், வணிகப் பள்ளியில் சேர்ந்து, வணிகக் கணக்கியல் பயின்று தேறினார்.

ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க, பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர். ஓவியத்திலும் இசையிலும் கூட அவருக்கு ஆர்வம் இருந்தது. அக்கலைகளைப் பற்றிய ஆய்ந்த, நுட்பமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அந்த ஆர்வம் அவரிடமிருந்தது. இயற்கை அழகை ஆராதிக்கின்ற மனப்பாங்கு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.

இடையில் குடும்பத்தில் ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியினால், சென்னை ஸ்பென்சர் நிறுவனத்தில் அட்டவணைப் பிரிவில் திரு.வி.க பணியில் அமர்ந்தார். ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் செய்தார். அப்போது அவருக்கு நாட்டின் விடுதலைப் போரில், அதன் ஒரு அங்கமான சுதேசி இயக்கத்தில் ஆர்வம் பிறந்து மிகுந்தது. சென்னைக் கடற்கரையில் விபின்சந்திரபாலர் ஆற்றிய, மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவு அவரை மிகவும் உலுக்கியது. கல்கத்தாவிலிருந்து அரவிந்தரின் 'வந்தேமாதரம்' பத்திரிக்கையை வரவழைத்து, தானும் படித்து, தான் படித்த விடுதலை இயக்கச் செய்திகளை எல்லாம் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லி வந்தார். இதைக் கண்டு எரிச்சலுற்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஸ்பென்சர் நிறுவனத்தின் நிர்வாகம், அவரைக் கூப்பிட்டு எச்சரித்தது. அதனால் வெகுண்டு, தன் பணியைத் துறந்து வெளியேறினார். பின்னர், தன் தமையனாருடன் சேர்ந்து ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கினார். அங்கேதான் முதலில் 'திருமந்திரம்' பதிப்பிக்கப்பட்டது. அதன்பின், அவரின் சிறப்புக் குறிப்புகளுடன் 'பெரியபுராண'மும் அங்கே வெளியிடப்பட்டது. இருப்பினும், ஏற்பட்டப் பொருள் இழப்பினால், இரண்டு ஆண்டுகளில் அந்த அச்சுக்கூடம் மூடப்பட்டது.

பின்னர், தான் படித்த வெஸ்லியன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக திரு.வி.க பணியில் சேர்ந்தார். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஜான் இரத்தினம் மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தார். திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து, தலைமையாசிரியர் அவரை வெகுவாக ஆதரித்தார். திரு.வி.க-வின் வருவாயைக் கூட்டும் பொருட்டே, 'வெஸ்லியன் தொழிற்பயிற்சி நிலையம்' என்று ஒன்றைத் தொடங்கி, அதில் திரு.வி.க-வை வணிகக் கணக்கியல் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியாராகவும் பணியமர்த்தினார். இந்த ஜான் இரத்தினத்தின் மூலம்தான் திரு.வி.க கிறித்துவ மதத்தின் நுட்பமான கோட்பாடுகளை எல்லாம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப்பின், தன் தகுதியால் திரு.வி.க பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். திருமனமே வேண்டாமென்றிருந்த திரு.வி.க-வை, திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைத்தவரும் இந்த ஜான் இரத்தினமே. பள்ளியில் தமிழ்ச் சங்கம் நிறுவி, சக ஆசிரியர்களின் ஊதிய மேம்பாட்டிற்கும் வசதிக்கும் உழைத்து, தன் பணியில் மிகவும் பரிமளித்த திரு.வி.க, ஒன்றைரை ஆண்டுகாலமே பள்ளிப் பணியில் இருந்தார்.

1912-ஆம் ஆண்டு, கமலாம்பிகை என்ற மாதரசியை மனைவியாகப் பெற்றார். தன் கணவனிடம் அந்தப் பெண் கேட்டது பொன்னும், மணியும், புடவையும், அழகு சாதனங்களும் அல்ல. கல்வியை மட்டுமே அவரிடம் கேட்டார். திரு.வி.க-வும் தன் மனைவிக்கு கல்வியையும் காப்பியங்களையும் கற்பித்து வந்தார். அவர்களின் இனிய திருமண வாழ்வின் அடையாளமாக, அவர்களுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து சில நாட்களிலும், பிறகு ஒரு பெண்பிள்ளை பிறந்து ஒராண்டிலும் இறந்தனர். 1918-ல் அவர் மனைவி எலும்புருக்கி நோய்க்கு ஆளாகி எமனுக்கு இரையானார். ஆறு ஆண்டுகளில், திரு.வி.க-வின் இல்வாழ்க்கை தொடங்கி முற்றும் முடிந்துவிட்டது. சுற்றமும் நட்பும் மிகவும் வற்புறுத்தியும், மறுமணம் செய்துகொள்ள திரு.வி.க மிகத் திண்ணமாக மறுத்துவிட்டார்.

மனைவியின் மறைவிற்குப் பிறகு, தான் பார்த்துவந்த தலைமைத் தமிழாசிரியர் பணியைத் துறந்து, பொதுத் தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார் திரு.வி.க. தன்மீது பெருத்த அன்பு வைத்திருந்த, குறுகிய காலத்திலேயே தன்னைப் பலவகையிலும் பண்படுத்திய தன் மனைவியின் நினைவாக, பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபடுவதென உறுதிபூண்டு செயலாற்றினார்.

