கம்பரும் ஒட்டக்கூத்தரும் - ஒரு காலக்குறிப்பு அகச்சான்று

770 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Jul 8, 2012, 10:22:21 AM7/8/12
to mintamil, vall...@googlegroups.com, santhavasantham, தமிழ் மன்றம், Madhura Bharati, Ramanan Isaikkavi, Dr vallioor Subramanian, rugan arya

பல மின்மடற் குழுக்களில் அடிக்கடி, ஒட்டக்கூத்தருக்குப் பின் வந்தவர் கம்பர் என்ற ஒரு கருத்து ‘ஆய்வுரையாக’ சொல்லப்பட்டு வருகிறது.  கால ஆய்வுகளில் எனக்கு ஈடுபாடு கிடையாது.  ஒம்போதாம் நூற்றாண்டா--சரி அப்படியே இருக்கட்டும்; பன்னிரண்டாம் நூற்றாண்டா... ஆஹா இருந்துட்டுப் போகட்டும் என்ற வகையில்தான் என் போக்கு இருந்திருக்கிறது.  கவிதையின் ருசி போதாதோ?  காலம் என்ன இதில் குறுக்கீடு? 

கால ஆய்வில் ஈடுபாடு இல்லை என்று சொன்னது, நிறுவுவதற்குப் போதுமான, வலுவான ஆதாரங்கள் இல்லாமல் சகட்டுமேனிக்குக் காலத்தை நிர்ணயிக்க வழி இல்லை என்பதொன்று.  கவியின் வாக்கில் காலக்குறிப்பு ஏதும் கிடைத்தால் மட்டுமே அதைப் பயனுள்ள குறிப்பாகக் கருத முடியும் என்பது பிறிதொன்று.  ஆனால், செவிவழிச் செய்திகளாகவும் கட்டுக்கதைகளாகவும் தமிழிலக்கிய ‘வரலாற்றில்’ உலாப் போகும் செய்திகள் ஏராளமானவை.  ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் சில உள்ளன.  அம்பிகாபதி கதையெல்லாம் நல்ல கற்பனை என்ற அளவில்தான் கொள்ள முடிகிறதே ஒழிய, அறுதியிட்டுச் சொல்லும்படியான சான்றுகளைக் கொண்டனவாக இல்லை. 

ராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களைத் தமிழில் இயற்றியவன் கம்பன்.  ‘கம்பன் என்று சொல்லப்படுகிறது’ என்று சொன்னாலும் ஆட்சேபணை இல்லை.  ஏனெனில், தன்னை ஆதரித்த வெண்ணெய்நல்லூர் சடையனைப் பற்றிப் பத்துப் பாடல்களில் குறித்துள்ள கம்பன், தன்னைப் பற்றி, தன் பெயர் உட்பட, ஒரு குறிப்பையும் தான் பாடிய காப்பியத்துள் வைக்கவில்லை.  சடையன் என்பவன் ஒரு வள்ளல்; அவன் வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தான் என்ற இரண்டு குறிப்புகள் மட்டுமே கவி வாக்காக, கவிஞனைப் பற்றிய தகவல்களாக நமக்குக் கிட்டுகின்றன.  இந்த இரண்டு தகவல்களும் உண்மையெனில், அந்த வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கவிஞனும் அந்த ஊரிலோ, அதன் சுற்று வட்டாரத்திலோ இருந்திருக்கலாம் என்று கொண்டுகூட்டிக் கொள்ள முடிகிறது. 

ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தைக் கம்பன் இயற்றவில்லை.  ‘இதுக்கு மேலயும் சீதை கஷ்டப்பட்டாள் என்று எழுத என்னால் முடியாது’ என்று கம்பன் நிறுத்திவிட்டானோ என்னவோ என்று என் ஆசிரியர் அமரர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் குறிப்பிடுவார்.  இது இன்னொரு செவிவழி என்பதையும் தவறாமல் சொல்வார்.  என்ன காரணமாக இருந்தாலும், உத்தர காண்டத்தைக் கம்பன் இயற்றவில்லை என்பதை நிறுவுவதற்குப் பாடுபடவேண்டிய தேவையே இல்லை.  திருமுடி சூட்டுப் படலம், விடை கொடுத்த படலத்தோடு கம்பனுடைய காப்பியம் முற்றுப்பெறுகிறது என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

உத்தரகாண்டத்தை இயற்றியது யார் என்ற கேள்வி ஒன்று எழுகிறது.  வாணிதாசன் என்ற கவிஞன் இயற்றியது என்ற ஆய்வை (ரா. ராகவையங்கார் ஆய்வை) வவேசு ஐயர் மறுக்கிறார்.  இங்கே http://www.tamilheritage.org/old/text/ebook/THFvavesu.pdf உள்ள “வவேஸு ஐயர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை என்ற தமிழ் இ-புத்தகத்தில் குறிப்பாக (அச்சுப் புத்தகத்தின்) பக்கங்கள் 22 முதல் 25 வரையில் பார்க்கவும்.  அதற்கு முன்னாலும் பின்னாலும் கூட படிக்கலாம்.  அருமையான நூல்.

உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தரே என்பது தற்கால ஆய்வுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.  இது உண்மையாக இருக்கும் காரணத்தால்தான் வர்த்தமானன் பதிப்பகத்தார் (பதிப்பாளர் திரு ஸ்ரீசந்திரன் அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்) ‘ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டம்’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கின்றனர்.  இயற்றியது வாணிதாசன் என்ற குறிப்புகூட இந்நூலில் இடம்பெறவில்லை.  எனவே, அடிப்படையில் ‘ஒட்டக்கூத்தர் இயற்றியதே உத்தரகாண்டம்’ என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால்தான் இந்தப் பதிப்புக்கு இந்தப் பெயரை இடல் சாத்தியம்.  இல்லாவிட்டால் ‘வாணிதாசன் அருளிய உத்தரகாண்டம்’ என்று பெயர் வைக்க, பதிப்பகத்தாருக்கு என்ன தடை!

ஆயிற்றா.  இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன்.  உத்தர காண்டத்தை வாசிக்காமல் ராமாயணானுபவம் பூர்த்தியாகாது என்பது நான் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை.  வடமொழியில் ஒரே கவிஞருடைய வாக்கிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படும் ஏழு காண்டங்களை வாசிக்கிறோம் என்றால், தமிழில், முதல் ஆறு காண்டங்களை ஒரு கவிஞனும், மற்ற ஒரே ஒரு காண்டத்தை இன்னொரு கவிஞனும் இயற்றியிருக்கிறார்கள் என்பது முதலில் மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமானதுமான உண்மை.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு கதையின் பிற்பகுதியைச் சொல்லும்போது, முற்பகுதியையும் ஆங்காங்கு சொல்லவேண்டிய அவசியம் நேரும்.  இந்தக் கதையோ வடமொழியில் சொல்லப்பட்டு, தமிழுக்கு எடுத்து வரப்பட்ட கதை.  அதுவும் கம்பன், வால்மீகியின் காதையிலிருந்து ஆங்காங்கு மாறுபட்டிருக்கிறான்; சில இடங்களில் காளிதாசனின் ரகுவம்சத்திலிருந்து இந்த மாறுதல்களுக்கான கருவை எடுத்துக்கொண்டிருக்கிறான் என்பது நான் கண்ட உண்மை.  இதற்கான எடுத்துக்காட்டுகளை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

ராமாயணத்தில், அதுவும் கம்பராமாயணத்தில், தொடர்ச்சியாக ஓர் உத்தி கையாளப்படுகிறது.  ஆங்காங்கு ஒரு சிறிய முன்கதைச் சுருக்கம் சொல்லப்படுகிறது.  இப்படி, கம்பன் இயற்றிய ஆறு காண்டங்களிலும் முன்கதைச் சுருக்கமாக மூன்று முறை (அந்தந்தந்தக் கட்டத்துக்கு முன்வரையிலான) நிகழ்ச்சிகள் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன.  மூன்று முறையும் இப்படிச் சொல்பவன் அனுமன்.  முதன்முறை, கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனிடத்தில் வந்து, ராமனை அறிமுகப்படுத்தும்விதமாகச் சொல்லும் சுருக்கம்; இரண்டாம் முறை சுந்தர காண்டத்தில் தற்கொலைக்குத் துணிந்த சீதையை நிறுத்துவதற்காகத் தொடங்கி, பின்னர் விரித்துச் சொல்லும் கதைச் சுருக்கம்; மூன்றாம் முறை, ராமன் வரும் நாள் தாமதித்த காரணத்தால், எரி மூட்டி, அதனுள் பாய எத்தனித்த பரதனைத் தடுத்து நிறுத்திச் சொல்லும் கதைச் சுருக்கம்.  ராவணனிடத்தில் ராமனைப் பற்றிச் சொல்வதையும் சேர்த்துக் கொண்டால் நான்குமுறை என்று சொல்லலாம்.  ஆனால், இந்தச் சுருக்கம், சுருக்கம் என்ற கணக்கிலேயே சேருமா என்பது கேள்விக்குரியது.  ஐந்து அல்லது ஆறு பாடல்கள் அளவே கொண்ட இந்தப் பகுதியில், ராமன் வாலியைக் கொன்றவன் என்ற எச்சரிக்கை மட்டுமே பெரிதாக ஒலிக்கிறது.

