Please forward this to Sourashtra e-list(s).
Some friends, relatives, and sponsors
can get his Tamil stories, essays and non-fiction
works typed and store them in
Project Madurai, Muthusom, etc.,
It will be a gift to future Tamils and
also will his memory.
Thanks,
N. Ganesanhttp://nganesan.blogspot.com
Here is M. V. Venkatram's bio
as published in pp. 4546-4547,
Encyclpopaedia of Indian Literature,
Sahitya Akademi, 1992.
"M. V. Venkatram (Tamil; b. 1920) born at Kumbakonam
where he continues to live, belongs to the Saurashtra
community which had migrated from Saurashtra
a few centuries ago and is now spread over the
southern districts of Tamilnadu, traditionally engaged
in silk weaving operation. He too his B.A. degree
in 1940 but his literary caree had alredy begun while
he was yet a student at college. Fortunately for him,
he came under the influence of Ku. Pa. Rajagopalan,
one of the pioneers of modern Tamil short story
and a modern classic, who happened to be residing
at Kumbakonam in the 30s and 40s. Under Rajagopalan's
tutelage, with Venkatram were Karichan Kunju
(R. Narayanaswami), a short story writer and novelist,
Swaminatha Atreyan, a short story writer, and T. Janakiraman,
the famed novelist and short-story writer, and all of
them formed a charmed circle.
Venkatram has published seven novels: Nidyakanni
(1955), Uyirin yathirai (1957), Iruttu (1957),
Arumbu (1965), Velvithee (1963), Oru pen
poradukiral (1975), and Kathukal (1992). His
short story collections are: Mallikai vasam (1964),
Sukam enge (1966), Kuyili (1964), Varavum selavum
(1964), Vyasar padaitha penmanikal (1966)
and Mohini (1964).
Venkatram is known for his meticulous
craftmanship and unflinching dedication to his
vocation, tho' unfortunately he has never got
his due. He would much rather utilise his talents
on writing educational books for students
and translations of which he did a good lot
(over 60 books) than bow down to compromise
his creative spirit. Some of his themes relates
to the mysterious, the others to worldly, the
surreal, and the mystical like Uyirin yathirai,
Iruttu and the latest Kathukal, but they are
products of his personal experience and he
would stand by them whatever be the responses
from readers and critics."
He died in 2000 CE.
There are more books he penned. Some one needs
to compile a full list, for which I can contribute.
http://en.wikipedia.org/wiki/Saurashtra_language
Also see:https://mailman.rice.edu/pipermail/sasialit/2000-June/
002459.html
''வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப்
படைப்பாளி நான். என்னைப் புரிந்து கொண்டு, நான் எங்கு இருக்கிறேன்
என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற
ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என்
இலக்கியப் பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல்
வலுப்பெறுகிறது'' என திடமாகவே நம்பி வாழ்ந்து மறைந்தவர்தான் எழுத்தாளர்
எம்.வி. வெங்கட்ராம்.
தமிழ் எழுத்தாளர்களான கு.பா. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான்
குஞ்சு இவர்களுடன் எம்.வி.வி. யும் உற்ற நண்பராய், இலக்கிய தேடல்
மிக்கவராய் வெளிப்பட்டார். தொடர்ந்து மணிக்கொடி இதழில் இலக்கிய வேள்வியை
நடத்தத் தொடங்கி தனது இறுதிக்காலம் வரை இலக்கியம் பற்றிய கரிசனையாகவே
இருந்தார்.
கும்பகோணத்தில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து, செல்வந்தரான செளராஷ்டிர
குடும்பத்தில் 18.5.1920 களில் பிறந்தவர் எம்.வி.வி. தனது
மாணவப்பருவத்திலேயே இலக்கியத் தாகம் கொண்டு தன்னை பண்படுத்தி
வெளிப்படுத்தத் தொடங்கினார்.
தான் எழுத்தாளார் ஆனவிதம் பற்றி எம்.வி.வி கூறும் போது ''எங்கள்
குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் கிடையாது. நான் ஒருவன்தான் படித்தேன்.
பி.ஏ. பொருளாதாரம் கல்லூரியில் படித்தேன். வரலாறு எனக்கு விருப்பப்பாடமாக
இருந்ததால் வரலாற்றில் சற்று ஆர்வம் வந்தது உண்மை. கதைகள் படிக்கிற
ஆர்வம் முதலில் இருந்தது. அப்பொழுது பத்திரிகைள் எல்லாம் ரொம்பக் குறைவு.
ஆனந்தவிகடன், கலைமகள், வினோதன் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நான்
நிறையப் படிப்பேன். துப்பறியும் நாவல்கள் எல்லாம் படிப்பேன். படித்துப்
படித்து 13, 14 வயதிலேயே நானும் இதைப்போல் எழுத வேண்டும் என்று ஆர்வம்
தோன்றிற்று. அப்பதான் எழுதிப் பார்த்தேன். எழுதியதை எல்லாம் தெரிந்த
பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவர்கள் திருப்பி அனுப்புவார்கள்.
சமயத்தில் அனுப்ப மாட்டார்கள். இதுதான் நான் எழுத்தாளன் ஆன விதம்.''
இவர் எழுத்தின் மீது கொண்ட தீவிர வேட்கை காரணமாக வெற்றிகரமான ஒரு
வியாபாரியாக இருக்க இயலவில்லை. ஆனால் எழுத்தையே நம்பி வாழும்
வாழ்க்கைக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். சுமார் இருநூறு
புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.
தேனி என்ற இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி மணிக்கொடி மரபு உருவாக்கியது
போல் பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். மெளனியின்
சிறுகதைகளை வெளியிட்டு மெளனியை தமிழ் இலக்கிய உலகில் இனம் காணவும்
காரணமாக இருந்தவர் எம்.வி.வி.
1930 களுக்கு பின்னர் வெளிவந்த நவீன இலக்கியப் பயில்வுக்கான அனைத்து
இதழ்களிலும் விடாது எழுதி வந்தார். 1939களில் 'நித்ய கன்னி', 1965 களில்
'அரும்பு', 1975களில் 'வேள்வித்தீ', 1980 களில் ஒரு பெண் போராடுகிறாள்
போன்ற நாவல்களை எழுதி நாவல் இலக்கியத்துக்கு புதுவளம் சேர்த்தார். இதில்
ஒவ்வொரு நாவலும் ஒவ்வொருவிதமாக எழுதப்பட்டவை. ஒரே மாதிரியாக
இருக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எழுதப்பட்டவை.
