கவிக்கோவின் கவிதை...
மன்மதன்
இப்போதெல்லாம்
மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டு
அரிவாளோடு திரிகிறான்
பேரா. அப்துல் ரகுமான்
------------------------
இன்போஸிஸ் மென்கலனி ஸ்வாதியைக் கொலைசெய்த ராம்குமார் கைது என தொலைக்காட்சி, ஃபேஸ்புக், ... எனச் செய்திகள்.
தமிழ்நாடு என்ன ஆகிக் கொண்டுள்ளது எனக் காட்டுகிறது இந்நிகழ்வு. தலைமை நீதிபதி குற்றவாளியைக் கண்டுபிடிக்க
உத்தரவிட்டார். திருநெல்வேலியில் கைது என போலிஸார் தகவல் கொடுத்ததும் முதல்வர் வாழ்த்து.
”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ”
கொண்டைமுசு என்ற பழைய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் கொலையுண்ட ஸ்வாதி. முசிறி என்ற யவனர் வந்த சங்ககாலத் துறைமுகத்தின் பெயரை விளக்குகிற மடலில் முசு = முசிறி/முசுறி என்னும் சொற்களைப் பற்றி எழுதினேன்:
நாங்கு- நாஞ்சில் வடக்கே லங்காலா (கலப்பை), நகுளீசர் > லகுளீசர், நாங்கூழை > லாங்கூர் என ஹிந்தி போன்ற மொழிகளில்
வழங்கும் தமிழ்ச்சொல்.
ஸ்வாதி கூறிய கொண்டமுசு தமிழிலும், கன்னடம், தெலுங்கிலும் வழக்கில் உள்ளது. தலையில் கொண்டை உள்ள முசு
கொண்டமுசு.
---------------------
ஊகம்¹ ūkam , n. 1. Female monkey; பெண் குரங்கு. (திவா.) 2. Black monkey; கருங் குரங்கு. பைங்க ணூகம்பாம்பு பிடித்தன்ன (சிறுபாண். 221). 3. cf. ஊகை². Broomstick-grass,Aristida setacca; ஒருவகைப்புல். ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122).
ஊகம் - ஊகம்புல் போன்ற தலையுடைய முசு, Nilgiri Langur = ஊகம், மலைமுசு (அ) ஊகமுசு.

நா. கணேசன்