இதைத் தவிர, கார்காலப் படலத்தில் ராமனுக்கு ஏற்படும் பழைய நினைவுகள்; நாடவிட்ட படலத்தில் அனுமனுக்குச் சீதையை அடையாளம் காட்டுவதற்காகச் சொன்ன நிகழ்வுகள்; சுந்தர காண்டத்தில் அசோக வனத்துச் சீதையின் பழைய நினைவுகளும்; ராமனுக்கு அடையாளம் சொல்வதற்காகச் சொன்ன சில நிகழ்வுகளும் என்று இந்த ‘முன் கதைச் சுருக்கத்துக்கு’ இன்னொரு விதம் உண்டு.  முதல் மூன்று கதைச் சுருக்கங்களும், அதுவரையில் நிகழ்ந்தனவற்றின் சுருக்கங்கள்.  இந்த இரண்டாம் வகையிலோ என்றால், முன்னர், கதையில் விடுபட்டுப் போன சில நிகழ்வுகளை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் கூடுதல் தகவல்களுடன் கூடிய சுருக்கங்கள்.  இந்த விதத்தில் இந்த இரண்டாம் பிரிவு மாறுபடுகிறது.

அனுமன் சொல்லும் முன்கதைச் சுருக்கங்களை, அதற்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.  Major landmarks என்று சொல்லக்கூடிய அத்தனை விவரங்களும் இவற்றுள் இடம்பெறும்.  இங்கே கவிஞனுக்கு முன்னால் இருக்கும் சவால் என்னவென்றால், தான் இதுவரையில் சொல்லி வந்த கதையின் மன-வரைபடம் (mental map) அவனிடத்தில் திட்டவட்டமாக இருந்தாக வேண்டும்.  வால்மீகியின் கதையிலிருந்து சில அம்சங்களை மாற்றிச் சொல்வதால், இந்த விஷயத்தில் கவிஞனுடைய கவனத் திறனுடைய சுமை அதிகரிக்கிறது.  வில்லை முறிப்பதற்கு முன்னரேயே சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் காணுவதும், காதல் கொள்வதும் ஓர் எடுத்துக்காட்டு.  இதை, பின்னால் தொடரும் சுருக்கங்களில் கவனமாகத் திரும்பச் சொல்லவேண்டும். நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைத்தான் சொன்னேன்.  வனம் புகும் முன் தசரதனுக்கும் ராமனுக்கும் ஏற்படும் வாக்கு வாதங்களைக் கம்பன் தவிர்த்திருப்பதையும்; ‘நீ என் மனைவி இல்லை.  உன்னைத் துறந்தேன்.  பரதனையும் துறந்தேன்’ என்று அந்தப்புரத்தில் தசரதன் சொன்ன வார்த்தையை, வசிஷ்டரும், மக்களும் கூடியிருக்கும்போது சொல்வதாக மாற்றியமைத்திருப்பதையும், அதன் காரணமாகவே, வான்மீகத்தில் பரதனே ஈமக்கிரியைகளைச் செய்ய, கம்பனில் சத்ருக்னன் செய்வதாக மாற்றி அமைக்கவேண்டி நேர்ந்திருப்பதையும்கூட இன்னோர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  மாரீச மானுக்குப் பின்னால் சென்ற ராமனுக்குத் துணை போவதற்காக சீதை லக்ஷ்மணனைச் சொன்ன அவச்சொல்லைத் தவிர்த்து, அவனுக்கு வேறுவிதத்தில் அதே அழுத்தத்தை உண்டாக்கியதையும் சொல்லலாம்.  இன்னும் நிறையச் சொல்லலாம்.

The challenge here for the Poet is to have an extraordinary grip over the story and the detours that he has been making, and the necessary sequential effects on the main story line that such detours would cause on his re-telling.  இந்த அசாதாரணத் திறனைக் கம்பனில் முழுக்க முழுக்கக் காணமுடிகிறது.  நாடகப் பாங்கு, கட்டுக்குலையாமல், தான் உண்டாக்கிய திருப்பங்களோடு சேர்த்து, மூலக் கதையின் பிற்பகுதிகளில் (முற்பகுதி மாற்றங்களால் நேரும் விளைவுகளையும் உள்ளடக்கிய) சம்பவக் கோவையை அமைப்பது என்பது கவிஞனின் முன் உள்ள பெரிய சவால்.  இதைக் கம்பன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறான் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது.

சரி.  இப்போது உத்தர காண்டத்துக்கு வருவோம்.  இவரோ இன்னொரு கவிஞர்.  இவருக்கு, இதற்கு முன்னால் உள்ள ஆறு காண்டங்களும், அவற்றில் மூல நூலில் செய்யப்பட்டுள்ள மாறுதல்களும் முழுக்க முழுக்க அத்துப்படியாகி இருந்தாலொழிய இவரால், ‘ஏதோ போகிற போக்கில் வால்மீகி சொல்வதை மட்டும் அப்படியே எடுத்துச் சொல்லிவிட்டால் நம் வேலை முடிந்தது’ என்றுதான் போயிருந்திருக்க முடியும்.  அந்த விதத்தில் ஒட்டக்கூத்தருக்கு முன்னால் இருந்தது, கம்பனுக்கு முன்னால் இருந்ததைக் காட்டிலும் அதிகமான சுமை என்றுதான் சொல்லவேண்டும்.  அவனுக்கோ, அவன் செய்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களால் ஏற்படும் விளைவுகளையும் மட்டும் சொன்னால் போதும்.  இவருக்கோ என்றால், கம்பன் செய்துள்ள ஒவ்வொரு மாற்றமும் நுணுக்கமாகத் தெரிந்திருக்க வேண்டும். 

ஒரு சிக்கலான இடத்துக்கு வருவோம்.  உத்தரகாண்டத்திலும் ஒரு முன்கதைச் சுருக்கம் வருகிறது.  ஆனால், இம்முறை இந்த முன்கதைச் சுருக்கத்தைச் சொல்பவர்கள் குச-லவர்கள்.  வான்மீகமும் இப்படித்தான் சொல்கிறது.  சொல்லப்போனால், குச லவர்கள் சொல்லும் கதையை ராமன் கேட்கும் காட்சியில்தான் கதையே தொடங்குகிறது.  மற்ற அனைத்தும் ஃப்ளாஷ்பேக் உத்தி.  Kamba Ramayana A Study என்று ஆங்கிலத்தில் எழுதிய வவேசு ஐயர் இதை எப்படி கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பது ஆச்சரியமான ஒன்று.  ஏனெனில், இப்படி, கதையை நடுவிலிருந்தோ அல்லது முடிவிலிருந்தோ தொடங்கி, ஃப்ளாஷ்பேக்காக மற்ற நிகழ்வுகளைச் சொல்லும் In Medias Res எனப்படும் உத்தி, இலியட் முதலான ஐரோப்பியக் காதைகளில் மட்டுமே காணப்படுவது என்று குறிப்பிட்டிருக்கிறார்.  சொல்லப்போனால், மஹாபாரதம் முழுக்க முழுக்கவே ஃப்ளாஷ்பேக் உத்திதான் என்பதை ஏனோ ஐயர் கவனிக்கத் தவறிவிட்டார்.  அர்ஜுனனுடைய கொள்ளுப்பேரனான ஜனமேஜயர் காலத்தில் அல்லவா கதையே தொடங்குகிறது!