அப்பொழுது திலகரும், அன்னிபெசண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு நடத்திவந்த தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர் திரு.வி.க-வை வெகுவாக ஈர்த்தது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய 'New India' நாளிதழின் துணையாசிரியராக இருந்த சுப்பராய காமத் என்பவர் திரு.வி.க-வின் நெருங்கிய நண்பர். சுப்பராய காமத்தின் முயற்சியினால் தொடங்கப்பெற்ற 'தேசபக்தன்' நாளிதழில், திரு.வி.க ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். தமிழிப் பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய, ஒளி வீசும், தெளிவான, சுவையான, எளிதில் புரியும் உரைநடை வழக்கு பிறந்தது. பரலி.சு.நெல்லையப்பர், வெ.சாமிநாத சர்மா போன்றோர் அவரிடம் இந்தப் பத்திரிக்கையில் உதவியாசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் அனல் கக்கும் கருத்துக்களை, தேசபக்தியைத் தூண்டும் சிந்தனைகளை, தேசத் தலைவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சுக்களை எல்லாம் திரு.வி.க இந்தப் பத்திரிக்கையில் தனக்கேயுரிய, புத்தொளி வீசும், அழகியத் தமிழ்நடையில் எழுதினார். பின்னர், இதழின் உரிமையாளர் மாற, இதழின் அச்சுக்கூடம் அவருக்குத் தெரியாமல் அடமானம் வைக்கப்பட, மனம் வெறுப்படைந்த திரு.வி.க, இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் பத்திரிக்கைப் பொறுப்பைத் துறந்து, அதிலிருந்து வெளியேறினார். பின்னர், வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த 'தேசபக்தன்' நாளிதழ், பின் வாரயிதழாக மாறி, அதன்பின் அடியோடு மறைந்தது.

திரு.வி.க-விடம் மிகவும் அன்பு பூண்டிருந்த ஒருசில தொழிலாளத் தோழர்கள் தாமாகவே முன்வந்து அளித்தப் பொருளுதவியைக் கொண்டு, 1920-இல் அவரால் ஒரு அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து, புகழ்பெற்ற 'நவசக்தி' வார இதழ் திரு.வி.க-வை ஆசிரியராகக்கொண்டு வெளிவரத் தொடங்கியது. அவ்விதழில், அரசியல் மட்டுமின்றி, பெண்கள் நலன், சமூகச்சீர்திருத்தம், மொழிச் சிறப்பு, கலையாக்கம், சன்மார்க்க நெறிகலந்த சமதர்மம் எனப் பொதுப்பகுதிகளும் இடம் பெற்றன. வன்மைக்கும், மென்மைக்கும் உள்ள வேற்றுமையே, தேசபக்தன் நாளிதழுக்கும், நவசக்தி வார இதழுக்கும் இருந்தது. இதழ் அடைந்த புகழாலும், பெற்ற வரவேற்பாலும், ஈ.வெ.ரா. பெரியாரின் ஆலோசனை மற்றும் நிதியுதவியாலும், வாரப்பதிப்பாக வந்துகொண்டிருந்த நவசக்தி, கூடுதலாக மாதம் மும்முறைப் பதிப்பாகவும் 1923-ல் வரத்தொடங்கியது.

கல்கி நவசக்தியில் அப்பொழுது துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க விடம் மிகுந்த பக்தியும், பேரன்பும் பூண்டிருந்தார். திரு.வி.க-வும் கல்கியிடம் பேரன்பு கொண்டிருந்தார். கல்கியைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிடும் போதெல்லாம், 'தம்பி' என்றே அன்போடு விளித்து திரு.வி.க குறிப்பிடுகின்றார். 1939-ல் அறிவிக்கப்பட்ட போர்கால அவசரச் சட்டங்களினால், பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. நவசக்தியும் அம்முடக்கலுக்கு ஆளாகியது. 1941-ல் தான் பார்த்துவந்த ஆசிரியர் பொறுப்பை மற்றொருவரிடம் விட்டுவிட்டு, பத்திரிக்கையை விட்டு விலகி, திரு.வி.க, முழுநேர சமரச சன்மார்க்கத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். தேசப்பக்தியைத் தூண்டுவதற்கு பாரதிக்கு இருந்தது அவரின் கவிதையும் பாட்டும். நம் திரு.வி.க-விற்கு இருந்ததோ, அவருடைய தெளிந்த, எளிய, அழகிய, எழுச்சியூட்டும் உரைநடை.

நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். காந்தியடிகளைச் சந்தித்து அவருடன் பழகியிருக்கிறார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படி, அவருடைய ஆங்கில உரைகள் சிலவற்றை தமிழில் திரு.வி.க மொழி பெயர்த்திருக்கிறார். திலகரைச் சந்த்தித்து அவருடனும் பழகியிருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர், ஆதலால் அவருடனும் பழகி, அவருடைய பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். வ.உ.சி, ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி முதலியோரின் நண்பராய் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினாரய் இருந்து, பல கூட்டங்களக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், மனிதநேயமும் மக்கள் நலனனும் அவரின் அரசியல் கொள்கைகளாக இருந்திருக்கின்றன. அவர் கூறினார்: 'நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன். பொதுமக்களின் சுகவாழ்வு மட்டுமே எனது குறிக்கோள். என்னுடைய அரசியலும் அதுவே. யார் என் கருத்துக்கு, நோக்கத்திற்கு உடன்படுகிறார்களோ அவர் கட்சியே என் கட்சி.' திரு.வி.க-வின் இத்தகைய அணுகுமுறைதான் எதிர்த்தரப்பிலிருந்த, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. 'அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரைகளை அழகிய தமிழில் தீட்டியவர் நம் திரு.வி.க,' என்று அறிஞர் அண்ணா உரிமையுடனும், பெருமையுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது - மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே!

1983-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசாலும் மற்ற தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டது. கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும், நகர்களுக்கும், பூங்காக்களுக்கும் அவர் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கம் போல் எல்லாம் மறக்கப்பட்டன. நினைப்பதும் ஏத்துவதும், விழாவோடு விடைபெற்றன.

திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், சமயம், சமூகம் என்ற பல்வேறு தலைப்புகளில், பல இடங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் அவை. கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். அவருள் சுடர்விட்டுத் திகழ்ந்த உண்மை, நேர்மை, ஒழுக்கம், நியாயம், தியாகம், கனிவு, பனிவு, துணிவு அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் ஓளியும் உறமும் அளித்தன. அந்தக் காலத்தில் மேடைப் பேச்சில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவையே மிகவும் கவர்ந்தப் பேச்சாளர் திரு.வி.க என்றால், அவருடையப் பேச்சாற்றலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், 'தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே' என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார். 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை,' 'தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொலிவு,' 'முருகன் அல்லது அழகு,' 'பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி,' 'வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்' என்று இரண்டு, இரண்டு தலைப்புகளைத் தன் நூல்களுக்குத் தருவது அவரின் தனிச் சிறப்பு. அந்த நூல்களின் உட்பொருள் அந்த இரண்டு தலைப்புகளுக்குமே பொருத்தமாக இருப்பதை அந்த நூல்களைப் படிப்போர் காணலாம். அவர் எழுதிய நூல்களில் 'முருகன் அல்லது அழகு' மற்றும் 'தமிழ்க்கலை' என்ற அவரின் இரண்டு நூல்களை மட்டுமே நான் முழுதும் படித்திருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஓரளவிற்குப் படித்திருக்கின்றேன். எல்லாமே அருமையான நூல்கள். மேலும், மேலும் படிக்கத் தூண்டுவன அவை. ஒரு தாய் எப்படி தன் சிறு குழந்தைக்கு அருகில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வரிக்குவரி அந்தக் குழந்தைக்குப் படித்துக் காட்டுவாளோ அதுபோல, அவர் நூல்களைப் படிக்கும் போது அவரே நம் அருகிலிருந்து, நமக்கு அவர் எழுத்துக்களைப் படித்துக் காட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பது என் அனுபவம். அவர் பார்வையில் இயற்கையே கடவுள். அக்கருத்தை மிக அழகா முன் வைக்கிறார் 'முருகன் அல்லது அழகு' என்ற நூலில். 1908-ல் தொடங்கி, 1953-ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து இந்த 56 நூல்களையும் ஒன்றின்பின் ஒன்றாக திரு.வி.க எழுதி வந்திருக்கிறார்.

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றிலும் திரு.வி.க மிகவும் குறிப்பிடத்தக்கவர். முதற் தொழிற்சங்கத்தை 1918-ல் தமிழகத்தில் தொடங்கி, அதன்பின் தலைமைத் தொழிற்சங்கத்தை 1920-ல் அமைத்து, அதன் தலைவராகவும் இருந்து பரிமளித்தார். தன் தொண்டாலும் எழுத்தாலும் பேச்சாலும் முன்மாதிரி நன்னடத்தையாலும், தொழிலாளர்களிடையே விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தி, அவர்களிடையே ஒற்றுமை, தோழமை மற்றும் தொண்டு மனப்பான்மையை வளர்த்து, அவர்களை வழிநடத்தி, அவர்களுக்காகத் தொடர்ந்து போராடி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் அரும்பணியாற்றிப் பெரும் புகழ் அடைந்தவர் திரு.வி.க.

தன் மனைவி தன்னைவிட அறிவாளி என்று உண்மையாகவே கருதினார் திரு.வி.க. திருக்குறள் படித்தும் அதன்படி நடக்காத தன்னைவிட, அதைப் படிக்காமலேயே அதன் நெறியில் நின்ற தன் மனைவியை தன் நூல்களில் திரு.வி.க வியந்து பாராட்டுகிறார். தன் மனைவி தன்னை நல்வழிப்படுத்தியதற்கு தன் நூல்களில் அவர் நன்றி பாராட்டுகிறார். திரு.வி.க பெண்கள் நலனில் பெரிதும் அக்கறை செலுத்தினார். அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்தார். மாதர் நலச் சங்கங்கள், விதவைகள் நலச் சங்கங்கள் நிறுவுவதில் துணை நின்றார். சீர்திருத்தத் திருமணங்களை ஆதிரித்து எழுதி, பேசி, நடத்தியும் வைத்தார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கொண்டுவந்த தேவரடியார்கள் ஒழிப்புச் சட்ட முன்வடிவிற்குத் துணை நின்று, அவர் ஏற்பாடு செய்தக் கூட்டங்களில் பேசி, அதைப் பற்றி தன் பத்திரிக்கையில் விரிவாக எழுதி, அதற்குப் பேராதரவு ஈட்டித் தந்தார். பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தரப்படல் வேண்டும் என்று வாதாடி, போராடி, அதை வாங்கியும் தந்தவர்தான் திரு.வி.க.

மதம் மாறாமலே ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்தவரை மணக்கும் உரிமை வேண்டும் என்று எழுதினார் திரு.வி.க. 'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' என்று முழங்கி, இளைஞர்கள் சாதி ஒழிப்பில் ஈடுபட அறிவுரையும், வழிகாட்டலும் வழங்கிவந்தார்.

கல்விச் சீர்திருத்ததிற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் அவர். 'கல்வி என்பது அறிவுடன் ஒன்றி வாழ்வில் கலப்பதாக இருத்தல் வேண்டும். கல்வியறிவின் பலன் அக ஒழுக்கம், புறத் தூய்மை ஆகும். நமது நாட்டு அற ஒழுக்கங்களையும், மேலை நாடுகளின் சுகாதார முறைகளையும் ஒன்றுபடுத்தி, இக்கால வாழ்வுக்கேற்ற ஒரு கல்வி முறையை வளர்த்துப் பயன்படுத்துதல் வேண்டும்,' என்பது அவர் கருத்து.

ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுள் அடிக்கடி உள்முகப் பயணம் செய்து, தன்னைத்தானே சுய விமர்சனத்திற்கு ஆளாக்கிக்கொண்டு, பாம்பு சட்டையை உரித்துக்கொள்வதுபோல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார் திரு.வி.க. ஒரு சன்மார்க்கச் சமயவாதியாவகும் இருந்த அவர், ஒரு சமயத்தின் உண்மை இலக்கு ஒரு மனிதனை வீடுபேறு அடைவதற்கு ஆற்றுப்படுத்துவதல்ல. ஒரு சமயத்தின் தேவை சமுதாயத்தின் நலனுக்காக, பயனுக்காக என்றொரு நுட்பமானக் கருத்தையும் வலியுறுத்தி வந்தார். தனிமனித புற, அக ஒழுக்கத்தை தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உறுதியாகக் கடைப்பிடித்தவர் திரு.வி.க. எளிமையாக உடலோம்புதலையும் அவர் முறையாகப் பயின்று வந்தார். முறையாகப் படித்து, பத்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாத இப்பெருந்தகை, கல்லாத கல்வியில்லை, பட்டுப் பெறாதப் பட்டறிவும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் செயலும் விளக்கி நிற்கின்றன என்று அவரை ஆய்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டு வியக்கின்றனர்.

திரு.வி.க வெளிப்படையான, எந்தவிதப் பாசாங்கும் பகட்டும் இல்லாத, கள்ளமற்ற எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடை வாழ்க்கைக்குறிப்பு இன்னொரு 'சத்திய சோதனை' என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். தொண்டாற்ற வசதி தேவையில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் எழுதினார்: 'நான் ஒன்றுமில்லாதவன். வாடகை வீட்டில் வசிப்பவன். எனினும், என்னால் இயன்ற அளவு நாட்டுத் தொண்டு புரிகிறேன். செயல், தொண்டானால் மனம் வசதியை நாடாது. அதற்குத் தொண்டே பெரும் செல்வமாகும்.' வசதியும் வாய்ப்பும் பதவியும் அவரைத் தேடி வந்தபோது, அவைகளை வேண்டாமென்று மறுத்தவர் அவர். பதவிகளுக்கு ஒருபோதும் ஆசைப்படாமல் இருந்தவர். தான் வகித்துவந்தப் பதவிகளிலிருந்தும் தொண்டு செய்ய அவைகளில் வாய்ப்பில்லாதபோதும், தன்னைவிடச் சிறந்தவர்கள் அப்பதவிகளுக்குத் தயாராக இருந்தபோதும், தானே முழுமனத்துடன் அப்பதவிகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து விலகியவர்.

பல புரட்சிகரமானக் கருத்துக்களை அச்சமின்றி எழுதி, அவைகளுக்காகப் போராடி, அவைகளில் பலவற்றை செயல்படுத்தியும், சாதித்தும் காட்டியவர்தான் திரு.வி.க

திரு.வி.க-வின் காலத்தில் அவருடைய பிள்ளைபோல் வாழ்ந்தவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் கூறுகின்றார்: 'திரு.வி.க. அவர்கள் ஒரு பெரிய ஆலமரம் போன்றவர். மற்ற அறிஞர்கள், சமயவாதிகள், இலக்கியவாதிகள்போல் தன்னை ஒரு சிறிய கூட்டுக்குள்ளே அடைத்துக்கொள்ளாமல், தன்னை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே அடக்கிக்கொள்ளாமல், அனைத்திலும் ஈடுபட்டு, அனைத்திலும் தன் தனிச்சிறப்பைப் பதித்து, அனைவரிடமும் அன்புடன் பழகி, அனைவரின் மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரியவராயிருந்து மறைந்தார்.'

திரு.வி.க-வின் அழகு உரைநடை வழக்கிற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

'தொண்டு இருவகை. ஒன்று பயன் கருதுவது. மற்றொன்று பயன் கருதாதது. முன்னையது இல்வாழ்க்கையில் தலைப்படுவதற்கு முன்னர் நிகழ்வது. பின்னது அவ்வாழ்க்கையில் தலைப்பட்ட பின்னர் படிப்படியாக நிகழ்வது.'

'கடவுளின் கடந்த நிலையை நான் விழைகின்றேனில்லை; கலந்த நிலையையே விழைகின்றேன். ஏன்? கடந்த நிலை பிறவி வேரை அறுப்பது. பிறவி வேர் அறுந்தால் பின் தொண்டுக்கு அங்கே இடமில்லாமல் போகும். எனக்குத் தொண்டு - சன்மார்க்கத் தொண்டு தேவை. அதற்கென்று பல பிறவிகள் எடுத்தாலும் எனது விடாய் தணியாது; வேட்கை குறையாது.'

என்ன ஓர் ஆழ்ந்த, நுண்ணியப் பொருளுடைய அழகிய உரைநடை வழக்கு! ஒரு சொற்றொடருக்கு 3 முதல் 5 சொற்கள் மட்டுமே உடைய உரைநடை. ஒவ்வொரு சொற்றொடரிலும் வஞ்சிப்பாவைப் போல் பயன்படுத்தப்படும் சொற்களிலே மிகவும் சிக்கனம் காணப்படுகிறது. திருக்குறளைப் போல் அளவில் சுருக்கம்; அரும்பொருளின் பெருக்கம், இவைகளே திரு.வி.க-வின் உரைநடைக்கு உரிய விளக்கம்.

தெள்ளுதமிழ், தெளிந்த நீரோடையின் அழகு, தென்றலின் சுகம், கவிதையின் சுருக்கம், கவின்சுவை, கருத்துச் செறிவு - இவைகளே அவரின் உரைநடையில் அணிவகுப்பன. ஒரு அணி மற்றொன்றை விஞ்சுவது கூடுதல் இன்பம் தருவதாகும்.