'வேள்வித்தீ' நாவல் செளராஷ்டிர சமூகத்தை முன் நிறுத்தி எழுதப்பட்டது.
இந்த நாவல் தமிழுக்கு செளராஷ்டிர சமூகம் பற்றிய புலப் பதிவை
இலக்கியமாக்கி உள்ளது.
பதினாறு வயதில் எழுத தொடங்கிய எம்.வி.வி. மனித வாழ்க்கையை ஒரு
போராட்டமாகவே கருதி வந்தார். இந்த போராட்டங்களுக்கு இடையில் புதைந்து
கிடக்கும் அமைதியை தேடுவதாகவே எம்.வி.வி. யின் இலக்கிய படைப்பு
முயற்சிகள் அமைந்திருந்தது.
இவர் படைப்புமுயற்சிகளில் மட்டுமள்ளாது பல மொழிபெயர்ப்பு நூல்களையும்
தமிழுக்கு கொடுத்துள்ளார். குறிப்பாக ரஜினி பாமிதத்தின் 'India Today'
என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் 'நேஷனல் புக்
டிரஸ்ட்' நிறுவனத்துக்காகவும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழி
பெயர்த்துள்ளார்.
எம்.வி.வி. க்கு திடீரென்று ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. இவர்
ஒரு காதுக்காரர். இந்நிலை பல்லாண்டுகளாகவே இருந்தது. இந்த அனுபவம்
அவருக்குள் இலக்கிய நயமும், தத்துவ ஆழமும், ஆன்மீகத் தேடலும் நிரம்பிய
படைப்பாக 'காதுகள்' எனும் நாவலை எழுதும் திறனைக் கொடுத்தது. இந்த
நாவலுக்கு 1993ம் ஆண்டுக்குரிய சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது.
எம்.வி.வி. யின் நாவல்களாகட்டும், சிறுகதைகளாகட்டும் மனித மனங்களின்
சூட்சுமமான உட்பகுதிகளை தொட்டுப் பார்க்கும் குணம் கொண்டது. இவர் மனித
உணர்ச்சிகளை அப்படியே பதிவு செய்பவரல்ல. மாறாக உணர்ச்சிகளை நின்று
நிதானித்து தான் தொட்டுக் ...
read more »
ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்
http://ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்
எம்.வி.வி: இறுதியில் வென்ற பேனா வீரர்!
தி.க.சிவசங்கரன்
''எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் (79), ஜனவரி 14-ம் தேதி கும்பகோணத்தில்
காலமானார்'' எனும் செய்தியை, ஜனவரி 17-ம் தேதி திங்கள்கிழமை 'தினமணி'
மதுரைப் பதிப்பில் படித்தபோது, மிகுந்த அதிர்ச்சியும் துயரமும்
ஏற்பட்டது. அத்துடன் அவரைப் பற்றிய நினைவுகளில் நெடுநேரம் மூழ்கிப்
போனேன்....
எம்.வி.வெங்கட்ராம் (எம்.வி.வி.) என்னும் எழுத்தாளரின் படைப்புகளைப்
படிக்கவும், ரசிக்கவும், 1941-ம் ஆண்டில் எனக்கு முதன்முதலில் வாய்ப்பும்
வசதியும் வழங்கியவர், இன்றும் நம்முடன் இருக்கிறார். அவர், 60
ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கியக் கடலில் முங்கி முக்குளித்து,
ஒளிவீசும் முத்துகளை நமக்கு வழங்கி வரும் பன்முகச் சாதனையாளர்,
வல்லிக்கண்ணன் அவர்கள்!
நெல்லையில், எனது இலக்கியக் குருநாதரான வ.க. அவர்களின் இல்லமான ''சாந்தி
நிலை''யத்தில், 1941-ன் முற்பகுதியில் அடியெடுத்து வைத்தேன்; அவரது
நூலகத்தில் முதன்முதலாகப் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன்,
ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பர சுப்ரமண்யன், க.நா.சுப்ரமண்யம், த.நா.குமார
ஸ்வாமி ஆகியோரின் நூல்கள் (அலையன்ஸ், கலைமகள் வெளியீடுகள்) எனக்குப்
பரிசயம் ஆயின; அத்துடன் கலைமகள், மணிக்கொடி, சக்தி, கிராம ஊழியன்,
கலாமோகினி, சிவாஜி முதலிய இலக்கிய மதிப்புமிக்க இதழ்களையும், அவற்றின்
தொகுப்புகளையும் படிக்கும்பேறு கிடைத்தது. அப்போதுதான் பழைய மணிக்கொடி
'இதழ்களில், எம்.வி.வி.யின் படைப்புகள்' அறிமுகம் ஆயின.
1930-ம் ஆண்டுகளின் இறுதியில்-இரண்டாம் உலகப்போர் (1939-ல்)
தொடங்குவதற்கு முன்பு-'மணிக்கொடி' நின்றுவிட்டது. எனவே, புதுமைப்பித்தன்,
கு.ப.ரா, க.நா.சு, பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமண்யன், செல்லப்பா,
'சிட்டி' பெ.கோ.சுந்தரராஜன் முதலிய மணிக்கொடிப் படைப்பாளிகள்
கலைமகளிலும், கலாமோகினி, சிவாஜி, கிராம ஊழியனிலும் (திருச்சி
மாவட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த முக்கிய இலக்கிய ஏடுகள்) எழுதிக்
கொண்டிருந்தனர்.
1941-1946 காலகட்டத்தில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகியவற்றில்
எம்.வி.வி. அடிக்கடி எழுதி வந்தார்; அப்போது அவர் கும்பகோணத்தில் பட்டுச்
சரிகை வணிகம் செய்து கொண்டிருந்தாலும், இலக்கியப் படைப்புத் தொழிலில்
அபார ஈடுபாடு காட்டி வந்தார். அவர் மட்டுமின்றி, தி.ஜானகிராமன்,
'கரிச்சான் குஞ்சு' (நாராயண ஸ்வாமி), முதலிய அவரது நண்பர்களும் (இவர்கள்
எல்லாம் கு.ப.ரா.வின் பரமசீடர்கள்) கலாமோகினி, கிராமஊழியனின்
வளர்ச்சிக்குப் பங்காற்றி வந்தனர். இந்தக் காலகட்டத்தில், இவ்விதழ்களில்
நானும், வ.க.வும் நெல்லையிலிருந்து எழுதி வந்தோம்.