தமிழில் இந்தக் குச-லவ ராமாயணச் சுருக்கம் கத்தி முனையில் நடப்பதைக் காட்டிலும் அபாயகரமானதாக்கப்பட்டுவிட்டது.  ஏனெனில், கம்பன் செய்த மாறுதல்கள் அத்தகையவை.  இந்த மாற்றங்களில் மிகப் பெரிதும் குறிப்பிடத் தக்கவை இரண்டு.  ஒன்று.  வால்மீகியில், ராமன் சுவேல மலையில் வந்து இறங்கியதுமே, ஒரு மாய ராமனுடைய தலையை வெட்டி, அந்தத் தலையையும், ராமனுடைய வில்லைப் போன்ற ஒரு வில்லையும் செய்து, சீதைக்கு முன்னால் கொண்டுவந்து வைத்து, ‘உன் கணவனைக் கொன்றாகிவிட்டது.  இனி உனக்கு வேறு வழியில்லை.  என்னை ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் உன்னால் இப்போது செய்யக்கூடிய காரியம்’ என்று பெரும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறான் ராவணன்.  இந்த மன அழுத்தத்தையும் தாண்டி சீதை உறுதியாக நிற்கிறாள் என்பது நாடகப் பாங்கு சொல்லும் செய்தி.

கம்பனுக்கு இங்கே ஒரு சங்கடம் ஏற்பட்டுவிட்டது.  அவனுக்கு ‘சும்மனாச்சுக்கும் கூட’ ராமனுடைய தலை வெட்டப்பட்டது என்று எழுத முடியவில்லை. இது உண்மை என்பதை நாகாஸ்திரப் படலத்திலும், பிரமாஸ்திரப் படலத்திலும், இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து ராமனைத் தனிப்படுத்தி, விலக்கியிருப்பதே சொல்லும்.  வான்மீகத்தில் இந்த அஸ்திரங்களின் கட்டில் ராமனும் உட்படுத்தப்பட்டிருக்கிறான்; கம்பன் படைப்பில் ராமனைத் தவிர்த்த மற்றவர் இந்த அஸ்திரங்களின் கட்டில் அகப்படுகின்றனர்.  ராமன் மரணமூர்ச்சை அடைந்ததைப்‘போலக்’ கிடக்கிறான்.   அந்த, ‘போல’ என்ற சொல்லை மனத்தில் அழுந்த வாங்கிக்கொள்ள வேண்டும்.

சரி.  என்னால் பொய்யாகக்கூட, மாயத்தோற்றமாகக்கூட, ராமனுடைய தலை வெட்டுப்பட்டுவிட்டது என்று எழுதமுடியவில்லை.  ஆனால், எனக்கு அந்த நாடகம் தேவைப்படுகிறதே!  அந்தச் சமயத்தில் சீதை துடிக்கும் துடிப்பைச் சித்திரிக்க வேண்டியிருக்கிறதே!  எவ்வளவு பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டு, சுமந்தபடி சீதை ஒரு துன்பமான கட்டத்தை, தன் மனத்தின் உறுதியில் சற்றும் தளர்ச்சியில்லாமல் கடந்தாள் என்பதைச் சித்திரிக்க வேண்டுமே!  I do not need this scene; but I must have its effect. 

இதற்காகக் கம்பன் படைத்ததுதான் (வான்மீகத்தில் இல்லாத) மாயா சனகப் படலம்.  ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கத்தை வகிப்பவர்கள் அவளுடைய தந்தை; அதற்கு அடுத்ததும் இறுதியுமாக அவளுடைய கணவன்.  அங்கே மாயா ராமப் படலத்தில் இழந்த நாடகத்தை, மாயா சனகப்படலத்தால் ஈடு செய்தான் கம்பன்.  மாயா சனகனைச் சங்கிலியால் பிணைத்து, சீதையின் முன்னால் இழுத்துவந்து நிறுத்தி, அவனைத் துன்புறுத்தி, கொன்றுவிடப் போவதாக அச்சுறுத்தி, தனக்கு இணங்கினால், சனகனுக்கு மூவுலக ஆதிபமும் தருவதாகக் கூறி... தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சனகனை சீதையின் கண்முன்னாலேயே கொல்வது மட்டுமல்லாமல், மிதிலைக்கும் அயோத்திக்கும் பெரும் அரக்கப்படை ஏற்கெனவே புறப்பட்டுப் போயாயிற்று என்றெல்லாம் பொய்யாட்டம் ஆடி, சீதையின் துடிப்பையும், அந்த நிலையிலும் கருத்து மாறா நிலைப்பாட்டையும் காட்டும்போது, இடையில் மாயா சனகன் புகுந்து தப்பாட்டம் (foul-play) ஆடிவிடுகிறான்.  இதற்கு ஒருபாடல் முன்னால், சீதையைக் கொல்ல வாளை உருவி ராவணன் மிரட்டிக்கொண்டிருக்கிறான் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.  இந்தச் சமயத்தில் நம்ம சனகர் சொல்றார்:

அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க, 'ஆவி
பொன்றினன் ஆகும்' என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்,
'இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி' என்னா, இனையன கூறலுற்றான்

(மகோதரன்,பெண்ணைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்தான்.  ராவணனும்) தன்னுடைய ஆசனத்துக்குப் போனான்.  (மாயா) சனகன், ‘இவனுக்கு இணங்காவிட்டால் என்னை மட்டுமில்லை, என் குலத்தையும் கொன்றுவிட்டவளாகிறாய்’ என்று பேசத்தொடங்க, ‘அடச்சீ நாயே!  நீ சனகனா?  சனகன் இப்படிப் பேச மாட்டான்.  ஒருவேளை நீ சனகனாகவே இருந்தாலும் இருந்துவிட்டுப் போ.  இவன் உன்னைக் கொன்றால் செத்துத் தொலை.  இல்லாவிட்டால், என் கணவன் என்னை மீட்கும்போது உன்னை மன்னித்தால் பிழை’ என்று சீதை தூற்றிக் கொண்டிருக்கிற சமயத்தில்தான், தூதர்கள் வந்து அங்கே போர்க்களத்தில் கும்பகர்ணன் மாண்டுபோன செய்தியைச் சொல்கிறார்கள்.  ராவணன் கதறுகிறான்.  அலறுகிறான்.  துடிக்கிறான்.  கடைசியில் கவி சொல்கிறான்:

அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.

(அண்டமெல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு வாய்விட்டு அலறியவன் என்ற பொருளுள்ள ராவணன் என்ற தன்னுடைய) பெயருக்குக் காரணம் பழைய நாளில் ஏற்பட்டதை உறுதிப்படுத்துவதைப் போல மறுபடியும் அப்படி அலறிக் கொண்டு ராவணன் ஓடினான்.  அங்கே ஒரு சொல் போட்டான் பாருங்கள்--கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.’  உள்ளே அப்படிக் குளிர்ந்ததாம் சீதைக்கு.  மாயா சனகப் படலம், கும்பகர்ண வதச் செய்தி ராவணனை வந்தடைவதோடு முடிவடைகிறது.

சரி.  அப்படியானால், மூலத்திலிருந்து ஒரு சர்க்கம் விடுபட்டிருக்கிறது; இன்னொரு சர்க்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது.  நாடகத்தின் தன்மையோ, பாங்கோ, நேர்த்தியோ, பாத்திரங்களின் தன்மையோ ஒரு துளியும் சிதைவின்றி வெகு லாகவமாக இந்த மாற்றம் கையாளப்பட்டுள்ளது.

இப்போது, ஒட்டக்கூத்தருக்கு வருவோம்.  அவருடைய குச-லவ ராமாயணச் சுருக்கம்தான் நமக்கு இந்தக் கவிஞருடைய மனோதர்மத்துக்கான உரைகல்.  இவர், கம்பன் செய்துள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டுதான் செய்திருக்கிறாரா, இல்லை, ‘வேலை முடிந்தால் போதும்’ என்று வால்மீகியை அப்படியே அடியொற்றிவிட்டுப் போய்விட்டாரா?  இங்கேதான் அமிலச்சோதனை நிகழ்கிறது.  குச லவர்கள் சொல்லும் சுருக்கத்தில் பின்வரும் பாடலைப் பாருங்கள்:

அப்புறத்தினில் மருத்தனைச் சனகர்கோ னாக்கி
குப்புறுத்தினன் மகோதரன்; சீதையும் குலைந்தாள்
எப்புறத்தினும் இராவணன் செவியெலாம் கேட்க
இப்புறத்தின் நின்று ஆர்த்தது இராகவன் சேனை.