திரு.வி.க-வின் நூற்றாண்டு விழாவில் பாவலேறு பெருஞ்சித்திரானார் அவர் மீது இயற்றிப் பாடிய ஒரு கவிதையின் ஒருசில அடிகள் திரு.வி.க-வை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

'குணமேவிய ஒரு கொள்கையின் குன்றம்.
குற்றமில்லாதொரு வாழ்க்கையின் கூறு.
கையைக் கறை செய்யாது, உடல் நலம் கருதாது,
காலம் முழுதுமே கடமைகள் ஆற்றிட,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நல் தெய்வம்!
பணியுமாம் பெருமை எனும் பைந்தமிழ்க்குப்
பயில்வுரை எழுதிப் பதிப்புரை தந்தவர்!
தணியாத் தமிழ்விடாய், தளர்வுறாக் கால்கள்!
தாழ்விலாச் செய்கை! தகைவுசேர் பயனுரை!
அணியாம் தமிழ்க்கெனும் அருமை நூல்கள்
அயர்வுறாது ஏழையர்க்கு அலைந்து திரிந்து
மணியும் நேரமும் காலமும் பாராது
மக்கட்கு உழைத்த மணவழகனாரே! வாழ்க!!'

இங்கு மக்கள் என்பது, திரு.வி.க தான் தொண்டு செய்வதற்காக தானே ஏற்றுக்கொண்டப் பொதுமக்களை. இன்றைக்கு இருப்பதுபோல், இணையின் மூலமும் துணையின் மூலமும் ஒருவர் ஈன்றெடுத்த தன் மக்களையல்ல. திரு.வி.க இன்று இருந்திருந்தால், அவருக்கு எந்தப் பட்டம் கிடைக்கிறதோ, இல்லையோ, 'பிழைக்கத் தெரியாத பைத்தியம்' என்ற பட்டம் நிச்சயம் கிடைத்திருக்கும்!

திரு.வி.க அவர்களின் வாழ்க்கை நம் யாவர்க்கும் ஒரு நல்ல பாடம். அவர் ஆற்றிய அளப்பறிய பணி நமக்கு ஊக்கமும் ஊட்டமும் உற்சாகமும் தருவது. அவர் எழுதிய நூல்கள் அவர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தந்த நற்கொடை. அவர் கடைப்பிடித்த, கற்பித்த உரைநடை வழக்கு, தமிழன்னைக்கு அவர் சாத்திய அணி. வரலாறு படைத்து, வரலாறு ஆகி, வரலாற்றுக்கே அணிசெய்த நம் திரு.வி.க வணங்கி, வாழ்த்தத் தக்கவர்; நம் வழிகாட்டியாகக் கொள்ளத் தக்கவர்.

இப்படியெல்லாம் இருந்தும், அவர் இன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்பாடாது இருப்பது, தமிழகத்தின் பேரிழப்பே, தமிழர்களின் அவமானமேயன்றி, அவர் புகழுக்கு ஒரு பங்கமோ, பாதிப்போ சற்றுமில்லை.

மேலே கொடுக்கப்பட்டிருப்பன திரு.வி.க-விற்கு ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இங்குத் தரப்பட்டிருப்பன அவரின் தமிழ்ச்சாலைக்குரிய விலாசம் மட்டுமே. இங்குச் சுட்டப்பட்டிருப்பது அவர் தவச்சாலைக்குச் செல்கின்ற வழியை மட்டுமே. தமிழ்த் தென்றல் சிறிது வீச, சற்றே கதவு திறக்கப்பட்டிருகிறது. தென்றல் முழுதும் உள்ளே வர, அதை முழுதும் சுகிக்க, அவரவரின் கதவை அவரவரே முயன்று, முனைந்து முழுதும் திறந்திட வேண்டும் என்பதே

 
நன்றி;ஹாங்காங் இலக்கிய வட்டம்

N. Kannan

unread,
Jan 30, 2010, 2:22:52 AM1/30/10
to mint...@googlegroups.com
சார்! இதையெல்லாம் எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

விக்கிபீடியா என்றால் வெறும் சுட்டி கொடுத்தால் போதாதா?

நான் அவியல் எனுமொரு இழை ஓடுகிறது என்று சொன்னேன். அங்கு இடச்சொன்னேன்.
மேலும் தமிழில் தலைபிடுங்கள் என்றேன். இரண்டையும் சேர்த்து,
`ஆங்கிலத்தில் `Aviyal' என்று தலைப்பிட்டு, மூலம் எங்கிருந்து வருகிறது
என்பதைக் காட்டாமல் வெளியிடுகிறீர்கள்? என்ன செய்ய?

க.>

2010/1/30 Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com>:


> அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 1வ. உ. சிதம்பரம் பிள்ளை

>> வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள்

Sri Sritharan

unread,
Jan 30, 2010, 2:39:16 AM1/30/10
to mint...@googlegroups.com
நன்றி;ஹாங்காங் இலக்கிய வட்டம் என்று அடியில் தந்துள்ளாரே, கவனிக்கவில்லையா?

தினமணியில் இருந்து தருபவர்களும் வெறுமனே சுட்டியைத் தந்தால் போதாதா?

அன்புடன்
சிறீதரன்

| --
| "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
| To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
| For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jan 30, 2010, 4:05:35 AM1/30/10
to mint...@googlegroups.com
சில கட்டுரைகள் அதிலும் தினமணி கட்டுரைகள் தரம் வாய்ந்தவை. அவற்றை இங்கு மறுபதிப்பு செய்யும் போது வாசிக்க சுலபமாக உள்ளது. அப்படியே தொடரட்டும்.
 
சுபா

2010/1/30 Sri Sritharan <ksth...@bigpond.com>

karthi

unread,
Jan 30, 2010, 4:10:30 AM1/30/10
to mint...@googlegroups.com
கண்ணன் நடராஜன் கவனமாகப் படித்து மின்தமிழ் அன்பர்களின் தேவைக்கேற்ப
தருவதால் சோர்வு தராத கட்டுரைகளாய் உள்ளன. நாம் தொடர்ந்து சிந்திக்கவும்
விவாதிக்கவும் இடம் தரும் கட்டுரைகள்.
 
கேசவன் அவர்கள் "ஏதாவது போட்டு வைப்போமே..." என்று போடுவது போல
இருக்கிறது.
 
ரெ.கா.