1941-ம் ஆண்டிலிருந்து நான் எம்.வி.வி.யின் படைபாற்றலை அனுபவித்து
வந்தாலும், என் இதயத்தில் இடம் பெற்ற இலக்கியச் செல்வரான எம்.வி.வி.யை
நான் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகியது, 1965-1972 கால
கட்டத்தில்தான்!
அப்போது நான் சென்னையில் 'தாமரை'யின் பொறுப்பாசிரியனாக இருந்தேன்.
எழுத்து, தாமரை, கண்ணதாசன், தீபம், கணையாழி, இலக்கிய வட்டம், கசடதபற,
சரஸ்வதி, மனிதன், சக்தி முதலிய பல ஏடுகள் சென்னையிலிருந்து ஒன்றன்பின்
ஒன்றாக வெளிவந்து, தமிழ் இலக்கியத்தில் புதிய தடங்களைப் பதித்து, புதிய
முத்திரைகளைப் பொறித்த காலகட்டம் அது! (1955 முதல் 1985 வரையிலான
காலகட்டம், தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று
எனலாம்; இக்கால கட்டப் படைப்பாளிகளின் சாதனைகள், தனி ஆராய்ச்சிக்கு
உரியன....)
கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் நொடித்துப் போய், பின்னர் முழுநேர
எழுத்தாளராகச் சென்னையில் 1965-1970 காலகட்டத்தில் முழுமூச்சுடன்
போராடிக் கொண்டிருந்த எம்.வி.வி.யை நான் சந்தித்தது, பாண்டிபஜாரில், கீதா
கபேக்கு நேர் எதிர்வரிசை மாடியிலிருந்த 'கலைஞன்' பதிப்பகத்தில்!
அங்குதான் சுமார் 4 ஆண்டுகள் தங்கியிருந்து, 'இலக்கிய வேள்வி'
புரிந்தார், எம்.வி.வி.! அவருக்குத் தங்குமிடம் மற்றும் இரவு பகல் ஓயாது
எழுதுவதற்கான வசதிகள், இவற்றை வழங்கிய புரவலர்-எங்கள் இனிய நண்பர்
'கலைஞன்' பதிப்பக உரிமையாளர் ஜி.மாசிலாமணி! (நாவலாசிரியர்
ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களுக்கும், 'கலைஞன் பதிப்பகம்' சிறிது காலம் ஒரு
'வேடந்தாங்கலாக' விளங்கியது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)
'கலைஞன்' மாசிலாமணி, என்னை எம்.வி.வி.க்கு அறிமுகம் செய்தது, 1967-ம்
ஆண்டு என்று நினைக்கிறேன். மாலை வேளைகளில், புதிய புத்தகங்களைத் தேடி,
'கலைஞன்' பதிப்பகத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. அப்போது சுமார்
மூன்று ஆண்டுகள்-அவர் ஓய்வாக இருந்த வேளைகள் மிகச் சொற்பம் என்ற போதிலும்-
எம்.வி.வி.யுடன் இலக்கியம் பற்றியும், கலை இலக்கியப் பிரச்னைகள்
பற்றியும், பத்திரிகை, புத்தக உலகம் பற்றியும், வாழ்க்கைப் போக்குகள்
பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகள்
பற்றியும், நான் கருத்துப் பரிமாற்றம் செய்வது வழக்கம். குறைந்தது, கால்
மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நாங்கள் பேசுவோம். சில சமயங்களில்,
தி.நகர் பஸ் நிறுத்தங்களிலும் எங்கள் பேச்சு நடைபெறும்!
அப்போது எம்.வி.வி.க்குச் சுமார் 48 அல்லது 50 வயது இருக்கலாம்.
(எம்.வி.வி.பிறப்பு: 1920)....
எப்போதும் வாயில் வெற்றிலை பாக்கு; கையில் எவர்சில்வர் வெற்றிலைச்
செல்லம்; புன்னகை பூக்கும் கண்கள்; மலர்ந்த முகம்; பொறுமையான, அமைதியான,
அளவான, மென்மையான பேச்சு. சென்னையில் தி.ஜானகிராமனிடமும் இதே பண்பையும்,
நிதானத்தையும், மென்மையையும், அன்பையும், தோழமையையும் கண்டிருக்கிறேன்.
கு.ப.ரா.வின் இரு முக்கிய சீடர்களான எம்.வி.வி.யும், தி.ஜானகிராமனும்,
எப்போதும் நான் சந்தித்திராத, ஆனால் கேள்விப்பட்டிருந்த மாபெரும் கலைஞர்
கு.ப.ரா.வின் பண்பு நலன்களின் வார்ப்பாகவே எனக்குத் தெரிந்தார்கள்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள்; தலைசிறந்த மறுமலர்ச்சிப்படைப்பாளிகள்;
மனிதநேயம் மிக்கவர்கள்; கடுமையான உழைப்பாளிகள்; பரந்து விரிந்த உலகப்
பார்வை கொண்டவர்கள்; எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது படைப்பாற்றல்களில்
மிகுந்த தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள். எனவே, 'மணிக்கொடி' எழுத்தாளர்கள்
உள்ளிட்ட, சகபடைப்பாளிகளின் நியாயமற்ற, நேர்மையற்ற ''விமர்சன''ங்களையும்,
குறைகூறல்களையும், தூசியென ஒதுக்கித் தள்ளியவர்கள்; அதேவேளையில், பிற
படைப்பாளிகளை, அவரவர் திறமைக்குத்தக்கவாறு மதிப்பவர்கள்; மற்ற
எழுத்தாளர்களை இழிவுபடுத்திப் பேசுவதோ, அவதூறு செய்வதோ, மனம்
புண்படும்படி வார்த்தைகளைக் கொட்டுவதோ, எம்.வி.வி., தி.ஜா. ஆகிய
இருவரிடமும் கிடையாது. இது இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளிடம் மிகமிக
அபூர்வமான குணம்! ஆணவம், மேட்டிமை, குறுகிய மனப்பான்மை இவற்றின்
சின்னங்களை, எள்முனை அளவுகூட நான் எம்.வி.வி.யிடம் காணவில்லை!