கும்ப கன்னன் குறைந்தமை கூறினார்.
தம்பியோ என்ற ரற்றித் தசமுகன்
அம்பொன் தேர் அதிகாயனை ஏவினான்.
எம்பிராற்கு இளையோன் எதிர் தாக்கினான்.

ஒட்டக்கூத்தர் எந்த அளவுக்குக் கம்பனை ஆழமாகப் படித்திருக்கிறார்?

  • மாயா ராமனுடைய தலை வெட்டப்பட்ட காட்சி இல்லை
  • மாயா சனகப் படலம் (மூலத்தில் இல்லாத, கம்பன் செய்த மாறுதல்) இடம்பெற்றுள்ளது
  • கம்பன் மாயாசனகப் படலத்தை எப்படி முடித்திருக்கிறானோ, அப்படியே, கும்பகர்ணன் இறந்த செய்தியோடு, இந்தப் படலத்தைப் பற்றிய சுருக்கம் முடிவடைகிறது.

இது மட்டுமல்லாமல், மூலத்தில் ராவணனை, கும்பகர்ணன் கண்டித்தது இருக்கிறது.  சீதையைத் திரும்ப அனுப்பாதது தவறு என்ற சொன்னது இருக்கிறது. ஆனால், விபீஷணன், கும்பகர்ணனை, ராமன் பக்கத்துக்கு வந்து சேர்ந்துவிடும்படிச் சொன்னது இல்லை.  ஒட்டக்கூத்தருடைய குச-லவ கதைச் சுருக்கம் சொல்கிறது:

வியந்து வீடணன் அழைத்தலும் வெய்யவன் மறுத்து

வயந்தனைப் பிசைந்து.....

விபீஷணன் ராமன் பக்கத்துக்கு வந்துவிடும்படி அழைத்தான்; கும்பகர்ணன் வர மறுத்தான்.  பிறகு வசந்தன் என்னும் வானரனுடன் போர் தொடங்கினான்.. என்று விவரிப்பு செல்கிறது.


இப்போது எதைச் சொல்வது என்று புரியாமல் திகைக்கிறேன்.  இவ்வளவு அதிநுட்பமாகக் கம்பன் செய்திருக்கும் ஒவ்வொரு மாறுதலையும் கவனத்தில் கொண்டு, தன்னுடைய படைப்பில் அதே நிகழ்வுகளை, அதே மாற்றங்களை அப்படியே கொண்டுவந்து வைத்திருக்கிறார் என்றால்---

  • கம்பனைப் படித்திராவிட்டால் இப்படி மாற்றங்களைச் செய்ய ஒட்டக்கூத்தரால் முடியுமா?
  • கம்பனுக்குக் காலத்தால் முற்பட்டவராக இருந்தால், இந்த மாற்றங்களையெல்லாம் எப்படித் தன்னுடைய படைப்புக்குள் கொண்டுவந்தார்?

இது சான்று.  தீர்ப்பு உங்கள் கையில்.  யார் முன்னால், யார் பின்னால்?
--
அன்புடன்,
ஹரிகி.

Karuannam Annam

unread,
Jul 8, 2012, 11:50:54 AM7/8/12
to santhav...@googlegroups.com, தமிழ் மன்றம், mintamil

சிறப்பான பதிவு திரு ஹரிகி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2012/7/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Dhivakar

unread,
Jul 8, 2012, 12:01:19 PM7/8/12
to மின்தமிழ்



மிக அருமையான ஆய்வுக் கட்டுரை ஹரிகி! 

இப்படிப்பட்ட அகச் சான்றுகள்தான் எழுதியவர் காலத்தை காலாகாலத்துக்கும் காட்டிக்கொண்டே இருக்கும். மிக நேர்த்தியான முறையில் ஒட்டக்கூத்தரைக் காட்டியுள்ளீர்கள். 

எனக்கு மிகவும் பிடித்தது அவர் எழுதிய உத்தரகாண்டம். ராமாயணம் ஆதி அந்தம் முழுதும் உணர்ந்துகொள்ள உத்தரகாண்டத்தை விட்டால் நூல் ஏது? 

      இன்சொல்முனி பாவழிகாட்ட வேதநூல் காட்டு இராமன் கதை மேல்
      தமிழ்நூற்கல் உற்றேன். (திருவோலக்கப்படலம் 5)

இந்த வரிகள் ஒட்டகூத்தர் வால்மீகியைத்தான் பின்பற்றுகிறார் என்று தெரிகிறது என்றாலும் நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள கம்பராமாயண அகச் சான்றுகள் மிகவும் தெளிவானவை.

பின்னாளில் கமபர் கால ஆய்வுக் கட்டுரை ஒன்று நேர்த்தியாக செய்யவேண்டும் என எண்ணியுள்ளேன்.. நிறைய சேகரித்து வருகிறேன். உங்கள் ஆய்வுக்கட்டுரை மிகவும் உதவும். 

நன்றி! 

அன்புடன் 
திவாகர்


2012/7/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com




--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Subashini Tremmel

unread,
Jul 8, 2012, 12:10:56 PM7/8/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
தகவல் பொருந்திய ஒரு பதிவு.உங்கள் விளக்கத்தைப் பார்க்கும் போது கம்பன் ஒட்டக்கூத்தருக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும் என்றாகின்றது. மிக நல்ல அலசல்.

அருமையான பதிவுக்கு நன்றி.

சுபா

2012/7/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

OAGAI NATARAJAN

unread,
Jul 8, 2012, 1:48:28 PM7/8/12
to mint...@googlegroups.com
எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஹரியண்ணன் பதிவிலிருந்து உத்தரகாண்டத்தை எழுதியவர் கம்பனை ஆழப் படித்து அற்புதமாக கம்பன் காவியத்துக்கு அணி சேர்க்கும் வண்ணம் எழுதியிருக்கிறார் என்பது உறுதி ஆகிறது. கம்பன் காலத்துக்கு பிற்பட்ட ஒருவர் , அவர் ஒட்டக்கூத்தராக இருக்கலாம், இதைச் செய்திருக்கிறார் என்பதைத் தவிர கம்பன் காலம் தொடர்பான தகவல் இந்தப் பதிவில் சொல்லப்படவில்லை. ஒட்டக்கூத்தரின் காலம் அவர் பாடிய மன்னர்களின் காலத்துடன் தொடர்புபடுத்தி தெளிவு பெற வழி செய்கிறது. ஆனால் உத்தரக்கண்டத்தை ஒட்டக்கூத்தருக்கும் பிறகு வந்த ஒருவர் எழுதி இருந்தால் கம்பன் ஒட்டக்கூத்தருக்கும் பிற்பட்ட காலத்தவனாகும் வாய்ப்பு வந்துவிடுகிறது.
 
உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர்தான் எழுதினார் என்று உறுதியாக நிறுவ முடிந்தால் கம்பன் காலத்தைப் பற்றிய முழுத் தெளிவு பிறக்காவிட்டாலும் ஒரு தெளிவு கிடைக்கும். ஆனால் இது நிறுவப்படவில்லையென்றால் கம்பன் காலம் தெளிவேதுமில்லாமல் 9 இலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை எக்காலத்ததாகவும் இருக்கலாம்.
 
என் ஐயங்களைக் களையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2012/7/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 8, 2012, 2:14:14 PM7/8/12
to mint...@googlegroups.com
சான்றுகளுக்கு கிழக்காசிய நாடுகளில் வழங்கும் ராமாயணங்களை ஒப்பு நோக்க வேண்டும்
வால்மீகி ராமாயணமும் கம்ப ராமா

2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

iraamaki

unread,
Jul 8, 2012, 9:51:51 PM7/8/12
to tamil...@googlegroups.com, mintamil, vall...@googlegroups.com, santhavasantham, Madhura Bharati, Ramanan Isaikkavi, Dr vallioor Subramanian, rugan arya
அன்பிற்குரிய ஹரி,
 
அருமையான கட்டுரை. ஆழமான சான்று. கம்பர் ஒட்டக் கூத்தருக்கு முந்தியவர் என்ற கருத்துக் கொண்டவன் நான். இப்படி ஓர் அகச்சான்று எடுத்துக் கொடுத்த உங்கள் கட்டுரை எனக்கு உகப்பானது. ஆனாலும் ஒரு சிலர் உங்கள் கட்டுரைக்கு அப்புறம் ஒட்டக் கூத்தரும், கம்பரும் சம காலத்தவர் என்று கூறிச் சப்பைக்கட்டிற்கு முற்படலாம். [இருக்கவே இருக்கின்றன நாசாக் கணைகள்.]
 