வினோத் ராஜன்

unread,
Jan 30, 2010, 4:46:10 AM1/30/10
to மின்தமிழ்
எங்கள் வீட்டில் தினமணி வாங்கினாலும்.. பல கட்டுரைகளை இங்கு தான்
படிக்கிறேன் :-))

V

On Jan 30, 2:05 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> சில கட்டுரைகள் அதிலும் தினமணி கட்டுரைகள் தரம் வாய்ந்தவை. அவற்றை இங்கு
> மறுபதிப்பு செய்யும் போது வாசிக்க சுலபமாக உள்ளது. அப்படியே தொடரட்டும்.
>
> சுபா
>

> 2010/1/30 Sri Sritharan <kstha...@bigpond.com>


>
>
>
> > நன்றி;ஹாங்காங் இலக்கிய வட்டம் என்று அடியில் தந்துள்ளாரே, கவனிக்கவில்லையா?
>
> > தினமணியில் இருந்து தருபவர்களும் வெறுமனே சுட்டியைத் தந்தால் போதாதா?
>
> > அன்புடன்
> > சிறீதரன்
>
> > ----- Original Message -----
> > From: "N. Kannan" <navannak...@gmail.com>
> > To: <mint...@googlegroups.com>
> > Sent: Saturday, January 30, 2010 6:22 PM
> > Subject: Re: [MinTamil] avial
>
> > | சார்! இதையெல்லாம் எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
> > |
> > | விக்கிபீடியா என்றால் வெறும் சுட்டி கொடுத்தால் போதாதா?
> > |
> > | நான் அவியல் எனுமொரு இழை ஓடுகிறது என்று சொன்னேன். அங்கு இடச்சொன்னேன்.
> > | மேலும் தமிழில் தலைபிடுங்கள் என்றேன். இரண்டையும் சேர்த்து,
> > | `ஆங்கிலத்தில் `Aviyal' என்று தலைப்பிட்டு, மூலம் எங்கிருந்து வருகிறது
> > | என்பதைக் காட்டாமல் வெளியிடுகிறீர்கள்? என்ன செய்ய?
> > |
> > | க.>
> > |

> > | 2010/1/30 Kesaven Thirumalai Numbakkam <tnkesa...@gmail.com>:


> > | > அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 1வ. உ. சிதம்பரம் பிள்ளை
> > |
> > | >> வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப்
> > பாடல்கள்
> > | > என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார
> > |
> > | --
> > | "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

தாரகை

unread,
Jan 30, 2010, 6:33:02 AM1/30/10
to மின்தமிழ்
> தினமணியில் இருந்து தருபவர்களும் வெறுமனே சுட்டியைத் தந்தால் போதாதா?

தினகரன் - வாரமஞ்சரிக் கட்டுரைகளை மறந்துவிடலாம் இல்லையா:-)


> சிறீதரன்

N. Kannan

unread,
Jan 30, 2010, 7:25:17 AM1/30/10
to mint...@googlegroups.com
இது பற்றிய விளக்கத்தை டாக்டர் முன்னமே தந்துள்ளார்.

தேர்வு செய்த தரமான கட்டுரைகள். அனைத்தும் தமிழ் மரபு பேசுபவை.

பல்வேறு குறியீட்டில் உள்ளனவற்றை ஒருங்குறிக்கு மாற்றி அளித்தல்.

இத்தேர்வுகளால் இக்கட்டுரைகள் சேகரம் செய்யத் தக்கன. அவருக்கும் வேலைப்
பளுவில் இதைத் தொடர்ந்து டாக்டர் செய்துவருவது அவரது தமிழ் பற்றைக்
காட்டுகிறது.

க.>

2010/1/30 தாரகை <thar...@gmail.com>:

Sri Sritharan

unread,
Jan 30, 2010, 8:38:37 AM1/30/10
to mint...@googlegroups.com
வ.உ.சி பற்றிய நல்ல தகவல்களை கேசவன் அவர்கள் தந்தார்கள். சுட்டி தருவதை விடக் கட்டுரையாக இங்கு தருவது நல்லதில்லையா?

இந்த சுட்டிகள் தமிழ்நேசன் ஆவணங்கள் அழிந்தது போல் ஒரு காலத்தில் அழிந்து போகலாம். எனவே அவற்றை (இந்த குழுமம் உட்படப்) பல இடங்களில் பதிவதில் தவறில்லை என்றே சொல்ல வந்தேன்.

எனவே டொக்டர் கண்ணன் நடராஜன் அவர்களே (தாரகை என்ற பெயரில் எழுதுபவரும் நீங்கள் தானே), உங்கள் சிறந்த சேவையை நீங்கள் தொடர வேண்டும்.

அன்புடன்
சிறீதரன்
----- Original Message -----

N. Ganesan

unread,
Jan 30, 2010, 1:29:13 PM1/30/10
to மின்தமிழ்

On Jan 30, 6:25 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இது பற்றிய விளக்கத்தை டாக்டர் முன்னமே தந்துள்ளார்.
>
> தேர்வு செய்த தரமான கட்டுரைகள். அனைத்தும் தமிழ் மரபு பேசுபவை.
>
> பல்வேறு குறியீட்டில் உள்ளனவற்றை ஒருங்குறிக்கு மாற்றி அளித்தல்.
>

இப்போதெல்லாம் ஒருங்குறியில் ஆகிவிட்டன. உ-ம்: தினமணி
சென்ற சித்திரைக்கனி நாளில். இப்போது மாலைமலர், தினகரன்.

மரு. கண்ணனின் சேவை தேவை. ஏனென்று கருத ஒரு காரணம்
முக்கியம் என்று நினைக்கிறேன். தினமணி ஒரு செய்தித்தாள்
வணிக நிறுவனம். சில மாதங்களுக்கு மேல் இக்கட்டுரைகள்
அவர்கள் வலைத்தளத்தில் இருக்கமாட்டா.