16 வயதில் மணிக்கொடியில் அவர் எழுதிய சிறுகதையான 'சிட்டுக்குருவி' முதல்,
அவரது 'நித்யகன்னி' என்னும் அற்புதப் படைப்பு வரை, அவரது கலாமோகினி,
கிராம ஊழியன் கதைகள் (1941-1946)வரை, 1948-1949-ல் அவர் நடத்திய 'தேனீ'
இலக்கிய மாத இதழில் வந்துள்ள விஷயங்கள் வரை, அவருடன் பலமுறை நான்
விவாதித்திருக்கிறேன். என் கருத்துகளை மிகுந்த ஆர்வத்துடனும்,
பொறுமையுடனும், மெல்லிய புன்னகையுடனும் அவர் கேட்பார்; ரசிப்பார்;
அவற்றுக்கு மதிப்பளிப்பார். ஒரு தம்பியிடம் பாசத்தைப் பொழியும் அண்ணன்
அவர்! என்னிடம் மட்டுமல்ல; எல்லா இலக்கியத் தம்பிகளிடமும்!..... எங்கும்!
எவ்விடத்தும்! எல்லாக் காலங்களிலும்!.....
அப்போது தேசபக்தர் சத்தியமூர்த்தியின் மருமகன் கிருஷ்ணமூர்த்தியும், மகள்
திருமதி லட்சுமிகிருஷ்ணமூர்த்தியும் 'வாசகர்வட்டம்' ('புக்வென்சர்')
என்னும் அரிய பதிப்பகம் நடத்தி வந்தனர். 'மணிக்கொடி எழுத்தாளர்'
சிட்டியைப் பிரதான ஆலோசகராகக் கொண்டு, மிகச் சிறந்த நூல்களை,
இப்பதிப்பகம் வெளியிட்டது. வ.ரா, லா.ச.ரா, பிச்சமூர்த்தி, கு.ப.ரா.,
தி.ஜானகிராமன், எம்.வி.வி., கி.ராஜநாராயணன், நீல.பத்மநாபன்,
நா.பார்த்தசாரதி, சா.கந்தசாமி மற்றும் பலரின் இலக்கியத்தரம் வாய்ந்த
படைப்புகளை 'வாசகர் வட்டம்' பிரசுரித்தது. அது, 1965-72 காலகட்டம். இந்த
நூல்களைத் 'தாமரை'யில் விரிவாக வல்லிக்கண்ணன் முதலிய பலர் பாராட்டி
மதிப்புரை செய்து வந்தனர். இவற்றையெல்லாம் படித்து வந்த எம்.வி.வி.
'தாமரை'யின் மீதும், அதன் ஆசிரியர் குழுவின் மீதும் பெருமதிப்பு
வைத்திருந்தார். அவரது பாராட்டுகளை எங்களிடம் உடனுக்குடன் பரிமாறிக்
கொள்வார். இளைய தலைமுறையினருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பணியைத்
தமது இறுதிக்காலம் வரை அவர் செய்து வந்தார். இது அவரது அரும் பெரும்
பண்புகளில் ஒன்றாகும்; ஆளுமையின் தனிச்சிறப்பு ஆகும்.
ஒருமுறை எம்.வி.வி.யிடம் பேசும்போது, ''கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு
பற்றி, 'பஞ்சும் பசியும்' என்னும் சிறந்த நாவலை தொ.மு.சி.ரகுநாதன்
(1953-1954) எழுதியிருக்கிறார்; அது இந்திய மொழிகளிலும், செக்கோஸ்லோவாகிய
மொழியிலும் (30 ஆயிரம் பிரதிகள்) மொழி பெயர்க்கப் பெற்றிருக்கிறது.
அதுபோல், உங்கள் பட்டு நூல் நெசவாளர் (சௌராஷ்டிர) சமுதாயம் பற்றியும்
நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தேன்.
''வாசகர் வட்ட வெளியீடான 'வேள்வித் தீ'யில் உங்கள் விருப்பத்தை ஓரளவு
நிறைவேற்றியிருக்கிறேன்; எங்கள் சமுதாயம் குறித்து, அதைவிடப் பெரிய,
சிறந்த நாவல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளேன்; எப்படியும் எழுதி
முடிப்பேன்'' என்றார்.
அந்த நாவலை அவர் எழுதவில்லை; அதற்குப் பதிலாக, 'காதுகள்' என்னும் சிறிய
நாவல் வெளிவந்தது. 1993-ல் அதற்குச் சாகித்திய அகாதெமிப் பரிசும்
கிடைத்தது. அவரது ஒட்டுமொத்தப் படைப்புக்களுக்கும், உன்னத வாழ்வுக்கும்
கிடைத்த அங்கீகாரம் என்று இதனைத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
எம்.வி.வி.யின் 79 ஆண்டு வாழ்க்கையில், எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்;
அக்கினிப் பரீட்சைகள். எனினும், எல்லாவிதமான கொடிய சோதனைகளையும்
நெஞ்சுரத்துடன், விடாமுயற்சியுடன் எதிர்த்துப்போராடி, இறுதியில் வென்ற
பேனா வீரர்; தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தனியிடம் பெற்ற தலைசிறந்த
படைப்பாளி, எம்.வி.வெங்கட்ராம்!
From:
http://www.ambalam.com/idhal/special/2000/february/Special20_02.html
----------
We all met Thi.Ka.Ci in his home in the summer, 2008 when we
conducted Tamilmanam conference at Nellai.
~ N. Ganesan
IE பாவிப்போருக்கு:
எம். வி. வெங்கட்ராம் அவர்கள் தேனீ என்ற இலக்கிய இதழை 1948 இல் ஆரம்பித்து சிறிது காலம் நடத்தி வந்தார். இது குறித்த விமரிசனம் ஈழத்தில் இருந்து வெளியான மறுமலர்ச்சி இதழில் (ஏப்ரல் 1948, நன்றி: நூலகம்) வெளிவந்திருந்தது. அதிலிருந்து சில வரிகள்:
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம், துணை ஆசிரியர்: கரிக்கான் குஞ்சு, விலாசம்: தேனீ, கும்பகோணம், தனிப்பிரதி: அணா 8.
1948- ஆண்டில் புதிதாகத் தொடங்கிய தமிழ்ப் பத்திரிகைகளுள் தேனீ முன்னணியில் நிற்கிறது. "மக்களுக்காகத்தான் இலக்கியம்; மக்கள் கீழே இருக்கிறார்கள் என்பதற்காக இலக்கிய கீழிறங்கிவிடக்கூடாது. அவர்களை மேலே தூக்க வேண்டியது இலக்கியத்தின் பொறுப்பு. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதே இலக்கியத்தின் நோக்கம் அல்ல. அவர்களுடைய மனோபாவத்தை உயர்த்தி அவர்களுடைய ருசியைப் பண்படுத்தி அவர்களுடைய தேவைகளை நிர்ணயம் செய்வது தான் இலக்கியத்தின் நாட்டம்" என்று தேனீயின் பங்குனி இதழில் அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார்."
மக்களின் மனோபாவத்தை மாற்றுவதோ, அவர்களுடைய ருசியைப் பண்படுத்துவதோ இலகுவான காரியமல்ல. இத்துறையிலே தேனீ துணிந்து தொண்டாற்றும் என்பதற்கான அறிகுறிகள் அதன் ஆரம்ப இதழ்களிலேயே தென்படுகின்றன.
மறுமலர்ச்சி, சித்திரை 1948, மலர் 2 இதழ் 9 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
நன்றி
சிறீதரன்
"தி.ஜானகிராமன் பள்ளி" என்றாலே இதம், இனிமை, எளிமை, கவர்ச்சி, லாவண்யம்,
நளினம், சுபம் என்று இருக்கும். இக்கதையிலும் அது எவ்வளவு அழகாக
ஊடுபாய்கிறது பாருங்கள். கதைக்கு கரு கிடைக்கவைல்லையா? தெருக்கோடி
வரைக்கும் போய் வா! கிடைத்துவிடும் என்பார் தி.ஜா. எவ்வளவு அழகிய
குடும்பச் சித்தரிப்பு. பெண் தன்னை விட அறிவாளி என்பதை சொல்லும் அழகு
பாருங்கள்! இது..இதுதான் தி.ஜா சகா! என்று இனம் காட்டுகிறது. இவர்கள்
அனைவரும் ஸ்ரீவித்யா உபாசகர்கள்.
எம்.வி.வெயின் "காது" எல்லோரும் வாசிக்க வேண்டிய நாவல்.
க.>
2009/1/15 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:
> தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
> எம்.வி.வெங்கட்ராம்
>
> கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை.
> நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு
> உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை
> என்பதும்.
It has been my previlege to meet most of the writers mentioned in this article. In 1969 when I was on my second leg of sailing I visited Madras when I met many of them with Smt Lakshmi Krishnamurthy in her house "sundara" (Since the famous singer K B Sundarambal donated the land for Satyamurthi to build a house here, it was wrongly believed that the house was named after her. Actually it was named after Satyamurthi's father) and it was then she asked me to write "Kadalodi" which was published by Vachakar Vattam in 1972.
TJ asked me to write for kanayazhi when he was for a brief period looking after the mag. But I couldnt as I was sailing then.
When I wrote Sadharana Manithan - Chitti's biography- which Kalaignan published, it was Vallikkannan and Smt Krishnamurhty who launched the book, with Krithika (Mathuram Boothalingam) and Indira Parthasarathy being present!
I was really lucky!
When once (much before in time) I met Va Raa with Chitti, he asked me in English, "You say you are in Navy; can you shoot a sparrow if I give you a gun?"
I replied, "Even if I do take a gun from you why shpuld i shoot a sparrow?"
His reply in tamil was "You are really Chitti's nephew!"
I cherish those memories!
|
From: naa.g...@gmail.com <naa.g...@gmail.com> |
சாதாரண மனுஷன் போல் ஓர் அழகிய தலைப்பிட்டு உங்கள் இலக்கியப் பரிட்சயங்களை
இங்கே தொடராக எழுதி பின்னால் பிரசுரித்தால் என்ன?
நீங்கள் காட்டிக்கொடுக்கவில்லையெனில் சிட்டி போன்ற ஜாம்பவான்களை நான்
தரிசித்தே இருக்கமாட்டேன். என்னைப் போல் பலருக்கும் உங்கள் தமிழ் இலக்கிய
ஊடாடல் பயன் உள்ளதாய் அமையும்.
குள்ளக் குளிரக் குடைந்து நீராடுங்களேன். நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்!!
க.
பிகு: எல்லோரும் ஜோராக் கைதட்டுங்கள் பார்ப்போம் ;-)
2009/1/15 kra narasiah <nara...@yahoo.com>:
Touched by your sentiments. I shall endevour after I reach Madras to put all that I have experienced in these leaves - made ever green by dedicated people like you and subha
|
From: Narayanan Kannan <nka...@gmail.com> |





அன்பரே:
சாதாரண மனுஷன் போல் ஓர் அழகிய தலைப்பிட்டு உங்கள் இலக்கியப் .....
பிகு: எல்லோரும் ஜோராக் கைதட்டுங்கள் பார்ப்போம் ;-)
க.>
* சிட்டி "சாதாரண' வருஷத்தில் பிறந்தவர்.
2009/1/15 kra narasiah <nara...@yahoo.com>:
Another small info (sorry I am in Dubai and working on my grand daughter's computer so no Tamil)
in 1949, AIR madras invited Va Raa to give a talk and asked for the title and Va Raa gave it as "Enathu irandavathu Virodhi" (My second enemy) All in AIR were worried as to what he would speak. When he went on air he said
"I was born in the Tamil year Virodhi and as I am now 60 this happens to be my second Virodhi"
That was the CAUSE FOR CHITTI'S BIOGRAPHY BEING NAMED SADHARANA MANITHAN!
Incidentally In Aprl 2009 when the new year comes around it will be Virodhi again - 120th year of Va Raa. (Of course Karunannidhi and crowd may not like this idea as they dont want to recognise the years by the known names! And yet it was Karunanidhi's mentor Annadurai who named Va Raa as "Agraharaththu Adisayap Piravi"
narrasiah |
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
On Jan 15, 12:07 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> It has been my previlege to meet most of the writers mentioned in this article. In 1969 when I was on my second leg of sailing I visited Madras when I met many of them with Smt Lakshmi Krishnamurthy in her house "sundara" (Since the famous singer K B Sundarambal donated the land for Satyamurthi to build a house here, it was wrongly believed that the house was named after her. Actually it was named after Satyamurthi's father) and it was then she asked me to write "Kadalodi" which was published by Vachakar Vattam in 1972.
As you may know, Sundarambal was from Kodumudi & from a community
called "narambukaTTi"s. Old musica tribe?
I've corresponded with Smt. Lakshmi K. in late 70s to 80s.
N. Ganesan
> TJ asked me to write for kanayazhi when he was for a brief period looking after the mag. But I couldnt as I was sailing then.
> When I wrote Sadharana Manithan - Chitti's biography- which Kalaignan published, it was Vallikkannan and Smt Krishnamurhty who launched the book, with Krithika (Mathuram Boothalingam) and Indira Parthasarathy being present!
> I was really lucky!
> When once (much before in time) I met Va Raa with Chitti, he asked me in English, "You say you are in Navy; can you shoot a sparrow if I give you a gun?"
> I replied, "Even if I do take a gun from you why shpuld i shoot a sparrow?"
> His reply in tamil was "You are really Chitti's nephew!"
>
> I cherish those memories!
> Narasiah
>
> --- On Wed, 1/14/09, naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com> wrote:
> மாடியிலிருந்த 'கலைஞன்' ...
>
> read more »
கடலில் பயணித்தது உண்டோ? புரட்டி எடுத்துவிடும், கடல் நோய் கூறுகள் உள்ளவரை!
1 மாதம் அவதிப்பட்டேன் சியாட்டலிலிருந்து தோக்கியோ பயணப்பட்ட போது.
நம்ம கடலோடி பனங்காட்டு நரி சல, சலப்பிற்கு அஞ்சாது என்பது போல் கடல்
அலைப்பிற்கு அஞ்சுபவர் இல்லை போல் தெரிகிறது!
க.>
2009/1/15 kamaladevi aravind <gokul...@yahoo.com>:
On Jan 14, 8:01 pm, "Kumaran Malli" <kumaran.ma...@gmail.com> wrote:
> I will forward this email Ganesan aiyaa. Thanks.
Thanks, Sri. Kannan. First thing to do is to get permission from
MVV's wife and children that his stories can be placed in the web,
and no copyright issues.
Then there is a volume "MVV CiRukathaikaL" - all his short stories.
Get them typed in TN - some typist in some encoding,
convert to unicode - place in HTML and PDF formats.
For funds, I'll be glad to contribute my part.
-----------------
One has to do this for many authors -
Lady writers such as:
Vai. Mu. Kothanayaki, Kumudini, Mrs. Rajam Krishnan, R.
Choodamani, ....
Best,
N. Ganesan
> On Wed, Jan 14, 2009 at 1:36 PM, naa.gane...@gmail.com <
> naa.gane...@gmail.com> wrote:
> > Dear Kumaran,
> > Please forward this to Sourashtra e-list(s).
> > Some friends, relatives, and sponsors
> > can get his Tamil stories, essays and non-fiction
> > works typed and store them in
> > Project Madurai, Muthusom, etc.,
> > It will be a gift to future Tamils and
> > also will his memory.
> > Thanks,
> > N. Ganesan
> >http://nganesan.blogspot.com-Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
- Show quoted text -
கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப்
பிடிபடவில்லை.
நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு
உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை
என்பதும்.
என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், 'கலியாணம் ஆகாத பையன்;
குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள்
நினைக்கலாம். 'காக்காயின் பொன் குஞ்சு' என்று பரிகாசம் செய்கிறவர்களும்
இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் 'பிள்ளையைப் பெறத் தெரிந்ததே
தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா' என்று என்னையே சாடுவார்கள். ஆகையால்,
பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன்.
அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு
முடிந்துவிட்டது. சட்டப்பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல்
வீட்டோடு
இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான்.
சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும்
ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும்
பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப்
பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்)
பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும்
அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்கவில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று
என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, 'ஆரம்பிக்கட்டுமா?' என்று
கேட்டான், ஆரம்பித்துவிட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும்
பேசாமல் இருந்தேன்.
அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல்
எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப்
பணம் கொடுத்தேன். 'ராகம்' என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது.
மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை
உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு
மிகவும் பெருமையாகத்தான் இருந்தது.
ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை
ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் 'பக்' கென்றது.
அவனைக் கூப்பிட்டு, ''சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?'' என்று
கேட்டேன்.
''இதோ பாருங்கள் அப்பா'' என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது
கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன்.
''அது சரி, கணக்குப் பார்த்தாயா?''
''அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல'' என்றான் அவன்
உணர்ச்சியோடு.
''லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என்
தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங்களுக்கு இருக்கும்.
நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து
வைத்திருக்கிறேன்.
கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும்
கவனித்தால் மற்ற சத்புத்திரர்களின் லட்சியம் என்ன ஆகும்?''
''பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? 'ராகத்'துக்கு
மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?''
''நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு.
மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய்,
தொழில் எப்படி நடக்கிறது பார்,'' என்றேன் ஆறுதலுக்கு.
''இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி,
இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, 'ராகம்' முடிந்துவிட்டது.''
சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது
கூட
எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே
பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத்
தொடங்கினான்.
மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத்
தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும்
கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல்
நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி,
புகையிலை
வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது.
பெண்களுடன் சங்கோசம் −ல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன்
என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன்
வேலியைத்
தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின்
லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு.
நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு
அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு
குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத்
தோன்றாது. −ரண்டு நண்பர்களாகத்தான் தோன்றும்.
இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப்
பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்;
நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்;
அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய்
போட முடியுமா?
மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட
முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக்
கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக்
கேட்டேன்.
அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ
போய்விட்டான்.
மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு
மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு
நேரத்தில்
அவன் வந்து சேர்ந்தான்.
கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம்
கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை 'உர்'
ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன்
வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன்.
அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை.
இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்?
இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன்.
குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு.
நானும் அவளும் கட்டுப்பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள்தானே?
கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு
டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ
மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர்,
இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை
குருமூர்த்தி.
'சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்' என்று பிறகு
சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள
எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன்
ஆகிவிட்டான்.
சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக
எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
''என்னடா எழுதினே?''
''மஞ்சள் ஓரணா,'' என்றான் குருமூர்த்தி.
''எழுது, சந்தனம் ஓரணா''
''ஆயிட்டுது,''
''பழம் ரெண்டனா''
''எழுதிட்டேன்''
''எல்லாம் என்ன ஆச்சு?''
''ரெண்டனா''
முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன்
சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது.
குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில்
உட்கார்ந்தேன்.
''ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?''
என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன்.
அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை.
''ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப்
போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச்
சொல்லிவிட்டாள்.
பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.''
மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ
போய்விட்டது.
''உனக்கு என்ன வயது தெரியுமா?''
''இருபத்திரண்டு'' என்றான் அவன் சிரித்தபடி.
''இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட
உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ''
''நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே''
''அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும்
என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி
அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?''
''பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச்
செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?''
''அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு''
''பிடிக்காமல் என்ன அப்பா?''
''அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாமா?''
''யாருக்கு?''
''என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்''
''மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?''
''என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய்
பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத்
தேடுவது?''
''வேண்டாம்''
''அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?''
''வேண்டாம் என்றேனே அப்பா?''
''எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து
கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு
என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச்
சொல்லவா
இவ்வளவு தயங்கினாய்?''
''அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.''
''ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து
கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி
விளையாடாதே, சொல்லிவிட்டேன்.''
''நிஜமாகத்தான் சொல்லுகிறேன்''
''ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?''
''அதுக்காக இல்லை''
''ஒண்ணரைக் கண் என்றா?''
''வந்து அப்பா''
''சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?''
''நான் சொல்ல வந்தது''
''அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?''
''நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?''
''மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா
அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள்
வைத்து விட்டுச் சொல்லிவிடுகிறேன்.''
''இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்''
''நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு
என்று கூட தோன்றுகிறது.''
''அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்''
''எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே?
வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்''
''அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட
வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.''
''யார் இந்த ரகுராமன்?''
''அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்''
''கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப்படுகிறது; கவி நல்லவராம். என்ன
வயசு
அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?''
''அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்''
''சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்''
அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்?
எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை
சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது?
மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு;
களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்;
பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும்
ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண்,
வீட்டு
வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான்
எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது
என் ஆசை.
இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள்
தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய
குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில்,
இரண்டு குடும்பங்களுக்கும் 'இல்லை' என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை.
இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை
திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார்.
உயிர்
பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம்
ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே
என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான்
சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள்.
அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில்
கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும்
இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப்
பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத்
திட்டமிட்டோம். 'இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்' என்று முடிச்சு
போட்டிருந்தோம்.
இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி
வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை.
'சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே
இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக்
கொண்டுவிடுவான்' என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன்.
காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன்.
''வா அம்மா'' என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக்
கொண்டிருப்பதை கண்டேன்.
''அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்...''
''இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான்
இருக்கும்போல்...''
''வேடிக்கையாகச் சொன்னேன்!''
ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய்
பேசினான்.
அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய
பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி,
காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க்
கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது
மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச்
சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்துகொண்டே அவளிடம் எவ்வளவோ
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான்
அவளுக்கு ஞானம் இருந்தது.
மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன்
கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான்.
''அப்பா, ரகுராமன் எப்படி?'' என்றான்.
''எப்படி என்றால்?''
''அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?''
''ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?''
''காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட
பையனா?''
''என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்'' என்றேன், அவனுக்கு
உறுத்தட்டும் என்பதற்காக.
''அப்படிச் சொல்லுங்க அப்பா!'' என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.
''இது என்ன அற்ப சந்தோஷம்?''
''ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து
சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு
சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக
விசாரித்து விட்டேன்.''
''நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே'' என்றேன்
சிரித்துக்கொண்டே.
''இருக்கிறதே!''
''பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை...''
''பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!''
''நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு
வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்னடா சொல்லுகிறாய்''
''அப்பா, ஆத்திரப்படக்கூடாது.''
''எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி
ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.''
''கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது
உண்டா?
நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.''
''என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன
முடிவடா
திடீரென்று?
''அப்பா மகாலட்சுமி நீங்கள் செல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல,
ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப்
பழகினேன் என்றால்... அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு
வெட்கமாயிருக்கிறது.''
அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க
முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப்
பேசினேன்.
''சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?''
மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு
அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத்
தோன்றகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க
நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத்
தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும்
ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு... எனக்கு மலைப்புத்
தட்டுகிறது.
அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லவிட்டால் உங்களுக்கு
வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி
பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால்
நான் சின்னக்குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக
நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை
விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து
கொள்வதுபோல்
என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன்
ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்... எனக்கு
ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?''
''தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?''
''சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.''
சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான்
என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை
இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு.
தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான்
என் பிள்ளை. 'என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக்
கலியாணம்
செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி
அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்?
இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான்.
''என்மேல் கோபமா அப்பா?''
''உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும்
என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின்
அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?''
''அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி
என்கிறாள்.''
''அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?''
சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.
''உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?''
என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு.
''என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம்
நான் சொல்வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண்
முடிவு செய்யுங்கள்.''
''அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார்
எங்கள்
அப்பா என்று கதை எழுதுவதற்கா?''
''கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும்
முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.''
குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான்
அவனுக்காகத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல்
அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லாவிட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள்
என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான்
தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.
இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும்
சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.
http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/ag14mvvkathai.asp
> எம்.வி. வெங்கட்ராம் (1920-2000)
> மதுசூதனன்
On Jan 15, 1:25 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> Incidentally In Aprl 2009 when the new year comes around it will be Virodhi again - 120th year of Va Raa. (Of course Karunannidhi and crowd may not like this idea as they dont want to recognise the years by the known names! And yet it was Karunanidhi's mentor Annadurai who named Va Raa as "Agraharaththu Adisayap Piravi"
> narrasiah
Va Raa married a lady from Jaffna, isn't it?