உங்கள் கட்டுரை இன்னும் பலருக்குத் தெரியவேண்டும். அதற்கு ஆவன செய்யுங்கள். எங்களைப் போன்று ஆர்வலர்கள் வட்டத்துள் மட்டும் இருக்கக் கூடாது. பரவலாய் அறியப் படவேண்டும். அச்சு வடிவத்தில் வருவது முகன்மையானது. இப்பொழுது வரும் தொடர் வாதங்களோடு சேர்த்து தினமணியிற் போடுவார்களா? 
 
அன்புடன்,
இராம.கி. 

Geetha Sambasivam

unread,
Jul 8, 2012, 10:03:25 PM7/8/12
to mint...@googlegroups.com
கம்பர், ஒட்டக்கூத்தர், வால்மீகி போன்றோரை ஆழப் படித்திருக்கும் உங்கள் புலமையால் பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.  நன்றியுடன்,

2012/7/8 Hari Krishnan <hari.har...@gmail.com>



இது சான்று.  தீர்ப்பு உங்கள் கையில்.  யார் முன்னால், யார் பின்னால்?

--
அன்புடன்,
ஹரிகி.

--

Hari Krishnan

unread,
Jul 8, 2012, 11:06:01 PM7/8/12
to tamil...@googlegroups.com, mintamil, vall...@googlegroups.com, santhavasantham, Madhura Bharati, Ramanan Isaikkavi, Dr vallioor Subramanian, rugan arya


2012/7/9 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

அன்பிற்குரிய ஹரி,
 
அருமையான கட்டுரை. ஆழமான சான்று. கம்பர் ஒட்டக் கூத்தருக்கு முந்தியவர் என்ற கருத்துக் கொண்டவன் நான். இப்படி ஓர் அகச்சான்று எடுத்துக் கொடுத்த உங்கள் கட்டுரை எனக்கு உகப்பானது. ஆனாலும் ஒரு சிலர் உங்கள் கட்டுரைக்கு அப்புறம் ஒட்டக் கூத்தரும், கம்பரும் சம காலத்தவர் என்று கூறிச் சப்பைக்கட்டிற்கு முற்படலாம். [இருக்கவே இருக்கின்றன நாசாக் கணைகள்.]
 
உங்கள் கட்டுரை இன்னும் பலருக்குத் தெரியவேண்டும். அதற்கு ஆவன செய்யுங்கள். எங்களைப் போன்று ஆர்வலர்கள் வட்டத்துள் மட்டும் இருக்கக் கூடாது. பரவலாய் அறியப் படவேண்டும். அச்சு வடிவத்தில் வருவது முகன்மையானது. இப்பொழுது வரும் தொடர் வாதங்களோடு சேர்த்து தினமணியிற் போடுவார்களா? 
 
அன்புடன்,
இராம.கி. 

அன்புள்ள இராம.கி. ஐயா,

உங்களுடைய கருத்துகளுக்கும், நண்பர்கள் மணி மணிவண்ணன், திவாகர், மடற்குழுக்களை மறந்தே போயிருந்த சொக்கன், சுபாஷிணி, கீதா அம்மணிகள்--என்று பாராட்டிய பற்பலருக்கும் உள்ளார்ந்த நன்றி.  கேள்விகளை எழுப்பியிருப்பவர்களுக்குத் தனித் தனியாக விடை சொல்கிறேன்.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக எழுதவேண்டும் என்று நினைத்து நினைத்துச் சோம்பிச் சாம்பி ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த தலைப்பு இது.  மின்தமிழில் தினமணியின் ஞாயிறு கொண்டாட்டத்தை வாரம் தவறாமல் அனுப்பி வைக்கும் திரு கண்ணன் நடராசன் அனுப்பியிருந்த ஒரு கட்டுரை (கம்பன் காலம்--தெளிவு வேண்டும்) ஏற்படுத்திய கோபத்தால் இதற்குமேல் நிறுத்திக் கொள்ள முடியாமல் வெளிப்பட்டதும் நல்லதற்கே என்று தோன்றுகிறது.  கம்பனை பௌத்தர் என்று கட்டுரையாசிரியர் சொல்வதை எங்கே போய் முட்டிக்கொள்வது!

நான் இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கும் சான்று ஒரு பகுதி மட்டுமே.  இந்தத் தலைப்பில் எழுத நிறைய இருக்கிறது.  புத்தக அளவில் கூடப் பெருகலாம்.  தினமணி இதுபோன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்கும் என்று நான் நம்பவில்லை.  அவர்கள் வெளியிடும் கட்டுரைகளின் தரத்தின் அளவுக்கு இது ஒத்துப் போகவில்லை என்று கருதுகிறேன்.  எனக்கே நம்பிக்கையில்லாத முயற்சியைச் சற்றே ஒத்திப் போடுகிறேன்.  பார்ப்போம்.  இதுவரையில் வெளிவந்துள்ள நான்கு புத்தகங்களும் பதிப்பகத்தார் நாடிவந்து கேட்டுப் பதிப்பித்தவை.  அப்படி ஒரு வாய்ப்பு ஒருவேளை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.  என்னால் ஆனது, இருக்கின்ற மீத காலத்துக்குள் முடிந்தவரையில் எழுதி வைத்துவிடுகிறேன்.  அதன் பிறகு இறைவன் திருவுள்ளப்படி.

நாசா கணைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.  அந்தக் கணைகளல்லவா இந்தக் கட்டுரைக்கு முதற்காரணம்!  இன்னும் வரட்டும்.  இன்னும் உண்மையை உள்ளது உள்ளபடி சொல்வோம்.  முடிந்தால் இதற்கு மறுப்பு எழுதட்டும்.  அந்த டாக்டர் இந்த டாக்டர் என்று பெயர்களாக வாரி இறைக்காமல், நேரடி ஆதாரங்களின் அடிப்படையில் இதற்கு மறுப்பு எழுதினால் ஒவ்வொரு வரிக்கும் விடை சொல்வேன் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன். 

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  இந்தத் தலைப்பும் இதன் ராமாயணத் தொடர்பும் ஒவ்வொரு உள்ளத்திலும் மிக ஆழமான அதிர்வை உண்டாக்கியிருக்கின்றது என்று தோன்றுகிறது.  அதற்கும் மேல் கம்பனுடைய நாடகத் திறன் எழுந்து நிற்கிறது.  பெருமைகள் எல்லாம் கம்பனுக்கே. 

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 12:38:40 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஹரியண்ணன் பதிவிலிருந்து உத்தரகாண்டத்தை எழுதியவர் கம்பனை ஆழப் படித்து அற்புதமாக கம்பன் காவியத்துக்கு அணி சேர்க்கும் வண்ணம் எழுதியிருக்கிறார் என்பது உறுதி ஆகிறது. கம்பன் காலத்துக்கு பிற்பட்ட ஒருவர் , அவர் ஒட்டக்கூத்தராக இருக்கலாம், இதைச் செய்திருக்கிறார் என்பதைத் தவிர கம்பன் காலம் தொடர்பான தகவல் இந்தப் பதிவில் சொல்லப்படவில்லை. ஒட்டக்கூத்தரின் காலம் அவர் பாடிய மன்னர்களின் காலத்துடன் தொடர்புபடுத்தி தெளிவு பெற வழி செய்கிறது. ஆனால் உத்தரக்கண்டத்தை ஒட்டக்கூத்தருக்கும் பிறகு வந்த ஒருவர் எழுதி இருந்தால் கம்பன் ஒட்டக்கூத்தருக்கும் பிற்பட்ட காலத்தவனாகும் வாய்ப்பு வந்துவிடுகிறது.

அன்புள்ள ஓகை நடராஜன்,

நான் முதலிலேயே, கம்பன் காலம்-தெளிவு வேண்டும் இழையில், நான் எடுத்துக்கொள்ளப் போகும் எல்லையை வரையறுத்துவிட்டேன்.  கம்பனுடைய காலம் இன்னது என்பதை வரையறுப்பது என் வேலையன்று.  அதுபோன்றே ஒட்டக்கூத்தர் காலத்துக்கும் விடை காண்பது என் வேலையன்று.  என்னுடைய பணியெல்லாம் காதையின் படைப்பு, பாத்திரப் படைப்பின் தன்மை, கவிநயம் முதலானவற்றை எடுத்துச் சொல்வது மட்டும்தான்.

ஆனாலும், இப்படி ஒரு மிக முக்கியமான அகச்சான்று உத்தரகாண்டத்துள் பொதிந்திருக்கிறது என்ற உண்மையை நானறிந்து, இதுவரையில் எந்த ஒரு ஆய்வாளரும் எடுத்துச் சொன்னதே இல்லை.  ஆகவே, இதை முன்னிலைப்படுத்துவது ஒரு முக்கியமான கடமை என்று எடுத்துக் கொண்டேன். இல்லாவிட்டால், கால ஆய்வுகளில் முடியைப் பிய்த்துக்கொள்ள எனக்குக் காலமில்லை. ரசித்த, ருசித்த விஷயங்களை மட்டும் எடுத்துச் சொன்னாலே போதும்.  அதற்கான ஊக்கமும் சோம்பலின்மையும் உண்டானால் போதும்.

இப்போது நீங்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் அல்லது வினாக்களுக்கு வருகிறேன்.


ஆனால் உத்தரக்கண்டத்தை ஒட்டக்கூத்தருக்கும் பிறகு வந்த ஒருவர் எழுதி இருந்தால் கம்பன் ஒட்டக்கூத்தருக்கும் பிற்பட்ட காலத்தவனாகும் வாய்ப்பு வந்துவிடுகிறது.
 
This can neither be classed as a surmise nor as hypothesis.  கம்பராமாயணத்தை எழுதியவன் கம்பன்தானா என்ற கேள்வி எழுந்தால், ஆமாம் என்று சொல்வதற்கோ, இல்லை என்று மறுப்பதற்கோ, கம்பராமாயணத்துக்குள் என்ன அகச்சான்று இருக்கிறது?  இதை இன்னும் சற்று விளக்குகிறேன்.

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்

பாயிர மில்லது பனுவ லன்றே

என்பது நன்னூல் மிகத் தெளிவாகச் செய்திருக்கும் வரையறை.  பாயிரத்தில் என்னென்ன சொல்லவேண்டும் என்பதற்கும் ஒரு பட்டியல் உண்டு; பாயிரத்தை, காப்பிய ஆசிரினைத் தவிர வேறு யார்யார் இயற்றலாம் என்பதைக் குறித்தும் மிகத் தெளிவான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஒரு நூலாசிரியன், தன்னுடைய பெயர்,  தற்சிறப்புப் பாயிரமாக, தன்னை ஒரு நல்ல புலவனாக அடையாளப்படுத்திக் கொள்ள உரிய இடம்.... என்று பல அம்சங்கள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.  இப்படித் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளலாமா என்று கேட்டால் ‘கொள்ளலாம்’ என்கிறார் நன்னூல் ஆசிரியர்.  அதற்கான சந்தர்ப்பங்களையும் சொல்கிறார்:

மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே

அரசனுடைய அவைக்கு எழுதும் சீட்டுக் கவியிலும்; தன்னுடைய புலமையின் சிறப்பை உணராதவர்களுக்கு நடுவில் இருக்கும்போதும்; ஒரு சபையில் தர்க்கம் செய்துகொண்டிருக்கும்போதும்; மாற்றார் தன்னுடைய புலமையைப் பழித்த காலங்களிலும், தன்னுடைய சிறப்புகள் இன்னின்ன என்று ஒரு புலவன் எடுத்துச் சொல்வது தற்புகழ்ச்சியே ஆகாது.  (ஆனால், முதலில் அவன் ‘புலவன்’ {புலவன்னு சொன்னா என்னமோ பண்டிட்ஜீ என்று நினத்துக் கொள்ளப்போகிறார்கள்.  ஸ்காலர் என்று பொருள் என்பதைத் ‘தமிழில்’ விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.:)) } என்ற தகுதிக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இப்படி, ஒவ்வொரு நூலிலும், நூலாசிரியனுடைய பெயர், அவனுடைய புலமை, இவை குறித்த விவரங்கள் ஒவ்வொரு நூலிலும் பாயிரத்தில் சொல்லப்படுகின்றன.

அருங்கலை விநோதன் அமரா பரணன்

மொழிந்தன னாக முன்னோர் நூலின்

வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்

பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்


பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி

என்னு நாமத் திருந்தவத் தோனே

என்பது நன்னூலுக்கே உள்ள சிறப்புப் பாயிரம்.

குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு........

அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்.....

என்பது சிலப்பதிகாரத்தின் பாயிரம்.  இளங்கோவடிகள் பெயரும் சாத்தனார் பெயரும் சொல்லப்படுவது மட்டுமல்லாமல், கதையின் எந்தப் பகுதியிலிருந்து எந்தப் பகுதிவரை இளங்கோவடிகளார் சொல்வது என்றும்; எந்தப் பகுதியைச் சாத்தனார் சொல்வது என்றும் பாகப்பிரிவினை(!) செய்துகொள்வதும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.

இதைப்போல ஒவ்வொரு நூலிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் தரலாம்.  கம்பராமாயணத்துக்கோ என்றால், கம்பன் (நம்ம திருட்டுக்கொட்டு வள்ளுவனைப் போலவே) தன்னை ஒளித்துக்கொண்டுவிட்டான்.  ஓரிடத்திலும் தன் பெயரைச் சொல்லவில்லை.  பிறகு இருபது பாடல்கள் சிறப்புப் பாயிரப் பகுதியாக, பெயர் தெரியாத புலவர்களால் பாடப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.  இப்படிச் சேர்க்கப்பட்டது கம்பனுடைய காலத்திலேயே நடந்த ஒன்றா, அல்லது வள்ளுவருக்கு நேர்ந்தாற்போல், பல நூற்றாண்டுகள் கழித்து வள்ளுவ மாலை இயற்றப்பட்டு அவருடைய பெயர் முதலானவை ‘உண்டாக்கப்பட்டது’ போல நடந்த ஒன்றா என்பது தெரியாது.  ஆனால், தமிழில் ராமாயணத்தை இயற்றியவன் கம்பன் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைதானே?  அது பொருந்தும் என்றால் உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் என்பதை ஒப்புக் கொள்வதிலும் தடையிருக்க வாய்ப்பில்லை.  (இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இவரும் சிறப்புப் பாயிரங்களில் ‘நான்’ ‘என்’ என்பன போன்ற, கம்பன் பயன்படுத்தியிருக்கும் அதே தன்னிலைச் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறாரே தவிர, தன்னுடைய பெயரைச் சொல்லிக் கொள்ளவில்லை.

ஒட்டக்கூத்தர் இயற்றியதே உத்தரகாண்டம் என்பது, கம்பன் இயற்றியதே ராமாயணம் என்பதைப் போன்றே வழக்காற்றுச் செய்திதான்.  இது உண்மை என்பதற்கு எது பொருந்துமோ, அது, உத்தரகாண்டத்துக்கும் பொருந்தும்.

இடையில் பலவிதமான செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் (இவற்றில் ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் வாதங்களில் எல்லாவற்றுக்கும் இன்னொரு வர்ஷன் கொடுத்து மறுக்கமுடியும் என்ற அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளில்) ரா ராகவையங்கார் செய்துள்ள ஆய்வும் ஒன்று.  வாணிதாசன் என்பவன் இயற்றியதே உத்தரகாண்டம் என்று அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.  அவருடைய ஆய்வை நான் நேரடியாகப் படித்ததில்லை.  வவேஸு ஐயர் தன்னுடைய ஆய்வுரையில் (இதற்கான சுட்டியையும் கொடுத்திருந்தேன்) ரா ராகவையங்காரைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.  அவருடைய கால ஆய்வின் பொருந்தாமையையும் சொல்கிறார். 