இங்குப் போட்டுவிட்டால் பலவருடங்கள் கிடக்கும்,
துழாவினால் கிடைக்கும்.

நா. கணேசன்


> இத்தேர்வுகளால் இக்கட்டுரைகள் சேகரம் செய்யத் தக்கன. அவருக்கும் வேலைப்
> பளுவில் இதைத் தொடர்ந்து டாக்டர் செய்துவருவது அவரது தமிழ் பற்றைக்
> காட்டுகிறது.
>
> க.>
>

> 2010/1/30 தாரகை <thara...@gmail.com>:

தாரகை

unread,
Jan 30, 2010, 5:47:03 PM1/30/10
to மின்தமிழ்
> இப்போதெல்லாம் ஒருங்குறியில் ஆகிவிட்டன. உ-ம்: தினமணி சென்ற சித்திரைக்கனி நாளில்.

ஐயம் தெளிய சில கருத்துக்களை கூற விழைகிறேன்.

தினமணியிலிருந்தும்,தினமலரிலிருந்தும் அவ்வப்போது சில செய்திகளை
வழங்குவதும், தமிழ்மணியிலிருந்து ஞாயிறுதோறும் வழங்கி வருவதும்
தமிழன்பகலா மற்றும் தாரகையாகிய அடியேனே:-)

ஏன் இப்படித் தொடர்ந்தேன்,தொடர்கிறேன்,தொடர விழைகிறேன் என்பதற்கு முக்கிய
காரணம் நம் நா(சா) கணேசன் அவர்கள் தான்.

சில ஆண்டுகளுக்கு முன், தினமணியில் வந்திருந்தக் கட்டுரை ஒன்றை கொணர
இயலுமா என்று இக்குழுமத்தில் கேட்டிருந்தார். முயற்சி செய்தும்,
அக்கட்டுரை கிட்டவில்லை.

அன்று எடுத்த முடிவு, நல்ல தரமான தமிழ் மொழி,மரபு,தமிழர் பற்றிய
செய்திகளை மின்தமிழ் குழுமத்தில் ஒரு செய்திப்பெட்டகமாக
நிலைநிறுத்தவேண்டும் என்பது.

இன்று நேற்றல்ல,தினமணி ஒருங்குறியிற்கு மாறுவதிற்கு முன்னிருந்து
எழுத்துருக்களை ஒருங்குறியில் மாற்றி இங்கு
அச்செய்திகளையும்,கட்டுரைகளையும் மீள்பதிவுச் செய்கிறேன்.

தினமணி ஒருங்குறியிற்கு மாற்றம் செய்திருந்தாலும்,சில எழுத்துருக்கள்
சரியாகப் பதிவுறாமலும்,சில நேரங்களில் ஆங்கிலச்
சொறொடர்களும்,எடுத்துக்காட்டப்படும் ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களும்
ஆங்கிலமின்றி புரியாத எழுத்துருக்களாக தினமணியின் இணைப்பக்கத்தில்
இன்றளவும் ஏற்பட்டு வரும் சூழல்.

அவையெல்லாம் களைந்து,செய்திகளையும் கட்டுரைகளையும் படிப்பதற்கு
எளிமையாகவும் - பத்திகளைப் பிரித்தும், புள்ளிகளைக் கொண்டு முக்கியமான
கருத்துக்களையோ அல்லது (எ.கா)சான்றோரின் பொத்தகங்களின் பெயர்களைக்
குறிக்கவும் மற்றும் நம் குழுமத்தினர் அனைவரும் கட்டுரையின் செறிவுக்
குன்றாமல் இருக்க அவ்வப்போது சில இணையத்தளச் சுட்டிகளை
வழங்குவதும்,தேவைப்படின் ஒளிப்படங்களைச் சேர்த்தும், ஆக இவையெல்லாம்
செய்து முடித்தப் பிறகே மின்தமிழில் மீள்பதிவுச் செய்கிறேன்.

இத்தருணத்தில், சோதரி சுபா அவர்களின் குறிப்பொத்தகம் (Notebook)
வழிகாட்டிக்கும்,பெரியவர்கள் திருவாளர்கள் நா.கண்ணன்,ரெ.காவின்
ஊக்கத்திற்கும்,தம்பி வினோத்தின் உற்சாகத்திற்கும். உடன்பிறவா சோதரன்
சீறியின் ஆவல் ததும்பும் கேள்விக்கு விடையளிக்க வாய்ப்பு வழங்கியதிற்கும்
மிக்க நன்றி.

தமிழார்வமகலா,
கண்ணன் நடராசன்


> இங்குப் போட்டுவிட்டால் பலவருடங்கள்  கிடக்கும்,துழாவினால் கிடைக்கும். நா. கணேசன்

> இத்தேர்வுகளால் இக்கட்டுரைகள் சேகரம் செய்யத் தக்கன. நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Jan 31, 2010, 1:58:46 AM1/31/10
to mint...@googlegroups.com
(வி)நயமிக்க பதில். எவ்வாறு பதில் கொடுக்கவேண்டும் எனத் தெரிந்துகொள்ள வைத்த இடுகை. நன்றி.

2010/1/31 தாரகை <thar...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 4, 2010, 8:06:18 AM2/4/10
to மின்தமிழ்

On Jan 30, 4:47 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > இப்போதெல்லாம் ஒருங்குறியில் ஆகிவிட்டன. உ-ம்: தினமணி சென்ற சித்திரைக்கனி நாளில்.
>
> ஐயம் தெளிய சில கருத்துக்களை கூற விழைகிறேன்.
>
> தினமணியிலிருந்தும்,தினமலரிலிருந்தும் அவ்வப்போது சில செய்திகளை
> வழங்குவதும், தமிழ்மணியிலிருந்து ஞாயிறுதோறும் வழங்கி வருவதும்
> தமிழன்பகலா மற்றும் தாரகையாகிய அடியேனே:-)
>
> ஏன் இப்படித் தொடர்ந்தேன்,தொடர்கிறேன்,தொடர விழைகிறேன் என்பதற்கு முக்கிய

> காரணம் நம்நா(சா)கணேசன்அவர்கள் தான்.
>

ஞாபகபடுத்தி நினைவுகூர்ந்தமைக்கு அடியவனின் நன்றிகள்.