A great Sanskrit and Prakrit scholar is R. Vijayalaksmi, w/o Prof.
Rangarajan, Chennai.
Dr. Vijayalakshmi's original name as in her thesis, one advisor was A.
Veluppillai
who told me this) is Muthukumaru from Jaffna.
N. Ganesan
> --- On Thu, 1/15/09, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
>
> From: Narayanan Kannan <nkan...@gmail.com>
> Subject: [MinTamil] Re: M. V. Venkatram, Kumbakonam (1920-2000)
> To: minT...@googlegroups.com
> Date: Thursday, January 15, 2009, 12:36 AM
>
> சரிதான்! சிட்டியையே 'சாதாரண
> மனுஷன்'* என்று எழுதியவர்,
> எங்களைப் போன்ற
> உண்மையான சாதாரணர்களை என்ன
> செய்வீர்களோ? ;-)
>
> க.>
>
> * சிட்டி "சாதாரண'
> வருஷத்தில் பிறந்தவர்.
>
> 2009/1/15 kra narasiah <naras...@yahoo.com>:
>
>
>
> > Touched by your sentiments. I shall endevour after I reach Madras to put
> all
> > that I have experienced in these leaves - made ever green by dedicated
> > people like you and subha
> > narasiah- Hide quoted text -
On Jan 15, 2:47 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> Dear Na.Ka
> Shall we form a trust for this?
I will start with M. V. Venkatram. If Kumaran leads the effort, I will
also contribute paying for the
typing of his short story collection. Let others work on MVV's other
creative writings.
I will also contribute for typing Kongu stories by R.
Shanmugasundaram,
his nephew Lathananth is into blogs. So, easy to get permission.
Hope others take up getting other authors. It's like
charity to a kOyil, mAtAkOyil or paLLivAsal.
We can all build Thamizttaayin iNaiyak kOyil.
N. Ganesan
N. Ganesan
> Let's all pool our resources and form a trust. I'm sure many Tamil
> writers will be willing to donate their work for digital preservation.
> We can form this with a monthly contribution or whatever!
> I floated an idea, some time back called "Adopt a book" based on an
> ongoing project in British Library.
>http://www.tamilheritage.org/old/sales/adopt.html
> That idea was inspired by the sight that loads of books were bundled
> for uptake & care at Roja Muthiah and Gnanananda library at
> Pukukottai.
> I want to know first that how many people in this list will sign up,
> if we start up a project like that?
> Secondly we can float ideas for a 'corpus'.
> Thirdly, the execution.
> In fact, we can target tamil writers of considerable fame and private
> libraries to begin with such as Srirangam Mohanarangan, Dr.Venkata
> mani, Dr.Avvai Natarajan and others. Dr.Ganesan has the largest
> private collection of Tamil books in the USA.
> N.Kannan
> On Thu, Jan 15, 2009 at 5:31 PM, naa.gane...@gmail.com
> <naa.gane...@gmail.com> wrote:
> > -----------------
> > Best,
> > N. Ganesan
> >> naa.gane...@gmail.com> wrote:
> >> > Dear Kumaran,
> >> > Thanks,
> >> > N. Ganesan
> >> >http://nganesan.blogspot.com-Hidequoted text -
> >> - Show quoted text -
> --
> "Be the change you wish to see in the world." -Gandhi- Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
> In fact, we can target tamil writers of considerable fame and private
> libraries to begin with such as Srirangam Mohanarangan, Dr.Venkata
> mani, Dr.Avvai Natarajan and others. Dr.Ganesan has the largest
> private collection of Tamil books in the USA.
Just for information:
I know & have a list of about 100,000 Tamil books printed prior to
India's indpendence.
Also have about 30,000 items in my Tamil culturescape bibliography
collection
- mostly on Tamils, Tamil literature, Southern Indian States,
Dravidology, Eelam, numismatics,
stalapuranams, temples, prabandhams, Indian art history, ...
etc. etc., spent some 20 years on this task.
So, will be to give some guidance & references to any serious
researcher on culturescape of Tamils and South Indians including
Ceylon.
N. Ganesan
> N.Kannan
> On Thu, Jan 15, 2009 at 5:31 PM, naa.gane...@gmail.com
> <naa.gane...@gmail.com> wrote:
> > -----------------
> > Best,
> > N. Ganesan
> >> naa.gane...@gmail.com> wrote:
> >> > Dear Kumaran,
> >> > Thanks,
> >> > N. Ganesan
> >> >http://nganesan.blogspot.com-Hidequoted text -
> >> - Show quoted text -
> --
> "Be the change you wish to see in the world." -Gandhi- Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
My mistake, sorry Dr. Auvai Kannan. Many things were on my mind,
so wrongly keyed in 1920-1980, it should have been (1920-2000).
so those who reply to that, wiil have the wrong year for MVV's demise
year.
i.e., Unless they're careful enough to edit the title and use the
correct (1920 - 2000).
But I doubt whether folks will do that.
~ NG
நன்றி குமரன்.
எழுத்து என்பதே 'அமரஜீவிதத்தை' நோக்கிய நடை. ஒவ்வொரு எழுத்தாளனும் தன்
எழுத்து நிற்க வேண்டுமென ஆசைப்படுபவனே.
வாக்கு பிரபஞ்சத்திலிருந்து மனிதன் ஊடாக நற்சிந்தனைகள் பூவுலகிற்கு
வருகின்றன. இதனால்தான் வேதம் மனிதல் எழுதப்பட்டது அல்ல என்று சொல்வது.
எழுத்தாளர்களை அனுகினால் நிச்சயம் இம்முயற்சியை ஆதரிப்பர்.
நம்மால் இயன்றது, தமிழை மின்வெளியில் நிரந்தரப்படுத்துவது.
முதலில் எழுத்தை இனம் காண வேண்டும்.
எழுத்தாளர் இயைவு பெற வேண்டும்.
நிரந்தப்படுத்த அறவாரியம் உருவாக்கவேண்டும்.
மின்தமிழ் களம் அதற்கு துணை போகட்டும்.
க.>