இப்போது இரண்டு அறிஞர்களின் வாதத்தில் யார் வாதத்தை ஏற்றுக் கொள்வது?  கம்பனுடைய நல்லகாலம்.  இதுவரையில் ராமாயணத்தை எழுதியவன் கம்பன்தானா அல்லது வேறு யாரும் கும்பனா என்ற கேள்வி எழவில்லை.  இப்போது அதற்கும் கேடு முளைத்தாயிற்று.  கம்பனுக்கு பௌத்தாலங்காரம் செய்து அழகு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்!  இனி நம்மாழ்வார் சமணர்; குலசேகர ஆழ்வார் சாக்தர் என்று ஒவ்வொரு ரீலாக அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கலாம்.  டாக்டர் பட்டம் வாங்க ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா?

உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தரே என்பது தற்கால ஆய்வுலகம் மறுப்பிற்கிடமின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.  வர்த்தமானன் பதிப்பை எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன்.  ஒட்டக்கூத்தர் தலையில் உத்தரகாண்டத்தை ஏற்ற பேராசிரியர் ஸ்ரீசந்திரன் என்ற சமணருக்கு என்ன பர்ஸனல் இன்ட்ரஸ்ட் இருக்க முடியும்!  (ஸ்ரீசந்திரன் அவர்கள் எனக்கும் ஆசிரியராக இருந்தவர்தான்.  அவரிடத்திலும் இரண்டாண்டுகள் பயின்றிருக்கிறேன்.)

எனவே, உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தரே என்பதில் தற்கால ஆய்வுலக்கு ஐயமில்லை.  அதாவது பெரும்பான்மைக்கு.  சிறுபான்மை, உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒரு துருக்கரே என்று, துருக்கனுக் கிராமன் துணை என்று தனிப்பாடல் திரட்டில் வெண்பா இல்லையா, அதைப்போல எதையாவது வைத்துக் கொண்டு புதுக்கரடியைப் புகுத்தலாம். 

I have gone by the studied conclusions and prevailing opinion of accepted scholars.  இதில் கம்பன், ஒட்டக்கூத்தன் ஆகியோர் இன்ன காலம் என்பதை அறுதியிட்டுச் சொல்லவில்லைதான்.  அது என் வேலையில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டேன்.  ஆனால் யாருக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு மிக முக்கியமான துப்பு கிடைத்திருக்கிறது.  தெரிந்தும் சொல்லாமல் மறைக்கிறார்களா அல்லது தெரியவே தெரியாதா என்பது எனக்குத் தெரியாது.  இதைப் பற்றி ஒருவரும் பேசாமல் கமுக்கமாக அடக்கி வாசிக்கிறார்கள்.  தமிழிலக்கிய வரலாறு நெடுக இப்படிப்பட்ட மறைப்புகளும் திரிப்புகளும் நிறைந்துதான் இருக்கின்றன.  ஆனால், ஒரு வலுவான சான்று கிடைக்கும்போது, அதை முன்னிலைப்படுத்துவது கடமையல்லவா?  அதைத்தான் செய்திருக்கிறேன்.  இவர்களுடைய காலம் எதுவாக இருந்தாலும் உத்தரகாண்டத்தை இயற்றியவன், மற்ற ஆறு காண்டங்களையும் இயற்றியவனுக்குக் காலத்தால் பிற்பட்டவனே என்பதில் ஐயமிருக்க முடியாது.  வேண்டுமானால் சமகாலத்தவன் என்று சொல்லிக் கொள்ளட்டும்.  காலத்தால் முற்பட்டவன் என்பது பச்சைப் புளுகு என்பது இந்த அகச்சான்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது அல்லவா?  இதை மறுப்பவர்கள், தகுந்த காரணங்களை, நான் எடுத்து வைத்திருக்கும் ஆதாரங்களைப் போன்ற ஆதாரங்களைக் காட்டி மறுத்தால், நான் தவறென்று அறிந்துகொண்டால், திருத்திக் கொள்ளும் திறந்த மனத்துடனேயே இப்போதும் இருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

 
உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர்தான் எழுதினார் என்று உறுதியாக நிறுவ முடிந்தால் கம்பன் காலத்தைப் பற்றிய முழுத் தெளிவு பிறக்காவிட்டாலும் ஒரு தெளிவு கிடைக்கும். ஆனால் இது நிறுவப்படவில்லையென்றால் கம்பன் காலம் தெளிவேதுமில்லாமல் 9 இலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை எக்காலத்ததாகவும் இருக்கலாம்.

காலத்தை விடுங்கள்.  காப்பியத்தைச் சுவையுங்கள்.   புளிக்காத மாவில் வார்த்தவரையில், தோசை போதாதா?  சரவண பவனில் வார்த்ததா, தாஸா தோஸாவில் வார்த்ததா என்பதைப் பற்றி என்ன கவலை!  தோசைக்குத்தான் வார்த்து எத்தனை காலம் ஆயிற்று என்ற கணக்கு தேவை.  காப்பியங்களுக்குத் தேவையே இல்லை.  செலவழிக்கும் நேரத்தைக் காப்பியத்தில் செலவழிப்பது இன்பமும் பயனும் கொண்டது.  550 பார்சோப் வியாபாரிகள் படவேண்டிய கவலைகள் நமக்கெதற்கு!  ஒரு புளுகை உடைப்பதற்கு வழி கிடைத்ததா... சொன்னோமா... மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்க வேண்டியதுதான். :))))

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 1:11:06 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சான்றுகளுக்கு கிழக்காசிய நாடுகளில் வழங்கும் ராமாயணங்களை ஒப்பு நோக்க வேண்டும்
வால்மீகி ராமாயணமும் கம்ப ராமா

என்ன ஐயா இது!  வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட, வால்மீகியையும் கம்பனையும் கற்றால் போதுமானது.

ஆனாலும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  என்னிடமும் ராமாயண ஆராய்ச்சி நூல்கள் பல உண்டு. 

  1. Ramayana A Linguistic Study by Satya Vrat
  2. Ramayana and Ramayanas by M T Horstmann
  3. Ramayana in Laos by Sachchidanand Sahai
  4. Ramayana Masterpiece of Thai Literature by M Jumsai
  5. Ramayana Traditions in Eastern India by W L Smith
  6. Ramayana in Historical Perspective by H D Sankalia
  7. The Ramayana in Telugu and Tamil by C R Sarma
  8. The Ramayana Tradition in Asia V Raghavan (இதில் ஜாவா ராமாயணம், மலேசிய ராமாயணம், ஃபிலிபைன்ஸ் ராமாயணம், ஜப்பான் ராமாயணம் என்று பற்பல ராமாயணங்களைப் பற்றிய 44 தலைப்புகளில் விவரங்கள் உள்ளன.)
  9. The Riddle of the Ramayana by C V Vaidya
  10. A History of Classical Poetry by S Lienhard
  11. History of Classical Sanskrit Literature by M Krishnamachariar
  12. Kamban by Maharajan
  13. Righteous Rama by J L Brockington
  14. Some Problems of Indian Literature by M Winternitz (தாகூருடைய விஸ்வபாரதியில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு.  இதில், மேக்ஸ்முல்லருடைய கால ஆய்வின் அடிப்படை தகர்க்கப்பட்டுள்ளது.)
  15. The Ramayana Its Origin and Growth A Statistical Study by M R Yardi
  16. The Society of the Ramayana by A Guruge

போன்றவையும் அடங்கும்.  புத்தகத்தை வைத்திருப்பது வேறு; அதைப் படித்திருப்பது வேறு என்ற உண்மையை அறிந்தவன்தான் நானும்.  நாணயமான அளவில் இவற்றைப் படித்திருக்கிறேன் என்பதைச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் பட்டியலில் அசஞா போன்றோருடைய ஆய்வுப் புத்தகங்கள் என்னிடம் இருந்தாலும் குறிப்பிடப்படவில்லை.  இந்தப் பட்டியல் முழுமையானதுமன்று.  என்னிடம் டாக்டர் பட்டம் இல்லை.   ஆனால் நேர்மையான படிப்பு இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள நேர்ந்திருப்பதால் சொல்லிக் கொள்கிறேன்.  

மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்

தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே

என்ற நன்னூல் சூத்திரத்தின்படியும் நான் செய்துகொள்வது தற்புகழ்ச்சியில்லை என்பது தெளிவாகும்.  நன்றி.

OAGAI NATARAJAN

unread,
Jul 9, 2012, 10:29:36 AM7/9/12
to mint...@googlegroups.com
அன்புநிறை ஹரியண்ணா,

//உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தரே என்பது தற்கால ஆய்வுலகம் மறுப்பிற்கிடமின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.  வர்த்தமானன் பதிப்பை எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன்.  ஒட்டக்கூத்தர் தலையில் உத்தரகாண்டத்தை ஏற்ற பேராசிரியர் ஸ்ரீசந்திரன் என்ற சமணருக்கு என்ன பர்ஸனல் இன்ட்ரஸ்ட் இருக்க முடியும்!  (ஸ்ரீசந்திரன் அவர்கள் எனக்கும் ஆசிரியராக இருந்தவர்தான்.  அவரிடத்திலும் இரண்டாண்டுகள் பயின்றிருக்கிறேன்.)//

உத்தரகான்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் என்பதை கல்வெட்டு அறிஞர் எஸ். ராமச்சந்திரன் திட்டவட்டமாக மறுக்கிறார். இதற்கு அவர் பல வலிமையான சான்றுகளைத் தருகிறார். இது தொடர்பான இன்னொரு மின் தமிழ் இழையில் அவற்றைத் தருகிறேன்.

அன்புடன்

ஓகை நடராஜன்.

2012/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 10:48:08 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

உத்தரகான்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் என்பதை கல்வெட்டு அறிஞர் எஸ். ராமச்சந்திரன் திட்டவட்டமாக மறுக்கிறார். இதற்கு அவர் பல வலிமையான சான்றுகளைத் தருகிறார். இது தொடர்பான இன்னொரு மின் தமிழ் இழையில் அவற்றைத் தருகிறேன்.

அவசியம் சொல்லுங்கள்.  காரண காரியங்களைத் தெரிந்து கொள்ளலாம்.  உத்தரகாண்டத்தை இயற்றியது யார் என்ற சான்றுக்கும் வரலாம்.  (மற்ற ஆறு காண்டங்களையும் இயற்றியவன் கம்பன்தானே?  அதில் ஏதும் விவகாரமில்லையே.:) )

சான்றுகளை ஊன்றிப் பார்த்த பிறகுதான் அவை வலிமையானவையா இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க முடியும்.  அவர் என்ன வகையான சான்றுகளைத் தருகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

Nagarajan Vadivel

unread,
Jul 9, 2012, 10:56:22 AM7/9/12
to mint...@googlegroups.com
ஆங்கில இலக்கிய ஆய்வில் அனாமதேயக் கட்டுரைகளை எழுதியவர்கள் யார் என்றும் இலக்கிய நடை எழுதும் பாணி ஆகியவற்றைக் கொண்டு எழுதியவர் யாராய் இருக்கக்கூடும் என்றும் கணினியின் துணை கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
 
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார் என்ற ஆய்வு நடந்து எழுத்து நடையை வைத்து அவர் தாமஸ் ஜெஸ்பர்ஸன் என்று ஒருவர் நிறுவ
 
ஜெஸ்பர்ன் காதலிக்கு எழுதிய காதல் கடிதங்களின எழுத்து நடையை வைத்து அக்கடிதங்கள் அவரால் எழுதப்பட்டிருக் முடியாது என்று இன்னொரு ஆய்வாளர் நிறுவ இதுபோன்ற ஆய்வுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிட்டது
 
இங்கே ஆய்வுக்கு வரையறுத்த எல்லைகளும் அனுமானங்களும் மிகத் தெளிவாக உள்ளது
 
கால ஆய்வுகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ராமாயண எழு்த்து நடை  கற்பனைத் திறன் கதையின் போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒற்றுமை வேற்றுமைகளை உற்று நோக்கி ஒப்புமை செய்து உத்திரகாண்டம் எழுதியவர் கம்பராக இருக்க முடியாது என்று நிறுவிய வகையில் இந்த ஆய்வு சிறப்பானது
 
உத்திரகாண்டம் எழுதியவர் வேறொருவர் என்று நிலை நிறு்த்தியபின்
அதை எழுதியவ்ர்  ஒட்டக்கூத்தர் கம்பன் காலத்துக்குப் பிற்பட்டவர் என்று நிறுவுதலில் ஒட்டக்கூத்தரின் படைப்புகளுடன்  உத்திர காண்டத்தை ஒப்புநோக்கி இந்த அனுானத்தை மேலும் வலுப்படுத்தலாம்
நாகராசன்

2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 11:14:18 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஆங்கில இலக்கிய ஆய்வில் அனாமதேயக் கட்டுரைகளை எழுதியவர்கள் யார் என்றும் இலக்கிய நடை எழுதும் பாணி ஆகியவற்றைக் கொண்டு எழுதியவர் யாராய் இருக்கக்கூடும் என்றும் கணினியின் துணை கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உங்களுடைய மதிப்பீடுக்கு நன்றி ஐயா.

ஆங்கில இலக்கியத்தில் பெயர் அறியாக் கவிஞர்களை Anon என்று குறிப்பிடுவது வழக்கம்.  தமிழில் இன்னுமொரு அழகான மரபும் இருக்கிறது.  எந்தெந்தக் கவிதைகளை இயற்றியவருடைய பெயர் தெரியவில்லையோ, அந்தந்தக் கவிதையில் உள்ள மிகச் சிறந்த பிரயோகம் அல்லது சொற்றொடரைக் கொண்டு அந்தக் கவிஞருக்குப் பெயரிட்டுவிடுவார்கள்.  இப்படிப் பெயர் உருவானவர்தான் குறுந்தொகைக் கவிஞர்களில் ஒருவரான ‘அணிலாடு முன்றிலார்.’ இன்னொருவர் ‘நெடுவெண்ணிலவினார்‘.  பாடலில் நெடு வெண் நிலவு என்ற தொடர் பயில்கிறது. கவிஞருக்கும் அதுவே பெயரும் ஆனது.  மீனெறி தூண்டிலார் என்பது இன்னொரு கவிஞருடைய பெயர்.  எல்லாம் குறுந்தொகையில் மட்டுமே.

ஆக, பெயர் தெரியாத கவிஞர்களுடைய அடையாளத்தைத் தீர்மானிக்க வெறுமனே Anon (Unknown) என்ற குறியீடு மட்டுமே பொதுப்படையாக இல்லாமல், தனித்தனி அடையாளங்களாகத் தமிழ் மரபு கண்டிருக்கிறது. 

உத்தரகாண்டத்துக்கு இதுவரையில் வாணிதாசனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் இடையில் மட்டுமே இருந்த உரிமைச் சிக்கல்(!) இப்போது கல்வெட்டு ஆய்வின் உபயத்தால் மேலும் விரிவடைந்திருக்கிறது போலும்.  சான்றுகள் கிடைக்கட்டும்.  பாலங்கள் வரும்போது கடப்பதைப் பற்றிச் சிந்திப்போம் என்று சொல்வதில்லையா?  பாலம் வரட்டும். :) 

OAGAI NATARAJAN

unread,
Jul 9, 2012, 11:32:21 AM7/9/12
to mint...@googlegroups.com
செம்புலப்பெயல்நீராரையும் சொல்லலாம்.

எனக்குள் வேறு சில  ஐயங்களும் இருக்கின்றன.

காலந்தொரும் தமிழின் மரபுச் செய்யுள் ஆக்கம் மாறி வந்திருக்கிறது. பல அருஞ்சொற்கள் கொண்ட சங்ககால மரபை ஓரெல்லையாகவும் சென்ற நூற்றாண்டின் பாரதி, வள்ளலார் ஆகியோரை இன்னொரு எல்லையாகவும் கொண்டு ஏதும் ஆய்வு செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

அதேப்போல் சங்ககாலத்தில் பெரும்பான்மைஆசிரியப் பாவிலிருந்து தொடங்கி பலவேறு பாவகைகள் காலந்தொரும் சேர்ந்திருக்கின்றன. இதனால் ஏதும் ஆய்வு ஏற்பட முடியுமா?

கம்பர் பாடல்களின் சில தெலுங்குச் சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் தன்மையை காலக்குறியீடாகக் கொள்ள இயலுமா?

2012/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
Reply all
Reply to author
Forward
0 new messages