இன்னொரு விஞ்ஞாபனம்:

உவேசா அவர்கள் கட்டுரைகள் திருவேங்கடமணி (இன்னொரு செய்தி: அவரது
தந்தையார்
முதியோர்கல்வி மற்றும் பல பதிற்றாண்டுகள் தமிழ் பல மாணவர்களுக்கும்
போதித்தவர்.
அப் புகழ்பெற்ற கல்வியாளர் எழுத்துச் சீரமைப்பின் ஆதரவு தெரிவித்தவர்,
எழுதியவர்.)
போன்றோரால் இணையம் ஏறுகின்றன.

அதேபோல், தங்கள் பாட்டனார் ஔவை அவர்களின் கட்டுரைகளும்
ஸ்கான் செய்து வலையில் இட ஏற்பாடு செய்யுங்கள்.
முதலில் இதழ்கள், மலர்கள், ... என்று அவர் வெளியிட்ட கட்டுரைகளின்
பட்டியல் தயார் செய்வோம்.

அன்புடன்,
நா. கணேசன்

> > இங்குப் போட்டுவிட்டால் பலவருடங்கள்  கிடக்கும்,துழாவினால் கிடைக்கும்.நா.கணேசன்
> > இத்தேர்வுகளால் இக்கட்டுரைகள் சேகரம் செய்யத் தக்கன.நா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -

பழமைபேசி

unread,
Feb 4, 2010, 9:48:23 AM2/4/10
to மின்தமிழ்
Dear Sir,

First, I apologize for writing in English. I know, I have been
posting my own writings that are not relevant to Tamil Heritage. Sure,
I will ensure that not to happen again.

Regards,
PazamaiPesi.


On Jan 30, 7:25 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இது பற்றிய விளக்கத்தை டாக்டர் முன்னமே தந்துள்ளார்.
>
> தேர்வு செய்த தரமான கட்டுரைகள். அனைத்தும் தமிழ் மரபு பேசுபவை.
>
> பல்வேறு குறியீட்டில் உள்ளனவற்றை ஒருங்குறிக்கு மாற்றி அளித்தல்.
>
> இத்தேர்வுகளால் இக்கட்டுரைகள் சேகரம் செய்யத் தக்கன. அவருக்கும் வேலைப்
> பளுவில் இதைத் தொடர்ந்து டாக்டர் செய்துவருவது அவரது தமிழ் பற்றைக்
> காட்டுகிறது.
>
> க.>
>

> 2010/1/30 தாரகை <thara...@gmail.com>:


>
>
>
> >> தினமணியில் இருந்து தருபவர்களும் வெறுமனே சுட்டியைத் தந்தால் போதாதா?
>
> > தினகரன் - வாரமஞ்சரிக் கட்டுரைகளை மறந்துவிடலாம் இல்லையா:-)
>

> >> சிறீதரன்- Hide quoted text -

Subashini Tremmel

unread,
Feb 4, 2010, 10:31:49 AM2/4/10
to mint...@googlegroups.com


2010/2/4 N. Ganesan naa.g...@gmail.com




அதேபோல், தங்கள் பாட்டனார் ஔவை அவர்களின் கட்டுரைகளும்
ஸ்கான் செய்து வலையில் இட ஏற்பாடு செய்யுங்கள்.
முதலில் இதழ்கள், மலர்கள், ... என்று அவர் வெளியிட்ட கட்டுரைகளின்
பட்டியல் தயார் செய்வோம்.

அன்புடன்,
நா. கணேசன்
ஆமாம். இதனை நாம் செய்யலாம்.
 
@திரு.கண்ணன் நடராசன் - உங்கள் தாத்தா திரு.ஔவை துரைசாமி அவர்களது கட்டுரைகளை நீங்கள் தொகுக்கும் பணியை ஆரம்பித்தால் சென்னையில் உள்ள நமது நண்பர்களும் இந்தப் பணியில் நிச்சயம் துணை புரிவார்கள்.  நாம் அவரது கட்டுரைகளை நமது சேகரித்தில் தொகுத்து வைப்பது பலரும் வாசித்து பயன்பெற உதவும். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.
 
அன்புடன்
சுபா
 
 
 

N. Kannan

unread,
Feb 5, 2010, 2:04:05 AM2/5/10
to mint...@googlegroups.com
2010/2/4 பழமைபேசி <pazam...@gmail.com>:

> Dear Sir,
>
> First, I apologize for writing in English.  I know, I have been
> posting my own writings that are not relevant to Tamil Heritage. Sure,
> I will ensure that not to happen again.
>

என்ன இது திடீரென்ற அறிவிப்பு. உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொன்னது?

க.>

பழமைபேசி

unread,
Feb 5, 2010, 2:35:57 AM2/5/10
to மின்தமிழ்
வணக்கம் ஐயா! குழப்பத்திற்கு மன்னிக்கவும். ஓரிரு இடுகைகள், தானாக எனக்கே
ஒருவிதமான உறுத்தலைக் கொடுத்தது. மற்றபடி ஊர்நினைவுகள் தொடரும்.

பணிவுடன்,
பழமைபேசி.

On Feb 5, 2:04 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/2/4 பழமைபேசி <pazamaip...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 5, 2010, 2:41:15 AM2/5/10
to mint...@googlegroups.com
எதற்கிந்தக் குழப்பம்?
மண்ணின் வாசனையுடன் வரும் உங்கள் எழுத்தெல்லாம் தமிழ் மரபுதான்!
கவலை இல்லாமல் எழுதுங்கள்!

க.>

2010/2/5 பழமைபேசி <pazam...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages